All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

மனதில் நின்றவள் 19

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Member Author
Joined: 3 months ago
Posts: 20
Topic starter  

மனம் 19

அந்த மிகப் பெரிய திருமண மண்டபம் சன நெரிசலால் நிரம்பி வழிந்தது. அவ் மண்டபத்தின் மேடையில் யாகம் வளர்க்கப்பட்டிருந்தது.அதன் முன் பட்டு வேஷ்டி சட்டையில் யாகத்தில் ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான் ரிஷி.

எப்போதும் இறுக்கமாக இருக்கும் அவன் முகத்தில் அவ் இறுக்கம் குறைந்து இருந்தது.

"பொண்னை அழைச்சிடுவாங்க" என ஐயர் குரல் கொடுக்க,ஸ்ரீ மற்றும் உறவுப் பெண்கள் சூழ சகஸ்தாவை அழைத்து வந்தனர். அவள் புறம் பார்வையைத் திருப்பிய ரிஷி கண் இமைக்க மறந்தான்.

அழகியவளை ஒப்பனையாளர் தனது கை வண்ணத்தில் இன்னும் அழகாக்கி இருந்தார் ரிஷியின் கண்களுக்கோ அழகுப் புதுமையாக  தெரிந்தாள். மென் சிவப்பு நிறமும் தங்க நிறக் கறையுமிட்ட பட்டில் வந்து கொண்டிருந்தாள்  சகஸ்தா.

அவளோ நிலத்தைப் பார்த்தபடியே வர அவள் தன்னை ஒருமுறை பார்க்க மாட்டாளா??? என ரிஷியின் மனமோ ஏங்கத் தொடங்கியது." அவன் காதருகே குனிந்த ரேத்திக் " மச்சான் இந்தா கர்சிப் துடச்சிக" என்றான் .ரிஷி அவனை முறைத்தபபடியே அவளோ அப்பட்டமாவா தெரியுது"???!!!!!எனக் கேட்க " மாப்பிள்ளை இதயும் யாகத்தில கொட்டுங்க என ஐயர் சொல்ல ரேத்திக் மற்றும் ரிஷியின் பேச்சு தடைப்பட்டது.ரிஷியும் அவர் கொடுத்த சில யாக கூறுகளை யாக குண்டத்தில் இட சகஸ்தாவும் மேடைக்கு வந்து சேர்ந்தாள்.

சிறிது நேரத்தில் "கெட்டிமேளம், கெட்டி மேளம்" என ஐயரின் சத்தம் கேட்க மங்கள வாத்தியங்கள் இசைக்க மங்கள நானை சாஸ்தாவின் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.

சீலன் மற்றும் சாருமதிக்கோ மனம் நிறைந்தது. சகஸ்தாவின் தாய் , தந்தை மற்றும் ரிஷியின் தாய் தந்தை ,ரஞ்சித்,ஸ்ரீ உறவுமுறைப் பெரியவர்கள் சகஸ்தாவின் உறவுமுறைப் பெரியவர்கள் என அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர் புதுத்மணத் தம்பதியினர். அதனைத் தொடர்ந்து சைவம், அசைவம் என உணவுகளும் அவ் மண்டபத்தை ஒட்டியாதனா மற்றோரு பெரிய மண்டபத்தில் பரிமாறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மணமகளும் உணவருந்த மணமக்களுக்கென  ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தனர்.ரிஷியும் அவள் கைபிடித்தே அழைத்துச் சென்றான்

அப்போது அவ்வறையில் சகஸ்தாவும் ரிஷியும் தான்.ரிஷி பூ மாலையைக் கழட்ட சகஸ்தாவும் கழட்டி அவனிடம் கொடுக்க,அவனும் அதனை அங்கிருந்த மேசையில் வைத்தான்.

சகஸ்தாவிற்கு முன்பு பேசப்பட்டு நின்று போன திருமணம் பற்றி அவள் சார்ந்த உறவினர்கள் பேச அதை அவளும் கேட்கவும் நேர்ந்தது.சற்றுக் கலங்கி விட்டாள்.

ரிஷிக்கு இது பற்றி தெரியும் இருப்பினும் அவள் இதைப் பற்றி பேசவில்லை...பேச விரும்பவில்லை அதை மறக்கவே எண்ணுகிறாள்
ரிஷியும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை, அவனும் அதைப் பற்றி தெரிந்தும் கேட்க வில்லை......

அப்போது தான் உணவுன்ன அறைக்கு வந்தனர்.அவள் கன்னத்தை இரு கைகளாலும் பற்றியவன்,"எதைப் பற்றியும் யோசிக்காத டால்' திரும்ப கிடைக்க முடியாத தருணம் இது,அனுபவி . இப்படி கண் கலங்காத,"என அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவளும் தலையசைக்க "தட்ஸ் மை கேர்ள் அத்தகிட எதுவும் சொல்ல  வேணாம் அவங்க கவலைப் படுவாங்க என்றான் அப்போது அறைக் கதவு தட்டப்பட இருவரும் விலகி நின்றனர்.

சாருமதி தான் இரண்டு உணவுத் தட்டுடன் வந்தவர், அவற்றை இருவரிடமும் கொடுக்க,"ம்மா சாப்பாடு அதிகமா இருக்கு கொஞ்சம் குறைச்சி எடுத்து வந்திருக்கலாமே என்றாள்" அவளையும் அத் தட்டையும் பார்த்தவன் "அத்த அவ சாப்பிடுவா நீங்க கொடுங்க என்றான்.

பின் கைகளைக் கழுவிக் கொண்டு வந்தவர்கள் இருவரும் சாப்பிட்டனர்.இடையில் சாருமதி என்ன வேனும் என்று கேட்டு வந்து கொடுத்தவர்,நீரையும் கொடுத்துச் விட்டுச் சென்றார்.ரிஷியைப் பார்த்தவள்"போதும் என்றாள் சகஸ்தா" சிறிதளவு உணவைத் தான் உண்டிருந்தாள் "காலைல இருந்து சாப்பிடாம இருக்க " சாப்டு டால் கெஸ்ட் வந்தா லேட்டாகும்" என்றான் அவன்.

இப்போதும் அவ் மண்டபம் சற்று வித்தியாசமாக மாற்றப்பட்டிருந்தது.

யாக குண்டம் அனைத்தும் நீக்கப்படு பூ அலங்காரங்கள் தொங்கப்பட்டு இருக்கைகளும் அதில் போடப்பட்டிருந்தது. மின்குமிழ்களும் ஆங்காங்கு அதில் ஒளிர அழகாக இருந்தது அவ் மேடை சொற்ப நேரத்தில் இவன்ட்டு மேனேஜ்மென்ட் ஆட்கள் மாற்றியமைத்திருந்தனர்.

மணமக்கள் அங்கு மேடையேறி வர உறவினர்கள், நண்பர்கள் தொழில்துறை நண்பர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்தையும் பரிசில்களையும் வழங்கினர். ரத்னாவின் குடும்பமும்  வந்திருந்த னர்,  ரத்னா வரவில்லை.

சிறிது நேரத்தில் மேடை ஏறி வந்த சுபி இரண்டு சோடா பாட்டிலில் ஸ்டா போட்டு வந்து கொடுத்தான். அப்போது இருவருக்கும் அது தேவையாகவே இருந்தது.

புகைப்படக் கலைஞரும்,"சார் நீங்க மேடம் கிப்ல கை வைங்க,மேடம், நீங்க சார்ட சால்டர்ல கை வைங்க அப்படியே சாரப் பாருங்க என்றான் புகைப்படம் எடுப்பவன். ரிஷியின் கரமும் அவளின் இடையில் பட ,அவளோ கூச்சத்தில் நெளிந்தாள். புகைப்படம் எடுப்பவனும் அப்படி இப்படி என போஸ் கொடுக்க வைத்து " வேண்டிய காசுக்கு மேலதிகமாகவே புகைப்படம் எடுத்துத் தள்ளிவிட்டான்.

சிறிது நேரத்தில் சகஸ்தாவின்
நண்பர்கள் அனைவரும் மேடை ஏறினர்.கலகல பேச்சு என இருந்தது பெண்கள் சகஸ்தாவை சூழ ரிஷியோ மேடையை விட்டு இறங்கி கீழிருந்த இருக்கையில அமர அவன் பின்னே அவள் நண்பர்களும் இறங்கி ரிசியுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் விலகிச் சென்றதும்,
வித்தியார்த்தனவோ "ஏய் ஏதும் சந்தேகம்னா ஹால் பண்ணுடி என்றாள்" சகஸ்தாவோ என்ன சந்தேகம்டி என்றாள், அதற்கு அவளோ பாருடி எதுவும் தெரியாத பேபி மாதிரி இருக்கிறத!!!! "பேபியா??இவ பாவி லவ் பன்னத கூட சொல்லாம மறைச்சிடா என நிஷா குறைபட" அதற்கு,சுஜிதாவோ "ஆஆஆ நீ சொன்னியா கேதிஸ்ச லவ் பண்ணத நாங்க தானே கண்டுபிடிச்சம் " என்றாள்.சரி சரி விடு விடு அப்படியும் வாரன் என்றாள் நிஷா".சுஜிதாவின் பேச்சை தட்டி விட்டபடி.

கீழ விழுந்தாளும் மீசல மண் ஒட்டல பார்த்தியா!!!!என்றாள் ரோசி.அதற்கு மீச வேணுமே என்றாள் நிஷா கேதிஸை ரசனையாக பார்த்தபடி...கேதிஸ என்பவனோ கிளீன் சேவ் செய்து டிப் டாப்பாக இருந்தான்.

சகஸ்தாவின் நண்பர்களான கேதிஸ் ,அபிநாத் , தனுஷாந் ரிஷியுடன் சற்றுத் தள்ளி பேசிக் கொண்டிருந்தனர். ஆகையால் இவர்களது சம்பாசனை அவர்களுக்கு கேட்க வில்லை சற்று நேரத்தில் சுபியும் அவர்களுடன் இனைந்து கொள்ள இடமே கல கல என மாறியது. சிறிது நேரத்தில் அவர்களும் விடை பெற்றுக் கிளம்பினர்.

அன்று மாலை போல் தான் மண்டபத்தில் இருந்து ரிஷியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். மணமக்கள் தனிக்காரில் வர,மற்றைய அனைவரும் வேனில் வீட்டை அடைந்தனர்.

மனதில் நின்றவள் 19
ஹாய் செல்லம்ஸ்
கதைப் போக்கு எப்படி இருக்குனு சொல்லுங்க 🙄

This topic was modified 2 days ago by VSV 31 – மனதில் நின்றவள்

   
ReplyQuote

You cannot copy content of this page