All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

கனவுகள் வெல்ல காரியம் துணை

Page 1 / 2
 

VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அனைவருக்கும் வணக்கம்..

 

இந்த போட்டியில் பங்கு கொள்ள வாய்ப்பளித்த கவி சந்திராவிற்கு நன்றி..

 

டீசர் இன்று தருகிறேன். எந்த மாதிரியான கதை என்று உங்களால் அனுமானிக்க கூடும்‌.டிசம்பர் 10இல் இருந்து யூடிடன் சந்திக்கிறேன்.

------------

 

2020ஆம் ஆண்டு

பலத்த யோசனையில் அமர்ந்திருந்த பவித்ராவின் முன் “ஹாய் பவித்ரா!” என்றவாறு கையில் காபி கோப்பையுடன் நரசிம்மன் வந்தமர்ந்தார்.

தனது யோசனையில் இருந்து விடுப்பட்ட பவித்ரா “ஹலோ ஸார்!” என்றவாறு மரியாதை நிமித்தமாக எழ முயன்றாள்.

“உட்கார்! உட்கார்! என்ன ரொம்ப மும்மரமா யோசிட்டு இருக்கே போல”

“எஸ் ஸார்!”

“ஸ்பான்ஸர் கிடைச்சுட்டாங்களா? ஸ்பான்ஸர் இல்லாம உன்னோட புராஜெக்ட்டிற்கு பர்மிஷன் கிடைக்காது பவித்ரா!”

“நானும் ட்ரை செய்துட்டு தான் ஸார் இருக்கேன். இன்னைக்கு காலைல கூட ஒருத்தங்களை பார்த்துட்டு தான் வந்தேன். இரண்டு நாட்கள் கழிச்சு.. விகே நிறுவனத்தோட சேர்மன் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கேன்.”

“ம்ம்! நல்ல பதில் சொல்வார்ன்னு எதிர்பார்க்கறீயா!”

“ஹோப் சோ ஸார்!”

“ஸாரி டு ஷே திஸ் பவித்ரா! இந்த புராஜெக்ட் பற்றி நீ முதல்ல சொன்ன போதே சொல்லணும் என்று நினைச்சேன். ஆனா உனக்கு டிஸ்கரேஜ் பண்ண மாதிரி இருக்கும் என்று விட்டுவிட்டேன். ஆனா இப்போ நீ ஏமாற்றதோட சுற்றுவதை பார்க்கும் போது‌‌.. இப்போ சொல்லாம இருக்க முடியலை. இந்த புராஜெக்ட்டை கை விட்டுரு!”

“ஸார்!” என்று பவித்ரா திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.

“எஸ் பவித்ரா! நீ எடுத்தது ஒண்ணும் புது மேட்டர் இல்லை. தமிழையும் தமிழர்கள் பற்றியும் ஆர்வம் கொண்டவங்க.. உடனே முதல்ல எடுத்து பார்க்கிற ‘குமரி கண்டம்’ மேட்டர் தான்! சின்ன குழந்தைங்க ஸ்கூல்ல ஒரு செப்ட்டரா இதை கண்டிப்பாக படிப்பாங்க! நமக்கு முன்னாடி இருந்தவங்க போதிய வரை ஆராய்ச்சி செய்து முடிச்சு வச்சு மேட்டர் தான்! அது போக நடுவில் உன்னை மாதிரி ஆர்வக்கோளாறு ஆட்கள் இந்த மேட்டரை புராஜெக்ட்டாக எடுத்து.. அரைத்த மாவையே அரைத்து வைத்துட்டு போன பைல்ஸ் வைக்கவே பெரிய செல்ஃப் இருக்குனு உனக்கு தெரியும் தானே! அதுல எதுவும் பாஸ் ஆகலை.. என்பது உனக்கு தெரியும். அவங்களுக்கு ஸ்பான்ஸர் செய்தவங்களும் லாஸ் ஆனது.. உனக்கு மட்டுமில்லை.. இந்த மாதிரி புராஜெக்ட்டிற்கு ஸ்பான்ஸர் செய்ய நினைக்கிறவங்களும் தெரிந்திருக்கும். அப்பறம் எப்படி உனக்கு செய்வாங்க! வேண்டாம் விட்டுரு! அதை விட இன்டர்ஸ்டிங்கா உன் மூளைக்கு தீனி போட நிறையா மேட்டர் இருக்கு! புத்திசாலித்தனமாக வேற எதாவது சூஸ் செய்! இது என்னோட அட்வைஸ் மட்டுமில்லை. ரெக்வஸ்ட்டும் கூட!”

நரசிம்மன் பேசி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டிருந்த பவித்ரா “தேங்க்யூ சோ மச் ஃபார் யுவர் கன்சர்ன் ஸார்!” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.

—----------------------

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதி ஒன்றில் மத்திய தரப்பு வீடு போன்ற ஒன்றில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் செல்பேசி ஒலித்தது.

அழைப்பை ஏற்றதும் “ஜீ! இதுவரைக்கும் அந்த பொண்ணுக்கு எந்த ஸ்பான்ஸரும் கிடைக்கலை. ஆனா இப்படியே இருக்கும் என்று நினைச்சுட்டு இருக்க கூடாது. எப்படியாவது இனி எந்த ஸ்டெப்பும் எடுத்து வைக்காது பண்ணனும் ஜீ!”

“ஆமா! இந்த மாதிரி எத்தனை புராஜெக்ட் தான் பாஸ் ஆகாம தடுக்கிறது. இதை ஆரம்பத்திலேயே தடுத்தரணும். இந்த புராஜெக்ட் மட்டும் பாஸ் ஆகிட்டா என்ன நடக்கும் என்றுத் தெரியுமா! தமிழர்களுக்கு எல்லா விசயத்திலும் முன்னுரிமை கிடைக்கும்படி ஆகிவிடும். இல்லைன்னா.. தமிழர் நாடு என்று புது நாடு கூட உருவாகலாம். அதை தடுத்தே ஆகணும்.” என்று வஞ்சினத்துடன் உரைத்தான்.

—---------------------------

இன்று..

மெல்ல விக்ரமின் புறம் சரிந்த அபினவ் “விக்கி! நல்லா விசாரிச்சியா.. இந்த பொண்ணு தானா.. பவித்ராவா!” என்றுக் கேட்டான்.

விக்ரமும் திகைப்புடன் தான் நின்றிருந்தான். ஏனெனில் பவித்ரா தனியாக அமர்ந்துக் கொண்டு யாருடனோ சைகை பாஷையில் பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

 

This topic was modified 2 months ago by VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!

   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

கனவுகள் வெல்ல காரியம் துணை!

 

அத்தியாயம் 1

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம்..

 

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதி ஒன்றில் மத்திய தரப்பு வீடு போன்ற ஒன்றின் பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் செல்பேசி ஒலித்தது.

 

அழைப்பை ஏற்றதும் “ஜீ! இதுவரைக்கும் அந்த பொண்ணுக்கு எந்த ஸ்பான்ஸரும் கிடைக்கலை. ஆனா இப்படியே இருக்கும் என்று நினைச்சுட்டு இருக்க கூடாது. எப்படியாவது இனி எந்த ஸ்டெப்பும் எடுத்து வைக்காது பண்ணனும் ஜீ!”

 

“ஆமா! செய்துட்டு தான் இருக்கேன். ஆனா இந்த மாதிரி எத்தனை புரோஜெக்ட் தான் பாஸ் ஆகாம தடுக்கிறது. இதை ஆரம்பத்திலேயே தடுத்தரணும். இந்த புரோஜெக்ட் மட்டும் பாஸ் ஆகிட்டா என்ன நடக்கும் என்றுத் தெரியுமா! தமிழர்களுக்கு எல்லா விசயத்திலும் முன்னுரிமை கிடைக்கும்படி ஆகிவிடும். இல்லைன்னா.. தமிழர் நாடு என்று புது நாடு கூட உருவாகலாம். அதை தடுத்தே ஆகணும்.” என்று வஞ்சினத்துடன் உரைத்தான்.

 

—--------------------------

சென்னையில் அமைந்துள்ள தொல்லியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களும்.. பல்வேறு தமிழ் அறிஞர்களும்.. ஆசிரியர்களும்.. குழுமியிருந்தார்கள். வருகிற தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு.. கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைப்பெற்றுக் கொண்டிருந்தனர்.

 

அது மட்டுமில்லாது.. அங்கிருக்கும் பழம்பெரும் நூலகத்தில்.. பல்லாயிரம் கணக்கான புத்தகங்கள் உள்ளன.

 

பழம்பெரும் காப்பியங்கள், தமிழர் வரலாறு, பண்டைய வரலாறு, தென்னிந்தியாவை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாறு, சிற்பக் கலைகள், சங்க இலக்கியங்கள், பழங்கால கைவினைப் பொருட்களைப் பற்றிய குறிப்புகள், சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள்.. மற்றும் அந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தை பற்றிய குறிப்புகள், இது மட்டுமில்லாது.. முன்பிருந்து தற்பொழுது வரை.. தமிழ் மற்றும் தமிழர்களை பற்றி எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள்.. என்று அனைத்து வகையான புத்தகங்களும் அங்கு உள்ளன. எனவே தொல்லியல் துறையை பாடமாக தேர்ந்தெடுத்த மாணவர்கள்.. தங்களது படிப்பிற்காக குறிப்புகள் எடுக்க.. ஆர்வத்துடன் அங்கு கூடியிருந்தனர்.

 

பரபரப்புடன் காணப்பட்ட அந்த மையத்தில் அமைந்துள்ள தேநீர் கடையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு ஒரு மூலையில் நான்கு பேர் அமரும் வண்ணம் நாற்காலிகள் போட்டப்பட்ட மேசையில் அமர்ந்திருந்த மூன்று பேரும் பேசியவாறு எழுந்து சென்றுவிட.. ஒரு பெண் மட்டும்.. கண்கள் எங்கோ வெறித்திருக்க.. கையில் இருந்த கோப்பையில் இருந்த தேநீரை ருசியே தெரியாமல் பருகிக் கொண்டிருந்தாள்.

 

அப்பொழுதே அந்த மூன்று பேருக்கும்.. இவளுக்கும் சம்பந்தமில்லை என்றுத் தெரிந்தது. கிடைத்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

 

கண்களில் கண்ணாடியும், சிறிதும் மேக்கப் இல்லாத முகமும், தலையை சரியாக கூட வாராமல் தாறுமாறாக கிடந்த கூந்தலை பின்னால் வாரி கட்டிக் கொண்டும் அமர்ந்திருந்த பெண்.. தனது உடையிலும் கூட அவ்வளவாக கவனம் எடுக்கவில்லை. தொளதொளவென இருந்த சட்டையும் கணுக்கால் உயரம் கொண்ட ஜீன்ஸிம் அணிந்திருந்தாள். காதில் சிறு தோடு தவிர.. கழுத்து மற்றும் கைகளில் ஆபரணம் எதுவுமில்லை.

 

அவளது பெயர் பவித்ரா! 

 

பவித்ரா ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி மாணவி.. கடைசி வருடப் படிப்பில் இருக்கிறாள்.

 

பலத்த யோசனையில் அமர்ந்திருந்த பவித்ராவின் முன் “ஹாய் பவித்ரா!” என்றவாறு கையில் காபி கோப்பையுடன் நரசிம்மன் வந்தமர்ந்தார். 

 

நரசிம்மன்.. நீண்ட காலமாக இந்த துறையில் வேலைப் பார்ப்பவர்!

 

தனது யோசனையில் இருந்து விடுப்பட்ட பவித்ரா “ஹலோ ஸார்!” என்றவாறு மரியாதை நிமித்தமாக எழ முயன்றாள்.

 

“உட்கார்! உட்கார்! என்ன ரொம்ப மும்மரமா யோசிட்டு இருக்கே போல”

 

“எஸ் ஸார்!”

 

“ஸ்பான்ஸர் கிடைச்சுட்டாங்களா? ஸ்பான்ஸர் இல்லாம உன்னோட புராஜெக்ட்டிற்கு பர்மிஷன் கிடைக்காது பவித்ரா!”

 

“நானும் ட்ரை செய்துட்டு தான் ஸார் இருக்கேன். இன்னைக்கு காலைல கூட ஒருத்தங்களை பார்த்துட்டு தான் வந்தேன். இரண்டு நாட்கள் கழிச்சு.. விகே நிறுவனத்தோட சேர்மன் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கேன்.”

 

“ம்ம்! நல்ல பதில் சொல்வார்ன்னு எதிர்பார்க்கறீயா!”

 

“ஹோப் சோ ஸார்!”

 

“ஸாரி டு ஷே திஸ் பவித்ரா! இந்த புராஜெக்ட் பற்றி நீ முதல்ல சொன்ன போதே சொல்லணும் என்று நினைச்சேன். ஆனா உனக்கு டிஸ்கரேஜ் பண்ண மாதிரி இருக்கும் என்று விட்டுவிட்டேன். ஆனா இப்போ நீ ஏமாற்றதோட சுற்றுவதை பார்க்கும் போது‌‌.. இப்போ சொல்லாம இருக்க முடியலை. பிகாஸ்.. நீ என்னோட பேவரெட் ஸ்டூடன்ட்! இந்த புராஜெக்ட்டை கை விட்டுரு!”

 

“ஸார்!” என்று பவித்ரா திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.

 

“எஸ் பவித்ரா! நீ எடுத்தது ஒண்ணும் புது மேட்டர் இல்லை. தமிழையும் தமிழர்கள் பற்றியும் ஆர்வம் கொண்டவங்க.. உடனே முதல்ல எடுத்து பார்க்கிற ‘குமரி கண்டம்’ மேட்டர் தான்! சின்ன குழந்தைங்க ஸ்கூல்ல ஒரு செப்ட்டரா இதைக் கண்டிப்பாக படிப்பாங்க! நமக்கு முன்னாடி இருந்தவங்க போதிய வரை ஆராய்ச்சி செய்து முடிச்சு வச்சு மேட்டர் தான்! அது போக நடுவில் உன்னை மாதிரி ஆர்வக்கோளாறு ஆட்கள் இந்த மேட்டரை புராஜெக்ட்டாக எடுத்து.. அரைத்த மாவையே அரைத்து வைத்துட்டு போன பைல்ஸ் வைக்கவே பெரிய செல்ஃப் இருக்குனு உனக்கு தெரியும் தானே! அதுல எதுவும் பாஸ் ஆகலை.. வைத்தது வைத்தபடி தான் இருக்கு.. என்பது உனக்கு தெரியும். அவங்களுக்கு ஸ்பான்ஸர் செய்தவங்களும் லாஸ் ஆனது.. உனக்கு மட்டுமில்லை.. இந்த மாதிரி புராஜெக்ட்டிற்கு ஸ்பான்ஸர் செய்ய நினைக்கிறவங்களும் தெரிந்திருக்கும். அப்பறம் எப்படி உனக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பாங்க! வேண்டாம் விட்டுரு! அதை விட இன்டர்ஸ்டிங்கா உன் மூளைக்கு தீனி போட நிறையா மேட்டர் இருக்கு! புத்திசாலித்தனமாக வேற எதாவது சூஸ் செய்! இது என்னோட அட்வைஸ் மட்டுமில்லை. ரெக்வஸ்ட்டும் கூட!” என்று முடித்தார்.

 

நரசிம்மன் பேசி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டிருந்த பவித்ரா “தேங்க்யூ சோ மச் ஃபார் யுவர் கன்சர்ன் ஸார்!” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.

 

சென்றுக் கொண்டிருந்த பிடிவாதக்காரியை பார்த்த நரசிம்மன் பெருமூச்சை இழுத்துவிட்டார்.

 

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து.. விகே நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தொங்கிய முகத்துடன் பவித்ரா வெளியே வந்தாள். அவளது புராஜெக்ட் பற்றிய ஆராய்ச்சிக்காக ஆகுகிற செலவையும்.. பின் அதை விளம்பரப்படுத்தி.. அதை ஒரு ஆய்வறிக்கையாக ஏற்றுக் கொள்ளவும் ஆகுகிற செலவையும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இதனால் அவர்களது நிறுவனத்திற்கு பேரும் கிடைக்கும் உயர்வும் கிடைக்கும் என்று மன்றாடி பார்த்தாள். இதைப் பற்றி நன்கு தெரிந்த நரசிம்மன் ஆவது.. இது பலமுறை எடுக்கப்பட்ட ஆய்வு! அதனால் ஆர்வம் இருக்காது என்று கூறினார். ஆனால் இவற்றை பற்றி புரியாத அந்த நிறுவன தலைவரோ.. இது பயனே இல்லாத வீணான ஆராய்ச்சி என்று இகழ்ந்து கூறிவிட்டார். 

 

எனவே கோபத்தில் மூக்கு விடைக்க வெளியே வந்துவிட்டவளுக்கு.. வெளியே வந்ததும் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

 

ஆறு மாதங்களாக இந்த விசயத்திற்காக அலைந்து கொண்டிருக்கிறாள்.

 

ஆறு மாதங்களாக எங்கு சென்றாலும் தோல்வி! வீட்டிலும் எதிர்ப்பு, உடன் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கேலியும், சலிப்பும் என்று பலவற்றை சந்தித்து விட்டாள்.

 

உற்சாகப்படுத்த என்று துணையும் இல்லை. உடன் பயின்ற நண்பர்களின் ஆதரவும் இல்லை. இவை எல்லாவற்றையும் விட அவளுக்கு பயில்வித்த ஆசிரியரே ஒத்துழைக்கவில்லை. 

 

இம்மாதிரி பல தடைகள் தாண்டி.. இந்நிறுவனத்திடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்பி வந்தாள். முதலில் அவர்களது நிறுவனத்திற்கு மார்கெட்டிங் கிடைப்பதற்காக முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஒத்துக் கொண்டனர். ஆனார் தற்பொழுது.. முடியாது என்று மறுத்துவிட்டனர். 

 

பவித்ராவிற்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையை இறுக பற்றினாள்.

 

அதில் தான்… குமரி கண்டத்தை பற்றி ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து எழுதிய கட்டுரை தொகுப்புகளும்.. அதைப் பற்றி அவளது கண்ணோட்டமும் கொண்ட தொகுப்பும் அடங்கியுள்ளது. இது மட்டுமில்லாது.. இந்திய பெருங்கடலில் அவள் பயணித்து.. அவளது அனுபவங்களையும்.. மடகாஸ்கரில் உள்ள பழங்குடியினர் மற்றும்.. ஆஸ்திரேலியா கண்டத்தில் வசிக்கும் பழங்குடியினரை சந்தித்து.. அவள் ஆய்வு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு ஆகுகிற செலவை ஏற்றுக் கொள்ள தான்.. அவள் ஸ்பான்ஸரை தேடிக் கொண்டிருக்கிறாள்.

 

அவளது ஆசிரியர் கூறியது போல்.. மூழ்கிப் போன குமரி கண்டத்தை பற்றிய பத்தோடு பதினொன்றாவது ஆய்வறிக்கையாக இது இருக்காது. அவள் இந்த ஆய்வறிக்கையின் மூலம் இந்த உலகத்திற்கும்.. முக்கியமாக இந்திய நாட்டு மக்களுக்கும் இன்னொரு விசயத்தை தெளிவுப்படுத்த விரும்பினாள். அதனால் முதலில் இதை அரசாங்கத்திடம் தான் கொண்டு சென்றாள். ஆனால் பல்வேறு அரசியல்வாதிகளின் கைக்கு மாறி மாறி சென்று பின்.. நரசிம்மன் கூறியது போல்.. பலமுறை எடுத்த விசயம் தான்! இதற்கு எதற்கு.. அரசாங்கம் செலவு செய்து.. அவளுக்கு உதவ வேண்டும் என்றுக் கேட்டனர். அதன் பின்பே அவள் தனியார் நிறுவனத்தை அணுகினாள். 

 

முதல் கட்ட பேச்சு வார்த்தையிலேயே அவளுடையதை மறுத்தனர். இந்த நிறுவனம் மட்டுமே.. செலவுடன் அவர்களது நிறுவனத்திற்கும் பெயர் வாங்கி தரும்.. என்று ஒப்புக் கொண்டனர். ஆனால் தற்பொழுது.. முடியாது என்று மறுத்துவிட்டனர்.

 

வீட்டிற்கு சென்ற.. பவித்ராவிற்கும் எல்லாம் வெறுமையாக தெரிந்தது. அவளது ஆய்வறிக்கை.. பல இலட்சம் பேருக்கு தெரிய வேண்டும்.. அதன் மூலம் ஒரு தெளிவு பிறக்க வேண்டும்.. அங்கீகாரம் கிடைக்க வேண்டும் உயர்வு கிடைக்க வேண்டும்.. என்று நினைத்தாள். தற்பொழுது எல்லா இடத்திலும் தோல்வி கிடைக்கவும், தனது பையில் அவள் தயாரித்த ஆய்வறிக்கையை எடுத்து வைத்தாள். அதனுடன் இனி என்ன செய்ய நினைத்தாள்.. அதன் விளைவு என்னவாகும் என்பனவற்றை டைப் செய்தவள், அவற்றை பிரின்ட் அவுட் எடுத்து அதனுடன் இணைத்தாள். பின் தனக்கும் நகல் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டவள், மெயிலில் சேமித்து வைத்தாள்.

 

அடுத்த நாள்.. அவளது ஆய்வறிக்கை கொண்ட கோப்புகளை எடுத்து கொண்டு நூலகத்திற்கு சென்றவள், அங்கு நூலக பொறுப்பாளரிடம் தனது ஆய்வறிக்கையை தொல்லியல் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு நூலகத்திற்கு தருவதாக கூறினாள்.

 

அவர் அசட்டையுடன் அவளது பெயர் அன்றைய தேதி.. போன்ற விபரங்களை எழுதி வாங்கி கொண்டு.. அந்த கோப்பிற்கு ஒரு எண்ணை கொடுத்தார். பின்னர் அதை வாங்கிக் கொண்டு.. அந்த நூலகத்தில் இருக்கும் ஒரு அலமாரியில் அவளுடையதையும் வைத்துவிட்டு அகன்றார்.

 

ஆனால் அவரது பின்னாலேயே வந்த பவித்ரா அங்கேயே நின்றுவிட்டாள். 

 

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களுக்கு நடுவே அவளுடைய ஆய்வறிக்கை ஒன்றாக இருப்பதை கண்டு பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள், அங்கிருந்து அகன்றாள்.

 

பொங்கல் திருநாளில் தமிழர்களின் சிறுப்பு பற்றி சிறுவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது. அதை இரசித்து கேட்டாள். அவளுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை இருந்தது.

 

தன்னால் முடியாததை அடுத்த தலைமுறையினர் நிகழ்த்துவார்கள் என்று நம்பிக்கை கொண்டாள்.

 

இவ்வாறு இரு வாரங்கள் கடந்த நிலையில்.. நூலகத்திற்கு சென்று அவளுடைய ஆய்வறிக்கையை அவளே படித்து கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது முன் யாரோ ஒருவன் வந்தமர்ந்தான்.

 

அவள் நிமிர்ந்து கூடப் பாராமல் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

 

“பவி!” என்ற அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள். 

 

அவளுக்கு முன் இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் யார் என்று அவளுக்கு தெரியவில்லை. தன்னை இந்தளவிற்கு உரிமையாக அழைக்கும் அளவிற்கு ‘யார் இவன்?’ என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்.

 

அவளது பார்வை கண்டு சிரித்தவன் “என்ன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா! இல்லை.. அதுவும் கூட இல்லையா!” என்றுக் கேட்டான்.

 

பவித்ரா ‘என்ன பேசுகிறான் இவன்!’ என்பது போல் பார்த்தாள்.

 

உடனே அவன் சிரித்தவாறு தனது கரத்தை நீட்டி “ஐயம் விக்ரம்!” என்றான். அவள் அவனது கரத்தை கவனியாது போல் இருக்கவும், தனது மறுகரத்தால்.. அவனே குலுக்கிக் கொண்டான்.

 

அவனை விசித்திரமாக அவள் பார்த்தாள். ஆனால் அப்பொழுது நினைக்கவில்லை.. அவன் அவளுக்கு மட்டுமில்லை.. வரலாற்றிலும் முக்கிய பங்கு அவன் வகிக்க போகிறான் என்று!


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 2

 

பவித்ரா “என்ன விசயமா வந்திருக்கீங்க! என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று நேரடியாக கேட்டாள்.

 

விக்ரம் “நானும் இதுக்கு ஒரு வரியில் பதில் டைரக்ட்டா சொல்லிருவேன். பட் எனக்கு கொஞ்சம் எக்ஸ்பிளைன் செய்ய வேண்டி இருக்கு! ஒரு டு மினிட்ஸ் டைம் கிடைக்குமா?” என்றுக் கேட்டான்.

 

பவித்ரா அமைதியாக இருக்கவும், அதையே அனுமதியாக எடுத்துக் கொண்டு விக்ரம் பேச ஆரம்பித்தான்.

 

“நாம ஒன் இயர்ஸிற்கு முன்னாடி.. கோல்டன் டெம்பிள்ல மீட் செய்திருக்கிறோம். எனக்கு மறக்கவே முடியாத மீட்டிங் அது! அங்கே இருக்கிற சிற்பங்கள்ல என்னோட பெயரை சாவியிலா எழுத போனேன்.” என்ற பொழுது.. பவித்ராவின் புருவம் கோபத்தில் சுருங்கியது.

 

அதைப் பார்த்து விக்ரமின் குரல் தயங்கியது. 

 

மெதுவாக “இதே தான்! இதே கோபம் தான்.. நான் கிறுக்க போன போது.. யாரோ என்னைத் தள்ளிவிட்டாங்க! கோபத்தோட திரும்பிப் பார்த்தா.. இதே கோபமான முகத்தோட நீ நின்னுட்டு இருந்தே! என்னை ஒரு பெண் தள்ளி விடுவதா என்று கோபத்தோட எழுந்த போது.. கார்ட்ஸ் வந்துட்டாங்க! எனக்கு வியர்த்து விருவிருத்து போச்சு! நீ எப்படியும் என்னை மாட்டித் தரப் போறே! என்னை போலீஸ் பப்ளீக் நியுஷனஸ் கேஸில் பிடிச்சுட்டு போகும்.. அதை விட மீடியாஸ் ஃபோட்டோவா எடுத்து தள்ளப் போறாங்கன்னு நினைச்சேன். ஆனா நீ அவங்க கிட்ட என்ன சொன்னேன்னு தெரியுமா! கால் தவறி கீழே விழுந்துட்டாங்க.. அடி எதுவும் படலைன்னு சொன்னே! உன் கிட்ட சண்டை போட விருமாண்டி மாதிரி எழுந்த நான்... நீ சொன்னதைக் கேட்டு.. புஸ்வாணம் மாதிரி ஆகிட்டேன். ஸாரி அன்ட் தேங்க்ஸ் சொல்ல வாயைத் திறந்தா.. நீ சரவெடி மாதிரி படபடவென பேச ஆரம்பிச்சே!”

 

‘உன்னால நம்ம முன்னோர்கள் மாதிரி.. பின்னால வர தலைமுறை மக்கள்.. அவங்களோட பெயரை சொல்ல மாதிரி ஒண்ணையும் கிழிக்க முடியாது தான்! ஆனா.. அவங்க செய்ததை கெடுக்காமல் இருக்கலாம் தானே! ச்சே சிக் ஆஃப் திஸ் யன்கர் ஜெனரெஷன்!’

 

“இப்படி நல்லா திட்டிட்டு போயிட்டே! அப்போ எனக்கு ரொம்ப சேம்மா போச்சு! வேற ஒண்ணும் தோணலை. ஆனா ஒரு எக்ஸ்பீரியன்ஸ் மாதிரி என் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி சிரிச்சேன். ஒவ்வொரு தரம் சொல்லும் போதும்.. உன் ஞாபகம் வரும். என்னோட எக்ஸ்பீரியன்ஸை பற்றிச் சொல்லப் போன நான்.. உன்னைப் பற்றிய வருணனையோட முடிப்பேன். என் பிரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் ஒரு மாதிரி பார்ப்பாங்க! அப்போ எனக்கு அதோட அர்த்தம் புரியலை. அந்த எக்ஸ்பீரியன்ஸோட நீயும் மறக்க முடியாதவளா என் நெஞ்சில் பதிவே என்று நான் நினைச்சு பார்க்கலை.” என்றான்.

 

உடனே பவித்ராவின் புருவம் சுருங்கியது. விக்ரம் அதைக் கவனியாத பாவனையுடன் தொடர்ந்து பேசினான்.

 

“நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் ஒரு தரம் எங்களோட ப்யுச்சர் லைஃப் பார்டனர் பற்றிப் பேசிட்டு இருந்த போது.. நிஜமா சொல்றேன்.. எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சு! அது க்ரேஸியா இருந்தாலும்.. அடுத்த நாள் நான்.. கோல்டன் டெம்பிளுக்கு போனேன். எனக்கே பைத்தியக்காரத்தனமாக தான் இருந்துச்சு! அங்கே உன்னைத் தேடினேன். அப்பறம் ஒரு விபரமும் தெரியாம அட்லீஸ்ட் ஃபோட்டோ கூட இல்லாம ஒரு ஆளைத் தேடுவது கஷ்டம் என்று தெரிந்தது. தேடுவதை விட்ட என்னால் உன் ஞாபகத்தை விட முடியலை. அதுக்கு என்னேரமும் உன் நினைப்பா சுத்தினேன் என்று பொய் சொல்ல மாட்டேன். பட் உன்னை மறக்கலை. என்னோட முதல் க்ரஷ் ஃபீலையும் மறக்கலை. இப்படி ஒரு வருஷம் போயாச்சு! பத்து நாளுக்கு முன்னாடி.. எங்க கம்பெனி வாசலில் உன்னை பார்த்ததும்.. என் கண்களாலேயே என்னால் நம்ப முடியலை. மனம் ஜிவ்வுன்னு பறந்த மாதிரி இருந்துச்சு! ஹார்ட் வேகமா துடிச்சுது. நான் நிதானத்திற்கு வந்து காரில் இருந்து இறங்கி வருவதற்குள்ள.. நீ காணாம போயிட்டே!” என்று அவன் கூறிக் கொண்டு இருக்கையில் பவித்ரா தனக்கு முன்னால் இருந்த புத்தங்களையும், கைபையும் எடுத்தவாறு “உங்களுக்கு கொடுத்த டு மினிட்ஸ் முடிஞ்சுருச்சு! நான் டு மினிட்ஸை வேஸ்ட் செய்துட்டேன்..” என்றுவிட்டு தனது கோப்பை அலமாரியில் வைத்துவிட்டு நடந்தாள்.

 

வேகமாக நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவளைப் பார்த்து.. நின்றுக் கொண்டிருந்த இடத்தில் இருந்தே விக்ரம் கத்தினான்.

 

“எஸ் பவித்ரா! உன்னை ப்ரோபோஸ் செய்ய தான் வந்தேன். ரோஸ், சாக்லேட் கொடுத்து இல்லை! உன்னோட புரோஜெக்ட்டிற்கு அக்ரீமென்ட் ஒகே லெட்டரை கொடுத்து ப்ரோபோஸ் செய்ய நினைச்சேன்.” என்றான்.

 

வேகமாக சென்றுக் கொண்டிருந்த பவித்ரா பிரெக் அடித்தாற் போன்று நின்றுவிட்டாள். 

 

அவள் முன் சென்று நின்ற விக்ரம் தனது கையில் இருந்த கோப்பை காட்டினான்‌.

 

“நான் பொய் சொல்லுலை. உன் பெயர் எப்படி தெரிந்தது என்று நினைச்சே! என் அப்பா ஆபிஸில் இருந்து நீ வெளியே வந்ததால்‌‌.. உள்ளே போய் விசாரிச்ச போது.. எதுக்கு வந்தே என்ற டிடெய்ல்ஸ் கிடைச்சது. என் அப்பாவை கன்வின்ஸ் பண்ணி.. இதில் எங்க கம்பெனிக்கு கிடைக்கிற பெனிஃபீட்ஸ் எல்லாம் விளக்கி.. எங்க கம்பெனி சார்பாக உன் கூட இரண்டு பேர் வருவதற்கு ஏற்பாடு செய்துட்டு வந்தேன். அதனால் தான் இத்தனை நாட்கள் ஆகிடுச்சு! இது அக்ரீமென்ட் இன்னும் மூவ் ஆகணும் என்றால்.. இனி நீதான் மற்ற டிடெய்ல்ஸ் கொடுக்கணும். அதாவது.. எங்கேங்கே போக போற? என்ன செய்யணும்? உன் கூட.. யார் வருவாங்க? மாதிரியான டிடெய்ல்ஸ் கொடுக்கணும். அப்போ தான்.. அந்தந்த இடத்தின் அஃபிஷியல் கவுர்மென்ட் ஆபிஸ் கிட்ட பர்மிஷன் வாங்கணும்.. தங்குவதற்கு ஏற்பாடு செய்யணும். அதற்கு தான் எங்க ஆட்கள் இரண்டு பேரை உன் கூட அனுப்பறேன். அவங்க அந்த ஏற்பாடு எல்லாம் செய்து செலவை ஏற்பாங்க! உன் கூட வர ஆட்கள்.. உன்னோட ரீசர்சுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க! எல்லாம் ரெடியானதும்.. அடுத்த மாசம் லாஸ்ட் வீக் இல்லைன்னா.. மார்ச் பர்ஸ்ட் வீக்கில் உன்னோட புரொஜெக்ட் வொர்க் தொடங்கிரலாம். இனி நீதான் சொல்லணும்.” என்று கடகடவென பேசி முடித்தவன், தனது கையில் இருந்த ஃபைலை நீட்டினான். 

 

கண்களில் கேள்வியும் எதிர்பார்ப்புமாக பார்த்தான். பின் எதையோ நினைத்தவன், அவசரமாக “ப்ளீஸ்! உன்னை லவ் செய்ய வைக்கிறதுக்காக இதை ட்ரெப், பிளாக்மெயில் என்றெல்லாம் நினைச்சுராதே! இது ப்யுரான ஒரு காதலுனுக்குரிய செயல் தான்! தன்னோட காதலியை இம்பரஸ் செய்ய.. குரங்கு விந்தை எல்லாம் காட்டுவாங்களாம். அந்த மாதிரி.. உன்னை இம்பரஸ் செய்ய.. உனக்கு பிடிச்சது, உனக்கு முக்கியமானதை தந்து.. என் காதலை கேட்கிறேன். அவ்வளவு தான்!” என்றான்.

 

கண்கள் கலங்க அந்த ஃபைலையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவள், மெல்ல இதழ்களில் முறுவல் மலர “நான் உங்களோட ப்ரோபோஸலை அஃசெப்ட் பண்ணிக்கிறேன்.” என்றாள்.

 

உடனே விக்ரம் ஏகிறி குதித்து.. காற்றில் குத்துவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

 

அதைக் கண்டு பவித்ராவின் முகத்தில் புன்னகை விரிந்தது. விக்ரம் அவளது கையில் ஃபைலை கொடுக்கவும், அதை ஆர்வத்துடன் வாங்கி பார்த்த பவித்ராவின் கண்களில் இருந்து கண்ணீரே வந்துவிட்டது. 

 

அவன் வாய் வார்த்தையாக கூறவில்லை. அவளது ஆய்வறிக்கை முடியும் வரை.. அவளது ஆராய்ச்சிக்கான செலவையும்.. விளம்பரப்படுத்தலையும் அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது.. என்று அந்த நிறுவனத்தின் சேர்மன்.. அதாவது விக்ரமின் தந்தை கையெழுத்திட்டு இருந்தார்.

 

ஏதோ சொல்ல அவள் எதானிக்கையில் விக்ரம் “உன்னோட இந்த ரீசர்ச் முடிய.. ஒரு நாலு மாசம் ஆகுமா?” என்றுக் கேட்டான்.

 

பவித்ரா “ம்ம்! முடிஞ்சுரும்.. ஆனா..” என்னுகையில் இடைப்புகுந்த விக்ரம் “நோ பிராப்பளம்! டேக் யுவர் ஓன் டைம்! நாலு மாசத்தில் முடியலைன்னாலும் பரவாயில்லை. ஐந்தாவது மாசம் நான் வந்து மூன்றாவது ஆளா உன் கூட ஜாயின்ட் ஆகிக்குவேன். பிகாஸ் இந்த நாலு மாசம் எனக்கு இலண்டன்ல ஒரு வேலை இருக்கு! அங்கே புதுசா டீலிங் போட்ட கம்பெனி கூட கொஞ்சம் வேலை இருக்கு! அதை முடிச்சுட்டு வந்தறேன். ஆக்சுவலா எனக்கு நாலு மணிக்கு பிளைட்! நான் கிளம்பறதுக்குள்ள.. உனக்கு இதைச் செய்யணும் என்று நினைத்தேன். உன்னோட வேலையை நீ முடிச்சுட்டு வா.. என்னோட வேலையை நான் முடிச்சுட்டு வரேன். அப்பறம் நாம் ப்ரீயா லவ் செய்யலாம்.. என்ன சொல்றே! என்னடா இது இவ்வளவு பாஸ்ட்டா.. இருக்கு லவ்.. என்று நினைக்கறீயா! ஆனா எல்லாம் லாஜீக் தான் பவித்ரா! அது மேஜீக் செய்யும் பாரேன்.” என்றான்.

 

பவித்ரா மெல்ல “எனக்கு நீங்க சொல்ல வரீங்க என்று புரியலை. லவ் லாஜீக், மேஜீக் எதுவும் புரியலை. ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் நினைச்சது நடக்க போகுது. அதற்கு காரணம் நீங்க.. என்கிற போது.. உங்க மேலே மதிப்பும் பிரியமும் வராதிருந்தால் ஆச்சரியம் தான்! ஆனா இதையெல்லாம் என் மேலே இருக்கிற காதல்ல செய்தது என்று சொன்னதை என்னால் நம்ப முடியலை. அதெப்படி சாத்தியம் என்று தான் எனக்கு தோணுது. ஸாரி உங்க ஃபீலிங்ஸை நான் கிண்டல் செய்யலை. ஒருவேளை அந்த காதல் எனக்கு வராததால் இப்படித் தோன்றிருக்கலாம். ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்.. என் இலட்சியத்தை நிறைவேற்றிய உங்க மேலே இனிமேல் எனக்கு காதல் வரலாம்.” என்றாள்.

 

விக்ரம் “வாவ்! நான் பண்ண ப்ரோபோஸை விட.. நீ செய்த அசெஃப்ட்னஸ் இன்னும் க்யுட்! சோ நவ் வி ஆர் லவ்வர்ஸ்!” என்றான்.

 

அவளது முகத்தில் வெட்க புன்னகை மலர கையில் வைத்திருந்த கோப்பை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள்.

 

அப்பொழுது அந்த நுலகத்தில் இருக்கும் சுவர் கடிகாரத்தில் மூன்று மணி அடிக்கவும், விக்ரம் அலறினான். 

 

“வாட்! டைம் த்ரீ ஓ கிளாக் ஆச்சா! ஒகே பவி நான் கிளம்புகிறேன். நீ இன்னைக்கே இதை எடுத்துட்டு ஆபிஸிற்கு போ.. அங்கே நான் எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன். உடனே வேலையை தொடங்கு! நான் இன்னைக்கு கண்டிப்பாக போகணும். ஆக்சுவலா.. நான் இலண்டன் போக ஒத்துக் கொண்டதால் தான் அப்பா இதுக்கு ஒத்துக்கிட்டார். அதனால் நான் போவது ரொம்ப அவசியம்! ஒகே பை! ஆனா எந்த லவ் ஸ்டோரிலும் இப்படியொரு சிட்டிவேஷன் வரக் கூடாது. லவ் சொன்ன அடுத்த நிமிஷம் பை சொல்லிட்டு கிளம்பறேன்.” என்று அவசரமாக பேசியவன், சட்டென்று அவளது கன்னங்களை பற்றி அழுத்த முத்தமிட்டு விட்டு சென்றான்.

 

பவித்ரா ஸ்தம்பித்தவளாய் நின்றுவிட விக்ரம் சென்றவாறு “உன்னோட ப்ரோபைல்ல இருந்து.. உன் ஃபோன் நம்பர் எடுத்துட்டேன். நான் போனதும்.. உனக்கு ஃபோன் போடரேன். நம்பர் சேவ் பண்ணி வச்சுக்கோ! கீப் ஆன் டச்! பை பவி!” என்றுவிட்டு பறக்கும் முத்தத்தை பறக்க விட்ட பின்பே சென்றான்.

 

அவன் சென்ற பிறகும்.. அங்கேயே நின்றுவிட்ட பவித்ராவிற்கு விக்ரம் ஒரு விளையாட்டு பிள்ளை போன்று தான் தெரிந்தது. ஆனாலும் அவளால் முடியாததை சாதித்து காட்டியிருக்கிறான். எனவே அவளது மனதில் மெல்ல அவன் புகுந்தான். 

 

விக்ரம் கூறியது போல்.. அன்று மாலை அவன் விமானம் ஏறிச் சென்றுவிட ஐந்து மணியளவில் பவித்ரா படபடக்கும் இதயத்துடன் விகே நிறுவனத்திற்கு சென்றாள். அங்கு விக்ரம் கூறியது போல்.. அவளைப் பற்றிய மேலும் விபரங்கள்.. அவளது ஆய்வு பற்றிய விபரங்களை கேட்டார்கள். பின் கடைசி கட்ட ஒப்பந்ததிற்கு சேர்மனிடம் அழைத்து செல்லப்பட்டாள். 

 

அங்கு அவர் அவளது முகத்தை கூட நிமிர்ந்து பாராது “விக்ரம் ஒரு விளையாட்டு பிள்ளை! அவன் நினைச்சதை சாதிக்க அடம் பிடிக்கும் குழந்தை போல அவன்! ஒன்று சலித்துவிட்டால்.. அதைப் பற்றி நினைச்சு பார்க்க மாட்டான். ஆனா புத்திசாலி! அப்படித்தான் இந்த சான்ஸ் உனக்கு கிடைச்சுருக்கு! அவன் உன்கிட்ட கொடுத்தது வெறும் ஒப்பந்தம் சம்பந்தப்பட்டது தான்! இன்னும் நான் அப்ரூவல் கொடுக்கலை. நீ புத்திசாலியாக இருந்தால்.. உனக்கு வேலை ஆகணும் என்றால்.. அத்தோட நிறுத்திக்கோ! அப்போ தான் உனக்கு நான் ஸ்பான்ஸர்ஸ் செய்ய முடியும். இல்லைன்னா.. நஷ்டக் கணக்கில் இதை எழுதிட்டு போயிருவேன். உனக்கு எந்த பைனாஸரும் என்கிட்ட இருந்து கிடைக்காது. நான் சொல்வது புரிந்தது தானே! நான் சொல்வதற்கு ஒகே என்றால்.. இதில் சைன் செய்வேன்.” என்றான்.

 

பவித்ராவிற்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. அவளைக் கேட்காமல் அவளது இதயத்திற்குள் உள்ளே நுழைந்த காதல்.. ஒரு மணி நேரத்தில் வெளியே இழுக்கப்படுகிறதா!

 

ஏனோ கண்கள் கலங்க.. அதை அவருக்கு காட்டாதிருக்க குனிந்த பொழுது.. மேசையில் அவர் கையெழுத்திட தயாரா இருந்த காகிதங்கள் கண்ணில் பட்டன. அவளுக்கு அவள் சந்தித்த தடைகள், இகழ்ச்சிகள் நினைவிற்கு வந்தன. கண்களில் பெருகிய நீர் அங்கேயே உறைந்து விட மெல்ல நிமிர்ந்தவள் “ஒகே ஸார்! நான் உங்க பையனை கான்டெக்ட் செய்ய மாட்டேன்.” என்றாள்.

 

அவர் முறுவலுடன் அதில் கையெழுத்திட்டார்.

 

கையெழுத்திட்ட கோப்புகளுடன் பவித்ரா வெளியே வருகையில் நேரம் ஏழு ஆகியிருந்தது. அப்பொழுது அவளது பையில் இருந்த செல்பேசி ஒலித்தது. எடுத்து பார்த்தவள்.. அதில் விக்ரமின் பெயரை பார்த்ததும் அவளது மனம் கனத்தது. முழுவதும் ஒலித்து நிற்கும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் மீண்டும் விக்ரம் அழைக்கவும், சட்டென்று அழைப்பை துண்டித்தவள், உடனே விக்ரமின் எண்ணை பிளாக் செய்தாள். 

 

அன்றிரவு அவளால் உறங்க முடியவில்லை. காலையில் எழுந்தவளுக்கு விக்ரம் விளையாட்டுத்தனமாக அனைத்திலும் முடிவெடுப்பதாக அவளுக்கே தோன்றியது நினைவிற்கு வந்தது. அவனது தந்தை கூறியது போல் அவனது மனம் மாறலாம்.. அல்லது அவள் மேல் கொண்ட காதல் மாறாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் தற்பொழுது அவளுக்கு தோன்றிய காதலுக்காக தனது இலட்சியத்திடம் அவள் சமரசம் பேச தயாரில்லை. அவன் கூறியது போல்.. அவளது வேலையை அவள் பார்க்கட்டும். அவனது வேலையை அவன் பார்க்கட்டும். இருவரின் வேலை முடிந்த பின் இருவரின் காதல் இருந்தால்.. அதற்காக கண்டிப்பாக போராடலாம்.. என்று முடிவெடுத்தாள். ஒரு முடிவு எடுத்த பின் அவளால் தனது இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடிந்தது. 

 

அவள் செல்ல வேண்டிய இடங்கள்.. அங்கு தோராயமாக தங்க வேண்டிய நாட்கள்‌.. அவளுக்கு வேண்டிய பொருட்கள்.. என்று தனக்கு வேண்டியதை பட்டியலிட்டு கொடுத்தாள். பின் அவளைப் போல் குமரி கண்டம் பற்றி ஆய்வறிக்கை எழுதி வைத்துவிட்டு காணாமல் போனவர்களைத் தேடிச் சென்று அவர்களது ஆர்வத்தை தட்டி எழுப்பி தன்னுடன் இணைக்க முற்பட்டாள். இருவர் தவிர மற்றவர்கள் மறுத்து விட்டனர். 

 

இவ்வாறு அவள் உள்பட ஆறு பேர் மற்றும் கெமராமேன் ஒருவன் உள்பட ஏழு பேர் அடங்கிய குழு.. அட்லாண்டிக் கடலின் நடு பகுதியை நோக்கி மார்ச் மாதம் முதல் வாரம் கப்பல் மாலுமிகள் ஆழ்கடல் நீச்சலில் தேர்ந்த இருவருடன் தனது பயணத்தை தொடங்க நினைத்தது. ஆனால் முதல் தடை வந்தது. உலகத்தின் கிழக்கு பகுதியில் கடுமையான தொற்றுநோய் பரவுவதாக செய்தி வைத்துக் கொண்டிருக்கவும் சில நாட்கள் அவர்களது பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் பதினைந்தாம் தேதி அனைத்து வசதிகளும் கொண்ட சிறு சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கியது. இருபத்திரெண்டாம் தேதி.. அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைந்தனர். அங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கியது.

 

ஆனால் கடல் சார் துறையினருடன் இருபத்திரெண்டாம் தேதி வரை தொடர்பில் இருந்தார்கள்.  அதன் பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. வானிலை காரணமாக தொடர்பு அறுபட்டிருக்கலாம் என்று கணித்தனர்.

 

கடல் துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அரசாங்கம் எதற்கு இந்த தேவையில்லா ஆராய்ச்சி எல்லாம் அனுமதி அளித்தார்கள்.. என்று எரிச்சலடைந்தார்கள். வெளிநாட்டினரிடம் இருக்கும் தொழில்நுட்பமும் வசதியும் இல்லாத பொழுது.. எதற்கு இந்த அகல கால் என்று திட்டினர்.

 

அவர்களை மீட்டு வர.. கப்பல் படையை அணுகலாம் என்று இருக்கும் நிலையில் இந்திய நாட்டில் மட்டுமில்லாது உலகம் முழுவதும் பெரும் பதட்டத்தை கொரனா எனும் தொற்று நோய் பெரும் பீதியை கிளப்பி இருந்தது. இந்த நோயின் காரணமாக மனித உயிர்கள் கொத்து கொத்தாக மாய்ந்தன. இதனால் இருபத்திமூன்றாம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் அரசு அலுவலகம் உள்பட எதுவும் இயங்கவில்லை.

 

அட்லாண்டிக் கடலில் மாட்டியவர்களின் நிலை தெரியாமல் போனது.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 3

 

2020 ஆம் ஆண்டு உலகையே புரட்டி போட்ட ஆண்டு! கொரோனா என்னும் கொடிய தொற்று நோயால் மக்கள் பலர் மடிந்தனர். பலரின் வாழ்க்கையே மாறியது. வீட்டிலேயே மக்கள் முடங்கி கிடந்ததால் பொருளாதாரத்தில் மிக பெரிய சரிவை உலகம் சந்தித்தது. பல தொழிலதிபர்களின் தொழில்கள் முடங்கி போயின.

 

அதில் விகே நிறுவனமும் ஒன்று!

 

அன்று சரியாக நாலு மணிக்கு விமானம் ஏறிய விக்ரம் துபாய்க்கு சென்றடைந்ததும்.. முதல் வேலையாக பவித்ராவிற்கு ஆசையுடன் அழைப்பு விடுத்தான். அது முழுவதுமாக ஒலித்து நின்று விடவும்.. அவனுக்கு பெரிதாக தோன்றவில்லை. உடனே மீண்டும் முயற்சித்தான். ஆனால் இம்முறை அழைப்பு துண்டிக்க பட்டது. எதாவது முக்கிய வேலையாக இருப்பாள் என்று சமாதானப்படுத்திக் கொண்டு சிறிது நேரம் கழித்து அழைப்பு விடுத்த பொழுது.. அந்த பக்கம் இருந்து சத்தமே இல்லை. எனவே மீண்டும் அழைப்பு விடுத்தான். அதே போல் இருந்தது. தனது செல்பேசியில் பிரச்சினையோ என்று சுவிட்ச் ஆஃப் செய்து மீண்டும் அழைத்தான். பின்பே ஒருவேளை பவித்ரா முக்கியமான வேலையில் இருப்பதால்.. ஆஃப் செய்து வைத்திருக்கலாம் என்று நினைத்து அமைதியானான். அப்பொழுதும் அவனால் அரை மணி நேரத்திற்கு மேல் பொறுத்திருக்க முடியவில்லை. அரை மணி நேரம் கழித்து அதே போல் இருக்கவும், கம்பெனி மேனேஜரை அழைத்தான். 

 

இரண்டாம் அழைப்பிலேயே எடுக்கப்படவும், அவனிடம் பவித்ராவை பற்றிக் கேட்டான். ஏழு மணிக்கே வேலையை முடித்துவிட்டு சென்றுவிட்டதாக கூறினான். 

 

அதைக் கேட்ட விக்ரமிற்கு சிறு துணுக்கு ஏற்பட்டது. ஒப்பந்தத்தை பற்றிக் கேட்டான். அது வெற்றிகரமாக கையெழுத்திட்டாகி விட்டது.. என்றுக் கூறினான். அவனது அழைப்பைத் துண்டித்துவிட்டு.. மீண்டும் பவித்ராவை அழைத்தான். அப்பொழுதும் எடுக்கப்படவில்லை. 

 

அப்பொழுதே தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது. பவித்ரா இந்த ஒப்பந்தத்திற்காக அவனுடைய காதலை ஏற்றுக் கொண்டு விட்டதாக பொய்யுரைத்திருக்கிறாள். 

 

எதிரே இருந்த கண்ணாடி சுவற்றில் தனது பிம்பத்தை பார்த்து.. விக்ரம் மெல்ல சிரித்தான். பவித்ரா அவனுடைய காதலை ஏற்காவிடாலும்.. அந்த ஒப்பந்தத்தை அவளுக்கு அவன் கொடுக்கும் எண்ணத்தில் தான் சென்றான். தனது காதலை புரிய வைக்க.. இது ஒரு வாய்ப்பாக தான் கருதினான். ஆனால் அவள் அவளது தேவைக்காக தன்னுடைய காதலை கருவியாக பயன்படுத்தியது புரிந்தது. 

 

அவனால் அவளது இலட்சியத்தை தடுத்து நிறுத்த முடியும்.‌ கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றாலும்.. பவித்ராவின் ஆராய்ச்சிக்கு கால அளவு சொல்ல முடியாது என்று குறிப்பிட்டு இருந்ததால்.. அவனால் தள்ளிப் போட முடியும். அவனை ஏமாற்றியதிற்கு தண்டனையை தர முடியும். ஆனால் பிறகு பவித்ராவின் துரோகத்திற்கும் தனக்கும் வித்தியாசம் இருக்காது என்று நினைத்தான். அவனது முகத்தில் கசந்த முறுவல் தோன்றியது.

 

அப்பொழுது இரண்டுக்கு புறப்படும் விமானம் தயார் நிலையில் இருப்பதாக பயணிகளை அழைக்கவும், அருகில் வைத்திருந்த பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு நடந்த விக்ரமின் முகத்தில் பழைய இளக்கமும் விளையாட்டுத்தனமும் இல்லை. நிமிர்வுடன் நடந்தான்.

 

நாலு மாதம் வேலையின் பொருட்டு சென்ற விக்ரம் கொரோனா முடக்கம் காரணமாக அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவனை முற்றிலும் மாற்றிய நிகழ்வும் நடந்தது. 

 

இந்தியாவில் விக்ரமின் தந்தை கொரோனா தொற்று நோயினால் இறந்து விடவும்.. விக்ரம் செல்ல முடியாமல் தவித்தான். இந்தியன் எம்பஸியிடம் கெஞ்சினான். ஆனால் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. தான் உருவாக காரணமாக இருந்த தந்தை இறந்த போது.. அவரது முகத்தை கூடப் பார்க்க இயலாத நிலையில் மனம் மிகவும் நொந்து போனான். அவனுக்கு அங்கு ஆறுதல் அளிக்க கூட யாருமில்லை‌. இதனால் குடிப்பழக்கம் இல்லாத விக்ரம் ஆறுதலுக்காக குடிப்பழக்கத்தை நாடி சரணடைந்தான்.

 

வரிசையாக இந்தியா செல்ல பலர் விண்ணப்பத்திருக்க அவனது முறை ஆகஸ்ட் மாதமே வந்தது. முற்றிலும் மாறி வந்த மகனை பார்த்து.. அவனது அன்னை கண்ணீர் விட்டு அழுதார்.

 

உருவ படமாக மாட்ட பட்டிருந்த தனது தந்தையின் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட விக்ரமிற்கு.. அவனது வெஞ்சினம் முழுவதும் அவனை இந்தியாவை விட்டு செல்ல காரணமாக இருந்த பவித்ராவின் மீது திரும்பியது. அவளைப் பற்றி மேனேஜர் கிஷோரிடம் விசாரித்த பொழுது அவர் கூறிய செய்தி அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

 

ஆராய்ச்சிக்காக இந்திய‌ பெருங்கடலில் கப்பலில் பயணித்தவர்களின் தொடர்பு அறுப்பட்டு விட்டது என்றும் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டதால்.‌. அப்போதைக்கு அவர்களை மீட்டு வர ஆட்கள் இல்லாமல் இருந்தனர். பின்னர் அவரவர் குடும்பத்தினர் விண்ணப்பிக்கவும்.. அரசாங்கம் அவர்களைத் தேட உத்தரவு பிறப்பித்தது. கடல் துறையினர் காணாமல் போன கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கப்பல் மூழ்கி இறந்திருக்க கூடும் என்று முடிவுக்கு வந்த நிலையில் சாட்டிலைட்டில் அவர்களது கப்பல் சிக்கியது. சாட்டிலைட் மூலம் கப்பல் இருப்பது கண்டறிப்பட்டு செல்வதற்குள்.. கப்பல் நகர்ந்து விடுவது என்று பல போராட்டங்களுக்கு பின் ஏப்ரல் ஆறாம் தேதி கண்டுப்பிடிக்கப்பட்டார்கள்.‌ ஆனால்?!

 

‘ஆனால்!?’ என்று கிஷோர் நிறுத்தி விடவும் விக்ரம் “சொல்லுங்க என்னாச்சு?” என்று கேட்டான்.

 

“அந்த கப்பல்ல பவித்ரா மட்டுமே இருந்தாங்க! மற்றவங்க என்ன ஆனாங்க என்று கேட்டதிற்கு.. அவங்க எல்லாரும் கப்பல்ல இருந்து மாயமாய் மறைஞ்சு போயிட்டாங்க! திடீர்னு காணோம் என்று சொன்னாங்க!” என்றான்.

 

“வாட்!” 

 

“ஆமாங்க! போலீஸ் எவ்வளவோ விசாரிச்சாங்க! உண்மை தன்மை கண்டறிய மிஷின் கூட வச்சாங்க! ஆனா அவங்க அப்படித்தான் திருப்பி திருப்பிச் சொன்னாங்க! அது மட்டுமில்லாம சம்பந்தம் இல்லாம ஏதேதோ அம்புலி மாமா கதை மாதிரி எதையோ உளறினாங்க! அதனால போலீஸிக்கு டவுட் வந்து அவங்களை சைக்கேஜீஸ்ட் டாக்டர் கிட்ட காட்டின போது.. டாக்டர் அவங்க மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை ஊர்ஜீதம் செய்தாங்க! இரண்டு மாசம் போலீஸ் கஸ்டடியில் வச்சு.. டாக்டர் ட்ரீட்மென்ட் கொடுத்து பார்த்தாங்க! பேசிட்டே இருந்தவங்க.. பேசறதை நிறுத்திட்டாங்க! எதோ யோசனையில் இருந்தாங்க! அவங்க கிட்ட இருந்து வேற தகவல்களை வாங்க முடியலை. அந்த பொண்ணோட பேமலில வேற.. பொண்ணை விடுவிக்கணும்.. என்று போலீஸ் கிட்ட அழுது வற்புறுத்தவும், கப்பல் இருக்கிற டேமேஜ் பார்த்து அவங்க கூடப் போனவங்க எதாவது சூறாவாளில மாட்டி இறந்திருப்பாங்க.. நடுகடலில் தனியா அந்த கப்பல்ல இருந்ததால்.. இவங்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருச்சு என்று கேஸை முடிச்சுட்டு அவங்களை ரீலிஸ் செய்துட்டாங்க ஸார்!” என்றான்.

 

விக்ரம் “அதெப்படி அவ்வளவு‌ ஈஸியா விட்டிங்க! அவளை நம்பி நம்மளோட இரண்டு எம்பிளாய்ஸ் போயிருக்காங்க! அவங்க குடும்பத்திற்கு அவ பதில் சொல்லியாகணும். அங்கே அவங்களுக்கு எதோ ஆபத்து நடந்திருக்கு.. இவ மட்டும் தப்பிச்சுட்டு.. பைத்தியம் என்று எதோ கதை கட்டுகிறா! இல்லைன்னா.. அந்த ஆபத்து இவளால் கூட வந்திருக்கலாம். அவங்க காணாம போனதுக்கு இவ தான் காரணம்! போலீஸை நடிச்சு ஏமாத்தலாம் என்னை ஏமாத்த முடியாது. நான் இப்பவே அவளைப் பார்க்கணும்.” என்று ஆத்திரத்துடன் கத்தினான்.

 

உடனே கிஷோர் “ஸார்! இன்னும் நாட்டில டாக்டவுன் புல்லா முடியலை. இன்னும் கொரோனா பீதி இருக்கு! இந்த நேரத்தில் வேண்டாம் ஸார்! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் ஸார் போகலாம்.” என்று விக்ரமை அமைதிப்படுத்தினான்.

 

பவித்ரா எதையோ மறைக்கிறாள் என்று விக்ரம் நம்பினான். அவனை ஏமாற்றியது போல்.. ஏதோ பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் என்று நம்பினான். அவளது காரியத்திற்காக சென்ற இடத்தில் நடந்த விபரீதத்தில் மற்றவங்களுக்கு ஏதோ ஆகிவிட.. அந்த பழி தனது மேல் விழுந்து விடும் என்று பவித்ரா நாடகமாடுகிறாள் என்று நினைத்தான்.

 

விக்ரமினால் இரு நாட்கள் கூடப் பொறுத்திருக்க முடியவில்லை. பவித்ராவை அழைத்து வரும்படி உத்தரவிட்டான். அவனது உத்தரவை மீற முடியாமல் சென்றவர்கள்.. பவித்ராவின் குடும்பத்தினர் அங்கு இல்லாததை கண்டு திகைத்தார்கள். உடனே விக்ரமிடம் கூறவும், குறையாத வெஞ்சினம் அவனது நெஞ்சிலேயே தங்கியது.

 

அதன் பின்.. விக்ரம் தனது குடிப்பழக்கத்தை விடவில்லை என்றாலும்.. சரிந்த தங்களது நிறுவனத்தை சரிச் செய்ய மும்மரமாக இரவும் பகலும் உழைத்தான். எளிமையாக அவனால் பழைய நிலைக்கு எட்டி விட முடியவில்லை. கடுமையாக உழைத்தான்.. சாண் ஏறினால் முழம் சறுக்கினான். கடைசியில் அவன் வெற்றி கனியை சுவைக்க மூன்று வருடங்கள் ஆனது. 

 

அவனது அடுத்த கட்ட வெற்றிக்காக இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலதிபர்களுடன் அவன் போட்டிப் போட வேண்டியிருந்தது. 

இன்று 2024 ஆம் ஆண்டு

 

ஷு லேஸை கட்டிக் கொண்டிருந்த விக்ரமிடம் அவனது அன்னை காஞ்சனா “வர இரண்டு நாளாகுமா விக்ரம்!” என்று கேட்டார்.

 

“ஆமா அம்மா! அந்த ஸ்பான்ஸர்ஸ் நமக்கு கிடைச்சுட்டா.. உடனே வேலையைத் தொடங்கணும். அந்த மாதிரி நடந்துட்டா.. அட்லீஸ்ட் ஒன் விக் கழிச்சு தான் வருவேன். ஏன்மா! எதாவது விசயம் சொல்லணுமா!” என்று கேட்டான்.

 

“நான் என்ன கேட்க போகிறேன். உனக்கு வயசு முப்பதாகிருச்சு! அலைன்ஸ் வந்துட்டு இருக்கு! எப்போ கல்யாணம் செய்துக்க போகிறே!” என்று கேட்டார்.

 

அதைக் கேட்டு விக்ரமின் கல்லென இறுகியது. அவனால் இன்னும் பவித்ராவின் துரோகத்தை மறக்க முடியவில்லை.

 

அதைப் பார்த்து பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்ட காஞ்சனா “சரிபா! உன் மனசு மாறும் காலத்திற்காக காத்திருக்கேன். ஆனா என்னை ரொம்பவும் காக்க வச்சுராதே!” என்றார்.

 

அதற்கு விக்ரமிடம் இருந்து பதிலில்லை. அமைதியாக கிளம்புவதில் மும்முரம் போல் காட்டிக் கொண்டான்.

 

காஞ்சனா “ரொம்ப வேலை செய்து உடம்பை கெடுத்துக்காதேன்னு கூட என்னால சொல்ல முடியலை விக்ரம்! ஏன்னா.. வேலை செய்யும் போது.. நீ ட்ரீங்ஸ் எடுக்க மாட்டே!” என்றார்.

 

அதற்கும் அவனிடம் இருந்து பதிலில்லை.

 

காஞ்சனா “எனக்கு பழைய விக்ரம் வேணும்! துறுதுறுன்னு சுத்திட்டு.. இருப்பே! உன்னைப் பார்த்தாலே கூட இருக்கிறவங்களுக்கு அப்படியொரு புத்துணர்ச்சி கிடைக்கும். கம்ளீட் பாஸிட்டிவ் பேக்கேஜ் நீ!” என்றவரின் முகத்தில் ஏக்கம் நிறைந்திருந்தது.

 

ஆனால் கையில் கை கடிகாரத்தை கட்டியவாறு தாயின் அருகே வந்த விக்ரம் “பை அம்மா! டேக் கேர்!” என்றுவிட்டு அகன்றான்.

 

அரசாங்கம் அடுத்த வருடம் நடத்த இருக்கும் அனைத்து நாட்டு பிரதமர்களுக்கான மாநாட்டிற்காக சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியம் ஒன்று அமைக்க தீர்மானித்திருந்தது. அதை அமைத்து தர இந்தியாவின் தலை சிறந்த தொழிலதிபர்களை அழைத்து கூட்டம் கூட்டிருந்தார்கள். அதற்கு தமிழ்நாட்டில் இருந்து விகே நிறுவனத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

 

இது விகே நிறுவனத்திற்கு மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களுக்கும் பெரிய வாய்ப்பு! செலவு அதிகம் இலாபம் குறைவாக தான் கிடைக்கும் என்றாலும்.. இந்திய அரசாங்கத்தால் கிடைக்கும் சலுகைகள் அதிகம்! இந்தியாவின் சார்பாக என்கிற மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எனவே அனைவரும் அரசாங்கம் தங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் அந்த கூட்டத்திற்கு தயாராகி வந்தார்கள்.

 

கூட்டம் ஆரம்பித்ததும்.. அனைவரும் தங்களது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி ஒவ்வொருவராக விளக்கினார்கள். அவற்றில் விக்ரம் கூறியவை சிறந்ததாக இருந்தது என்பது வெளிப்படையாக தெரிந்தது.

 

அனைவரும் தங்களது செயல்பாடுகளை சமர்ப்பித்த பின் இடைவேளை விடப்பட்டது. அப்பொழுது‌ விக்ரம் வெளியே வந்து விட.. உள்ளே இருந்த தொழிலதிபர்கள் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு.. சிறு கருத்து பரிமாற்றம் நடந்ததை விக்ரம் அறியவில்லை. அவர்களிடம் இருந்து சிறு தகவல் கமிட்டி நபர்களாக இருந்த சில அரசாங்க அலுவலர்களிடமும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிக்கும் சென்று விட்டதையும் அவன் அறியவில்லை.

 

இடைவேளை முடிந்து நம்பிக்கையுடன் வந்தமர்ந்த விக்ரமிற்கு ஏமாற்றம் கிடைத்தது. வாக்கெடுப்பு மற்றும் தரம் வகையில் வேறு ஒரு தொழிலதிபருக்கு கிடைத்தது.

 

அவருக்கு சிரிப்புடன் கமிட்டி நபர்கள் கை குலுக்கியதிலேயே இது முன்பே எடுத்துக் கொண்ட முடிவோ என்றுத் தோன்றியது. அனைவரும் வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்க.. விக்ரம் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினான்.

 

அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தவன் அங்கு எரிமலையாக பொங்கினான். 

 

“என்ன நினைச்சுட்டு இருக்காங்க இவங்கெல்லாம்.. இவங்களுக்குள்ள ஆட்களை செலக்ட் செய்வதற்கு எதுக்கு என்னைக் கூப்பிட்டாங்க! நான் எப்படியும் பெஸ்ட்டா தர மாட்டேன் பேருக்கு கூப்பிடலாம் என்று நினைச்சுட்டாங்க போல! என்னை என்ன அவ்வளவு மட்டமா எடை போட்டுட்டாங்களா!” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

 

அதற்கு மேனேஜர் கிஷோர் “உங்களை மட்டமாக நினைக்கவில்லை ஸார்! ஆனால் உங்க கிட்ட சிறந்ததை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! இங்கே நீங்க என்பது நீங்க மட்டுமில்லை. நீங்க அதாவது நாம வந்த இடம் தான் அவங்களுக்கு பெரிசா தெரியலை. நம்ம கிட்ட சிறந்தது இருக்கிறது என்பதை கூட அவங்க சொல்லணும் என்று நினைக்கிறாங்க! அவங்க அதை ஒத்துக்கிட்டால் தான் அது சிறந்தது ஆகும் என்று நினைக்கிறாங்க! அது மட்டுமில்லாம நீங்க இங்கே செலக்ட் ஆகாததிற்கு காரணம்.. நீங்க இந்த உலகத்திற்கு பரிச்சயமாகி விடக் கூடாது என்பது தான்!” என்றான்.

 

விக்ரம் புருவத்தை சுருக்கி “இப்போ நீங்க நீங்க என்று யாரை சொல்றே கிஷோர்?” என்று நேரடியாக கேட்டான்.

 

கிஷோரிடம் இருந்து சிறிதும் தயங்காது பதில் வந்தது.

 

“தமிழ், தமிழர், தமிழ்நாடு”

 

ஏன் தான் நிராகரிக்கப்பட்டேன்.. என்பதற்கு புரியாத புதிராக இருந்த விசயம் தற்பொழுது.. விக்ரமுக்கு நன்றாக புலப்பட்டது.

 

கிஷோர் “நீங்க முதல்ல கேட்டது சரி தான் ஸார்! அவங்களுக்குள்ளவே ஆட்களை செலக்ட் செய்வது முன்பே எடுத்த முடிவாக இருக்கலாம்.” என்றான்.

 

விக்ரம் கோபம் குறையாமல் “ஒரு நாட்டுக்குள்ள இருந்துட்டு‌ இது ரொம்ப தப்பு கிஷோர்! மத பிரச்சினை எவ்வளவு பெரிய தப்போ அதை‌விட இந்த இன வேறுபாடும் ரொம்ப தப்பு!” என்றான்.

 

கிஷோர் “ஆமாம் ஸார்! ஆனா பெரும்பாலோனோர் என்ற அடிப்படையில் நம்மை அவங்க எல்லா விசயத்திலும் முன்னுரிமை எடுத்துக்க பார்க்கிறாங்க!” என்றான்.

 

அதற்கு விக்ரம் சிறு அசட்டையான சிரிப்புடன் “அப்போ.. குமரி கண்டம் என்று ஒரு லேன்ட் இருந்துச்சாம். அது முழுகாம இருந்திருந்தா.. நாம தான் அதிகம் இருந்திருப்போம்.” என்றான்.

 

கிஷோர் சிறுத் திகைப்புடன் “ஸார்! உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஸார்! ஆமா ஸார்! நானும் நினைச்சேன். அந்த ப்ரோஜெக்ட் ஹிட் ஆகிருந்தா! மே பி ஒரு அங்கீகாரம் ஆவது கிடைச்சு இருக்கும். அங்கே வாழ்ந்த இனம் தமிழ் இனமாக தான் வளர்ந்திருக்கும்.. என்கிறதை நிரூபிச்சுருக்கலாம்.” என்று ஆர்வத்துடன் கூறினான்.

 

உடனே சுருக்கென்று பவித்ராவின் நினைவு விக்ரமின் நெஞ்சில் குத்தியது.

 

சிறு இளக்காரத்துடன் “அப்படியொரு ப்ரொஜெக்ட்டை காட்டி நம்மை ஏமாற்றியும் இருக்கலாம்.” என்றான்.

 

கிஷோர் “இல்லை ஸார்! அவங்க ஏமாற்றுலை. அந்த பொண்ணு பாவம்..” என்றான்.

 

விக்ரம் கூர்மையான பார்வையுடன் “என்ன சொல்றே!” என்று கேட்டான்.

 

கிஷோர் முதலில் திணறினாலும் பிறகு விக்ரமின் தந்தை பவித்ராவிற்கு போட்ட கெடுபிடியை பற்றிக் கூறினான்.

 

உடனே சட்டென்று முன்னே வந்து கிஷோரின் சட்டையை கொத்தாக பற்றி இழுத்த விக்ரம் “இதையே முதலிலேயே சொல்லுலை.” என்று கர்ஜீத்தான்.

 

கிஷோர் அவனது கோபத்தினால் பயத்துடன் “அப்போது தான் சேர்மன் இறந்திருந்தாங்க! அவங்களைப் பற்றி தப்பா சொல்ல வேண்டாம் என்று‌ நினைத்தேன்.” என்றான்.

 

அதைக் கேட்டு விக்ரம் மேலும் கோபத்துடன் “இந்த உலகில் இல்லாதவங்களுக்காக உயிரோட வாழ்ந்துட்டு இருக்கிற பவித்ராக்காக இந்த உண்மையை ஏன் சொல்லுலை.” என்கவும், கிஷோர் “ஸார்! நீங்க கோபத்தில் வேற இருந்தீங்க! அந்த நிலைமையில் அந்த மாதிரி இருந்த அவங்களைப் பார்த்தா.. இன்னும் ஆபத்து என்று‌ம்.. இதைப் பற்றி மட்டும் மறைச்சுட்டேன் ஸார்! மற்றபடி நீங்க இரண்டு நாட்கள் கழிச்சு தேடச் சொன்ன போது.. நிஜமாலுமே தேடினேன். ஆனா அவங்க கிடைக்கலை.” என்றான். அவனது சட்டையை விடுத்துவிட்டு.. அங்கிருந்த கண்ணாடி சன்னலின் முன் நின்றவனுக்கு.. அன்று பவித்ராவின் நிலைமையாக கிஷோர் கூறியது அனைத்தும் நினைவிற்கு வந்தது.

 

விக்ரம் சிறைக்குள் கரங்களை விட்டுக் கொண்டு தவிப்புடன் “பவித்ரா!” என்று முணுமுணுத்தான்.

 

பின் திரும்பி‌ கிஷோரை பார்த்த விக்ரம் “உடனே சென்னை போக டிக்கெட் புக் செய்! எனக்கு பவித்ரா எங்கே இருக்கா என்று தெரிந்தாகணும்.” என்று அதிகாரமாக கூற நினைத்தவனின் குரல் கெஞ்சியது.

 

பவித்ராவை அவன் மட்டுமல்ல. இன்னும் இருவர் தேடிக் கொண்டிருந்தார்கள். 

 

ஒருவன் அந்த தொல்லியல் துறைக்கு சொந்தமான நூலகத்தில் பவித்ரா எழுதி வைத்திருந்த ஆய்வறிக்கையை வெகு மும்மரமாக படித்துக் கொண்டிருந்த அபினவ்! மற்றொரு குழு.. அந்த ஆய்வறிக்கை வெளியுலக பார்வைக்கு வரக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பவர்கள்!

 

பவித்ரா எங்கே இருக்கிறாள்? அவளுக்கு என்னவாயிற்று? யார் கையில் பவித்ரா சிக்குவாள்?


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 4

சென்னையை வந்தடைந்ததும்.. முதல் வேலையாக பவித்ராவை தேடும் பணி நடந்தது. முன்பு விக்ரம் கேட்ட போதே பவித்ராவின் குடும்பம் பெயர்ந்த இடத்தை கண்டுப்பிடிக்க முடியவில்லை. தற்பொழுது நான்கு வருடங்கள் கழித்து தேடுவதற்கு மிகவும் சிரமாக இருந்தது. அவர்களின் உறவினர்களும் தங்களிடம் கூறாமல் சென்றுவிட்டார்கள் என்று கையை விரித்தார்கள். 

 

அவர்கள் இவ்வாறு சொல்லாமல் கொள்ளாமல் சென்றதுக்கு காரணமாக அண்டை வீட்டார்.. உறவினர்கள் என்று அனைவரும் ஒரு விசயத்தை தான் கூறினார்கள்.

 

பவித்ராவை கைது செய்து விசாரித்தது, மற்றும் அவளுக்கு மனநலம் குன்றியது போன்றவை செய்தியாக எங்கும் பரவியதால்.. அவமானம் தாங்காமல் சென்றுவிட்டதாக கூறினார்கள்.

 

கிஷோர் கூறியதைக் கேட்ட விக்ரம் நெற்றியை தாங்கியவாறு அமர்ந்துவிட்டான். அவனால் எதையும் பேச முடியவில்லை. அவனது நிலை புரிந்து.. கிஷோர் அமைதியாக அங்கிருந்து அகன்று விட்டான்.

 

அதன்பின் விக்ரம் ஆளே மாறிவிட்டான். ஆனால் அவனது தேடுதலை நிறுத்தவில்லை. அவனுக்குள் இருப்பது குற்றக்குறுகுறுப்பா.. இல்லை பழைய காதலா என்று கேட்டால் அவனிடம் பதிலில்லை. ஆனால் பவித்ராவின் நலனை அறிய அவனது மனம் துடித்தது.

 

இவ்வாறு ஒரு வாரம் சென்றிருக்கும் நிலையில்.. ஞாயிறு காலையில் இருந்து விக்ரமின் மனதில் பவித்ராவை பற்றிய நினைவுகள் அரித்து கொண்டிருந்தன. அவனால் அமைதியாக ஒரு இடத்தில் அமர முடியவில்லை. எந்த காரியமும் செய்ய முடியவில்லை. எனவே மதிய நேரத்தில் தொல்லியல் துறை வாசகத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு சென்றான்.

 

அங்கு சென்றதும் அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றன. 

 

காதலியை கவர என்று அவளுக்கு பிடித்ததை சாதித்து விட்ட பெருமையுடன் அவள் இங்கே தான் இருப்பாள்.. என்று‌ ஓடோடி வந்தான். 

 

அவள் ஒரு மூலையில் அமர்ந்திருப்பதை பார்த்ததும்.. ஓடி வந்த போது வாங்கிய மூச்சை விட.. அவளைப் பார்த்ததும் இன்னும் அதிகமானது. ஒருவழியாக தன்னை சமாதானப்படுத்தி கொண்டு வந்து அவளது எதிரில் அமர்ந்தான்.

 

அவள் அவனது காதலை ஏற்றுக் கொண்ட விதம் அவனுக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. அதுவே தான்.. அவளது காதலை சந்தேகப்படவும் காரணமாக அமைந்தது.

 

இங்கே வந்தால் மனம் ஆறும் என்று நினைத்திருக்க.. ஆனால் அதிகமானது மட்டுமில்லாமல் நெஞ்சில் சுருக்கென்று வலி தோன்றவும், நெஞ்சை நீவி.. அதை அடக்க முயன்றபடி.. பவித்ராவை சந்தித்த இடத்தை நோக்கி சென்றான்.

 

அங்கு ஒரு இளைஞன் மும்மரமாக படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து திரும்பி விடலாம் என்று நினைக்கையில் “வாவ் பவித்ரா மேம் சூப்பர்!” என்ற‌ குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.

 

அந்த இளைஞன் தான் கைத்தட்டி கொண்டிருந்தான். உடனே அடுத்த மேசையில் இருந்தவர்கள்.. முறைக்கவும் அமைதியாக படிப்பதை தொடர்ந்தான். 

 

பவித்ராவின் பெயரை கேட்டது ஒன்றே போதுமானதாக இருக்க.. விக்ரம் பரபரப்புடன் அந்த இளைஞனை நோக்கி விரைந்தான். அந்த மேசையில் அவன் மட்டும் தான் அமர்ந்திருந்தான். எனவே சுற்றிலும் பார்த்தான். எங்கும் பவித்ரா தென்படவில்லை. அனைவரும் மும்மரமாக புத்தங்களில் மூழ்கியிருந்தனர். எனவே அந்த இளைஞனிடமே கேட்டான்.

 

“எக்ஸ்க்யுஸ் மீ!”

 

‘என்ன’ என்பது போல்… அவன் நிமிர்ந்து பார்க்கவும், விக்ரம் “பவித்ரா எங்கே?” என்று கேட்டான்.

 

அதைக் கேட்ட அந்த இளைஞன் திருதிருவென விழித்தான்.

 

விக்ரம் பொறுமையிழந்தவனாய் “இப்போ நீங்க பேசிட்டு இருந்த பவித்ரா எங்கேன்னு கேட்டேன்.” என்றான். 

 

“பேசிட்டு இருந்தேனா.. நான் அவங்க எழுதினதை படிச்சுட்டு தானே இருந்தேன்.” என்று குழப்பத்துடன் கூறினான்.

 

விக்ரம் சோர்வுடன் நெற்றியில் கையை வைத்தவாறு அமர்ந்து விடவும், அந்த இளைஞன் “ஓ ஸாரி! நான் கத்தியதை வச்சு கேட்கறீங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப எக்ஸைமென்ட்ல கத்திட்டேன்.” என்று அசடு வழிந்தான்.

 

ஆனால் விக்ரம் அவனைக் கவனிக்கும் நிலையில் இல்லை. பவித்ரா இங்கே தான் இருக்கிறாளா.. என்று மகிழ்ந்ததும்.. அடுத்த நொடி அது கலைந்ததும்.. என்ற இந்த இரு நொடிகளின் தாக்கம் குறையாமல் அமர்ந்திருந்தான்.

 

அப்பொழுது அந்த நூலகத்தின் மேலாளர் “எனக்கு தெரிஞ்சு இந்த புக்கை நீ மட்டும் தான் இப்படி விழுந்து விழுந்து படிக்கிறே! நாலு வருஷமா வச்ச இடத்திலேயே தான் இருந்துச்சு! இப்படி கத்திட்டே படிக்க இது என்ன தியேட்டரா! லைப்ரேரி!” என்று முணுமுணுத்துவிட்டு சென்றார்.

 

ஆனால் அந்த இளைஞன் அவன் போக்கில் விக்ரமிடம் பேசிக் கொண்டே போனான்.

 

“நான் கத்தினதுக்கு ரிஷபன் இருக்கு! பின்னே நீங்களே இதைப் படிச்சு பாருங்களேன். கடலுக்கு அடியில் மூழ்கியதாக கூறப்படும் குமரி கண்டம் பொய் என்கிற மாதிரியான தகவல்கள் சில இப்போ வந்துட்டு இருக்கு! ஆனா பவித்ரா மேம் என்ன சொல்றீங்கன்னா.. குமரி கண்டம் என்று ஒன்று இருந்தது. அங்கு தான் தமிழ் தோன்றியிருக்கிறது. தமிழ் மொழி தான் உலகத்தின் பழமையான மொழி என்று ஏற்றுக் கொள்ளவே உங்களுக்கு இத்தனை வருஷங்கள் ஆகிருக்கு! ஆனா அதை இன்னும் அஃபிஷியலா அறிவிக்காம உலக நாடுகளில் பரவாம இருக்கு! எதாவது நாட்டுல போய்.. உலகத்தோட பழமையான மொழி என்ன என்று கேட்டுப் பாருங்க.. இலத்தீன், கிரேக்கம் என்று தான் சொல்வாங்க! மற்ற நாடுகளுக்கு கூடப் போக வேண்டாம். நம்ம நாட்டிலேயே சமஸ்கிருதம் என்று சொல்வாங்க! அந்தளவுக்கு தெரியாம இருக்கு! எங்க ஆட்கள் குறைவு என்கிறதாலே எங்களுக்கு ப்ரொமோஷன் செய்ய தெரியலைன்னு நினைக்கிறேன். ஒருவேளை குமரி கண்டம் இருந்திருந்தால்.. எங்க நிலைமை இப்படி இருந்திருக்காது. இப்போ பேசிட்டு இருக்கிற மொழிக்கே இத்தனை போராட்டம் என்றால்.. சுவடே இல்லாமல் அழிந்து போன குமரி கண்டம்.. தற்பொழுது ஆங்கிலம் பேசும் பெரும் கண்டமாக இருக்கும்.. அமெரிக்கா கண்டத்தை போல்.. தமிழ் பேசும் பெரும் கண்டமாக மாறியிருக்கலாம்.. என்பதை உலக நாடுகள்.. ஒரு விசயத்தை யோசிக்கலையா! இல்லை யோசிக்க விரும்பலையா! என்று கேள்வி எழுப்பியிருக்காங்க! தொடர்ந்து உலகத்தோட பழமையான மொழி வெறும் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்து.. ஐம்பத்தியெட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில்.. அதாவது தமிழ்நாட்டோட பரப்பளவை சொல்றாங்க! தமிழ்நாட்டில் மட்டும் தோன்றி.. அங்கே இருக்கிற மக்களால் மட்டும் பேசப்பட்டிருக்கும் என்று நினைக்கறீங்களா! தமிழ் மொழி நிச்சயம்.. பெரும் பரப்பளவு கொண்ட பிரதேசத்தில் தான் பிறந்திருக்கிறது. அது உலகம் முழுவதும் பரவுவதுக்கு முன்பே.. அந்த பிரதேசம் அதாவது குமரி கண்டம் கடலில் மூழ்கி விட்டதால்.. தமிழ் மொழி சொற்ப இருக்கும் மக்களால் பேசப்பட்டு வளர்ந்திருக்கிறது என்றுக் கூறியிருக்கிறாங்க! அதாவது தமிழ் மொழி பழமையான மொழி என்றால்.. குமரி கண்டமும் இருந்திருப்பது உண்மை என்றுக் கூறியிருக்கிறாங்க! எப்படி செமயில்ல!” என்றான்.

 

விக்ரம் கையை நீட்டி.. அந்த கட்டுரை தொகுப்பை தன் பக்கம் இழுத்தான். அதில் இருந்த எழுத்துக்களை வருடினான். 

 

உடலில் இருந்து வழியும் இரத்தம் வேர்வையாக இருந்தால் என்ன.. ஒருவரின் மூளையில் தோன்றிய கருத்துக்கள் எழுத்துக்களாய் வந்தால் என்ன.. இரண்டும் ஒன்று தான்! அது செய்திருக்கும் மாயையை வியந்து பார்த்தான்.

 

எனவே பவித்ராவுடைய ஒரு அங்கமான அந்த எழுத்துக்களை வாஞ்சையுடன் பார்த்தான். சில இடங்களில் டைப்பிங் மிஸ்டேக் இருந்தது போல.. அவற்றை பேனாவால் திருத்தி இருந்தாள். பின் அந்த இளைஞன் குறிப்பிட்ட பகுதியை தொடர்ந்து படித்தவனின் புருவங்கள் ஆச்சரியத்தில் மேலுச்சிக்கு சென்றது.

 

விக்ரமின் முகத்தை பார்த்த அவன் வளவளக்க ஆரம்பித்தான்.

 

“இதுக்கே இப்படிங்கறீங்க! இந்த மாதிரி கூஸ்பம்ப்ஸ் மேட்டர்ஸ் நிறையா இருக்கு! நான் இதை மூன்றாவது தரம் படிக்கிறேன். எனக்கு என்ன வருத்தம் என்றால்.. அவங்க எழுதியதை செயல்படுத்தி இருக்கலாம். அட்லீஸ்ட் எதாவது ரீசர்ச் டீம் கிட்ட ஆவது இதை ஒப்படைச்சுருக்கலாம். அதாவது என்னை மாதிரி!” என்றான்.

 

விக்ரம் நிமிர்ந்து அவனைப் பார்க்கவும், அவன் முறுவலுடன் “ஐயம் அபினவ்! நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளரா இப்போ தான் வொர்க் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். ப்ராஜெக்ட் கிடைக்காம புரோபசர் கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன். இதுல என்ன விசயம் என்றால்.. எனக்கே தனியா ஒண்ணும் தோன்றாது. ஆனா யாராவது எதாவது மேட்டர் கொடுத்தா.. அதை செய்யலாம் என்பது தான் என் ஐடியா! அப்படித் தேடின போது.. கிடைச்சது தான் இந்த தொகுப்புரை! நான் சிலேகித்து படிச்சதை இப்படி ஆர்வமா கேட்கறீங்க! ஆனா ஒருத்தங்க என்கிட்ட லைன் பை லைன்னா.. இதை அப்படியே ஒப்பிச்சாங்க! அதைக் கேட்டு தான் நான் இங்கே ஓடி வந்து இதைத் தேடிப் படிச்சேன். அவங்க சொல்லுலைன்னா.. இந்த மாதிரி இருப்பதே எனக்கு தெரியாது.” என்றான்.

 

பவித்ரா எழுதியதைப் பற்றிப் பேசுகிறான்.. என்பதைத் தவிர சிறு ஆர்வமின்றி கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் திடுமென பரபரப்புற்றான்.

 

“வாட்! வாட் டிட் யு ஷே?” என்றுக் கேட்டான்.

 

அதற்கு அபினவ் குழப்பத்துடன் “நான் ஒரு..” என்கவும், விக்ரம் “அது இல்ல! ஒருத்தங்க.. இதைப் பற்றிச் சொன்ன பிறகு தான் இது பற்றித் தெரிந்ததா! அதுவும்.. இதைப் பற்றி அப்படியே சொல்றாங்களா?” என்று கேட்டான்.

 

அபினவ் “இதுல இவ்வளவு ஆச்சரியப்பட தேவையில்லை. நானே இதுல இம்பிரஸ் ஆகி.. இவ்வளவு தரம் படிச்சுருக்கேன்னா.. அவங்களும் அதே மாதிரி இம்பிரஸ் ஆகிப் படிச்சுருப்பாங்களா இருக்கும்.” என்று தோள்களைக் குலுக்கினான்.

 

அதற்கு விக்ரம் எழுந்து மேசையில் இரு கைகளையும் ஊன்றியவன் “இடியட்! லைப்பேரியன் சொன்னதைக் கேட்கலையா! இந்த புக் வச்ச பிறகு.. இதைப் படிச்சது நீ மட்டும் தான்! அப்போ இதைப் பற்றி.. அப்படியே லைன் பை லைன்னா.. ஒருத்தங்க சொல்றாங்க என்றால்.. அவங்க தான்.. இதற்கு சொந்தமானவங்களாக இருக்கலாம் இல்லைன்னா இதை எழுதினவங்களா இருக்கலாம்..” என்றவன், முடிவில் மேசையை இறுக பற்றினான்.

 

உடனே அபினவ் “ஸா.. ஸார்! அப்படின்னா அவங்க தான் பவித்ராவா!” என்றான்.

 

இத்தனை வருடங்கள் கழித்து பவித்ராவை பற்றிய விசயம் தெரிந்ததில் பரபரப்புற்ற விக்ரம்.. அமர்ந்திருந்த அபினவ்வின் சட்டையை பற்றி எழுப்பியவன் “பவித்ராவை எங்கே பார்த்தே?” என்று உலுக்கினான்.

 

அவர்களின் சத்தம் கேட்டு அனைவரும் “அமைதியா இருங்க” “இது என்ன இடம் என்று தெரியுமா” “இதென்ன உங்க வீடா!” என்று கேட்க ஆரம்பித்தார்கள்.

 

விக்ரம் அவர்களிடம் மல்லு கட்ட எதானிக்கையில் அபினவ் “ஸார்! ஸார்! ப்ளீஸ்! வாங்க வெளியே போய் பேசலாம்.” என்று விக்ரமை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.

 

வெளிவாசலில் காலை எடுத்து வைத்ததும் விக்ரம் “சொல்லு! பவித்ராவை எங்கே பார்த்தே?” என்று கேட்டான்.

 

ஆனால் அவன் தலையை சொறிந்து கொண்டு நின்றிருந்தான்.

 

விக்ரம் பொறுமையிழந்தவனாய் “அபினவ்!” என்று கத்தவும், அவன் “ஸார்! அவங்க இப்போ அங்கே இருக்க மாட்டாங்கன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.” என்றான்.

 

விக்ரம் “என்ன சொல்றே!”

 

அபினவ் “எஸ் ஸார்! அவங்களை கோல்டன் டெம்பிள்ல தான் பார்த்தேன்.” என்றதும்.. சட்டென்று மின்னல் கீற்றாய்.. அவனும் பவித்ராவும் முதலில் சந்தித்தது நினைவில் வந்து சென்றது.

 

அபினவ் தொடர்ந்து பேசினான்.

 

“ஆனா அவங்க என்கிட்ட பேசிட்டு இருந்தப்போ.. இரண்டு பேர் வந்தாங்க.. அவங்களோட பெரண்ட்ஸ் என்று நினைக்கிறேன். ‘கன்னியாகுமரிக்கு கிளம்பற ட்ரெயின் கிளம்பறதுக்குள்ள.. இந்த ட்ராப்பிக்கை தாண்டி போகணும். சீக்கிரம் வாம்மா!’ என்று கூட்டிட்டு போனாங்க! அவங்க சென்னையில இல்லைன்னு நினைக்கிறேன்.” என்றான்.

 

விக்ரம் “கன்னியாகுமரியா!” என்றுவிட்டு யோசனையுடன் திரும்பி நடக்க எதானித்தான். அபினவ் “ஸார்!” என்று அழைத்து “எனக்கு கன்னியாகுமரில பிரெண்ட் இருக்காங்க! பவித்ரா மேம் ஃபோட்டோ இருக்கா விசாரிக்க சொல்கிறேன்.” என்றான்.

 

அவசரமாக.. முன்பு அலுவலகத்திற்கு வந்த பொழுது.. அவள் கொடுத்த பயோடேட்டாவில் எடுத்து வைத்திருந்த படத்தை எடுத்து காட்டினான்.

 

உடனே அபினவ் “இவங்க தான் ஸார்! இவங்க கூட தான் அன்னைக்கு பேசினேன்.” என்றான்.

 

விக்ரம் “இதை ஃபோட்டோ‌ எடுத்துக்கோ! நானும் பவித்ராவை தேடப் போறேன். நீயும் தேடு. அப்படி நீ மட்டும் பவித்ராவை கண்டுப்பிடிச்சுட்டா.. என் லைஃப் புல்லா உனக்கு தேங்க்புல்லா இருப்பேன்.” என்றான்.

 

அதற்கு அபினவ் “அதெல்லாம் வேண்டாம் ஸார்! மறுபடியும் பவித்ரா மேம் அந்த ரீசர்ச்சை செய்யச் சொல்லுங்க..” என்றான்.

 

பவித்ராவின் நிலையாக கிஷோர் கூறியது விக்ரமிற்கு நினைவிற்கு வரும், தலையை மட்டும் ஆட்டியவன், தனது செல்பேசி எண்ணை தந்துவிட்டு.. அவனுடையதும் வாங்கிக் கொண்டு திரும்பியும் கூடப் பாராமல் சென்றான்.

 

அபினவ் “இவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா?” என்று காற்றிடம் தான் கேட்டுக் கொண்டிருந்தான். 

 

வேகமாக சென்று மறைந்தவனைப் பார்த்தவாறு அபினவ் தனக்கு தானே பேசிக் கொண்டான்.

 

“இதைக் கேட்டு வேற தெரிஞ்சுக்கணுமா! அதுதான் பார்த்தாலே தெரியுதே.. அவரோட பரபரப்பும், கண்கள்ல தவிப்பும் தான் அப்பட்டமா சொல்லுதே! பவித்ரா மேம் அவங்களோட லவ்வர்!” என்று முடிக்கையில் அவனது முகத்திலும் சின்ன சிரிப்பு!

 

தனது ஆராய்ச்சிக்காக மட்டுமின்றி.. காதலர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று சூளுரைத்துக் கொண்டான்.

 

பவித்ரா கன்னியாகுமரியில் இருக்கிறாள்… என்று கிடைத்த ஒரு செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு விக்ரம் தனியார் துப்பறியும் துறையினரை அணுகி கன்னியாகுமரியில் தேடுதலை தொடங்கினான். வேலை நாட்கள் போக.. மற்ற நாட்களில் கன்னியாகுமரியில் தங்கி அவனும் தேடினான். அபினவ்வையும் தொடர்பு கொண்டு பவித்ராவை பற்றிக் கேட்க மறக்கவில்லை.

 

இவ்வாறு இரு மாதங்கள் சென்ற நிலையில் முக்கியமான தொழில்  தொடர்பு சந்திப்பை முடித்துவிட்டு ஹாலை விட்டு வெளியே வந்ததும்.. கிஷோர் “ஸார் அபினவ் ஃபோன் போட்டிருந்தாங்க! நீங்க மீட்டிங்கில் இருப்பதாக கூறியதும்.. முடிச்சுட்டு வந்ததும் உடனே ஃபோன் போடச் சொன்னாங்க..” என்றான்.

 

உடனே விக்ரம் சிறு பரபரப்புடன் அபினவ்வை அழைத்தான். அவனது உள்ளுணர்வு பொய்யுரைக்கவில்லை. அழைப்பை ஏற்றதும்.. அபினவ் “ஸார் பவித்ராவை கண்டுப்பிடிச்சுட்டாங்களாம்.” என்று கத்தினான்.

 

விக்ரம் அப்படியே தோய்ந்தவாறு அமர்ந்துவிட்டான். அவனது மனதில் அப்படியொரு நிம்மதி!

 

அபினவ் “நான் நேத்து தான்.. அங்கிருந்து வந்தேன் ஸார்! இதோ இப்போ ட்ரெயின் புடிக்க போறேன்” என்றான்.

 

விக்ரம் “நான் இப்போ மதுரைக்கு பிளைட் புடிச்சு போய்.. அங்கிருந்து காரில் போக போறேன். என் கூட வா!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான். பன்னிரெண்டு மணியளவில் புறப்பட்டவர்கள்.. மாலை நான்கு மணியளவில் கன்னியாகுமரியை அடைந்தார்கள். அங்கு அபினவ்வின் நண்பன் குறிப்பிட்ட இடத்திற்கு காரில் விரைந்தார்கள். 

 

கடற்கரை சாலையில் அவர்களது கார் பயணித்தது. ஓரிடத்தில் அபினவ்வின் நண்பன்.. நின்றுக் கொண்டு கையை ஆட்டி காரை நிறுத்த கூறினான். 

 

கார் நின்றதும் வேகமாக இறங்கிய விக்ரமிடம் வந்தவன்.. ஒரு திசையை பார்த்து.. கை நீட்டினான். அங்கு பார்த்த விக்ரமிற்கு திக்கென்றது.

 

ஏனெனில் கடலலைகள் உயரமாய் பாய்ந்து வந்துக் கொண்டிருக்க.. சற்று தள்ளியிருந்த பாறை ஒன்றில் பவித்ரா கடலை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

 

மெல்ல தனது நண்பனின் புறம் சரிந்த அபினவ் குழப்பத்துடன் “டேய் நல்லா விசாரிச்சியா! இவங்க தான் பவித்ராவா!” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

 

ஏனெனில் பவித்ரா தனிமையில் அமர்ந்துக் கொண்டு சைகை மொழியில் பேசிக் கொண்டிருந்தாள்.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 5

விக்ரம் ‘பவித்ரா’ என்று அழைத்ததும்.. திடுக்கிட்ட பவித்ரா அசையாது அமர்ந்துவிட்டாள். ஆனால் திரும்பிப் பார்க்கவில்லை. விக்ரம் மீண்டும் ‘பவித்ரா’ என்று அழைக்கவும், அப்பொழுதும் திரும்பிப் பார்க்காமல் இறுக்கமாக காதுகளை கரங்களால் மூடிக் கொண்டாள்.

 

விக்ரம் ‘பவித்ரா’ என்று அழைத்தவாறு முன்னே வரவும், பவித்ரா “அம்மா!” என்று கத்தினாள்.

 

அப்பொழுது “பவி! உன்னை நிஜமாலுமே யாரோ கூப்பிடராங்க..” என்று பக்கவாட்டில் இருந்து குரல் கேட்கவும், விக்ரம் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு பெண்மணி நின்றிருப்பதை அப்பொழுது தான் கவனித்தான். அவர் பவித்ராவின் அன்னை என்று தெரிந்தது.

 

பவித்ரா “அம்மா!” என்று கத்தவும், அதற்குள் அவளுக்கு அருகே சென்றிருந்தவர், அவளது கரங்களை அகற்றி “பவி! இங்கே என்னைப் பார்! இவங்களை உனக்கு தெரியுமா! ஞாபகம் இருக்கா! உன்னை அடையாளம் தெரிந்து கூப்பிடராங்க?” என்று கேட்டார்.

 

மெல்ல திரும்பிப் பார்த்த பவித்ரா.. திகைப்புடன் விக்ரமின் மீது இருந்து பார்வை எடுக்காது.. பாறையில் இருந்து இறங்கியவள் அவனை நோக்கி நடந்து வந்தாள்.

 

பவித்ராவின் பார்வையின் அர்த்தம் விக்ரமிற்கு புரியவில்லை. பவித்ரா தன்னை அடையாளம் கண்டுக் கொண்டாளா! அல்லது நினைவுப்படுத்த முயல்கிறாளா! அல்லது தன்னைச் சுத்தமாக நினைவில்லையா! என்று பல்வேறு கேள்விகளுடன் அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

 

அவனுக்கு அருகில் வந்த பவித்ரா “வி.. வி.. விக்ரம்!” என்று மட்டும் கூறினாள். அப்பொழுது அவளுக்கு அருகில் நின்றிருந்த பவித்ராவின் அன்னை கல்பனா “தம்பி நீங்க தான் விக்ரமா!?” என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக கேட்டார்.

 

அப்பொழுது பவித்ரா திடுமென அங்கிருந்து ஒட ஆரம்பித்தாள். கல்பனா “பவிமா! நில்லு! என்னை விட்டு போக மாட்டேன்னு பிராமிஸ் செய்திருக்க இல்ல!” என்று கத்தியவர், விக்ரமிடம் திரும்பி “தம்பி அவளைப் பிடிங்க! எங்கே போகிறோம் என்றுத் தெரியாமல் அவ ஓடிட்டே இருப்பா! ப்ளீஸ் அவளைப் பிடிங்க..” என்று கதறவும், திகைப்புடன் விக்ரம் பவித்ராவின் பின் ஓடினான்.

 

“பவித்ரா நில்லு! பவித்ரா!” என்று அழைத்தவாறு பின்னால் ஓடியவன், விரைவிலேயே பிடித்து விடவும்.. பவித்ரா மூச்சு வாங்கியவாறு மண்டியிட்டு தலைகுனிந்து அமர்ந்துவிட்டாள்.

 

அவளது முன் மண்டியிட்டு  அமர்ந்த விக்ரம் தயக்கத்துடன் ஒரு விரலாம் அவளது வதனம் பற்றி நிமிர்த்தி அவளது முகத்தைப் பார்த்தவன், திடுக்கிட்டான். ஏனெனில் அவளது கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தன.

 

விக்ரம் அதிர்ச்சியுடன் அவளது கண்ணீரை துடைத்து விட எதானிக்கவும், அந்த கரத்தை தட்டிவிட்ட பவித்ரா அவனுக்கு முகம் காட்டாது.. வேற பக்கம் திரும்பிக் கொண்டாள்.

 

பின் மெல்ல “எதுக்கு விக்ரம் இங்கே வந்தே! நீ என்னை மறுபடியும் பார்த்திருக்க கூடாது. எனக்கு வேற வழித் தெரியலை விக்ரம்! அப்போ அது சரியா தெரிஞ்சுது. இப்போ தப்பா தெரியுது. ப்ளீஸ் என்னை மன்னிச்சுரு! இங்கே இருந்து போயிரு! நான் ஏதேதோ பேசுவதற்கு முன் இங்கே இருந்து போயிரு! எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க! ஆனா எனக்கு சரியாக தான் பேசர மாதிரி இருக்கு! எல்லாரும் பைத்தியம் என்று சொல்லும் அந்த பவித்ராவை நீ பார்க்க வேண்டாம். உனக்கு துரோகம் பண்ணியதுக்கு தான்.. இந்த தண்டனை போல! ப்ளீஸ் விக்ரம் என் மன்னிப்பை ஏத்துக்கிட்டு.. இங்கே இருந்து போயிரு..” என்று முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

விக்ரம் “பவித்ரா! அப்போ உன் மேலே கோபம் வந்தது உண்மை தான்! ஆனா அந்த கோபம் இப்போ இல்லை. நீ எப்படியிருக்கே? ஒருவேளை ஏன் இப்படியிருக்கே என்று கேட்கணுமோ! நான் உன்னைப் பற்றி என்னனென்னவோ கேள்விப்பட்டேனே? என்னாச்சு பவி!” என்று கேட்டான்.

 

அழுதுக் கொண்டிருந்தவள் அழுகையை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

 

“என் மேலே கோபம் இல்லையா! அப்போ மறுபடியும் என்னை அங்கே அனுப்புவியா! இந்த முறை யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். உன்னை லவ் செய்யறேன்.” என்றாள்.

 

விக்ரம் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்கையில் அங்கு வந்த பவித்ராவின் அன்னை “பவி!” என்று ஓங்கிய குரலில் அவளை அடக்கினார்.

 

“இந்த மாதிரி பேசாதேன்னு எவ்வளவு தரம் சொல்வது? நீ அங்கே பார்த்தது எல்லாம் பொய்டி!” என்றவரின் குரல் தழுதழுத்தது.

 

விக்ரம் “ஆன்ட்டி இங்கே என்ன நடக்குது? பவித்ரா என்ன சொல்றா! அவளைப் பற்றிக் கேள்விப்பட்டதை வச்சு பார்த்தா.. அவ பேசினது புரிந்தும் புரியாமலும் இருக்கு..” என்று கேட்டவனின் குரலும் தவித்தது.

 

விக்ரம் கேட்டதிற்கு பதிலளிக்க முற்பட்ட கல்பனாவை முந்தி கொண்டு பவித்ரா பேச தொடங்கினாள்.

 

“எனக்கு என்ன ஆச்சா! எல்லாரும் என்னை பைத்தியம் என்றுச் சொல்றாங்க! நான் பைத்தியம் ஆகிட்டு வரேன்னா.. இல்லை என்னை பைத்தியம் ஆக்கிட்டாங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்வது உண்மை! என் கூட வந்தவங்க மாயமா தான் மறைஞ்சு போனாங்க! அப்பறம் குமரி கண்டம் மூழ்கினாலும்.. அதுல இருக்கிற மாந்தர்கள்.. இன்னும் கடலுக்கு அடியில் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க! நான் அவங்களைப் பார்த்தேன். இப்போ கூடப் பேசினேன். ஆனா இதெல்லாம் என் பிரம்மை என்று சொல்றாங்க! அதுல தான் எனக்கு குழப்பமா இருக்கு!” என்று சிகைக்குள் கரங்களை விட்டவள், மண்டியிட்டு அமர்ந்திருந்தவாறு குனிந்து முகத்தை மணலில் புதைத்தாள்.

 

அதிர்ச்சி மாறாமல் விக்ரம் பார்த்துக் கொண்டிருக்க.. கல்பனா பதறி போய்.. அவளைப்‌ பற்றி நிமிர்த்தி முகத்தில் ஒட்டியிருந்த மணல்களை துடைத்து விட்டார்.

 

“அம்மா!” என்று கல்பனாவின் கழுத்தை பவித்ரா கேவியவாறு கட்டிக் கொள்ளவும், அவளை அணைத்து முதுகை தடவி கொடுத்தார்.

 

இவற்றை அபினவ்வும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

பிறகு விக்ரமை பார்த்த கல்பனா “உங்களைப் பற்றியும் பவித்ரா சொல்லியிருக்கா! ஒரு வகையில் உங்க மேலே எனக்கு கோபம் தான் தம்பி! என்‌ மகள் இப்படி ஆனதுக்கு நீங்க தான் காரணம்!” என்று அவனைக் குற்றம் சாட்டவும், முதலிலேயே அதிர்ச்சியில் இருந்த விக்ரம் மேலும் அதிர்ந்தவனாய் அவரைப் பார்த்தான்.

 

கல்பனா “உங்க காதலை காட்டுகிறேன் என்று‌ இவளை கடலுக்குள் அனுப்பாமல் இருந்திருந்தா.. என் மக இப்படியாகிருக்க மாட்டா!” என்றார்.

 

விக்ரமிற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. மேலும் தவிப்புடன் பார்க்கவும், கல்பனா என்ன நினைத்தாரா!

 

“இன்னும் என் பொண்ணு மேலே பிரியம் இருக்கு என்றால்.. அவளுக்கு என்ன ஆச்சு என்று தெரிந்துக் கொள்வதில் தவிப்பு இருக்கு என்றால்.. இந்த அட்ரஸில் இருக்கிற டாக்டர் கிட்டப் போய் கேளுங்க! அவருக்கு நான் ஃபோன் போட்டு உங்க கிட்ட எல்லா விசயமும் சொல்லச் சொல்றேன்.” என்று ஒரு கரத்தால் பவித்ராவை அணைத்தபடி.. மறுகரத்தால் தோளில் மாட்டியிருந்த பையில் இருந்து கார்ட் ஒன்றை எடுத்து நீட்டினார்.

 

விக்ரம் அதை வாங்கிப் படித்து பார்த்தான்.

 

‘டாக்டர் கைலாஷ், மனோதத்துவ நிபுணர்’ என்று இருந்தது. அதன் கீழ் முகவரியும் இருந்தது.

 

கல்பனா “அவர் கூறியதை நீங்க ஏத்துக்கறீங்க என்றால் மட்டும்.. எங்க வீட்டுக்கு வாங்க!” என்றுவிட்டு பவித்ராவுடன் செல்ல திரும்பினார்.

 

விக்ரம் அவசரமாக “ஆன்ட்டி! நான் இப்போ பவித்ரா கிட்டப் பேசணும்.” என்றான்.

 

அதற்கு கல்பனா “ஸாரி தம்பி! நீங்க டாக்டர் கிட்டப் பேசிட்டு அப்பறம் வந்து பவித்ரா கிட்டப் பேசினா.. அவளை இப்படி‌ அதிர்ச்சியா பார்க்கிற உங்க கண்ணோட்டம் மாறும். அதனால் நாங்க இப்போ கிளம்புகிறோம்.” என்றார்.

 

உடனே பவித்ரா “ஆமா! அதுக்கு பிறகு பாவமா பார்ப்பீங்க!” என்றாள்.

 

கல்பனா “ஏன்மா! இப்படிப் பேசிக் கொல்றே!” என்று கண்கள் கலங்க கேட்டார்.

 

அப்பொழுது விக்ரம் சட்டென்று முன்னே வந்து பவித்ராவின் கரம் பற்றி தன் பக்கம் இழுத்து “அவ மேலே இருந்த தப்பான கண்ணோட்டம் தவறு என்று தெரிந்த பிறகு தான்.. அவளைத் தேடி வந்தேன். ஆனா அப்பொழுதே ஆராயாம விட்டது என் தப்பு தான்! கொரோனா டைம் என்கிறதாலே நான் இலண்டனில் மாட்டிக்கிட்டது, என் அப்பா இறந்தது… பிஸினஸில் லாஸ் என்று எல்லாம் சேர்ந்து.. எனக்கு ஆராய டைம் இல்லாம போச்சு! அவளோட குற்றத்தை மறைக்க நடிக்கிற என்றுக் கூடச் சொன்னேன். ஆனா இப்போ முழு தப்பையும் என் மேலே ஏத்துக்கிறேன். அவளையும் தான் ஏத்துக்க வந்திருக்கேன். மற்றபடி.. பவித்ரா இப்படிக் குழப்பத்தோட இருக்கிறதைப் பார்த்து எனக்கு அவ மேலே எந்த வேறுபாடும் வரலை.  அவ என்கிட்ட மன்னிப்பு கேட்டா.. ஆனா நான்தான் அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும். நான் இங்கே வரும் போதே.. அவளோட நிலைமை பற்றி எனக்கு தெரியும். என்னோட பயமே.. அவளுக்கு என்னை அடையாளம் தெரியுமா தெரியாதா என்பது தான்! ஆனா என்னைப் பார்த்ததுமே.. அவளுக்கு கொஞ்சம் கூடக் குழப்பம் இல்லாம என்னை அடையாளம் கண்டுக் கொண்ட போது.. அவ்வளவு சந்தோஷப்பட்டேன். மற்றபடி.. பவித்ரா இப்படி இருப்பதற்கான காரணம் தெரிந்த பிறகு தான் கரிசனம் வரும் என்றில்லை ஆன்ட்டி! ஸாரி‌ ஆன்ட்டி உங்களுக்கு எதிரா பேசணும் என்றில்லை. என் காதலை நான்தான் சொல்லணும்.” என்றுவிட்டு பவித்ராவை பார்த்தான்.

 

அவளோ அவனது மீதிருந்து பார்வையை எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

 

அவளைப் பார்த்த விக்ரம் “ஸாரி பவித்ரா! ரொம்ப லேட்டா வந்துட்டேன். நான் டாக்டரை பார்க்கிறதுக்கு முன்னாடி.. பவித்ரா கிட்டப் பேச விரும்பறேன். அவ மனசுல என்ன விசயங்கள் இருக்கு! எது குழப்புகிறது! என்னவெல்லாம் அவளுக்கு தோன்றுகிறது! எது உண்மை‌ என்று‌ அவள் வாய்மொழியாக கேட்க விரும்புகிறேன். அப்பறம் கண்டிப்பாக டாக்டரை பார்க்கிறேன் ஆன்ட்டி!” என்றுவிட்டு.. பற்றிய கையை விடாமல் பிடித்துக் கொண்டு.. அவளை சற்று தள்ளியிருந்த பாறை திட்டிடம் அழைத்து சென்றான்.

 

கல்பனா திகைப்பும் மகிழ்ச்சியுமாக பார்த்துக் கொண்டிருக்கவும், அவருக்கு அருகில் நின்றிருந்த அபினவ் கடல் பிண்ணனியில் தெரிந்த அவர்களைப் பார்த்து “இந்த கடல்ல மட்டுமில்ல..‌ பவித்ரா மேம் கிட்டயும் பல சீக்ரெட்ஸ் இருக்கும் போல!” என்று பெருமூச்சை இழுத்து விட்டான்.

 

பாறையில் பவித்ராவை அமர வைத்துவிட்டு.. அவளுக்கு எதிரே நின்றுக் கொண்ட விக்ரம் அவளை நன்றாக பார்த்தான். ஆனால் பவித்ரா தான் அமர்ந்திருந்த பாறையை தடவிப் பார்த்துக் கொண்டாள். பின் அவனைப் பார்த்து சிரித்து “நான் இப்போ எங்கே உட்கார்ந்திருக்கேன் தெரியுமா விக்ரம்! இது ஒரு அரியணை மாதிரி சிம்மாசனம் என்றுக் கூடச் சொல்லலாம். அரசர்கள் தான் என்றில்லை. தலைவர்கள் இதுல அமர்ந்து தான் கமெண்ட் கொடுப்பாங்க! இது குமரி கண்டத்தை சேர்ந்தது தான்..” என்றாள்.

 

விக்ரம் “அப்படியா!” என்று மட்டும் கேட்டான்.

 

அதைக் கேட்டு சிரித்த பவித்ரா “பைத்தியம் உளறுது என்று நினைச்சுட்டியா..” என்று கேட்டாள்.

 

உடனே பதறிப் போய் விக்ரம் “அப்படியில்லை பவி! நீ என்ன சொல்ல வரேன்னு..” என்றவன், கண்களை இறுக்க மூடி திறந்துவிட்டு “பைத்தியம் என்று நினைக்கலை பவி! ஆனா உனக்கு தோன்றியதை சொல்கிறே.. அதை மறுக்காம ஆமா அப்படிதான் என்றுச் சொல்லணும் என்று சொல்லிட்டேன். அப்படிச் சொன்னா சந்தோஷப்படுவேன்னு நினைச்சுட்டேன். ஸாரி பவி! சொல்லு.. இந்த பாறையை குமரி கண்டம் இருந்த காலத்தில் இருந்த சிம்மாசனம் என்று எப்படிச் சொல்றே! உட்கார மாதிரியே ஷேப்பே இல்லையே!” என்று விபரம் கேட்டான்.

 

அதற்கு பவித்ரா “என்னது உட்கார மாதிரி ஷேப் இல்லையா! கொஞ்சம் தள்ளி நின்னு நல்லா பாரு..” என்றுவிட்டு அவள் நன்றாக சாய்ந்தமர்ந்து.. காலுக்கு அடியில் சிறு திண்டு போன்று இருந்தவற்றில் ஒரு காலை வைத்துவிட்டு.. இரு கைகளையும் பக்கவாட்டில் உயரமாக இருந்தவற்றில் வைத்து அமர்ந்தாள்.

 

ஒரு நிமிடம் விக்ரமிற்கு தனது கண்களால் நம்ப முடியவில்லை. தான் காண்பது நிஜமா! இல்லை.. வெறும் பிரம்மையா! என்று இருந்தது. பவித்ரா ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருந்தது. 

 

இதுதான் பவித்ராவின் நிலைமையோ!

 

இயற்கையாக இருப்பதை அவள் மிகவும் நேசித்ததுடன் தொடர்பு கொண்டு நினைக்கிறாளோ!

 

தலையைச் சிலுப்பிய விக்ரம் அவளிடமே கேட்டான்.

 

“பவி! ஒருவேளை இந்த பாறை அந்த வடிவில் இருக்கலாம். வானத்தில் முயல் மாதிரி குதிரை மாதிரி தோற்றங்களுடன் மேகங்கள் நகர்வதைப் பார்க்கிறோம் தானே.. அந்த மாதிரி இதுவும் இருக்கலாம். இதோட இயற்கையான அமைப்பு உனக்கு சிம்மாசனம் போல் தோன்றலாம்.” என்றான்.

 

அதற்கு பவித்ரா “அப்படியா! இந்த பாறை இப்படித்தான் தோன்றியிருக்கு என்று நினைக்கறீயா!” என்று சிரித்தாள்.

 

விக்ரமிற்கு தலையில் கொட்டிக் கொள்ளலாம் போன்று இருந்தது. 

 

பின்னே பாறை இப்படியே தோன்றுமா!

 

“பெரிய மலைகளின் துகள் தான் இந்த பாறைகள் என்றளவில் தெரியும் பவி!”

 

“எஸ்! ஆனா கொஞ்சம் நினைச்சு பாரு விக்ரம்! இது கடற்கரை! இங்கே எப்படி இப்படி பாறைகள் வரும்.. அந்த விவேகானந்தர் பாறையும் எப்படி வரும்?”

 

“பெரிய கடலலைகள் அடிச்சு கொண்டு வரும்.” என்று கூறிக் கொண்டே வந்தவன் “பவி! வெயிட் எ மினிட்! அப்போ இதுவும் அப்படி‌ அடித்து வரப்பட்டது என்று சொல்றீயா! அப்போ அந்த விவேகானந்தர் பாறை இருக்கிற இடத்தில் மலை இருக்கலாம் என்று சொல்ல வரீயா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

 

பவி பதில் அளிக்காமல் முறுவலுடன் பார்க்கவும், விக்ரமிற்கு அந்த இடமே வேறாக தெரிந்தது. 

 

ஒரு நிமிடம் இதைப் பற்றி பேசியதற்கே தன்னை அப்படி இருக்குமோ என்று‌ நினைக்க வைத்துவிட்டது போன்று.. இந்த ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட பவித்ராவிற்கும் அவ்வாறு தான் தோன்றியிருக்குமோ! அதை தான் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தவறாக கூறுகிறார்களோ என்று விக்ரமிற்கு தோன்றியது.

 

“சொல்லு பவி! நீ ஆராய்ச்சிக்கு சென்ற கடலில் அன்னைக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான்.

 

பவித்ரா கூற ஆரம்பித்தாள்.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 6

 

விக்ரம் “சொல்லு பவித்ரா! இன்டியன் ஒசன்ல போன போது.. திடீர்னு என்னாச்சு? உன் கூட வந்தவங்க எங்கே? உனக்கு என்னாச்சு?” என்று கேட்டான்.

 

பவித்ரா கடலை வெறித்து பார்த்தவாறு கூறத் தொடங்கினாள்.

 

“இந்த இந்திய பெருங்கடல்ல முதன் முதலா பயணித்த அந்த அனுபத்தை என்னால மறக்க முடியாது. இன்னும் நாலு நாளில்.. மையப்பகுதி அதாவது எப்படி குமரி கண்டத்தோட ஒரு பகுதி இந்தியாவோட இணைந்திருந்தாதோ.. அதே போல.. குமரி கண்டத்தோட மற்ற இரு பகுதிகளில் ஒரு பகுதி மடகாஸ்கரோடும்.. மற்றொரு பகுதி ஆஸ்திரேலியா கூடவும் இணைந்திருந்தது. இப்படி மூன்று பகுதிகளும்.. இணைந்திருந்த இருக்கிற நிலப்பரப்பளவில் மையப்பகுதியாக கணக்கிட இடத்திற்கு செல்ல நினைத்தோம். நாலு நாட்கள் என்பது மூன்று நாட்கள் ஆகி.. இரண்டு நாட்கள் ஆகி.. ஒரு நாள் ஆச்சு! அப்போ.. நடுகடலில் ஒரு கப்பலை பார்த்தோம். அந்த கப்பல்ல ஹெல்ப் வேண்டும் என்பதற்கான சிவப்பு கொடி ஏத்தியிருந்தாங்க! உடனே அங்கே போனோம். அந்த கப்பல்ல மொத்தம் நான்கு பேர் தான் இருந்தாங்க! அவங்க.. கடலராய்ச்சிக்கு வந்தவங்க என்று சொன்னாங்க! ஆனால் வழியில் அவங்களோட கப்பல் டேமேஜ் ஆகிருச்சு.. அதனால் கடல் துறையினரை தொடர்பு கொள்ள முடியலை என்றும்.. இரண்டு நாளா.. இந்த இடத்தில் தான் கப்பல் நின்னுட்டு இருக்கு என்று சொல்லி ஹெல்ப் கேட்டாங்க! நாங்க போயிட்டு இருந்த கப்பலோட கேப்டன்! அவங்க வருவதற்கு சம்மதம் தெரிவிச்சாங்க! அவங்க எல்லாரும் ஏறிக் கொண்டதும்.. மறுபடியும் மையப்பகுதியை நோக்கி எங்க கப்பல் பயணித்தது.” 

 

“டி டே என்று சொல்வாங்க! அதாவது நாங்க மையப்பகுதிக்கு வந்துவிட்டோம்.. என்று கேப்டன் அறிவிச்சார். என்னால மகிழ்ச்சி தாங்க முடியலை. குமரி கண்டத்தோட மையப்பகுதியில் தரைப் பகுதியில் நின்னுட்டு இருக்கிற மாதிரி ஃபீல் ஆச்சு! ஆளை அடிக்கிற காத்து வேற.. சில்லுன்னு ஒரு உணர்வை கொடுத்துச்சு! அப்போ கப்பல் ஒரு ஆட்டம் போட்டுச்சு! அதில் தடுமாறி விழுந்தது தான் ஞாபகம் இருக்கு! மெல்ல எழுந்து பார்த்தா.. அந்த கப்பல்ல யாருமே இல்லை. எல்லாரும் கப்பல் ஆடியதில் விழுந்துட்டாங்களோனு எட்டிப் பார்த்தேன். யாருமே இல்லை. கப்பல்ல வந்தவங்க எல்லாருக்கும் நீச்சல் தெரியும். யாரோட தலையை கூட கண்ணுக்கு எட்டிய வரை காணோம். நிமிஷத்துல எல்லாரும் எப்படி மாயமாக போனாங்க.. என்று தெரியலை. எனக்கு ரொம்ப பயமா போச்சு! என் கூட வந்தவங்களைக் கத்தி கூப்பிட்டு பார்த்தேன். என்னோட சத்தத்தை விட காற்றோட சத்தம் தான் அதிகமா இருந்துச்சு!” என்றாள்.

 

விக்ரம் குழப்பத்துடன் பார்க்கவும், பவித்ரா “நீயும் நான் சொன்னதை நம்பலை தானே!” என்று சிறு ஏமாற்றத்துடன் கேட்டாள்.

 

அதற்கு விக்ரம் அவசரமாக “நானும் அவங்க எல்லாம் எப்படி மாயமா போனாங்க என்று தான் யோசிச்சேன் பவி!” என்றான்.

 

பின் அவள் அருகே வந்து.. காற்றில் ஆடிய அவளது முன்னுச்சி முடிக்கற்றை காதில் சொருகியவன், சிறு யோசனையுடன் “அப்போ அதற்கு பிறகு.. கடலதிகாரிகள் வந்து உன்னை மீட்கும் வரை.. அந்த கப்பல்ல தனியாக தான் இருந்தியா.. அதாவது டுவின்டி சிக்ஸ் டேஸ்!” என்றுக் கேட்கும் போதே.. அவனது நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி தோன்றியது.

 

விக்ரம் கேட்டதிற்கு மறுப்பாக தலையை ஆட்டிய பவித்ரா “நான் நிறையா நேரம் தனியாக தான் இருந்தேன் என்றாலும்.. குமரி கண்டத்தில வாழ்ந்துட்டு இருந்த மாந்தர்கள் எப்போதாவது வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடிருவாங்க..” என்றாள்.

 

தற்பொழுது விக்ரமின் முகத்தில் நன்றாகவே குழப்பம் காணப்பட்டது.

 

இம்முறை வெளிப்படையாக கேட்டான்.

 

“என்ன பவி சொல்றே! குமரி கண்டம் மூழ்கி பல நூற்றாண்டுகள் இருக்குமா! மனிதர்கள் நூறு வயசுக்கு மேலே வாழ்வதே அரிதாக இருக்கும் போது.. பல நூற்றாண்டுக்கு முன் மூழ்கிப் போய் இறந்தவங்க மட்டும் எப்படியிருப்பாங்க?” என்று அவளைத் தெளிவுப்படுத்த முயன்றான்.

 

பவித்ரா “இருப்பாங்களே விக்ரம்! மண்ணுக்கு அடியில பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களோட சடலங்கள் சிலது மக்காமல் சதைகளோட அப்படியே கிடைச்சுருக்கு என்று நீ கேள்விப்பட்டிருக்க தானே! அதை இன்னும் பிரிஷர்லையும் சில கெமிக்கலையும் வச்சு தானே பாதுகாக்கிறாங்க! அதே மாதிரி.. சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் சில கடல்ல மூழ்கினாலும்.. அவங்களால் அங்கே வாழ முடிந்திருந்தால்!” என்கவும், விக்ரம் தனது பொறுமையை இழந்தான்.

 

“பவித்ரா! நீ படிச்சவ தானே! கொஞ்சம் நீயே நல்லா யோசிச்சு பாரு! மனிதன் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் வேணும். நீரில் இருக்கிற ஆக்ஸிஜனை பிரிச்சு சுவாசிக்கிற பங்ஷன் நம்ம மனித உடலுக்கு இல்லை.” என்று விளக்க முயன்றான்.

 

அதற்கு பவித்ரா “இந்த பாறை மட்டுமில்ல விக்ரம்! மனித உடம்பும் பல்வேறு சீதோஷ்ண நிலை.. பல்வேறு இயற்கை அழிவுகளை தாண்டி வந்திருக்கு! கடின பாறையே இந்த மாதிரி ஆகும் போது.. சதைகளால் ஆனா உடல் மாறியிருக்காதா! அவங்க பார்ப்பதற்கு நார்மலான மனிதர்கள் உருவம் கொண்டிருக்கவில்லை. நீரிலேயே இருக்கிறதாலே பச்சை பாசி படிந்த மாதிரி இருந்தாங்க..” என்றாள்.

 

விக்ரம் சிறு பெருமூச்சுடன் அவளைப் பார்க்கவும்.. பவித்ராவின் முகத்தில் குழப்பமும்.. தவிப்பும் தோன்றியது. அவளது விழிகள் எங்கோ பார்த்தன.

 

“நான் பார்த்ததை நம்ப வைக்கிறதுக்காக ஏதேதோ பேசுகிற மாதிரி இருக்கு தானே! இப்படி நீங்க நான் பேசுவதை நம்ப முடியாமல் பார்க்கும் போது.. நான் பார்த்தது என்னோட பிரம்மையா என்று எனக்கே டவுட்டா இருக்கு! இதுக்கே இப்படிப் பார்க்கிறே.. இன்னொரு விசயத்தை சொன்னா.. இன்னும் என்னை சுத்தமா பைத்தியம் என்று சொல்லிடுவீங்க! ஏன்னா அது உண்மை இல்லை. அப்போ நான் சொன்னா எல்லாமே உண்மை இல்லை என்று ஆகிடும் தானே!” என்றாள்.

 

“என்ன பவி!”‌என்று கனிவுடன் கேட்டான்.

 

“நான் போலீஸில் மாட்டின போது.. என்னை விடுவீங்க நீங்க வருவீங்கன்னு நினைச்சேன். அப்பறம் பலமுறை எனக்கு ஒரு மாதிரி குழப்பமா எது உண்மை எது பொய் என்றுத் தெரியாம குழம்பும் போது.. என் அம்மாவும் அப்பாவும் அழத் தான் செய்வாங்க! அந்த டைமில் நீங்க வருவீங்கன்னு நினைச்சேன். ஒருநாள் வந்தீங்க.. ஆனா உடனே போயிட்டிங்க! இந்த மாதிரி.. நான் நினைச்ச போதெல்லாம் உங்க உருவத்தை பார்த்தேன். இப்போ தெரியுது. அது பொய்.. அதுதான் பிரம்மை! ஏன்னா என் கண் முன்னாடி இப்போ நீங்க நின்னுட்டு இருக்கிறது தான் உண்மை! அப்போ நான் குமரி கண்டத்து மாந்தர்களை பார்த்தது பொய்யா! ஏன்னா பல தரம்.. இங்கே வந்த பிறகு கூட அவங்களை நான் பார்த்திருக்கேன். எப்படி உங்களைப் பற்றியே நினைச்சுட்டு இருந்ததாலே.. நீங்க நிஜமாலுமே என் முன்னாடி வந்தது போல இருந்துச்சே! அது போல.. அதுவும் அப்படித்தானா.. இதைத் தான் டாக்டரும் சொன்னார். உங்க கிட்ட சொன்னால் ஆவது நம்புவீங்கன்னு நினைச்சேன். அப்போ அது பொய் தான் போல..” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

அவன் அவன் என்று எதிர்பார்த்தாக கூறியதைக் கேட்டதுமே மனம் உருகி போனவன், கடைசியாக பவித்ரா தன்னையே வருத்தி கொள்ளவும், உடனே அவளை வாரி தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்ட விக்ரம் “பவி! நான் நம்புகிறேன் பவி! நீ பொய் சொல்லுலை. நீ பார்த்தது உண்மை தான்! ஆனா எந்த விசயம் உன்னை இப்படி குழப்பியிருக்கு என்று எனக்கு தெரிந்தாகணும். உன்னோட குழப்பம் தீர்வதற்காக மட்டுமில்லை. விட்ட ஆராய்ச்சியை மறுபடியும் தொடர்வதற்காக நாம் மறுபடியும் இன்டியன் ஓசனுக்கு போகலாம் பவி! நானும் இந்த முறை வருகிறேன்.” என்றான்.

 

அவனது மார்பில் சாய்ந்திருந்தவள் வெடுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. ஆனால் இம்முறை அவை ஆனந்த கண்ணீர்!

 

அதை கட்டை விரலால் மெல்ல துடைத்துவிட்டவன், நிமிர்ந்து பார்த்தான். சற்று தள்ளி அபினவ்வும் கல்பனாவும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவன் நிமிர்ந்து பார்க்கவும், சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டார்கள்.

 

கல்பனா அவனைத் தெரிந்தவன் போல் சுமூகமாக பேசியதிற்கு அர்த்தம் புரிந்தது. பவித்ரா தனது அன்னையிடம் அவனைப் பற்றிக் கூறியிருக்கிறாள். என்ன கூறியிருப்பாள்.. என்று அவரது நிம்மதி கலந்த புன்னகையை வைத்தே அவனால் கணிக்க முடிந்தது. 

 

இந்த இடைப்பட்ட காலத்தில் பவித்ரா தன்னைப் பார்த்ததாக கூறியதை அவனால் தற்பொழுது ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஏனெனில் பவித்ரா அவனுக்கு முன்னால் அவனது கையணைப்பில் இருக்கிறாள். ஆனால் விக்ரமினால் இன்னும் அதை நம்ப முடியவில்லை. ஒருவரை ஒருவர் பாராமல் அவனது காதலுக்கு.. ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. விக்ரமிற்கு சிரிப்பாக இருந்தது.

 

எனவே மெல்லிய முறுவலுடன் விக்ரம் “ஸாரி பவி! நான் வருவேன்னு நீ எதிர்பார்த்துட்டு இருந்திருக்கே! நான் வராம இருந்துட்டேன். உன்னைத் தப்பா நினைச்சுட்டேன். ஐயம் நாட் எ குட் லவ்வர் பவி! சரியான செல்ஃபீஷ்! உனக்கு நடந்தது தெரிந்த பின்பும்.. உனக்கு சப்போர்ட்டா நான் வரலை. உனக்கு என்னாச்சு என்று பார்க்கவும் வரலை. ஆனா எனக்கு ஒரு மாதிரி நெஞ்சில் அழுத்தற மாதிரி இருந்துச்சு பவி! குடிச்சுட்டு நல்லா போதையா இருக்கணும்.. இல்லைன்னா.. இரண்டு நாள்.. தூங்காம வொர்க் செய்தா வரும் அலுப்பில் தான் என்னால் தூங்கவே முடியும். அதுக்கு காதல் தோல்வி.. நீ என்னை ஏமாற்றியது தான் காரணம் என்று தப்பா நினைச்சுட்டேன். ஆனா நான் இப்படி இருந்ததிற்கு காரணம் நீ எனக்கு வேண்டும் என்ற ஏக்கம் தான் என்று எனக்கு இப்போ புரியுது பவி! உன்னை தேடி அலைந்த இத்தனை நாட்கள்.. உன்னைப் பார்க்க முடியுமா என்ற பயம் எல்லாம் இல்லை. கண்டிப்பா உன்னைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருந்ததாலே.. நான் ரொம்ப பிரஷ்ஷா ஃபீல் செய்தேன். பழைய மாதிரி ஆகிட்டேன்னு என் அம்மா கூடச் சொன்னாங்க..” என்று தனது மனதில் உள்ளதை அத்தனையும் கொட்டினான்.

 

பவித்ராவிடம் இருந்து பதிலில்லை. ஆனால் அவனது முகத்தில் இருந்து தனது பார்வையை அகற்றவில்லை.

 

 அவளது தலையை மெல்ல வருடியவன் “இனி எல்லாம் ஒகே பவி! நீ இப்போ அம்மா கூடப் போ! நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்.” என்றான்.

 

பவித்ரா மீண்டும் கப்பல் பயணம் செல்வதை உறுதிப்படுத்தி கொண்ட பின்பே தனது அன்னை கல்பனாவுடன் சென்றாள்.

 

பின் தனது நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த அபினவ்விடம் சென்றவன், அவனுக்கும் அவனது நண்பனுக்கும் நன்றி கூறிக் கொண்டு விடைப்‌ பெற்றான். காரின் கதைவை திறக்க போனவன், நின்று கொண்டிருந்த அபினவ்வை பார்த்து “அபினவ்! நீங்க பவித்ராவோட ரீசர்ச் நோட்ஸிற்கு பெரிய ஃபேன் தானே?” என்று கேட்டான்.

 

“எஸ் ஸார்!” 

 

“அப்போ நீங்க கண்டிப்பா என் கூட வரணும்.” என்றதும்.. எப்பொழுது தன்னை அழைப்பான் என்று காத்திருந்தவன் போல் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டான். அவனையும் அழைத்து கொண்டு.. விக்ரம் மருத்துவரின் வீட்டை நோக்கி சென்றான்.

 

மாலை நெருங்கி கொண்டிருந்த வேளையில் கடற்கரையில் இரம்மியமாக காட்சியளித்தது.

 

அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்த விக்ரமை பார்த்த அபினவ் மெல்ல “பவித்ரா மேம் என்ன சொன்னாங்க? நாம இப்போ எங்கே போயிட்டு இருக்கோம்?” என்று கேட்டான்.

 

ஆனால் விக்ரம் அவனிடம் வேறு கேட்டான்.

 

“குமரி கண்டத்தோட இணைந்திருந்த மற்ற பகுதிகள் மடகாஸ்கரும் ஆஸ்திரேலியாவும் என்று எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க!” 

 

அவனுக்கு பிடித்த விசயத்தைப் பற்றிக் கேட்கவும் அபினவ் ஆர்வத்துடன் “ஆமா ஸார்! ஆஸ்திரேலியால வாழ்கிற பழங்குடி மக்களும்.. மடகாஸ்கரில் வாழ்கிற பழங்குடி மக்களும் பேசற பாஷை பெரும்பாலும் தமிழ் மொழிகள் இருக்கும். அதே மாதிரி.. அவங்க பயன்படுத்தும் பொருட்கள்.. சில பழங்கால முறைகள் அதாவது.. கற்களை அடுக்கி வைத்து.. வேண்டுதல் வைப்பது போன்ற மாதிரியான பழக்கங்கள் அவங்க கிட்டயும் இருக்கு! இப்பவும் நாம பழனி திருப்பதி மாதிரியான மலை கோவில்களுக்கு போனால்.. அந்த மாதிரி மக்கள் வைத்திருப்பதை பார்க்கலாம். அதே மாதிரி.. மடகாஸ்கர்ல லெமூர் என்னும் ஒரு வகை குரங்கு இருக்கு! அது உலகத்துல வேற எங்கேயும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கு! இந்த மாதிரி பல ஒற்றுமைகளை வச்சு.. குமரி கண்டம் என்ற பெரிய பரப்பளவு கொண்ட நிலபரப்பு இருந்திருக்கலாம் என்றும் அது இந்தியா மடகாஸ்கர் ஆஸ்திரேலியாவோட இணைந்த பகுதியாக இருக்கலாம் என்று உறுதிப்படுத்தி இருக்காங்க! அது மட்டுமில்லாமல் உலகத்திலேயே முதன்மையான தமிழ் மொழியும் இங்கே தான் தோன்றியிருக்கு.. மனிதர்களும் இங்கே தான் தோன்றியிருக்கிறான். அந்த முதல் மனிதன் தமிழன் தான் என்று பவித்ரா மேம் கட்டுரையில அடிச்சு கூறியிருக்கிறாங்க!” என்றான்.

 

அபினவ் கூறியதை முழுவதும் கேட்ட விக்ரமிற்கு ஏனோ உடல் முழுவதும் சிலிர்ப்பு தோன்றியது.

 

ஆர்வத்துடன் பேசிய அபினவ் விக்ரம் அமைதியாக இருக்கவும் சோர்ந்தவனாய் மீண்டும் பவித்ராவை பற்றிக் கேட்டான்.

 

“பவித்ரா மேம் ஏன் திடீர்னு அப்படினு ஓடினாங்க? அவங்களுக்கு என்னாச்சு?” 

 

ஆனால் விக்ரம் வேறு கேட்டான்.

 

“கடலுக்குள்ள மனிதர்களால் வாழ முடியுமா?”

 

‘நான் என்ன கேட்டேன்.. இவர் என்ன பதில் சொல்கிறார்.’ என்பது போல்.. விக்ரமை பார்த்த அபினவ் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு “அதுதான் ஸ்பேஸிற்கு போக.. ஸ்பேஸ் கிராஃப்ட் மாதிரி.. கடலுக்குள்ள ஆராய்ச்சி செய்ய நீர்மூழ்கி கப்பல் வந்திருச்சே ஸார்!” 

 

விக்ரம் “நான் அப்படிக் கேட்கலை. மனிதர்களால் இப்போ நிலத்திலே வாழ்வது மாதிரி நீரிலும் வாழ முடியுமா! இயற்கைக்கு தகுந்த மாதிரி.. உயிரினங்களோட உடலமைப்பு படைக்கப்பட்டிருக்கு! ஆனால் நிலத்தில் வாழ்வதற்கு ஏற்ப படைக்கப்பட்ட உடலமைப்புடன் நீரில் வாழ நேரிட்டால்.. அவங்களோட உடலமைப்பு மாறுபடுமா!” என்று கேட்டான்.

 

விக்ரமை விசித்திரமாக பார்த்த அபினவ் திடுமென பரபரப்புற்றவனாய் “பவித்ரா மேம்.. கடலுக்குள்ள வாழ்கிற மனுஷங்களை பார்த்தேன்னு சொன்னாங்களா!” என்று திகைப்புடன் கேட்டான்.

 

விக்ரம் “ம்ம்! அதுக்கு சாத்தியம் இருக்கா என்று கேட்கிறேன்.”

 

“இம்பாஸிபிள்!”

 

“ஆனால் பவித்ரா சொல்வது உண்மையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீ?!” என்று கேட்கவும், ஒரு நிமிடம் குழப்பமும் திகைப்புமாக விக்ரமை பார்த்த அபினவ் அடுத்த நிமிடமே.. “நம்புவேன் ஸார்! அட்லீஸ்ட் அவங்க எதை அப்படிச் சொல்றாங்க என்றாவது பார்க்க நினைப்பேன்.” என்றான்.

 

அதைக் கேட்டு முறுவலித்த விக்ரம் “குட்! டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்றேன். ரெடியா இரு! குமரி கண்டம் பற்றிய பவித்ராவோட ஆராய்ச்சிக்கு நீ டீம் அப் செய்ய போறே!” என்றான்.

 

அமர்ந்துக் கொண்டிருந்த காரிலேயே அபினவ் “வாவ்!” என்று துள்ளி குதித்தான்.

 

பின் விக்ரம் “அதுக்கு முன்னாடி பவித்ராவிற்கு என்னாச்சு என்று நீ தெரிந்துக் கொள்ளணும்.” என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்.. நடந்தவற்றையும் தற்பொழுது பவித்ரா கூறியவற்றையும் கூறினான்.

 

அபினவ் திகைத்து போய் அமர்ந்திருந்தான்.

 

விக்ரம் மெல்ல “சில பர்ஷனல் மேட்டர்ஸ் தவிர எல்லாம் சொல்லிட்டேன். இப்போ என்ன சொல்றே!” என்று கேட்டான்.

 

அபினவ் “மேம் பல கஷ்டங்களை அனுபவிச்சுருக்காங்க! இன்னும் அனுபவிச்சுட்டு இருக்காங்க..” என்றான்.

 

ஸ்டெரிங்கை பிடித்துக் கொண்டிருந்த விக்ரமின் விரல்கள்.. அவற்றை இறுக்கி பிடித்தன.

 

உறுதி நிறைந்த குரலில் விக்ரம் “இனி அவள் கஷ்டப்பட நான் விட மாட்டேன். பட்ட கஷ்டங்களுக்கும்.. விடை கண்டுப்பிடிப்பேன்.” என்றான்.

 

அபினவ் “ஐயம் வித் யு ஸார்..” என்றான்.

 

பிறகு சுற்றிலும் பார்த்த அபினவ் “நாம் இப்போ.. பவித்ரா மேமோட அம்மா சொன்ன டாக்டர் கிட்டப் போயிட்டு இருக்கோமா?” என்று கேட்டான்.

 

விக்ரம் “பவித்ராவோட மனநிலையை என்னால் கொஞ்சம் கணிக்க முடிகிறது. அதை அவரது வாய் வழியாக கேட்க போகிறேன். என்கிட்ட சொல்ல மறந்த விசயத்தை அவர் கிட்ட சொல்லியிருக்கலாமோ.. அதையும் கேட்கணும்.” என்றான்.

 

அபினவ் “எது ஸார்?”

 

“அவங்க ட்ரவல் செய்த.. கப்பலில் ஏறியவங்க யார்? பெரிய காத்தடிச்சு.. கப்பல் ஆடியதில் விழுந்துட்டு எழுந்த போது.. கப்பலில் யாரும் இல்லைன்னு சொன்னா.. அவள் விழுந்து எழும் நேரத்தில் என்ன நடந்தது? ஒருவேளை அவள் மயக்கம் போட்டு விழுந்து எழுந்தாளோ? அந்த நேரத்தில்.. அவங்க மாயமாய் போகிற அளவிற்கு என்ன நடந்தது? அவள் எத்தனை நேரம் மயக்கத்தில் இருந்தாள்? இதெல்லாம் எனக்கு தெரிய வேண்டும்.” என்று கூறியவனின் முகம் கல்லை போன்று கடினமாக இருந்தது.

 

அபினவ்வின் முகத்திலும் உறுதி தோன்றியது.

 

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்களது கார் மருத்துவரின் கிளினிக்கை சென்றடைந்தது.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 7

மருத்துவரின் கிளினிக்கில் இரு நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கவும், அவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் வரை.. விக்ரமும் அபினவ்வும் காத்திருந்தார்கள். 

 

நோயாளிகள் சென்றதும்.. அவர்களை உள்ளே அழைத்து அமர சொன்ன டாக்டர் கைலாஷ் நேரடியாக விசயத்திற்கு வந்தார்.

 

“கல்பனா மேடம் ஃபோன் போட்டிருந்தாங்க! இதுல விக்ரம் யாரு?” என்றுக் கேட்கவும், விக்ரம் “ஐயம் விக்ரம்!” என்று கரத்தை நீட்டினான்.

 

அவனது கையைப் பற்றிக் குலுக்கிய கைலாஷ் “காங்கிராஜ்லேஷன்ஸ்! பவித்ரா உங்களைப் பற்றி நிறையா சொல்லியிருக்கா என்பதை விட புலம்பியிருக்கா! ரொம்ப வருத்தப்படுவா.. நான் உங்களை கூட்டிட்டு வரட்டுமா.. என்றுக் கேட்டா மறுத்து விடுவா! அவ ட்ரீட்மென்ட்ல இருந்ததாலே ரொம்பவும் வற்புறுத்த மாட்டேன்.” என்றார்.

 

விக்ரமிற்கு மறுபடியும் நெஞ்சில் சுருக்கென்று வலித்தது. அவள் இவ்வாறு அவனை ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டிருக்கையில் அவன் சுயநலமா இருந்துவிட்டதை நினைத்து மீண்டும் வருத்தமுற்றான்.

 

மூச்சை இழுத்துவிட்டு தன்னைச் சரிச் செய்துக் கொண்ட விக்ரம் “இனி பவி இல்லாமல் என் வாழ்க்கை இல்லை டாக்டர்! அவளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய இடத்தில் நானும் எதிரே நின்னுட்டேன். இனி அந்த தப்பு நிகழாது. அவளுக்கு என்னாச்சு டாக்டர்! ஏன் இப்படி இருக்கா? எனக்கு தெளிவாக தான் பேசற மாதிரி இருக்கு! அவ பேசற விசயங்கள் தான் குழம்ப வைக்குது. குழப்பதோட பார்க்கிற நம்மைப் பார்த்து அவளும் குழம்புகிறாள் என்று நினைக்கிறேன்.” என்றான்.

 

விக்ரம் கூறியதைக் கேட்ட கைலாஷ் மகிழ்ச்சியுடன் எழுந்து நின்று அவனது கரத்தைப் பற்றி மீண்டும் குலுக்கினார்.

 

விக்ரமும் அபினவ்வும் அவரது செய்கைக்கு அர்த்தம் புரியாமல் பார்க்கவும், தாமோதரன் “நீங்க ஒருத்தங்க தான் பவிக்கு என்னாச்சு.. என்று கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க! நிஜமா அவ ரொம்ப லக்கி தான்! ஆனா.. எனக்கு சின்ன வருத்தம்.. நீங்க முதலிலேயே வந்திருந்தா.. பவித்ரா இந்த நிலைக்கே போயிருக்க மாட்டா!” என்றார்.

 

விக்ரமின் முகம் குற்றவுணர்ச்சியில் குன்றவும், கைலாஷ் சுதாரித்தவராய் “சரிப் போனது போனது தான்.. அதை நினைக்க வேண்டாம் விடுங்க! இனி நடப்பவை நல்லதா நடந்து.. பழைய தவறுகளை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்யலாம்.” என்று சிரித்தவாறு அமர்ந்தவர், “சொல்லுங்க விக்ரம்! பவித்ரா கூட நீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தீங்கன்னு கல்பனா மேம் சொன்னாங்க! பவித்ரா என்ன சொன்னாங்க?” என்று கேட்டார்.

 

விக்ரம் பவித்ராவின் வாயிலாக தான் கேட்டதை அனைத்தும் கூறினான்.

 

கைலாஷ் “எஸ்! நான் மூணு வருஷத்துக்கு முன்னே இருந்து தான் பவித்ராவிற்கு ட்ரீட்மென்ட் ஆரம்பித்தேன். அப்போ மட்டுமில்லை. அவளை போலீஸார் விசாரிச்ச போது இருந்து அவளோட கருத்தில் அவள் மாறவே இல்லை. ரொம்ப ஸ்டென்ராங்கா இருக்கா! அதனால் எனக்கும் அவங்க கூறுவது உண்மை போல தான் தெரியுது. அவங்க பார்த்ததா.. சொன்ன அடையாளங்களை வச்சு நான் ரீசர்ச் பண்ணியதில்.. அவங்க மேபி ஒருவகையான ஆழ்கடல் மீனை பார்த்திருக்கலாம் என்றுத் தோன்றுகிறது. அதைத் தான் மெர்மைடு என்று மாய கதைகளில் சொல்வாங்க!” என்றார்.

 

அவர் கூறியதைக் கேட்டு விக்ரமும்.. அபினவ்வும் ஒன்று சேர “வாட்!” என்று அதிர்ந்தார்கள்.

 

அபினவ் “டாக்டர்! கடல்ல மனிதர்கள் இருப்பது உண்மை என்று நீங்க நினைக்கறீங்களா!” என்றுச் சிரித்தான்.

 

அதற்கு கைலாஷ் “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரி கண்டம் என்று ஒன்று இருந்தது என்றும் அது மூழ்கியிருக்கிறது என்றும் நீங்க நம்பும் போது.. இதையும் நம்ப கூடாதா!” என்று சிரித்தார்.

 

விக்ரமிற்கு பவித்ராவும் அவனும் கடலில் மனிதர்கள் வாழ்பதைப் பற்றிப் பேசிக் கொண்டது நினைவிற்கு வந்தது.

 

அபினவ் மிகுந்த யோசனையுடன் “நீரில் வாழும் முதலையும் பல்லியும் ஒரே மாதிரியான உடலமைப்பு கொண்டிருக்கும்.. அது போல இதுவும் என்று நினைக்கறீங்களா! டார்வினின் தத்துவத்தை மாறுகிற மாதிரி இருக்கு..” என்று சிரித்தான்.

 

அதற்கு கைலாஷ் “உண்மை எது பொய் எது என்று எதையும் சொல்ல முடியாது. ஆனால் நாம் கூறுகிற விதத்தில் உண்மை பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் ஆக்க முடியும்.” என்றார்.

 

அதைக் கேட்டு முறுவலித்த விக்ரம் “நாங்க ஒரு சைக்லாஜீஸ்ட் கிட்ட தான் பேசிட்டு இருக்கோம் என்று தெரிகிறது ஸார்!” என்றான்.

 

கைலாஷ் “ஒகே நான் எப்படி இந்த மேட்டர் கூட கனெக்ட் செய்கிறேன் என்று சொல்கிறேன்.” என்று கூற ஆரம்பித்தார்.

 

“ஆக்சுவலா நீங்களே சில கெஸ்ஸஸ் வச்சுருப்பீங்க!‌ என்னை விட பவித்ரா இந்த ரீசர்ச்சில் எந்தளவுக்கு கரேஜீயஸா இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும். நீங்க அந்த ஆப்பர்ச்சூனிட்டியை தருவதுக்கு முன்.. அவங்க பல டிஸ்அப்பாயின்ட்மென்ட்ஸை சந்திச்சுருக்காங்க! அதனால சான்ஸ் அவங்களுக்கு ரொம்பவே முக்கியமானது மட்டுமில்ல பிக் ஆஃப் த ஜாய் என்பாங்களே அந்த மாதிரி!” என்றார்.

 

பவித்ரா விக்ரமின் தந்தை கூறியதிற்கு சம்மதம் தெரிவித்ததிற்கு தற்பொழுது நன்றாகவே காரணம் புரிந்தது. கைலாஷ் தொடர்ந்து பேசினார்.

 

“சோ! இந்த மேட்டரோட அவங்க ரொம்பவே கனெக்ட் ஆகிருக்காங்க! அவங்க சொன்ன மாதிரி.. அவங்க போக தீர்மானித்த இடத்திற்கு சென்றிருக்காங்க! அந்த நேரத்தில் அவங்க நிச்சயம் ரொம்ப மகிழ்ச்சியின் எல்லையில் இருந்திருப்பாங்க! அவங்க நினைத்தது நடக்கிறது என்று இருந்த போது.. சம்திங் ஹெப்பனிங்! அது நிச்சயம்.. அவளது ஆராய்ச்சிக்கு தடங்கலான விசயம் தான்! அது பவித்ரா சொன்ன மாதிரி.. எதாவது சூறாவளி காற்றால் கப்பல் ஆடியதால் ஏற்பட்ட அதிர்ச்சியாகவும் இருக்கலாம். அதனால் அவங்க ஆராய்ச்சியில் தடங்கல் ஏற்பட்டு நின்றிருக்கு! அதை பவித்ராவோட மனசு ஏத்துக்கலை. அதனால் அப்போ நடந்த விசயம் அவளோட மெம்மரியில் இருந்து அழிஞ்சுருக்கு! அதனால் தான் எத்தனை முறை கேட்டாலும்.. எப்படி எல்லாரும் மாயமா மறைஞ்சு போனாங்க.. என்கிறது.. அவளுக்கு தெரியாததுக்கு எனக்கு தெரிந்து இதுதான் காரணம்!” என்றார்.

 

உடனே விக்ரம் “நான் வேற மாதிரி யோசிச்சேன் டாக்டர்! கப்பல் ஆடியதில் பவித்ரா தலையில் அடிப்பட்டதால் மயக்கம் போட்டு விழுந்திருக்கலாம். அவ மயக்கத்தில் இருந்து தெளிந்து எழுந்த பொழுது.. எல்லாரும்.. அந்த கப்பல் சூறாவளியில் சிக்கியதில் கடல்ல மூழ்கி இறந்திருக்கலாம்.. என்று நினைக்கிறேன்.” என்றான்.

 

அதற்கு கைலாஷ் “போலீஸ் பவித்ராவை மீட்ட போது.. அவளுக்கு மெடிக்கல் செக்கப் நடந்திருக்கு! அதுலே.. விட்டமின்ஸ் குறைபாடும், உப்பு தண்ணி குடிச்சதாலே.. லேசான வயிற்று பிரச்சனையும் தான் இருந்திருக்கிறதா கூறப்பட்டிருக்கு! நான் அந்த ரிப்போர்ட்டை செக் பண்ணி பார்த்துட்டேன். மற்றபடி உடம்பில் வேற எங்கேயும் அடிப்படலை.” என்றார்.

 

விக்ரம் “அப்போ.. நீங்க சொன்ன மாதிரி.. அப்போ நடந்தது மட்டும் எதாவது அதிர்ச்சியால் அவளோட மெம்மரியில் இருந்து மறைந்திருக்கலாம் என்றுச் சொல்றீங்களா?” என்றுக் கேட்டான்.

 

அதற்கு அவர் ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினார்.

 

விக்ரம் “எப்போ அவளுக்கு எல்லாம் நினைவிற்கு வரும் டாக்டர்?” என்று கேட்டான்.

 

கைலாஷ் “எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம். வராமலும் போகலாம். அதுக்கு தான் ட்ரீட்மென்ட் பண்ணிட்டு இருக்கேன். அதாவது பவித்ரா சொன்னதை நம்பாமல் மறுத்துட்டே இருந்தால்.. அவங்க அந்த விசயத்திலேயே நின்றுவாங்க.. அதனால் அவங்க சொன்னதை நான் நம்பறேன். அடுத்த விசயத்திற்கு கொண்டு போற ட்ரை செய்துட்டு இருக்கேன். பட் ஏனோ முடியலை. ஒகே இப்போ பவித்ரா சொன்ன இன்னொரு விசயத்திற்கு வருகிறேன். குமரி கண்டத்தில் வாழ்ந்துட்டு இருந்தவங்க.. கடல்ல இன்னும் வாழுகிறாங்க என்று சொல்றாங்க! என்னைப் பொருத்தவரை.. அது இரண்டு விசயமாக இருக்கலாம். முதல்ல சொன்ன மாதிரி மனித உடலமைப்பில் இருக்கும் மீன்கள்! அடுத்தது அவங்களோட இல்லுஷன்ஸ்! இதுதான் அவங்களுக்கு ஏற்பட்டிருக்கு.. என்று அவங்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். இந்த இரண்டு விசயத்தில் இருந்தும் அவங்களை மீட்டு கொண்டு வந்துட்டா.. அவங்க நார்மல் ஆகிடுவாங்க! ஆனா எப்படிக் கொண்டு வருவது என்று தான் தெரியலை.” என்றார்.

 

விக்ரம்அவரை நேராக பார்த்து “நான் பவித்ராவை மறுபடியும் இன்டியன் ஓசனுக்கு கூட்டிட்டு போகப் போறேன் டாக்டர்! மறுபடியும் அவளோட ரீசர்ச் தொடங்க வைக்கலாம் என்று இருக்கிறேன். அவ ஆசையை நிறைவேற்ற நினைக்கிறேன். இது அவ இருக்கிற மனநிலையில் ரிஸ்கா டாக்டர்! அதைப் பற்றிக் கேட்க தான் முக்கியமாக வந்தேன்.” என்றான்.

 

கைலாஷ் ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை. 

 

பின் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி மாட்டினார். இவ்வாறு இருமுறை செய்தவர், சிறு பெருமூச்சுடன் விக்ரமை பார்த்து “மனிதனோட மனநிலை எப்போ எவ்வாறு மாறும்.. என்று யாராலும் கணிக்க முடியாது. அதை கன்ட்ரோல் பண்ண எந்த மிஷினும் வரலை. எந்த மருந்தும் கண்டுப்பிடிக்கலை.” என்றார்.

 

விக்ரம் “டாக்டர்! நீங்க என்ன சொல்ல வறீங்க! கிளியரா ஸ்ட்ரைட்டா சொல்லுங்க ப்ளீஸ்!” என்றான்.

 

கைலாஷ் “அவங்க பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றால்.. அவங்களோட எமோஷன்ஸ் எல்லாம் ஒரே இடத்தில் குவியும்.. எல்லாம் க்ராஸ் ஆகும். அவங்க மனம் மறுபடியும் இன்னும் பாதிக்கப்படலாம்.. அல்லது எல்லாம் நினைவிற்கு வரலாம். ஆனால் அவ்வாறு நினைவிற்கு வரும் போது.. அவங்க மனம் இன்னும் பல குழப்பங்களை சந்திக்கலாம். இத்தனை நாட்கள் நாம் சொல்லிட்டு இருந்து நிஜமா இது நிஜமா என்று கூடத் தோன்றலாம்.” என்றார்.

 

விக்ரம் பதட்டத்துடன் “அப்போ பவித்ராவை இன்டியன் ஓசனுக்கு கூட்டிட்டு போவது.. அவளுக்கு டேன்ஞர் என்று சொல்றீங்களா?” என்று கேட்டான்.

 

கைலாஷ் “ஆமாம் விக்ரம்! பட் பத்து பர்சேன்டேஜ் அவங்க நார்மல் ஆவதற்கும் சேன்ஸ் இருக்கு! பட் என்னோட சஜெக்சன்ஸ் என்னவென்றால்.. பத்து பர்சேன்டேஜ்ஜை நம்பி.. பவித்ராவை அழைச்சுட்டு போவதற்கு பதில்.. அவங்க கூட இருந்து.. மனசுக்கு இதமான விசயங்களைப் பேசிப் பாருங்களேன். அவங்க சொன்னது உண்மை தான்.. என்று ஏற்றுக் கொள்ளுங்கள்! அதனால் அவங்க மனசு அமைதியாகும். பிறகு மெல்ல அந்த விசயங்களில் இருந்து மனசை திருப்ப முயற்சி செய்யுங்க! மேரேஜ் குழந்தை குட்டிகள் என்று வந்தால்.. கண்டிப்பா வாழ்க்கை மட்டுமில்ல.. அவங்க மனசும் மாறும். அவங்க உங்க மேலே.. பிரியம் வச்சுருக்கிறதால்.. சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கலாம். ரிஸ்க்கும் இருக்காது. அதுமட்டுமில்லாம உங்களுக்கும்.. அவங்களோட ரீசர்ச் பற்றி அவ்வளவாக எதுவும் தெரியாது என்கிற போது.. அவங்க மனசு போற ஸ்பீடுக்கு அந்த விசயத்தில் உங்களால் போக முடியாது. வெறும் ஆமாம் என்று மட்டும் தான் சொல்ல முடியும். அந்த விசயங்களைப் பற்றி கலந்து பேச முடியாது.” என்றுவிட்டு குனிந்து எதையோ எடுத்தார்.

 

அவர்கள் முன்.. ஒரு புத்தகத்தை வைத்தார். குமரி கண்டத்தை பற்றிய புத்தகம் அது! 

 

திரு அப்பாத்துரை அவர்கள் எழுதிய ‘கடல் கொண்ட தென்னாடு’ எனும் புத்தகம் அது!

 

“நானும் இதைப் படிச்சு பார்த்தேன். செமையா எழுதிருக்காங்க! என்னவொரு கற்பனை! அனேகமா பவித்ராவும்.. இதைப் படித்து தான் இம்பரஸ் ஆகிருப்பாங்கனு நினைக்கிறேன். ஆனா கற்பனை கட்டுரை என்பதால்.. என்னால் இது கூட கனெக்ட் ஆக முடியலை. ஆனால் பவித்ரா இது கூட ரொம்ப கனெக்ட் ஆகிருக்காங்க! இவங்க இப்படியிருக்கிறதுக்கு.. காரணமே இந்த இஷ்யுவை அவங்க டீப்பாக ஆராய்ந்தது தான்! இதை விட்டு வெளியே வந்தாலே அவங்க சரியாகிருவாங்க! அதுக்கு தான் நான் ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன். எனக்கு உங்க ஹெல்பும் தேவை!” என்றார்.

 

சிறு பெருமூச்சுடன் எழுந்த விக்ரம் “தேங்க்யு டாக்டர்! இனி பவித்ராவை எப்படி ஹென்டில் பண்ணினா.. நார்மல் ஆவாள் என்று சொன்னதிற்கு! கண்டிப்பா நீங்க சொன்னபடி செய்கிறேன் டாக்டர்!” என்று மீண்டும் நன்றியுரைத்து கை குலுக்கிவிட்டு அபினவ்வுடன் அகன்றான்.

 

காரில் ஏறியமர்ந்ததும்.. அபினவ் அவசரமாக விக்ரமின் புறம் திரும்பி “பவித்ரா மேம் கூட இந்த டாப்பிக்கை பற்றிப் பேச ஆளில்லை.. என்று சொன்ன போது.. நான் இருக்கிறேன்னு சொல்ல நினைச்சேன். அப்போ எதுக்கு என் கையை பிடிச்சு அமர்த்தி என்னைத் தடுத்தீங்க?” என்று கேட்டான்.

 

அதற்கு நேர் எதிரே பார்வை வெறித்தபடி காரை கிளப்பிய விக்ரம் “ஏன் தடுத்தே என்று தானே கேட்டே! ஏன்னா.. இந்த டாக்டர் பவித்ராவை குணப்படுத்துவதற்காக ட்ரீட்மென்ட் கொடுக்கலை. அவளை அதே ஸ்டேஜ்ஜில் வைக்கிறதுக்காக ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கார்!” என்று கோபத்துடன் கூறினான்.

 

அபினவ் அதிர்ந்து போனவனாய் அவனைப் பார்த்தான்.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 8

அபினவ் “என்ன சொல்றீங்க!” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டான்.

 

விக்ரம் “ஆமாம் அபினவ்! அவர் முதலில் சொன்னது கேட்டாய் தானே! பவித்ரா கூறிய விசயங்களை ஆமாம் அப்படித்தான் என்று நம்ப சொல்றார்.. அதாவது அதுல இருக்கிற உண்மையை ஆராய வேண்டாம்னு சொல்லாமல் சொல்கிற மாதிரி இருக்கு!” என்றான்.

 

அபினவ் “அதுதான் அவர் பேசியது ஒரு மாதிரி தெரிந்ததா!” என்றான்.

 

ஆம் என்று தலையை ஆட்டிய விக்ரம் தொடர்ந்து “எனக்கும் அவர் பேசுவதில் எதோ முரண் இருக்கிற மாதிரி இருந்தது. முதலில் என்னவென்று புரியலை. பவித்ராவை இன்டியன் ஒசனுக்கு கூட்டிட்டு போகப் போகிறேன்.. என்று சொன்னதும்.. அவரோட முகபாவனை, பேச்சு எல்லாம் மாறிருச்சு! அப்போ புரியாத முரண் நல்லாவே தெரிந்தது.” என்றான்.

 

அபினவ் “எஸ்! எஸ்! அவங்களை அங்கே கூட்டிட்டு போனால் ஆபத்து என்கிற மாதிரி பேசினார். ஆனால் அவர்தான்.. அவங்க என்ன சொன்னாலும் ஒத்துப் பேசுங்கனு சொன்னார். அதாவது பவித்ரா மேம்மை அங்கே கூட்டிட்டு போனா.. ஏதோ பெரிய உண்மை தெரியப் போகுது. அதைத் தடுக்க நினைக்கிறார்.” என்றான்.

 

விக்ரம் “எக்ஸாட்டிலி! பவித்ரா பற்றி அவர் சொன்ன விசயத்தில் ஒண்ணு உண்மை தான்! அவளுக்கு அன்னைக்கு நடந்தது நினைவில் இருந்து அழிந்திருக்கு! அல்லது அழிக்கப்பட்டிருக்கு! மறுபடியும் அங்கே போனால்.. அவளுக்கு மறைக்கப்பட்ட பல உண்மைகள் நினைவிற்கு வரலாம். அப்போ கண்டிப்பா பவித்ராவை அங்கே கூட்டிட்டு போகணும். முதலில் அவளது குழப்பங்கள் அகல கூட்டிட்டு போக நினைச்சேன். இப்போ.. அவளுக்கு ஏதோ அநியாயம் நடந்திருக்கு.. அது என்னவென்று தெரிந்துக் கொள்ள கூட்டிட்டு போக நினைக்கிறேன்.” என்றவனின் குரல் கடினமுற்றது.

 

அபினவ் சிறு பதட்டத்துடன் “ஸார்! எனக்கு ஒரு டவுட்! அப்போ.. பவித்ரா மேம் போன கப்பலில் ஒரு ரீசர்ச் குரூப் ஏறினாங்கன்னு சொன்னதா சொன்னீங்களே! அவங்களுக்கும் இவங்களுக்கும்..” என்று இழுத்தான்.

 

விக்ரம் இறுகிய குரலில் “கண்டிப்பாக தொடர்பு இருக்கு!” என்றான்.

 

பின் தொடர்ந்து “பட் ஒய்? ஒய் பவித்ரா? அப்படி அவ என்ன பண்ணினா? எதுக்கு அவளுக்கு இந்த நிலைமை? கண்டிப்பா எனக்கு தெரிந்தாகணும்!” என்றவனின் விழிகள் கோபத்தில் சிவந்தன.

 

அபினவ் யோசனையுடன் “கடல் என்கிற போது.. எதாவது கள்ளக்கடத்தல்.. சம்பந்தமான விசயமாக இருக்கலாம். அது பவித்ரா மேமுக்கு தெரிந்திருக்கலாம். அதனால இப்படி!” என்று தனக்கு தோன்றியதை கூறினான்.

 

விக்ரம் “இருக்கலாம் அபினவ்! ஆனால் எந்த விசயமாக இருந்தாலும் பவித்ராவை இந்த நிலைமைக்கு தள்ளினவங்களை நான் சும்மா விட மாட்டேன்.” என்றான்.

 

அபினவ் “ஸார்! பவித்ரா மேமுக்கு இந்தளவிற்கு தொல்லை கொடுத்திருக்காங்க என்றால்.‌. அந்த விசயம் ஆபத்தானதாக இருக்கலாம். டாக்டரை வச்சு.. கேம் ஆடராங்க என்றால் அவங்க ரொம்பவும் ஆபத்தானவங்களாக இருக்கலாம்.” என்று சிறு பீதியுடன் கூறினான்.

 

விக்ரம் “கண்டிப்பா! ஆனா ஃபேஸ் பண்ணி பார்த்திட  முடிவு செய்துட்டேன்.” என்றவன், திரும்பி அபினவ்வை பார்த்து “நான் உன்னை ஃபோர்ஸ் செய்யலை அபினவ்! நான் மட்டும் பவித்ரா கூடப் போறேன்.” என்றான்.

 

அதற்கு அபினவ் “ஸார்! குமரி கண்டம் அதைப் பற்றி ரீசர்ச் பவித்ரா மேமுக்கு மட்டுமில்லை. எனக்கும் ரொம்ப முக்கியம். மேம் அவங்க புத்தகத்தில் எழுதியிருந்ததை கண்டிப்பாக வெற்றிக்கரமாக முடிக்கணும். அதைச் செய்ய நான் உதவ போகிறேன் என்பது என்னோட பெரிய பாக்கியமா நினைக்கிறேன் ஸார்! ஒரு விசயத்தை முனைப்போட செய்தால் எந்த ஆபத்தும் பெரிதாக தெரியாது ஸார்!” என்றான்‌.

 

விக்ரம் “தேங்க்ஸ் அபினவ்! முதல்ல பவித்ராவை பார்த்து.. பேசணும்.” என்றான்.

 

அபினவ் “ஸார்! அவங்க அம்மாக்கு மறுபடியும் கடலுக்குள்ள கூட்டிட்டு போவது பிடிக்காதுன்னு நினைக்கிறேன்.” என்று இழுத்தான்.

 

விக்ரம் சிறு பெருமூச்சை இழுத்துவிட்டு “அவங்களுக்கு பிடிக்காம போவதும் நியாயம் தான்! சோ கண்டிப்பா பொய் சொல்ல வேண்டியது வரும். பார்க்கலாம்.” என்றான்.

 

பவித்ராவின் அன்னை.. அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முகவரிக்கு சென்றனர். அருகில் செல்ல செல்லவே விக்ரம் இனிமையாக அதிர்ந்தான். ஏனெனில் பவித்ரா வாசலிலேயே அவனுக்காக காத்திருந்தாள்.

 

அவனது காரை பார்த்ததும்.. வேகமாக அவனை நோக்கி வந்தவள், “டாக்டரை பார்த்தீங்களா! நான் சொன்னது உண்மை என்று‌ சொன்னாரா! இல்லை பிரம்மை என்று சொன்னாரா என்று எல்லாம் நான் கேட்க மாட்டேன். இனி யாருக்கும் விளக்கமும் கொடுக்க மாட்டேன். அதுதான் நீங்க என்னை மறுபடியும் ரீசர்ச்சிற்கு கூட்டிட்டு போகிறேன்னு சொன்னீங்களே!” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

 

பின் “என் அம்மா சொல்வதை கேட்காதீங்க! நீங்க சொன்னதை சொன்னேன். அதுக்கு அவங்க பயங்கரமா கோபப்பட்டாங்க! என்னை மறுபடியும் அனுப்ப மாட்டேன்னு திட்டினாங்க! என் அம்மா கிட்ட சொல்லி.. என்னைக் கூட்டிட்டு போவீங்க தானே!” என்று கேட்டாள்.

 

விக்ரம் சிறு யோசனையுடன் “அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா!” என்று கேட்டான்.

 

உடனே சிறிதும் யோசிக்காமல் சரி என்று தலையை ஆட்டிய பவித்ராவிற்கு அதன் பின்பே அவன் கூறுவது புரிந்தது. அவளையும் அறியாமல் சில்லென்ற சிறு உணர்வு நெஞ்சில் தோன்றியது.

 

அவளது முகத்தில் தோன்றிய பாவனைகள் கண்டு முறுவலித்த விக்ரம் “இப்போ நீ எனக்கு ஒரு பிராமிஸ் தரணும். நான் உள்ளே போய் பேசிட்டு வர வரை.. நீ இங்கே இருக்கணும்.” என்றாள்.

 

அவள் அதற்கும் சரி என்று தலையை ஆட்டினாள்.

 

சற்று தள்ளி நின்றிருந்த அபினவ் சுட்டிக்காட்டிய விக்ரம் “இவன் அபினவ்! உன்னை மாதிரி குமரி கண்டம் பற்றிய ரீசர்ச்சில் அதிகம் ஆர்வம் கொண்டவன்.. இவன் கூடப் பேசிட்டு இரு வந்தரேன்.” என்றவன், அபினவ்வை அழைத்து.. “பவித்ராவை ஜாக்கிரதையா பார்த்துக்கோ அபினவ்!” என்றுவிட்டு உள்ளே சென்றான்.

 

விக்ரமை பார்த்ததும்.. பவித்ராவின் தந்தையும் அன்னையும் வேகமாக வந்தனர். கல்பனா “பவித்ராவை மறுபடியும்.. கடலுக்கு கூட்டிட்டு போய்.. விட்டுப் போன ஆராய்ச்சியை தொடரலாம் என்று சொன்னீங்களா! இந்த நாலு வருஷம் நீங்க அவ கூட இல்லை. அதனால் ஈஸியா சொல்லிட்டிங்க! நாங்க இதுக்கு அனுமதிக்க மாட்டோம் தம்பி! நீங்க வந்த வழியே போகலாம்.” என்று கையெடுத்து கும்பிட்டார்.

 

அதற்கு விக்ரம் “பவித்ரா என்ன பேசினாலும்.. அதற்கு ஒத்துப் பேசணும் என்று டாக்டர் சொன்னாரே! உங்க கிட்ட சொல்லுலையே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

 

அதற்கு பவித்ராவின் தந்தை கணபதி சிறு குழப்பத்துடன் “ஆமாம் சொன்னார். அவள் என்ன சொன்னாலும்.. அப்படியெல்லாம் இருக்காதுனு சொல்லக் கூடாது. ஆமாம் என்றுச் சொல்ல சொன்னார். ஆனா நீங்க?” என்று இழுத்தார்.

 

விக்ரம் “அதே தான் அன்கிள்! பவித்ரா என்னைப் பார்த்ததும்.. நான் அவளோட ரீசர்ச்சிற்கு ஸ்போன்ஸர் ஏத்துக்கிட்டது நினைவிற்கு வந்திருக்கு! அதனால் மறுபடியும் கடலுக்குள் அனுப்ப சொன்னா! நானும் ஒகே என்று சொன்னேன். ஆனால் எனக்கு அவளுக்கு எது நல்லது என்று தெரியும் அன்கிள்! அதனால் அதைத் தான் செய்வேன்.” என்று கூறினான். 

 

கல்பனா சிறு நிம்மதியுடன் “நல்லது தம்பி.. நானும் பயந்துட்டேன். டாக்டர் சொல்வதற்கு முன்பே.. அவளுக்கு எது நல்லது என்று யோசித்து சொல்லி அவளைச் சாமதானப்படுத்தி இருக்கீங்க!” என்றார்.

 

கணபதி “ஸாரி தம்பி! வீட்டுக்கு வந்தவரை வாசலையிலேயே நிறுத்தி வச்சு கேள்விக் கேட்டுட்டோம். உள்ளுக்குள்ள வாங்க தம்பி! உட்காருங்க..” என்று விக்ரமை அமர வைத்து உபசரித்தார்.

 

பின் விக்ரம் நேராக விசயத்திற்கு வந்தான்.

 

“அன்கிள்! பவித்ரா என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பா என்று எனக்கு தெரியலை. நான் பவித்ராவை அவள் என்று தெரியாமலேயே காதலித்திருக்கிறேன். அவ மேலே இருக்கிற கோபத்துல இந்த நாலு வருஷம் பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருந்திருக்கிறேன். இனி ஒரு நிமிஷம் கூட என்னால் அவளைப் பிரிந்து இருக்க முடியாது. ப்ளீஸ் எனக்கு பவித்ரா கல்யாணம் பண்ணி கொடுங்க! நான் அவளைப் பார்த்துக்கிறேன்.” என்றான்.

 

விக்ரம் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியும் அதிர்ச்சியுமாக இருவரும் அமர்ந்திருந்தார்கள். பவித்ராவை இந்நிலையில் திருமணம் முடித்து தரக் கேட்பான் என்று அவர்கள் நினைக்கவில்லை.

 

எனவே கல்பனா “நீங்க சொன்னதைக் கேட்டு எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி! என் மக வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று இல்லையோ என்று கூட முடிவு பண்ணிட்டேன். எங்களுக்கு பிறகு யார் அவளைப் பார்த்துப்பாங்கனு நாங்க கவலைப்பட்டுட்டு இருந்தோம். இப்போ தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு..” என்றார்.

 

கணபதி விக்ரமின் கரத்தைப் பற்றி “ரொம்ப நன்றி தம்பி! இந்த விசயத்திற்கு நன்றி சொல்லக் கூடாது தான்! ஆனால் இதைத் தவிர வேற என்ன சொல்வது என்றுத் தெரியலை.” என்றார்.

 

பின் தொடர்ந்து “நீங்க அவ கூட வாழ்நாள் புல்லா இருக்க போறீங்க என்று தெரிந்தாலே அவ சீக்கிரம் குணமாகிருவா! அப்பறம் நடக்க போகிற உங்க திருமணம் தான் எங்களோட உச்சக்கட்ட மகிழ்ச்சியான தருணம்.” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

விக்ரம் “அன்கிள்! நான் வெறும் வார்த்தையாக இனி என்னால் பவித்ராவை விட்டு இருக்க முடியாது என்று சொல்லுலை. நான் உடனே பவித்ராவை கல்யாணம் செய்துக்க ஆசைப்படுகிறேன்.” என்றான்.

 

கல்பனா சிறுத் தயக்கத்துடன் “அவளுக்கு குணமான பின்..” என்று கூறும் போதே.. டாக்டர் ஒருதரம் பவித்ராவிற்கு திருமணம் முடித்தால் கூட அவளுக்கு குணமாகலாம் என்று கூறியது நினைவிற்கு வந்தது. எனவே சிறு மூச்சை இழுத்துவிட்டு “சரி தம்பி!” என்றார்.

 

கணபதி மனைவியை பார்க்கவும், கல்பனா “அவளோட மனம் போகிற திசை மாறணும்ங்க! அதுக்கு அவளுக்கு குடும்பம், குழந்தை எல்லாம் வேணுங்க..” என்றார்.

 

அதை கணபதி ஆமோதித்தார்.

 

விக்ரம் மகிழ்ச்சியுடன் “என்ன சொல்வதுன்னு தெரியலை. உங்க பொண்ணோட வாழ்க்கையில் நடக்கிற முக்கியமான சம்பவம் இது! என் மேல் நம்பிக்கை வச்சு.. அவளை என்கிட்ட ஒப்படைக்கறீங்க! கண்டிப்பா அவ வாழ்நாள் புல்லா மகிழ்ச்சியா பார்த்துப்பேன்.” என்றான்.

 

பின் தொடர்ந்து “ஒகே அன்கிள்! ஆன்ட்டி! நான் சென்னைக்கு போய்.. என் அம்மா கிட்டயும் என்னோட குளோஸ் ரிலேட்டிவ்ஸ் கிட்டயும் விசயத்தை சொல்கிறேன். கண்டிப்பா என் அம்மா உடனே பவித்ராவை பார்க்கணும் என்று சொல்வாங்க! அவங்களைக் கூட்டிட்டு வரேன். அப்பறம் எனக்கு ஒரு பத்து நாட்கள் டைம் வேண்டும். நான் முடிக்க வேண்டிய வேலை சீக்கிரம் முடிச்சுட்டாலும் சந்தோஷம் தான்!” என்றுவிட்டு அவர்களுடன் வெளியே வந்தான். 

 

முதலில் வெளியே வந்தவன் பார்த்த காட்சி.. முகத்தில் பிரகாசத்துடன் பவித்ரா அபினவ்விடம் பேசிக் கொண்டிருந்ததை தான்!

 

இருவரும் எந்த விசயத்தைப் பற்றிக் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்று அவனுக்கு தெரியும். அவர்களை தொந்திரவு செய்ய விரும்பாதவனாய்.. தனக்கு பின்னால் வந்தவர்களை வெளியே செல்ல விடாமல் தடுக்க எண்ணி “அன்கிள்! என் அம்மா கண்டிப்பா ஒத்துப்பாங்க.. நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள் தான்! ஆனா.. நான் சென்னைக்கு போய்.. அவங்க கிட்டப் பேசி.. உங்க கிட்ட சொல்கிற வரை.. என்ன பதில் வருமோ என்று நீங்க டென்ஷனா இருப்பீங்க! அந்த டென்சனை நான் கொடுக்க விரும்பலை. இதோ இப்பவே என் அம்மா கிட்டப் பேசிட்டு உங்க கிட்ட ஃபோனை தருகிறேன். நீங்க பேசுங்க..” என்றான்.

 

அதே போல் தனது அன்னையிடம் தனது விருப்பத்தை கூறியவன்.. பின் பவித்ராவின் பெற்றோர்களை‌ பேச வைத்தான். மகனுக்கு எப்பொழுது திருமணம்‌‌ என்றிருந்த விக்ரமின் அன்னைக்கு மிகுந்த மகிழ்ச்சியே! தனது மகன் தேர்ந்தெடுத்த பெண் என்ற‌ ஒரு தகுதியே போதும் என்று சம்மதம் தெரிவித்த அவர்! நாளையே வந்து சந்திப்பதாக கூறினார். அதைக் கேட்டு பவித்ராவின் பெற்றோருக்கும் மகிழ்ச்சி கொண்டனர். 

 

பின் விக்ரம் “நானே இந்த விசயத்தை பவித்ரா கிட்டச் சொல்லிட்டு வரேன்.” என்று முறுவலுடன் கூறிவிட்டு வெளியே வந்தவன், அப்பொழுதும் மும்மரமாக பேசிக் கொண்டிருந்தவர்களை நோக்கி சென்றான்.

 

அங்கு பவித்ரா “இந்த உலகத்துல கிரேக்க பேரரசு தான் பெருசு என்ற வழக்கு இருக்கு அபினவ்! அது உண்மை தான்! அதை மறுக்கிறதுக்கு இல்லை. ஆனா அவங்களுக்கு முன்பே தோன்றியது தமிழர் இனம்.. அவங்களை விட பெரிய பேரரசாக திகழ்ந்தது என்று‌ ஏன் யாருமே ஒத்துக்க மாட்டேன்கிறாங்க! அதுக்கு காரணம்.. குமரி கண்டம் இருந்திருக்கிறது என்பதற்கு இன்னும் தெளிவான அத்தாட்சி எதுவுமில்லைன்னு உலக தொல்பொருள் ஆராய்ச்சி கழகம்.. சிறு அறிக்கையும் விட்டுருக்காங்க! நம்ம குமரி கண்டத்தை கடல் கொண்டது தான் இதுக்கு காரணம்!” என்றாள்.

 

அவளது குரலில் குழப்பம் இல்லாத தெளிவை கேட்டு விக்ரம் மகிழ்ந்தான். அவன்‌ சரியாக தான் கணித்திருக்கிறான். அவள் குழம்பவில்லை. அவள் கூறும் விசயங்கள் உடன் இருப்பவர்களை குழப்புவதால் அவளுக்கு அவ்வாறு தோன்றுகிறது.

 

அபினவ் என்ன கூறுகிறான் என்றுக் கேட்டவாறு வந்தான்.

 

“நீங்க சொல்வது முற்றிலும் உண்மை மேம்! பழங்காலத்து மக்கள் வாழ்ந்ததிற்கான அத்தாட்சிகள் மண்ணோடு புதைகிறது அதனால.. இப்போ வாழ்ந்துட்டு இருக்கிற மக்கள்.. அவங்களோட தேவைக்காக பூமியை தோண்டும் போது.. அந்த காலத்து மக்கள் வாழ்ந்த முறையை கணிக்கும்.. அத்தாட்சிகள் கிடைத்திருக்கிறது. ஆனா கடலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குமரி கண்டத்திற்கு கிடைப்பதற்கு ரொம்பவே அரிது. கிடைத்த ஆதாரங்களையும் சில நூற்றாண்டுகளுக்கு முன் சுனாமி வந்து கடலலைகள் அடித்து செல்லப்பட்டவையாகவும் இருக்கலாம் என்று சொல்றாங்க! மாலத்தீவுகள், அந்தமான் தீவுகள், பெரும் தீவான ஸ்ரீலங்கா போன்றவற்றை எவ்வாறு தோன்றியிருக்கும் என்பதை யோசிக்கலையா! சில வருடங்களுக்கு முன் சிறு சாட்சியாக தனுஷ்கோடி மூழ்கிய போது கூட.. அவங்களுக்கு சிறு சந்தேகம் தோன்றலையா! இல்லை யோசிக்க விரும்பலையா.. என்று தெரியலை. நீங்க எழுதிய புத்தகத்தில் இந்த மாதிரி பல கேள்விகளை எழுப்பியிருக்கீங்க! அதெல்லாம் சும்மா சாதாரணமாக தோன்றிய கேள்விகள் இல்லை. ஆணித்தரமான கேள்விகள் அதுக்கு பதில்கள் கண்டிப்பாக வேணும்! அந்த பதில்களை நாமே தேடணும்.” என்று வேகத்துடன் கூறினான்.

 

பவித்ராவின் குரலிலும் உறுதி தோன்றியது.

 

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்று‌ எழுதியது கற்பனை இல்லை அபினவ்! தமிழர் இனம் கற்காலத்திலேயே தோன்றியிருக்கு! அது உண்மை என்று இந்த உலகத்திற்து நிரூபிக்கணும்.” என்றாள்.

 

அவர்கள் பேசியதைக் கேட்ட விக்ரமின் மனதிலும் உறுதி தோன்றியது.

 

—-----------------------------

 

விக்ரமும் அபினவ்வும் சென்ற பின்..‌ கைலாஷ் தனது மேசை இழுப்பறையை திறந்து வேறு ஒரு செல்பேசியை எடுத்து அவசரமாக ஒரு எண்ணை அழுத்திவிட்டு அழைப்பை ஏற்பதாக காத்திருந்தார்.

 

“ஹலோ!”

 

(கைலாஷ் இந்தியில் பேச ஆரம்பித்தார்)

 

“ஹலோ நான் கைலாஷ் பேசறேன். கன்னியாகுமரியில் இருந்து..” 

 

“ஓ.. நீயா! மாசம் மாசம் தண்டத்திற்கு உனக்கு தான் பணம் அனுப்பிட்டு இருக்கேனே! இப்போ என்ன விசயம்?”

 

அந்த குரலில் இருந்த அலட்சியம் கைலாஷிற்கு கோபத்தை மூட்டியது.

 

“என்னது தண்டமா! ஒருத்தங்களை அதே குழப்பமான மனநிலையில் மூணு வருஷமா பிடிச்சு வைக்கிறது என்பது அவ்வளவு சாதாரணமான விசயம் என்று நினைச்சுட்டிங்களா! சில விசயங்களை அவளோட நினைவில் இருக்கும் சில விசயங்களை ஞாபகம் வராமல் செய்வது என்பது! அவ்வளவு சாதாரணமான விசயம் என்று நினைச்சுட்டிங்களா! நான் சில விசயங்கள் என்று சொல்கிறேனே.. அது இப்போ வெளிப்பட்டால் என்ன ஆகும் என்று தெரியுமா!” என்று கோபத்துடன் கேட்டார்.

 

“சரி! சரி! நீ பெரிய விசயத்தை தான் செய்திருக்கே! ஒத்துக்கிறேன். அந்த பொண்ணை போட்டு தள்ள ரொம்ப நேரம் ஆகாது. ஆனா அது பெரிய இஷ்ஷூ ஆகும் என்று தான் அந்த பொண்ணை விட்டு வச்சுருக்கோம். இந்த விசயத்தை ஆராய்ந்தால் இப்படி பைத்தியம் ஆக வேண்டியது தான்! இது பைத்தியக்காரத்தனம் என்று உலகத்துக்கு சொல்ல தான் அந்த பெண்ணை அப்படி வைக்க சொன்னோம். அதுல உனக்கு பெரிய பங்கு இருக்கு போதுமா! இப்போ சொல்லு என்ன விசயமா ஃபோன் போட்டே?” 

 

“பவித்ராவிற்கு முன்பு ஸ்பான்ஸர் செய்தவன் மறுபடியும் பவித்ராவை தேடி வந்திருக்கிறான். சரி காதல் உருகல் என்றதோட நிறுத்திப்பாங்கனு பார்த்தேன். ஆனா விக்ரம் பவித்ராவை மறுபடியும் கடலுக்கு கூட்டிட்டு போகட்டுமானு கேட்டான்.”

 

“என்ன!”

 

“ஆமாம்! பட் டொன்ட் வெர்ரி! பவித்ராவோட பெரெண்ட்ஸ் கிட்டச் சொன்ன மாதிரி.. அது பவித்ராவிற்கு ஆபத்தா முடியும் என்று சொல்லி வச்சுருக்கேன்.”

 

“அவன் நம்பிட்டானா!”

 

“நம்பலை என்று தான் தோணுது.”

 

“அப்போ அவனோட கதையை முடிச்சிர வேண்டியது தான்!” என்று வன்மத்துடன் அந்த குரல் கூறியது.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 9

 

அவனது முகம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த பவித்ராவின் தலையை வருடிக் கொடுத்தான். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அதை அவளும் உணர்ந்தாளோ இமைகளை மூடி நின்றிருந்தாள். பின் அவளிடம் விடைப்பெற்ற விக்ரம்.. அபினவ்வை தனியாக அழைத்தான்.

 

கார் அருகே வந்ததும்.. அபினவ்விடம் திரும்பிய விக்ரம் “அபினவ்! எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் செய்யணும்.” என்று கேட்டான்.

 

“சொல்லுங்க ஸார்!”

 

“நான் இப்போ போய் கல்யாணத்துக்கு ஏற்பாடு மட்டுமில்லை. நாம ரீசர்ச் போவதற்கு தேவையான ஏற்பாடுகள்.. செய்யப்‌ போகிறேன். அதற்கு தான் பத்து நாட்கள் கேட்டேன். மறுபடியும் அரசாங்கத்திடம் இருந்து பர்மிஷன் வாங்கணும் என்றால்.. இழுத்தடிச்சுட்டு இருப்பாங்க! அதுவும் பவித்ரா மேலே ஏற்கனவே ஒரு வழக்கு இருக்கு! அதனால பர்மிஷன் தருவது சிரமம் தான்! அதனால் புதுசா தொடங்காம.. எங்க நிறுவனத்து கூட முதல்ல போட்ட ஒப்பந்தத்தையே மறுபடியும் ரீநீயுவல் பண்ண போறேன். அதுல எந்த பிரச்சினையும் வாராது. அந்த வேலைகளை முடிக்க பத்து நாட்களுக்கு மேல் ஆனாலும் ஆகலாம். ஆனா எப்படியாவது நான் பவித்ராவை நான் கூட்டிட்டு போயே தீருவேன். முதல்ல எங்க கல்யாணம்.. பிறகுன ஸ்ரீலங்காவிற்கு ஹனிமூன் போகிற மாதிரி போய்.. அங்கே இருந்து தான் இன்டியன் ஓசனுக்கு போக ஏற்பாடு செய்யப் போகிறேன்.” என்றான்.

 

அதற்கு அபினவ் “குட் மூவ் ஸார்! பவித்ரா மேம் ஆராய்ச்சியில் ஸ்ரீலங்கா முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கே என்ன செய்ய வேண்டும் என்று அதில் எழுதியிருக்காங்க..” என்றான்.

 

“தட் வாஸ் எ க்ரெட் நீயுஸ்! அப்போ நான் வரும் போது.. கண்டிப்பா அந்த புக்ஸையும் எடுத்துட்டு வரேன். அங்கே நடக்கிற வேலை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். ஆனா இங்கே நீதான் பவித்ராவை பத்திரமா பார்த்துக்கணும். டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட்டிற்கு போக உன்னால் முடிந்தால் தடுத்து பார்! இல்லைன்னா.. நீயும் அவங்க கூடப் போ! நான் முதல்ல ஏற்பாடு செய்திருந்த டிடெக்டிவ்ஸிற்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு! டாக்டர் கைலாஷிக்கும் பவித்ரா போன கப்பல்ல ஏறினவங்களுக்கும் கண்டிப்பா தொடர்பு இருக்கும். அதனால் டாக்டரை கண்காணிக்க சொல்லணும். அதை நான் பார்த்துக்கிறேன். நீ இங்கே பவித்ராவை பத்திரமா பார்த்துக்கோ.. இங்கே ரீசர்ச்சர் என்று சொன்னா.. கண்டிப்பா கல்பனாவோட அம்மா தங்குவதற்கு அனுதிக்க மாட்டாங்க! அதனால் உன்னை என் செக்ரட்டரி என்று சொல்லியிருக்கேன். பவித்ராவோட பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருக்கேன்.. என்று சொல்லியிருக்கேன். அப்பறம் இந்த குமரி கண்டத்தை பற்றி அவளோட பெரண்ட்ஸ் இல்லாத டைமில் பேசிப் பாரு! இதைப் பற்றிப் பேசும் போது.. அவ ரொம்ப சந்தோஷமா இருக்கா! அந்த நேரத்தில் அவ கூட பயணம் செய்தவங்க என்ன ஆனாங்க.. என்று அவளுக்கு ஞாபகம் வருகிறதா.. என்று கேட்டு பாரு! நான் வரும் வரை.. அவளுக்கு நீதான் பாதுகாப்பு!” என்று அவனது கரத்தை இறுகப் பற்றினான்.

 

அபினவ் “ஸார் இதை நீங்க இப்படிக் கேட்டிருக்க தேவையில்லை. பவித்ரா மேம் சுற்றி நடக்கிற பல விசயங்களைப் பார்த்ததில்.. அவங்க பத்திரமா இருக்கணும் என்று நினைத்தேன். அந்த வேலையை நானே பார்த்துக்கணும் என்று வரும் போது.. அது நான் உங்களுக்கு செய்கிற ஹெல்ப் இல்லை ஸார்! அது என் கடமை என் வேலை!” என்றான்.

 

விக்ரம் “ஒகே  அபினவ் நான் கிளம்பறேன்.” என்று காரின் கதவை திறக்கப் போனான். அப்பொழுது “ஸார்” என்று அபினவ்வின் அழைப்பு அவனைத் தேக்கியது.

 

“என்ன அபினவ் எதாவது சொல்லணுமா!” என்று கேட்டான்.

 

அபினவ் தயக்கத்துடன் “பர்ஷனல் விசயம் கேட்கட்டுமா?” 

 

“கேளுங்க!”

 

“லைப்பேரில நாம் மீட் செய்ததில் இருந்து நீங்க பவித்ரா மேம் மேலே வச்சுக்கிற அளவுக்கு அதிகமான லவ்வை பார்த்துட்டேன். ஆனா எனக்கொரு டவுட்! பவித்ரா மேம் உங்க மேலே அந்தளவிற்கு காதலிக்கலையோன்னு! அவங்க உங்களுக்கு ஸாரி சொல்லத் தான் பார்க்கிறாங்க! உங்களைப் பார்த்தால் ஏற்படுகிற சந்தோஷம் கூட.. முன்பு அவங்களுக்கு நீங்க ஸ்பான்ஸர் செய்தவங்க என்ற எண்ணம் தான்! இதைச் சொன்னதுக்கு ஸாரி! ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்படித் தோன்றியிருக்கு என்றாலும் ரொம்ப ஸாரி! இவ்வளவு பண்ர உங்க கிட்ட மூட்டி விடுகிறேன்னு நினைச்சுக்காதீங்க! நான் சொல்ல வருவது.. இந்த விசயம் பின்னாடி உங்களுக்கு தெரிஞ்சு.. பவித்ரா மேம்மை நீங்க வெறுத்துர கூடாது என்கிறதுக்காகவும் தான் கேட்கிறேன்.” என்று கவனமாக வார்த்தைகளை எடுத்துப் பேசினான்.

 

அபினவ் பேசியதை முழுவதும் கேட்ட விக்ரம் மெல்ல சிரித்தான்.

 

“எனக்கு தெரியும் அபினவ்! பவித்ராவிற்கு இப்பவும் சரி.. அப்பவும் சரி.. அவளோட கனவை நிறைவேற்ற வந்தவன் மேல் வருகிற மதிப்பிலும் மகிழ்ச்சியுமாக தான் என்னைப் பார்க்கிறா! கண்டிப்பா.. நாங்க இரண்டு பேரும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பை பரிமாறிக் கொள்கிற நிலையும் வரும்.” என்று சிரித்தவன், மீண்டும் அவனுக்கு கவனம் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றான்.

 

விக்ரம் கூறியிருந்தால்.. அபினவ்வை அங்கு தங்க பவித்ராவின் பெற்றோர்கள் அனுமதித்தார்கள். 

 

சென்னைக்கு சென்ற விக்ரம் தனது அன்னையிடம் தனது விருப்பத்தை மீண்டும் கூறினான். அவன் நினைத்தது போல்.. அடுத்த நாளே தனது மருமகளை காண அவர் கன்னியாகுமரிக்கு விரைந்தார். விக்ரமை அழைத்த பொழுது.. முறுவலுடன் மறுத்தவன், அவரது கையில் சிறு காகிதங்களை கொடுத்து.. அதில் பவித்ராவின் கையெழுத்தை வாங்கி வரக் கூறினான். 

 

அது பவித்ராவின் சார்பாக இவர்களது நிறுவனத்திற்கு அனுமதி வேண்டி விண்ணப்ப கடிதம்!

 

அதாவது நான்கு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி முழுமை பெறாமல் பாதியில் கொரோனா தாக்கம் காரணமாக விடுப்பட்டு விட்டதாகவும்.. தற்பொழுது அதை மீண்டும் தொடங்கப் போவதாகவும்.. அதற்கு ஒத்துழைக்குமாறு பவித்ரா கேட்பது போன்ற கடிதம்!

 

அதன் பின் கிஷோரும் விக்ரமும் வேகமாக செயல்பட்டார்கள். முதலில் அபினவ்விடம் கூறியது போல் டாக்டர் கைலாஷை கண்காணிக்க ஏற்பாடு செய்தான். முதலில் அவர் யார் யாருடன் தொடர்பு பேசுகிறார். குறிப்பாக விக்ரமும் அபினவ்வும் சந்தித்து வந்த பின் யாருடனாவது செல்பேசியில் பேசினாரா! கடந்த மூன்று வருடங்களாக அவரது வங்கி கணக்கின் பணவரவு போன்றவற்றை ஆராயக் கூறினான். 

 

அதன் பின் அவனது அலுவலகத்தில் கொரோனா காலத்தில் சேமித்து வைக்கப்பட்ட கோப்புகளை எதையும் அவர்கள் அழிக்கப்படாமல் வைத்திருந்தார்கள். எனவே பவித்ராவுடன் போடப்பட்ட முதல் ஒப்பந்தம்.. முழுமையாக செயல்படாததால்  இன்னும் காலாவதியாகாமல் இருந்தது. அதை வைத்தே வேலையை தொடங்கினார்கள். அதனால் தனியாக அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லாது போனது. கடலாதிகாரிகளிடம்.. இதே ஒப்பந்தத்தை காட்டிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய சில இடங்களில் கால அவகாசம் இல்லாததால் முன்னேற்பாடு செய்ய முடியாமல் போனது. ஆனால் அது அங்கு சென்றுப் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டான். ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலும்.. ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் மற்றும் ஸ்ரீலங்காவிற்கு செல்லும் சுற்றுலாவாசிகள் போல காட்டிக் கொள்ள டூரிஸ்ட் விசாவும் அப்ளை செய்துவிட்டான்.

 

இவ்வாறு வேலைகள் கடகடவென நடந்தன. விக்ரம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு பொழுதே.. பவித்ரா தெளிவாக அவளது ஆராய்ச்சிக்கான திட்டங்களையும்.. எங்கு என்ன செய்யப்‌ போகிறாள்‌ என்பதையும் குறிப்பிட்டு இருந்தாள். எனவே அதற்கான வேலைகளைத் தொடங்கினார்கள்.

 

ஒரு பக்கம் கல்யாண வேலைகளும்.. ஒரு பக்கம் இந்த வேலைகளும் சுறுசுறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது. நடுநடுவே அபினவ்வை அழைத்து பவித்ராவின் நலம் பற்றி விசாரிக்கவும் செய்தான். பவித்ராவிடம் பேசினான்.

 

கடைசி கட்ட வேலையின் போது.. நூலகத்தில் இருக்கும்.. பவித்ரா எழுதிய புத்தகத்தை எடுத்து வர விக்ரம் சென்றான்.

 

அங்கு சென்ற விக்ரமிற்கு அதிர்ச்சி காத்திருந்தது‌. 

 

அங்கு பவித்ரா எழுதிய ஆய்வு கட்டுரை அடக்கிய தொகுப்பை காணவில்லை. அதிர்ச்சியுடன் நூலக மேற்பார்வையாளரிடம் சென்ற விக்ரம்.. அந்த புத்தகம் தனக்கு வேண்டும் என்றும் யார் எடுத்து சென்றிருந்தாலும்.. நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் கூறினான்.

 

ஆனால் விக்ரம் கூறியதைக் கேட்டு திகைப்படைந்த அவர் “இல்லையே அந்த புத்தகத்தை யாரும் வாங்கலையே! அது அங்கேயே தானே இருக்கும்.” என்றார். உடனே சென்று தேடியும் பார்த்தார். அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அங்கு காணவில்லை. 

 

அவர் சிரித்தவாறு “இங்கே சில சமயம் இந்த மாதிரி திருட்டு நடக்கும் தான்.. ஆனா ரொம்ப வருஷத்துக்கு பிறகு.. ஒருத்தன் வந்து அடிக்கடி படிச்சிட்டு இருந்தான். கடைசில அவன் வந்து தூக்கிட்டு போயிட்டான் போல..” என்று அபினவ்வை குறிப்பிட்டார். இது கண்டிப்பாக அபினவ் செய்தது இல்லை என்று விக்ரமிற்கு தெரியும். எனவே இது அவனுடைய சந்தேகம் வலுப் பெற்றது. 

 

துப்பறிவாளர்களை தொடர்பு கொண்டு எதாவது துப்பு கிடைத்ததா என்று கேட்டான்.

 

“அவருடைய ஃபோன்ல இருந்து எந்த ஃகாலும் போகலை ஸார்! மேபி அவர் இன்னொரு ஃபோன் வைத்திருக்கலாம். இந்த சந்தேகம் வந்ததால் அவருடைய மனைவியோட அக்கவுன்ட் டிடெய்ல்ஸ் செக் செய்து பார்த்தோம். அதுல மாதம் மாதம்.. இருபதாயிரம் ரூபாய் பணம் போட்டுட்டு இருக்காங்க ஸார்! ஆனால் ஒரே அக்கவுண்ட்டில் இருந்து பணம் போடலை. நிறையா அக்கவுண்ட்டில் இருந்து பணம் போட்டிருக்காங்க! அவற்றை விசாரிக்க தான்.. நார்த் பக்கம் என்னோட ஆட்களை அனுப்பியிருக்கிறேன். அதோட முழு விசாரணை முடித்த பிறகு.. உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று இருந்தேன்.” என்று கூறினார்.

 

விக்ரம் “வாட்! நார்த் சைட்டா!” என்று திகைத்தவனுக்கு.. நிச்சயம் ஒரு கடத்தல் கும்பலின் தொடர்புடைய சில விபவரங்கள் பவித்ராவிற்கு தெரிந்துவிட்டதால் இந்த நிலைமை என்று புரிந்தது. 

 

எனவே “ஒகே! உங்க வொர்க்கை கன்டினியு செய்யுங்க! இனி அடிக்கடி எனக்கு அப்டேட் செய்துட்டு இருங்க…” என்று பேசியவாறு தனது காரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான். செல்பேசியை பேன்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு சாவியை எடுத்து நிமிர்ந்தவன், கார் கண்ணாடியில் கண்ட காட்சியை கண்டு அதிர்ந்தான்.

 

ஏனெனில் அவனின் பின்னால் கத்தியை ஓங்கியவாறு ஒருவன் நின்றருந்தான். அதைப் பார்த்து சட்டென்று சுதாரித்து இயல்பு போல் குனிந்தவன், உடனே துரிதமாக செயல்பட்டான். திரும்பி தனக்கு பின்னால் இருந்தவனைப் பிடித்து தள்ளிவிட்டான்.

 

கீழே விழுந்தவனுக்கு தனது திட்டம் தோல்வியடைந்து விட்டது தெரிந்துவிட்டது. அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை.. விக்ரமை கொல்ல வேண்டும். அவ்வாறு முடியவில்லை.. என்றால் அவனது கையில் அகப்பட கூடாது. எனவே கீழே விழுந்தவன், சட்டென்று எழுந்து ஓட ஆரம்பித்தான். அவனின் பின்னால் விக்ரமும் ஓடத் தொடங்கினான். ஆனால் இன்னொரு இளைஞன் விக்ரமை இடித்து தள்ளவிட்டு ஓடிவிட்டான். விக்ரம் சுதாரித்து எழுவதற்குள்.. அவர்கள் இருவரும் ஓடிவிட்டார்கள்.

 

சட்டையில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டவாறு அவர்கள் சென்ற திசை தெரியாமல் நின்றான். அதற்குள்.. அங்கு இருந்த சிலர் விக்ரமிடம் வந்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்கள். உடனே காவல் நிலையத்திடம் சென்று புகார் கொடுத்தான். அவர்கள் சிசிடிவியில் ஆராய்ந்து விட்டு.. அந்த இளைஞர்களை முதலிலேயே பார்த்துக்கிறானா என்று விசாரித்தார்கள். அவர்களை உன்னிப்பாக பார்த்தவன்.. இல்லை என்றான்.

 

“உங்களோடது பெரிய நிறுவனம் ஸார்! எதாவது தொழில் போட்டியின் காரணமாக இந்த மாதிலி கூலி ஆட்களை வச்சும் இந்த வேலை நடக்கலாம் ஸார்! நாங்க கண்டிப்பாக விசாரிக்கிறோம். நீங்க ஜாக்கிரதையாக இருங்க! இதுக்கு முன்னாடி இந்த மாதிரி உங்களை கொல்ல ட்ரை செய்திருக்காங்களா”

 

“நோ ஸார்!” என்ற விக்ரமின் புருவம் யோசனையில் சுருங்கியது.

 

“ஃபோர் டேஸிற்கு முன்னாடி.. சின்ன கார் ஆக்ஸிடென்ட் ஆச்சு! இப்போ அது வேற மாதிரி தெரியுது.” என்றான்.

 

“கண்டிப்பாக நாங்க விசாரித்து யார் எதுக்கு என்று கண்டுப்பிடிக்கிறோம். நீங்க எங்களுக்கு கோப்அப்ரெட் செய்யணும். இந்த சிட்டியை விட்டு ஒரு பத்து நாட்களுக்கு நீங்க எங்கேயும் போக கூடாது. எங்களோட கஸ்டடியில் இருக்கணும். உங்களுக்கு புல் செக்யுரிட்டி கொடுக்க சொல்கிறேன். அதுக்கு நீங்க அக்ரிமென்ட்ல சைன் போடணும். அதை கவுர்மென்ட்டில் புரொஷிடு செய்யணும். வெயிட் ப்ளீஸ்!” என்று உள்ளே சென்றவர், இரண்டு நிமிடத்தில் கையில் ஒரு பேப்பருடன் வெளியே வந்தார். 

 

அதை விக்ரமிடம் நீட்டி “இதுல சைன் மட்டும் போடுங்க..” என்று ஒரு பேப்பரை நீட்டினார்.

 

அதைப் படித்து பார்த்த விக்ரம் “ஸாரி ஸார்! என்னால் இதுக்கு ஒத்துக்க முடியாது. நான் கொடுத்த கம்பளைன்ட்டை வாபஸ் வாங்கிக்கிறேன். ஆக்சுவலி இன்னும் உங்க கிட்ட பேப்பரா தரலை. ஜஸ்ட் பேசிட்டு தான் இருந்திருக்கிறோம். அதனால் பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறேன்.” என்றுவிட்டு தனக்கு அருகில் நின்றிருந்த கிஷோரை பார்த்தான். அவன் ஆம் என்று தலையை ஆட்டினான்.

 

பின் எழுந்த விக்ரம் “தேங்க்யு ஸார்!” என்று கரம் குலுக்க கையை நீட்டினான்.

 

ஆனால் அந்த காவல் துறை அதிகாரி “நல்லா யோசிச்சுக்கோங்க! ஆல்ரெடி  இரண்டு தரம் ட்ரை செய்திருக்காங்க! நீங்க கஸ்டடியில் இருப்பது தான் உங்களுக்கு சேஃப்டி!” என்றார்.

 

“இல்லை ஸார்! நான் பார்த்துக்கிறேன். எனக்கு உன் உயிர் ரொம்ப முக்கியம்..” என்றுவிட்டு திரும்பி நடந்தான்.

 

“ஏன் எதாவது தனியார் செக்யுரிட்டிஸை அணுக போறீங்களா!” என்று கேட்டார்.

 

அதற்கு விக்ரம் திரும்பி அவரைப் பார்த்து “தன் கையே தனக்கு உதவி!” என்று சிரித்துவிட்டு வெளியேறினான்.

 

விக்ரம் சென்றதும்.. தனது இன்னொரு செல்பேசிய எடுத்த அந்த காவல் அதிகாரி “ஸாரி ஸார்! என்னால் அவரைப் பிடித்து வைக்க முடியலை.” என்று இந்தியில் கூறினான்.

 

—-------------------------

 

விக்ரமுடன் காரில் ஏறிய கிஷோர் “ஏன் ஸார் அதுல சைன் போடலை? உங்களுக்கும் பவித்ரா மேமுக்கும் பாதுகாப்பு கிடைக்குமே! ஆனா ஸ்ரீலங்கா டூர் தான் போக முடியாது.” என்றவன், திகைப்புடன் விக்ரமை பார்த்து “ஸார் அதனாலயா சைன் போடலையா!” என்று கேட்டான்.

 

விக்ரம் “எஸ் கிஷோர்! இது எனக்கு பாதுகாப்பு மாதிரி தெரியலை. என்னை எதுவும் செய்ய விடாம கட்டிப் போடரதுக்கு பாதுகாப்பு கொடுக்கிற மாதிரி.. இருந்தது. அவங்க நீட்டின பேப்பரை படிச்சு பார்த்தியா!” என்று கேட்டான்.

 

“எஸ் ஸார்! அதுல நீங்க இந்த சிட்டியை விட்டு தாண்ட கூடாது. இந்த சிட்டிக்குள்ளவே எங்காவது போக வேண்டும் என்றால்.. அவங்க கிட்ட இன்பார்ம் செய்துட்டு பாதுகாப்புடன் தான் போகணும்.. என்று இருந்தது. எஸ் யுர் ஆர் ரைட்! உங்களுக்கு இனி வேலையே வெளியே தான்!” என்றான்.

 

விக்ரம் “அது மட்டும் இல்லை. அந்த அக்ரிமென்ட் டைப் செய்த நேரத்தை பார்த்தியா இரண்டு மணி நேரத்திற்கு முன்னாடியே டைப் செய்துட்டாங்க! அதாவது என்னை அட்டேக் பண்ணி.. அந்த ரௌடிஸ் தப்பி ஓடின போது..” என்றான்.

 

கிஷோர் “ஸார் அப்போ!” என்று திகைப்புடன் பார்த்தான்.

 

விக்ரம் “எஸ்! போலீஸிற்கு என்னை கொல்ல ஆட்களை அனுப்பிய ஆட்களுக்கும்.. பவித்ராவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த ஆட்களுக்கும் தொடர்பு இருக்கு! பவித்ரா மறுபடியும் ரீசர்சை தொடங்காமல் இருக்க செய்யப்பட்ட சதிகளைத் தொடர்ச்சி இது!” என்றவனின் முகம் கல்லென இறுகியது.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 10

தன்னை கொல்ல முயற்சி நடந்திருக்கிறது.. என்று தெரிந்த உடனே அபினவ்வை தொடர்பு கொண்டு.. பவித்ராவின் நலன் பற்றி விக்ரம் விசாரித்தான்.

 

அபினவ் “அவங்க சேஃப்பாக தான் இருக்கிறாங்க! நான் அவங்களை கண்காணிச்சுட்டு தான் இருக்கிறேன். ஆனா ஸார் எனக்கு என்னை யாரோ கண்காணிச்சுட்டு இருக்கிற மாதிரியும் இருக்கு!” என்றான்.

 

விக்ரம் பதட்டத்துடன் “ப்ளீஸ் பீ கேர்புல்” என்றான்.

 

அபினவ் “நான் கவனமாக தான் இருக்கேன் ஸார்! ஆனா நீங்க பயப்படுகிற மாதிரி.. பவித்ரா மேம் உயிருக்கு ஆபத்து எல்லாம் வராது ஸார்! ஏன் சொல்றேன்னா!” என்று இழுத்தான்.

 

விக்ரம் “புரியுது! அப்படி ஆபத்து வரும் என்றால்.. அது முதலிலேயே நடந்திருக்கும். தேங்க்காட்!” என்று பெருமூச்சை இழுத்து விட்டான்.

 

பின் அபினவ் “அப்பறம்.. பவித்ரா மேம் கூடப் பேசின போது.. அவங்களுக்கு என்னாச்சு என்பதற்கான சின்ன க்ளு கிடைச்சுருக்கு! பட் நீங்க தான் பவித்ரா மேம் கிட்ட அதை விசாரிக்கணும். எனக்கு கன்பார்ம்மா தெரியலை.” என்றான்.

 

“என்ன விசயம் அபினவ்?”

 

“ஸார்.. அது!” என்று அபினவ் தயங்கினான்.

 

“ஒகே அபினவ்! நானே கேட்டுக்கிறேன்.” என்றவனின் முகத்தில் சிறு யோசனை படர்ந்தது.

 

பின் அபினவ் “அதை பவித்ரா மேம் உங்க கிட்டச் சொல்வது தான் சரி! கண்டிப்பா உங்க கிட்டச் சொல்வாங்கன்னு நினைக்கிறேன். நீங்க அடிக்கடி பவித்ரா மேம் நலன் பற்றி விசாரிக்கிறதை விட.. அவங்க தான் அதிகமா நீங்க எப்படியிருக்கீங்கனு கேட்டே இருக்காங்க! உங்க கூடப் பேசினேனான்னு கேட்கிறாங்க! நீங்க பேசறீங்களான்னு கேட்டால்.. வேண்டாம் என்று ஓடிராங்க! அவங்க உங்க கூட கல்யாணத்தையும்.. இந்த ஆராய்ச்சி பயணத்தையும் ரொம்ப எதிர்பார்க்கிறாங்க!” என்றான்.

 

விக்ரம் சிறு முறுவலுடன் “நானும்..” என்றான்.

 

பின் விக்ரம் மீண்டும் கவனப்படுத்தவும் அபினவ் “டொன்ட் வெர்ரி ஸார்! நான் ஜாக்கிரதையா பார்த்துக்கிறேன்.” என்றான்.

 

அதற்கு விக்ரம் “இந்த முறை நான் உன்னைச் சொன்னேன் அபினவ்! நீ ஜாக்கிரதையா இரு! இத்தனை வருடங்களா பவித்ராவிற்கு மனரீதியாக தவிர உடல்ரீதியாக எந்த பாதிப்பும் வரலை. ஆனால் அவளோட விசயத்தை நான் கையில் எடுத்திருக்கிறேன் என்கிற போது.. என்னை கொல்ல ட்ரை செய்யறாங்க! அது உனக்கும் நடக்கலாம். மறுபடியும் இந்த விசயம் தோண்டப்படுவதால்.‌. பவித்ராவுக்கும் ஆபத்து ஏற்படலாம். இரண்டு ஆட்கள் ஏற்பாடு செய்கிறேன். அவங்க உங்களுக்கு பாதுகாப்பா இருப்பாங்க! இன்னும் இரண்டு நாட்கள் ஜாக்கிரதையா இருக்கணும். அப்பறம் கல்யாணம் முடித்த கையோட நாங்க ஸ்ரீலங்கா கிளம்பிருவோம். முதல்ல சொன்ன மாதிரி.. நீ வேற வழியாக வந்து சேரு!” என்றான்.

 

“கண்டிப்பா ஸார்!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

-------------------------------

 

அதே நேரத்தில் டில்லியில் அமர்ந்திருந்தவனின் முன் இருந்த மேசையில் அபினவ்வின் படத்தை எறிந்தான்.

 

(அவர்களது உரையாடல் இந்தியில்..)

 

“நான் அப்பவே சொன்னேன். நீங்க கேட்கலை. இவன் விக்ரமோட டிடெக்ட்டிவ் ஏஜன்ட் என்று சொன்னீங்க! ஆனா இவன் அதை விட டேன்ஜர்! இவன் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளன்! இவன் பவித்ரா கூட எதுக்கு இருக்கான்? பவித்ரா கூட இவன் சேர்ந்தா என்ன ஆகும் என்று தெரியும் தானே! இத்தனை நாட்களாய் நாம் செய்ததிற்கு அர்த்தம் இல்லாம போயிரும். விக்ரம் வந்ததும் என்ன நடக்கும் என்று நாம் நினைச்சது எல்லாம் தப்பா தெரியுது ஜீ! விக்ரம் பவித்ராவை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் மட்டும் ஆக மாட்டான்னு நினைக்கிறேன். இந்த அபினவ்வை வச்சு எதோ பிளன் போடப் போறான்.” என்றான்.

 

அதைக் கேட்டு அமர்ந்திருந்தவன் கோபத்துடன் எழுந்து “இல்லை அதுக்கு விடக் கூடாது. அப்பறம் இத்தனை வருஷம் செய்தது வீணா போயிரும். சும்மா ஒண்ணும் அந்த வெளிநாட்டுக்காரன் காசை கொடுத்துட்டு இருக்கலை. மறுபடியும் ஆராய்ச்சி தொடங்க போவதுனு தெரிந்தா.. அவன் நம்மை தீர்த்து கட்டிருவான். பவித்ராக்கு என்னாச்சு என்று தான் நோண்டுவான் விக்ரமை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். ஆனா அவன் ஆராய்ச்சியை தொடங்கிறதுக்கு ஏற்பாடு செய்துட்டு இருக்கானா.. இதை விடக் கூடாது. இதுக்கு முடிவு கட்டிரலாம்.” என்றான்.

 

------------------------------

 

அபினவ் மொட்டை மாடியில் உள்ள சிறு அறையில் தங்கியிருந்தான். விக்ரமிடம் பேசிவிட்டு திரும்புகையில் அங்கு பவித்ரா நின்றிருந்தாள்.

 

“ஃபோன்ல விக்ரமா! என்ன சொன்னார்? எப்போ வருகிறார்? நாம் எப்போ போகிறோம்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

 

“வாங்க மேம்! உங்களைப் பற்றித் தான் பேசிட்டு இருந்தோம்.”

 

“ப்ச் மேம் என்று கூப்பிடாதீங்கனு சொன்னேன் தானே! பவித்ரா போதும். அவர் என்ன சொன்னார்? இரண்டு நாள்ல மேரேஜ் என்று  அம்மா சொன்னாங்க! அப்போ தான் வருவாரா?” என்று கேட்டாள்.

 

அபினவ் சிறு புன்னகையுடன் “மேம்! அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும். நானும் இந்த ட்ரவலை ரொம்ப ஆர்வமா எதிர்பார்க்கிறேன் தான்! ஆனா..” என்று இழுத்தவன் தொடர்ந்து “இந்த விசயமாக பேச வேண்டாம்... இது உங்களுக்கும் விக்ரம் ஸாருக்கும் இடைப்பட்ட விசயம்.. நான் பேசுவது தப்பு என்று நினைச்சேன். ஆனால் என்னால் கேட்காம இருக்க முடியலை. விக்ரம் ஸார் உங்களை ரொம்ப லவ் செய்கிறார். நீங்க?” என்றுக் கேட்டான்.

 

பவித்ராவின் முகம் மாறியது.

 

கடற்காற்றில் பறந்த முடியை ஒதுக்கியபடி.. எங்கோ வெறித்தாள். திரும்பி தன்னைப் பார்ப்பாள் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அவளது வெறித்த பார்வை மாறவில்லை. எனவே அபினவ் “பவித்ரா மேம்!” என்று அழைத்தான். ஆனால் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. எனவே சற்று கத்தி அழைத்துப் பார்த்தவன், “பவித்ரா! இங்கே பாருங்க..” என்று அவளது தோளைப் பற்றி குலுக்கவும், சுயநிலைக்கு வந்தாள்.

 

அபினவ் பதட்டத்துடன் “என்னாச்சு?” என்று கேட்கவும், பவித்ரா சுற்றிலும் பார்த்தாள். பின் அபினவ்வை பார்த்து “நான் மறுபடியும்..” என்றவள், மறுப்பாக தலையசைத்து விட்டு தலையை பிடித்தவாறு அமர்ந்துவிட்டாள்.

 

அபினவ் “என்னாச்சு பவித்ரா மேம்?” என்கவும், பவித்ரா “டைம் மிஷின் என்று ஒன்று இருக்கிறதா அபினவ்!” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

 

அபினவிற்கு அவள் கூறுவது புரியவில்லை. எனவே புருவத்தை சுருக்கவும், பவித்ரா “ஆனா நான்.. எனக்கு..” என்று தலையை குலுக்கியவள், “நீங்க கேட்டதும்.. எனக்கு பழைய ஞாபகம் வந்துருச்சு! விக்ரம் என்னை ப்ரோபோஸ் செய்தது.. அதற்கு நான் ஒகே சொன்னது.. ஆனா அது எனக்கு நினைச்சு பார்த்த மாதிரி இல்லை. அங்கேயே வாழ்ந்த மாதிரி இருக்கு! எஸ் என்னை கரெக்ட் செய்துட்டேன். அப்போதைக்கு என் இலட்சியத்திற்காக விக்ரமின் அப்பாவுக்கு ஒகே சொன்னாலும்.. நான் விக்ரமுக்கு ஃபோன் போட்டு பேசினேன். அவன் அதுக்கு அழகா சோல்யுஷன் சொன்னான். எல்லாமே நல்லா நடக்கிற மாதிரி இருந்துச்சு! என்னோட ரீசர்ச்! என்னோட கனவு! என்னோட இலட்சியம்.. எல்லாமே நடந்த மாதிரி இருந்துச்சு! அப்போ அதெல்லாம் என்னோட கற்பனையா..” என்று நெற்றியை கரங்களில் தாங்கிக் கொண்டாள்.

 

அபினவ் “இப்போ நீங்க சொன்ன நம்மளோட நினைவுகள் தான் டைம் மிஷின்! தப்பா போனதை திருத்திக் கொள்ளலாம். ஜாலியா இருக்கலாம். ஆனால் நீங்க சொன்ன மாதிரி எல்லாம் வெறும் கற்பனை தான்! அதுக்கு பிறகு.. நிகழ்காலத்திற்கு வந்து.. நம்ம வாழ்க்கையில் நடந்த விசயங்களால் மாறியிருக்கிற வாழ்க்கைக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டியது தான்!” என்றான்.

 

பவித்ரா “அழகா பேசறே!” என்று சிரித்தவள், கண்கள் கலங்க “ஆனா என்னால் மீண்டு வர முடியலையே! கற்பனையில் நாம் திருத்திக் கொண்ட வாழ்க்கையை வாழ நினைக்குதே!” என்றாள்.

 

அபினவ்விற்கு என்ன கூறிச் சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.

 

கண்களை அழுத்த துடைத்துக் கொண்ட பவித்ரா “நாளைக்கு தானே டாக்டர் வரணும் என்று சொல்லியிருந்தாங்க! அம்மா கிட்டச் சொல்லி இன்னைக்கு போகணும்.” என்றாள்.

 

அபினவ் “சும்மா சும்மா டாக்டர் கிட்டப் போகக் கூடாது. நாம் கொஞ்ச நேரம் பேசலாம். ரிலேக்ஸா ஃபீல் செய்வீங்க..” என்று பவித்ரா மருத்துவரிடம் செல்லவதைத் தடுக்க முயன்றான்.

 

அதற்கு பவித்ரா “இல்லை அபினவ்! டாக்டர் கிட்டப் பேசினா தான் எனக்கு ரிலேக்ஸா இருக்கும்.” என்றுவிட்டு கீழே இறங்கிச் சென்றாள். 

 

அபினவ்வும் அவளைத் தடுக்க இயலாது.. விக்ரமிற்கு வாக்களித்தபடி அவளது பின்னாலேயே சென்றான்.

 

கல்பனாவும்.. திருமணத்திற்கு முன்.. மகள் மனதில் குழப்பம் இல்லாமல் இருப்பது நல்லது என்று அழைத்து சென்றார். மாப்பிள்ளையின் உத்தரவுப்படி அபினவ்வையும் அழைத்துக் கொண்டு தான் சென்றார்.

 

மருத்துவரிடம் செல்ல வாடகை கார் பிடித்துக் கொடுத்த பவித்ராவின் தந்தை.. அபினவ் உடன் செல்வதால் தனக்கு வேலை இருப்பதாக தனது ஆடிட்டிங் தொழிலை பார்க்க சென்றுவிட்டார். எனவே கல்பனா, பவித்ரா, அபினவ்வை ஏற்றிக் கொண்டு அந்த கார் கிளம்பியது. 

 

இங்கு வந்த பின்.. ஒருமுறை மட்டுமே மருத்துவரிடம் பவித்ராவை அழைத்துச் சென்ற பொழுது உடன் சென்ற அபினவிற்கு ஏதோ சரியில்லாது போன்று இருந்தது. என்ன எது என்று புரியாமல் திரும்பி பவித்ராவை பார்த்தான். அங்கு பவித்ரா திருதிருவென விழித்தவாறு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

கல்பனா “என்னாச்சு பவி! திடீர்னு டாக்டர் கிட்டப் போகணும் என்று சொன்னே! இப்போ அமைதியா உட்காரமல் பதட்டமா இருக்கிறே! எதையும் நினைக்காதேடா!” என்றார்.

 

பவித்ரா “அம்மா! நாம எங்கே போகிறோம்?” என்று கேட்டாள்.

 

“டாக்டர் வீட்டுக்கு தான்..” என்று நேராக பார்த்தவர், கார் வழக்கமான வழியில் அல்லது வேறு வழியில் சென்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

 

“டிரைவர்! வேற ரூட்ல போயிட்டு இருக்கிற மாதிரி இருக்கு!”

 

“அந்த ரூட்ல கட்சி ஊர்வலம் போயிட்டு இருக்குங்க..”

 

“ஓ சரி சரி!” என்றவர், பவித்ராவிடம் திரும்பி “இதைப் பார்த்து தான் பயந்துட்டியா!” என்று அவளைச் சமாதானப்படுத்தினார்.

 

ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்த பவித்ரா மறுநிமிடம் நிமிர்ந்து அபினவ்விடம் “அபினவ்! நீங்களும் பயந்துட்டிங்களா.. பயப்படாதீங்க கார் டாக்டர் வீட்டுக்கு தான் போகுது. விக்ரம் உங்களை நம்பி போயிருக்கிறார். அதனால எனக்கு ஆபத்து வருமோன்னு பயந்திருப்பீங்க!” என்றாள்.

 

உடனே அபினவ் கார் டிரைவரிடம் காரை நிறுத்த கூறினான்.

 

டிரைவர் காரை ஓட்டியவாறு “எதுக்குங்க..” என்றான். கல்பனாவும் திகைப்புடன் எதற்கு என்பது போல் பார்த்தார்.

 

அபினவ் “காரை நிறுத்துங்க டிரைவர்!” என்று கத்தினான்.

 

ஆனால் கார் முன்னிலும் வேகமெடுத்து அருகில் இருந்த.. காலியான கோர்ட்டஸ் உள்ளே சென்றது. இடியும் நிலையில் இருந்ததால் காலி செய்யப்பட்ட நான்கு மாடி கட்டிடங்கள் சூழ இருந்த பழைய கவர்மென்ட்ஸ் கோர்ட்டர்ஸ் அது! அபினவிற்கு எதோ சரியில்லை என்று தோன்றியது.

 

எனவே ஸ்டெரிங்கை பிடித்து நிறுத்த முயன்றவன், பின் டிரைவரை அடித்து அவனை வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்தினான். கீழே விழுந்த அவன் எழுந்து ஓடி விட.. நான்கு புறமும் கட்டிடத்திற்குள் இருந்து கையில் அரிவாளுடன் ஆட்கள் காரை நோக்கி ஓடி வந்தார்கள். 

 

சட்டென்று காரின் டிரைவர் சீட்டுக்கு தாவிய அபினவ் காரை திருப்பி வெளியேற முயன்றான். ஆனால் அடியாட்கள் காரின் வழியை மறைந்து நின்றார்கள். சட்டென்று வேகமெடுத்து பின்னால் நின்று அவர்களை தாண்டி ஓட்டி அபினவ் வெளியே வந்தும்.. பல வாகனங்கள் செல்லும் சாலைக்கு வந்து பிறகே மூச்சு வந்தது.

 

கல்பனாவோ அதிர்ச்சியும் குழப்பமுமாக அமர்ந்திருந்தார். பின் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த பவித்ராவை அணைத்து கொண்டார்.

 

கல்பனா “தம்பி என்ன நடக்குது இங்கே?!” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டார்.

 

அபினவ் “வழிப்பறி தான் ஆன்ட்டி!” என்று சமாளித்தான்.

 

பின் சாலையின் ஓரமாக காரை நிறுத்திய அபினவ் “இந்த காரில் இருப்பதும்.. சேஃப் இல்லை. இறங்குங்க..” என்றான். பின் தனது செல்பேசியை எடுத்தவன், யாரையோ தொடர்பு கொண்டு.. அவர்கள் நின்றுக் கொண்டிருக்கும் இடத்தின் அடையாளங்களை கூறினான்.

 

 அப்பொழுது இன்னொரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியவன் “ஸாரி! எங்க காரை வேண்டுமென்ன ஒரு பைக் மோதிவிட்டு.. அந்த பைக்காரன் சண்டைக்கு நின்னுட்டான். அதனால் உங்களைப் பின் தொடர முடியலை. ஆனா சம்திங் நடந்திருக்கு போல! குட் டு ஷி ஆல் ஆர் குட்! ப்ளீஷ் காரில் ஏறுங்க..” என்றான்.

 

கல்பனா பீதியுடன் அபினவ்வை பார்க்கவும், அபினவ் “விக்ரம் ஸார்.. பவித்ரா மேம் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்தவங்க தான் இவங்க! டவுட் வேண்டாம் வாங்க..” என்று கார் கதவை திறந்து விட்டான்.

 

கல்பனா “இங்கே என்ன நடக்குது. இது சாதாரணமா பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை மாதிரி தெரியலை. ஆபத்து நிச்சயம் வரும் என்று நினைச்சு அரென்ஜ் செய்த மாதிரி இருக்கு! முதல்ல நீங்க.. இப்போ இவங்க! அப்படி என்ன ஆபத்து வரப் போகுது?” என்று கவலையும் கோபமுமாக கேட்டார்.

 

அபினவ் “நீங்க பயப்படுகிற மாதிரி ஒன்றும் இல்லைங்க ஆன்டி! காரில் ஏறுங்க..” என்றான்.

 

ஆனால் கல்பனா “முடியாது. இத்தனை நாட்களாய் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எப்போ இந்த விக்ரம் வந்தானோ.. அப்போ இருந்து ஏதோ சரியில்லை மாதிரி இருக்கு! ஒருதரம் என்னை இழந்துட்டு மறுபடியும் மீட்டிருக்கோம். மறுபடியும் அவளை இழக்க தயாராக இல்லை. நீங்கெல்லாம் போகலாம்.” என்று பவித்ராவை அழைத்துக் கொண்டு நடக்க முற்பட்டார். ஆனால் பவித்ரா அமைதியாக காரில் ஏறியமர்ந்தாள்.

 

கல்பனா மகளை அழைத்துப் பார்த்தார். ஆனால் அவள் அமைதியாக அமர்ந்திருக்கவும், வேறுவழியின்றி காரில் ஏறினார். ஆனால் வீட்டிற்கு சென்ற அடுத்த நிமிடமே விக்ரமை அழைத்து இந்த திருமணத்தை நிறுத்த கூறினார்.

 

அன்று மாலையே விக்ரம் அங்கு வந்துவிட்டான்.

 

வெளியே நின்றிருந்த அபினவ்வின் தோளைத் தட்டி “தேங்க்ஸ் அபினவ்!” என்று அன்று காலையில் ஏற்பட இருந்த ஆபத்தை புத்திசாலித்தனமாக தவிர்த்துவிட்டதிற்கு நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றான்.

 

அங்கு பவித்ராவின் பெற்றோர்கள் பார்த்தவன், “ஏன் கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்க! எனக்கு மட்டுமில்லை. உங்க பொண்ணுக்கும்.. இந்த கல்யாணம் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு தெரியும் தானே!” என்று கேட்டான்.

 

அதற்கு கல்பனா “எங்க பொண்ணு உயிரோட இருப்பது தான் எங்களுக்கு முக்கியம்! நீங்க போகலாம். உயிரை விட.. அவ நிம்மதியா இருக்கணும் என்று நினைக்கிறேன். அந்த நிம்மதியை அவளுக்கு கொடுங்க! ப்ளீஸ் போயிருங்க..” என்று கையெடுத்து கும்பிட்டார்.

 

இடுப்பில் இரு கரங்களையும் வைத்துக் கொண்டு பெருமூச்சை இழுத்துவிட்ட விக்ரம் அங்கு ஷோபாவின் ஓரத்தில் அமர்ந்திருந்த பவித்ராவை பார்த்தான். 

 

பவித்ராவிடம் சென்ற விக்ரம் “இனி நீதான் புரிய வைக்கணும் பவித்ரா! நம்ம மேரேஜ்ஜிற்கான ஆரென்ஜ்மென்ட்ஸ் மட்டுமில்ல. மற்ற ப்ரோசஸிம் ஆல்மோஸ்ட் முடிஞ்சுருச்சு! இந்த டைமில் பேக்அப் ஆக முடியாது. நானும் விடுவதா இல்லை. நீதான் இவங்களை கன்வின்ஸ் செய்யணும் பவித்ரா!” என்றான்.

 

உடனே கல்பனா கோபத்துடன் வந்து “அவளே ஒரு தெளிவு இல்லாம இருக்கா! அவ கிட்ட இந்த மாதிரி எல்லாம் சொல்லி மறுபடியும் குழப்பி விடாதீங்க..” என்று கத்தினார்.

 

அதற்கு விக்ரம் “பவித்ரா மாதிரி தெளிவாவும், புத்திகூர்மையாவும் யாராலும் நடந்துக்க முடியாது ஆன்டி! அதனால தான்.. பவித்ரா இன்னும் உங்க கூடப் பத்திரமா இருக்கா!” என்றான்.

 

கல்பனா புரியாது பார்க்கவும், அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பவித்ரா எழுந்து “ஆமாம்மா! நான் மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி நடந்துட்டு இருக்கிறதால் தான்.. உயிரோட இருக்கேன். அப்போ எனக்கு சப்போர்ட்டுக்கு யாரும் இல்லை. இப்போ விக்ரம் இருக்கார். மற்றவங்க வாழ்க்கை மாதிரி என் வாழ்க்கை இல்லை அம்மா! என்னோட கனவு நிறைவேறுவது தான்.. என்னோட வாழ்க்கையின் நோக்கம்! அந்த வாழ்க்கையை மட்டுமில்ல என் கனவையும் விக்ரம் பார்த்துப்பார். நான் அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன். அவர் கூடத் தான் இருப்பேன்.” என்று தெளிவாக தனது கருத்தை கூறினாள்.

 

பவித்ராவின் பெற்றோர் அதிர்ச்சியும் குழப்பமுமாக நின்றிருந்தார்கள்.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

இந்த கதை முழுக்க முழுக்க எனது கற்பனையே.. யார் மீதும் எவ்வித கருத்து திணிப்பும் கொள்ளவில்லை.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 11

தனது மகள் தெளிவாக தான் இருக்கிறாள்.. என்று மகிழ்வதா! இத்தனை வருடங்களாக நடித்தற்கான காரணம் பயங்கரமானதாக இருக்குமோ என்று அச்சப்படுவதா! என்று இரு வேறு மனநிலையில் பவித்ராவின் பெற்றோர் அமர்ந்திருந்தார்கள்.

 

கல்பனா “ஏன் பவிமா! என்னாச்சு! இப்போ என்ன நடந்தது என்று கேட்கிறதுக்கே எனக்கு பயமா இருக்கு! உன்னை கொல்ல முயற்சி செய்திருக்காங்க! அப்படி என்ன தான் நடந்தது? நீ இப்படி சித்தம் கலங்கினவ மாதிரி நடிச்சுட்டு இருந்திருக்கே! முதலியேயே ஏன்டா சொல்லுலை?” என்று கண்கள் கலங்க வரிசையாக கேள்விகள் கேட்டார்.

 

விக்ரம் “எதாவது மாஃபியா கும்பல் கிட்ட மாட்டிட்டியா பவி! அவங்களோட கனெக்ஷன் தான் பெருசு! இத்தனை நாள் இல்லாம உனக்கு ஹெல்ப் செய்கிறேன் என்று தெரிந்த பிறகு.. எனக்கும் கொலை முயற்சி நடந்திருக்கு! நீ யாருக்கும் இதைப் பற்றிச் சொல்லாம இத்தனை வருடங்களா உன்னை நீயே இந்த மாதிரி நடிச்சு பாதுகாக்கிறதைப் பார்த்த விசயம் பெருசு என்று தான் தோணுது. சொல்லு பவித்ரா என்ன நடந்துச்சு?” என்று கேட்டான்.

 

பவித்ரா விக்ரமிடம் “என் பெரெண்ட்ஸால் நான் நடிச்சுட்டு இருக்கேன் என்கிறதை கண்டுப்பிடிக்க முடியலை. நீங்க எப்படிக் கண்டுப்பிடிச்சீங்க!” என்று கேட்டாள்.

 

அதற்கு விக்ரம் “அவங்க உன் கூட வாழ்ந்துட்டு இருந்தவங்க! நீ கஷ்டப்படுவதை கூட இருந்து பார்த்தவங்க! ஆனா நான்..” என்று குன்றலுடன் தலையை குனிந்து கொண்டான்.

 

பின் நிமிர்ந்து “இப்போ நீ எல்லாம் எங்க கிட்டச் சொல்லியாகணும் பவித்ரா! என் வைஃப்பை பாதுகாப்பது என்னோட கடமை! என்னோட எந்த முடிவிலும் மாற்றம் இல்லை பவி! உன்னை கல்யாணம் பண்ணுவதிலும் சரி! நாம் ரீசர்ச்சை தொடங்க போவதிலும் சரி! எனக்கு தெரிந்தாகணும்.. உனக்கு என்ன நடந்ததுனு?” என்று பவித்ராவை நேராக பார்த்துக் கூறியவனின் குரலில் தவிப்பும் தெரிந்தது.

 

பவித்ராவின் கண்கள் சிறிது கலங்கியது. பின் சிறு பெருமூச்சை இழுத்துவிட்டவள், கூறத் தொடங்கினாள்.

 

“முதலில் சொன்ன மாதிரி.. ஃபோட் ரிப்பேர் ஆச்சுன்னு எங்க ஃபோட்டில் ஏறின நாலு பேர்.. அப்பறம் எங்க குழுவை சேர்ந்தவங்க என்று நாங்க எல்லாரும்.. குமரி கண்டத்தோட மையப்பகுதி என்று கணக்கிட்ட இடத்தை சென்றடைந்தோம். என்னால எக்ஸைட்மென்ட்டை அடக்க முடியலை. பரந்த கடல் பரப்பை என் கண்களால் பார்க்க முடிந்தளவிற்கு பார்த்துட்டு இருந்தேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்.. இங்கே பெரிய நிலப்பரப்பு இருந்திருக்கிறது.. என்கிற நினைப்பே என் மனதிலும் மூளையிலும் ஆக்ரமிச்சுட்டு இருந்ததாலே.. கப்பல்ல நடந்த பரபரப்பை நான் கவனிக்காம விட்டுட்டேன். கரையில் இருக்கிற ஆபிஸிற்கும் எங்களுக்கும் இருக்கிற கனெக்ஷன் கட் ஆகிருச்சு என்று எப்படி கட் ஆச்சுனு தெரியலைனு அதை சரிச் செய்ய பரபரப்பாக இயங்கிட்டு இருந்தாங்க! நான் என்னோட தனி உலகில் இருந்தேன். கடலுக்குள் இறங்க இதுதான் சரியான இடம் என்று ஆழ்கடல் நீச்சல் தெரிந்தவர்களைப் பார்க்க அவங்க தங்கியிருந்த ரூமிற்கு போய் அவங்களை ரெடியாக சொன்னேன். அவங்க ஒரு மாதிரி கண்களை திறக்க முடியாம உட்கார்ந்திருந்தாங்க! தட்டி எழுப்பிப் பார்த்தேன். அப்படியே சரிஞ்சுட்டாங்க! ஏதோ சரியில்லை என்று கப்பல் இயங்குகிற ரூமிற்கு போனேன். அங்கே நடுவில் ஏற்றின அந்த நாலு பேர் இரண்டு இரண்டு பேரையா கடலில் வீசிட்டு இருந்தாங்க..” 

 

பவித்ரா பேசியதைக் கேட்டு கொண்டிருந்தவர்கள்.. அதைக் கேட்டு அதிர்ந்தார்கள்.

 

பவித்ரா தொடர்ந்து “என்னால அசையக் கூட முடியலை. அப்போ அவங்க பேசியதைக் கேட்டு இன்னும் ஷாக் ஆகிட்டேன்.” என்று அவர்கள் பேசியதைக் கூறினாள்.

 

(அவர்கள் ஆங்கிலத்தில் பேசினர்.)

 

“இவன் கால்ல நான் இந்த பெட்டியை கட்டறேன். நீ அவன் காலில் கட்டு.. இரண்டு நாளா.. நாம கொண்டு வந்த பெட்டியில கனமான தின்க்ஸ்.. யாருக்கும் தெரியாம சேர்த்து வைக்கவே சரியா இருந்துச்சு! அதுவும் இந்த கப்பல் கேப்டன் இந்த காலி பெட்டியில என்ன இருக்குன்னு கேட்டு நச்சரிச்சுட்டே இருந்தான்.” என்று அருகில் இருப்பவனிடம் கூறினான்.

 

அதற்கு அவன் “சொல்லியிருக்க வேண்டியது தானே! உங்களுக்கு எமன் என்று!” என்கவும் நான்கு பேரும் பலமாக சிரித்தார்கள்.

 

பிறகு ஒருவரை இரண்டு பேர் பிடித்து கடலில் எறிந்தார்கள்.

 

“கடல்ல மிதக்க மாட்டாங்க தானே!”

 

“நோ சான்ஸ்! அதனால தான் மூக்கு, வாய், காதுல பஞ்சை வச்சு அடைக்கிறோம். கால்ல கட்டின பெட்டியின் கனம் தாங்காம மூழ்கிருவாங்க! அப்பறம் இவங்களை அந்த மீன் பார்த்துக்கும்.” 

 

“சரி! சீக்கிரம் இவங்களுக்கு கொடுத்த ட்ரீங்கோட பவர் இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கும். இன்னும் இங்கேயே இன்னும் இரண்டு பேர் இருக்காங்க! அப்பறம் கீழே இரண்டு பேர்.. அப்பறம் அந்த லேடி என்று மொத்தம் ஐந்து பேரை காலி செய்யணும். அப்பறம் நாம கீழே கப்பல்ல பெரிய ஓட்டையை போடணும். அப்பறம் இங்கே இருக்கிற ஃபோட்டை யுஸ் செய்து நாம் வெளியேறிட்டு கான்டெக்ட் செய்தா.. நம்மளை வந்து ரெஸ்குயு செய்வாங்க! இதுதான் பிளன் இதையும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் செய்தாகணும். க்விக்” என்று மற்றவர்களை அவசரப்படுத்தியவாறு அடுத்த மயங்கி கிடந்த கப்பல் கேப்டனின் காலில் பெட்டியை கட்டினான்.

 

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவிற்கு திக்கென்று இருந்தது. அப்பொழுது தான் அவர் கடலின் பரந்த பரப்பை இரசித்துக் கொண்டிருந்த பொழுது.. டீ கொண்டு வந்து தந்தார்கள். அதை அவள் பருகவில்லை. அதற்குள் கையில் வைத்திருந்த கப் கைத் தவறி கடலில் விழுந்துவிட்டது. அதைக் கூட ஏதோ நல்ல சகுனம் என்று அதனுடன் சம்பந்தப்படுத்தி நினைத்தாள். 

 

பின்பே ஆழ்கடல் நீந்துபவற்கு முன்.. அவர்கள் எதுவும் சாப்பிடக் கூடாது என்பது நினைவிற்கு வரவும்.. அவர்களை எதுவும் பருக வேண்டாம் என்றுத் தடுத்து.. அவர்களை தயாராக சொல்லச் சென்றாள். ஆனால் நடந்தது வேறாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை அவளால் புரிந்துக் கொள்ள கூட முடியவில்லை. அந்தளவிற்கு உள்ளம் குருதி என்று அனைத்தும் மரத்துப் போய் நின்றிருந்தாள்.

 

அப்பொழுது ஒருவன் “சொல்ல போன இவங்களோட சாவிற்கு நாம் காரணம் இல்லை. அந்த பொண்ணு தான் காரணம்! ரீசர்ச் என்று அந்த பொண்ணு கிளம்பாம இருந்திருந்தா.. இவங்க வாழ்க்கை முடிந்திருக்காது.” என்றான்.

 

“அந்த பொண்ணை மட்டும் கொன்றிருக்கலாம்.”

 

“இடியட்! ஏதோ விசயம் இருக்கிறதால் தான்! இப்படி கப்பல் கவிழ்ந்து.. எல்லாரும் சாகற மாதிரி பிளன் போட சொன்னாங்க! இல்லைன்னா அவங்களுக்கு அப்படி ஆர்டர் போடத் தெரியாதா! பேசாம சொல்வதை சீக்கிரம் செய்!” என்றான்.

 

அடுத்தவர்களையும்.. அதே போல் கடலில் வீசி ஏறிந்தனர்.

 

அத்தனை நாட்கள் உடன் பேசிப் பழகியவர்களை அனாசயமாக கடலில் வீசுவதைப் பார்த்த பவித்ராவிற்கு உடல் உறுப்புகள் செயலற்று போனது. அடுத்து அவளையும் இதே போல் வீசப் போகிறார்கள் என்பது புலப்படவும், உயிர் பயத்தில் சத்தமில்லாமல் கீழே விரைந்தாள். மயங்கி சரிந்தவர்களை எழுப்பப் போனவளுக்கு அவர்கள் இறந்துவிட்டது பயங்கரமாய் புரிந்தது. அப்பொழுது படியிறங்கும் சத்தம் கேட்கவும், சரக்கு பொருட்கள் பத்திரப்படுத்தி வைக்கும் கீழ் தளத்தின் கதவை திறந்து உள்ளே நுழைந்துக் கொண்டு நடுங்கும் கரங்களால் கதவை மெதுவாக மூடிக் கொண்டாள்.

 

கும்மிருட்டாக இருந்த பகுதியில் வியர்க்க விறுவிறுக்க பவித்ரா அமர்ந்திருந்தாள்.

 

மேலே தளத்தில் மனிதர்கள் ஓடும் சத்தமும்.. கீழே கடலலையின் ஆராவாரமும்.. சற்றுமுன் கண்ட காட்சியின் தாக்கமும், காற்று உள்ளே புகுந்து வெளி வர சிறு வழி கூட இல்லாததால் ஏற்பட்ட மூச்சு திணறலும் என்று எல்லாம் சேர்ந்து.. அவளை தனி பாதாள உலகத்திற்கு அழைத்து சென்றன. அங்கு தலைகுப்பற விழுந்தவள், கீழே சென்றுக் கொண்டே இருந்தாள். எங்கே தனது தலை முட்டி.. தலை கபாலம் பிளவுப் படப் போகிறதோ.. என்று மார்பை கையில் பிடித்தபடி கீழே சென்றுக் கொண்டிருந்தவள்.. சட்டென்று விழுந்தாள். ஆனால் அடி எதுவும் படவில்லை. வியர்த்து ஒழுக எழுந்து அமர்ந்தவளுக்கு.. அவள் அதே இடத்தில் தான் அமர்ந்திருப்பது புரிந்தது. 

 

இந்த இறுக்கமான சூழ்நிலை காரணமாக மயக்கம் ஏற்பட்டுக்கிறது என்று புரிந்தது. பயத்துடன் மேலே பார்த்தவளுக்கு.. எந்த சத்தமும் கேட்கவில்லை. மூச்சு திணறுவது போல் இருக்கவும், சென்ற முறை போல்.. அவளால் சமாளிக்க முடியவில்லை. எனவே மெல்ல தளத்தின் கதவை சிறிதாக திறந்துப் பார்த்தாள். அந்த இடைவெளியில் புகுந்த காற்று அவளது மூளைக்கும் இதயத்திற்கும் புத்துணர்வு கொடுத்தது.

 

அப்பொழுது தோன்றாத தைரியம் தற்பொழுது தோன்றியது.

 

மற்றவர்களுக்கு என்ன ஆனாலும் சரி.. தான் பிழைக்க வேண்டும்.. என்று மறைந்துக் கொண்டது கோழைத்தனமாக பட்டது. தன்னையே திட்டிக் கொண்டவளுக்கு ஏன் தனக்கு இவ்வாறு தோன்றியது என்று நினைத்துப் பார்த்தாள். அவள் பார்த்த காட்சியே காரணம் என்று புரிந்தது. இனி எதிர்த்து போராட வேண்டும்.. எப்படியும் ரோந்து செல்லும் கப்பல்கள் வரும் வரை.. இங்கு இருந்து அவர்களைப் பிடித்து தர வேண்டும் என்று தன்னைத் திடப் படுத்திக் கொண்டு மெல்ல கதவை திறந்துக் கொண்டு மேலே வந்தாள். கண்ணில் பட்ட தீயணைப்பு சிலிண்டரை ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டாள்.

 

நீர் மூழ்கி வீரர்கள் இருந்த அறைக்கு மெல்ல சென்றுப் பார்த்தாள். அங்கு அவர்களைக் காணவில்லை. மனதிற்கு திக்கென்று இருந்தது. எனவே தனது மொத்த திடத்தையும் திரட்டிக் கொண்டு கப்பலின் மேல் பகுதிக்கு செல்லும் படிக்கட்டில் ஏறினாள். அங்கு அவள் கண்ட காட்சி அவளை திடுக்கிட செய்தது.

 

கப்பலில் இருந்தவர்களைக் கொன்று கடலில் வீசியவன் தலைகீழாக கப்பல் விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பதை தான் முதலில் பார்த்தாள். அதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவனுக்கு அருகில் தோன்றிய அசைவால் அவளது கவனம் அங்கு சென்றது. நெட்டு குத்தலாக பச்சை உடலுடன் நின்றிருந்த மனித உருவம்.. பவித்ராவை பார்த்ததும் சட்டென்று தொங்கிக் கொண்டிருந்தவனுடன் கடலில் குதித்தது.

 

கண்களால் பார்த்ததை மனதிலும் மூளையிலும் பதிய வைக்க முடியாமல் திணறிய பவித்ரா சுதாரித்து அங்கு ஓடிச் சென்று எட்டிப் பார்த்தாள். அங்கு யாரும் இருந்ததிற்கான அறிகுறிகள் இல்லை. சுற்றிலும் பார்த்தாள். அவளைத் தவிர அந்த கப்பலில் யாருமில்லை. தான் கண்ட காட்சி பிரம்மையோ என்று சிகைக்குள் கரங்களை விட்டவாறு கடலைப் பார்த்தாள்.

 

நடந்ததைக் கூறிக் கொண்டிருந்த பவித்ரா.. கூறுவதை நிறுத்திவிட்டு சுற்றிலும் நின்றிருந்தவர்களைப் பார்த்தாள். அனைவரும் திகைப்புடன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

 

மெல்ல பவித்ரா “என்ன எனக்கு பைத்தியம் தெளியலையோ.. என்று நினைச்சுட்டிங்களா..” என்று சிரித்தாள்.

 

யாரிடம் இருந்து பதிலில்லை.

 

தனது பெற்றோர்களை பார்த்து “நான் சொல்வதை நம்பறீங்களா அப்பா! அம்மா!” என்று கேட்டாள்.

 

அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

 

தற்பொழுது விக்ரமை பார்த்து “நான் சொல்வதை நீங்க நம்பறீங்களா?” என்று கேட்டாள்.

 

அதற்கு விக்ரம் “நம்பறேன் பவித்ரா! அப்பறம் என்னாச்சு! ஏன் இதை போலீஸிடம் தெளிவாக சொல்லுலை. கப்பலில் இருந்தவர்கள் மாயமாய் மறைச்சுட்டாங்க.. பச்சை மனிதன் அதாவது குமரி கண்டத்தில் வாழ்ந்த மாந்தர்களை பார்த்தேன் என்று மட்டும் ஏன் சொன்னே? அவர்கள் யார் என்று உனக்கு தெரிஞ்சுருச்சா? தொடர்ந்து அவங்க உனக்கு கொலை மிரட்டல் கொடுத்தாங்களா? அதுதான் இப்படியிருக்கிற மாதிரி காட்டிட்டியா? சும்மா ரீசர்ச்சிற்கு தானே போன.. உன்னையும் உன் கூட வந்தவர்களையும் கொல்ல நினைத்திருக்கிறாங்க.. என்றால்.. அதுக்கு ரிஷன் என்னவா இருக்கும் என்று நினைக்கிறே?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினான்.

 

அவள் கூறியதை நம்பியதோடு மட்டுமில்லாது.. அவளது நிலையையும் அவள் சந்தித்த சம்பவங்களுக்கும் காரணத்தையும் சரியாக கணித்து விபரங்களைக் கேட்டவனை கண்கள் கலங்க பார்த்தாள்.

 

அதுவரை தோன்றிராத ஏதோ உணர்வு இருவரையும் ஆட்கொண்டது.


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 12

கன்னங்களில் வழிந்த கண்ணீரை அழுத்த துடைத்துக் கொண்ட பவித்ரா “சொல்கிறேன் விக்ரம்! அப்போதைய மனநிலையை அப்படியே சொல்றேன். என் கண் முன்னாடியே நடந்தது எனக்கு நிஜமா ஒண்ணும் புரியலை. என் கூட இருந்தவங்களை.. நான்கு பேர் கடல்ல வீசினாங்க! நான் ஏதோ இருட்டு குகைக்குள்ள போனேன். அப்பறம் யாரோ வேற மாதிரி ஒருத்தங்களை பார்த்தேன். அப்பறம் அந்த கப்பல்ல என்னைத் தவிர யாருமே இல்லை. இதுதான் மறுபடியும் மறுபடியும் தோன்றி.. என் மனசுல பதிஞ்சுருச்சு!” 

 

“என் கூட இருந்தவங்களை கொன்னுட்டாங்க என்றால்.. அவங்களைக் கொன்னவங்க எங்கே? எனக்கு கொஞ்ச நேரம் எதுவும் புரியலை. அப்படியே நல்லா தூங்கிட்டேன்னு நினைக்கிறேன். அப்போ எனக்கு ஒரு கனவு வந்துச்சு! என்னைக் கொல்ல வந்தவங்களை.. நான் தேடி வந்த குமரி கண்டத்து மாந்தர்கள் கொன்று என்னைக் காப்பாத்தற மாதிரி! தூங்கி எழுந்துப் பார்த்தா.. அது கனவு மாதிரியே தெரியலை. அதுதான் நிஜம் என்கிற மாதிரி இருந்துச்சு! அது கனவு என்று சொல்லக் கூட யாரும் இல்லை. சுற்றிலும் பார்த்துட்டே இருந்தேன். அந்த குமரி கண்டத்து மாந்தர்கள் மறுபடியும் வருவாங்களோன்னு!”

 

“நாள் முழுக்க கப்பலை சுத்தி சுத்தி வந்தேன். பசிச்ச போது.. கப்பல்ல இருக்கிறதைச் சாப்பிட்டேன். துக்கம் வந்தா துங்குவேன். கடல்ல இறங்கி அவங்களைப் பார்க்காலாமா என்று பலமுறை யோசித்து நாலு முறை ட்ரை செய்திருக்கேன். திடுமென்று கப்பல் குமரி கண்டத்துல போயிட்டு இருக்கிற மாதிரி தோணும். திடுமென்று பார்த்தா.. கடலுக்குள்ள.. மீன்களா அவங்க வாழ்ந்துட்டு இருக்கிற மாதிரி தோணும். இப்படியே எத்தனை நாட்கள் போச்சுன்னு எனக்கு தெரியாது. அப்போ தான் கடல்துறை அதிகாரிகள் என்னை மீட்டெடுத்தாங்க!”

 

“எல்லாருக்கும் என்னாச்சு என்று விசாரிச்சாங்க! எனக்கு அப்போ என்ன தோன்றியதோ அதுதான் சொன்னேன். டாக்டர் உங்க கிட்டச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். எஸ்.. சில சம்பவங்கள் என் நினைவில் இருந்து அழிச்சுருச்சு! நினைவில் இருந்த சம்பவங்களை சொன்னால்.. என்னை என்னமோ மாதிரி பார்த்தாங்க! எனக்கும் குழப்பமா இருந்துச்சு! நிறையா மனிதர்களை பார்க்க பார்க்க.. என்னால் கனவு உலகத்தில் இருந்து வெளி வர முடிந்தது. என்னை ஹாஸ்பெட்டல அட்மிட் செய்திருந்தாங்க! அதனால் மருந்தின் உதவியின் காரணமாக நல்ல துக்கமும் கிடைக்கவும், எனக்கு எல்லாம் தெளிவாச்சு! என்னோட நினைவில் இருந்து அழிந்து போன விசயம் எல்லாம் ஞாபகம் வந்துச்சு! நாலு பேர் போலீஸ் கிட்ட எங்களை கொல்ல வந்ததை சொல்ல நினைச்சேன். ஆனாலும் ஒரு கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கலை. அந்த உருவம் மனித உருவமா.. இல்லை வேறு எதாவது மிருகமா! அதுதான் அந்த நான்கு பேரையும் கொன்றிருக்கலாம் என்று தெரிந்தது. அது எனக்கு நிச்சயமா புரியலை. நான் பார்த்த உருவம் என்னோட கற்பனையோ என்று கூட எனக்கு கன்பியுஸ் ஆச்சு! போலீஸ் வருகைக்காக காத்திருக்கும் வரை எனக்கு பொறுமை இல்லை. அதனால் மெல்ல எழுந்து கதவிடம் போன போது.. வெளியே சில பேச்சு குரல்கள் கேட்டுச்சு! அவங்க இந்தியில் பேசிட்டு இருந்தாங்க!”

 

அவர்கள் பேசியதை அப்படியே கூறலானாள்.

 

“ரொம்ப போரடிக்குது ஜீ! இந்த நாலு நாளா.. வீணா டைம் வேஸ்ட் செய்துட்டு இருக்கோம் என்று நினைக்கிறேன். இந்த பொண்ணுக்கு புத்தி பேதலிச்சுருச்சுன்னு நினைக்கிறேன்.” என்று ஒருவன் கூறினான்.

 

“அப்படித்தான் போல! இதுக்கு கப்பலிலேயே செத்துருக்கலாம்.”

 

“அதுக்கு.. இந்த பொண்ணு அந்த குமரி கண்டத்து மேட்டரை மறுபடியும் எடுக்காமல் இருந்திருக்கலாம். இது எதுவும் நடந்திருக்காது. அது பாட்டுக்கு.. நிம்மதியா எங்கேயோ வாழ்ந்திருக்கும்.”

 

“அதென்னவோ உண்மை தான்! மூணு வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான் மதுரையில் இருந்து ஒருத்தன் தமிழ், தமிழர் இனம் என்று கிளம்பினான். அவனுக்கு பணத்தை கொடுத்து சரிக் கட்டினாங்க! அந்த விசயம் அப்படியே அடங்கியிருச்சு! இந்த பொண்ணுக்கு பணம் எல்லாம் வாங்க மாட்டான்னு.. அந்த பொண்ணு போன இடத்தில் எல்லாம் ஸ்பான்ஸர் கிடைக்காம தடை செய்தோம்! சில இடத்தில அவங்களே ஒத்துக்கலை. சில இடத்தில் நான் தான் அவங்களை மிரட்டி.. நிறுத்தினேன். அப்பவும் ஒருத்தன் எதுக்கு அடங்காம.. அவனோட பையனை அடக்க இதுதான் சரியா சான்ஸ் என்று ஒத்துக்கிட்டான். அதுதான் ஆட்கள் ஏற்பாடு செய்து.. இப்படிப் பண்ண வேண்டியதா போச்சு! ஆனா அந்த பொண்ணு தப்பிச்சுருச்சு! இவளைக் கொல்ல அனுப்பிய ஆட்கள் செத்துட்டாங்க! எப்படிச் செத்தாங்கன்னு கேட்டா.. தெரியலைனு பதில் சொல்லுது. அது தெரிஞ்சுக்க தான்! இந்த பெண்ணை இன்னும் கொல்லாம விட்டுருக்காங்க! இவளுக்கு ஹெல்ப் செய்ய ஒருத்தர்னு கிளம்பி வந்துட்டா.. இந்த சர்க்கிள் பெருசாகும். அப்படி ஆக விடக் கூடாது இந்த விசயம் இவளோடையே முடியணும் என்று தான்.. இந்த கொரோனா டைமிலும் நம்மை காவலுக்கு வச்சுருக்காங்க..” என்றான்.

 

மற்றொருவன் “எனக்கு இதை மட்டும் விளக்குங்க! பெரிய பெரிய அரசியல் மேட்டரோ.. மாஃபியா, கடத்தல், மோசடி, ஊழல் மேட்டரோ இல்லை. இது வெறும் ஒரு ரீசர்ச் அதுவும்.. நிறையா தரம்.. ஈசல் மாதிரி.. செய்துட்டே இருக்கிற ரீசர்ச்! இதைத் தடுக்க எதுக்கு இத்தனை வேலைகள் செய்துட்டு இருக்கீங்க? யார் செய்யச் சொல்வது?” என்றுக் கேட்டான்.

 

அதற்கு முதலில் பேசியவன் சிரித்துவிட்டு “பார்க்கிறதுக்கு சாதாரண ரீசர்ச் மாதிரி இருக்கும். ஆனால் இதோட வீரியமே வேற! ஆமா.. இந்த மாதிரி நிறையா ரீசர்ச் நடந்திருக்கு.. ஆனா இது வேற மாதிரி! மத்தது எல்லாம் குமரி என்று கண்டம் இருந்திருக்கு! அது கடலில் அழிச்சுருக்கு.. என்கிறதை மட்டும் தான் திரும்பித் திரும்பிச் சொல்லிட்டு இருந்தாங்க! ஆனா இதுல அந்த பொண்ணு அதை மட்டும் சொல்ல வரலை. அந்த குமரி கண்டத்தில் வாழ்ந்துட்டு இருந்தது தமிழர் இனம் தான்! உலகத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்றால்.. முதலில் தோன்றிய இனமும் தமிழர் தான்! அந்த குமரி கண்டம் இருந்திருந்தால்.. உலகத்தில் பெரும்பான்மையான மக்கள் தழிழர்களாக இருந்திருப்பார்கள். அதே மாதிரி.. உலகத்தில் பெரும்பான்மையான மக்கள் பேசுகிற மொழி ஆங்கிலமாக இருந்திருக்காது.. தமிழாக இருந்திருக்கும் என்று நிரூபிக்க பார்க்குது. அதைத் தடுக்க தான் இத்தனையும்..” என்றான்.

 

மற்றொருவன் “இப்போ புரியுது. நம்ம ஜீ கூட அந்த வெள்ளைக்காரன் எப்படி கனெக்ட் ஆனான் என்று இப்போ புரியுது. ஆனா ஒண்ணும் மட்டும் புரியலை. இது வெறும் ரீசர்ச் தானே! அப்படி அந்த பொண்ணு நிரூபிச்சாட்டாலும்.. உடனே உலகம் புல்லா தமிழர் இனமா மாறிடப் போகுதா என்ன! இருக்கிற மக்களே தொற்று நோயால செத்து குவிச்சுட்டு இருக்காங்க..” என்றான்.

 

அதற்கு முதலாவதாக பேசியவன் “அட அங்கீகாரம் என்று ஒன்று கிடைக்குமே! மக்களோடு அட்டேன்ஷனும் கிடைக்குமே! இது ட்ரெண்ட் நீயூஸ் ஆகுமே! அப்படி ட்ரென்ட் ஆச்சுன்னா.. மக்கள் அதுக்கு மாறிடுவாங்க! எப்பவும் புது ட்ரென்ட்க்கு மாறுவது தானே மனுஷங்க இயல்பு! அப்படி எல்லாரோட அட்டென்ஷனும் கிடைச்சு.. தமிழைப் பற்றியும் தமிழர் இனத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமா வந்தா.. என்ன ஆகும் என்று தெரியுமா?” என்று கேட்டான்.

 

மற்றொருவன் திகைப்பில் கண்களை விரித்து “உலகம் முழுவதும் தமிழும் தமிழர் இனமும் பரவும். அதாவது குமரி கண்டம் ஒன்று இருந்தால் என்ன நடக்குமோ அது நடக்கும்.” என்றான்.

 

“அதே தான்..” என்று வஞ்சினத்துடன் ஆமோதித்தான்.

 

கதவுக்கு இந்த பக்கம் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவிற்கு திக்கென்று இருந்தது. இந்த காரணங்களால்.. தன்னை கொல்ல திட்டுமிடுவார்கள் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. 

 

அவர்கள் கூறியதைக் கேட்ட பொழுதே.. தனது கனவான குமரி கண்டத்தை பற்றி ஆராய்ச்சி எத்தனை முக்கியமானது என்று புரிந்தது. ஆனால் அவள் தனித்து நின்று எவ்வாறு போராடுவாள் என்று பயந்தாள். அப்பொழுது அவளது நினைவிற்கு வந்தது.. விக்ரம் தான்! விக்ரமை நினைத்து மாத்திரத்தில்.. 

 

அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவனது உண்மையான காதலுக்கு.. இழைத்த துரோகம் தான்.. அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் அவளுக்கு துணைக்கு வரக் கூடியவன், அவன் ஒருவனே! ஆனால் அவனது உதவியை நாட முடியாத நிலையில் அவள் இருக்கிறாள். 

 

முன்பை விட.. தற்பொழுது.. காவல் துறையினரின் உதவியை நாடுவது எவ்வாறு முக்கியம் என்று அவள் நினைத்த மறுநிமிடமே.. அந்த நம்பிக்கையும் பொய் ஆனது. 

 

அந்த இருவர் அங்கிருந்த காவல் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாள்.

 

அந்த காவல் துறை அதிகாரி “என்ன தான் வேணும் உங்களுக்கு! அந்த பொண்ணு பைத்தியம் தான் கன்பார்ம்! பல நூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்தவங்களைப் பார்த்தேன். எல்லாரும் மாயமா மறைச்சுட்டாங்கனு பொய் சொல்லற மாதிரி தெரியலை. அப்பறம் என்ன! மேலிடத்தில் இருந்து.. உங்களை இங்கே அலோவ் பண்ணினதுக்கும்.. இன்பர்மெஷன் ஷேர் செய்ததிற்கும்.. எனக்கு சேர வேண்டியது கொடுத்திர வேண்டியது தானே!”

 

“அதெல்லாம் கரெக்ட்டா வரும்! அதுதான் நானும் மேலிடத்தில் சொன்னேன். இனி வாட்ச் பண்ண தேவையில்லை தானேன்னு! அவங்க பதில் சொல்றேன்னு சொன்னாங்க! இந்த பொண்ணு இப்படியே இருந்துட்டா பரவாலை. ஆனா தெளிஞ்சுட்டா கஷ்டம்! எங்களுக்கு இல்லை.. இந்த பொண்ணுக்கு தான்!” என்று சிரித்தான்.

 

அதற்கு அந்த அதிகாரி “அந்த கஷ்டத்தை இப்பவே கொடுத்துட்டு போக வேண்டியது தானே! எதுக்கு வாட்ச் பண்ணிட்டு.. அதுக்கு பத்து ஆட்கள் வேற!” என்று சிரித்தான்.

 

“நீங்க முட்டாள்தனமாக தான் மறுபடியும் யோசிப்பீங்கனு மறுபடியும் நிரூபிக்கறீங்க!” என்றவன் தொடர்ந்து “அந்த பொண்ணை கொல்வதா இருந்தா.. கப்பலையே செய்திருக்கணும். அதைச் செய்ய தவறிட்டாங்க! இப்போ செய்தா.. இந்த பெண் மேலே அட்டென்ஷன் கிரியேட் ஆகும். அப்பறம் கொஞ்சம் நல்ல போலீஸ் என்ன விசயம் என்று தூண்டி துருவாங்க! அப்பறம் எதுக்கு இந்த பொண்ணை கொல்ல நினைச்சோமோ! அது வேற மாதிரி உருவெடுக்கும். என்ன புரியுதா! ஜீ வெறும் மாஃபியா ஆளில்லை. அவன் என்ன செய்தாலும் நல்லா தெரிஞ்சுட்டு தான் செய்யறார். நீங்க ஒண்ணும் அவருக்கு அட்வைஸ் தர வேண்டாம்.” என்றான்.

 

அந்த காவல்துறை அதிகாரி “இப்போ மட்டும் இந்த பொண்ணுக்கு ஏன் இப்படி ஆச்சு.. என்று தூண்டி துருவ ஆள் வர மாட்டாங்களா?” என்று கேட்டான்.

 

அதற்கு அவன் சிரித்தவாறு “நிச்சயம் இல்லை. அவளுக்கு அவளோட பெரெண்ட்ஸ் தவிர யாருமில்லை. அவங்க இவளைப் பார்ப்பாங்களா.. இல்லை இதைப் பார்ப்பாங்களா! அப்பறம்.. இவளுக்கு ஸ்பான்ஸர் கொடுத்தவரும் இப்போ இல்லை. அவனோட பையனும் வர மாட்டான். வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டான். அதனால யாரும் வர மாட்டாங்க! அப்படி வந்தா.. அவங்க கொல்லப்படுவாங்க..” என்றான்.

 

அவர்கள் பேசியதைக் கேட்டு அதிர்ந்து நின்றிருந்த பவித்ராவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரிந்தது. 

 

அவளுக்கு பைத்தியம் என்ற நிலை தான் தற்போதைக்கு தன்னையும் தனது பெற்றோரையும் பாதுக்காக்கும் என்று புரிந்தது. எனவே அவளுக்கு நினைவிற்கு வந்த விசயங்களை யாரிடமும் பகிரவில்லை. ஆனால் விக்ரமை சில நேரங்களில்.. எதிர்பார்த்து ஏமாந்துப் போவாள்.

 

அவள் எதிர்பார்த்தது போல்.. அவளை யாரோ கண்காணிப்பது போன்று இருந்தது.

 

பவித்ரா கூறி முடிந்ததும்.. அங்கு பெரும் அமைதி நிலவியது. கல்பனா விரைந்து வந்து மகளை அணைத்துக் கொண்டார்.

 

பவித்ராவை அணைக்க துடித்த கரங்களை.. முஷ்டி இறுக அடங்கியவாறு விக்ரம் நின்றிருந்தான். அவனைப் பார்த்த பவித்ராவின் விழிகள் கலங்கியது.

 

This post was modified 2 weeks ago by VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!

   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 13

“என்னால் என் அப்பாக்கும் அம்மாக்கும் எந்த ஆபத்து வந்திரக் கூடாதுன்னு! நான் இப்படியே இருந்துட்டேன். ஆனா எல்லாம் தெரிந்தும்.. ஒன்றும் தெரியாத மாதிரி.. என்னோட உண்மையான இயல்பை மறைச்சுட்டு.. இருப்பது எவ்வளவு கஷ்டமானது தெரியுமா!” என்று பவித்ரா கூறினாள்.

 

உடனே விக்ரம் “ஏன் கஷ்டப்படணும் பவி! கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம் தானே!” என்று இத்தனை வருடங்களாக இப்படியே வாழ்ந்திருக்கிறாளே என்ற ஆதங்கத்தில் சிறு கோபத்துடன் கேட்டான்.

 

அதற்கு பவித்ரா “நான் மட்டும் சம்பந்தப்பட்டது என்றால் ரிஸ்க் எடுத்திருப்பேன் விக்ரம்! ஆனா என்னால என் அப்பா அம்மாக்கு எதாவது ஆகிட்டா என்ன செய்ய! அவங்க சொன்னதைச் சொன்னேன் தானே.. ஒருவேளை நீ எனக்கு ஹெல்ப் செய்ய வந்தாலும்.. உன் உயிருக்கு ஆபத்து என்று சொல்றாங்க! அதே தானே மற்றவங்களுக்கும் செய்வாங்க! அதனால எனக்கு யார் கிட்டயும் உதவி கேட்க முடியலை விக்ரம்!” என்று குமறலுடன் கூறினாள்.

 

யாரிடமும் உதவி கூடக் கேட்க முடியாத சூழ்நிலையில் பவித்ரா இத்தனை வருடங்களாக இருந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவளுக்கு முகத்தைக் காட்டாது திரும்பி நின்றுக் கொண்டான்.

 

பிறகு “ஸாரி பவி! அவரவர் நிலையில் இருந்தால் தான் என்ன நடக்குதுன்னு புரியும்.” என்று தலையை குனிந்தவாறு கூறினான்.

 

அவனது ஆதங்கம் பவித்ராவிற்கு புரிந்தது.

 

“நானும் என்னை வாட்ச் பண்ணிட்டு இருக்கிறவங்களுக்கு டவுட் வராத வகையில் எதாவது செய்ய முடியுமா என்று ட்ரை செய்தேன் விக்ரம்! நான் பார்க்கிறவங்க கிட்ட மறைமுகமா குமரி கண்டம் கட்டுரை பற்றிப் பேசுவேன். என்னைக் கண்காணிக்கிறவங்களுக்கு.. பைத்தியம் யாரைப் பார்த்தாலும் குமரி கண்டத்தை பற்றிப் பேசுது என்று நினைக்க வைத்தேன். நான் பேசுவதை இன்டர்டிங்கா கேட்க ஆரம்பித்தால்.. மறைமுகமாக என் நிலையைச் சொல்ல நினைத்தேன். ஆனால் இதுவரை.. யாரும் நான் சொல்வதைக் கேட்கலை. அப்படிக் கேட்டவங்க கிட்ட நான் மறைமுகமாக சொன்னதும் புரியலை. என்னால் நேரடியாக சொல்லவும் முடியலை. சில சமயம் சொல்ல வாய்ப்பு அமைவதில்லை.” என்றாள்

 

அப்பொழுது குறுக்கிட்ட அபினவ் “ஆமா.. அந்த மாதிரி சில சமயம் தான் நாம் மீட் செய்திருக்கிறோம். உங்களுக்கு என்னை நினைவில்லையா! போன முறை நீங்க கோல்டன் டிம்பிள் போன போது.. நாம் மீட் செய்திருக்கோம்.” என்றான்.

 

பவித்ரா “ஓ எஸ்! நான் பேசியதை சுவாரசியமா கேட்டுட்டு இருந்தீங்க! நானும் ரொம்ப நாள் கழித்து பேச ஆள் கிடைத்த சந்தோஷத்தில் பேசினேன். எஸ் எஸ் ஞாபகம் வருது. ஆமா உங்க கிட்ட ஹெல்ப் கேட்க நினைச்சேன். அதுக்குள்ள என் அம்மா வந்து கூட்டிட்டு போயிட்டாங்க..” என்றாள்.

 

விக்ரம் “நீ அபினவ் கிட்டப் பேசினதை வைத்து தான் உன்னைக் கண்டுப்பிடிச்சேன்.” என்றவனின் கண்களில் சிறு நிம்மதி கலந்த மகிழ்ச்சி தெரிந்தது.

 

பவித்ரா விக்ரமை பார்த்து “நிஜமா நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை. என்னால் நீங்க வந்ததை நம்பவே முடியலை. என்னவோ என்னைக் காப்பாற்ற வந்த மாதிரி இருந்தது. சந்தோஷத்தோட உங்களைப் பார்த்து வந்தேன். ஆனா என்னைச் சுற்றியிருக்கிற ஆபத்தும்.. என்னை நெருங்கினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரிந்ததால் தான் உங்க கிட்ட இருந்து விலகி ஓடினேன். ஆனால் என் மனம் உங்க கிட்டவே நின்னுருச்சு! இந்த பைத்தியம் என்ற போர்வையில் என் நிலைமையை உங்க கிட்டச் சொல்ல முடியுமா என்று தோன்றியது. ஆனா நீங்க மறுபடியும் என்னை ரீசர்ச்சிற்கு கூட்டிட்டு போவேன்னு சொன்னதும்.. என்னோட எச்சரிக்கை உணர்வு எல்லாம் போயிருச்சு! குமரி கண்டத்தை பற்றி ஆய்வு செய்யணும் என்கிற என்னோட கனவு என்னோட ஆய்வை யாரோ தடுக்கிறாங்க.. அப்படித் தடுத்தாலும் போராடி.. நமக்கான அங்கீகாரத்தை வாங்கணும் என்ற வெறியாக மாறுச்சு! அதுனால..” என்று கூறிக் கொண்டே வந்தவள், சிறு குன்றலுடன் தலைகுனிந்தாள்.

 

பின் “அதனால என்னோட பைத்தியம் என்ற போர்வையில்… உங்களோட உதவியால் நான் நினைத்ததை சாதிக்க நினைச்சேன். இந்த முறை.. நீங்க என் கூட இருக்கீங்க என்ற தைரியம் எனக்கு இருந்துச்சு! நீங்களும் மறைமுகமாக ஏற்பாடு செய்துட்டு இருக்கீங்க என்று தெரிந்தது. அது முதல்ல என் அம்மா அப்பாக்கு தெரியாம என்னைக் கூட்டிட்டு போவதற்கு ஏற்பாடு என்று நினைத்தேன். ஆனால் உங்களுக்கு சின்ன டவுட் வந்துருச்சுனு நினைக்கிறேன். அது என் மேலேயா.. இல்லை டாக்டர் மேலேயானு தெரியலை. ஆனால் நடக்கிறது நான் எதிர்பார்த்தபடி நடக்கிறதாலே அமைதியாக இருந்தேன். ஆனாலும் சின்ன பயம் இருந்துட்டு இருக்கும். அப்பப்போ.. அபினவ் கிட்ட உங்களோட நலன் பற்றி விசாரிச்சுட்டே இருப்பேன். இப்போ சொல்லுங்க! உங்களுக்கு எப்போ டவுட் வந்துச்சு?” என்று கேட்டாள்.

 

விக்ரம் “முதல்ல டாக்டர் மேலே தான் டவுட் வந்துச்சு! முன்னுக்கு பின் முரணா பேசி வசமா மாட்டிக்கிட்டார். அப்பறம் நான் பிளென் போட்டப் பிறகு உன் நடவடிக்கை பேச்சிலும் சிறு மாற்றம் தெரிந்தது. சென்னை போன பிறகு.. உன்னைப் பற்றி யோசிச்ச போது.. எனக்கு சின்ன டவுட் வந்துச்சு! அபினவ்வும் கண்டுப்பிடிச்சுட்டான்.” என்றான்.

 

பவித்ரா “அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்! இரண்டு பேரும் க்ரேட் தான்!” என்றாள்.

 

அதற்கு நன்றாக சிரித்த விக்ரம் “நாலு வருஷமா ஒரு பெரிய கும்பலையே ஏமாத்திட்டு இருக்கிற நீதான் ஸ்மார்ட்!” என்றான்.

 

அப்பொழுது அபினவ் “பவித்ரா மேம்! உங்களை வாட்ச் பண்ணிட்டு இருக்காங்கனு சொன்னீங்களே! அப்போ நாம இத்தனை நேரம் பேசினதை கேட்டிருந்தார்களோ!” என்று சிறு அச்சத்துடன் கேட்டான்.

 

அதற்கு மறுப்பாக தலையசைத்த பவித்ரா.. “இல்லை. நான்தான் எனக்கு மனநிலை சரியில்லை என்று நம்ப வச்சுட்டேனே! முதல்ல தான் அடிக்கடி வந்து வீட்டிற்குள் வந்து செக் செய்துட்டு போவாங்க! இப்போ நான் எங்காவது வெளில போன மட்டும் தான் தொடர்ந்து வருவாங்க..” என்றாள்.

 

கல்பனா ‘என்ன சொல்கிறாய்’ என்பது போல் பார்க்கவும், பவித்ரா “ஆறு மாசத்துக்கு முன்னாடி காலி பண்ணிட்டு போன.. பக்கத்து வீட்டு குடும்பத்தை தான்ம்மா! சொல்றேன். ஞாபகம் இருக்கா.. முதல்ல அவங்க குடும்பத்துல இருக்கிற நாலு பேரில் யாராவது ஒருத்தராவது மாறி மாறி நம்ம வீட்டில் இருப்பாங்க! அவங்க வச்சுட்டு போன.. ரெக்கார்ட் டிவைஸை நான்.. பின்னாடி இருக்கிற டைனிங் ரூமில் மாற்றி வச்சுட்டேன். அதனால ஹாலில் பேசுவதை அவங்க கேட்கவும் முடியாது.” என்கவும், கல்பனா திகைத்து தான் போனார்.

 

விக்ரம் “பட் அவங்களுக்கு இப்போ எங்க மேலே டவுட் வந்துருச்சுனு நினைக்கிறேன். இன்னைக்கு நடந்த சம்பவத்தை வச்சு சொல்கிறேன். என்னையும் கொல்ல முயற்சி செய்திருக்காங்க! அதனால இனி கண்ணாம்மூச்சி ஆட்டத்தை விட்டுட்டு.. நேரடியாக வேலைகளை தொடங்கிரலாம். நானும் முதல்ல ஸ்மக்லிங் சம்பந்தப்பட்ட விசயத்திற்கு நீ விட்னஸாக ஆகிட்டியோ.. அதனால எதாவது மாஃபியா கும்பல் கிட்ட மாட்டிக்கிட்டியோ என்று தான் நினைச்சேன். அதனால தான் அந்த டாக்டர்.. உன் நினைவை அழிச்சுட்டாரோ என்று நினைச்சேன். ஆனா இது மேட்டரே வேற! இது இன்டர்நேஷனல் வரை போகுது. இனப்பாகுப்பாட்டை விட மோசமானது ஒரு இனத்தை அப்படியே அடக்கி ஒடுக்கிற விசயம்! இதுல ரொம்பவும் சீரியஸா இருக்கணும். நீ சொல்வதைப் பார்த்தா.. மாஃபியாக்கு இருக்கிற இன்டர்நெஷனல் கனெக்ஷனை விட இது பெருசு மாதிரி தெரியுது. முதல்ல உன்னை குணப்படுத்தணும் என்கிறதுக்காக இந்த ரீசர்ச்சை தொடரணும் என்று நினைத்தேன். அப்பறம் எதற்கு உன்னை இந்த நிலைமைக்கு தள்ளினாங்க என்று தெரிஞ்சுக்க.. இந்த ரீசர்ச்சை தொடரணும் என்று நினைத்தேன். ஆனா இப்போ இந்த ரீசர்ச்சோட நோக்கம் நிறைவேறணும் என்கிறதுக்காக இந்த ரீசர்ச்சை கண்டிப்பாக செய்யப் போகிறோம்.”

 

 “முதல்ல இரண்டு நாட்களுக்கு பிறகு.. மேரேஜ் முடிந்ததும்.. கிளம்புகிற மாதிரி தானே இருந்தது. ஆனா நாளைக்கு அதிகாலையில் கிளம்பி சென்றுவிடலாமா.. இரண்டு நாள் என்று அவங்களுக்கு நாமே டைம் கொடுக்கிற மாதிரி இருக்கு! ஆன்ட்டியும் அன்கிளும் இங்கே இருக்க வேண்டாம். என் வீட்டில்.. செக்யுரிட்டி பாதுகாப்பில் இருக்கட்டும். என்ன சொல்றீங்க?” என்று கேட்டான்.

 

பவித்ராவும், அபினவ்வும் அப்படியே செய்திரலாம் என்று ஒத்துக் கொண்டனர். ஆனால் பவித்ராவின் பெற்றோர்களுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. இத்தனை ஆபத்தான விசயம்.. என்று மகளைத் தடுப்பதா! அல்லது சாதிக்க துடிக்கும்.. அவளை உற்சாகப்படுத்துவதா!

 

தொண்டைக் கனைப்புடன் முன்னே வந்த பவித்ராவின் தந்தை “உண்மையா சொல்லணும் என்றால்.. எங்களோட ஒரே பெண்ணை.. ஆபத்து என்று தெரிந்த விசயத்தில் ஈடுப்படுத்த எங்களுக்கு விருப்பமில்லை. ஆனா அவளோட பெரெண்ட்ஸ் ஆன எங்களுக்கு.. அவளோட கனவை நிறைவேற்றணும் என்கிற கடமை இருக்கு! அவளோட உயிர் துடிப்பே இதுதான் என்கிற போது.. நாங்க என்ன சொல்ல! எல்லாரும் தான் வாழ்ந்தோம் அப்பறம் சாவோம்.. ஆனா அதுக்கு இடைப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று இருக்கில்ல. அதை எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்! இத்தனை நேரம் நீங்க எல்லாம் பேசியதை வச்சு.. அது எவ்வளவு பெரிய விசயம் என்று தெரியுது. உங்களோட உயிரைப் பற்றிக் கவலைப்பாடாம நீங்களே இதுல இறங்கும் போது.. உங்களை உற்சாகப்படுத்தி, தைரியமூட்டி.. சாதிப்பீங்க என்ற நம்பிக்கை தருவது தான் பெற்றவங்களோட கடமை! அதை நாங்க செய்யத் தயாரா இருக்கோம். ஆனா கண்டிப்பா உங்களுக்கு எந்த வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று நாங்க பிராத்திப்போம். போயிட்டு ஜெயிச்சுட்டு வாங்க! இதை நீங்க சாதிச்சுட்டா.. சரித்திரம் உங்க பேரைச் சொல்லும்! அதை விட வேற என்ன வேண்டும் எங்களுக்கு!” என்றார்.

 

பவித்ரா விரைந்து சென்று தனது தந்தையை மகிழ்ச்சியுடன் கட்டிக் கொண்டாள்.

 

அதன் பின் இரவோடு இரவாக வேலைகள் நடந்தன. 

 

விக்ரம் கிஷோரை தொடர்பு கொண்டு.. ஸ்ரீலங்காவிற்கு செல்லும் விமானத்திற்கு பயணச்சீட்டு வாங்கினான். பவித்ராவின் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு.. விக்ரம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்கள் சென்னைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். விக்ரம் தனது அன்னையை அழைத்து.. மன்னிப்பு கேட்டுவிட்டு.. முக்கியமான வேலையின் காரணமாக பவித்ராவை அழைத்துக் கொண்டு.. வெளிநாட்டுக்கு செல்வதாகவும், அவ்வவ்போது.. தொடர்பு கொள்வதாகவும், பவித்ராவின் பெற்றோரை.. அவர்கள் வரும் வரை.. அங்கு தங்க வைத்துக் கொள்ளுமாறு கூறினான்.

 

விக்ரமின் அன்னை தயக்கத்துடன் அவனது திருமணத்தை பற்றிக் கேட்கவும், விக்ரம் “கண்டிப்பா பவித்ராவுடன் தான் என்னோட மேரேஜ் நடக்கும். அதுவும் சீக்கிரமே!” என்றுச் சிரித்துவிட்டு வைத்தான்.

 

அதன் பின் அவனது முகம் யோசனையில் ஆழ்ந்தது.

 

யாருக்கும் சந்தேகம் தோன்றாத அளவிற்கு முதலில் பவித்ராவும் விக்ரமும் கிளம்பிச் சென்றனர். அடுத்து.. அபினவ் கிளம்பிச் சென்றான். மூவரும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.

 

சொன்ன நேரத்தில் விமானம் கிளம்பி வானத்தில் பறந்தது. 

 

அவசரமாக பதிவு செய்தது என்பதால்.. எக்னாமிக் வகுப்பில் தான் டிக்கெட் கிடைத்தது. எனவே மூவரும் வரிசையாக இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். 

 

விக்ரமும் பவித்ராவும் இருபக்கமும் அமர்ந்திருக்க.. நடுவில் அபினவ் அமர்ந்திருந்தான்.

 

அபினவ் “ஷ்ஷ் ஷப்பா! இனி யாரும் நம்மளைப் பின் தொடர மாட்டாங்க தானே ஸார்! நேத்து காலையில் நடந்த விசயம் ஏதோ சினிமாவுல நடக்கிற அட்டேக்கிங் சீன் மாதிரி இருந்துச்சு! ஆனா பவித்ரா மேம் நீங்க ஏன் டாக்டர் கிட்டப் போகணும் என்று அடம் பிடித்தீங்க! உங்களுக்கே நம்மை சுற்றி ஆபத்து இருக்கு என்று தெரிந்திருக்கிறது. தெரிந்தும் ஏன் இப்படிப் பண்ணீங்க?” என்று கேட்டான்.

 

அதற்கு பவித்ரா “அடிக்கடி நான் டாக்டர் கிட்டப் போகிறதுக்கு காரணம்! நான் முதல்ல சொன்ன மாதிரி.. நான் இன்னும் மனநிலை சரியில்லாம தான் இருக்கிறேன். அவங்க பிடியில் தான் இருக்கிறேன்.. என்று காட்டுவதற்காக அப்போ தான் அவங்க சீரியஸா எதையும் செய்ய மாட்டாங்க! அதுவும் விக்ரம் சென்னையில் இந்த ஆய்விற்கான வேலைகள் செய்துட்டு இருக்கிறார். நீ இங்கே என்னைப் பாதுகாக்கிறதுக்கு இருக்கும் போது.. அவங்களுக்கு டவுட் வந்திர கூடாதுன்னு நினைச்சேன். அதுதான் டாக்டர் கிட்டப் போகலாம் என்று சொன்னேன்.” என்றாள்.

 

அதற்கு விக்ரம் “அதுவும் ஒருவகையில் நல்லது தான்! எப்படியும் அவங்க உங்களைக் கொல்ல முயற்சிப்பாங்க! வெளியில் நடந்ததால்.. நீங்க தப்பியோட சான்ஸ் கிடைத்தது. இதே நீங்க வீட்டில் இருக்கும் போது நடந்திருந்தா..” என்றான்.

 

அபினவ் “ம்ம்! அப்போ நடப்பது எதுவும் நல்லதிற்காக தான் நடக்கிறதுனு நினைச்சுக்கணுமா!” என்று சிரித்தான்.

 

பின் பவித்ரா “என்னோட ரீசர்சில் கடைசியாக தான்.. ஸ்ரீலங்கால ரீசர்ச் செய்வதைப் பற்றி எழுதியிருந்தேன். ஆனா முதல்ல அங்கே போகிறோமா?” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு விக்ரம் “ஆமா பவி! எங்க கம்பெனி ஸ்பான்ஸர் பர்மிஷனுக்கு நீ சப்மிட் செய்ததை மறுபடியும் படித்தேன். அதுல முதல்ல குமரி கண்டத்தோட சென்டர் என்று கணக்கிடப்படும் இடத்துல ஆராய்ச்சியை தொடங்குவதாக குறிப்பிட்டு இருந்தே! ஆனா நாம அப்படியே ரிவர்ஸா வரப் போகிறோம். அதாவது முதல்ல ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, அப்பறம் மடகாஸ்கர் கடைசியாக குமரி கண்டம் மூழ்கிய கடல் பகுதி! முதல்ல உன்னோட ஹெல்திற்காக இப்படி பிளென் போட்டேன். ஆனா இப்போ நம்மைத் தேடுபவர்களைக் குழப்ப இவ்வாறு செய்யப் போகிறேன். நீ லைப்ரெரியில் விட்டு வந்த உன்னோட புக் காணாம போகிடுச்சு! அனேகமாக அது அவங்க தான் எடுத்துட்டு போயிருப்பாங்க! அதுபடி.. அவங்க போகலாம். நம்மைத் தேடிக் கண்டுப்பிடிக்கிறதுக்குள்ள.. நாம் நம்மளோட நோக்கை நிறைவேற்றணும்.” என்றான்.

 

அபினவ் “பேன்டஸ்டிக்! சூப்பர் ஸார்!” என்றான்.

 

பவித்ரா “தேங்க்ஸ்!” என்றவள், தொடர்ந்து “உங்களுக்கும் இந்த ரீசர்ச்சில் இன்டர்ஸ்டிங்கா இருக்கிறதைப் பார்க்கிறதுக்கு சந்தோஷமா இருக்கு! இந்த விசயத்தில் எப்படி உங்களுக்கு இன்டர்ஸ்ட் வந்துச்சு!” என்று கேட்டாள்.

 

அதற்கு விக்ரம் உடனே “பிகாஸ் உனக்கு இன்டர்ஸ்ட் இருக்கே! அதுதான் முதல் ரிசன்!” என்று சிரித்தான்.

 

விக்ரமை எட்டிப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த பவித்ரா.. அவனது பதிலில் அமைதியானாள். இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

 

அபினவ் “அப்போ இரண்டாவது ரிசன்?” என்று கேட்டான்.

 

விக்ரம் “தமிழுக்கும் தமிழர் இனத்திற்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என்று யாரோ இந்த ஆட்டம் போட்டா.. தமிழனான நாம் சும்மா இருப்பதா!” என்றான்.

 

அபினவ் அவனது உள்ளங்கையில் அடித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.


   
ReplyQuote
Page 1 / 2

You cannot copy content of this page