All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வட்டிக்காரனின் வசியக்காரியவள்-3

 

VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Member Author
Joined: 3 months ago
Posts: 12
Topic starter  

அத்தியாயம்-3

அவன் பேசுவதை கேட்ட மித்ரனோ பதறியவாறே "ஐயோ ஆர்.வி அது என்னோட பாரம்பரியமான பழைய வீடு அது எங்க குடும்பத்துக்கு சேர்ந்தது. எந்த காலத்திலேயும் நான் அந்த வீட்டையோ இல்ல ஓஎம்ஆர் ல இருக்கிற அந்த ரெண்டு வீட்டையும் தர முடியாது ஆர்வி. ஓஎம்ஆர்ல இருக்கிற அந்த ரெண்டு வீட்டையும் என் ரெண்டு பொண்ணுங்க பேர்ல எழுதி வச்சிருக்கேன் என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம். தயவு செஞ்சு அத எதுவும் பண்ணிடாத" என்றான் மித்ரன் கலங்கியவரே.

அதில் அசால்டாக சிரித்த ஆர்.வியோ "இதை என்கிட்ட கடன் வாங்கும்போது நீ யோசித்து இருக்கணும் மித்ரன். இந்த ஆர்.வி எதுல நியாயமானவனு உனக்கு தெரியாதா. பண விஷயத்துல மட்டும் தான் நான் ரொம்ப நியாயமா இருப்பேன். சீக்கிரமா அந்த ஓஎம்ஆர்ல இருக்கிற வீட்டையும் சிட்டிக்கு நடுவுல இருக்குற உன்னோட பாரம்பரியமான வீட்டையும் என் பெயரில் எழுதி வைத்துவிட்டு இங்கே இருந்து நீ போலாம்...” என்றான் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல்.

"ஐயோ ஆர்.வி ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளு..” என்று மித்ரன் கத்த ஆனால் ஆவியோ அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் நேராக வெளியில் நடந்தான்.

"இன்னைக்கு ஒரு நாள் நைட்டு இவன் எங்கேயே இருக்கட்டும். நாளைக்கு காலைல இவனை கூட்டிட்டு போயிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல அந்த மூணு வீட்டையும் என் பேர்ல எழுதி வாங்குங்க. அதுக்கப்புறம் இவனை கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டுருங்க. ஆனா அதுக்கு முன்னாடி என்னை ஏமாத்த நினைச்சதால நாளைக்கு வீட்டுக்கு கொண்டு போய் அவனை விடுவதற்கு முன்னாடி கொஞ்சம் நம்ம பாசத்த அவனுக்கு புரியும் படி கிளாஸ் எடுத்துட்டு கொண்டு போய் விடுங்க இது தான் அவனுக்கு பனிஷ்மென்ட்...” என்று முகம் சிவக்க ரெளத்திரமாக கூறியவன் நேராக காரில் ஏறி உட்கார்ந்தான்.

தன் காரின் கண்ணாடியை திறக்க அந்த இருவரும்.” ஓகே பாஸ் ஒன்னும் பிரச்சனை இல்ல.. நாங்க பாத்துக்குறோம்" என அத்தனை வேகமாக கூற அதில் ஆர்.வி தலை மெல்ல தலையாட்டியவன். "ம்ம்ம் காரை எடு சர்வா..” என்றான் காரின் ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்திருக்கும் அவனின் மேனேஜர் சர்வாவிடம்..

அவனோ வேகமாக காரினை எடுக்க அந்நேரம் பார்த்து தான் ஆர்.வியின் போன் ஒலியெழுத்தியது. அதனை ஸ்டைலாக எடுத்துப் பார்த்தவன் அவனுக்கு அழைப்பது அவனுடைய இன்னொரு மேனேஜரான திவாகர் என்பதை தெரிந்து கொண்டவன். "நம்மளோட அடுத்த டார்கெட் வெயிட் பண்ணுதுன்னு நினைக்கிறேன் சர்வா..” என்றவன் போனை எடுத்து காதில் வைத்தான்.

அதில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டவனோ மர்ம சிரிப்போன்றை சிரித்தவன். "ம்ம் வெல் அவனோட ஹெட் ஆபீஸ் தொட்டதும் அவன் வருத்தப்படணும்னு அவசியம் இல்லையே அதுவே அவனுடைய புது ப்ரொஜெக்ட்ட தொட்டா….” என்று ஆர்.வி இழுக்க. அதில் அவனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை புரிந்து கொண்ட திவாவோ புரிந்ததாக ஒரு சிரிப்பை சிரித்தவன் "நான் பாத்துக்குறேன் சார்..” என்றான். "ம்ம்ம் குட்" என்றவன் போனை அணைத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொள்ள அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவன் காலடியில் கிடந்தான் அந்த பிரபலமான கட்டுமான தொழிலின் முதலாளி.

இங்கு பெங்களூரில் ப்ராஜெக்ட் லைவை முடித்த கையோடு தன் அறைக்கு வந்தவள் சோர்வாக சேரில் உட்கார அவளுக்கு எதிரில் சுட சுட காபி கப் ஒன்று வைக்கப்பட்டது. அதனைப் பார்த்தவள் மெல்ல புன்னகைத்தவாறே அதனை எடுத்து குடிக்க ஆரம்பிக்க. "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு வசிகா...” என்ற பரசுவை பார்த்து சின்ன புன்னகையை கொடுத்தவளோ. "ஐ அம் ஆல்ரைட் பரசு ப்ரோ...” என்றாள்

நீ எல்லாத்துலையும் ஆல்ரைட் தான் அது எனக்கு தெரியும்….” என்ற பரசுவோ "அஞ்சலியோட கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் கேப் இருக்கு வசிகா. நீ எப்போ கல்யாணத்துக்கு வரலாம்னு இருக்க...” என்று அவன் போட்டு வாங்க..

அவளோ அவனை பார்த்து முறைத்தவள் “அதான் நீங்களே சொல்றீங்களே ப்ரோ இன்னும் ஒரு மாசம் டைம் இருக்குனு.. கல்யாணம் நெருங்கும்போது வரேன்...” என்றாள்.

"ம்ச் அதெல்லாம் தெரிது வசிகா அஞ்சலி உன்ன பத்து நாளைக்கு முன்னாடியே வர சொன்னத மறந்துட்டியா...” என்றவன் அவள் முகத்தையே உன்னிப்பாக பார்க்க. அதில் பெரும்மூச்சை வெளியிட்டவளோ "உங்களுக்கே தெரியும் ப்ரோ, நம்மளோட ப்ராஜெக்ட் டெட் என்ட்ல இருக்கு. அஞ்சலி கல்யாணத்துக்கு நீங்களும் லீவ் போட்டுட்டு போகணும் அதுக்கப்புறம் ஒரு டீஎல்லா நானும் இங்க இல்லாம அஞ்சலியோட கல்யாணத்துக்கு லீவ் போட்டுட்டு வந்துட்டா.. இங்க யாரு ப்ராஜெக்ட முடிக்கிறது..” என்று வசிகா பின்னால் சாய்ந்துவாறே கேட்க. பரசுவிற்கு அவள் சொல்வது அனைத்தும் புரிய தான் செய்தது ஆனால் அவன் தங்கை அஞ்சலியின் நெருக்கமான தோழியாயிற்றே.

"ஆனா அஞ்சலி உன்ன பத்து நாளைக்கு முன்னாடியே வர சொன்னாளே வசிகா..” என்றவரை அழுத்தமாக பார்த்த வசிகாவோ "அஞ்சலி கிட்ட நான் பேசுகிறேன். நீங்க லீவுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு ப்ராஜெக்டோட டீடைல்ஸ் மட்டும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ரோ...” என்றவள். தன் லேப்டாப்பில் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் இதற்கு மேல் அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வாங்க முடியாது என்பது பரசு நன்றாக அறிவான். அதனால் மறுப்பாக தலையாட்டியவாறு எழுந்தவன்.

"சரி நீயாச்சு அந்த குட்டி பிசாசு அஞ்சலி ஆச்சு... என்னவாச்சும் பண்ணிக்கோங்க..”என்றவன் வேகமாக அங்கிருந்து சென்று விட்டான். வசிகாவோ போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று டேபிளில் தலை வைத்து படுத்து கொண்டாள். அவள் முகமோ ரொம்பவும் சோர்வாக இருந்தது. இருக்காதா பின்னே கிட்டத்தட்ட ஆறு மாதமாக இந்த ப்ராஜெக்டிற்காக இரவும் பகலுமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் ஒரு மாதத்தில் இந்த ப்ராஜெக்ட் முடிய வேண்டியதாக இருக்கிறது. அதற்கு கண்டிப்பாக அவளோ இல்லை பரசுவோ இங்கே இருந்தே ஆக வேண்டும்.

பரசு கண்டிப்பாக இதில் அதிக ஈடுபாடு காட்ட முடியாது. ஏனென்றால் அவன் தங்கைக்கு தானே திருமணம் அப்போது அவனுக்கு வேலை இருக்காதா என்ன.. அதனாலே இவள் அனைத்து சுமையையும் தாங்கிக் கொண்டாள். சுமை அவளுக்கு புதிதில்லையே..

வசிகா பாட்டிற்கு லேப்டாப்பில் தன் கையை விளையாட விட அவள் புருவங்கள் சுருங்கி அழகு தேவதையாக காட்டியது அவளை. நல்ல சிவந்த நிறம் அவளுடையது, நல்ல கொழுக்மொழுக் அழகி, அடர்த்தியான கூந்தல் நல்ல இடை தான்டி வளர்ந்திருந்தது, அதில் நாங்கைந்து முடிகள் வந்து அழகாக அவள் நெற்றியில் பரப்பி இருக்கும்,நல்ல வில் போன்ற புருவம் அதும் அடர்த்தியாக, அவளுக்கு த்ரெட்டிங் எல்லாம் செய்ய அறவே பிடிக்காது, இரண்டு புருவத்திற்கு மத்தியிலும் அழகான சின்ன பொட்டு வைத்திருந்தாள், படப்படவென அடித்துக்கொள்ளும் அழகான அதே நேரம் அகலமான விழிகள், அதன் ஆழம் கண்டிப்பாக ஆளை வசிக்கரிக்கும், நல்ல மலை முகடுபோல அழகான நாசி, சற்றே சதை பற்றான சிவந்த இதழ்களுக்கு சொந்தமானவள். இதழ்களுக்கு கீழே அழகான மச்சம் ஒன்று இருந்தது, சங்கு கழுத்து மொத்தத்தில் ஐம்பது கிலோ அழகு சிலை அவள். எந்த ஒப்பனையும் கிடையாது இயற்கை அழகி.

வெண்பஞ்சி விரல்கள் அவளின் மடிக்கணினியில் வேகவேகமாக தட்டிக்கொண்டிருக்க அதனை தடுக்கும் விதமாக அவளின் போன் ஒலி எழுப்பியது. அதில் கவனத்தை சிதறவிட்டவள். ம்ச் என்று சலித்தவாறே போனை பார்க்க திரையில் தெரிந்த பெயரை கண்டு அவள் முகம் ஒருவித சலிப்பை காட்டியது. ஆனால் தான் மட்டும் அழைப்பை ஏற்காமல் போனால் திரும்ப திரும்ப அழைப்பு வந்தவண்ணமே இருக்கும் என்பதனை புரிந்தவளாக விருப்பமே இல்லாமல் போனை அட்டன் செய்தாள்.

அவள் எடுத்த வேகத்திற்கு.. “என்னக்கா போன எடுக்க இவ்ளோ நேரமா.. ஆபிஸ்ல இருக்கியா இல்ல வழக்கம் போல யாரையாவது உன் பக்கம் இழுக்க கண்டவங்க பின்னாடி சுத்திட்டு இருக்கியா..”என்ற நக்கலான குரல் வசிகாவின் காதில் வெறுப்பாக வந்து பாய..

ஷட் அப் ரகசியா..”என்றாள் எரிச்சலாக வசிகா

வசிகாவின் கோவத்தை தன் காதில் மந்திரம் போல கேட்ட வசிகாவின் தங்கை ரகசியாவோ.. “ரொம்ப கத்தாதக்கா.. அப்புறம் உன்ன வேலைய விட்டு துரத்திற போறாங்க..”என்றாள் நக்கலாக சிரித்தவாறே

அதில் வசிகாவின் கை கோவத்தில் முறிக்க.. “சரி தேவை இல்லாம பேச நான் விரும்பல. நான் போன் செஞ்சதுக்கான காரணத்த சொல்லிடுறேன். வர மாசம் ரிஷி அத்தானுக்கும், எனக்கும் பூ வச்சி உறுதிப்படுத்திக்கலாம்னு இங்க பேசி இருக்காங்க. வழக்கம் போல உனக்கு ஜால்ரா தட்ற என் அம்மாவும், என் அப்பாவும்..”என்ற என் அம்மா என் அப்பா என்ற வார்த்தையில் அதிக அழுத்தத்தை கொடுத்தவளோ.. “என் பெரிய பொண்ணு இருக்குறப்போ சின்ன பொண்ணுக்கு எப்டி கல்யாணம் உறுதிப்படுத்த முடியும்னு நாடகம் போடுறாங்க..”என்று ரகசியா எரிச்சலாக கூற

ரகசியாவின் ரிஷி என்ற பேரை கேட்டு போன தலைவலி திரும்ப வந்ததாக உணர்ந்த வசிகாவோ தன் தலையை அழுத்த பிடித்துக்கொண்டவள்.. “அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..”என்றாள் உணர்வற்ற குரலில் இறுக்கமாக

செய்யலாம்.. செய்யனும்க்கா. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் கல்யாணமே செஞ்சிக்க போறதில்ல அதுனால என் தங்கச்சிக்கு கல்யாண ஏற்பாடு செய்ங்கனு சொல்லனும். என்ன சொல்லுவ தானே..”என்று ரகசியா கடைசி வரியை மிரட்டலாக கூற.

அந்த மிரட்டலை கண்டு வெறுப்பு தான் வந்தது வசிகாவிற்கு. “நீ சொன்னாலும் சொல்லலைனாலும் நான் கல்யாணமே செஞ்சிக்க போறதில்ல. கண்டிப்பா சித்தியோ இல்ல சித்தப்பாவோ கேட்டா நான் இத தான் சொல்வேன்.. அதுனால என்னை பத்தி யோசிக்காம நீ உன் ரிஷி அத்தான கல்யாணம் பண்ணிக்கோ ரகசியா. இதுல எனக்கு எந்த வித நெகடிவ் தாட்டும் இல்ல.”என்று வசிகா இறும்பு குரலில் கூற.

வசிகாவின் உறுதியான சொல் ஒருபக்கம் ரகசியாவிற்கு சந்தோஷமாக இருந்தாலும் அவளின் நிமிர்வு அவளுக்கு கடுப்பை அதிகரித்தது. “அது எப்டி இவ யாருமே இல்லாம இருந்தாலும் இவ்ளோ உறுதியா இருக்கலாம்..”என்று நினைத்தவள். “ஆனா அக்கா நீ சரியான ஸ்ட்ராங்கா இருக்க. உனக்காக யாரும் இல்லாதப்போவே இப்டி இருக்கனா அப்போ உனக்குனு அம்மாவோ இல்ல அப்பாவோ இருந்தா இந்நேரம் உன்ன கைல புடிக்க முடியாது போலவே.. அதுனால தான் ஆண்டவன் உனக்கு எல்லாம் அளந்து கொடுத்துருக்கான் போல..”என்று தன் குத்தீட்டியான சொற்களால் வசிகாவை நோகடித்தவள்.. “மறக்காம ஃபக்ஷனுக்கு வந்துடு..”என்று அவளை கடுப்பேற்றிவிட்டு போனை அணைக்க. வசிகாவோ ரகசியா ஏற்படுத்திய வேதனை கடலில் தத்தளித்தவாறே இருந்தாள்.

(வட்டி, வசி)

 


   
ReplyQuote

You cannot copy content of this page