மனம் 8
அவளிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே,நாளையோடு இன்டர்ட் முடிகிறது மனதிலோ வெறுமை ,அன்றும் அலுவலகம் முடிய பஸ்ஸிற்கு காத்திருக்கும் போது அவள் முன் கார் வந்து நின்றது.
கண்ணாடியை இறக்கிய ரிஷி "கெட் இன்" என்றான் இல்ல சார் மறுக்க ,"முன்னப் பின்ன கார்ல வந்திருந்தா தானே?பஸ்ல கூட்டத்துல மிதிபட்டு வாரத்துக்கு கார்ல ஏறிக்கோ என்றாள் ரத்னா எள்ளலாக.
ரிஷியின் அருகே ரத்னா தான் அமர்ந்திருந்தாள்.முன்பொருநாள் அங்கு தான் இருந்த ஞாபகம் வந்தது.
எதுவுமே பேசாது பின் கதவை திருந்து ஏறி அமர்ந்து கொள்ள காரும் புறப்பட்டது.
ரத்னாவும் , ரிஷி எதுவும் பேசாது வருவதை தனக்கு சாதகமாகாகிக் கொண்டவள் அவனுடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள்.
ரிஷியோ கண்ணாடி வழியே சகஸ்தாவைத்பார்க்க,அவள் முகமோ கோபமோ,அழுகையினாலோ சிவந்து போய் இருந்தது.
"அத்தான் ஆஃபிஸ்,ஆஃபிஸ் என்று என்ன எங்கயும் கூட்டி போகல என சினுங்கியவள் டின்னர் போலாமா,??" என ரத்னா கேட்கஅப்போது கார் முன் கண்ணாடி வழியே ரிஷி சகஸ்தாவைப் பார்க்க ,அவளைப் பாரத்தபடி "ம்ம் போவோம் "என்றான் ரிஷி.
முகத்தில் எதையும் காட்டாது இருக்க பெரும் பிரயத்தனப்பட்டாள் சகஸ்தா.
அப்போது வீடும் வந்துவிட காரில் ,இருந்து இறங்கிக் கொண்டாள்.
இறங்கி சில அடிகள் நடந்திருப்பாள்.சட்டென ஃபோனின் ஞாபகம் வர தலையில் தட்டியபடி கார் அருகே வர ரிஷி,ரத்னாவை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். கதவைத் திறந்தவளுக்கு பார்வைக்கு அப்படி தான் தெரிந்தது.
"சாரி".......என்றபடி காரின் பின் இருக்கையில் இருந்த ஃபோனை எடுத்துக் கொண்டு வீட்டினுள் விரைந்தாள்.
ரிஷி காரில் இருந்து இறங்க கதவில் கை வைத்தவனின் கோர்டை இழுக்க அவள் இழுத்ததை எதிர்பார்க்காது அவள் முன் வர அவனை அனைத்தாள் ரத்னா,
அவனோ அவளை உதறித் தள்ளியபடி அவளை உறுத்து விழித்தபடி விட்டான் அறை ஒன்று.
ரத்னாவோ கண்ணத்தை பொத்தியபடி அவனை அதிர்ந்து பார்க்க " கொண்ணு புதைச்சிடுவன் என மிரட்டியபடி கெட் அவுட் என கத்த அடித்துப் பிடித்து இறங்கினாள்.
ரிஷி ,வீட்டினுள் நுழைய ,பின்னாடியே அழுதபடி ரத்னா வந்தாள்.
ஸ்ரீ,ரஞ்சித்,வேணி அனைவரும் ஹாலில் தான் அமர்ந்திருத்தனர். ரத்னா அழுதபடி வருவதைக் கண்டவர்கள் "என்சாச்சுமா எனக் கேட்க,என்னத்தை சொல்வாள் ரிஷியை அனைத்தேன் அறைந்தான் என்றா??
ரத்னாவை முறைத்தவன் ரிஷி " நான் திரும்பி வார நேரம் இவ இங்க இருக்கக் கூடாது".என தாயிடம் அழுத்தமாக கூறிவிட்டு ,வெளியேறினான்.
ரிஷியின் பேச்சை அவமானமாக உணர்ந்த ரத்னா அழுதபடி தனக்களித்த அறைக்குள் சென்றாள்.
ஸ்ரீயோ "அம்மா ஆஃபிஸ் போகும் போது நல்லா தான் போனாங்க, இந்த ரத்னா தான் ஏதோ பண்ணிருக்கா சரியான திமிர் பிடிச்சவ" என சொல்ல
வேணியோ "ஸ்ரீ அப்படி பேசக் கூடா" என சொல்ல" க்கும்......" என பொடித்துக் கொண்டாள் ஸ்ரீ.
சகஸ்தாவும் குளித்து ,உடைமாற்றி கீழே வர பிரகாஷும் , ரஞ்சித்தும் பேசிக் கொண்டிருந்தனர்.
"வாமா என்றார் வேணி, வேணியின் முகமும் சரியில்லை, அங்கிள் அண்ணா சாப்பிட்டாங்களா? எனக் கேட்க அவங்க எல்லாரும் சாப்பிட்டாங்க நீ தான் சாப்பிடனும் அதான் ஹால் பண்ணன் என்றார் ஸ்ரீ.
ரத்னா எங்க ஆளக் காணல,என சகஸ்தா கேட்க,அவ வெளிய போயிருக்கா என்றார் வேணி,சகஸ்தாவோ ரிஷியும், ரத்னாவும் வெளியே போயிருப்பதாக எண்ணிக் கொண்டாள்.
ஆனால் ரத்னாவோ வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தாள்
வேணிக்கோ தர்மசங்கடமானநிலை......
"ம்ம் ரெஸ் பெக் பண்ணன் அக்கா....நாளைக்கு இன்டர்ட் லாஸ்ட் டே ,எல்லா பார்மலிடீசையும் முடிச்சிடு வீட்ட போகனும் என்றாள் சாப்பிட்டபடி.
ஸ்ரீயோ "என்ன டால் சொல்ற.....ரெண்டு நாள் நின்டு போலாமே நாம எங்கயும் போனதே இல்லே என சொல்ல ஸ்ரீயிடம் என்ன சொல்வது என தெரியாது முழிக்க.
முழுசா ரெண்டு நாளும் ஊர சுத்துவோம், என்றாள் ஸ்ரீ. சிரித்தபடி.
உண்டுமுடித்ததும் வேணிக்கு உதவியவள் ஸ்ரீ,வேணியுடன் சற்று நேரம் அரட்டை அடித்தவள்..பின் குட் நைட் என்றபடி. தனதறைக்கு வந்து கட்டிலில் விழுந்தாள்.
ரிஷியும் ரத்னாவும் டின்னர் போயிட்டாங்க போல எல்லாமே பொய் என ரிஷி உட்பட என எண்ணியபடி தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலையில் அலுவலகம் சென்றவள்.
வேலைகள் எதுவும் இல்லை ,வந்த சிறிய வேலைகளை முடித்தவள்,அன்று மதியம். ஐஸ்கிரீம் வாங்கி தனது பிரிவில் இருப்பவர்களுக்கு கொடுத்தாள்,
அங்கு தன்னுடன் நெருங்கிய தோழியான மீரா பரிசொன்றைக் கொடுக்க நன்றியுடன் அதனைப் பெற்றுக் கொண்டாள். ,அனைவரும் ,கவலையுடன் விடை கொடுத்தனர்.
அன்று மதியம் போல் தான் அலுவவகம் வந்தான் ரிஷி.அவனை மனம் தேடினாலும் சமீப நாளாக ,அவன் ரத்னாவை திருமணம் செய்ய இருப்பதை அறிந்தவள் , அன்றிலிருந்து அவனோடு ,சேர்ந்து அவன் நினைவுகளையும் ஒதுக்கினாள். ஒதுக்க முயன்றாள் என்பதே பொருத்தம்.
அலுவலகம் முடியும் போது அனைவரிடமும் விடை பெற்று வெளியேறினாள்,பஸ்ஸிற்கு காத்திருக்க பஸ்ஸிம் வர அதில் ஏறியும் கொண்டாள்.
வீட்டிற்கு வந்தவள்,தன்னுடைய பொருட்களை சரிபார்த்து அடுக்கினாள்.பின் கீழே வர "வா,வா சகஸ்தா கோணேச்சரர் கோவில் போயிட்டு வருவோம் என்றாள் ஸ்ரீ".
"ம்ம் ரெடியாகி வாரன் அக்கா" என மீண்டும் தனதறைக்கு வந்தவள் தலைக்குளித்து வந்தவள் தலையை துவட்டியபடி கண்ணாடியில் தன் விம்பத்தை பார்த்தவள் ஏதோ சிந்தனையில் பக்கவாட்டாக இருந்த சுவரைப் பார்த்தவள் கேர்டினை கழற்றி சுவர்பக்கம் சரியாக போட்டாள்.
பின் நீளமான சுடிதாரொன்றை அணிந்து தலையை விரித்து விட்டபடி முடியை ஒன்றை கிளிப்பில் அடக்கினாள். எந்த விதமான ஒப்பனைகளுமின்றி வெளியே வந்தாள்.
ரஞ்சித்தும், ஸ்ரீயும் தயாராகி இருந்தனர்."ஆண்டி வரலையா? என சகஸ்தா கேட்க .....இப்பவே என்னால ரொம்ப தூரம் ஏற முடியாதுமா முட்டி இப்பவே வலிக்குது என்றார் வேணி.
மூவரும் கோயிலுக்குச் சென்றனர்.கோணேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வர ,
"சகஸ்தா இதான் இராவணன் வெட்டு என்றாள் ஸ்ரீ.
அதனை எட்டிப் பார்த்த சகஸ்தா "ஐயோ அக்கா இதென்ன இவளோபெரிய பள்ளமா இருக்கு "
"ம்ம் இராவணன் தன்ட வாழால வெட்டினதா சொல்றாங்க.....இதுல "ஏதும் நினைச்சி கல் எறிச்சா நடக்கும் என்று நம்புறாங்க இங்க இருக்கிறவங்க" என்றாள் ஸ்ரீ.
"நீங்க இத நம்புறீங்களா என
சகஸ்தா கேட்க, "நான் நம்புறன் என்றான் ரஞ்சித் எப்படினா?? என சகஸ்தா கேட்க... "ஸ்ரீய இங்க தான் பெஸ்டா பார்த்தன் கோணேஸ்வரர வேண்டி இங்க கல் எறிஞ்சன்.இப்போ உங்க அக்காட மாட்டிகிடன்" என்றான் ரஞ்சித்.
ஸ்ரீயோ ரஞ்சித்தின் தோளில் தட்டியபடி....
"ஓஓஓஓ....மாட்டிகிடிங்க வாங்க வீட்டுக்கு என சொல்ல ...... பார்த்தியாமா அண்ணாட நிலைய" என்றான் ரஞ்சித்.சற்று நேரம் கோயில் வளாகத்தில் மூவரும் இருந்தனர். பின் எட்டு மணியளவில் தான் வீட்டிற்கு வந்தனர்.அப்போது ரிஷி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
சாதாரணமாக பேசியவள் இப்போது அதையும் நிறுத்திக் கொண்டாள் என்னாச்சு ... இவளுக்கு என யோசனையோடு உணவுண்ணும் போது தான் கோயில் சென்று திரும்பினர் .
சகஸ்தாவை ஒரு பார்வை பார்த்தவன் உண்பதைத் தொடர்ந்தான்.
இதோ மனதில் நின்றவள் 08
படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க 😁