About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
மனம் -15
மறுநாள் காலை யாருக்கும் காத்திராமல் அழகாக புலர்ந்தது. சோம்பல் முறித்தபடி எழுந்தான் ரிஷி, குளித்து தாய் தந்தையைக் காணச் செல்ல அவர்களும் தயாராகி காத்திருந்தனர். திருகோணமலை செல்லும் பொருட்டு, சற்று நேரத்தில் ரஞ்சித்தும் ஸ்ரீயும் வந்து சேர்ந்தனர்.
"அம்மா காலை சாப்பாடு சாப்பிட்டு போலாமே" என றிஷி சொல்ல, ஸ்ரீயும் "ஆமா சாப்பிட்டு போவோம்" என்றாள். காலை உணவை வரவழைத்து ஒன்றாகவே உண்டனர் " ரேத்திக் எங்க" என ரஞ்சித் கேட்க, "அவன் இன்னும் எழுந்திருக்கல போல" என்றன் ரிஷி.
"எப்ப சார்....நீங்க வார!!!"என்ன ஸ்ரீ கிண்டலாக கேட்க...... "இங்க கொஞ்சம் வேலை இருக்கு எல்லாம் செட் ஆகட்டும் பார்த்து வாரேன்" என்றான் றிஷி.
" மட்டக்களப்புக்கு போயிட்டு தான் போகணும் என்றார் வேணி.... ஆமாம்மா அவள பாத்து நாலு கேள்வி நறுக்குன்னு கேட்கணும் என்றாள் ஸ்ரீ.
அப்போது வேணியின் அலைபேசி ஒலி எழுப்பியது, "சாரு தான் எடுக்கா நம்ம பொத்துவில் வந்தது தெரியுமா?? என்ற படி அழைப்பை ஏற்று காதில் வைத்தார் வேணி.
" ஹலோ என வேணி சொல்ல எதிர்ப்புறம் இருந்து என்ன சொல்லப்பட்டதோ "ஓகே சாரு நாங்க மதியம் போல வாரோம் பொத்துவில் தான் இருக்கம்" என சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
கணவனைப் பார்த்து "சகஸ்தா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா ,ஆனா ஏதோ வேலை போகணும் கொஞ்ச நாள் போகட்டும் கல்யாண செஞ்சுக்க என்றாளாம்," என றிஷியை பார்த்தபடி வேணி சொல்லி முடித்தார்.
ரிஷிக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை. ஸ்ரீ ன் ரஞ்சித்தும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர் .அவ்விடம வந்து சேர்ந்த. ரேத்திக்கும் விடயத்தை கேள்விப் பட்டு நண்பனை அனைத்து தனது வாழ்த்தையும் தெரிவித்தான்.
சில மணி நேரத்தில் பிரகாஷ், வேணி, ரஞ்சித் மற்றும் ஸ்ரீ மட்டக்களப்பிற்கு புறப்பட்னர்.அவர்களை வழியனுப்பிய ரிஷிக்கோ...... தன்னோட லவ்வை ஏற்றுக் கொள்ளல, திடீரென கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருக்கா, என சிந்தனையில் ஆழ்ந்தான்.
" என்ன மேன் திங்கிங் அங்கிள், ஆன்ட்டி மட்டக்களப்பு போய்ட்டாங்களா???" என்றவாறு அங்கு வந்து சேர்ந்தான் ரேத்திக்.
"நீ வேற என ரேத்திக்கின் வயிற்றில் குற்றினான் ரிஷி சலிப்புடன்."என்னடா இப்பவே சலிச்சுக்கிற அதெல்லாம் இருக்கட்டும்..... ஆமா மச்சான் சொல்ல மறந்துட்டேன்......." சகஸ்தாக்கு நேற்று ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி இருக்காங்க ஜாயின் பண்ணாததுக்கு ரீசன் கேட்டு...!!! சோ மேவீ நாளைக்கு சகஸ்தா ஜாயின் பண்ணலாம் வராத வன் வீக்குக்கும் மெடிக்கல் கொடுத்திருக்கா......"என்றான் ரேத்திக்.
ரிஷியும் யோசனையுடம் பார்ப்போம் என்றான்....
" ஓகே மச்சான் நானும் கிளம்புறேன் டா "என்றபடி ரேத்திக்கும் நண்பனிடம் இருந்து விடை பெற்றான்.
இரண்டு மணித்தியால பயணத்தின் பின் சாரிவின் வீட்டின் முன் நின்றது கார் காரிலிருந்து பிரகாஷ், வேணி மற்றும் ரஞ்சித், ஸ்ரீ என அனைவரும் இறங்கினர் சாரு தான் வரவேற்றார் சீலனும் அன்று விடுமுறையாகையால் வீட்டில் தான் இருந்தார்.
ஸ்ரீயின் பார்வை வீட்டையே சுற்றி பார்த்தது சாஸ்தாவும் வந்தவர்களுக்கு ஜூஸை ட்ரெயில் வைத்து கொண்டு வந்து கொடுத்தாள். ஸ்ரீ ஒரு வார்த்தை கூட சகஸ்தாவோடு பேசவில்லை.
சகஸ்தாவும் சுபியும் அங்கே ஹாலில் தான் இருந்தனர்.
பிரகாஷ் குரலை செருமியபடி "ரொம்ப சந்தோசம் சம்பந்தி என்றார்.... அதிலே அவர்களின் விருப்பமும் தெரிந்தது.
"வேலை எங்கம்மா கிடைச்சிருக்கு என்ன ரஞ்சித் கேட்க அவளும் "ஜெட்விங் பொத்துவில்னா" என்றாள்.
ரஞ்சித் ஏதோ சொல்லத் தொடங்க... கணவனுக்கு முழங்கையால் இடித்த ஸ்ரீ" நல்ல ரிசார்ட் தான்" என்றாள் கணவனை முறைத்தபடி.
ஒருவேளை ரிஷிட வேலையா இது இருக்குமோ என எண்ணிக் கொண்டான் ரஞ்சித்....
பிரகாஷோ "எப்பமா ஜாயின் பண்ற எனக் கேட்க "நாளைக்கு அங்கிள் "என்றாள் அவள். மாமானு சொல்லுமா என்றார் அவர் அவளும் சம்மதமாக தலையாட்ட றிஷிடயும் பேசிட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணுவோம் அதுவரை அவ ஒர்க் பண்ணட்டும் என்றார் பிரகாஷ்.
பொண்ணுங்க யார்ட்டையும் டிபன் பண்ணி இருக்க கூடாது புன்னகையுடன் கூறினார் பிரகாஷ்.
"உங்க வீட்டை சுத்தி காட்ட மாட்டீங்களா???" என்றாள் ஸ்ரீ சகஸ்தாவும்"வாங்கக்கா என்றாள்""" அக்காவா என ஒரு மாதிரி குரலில் கேட்டள்" ஸ்ரீ
சகஸ்தாவோ திருதிரு என முழிக்க,முழிக்காம வா என ஸ்ரீ உரிமையாக அவ்வீட்டில் வலம் வர அனைவரும் சிரித்துக் கொண்டனர்.
ஒவ்வொரு அறையாக பார்த்து வந்தனர். ஒரு அறையை திறந்து இது தம்பிட அறை என்றாள்.ஓரளவு நேர்த்தியாக இருந்தது.மற்றோரு அறையைத் திறக்க அழகாக இருந்தது.
கறுப்பு, வெள்ளை நிறத்தில் ராதா கிருஷ்ணனின் ஓவியம் ஒன்று சுவரில் அழகாக இருந்தது.அதைக் காட்டி "நீயா செய்த," என ஸ்ரீ கேட்க,"ஆமா என தலையாட்டினாள் சகஸ்தா." வீட்டையும் வரைவம் என்றாள் ஸ்ரீ," ம்ம் வரைவோம் என்றாள் சகஸ்தா.
"ஆமா என் தம்பிய ஏன் புடிக்கல என ஸ்ரீ கேட்க,இதனை எதிர் பார்க்காத சகஸ்தாவோ கண் கலங்க தலையை குனிந்து கொண்டாள்.
சகஸ்தாவை பார்க்க பாவமாய் இருந்தது, ஸ்ரீக்கும் சகஸ்தாவிற்கு முன்பு திருமண ஏற்பாடு நடைபெற்று நின்றது. என அனைத்தும் தெரியும். சகஸ்தாவை அனைத்தவள், "இங்க பாரு டால் என் தம்பிக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் என்றாள் ஸ்ரீ அதில் கலங்கிய கண்ணுடன் ஸ்ரீயைப் பார்க்க ,"உண்மையாதான் டா........ உனக்கும் அவன பிடிக்கும்னு தெரியும். என்றாள் மீண்டும் ஸ்ரீ அதிர்ச்சியுடன் அவளை சகஸ்தா பார்க்க, ஏதோ காரணத்தால தான் நீ வேணா என்ற....என்றாள் ஸ்ரீ.
சகஸ்தாவோ எதுவும் பேசவில்லை கண்களில் இருந்து கண்ணீர் அப்போ இப்போ என இருந்தது. என்ன பேசாம இருக்க என மீண்டும் ஸ்ரீ கேட்க "நீங்க கோபமா இருக்கீங்க என்றாள் "சகஸ்தா,
"கோபம் தான், என் தம்பிய வேணாம் என்றது !!!!!ஆனா இப்போ இல்ல" என்றாள் ஸ்ரீ கண் சிமிட்டி.
"இப்படி எதுக்கெடுத்தாலும் அழுறது நம்ம டால் இல்லே", என்றாள். என அவள் கண்களை துடைத்து விட்டாள் ஸ்ரீ, சகஸ்தாவும் சிறு புன்னகையை சிந்தினாள்.
மாலை தான் அனைவரும் திருகோணமலை திரும்பினர்.
இதோ மனதில் நின்றவள் 15
எப்படி இருக்குனு சொல்லுங்க செல்லம்ஸ் 🙄
Latest Post: சித்திரையில் நீ மார்கழி..!! - (Comment Thread) Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page