All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 13

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Member Author
Joined: 3 months ago
Posts: 20
Topic starter  

 

முத்தம் 13

"உன் குரல் கேட்டாலே அந்தக் குயில்களுக்கும் கூசும்... நீ மூச்சினில் சுவாசத்தில் காற்றுகள் மட்டும் மோட்சத்திலே சேரும்! அனுமதி கேட்காமல்! உன் கண்கள் என்னை மேயும்! நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடைசாயும்! உன் கைகள்.. கோர்க்காமல்.. பயணங்கள்.. கிடையாது! உன்னோடு.. வந்தாலே?? சாலைகள்.. முடியாது!!" "அட.. அட.. என் மனைவி சானு எவ்ளோ அழகா பாடுறா?" என அதிரூபன் பாராட்டி தள்ள "அட போங்க ரூபன் நீங்கதான் பாடவும் மாட்டேங்கறீங்க, என்னை எப்பவுமே ப்ரீயாவே விட்டு இருக்கீங்களே? ஏன் இப்படி பண்றீங்க?" "வாத்தியாரான எனக்கு பாட தேவையே இல்ல. ஆனா கதை சொல்லலாம்." "கதையா ரூபன் எங்க சொல்லுங்க பாப்போம்! நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்." "சானக்கியா,உனக்கு என்ன கதை சொல்றதுன்னு எனக்கு தெரியல? நானும் ஒரு இங்கிலீஷ் ப்ரொபசர் தமிழ் கதை எனக்கு அவ்வளவா தெரியாதே!" "அட போங்க ரூபன்! உங்களுக்கு ரொமான்ஸ்சும் வரமாட்டேங்குது, ஒரு மண்ணாங்கட்டியும் வர மாட்டேங்குது, உங்களை ஏன் கட்டிக்கிட்டேன்னு இப்ப ரொம்ப ஃபீல் பண்றேன்." "எனக்கு ரொமான்ஸ் வராதா? நான் பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும் சிங்கிளாவே தான் இருக்கேன். உன்ன தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்து இருக்கேன், உன்ன வேட்டையாடாம விடமாட்டேன்!! நான் இப்போ என் சானக்கியாவ வெறித்தனமாக வேட்டையாட போறேன். ஆத்தாடி!!!" என கத்தினான் அதிரூபன்.

 

 "அண்ணி சிரிச்சுட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க. நீ என்னனு பார்த்தா கனவுகண்டுக்கு இருக்க?" என மாதங்கி பேச "பாருங்க மா. அப்பா நீங்க ஏன் இன்னும் அமைதியாவே இருக்கீங்க. சானு என்கிட்ட ஏன் சொல்லாமல் போனா?" என இவன் கேள்வி கேட்க பிந்து "அண்ணா நா வரேன்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றார். அவர் சென்ற பிறகு மனைவியை அடித்தார் வைனவேந்தன். "அப்பா!ஏன் அடிக்குறீங்க?" என அதிரூபன் கேட்டதற்கு "அப்பா பண்ணுறது சரியானது தான்! அந்த அமுதன் பண்ண கேடுகெட்ட காரியத்தில் பாதிக்கபட்ட அண்ணி முன்னாடி எப்படி உனக்கு சொல்ல தோணுச்சு அண்ணா? நா அண்ணானு கூப்பிட்டது அந்த அமுதனை இல்ல உன்ன தான். இப்படி ஒரு பொம்பளை பொறுக்கியை கைவிடாமல் ஏன் இருக்க அதிரூபன்?" மாதங்கி எப்போதெலாம் பெயர் சொல்லி அழைக்கிறாளோ, அப்போது அவளுடைய கோபம் அவளை தன்னிலை மறக்கவைத்து செய்ய வைக்கும்படி அவளுடைய உணர்விருக்கும். "மாது.. அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சா.. எங்க வாழ்க்கையில் வரமாட்டான்." "அப்படியா? அமுதன் வரமாட்டான் அந்த நந்தகி பொண்ணு ஆராதனா வருவாளே?" என தந்தை கேள்வி கேட்க "நா கூல்லா ஹேண்டில் பண்ணிடலாம்னு நினைச்சேன். இப்ப நம்ம என்ன செய்ய?" என்றான் சிறுபிள்ளைதனமாக. 

 

*

 

திடீரென கண் விழித்தவள் அந்த இரவு நேரத்தில் தன்னந்தனியாக வீட்டை விட்டு வெளியே நடந்து வந்தாள்..மறுபக்கம் நான்கு சக்கர வாகனத்தில் தன் கணவனுடன் வண்டியில் வந்தாள் சானக்கியாவின் உயிர் தோழி லான்ஸ்பேரி "நா மோனிகாவுக்கு ஃபோன் பண்ணனும். சானக்கியா இன்ஸ்டாவில போட்ட போஸ்ட்ல அவளுக்கு கல்யாணம்னு புரிஞ்சுகிட்டேன். அதான், இங்க வந்திருக்கோம். நேரா வண்டியை சானக்கியா வீட்டுக்கு விடுங்க லூதர் பேபி." என கணவரிடம் ஆங்கிலத்தில் உரையாட அவனோ அவளது வயிற்றை பார்த்து ஆங்கில மொழியில் "பேபி, உன் அம்மா உன்னை, என்னை பத்தியெலாம் நினைக்கவே இல்ல." என பேசும் போது சத்தம் கேட்டது "லூதர்? என்ன ஆச்சு?" என பதறினாள். மோனிகா அலைபேசியை எடுத்து "கூஸ்பேரி!!!" என கூப்பிட "லூதர் என்னனு ஏன் சொல்லாமல் இருக்கீங்க?" "மை டார்லிங், இந்த பொண்ணு நம்ம கார்ல விழுந்ததுல தலையில ரத்தம் அருவியா கொட்டுது." "என்ன! யார் அந்த பொண்ணு?" என பதறி போய் பார்க்க "ஐயோ!!! மை காட்! லூதர் இவளை நம்ம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவோம். பக்கத்துல ஹாஸ்பிட்டல் இருந்தா அங்க அட்மிட் பண்ணலாம். ஹலோ மோனிகா. நா அனுப்பியிருக்கும் லோகேஷனுக்கு வந்துடு." என்றதோடு அழைப்பை துண்டித்தாள். அதுவரை அங்கு நடந்ததை கேட்டு கொண்டே இருந்தாள் மோனிகா. 

 

*

 

"அதிரூபன் ஒரு வாத்தியாரா இருந்தால் மட்டும் போதாது. நீ உன் மனசாட்சியோட பேசி பார். அவளை பிந்துகிட்ட சொல்லிட்ட. பாவம், அவ எப்படி நகுலன்கிட்ட சொல்ல போறானு தெரியலை." என வைனவேந்தன் பேசிக்கொண்டு இருக்கையில் தான் மோனிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது "ஹலோ" என்றதும் "...." "என்னாச்சு மோனி? எந்த ஹாஸ்பிட்டல்?" அவன் பெற்றோரிடம் “அப்பா, ஜெயு நா கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.” என்றதோடு மருத்துவமனை நோக்கி சென்றான். மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் விபத்து நடந்த பெண்ணுக்கு தொடர்ந்து இரண்டு மணி நேரமாக சிகிச்சை நடந்து கொண்டே இருப்பதை கவனித்த அதிரூபனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை கர்ப்பிணியாக இருக்கும் லான்ஸ்பேரியிடம் "ஆராதனாவுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?" "நாங்க பேசிக்கிட்டே வந்தோம். இவங்க வண்டில விழுந்துட்டாங்க. இந்த பொண்ணு பேரு எதுவுமே தெரியல. அதான், பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு அப்படியே மோனிகா லைன்ல இருந்தா.. அவளுக்கு அப்படியே சொல்லிட்டேன். ஆமா நீங்க யாரு?" என்ன லான்ஸ்பேரி கேள்வி கேட்டாள் "இவர் தான் சானக்கியாவ கட்டிக்க போறவர். இவர்தான் எனக்கு கைடு பண்றவரு பேர் அதிரூபன். சார் இவங்க லான்ஸ்பேரி, அப்புறம் அவர் அவர்களுடைய ஹஸ்பண்ட் லூதர்." என மோனிகா அதிதிருபன் கூறுவதற்கு முன் அனைத்தையும் கூறிவிட்டாள். "சரி வாங்க என் வீட்டுல தங்கிருக்கலாம். அங்க உங்களுக்கு வசதியாக இருக்கும். இது என் அப்பாவுடைய பிரண்டோட ஹாஸ்பிடல் தான். நான் டாக்டர் கிட்ட சொல்லிடுறேன். நீங்க ரெஸ்ட் எடுக்கணும்." அதிரூபனின் அந்தப் பாசமானது லான்ஸ்பேரியை அழகாக கட்டி போட்டது. அவளோ ஆங்கிலத்தில் அவளது கணவனிடம் "இங்க பாத்தீங்களா! நீங்க கூட என்னை இவ்ளோ கேர் பண்ணிக்கல. நான் நைட் எங்க தங்கனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.. சானக்கியா வீட்டுக்கு போலாம்னு பார்த்தா? இப்படி ஆயிடுச்சு. சரி அவ ஹபி வீட்டிலேயே தங்கிருக்கலாம். ஆமா அண்ணா உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா? ராத்திரி நேரத்துல நானும் என் ஹஸ்பண்டும் உங்க வீட்ல தங்கறதுக்கு?" "இதுல என்னப்பா இருக்கு? தெரியாத ஊருக்கு வந்து இருக்கீங்க, தெரிஞ்சவங்க கூட தான் இருக்க போறீங்க. உன் பிரண்டு தேடி நீ போன. நைட் நேரத்துல சானக்கியாவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே! எப்படியோ சிச்சுவேஷன் என் வீட்டுக்கு நீங்க வரணும்னு எழுதி இருக்கு. நாளைக்கு ஷாப்பிங் பண்ண போறோம் வெட்டிங்க்கு ஷாப்பிங் பண்ண தயாராகிக்கோ." பிறகு மோனிகாவிடம் "மோனிகா நீ ரஞ்சனா மேடத்துகிட்ட சொல்லிரு. அவங்க வந்ததும் நீ வீட்டுக்கு போயிடு. உன் வீட்டுல தேடுவாங்க. உன் பேரன்ஸ்க்கு தெரியுமா நீ இங்க இருக்கிறது?" "தெரியும் சார். என் பிரண்டு கூப்பிடுறா, எமர்ஜென்சினு சொல்லிட்டு வந்து இருக்கேன். எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வர முடியுமா.. அவ்வளவு சீக்கிரம் வந்துடுன்னு அம்மா,அப்பா சொன்னாங்க. மேம்க்கு தகவல் சொன்னதும் கிளம்பிடுவேன் சார்." அதிரூபன் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு கூட்டிச்செல்ல மோனிகாவும் ரஞ்சனாவிடம் தகவலை சொல்லிவிட்டு, மோனிகாவும் அவளது வீட்டிற்கு புறப்பட்டாள். ரஞ்சனா மருத்துவமனையை நோக்கி ஓடோடி வந்தார். வீட்டிற்கு வந்தவன் பெற்றோரிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான். பின் லூதரும் லான்ஸ்பேரியும் அங்கு மாதங்கியுடன் பேசி கொண்டு இருக்கையில் சானக்கியாவிற்கு அழைத்தவன் அவளும் அழைப்பை ஏற்று "ரூபன், என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கீங்க?" "சானு நா ஒன்னு கேட்டா உண்மைய சொல்லுவியா?" என்றதும் "என்ன ரூபன் இது? நா உங்களுடைய பாதி உங்ககிட்ட எப்படி நா பொய் சொல்லுவேன். கேளுங்கள்." என்றாள் எப்போதும் போல் "அமுதன் முன்னாடி நம்ம கல்யாண விஷயத்தை, போட்டோஸ் எல்லாம் நா பேசினதுக்கு நீ ஏன் எதுவும் ரியாக்ட் பண்ணாமல் இருந்த?" என நேரடியாக விஷயத்தை சொன்னான். "அது..வந்து எனக்கு நீங்க அத்த மாமாகிட்ட தனியா சொல்லிருக்கலாம். ஆனா.. அவங்க அம்மாவையும் முன்னாடி வைச்சு சொன்னது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும். என் ரூபன் என்னை கைவிட்டதா சரித்திரம் இல்ல. அதான், மனசுல இருக்கிறதை நா சொல்லவே இல்ல. இப்ப நீங்க வழுக்கட்டாமா கேட்டதுனால சொன்னேன்." என்றாள் அப்போதும் அன்பான மெல்லிய குரலில்.

 "மன்னிச்சுடு சானக்கியா! நா இப்படி பண்ணதுக்கு." என்றதும் "ஐயோ ரூபன் நீங்க என்னோட இருக்கும் வரையில் எனக்கு எந்த கஷ்டமும் வராது. நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு துணி எடுக்க போகணும்ல சோ, தூங்குங்கள்." என்றதோடு அழைப்பை துண்டித்தாள்.

 

"சானு குழந்தைகள் நல்லா வளருறாங்க. பொண்ணுங்க பிறந்தா? அனுஷியா, ஷனுஷியா பசங்க பிறந்தா அதியன், அகரன்." "பெயர் எல்லாம் சூப்பரா இருக்குது ரூபன். ஆனா உங்க பிள்ளைங்க என்னை ரொம்ப டிஸ்டப் பண்ணி வாந்தி எடுக்க வைக்கிறாங்க. கொஞ்சம் இந்த அம்மாவை பத்தி சொல்லுங்கள்." என்றாள் அவனது சானக்கியா "மை பேபிஸ், சானுவ பார்த்துக்கோங்க அப்பா வேலைக்கு போயிட்டு வரேன் மை சுன்னு முன்னு." என்றதும் மாதங்கி "சுன்னு, முன்னுவா? யோய் அண்ணா இன்னைக்கு தான் கல்யாணத்துக்கு துணி எடுக்க போகணும்ல எழுந்திருடா!!!" என அவனை அடிக்க "ஆ! சானு இப்படியா உன் புருஷனை நீ அடிப்ப? மாது?" "ஒரே காதல் கனவு கண்டுட்டு இருந்த உன்னை நா எழுப்பினது தப்பு அண்ணா. நீ தூங்கு நா அண்ணியோட இன்னைக்கி அவங்க வீட்ல தங்கறதுக்கு நம்மல கூப்பிட்டாங்க. பரவாயில்லை நீ தூங்கு." என்றதும் "அட! வீனா பேசிட்டு இருக்காதே சீக்கிரம் கிளம்புறோம். அங்க நம்ம போகணும். டிரஸ் நா எடுத்து வைச்சுட்டேன்." என பட்டாசு போல் வேலை பார்க்கும் அண்ணனை பார்த்து "அடப்பாவி? பொண்டாட்டிதாசனா மாறிட்டியா? நா கிளம்புறேன்." என அறையை விட்டு வெளியேறினாள் 'சும்மா ஒரு பொய் தான் சொன்னேன். பையன் டிரஸையே பேக் பண்ணிட்டான்! அண்ணி நீங்க கொடுத்து வைச்சவங்க.' 

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘

 


   
ReplyQuote

You cannot copy content of this page