All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 34

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 34

 

மேற்கத்திய இசை ஒலிக்க, சஜித் தேடிப் பிடித்துத் தன் ஃபோனை காதில் வைத்தான்.

 

"சார், ஸ்வேத்தா மேம்ம கண்டுபிடிச்சாச்சி. இப்ப அவங்க எக்சாட்டா இருக்குற லொக்கேஷன உனக்கு வாட் அப் பண்ணிருக்கேன் சார்." என்றது ஒரு குரல்.

 

வந்திருந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவன், "எனக்கு ஃபுல் டீட்டெயில்ஸ் வேணும்.எதையும் விட்டுடக் கூடாது." 

 

"வித் இன் டூ டேஸ். ரெடியா இருக்கும் சார்."

 

"ம்..." என்றவன் வேறு எதுவும் சொல்லாது அணைத்தான். 

 

முகத்தில் சிந்தனை ரேகைகள் தெரிய, தன் விரும்பப் பானமான சாக்லேட்டை கோப்பையில் ஊற்றிக் கொண்டு சென்றான் பால்கனிக்கு.  

 

புருவ முடிச்சுடன் கோப்பையைக் காலி செய்தவனின் கண்களுக்குக் கோகோ குட்டி போட்ட பூனைபோல் நடைபயின்று கொண்டிருப்பது தெரிந்தது. 

 

"பையா..‌. பையா... ஜருர் ஆவோ… ஜல்தி ஆவோ… லேட் ஹோஹையா… எனக்கு லேட் ஆகுதுய்யா… வந்து தொலைய்யா… பையா…” என ஹிந்தியை கொலை செய்தவளுக்கு கருணை காட்டாது அந்தப்பக்கம் இருந்து சாதகமான பதில் வரவில்லை. 

 

“புல் சிட்..." எனக் கால்களை நிலத்தில் ஓங்கி ஊன்றினாள். 

 

அவள் நடனத்தைப் பார்த்துப் புன்னகைத்தான், நேரத்தைப் பார்த்தான். 

 

அலுவலக வாகனம் வர இன்னும் அரைமணி நேரம் இருப்பதாகச் சொல்லியது. பிறகு ஏன் நடு வீதியில் நடனமாடிக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய கீழே விரைந்தான். 

 

வெள்ளையும் சந்தனமும் கலந்த பட்டியாலா சுடிதார். பின்னலிட்டு அடைக்கப்பட்ட கூந்தல், அதில் பிச்சிப் பூக்குடிகொண்டிருந்தது. நெற்றியிலிருந்த சந்தனம் காலை வேளையில் சாமி கும்பிட்டு, பயபக்தியுடன் நின்றிருந்தவளிடம் என்னானது என்ற கேள்வியுடன் சஜித் வர, 

 

"இன்னைக்கி ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு சத்யா. ஆஃபிஸ்ல இருந்து கேப் வரனும். கால் பண்ணா வழக்கமா வர்ற நேரத்துக்குத் தான் வருவேன். உ ஒருத்திக்காக வர முடியாதுன்னு சொல்றாரு." என்றவள் மீண்டும் காரோட்டியை தொந்தரவு செய்ய, அது எடுக்கப்படவில்லை. 

 

“அரைமணி நேரம் தான, வெய்ட் பண்ணு.” 

 

“ஆனா மீட்டிங் ஒம்போது மணிக்கு. நா அதுக்கு முன்னாடி அங்க இருக்கனும் சத்யா.” 

 

"அப்ப நீயே ஆட்டோ புக் பண்ணு" 

 

"குட் ஐடியா. ஆனா ஃபாலோ பண்றது கஷ்டம். இந்த இளா அத்தான் டிரைவர் நம்பர வாங்கி வச்சிருக்காரு‌. ஒரு நாள் நா கேப்ல வரலன்னாலும் எனக்கு என்னாச்சின்னு டென்ஷனாகிடுறாரு. அவர பயக்காட்ட நா விரும்பல."

 

'அப்ப ஒன்னும் பண்ண முடியாது.' என்பதுபோல் திரும்பிச் செல்லப்பார்க்க,

 

"வேற வழி இல்ல. நான் உபர் போடுறேன்." என்று இளவேந்தனுக்கு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டவள், ஆட்டோவைச் செயலியில் முன் பதிவு செய்துவிட்டு பார்க்க, 

 

“ஓ மை காட்…” எனக் கத்தத் தொடங்கினாள். 

 

"சத்யா! பாரு ரெண்டு நிமிஷம் காட்டீட்டு இருந்த ஆட்டோ, இப்ப ஐஞ்சி நிமிஷம் காட்டுது. ஆ... பத்து நிமிஷமாகிருச்சி. வரப்போறது பாரின் க்ளைன்ட். அவங்க ப்ராடெக்ட்ட இந்தியால லான்ச் பண்றத பத்தி டிஸ்கஷன் பண்ண மீட்டிங் வச்சிருக்காங்க‌. 

 

எங்கிட்ட தான் ப்ரசன்டேஷன் இருக்கு. நா மெயில் கூட அனுப்பல. போச்சி போச்சி ரிபேக்கா மேம் என்ன வேலைய விட்டுத் தூக்கப் போறாங்க. ஐயோ! நான் நிறைய கனவு கண்டு வச்சிருந்தேனே. வந்தவங்கள இம்ப்ரஸ் பண்ணா என்னோட வேலை உறுதியாகிடும். மும்பைல ஐஞ்சி வர்ஷத்துக்கு காண்ட்ராக்ட் போட்டு உங்கூடவே செட்டில் ஆகிடலாம்னு பாத்தேன். எல்லாம் நாசமா போய்டும் போலயே…" என அவள் புலம்பியதை ரசித்தவன்.

 

"எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு." என்க, தலை திருப்பிப் பார்த்தாள் கோகோ. 

 

"பைக் வச்சிருக்கியா சத்யா நீ?." என்க, அவன் சிறு புன்னகையுடன் தன் பைக்கை எடுத்து வந்தான். 

 

“ஸ்போர்ட்ஸ் பைக்… வாவ்… இவ்ளோ காஸ்ட்லியான பைக் வச்சிருந்தும் ஏ ட்ரெயின்ல வந்த சத்யா?.” 

 

“உனக்கு அன்சர் வேணுமா.?” என்றபடி அணிந்திருந்த தலைக்கவசத்தை எடுக்க, அதைக் கலட்ட விடாது செய்தவள்,

 

“ஹெல்மெட் தலைலயே இருக்கட்டும். எதுக்கு அத கலட்டுற. நீ பப்ளிசிட்டி விரும்பாத சிம்ளிசிட்டி மேன்னு சொல்லாம சொல்ற. எனக்குப் புரியுது. ஓகே இப்ப போலாம் சத்யா.” என்று அவனின் தோளில் தட்டியபடி ஏறி அமர்ந்தாள். 

 

ரயிலில் சென்றாலே அவள் வேலை செய்யும் இடத்தை அடைய இருபது நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும். ஆனால் பைக்கில். அதுவும் அதி வேகம் கொண்ட ஸ்போர்ட் பைக்கில் சென்றால் பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரம் தான் எடுக்கும். 

 

அந்தப் பத்து நிமிடமும் கோகோவின் வாய் மூடவே இல்லை. 

 

"எனக்கு ரொம்ப நர்வஸ்ஸா இருக்கு சத்யா. வர்றவங்க முன்னாடி நாந்தா விளக்கம் குடுக்கனுமாம். அதுவும் இங்லிஸ்ல. நல்லா ப்ரிப்பர் ஆகிருக்கேன். நான் செஞ்சி வச்சத என்னால எக்ப்ளைன் பண்ண முடியும். ஆனா அவங்க என்ன மடக்கி மடக்கி கேள்வி கேட்டா.? போச்சி திருதிருன்னு முழிக்கப் போறேன். அந்தப் பிரியங்காவும் வனிஷாவும் என்னப் பாத்து சிரிக்கப் போறாங்க. அவமானமாகப்போது.

 

பேசாட்டிக்கு எனக்குக் காய்ச்சல்னு லீவ் போட்டிடவா?. முடியாதே. ஐய்யோ! ஆண்டவா! நா என்னப் பண்ணப்போறேன்?. சத்யா ஹெல்ப் பண்ணேன். ப்ளிஸ்... ப்ளிஸ்..." 

 

அவனின் முதுகை தூணென நினைத்து முட்டி முட்டி, இறைவனையும் அவனையும் தொந்தரவு செய்தபடி அமர்ந்திருந்தாள்.

 

அவளின் இம்சை தாங்காது, அவனோ ஆக்ஸிலேட்டரை திருக, பைக் காற்றில் பறந்தது.  

 

தன் தேவைகளுக்குக் காரை மட்டுமே உபயோகிக்கும் சஜித்தின் பைக்கில் ஏறும் முதல் பெண் நம் கோகோ தான். தோளில் கிடந்தவளின் பரிசத்தை சிலகித்தவாறே கண்ணாடியில் தெரிந்தவளின் உருவத்தை அவ்வபோது நோட்டமிட்டபடி ஓட்டினான் சஜித். 

 

அவளின் செயல்களால் சிரமப்பட்டவனை வெகுநேரம் சோதிக்காது அவள் பணி புரியும் இடம் வந்து விட்டது. 

 

அவள் இறங்கியதும் ஆக்ஸிலேட்டரை திருகியவனின் தலையில் இருந்த ஹேல்மெட்டில் தட்டினாள். கண்களில் தூசி படாமல் இருக்க மூடியிருந்த கண்ணாடி தடுப்பை தூக்கியவன் 'என்ன' என்பது போல் புருவம் உயர்த்தினான்.

 

"ஹெல்மெட்ட கலட்டு." என்றாள் அதிகாரமாக.

 

'ஏன்...'‌ என்றன அவனின் பச்சை நிற விழிகள். 

 

"ம்ச்... முதல்ல கலட்டு சத்யா." என்றதும் கலட்டாது புருவம் உயர்த்த, 

 

"ஒரு ஜீவன் இவ்ளோ நேரமா புலம்பிட்டே வருதே, அதுக்கு ஆறுதல் சொல்லலன்னாலும் பரவாயில்ல. ஒரு ஆல் தி பெஸ்ட் கூடவா சொல்ல மாட்ட." என்க, விரிந்த உதடுகளை இழுத்துப் பிடித்தவன், 

 

"இப்ப என்ன சொல்லனும்? ஆல் தா பெஸ்ட் டா?." என அவளிடமே கேட்க,

 

"உனக்கா எதுவுமே தோனாதா சத்யா. எல்லாத்தையும் நா கேட்டுக் கேட்டுத் தான் தருவியா?" எனக் கோபமாகவே கேட்டாள். 

 

பாவம் அவனிடமிருந்து 'கவலப்படாத, எல்லாம் நல்ல படியாக நடக்கும். ஆல் தி பெஸ்ட்.' என்ற ஆறுதல் வார்த்தையை எதிர்பார்த்து நின்றாள். அது புரிந்தாலும், 

 

"நீ கேக்கமாலேயே சிலது கிடைக்கும் தான். பட் அது நடக்கும்போது உன்னால அத அக்சப்ட் பண்ண முடியாது. நீ அதுக்கு இன்னும் தயாரா இல்ல. You are a premature girl. ." என்றவனின் பூதாகூடமானப் பேச்சும், கள்ளப் பார்வையும் அவளுக்குத் புரியவில்லை.  

 

அவளின் செய்கள்யாவையும் அவன் விகல்பமாகப் பார்த்து இல்லை. பார்க்கத் தோன்றியதுமில்லை. 

 

யார் எம்மாறியான எண்ணத்துடன் தன்னை நெருங்குகின்றனர் என்பதையும், காதல், காமல், நட்பு தோழமை என்னவென்பதை பிரித்தாளத் தெரியாது அளவிற்கும் அவன் முட்டாள் அல்லவே. 

 

அவளுக்கு தன்மேலிருப்பது தோழமை கலந்த ஈர்ப்பு. அவ்விரண்டும் என்றாவது ஒரு நாள் வடிந்து போகலாமே என்று நினைத்தவன் அவளை தடுக்காது நெருங்கவும் செய்யாது தன் நிலையில் இருக்க முயன்றான். அது புரியா கோகோ,

 

“அத கலட்டிட்டு பேசு சத்யா. எனக்கு ஒன்னும் புரியல‌.” என்றதும் கழற்றி பைக்கின் முன் பக்கம் வைத்தவன், அவளையே உற்றுப் பார்த்தான். 

 

சொல் என்பது போல் நின்றாள். சில நொடிகள் பார்த்தபடி இருந்தவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அவனின் டீச்சர் காலரைப் பற்றி இழுத்தவள்,

 

"ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு போ சத்யா." என்க, சத்தமாகச் சிரித்து விட்டான். 

 

பேசும்போது கூட உதடுகள் அசையுமே தவிர, முத்துப் பற்கள் தரிசனம் கிடைக்காது. இன்று அதைத் தெரியும் படி சத்தமாகச் சிரித்தவனை பார்த்து மெய் மறந்து போனாள் பெண். 

 

"இப்பவும் நீ எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்ல." 

 

"ஓகே ஆல் தி பெஸ்ட். நீ சொதப்ப மாட்ட. அப்படியே பயம்மா இருந்தா கண்ண மூடிக்க. உம்முன்னாடி யாருமே இல்லன்னு நினைச்சுக்க. லைக் இன்னைக்கி காலைல நீ பாத்ரூம்ல பேசுன மாறிப் பேசு. அது நல்லா இருந்தது" என்க, ஆவெனத் தன் இதழ்களை விரித்தாள் கோகோ.  

 

"அது உனக்குக் கேட்டுச்சா?" என்றவளின் பாவனையில் கவர்ந்தவன், ஆம் எனத் தலையசைத்தான்.

 

“வேற என்னென்ன கேட்டுச்சி.?” என்றாள் சிறிய குரலில். ஏனெனில் யாருமற்ற இடங்களில் தனக்கு தானே பேசிக் கொள்ளும் பழக்கம் நம் கோகோவிற்கு உண்டு. அதிலும் குளியலறை சொல்லவா வேண்டும். 

 

அவளை அருகில் வரும்படி தலையசைக்க, காதை அவனின் உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றாள். 

 

"எல்லாமே கேக்கும். குறிப்பா நீ பாடுறது தெளிவா கேக்கும். நீ அவார்ட் வின்னிங் பாத்ரூம் சிங்கர்." என்க, இமை சுருக்கி விலகியவளின் பாவணை ரம்மியமாக இருந்தது. 

 

“இதெல்லாம் எதுக்கு நீ கேக்குற?” என்றவளுக்கு தோளையும் புருவங்களையும் உயர்த்தி இறக்கியவன் தலைகவத்தை அணிய முயல, இம்முறையும் அவள் தடுத்தாள். 

 

தன் இரு விரல்களை இதழில் ஒற்றி எடுத்தவள் அவனின் கன்னத்தில் பதித்து, "தேங்க்ஸ் சத்யா." என்றுவிட்டு அவனின் தோளில் உரசிச் சென்றாள். 

 

படிக்கட்டில் துள்ளிக் குதித்து ஓடியவளை இரு நிமிடங்கள் விழி அசைக்காது பார்த்து விட்டுத் தான் ஸ்டாட் செய்தான். 

 

பைக்கில் காம்ப்ளக்ஸை விட்டு வெளியே செல்லவும், ஒரு கார் உள்ளே வரவும் சரியாக இருந்தது. 

 

தலைகவசத்திற்குள் புருவம் சுருக்கி அந்தக் காரைத் திரும்பிப் பார்த்தபடி சஜித் சென்றானென்றால். காருக்குள் இருக்கும் உருவமும் சஜித்தின் பைக்கைத் தான் ரிவர் வியூ மிரர் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தது. 

 

அலுவலகமே பரபரப்பாக இருந்தது. ஒரு வெளிநாட்டு வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் தாங்கள் தயாரித்த புதிய திரவத்தை உலகிற்கு முதல் முதலில் அறிமுகம் செய்ய, இந்தியாவில் மும்பை நகரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. 

 

"உன்னோட ப்ரசன்டேஷனுக்கு நீ ரெடியா கோகோ." என்ற ரிபேக்காவிற்கே சிறு பதட்டம். 

 

இது பெரிய இடம்.

 

"எஸ் மேம்."

 

"காட்டு." என்றவளிடம் கோகோ உருவாக்கிய சில வீடியோக்களைக் ஓடவிட்டாள். 

 

அனைத்துமே ரிபேக்காவிற்கு திருப்திகரமானதாக இருந்தன. எதையும் குறை கூறவிரும்பாது கோகோவை தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றாள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு. 

 

நீள்வட்ட மேஜையில் பத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். அனைத்தும் பரிட்சயமில்லாத வெளிநாட்டு முகங்கள். 

 

'உள்ளூர் இங்கிலீஸ்கே தரிகிடனத்தம் ஆடிட்டு இருக்கோம். இதுல வெளிநாட்டு வினோதங்கள் கூட... எப்படி?' எனக் கலங்கியது அவளுக்குத் தான் தெரியும். 

 

சரியாக அவள் உள்ளே செல்லும் முன் இளவேந்தனிடமிருந்து அழைப்பு வந்தது. 

 

"ஆல் தி பெஸ்ட் கோகோ. நிதானமாகப் பேசு." என அவளின் நலன்விரும்பியாய் அறிவுரை கூறி வைத்தான். 

 

கதவைத் திறந்ததும் துகிரா பாய்ந்து வந்து அணைத்தாள். "நீ கவலயே படாத. நானும் மீட்டிங் ஹால்லதா இருக்கப் போறேன். உனக்கு ஒரு சப்போட்டா இருக்கும்." என்றவள் கோகோவை கரம்பற்றி அழைத்துச் சென்றாள். 

 

அனைத்தும் நல்ல முறையில் தான்‌ சென்றது, கோகோ எழுந்து தான் உருவாக்கி வைத்ததிருந்த ஒளிநாடாவை ஓட விடும்வரை. 

 

கூட்டம் நடக்கும் வளாகம் இருளாக்கப்பட்டு, திரையில் காணொளி, சத்தமில்லாது ஒளிபரப்பப்பட்டது. 

 

அதை விளக்கிக் கூற வேண்டியவள், ஆழப் பெருமூச்சை இழுத்து விட்டு, கண்களை மூடித் திறந்தாள். 

 

திக்கி திணறி ஆரம்பித்தவளுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இரு கட்டை விரலையும் உயர்த்திபடி ஒரு உருவம் அறைக்குள் வந்தது. 

 

அந்த உருவம் கடைசியாகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு 'பேசு' எனக் கை அசைத்தது. 

 

வந்திருந்தவர்கள் அவளிடம் சந்தேகம் கேட்கும்போது படபடத்து வேகமாக உளறிக் கொட்டியவளை, பொறுமையாகப் பேசும் படி ஐவிரல்களையும் ஒன்று சேர்த்து மேலும் கீழும் சமிக்ஞை செய்தது, தெம்பாக இருந்தது கோகோவிற்கு.

 

அவளின் விளக்கத்திற்கு மெச்சுதலை தந்தபடி இருந்த உருவம், அவள் பேசி முடித்ததும் கைத்தட்டியபடி எழுந்து வந்து அவளை அணைத்து பாராட்டியது. 

 

விளக்குகள் ஒளிர்ந்த பிறகு, யாரெனத் தெரிந்து அனைவருக்குமே அதிர்ச்சி.

 

யாரா இருக்கும்... எனி ஜெஸ்… 

 

மயக்கம் தொடரும்...

  https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 35

https://kavichandranovels.com/community/postid/1259/


   
ReplyQuote

You cannot copy content of this page