About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 10
அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.. அவனின் காதல் அவளுக்கு புரிந்தது.. பொது இடத்தில் வைத்து தனக்கு முத்தமிட்டதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
“ ஆரியன் ஏ..ஏன் ? ” தலையை பிடித்துக் கொண்டு குனிந்து கொண்டாள்..அவன் செய்த செயல் அருவருப்பாக இருந்தது..
அவளை பார்த்திருந்த விஷ்ணு தேவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது..நிலைகொள்ள முடியவில்லை, கை முஷ்டியை இறுக்கி ஓங்கி மேசையில் கையை அடிக்க பரபரத்த கரங்களை பிள்ளைகளும் ஜனார்த்தினி இருப்பதையும் கருதி பற்களை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் இருக்கையை விட்டு விருட்டென்று எழுந்தான்..
ஜனார்த்தனி ” தேவா என்ன ஆச்சு டா ? ”
“ ஃபுட் வரும் ஜானு சாப்பிட்டே இருங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துர்றேன் ” என்று சொல்லிவிட்டு சென்றான் அவன்..
தலையை பிடித்து அமர்ந்து இருந்தவளை “ கவி உனக்கு என்ன ஆச்சி? தலைவலிக்குதா? ” அக்கறையாக அவன் கேட்க..“ ஐ வாண்ட் டூ கோ ரெஸ்ட் ரூம் ” எழுந்து சென்றாள் அவள்..
ரெஸ்ட் ரூம் சென்றவள் முதல் வேலையாக செய்யதது முகத்தை கழுவியது..
கண்ணாடியில் அவள் முகத்தை பார்க்கவும் அவள் விரும்பவில்லை..இதே சமயம் விஷ்ணு தேவன் நீர்த் தொட்டியில் கரத்தினை அழுத்த பற்றி கண்ணை மூடி நின்றான்..
உள்ளுக்குள் கொதித்து கொண்டிருக்கும் தீயை அனைத்திட முடியவில்லை..
திகு திகுவென எறிந்து கொண்டே இருந்தது..ஒரு வாறாக தன்னை சமாளித்து கொண்டு வெளியே வந்த போது இசையும் அவனும் மோதிக் கொண்டனர்..
இருவரின் தோள்கள் தாராளமாக உரசிக் கொண்டது...அவள் உயிரேற்றம் அடைந்தாள்..
விஷ்ணு தேவன் அவள் தான் என உணர்ந்து கொண்டான்.. இருவரும் ஒரு சேர நேர் கோட்டில் இருவரது விழிகளும் சந்தித்தது..
“நீங்க இங்கே என்ன பண்றீங்க இசை ? ” விலகி நின்று,வெகு நிதானமாக கேட்டான் ..அவள் முகம் ஈரமாக இருப்பதை கண்டான் ‘முகம் கழுவி இருக்கிறாள் ஆனால் ஏன் ? ’ என்ற கேள்வி அவன் மனதில் இருந்து எழுந்தது..
“ஆரியன் கூட நைட் டின்னருக்கு வந்தேன் தேவா சார்..அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..நீங்க இங்கே எப்படி ?” அவளும் பதில் கேள்வி கேட்டாள்..
விஷ்ணு தேவனும் லேசான புன்னகையுடன் “ என் ஜானு அம்மா கூட பசங்களையும் டின்னருக்கு அழைச்சிட்டு வந்து இருக்கேன் இசை..” என்றான் அவன்...
“ ஜானு அம்மா? அவங்க ” ‘ இவர் மனைவியும் பசங்களா இருக்குமோ? ’ மனதில் நினைத்து அவன் கூடவே நடந்தாள்..
அவளின் முகம் போக்கை வைத்தே நினைத்து கொண்டான்..அவள் என்ன நினைத்து இருப்பாள் என ஊகித்து இருந்தான்..
உதட்டிற்குள் சிரிப்பை மறைத்துக் கொண்டான்.. அவனும் அதற்கு மேல் பேசவில்லை..
இருவரும் அவர்களின் இருக்கைக்கு வந்த போது “ தேவா சார் வாங்க உங்களுக்கு ஆரியன் அறிமுகப்படுத்துறேன்..” அவளே அழைத்து சென்றபோது அப்படியே நின்று விட்டாள்..
அவனும் அவள் பார்வை செல்லும் இடத்தை பார்த்தவனுக்கு முகம் இறுகியது..
காணகூடாதவரை கண்டது போல் இருந்தது அவனின் செயல்..
ஆரியனின் குடும்பத்தினர் பத்மா , இளங்கோ , திவ்யா வந்திருந்தனர்..இமாயாவின் தோழி திவ்யா ஆரியனின் தங்கையே..
அடுத்து அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக இசைகவியின் குடும்பத்தினரும் வருகை தந்தனர்..
இமாயா தமக்கையை கண்டு உற்சாகமாக கை அசைத்தாள்.. நொடியில் தமக்கை அருகில் நின்றிருந்த விஷ்ணு தேவனைப் கண்டு அவளுக்கு ஒற்றை கண் சிமிட்டி இரு விரலை மடக்கி , கடைசி மூன்று விரல்களையும் நிமிர்த்தி அருமை எனும் விதமாக அவள் சொல்ல..
விழிகளை சுருக்கி கெஞ்சும் பார்வையுடன் வேண்டாம் என தலையசைத்தாள் அவள்..
மேகநாதன் விஷ்ணு தேவனை கண்ட அவர் “ஹலோ, மிஸ்டர் விஷ்ணு தேவன் வாட் அ சப்ரைஸ் டூ சீ யூ ஹியர்! எப்படி இருக்கீங்க?” மேகநாதன் கை குலுக்கலுடன் புன்னகையுடன் கேட்டார்..
“ஹாய் மிஸ்டர் மேகநாதன் சார் !என்னால நம்பவே முடியல..இட்ஸ் பீன் சோ லோங்! நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி? ” அவரிடம் கேட்டான்..
“ நான் நல்லா இருக்கேன் மிஸ்டர் விஷ்ணு தேவன் நைட் டின்னர் ஹோட்டலுக்கு வரணும்னு நினைக்கவே இல்ல மை டாட்டர்க்கு ஸ்வீட் சப்ரைஸ் கொடுக்குறதுக்காக வந்தேன் மை பியூச்சர் சன் இன் லோ என் டாட்டருக்கு ரீசண்ட்லி என்கேஜ்மண்ட் முடிஞ்சிது சோ அதுக்காக மேரேஜ் முன்னாடி ஃபேமிலி அழைச்சு இருக்கார் மீட் மை பியூச்சர் சன் இன் லோ ஆரியன் இளங்கோ..ஆரியன் கம் ஹியர் ” அவனை அழைத்து அவன் முன்பு அறிமுகப்படுத்தி வைத்தார்..
இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பதால் போலியான புன்னகையுடன் கையை குலுக்கிக் கொண்டனர்..
“ மீட் மை டாட்டர் இசைகவி ” அவர் மகளை அறிமுகப்படுத்த அவனோ “ செக்கண்ட் டைம் மீட் பண்றோம் இசை ” என்று சொல்லி மீண்டும் இருவருக்குமான கை குலுக்கல்..
இவையெல்லாம் ஜனார்த்தனி அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாளே தவிர அவனிடம் வந்து எதுவும் கேட்கவில்லை..
இருவரும் மெல்லிய புன்னகையுடன் விலகிக் கொண்ட சமயம் “ ஜானு அம்மா கம் ஹியர் ” ‘ ப்ச்.. என்னையும் அறிமுகப்படுத்த போறான் போல ’ அவளுக்கு இதில் எல்லாம் கொஞ்சமும் விருப்பமில்லை..“ மீட் மை சிஸ்டர் மிஸஸ் ஜனார்த்தனி நவீன்ரன் மிஸ்டர் மேகநாதன் ” அவரும் பரபரஸ்பர கை குலுக்கலுடன் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்..
ஜனார்த்தனி மற்றும் விஷ்ணு தேவன் பார்வை அழுத்தமாக வெறுப்புடன் பதிந்து மீண்டது ஆரியனின் தாய் பத்மாவின் மீதே!
ஆரியன் குடும்பத்தினருக்கும் சேர்த்து டேபிள் புக் செய்தமையால் அவர்களுக்குள் கதைத்த படி உணவை உட்கொண்டனர்..
ஜனார்த்தனி “ தேவா சீக்கிரம் சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்பலாம் டா.. எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கல்ல..” என்றாள்..
“ ஜானு அம்மா நாங்க வந்தது பசங்களுக்காக தவிர நமக்காக இல்ல..வேண்டாதவங்களை பார்க்குறதை தவிர்த்தாலே போதும்..சாப்பிடு ” அவன் சொல்வதும் சரிதானே என்று புரிந்து கொண்டு உணவை உட்கொண்டாள் ஆனால் சிறு வயதில் நடந்தவற்றை ஜனார்த்தனியால் மறுக்க முடியாததொன்று கடினப்பட்டு தன் சிந்தனை செல்லும் திசையை விரட்டி விட்டு விஷ்ணு தேவனுடன் பேசினாள்..
“ தேவா விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் இன்னொரு பிரான்ச் ஓபன் பண்ண போறதா சொன்னீயே அதுக்காக அரேஞ்ச் பண்ணல்வையா? ” என்று அவள் கேட்க..
“ சீக்கிரம் ஓபன் பண்ணலாம்னு நினைச்சேன் பட் சின்ன சின்ன வொர்க் இன்னும் இருக்குறதால டிலே ஆகும் ஜானு அம்மா ” என்றான்..“ நான் கிளம்புறதுக்குள்ள ஓபன் பண்ணிருவியா? ” அவள் கேட்க..“ ஆமா ” அவளும் சரியென தலையசைத்தாள்..
இசைகவியின் சிந்தனை முழுவதையும் ஆட் கொண்டது என்னவோ விஷ்ணு தேவனே!
‘ அப்ப அவரோட அக்காவா? நான் தான் லூசு மாதிரி தப்பா நினைச்சுட்டேன்..ஆனா தேவா சாருக்கு காதலி அண்ட் மனைவி இல்லாம எப்படி இருக்கும் ஒண்ணும் விளங்க மாடேங்குதே ’ அவனைப் பற்றி நினைத்து கொண்டு இருக்க..அவன் உண்டு கொண்டிருந்த போது சாப்பிட்ட உணவு புரையேறியது..
ஜனார்த்தனி அவசரமாக அவனுக்கு குடிக்க தண்ணீரைக் கொடுத்தாள்..
தலையில் தட்டி, அவள் கொடுத்த தண்ணீரை அருந்தினான்.. அவனின் இருமல் சத்தம் இவளின் செவிக்கு கேட்டது ஆனால் திரும்பி பார்க்க நினைக்கவில்லை..
“ யாரோ உன்னை பத்தி இப்ப நினைச்சு இருக்காங்க அதான் உனக்கு புரையேறி இருக்கு.. எனக்கு என்னவோ ஹர்ம்..உன் பக்கத்துல நின்னுட்டு இருந்த பொண்ணு இல்ல உன்ன பார்த்து சூப்பர் சொன்ன பொண்ணா இருக்கும்.. ” ரகசியமாக அவன் செவியில் சொல்ல..அவன் தான் திரு திருவென விழித்தானே தவிர இசைகவி பற்றியே மூச்சு விடவில்லை அவன்..
இசைகவி தான் அவனைப் பற்றி நினைத்திருப்பால் என்று அவனுக்கு தெரியும் தமக்கையிடம் தற்போது சிறு ஊற்றாக ஊற்றெடுத்து இருக்கும் இசை மீதான நேசத்தை முழுதாக உணர்ந்து அவளிடம் சொன்னதன் பிறகே அவளிடம் கூற நினைத்தான்..
ஆரியன் இசைகவியிடம் “ ஸ்வீட் சப்ரைஸ் எப்படி இருக்கு கவி..” அவன் கேட்க..“ நல்லா இருக்கு ” வேறு எதுவும் அவனோடு பேசவில்லை அத்துடன் நிறுத்திக் கொண்டாள்..
பத்மாவின் விழிகள் விஷ்ணு தேவன் மீதே இருந்தது..அதனை கவினித்த இளங்கோ “ பத்மா அங்கே என்ன பார்வை சாப்பிடு ”அவர் மனைவியை அதட்டினார்..
அதன் பின் அவன் இருக்கும் பக்கமும் அவர் பார்க்கவில்லை..
தொடரும்..
சின்ன எபிதான் நாளைக்கு பெரிய எபியா தர முயற்சி செய்றேன் நண்பர்களே! நன்றி..
@vsv4 ஆரியப் அம்மாக்கும் ஜானும்மாக்கும் இடைல என்னவோ இருக்கு. அது தேவனுக்கும் தெரிஞ்சிருக்கு. என்னவா இருக்கும். 🤔🤔 அடுத்த எபில பாத்துக்கிறேன்...🤣
Latest Post: அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள் Our newest member: Seeni Selvi S Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page