About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
மனம் -2
இரண்டு மாதங்களுக்கு முன்பு "றிஷி நம்ம தியாகராசா மாமா அவங்க பொண்ணுக்கு உன்ன கேக்காங்கடா என்ன சொல்ல என பயந்து பயந்து தாய் கேட்க ....."
அன்னையைப் பார்த்த பார்வையிலேயே மேலே பேசாமல் வாய் மூடிக் கொண்டார்.
கணவனை திரும்பிப் பார்த்து பெருமூச்சுடன் எழுந்து சென்றார் நீலவேணி....
திருமணத்தை வெறுக்கும் மகனை எவ்வாறு கட்டாயப்படுத்துவது என்பது தான் பெருமூச்சிற்கான காரணம்......
சப்தஸ்ரீ திருமணமானவள் ஆறு மாத ப்ரொஜெக்ட்டிக்காக அவளது கணவன் மலேசியா சென்றுள்ளான். காதலை மட்டுமே கொண்ட அழகான ஜோடி.
தனது அத்தானின் மீது மிகுந்த மரியாதை மற்றும் அக்காவின் மீது பாசம் கொண்டவன் தான் நம் நாயகன் சப்த ரிஷி.
அன்று காலைப் பொழுது அழகாக புலர்ந்தது தங்களது வேலைகளைப் பார்த்த வண்ணம் அனைவரும் காலை உணவை முடித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாராகும் வேளை.....
மாலை நான்கு மணி இருக்கும்
" அம்மா போய் வாரேன்" என தனது கம்பீரமான குரலில் சொல்லிவிட்டு தனது காரில் ஏறி பயணமான் ரிஷி.
அன்று மாலை "அக்கா"........ என அழைக்கும் சத்தத்தில் நீலவேணி வெளியே வர
அங்கு அவரது தம்பி முறையான சத்தியசீலனும் அவரது மகளும் நின்றிருந்தனர்.
"வா வா சீலா வாமா...."
என அவர்களை வரவேற்றுஅமரச் சொல்லிவிட்டு....
" இருங்க அவர கூட்டிட்டு வாரேன் என நீலவேணிஅறையினுள் சென்றார்.
சிறிது நேரத்தில் பிரகாஷும் வர சுக துக்கங்களில் தொடங்கிய பேச்சு பழைய கதைகள் வரை சென்றது.
அனைத்தையும் ஒரு பார்வையாளராகவே சகஸ்தா பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சில தினங்களுக்கு முன் "ஏங்க சகஸ்தா. இன்டர்ன்ஷிப் திருகோணமலைல என்று சொல்றா,
தனியா அவள அனுப்ப ஏலாது... குவார்ட்ஸ்ல தங்கவாம் என்றா என்னனு கேளுங்க" என்றார் சாருமதி தனது கணவனிடம்.
"நீலவேணி அக்காட கேட்டுப் பார்போம்...
ஸ்ரீயும் அங்க தான் இருக்கா அவங்க பையன் வேலைனு இருக்கிரவன்....
எதுக்கும் கேட்டுப் பார்ப்போம் என்றவாறு நீலவேணிக்கு அழைப்பெடுத்தார்.
"ஹலோ அக்கா நான் சீலன் பேசுரன்....ஆமாக்கா எல்லாரும் நல்ல சுகம்.....உதவி ஒன்னு சகஸ்தா திருகோணமலைலான் ஆறு மாதம் இன்டர்ஸ்ஷப் கிடைச்சிருக்கு. வெளிய தங்க என்றா?? எங்களுக்கா அவளவா இஷ்டமில்லக்கா.......
இனி ஏதும் பிரச்சினைனா சாருவால தாங்கிக முடியாது......
அது தான் அங்க வீட்ட தங்கிகலாமா???என அவர் தயங்கி தயங்கி கேட்க......
சாருட்ட ஃபோன்ன குடு.....என்றார் சாருமதியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு. .......
பின் பிரகாஷுடனும் பேச...... பிரகாஷும்......என்ன மச்சான இது புள்ளைய கூட்டிடு வா.....என்றார்.
சகஸ்தா தான் அங்கு தங்கிக் கொள்ள முடியாது என்றாள் அவளையும் ஒருவழியாக சரிகட்டி இதோ திருகோணமலை வந்துள்ளனர்.
ஸ்ரீயும் சிறிது நேரத்தில் காஃபி மற்றும் மாலைச் சிற்றூன்டியும் கொண்டு அனைவருக்கும் கொடுத்தாள்.
"ஸ்ரீ எப்படிமா இருக்க என சீலன் கேட்க நல்லா இருக்கன் ஆங்கிள் என்றாள் புன்னகையுடன்........
"ஸ்ரீ சகஸ்தாக்கு அறையக் காட்டு என நீலவேணி சொல்ல சகஸ்தாவும் தனது பைகளுடன் ஸ்ரீயைப் பின் தொடர்ந்தாள்.
"இதான் ரூம் எதுனாலும் கேளுடா"என்றபடி ஸ்ரீ கீழிறங்க சகஸ்தா அறையினுள் நுழைந்தாள்.
அறை அழகாக இருந்தது.
தனது பொருட்களை அங்கு வைத்து விட்டு அறையை விட்டு வெளியே கீழத்தளம் நோக்கி வந்தவள்.
தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
"அப்போ நான் கிளம்புறன்" என சீலன் சொல்ல பிரகாஷோ......
"நின்று நாளைக்கு போகலாமே" என்று சொல்ல ........
"இல்ல மச்சான் நாளைக்கு ஆஃபிஸ் போகனும்" என்று கூறி,சகஸ்தாவிடம் ஆயிரம் பத்திரங்களை சொல்லி தனது ஊரிற்கு புறப்பட்டார்.
பின் அனைவரும் கலைந்தனர்.
சகஸ்தாரெஸ்ட் எடுமா டயர்ட்டா இருக்கும் என்றார் நீலவேணி..
அவளும் தலையாட்டியபடி அறைக்கு வந்தவள்.
அறைக்குள் இருந்த குளியலறையிலே குளித்து உலர்ந்த ஆடையணிந்து...
தாயிடன் சிறிது நேரம் பேசிவிட்டு இருக்கும் போது........
"உள்ள வரலாமா?? " எனக் கேட்டுக் கொண்டு உள்ளே வந்தாள் சப்தஸ்ரீ.
ஸ்ரீயின் பேச்சில் சகஸ்தாக்கு சிரிப்பு வர உதடுகடிச்சி அதை தடுத்தாள்.
"சிரிப்பு வந்தா சிரிக்கனும் என்று கூறியவாறு"........
"என்ன இன்டர்வியூ எடுப்பமா???". என்றபடி அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.
திருதிருவென விழித்தபடி நின்ற சகஸ்தாவைக் கண்ட ஸ்ரீ சத்தமாகவே சிரிக்கத் தொடங்கினாள்.
தன்னை கேலி பண்ணுறாங்க என புரிய "அக்கா" என சிறு பிள்ளை போல் சிணுங்கினாள்.
சிறு பிள்ளைத் தனமான அவளின் செயலில் அவளின் பால் ஒரு உரிமை உணர்வு தோன்ற........
"ஹேய் டால் சோ கியூட்"என அவளின் கன்னம் கிள்ளி நட்புக் கரம் நீட்டினாள் .
"அப்புறம் டால் எங்க இன்டர்ஷுப்? என்ன வேலை? என ஸ்ரீ கேட்க......
இங்க தான் ஏதோ ரிசார்டல பேர மறந்துடன் என்றாள் சிரித்தபடி.
"அடிப்பாவி வேலைக்கு போற இடத்தையே மறந்துட......
"லெட்டர் இருக்கு பார்த்திடா போச்சி" என்றாள் சகஸ்தா...
"ஓகே ஓகே காலைல அப்பாட சொல்றன்" என இருவரும் கதையளந்தபடி இருக்க கீழிருந்து ஸ்ரீ சாப்பிடவாங்க ரெண்டு பேரும் என்றார் நீலவேணி.
தயக்கத்தோடு வந்தவளை பேசிப் பேசியே இயல்பாக்கினாள் ஸ்ரீ.....
அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.பிராஷும் சிறது நேரத்தில் அவ்விடம் வந்தார்.
அப்பா வேலைக்கு போற இடத்தையே இவ மறந்துடா என்றாள் ஸ்ரீ.....
சகஸ்தாவோ..... சங்கடமாக பிரகாஷைப் பார்க்க....
"ஹாய் டால்" என்றார்.அவளும் "ஹாய் சார்" என்றாள்...
"ஸ்ரீயோ எப்படிபா நானும் டால்னு தான் கூப்பிட்டன்" என்றாள்.
"பார்க்க அப்படி தான் இருக்கா...... என்றார் நீலவேணி
"ஹால் மீ ஆங்கிள்"..... என்றார்.
சகஸ்தாவும் "ஓகே ஆங்கிள்" என்றாள்.அவளிடம் படிப்பு இன்டர் பற்றி பேசிக் கொண்டிருந்தார்....
எங்க இன்டர்ட் என பிரகாஷ் கேட்க......
ஸ்ரீயோ சிரிக்க...... ராயல் ரிசாட் என்றாள் சகஸ்தா.
ஓகேமா மார்னிங் போவோம் குட் நைட் என்றபடி சாப்பிட்டு விட்டு கை கழுவிக் கொண்டு சென்றார். ஸ்ரீயும் குட் நைட் டால் என்றபடி தனதறைக்குள் நுழைந்தாள்.
வேணியுடன் பேசியபடி சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய் உதவியவள் தானும் தூங்கச் சென்றாள்.
தனதறைக்கு வந்தவளுக்கு புது இடம் தூக்கம் வரவில்லை ஃபோனுடன் நேரத்தை செலவிட்டவள் அப்படியே தூங்கிப் போனாள்.
இரவு பதினோரு மணியளவில் வீடு வந்து சேர்ந்தான் றிஷி.
வந்தவன் ஒரு அறையைத் திறக்க அதுவோ உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
யோசனையுடன் மற்றைய அறையை திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் அப்படியே விழுந்த நொடி களைப்பை உணர்ந்தவன் உடை கூட மாற்றாது உறங்கியும் போனான்.
அதிகாலையில் விழிப்பு வர எழுந்தவன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய ஏதுவாக உடையை மாற்றியவன், பால்கனியில் இருந்து தனது உடற்பயிற்சியைத் தொடர்ந்தான்.
சிறிது நேரத்தில் கீழே" குட் மார்னிங்மா என்றபடி வர குட் மார்னிங் றிஷி" என நீலவேணி காஃபியைக் கொடுக்க......
காஃபி கப்புடன் பால்கனிக்கு வந்தவன் தூரத்தே தெரியும் நீலக் கடலை ரசித்த வண்ணம் காஃபியை அருந்தினான்.
அப்போது கீழே சிரிப்புச் சத்தம் கேட்டது..எட்டிப் பார்க்க தந்தை இளம் பெண்ணோருத்தியுடன் காரில் ஏறினார்.
காலி காஃபி கப்புடன் கீழே வந்தவன்.. தொலைக்காட்சியை இயக்கி காலை நேர பத்திரிகை செய்தியை பார்க்கும் வேளை அவ்விடம் வந்தாள் ஸ்ரீ.
ஸ்ரீயிடம்"அப்பா எங்கக்கா" எனக் கேட்க......
சகஸ்தா வந்தது தொடக்கம் அனைத்தையும் ஸ்ரீ சொன்னாள்.
ம்ம்....என உள்வாங்கிக் கொண்டான்.
சகஸ்தாவோ நேரத்துக்கே எழுந்தவள் குளித்து அழகான மெருன் மற்றும் கோல்ட் சுடிதாரை அணிந்து தயாராகி
தாயுடனும் தந்தையுடனும் சிறிது நேரம் பேசி விட்டு கீழே வர நேரம் ஏழரையைக் காட்டியது.
தோட்டத்தில் பூக்களைப் பறித்தவள் கடவுளுக்கு சாத்தி விட்டு நீலவேணியிடம் பேசியபடி இருக்கும் போது.....
"போகலாமாமா?? என்றபடி வந்தார் பிரகாஷ்.....
ஆஃபிஸியலான உடையணிந்து கம்பீரமாக இருந்தார்.
நீங்களும் வருவீங்களா ஆங்கிள் இடமும் தெரியல என அவள் கேட்க...
அப்போது வந்த ஸ்ரீ ஸ்கூல் கிட்ஸ் போல இருக்குபா என்றாள் சிரித்தபடி....
"எல்லாம் சரி ரெண்டு பேரும் சாப்பிட்டு போங்க".... என அவ்விடம் வந்தார் நீல வேணி
இருவரும் காலை உணவை உண்டனர்.பின். காரில் ஏறும் போது தான் றிஷி பால்கனியில் இருந்து பார்த்து.ஸ்ரீயிடம் கேட்டது அனைத்தும்.
இதோ
மனதில் நின்றவள் 02
பிடித்து எப்படி இருக்குனு சொல்லுங்க....😁😁😁
Latest Post: தேவன் உருக்கும் இசை (11) Our newest member: Vanitha R Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page