All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 22

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம் -22
திருமணம் முடிந்து மூன்றாம் நாளன்று மாலை போல் மறு வீட்டிற்குப் புறப்பட்டனர்.ரிஷி தான் காரையோட்டினான். அவன் அருகில் சகஸ்தா அமர்ந்திருந்தாள்.பின் இருக்கையில் சுபி அமர்ந்திருந்தான். "அத்தான் புதுக் காரா??? என சுபி கேட்க" ரிஷியும் "ஆம்" என்றான்.சகஸ்தாவோ அப்போது தான் அதனைப் பார்த்தாள்.

எங்கு அவன் அவளை விட்டான்,மறு வீடு செல்ல ஆடைகளை அடுக்க கூட விடவில்லையே,முத்தமிட்டு முத்தமிட்டே ,அவளை ஒரு வழி பண்ணுகிறான்.எங்கே அவள் சுற்றத்தைப் பார்ப்பது.

வரும் வழியிலே ஒரு ஹோட்டலில். காஃபி குடித்தனர்.
பின் ஒருவழியாக மூவரும் வீட்டிற்கு வந்தனர், ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார் சாருமதி.அவர்கள் சுற்றத்து உறவினர்கள் சிலரும் அங்கு தான் இருந்தனர்.

பெட்டிய உன்னோட அறைல வைமா என்றார் சாருமதி,அவளும் ரிஷியை அவளது அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

ரிஷியோ அறையை சுற்றிப் பார்க்க மிக மிக நேர்த்தியாக இருந்தது.ஒரு புறம் வரைவதற்கு ஏதுவாக மேசையும் போடப்பட்டிருந்தது.

பையை கட்டிலில் வைத்து விட்டு ஜன்னலைத் திறந்தான் சிலுசிலு என குளிர் காற்று வீசியது..அவன் பின்னே அவளும் வந்து எட்டிப் பார்க்க ஓரளவு வெளிச்சமாகத் தான் இருந்தது வெளியே " தோட்டமா" என ரிஷி கேட்க "ஆமா என்றாள்".அவள் புறம் திரும்ப அவன் மார்பில் மோதி பின்னே சென்று நின்றாள்.கன நேரத்தில் அவள் இதழில் இதழ் பதித்து விலகினான்.அவனைத் தள்ளி விட்டவள் குளிச்சிட்டு வாங்க என்றாள்.அவனும் தலையைக் கோதியவாறு விலகி குளியலறையினுள் நுழைந்து கொண்டான்.

வெளியேறிய சகஸ்தா தனது சுற்றதுதுடன் அளவளாவிக் கொண்டிருந்தாள்.சாருமதியும் அவர்களுக்கு தேனீரும் சிற்றூண்டியும் வழங்க உண்டு கொண்டிருந்தனர்.

குளித்து விட்டு இடையில் டவலுடன் வந்த ரிஷி பையில் இருந்து உடையை எடுத்து அணிந்து வெளியே வந்தான்.

சுற்றத்தார் சொன்றிருந்தனர் இரண்டு மூன்று பேர் மீதமிருந்தர். அதிலிருந்த வயதான பாட்டியோ "ஏன்டி அதான் தம்பி வந்துச்சில சாப்பிட ஏதும் கொண்டு வந்து கொடுக்கிறது??!! என்றார்.

''பாத்தீங்களா பாட்டி அவ என்ன கவனிககிறதே இல்ல'' என்றான். "ஏன்டியம்மா புருசன கவனிக்கிறத விட உனக்கு வேற என்ன வேலை இருக்கு" அவளும் அவனை முறைத்தபடி சமையலறைக்குச் சென்றவள் சிற்றூண்டி கொண்டு வந்து கொடுக்க,அவனும் கண்சிமிட்டலுடன் அதைப் பெற்றுக் கொண்டான்.

"நீ சாப்பிடல ???"என அப்பாட்டி மறுபடி கேட்க அவள் பதில் சொல்ல முதலே மற்றைய வயதான பாட்டி " இப்படி மெலிச்சு சத்தில்லாம இருந்தா எப்படி தம்பிய தாங்குவ என சொல்ல சாப்பிட்டுக் கொண்டிருந்த. ரிஷிக்கோ புறையேறத் தொடங்கியது.

அவளோ இதற்கு என்ன சொல்வது எனத் தெரியாது முழிக்க தலையில் தட்டியவர்.பார்த்து என்றார். உன் வயசிய எனக்கு இடுப்புல ஒன்ன வயிற்றில ஒன்னு....." வாய மூடு கிழவி உன்னக் கொல்ப் போறன் பாரு என மனதில் பாட்டிக்கு திட்டிக் கொண்டாள்.

ரிஷி சாப்பிட்டு முடித்ததும். தட்டை வாங்கியவள்.. நீங்க பேசிட்டிருக்க பாட்டி நான் குளிச்சிட்டு வாரன் என்றவள் அங்கு நிற்காமல் சமையலறைக்குச் சென்று தட்டுங்களை வைத்து விட்டு .தனதறைக்குச் சென்றாள்.

பாட்டிமாரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினர். சுபியோ வெளியே சென்று வந்தவன்.ரிஷியுடன் பேசிக் கொண்டிருந்தான் சீலனும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

ஒன்றாகத் தான் அனைவரும் இரவுணவை உண்டனர். இரவு அவள் அறையில் தான் தூங்கினர்.இருவரும் அவளை அனைத்தபடி தான் தூங்கினான்        புதுவிடம் என்பதால் தூக்கம் வரவே இல்லை......

"என்னாச்சி என சகஸ்தா கேட்க தூக்கம் வரல என்றான்.தன் கைகளால் அவள் கழுத்தில் ஊர்வலம் செற்றான்.அவன் கையை தடுத்துப் பிடித்தவள் " கண்ண மூடுங்க தூக்கம் வரும் என்றாள்",வெட்கத்தால் சிவந்த முகத்தை அவனுக்கு காட்டாது.

கள்வன் அவனுக்கு தெரியாதா என்ன??!!!! தடுக்கும் கைகளுக்கு முத்தமிட்டவன் அவள் இதழில் இளைப்பாறி மொத்தமாக கொள்ளையிட்ட பின் தான் அவளை விட்டு விலகினான்.தன் புஜத்தில் தலை வைத்து தூங்குபவளை சரியாக படுக்கையில் கிடத்தியவன்.எழுந்து ஜன்னல் புறம் வர அவன் கண்ணில பட்டது அவளது ஓவியங்கள் அனைத்துமே மிக அழகாக இருந்தது.சில ஓவியங்கள் கறுப்பு வெள்ளையும் தனி வர்ணத்திலும் இருந்தது.ரொம்ப டேலன்டட் டால் என மனதில் சொல்லிக் கொண்டான்.

அவ் மேசையில் இருந்த ராயிங் புக்கில் படிய அதை கையில் எடுந்தவன் ,ஒவ்வொரு பக்கத்தை புறட்டப் புறட்ட விழிகள் விரியத் தொடங்கியது.

அப் புத்தகம் முழுவதும் ரிஷியினதும் அவளினதும் ஓவியமே ,அனைத்தும் கறுப்பு வெள்ளையில் ,பல பரிமாணங்களில் இருந்தது. ஒவ்வொன்றையும் பல தடவை பார்த்திருபான். அவன் உணர்வுகளை விபயிக்கவே முடியவில்லை , திரும்பி மஞ்சத்தைப் பார்க்க அவளை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.இதழ்களில் புன்னகை ராயாங் புக்கை எடுத்த இடத்தில் வைத்தவன் அவளை ரசனையாகப் பார்த்தபடி தூங்கிப் போனான்.

அடுத்த நாள் காலைப் பொழுது அழகாகப் புலர்ந்தது.சேவல் கூவும் சத்தத்தில் தான் ரிஷி கண் விழித்தான்.அருகில அசகஸ்தா இல்லை மனதிலோ ஏதோ மகிழ்ச்சி, நேரத்தைப் பார்க்க அதுவோ எட்டு எனக் காட்டியது.அப்படியே பார்வையை சுழல விட அவளது மேசையில் ஓவியம் எதுவும் இல்லை எங்கே போயிற்று என எண்ணியவாறு எழுந்தவன் கண்ணில் பட்டது அறைதத்உ ஓவியமும் அலுமாரியின் மேல் வைக்கப்படிருந்தது.

எழுந்தவன் குளித்து வெளியே வர சீலன் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்." அவனைக் கண்டவர்,"குட் மார்னிங் மாப்பிள்ளை நான் ஆஃபிஸ் கிறம்புறன்" என்றார்.அவனும் "ஓகே மாமா நாங்களும் ஈவினிங் போல கிளம்புவம் " என்றான் "ரெண்டு நாள் தங்கிப் போகலாமே சுற்றிப் பார்த்துடு" என்றார் சீலன்.

உங்க பொண்ணச் சுத்தவே நேரம் பத்தல் என முனுமுனுத்தவன் கல்யாணத்துக்கு லீவ் எடுத்தது.பொத்துவிலில்ல இப்போ தான் ஆரம்பிச்சது மாமா எல்லாம் பார்க்கனும் பொத்துவில் தான் போறம் வரும் போது பார்ப்போம் மாமா என்றார்.

ரிஷி தன்னிடம் இப்படி விளக்கம தருவதில் மகிழ்சியுற்றவர்.அவர்களின் பேச்சை கேட்டு அவ்விடம் வந்த சாரு சரி மாப்பிள்ளை மதியம் சாப்பிட்டு போங்க என்றார்.,சீலனும் மதியம் சந்திப்போம் என்றபடி ஆபிஸ கிளம்பினார்.

சகஸ்தா கேட்டுருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை.சுபியின் சத்தம் வீட்டின் பின்புறம் கேட்க அவனும் ரிஷியோ சகஸ்தாவிடம் சைகையில் காஃபி என்று விட்டு சுபியின் சத்தம் வந்த வீட்டின் பின்புறம் செல்ல அவனோ பக்கத்து வீட்டுப் பையனிடம் பேசிக் கொண்டிருந்தான்.அவன் அருகே வந்த ரிஷி சுற்றிப் பார்க்க கிணறு ஒருபுறம் காய் கறிப் பயிர்கள் ஒருபுறம் ,ரோஜா கற்றாழை,செவ்வந்தி ,மல்விகை என பூக்கள் ஒருபுறம் என அனைத்தும் வீட்டின் பின்புறம் அத்தோட்டத்தில் அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது.

மனதில் நின்றவள் 22
நான் VSV 31


   
ReplyQuote

You cannot copy content of this page