All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப்-3

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

நைட் life-3

டெல்லியில் இருந்து ஒரு விமானம் சென்னையில் தரையிறங்க கூட்டம் கூட்டமாய் மக்கள் இறங்கி வெளியே வந்தார்கள். வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்த ஒருவன் ஒரு கையில் அவனின் பிளேசரை மடித்து வைத்தவன் மறு கையால் அவனின் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பையை இழுத்துக் கொண்டு வந்தான். வாயில் சுவிங்கம்மை மென்றபடியே அவன் வெளியே வர அவன் பின்னே அவனை போலவே உடை அணிந்திருந்த இன்னொருவனும் அவனின் பையை இழுத்துக் கொண்டு வந்தான். இருவரும் வெளியே வந்து ஒன்றாய் நின்றாலும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அவர்களை அழைக்க வரும் வண்டிக்காக காத்திருந்தார்கள். 

 

“நம்ம லேண்ட் ஆகிட்டோம்ன்னு இன்போர்ம் பண்ணிட்டியா?” என்று சுவிங்கம்மை மென்றுக் கொண்டு இருந்தவன் அவனை பார்க்காமலே கேக்க உடன் இருந்தவன் அவன் காதிலே விழாதது போல் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அதில் எரிச்சல் அடைந்தவன் அவன் முன்னே சொடக்கிட்டு அவனின் கவனத்தை ஈர்த்தான்.

 

 “உன்ன தான் கேட்டேன்.. இன்போர்ம் பண்ணிட்டியா?” என்று மீண்டும் அழுத்தமாய் கேட்டான். அவனை அழுத்தமாய் பார்த்த மற்றொருவன், “மிஸ்டர்.மித்ரேஷ்வரன், உங்க கிட்ட கூட போன் இருக்கு.. நீங்களே இன்போர்ம் பண்ணலாம்.. நான் ஒன்னும் உங்க அச்சிஸ்டன்ட் இல்ல” எனக் கூறி மீண்டும் வேடிக்கை பார்ப்பதே முக்கியம் என்று திரும்பி விட்டான். கடைசியாக அவன் டிகிரி வாங்க வந்த போது தான் தமிழ்நாட்டிற்கு வந்தான். அதன் பின் இப்பொழுது தான் பிறந்த ஊருக்கு வருக்கிறான். பிறந்த ஊரின் அழகை மெய்மறந்து பார்க்க அவன் அருகில் இருந்த மித்ரனுக்கு கடுப்பானது. அவன் போனை எடுத்து யாருக்கோ அழைக்க போக அவர்கள் முன்னே ஒரு போலீஸ் கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய கான்ஸ்டபில் அவர்கள் முன்னே வேகாமாய் வந்து சல்யூட் அடிக்க இருவரும் மரியாதை நிமித்தமாய் தலை அசைத்தார்கள். இருவரும் அவர்களின் பையை கார் பின்னே வைக்க செல்ல, “மிஸ்டர். ராகவேந்திரன், இன்போர்ம் பண்ணிட்டேன்னு சொன்னா குறைஞ்சி போய்டுவிங்களா?” என்று அந்த டிரைவர்க்கு புரியாத வண்ணம் ஹிந்தியில் அவனிடம் மித்திரன் கேக்க, ராகவ் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் பையை வைத்து விட்டு காரில் ஏறிக் கொண்டான். 

 

“எல்லாம் என் நேரம்.. இவன் கூட எல்லாம் நான் வேலை பாக்கணும்..” என தலையில் அடித்துக் கொண்டு மித்ரனும் காரில் ஏற, “ச்சே.. இவனுக்கு இன்னும் திமிரு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. இவன் கூட போயா நான் வொர்க் பண்ணனும்” என்று ராகவ்வும் தலையில் அடித்துக் கொண்டான். இருவருமே காரில் இரு துருவமாக அமர்ந்து இருந்தார்கள். இருவரும் தமிழ்நாட்டிற்கு நீண்ட காலத்திற்கு பின் வருகிறார்கள். இருவரும் அதன் அழகை பார்த்து ரசித்தபடியே வந்தார்கள்.

 

மித்ரன் அவன் போனில் ஒருவரின் குறுஞ்செய்திக்காக ஆர்வமாய் காத்திருந்தான். ஆனால் அந்த நபர் தான் அவனுக்கு செய்தி அனுப்பும் எண்ணத்தில் இல்லை போலும்.. இன்று வேலையை முடித்து விட்டு கூடவே அவன் தேடி வந்த ஆளையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் மித்திரன். ராகவ் எண்ணம் அப்படியே நேர் எதிர்மறையாக இருந்தது. அவனுக்கென்று யாருமே இல்லை.. அவன் வேலை பார்க்கும் ஊரில் கூட நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. உறவுகள் விடையத்தில் மட்டும் அவன் துர்திஷ்டசாலி போலும் என்ற நினைப்பு அவனுக்கு. ஒரு காலத்தில் அவனுக்கென்று உறவுகளை எதிர் பார்த்தவன் கால போக்கில் எதிர்பார்ப்பையும் அவன் நிறுத்திக் கொண்டான். இருவரும் வேறு வேறு நினைப்பில் பயணிக்க, இரண்டுமணி நேரத்தில் சென்னை சிபிஐ தலைமையகத்தில் அவர்கள் கார் நின்றது. இருவரும் கோட்டை மாட்டிக் கொண்டு வேலையின் தீவிரத்தை முகத்தில் காட்டிக் கொண்டு விறு விறுவென்று உள்ளே சென்றார்கள். கான்பரன்ஸ் ஹாலில் முக்கிய அதிகாரிகள் சிலர் காத்திருக்க அவர்களை பார்த்து லேசாக தலையசைத்தார்கள். சிபிஐ சீப் எழுந்து அவர்களிடம் கை குலுக்கிட, “ஹலோ சார் ஐம் ராகவேந்திரன், NIA கிரைம் பிரன்ச்” என கை குலுக்கிட அடுத்ததாய் மித்ரனும் அவனை போலவே கை குலுக்கினான். 

 

இருவரும் நேஷனல் இன்டலிஜன்ஸ் ஏஜென்சியில் பணிபுரியும் அதிகாரிகள். தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய கேஸ் விடையமாக இருவரையும் இந்த கேஸ்சை முடித்து வைப்பதற்காக ஸ்பெஷல்லாக வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். 

 

“வெல்கம் ஆபிசர்ஸ், ஆபரேஷன் சைபர் பத்தின டிடேயில்ஸ் இந்த ஃபைல்ல இருக்கு, ஷார்ட்-டா சொல்லணும்னா சில நாட்களாவே நிறைய சைபர் திரேட்ஸ் கம்ப்ளைண்ட் எங்களுக்கு வந்துட்டு இருக்கு. பணமா இருக்கட்டும் பெர்சனல் இன்ஃபர்மேஷன்னா இருக்கட்டும்.. மிரட்டுற ஆளு எந்த நோக்கத்துல எதுக்காக பன்றாங்கன்னு தெரியலை. பொது மக்கள்ல இருந்து பணக்காரவங்க, அரசியல்வாதிங்க, செலேபிரிட்டீஸ்ன்னு எல்லாருக்கும் மிரட்டல் வருது.. நிறைய கம்பெனிஸ்யை ஹேக் பண்ணி இருக்கான்.. சமீபத்துல ஸ்னப் அப் கம்பெனியை ஹேக் பண்ணி இருக்கான்.. அதுல இருந்து தான் பொது மக்களுக்கு இன்னும் பயம் அதிகம் ஆகி இருக்கு. இது எல்லாம் யாரு எந்த நோக்கத்துல பண்றாங்கன்னு கொஞ்சம் கூட கெஸ் இல்ல. லோக்கல் சைபர் டீம் முடிஞ்ச அளவு இதை எல்லாம் தடுக்க பாக்குறாங்க.. ஆனா இந்த விஷயத்தை பண்ற ஆளு யாருன்னு கண்டு புடிக்கணும்.. அதுக்காக தான் ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசி உங்களை வர வச்சி இருக்கோம்..” என்று சிபிஐ சீப் கூறிட ராகவ்வும் மித்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சம்மதமாய் தலை அசைத்தார்கள்.  

 

அங்கு இருந்த சென்னை மாநகரத்தின் கமிஷனர், “இதுல முக்கியமான விஷயம் என்னனா பொது மக்களுக்கு இப்போ வரை ஸ்னப் அப் கம்பெனி ஹேக் ஆனதுனால தான் இவ்வளவு பிரச்சனைன்னு நினைச்சிட்டு இருக்காங்க. அவங்க யாருக்கும் மத்த செலேபிரிட்டீஸ், பொலிடிசியன்ஸ்க்கு வந்து இருக்குற மிரட்டல் பத்தி தெரியாது. இந்த விஷயத்தை நாங்க மீடியா கிட்ட இருந்து மறைச்சி வச்சி இருக்கோம்.” என்று கூறிட, “ஓகே அப்போ பப்ளிக் இன்போர்மேசன் ஸ்னப் அப் கம்பெனில இருந்து எடுத்து இருக்கலாம்ன்னு நினைக்குரிங்களா?” என ராகவ் கேட்க, “இருக்க வாய்ப்பு இருக்கு.. எங்க கிட்ட வந்த கம்ப்ளைன்ட் வச்சி பாத்ததுல்ல எல்லார் கிட்டவும் அந்த அப் இருந்து இருக்கு. சோ பொது மக்கள் விசயத்துல ஸ்னப் அப் மேல தான் சந்தேகம்.. ஆனா மத்த பிக் சாட்ஸ் இன்போர்மேசன் எப்படி லீக் ஆச்சுன்னு தெரியலை.. அதுவும் இல்லாம சி.ம்கே மிரட்டல் வந்து இருக்கு.. பல மினிஸ்டர்ஸ் டிடேயில்ஸ் எடுத்து அவங்களுக்கு மிரட்டல் வந்து இருக்கு. அதோட லிஸ்ட்டும் அந்த ஃபைல்ல இருக்கு” என்றார் கமிஷனர். மித்ரனும் ராகவும் ஒரு நொடி யோசித்தார்கள். 

 

“நாங்க சி.ம்மை மீட் பண்ணலாமா?” என மித்ரன் கேக்க, மறுப்பாக தலை அசைத்த கமிஷனர், “சாரி மிஸ்டர்.மித்திரன், அவரு இந்த பிரச்சனை விஷயமா டெல்லி போய் இருக்காரு, வந்ததும் நீங்க பாக்கலாம்” என்றிட இருவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். 

 

“இந்த கேஸ்ல ஸ்னப் அப் மாதிரி இருக்குற நிறைய இ-காமர்ஸ் அப் ஹேக் ஆகி இருக்குது. சில பேரோட சோசியல் மீடியா அக்கௌன்ட்டும் ஹேக் ஆகி இருக்குது. இந்த கேஸ்ல எங்களுக்கு இது வரை எந்த வித கிளுவும் கிடைக்கலை.. இருந்தாலும் எங்க சைபர் டீம்ல இருந்து உங்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் இருக்கும்.. நீங்க வெளிய இருந்து வேற ரிசோர்ஸ் யூஸ் பண்றதா இருந்தாலும் தாராளமா பன்னலாம்.. நாங்க முதல்ல பொது மக்களை அமைதியாக்குறோம்.. நீங்க எவ்ளோ சீக்கிரம் இதுக்கு புல் ஸ்டாப் வைக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரம் அதை பண்ணுங்க.. நிறையா பேருக்கும் மிரட்டல் வந்து இருக்குறதுனால பாதுகாப்பு குடுக்கரதுள்ள தான் நாங்க கவனம் செலுத்த முடியும்.. ஐ ஹோப் சிட்சுவேஷன் உங்களுக்கு நல்லா புரிஞ்சி இருக்கும். லோக்கல் கவர்மன்ட் உங்களுக்கு எல்லா விதமான உதவியும் பண்ணி கொடுக்கும்.” என்றார் கமிஷனர். இருவரும் சம்மதமாய் தலை அசைத்திட சீப் எழுந்து நிற்க அனைவரும் எழுந்து நின்றார்கள்.

 

“சைபர் டீம்ல இருந்து உங்களை மீட் பண்ண இன்னிக்கு ஈவினிங் ஆளுங்க வருவாங்க.. இந்த டீமை நீங்க ரெண்டு பேரும் லீட் பண்ணிக்கலாம்” என்றிட இருவரும் லேசாய் தலை அசைத்தார்கள். அனைவரும் மீட்டிங் ஹாலை விட்டு வெளியே சென்றிட ராகவ்வும் மித்ரனும் யோசனை உடனே வெளியே வந்தார்கள். 

 

“இன்னிக்கு ஈவினிங் சைபர் டீம்ல இருந்து வந்ததுக்கு அப்பறம் நம்ம வேலைய ஆரம்பிக்கலாம்” என்று ராகவ் கூற மறுப்பாக தலையை அசைத்த மித்திரன், “இல்ல ராகவ், இங்க இருக்குரவங்க எதையுமே கண்டு புடிக்கலன்னு சொன்னாங்க.. சோ நம்ம வெளிய இருந்து வேற ஒரு ஆளை கொண்டு வரணும். நம்ம ப்ரோடோகால்ஸ் மீறி இதுல இறங்கி வேலை பாத்தாதான் சீக்கிரம் கண்டு புடிக்க முடியும். ஏன்னா எவனோ இங்கயே இருந்து பண்ணிட்டு இருக்குற மாதிரி எனக்கு தோணுது” என்றிட, 

 

“எனக்கும் அந்த சந்தேகம் தான், ஆனா இங்க இருந்துட்டே பண்ணி இருந்தா கண்டிப்பா இங்க இருக்குற சைபர் டீம் கண்டு புடிச்சி இருப்பாங்க. இல்லன்னா அவன் வெளிய இருந்து இதை எல்லாம் பண்ணனும். ஆமா யாரை கொண்டு வரணும்? அவங்களை வச்சி என்ன பண்ண போறோம் பிளான் தெளிவா சொல்லு” என்று சீரியசாக ராகவ் கேக்க லேசாய் வெக்கப்பட்டான் மித்திரன். அதில் அவனை ராகவ் விநோதமாய் பார்க்க, “இந்த கருமத்தை எல்லாம் நான் இன்னும் எத்தனை நாளைக்கு சகைச்சிக்கனுமோ..” என்று தலையில் அடித்தவன், “உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களா?” என கேட்டான்.

 

“என் பொண்டாட்டிய தான்” என்று கள்ள சிரிப்புடன் கூறிட ராகவ் அதிர்ச்சியில் உறைந்தே விட்டான். 

 

“இவன் என்ன சொல்றான்?” என்று அவன் வாயை பிளக்க அவன் வாயை மூடி விட்டு காரில் ஏறி அமர்ந்துக் கொண்டான் மித்ரேஷ்வரன். 

 

இடம் ஸ்னப் அப் கம்பெனி:

காலையில் சீக்கிரமே கிளம்பிய ஆல்வின் அவனின் ஆபிஸ்ற்கு வந்தவன் அங்கு இருக்கும் நெட்வொர்க் டீமை காலையிலே திட்டி தீர்த்துக் கொண்டு இருந்தான். அந்த டீமின் லீட் முன்னே சென்று நின்றவன், “நீ தான் திலக்-ஆ?” என்று கேக்க அவனோ ஆம் என்று தலை அசைத்தான். 

 

“நீதானே சர்வர்க்கு பொறுப்பு? என்ன கிழிச்சிட்டு இருந்த.. இவ்ளோ பெரிய பொறுப்பை உன்கிட்ட கொடுத்திருந்தா நீ அசால்ட்டா இருந்திருக்க.. இதான் நீ வேலை பாக்குற லட்சணமா?” என்று ஜெர்மனில் அவன் திட்டிக் கொண்டு இருக்க மொழி தெரியாத காரணத்தினால் திலக் அமைதியாய் நின்று இருந்தான். 

 

“டேமிட்.. டோன்ட் பி லைக் அ டம்ப்***” என்று அடுத்ததாய் ஆங்கிலத்தில் அவன் திட்ட ஆரம்பிக்க திலக் பல்லை கடித்துக் கொண்டு நின்று இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 

“சார் முதல்ல என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சிட்டு பேசுங்க.. எனக்கு நம்ம கம்பெனி லோகோல இருந்து ஆபீசியல் மெயில் வந்துச்சு அதை ஓபன் பண்ணி பாத்ததும் மொத்த சர்வரும் ப்ரீஸ் ஆச்சு.. எதுவுமே ரெண்டுமணி நேரத்துக்கு வேலை செய்யலை.. எப்படி டேட்டாஸ் லீக் ஆச்சுன்னு தெரியலை” என்று கூறிட ஆல்வின்க்கு கோவம் இன்னும் அதிகரித்தது. திலக்கை மேலும் திட்டுவதற்கு முன் அவன் போன் அடிக்க அவனை முறைத்து விட்டு அங்கு இருந்து சென்றான் ஆல்வின்.

 

“ஐயோ.. அவசரப்பட்டு வீராப்பா பேசிட்டேனே வேளைக்கு வேட்டு வச்சிடுவானே” என்று மனதில் புலம்பினான் திலக். 


   
ReplyQuote

You cannot copy content of this page