All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா? -22

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம்: 22

 

அஜந்தா ராதிகாவை நெருங்க அவளுக்கு ஏதோ இவங்க பேசுவது மலையாள சேனல் பார்ப்பது போல இருந்தது …அவள் அந்த அரண்மனையின் அழகை ரசித்து கொண்டு இருந்தாள்…அஜந்தா அவளை நெருங்கியவள். 

 

அஜந்தா “ என்ன தைரியம் இருந்தால் நான் விவாகம் கழிக்கன் போகனு ( நான் கல்யாணம் செய்ய போகும்) என் அத்தானை…நீ மோகினி போல வந்து மயக்கி இருப்ப அது போல ஈ பெண்குட்டி என் சேட்டனை விவாகம் செய்து வந்து இருப்பாள். 

 

இன்று உங்க இரண்டு பேரையுமே ஈ கொட்டாரத்தை விட்டு நான் ஓடிசில்லா ( விரட்டவில்லை) நான் ராஜா ரவி வர்மன் சொச்சு மோள் இல்லை “ என்றவள் ராதிகா கையை பற்றினாள். 

 

சட்டென ராதிகா அவளை பார்த்தவள் இதுங்க மலையாள பீஸ்…நம்ம தமிழ் சுட்டு போட்டாலும் வராது ….அதனால் பொதுவான ஆங்கிலத்தை இழுத்து விடலாம் என நினைத்தவள்…ஆங்கிலத்தில் . 

 

ராதிகா “ எக்ஸ்க்யூஸ் மீ மிஸ் எதற்காக என் கையை பிடித்து இருக்கிறீங்க…என்ன விஷயம் என்னை இன்வைட் பண்ணி உள்ளே அழைத்து போக போகிறீங்களா? என கேட்டாள். 

 

அப்படி கேட்டவளை அந்த அரண்மனை ஆளுங்க வியப்பாக பார்த்தனர்…இங்கே என்ன பிரச்சனை நடக்கிறது இந்த பெண்ணு கேஷுவலாக பேசி கொண்டு இருக்கிறதே! என்று ஆனால் உண்மை தெரிந்த யுவராஜ்.  

 

“கடவுளே இவளுக்கு நான் மலையாளத்தில் சம்சாரிச்சது தெரியாது…தெரிந்து இருக்க இப்போ கதகளி ஆடி இருப்பாள்” என நினைத்தான்…

 

தனுஜ் மனதில் சிரித்தவன் “இந்த அஜந்தா மேடம் போயும் போய்… இந்த மோகினி கிட்ட மாட்டி இருக்கிறாங்க பாவம்… அவங்க கதை இன்றோடு முடிந்தது” என நினைத்தான்…அஜந்தாவும் ஆங்கிலத்தில் 

 

அஜந்தா “ஏய்! என்ன டி நடிக்கிறாயா? என் யுவா அத்தானை பணத்திற்க்காக வளைத்து போட்டு விட்டு…இப்போ ஒன்றும் தெரியாத அப்பாவி போல நடிக்கிறாயா? இன்று நான் ஆடும் கதகளியில் நீ இந்த கேரளாவை விட்டு ஓட போகிற “ என சொன்னவள் அவள் கையை பிடித்து முறுக்க . 

 

கார்த்திகா “ அஜந்தா அந்த பெண்ணை விடு…நம்ம கொட்டாரத்தை தேடி வந்த பெண்ணை… இப்படியா? நீ நடத்துவ பேசலாம் விடு அச்சா நீங்க சொல்லுங்க “ என்றாள். 

 

மீனாட்சி “ அஜந்தா அந்த புள்ள கையை விடு பெரியவங்க இருக்கும் போது…இப்படியா? மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது.. அவள் யுவா கட்டி கொள்ள போகிற பெண்ணு “ என சொன்னாள்…அவர் தமிழ் பேச தான் ராதிகாவுக்கு புரிய அவள் யுவராஜை பார்த்த பார்வையில் கொலை வெறி இருந்தது. 

 

அடுத்த செக்கன் அஜந்தா கை ராதிகாவின் கையில் இருக்க… அதை அவள் முதுகுக்கு பின்னால் திரும்பியவள். 

 

ராதிகா “ ஏய் நான் யாரு தெரியுமா? ராதிகா உன் கதகளியை நீ ஆடி காட்டினால் நான் என் தமிழ் நாட்டியம் தாண்டவம் ஆடி காட்டவா? நான் தாண்டவம் ஆடி நீ பார்த்தது இல்லையே! உன் அத்தான் ,அவர் பிஏ கிட்ட கேட்டு பாரு…என்ன தெனாவெட்டு இருந்தால் என் கையை பிடித்து முறுக்கி இருப்ப. 

 

ஏய்! கேரளத்து கப்பக் கிழங்கு சாப்பிடும் உனக்கே இவ்வளவு தில் இருந்தால்…தமிழ் நாடு அதுவும் மதுரை பெண்ணு டி நானு… கறிகுழம்பு அயிட்டத்தை பிளந்து கட்டும் ஆளுங்க நாங்க…. எங்க பலத்தை காட்டினேன் என்று வை மகளே உன் பாடி பஞ்சர் ஆகி விடும். 

 

இனி ஒரு தடவை கை நீட்டின அடுத்த தடவை நீட்ட கை இருக்காது" என்றவள்…அவள் முதுகில் ஒரு குத்து விட்டு அவளை பிடித்து தள்ளி விட அவள் போய் விஜயன் காலடியில் விழுந்தாள்.

 

அங்கே இருந்தவர்கள் முகம் இதை எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் முகங்கள் காட்டியது…விஜயன் கோபமாக ராதிகா அருகில் வர முன்னா என பைரவ் அழைத்தான். 

 

அடுத்த செக்கன் ராதிகாவை மறைத்தது போல ஆறடி மாமிச மலை என முன்னா வந்து நின்றான்…விஜயனால் அதற்க்கு மேலே முன்னேற முடியாமல் போக அவர் பின் வாங்கியவர்…தன் கோபத்தை வார்த்தைகளால் வெளிபடுத்தினார். 

 

விஜயன் “ பைரவ் இது சரியில்லை நிங்கள் ஈ தரவாடு அடுத்த வாரிசு என்றால்…ஏதும் செய்யலாம் என நினைக்க வேணாம்… ஈ கொட்டாரம் என் அச்சனின் கொட்டாரம்… உங்க அச்சன் போல தான் எனக்கும் அருளுக்கும் எல்லா உரிமையும் இங்கே இருக்கிறது. 

 

நீங்கள் உங்க அதிகாரத்தை காட்ட நினைக்க வேணாம் எங்களுக்கும் ஆளுங்க இருக்கு…நாங்கள் எங்க அச்சனை மதிப்பதால் தான் இன்னும் ஈ கொட்டாரத்தில் உரிமை கேட்காமல் இருக்கிறோம்” என்றார்….சத்தமாக சிரித்தவன் 

 

பைரவ் “ நிங்கள் பறயறது (சொல்வது) எல்லாம் சத்தியமா?  இதை ஈ கொட்டாரத்தில் உள்ள… உங்க அச்சன், அம்மே, அனியத்தி போல நானும் நம்ப வேணுமா? சித்தப்பா நீங்கள் ஒன்று மறந்து போய் நான் முத்தச்சன் சொத்தில் வாழ்பவன் அல்ல. 

 

என் சொந்த உழைப்பில் எனக்கு என்று தனி ராஜ்ஜியத்தை உருவாக்கியவன்…என் சொத்து ஈ கொட்டாரத்திற்க்கு ஈடானது ஏன் அதை விட அதிகம்….ஆல் ரைட் நீங்கள் எவ்வளவு பேசிய பிறகு நானும் சில விஷயங்களை பேச வேணும்…பட் நாட் நவ் நான் ரொம்ப டயர்டாக இருக்கிறேன் பிறகு பேசலாம். 

 

ஓன்று நினைவில் வைங்க எனக்கு என்ன பாகுமானம் (மரியாதை) ஈ தரவாடு கொடுக்கிறதோ…அதைய மரியாதையை என் பார்யாவுக்கும் அவள் நண்பி ராதிகாவுக்கும் கொடுக்க வேணும்…யஸ் ராதிகா வேற யாருமல்ல ஆரபியின் உயிர் தோழி என்றவன் “ஓமனா என அழைத்தான். 

 

ஓமனா ஓடி வந்தவள் தலை வணங்கி விட்டு… சின்ன தம்புரான் என அழைத்தாள். 

 

பைரவ் “ அம்மாயி இனி நீயும் ஓமனாவும் தான் ஆரபி, ராதிகாவை பார்த்து கொள்ள வேணும்…அவங்க எதை கேட்டாலும் அது டிரஸ், சாப்பாடு, நகை… ஏன் பூ என்றால் கூட அடுத்த செக்கன் அவங்களுக்கு நீ அதை ஏற்பாடு பண்ணி கொடுக்க வேணும். 

 

நீ அவங்க அம்மாயியம்மா (மாமியார்) இவங்க உன் மருமகள்கள் இவங்களை… ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டியது நீ உனக்கு உதவியாக ஓமனா இருப்பாள்…ஓமனா இது என் கட்டளை “ என்றான்…பைரவ் என குரல் உயர்த்திய ரவி வர்மன். 

 

ரவி வர்மன்” பைரவ் இங்கே என்ன நடக்கிறது நிங்களுக்கு ஒன்று மறந்து போய்…இப்போ ஈ தரவாடுக்கு ராஜா நான் தான் நிங்கள் இல்லா… என் பர்மிஷன் கேட்டாது நிங்கள் செய்த இரண்டாவது தப்பு  இது. 

 

நிங்களுக்கு முன்னே நடந்தது மறந்து போய்…பெரியவங்க ஏற்பாடு பண்ணும் விவாகம் மட்டும் தான் ஈ லோகத்தில் (உலகம்) நிலைத்து நிற்க்கும்…நிங்கள் முதல் விவாகம் நினைவு இருக்கா நிங்கள் வாழ்ந்தது ஒரு ஆறுமாதம் தான். 

 

ஏன் தெரியுமா? ஜாதக பொருத்தம் இல்லை அது தான் நிங்கள் பார்யாவை காவு வாங்கி விட்டது…இப்போ அடுத்த விவாகம் இந்த பெண்ணின் பாவத்தை வேற ஈ தரவாடு வேற சுமக்க வேணுமா? என கோபமாக கேட்டார். 

 

பைரவ் “ பாவமா? வேணாம் முத்தச்சன் என்னை பேச வைக்க வேணாம்…வெளியே போய் பாருங்கள் ஈ தரவாடு மேலே மக்கள் விடும் சாபம், கண்ணுனீரை ( கண்ணீர்) உங்களுக்கு இது எல்லாம் தெரிந்து நடக்கிறதா? இல்ல தெரியாமல் நடக்கிறதா? என்ன? சித்தப்பா முத்தச்சன் சொல்லி தானே… இதை எல்லாம் செய்ததாக சொல்லி இருக்கிறீங்க” என கேட்டான். 

 

அவன் கேட்டதும் விஜயன், அளுள்மொழி முகம் மாறியது…அவர்கள் நினைக்காது எல்லாம் நடக்கிறது உண்மையில் இது பற்றி… ரவிவர்மனுக்கு ஏதுவுமே தெரியாது என்பது தான் உண்மை…

 

அவர் அதிக அன்பு வைத்து இருந்த ரகுந்தன் மனைவியுடன் இறந்ததும் அவர் பாதி உடைந்து விட்டார்….அது போல தன் பெண்ணின் வாழ்க்கை பேரனின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது…என்ற விரக்தி அது தான் பெரிதாக எங்குமே வெளியே போக மாட்டார்…தன் மற்ற இரண்டு மகன்கள் பார்த்து கொள்வாங்க என்ற நம்பிக்கை. 

 

ரவி வர்மன் “ நிங்கள் எந்த பறயறது ( என்ன சொல்ற)..” என கேட்டார். 

 

விஜயன் “ அச்சா பைரவ் கண்ணுக்கு இப்போ எல்லாம் தப்பாக தான் தெரியும்…நிங்கள் அது குறிச்சு(பற்றி) சிந்திக்கருத(யோசிக்க வேணாம்)... இப்போ இருக்கும் பிரஸ்னம்(பிரச்சனை) பற்றி பேசலாம் “ என்றார். 

 

அருள்மொழி “ சேட்டன் சொல்வது தான் சரி அச்சா…முதலில் ஈ பெண்குட்டிகள் யாரென அன்வர்ஷிங்குங்க ( விசாரிங்க)” என்றார்…பைரவ், யுவராஜ் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 

 

ரவி வர்மன் “ சரி இது குறிச்சு(பற்றி) பிறகு பேசலாம் பைரவ், யுவராஜ்… முதலில் நிங்கள் சொல்லுங்க…ஈ பெண்குட்டிகள் யாரு எந்த தரவாடு சேர்ந்தவர்கள்” என கேட்டார். 

 

பைரவ் “ தரவாடு அது எனக்கு தேவையில்லாத ஒன்று ஆரபி என் பார்யா அதை விட…இந்த தரவாடுவில் காணாதது( காணாக்கிடைக்காத) பெண்குட்டி(பெண்) இவள் ” என்றான்…அது போல யுவராஜ் பேச வர. 

 

சுவர்ணமாலினி” வேணாம் மருமகனே உங்க காமூகி( காதலி)குறிச்சி நிங்க பறயறயது(சொல்ல வேணாம்) அது தான் நாங்க நேரில் பார்த்து விட்டோம்…ஈ தரவாடுக்கு நிங்கள் தேடி கொண்டு வந்த பெண் குட்டி ஈ லோகத்தில் உண்டோ” என கோபமாக சொன்னார். 

 

விஜயன் “ அச்சன் நிண்ட(உன்) எண்ணம் பற்றி கேட்கவில்லை…ஈ பெண்குட்டி யாரானு(யார்) என்று தான் கேட்டார்…உனக்கு நாங்க கேட்க வருவது புரியாமல் இல்லை… பைரவ் அது புரிந்தும் புரியாதது போல நடந்து கொள்கிற சொல்லு இவங்க சுவேதேஷி ( பூர்வீகம்) என்ன? என கேட்டார். 

 

பைரவ் ஏதோ பதில் சொல்ல முன்னே.. சட்டென ஆரபி தன் கரங்களை குவித்தவள். 

 

ஆரபி “ வணக்கம் நீங்க பேசும் உங்க மொழி எனக்கு புரியவில்லை …ஆனால் உங்க உடல்மொழி புரியும் நீங்க என்னை பற்றி தான் சாரிடம் விசாரிப்பதாக தெரிகிறது. 

 

நானே என்னை பற்றி அறிமுகம் செய்கிறேன்…நான் ஆரபி ஒரு ஹோம்மில் வளர்ந்த பெண்ணு மியூசிக் டீச்சராக இருக்கிறேன்…இது ராதிகா என் பெஸ்ட் ப்ரண்ட் இவளுக்கு குடும்பம் இருக்கு மதுரையில் இது தான் என்னை பற்றிய விபரம் “ என்றாள். 

 

மீனாட்சி, கார்த்திகா, நிலா தவிர மற்ற அனைவரின் முகமும் மாறியது. 

 

பல்லவி “ என்ன ஈ தரவாடு எதிர்கால ராணி ஒரு அனாதனா?( அனாதையா) எந்த குருவாயூர்ப்பா ஈ கொட்டாரத்திற்க்கு வந்த சோதனை…என் மோளை விட ஈ பெண்குட்டி எந்த விஷயத்தில் நினக்கு மிகிகச்சது ( உனக்கு சிறந்தவள்) பைரவ் என பல்லவி கேட்டாள். 

மலர் பூக்கும்…


   
ReplyQuote

You cannot copy content of this page