All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (08)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

அத்தியாயம் 8

 

 

 

 

பார்த்தீபன் நண்பன் அபி வீட்டில் இருந்தான்..

 

“ நீயெல்லாம் ஒரு நாள்ல எப்படிடா காலேஜ்ல லெக்சர் எடுக்குற? ஸ்...ஸ்ப்பா! முடியல கத்தி கத்தி இப்பவே தொண்டை வலிக்குதுடா? ” அணிந்திருந்த ஷர்ட்டை தளர்த்திவிட்டு இருக்கையில் சாய்ந்து கொண்டான்..

 

“ காலேஜ்னா அப்படித்தான் டா இருக்கும் இதை குடி தொண்டையும் வாய்ஸும் சரியாகிடும் ” அவன் முன்பு குவாட்டர் பாடில்லை எடுத்து வைத்தான் அபி..

 

சாய்திருந்தவன் ஒன்றை கண் திறந்து பார்த்து , நண்பனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான்..“ நீ.. உன்னை ப்ரண்டுன்னு சொல்லாத டா ” அவனை குனிய வைத்து முதுகில் மொத்து மொத்தென்று மொத்தி எடுத்தான்..

 

“ டேய் விடுடா கழுத்து வலிக்குது..உன் ஸ்ட்ரோங் பாடியோட அடி என் உடம்பு தாங்காது டா விட்றா ” அவன் பெருங் குரல் எடுத்து கதறிய பிறகே அவனை விட்டான் பார்த்தீபன்..

 

“ஷூ..” முதுகை பின்நோக்கி வளைத்து கழுத்தை தேய்த்துக் கொண்டான் அபி.. “காலேஜ் போனியே ஸ்டூடண்ட்ஸ்க்கு படிச்சி கொடுக்க போகல்லன்னு எனக்கு நல்லா தெரியும்..உங்க அப்பாவோட பிஸ்னஸ் பாக்குற? எதுக்காக என்கிட்ட காலேஜ் ஜாயின் பண்ணனும் சொல்லி நீ கேட்ட? ” என்று அவன் கேட்டான்..

 

குவாட்டர் பாட்டிலை எடுத்து குளிர் சாதன பெட்டியில் வைத்தான்..“ இந்த கருமத்தை நீயே குடிடா.. நான் இருக்கும் போது என் முன்னாடி கொண்டு வராத.. காலேஜ்ல புரொஃபஸரா வொர்க் பண்ணனும்னு சின்ன வயசு ஆசை டா ” கண்களில் கொண்டு வந்த பொய்யான கனவு மின்னலுடன் சொல்ல,

 

அவனை நம்பாத பார்வை பார்த்த அபி.. அவனுக்கு நன்கு அபியை பற்றித் தெரியுமே.. இருவரும் ஒரே கல்லூரியில் படித்த நண்பர்கள் ஆயிற்றே அவனிடமே பொய்யை அடித்து விட்டு கொண்டு இருந்தான் அவன்..

 

“ உனக்கு புரொஃபஸர்னாலே அலர்ஜிக் எனக்கு தெரியும்.. சும்மா வாயால ரீல் விடாத மேன்..” குளிர்சாதன பெட்டியை திறந்து குளிர்பானங்கள் இரண்டை எடுத்து வந்து ஒன்றை அவனிடம் நீட்ட வாங்கிக் கொண்டான்..

 

“ பார்த்தீ ஏதாவது ஆர்டர் பண்ணுடா பசிக்குது ” என்று அவன் சொல்ல..

 

“ இரு ஃபுட் ஆர்டர் பண்றேன் ” அலைபேசியில் உணவை ஆர்டர் செய்தான்..

 

“ நீ தான் காலேஜ் டைம்ல என்கிட்ட சொல்லி இருக்கியே..தொண்டை தண்ணி வத்தும் வரைக்கும் கத்த முடியாது..ஃபார்மல் டிரஸ் போட்டுட்டு போக முடியாதுன்னு பெருசா அன்னைக்கு சொன்ன இப்ப என்னடான்னா புரொஃபஸர் வேலைய நீயே கேட்டு காலேஜ் போய் படிச்சி கொடுத்துட்டு வந்து இருக்க உன்னை எந்த லிஸ்ட்ல சேர்க்குறதுன்னே தெரியலை டா..” என்றான் அவன்..

 

குளிர்பானத்தின் திறப்பை உடைத்து அருந்திவிட்டு “ தட்ஸ் மை பர்சனல் ” என்றான்..“ இந்த விஷயத்துல மட்டும் உன்னை சந்தேகமாக தான் பார்க்க தோணுது..என்னவோ பண்ற பரவாயில்ல அந்த விஷயம் சக்சஸ் ஆனதும் சொல்லு ” என்று சொல்லி நண்பனின் தோளில் கை போட்டு அவனோடு நெறித்து “ கண்டிப்பா உன்கிட்ட சொல்லாம எப்படி ? ” அதன் பின்பு அவர்களுக்கான ஆர்டர் உணவு வந்ததும் உண்டு விட்டு உறங்கச் சென்றனர்..

 

இரவு மின்விளக்கு மேசை மீது ஒரு கிளாஸ் பால் இருந்தது..அதை எடுத்து அருந்திய இசைகவி..கிளாஸினை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்..

 

அங்கே மேகநாதனும் வினோதினியும் உறங்காது இசைகவிக்கும் ஆரியனுக்குமான திருமணத்தை எப்போது வைப்பது என்பதை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்..

 

“ ஏங்க நம்ம கவிங்கும் ஆர்யன் மாப்பிள்ளைக்கும் நிச்சயதார்த்தை வைச்சிட்டோம் ஆனா கல்யாணம் எப்ப வைக்கிறதுன்னு சம்பந்தி கூட பேசி முடிவு பண்ணல்லையே ? வேணும்னா நாமலே..” என்று அவர் சொல்ல வர,

 

“ நாமலே முடிவு பண்ண முடியாதே வினோ சம்பந்தி கூட பேசித்தான் முடிவு பண்ணனும் அவரை சந்திச்சு பேசுறேன் நம்ம பொண்ணுக்கு இப்ப தானே 24 வயசாகுது..மெதுவா கல்யாணத்தை வைக்கலாம் அவசரம் வேண்டாம் வினோ..” என்றார் மேகநாதன்..அவர் கூறியதே வினோதினிக்கும் சரியாகப் பட்டது...

 

சமயலறைக்கு சென்று பால் அருந்திய கிளாஸை கழுவி வைத்துவிட்டு கூடத்தை தாண்டி சென்ற போது தாய் தந்தை பேசுவது அவளின் திருமண விஷயம் என்பது அவளுக்கு துள்ளியமாக செவிகளில் கேட்டதும் ,

 

அவளுள் நீண்ட பெரு மூச்சு வெளிப்பட்டது..மாடி படிகளில் ஏறி தன் அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தபோது அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை..

 

ஒரு வித அசெளகரியம், மூச்செடுப்பதே சிரமம் என்பது போல் உணர்ந்தால் கட்டிலை விட்டு எழுந்து பால்கனியில் நின்று காற்று வாங்கினால் மனதிற்கு நன்றாக இருக்கும் என்று தோன்றியது..

 

மேகநாதன் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது எந்தவொரு ஆர்வமும் அவளுக்கு இல்லை..அவருக்கு ஆர்யனை பிடித்ததும் மகளிடமும் கூறிவிட தந்தைக்காக சம்மதம் தெரித்தாள் அவள்..

 

அவர் எது செய்தாலும் அவளின் நன்மைக்காக தான் இருக்கும் என்கிற எண்ணம்..

 

இரவில் அணியும் தொள தொளப்பான அடர் நீல நிற காற்சட்டை அணிந்திருந்தாள் அவள்..

 

அவள் நின்றிருக்கும் பால்கனி வழியாக பார்த்தால் அவர்களின் தெரு தெரியும்..

 

இரவின் அமைதியில், தெருவின் மின்விளக்குகள் ஒவ்வொன்றாக ஒளிர்ந்து, மஞ்சள் ஒளியால் தெருவை அலங்கரிக்க.. ஒளி மெல்லிய நிழல்களையும் பளிச்சிடும் இடங்களையும் உருவாக்கி, இரவுக்கு ஒரு மாயமான தோற்றம் அளித்தது...

 

சுற்றி வர அமைத்திருக்கும் மதில் சுவற்றோடு தெருவின் ஓரத்தில் இருக்கும் பெரிய மரத்தடியின் கீழ் விலையுயர்ந்த கார் ஒன்று நிற்பதை கண்டவளுக்கு விழிகள் அதன் மீது கூர்மையாக படிந்தது..

 

அப் பக்கம் தெரு மின்விளக்கின் வெளிச்சம் அவ்வளவாக இல்லை என்பதால் காரினுள் யாரேனும் அமர்ந்து இருக்கிறார்களா என்று அவளால் பார்க்க முடியாமல் போனது..

 

அவளுக்கு வேண்டும் என்றால் தெரியாமல் இருக்கலாம் காரில் அமர்ந்து இருந்த உருவத்திற்கு அவளின் உருவத்தை தொலைவில் கண்டாலும் அருகில் தெரியும் அளவிற்கு தெளிவாகத் தெரியவில்லை..

 

அவளின் முகம் யோசனையில் நெற்றி சுருங்கியது..“ ஆர்யனா இருக்குமோ? அவர் இந்த மாதிரி கார் யூஸ் பண்ணதை பார்த்தது இல்லையே? ” என்று கூறியவளாள் சரியான அடையாளத்தை கண்டு பிடிக்க முடியவில்லை..

 

“ இந்த தெருவுல நம்ம வீடு மட்டுமா இருக்கு இன்னும் ஏகப்பட்ட வீடுகள் இருக்கு அதுல யாரோடையாவது காரா இருக்கும்..ஆ..ஆ...” தோளை குலுக்கினால் இடையே கொட்டாவியும் சென்றது..

 

பால்கனி கதவை சாற்றி, உள்ளே இரவு மின்விளக்கை அணைத்து விட்டு உறங்கினாள் அவள்..

 

வெளியே நின்றிருந்த காரும் அவள் உள்ளே சென்றதும் அங்கிருந்து சென்றிருந்தது..

 

விஷ்ணு தேவன்  ஊரில் தமக்கையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தனுஷ் அவன் வீட்டில் இறக்கிவிட்டு, அவன் வீட்டிற்கு வந்துவிட்டான்.. மணியம்மை அழைத்தபோது அவர் இங்கே வர மறுத்துவிட்டார்..

 

சத்தியவாணியால் வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை அன்று பரந்தராமன் வீட்டில் இருந்தார்.. கதவருகில் நின்று போகும் அவர்களை ஏக்கத்துடன் பார்க்க மட்டுமே அவளால் முடிந்தது..

 

மறுநாள் விஷ்ணு தேவன் மாலை நேரம் போல் இதழியல் FM இற்கு வந்திருந்தான்..

 

ரேடியோ ஸ்டேஷனே பரபரப்புக்குள்ளாகியது..

 

அடர் சிவப்பு நிற ஷர்ட் , கருப்பு நிற டெனிம் ஃபேன்ட் அணிந்து ஃபார்மல் உடை , வலது மோதிர விரலில் பொன் மோதிரம், இடது கரத்தில் விலையுயர்ந்த கைக்கடிகாரம் என ஆளுமையான தோற்றம் , மிடுக்கான நடையோடு உள்ளே நுழைந்தவனை கண்ட கிரண் வியந்து பார்த்தான்..

 

திடீர் என இங்கே விஜயம் செய்வான் என்று அங்கு உள்ள நிர்வாகாகள் எதிர்பார்க்கவும் இல்லை..

 

தனுஷிடம் “ நம்ம டெக்ஸ்டைல்ஸ்ல மாடல்கள் வைச்சி எடுக்கப்பட்ட விளம்பரங்கள், இதழியல் FM ஆர்ஜே இசையின் குரலால் ஒலிபரப்பு ஆகணும்..இதை பத்தி இங்கே பொறுப்பா இருக்குற நிர்வாகி கிட்ட அனுமதி கேட்டு சொல்லு தனுஷ்..” அவனின் கை உதவியாளடம் தெளிவாக பேசிக் கொண்டு இருந்தான்..

 

அதற்கு தனுஷ் சென்று நிர்வாகியிடம் பேச அவசியம் இல்லை என்பது போல் அவரே அவ் இடத்திற்கு வந்தார்.. விஷ்ணு தேவனுடன் பரஸ்பர நலன்களுக்கு பிறகு கைகுலுக்கி அவனிடம் சிறிது நேரம் கதைத்த நிர்வாகி அதன் பின் விஷ்ணு தேவன் முன் வைத்த கோரிக்கைக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் ஒப்புக் கொண்டார்..

 

“ என் கோரிக்கையை ஏத்துகிட்டதுக்கு நன்றி சார்..அண்ட் மோர் ஓவர் மிஸ் இசையை நான் சந்திக்கணும் அதுக்கு நீங்க அனுமதி தருவீங்களா? ” 

 

“ கண்டிப்பா விஷ்ணு சார் நீங்க தாராளமா இசையை போய் மீட் பண்ணலாம்..” என்றார்..“ கிரண் விஷ்ணு சார் இசை மீட் பண்ணனும் சொல்றாங்க சோ ரேடியோ ஜாக்கி ஸ்டுடியோ சாரை அழைச்சிட்டு போங்க..” அவனுக்கு பொறுப்பினை கொடுத்தார் அவர்...

 

“ நன்றி சார்..” நிர்வாகியிடம் விடைபெற்று கிரண் , விஷ்ணு தேவனை ஆர்ஜே நிகழ்ச்சி நடத்தும் அறைக்கு அழைத்துச் சென்றான்..

 

ஜனார்த்தினியிடம் வேலை விஷயமாக செல்வதாக சொல்லிவிட்டு இசைகவியை சந்திக்கவல்லவா வந்திருக்கிறான்..இசைகவியை பற்றி தனுஷ் தேடி கொடுத்த தகவலின் படி ஆர்யனை நிச்சயம் செய்துக் கொண்ட பெண் என அவன் அறிந்து கொண்டான்..

 

நிச்சயம் செய்தவன் அவனின் குடும்ப பிண்ணனியை பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பான்..எல்லா தகவல்களையும் தனுஷ் தான் சேகரித்து அவனிடம் கொடுத்தது...

 

இவனுக்குள்ளே ஓர் திட்டத்தை திட்டமிட்டு இருக்க..தன் காதலிக்க போகும் பெண்ணையே பாதிக்கப் போவதை அவன் நினைத்திருக்க மாட்டான்..

 

ஆர்ஜே நிகழ்ச்சி நடக்கும் அறையை நோக்கி நடந்து செல்லும் அவனுக்கு..மனம் முழுவதும் பரவசம் அவளின் குரலை கேட்டு இருக்கிறான் , பேசி இருக்கிறான் ஆனால் பார்த்தது இல்லையே..

 

அவன் மேனி அவளை நினைத்து ஒவ்வொரு நிமிடங்கள் கடக்கும் போது சிலிர்த்து அடங்கியது..

 

அறை முன்பு வந்து நின்றதும் “ சார் ரேடியோ ஜாக்கி ஸ்டுடியோ ரூம் இதுதான் இங்கே தான் இசை மேம் இருப்பாங்க.. ” என்று அவன் சொன்னதும்..“ ஓகே நான் அவங்கள மீட் பண்றேன்..” கதவை திறந்து உள்ளே சென்றான்..

 

நடுத்தர அளவிலான அறை ,ஒலி பேனல்கள் வைக்கப்பட்டிருந்தது..

 

அறை முழுவதும் சத்தத்தை குறைக்கும் சவுண்ட் ப்ரூபிங் இருந்தது..

 

ஓவல் வடிவ மேசையில் மைக்ரோஃபோன்களும் மீஷிங் அமைப்புக்கள் பொருத்தப்பட்டிருக்க.. மேசையின் முன் நடுவில் சுழற் நாற்காலியில் இசைகவி அமர்ந்திருந்தாள்..

 

செவியில் ஹெட்போன் அணிந்திருந்தாள்..இன்று நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடனே அவள் ரேடியோ ஸ்டேஷன்க்கு வந்திருந்தாள்..

 

அவனோ அறையை சுற்றி பார்தாதுக் கொண்டே வந்தவன் அவள் பின்னே ஃபேன்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து , தூணில் தோளை சாய்த்து அவளை பார்த்திருந்தான்..

 

அவளின் முகம் தெரியவில்லை..செர்ரி நிற புடவை அணிந்திருந்தாள்..

 

வெள்ளை நிற ஷர்ட், டெனிம் ஃபேன்ட் என அணிந்து கொள்பவள் இன்று ஏதோ ஓர் உந்துதலில் புடவையுடனே இருந்து விட்டாள்..

 

இயல்பாக நடப்பது ஒன்றுதானே!

 

அவள் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முன்னர் அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்..

 

“ இசை ” அவள் அருகில் நின்று இருந்ததால் அவன் அழைத்தது அவள் செவியில் கேட்டது..

 

பழக்கப்பட்ட குரலாக இருக்க..சுழற் நாற்காலியை சுற்றி திரும்பிய போது, அவள் விழிகள் அகல விரித்து, நெற்றி சுருங்கி மறைந்தது..

 

அவன் கண்சிமிட்டி வெண்ணிற பற்கள் தெரிய பொலிவான புன்னகை சிந்தினான் ..

 

அவன் விழிகள் காட்டி ஜாலங்களின் செய்தியோ வேறொன்று, அவன் விழிகளையும் சிரிப்பையும் பார்த்தவளுக்கு உள்ளம் நிறைந்து போனது..

 

“ என்னையே பார்த்ததும் பேச தோணலையா இல்ல இப்படியே வச்ச கண் வாங்காமல் பார்த்துவிட்டே இருக்க போறீங்களா இசை ? ” அவன்

முகத்தில் இருந்த மலர்வு, அவனை அப்படியே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பது போல் அவளுக்குத் தோன்றியது..

 

 

 

 

தொடரும்...

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
 

@vsv4 சூப்பர் சிஸ் 🥰🥰🥰🥰🥰🥰


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

@vsv11 மிக்க நன்றி விழி சிஸ் 😍😍💙💙💙💙


   
ReplyQuote

You cannot copy content of this page