All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 04

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம் - 04

பின் இருவரும் காரில் ஏறியதும் காரை இயக்கியபடி அவளைப் பார்க்க அவளோ ஏதோ யோசனையில் இருந்தாள்.

"டால் என அவன் அழைக்க என்ன என அவள் புருவத்தை உயர்த்த ......" ரிஷியோ என்ன யோசனை என கேட்க இவளோ " என்னடா இந்த கஞ்சி கட்டை நம்ம கூட பேசுது"என எண்ணியவள், இவன் நம்மள மொறச்சிடே திரிவான் எண்ணாச்சி இவனுக்கு,

"பாஸ்......

இது வீட்ட போற வழி இல்லையே எனக் கூற........" சிரித்தவன் "இல்ல என்றான்"அக்கா, ஆன்டிகிட்ட உங்க கூட வாரத்த கூட சொல்லல.......

கொஞ்சம் நேரம் முதல் கால் பன்னாங்க என சொல்ல..... புளூடூத்துடன் தனது ஃபோனை கனெக்ட் செய்து தனது அன்னைக்கு அழைப்பெடுத்தவன்.....

"ஹலோ ம்மா...... சகஸ்தா என் கூட தான் வார...ஆமா சொல்லதான் கால் பன்னன் என்றபடி ஹாலைக் கட் செய்தான்.

அவள் முகம் தெளிந்ததும் பயணம் தொடர்ந்தது.அங்கு போனுடன் நின்ற தாயை உலுக்கிய ஸ்ரீ......."என்னம்மா என்க் கேட்க"உன் தம்பி தான்.... சகஸ்தா அவனோட வாராளாம் என சொல்ல......

"என்னம்மா இது அவளக் கண்டாலை மொறச்சிடு திரிவான் என்னவோ நடக்குது வரட்டும் அவ என்றபடி தாயுடன் பேச்சைத் தொடர்ந்தாள் ஸ்ரீ.

முப்பது நிமிட பயணத்தின் பின் கடற்கரையை அணண்டிய பகுதியில் காரை நிறுத்தி அதிலிருந்து இருவரும் இறங்கிக் கொண்டனர்.

பார்க்கவே ரம்மியமாக இருந்தது அச் சூழல் ,சுற்றுலாப் பயணிகளுக்கு பிரசித்தி பெற்ற இடம் அது.அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் ஏறிய றிஷி சகஸ்தாவையும் ஏற கை கொடுத்தான்.

கைபிடித்து ஏறியவளது கரத்தை விடாது பற்றிக் கொண்டான்.அவளும் அதை உணராது கடலின் அழகையும் சுற்றி ஆங்காங்கே காணப்படும் மின்விளக்குகளின் அழகையும் வியந்து பார்த்துக் கொண்டே வந்தாள்.

"டால் ".........இங்க முதல் வந்திருக்கயா ???இல்லை என அவள் தலையாட்டியவள் பின் தொடர்ந்து "அவ்வளவா வெளி இடங்களுக்கு நான் போனதில்ல இந்த இடம் சூப்பரா இருக்கு"........ என சிறு குழந்தையின் உட்சாகத்துடன் பகிர்ந்தாள்.

அவளை ரசித்தவாறு "நான் கூட்டிப் போறன் டால்" என்றான் ரிஷி.

அமைதியான சூழலை அனுபவித்தாள் அவளின் காதோரம் மீசை முடி உரச "புடிச்சிருக்கா என்றான் ரிஷி மீசையின் குறுகுறுப்பில் தன்னிலை அடைந்தவள் மிக அருகில் அவன் கைபிடித்து நிற்பதை உணர்ந்து கையை இழுத்து அவனில் இருந்து தள்ளி வந்தாள்.

அவளின் செயலில் கோபமானவன் அவளின் கையை மறுபடி பிடிக்க வர படகும் ஓர் இடத்தில் நின்றது. படகில் இருந்து கீழே இறங்கியவன் சகஸ்தாவும் இறங்க உதவியவன்

அழுத்தமாக அவள் கையை பற்றியவன் அருகில் தெரிந்த மரப் பாதையில் நடந்தான்.

அவளும் சுற்றி தனது பார்வையை சுழல விட சுற்றி கடல் சற்று மங்கலான வெளிச்சம் மரப்பாதையில் நடக்க முடியாது பயத்தில் மேலும் அவனுடன் ஒன்றிக் கொண்டாள்.

அதில் கோபம் குறைய அவளை அனைத்தவாறு அழைத்துச் சென்றான்.

மரப் பாதையின் முடிவில் மேசையோடு இரண்டு கதிரையும் வைக்கப்பட்டிருந்தது.அதில் அவளை அமர வைத்தவன் தானும் அவள் முன் வந்தமர்ந்தான்.

மெல்லிய லாம்ப் வெளிச்சத்தில் தன் எதிரில் தேவதை என தெரிந்தாள் சகஸ்தா.

அவளோ சுற்றி பார்வையை சுழல விட அதே போல் ஆங்காங்கு லாம்ப் வெளிச்சம் தெரிந்தது.

அதிலும் ஆண், பெண் என காதல் ஜோடிகள். நெருக்கமாகவும் உணவுண்டபடியும் இருப்பது வரி வடிவமாக தெயிந்தது.

வெட்கத்தில் அடுத்த பக்கம் அவள் பார்வையைத் திருப்ப அவ் இருளிலும் அவள் முகம் இரத்த சிவப்பென மாறியதைக் கண்டு அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தவனின் இதழில் ஒரு மந்தகாசப் புன்னகை.

அங்கு ஒர் ஆணின் மடியில் பெண்ணொருத்தி அமர்ந்து இதழ் முத்தம் செய்து கொண்டிருந்தனர்.

சகஸ்தாவோ ரிஷியை நிமிர்ந்து கூட பார்க்காது கை விரல்களை கோர்த்துக் பிரித்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

அவள் முன் அழகிய கவரினால் சுற்றப்பட்ட பரிசுப் பெட்டியொன்றை நீட்டினான். அப்போது அவனை நிமிர்ந்து பார்க்க

மீண்டும் "ம்ம்.... என அவளிடம் அதனை கொடுக்க அவளும் அதனை வாங்கி பிரிக்க அழகான மோதிரமொன்று அதோடு ஐ லவ் யூ என்ற வாசகமும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அவனை பாரக்க.....

"லவ் யூ டால் வில் யூ மெரி மீ?" என்றான் மென்மையாக

சகஸ்தாவோ பதற்றமாக" இது இது .....வேணா நீங்களே வச்சிகோங்க"........ என அவள் கூற மீண்டும் அவள் மீது முகிழ்ந்தது கோபம்.

"என்ன பிடிக்கலையாடி'' என ரிஷி கேட்க......

என்ன சொல்வதென்றே தெரியாது.......
நா... உங்கள... எப்படி? என வார்த்தை வராது ஏதேதோ பேச ....

ஏன்? என ரிஷி அழுத்தமாக அவளைப் பார்த்து கேட்க.....
"நீங்க விக் மேன் நீங்க எப்படி அதுவும் என்ன லவ் பண்றது."

"உங்கள நான் பார்த்து பேசினது கூட கிடையாதே........".என்றாள்.

அவளின் சில்லியான இப் பேச்சில் அவனுக்கு பொறுமையே போய் விட்டது.

அவள் புறம் வந்தவன் அவளை இழுத்து அனைக்க,சகஸ்தாவோ அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள மெல்லிய உடல்வாகுடைய அவனை எவ்வாறு தள்ள முடியும்.

முடியாது அவனிலே தஞ்சமடைந்தாள்.தன்னில் இருந்து அவளைப் பிரித்து" ஐ லவ் யூ" என சொல்லியபடி அவளை அனைப்பில் இருந்து விடுவித்தான்.

பின் தன் இருக்கையில் வந்தமர்ந்தவன் மேசையில் இருந்த உணவை அவளுக்கும் பரிமாறியபடி தானும் உணவுன்டான்.

அவளும் கொஞ்சமாக கொறித்தாள் அவன் பார்வைக்கு பயந்து. அவளின் மனதிலோ பல குழப்பங்கள்.

உணவை முடித்துக் கொண்டு மீண்டும் இருவரும் படகை நோக்கிச் சென்றனர் வரும் போது இருந்த இதம் மறைந்திருந்தது.

பயம் குழப்பம் அவளை ஆட் கொண்டது. யோசனையோடு படகில் இருந்து இறங்கி காரில் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர் இருவரும்.

ஆளுக்காள் பேசிக் கொள்ளவும் இல்லை. ஏன் ? தன்னை பிடிக்கல எனும் எண்ணமே அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

காரில் இருந்து இறங்கியதும் அவளை நிறுத்தியவன் "பதிலுக்கு வெயிட் பண்ணுறன்". "  என அவளை இறுக அணைத்து விட்டான்.

விட்டால் போதும் என தனதறைக்கு ஓடினாள்.கணவனுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீயின் கண்ணில் இக் காட்சி விழ .....

அதாவது சகஸ்தா அறைக்குள் ஓடுவதும் தம்பியின் இறுக்கமான முகமும் கண்டவள் கணவனுடன் பேச்சைத் தொடர்ந்தாள்.

ஹாய் ப்ரண்ட்ஸ் 😁
அத்தியாயம் 04 இதோ உங்களுக்காக

படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்


   
ReplyQuote

You cannot copy content of this page