All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 26

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 130
Topic starter  

அத்தியாயம்: 26

 

பொறாமை... 

 

ரிபேக்காவின் விழிகளில் தெரிந்த அது ப்ரிஜித்திற்கு பிடித்திருந்தது. 

 

'யாருப்பா அந்தக் கோகோ. எனக்கே பாக்கனும் போல இருக்கே.' என நினைக்கத் தோன்றியது.

 

ரிபேக்காவுடன் வாழ்ந்த அந்த ஆறு மாதங்களில் பல முறை தேடியும் கிடைக்காத அது, இன்று எட்டிப் பார்க்கும்போது ரசிக்காமல், நினைக்காமல் என்ன செய்வது.

 

இரு கரத்தையும் கட்டிக் கொண்டு, நாடகத்தை வேடிக்கை பார்ப்பது போல் அவளின் கதறலை வேடிக்கை பார்த்தான். 

 

"நீ தான அவள அப்பாயின் பண்ணது.?"

 

"ம்ச்... உன்னோட பர்ஷ்னல் டிடெயில்ஸ் எனக்கு மட்டும் தான் தெரியுமா? உன்னோட ஆரூயிர் தோழனுக்கும் தெரியும் தான. போய் அந்த யூஸ்லஸ்ட்ட கேளேன். ஓ! அவன்தான தீவிரவாதி மாறித் தலைமறைவா சுத்துறானோ."

 

"சஜிய பத்தி நீ பேசாத. அவன் gems of person."

 

"அறிய வகை பொக்கிஷம். அதான் யார் கண்ணுக்கும் படக்கூடாதுன்னு மறைஞ்சி இருக்கான் போல. இருக்கும் இருக்கும். யாரும் திருடீட்டு போய்டக் கூடாதுல." என நக்கலாகக் சொல்ல,

 

"ப்ரஜித் நான் சீரியஸ்ஸா கேக்குறேன். உனக்கும்... கோகோக்கும்... என்ன சம்மந்தம்?..." 

 

"நானும் அதே சீரியஸ்ஸோட சொல்றேன். நீ... யார பத்தி பேசுறன்னே எனக்குத் தெரியாது." என்க, வேகமாக அவனின் அருகில் வந்தவள் அவனின் கோர்ட்டை விலக்கிக் கழுத்தில் அவன் அணிந்திருந்த தங்கச் சங்கலியை எடுத்தாள். 

 

"இது உனக்கு யார் குடுத்தா.?" என்றாள் அதன் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு டாலரைக்காட்டி. அவளின் கரத்தைத் தட்டி விட்டவன்,

 

"வேந்தன்!!." என உரத்தக் குரலில் அழைத்தான். 

 

பாவம் அந்த விலையுயர்ந்த சட்டை அவளின் ஆவேசத்தால் கிழிந்துவிட்டது.

 

"அறிவில்லை உனக்கு. ஒரு பையங்கிட்ட இப்படியா நடந்துப்பா. இதே மாறி நா உ சட்டைமேல் கை வச்சிருந்தா என்ன பண்ணிப்ப. ஹாங்... ஈப்டிசிங்ன்னு என்ன உள்ள தூக்கி வச்சி கிழிச்சிருக்க மாட்ட." எனச் சட்டையைப் பரிதாபமாகப் பார்த்தபடி செயினை பத்திரப்படுத்தினான். 

 

சட்டைக்குள் போடும் முன் அதற்கு முத்தமிட்டது ரிபேக்காவை மேலும் ஆவேசமடைய வைத்தது.  

 

அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளவேந்தன் ப்ரஜித்தின் குரலில், "ஸார்..." என்றபடி பவ்யமாக வந்தான்.

 

"இவள யாரு உள்ள விட்டது.?" எனக் காட்டமாகக் கேட்டான். 

 

"அது... தெரியல சார். இதோ இப்ப அனுப்பிட்டுறேன்…" என்ற இளவேந்தன் ரிபேக்காவிடம் செல்லும்படி வற்புறுத்த,

 

"ப்ரஜித், யார் குடுத்தா இத?" என்ற கேள்வியுடன் அங்கேயே நின்றாள்.  

 

"உனக்கு எதுக்கு நா பதில் சொல்லனும்." 

 

"சொல்லித்தா ஆகனும். இப்பவும் நா உன்னோட வைஃப் தான்." 

 

"இத இத்தன வர்சமா மறந்து போயிருந்தியா! செலக்டிவ் அம்னிசியாவா உனக்கு!. போய் நல்ல டாக்டரா பாரு." 

 

"ம்ச்... அனாவசியமா பேசாத. உனக்கும் கோகோக்கும் என்ன சம்மந்தம்ன்னு கேக்குறேன். என்னோட கேள்விக்கு மனசாட்சியத் தொட்டு சொல்லு. இதே டிசைன் அந்தப் பொண்ணு கைல இருந்த ப்ரேஸ்லெட்ல பாத்தேன்." என்றவளுக்கு நேற்று நடந்த ஈவெண்ட் நினைவில் வந்து நின்றது. 

 

நிதி திரட்ட வேண்டி நடைபெறும் கலை காட்சி கூடம் அது. அதில் சித்தாரா மட்டுமல்லாது அவரின் தோழிகள் பலரின் சித்திரங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. 

 

பொதுவாக இது போன்ற நிகழ்வுகளுக்குப் பார்வையாளர்கள் வெகுகுறைவு. அதன் அருமை தெரிந்த சிலர் தான் நேரில் வருகை தருவர்.

 

நேரில் சென்று தங்களின் பொன்னான நேரத்தை விரையம் செய்யாது, ஆர்டர் போட்டு வரையப்பட்ட படங்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதன் மூலம் உதவுவர். 

 

அதனால் பத்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்விற்கு பன்னிரண்டாகியும் தயாராகாது அலட்சியமாக இருந்தவளை அடித்துப் பிடித்து ஓடி வரவைத்து அவளின் தோழியின் ஃபோன் கால்.

 

"ரீ…பேப் செம்மையான அரேஜ் பண்ணிருக்கா. எனக்கு வந்த இன்விடேஷன்லயே நா ஃப்ளாட். அப்படி என்ன இருக்குன்னு பாத்திட்டு போலாம்னு தான் நேர்ல வந்தேன். எக்சலன்ட் அரேஜ்மெண்ட்." எனப் புகழ்ந்து தள்ளினாள்.

 

அப்படி என்ன செய்து வைத்திருக்கிறாள் இந்தக் கோகோ என நினைத்து வந்தவளும் நிரம்பி வழிந்த வீஐபி கூட்டத்தைக் கண்டு மட்டுமல்லாது, ஏற்பாட்டையும் பார்த்து மிரண்டு தான் போனாள்.

 

பாரம்பரிய ஓவியங்களின் பெருமையை அறிய ஆவலுடன் அனைவரையும் நேரில் வரவைத்தது கோகோவின் ஐடியா.

 

அழைப்பிதழ் அனுப்பிய விதம் தொடங்கி, ஒவ்வொரு ஓவியத்தின் அருகிலும் ஓவியங்களின் வரலாற்றையும் பெருமையையும் வரையப்பட்ட விதத்தையும் சில வினாடி ஒலிப் பதிவாக ஓட விட்டது வரை எல்லாம் உலகளாவிய தரத்தில் ஏற்பாடு செய்திருந்தாள் கோகோ. 

 

'இது ஃபாஸ்ட் புட் காலம். சிம்பிளா புரியுற மாறி, சாட் அண்ட் ஸ்வீட்டா, அவங்களோட ஆர்வத்தை தூண்டுற மாறி இருக்கனும்.' என்பவள் இளவேந்தன் கூறியதற்கும் ‌மேல் வேலை பார்த்தாள். 

 

கோகோவின் திறமையைத் தான் ரிபேக்கா டிசராக வந்த அன்றே பாத்திருக்கிறாளே. இன்று படமாகப் பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சி. 

 

அந்த மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்கும் விதமாக மாதரிகா அவர்களின் நிறுவனப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் செய்ய முன் வந்தார். 

 

கோகோவால் கிடைத்த முதல் வாடிக்கையாளர். 

 

பிரியங்கா எவ்வளவோ தடுத்தும், கோகோவிற்கு அனைத்தும் சாதகமாய் அமைந்தது அன்னாள். 

 

இன்று காலை அலுவலகம் வந்தவளை அனைவர் மத்தியிலும் பாராட்ட, "எல்லாம் என்னோட குட் லக் மேம். இது இருந்தா எப்பவுமே எனக்கு லக்கு தான்." என அவளின் கையில் இருந்த ப்ரேஸ்லெட்டிற்கு முத்தம் ஒன்று வைக்க, அது நம் ரிபேக்காவிற்கு ப்ரஜித்தின் கழுத்தில் கிடந்த டாலரை நினைவு படுத்தியது. 

 

உடனே புறப்பட்டு விட்டாள் சண்டை போட.

 

'எது கோகோவா! நமக்குத் தெரிஞ்சது ஒரே ஒரு கோகோ. அப்ப அப்பாயின் லெட்டர் அனுப்புனது ப்ரஜித்தா? ஏ பண்ணனும்? எனக்குத் தெரியாம எப்படி கோகோவுக்கு இவரு பழக்கமானாரு.' எனச் சந்தேகப் பார்வையை ப்ரஜித்தின் பக்கம் திரும்பினான் இளா. 

 

'என்ன?' என்பது போல் புருவம் உயர்த்தியவனுக்கு, 'ஒன்னுமில்லை...' என்றான் இளவேந்தன்.

 

விடாது ப்ரஜித்தின் கழுத்தில் கிடந்ததது கோகோ பரிசளித்தது தான் என்க,

 

"இது என்ன தனித்துவமான டிசைனா!. ஆன்லயன்ல பாரு. இதே மாடல்ல எக்கச்சக்கமா இருக்கு."

 

"ஆனா இது உனக்கு ஸ்பெஷல்."

 

"ம்ச்... வேந்தன் நா நல்ல மூடுல இருக்கேன். வெளில அனுப்பி விடுங்க." என்று விட்ட நடக்க,  

 

"எஸ்... நீ இப்படி ஓடுறத பாத்தாலே தெரியுது என்னோட சந்தேகம் சரி தான்னு. உனக்கு இது ஸ்பெஷல் தான். கோகோ ஸ்பெஷல். தங்கச் செயின்ல ஒரு மட்டமான கவரிங் டாலர மாட்டி வச்சிருக்குக்கும் போதே தெரியுது அது ஸ்பெஷலன்னு. இந்த டாலருக்கு ஒரு மினிங் இருக்குல்ல. கப்பில் டாலர் தான இது. ஒரு பாதி உங்கிட்ட இன்னோரு பாதி அவக்கிட்ட, Make for each otherன்னு நினைச்சி வாங்கி மாட்டிக்கிட்டிங்களோ." என்க,

 

'உன்னோட கற்பனைக்கு எல்லாம் என்னால பதில் சொல்லிட்டு இருக் முடியாது.' என்பது போன்று நின்றான் ப்ரஜத்.

 

"I am sure. உனக்கும் அவளுக்கும் இடைல எதுவோ இருக்கு. எனக்கு அது என்னென்னு தெரிஞ்சே ஆகனும்." எனக் கத்தியவளின் பார்வை இப்போது இளவேந்தனின் மீது திரும்பியது. 

 

"உன்னோட அத்த பொண்ணு தான கோகோ.‌ உன்னோட முதலாளிக்கு பீஏ வேல பாக்காம ப்ரோக்கர் வேல பாக்குறியா?" எனக் கேள்வியைத் திருப்பி விட, 

 

'புது கதையால்ல இருக்கு‌.' என நினைத்தவன்.

 

"ஐயோ மேடம். நீங்கத் தப்பா புரிஞ்சிருக்கிங்க. கோகோக்கு இந்த ஊரும் இடமும் புதுசு. அவ சென்னையே பாக்காதவ. சார் நீங்கக் காஞ்சிபுரம் வந்திருக்கிங்களா." எனப் ப்ரஜித்தை கேட்க, 

 

‘உனக்குப் பதில் சொல்லனுமாடா?.’ என இளாவை முறைத்தான். 

 

"இல்ல... அவர் அங்க போனது இல்ல. இவா இங்க வந்தது இல்ல. அப்றம் எப்படி சந்திச்சிருக்க முடியும் மேடம். இவருக்கு எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா கோகோவ பத்தி எனக்கு நல்லா தெரியும் அவளுக்கு இருக்குற ஒரே பாய் ஃப்ரெண்ட் நா மட்டும் தான். அத்தோட ஆறு மாசத்துல எங்களுக்குக் கல்யாணம் நடக்கப் போது மேடம்." என்க, ரிபேக்கா மழை இறங்க ஆரம்பித்து விட்டாள்.

 

'ஓ... அப்ப இது கோ இன்சிடன்ட்டா.!' என அவள் சாந்தமாகத் திரும்ப, அவளை அப்படியே போக விட்டால் அது ப்ரஜித் இல்லயே.

 

"உங்க மேரேஜ் லவ் மேரேஜ்ஜா? இல்ல அரேஜ்டு மேரேஜ்ஜா?" என்றவனுக்கு எப்படி சொல்வது என்று புரியாது இளவேந்தன் நிற்க, 

 

“நா உன்னோட அத்தை பொண்ண பாக்கனுமே வேந்தன்." 

 

"ஏன்..." என்ற கேள்வி ரிப்பேக்கவிடமிருந்து வந்தது.

 

"பழகத்தான். என்னோட டேஸ்ட்டுக்கு ஏத்த மாறி ஒருத்தி ஊருக்குள் இருக்கும்போது யாருன்னு தெரிஞ்சி வச்சிக்கலன்னா குத்தமாகிடும்ல வேந்தன்." என்றவனை முறைப்படி சென்றாள்‌ ரிபேக்கா.

 

"குத்தமானாலும் பரவாயில்லை. நா உங்களுக்கு அவள அறிமுகம் செஞ்சி வைக்கமாட்டேன்." என்றான் இளா. 

 

"இட்ஸ் ஓகே. நா ரிபேக்கா ஆஃபீஸ்க்கு போய்ப் பாத்துக்கிறேன்." என்றபடி நடக்க, இளா நிறுத்தினான் ப்ரஜித்தை

 

 ‘என்ன?.’ என்றவரிடம்.

 

"அந்த டாலர காட்டுனா நானும் பாத்துப்பேன்." 

 

"இப்ப என்ன எஞ்சட்டைய கலட்டி காட்டனுங்கிறியா! ஆமா நீ ஏ என்ன கேள்வி கேட்டுட்டு இருக்க. நா சொல்ற‌த செய்றது தான உன்னோட வேல. எங்கிட்ட சைலன்டா இருக்கனும் இல்லன்னா வேற வேலை தான தேட வேண்டிவரும். அப்றம் உன்னோட முன்னால் முதலாளிக்கு உளவு வேல பாக்க முடியாது. ஜாக்கிரதை." என்று விட்டுச் சென்றவன் அந்த டாலர் தொட்ட மார்பை வருடிய படிச் சென்றான்.

 

‘நம்ம பொண்டாட்டியும் நம்மல சைட் அடிச்சிருக்கா போலயே.’ என நினைத்தவனின் இதழ்களில் நிறைவான ஒரு புன்னகையை யாரும் பார்த்திருக்க முடியாது.

 

அதற்கு மாறாக ரிபேக்கா துணி கொண்டு துடைத்த உணர்ச்சிகளற்ற முகத்துடன் வெளியே செல்ல, அங்குத் துகிரா காரின் ஸ்டெரிங்கில் தலை சாய்த்தபடி அமர்ந்திருந்தாள். 

 

இங்கு இரு பெண்களும் கோகோ என்ற ஒருத்தியாள் புலம்பித் தவிக்க, அங்குக் கோகோவும் புலம்பிக் கொண்டு தான் இருக்கிறாள். 

 

"கொஞ்சம் அழகா இருந்தா திமிரும் கூடவே வந்து ஒட்டிக்கும்‌ போல. இனி அந்தத் திமிரு பிடிச்ச பச்ச கண்ணு பாவ் பஜ்ஜிக்கிட்ட நா பேசமாட்டேன். அவன் இருக்குற திசைய கூட நா வெறுக்குறேன்." எனச் சஜித்தைத் திட்டிக்கொண்டிருந்தாள் கோகோ. 

 

மறுபடியுமா??

 

மயக்கம் தொடரும்...

 

கருத்துக்களை வரவேற்கப்படுகிறது

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments/

 

மயக்கம்: 27

https://kavichandranovels.com/community/postid/1152/


   
ReplyQuote

You cannot copy content of this page