All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் -2

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

இரவு நேரம் மிகப்பெரிய நூலகத்தில் தனி ஒரு ஆளாய் அமர்ந்து புத்தகம் ஒன்றை மும்மரமாய் படித்துக் கொண்டு இருந்தாள் ஒருத்தி. கண்கள் புத்தகத்தை விட்டு நகர்வேனா என்கிற அளவிற்கு அவ்வளவு ஆர்வமாய் படித்துக் கொண்டு இருக்க, நேரம் கரைந்ததே அவளுக்கு தெரியவில்லை. 

 

“க்ளோசிங் டைம் ஆச்சு கிளம்புமா” என்று நூலக உதவியாளர் அவள் அமர்ந்து இருக்கும் மேஜையை தட்டி விட்டு செல்லவும் தான் கனவு உலகத்தில் இருந்து நடப்பிற்கே வெளியே வந்தாள். சுற்றி முற்றி பார்க்க நூலகத்தில் அவளை தவிர யாரும் இல்லை. அவசர அவசரமாய் பையை எடுத்துக் கொண்டு நூலகத்தை விட்டு வெளியே வந்தாள். என்றும் இல்லாமல் இன்று ரோடு வெரிச்சோடி இருக்க, இரவு நேரத்தில் அவளுக்கு தனியாக செல்ல அச்சமாக இருந்தது. பயத்துடனே தோளில் மாட்டி இருக்கும் பையை இருக்கமாய் பற்றிக் கொண்டு அவளுக்கு பிடித்த பாட்டை முணுமுணுத்தபடியே நடந்தாள். 

 

மங்கிய மஞ்சள் ஒளியில் மின்னும் தெருவிற்குள் அவள் நுழைய எங்கோ ஒரு ஓரத்தில் நின்று நாய் ஊளையிடம் சத்தம் அவளை கதிகலங்க செய்தது. பயத்துடனே சுற்றி எங்கும் பார்க்காமல் நடந்தாள். திடீரென்று பின்னால் இருந்து விசில் சத்தம் கேட்க அவளுக்கு திக்கென்று இருந்தது. அதே விசில்.. அதே பாட்டு.. வழமையாய் அவள் தனியாய் வரும் நேரத்தில் கேட்கும் பாட்டு போல் அவளுக்கு தோன்றியது. விசிலிலே ஆரோ பாட்டு பாடிக் கொண்டே வருவது போல் இருக்க திரும்பி பார்க்காமல் வேக வேகமாய் நடந்தாள். அவள் நடப்பதை கண்டு அவளுக்கு பின்னால் இருந்த உருவம் சிரிக்க அவனின் அடி தொண்டையில் இருந்து சத்தம் வந்தது. 

 

அவளோ வேகமாய் நடக்க அவனோ நிதானமாய் அவளை பின்தொடர்ந்து வந்தான். இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன் அவளை பின்னே இருந்தபடி கழுத்தோடு அனைத்து, “லேட் நைட் தனியா போகாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. கேக்கவே மாட்டியா பிரின்சஸ்?” என்று ஆழமான ஒரு குரல் அவள் காதின் அருகே ஒலிக்க வெடவெடத்து போனாள் பேதை. அவளின் பயத்தை அவன் வெகுவாய் ரசித்தான். 

 

“என்னோட பிரின்சஸ் நீ.. இப்படி தனியா போலாமா? இல்ல நான் உன்ன தனியா விட்டுடுவேனா?” என்று அழுத்தமான குரலில் கேட்டவன் அவள் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அப்படியே அவள் கன்னம் வரை கீழே இறக்கினான். 

 

“நீ எனக்காக வேணும்ன்னே லேட்டா வரியா? உனக்கு அவ்ளோ புடிக்குமா என்ன?” என்று கேட்டவன் அவளை அப்படியே கையில் ஏந்த, “அய்யய்யோ.. நான் இல்ல.. என்ன விட்டுடு..” என்று அலறியபடியே கீழே பொத்தென்று விழுந்தாள் ஆருத்ரா. 

 

பயத்தில் பெரிய பெரிய மூச்சுக்களை வெளியிட்டவள் சுற்றி முற்றி பார்க்க அவள் அறையில் இருப்பதை கண்டு நிம்மதி மூச்சு விட்டாள். திரும்பி அவள் மெத்தையை பார்க்க அவளின் தோழிகள் மூவரும் அவளை கொடூரமாய் முறைத்துக் கொண்டு இருந்தார்கள். பின்னே மணி இரண்டு ஆகி இருக்க இப்படி கத்தி அனைவரையும் எழுப்பி விட்டாள் கடுப்பாகாமல் என்ன செய்வார்கள். அவர்களை பார்த்து தயக்கத்துடன் அசடு வழிந்த ஆருத்ரா ஒன்றும் தெரியாதவள் போல் மெத்தையில் ஏறி அமர்ந்து கொண்டாள். 

 

கண்களை சிமிட்டியபடியே அவளின் தோழி யுகித்தாவை நல்ல பிள்ளை போல் பார்க்க அவளோ அவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள். அதில் ஜெர்க் ஆகி அவளின் பாசமிகு சாது குட்டி என்ற சாதனாவை பார்க்க அவள் வெட்டவா குத்தவா என்ற கடுப்பில் பார்த்துக் கொண்டு இருந்தாள். தயக்கத்துடன் எப்பொழுது அவளை செல்லம் கொஞ்சும் இழையினியை பார்க்க அவளோ கையில் மண்டையோடு போட்ட புத்தகம் ஒன்றை வைத்து தீயாய் முறைத்துக் கொண்டு இருக்க அவ்வளவு தான் ஆருத்ரா சரணடைகிறேன் என்று கைகளை தலைக்கு மேல் கும்பிட்டு, “தெய்வமே.. தெய்வமே..” என்று கெஞ்சலாக ஆரம்பித்தாள்.

 

“எடு செருப்ப நாயே.. ராத்திரி நேரம் கண்ட கண்ட புக் படிச்சி கனவு கண்டு எங்க உசுர வாங்கிட்டு இருக்க.. முதல்ல அந்த கருமத்தை தூக்கி போடு இனி” என்று கோவமாக ஆருத்ராவை முறைத்தபடியே கூறினாள் யுகித்தா. அதில் பதறிவிட்டாள் ஆருத்ரா. 

 

“ஏன் டி இப்படி பண்ணிட்டு இருக்க.. அப்படி என்ன தான் இதுல இருக்கோ..” என்று சாதனா கடுப்பாக கேக்க, “நான் எதுவுமே பண்ணல.. அந்த மாபியா ஹீரோ தான் என் தலையில துப்பாக்கி வச்சி மிரட்டி என்ன தூக்கிட்டு போக பாத்தான்” என்று அப்பாவியாய் கூறிட,

 

“ஏன் டி கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. உன் கனவுனா உன் இஸ்ட்டத்துக்கு கானுவியா? நேத்து இப்படி தான் எவனோ ஒருத்தன் வந்து கனவுல கிஸ் பண்ணான்னு சொன்ன.. இன்னிக்கு உன்ன தூக்கிட்டு போனானா? அப்போ நாளக்கி உன்ன என்ன..” என்று இனி கேட்க வர அவசர அவசரமாய் அவள் வாயை மூடினாள் சாதனா. 

 

“நீ இவளுக்கு மேல இருக்க டி..” என்று தலையில் அடித்துக் கொண்ட யுகி அந்த புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி, “இனிமேல் இந்த புக் மேல கை வை முதல் டெட்பாடி நீதான். நல்லா கனவு காணுறா.. உனக்கு மட்டும் எங்க இருந்து டி இப்படி எல்லாம் யோசனை வருது.. மூடிட்டு படு.. நீ போட்ட சத்தத்துக்கு ஹவுஸ் ஓனர் வரலன்னு சந்தோசபட்டுக்க.. இல்ல அடுத்த மாசமே நம்ம வேற வீட்டை தேடி போக வேண்டியது தான்”. “சரி விடு.. ஏதோ அறியா புள்ள தெரியாம கத்திட்டேன்.. வாலிப வயசுல இது எல்லாம் சகஜம்..” என்று சிலுப்பிக் கொண்டாள் ஆரு. 

 

“இன்னொரு தடவை இப்படி எல்லாம் பண்ணு அப்பறம் இருக்கு உனக்கு.. ஏழு கழுத வயசாகுது இன்னும் மண்டையில மசாலா இல்லாதவ மாதிரி இருக்க” என்று யுகி திட்டிட ஆருத்ரா மெத்தையில் வந்து படுத்துக் கொண்டாள் இனி. அதில் ஆருவிற்கு நிம்மதியாக இருந்தது. அவள் தனியாக உறங்கினாலே இது போன்று ஏதாவது அலப்பறையை கிளப்பி விடுவாள். அதனால் மூவரில் யாராவது ஒருவர் அவளுடன் உறங்குவது வழக்கம். இனி தான் இருப்பதிலே மிகவும் நல்லவள். ஆருத்ராவிடம் வம்பு செய்யாமல் இருப்பாள். 

 

அவளுக்கு அடிக்கடி வக்காலத்து வாங்குவதும் அவள் தான். ஆனால் யுகியும் சாதனாவும் அப்படி இல்லை. அவளை வம்பிழுத்து வெறுபேற்றி பார்ப்பதிலே இருவருக்கும் அலாதி திருப்தி. அவர்கள் இருவரையும் பார்த்து ஆரு பலிப்பு காட்டிட, “நாளக்கி என் கூட தான் டி கிளாஸ் வரணும்” என்று சாதனா கூறிட, “சாது நம்ம நாளைக்கு போயே ஆகணுமா?” என கேட்டாள் ஆரு. சாதனாவிற்கும் போகும் எண்ணம் இல்லை தான், ஆனால் நாளை தான் கடைசி நாள். மிகவும் முக்கியமான நாள், நாளை சென்றே ஆக வேண்டும் என்ற நிலைமை அவர்களுக்கு. 

 

“சும்மா போயிட்டு வருவோம்.. நம்ம போலன்னா இது தான் நல்ல சான்ஸ்ன்னு நமக்கு இன்டர்ன்ஷிப் கொடுக்காம போவாங்க.” என்றிட, “அங்க போனாலும் ஒரு ப்ரோஜனமும் இல்ல.. அது இருக்குற கடுப்பை நாளைக்கு நம்ம மேல காட்டும்” என்றாள் ஆரு.

 

“இன்னுமா அந்த அம்மா பழசை மறக்காம சுத்திட்டு இருக்குது?” என கேட்ட யுகி அவள் மெத்தையில் படுத்துக் கொள்ள, “பின்ன.. இவளுக பண்ண வேலையினால அந்த மேமுக்கு ஒரு வருஷம் டுடர்ஷிப்பே இல்லாம போச்சு.. அவ்வளவு சீக்கிராம் மறக்க முடியுமா?” என்றாள் இனி. 

 

“இனி.. நாங்க ஒன்னும் வேணும்ன்னே பண்ணலை.. அவங்க பண்ண தப்பை நாங்க சொன்னோம் அது ஒரு குத்தமா? அவங்க பண்ண வேலையினால காலேஜ் சர்வர்ல இருந்த டேட்டா மொத்தமா டேலிட் ஆச்சு.. அதை சித்தார்த் தான் கஷ்ட்டபட்டு ரேகவர் பண்ணி கொடுத்தாரு” என்றாள் சாது. 

 

“இந்த மேம்மை வேலைய விட்டே அனுப்பி இருக்கணும்.. அவங்களுக்கு பதிலா சித்தை நம்ம கிளாஸ்க்கு போட்டு இருக்கணும்” என்று கண்கள் மின்ன கூறினாள் ஆரு. அதில் மூவரும் அவளை பயங்கரமாய் முறைத்தார்கள். 

 

“இன்னொரு முறை சித் அது இதுன்னு சொன்ன வாய உடைப்பேன்.. தேவை இல்லாம உன் நினைப்ப அவன் பக்கம் திருப்பாத” என்று எச்சரித்தாள் யுகி.

 

“எனக்கு ஜஸ்ட் அவரு ரோல் மாடல் தான்.. அவருக்காக தான் நான் ஹாக்கிங்கே கத்துக்கிட்டேன்… என்னோட இன்ஸ்பிரேசன் அவரு..” என்று ஆரு மேற்கொண்டு கூற வர அவளின் வாயை பொத்திய இனி, “ஒன்னு கனவு கண்டுட்டு உளறுற.. இல்லன்னா இப்படி கண்டதை பேசி உளறுற.. மூடிட்டு தூங்கேன் டி.. மணி ரெண்டு ஆகுது.. நாளைக்கு கிளாஸ் போனும்” என்று அவளை அடக்கிட கப் சிப் என்று வாயை மூடிக் கொண்டாள். நான்கு பேரும் தூங்க செல்ல ஆருத்ரா போன் அந்த நேரத்தில் சினுங்கியது. அமைதியாய் போர்வை உள்ள்ளே சென்ற ஆருத்ரா யார் மெசேஜ் செய்து இருக்கிறார் என்று பார்க்க அவள் எதிர் பார்க்காத ஒரு நபர் அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். “ஐம் கோன்ன மீட் யூ சூன்” என்று வந்து இருக்க முதலில் அவள் அதிர்ந்தாலும் பின் கோவத்துடன் போனை ஓரமாக வைத்து விட்டு தூங்க சென்றாள். தூக்கத்தில் கூட அந்த நபரை வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தாள் ஆருத்ரா. 

 

 

இடம் சோன்குயிங், சீனா

 

விடியற் காலை நான்கு முப்பது மணி போல் கருப்பு நிற மெர்சடிஸ் காரில் இருந்து ஆறடி உயரத்தில் இறங்கிய ஒருவன் மிகப்பெரிய கட்டிடத்தின் உள்ளே சென்றான். ஆள் நடமாட்டம் இல்லாமல் மயான அமைதியாக இருந்தது அந்த மிகப்பெரிய டெக் கம்பெனி. மின் தூக்கி உள்ளே சென்றவன் மைனஸ் நான்கு என்ற பொத்தானை அழுத்தினான். அது அவன் இருந்த தளத்தில் இருந்து கீழே நான்கு தளத்திற்கு சென்றது. அந்த நான்காவது தளத்திற்கு வந்ததும் அவனின் நீல நிற விழியால் ஸ்கேன் செய்ய அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே விலை உயர்வான பல கணினிகள் இருக்க அதற்கு பின்னே மிகப்பெரிய திரை ஒன்று இருந்தது. சீன இளைஞன் ஒருவன் மிகவும் மும்மரமாய் கணினியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். 

 

அவன் வந்ததை கண்டதும் மரியாதையாக எழுந்து நின்று தலை வணங்கினான். இருவரும் சீன மொழியில் பேசிக் கொள்ள எதற்கோ சம்மதமாய் தலை அசைத்த சீனாக்காரன் உடனே வேக வேகமாய் அவனின் கணினியை தட்டிட அதற்கு பின்னால் இருந்த திரையில் முதலில் உலக வரைபடம் தெரிந்து அதன் பின் இந்தியா நோக்கி வந்து, ஒரு சிகப்பு புள்ளி தமிழ்நாட்டை குறியீட்டாக காட்டிட ஒரு பக்கமாய் இதழை வளைத்தான் அவன். அவனுக்கு முன்னே இருந்த மேஜை மீது இரு கைகளையும் ஊன்றி அந்த வரைபடத்தையே உற்று பார்த்தவன் தமிழ்நாட்டை அவனின் ஆள்காட்டி விரலால் இரண்டு முறை தட்டினான். 

 

“ஐம் கோன்ன கெட் யூ சூன் லிட்டில் மௌஸ்” என்று கூறியவனின் இதழ்கள் லேசாய் விரிந்து இருக்க அருகே இருந்த சீனாக்காரனுக்கு உடல் லேசாய் நடுக்கம் கண்டது. அவனுக்கு தெரியாதா அவன் பாஸ் வார்த்தைக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்னவென்று. இந்த சிரிப்பிற்கு பின்னால் எத்தனை பேரை அவன் பலி வாங்க போகிறானோ என்று நினைத்துக் கொண்டான். 

 


   
ReplyQuote

You cannot copy content of this page