All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 31

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 132
Topic starter  

அத்தியாயம்: 31

 

துப்பறியும் வேலை தான். 

 

அவனுக்குக் கடந்த சில மாதங்களாவே கோகோவை சுற்றி அமானுஷ்யமாக ஏதோ நடப்பது போல் தோன்றியது. யாரோ கோகோவிற்கு சூனியம் வைத்து விட்டனர் என்று நம்பினான்.

 

கோகோவிற்கு எப்படி வேலை கிடைத்தது என்று நன்றாகவே தெரியும். அதுவே ஒரு அதிர்ச்சி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி கோகோவிற்கு ஒரே வாரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு அமைந்தது‌. 

 

ஏனெனில் தேடி அழையாது, முன் பணம் கூட ஏதும் வழங்காது உடனடியாக வீடு கிடைந்துள்ளதே!. எப்படி.?

 

உரிமையாளருடன் நன்கு பழக்கம் தான். ஆனாலும் சிறு சந்தேகம் இப்பொழுது முளைந்தது.  

 

இளவேந்தனுக்கு இருவர் மீது சந்தேகம். 

 

ஒருவர் ரிபேக்கா.

 

ப்ரஜித்திடம் வந்து அன்று கண்டபடி பேசியதிலிருந்து 'ஒரு வேளை ப்ரஜித்த சந்தேகப்பட்டு கோகோவ சித்திரவத செய்ராளோ!' என்று,

 

அவள் தானே மாதரிக்காவை பார்க்க அனுப்பி வைத்தது. அங்குத் தானே கோகோ தொலைந்து போனது. அதனால்,

 

"உங்க சந்தேக புத்திக்காக ஏ என்னோட அத்த பொண்ண பழி வாங்குறிங்க." எனக் கேட்டு ரிபேக்காவின் முன் வந்து நின்றான் இளவேந்தன். 

 

"யார பழி வாங்குனா.?"

 

"நீங்கத் தா."

 

"யார?"

 

"கோகோவ"

 

"ஏ உன்னோட புது பாஸ் மாறியே உளறுற. தெளிவச் சொல்லு." 

 

"உங்களுக்கு ப்ரஜித் சார் மேல சந்தேகம் வந்தா அன்னைக்கி மாறிச் சட்டையப்பிடிச்சி சண்ட போடுங்க. அவர கூட்டிட்டு போய்த் திருவிழா கூட்டத்துல தொலச்சிட்டு வாங்க. ஏ என்னோட அத்த பொண்ண அலைக்கழிக்கிறிங்க.

 

நேத்து மட்டும் அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆகிருந்தா உங்கள நாஞ்சும்மா விட்டிருக்க மாட்டேன்." என ஆவேசமாகத்தான் பேசினான். 

 

ஆனால் ரிபேக்கா, "அப்படியா! நேத்து என்ன நடந்ததுன்னும் நீங்களே சொல்லிடுங்க வேந்தன். உங்க அத்த மகா கிட்ட கேட்டா பெரிய பெரிய ஸ்டோரி சொல்வா. எனக்கு அதக் கேக்க விரும்பமில்ல. சோ... நீங்களே..." என்றவள் நக்கலாகச் சொல்ல, 

 

'அந்த அரக்கிக்கிட்ட பேசுறதுக்கு ப்ரஜித் தான் சரியான ஆள்‌. வரச் சொல்லலாமா?.' என்ற சிந்தனையில் இருக்க.

 

"வேந்தன் என்னோட டயத்த வேஸ்ட் பண்ணாம வந்த விசயத்த சொல்லுங்க."

 

"கோகோவ மும்பைல உங்க மெயின் ப்ரான்ச்சுக்கு மாத்துங்க."

 

அது அவனின் அப்பார்ட்மெண்ட்டிலிருந்து சில நிமிட பயணம் தான். அவனின் வீட்டிலேயே தங்கிக் கொள்வாள். அவனின் பார்வையிலேயே இருப்பாள். அத்தோட 'எம்மருக என்னடா பண்றா?. எனக்கு அவள பாக்கனும்‌ போல இருக்கு.' எனக்கேட்டு நச்சரிக்கும் தன் தந்தையிடமிருந்தும், 'உன்ன நம்பித்தா அவள அனுப்பியிருக்கேன்.' என வாரத்தின் இரு நாட்கள் மிரட்டும் பிரணவ்விடமிருந்தும் தப்பிக்க வேண்டும் என்பதற்காக.

 

"ட்ராஸ்பர் தான. குடுத்திடலாம். ஆனா அத விட டிஸ்மிஸ் பெட்டரா இருக்கும்ல வேந்தன். நீங்க உங்க அத்த பொண்ண பக்கத்துலயே வச்சி பாத்துக்க." என்றவள்.

 

"புதுசா ஆள்லாம் தேவையில்ல. இருந்தாலும் அவக்கிட்ட திறம இருக்குங்கிற ஒரு காரணத்துக்காத்தா இன்னும் வச்சிருக்கேன். அத அட்வான்டேஜ்ஜா யூஸ் பண்ணிக்காதிங்க." என்றவளிடம் நடந்ததை கூற ரிபேக்கா யோசித்தாள்‌. 

 

கோகோவிற்கு தந்த சலுகையை நினைவு படுத்தி, ஐந்து வாடிக்கையாளர்களை அழைத்து வந்தால் உறுதி செய்யும் வேலையைத் தலைமை அலுவலகத்தில் வழங்குவதாகக் கூறி அனுப்பி வைத்தாள். 

 

'அஞ்சி தான இதோ! கூட்டீட்டு வர்றேன்.' என்றவன் விடுப்பு சொல்லி விட்டுக் கோகோவுடன் திரிகிறான். 

 

ரிபேக்கா அத்தோடு நிறுத்தாது அவளின் பணியாளர்கள் பத்திரமாக வீடு திரும்ப வாகன வசதி ஏற்பாடு செய்திருந்தாள். அலுவலக ரீதியாக வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் பயணத்திற்கும் சேர்த்தே செய்தாள்.  

 

இதோ அவனின் இரண்டாவது சந்தேகமே நடந்து வந்து அவனின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தது. 

 

அது ஞாயிற்றுக் கிழமை. 

 

மும்பை மாநகர கடற்கரையில் சாலையோர கடைகளின் நாற்காலியில் அமர்ந்து கார்லிக் ப்ரெட்டை சுவைத்தபடி,   

 

"என்னோட இன்ஸ்டால ஒரு ப்ரப்போசல் வந்திருக்கு இளாத்தான். ஒரு பொட்டிக். அதுக்கு மார்கெட்டிங் ஐடியா கேட்டிருக்காங்க. ரெண்டு நாள்ல மீட் பண்ண அப்பாயிண்மென்ட் கேட்டிருக்கேன்." கோகோ

 

"அவங்க சைட் அட்ரஸ்ஸ எனக்கு அனுப்பு." என்றவன் பொட்டிக்கைப் பற்றி இணையத்தில் தேடினான். 

 

"12 மணிக்கு லன்சு டயத்துல மீட்டிங் ஃபிக்ஸ் ஆகிருக்கு அத்தான்.” என்றதற்கு பதிலாகத் தலையசைத்தான். அப்பொழுது,

 

"ஹலோ வேந்தன். இப்ப உடம்புக்கு நல்லா இருக்கா.?" என்ற கேள்வியுடன் வந்தமர்ந்தாள் துகிரா. 

 

இளா எவ்வித உணர்வையும் காட்டாது இருக்க, இந்தக் கோகோ உலக அதிசயமே நேரில் வந்தது போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

மெழுகுச் சிலையென, தன் வெள்ளைத் தோல் தேகத்தை பளிச்செனக் காட்டும் கருப்பு வண்ண உடையில் ஒயிலாய் வந்தவளை இளா முழுங்கினானோ இல்லயோ கோகோ முழுங்கினாள்.

 

'பொம்பளப்பிள்ளையையும் விட்டு வைக்க மாட்டியாம்மா நீ'

 

'அழகுல என்னங்க ஆம்பள பொம்பள கருப்பு சிவப்புண்டு. கண்ணுக்கு அழகா தெரிஞ்சா யார் வேண்ணாலும் பாத்து ரசிக்கலாம்' நம் கோகோவின் பதில்.

 

"நா துகிரா. வேந்தனும் நானும் ஒரே ஆஃபிஸ் தான் ஒர்க் பண்றோம். டென் டேஸ்ஸா வேந்தன பாக்கல. இன்னைக்கி தான் மாட்டிருக்காரு." எனத் தன்னை கோகோவிடம் அறிமுகம் செய்து கொண்டவளின் பார்வை மொத்தமும் இளவேந்தனிடம் இருந்தது. 

 

பல நாட்களால பின் தொடர்ந்து வந்தவள் இன்று தைரியமாக முன் வந்து பேசும் காரணம் இளாவிற்கு தெரியும். 

 

கோகோ தொலைந்து போன அன்று,

 

சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்தவள் இளவேந்தனுக்கு அழைக்க, அது எடுக்கப்படவில்லை. அதனால் காரில் ஏறி, அவன் எங்கோ கொண்டு போய் விட்டு, பெரிய களேபரமே நடந்து விட்டது.

 

கோகோ இளவேந்தனுக்கு அழைக்கும்போது அவனின் ஃபோன் துகிராவிடம் இருந்தது. அவள் தான் எதையோ நோண்டி வைத்துக் கோகோவிடமிருந்து வந்த அழைப்பு தெரியாதபடி பார்த்துக் கொண்டாள்.

 

எப்படி அழைப்புகள் வராது போனதை அறிந்தவனுக்கு அவ்வளவு கோவம். 

 

அவளைப் பார்த்த உடனேயே, வந்த கோவத்திற்கு அறைந்திருப்பான் தான். ஆனால் பாவம் அன்று அவன் தந்த தடமே மறைய பல நாட்கள் எடுத்துக் கொண்டது. 

 

அத்தோடு அவளுக்கு இருக்கும் உடல்வாகிற்கு அடியெல்லாம் கொடுத்தால் பிறகு இளா சிறையில் தான் இருக்க வேண்டும், கொலை செய்துவிட்டான் என்று. 

 

"நீயும் ஒரு பொண்ணு தான. எப்படி உன்னால கோகோக்கு இப்படியொரு வேலைய செய்ய மனசு வந்தது. கேளு இத... இதுவர அவளோட சந்தோஷக் குரலத்தா நாங்கேட்டிருக்கேன். முதல் முறை பயத்தக் கேக்கறேன்." எனத் தன் ஃபோனிற்கு கோகோ அனுப்பிய குரல் குறிப்புகளை ஒலிக்க விட்டு விட்டு அழுந்தச் சிகையை கோத, அந்தக் குரல் துகிராவை அசைத்தது. 

 

"நா வந்து காப்பாத்தி கூட்டீடு போவேங்கிற நம்பிக்கையோட தான் எனக்குக் கால் பண்ணிருக்கா பாரு. இருநூறு கால்ஸ். எக்கச்சச வாய்ஸ் நோட். எதாவது ஒன்ன நா அட்டன் பண்ணிட மாட்டனான்னு எவ்ளோ தவிச்சிருப்பா."

 

"ஸாரி... உதவிக்கித்தா கூப்பிடுறான்னு எனக்குத் தெரியாது. ஏதோ பொறாமைல பண்ணிட்டேன். வெரி சாரி வேந்தன்." என்றவளின் குழந்தை மனம் கோகோவை நினைத்துச் சிறு கண்ணீர் வடித்தது.

 

"உங்க தகுதி ஏத்த ஆளத்தா நீங்கக் கல்யாணம் பண்ணிக்கப் போறிங்கள்ள. அப்றம் ஏ என்ன ஃபாலோ பண்றீங்க. நா யாரு கூடப் பழகுனா உங்களுக்கு என்னங்க பிரச்சன?." 

 

"ஏன்னா எனக்கு உங்கள பிடிச்சிருக்கு வேந்தன். ஐ ஆம் இன் லவ் வித் யூ." என்றாள் சின்னக் குரலில்.

 

அத்தனை நேரம் இருந்த ஆவேசம் மறைந்து சில்லென உணர்ந்தான் இளவேந்தன். 

 

"என்னால உங்கள அவ கூடச் சேத்து வச்சி பாக்க முடியல. கோவம் கோவமா வருது. சில நேரம் அவ மேல கார விட்டு ஏத்திக் கொன்னிடலாமான்னு கூட யோசிச்சிருக்கேன். ட்ரெய்யும் பண்ணிருக்கேன். தப்பிச்சிட்டா." என்று துகிரா கூறியது உண்மை. 

 

இருவரும் நடந்து செல்கையில் கோகோவின் மீது ஏற்ற வருவது போல் பல முறை காரை ஓட்டி வந்து பயங்காட்டியிருக்கிறாள். அப்போது, கீழே விழும் கோகோவை தூக்கி நிறுத்தும் இளவேந்தனை கண்டு ஆத்திரத்தில் முகம் சிவந்தும் இருக்கிறாள். 

 

"எனக்கு நீங்க அவ மேல காட்டுற அக்கற பிடிக்கல வேந்தன். அவள பைக்ல கூட்டீட்டு போறது பிடிக்கல. அது எல்லாம் எனக்குச் சொந்தமானது. எனக்கே எனக்கு மட்டும் தான்." என்றாள் அவனின் முகம் பார்க்காது.

 

அவனும் அறிவான், இந்த ஒரு மாத காலம் அவனைத் தொடர்ந்து வரும் அவளின் செயலையும் அழுது கரையும் அவளின் கண்மையையும். ஆனாலும்,

 

"மிஸ்ஸஸ் ஸ்மித்தா கிட்ட இத உன்னால சொல்ல முடியாமா.?" என்றபோது வேகமாகத் தலை உயர்த்தி பார்த்தாள் துகிரா. 

 

ஏனெனில் இவளின் சம்மதம் கிடைத்த பின் தான் சஜித்துடன் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று கூடத் தன் மகளுக்கு அமையப் போகும் நல்வாழ்க்கையைப் பற்றிப் பெருமையாகத் தன் சங்கத்து உறுப்பினர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். 

 

அவரும் பலமுறை கூறினார், "உனக்குச் சஜி செட்டாக மாட்டான் டியர். ப்ரஜித் இல்லன்னா அனு கூட ஓகே தான்." என்று. 

 

அப்பொழுதெல்லாம் எதுவும் சொல்லாது இப்போது மாட்டேன் என்று கூறினால் ஸ்மித்தா காட்டும் முகம் எப்படி இருக்கும்.

 

JET குழுமத்திற்கு சொந்தக்காரியாகப்போகிறாள் தன் மகள் என்று அவர் கட்டிய கனவுக் கோட்டையை யாரையும் உடைக்க அனுமதிக்க மாட்டார். அதுவும் அந்தக் குடும்பத்திற்கு சம்மந்தமே இல்லாத இளவேந்தனை எப்படி ஏற்பார் என்று அவள் சிந்திக்கவில்லை.

 

துகிரா, “எஸ். என்னால என்னோட மம்மிக்கிட்ட சொல்ல முடியும்.” 

 

"அப்ப அவங்க கிட்ட சொல்லிட்டு, இந்தக் கல்யாணத்த நிறுத்திட்டு வா. அப்ப ஏத்துக்கிறேன் உன்னோட லவ்வ." என்று விட்டுச் சென்றான் இளவேந்தன். 

 

'ரொம்ப சிம்பிள். சஜித் திரும்பி வரும்போது அவன்ட்ட இளவேந்தன எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னா கல்யாணம் தன்னால நின்னுடப்போது. அப்றம் இந்தர் அங்கிள் பாத்துப்பாங்க. எதுவா இருந்தாலும் முதல்ல சஜித் திரும்பி வரட்டும். அதுவர உன்ன பாக்காம, என்னோட லவ்வ காட்டாம என்னால இருக்க முடியாது.' என நினைத்தவள் இளவேந்தனை காதலுடன் அணுகத்தொடங்கினாள். 

 

ஆனால் பாவம் இந்தத் திருமண விடயத்தில் யாரும் அவளின் விருப்பத்தை இனி கேட்கப்போவதில்லையென்று அவளுக்கு அப்போது தெரியாது. 

 

மயக்கம் தொடரும்...

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 32

https://kavichandranovels.com/community/postid/1240/


   
ReplyQuote

You cannot copy content of this page