All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 12

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம் 12
பொத்துவில் வந்திறங்கிய  ரிஷி இதுவரை நடந்த வேலைகளை சாற்றிப் பார்த்தான் இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிந்து விடும்.வேலைகள் அனைத்தும் திருப்தியே......

தனக்கான பிரைவேட்டாக அமைந்த இடத்திற்கு செல்ல மற்றைய குடில்களிலிருந்து தள்ளி தனியே அமைக்கப்பட்டிருந்தது.

கோரைப்பற்களினால் மேற்கூரை வேயப்பட்டு,மரத்தினால் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தது.

கதவைத் திறந்து உள்ளே செல்ல , முன்னே அரை வட்ட வடிவில் மேசை கதிரைகள் போடப்படிருந்தது. அடுத்து ஒரு தடுப்பு தடுப்பிற்கு மற்றைய பக்கம். கிங் சைஸ் கட்டிலும், அதற்க்கு அடுத்தபக்க கதவைத் திறக்க குளியலறையும் இருந்தது.

அமர்நது சாப்பிட ஏதுவாக வசதியும் அவ் பிரைவேட் அறையில் இருந்தது.

தனது பொருட்களை முன்பகுதியில் வைத்தான்.

மற்றைய சுற்றுலாப பயணிகளுக்கான குடில்களும் அதே போல் தான் அமைக்கப்பட்டிருந்தது.பின்புறம் அமர்ந்து பேசக் கூடிய வகையில் கதிரைகள் போடப்பட்டிருந்தது.

மொத்தமாக நாற்பது குடில்களும், எண்ட்ரன்ஸில் இருபக்கமும் ஒரே அளவிலான தாவரங்களும் அதையடுத்து ரிசப்ஷனும்,அங்கும் ரெஸ்ட் ரூம் வசதியும் மேற் கூரை கோரைப் புற்களினால் வேயப்பட்டு அதற்கிடையில் கயிற்றினால் திரிக்கப்பட்ட மின்குமிழ்களும் அழகாக இருந்தது.

அதைத் தான்டி முன்னே செல்ல பாலம் போல் அமைக்கப்பட்ட பாதையும் ஒருபுறம் ரெல்லா, மறுபுறம் நீச்சல் குளமும், அதனை சுற்றி குடை சாய்வு நாற்காலியும், புள் பாரும் அப்படியே முன்னோக்கி செல்ல உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்கள் காணப்பட்டன. அதிலும் கெமேக் எனும் கயிற்றூஞ்சலும் காணப்பட்டது.அப்படியே அனைத்தையும் சுற்றி பார்வையிட்டான்.

ஒரு இடத்தில் தென்னை மரங்கள் சாய்வாக கடலை நோங்கி வளைந்திருந்தது. அதைப் பார்த்த ரிஷிக்கு என்ன தோன்றியதோ...... மேனேஜர் சதீஸை அழைத்தவன் தனக்கு தோன்றிய ஐடியாவை சொல்ல சதீஸும் மகிழ்ச்சியுடன் "சோர் சார்" என்றான்.

பின் சிலருடன் வந்த சதீஸ் சாய்வான அத் தென்னை மரங்களில் ஒன்றில் கயிற்று ஊஞ்சல் ஒன்றைக் கட்டினான்.பின் அக் கயிறுகள் தெரியாவண்ணம்,ஆர்டிபிசியல் இலைகள் ,பூக்களை சுற்றினான்.அவ்வாறு சாய்வான மரங்களில் டயரையும் ஊஞ்சல் போல் கட்டினான்.

ஒருபுறம் சேப் போர்ட்டும் அதற்குரிய இடமும் அமைக்கப்பட்டிருந்தது. இன்டர்நேஷனல் சேஃப் போர்ட் கேம் அருகம்பேயில் தான் நடைபெறும். அனைத்தையும் சுற்றிப் பார்த்தான் ரிஷி.

அடுத்தகட்டமாக வேலைக்கான ஆட்களை எடுக்கும் பணியில் இறங்கினான்,

சதீஸை அழைத்தவன் வேலை செய்த அனைவரையும் ஒன்று கூடச் சொன்னான்.சிறிது நேரத்தில் அனைவரும் ஒன்று கூட வேலைகள் மிகவும் சிறப்பாக நடைப்ற்றுள்ளதாக கூறியவன் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்தான்.

வேவைக்கான ஆட்களும் தெரிவு செய்து கொண்டு இருந்தனர்.

ரிசப்ஷன் லிஸ்ட், குக், செஃப், சர்வெண்ட் கிளீனர் கார்டன் மெயின்டனன்ஸ், ஆபீஸ் ஸ்டாஃப், என அனைவரையும் தெரிவு செய்யும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் மட்டக்களப்பிற்கு வந்திறங்கினர். வேணி மற்றும் பிரகாஷ்,சத்தியசீலனுக்கு அழைப்பெடுத்து வீட்டு முகவயியைக் கேட்டு.வீட்டை கண்டு பிடித்துச் சென்றனர்.

ஆடம்பரமில்லாத அழகான வீடு தான் அது.இருவரையும் வரவேற்று உள்ளே அமர வைத்தார்.பின் பரஸபர நல விசாரிப்பிற்குப் பின் பேச்சைத் தொடங்கினார் பிரகாஷ்.

சீலா,"நான் சுத்தி வளச்சி பேச விரும்பல நேரடியாகவே கேட்கிறேன்.ரிஷிக்கு சகஸ்தாவ கேட்டுத் தான் வந்தோம்.எங்களுக்கு பூரண சம்மதம் என்றார் பிரகாஷ்.

சீலனுக்கும் , சாருவுக்கும் அதிர்ச்சியே ஒருவரை ஒருவர் பார்த்தனர்.பின் சகஸ்தாவின் திருமணம் மேடை வரை வந்து நின்றது. தொடக்கம் அதனால்அவள் பட்ட வேதனையை சொல்ல சாருவோ அழுதே விட்டார்.

பின் பிரகாஷோ "அதெல்லாம் ஃபாஸ்ட்,இப்பவும் அதே சொன்னா எப்படி சீலா", என சொல்ல......

பெருமூச்சுடன் சாருமதி......அண்ணா "நாங்களா பேசின கல்யாணம் அது பிறகு கல்யாணப் பேச்ச எடுத்தாலே வேணாம் என்றா" எனச் சொல்ல......

வீட்டில் இவை அனைத்தும் நடக்கும் போது தான் சகஸ்தாவும் ,சுபீட்ஷனும் வீட்டினுள் நுழைந்தனர். வெளியே காரைக் கண்ட சகஸ்தா யோசனையோடு உள்ளே வர உள்ளே பிரகாஷும் வேணியும் அமர்ந்திருந்திருந்ததனர்.

ஆன்டி என அவளும் அவருடன் ஐக்கியமானாள்.

மதிய உணவை அனைவரும் ஒன்றாக உண்டனர்."என்ன சாரு எதுவுமே சொல்லமாட்டென்ற.....என் பையனப் பிடிக்கலையா?" எனக் கேட்க,தர்மசங்கடமாக அவர் கணவனைப் பார்க்க,சீலனோ ரிஷி தங்கமான தம்பி அவரப் பிடிக்காமப் போகுமா????எங்களுக்கு ஓகே தான் ஆனா உங்க ஸ்டேட்டஸுக்குஎற பேச தொடங்க," அதனை கை நீட்டி தடுத்தவ பிரகாஷ் "எல்லாரும் மனிசங்க தான் சீலா பணம் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும், என்றார். என் பையனுக்கும் உங்க பொண்ண ரொம்ப புடிக்கும்டா என்றார் பிரகாஷ்.

வேணியோ ,"சகஸ்தாட கேட்போம் அவளுக்கு ஓகேனா மேற்கொண்டு பேசுவோம்" என்றார்.

அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க டீ மற்றும் பஜ்ஜியுடன் அவ்விடம் வந்தவள்,அனைவருக்கும் கொடுக்க அனைவரும் பெற்றுக் கொண்டனர்.

வேணியோ தன்னருகில் சகஸ்தாவை அமர வைத்தவர்,"சகஸ்தாமா!!!!என் பையனக் கட்டிருக்கிறீயா? எனக் கேட்க". டீ குடித்துக் கொண்டிருந்தவளுக்கு புறையேறியது.

இருமிக் கொண்டு அதிர்ச்சியுடன் வேணியைப் பார்க்க ,அவளின் தலையில் தட்டிக் கொண்டவரோ மீண்டும் அதே கேள்வியைக் கேட்க.......

தவிப்புடன் தாயையும் ,தந்தையையும் பார்த்தாள். அவர்களின் பார்வையிலும் ஒரு எதிர்பார்ப்பு ..அப்போ இவங்க்ளுக்கு முன்னமே இது பற்றி தெரியுமா????

"அது வந்து ஆன்டி என தயங்கியவள் சிறு நடுக்கத்துடன் கல்யாணம் எல்லாம் வேணாம் என்றாள் தட்டுத் தடுமாறி"......

கல்யாணம் தானே வேணாம் என்றாள் ரிஷியைப் பற்றி எதுவும் சொல்லல தானே .....ஓகே ஓகே ரிலாக்ஸ்மா என்றார் பிரகாஷ்.

பின் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பினர்.அப்படியே பிரகாஷ் மற்றும் வேணி பொத்துவில் வந்தனர்.இருவரையும் வரவேற்றான் ரிஷி ரிசாட்டை சுற்றிப் பார்த்தனர்.மூவரும் ,பின் குடிலொன்றில் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு பிரகாஷிம் ,வேணியும் வந்தனர்.

அதன் பிற் இரவுணவை வரவழைத்த ரிஷி மூவரும் சாப்பிடும் போது சகஸ்தாவின் வீட்டில் நடந்ததை வேணி சொல்ல,மௌனமாக கேட்டுக் கொண்டான்.

மேலும் தொடர்ந்த பிரகாஷோ,ரிஷி கல்யாணம் கால் ஆஃப் அகிருக்கு இதனால அவ கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கா,அது தான் கல்யாணம் வேணாம் என்றா". என அவர் சொல்ல......

யோசனையுடன் சிறிது புருவத்தை ஏற்றி இறக்கியவன் "நீங்க ரெஸ்ட் எடுங்க". நான் பார்த்துக்கிறேன் என்றான்.

அவர்களை ஓய்வெடுக்க தனக்கென அறையில் தங்க வைத்தான்.பின். அங்கிருந்து. வெளியேறியவன்.இவ்வளவு. நாட்களின் பின் சகஸ்தாவிற்கு அழைப்பெடுத்தான் அழைப்பு சென்று கொண்டிருந்தது, எடுக்கப்படவில்லை.

மறுபடியும் அழைப்பெடுக்க மறுபுறம் அலைபேசியில் எடுக்கப்பட்டு ஓர் ஆணின் குரல் தான் வந்தது. "ஹலோ என்றது"
"ஐம் ரிஷி ஸ்பீகிங் கூஸ் திஸ்" என அழுத்தமாக கேட்க மறுபுறமோ அலைபேசியின் திரையைப் பார்த்து விட்டு ,வேணி ஆன்டிட மகனா எனக் கேட்க.

"ம்ம்..... சகஸ்தா வெளிய போயிருக்கா ? என்றான் சுபி இந்த நேரத்துலயா???என அதே போல் கேட்க,......

பக்கத்து வீட்டு பேபிய கூட்டி வந்தா.... கொண்டு விடப் போயிருக்கா...... என்றான் சுபி.

"ம்ம் என்றவன் சுபீட்ஷன் நாளைக்கு மீட் பண்ணும் என்றான்.சுபியும் யோசனையுடன் ஓகே என்றான்.

பின் நேரம் ,இடம் எங்கனு மெசேஜ் பண்றன் எனரிஷி சொல்ல ஓகே என்ற சுபி தனது தொலைபேசி எண்ணை கொடுத்தான்.

சிறது நேரத்தில் சுபியின் அலைபேசிக்கு எங்கே எத்தனை மணிக்கு சந்திக்க வேண்டும் என மெசேஜ் வந்திருந்தது.

அதனை பார்த்தவன் ஓகே என பதிலளித்தான் சுபிட்ஷன்.

இதோ மனதில் நின்றவள் 12
எப்படி இருக்குனு சொல்லுங்க 😔

 

   
ReplyQuote

You cannot copy content of this page