All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா ? -17

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம் -17

 

யுவராஜ் “ ஓகே பாதர் பைரவ் சொன்னது போல நான் சில ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்…இந்த இடத்தில் ஐம்பது குழந்தைகளுக்கு தங்க இடம் போதாது…சோ நாங்க இன்னும் சில ரூம்களை கட்ட போகிறோம்.

 

சின்ன வயதில் ஆண், பெண் ஒன்றாக இருப்பது தூங்குவது சரியாக இருக்கும்...பட் பெரிய பசங்களான பிறகு அது முடியாது இல்லையா? கேர்ஸ்க்கு சங்கடமாக இருக்கும் அதனால் இந்த கட்டிடம் பாய்ஸ்க்கு இருக்கட்டும்.

 

கேர்ஸ்க்கு இங்கே முன்னால் கொஞ்சம் இடம் இருக்கிறது அதில் ஒரு கட்டிடத்தை கட்டலாம்…பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு போகிறாங்க அவங்க அங்கே சிலதை கேட்க தயக்கமாக இருக்கும் அதனால்…இங்கே டியூசன் கொடுக்க டீச்சர் வருவாங்க.

 

அடுத்து டிரஸ், சாப்பாடு பற்றி இனி கவலை வேணாம் நாங்க பார்த்து கொள்வோம்…அடுத்து கல்யாண வயதில் ஆண்,பெண்  இருந்தால் சொல்லுங்க… அவங்களுக்கு கல்யாணம் பண்ணி சீர் கொடுப்பது எங்க பொறுப்பு.

 

பசங்க வேலை பைரவ் சொன்னது போல இனி எங்க பொறுப்பு எங்க கம்பெனியில் அவங்க அடுத்த வாரம்… ஜாயிண்ட் பண்ணலாம்  தகுதி அடிப்படையில் வேலை கிடைக்கும்…வேற எதும் தேவை இருந்தால் தயங்காது சொல்லுங்க பாதர்” என்றான்.

 

பாதர் “ நோ மை சன் இதற்க்கு மேலே நான் கேட்டால் அது பேராசை …என் குழந்தைகளுக்கு தேவையான எல்லாம் தான் நீங்க இரண்டு பேருமே கொடுத்து விட்டீங்க…பிறகு நான் கேட்க என்ன இருக்கு… என் ஆசை எல்லாம் ஒன்று தான் என் குழந்தைங்க சந்தோஷமாக இருக்க வேணும்” என்றார். 

 

கார்த்தியாயினி தாய் கேட்டு கொண்டதால்  பைரவ் தளத்திற்க்கு போனாள் …அவள் கடைசியாக இங்கே வந்து போன ஞாபகம் வந்தது…சந்தோஷமாக தான் வந்து போனாள்.

 

அதற்க்கு பிறகு கிட்ட தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு வருகிறாள்..கார்த்திகா டோர் பெல் அடிக்க பதில் வரவில்லை அடுத்த தடவை அடிக்க போக…. டோர் லாக் திறக்கும் சத்தமும் அதை தொடர்ந்து “அம்மாயி வாதில் துறந்திருக்கினோ அகதேக்க வரு ( அத்தை கதவு திறந்து இருக்கு உள்ளே வா) என பைரவ் குரல் கேட்டது.

 

கார்த்திகா உள்ளே போனாள் பைரவ் குளித்து விட்டு… இலகுவாக ஒரு பச்சை நிற டிசர்ட் கறுப்பு நிற டிராக்ட் பேண்ட் போட்டு இருந்தான்…

 

கார்த்திகா அவன் அருகில் போனவள் சரியாக துவட்டாது இருந்த… அவனின் தலையை தன் புடவை முந்தானையால் துவட்டி கொண்டே.

 

கார்த்திகா “ பையு எத்தனை தடவை உனக்கு சொல்வது தனியாக குளிக்க வேணாம் …தம்புவை அழை என்று நான் வந்தால் எனக்கு சங்கடமாக இருக்கு அம்மாயி என்று சொல்வ.

 

எனக்கு நீயும் யுவாவும் ஒன்று தான் பையு இது உனக்கும் தெரியும் ..ஆனால் நீ மற்றவங்க கிட்ட ஒட்டாது விலகி நிற்பது போல என் கிட்ட நிற்க நினைக்கிற ஏன் டா ? என பாதி கோபமாகவும் பாதி ஆதங்கத்திலும் கேட்டார்.

 

பைரவ் தன் தலையை  துவட்டி கொண்டு இருந்த… கார்த்திகாவின் கையை பற்றி முத்தமிட்டவன்.

 

பைரவ் “ இந்த கை எனக்கு பத்து வயதில் இருந்து அம்மாவாக மாறிய கை…நீ  எனக்கு அம்மாயி இல்ல அம்மா நான் உன் கிட்ட விலகி நிற்கவில்லை அம்மாயி.

 

என்னால் உனக்கும் யுவாகும் ஆபத்து வந்து விட கூடாது என்று தான் கொஞ்சம் தள்ளி நிற்கிறேன்…அறியாத வயதில் தான் நான் அம்மா,அச்சனை இழந்தேன்…அடுத்து அறிந்த வயதில் அவளை என் கண் முன்னே இழந்தேன்.

 

பிரின்ஸ் சாம்ராட் பைரவ் ரகுநந்தன் என் கிட்ட இல்லாது ஏதுவுமே இல்லை… பணம், அதிகாரம், பலம் ,ஆளுங்க…பட் என் அம்மா, அச்சன், எந்த பார்யா( மனைவி) என் கூட யாருமே இல்லை.

 

எனக்கு இருக்கும் பந்தம்( உறவு) நீயும் யுவாவும்,முத்தச்சி  (பாட்டி) மட்டும் தான்…மற்ற பந்தம் எல்லாம் போலி இப்போ கூட வர கூடாது என்று தான் இருந்தேன்… 

 

பட் உன் கரையூந்தே( அழுகை) என்னை வரவழைத்து விட்டது…

சரி இப்போ சொல்லு என்னை எதற்காக வர சொன்ன” என கேட்டான்.

 

கார்த்திகா “ அதை நான் சொல்ல முடியாது கண்ணா உன் முத்தச்சன் ( தாத்தா) தான் சொல்ல வேணும்…சரி அதை பிறகு பேசலாம் வா சாப்பிட …உனக்கு பிடித்தை நானும் உன் முத்தச்சியும் செய்து இருக்கிறோம் “என்றாள். 

 

பைரவ் “ என்ன சொன்ன திரும்ப சொல்லு சாப்பிட நான் வர வேணுமா? எங்கே ராஜா ரவிவர்மன் குடும்பம் கூடவா நோ நெவர் வழமை  போல எனக்கு இங்கே சாப்பாட்டை கொண்டு வா” என்றான்.

 

கார்த்திகா “ கண்ணா உன்னை நான் யாசிக்குகா( கெஞ்சி) கேட்கிறேன்…இந்த அம்மாயி ,பாட்டிக்காக இந்த தடவை டைனிங் ரூம் வா டா “ என கண்கள் கலங்க கேட்டாள்.

 

பைரவ் “ சரி நீ அழாதே உன்னை என்ன சொல்லி இருக்கிறேன் எப்பவுமே நீ அழ கூடாது என்று…தைரியமாக கம்பீரமாக பிரச்சனையை எதிர் கொண்டு பழகு ஆ!. ஊட்டியில் ஒரு ஸ்திரீயை( பெண்) சந்தித்தேன்…அவளை பற்றி பிறகு சொல்கிறேன் முதலில் ராஜா ரவி வர்மாவுக்கு ஒரு பாடம் கற்று கொடுக்க வேணும் நீ ஏதும் பேசாது வா”என்றான்.

 

அந்த அரண்மனையில் சாப்பாட்டு அறையில் ஒரேய தடவையில் ஐம்பது பேர் சாப்பிட கூடிய அளவு…தேக்கு மரத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி மேஜையும்… கூடவே வேலைப்பாடுகள் நிறைந்த குஷன் போட்ட நாற்காலியும் இருந்தது. 

 

மேஜையில் விதம் விதமான கேரளாவின் ஸ்பெஷல் உணவு வகைகளும், பழங்களும் வெள்ளி பாத்திரங்களில் இருந்தது…ரவி வர்மன் நடுநாயகமாக இருந்தார் அவர் இடது பக்கமாக அவரின் இரண்டாவது மகனான விஜேந்திரனும் அவன் மனைவி சுவர்ணமாலினி அவர்களின் மகள் அஜந்தாவும் இருந்தார்கள். 

 

அடுத்து இளைய மகன் அருள்மொழிவர்மனும் அவன் மனைவி தாரணி அவர்களின் பெண் நிலாயினி இருந்தார்கள்…வலது பக்கமாக அவரின் மூத்த மகள் பல்லவி அவளுக்கு இரண்டு பெண்கள் மூத்தது அவந்திகா அடுத்தது பூஜா இருந்தார்கள்…பல்லவியின் கணவன் பிசினஸ் விஷயமாக சிங்கப்பூர் போய் இருந்தான். 

 

பல்லவி “ அச்சன் எந்த மருமகன் பைரவ் வந்து இருக்கிறான் என்று கொட்டாரத்தில் அவ சம்சாரிச்சு (பேசி கொண்டாங்க) உண்மையாகவா? என கேட்டாள். 

 

ரவி வர்மன் “ இது சத்தியமான (உண்மை தான்) எந்த கொச்சு மோன் (என் பேரன்) வந்து இருக்கிறான் “ என்றார். 

 

விஜேந்திரன் “ யாரு பைரவ்வா? அவன் வர போவதாக தகவல் கூட வரவில்லையே” என கேட்டார். 

 

“ இது யானு எந்த கொட்டாரம் ( இது என் அரண்மணை)  இங்கே வர நான் ஆருக்கு (யாருக்கு) விவரங்கள் (தகவல்) சொல்ல வேணும் சித்தப்பா “ என சொல்லி கொண்டு பைரவ் வர அவன் பின்னால் கார்த்தியாயினி வந்தாள். 

 

இவன் குரல் கேட்டதும் சமையலறையில் இருந்த மீனாட்சி ஓடி வந்தவர்…கண்கள் கலங்க பேரன் உருவத்தை கண்களில் நிரப்பி கொண்டவள். 

 

“ பேராண்டி என அழைத்து கொண்டு அவன் அருகில் வந்தவர்… அவன் முகத்தை தொட்டு நெட்டி முறித்து விட்டு. 

 

மீனாட்சி “ தாயே மதுரை மீனாட்சி என் வேண்டுதலை கேட்டு விட்ட…ரொம்ப நன்றி தாயே நான் கண் மூட முன்னே என் பேரனை  என் கண்ணில் காட்டி விட்ட “ என்றார். 

 

பைரவ் அவர் கையை பற்றியவன் தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவன். 

 

பைரவ் “ நான் இங்கே வர காரணம் நீயும், அம்மாயியும் தான் முத்தச்சி…நீ இப்படி பேசினால் பிறகு என் தொடர்ப்பு இங்கே அறுந்து விடும் “ என்றான். 

 

மீனாட்சி “ வேணாம் ராசா நீ இங்கே வர வேணும் தங்க வேணும்…அதற்காக என் பேரனுக்காக நான் நூறு வருஷம் வாழ வேணும்…என் நந்தனை நேரில் பார்ப்பது போல இருக்கு 

 

என் மூத்த மகனை மருமகளை…இந்த பாவி காலனுக்கு வாரி கொடுத்து விட்டு நான் கல்லு போல இருக்கிறேன்” என்றாள். 

 

ரவி வர்மன் “ மீனு வேணாம் அவன் இப்போ தான் வந்து இருக்கிறான் …உன் பிலாக்கணத்தை நிறுத்து வா சாம்ராட் ஈ கொட்டாரம் நிங்களை சுகாகிதம் செய்யூனு ( இந்த அரண்மனை உன்னை வரவேற்கிறது) “என்றார். 

 

பைரவ் “ ராஜா ரவி வர்மாவுக்கு இந்த சதாரணகாரனின் ( சாமானியன்) வணக்கங்கள் “ என நக்கலாக சொன்னான்…அவன் சொல்ல ரவி வர்மன் முகம் மாறியது. 

 

அருள்மொழி “ பைரவ்  எந்தான இது ( என்ன இது) அவர் உன் முத்தச்சன் ( தாத்தா) அவர் கிட்ட இப்படியா நடந்து கொள்வது? என்றார். 

 

பைரவ் “ ஓ!. முத்தச்சன் அதுவும் எந்த(என் தாத்தா) முத்தச்சன் கேட்க நல்லா இருக்கு…அருள் சித்தப்பா பட் அவருக்கு என்னை விட இந்த பெகுமானம் ( கெளரவம்) தான் பெரிதாக இருக்கு…

 

ஓகே அதகுறிச்சு சம்சாரிக்க நான் இப்போ வந்ததில்லா( நான் அதை பற்றி  இப்போது பேச வரவில்லை)...சொல்லுங்க என்னை அம்மாயி மூலமாக நீங்க அவசரமாக வர சொன்ன காரணம் என்ன? என கேட்டான். 

 

ரவி வர்மன் “ ம் நானும் நேரடியாக விஷயத்திற்க்கு வருகிறேன்…ஈ கொட்டாரம் நல்லா இருக்க வேணும் எனக்கு பிறகு இதை கட்டியாள வேண்டியவன்…உன் அச்சன் ஆனால் விதி அவனும் என் மருமகளும் பாதி வழியில் போய் விட்டாங்க…

 

அவனுக்கு பிறகு அவனின் ஒற்றை வாரிசு மட்டுமல்ல என் மூத்த கொச்சு மோன் நீ தான்…நீ இப்படி இங்கே இருக்காது அதுவும் தனியாக இருப்பதை நான் விரும்பவில்லை. 

 

என் பேரன் வாழ்க்கை என் கண் முன்னே அழிய நான் விட மாட்டேன்…அதனால் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் நீ உன் பெரிய அம்மாயின் மோள் அவந்திகா தேவியை விவாகம் கழிக்கன் ( கல்யாணம் செய்ய வேண்டும்) என்றார். 

 

பைரவ் முத்தச்சன் என போட்ட சத்ததில் அந்த அரண்மனையை அதிர்ந்தது….உண்மையில் பல்லவியை தவிர அவர் இப்படி ஒரு முடிவு எடுத்தது யாருக்குமே தெரியாது…ஏன் மீனாட்சிக்கு கூட தெரியாது. 

 

பைரவ் “ முத்தச்சன் யான் விவாகிதனானு ( நான் கல்யாணம் ஆனவன்) என்றான். 

 

ரவி வர்மன் “ எனக்கயறியா( எனக்கு தெரியும்) கூடவே நீங்களட பார்யா இப்போ ஜீவிச்சிச்சில்லா ( உன் மனைவி இப்போ உயிரோடு இல்லை) என்பதும் தெரியும்….அது தான் உன் அம்மாயி மோளை கட்டிக்க சொன்னேன் இதில் தப்பு என்ன இருக்கு “ என கேட்டார். 

மலர் பூக்கும்…

 


   
ReplyQuote

You cannot copy content of this page