All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வட்டிக்காரனின் வசியக்காரியவள்-10

 

VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Eminent Member Author
Joined: 4 months ago
Posts: 16
Topic starter  

அத்தியாயம்-10

"அவளை எதுக்குமா இப்ப வர சொன்ன...” என்று ரகசியா ஆங்காரமாகவும், காட்டுக்கத்தலாகவும் கத்த

அதனைக் கேட்ட அவள் அன்னையோ அவளை பயங்கரமாக முறைத்துக் கொண்டிருந்தார்.. "ஏண்டி.. அவ இங்க வர்றதுனால உனக்கு என்ன பிரச்சனை.. அவ உன் அக்கா அத முதல்ல உன் புத்தில ஏத்திக்கோ.. அத விட்டுட்டு ஏதோ எதிரிய பாக்குற மாதிரி அவள பாக்குற..” என்று அவரும் பதிலுக்கு கத்த

அய்யோ.. அப்டி சொல்லாதம்மா.. அவ ஒன்னும் என் அக்கா கிடையாது... அவ உங்களோட அக்கா பொண்ணு அவ்வளவுதான்.. எங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற உறவு அவ்வளவுதாம்மா.. அவள என் அக்கானுலாம் சொல்லாதீங்க... எனக்கு எரிச்சலா இருக்கு.."என்றாள் ரகசியா

"அய்யோ ரகசி..நீ என்னைக்கு தாண்டி புரிஞ்சுக்க போற... வசி உன்னோட அக்கா.. அவ உன் கூடவே பிறக்கலைனாலும், ஏன் அவ என் வயித்துலையே பிறக்கலைனாலும் அதான் நிஜம்..அத முதல்ல உன் மைண்ட்ல ஏத்திக்கோ.. சின்ன வயசுல அக்கா அக்கானு அவ பின்னாடியே சுத்துவ.. ஆனா இன்னிக்கி அவள எதிரிய மாதிரி பாக்குற.. எத்தனை தடவை சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்ற.. யாருடி உனக்கு இப்படி சின்ன வயசுலயே மனசுல வஞ்சத்த பூசி விட்டது...” என்று அவர் கத்த.

ரகசியாவோ தலையில் வேகமாக அடித்துக் கொண்டவள் "யாரும் என் மனசுல வஞ்சத்தை வளர்க்கலாமா.. என் அம்மா அப்பா எனக்கு மட்டும்தான்.. அதே மாதிரி இன்னிக்கு என் ரிஷி மாமா எனக்கு மட்டும்தான்.. அத யாரும் எங்கிட்ட இருந்து பறிக்க கூடாதுனு நான் நினைக்கிறேன்.. அதை முதல்ல நீங்க மைண்ட்ல ஏத்திக்கோங்க..” என்றாள் ரகசியா.

"ஏய் ஏன்டி நீ இப்படி சரியான செல்பிஷா இருக்க..” என்று பதிலுக்கு வைஷூ கத்த

"அவ என்ன இப்ப செல்பிஷா இருந்துட்டு போயிட்டா..” என்றவாறே அங்கு வந்தார் முரளியின் அன்னை, வைஷூவின் மாமியார் அன்னம்..

அதில் வைஷூ தலையில் ஓங்கி அடித்துக் கொண்டவர்… " எல்லாத்துக்கும் காரணம் இந்த கிழவி தான்.. சின்ன பிள்ளைங்களுக்குள்ள வம்பு வளர்த்துவிட்டுட்டு பேசுற பேச்ச பாரு..” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

"நீ என்ன முணுமுணுக்குறனு எனக்கு தெரியுது மருமகளே... என்னிக்கா இருந்தாலும் உன் அக்காவோட பொண்ணு என் பேத்தி ஆயிட முடியாது.. ஏன் இந்த வீட்டோட பொண்ணா கூட அவளால ஆக முடியாது. அதை வாங்கி மனசுல நல்லா சேர்த்து வச்சுக்கோ.. பொறந்ததிலிருந்து நான் இதை தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இந்த வீட்டோட இளவரசி ரகசியா மட்டும் தான்..” என்றார் அன்னம் அதிகாரமாக

ம்ம்ச்.. அத்தை நீங்கதான் இவளுக்கு சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளர்த்திருக்கீங்க... ஏன் இப்படி பண்றீங்க.. அவ என் அக்கா பொண்ணு அத என் சொந்த ரத்தம் அவளை ஏன் நீங்க இப்படி பிரிச்சு பாக்கறீங்க...” என்றார் வைஷூ கண்ணீர் கண் கலங்கியவாறு.

"அட..அவ உன் பிறந்த வீட்டு சொந்தம்டி.. ஒன்னும் உன் புகுந்த வீட்டு சொந்தம் கிடையாது சரியா.. அப்படி இருக்கிறப்போ அவள உன் புகுந்த வீட்ல வைச்சி பார்த்துக்கனும்னு நீ நினைக்கிறதுல என்ன நியாயம் இருக்கு சொல்லு...”என்றார் கொஞ்சம் இளக்கம் இல்லாமல்

ம்ச்.. ஐயோ அத்தை ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது அவளுக்கு என்ன விட்டா.. ஏன் நம்ம குடும்பத்தை விட்டா யாருமே கிடையாது.. ஆனா நாம அவள கிட்டதட்ட பதினைஞ்சி வருஷமா தனிமைய மட்டும் தான் கொடுத்துருக்கோம்.. பாவம் அத்த அவ..” என்று அவர் அழுத்தவாறு

ம்ச் அட இவள போல எத்தனையோ பேரு இந்த உலகத்துல யாரும் இல்லாம தான் வாழ்றாங்க.. அது மாதிரி இவளும் வாழ்ந்துட்டு போகட்டும்.. இப்போ ஒன்னும் அதனால உலகம் அழிஞ்சுட போறது கிடையாது.. சரியா..” என்றார் வைஷூவை முறைத்தவாறே

அதில் தலையில் அடித்துக்கொண்ட வைஷூவோ தன் அக்கா மகளுக்காக கண்ணீர்விட்டவாறே நின்றார். அவரால் வேறு என்னதான் செய்ய முடியும். அவளின் மாமியாருக்கு அப்படி ஒரு பெரிய மனதாக இருக்கின்றதே.. “ இங்க என்னம்மா நடக்குது...” என்றவாறே அங்கு வந்தார் முரளி.

"என்னடா பெருசா நடக்க போகுது.. வழக்கம்போல அந்த அனாதை கழுதைக்காக உன் பொண்டாட்டி சப்போர்ட் பண்ணிட்டு வரா.. வேற ஒன்னும் கிடையாது..” என்று அந்த வயதானவர் கரித்து கொட்ட

அதில் முகம் சிவக்க நின்றிருந்த முரளியோ " அம்மா எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. வசிய அனாதை கழுதைனு சொல்லாதீங்கன்னு.. அவளுக்கு சித்தப்பாவா நான் இருக்கேன், சித்தியா இவ இருக்கா.. நீங்க என்னதான் அவளை சொந்தமா ஏத்துக்கலைன்னாலும் நாங்க அவள எங்க சொந்த மகளா தான் பார்க்கிறோம்...” என்றால் வெடுக்கென்று.

"ஆமாம் பெரிய மக...அது சரிடா அவங்க அம்மாவும் ,அப்பனும் இவள தூக்கி உங்க கையில ஒப்படைச்சுகிட்டு அவங்க பாட்டுக்கு போய் சேர்ந்துட்டாங்க... அவ என்னன்னா காலம் முழுதும் இந்த வீட்டிலேயே உதவா கரையா இருந்து கடத்திடலாம்னு இருந்தா... ஆனா நான் விடுவேனா துரத்தி விட்டேன்ல கழுதைய சின்ன வயசுலயே...” என்று அவர் தன் அருமை பெருமைகளை பேச

அவரின் வார்த்தை வைஷூவிற்கு கொடுமையாக இருந்தது.. "அவ ஒன்னும் எதுவும் இல்லாம வந்து இந்த வீட்டில வந்து கிடக்கல அத்த.. இந்த வீட்டில பாதி சொத்து அவளோடது இருக்கு உங்களுக்கு தெரியும் தானே.. எங்க அக்கா சாகும்போது அவளோட சொத்து எல்லாத்தையும் அவ பொண்ணு பேருல எழுதி வச்சிருக்கா. எங்க அப்பா எப்படி என் பேர்ல பாதியும், என் அக்கா பேர்ல பாதியும் எழுதினாங்களோ அதே மாதிரி தான் அவளும் அவ பொண்ணு பேருல அவ சொத்த எழுதி வச்சிருக்கா.. அதனால இன்னொரு தடவை அவளை யாரும் இல்லாத ,எதுவும் இல்லாதவன்னு சொல்லாதீங்க...” என்று வைஷூ எகிறினார்.

போதும்டி மருமகளே போதும் போதும் ரொம்ப உன் அக்கா பொண்ணுக்காக சப்போர்ட் பண்ணிட்டு ஓடி வராத சரியா.. சரி காலம் ஃபுல்லாவும் நீயும் என் மகனும் தானே அவள பாத்துக்கணும்.. அப்ப உன் அக்கா சாகும்போது என்ன பண்ணி இருக்கணும் எல்லா சொத்தையும் உன் பேர்ல எழுதி வச்சிட்டுல போய் சேர்ந்துருக்கனும்.. அதவிட்டுட்டு அவ எப்படி உஷாரா அவ பொண்ணு பேருல எல்லா சொத்தையும் எழுதி வைச்சிட்டு போய் சேர்த்து இருக்கானு பாரு...” என்று கூற

வைஷூவோ இது தேறாத கேசு என்றவாறு தலையில் அடித்துக் கொண்டார். முரளியோ.. "அம்மா சொத்துக்காக நாங்க வசிய வளர்க்கலாமா?.. எங்களுக்கு ரகசியா எப்டியோ அது மாதிரிதான் வசியும்.. நாங்க என்னிக்கும் ரெண்டு பேரையும் பிரிச்சி பார்த்தது இல்ல.."என்று கூற

"இதான் பா இதுதான் என் பிரச்சனை.. என்னை மாதிரி அவ எப்படிப்பா இங்க இருக்க முடியும்.. நீங்க என்னோட அப்பா, அம்மா எனக்கு மட்டுமானவங்க.. என்னோட அப்பா ,அம்மாவ இந்த உலகத்துல வேற யாரும் உரிமை கொண்டாட முடியாதுப்பா.. நான் மட்டும்தான் கொண்டாடணும்.. அதை ஏன் நீங்க புரிஞ்சுக்க மாட்றீங்க,.. சின்ன வயசுல இருந்து இதுதான் பா பிரச்சனை இதனால் தான் நமக்குள்ள ஒரு பிரிவே வந்துச்சு..” ரகசியா என்று கொதித்துக் கொண்டிருந்தாள்.

"ரகசியா நீ சின்ன வயசுல சண்டை போட்டா.. அது சின்ன வயசுலையே சரியா போச்சி.. இப்போ ஒன்னும் நீ சின்ன பொண்ணு கிடையாது.. உனக்கு கல்யாணம் ஆகப்போகுது நீ பெரிய பொண்ணு அதனால இன்னும் உன் அக்கா மேல பொறாமை, போட்டியோடு சுத்தாத கொஞ்சமாச்சும் வயசுக்கேத்த மாதிரி யோசி...” என்று கத்தினார் முரளி.

ஏண்டா ஏன் இப்ப என் பேத்திய கத்துற... அவ என்னடா பெருசா ஆசைப்பட்டுட்டா அவளுக்கு மட்டுமே நீங்க அப்பா, அம்மாவா இருக்கணும்னு ஆசைப்படுற.. ஏன் நீங்களுமே இவளுக்காக தானே இன்னொரு புள்ள பெத்துக்கல..அது எதுனால இவளுக்கான பாசத்தை வேற யார்கிட்டயும் நீங்க பகிர்ந்துக்க விரும்பல.. அதனால தானே இன்னொரு குழந்தை பெத்துக்கல.. அத நல்லா யோசிச்சு பாருங்க.. இவ நினைக்கிறது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பா உங்களுக்கு தெரியாது..” என்றார் அவர்.

முரளியும், வைஷூவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள்.. "நீங்க சொல்றது நிஜம் தான்ம்மா. நாங்க இன்னொரு குழந்தை பெத்துக்காததுக்கு காரணம் நீங்க சொன்ன மாதிரி ரகசியா மட்டும் இல்ல.. வசிகாவும் தான் மா அவளும் எங்களுக்கு பொண்ணு தான்.. இதுல இன்னொரு குழந்தை வேணுமானு தான் நாங்க பெத்துக்கல..” என்றவரை பார்க்க பார்க்க ரகசியாவிற்கு கோவம் கண்ணை மறைத்தது.

"ஓ அப்ப இதுலயும் அந்த வசியோட தலையீடு இருக்குன்னு சொல்லு… அவளால தான் நீங்க இவ்ளோ பெரிய முடிவையே எடுத்துருக்கீங்க..” என்றார் அன்னம் வன்மமாக.

முரளியோ அலுத்துக்கொண்டவர் “ஐயோ அம்மா உங்க கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது... வசி ஊருக்கு வர போறா அவ்வளவுதான்.. அவ திரும்பி ரிட்டர்ன் ஊருக்கு போறதுக்கு ஒரு மாசம் ஆகும்.. அதுவரைக்கும் இந்த வீட்டில் யாரும் எந்த பிரச்சனையும் பண்ணாம இருந்தா உங்களுக்கு நல்லது.. இல்லன்னா நானும், இவளும் இந்த வீட்டை விட்டு வசியோடவே போற மாதிரி இருக்கும்...” என்று உறுதியாக கூறினார்.

"அதாண்டா கடைசில இப்படித்தான் முடியும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அவள சின்ன வயசுலயே ஓட விட்டுருக்கனும்... அப்பதான் உங்களுக்கு எல்லாம் அறிவு தெளிஞ்சிருக்கும்.. என் தப்புதான்.. அவள அப்போவே இங்க விட்டு வச்சது என் தப்புதான்..” என்று அவர் கூற

"அதுதானேம்மா பண்ணீங்க.. சின்ன வயசுல அவள ஹாஸ்டல்ல போடுற அளவுக்கு ஓடத்தான விட்டீங்க..” என்று முரளி கோவமாக கேட்க..

வைஷூவோ இன்னும் இதனை இப்படியே விட்டால் எங்கே சண்டை அதிகமாகிவிடுமோ என்று பயந்தவராக.. “ஏங்க பேசாம இருங்க.. அவங்க தான் பேசுறாங்கனா நீங்களும் ஏதாவது பேசி பேசி பிரச்சனையை பெருசாக்க வேண்டாம்.. நாளைக்கு காலைல வசி வந்துருவா... நாளையில இருந்து அவ இங்க இருந்து போற வரைக்கும் தயவு செஞ்சு யாரும் எந்த பிரச்சனையும் பண்ணாம... இருங்க ப்ளீஸ்..”என்றவறோ தன் அறைக்குள் சென்றுவிட முரளியும் தன் அன்னையையும், மகளையும் முறைத்தவாறே நின்றிருந்தார்.

வசியின் அன்னை சிவானி.. வைஷூவின் அக்கா. இவர்களது குடும்பமே சென்னையில் கொஞ்சம் பணக்கார குடும்பம் தான். நல்ல வசதி வாய்ப்புகளுடன் வளர்ந்தவர்கள் இருவரும். பிறக்கும்போதே இருவரின் அன்னையும் உடல் உபாதையின் காரணமாக இறந்துவிட்டார். இருவருக்கும் அவ்வளவு ஒன்றும் வயது வித்தியாசம் இல்லை. ஆனால் சிவானி தான் வைஷூவை பாதி நாட்கள் பொருப்பாக பார்த்துக்கொண்டார்.

இரு பெண்களையும் விட இருவரின் தந்தைக்கு தொழில் தான் முக்கியமாகி போனது. அதனால் வேலையாட்களிடம் மகள்களை வளரவிட்டவர் தொழிலை சுற்றி ஓடினார். அப்படி ஓடியவரின் ஓட்டம் கிட்டதட்ட இருபது வருடகாலமாக நிற்கவே இல்லை.

அதன் பின் சகோதரிகள் இருவரையும் நல்ல மாப்பிள்ளையாக பார்த்து மணமுடித்தவர் அடுத்த வருடமே உயிர் துறந்தார். சிவானிக்கு குமார் என்பவரை திருமணம் செய்து வைத்திருந்தார். அதே போல வைஷூவிற்கு முரளியை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

முரளி அமைதியான சுபாவம்.. குமாரும் அப்படிதான். குமாருக்கு அவரின் மனைவி சிவானி தான் அனைத்தும். அவள் மீது உயிரையே வைத்திருந்தார். முரளியின் அன்னை அன்னம் தான் கொஞ்சம் கெடுபிடி.. ஆனால் வைஷூவிடம் அவ்வளவாக தன் குணத்தை காட்டமாட்டார் அதற்கு காரணம் அவளின் சொத்து, அவருக்கு இன்னொரு மகளும் இருந்தாள். பெயர் மஞ்சுளா… அவளுக்கு முரளியின் திருமணத்திற்கு முன்பாகவே ராகவனுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார் அன்னம்.

இரண்டு ஜோடிகளின் வாழ்க்கையும் நன்றாக தான் சென்றுக்கொண்டிருந்தது. அதனை தடுப்பது போல தான் சிவானியின் மரணம் பெரும் இடியாக இறங்கியது.

ஆம் சிவானி ஏழாம் மாதம் இருக்கும் போதே மாடிப்படிகளில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் நன்றாக அடிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குமார் சிவானியின் நிலையை நினைத்து கலங்கி தவித்தார். அவருக்கு பெரிதாக சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. ஒரே ஒரு பாட்டி மட்டும் இருக்க.. அவரும் இவர்களுக்கு திருமணம் ஆன புதிதில் இறந்து போனார்.

(வசியக்காரி…)


   
ReplyQuote

You cannot copy content of this page