All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வனமாலி - Story Therad

Page 2 / 2
 

Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

வனமாலி - 13

பேரிட்சை மரத்துக்கு நிழல் இருக்குமா..? உலகமகா சந்தேகம் வந்தபோது வேகமாய் சுவற்றை நிமிர்ந்து பார்த்தாள் வைசாலி. இருளில் முட்கள் கலவியில் பின்னிக்கிடக்க, மணி பனிரெண்டு மிகச் சரியாக.

 தலையை உயர்த்திப் பார்த்தாள். அறைக்குள் ஜீரோ வாட்ஸ் சோபையாக வெளிச்சமாய் இருக்கிறேன் என்று பேருக்கு ஒளியை உமிழ்ந்து கொண்டு இருந்தது.

 மூன்று பேர் தங்கும் அறையில், அவளும் சிந்தூரியும் மட்டும் தான் இருந்தார்கள். உடனிருந்த இன்னொரு பெண், இரண்டு மாதம் முன்னாக ஊருக்கு போனவள் இன்னும் ஆளையே காணோம். டபுள் காட் ஒன்றும், அதைவிட்டு கொஞ்சம் தள்ளி சிங்கிள் காட்டும் இருந்தது.

வைசாலி திரும்பிப் பார்த்தபோது, சிந்தூரி மல்லாந்து படுத்து சீலிங்கில் கவனத்தை பதித்து இருந்தாள்.

’’என்னடி நீ தூங்கலயா..?’’

  ’’ நீயும் தூங்கலயா..?’’

  ‘’ ஒரு சிந்தனை ஓடிட்டு இருக்கு மூளைக்குள்ள…’’

  ‘’ என்னவோ அது..?’’

‘’ பேரிட்சம் மரத்திற்கு நிழல் இருக்குமாடா…’’ கேட்டு முடிக்க கூடயில்லை, வைசாலியின் முகத்தில் வந்து மெத்தென்று தலையணை விழுந்தது.

‘’ரெம்ப முக்கியம் இப்போ.. இருபத்தி நாலு வயசில உனக்கு இப்போ ரெம்ப தேவையான யோசனை.’’

‘’ என்ன யோசிச்சாலும் குறை சொல்லுங்கடி..! அதுசரி அவ்விடம் என்ன சிந்தனையோ..?’’ கட்டிலில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொள்ள, மல்லாந்து இருந்த சிந்தூரி, ஒருக்களித்து திரும்பி தலையை கைகளில் தாங்கிக் கொண்டே அவளைப் பார்த்தாள்.

  ‘’ மாலியைப் பார்த்துட்டு வர்றேன். ‘’

‘’அடடா, எவ்வளவு அபூர்வமான நிகழ்வு..! போடி இவளே. தடுக்கி விழுந்தால், மாலி வீட்டிலதான் விழற. இதுல என்ன இன்னைக்கு புதுசா அதைப்பத்தி யோசனை..? வேற எதுவும் மஜாவா..?’’ இருட்டில் கண்ணடித்தவள் மீது இன்னொரு தலையணை பறந்து வந்து விழுந்தது.

  ‘’ விசயத்தை சொல்லித் தொலைடி. எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறே..?’’

‘’சித்தியைப் போய் நேர்ல பார்த்து பேசலாம்னு சொல்றாருடி. அதான் யோசனையா இருக்கு.’’

‘’பயப்படறியா..? எதுக்கு..? எல்லாம் மாலி பார்த்துக்குவாருடி.’’

‘’யோசிக்கிறேன்னு தான் சொன்னேன். பயப்படறேன்னு சொல்லல. யாரும் யாருக்கும் இங்கே அடிமையில்லை வைசாலி. ஆனால், உறவுக்கு கட்டுபட்டு நிக்கிறோம் நல்ல காரணத்தோடு…’’ அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, அறைக்கதவு தட்டப்பட, ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருவரும் வேகமாக கதவை திறந்தார்கள்.

சமையல் செய்யும் தேவகி அக்கா நின்று கொண்டு இருந்தார். அவரைப் பார்த்ததும் குழப்பமும், பயமும் கூடிப்போக படபடப்பாக கேட்டாள்,

‘’ என்னாச்சு அக்கா..? இன்னைக்கு வேலை முடிச்சிட்டு திரும்பி போகலயா நீங்க..? அப்படி இங்கேயே தங்க மாட்டீங்களே..? உடம்புக்கு ஏதாவதுமா..?’’ சிந்தனை வேகமெடுக்க, அதே வேகத்தில் கேள்வியும் வந்து விழுந்தது.

‘’ உடம்புக்கு எனக்கு எதுவும் இல்ல கண்ணுகளா. நம்ம மாலதி அக்காக்குத்தான், காலையில இருந்தே காய்ச்சல். எதுவும் சாப்பிடல. சீரகம் போட்டு கஞ்சி வச்சு தந்தேன். அதையும் வாந்தி எடுத்துட்டாங்க. படுத்தே கிடந்தாங்க. டாக்டர்கிட்ட கூப்பிட்டாலும் வரலை. உங்க யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க. அதான் என்னால எதுவும் செய்ய முடியல.’’ 

 தேவகி கையை பிசைய, எரிச்சலாய் பார்த்தார்கள் பெண்கள் இருவருமே.

 ‘’ இங்கேயென்ன மெகா சீரியலா ஓடிட்டு இருக்குக்கா..? மனுசங்க மனநிலையைப் புரிஞ்சுக்காம, இழுத்துட்டு இருக்கீங்க. சட்னு சொல்லுங்கக்கா. மாலதி அக்காக்கு என்னாச்சு..? ‘’

‘’சொல்றேன்மா. முடியாம படுத்து இருந்ததால தான் நானும் இங்கேயே தங்கிட்டேன். நைட்டும் எதுவும் சாப்பிடல. திடீர்னு பார்த்தா இப்போ நினைவில்லாம இருக்காங்க. மூச்சுவேற சீரில்லாம இருக்கு…’’ தேவகி முக்கிய சேனலின் ப்ரேக்கிங் நியூஸ் போலவே பேசிக் கொண்டிருக்க, வைசாலியும், சிந்தூரியும் எப்போதோ மாலதியின் அறைவாசலில் நின்றார்கள்.

அடுத்த எட்டாவது நிமிடம் ஹாஸ்டல் முழுக்க பரபரப்பு பற்றிக்கொள்ள, அடுத்து வந்த எத்தனையாவது நிமிடத்திலேயோ, வாசலில் அமானுஸ்ய சத்தத்தோடு ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

ஸ்டெக்சரில் மாலதி கிடத்தப்பட்டு ஏற்றப்பட்டபோது, தொண்டையைக் கீறிக்கொண்டு அழுகை வெடித்தது சிந்தூரிக்கு.

ரத்தத்தில் சில பந்தங்கள் விளையும். இதயத்தில் சில பந்தங்கள் பூக்கும்.. இது அது இரண்டுமே அல்லாத விதிமுறைகளுக்குள் பூத்து வேரறுத்து முளைத்த பந்தம்.

எப்போதும் கண்டிப்பாகவே இருக்கும் மாலதி அக்காவின் இதயத்தின் அடிநாதத்தில் தும்பைப் பூபோல ஒரு நீங்காத அன்பிருக்கும் எப்போதும்.தாழம்பூவின் வாசனையை நுகர்ந்த பூநாகம் எங்கிருந்தோ வந்து சேர்வதைப் போல, அந்த அன்பின்வாசம் சிந்தூரி மட்டுமே அறிவாள்.

தூறல் நின்று போயிருந்தது. ஆனாலும் காற்றில் ஈரம் கூடி இருந்தது. குரோடன்சுகளில் கூட பச்சை வாசனை வீறிட்டுக் கொண்டு இருக்க, பகலும் இரவும் ஒன்றாகவே இருக்கும், அந்த பிரபல மருத்துவமனையின் வாசலில், சிந்தூரியோடு சேர்த்து நான்கைந்து பெண்கள் நின்றார்கள்.

 கொசு அத்தனை பேர் உடலிலும் ரத்த பரிசோதனை செய்து கொண்டிருக்க, நேரம் நள்ளிரவை மிரட்டிக் கொண்டு இருந்தது.

முழுதான சில மணிநேரங்களுக்கு பிறகு உள்ளிருந்து வெளியே வந்த ரோஸ் வண்ணம் அதிகமிருந்த சிகப்பு உடை அணிந்த நர்ஸ், ஆபத்தைக் கடந்து விட்டதாகச் சொல்லி, இவர்கள் மூச்சை சீராக்கி வைத்தாள்.

சிந்தூரி மட்டும் அட்டண்டராக அங்கேயே தங்கிக்கொள்ள, மற்றவர்கள் கால்டாக்ஸி பிடித்து ஹாஸ்டல் திரும்பி சென்றார்கள். 

‘’என்ன பிரச்சனை அக்காக்கு..? ஏன் திடீர்னு மயக்கம் ஆகியிருக்காங்க..?’’ ரவுண்ட்ஸ் வந்த நர்ஸிடம் விசாரித்தாள்.

  ‘’ திடீர்னு ஆகல மேடம். அவங்களுக்கு ஆல்ரெடி இந்த ப்ராபளம் இருந்துட்டே இருந்திருக்கும் போல இருக்கு. ஈ.சி.ஜி, ஆன்ஜியோ எல்லாம் நாளைக்கு பண்ணச் சொல்லி எழுதி இருக்காரு டாக்டர். தரோவா செக் பண்ணி பார்த்தாத்தான் தெரியும்.’’ நர்ஸ் ஒரு அறைக்கும் மறு அறைக்கும் நகர்வதிற்குமான இடைவெளியில் சொல்லிக் கொண்டு கடந்துபோன வார்த்தையை முடிந்தளவு மூக்கால் உறிஞ்சிக் கொண்டாள்.

 அறைக்குள் சென்று மாலதி அக்காவைப் பார்த்தாள். சீரான மூச்செடுத்து உறங்கிக்கொண்டு இருந்தாள். பக்கவாட்டில் இருந்த அத்தனை அறைகளும் கிட்டத்தட்ட சாத்திக் கிடந்தது. அந்த ஐந்தடுக்கு மருத்துவமனையை ஒரு சுற்று சுற்றி வந்தாள்,

 உறக்கம் இன்றைக்கு தொடங்கப்படாமலே போனதால், கழுவித் துடைத்த கண்களுடன் இருந்தாள். மணி நான்கை எட்டி இருக்கும். கொஞ்சம் அண்மையில் இருந்த ஏதோ ஒரு உபனிடத்துக் கோயிலில் அதிகாலை பூஜைக்கான மணி டிங்’கியது.

   வைப்ரேசனில் கையில் இருந்த அலைபேசி குதிக்க, திகைத்துப் போனாள். 

வனமாலி..! இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறான்..?

‘’ மாலி…’’ வேகமாய் எடுத்து மெதுவாக அழைத்தாள்.

‘’என்னாச்சு..? இந்நேரத்துல ஃபோன் ஆன்ல இருக்கு..? நல்லா இருக்கதானே சிந்தூர்…’’ குழைந்த சாதத்தில் விழுந்த தயிராய் அந்த விசாரிப்பில், நேசம் பிரிக்கமுடியாது கலந்து கிடந்தது.

‘’ உனக்கு எப்படி மாலி தெரியும்.?’’

‘’ காலையில நான் குட்மார்னிங் சொன்னா, டெலிவர் மெசேஜ் வருது. எப்பவும் இந்நேரத்துல மொபைல் சுவிட்சுடு ஆப் தானே வரும். அதான் கூப்பிட்டேன். என்னாச்சு..? எதுவும் பிரச்சனையா.?’’

இந்த அன்பிற்கும், அக்கறைக்கும் ஒரு ஜென்மத்தை ஈடாய்த் தந்தால் போதுமா..? கண்கள் இருட்டு கட்டியது கரித்துக் கொண்டு இருந்ததால்.

   ‘’ சிந்தூர்…’’

 அடுத்த அழைப்பிற்கு விடுத்த இடத்தில் இருந்து அத்தனையும் சொல்லி முடித்தாள்.

எல்லாம் கேட்டுக் கொண்டு வைத்தவன், ஏழு மணிக்கு அங்கிருந்தான். விசிட்டர்ஸ் ஹவர் ஆரம்பித்து இருக்கவில்லை. கீழே இருந்து அழைத்தபோது காரிடருக்கு ஓடிச்சென்று நின்றாள்.

உறங்காத அவள் கண்ணின் அயர்ச்சியைக் கண்டால் இறங்காத மனமும் இறங்கும். 

 புது பேஸ்ட், பிரஸ், டவல், சோப் வாஷ் என்று ரெடிமேடாக வந்திருந்தான். தேவைகளை நிறைவேற்றுவதில் சாட்சாத் அவன் வனமாலியே தான்..!  

கூடவே இருந்தான். அன்று முழுக்க, அத்தனை டெஸ்டுகளும் எடுக்கும் வரைக்கும் கூடவே இருந்தான். 

‘’ நான் லேசா முடியாம படுத்ததும் பாய் ஃப்ரெண்டை இழுத்துட்டு சுத்தறியா சிந்தூரி…’’  மாலதி அக்கா, பலஹீனமாய் கண்டித்தாலும், மாலியின் பொறுப்பும், இயல்பான தோற்றமும் அவருக்கு வெகுவாய் பிடித்தது.

விலங்கிடப்பட்ட அன்போடு, அவன் பின்னாக தன்னை வலுக்கட்டாயமாக செலுத்திக்கொண்டும், செதுக்கிக் கொண்டும் சுற்றும் சிந்தூரியை விசித்திரமாக பார்த்தார். கட்டிவைப்பதும் அன்புதான்… கட்டுண்டு கிடப்பதும் அன்புதான்..!

  அவனை அன்பால் கட்டி வைத்தவளே அவன் அன்புக்கு கட்டுண்டும் கிடக்கிறாள்.

‘’ என்னையே பார்த்துட்டு இருக்காம இயல்பா இருங்கம்மா..’’ சிரித்துக் கொண்டே நாற்காலியை நகர்த்திப் போட்டு அமர்ந்தவளின் மீது விசித்திரமான உணர்வு உண்டானது.

‘’நீ மட்டும்தான் இருக்கியா சிந்தூரி…’’

‘’ மாலியும், நானும் மட்டும்தான். வைசாலி, மும்தாஜ், கிரிஜா எல்லாம் காலையிலே வந்துட்டு கிளம்பியாச்சு. நான் மூணு நாள் லீவு போட்டு இருக்கேன்.’’

‘’ நீ மீடியால இருக்கே. இப்படி லீவு போடறது எல்லாம் சரியா வராதேடா.’’ மெல்ல கைநீட்டி அவள் தலையை வருட, மென்மையாக சிரித்துக் கொண்டாள்.

‘’ மீடியால இருந்தா, மனுசங்களா இருக்க கூடாதாமா..? உங்களை இப்படி தனியா விட்டுட்டு நான் எப்படி எங்கேயும் போக..? மனசு கேட்காதுக்கா…’’ 

மாலதிக்கு கண்கள் உடைப்பெடுத்தது. ஆயிரம் பேர் வந்து தங்கிப் போகும் ஹாஸ்டலில், இவள் மட்டும் தங்கித் தேங்கிப் போனாள் மனக் குளத்தில்..! யாரிவள்..? எங்கிருந்து வந்தாள்..? 

‘’என்னக்கா, மனசுக்குள்ள பேதாஸ் ஓடுது.’’ 

‘’ நமக்குள்ள என்னடி பந்தம்..? ஏன் எனக்காக இத்தனை வருத்திக்கறே..?’’

‘’ ம்..! இப்படி அப்படிச் செஞ்சா, ஏதோ ஒருமாசம் ஹாஸ்டல் பீஸ் வாங்க மாட்டேங்களானு ஒரு நப்பாசை…’’ கண்சிமிட்டி சிரித்தாள்.

‘’ அதுமட்டும் நடக்காது மகளே….’’ 

‘’ஆங்..! நியாபகம் வருது. உங்க பொண்ணு ஃபோன் நம்பர் குடுங்க. நான் கால் பண்ணி பேசணும்’’

   ‘’ எதுக்கு..?’’

 ‘’ தப்புக்கா. உங்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போகுது. சீரியசா இல்ல,நார்மலா அதில்லை பிரச்சனை. ஆனால் அதை அவங்ககிட்ட நீங்க சொல்றீங்களா இல்லையான்னே தெரியல.முதல்ல அவங்க காதுக்கு விசயத்தை கொண்டு போயிட்டு, நறுக்குனு முறுக்கு கடிச்சமாதிரி ஒரு கேள்வி கேட்கணும். 

   நானும் மூணு வருசமா இங்கே இருக்கேன். நீ எங்கேமா ஒரு தடவைகூட தலையைக் காட்டலைன்னு…’’

 இவள் தன்போக்கில் பேசிக் கொண்டிருக்க, மாலதி அக்கா கண்களை மூடி உறக்கத்திற்கு கடத்தி இருந்தாள்.

                      ❤️                 

 ரண்டு நாட்கள் மெத்த மெதுவாக கடந்து போயிருந்தது, மாலதி அக்காவை டிஸ்சார்ஜ் செய்ய. ஈசிஜி இன்னபிற இத்யாதி டெஸ்டுகள், இதயத்தில் சின்னதாய் அடைப்பு தட்டி இருப்பதாய் வந்தது.

கவலையும், நிம்மதியுமான ஒருநிலை. பெரிதாய் எதுவுமில்லை என்று மனது சொன்னாலும், எதுவோ வந்திருக்கிறதே என்ற பயமும் உண்டாகி இருந்தது.       

   இப்போதே அடைப்பை நீக்கினால் ஆபத்துகள் இல்லையென்று டாக்டர்கள் சொல்லி முடிக்க, சிந்தூரியின் அழுத்தம் அதிகமானது.

மாலையில் வேலை முடிந்து வெகு சீக்கிரமே வந்து நின்றவளை ஏற இறங்கப் பார்த்தார். 

‘’ என்னவாம், அந்த  தோட்டக்காரனை பார்க்க போகலியா..?’’

‘’என்னது தோட்டக்காரனா..?’’

‘’ஆமாம்,ஹிந்தியில மாலி’னா தோட்டக்காரன்னு அர்த்தம்.’’

 ‘’ அதுசரி, முப்பது நாள்ல ஹிந்தி கத்துக்கிற புக் ஆன்லைன்ல வாங்கி வச்சிருக்கீங்கன்னு தெரியுது.’’ 

   சேர்ந்து சிரித்தார்கள். சிரிப்பின் முடிவில் சிந்தூரி கேட்டாள்,

‘’எல்லாமே எல்லைகளுக்கும், அன்பிற்கும் உட்பட்டது அக்கா. உங்களுக்கு நல்லது செய்யணும். இது கடமை இல்லை. அன்பு. இப்பவாவது உங்க பொண்ணுடைய நம்பர் தந்தால், நான் கால் பண்ணிப் பேசுவேன்.

என்னதான், அன்பும் அக்கறையும் இருந்தாலுமே, இந்தமாதிரி பெரிய முடிவுகளை எடுக்க எங்க யாருக்குமே உரிமையில்லக்கா. அதான் தினமும் மாலியைக் கூட பார்க்காம ஓடி வர்றேன். நீங்க என்ன செய்றீங்களோனு பயந்துட்டு.

  உங்க பொண்ணு நம்பர் தந்தால், நான் பேசி அவங்களை வரவழைப்பேன். அல்லது, சம்மதமாவது வாங்குவேன். அப்படி என்னதான் பிரச்சனை உங்க ரெண்டுபேருக்கும் நடுவில.’’

  கண்களையே கூர்ந்து பார்த்து கேட்டவளை  கடந்து ஜன்னல் அருகில் சென்று நின்றார். நித்யமல்லி செடிகளின் இலைகள் வீட்டிற்குள் ஊசலாடியது. அவற்றில் இலைகளை பற்றி இழுத்து நுனிகளை சிதைத்தபடி நின்றார்.

‘’ சிந்தூரி, நீ எனக்கு என்ன..?’’

‘’எதுவா யோசிக்கிறோமோ அதுவாக.’’ பளிச்சென்று பதில் வந்தது. 

 ‘’ அப்போ பொண்ணா யோசிச்சுக்கறேன். விட்டுடு. இதுக்குமேல எதுக்கு தோண்டி துருவிகிட்டு..? ஆபரேசன் நடக்கும்போது, நீயும் நம்ம ஹாஸ்டல் பொண்ணுகளும் கூட நிற்க மாட்டீங்களா என்ன..?’’

‘’ அது வேறக்கா, இது வேற. உள்ளத்துல நம்பறதுக்கும், உறவு அடிப்படையில இருக்கிறதுக்கும் நிறையவே வித்யாசம் இருக்கு.’’

‘’ எனக்கு அப்படி எதுவுமில்லை சிந்தூரி. எனக்கு யாருமே இல்லை ‘’

கணப்பொழுது மெளனம் நீடித்தது இருவரின் நடுவிலும், சிந்தூரி தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

   ‘’ உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நான் எதையும் கேட்க மாட்டேன். ஆனாலும் மனசுக்கு கஷ்டமா இருக்குக்கா. நீங்க நல்லா இருக்கணும். அது மட்டும்தான் என்னுடைய சிந்தனை.’’

 அவள் அறையை கடந்து கொண்டிருக்க, முந்திக்கொண்டு முன்னே வந்து விழுந்து மாலதியின் குரல் தடுத்தது.

‘’ எனக்கு பொண்ணு, பையன், புருசன்னு யாருமில்லை. போதுமா..? " குரல்கூட உணர்வை கக்க முடியுமா..? கவலைகளையும், கண்ணீரையும் பேச முடியுமா..? 

 சரேலென திரும்பிப் பார்த்தாள். இமையோடு சேர்த்து புருவங்களும் சுருங்கி கேள்வியாய் விரிந்தது.

   ‘’ அக்கா…’’

‘’எனக்கு கணவர் குழந்தைகள்னு எந்த பந்தமும் இல்லை. ஏன்னா எனக்கு திருமணமே ஆகல. கல்யாணச் சந்தையிலே விலை போகாம நான் நின்னு போனதுக்கான காரணம் இந்த நிமிசம் வரைக்கும் எனக்குத் தெரியல. அதுக்காக வருத்தப்படல, இளமை இருக்கிற வரைக்கும். 

 ஆமாம் சிந்தூரி, ஓடிட்டே இருந்த நிமிசம் உட்கார்ந்து இளைப்பாறுவோம், அப்போ இதயத்துக்கு இருக்கிற தேடலுக்கு பதில் சொல்லவேண்டி வரும்னு நான் எதிர்பார்க்கல.

 அரசாங்க உத்யோகம், அல்லி தர்பார் மாதிரி பெரிய வீடு. காலையில போனால், ராத்திரி திரும்பி வந்து சாப்பிட்டு தூங்கிடுவேன். பெருசா எதுவும் தேவைப்படல. இந்த இடத்துல நீ ஒண்ணு கவனிக்கனும், எனக்கு கல்யாணம் ஆகலைன்னு தான் சொன்னேன் தவிர,  நான் பண்ணிக்கலைன்னு சொல்லல. 

வாலெண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிக்கொண்ட பிறகு இந்த வாழ்க்கை ரெம்ப தத்தி தத்தி நடக்கிறமாதிரி, மனசை அரிக்க ஆரம்பிச்சது. என்னை சுத்தி நிறையப் பேர் வேணும்னுதான் இந்த ஹாஸ்டலை ஆரம்பிச்சது.

ஆரம்பத்தில் என் பாதுகாப்புக்காக சொன்ன பொய்தான் எனக்கு கணவர் குழந்தைகள் இருக்கிறதா. அதையே தொடர்ந்து சொன்னப்போ எனக்கு என்னை அறியாமல் ஒரு சுவாரஸ்யம், அன்பு உண்டாகிடுச்சு. இல்லாத மகளுக்காக மனசு எதையோ எதிர்பார்க்க ஆரம்பிச்சது.

  தத்து எடுத்திருக்கலாம், பெத்து எடுத்திருக்கலாம், காலம் போன கடைசியில எதை யோசிச்சு என்னாகப் போகுது..? அதான் நிஜத்தை விட நானே புனைந்த கற்பனை ரெம்பவே அழகாக இருந்தது.

ஏனோ தெரியல உன்னைப் பார்த்த நிமிசம் தொட்டு, என் கற்பனை கால் முளைச்சு, கை முளைச்சு, கண் அசைச்சு என் கண்முன்னாலே நெளியுற மாதிரி. நடமாடற மாதிரி.’’

வார்த்தை நெளிந்து நெளிந்து சுழிந்து நெகிழ்ந்து. விம்மிக்கொண்டு வேதனையை வெளிக்காட்டாமல், மனசு முழுக்க வெற்றிடமாய் சுற்றிக்கொண்டு…,

  எப்படி முடிகிறது இந்த மனுசியால், நிலமே இல்லாத இடத்தில் நீர்மக் கோலம் போட…?

 ‘’ அக்க….’’ வார்த்தைகள் தடுமாற நின்றாள் சிந்தூரி.

‘’எனக்கு வருத்தமெல்லாம் இல்லை சிந்தூரி. இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்கிறதுல இருக்கிற சந்தோசமே, அதை நம்ம இஷ்டத்துக்கு வடிவமைச்சு சந்தோசப் பட்டுக்கிற கற்பனை சுதந்திரம். இந்த உலகத்தில் எந்தக் குறையும் இல்லாத நூறு சதவிகித முழு குணத்தோட இருக்கிற குழந்தை எனக்கு மட்டும்தான் இருக்கு.’’ சொல்லிக் கொண்டு சிரித்த மாலதியை வந்து இறுக கட்டிக் கொண்டவள் தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

வெற்று வானத்தின் ஒற்றை நிலவுக்கு துணைக்கு ஆள்கள் எதற்கு… தோள்சாய மேகம் இருக்கு.

"...தூரிகை எரிகின்ற போது

இந்த தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்

அது எதற்கோ…

மேகமே மேகமே பால் நிலா தேயுதே…"

        வனமாலி - 14

ருப்புக்கோட்டை செல்லும் பேருந்து கிளம்ப, கணிசமாக நேரமிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பயணிகள் கதங்கிக் கொண்டு இருந்தார்கள். தாழ்ந்த தரைதளத்தில் பேருந்துகள் வந்து நிற்க, உயரமான நடைமேடைகளில் மக்கள் மொத்தம் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருந்தார்கள்.

கம்பி கொடிகளில் ஒருக்களித்து தொங்கிக் கொண்டு இருந்தது காலாவதியான மாத, வார இதழ்கள். 

ஓட்டுனர், நடத்துனரின் உலக பானமான டீ மட்டும் அமோகமாக விற்பனையாகிக் கொண்டு இருந்தது. எத்தனை சிரமப்பட்டும், கம்பத்து விளக்குகள் இருளை மொத்தமாக கிழித்துப் போட்டிருக்கவில்லை.

கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சிந்தூரியின் அருகில் வந்து நின்றான் வனமாலி.

‘’ ஏதாவது சாப்பிட வேணுமா சிந்தூர்..?’’

‘’ வேண்டாம் மாலி. ரெம்ப தர்மசங்கடமா இருக்கு. சித்தி உங்களை அவமானப்படுத்தினா என்ன செய்ய..?’’ பிட்ட தேங்காயில் முழுதாய் பூத்து நிற்கும் தேங்காயின் பூப்போல் இருந்தது அவளுடைய முகம், அந்த குறைந்த ஒளியில்.

‘’அவங்க வார்த்தைகளை அவமானம்னு நான் யோசிச்சாத் தானே..? இதுல அவமானப்பட எதுவுமே இல்லை.  முதல்ல மனசை குழப்பிக்காம ஃப்ரியா நில்லு. சிந்தூர் முதன்முதலா நீயும் நானும் வெளியூர் பயணம் செய்றோம். ஏகாந்தமா இருக்காமே…’’ அலுத்துக் கொண்டவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.

புழுக்கம் பொங்கி வழிந்தது. கூட்டம் சொற்பம் தான். யாசகர்கள் ஆங்காங்கே, தங்கள் உடைமைகளை சுருட்டிக் கொண்டு சுருளத் தொடங்கி இருந்தார்கள்.

கூட்டம் கூட்டமாய் கொசுக்கள் உலா போக ஆரம்பித்திருந்தன. பயணங்கள் குறைந்த சாலைகள், கொஞ்சம் அழுத்தமான பயத்தை மனதில் கெட்டியாக பூசியது.

‘’ சிந்தூர்…’’ அவன் அழைத்த போது கடித்த நகத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.

 ‘’ புக் ஏதாவது வாங்கித் தரவா..? படிக்கிறியா..?’’ பொதுமையாக அவள் தலையசைக்க, ராணி புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்து நீட்டினான். 

 பஸ்ஸுக்குள் விளக்கு எரிய ஆரம்பித்து இருந்தது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். மத்தியில் இருந்த அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொள்ள, வாராந்திரியை பிரித்து மேலோட்டமாக வாசித்து முடித்தாள். மனம் ஏனோ சஞ்சலமாகவே இருந்தது. நாளையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று இன்றே பயமாக இருந்தது.

சரியாக ஒன்பதரை மணிக்கு பேருந்து புழுக்கத்தை கிழித்துக் கொண்டு பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியது. கூட்டம் வெகு சொற்பம். கூட்டம் குறைந்த பயணங்கள், நஷ்டத்தின் அடையாளம் என்று கட்டியம் சொன்னது. 

ஓய்வான சாலையில் வாகனம் சாய்வாக விரைய கொஞ்சமாய் நகரத்தை கடக்கும் வரைக்கும், வண்டிக்குள் விளக்கு எரிந்தது. ஏதோ ஒரு ரஜினிபடம் ஓடிக் கொண்டிருந்தது. கதாநாயகியின் மூக்கோடு மூக்குரசி சூடேற்றிக் கொண்டு இருந்தார் நாயகன்.

 புஷ் பேக்கில் முக்கால் பாகத்துக்கு சரிந்துகிடந்த இருக்கையில் சாய்ந்தவள், விளக்குகள் அணைக்கப்பட்டதும் மாலியின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். அவன் திணவான தோளில் தன் கன்னத்தை அழுத்திக்கொண்டு கையோடு கை கோர்த்துக் கொண்டு கண்களை மூடியபோது சொர்க்கம் அவள் கை பிடியில் பிடிபட்டுக் கிடந்தது.

‘’தூக்கம் வருதா சிந்தூர்.? மடியில படுத்துக்கறியா..?’’ என்றவனை நிமிர்ந்து குசும்பாய்ப் பார்க்க.

‘’அட, இத்தனை ரியாக்சன் எல்லாம் தேவையில்லை மேடம். நான் எல்லைகளை தாண்டவே மாட்டேன். எல்லையில்லா சுதந்திரத்தை நான் உன்னிடத்தில் அடையும் வரைக்கும்.’’ அவள் உச்சந்தலையில் கன்னத்தை வைத்து அழுத்தி அவளை தன்னுடைய உடைமையாக்கிக் கொண்டதாய் அறிவித்தான்.

பேருந்து தடதடத்தது, உயிரின் மிச்ச மூச்சு வரைக்கும் இந்தப் பயணமும் நினைவும் நிற்கப் போவதை அவளும் அறிந்திருக்க நியாயமில்லை… காலம் அறிவிக்கப் போவதும் இல்லை..!

இருள் கரைந்து கரைந்து ஒளியை நோக்கி பயணமானது. விடியலை பற்றிய சிந்தனையில்லாமல் அவன் தோளே தன் முழு வாழ்க்கை என்று அவள் உறங்கிப் போய் இருந்தாள்.

                    ❤️                 

ரவணன் வந்து வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் நின்றான். கொஞ்சம் கூச்சமாக இருந்தது சிந்தூரிக்கு, வனமாலியோடு சேர்ந்து நின்றபோது. சரவணன் என்ன நினைப்பான் என்ற கவலை அவசரமாய் அந்த அதிகாலை வேளையில் முளைத்துக் கருகியது.

ஆனால் இரு ஆண்களின் முகத்திலும், எந்த இறுக்கமும் இல்லை. கைகொடுத்துக் கொண்டார்கள்.

‘’சாரி சரவணா. மாலிதான் சித்தியை பார்த்தே ஆகணும்னு அடம் பண்ணி வந்திருக்காரு.’’ என்றாள் தயக்கமாக. 

 ‘’ தப்பில்லை சிந்து. உன் வாழ்க்கை இது. நீ முடிவெடுக்கிறதுல எந்தத் தப்பும் இல்லை. மச்சான் என் அளவுக்கு இல்லாட்டியும் ஏதோ சுமாரா இருக்காரு…’’ கையை உயர்த்தி தோளில் விழ இருந்த அடி, கீழே இறங்கி அப்படியே தோளோடு அரவணைத்துக் கொண்டது.

 ஆட்டோவைப் பிடித்து சிந்துவை ஏற்றிவிட்டு இருவரும் பைக்கில் பின் தொடர்ந்தார்கள். பரஸ்பரம் இருவருக்கும் நிறையவே பிடித்தது.

 ‘’ பரவாயில்லை, உங்க ஊரும் நல்ல வளர்ச்சி அடைஞ்சிருக்கு.’’ என்றான் விசாலமான சாலைகளை பார்த்துக் கொண்டே.

 ‘’ எங்க ஊரு வளராம சின்னப்புள்ளையா இருந்தப்ப பார்த்து இருக்கீங்களா என்ன..?’’

‘’ மொக்கை காமெடி பாஸ். ஆனாலும் பாருங்க என் மச்சான் அடிச்சதால நான் சிரிச்சுக்கறேன்'’ சிரித்துக் கொண்டார்கள்.

   ‘’ சிந்தூர்க்கு சரவணன் மேல அவ்வளவு அன்பு. இவ்விடமும் அப்படியேன்னு தெரியுது…’’

‘’ பொறாமையா இருக்கா பாஸ்..?’’

 ‘’ லைட்டா…’’

   சிரித்து முடித்த நிமிசம், மரகேட் போட்ட பழமையும் அழகுமான வீட்டின் முன்பாக வண்டி நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கி சிந்தூரி இவர்களுக்காக நின்றாள்.

பெரிதாய் தெருக்கள் வெளிச்சப்பட்டு இருக்கவில்லை. வெள்ளி கைப்பிடி போட்ட அடிபம்புகள் இன்னும் அங்கே இருந்தது, அங்கே துணி துவைத்த சோப்பின் படிமங்கள், உலர்ந்து போய் படிந்து இருந்தது.

நகரமும் அல்லாத, கிராமமும் அல்லாத ஊர்கள் எப்போதும் பேரழகு தான். பையை கையில் எடுத்துக் கொண்டான். சரவணன் தயக்கமாக மாலியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

   ‘’ சொல்லுங்க பாஸ்…’’

 ‘’ இல்ல, அம்மா ஏதாவது எக்குதப்பா பேசிட்டா, பெருசா எடுத்துக்க வேண்டாம். அவங்க அப்படித்தான்.’’

  ‘’ நானும் இப்படித்தான். விடுங்க பாஸ், உள்ளே போகலாம் வாங்க, எந்தக் காலை எடுத்து வச்சு உள்ளே வர..?’’ வனமாலியின் இயல்பு மிரள வைத்தது.

 கூடத்தில் அமர்ந்திருந்த ரேணுகா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. கண்களை மூடி ஈசி சேரில் சரிந்திருந்தாள். 

முகம் அலம்பி, பல் துலக்கி வந்து இருவரும் திண்ணைத் திட்டில் அமர்ந்தார்கள். இன்னும் ரேணுகாவின் கண்கள் திறக்கவேயில்லை. பூரணிமா எல்லோருக்கும் டீ தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தாள். கிய்யா முய்யா குருவிகள் தாழ்வாரத்தில் வந்து நின்று இரைக்கு கூவியது.

‘’சித்தி, மாலி உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்காரு.’’ என்றாள் சன்னமான குரலில். வெடுக்கென கண்களை பிரித்துப் பார்த்தாள்.

‘’ வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கே. எத்தனை நெஞ்சழுத்தம்..! தாய் தகப்பன் இல்லாமல் தானே போய் இருக்கு. தரமில்லாமயா போயிடுச்சு. நாளைக்கு இங்கே அக்கம் பக்கம் இருக்கவங்க பார்த்து கேட்டா என்ன பதில் சொல்ல..? உனக்கு பின்னாடி ரெண்டு பேர் இருக்காங்க அதாவது உனக்கு நியாபகம் இருக்கா..?’’

‘’ சித்தி…’’ மேற்கொண்டு பேசப் போனவளை கை உயர்த்தி தடுத்தவன் எழுந்து முன்னே வந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.

  ‘’ நான் மாலி, வனமாலி. சொந்த ஊர் மதுரைக்கு பக்கத்துல சோளவந்தான். அப்பா டிடயர்டு கவர்மெண்ட் எம்ப்ளாயி. சொல்லிக்கிற மாதிரி கையகல வசதியும் இருக்கு. இரண்டு தங்கச்சிங்க. ட்வின்ஸ். அம்மா சரஸ்வதி. சாட்சாத் சரஸ்வதியேதான்.

கெமிக்கல் கம்பெனியில ஓர்க் பண்றேன். நான் நல்லவனா கெட்டவனா தெரியாது.. நல்லவன் கெட்டவன்கிறதுக்கும் அடையாளம் என்னன்னும் தெரியாது. ஆனால் மனசாட்சி உள்ளவன். அதனால என்னை பத்தி சொல்லிக்க எந்த சாட்சியும் கூட்டிட்டு வரல.’’

பளீரென வந்து விழுந்தது வார்த்தைகள். ரேணுகா கண்களைத் திறக்காமலே அமர்ந்திருந்தாள்.

பெருவிரலால் உந்தி ஈசிசேரை ஆட்டிக்கொண்டாள். நெற்றியில் குழப்பம் நெளிந்தது.

  ‘’ திருமண பந்தத்தோட ஒரே நோக்கம் சந்தோசம் தான்னா, என்னால உங்க பொண்ணை சந்தோசமா வச்சுக்க முடியும். ‘’ அவன் முடித்த நிமிசம் கண்களை வெடுக்கென திறந்து பார்த்தாள்.

‘’இதை நான் நம்பணுமா..? எதை வச்சு..?’’

  ‘’ எல்லா கல்யாணமுமே நம்பிக்கையில தானே நடக்குது.? நீங்க பார்த்து வச்சிருக்க, மாப்பிள்ளையும் கடைசி வரைக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமானவரா இருப்பார்னு என்ன நிச்சயம்..? நம்பிக்கை தானே..? தெரியாத மனிதர்மேல உங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை, தெரிஞ்ச என்மேல சிந்தூர்க்கு வந்ததுல என்ன தப்பிருக்கு..?’’ 

முகத்தில் எந்த மாறுபாடும் காட்டாமல் மாலி இயல்பாக கேட்டபோது, ஒற்றை புருவம் உயர்த்தி அவனைப் பார்த்தாள்

  ‘’ உலகம் எவ்வளவுதான் முன்னேறட்டும், இப்படி வீட்டு பொண்ணு இவனைத்தான் கட்டிக்க போறேன்னு கூட்டுட்டு ஊர் சுத்தறதை இயல்பா பார்த்து கடந்துபோக, இதொன்னும் ஃபாரின் இல்லை. எல்லாத்துக்கும் வரைமுறை இருக்கு. 

எனக்கு உரிமை இல்லாம இருக்கலாம். பெத்த தாயா இல்லாமல் இருக்கலாம். அதுக்காக எனக்கும் கடமை இருக்கு. அதுக்காகவாவது எனக்கு அடங்கி நடக்கணும் இல்ல.’’ கொதிப்பாய் வந்த வார்த்தைகளை தாங்க இயலாமல், கண்கள் குளமாக பார்த்தாள் சிந்தூரி.

  ‘’ சித்தி..’’

’’உனக்கு வயசு வந்திருச்சு தான். அதுக்கு, நீயே எல்லாத்தையும் பார்த்துட்டு முன்னாடி வந்து நிற்க இது வெளிநாடு இல்ல. உனக்கு பின்னாடி இருக்கவங்களுக்கு இது எத்தனை அசிங்கமான முன்னுதாரணம்னு உனக்குத் தெரியுமா..?

என் முடிவும் தேர்வும் உனக்கு அவசியமில்லைன்னு நீ நினைச்சா, மத்த எல்லாத்தையும் நீயே பார்த்துக்க வேண்டியது தானே..? என் சம்மதம் உனக்கு எதுக்கு..? இதுக்குமேல எனக்கும் பேச வார்த்தை இல்லை… ‘’ என்றவள் எழுந்து உள்ளே செல்ல, மெல்ல தோளைக் குலுக்கிக் கொண்டு பழைய இடத்திலேயே வந்து அமர்ந்தான்.

கொஞ்சம் நேரம் மெளனம் வலை விரித்திருந்தது, வார்த்தைகளை பிடிக்க. எங்கோ பார்வை நிலைத்திருக்க, குழப்பமான மனநிலையில் அமர்ந்திருந்தவளின் அருகில் சென்று கைகளைப் பற்றிக் கொண்டான் சரவணன். பூரணி இன்னொரு பக்கமாய் வந்து அமர, கன்னத்தில் கைவைத்து அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் மாலி.

 ‘’ நாம யோசிச்சதை விட, ரியாக்சன் ரெம்பக் கம்மியாத்தான் இருக்கு. இதுக்கு எதுக்கு மேடம், ஓவர் சீன்.’’

   ‘’ சரவணா…’’

‘’ இந்தக் கோபம்கூட வரலைன்னா அவங்க, ரேணுகா தேவி இல்லையே..! அவங்களுக்கு அக்கறை இருக்கா, இல்லையா எனக்குத் தெரியாது. ஆனால் தனக்கு கடமை இருக்கிறதா நம்பறாங்க. அந்த நம்பிக்கையை தப்புன்னு சொல்லவும் முடியாது.

 பாஸ், நீங்க எதுவும் யோசிக்காதீங்க. உங்களை பிடிக்காம போகுமா..? எனக்கே உங்களை பார்த்து ஒரு இதுவாகிருச்சு…’’ என்றவன் முதுகில் அடிவிழ, சிந்தூரி முறைத்துக் கொண்டு இருந்தாள்.

‘’பொறாமை பொறாமை..’’ பூரணி வாய்விட்டு சிரிக்க, அங்கே கலகலப்பு பற்றிக்கொண்டது. 

 ‘’ தப்பு சரின்னு இல்லடா இதுல. காதலிக்கிறதாலேயே அது தப்பான இடம்னு யோசிக்கிறது முட்டாள்தனம் இல்லையா..? எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு சரவணா, மாலியை. அவருக்கு சில கடமைகள் இருக்குது அதுக்குத்தான் காத்திருக்கோம்.’’ 

‘’என்னை பிடிச்சிருக்கா..? என்கிட்ட கூட இதுவரைக்கும் சொல்லவே இல்லையே பாஸ்…’’ என்ற வனமாலி சரவணனோடு ஹைபை அடித்துக் கொண்டு சிரிக்க,

 மூன்றுபேரும் சேர்ந்து சிந்தூரியை ஓட்ட ஆரம்பித்திருந்தார்கள். கோபமாய் முறைத்துக் கொண்டு எழுந்து நகர்ந்தாள். வாசலுக்கு வந்தாள். வானம் முழுக்க வெளுத்திருந்தது.

 நிறைவும் நெகிழ்வும், வலியும் தவிப்புமாய் ஒருவித நிலைப்பாடாய் இருந்தது மனது. ஒருவழியாய் சித்தியிடம் அழைத்துவந்து அறிமுகப் படுத்திவிட்டாள் இனி சித்தியின் அழுத்தம் கண்டிப்பாய் மட்டுபடும்.

மாலி தான் என்றாகிவிட்ட போது, அதை ஒத்துக்கொள்ள என்ன தயக்கம்..? வெறுமையில் நிர்சலனங்கள் மனதில் ஓரத்தில் ஒருமுகம் காட்டிக்கொண்டு இருந்தது.

எதற்குமே ரேணுகா எழுந்து வெளியில் வரவில்லை. பூரணியும் சிந்தூரியும் சேர்ந்துதான் சமைத்து முடிக்க, டிபன் முடித்த கையோடு இருவரும் கிளம்பிவிட, சரவணனும், பூரணியும் தான் பதறிப் போனார்கள்.

  ‘’ என்ன சிந்து, வந்ததும் கிளம்பறே..? வருத்தத்தோட போறியா..? ’’

 ‘’ சேச்சே அப்படில்லாம் இல்லடா சரோ..!  மனநிறைவோட தான் போறேன். சித்திக்கு மாலியை அறிமுகப்படுத்த வந்தேன். வந்தவேலை முடிஞ்சாச்சு. அவ்வளவுதான்.’’

இட்லியும், தக்காளி தொக்கும் சாப்பிட்ட கையோடு புறப்பட்டு ரேணுகாவின் முன்னாக வந்து நின்றார்கள். கண்கள் மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்திருந்தாள்.

  ‘’ கிளம்பறோம் சித்தி. ‘’

 ‘’ எதுக்கு வந்தே, இப்போ எதுக்கு போறே..?’’ என்றாள் கண்களைத் திறந்து சுள்ளென்று. இப்போது மாலி முன்னாக வந்தேன்.

 ‘’ சும்மா, ஒரு தடவை உங்களை எல்லாம் பார்க்கலாம்னு தான் வந்தோம் ஆன்ட்டி. வீட்டில ரெண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்க, அதனாலதான் என்னால இந்த இடத்திலேயே பெண்கேட்க முடியல. ஆனால் அதுக்கு உரிய ஒருநாள் வரும். அன்னைக்கு வந்து கேட்பேன். என்மேல உங்களுக்கு பெரிய அபிப்ராய பேதம் இல்லைன்னு தெரிஞ்சுக்க முடியுது. அதுக்கே நன்றி…’’ புன்சிரித்தான்.

  வேறு வார்த்தைகளே அங்கே இல்லை. ஆட்டோ பிடித்து விட்டான் சரவணன். அவன் வருவதாக கூறியும் ஒரேடியாய் மறுத்துவிட்டான் மாலி. பஸ் ஸ்டாண்டு வரும் வரைக்குமே அமைதியாக இருந்த சிந்தூரி, பின்னர்தான் மெல்ல சரியானாள்.

‘’ மாலி, இப்போ சென்னைக்கு கிளம்பினா, நாம போய் சேர லேட் நைட் ஆயிடாது…’’

 அர்த்தமாகப் பார்த்தான். சின்ன புன்னகை இதழில் பிறந்தது.

‘’இப்போ யாரு சென்னைக்கு போறா..?’’

‘’அப்போ சோளவந்தானா..?’’

 ‘’ அது ஈவினிங்.’’

  ‘’ அப்போ இப்போ..?’’

 நெருங்கி வந்தவன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அவளை தன்னோடு சேர்த்துக்கொள்ள பதறி விலகினாள்.

   ‘’ என்ன மாலி இது..?’’

 " சாத்தூர் போறோம். மணி இம்பாலாவில் ஜாலியா ஒரு படம் பார்க்கிறோம். அங்கே இருந்து இருக்கன்குடி…முடிஞ்சா..! இல்லாட்டி சாத்தூர்லயே சாமியை கும்பிட்டுட்டு, காரசேவ் வாங்கிட்டு, வண்டி ஏறினா… டொண்ட டயன்… நைட் வெற்றிலை மணக்கும் சோளவந்தான்…

   நான் என் மாமியாரைப் பார்த்துட்டேன்… நீ உன் மாமியாரைப் பார்க்க வேண்டாமா..?’’

   கண்சிமிட்டி சிரித்தான்.

''...எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்

உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன்

நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா

நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

உன்னை நான் பார்த்தது

வெண்ணிலா வேளையில்

உன் வண்ணங்கள் கண்ணோடுதான்

உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்…''

         


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 269
 

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

https://kavichandranovels.com/community/topicid/396/

This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

வனமாலி - 15

கொஞ்சமாய் மலாய் தூவிய வெனிலா லஸ்ஸியை  கண்ணாடிக் கோப்பைகளில் நிரப்பிக்கொண்டு வந்து பூப்போட்ட டேபிளின் முன்பாக மாலி அமர்ந்தபோது, சுற்றும் முற்றும் திருதிருவென பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சிந்தூரி.

   ஸ்ட்ராவில் செல்லமாக சிப்’ செய்துவிட்டு அதை அவள் புறமாய் திருப்பி வைத்தபோது, அவளின் முகம் மொத்தமாய் சிவந்து போனது.

 ‘’ என்ன, சார் ரெண்டு நாளா ரொமான்ஸ் பெர்பாமன்ஸ்ல அள்ளுறாரு…’’ என்றாள் அவன் ஆசிர்வதித்து தந்திருந்த லஸ்ஸியை பருகிக் கொண்டே. லஸ்ஸி மணக்க சிரித்தான்.

‘’ ஏன் இருக்ககூடாதா கேர்ள்…’’

’’இருக்கலாம் இருக்கலாம். சனி கொடுத்தால் யார் தடுத்தார்னு கேள்விப்பட்டதில்லையா… அதேமாதிரி மாலி காதலித்தால் ஏன் சிந்து தடுக்கப் போகிறாள். ‘’ என்றவள் கண்கள் கடையில் மேய்ந்து திரும்ப, சிரிப்பின் ஊடே அவளை நிமிர்ந்து பார்த்தான்.

  நண்பகல் நேரம். அந்த அந்தோணி கூல் பாரில் கூட்டமே இல்லை. மற்ற நேரத்தில் இருக்குமா என்று ஆண்டவனுக்கே வெளிச்சமில்லை. கலர்பனியன் போட்ட கடைக்காரப் பையன், மீசை முளைக்கத் தொடங்கும்போதே ஆசை முளைக்க நின்றிருந்தான். அடிக்கடி அடிக்கண்ணில் இவர்கள் ஜதையை கள்ளமாய் ரசித்துக் கொண்டு நின்றான்.

‘’ இதுக்கு முன்னே சாத்தூர் வந்திருக்கியா சிந்தூர்..?’’

‘’ ப்ளஸ் டூ படிக்கும்போது ஃபேர்வெல் பார்டிக்கு தனலட்சுமி தியேட்டர்ல படம் பார்க்க வந்திருக்கேன்.’’

‘’என்ன படம்…’’ ஸ்ட்ராவால் லஸ்ஸியைக் கலக்கிக் கொண்டே கேட்டான்.

‘’மணாளனே மங்கையின் பாக்கியம்.’’

 ‘’ அய்யே, அவ்வளவு பழைய பீசா நீ..? ஏன் சிந்து உன் வயசை விசாரிக்காம காதலிச்சிட்டனோ…''

‘’ படம்கிறது நினைவு மாலி. அதுல என்ன ரீசண்ட் இருக்கவேண்டி கிடக்காம்… அங்கே போனது படம்பார்க்க இல்லை, ஒரு விஷுவல் ஆல்பம் மாதிரி மனசுக்குள்ள பத்திரப்படுத்திக்கிட்டு அசைபோட.’’

 எழுந்து கொண்டார்கள். பணத்தை செலுத்திவிட்டு தோள் உரச நடந்தார்கள். பின்னால் கலர் பனியனின் அனல் மூச்சு சுட்டது. 

   கைகளை கோர்த்துக் கொண்டான். ஆட்டோ பிடித்து தியேட்டர் வாசலில் வந்து இறங்கினார்கள். இன்னும் மேட்னிக்கு நேரம் இருந்தது. வெயிலை எதிர்த்து கைகளை பிணைத்துக் கொண்டே சாலையில் நடந்துதேய்ந்து, சின்னதும் அல்லாத பெரிதும் அல்லாத அம்மாமி மெஸ்ஸில், தாமரை இலையில் மடித்துத் தந்த பொட்டலச் சோற்றை வாங்கி தள்ளாடிய பென்ச்சில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.

லெமன் சாதமும், மாங்காய் ஊறுகாயும். அனல் காற்றில் கிளம்பிய புழுதியில் சாதத்தில் மண் தூவி கார்னிஷ் செய்தது. எல்லாமே புது அனுபவம். அனுபவங்களை சேகரித்து ரசிப்பதை விட, இந்த வாழ்க்கையில் என்ன மிச்சப்படுத்தி எடுத்துப் போகப் போகிறோம்..? 

  ‘’ நல்ல ஹோட்டல் கூட இல்லாம, கையேந்தி பவன்ல சாப்பாடு வாங்கித் தர்றேயேடா..!’’ சிரித்தாள்.

’’ நல்ல ஹோட்டல் என்ன கெட்ட ஹோட்டல் என்ன..? நாம சப்போர்ட்டு பண்றதாலே அவங்களுடைய தொழிலுக்கு ஒரு பலம். எப்போ லெமன் சாதத்தை பார்த்தாலும் இந்த நியாபகம் வருமில்ல.’’

பன்னீர் சோடா, தேன் மிட்டாய், கடலை உருண்டை என்று நிறைய சங்கதிகளை வாங்கித் தந்தான். மணி இம்பாலாவில் தெலுங்கு டப்பிங் படம் பார்த்தார்கள். 

 ரயிலை ஒரு கையில் நிறுத்தி, ஹெலிகாப்டரை மறு கையில் வளைத்து சாகசம் செய்து கொண்டு இருந்தான் கதாநாயகன். முந்நூறு குடுத்து டிக்கெட் வாங்கி, இந்த முட்டாள் தனத்தை எல்லாம் நம்பித் தொலைக்க வேண்டி இருந்தது.

நமுத்த பாப்கார்ன் ருசித்தது, பக்கத்தில் மொறுமொறுப்பான காதல் இருந்ததால். அத்துமீறிய லாஜிக்கே இல்லா காட்சிகள் இருந்த படத்தை ரசித்தார்கள், எந்த இளமையின் அத்துமீறலும் இல்லாமல். மாலி போன்ற கண்ணியக்காரனை நம்பி எங்கேயும் போகலாம்.

வெளியில் வந்து, குளிர்ந்த தண்ணீர் வாங்கி முகம் அலம்பி, டீ குடித்து, வடை சாப்பிட்டு, தெருவோர கடைகளில் பேன்சி அயிட்டங்களை கொறித்து, பர்ஸ் வாங்கி, அதில் பத்துருபாய் உள்ளே வைத்துத் தந்து, எல்லாமே அளவில்லாத அழகாக இருந்தது. 

விழிவழி புகுந்து விரசமில்லாத சந்தோசத்தை, காலம் கல்வெட்டில் வடித்துக் கொண்டிருந்தது. கைகோர்த்த போது கிட்டிய மகிழ்வும், முகிழ்வும் காலத்திற்கும் அப்படியே நிற்கும். இனிப்பு மறைந்து போனாலும், அது நினைப்பில் வந்ததும், அடிநாக்கில் மிதக்கும் தித்திப்பை போல. 

  எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இந்த ஒற்றை நாளிலே… என்று மனசும் உணர்வும் கொட்டு தாளம் போட்டதுபோல் இருந்தது. 

 நீ வேறு என்று யோசித்த நிமிசமே இல்லை, நேசித்த நிமிசம் முதல். இன்று அன்பும் காதலும் ஒருகை கூடித்தான் போனது.

மென்று மென்று திண்றபோதும் நேரம் மிச்சமிருந்தது. ஆனாலும் இன்னும் காதல் கண்ணில் சொச்சமிருந்தது.

சாத்தூரில் இருந்து சோளவந்தானுக்கு பஸ் ஏறிய போது. கவலையும் முகத்தில் ஏறிக் கொண்டது சிந்தூரிக்கு.

‘’என்ன முகம், விளகெண்ணெய் குடிச்ச மாதிரி இருக்கு..?’’ சிரித்தான்.

‘’ உங்க வீட்டில யார் யார் இருக்கா..?’’

   ‘’ மனுசங்க தான்.’’

 ‘’ நீ அனுப்பின ஜோக், பாதி வழியிலேயே செத்துப் போச்சு. ரெம்ப இத்துப்போன ஜோக்…’’

‘’அப்ப விடு…’’ கைகளைக் கட்டிக்கொண்டு பேருந்து கிளம்ப காத்திருக்க ஆரம்பித்தான். பயணிகள் ஏறத் தொடங்கி இருந்தார்கள். புழுக்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது.

‘’ நைட் எங்கே நான் தங்கறது..?’’ என்றாள் தயக்கமாக.

‘’ என் ரூம்லதான்…’’ கண்களைத் திறக்காமல் சொல்லிவிட்டு, உதடுகள் சிரிக்க தலை சாய்த்து இருந்தவனை, கோபமாக பார்த்துவிட்டு பார்வையை பிடுங்கி நடைபாதையில் எறிந்தாள்.

சட்டென்று தோளில் சாய்ந்து கொண்டான். தர்மசங்கடமாக நெளிந்து, நகர்ந்து அமர்ந்தாள்.

‘’ என்ன பண்றீங்க மாலி..?’’

 ‘’ எதுவுமே பண்ணலியே அதுக்கு ஏன் இத்தனை ஆர்பாட்டம்..? நீ பயப்படற மாதிரி அங்கே எதுவுமில்லை. அப்பாதான் ஒருமாதிரி பிகேவ் பண்ணுவார். சங்கி, சம்யு, அம்மா எல்லாருக்கும் உன்னை ரெம்பவே பிடிக்கும். உனக்கும். நாம வர்ற தகவல் அவங்களுக்குத் தந்தாச்சு. கணங்களை அனுபவி சிந்தூர்.’’ 

பேருந்து நிறையத் தொடங்கியது. அடுத்த இரண்டித்து சொச்சமாவது மணி கரைசலில் சோளவந்தானில் வந்து இறங்கி இருந்தார்கள். கொஞ்சம் அருப்புகோட்டை சாயலில் தான் இருந்தது. அலசி துவைத்துப் பார்த்தால், இடங்கள் அத்தனைக்கும் ஒரே ஜாடைதான். அதுசரி ஒரே பூமித்தாய் பெற்ற பிள்ளைகள் தானே..?

 முன்னேயே வருவதாகச் சொல்லி இருந்ததால், அதிர்ச்சி இல்லை. அலட்சியம் மட்டும் அப்பாவிடம் இருந்தது. ஆனால், தன்னுடைய வீட்டை விட, மாலியின் வீட்டில் காதல் இயல்பாக கையாளப்பட்டது ஆச்சர்யம் தான்.

ஆரத்தி கரைத்து அவளை உள்ளே அழைத்துப் போய் அதிர வைத்தார் சரஸ்வதி.

‘’ மா, என்மேல கோபம் வரலியா..?’’குறும்பு தெறிக்க, மாலி கேட்டபோது, சரஸ்வதி அலுப்பாய் பார்த்தார்.

 ‘’ படிப்பு விசயத்துலயே நீ கேட்கமாட்டே எல்லாம் உன் இஷ்டம்தான். இது வாழ்க்கை. தவிர, பிடிச்சு செஞ்சா பெரும்பாலும் தோல்வி இல்லை. இப்ப என்னடா மகனே கெட்டுப் போச்சு..? நான் பொண்ணை காட்டி பிடிச்சிருக்கான்னு கேட்டா அது அரேஞ்சுடு மேரேஜ். நீ பொண்ணை காட்டி பிடிச்சிருக்கான்னு என்கிட்ட கேட்டா, அது லவ் மேரேஜ்..! மொத்தத்துல ரெண்டோட நோக்கமுமே சந்தோசமும் நிம்மதியும் தான்…’’

பதில் சொல்லி அதிரவைத்த சரஸ்வதி, எந்த வாய்தாவும் இல்லாமல் சிந்தூரியின் நெஞ்சத்தில் நிறைந்து போனார். கண்ணாடி போட்டுக் கொண்டு கொஞ்சம் மிரட்சியாய் நின்ற தங்கைகளைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தி கேள்வி கேட்டான். அவர்கள் இரண்டு பேரும் நாக்கை துருத்தி, பிடிக்கவில்லை' என்று சைகை செய்ய, அதைச் சரியாக சிந்தூரி பார்த்து வைத்தாள்.

  சட்டென்று சிந்தூரியின் முகம் வாடிப்போக, பக்கத்தில் வந்து தோளில் கைபோட, பதறிக்கொண்டு விலகி நின்றாள்.

   ‘’ அட..! இவளுகளுக்கு எதுக்கு பிடிக்கணும்…? எனக்கு பிடிச்சா போதும். ஐஸ்வர்யா ராயையே கொண்டு வந்து நிறுத்தினாலும், அழகு கம்மி’னு சொல்லுங்க ரெண்டும். ‘’ 

    வனமாலி சொல்லிட்டு இருவரையும் பார்க்க, அவர்கள் மேவாயை தோளில் மோதிக் கொண்டு உள்ளே நகர, இயல்பாய் அவள் கைகளைப் பற்றிக்கொண்டு கூடத்துக்கு அழைத்துப் போனான்.

‘’நில்லுமா…’’ அதிகாரமாய் வந்து விழுந்த குரலில் மெல்லிய பயம் பரவ, மாலியைப் பார்த்தாள். அவன் உள்ளங்கையை பார்த்துக் கொண்டே நின்றான்.

  ‘’ உனக்கு அப்பா அம்மா யாரும் இல்லையா..? இப்படி யாரோ ஒருத்தன்கூட  கூப்பிட்டதும் வந்திருக்கியே, இது நல்ல பொண்ணுங்க செய்ற வேலையா..? ’’

   ‘’ அப்பா…’’ மாலியின் குரல் அதிர்ந்து மேலெழும்ப, அப்படியே திரும்பி அவனை துச்சமாக பார்த்தார்.

‘’ நான் உன்கிட்ட பேசலடா. உனக்கும் எனக்கும் எப்போது ஒத்து வந்திருக்கு, பேசித் தீர்க்க..! நீ இந்த குடும்பத்துக்கு எப்போதுமே எக்ஸ்ட்ரா பிட்டிங்தானே..?’’ சுரீரென வார்த்தைகள் வீச, அவன் கைகளை பின்னே கட்டிக்கொண்டே, எங்கோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.

    ‘’ நீ பதில் சொல்லுமா..! யார் நீ, இவன்கூட இவ்வளவு தூரம் வந்திருக்கியே, எந்த நம்பிக்கையிலே..’’ கூர்மையாக பார்த்தார்.

‘’ என் மேலயும், உங்க பையன் மேலயும் உள்ள நம்பிக்கையிலே. லவ் பண்றதாலேயே அவங்கமேல தாழ்ச்சியான பார்வை தேவையில்லை அங்கிள். சிந்திக்கத் தெரிந்த வயதில், புரிதல்களோட வர்ற காதல் நேர்மையானது நான் அப்படித் தான் நம்பறேன். 

கல்யாணத்தில் தோல்விகள் வர்றது சகஜம்ங்கிற மாதிரி, காதலிலும் தோல்விகள் இயல்புதான். அது அவங்கவங்க புரிதல்களின் ஆழத்தை பொறுத்தது. இதுக்கு அப்பா அம்மா இருக்கணும், இல்லைங்கிற அவசியம் இல்லை அங்கிள்.’’ பளிச்சென்று சொன்னவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.

  கோபமோ, வேறு எந்த உணர்வோ இல்லை. அமைதியான குரலில். இயல்பாகச் சொனனாள். அந்த தன்மை அவருக்கு ஆச்சர்யத்தை தந்தது. அவள் இத்தனை நம்பும் மகனின் மீது, தனக்கு ஏன் நம்பிக்கையே வரவில்லை என்ற கேள்வி அனிட்சையாக பூத்தது.

 போகச் சொல்லி சைகை செய்தார். இருவரும் உள்ளே வந்தனர். அன்றைய இரவு அத்தனை ஏகாந்தமாய் இருந்தது.

 அங்கே தனி வானம், அதில் தடம்மாறிய தாரகைகள்… 

சரஸ்வதி பேசிக்கொண்டே இருந்தார். சங்கீதாவும், சம்யுக்தாவும், ஆளுக்கு ஒருபக்கமாய் தோளில் முகம் பொதித்தனர். பூரணியும், சரவணனும் நினைவில் கொண்டு வந்தது அந்த அருகாமை.

 '’ இப்போ எதுக்கு அந்தப் பொண்ணை இங்கே கூட்டிட்டு வந்திருக்கானாம்..? பிடிச்சிருந்தா ஒரு தாலியைக் கட்டிட்டு இழுத்துட்டு சுத்தச் சொல்லு. யார் வீட்டு பொண்ணோ, அதுவும் ஒரு பொண்ணுதான்.  நம்ம வீட்டிலயும் ரெண்டு பொண்ணுங்க இருக்கு…’’ சரஸ்வதியை அழைத்து சொல்லிக் கொண்டு இருந்தார், சுந்தரம்.

 எழுந்து அவர் முன்னே சென்று நின்றான். ஆனால் அவரைப் பார்க்காமல், அம்மாவைப் பார்த்து சொன்னான்,

‘’ எனக்கும் பொறுப்பு இருக்கு, இதை அவர் ஒத்துக்காட்டியுமே. சங்கி சம்யு கல்யாணம் முடியற வரைக்கும் நான் கல்யாணத்தை யோசிக்ககூட மாட்டேன். எனக்காக சிந்தூரும் காத்திருப்பா. இப்போ இங்கே வந்ததே, அவளுக்கு நம்ம வீட்டையும் உறவையும் காட்டத் தான். ‘’ என்று சொல்லி திரும்பியவன், சட்டென்று நின்றான்.

‘’ இன்னும் எத்தனை வருசமானாலும், எல்லை தாண்ட மாட்டான்மா உன் வனமாலி. அந்த நம்பிக்கை அவருக்கு இல்லாட்டியும் உனக்கு இருக்கும். அதுதான் நான் தைரியமா கூட்டிட்டு வந்ததே…’’ போய்விட்டான்.

 அன்று இரவு முழுக்க தேனிரவாக தேய்ந்து கரைந்தது. இரண்டு மணி வரைக்கும் அரட்டை, பக்கத்தில் சரஸ்வதியின் சன்னமான குறட்டை. ஒரு முனையில் மாலி ஒற்றைக் கையில் தலை தாங்கிக் கொண்டு,  இடைவெளி விட்டு சரஸ்வதியும், இரண்டு பெண்களும், அறையின் இன்னொரு முனையில் தலையில் கைசாய்த்து படுத்துக் கொண்டு, கொட்டக் கொட்ட விழித்தபடி அவனையே பார்த்துக் கொண்டு சிந்தூரி. எத்தனை அழகான நாட்கள், இத்தனை வரமாய் வந்து சேர்ந்திருக்கு..!

 உறக்கத்தை மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு இருந்தார்கள் பார்வைகள் வழி.

 

"...வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னை கண்டு

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

காணும் வரை நீ எங்கே நான் எங்கே

கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே…"

                    வனமாலி16

சோவந்தானில் அன்று சூரியன் உதித்திருந்தது. எழுந்து பல்துலக்கி, குளித்து, சரஸ்வதி தந்த விட்டெறிந்தாலும் கொட்டிப் போகாத, கள்ளிப்பால் காப்பியைக் குடித்து, மணக்கும் இட்லிகளை எந்த பெரிய ஏற்பாடும் இல்லாமல், சமையலறை திட்டிலேயே வைத்து சாப்பிட்டு, சம்யுக்தா ஜடை பின்னிவிட, சங்கீதா பூச்சூடி விட, என்று ஏனோ ஒற்றை இரவிலேயே அந்த மொத்தவீட்டின் அன்யோன்யத்தையும் குத்தகை கொண்டு இருந்தாள்.

அவளின் ஆழ்ந்த முகமாற்றத்தை சின்ன முறுவலுடன் பார்த்துக் கொண்டே இருந்தான் மாலி. 

‘’நைட் கிளம்பினா, காலையில போயிடலாம் இல்ல மாலி..! மதியம் இருந்து சாப்பிட்டுட்டு போக வேண்டியது தானே. நீ என்ன அடிக்கடி வர்ற ஆளா..?’’ அம்மா அங்கலாய்த்துக் கொண்டே இருக்க, அவன் உடைமாற்றிக் கொண்டு கூடத்தில் வந்து நின்றான். அவன் சட்டை கையை சுருட்டி விட்டுக் கொண்டே இருக்க, சரஸ்வதியும் தங்கைகளும் இட்லியை ஊட்டிவிட்டுக் கொண்டே இருந்தார்கள். அதை வாங்கிக் கொண்டே தன் போக்கில் தயாராகிக் கொண்டிருந்தான்.

‘’ இல்லமா, நைட் கிளம்பினா, காலையிலே போக லேட்டாயிடும். சிந்தூர்க்கு நாளைக்கு ப்ரோக்ராம் இருக்கு. இப்பவே பாதி களைச்சாச்சு. காலையில போய் உடனே ரிக்கார்டிங் போக முடியாது. குரல் டல்லடிக்கும்.’’ 

சரஸ்வதிக்கு மனசே இல்லை. முகம் வாடிக் கிடந்தது. தங்கைகளின் முன்னாக போய் நிற்க, கேள்வியாய் பார்த்தார்கள்.

‘’வேலைக்கு கிளம்பலயா..?’’

‘’போகணும் மாலி. இப்போ உண்மையைச் சொல்லவா..? எங்களுக்கும் அவங்களை ரெம்ப பிடிச்சிருக்கு. அதுக்கும் முக்கிய காரணமிருக்கு.’’

  ’’ என்னவாம்..?’’

 ‘’ எங்களை விட ரெம்ப சுமாரா இருக்கிறதால…’’

 ‘’ அடடா… அப்புறம். ’’ அவன் கேலியாய் பார்க்க, மூவரும் சேர்ந்தே சிரித்தார்கள். சட்டென்று பேச்சை முறித்தான்.

  ‘’ சம்யூ, நான்  இப்படி சிந்தூரைக் கூட்டிட்டு வந்தது, உங்களுக்கு எதுவும் தப்பா தோணலயே. ஐ மீன் மாலி ஏன் இப்படி நடந்துகிட்டான்'ங்கிற மாதிரி. ’’ அந்தக் குரலில் வழிந்த தவிப்பில் தங்கைகள் இருவரும் பரிதவித்து போனார்கள்.

‘’என்னடா கேள்வி இதெல்லாம். உன்னை எங்களுக்கு புரியாதா..?’’

’’ அப்பாக்கு புரியலயே சங்கி.,’’

’’ அவருக்கும் புரியும். ஏனோ உன்னை நெருங்க முடியல அவரால. நிஜமாவே உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே அவ்வளவு கெமிஸ்ட்ரி இருக்கு. கொஞ்சம் பொறாமையாவும், ரெம்ப ஆசையாவும் இருக்கு பார்க்க. நாமும் ஒரு, காதலை பண்ணினால் என்னன்னு தான்.’’

‘’கொலை விழும். காதலிக்கிற வயசா இது..? இன்னும் அதுக்கெல்லாம் இருப்பத்தைஞ்சு வருசம் போகட்டும்.’’ 

சிரித்துக் கொண்டே வெளியில் வந்தான். வாசலில் நின்ற முருங்கைமரம் வெள்ளைபூக்களை தரையில் தெளித்து விட்டிருந்தது. சரஸ்வதி ஏதேதோ குடும்ப கதை பேச, கன்னத்தில் கைவைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் சிந்தூரி.

  ‘’ கிளம்பலாம் சிந்தூர்..’’

அவன் அழைக்க, எழுந்து கொண்டாள். சட்டென்று சரஸ்வதிக்கு அழுகை கமுறியது. முகத்தை திருப்பிக்கொண்டு அழுகை அடக்க, பக்கத்தில் வந்து தோளோடு தோள் சேர்த்து அணைத்தான் மாலி.

  ‘’ மா, என்னது…’’

’’ சொந்த வீட்டுக்கே விருந்தாளி மாதிரி வந்துபோனால் என்னடா அர்த்தம்..? நீ நிரந்தரமா இங்கேயே இருக்க மாட்டியா..?’’

‘’ நேரம் வரட்டும்மா. சிந்தூர் இதையெல்லாம் வேற்று கிரகவாசி மாதிரி பார்த்துட்டு இருக்கா பாருங்க. நாளைக்கு இதைச் சொல்லியே கேலி பண்ணி ஓய்வா.’’ அவளைப் பார்த்து சிரிக்க, முறைத்து வைத்தாள் முடிந்த மட்டுக்கும்.

 ‘’ அப்பா இல்லயாமா..?’’

‘’கோயிலுக்கு போயிருக்கார்டா.’’

‘’நான் கிளம்பற வரைக்கும் வர மாட்டார்னும் தெரியும். இந்த இடைவெளியை நிரப்பிக்கிற எண்ணம் அவருக்கு இல்லவே இல்லமா. ஏன்’னு தெரியல கடைசி வரைக்கும் என்னை அவருக்கு பிடிக்காமயே போயிடுச்சு.’’ முடித்தபோது குரல் வேதனையில் வெடித்து இருந்தது.

‘’ஏன் மாலி கிளம்பும்போது இப்படி வார்த்தையெல்லாம் பேசுற..? அடுத்தமுறை நீ வரும்வரைக்கும் நான் அழுதுட்டே இருக்கட்டும்னா…’’ 

வானத்தில் இருந்து துண்டாகி கடலில் விழுந்த எரிநட்சத்திரத்துக்கு மட்டுமே வெளிச்சம் அடுத்தமுறை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது..!

 பிரபஞ்சம் ஆசிர்வதித்து ஒழுகவிட்ட இந்த நிமிசம் மட்டுமே உலகத்தில் பேருண்மை. இந்த ஒருநொடியையும் வீணாக்காமல் அன்பு செய்து கொள்ளுங்கள். இதுமட்டுமே நிஜம். இது ஒன்றுதான் நிஜம்.

                    ❤️                         

 டெல்லி ஜந்தர் மந்தர். சாலைகளில் டயர் வழுக்கி வழுக்கி தேய்த்து கொண்டு இருந்தது. இத்தனை ஓட்டங்களையும், அந்த செப்பனிட்ட சாலை எப்படித்தான் தாங்கி சுமக்கிறதோ…

அஜெய்யும் அந்த புண்ணிய காரியத்தை செய்து கொண்டு இருந்தான். அலைபேசி சிணுங்க, ஒற்றைக் கையில் வண்டியை ஒடித்துக் கொண்டே திரும்பி பார்த்தான்.   

அபரஞ்சி..! சின்னதாய் புருவம் சுருக்கினான். 

 ’’ சொல்லு டார்லிங்…’’ குரலில் துளி பிசிறு இல்லாத உற்சாகம் வழிய, எதிர்முனை சட்டென்று வாய்பூட்டு போட்டுக் கொண்டது. சொல்ல வந்த விசயத்திக்கு, இந்த உற்சாக பிளேவர் சரியாக வராதோ..?’ குழம்பிக் கொண்டு, கொஞ்ச நொடியிலேயே தெளிந்து கொண்டும் நகம் கொறித்தாள்.

 ‘’ ரஞ்சி நான் டிரைவிங்ல இருக்கேன். ஏதாவது முக்கியமா..?’’ தட்டி எழுப்பிவிட்டான் குரலால்.

‘’ இல்ல, அஜெய்..! சும்மாதான். வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்.’’ ஏதும் இல்லை என்று சொன்ன அவள் குரலில் ஏதோ இருந்தது. வண்டியை ஓரம்கட்டினான். 

தீதிகளும் தாதிகளும் அங்கே இருந்த பால்கணேஷ் மந்திரில் மிகுத்தமாக தென்பட்டார்கள். ‘ கணபதி பப்பா மோரியா…’ என்ற முழக்கங்கள்  வெளியே ஸ்பஷ்டமாகக் கேட்டது. பளிங்கு நிறத்தில் இருந்த கணபதி பப்பா, ஏனோ, திருச்சி உச்சி பிள்ளையார் அளவிற்கு அவன் மனதை ஈர்க்கவில்லை. 

 ஹிந்தி மரங்கள் இலை உதிர்த்துக் கொண்டு இருந்தன. 

‘’என்ன விசயம் அபரஞ்சி..!’’ என்றான் அழுத்தமான குரலில்.

‘’ உங்க அக்கா என்னைப் பத்தி என்ன யோசிக்கிறீங்க..? எனக்குத் தெரியல…’’ 

‘’சிட்..! இது உனக்கே நல்லா இருக்கா..? நம்ம அறிவுக்கும், பக்குவத்துக்கும், இப்படியெல்லாம் பேசறது சரியா..?’’

 ‘’ இதெல்லாம் என்கிட்ட இருக்குன்னு நான் சொன்னேனா..?’’

 ‘’ அப்போ அதெல்லாம் உன்கிட்ட இல்லையா..? அப்போ துளி அறிவும் இல்லாத, பக்குவமும் இல்லாத உன்கிட்ட எப்படி பேசினாலும் தப்புத்தான்.’’ அவன் கேலியாய் சிரிக்க. அது அவளை மிகச்சரியாக ஒடித்தது.   

‘’இதைத்தான் சொல்லுவீங்கன்னு தெரியும். இருந்தாலும் எனக்கு மனசு ஆறமாட்டேங்குது.’’

‘’ ஹே..! வர வர உன்கிட்ட ஜோக் கூட அடிக்க முடியாமப் போச்சு. நான் முக்கியமான வேலையா போயிட்டு இருக்கேன். இப்பக்கூட என் இளம் மனைவியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கிறேன். இதுக்குமேல என்னம்மா…’’ 

மறுமுனை மெளன முனையாக, உப்’பென்று மூச்செடுத்துக் கொண்டு தோள்களை குலுக்கிக் கொண்டான். ஆரஞ்ச் வண்ண லட்டு பிரசாதத்துடன் பால் கணேஷ் கோயிலில் இருந்து அனைவரும் வெளியில் வரத் தொடங்கி இருந்தார்கள்.

‘’அபரஞ்சி, கமான். என்ன பிரச்சனை..?’’

‘’ உங்க அக்கா, போன்ல யார்கிட்டயோ மதுரிமாவை தத்தெடுக்கச் சொல்லி நீங்க சொன்னதா சொல்லிட்டு இருந்தாங்க. அதை கேட்டதும் எனக்கு பயங்கர கோபம் வந்திடுச்சு…’’

நெற்றிப்பொட்டை ஒற்றை விரலில் தட்டிக் கொண்டான்.

‘’ சக்கு கிட்ட எதுவும் சண்டை போட்டியா..?’’

     மெளனம்.

‘’உனக்கு அறிவில்லயா..? அவளோட நிலைமை என்னனு தெரியும் தானே..? இப்படி அவளை காயப்படுத்திட்டே இருக்கியே உனக்கு மனசாட்சி இல்லையா..?”’ சுள்ளென்று முகத்திலும் அடித்த வெயில் வார்த்தைகளிலும் அடித்தது.

‘’என்ன நிலைமை, பொல்லாத நிலைமை..? யாருக்கும் ஹஸ்பெண்ட் இறந்து போனதே இல்லை பாருங்க. அதுக்காக அடுத்தவங்க குழந்தையை அபகரிக்காம, இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாத்தான் என்ன..?’’ 

‘’ அபரஞ்சி…’’ அவன் போட்ட சத்தத்தில் அவளின் சப்தங்கள் அனைத்தும் ஒடுங்கி, நொடிந்து போக, அப்படியே ஒருநொடி குலுங்கி அடங்கி விட்டாள். ரஞ்சிஎன்பதைத் தவிர மறு வார்த்தை தேடாதவன், இன்று முழுப்பெயரை சொல்கிறான்.

கடந்து போனவர்கள் ஒருநொடி நின்று நிதானித்து பார்த்துவிட்டு விலகிப் போனார்கள். 

கண்களை மூடி தன்னை மீட்டெடுத்து கொண்டான்.

‘’ அப்போ நான் இறந்து போனாலும், நீ இப்படித்தான் கடந்து போயிடுவே, அப்படித்தானே..! ஆனால் உன்னுடைய அந்த முடிவை நான் ஆத்மாவாக இருந்தாலும் வரவேற்பேன். அறுந்துபோன ஜீவனுக்காக, இருக்கின்ற உயிர்கள் தங்களைத் தாங்களே எங்கேயும் தண்டிச்சுக்க வேண்டியதில்லை. அதை நான் வரவேற்கவும் மாட்டேன்.

சக்குகிட்ட மதுரீமா விசயத்தை அடிக்கடி பேசினது நான் தான். அவள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தணும்னு நான் விரும்பினேன். ஆனால், உன்னைவிடவே உணர்வுப் பூர்வமான சகுந்தலா, உன் குழந்தையை உன்கிட்ட இருந்து பறிச்சுக்கிறதை துளிகூட விரும்பல. அதனால மறுத்துட்டா. ஆனாலும் நான் அப்படி அவளிடம் சொன்னது அவளுக்குள்ள இனம் புரியாத நெகிழ்ச்சியை தந்தது.

நான் தனியில்லை. எனக்கு எது செய்யவும் உறவுகள் இருக்குன்னு நம்பிக்கை வந்திருக்கு. அவள் வாழ்க்கையில் கணவன் மட்டும்தான் இல்லை. மத்த எல்லாமே இருக்கு. உயிரு, உணர்வு, சிந்தனை, கருத்துன்னு அத்தனையும் இருக்கு. அவளை ஜடமா உன்னைமாதிரி என்னால நினைக்க முடியாது.’’

அலைபேசியை வேகமாய் துண்டித்தாலும், சீரற்ற மூச்சு மட்டும் அப்படியே மேல் கீழாய் ஊடாடிக் கொண்டு இருந்தது.       

’கணபதி பப்பா மோரியா… ’ சத்தம் காதுக்குள் வந்து வந்து மோதிக் கொண்டு இருந்தது,. ஐந்து நிமிடங்கள் நின்று சமன்படுத்திக் கொண்டு காரை மீண்டும் செலுத்தினான். இத்தனை நேரத்து உற்சாகம் முழுதாய் வழித்துக் கொண்டு போயிருந்தது.

 தனிமை என்பது, தேக்கு மரத்தை பிடித்த பூச்சியைப் போல. வேகமாய் உழைப்பை மட்டுமல்ல, மூலதனத்தையும் அரித்தே கரைக்கிறது.

சகுந்தலா போன்ற மனுசியின் தனிமை, அவளுடைய மேதகு மதிப்புக்கு குந்தகமாய் அவளைச் சுற்றியுள்ளவர்களால் பார்க்கப்படுகிறது. ஆணை வைத்துத்தான் பெண்ணுக்கு மரியாதையா..?

 ‘ டேமிட்..’  வாய்விட்டே சொல்லிக்கொண்டு சீட்டில் ஓங்கி குத்தினான்.

சவுத்திரி அவென்யூ தாண்டி வந்தநிமிசம், பஜாரில் கூட்டம் அதிகமாக தென்படவே, காரின் மீது விற்பனைக்குத் தூங்கிக் கொண்டிருக்கும் கரடி பொம்மை கவனம் ஈர்த்தது. பர் கிளாத்தில் முசுமுசுவென, இதுபோன்ற மெல்லுடல் பொம்மைகளைக் கண்டால் மதுரிமாக்கு சோறு தண்ணி எதுவுமே வேண்டாம்,

பொம்மைகளை கொண்டாடும் போதுதான், குழந்தைகள் உண்மையாக இருக்கின்றன.

பேரம் பேசாமல் பொம்மையை வாங்கிக் கொண்டான். திரும்ப முனைய அலைபேசி சிணுங்கியது. 

எல்கோ கெமிஸ்ட்..’ என்று திரையில் மினுக்க, தலையில் தட்டிக்கொண்டு தான் மறந்துபோன வேலையை நினைத்து தன்னைத் தானே நொந்து தண்டித்தான்.

 ‘’ ஹாய் ராபர்ட். ஆன் தி வே யார்…’’ என்றான் சமாதானமான குரலில்.

 அந்த ராபர்ட் சலித்துக் கொண்டான் போல, தோள்களைக் குலுக்கி சிரித்துக் கொண்டான். 

‘’ஒருமணி நேரமா வெயிட் பண்றேன் அஜெய். நண்பர்கள் கூட தொழிலில் இணைந்தால், இதான்யா கஷ்டம். அதட்டவும் முடியாது, அடங்கவும் முடியாது.’’

‘’முக்கியமான வேலைக்காக நடுவில இறங்கிட்டேன். வந்துடறேன்.’’ கையில் இருந்த பொம்மையின் தலையை வருடிக்கொண்டே சொன்னான்.

இரண்டு நிமிட பேச்சுக்கு பிறகு, அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே திரும்ப எத்தனித்தவனை, மிகச்சரியாய் சேட்ஜியோடு வந்த ரிக்‌ஷா இடக்குமடக்காய் மோத, நிதானிப்பதிற்குள் இவன் சட்டைக் கையோடு சேர்த்துக் கொண்டே ரிக்‌ஷா விரைய,

‘’ ஹே… ஹே…’’ பஜாரில் இருந்தவர்கள் பெரும் சத்தம் போடுவதிற்குள் அலைபேசி சிதறி ரோட்டில் விழுந்திருக்க, அஜெய் நிலைதடுமாறி வண்டியுடைய போக்கில் ஓடி உருண்டிருந்தான்.

 ‘’ அரே, இதர் தேகோ… பானி லாவோ…’’ சத்தமிட்டுக் கொண்டே கூட்டம் ஓடிவர, அவன் அணிந்திருந்த வெண் சங்கு நிற, ப்ராண்டட் சட்டை சிகப்பு கோலம் போட்டிருக்க, உள்ளங்கையில் தொடங்கி முழங்கை வரைக்கும் கிழிந்து, சதை சட்டைக்கு கீழ் தொங்கியது. விழுந்ததில் முட்டியிலும் சிராய்ப்பு.

தூக்கி அவனை நடைமேடையில் அமர வைத்தார்கள். தண்ணீர் பாட்டில்கள் பறந்தோடிக் கொண்டு வந்தது. ரத்தம் பீறிட்டுக் கொண்டு வழிந்ததை லேசான மிரட்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

“ பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக 

நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக...

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட 

அதை மண் மீது போட்டுவிட்டேன் 

வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட...


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

 

வனமாலி - 17

ருத்துமனை நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அஜெய். ஊசிபோட்டதால் வலி மட்டுப் பட்டிருந்தது. ஆனால் மருந்தின் வீரியம் குறைந்ததும் மறுபடியும் தலைதூக்குவேன்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தது, வீங்கி இருந்த கைகள்.

சட்டை கிழிந்து பரிதாபமாக இருந்தான். டாக்டர் மாதூர் வந்து அப்போதுதான் விசாரித்து விட்டு சென்றிருந்தார். வலதுகையில் கட்டி இருந்த ரோலக்ஸ் தன்னுடைய மதிப்பை மறந்து எந்த சேற்றில் விழுந்ததோ, மணிக்கட்டு மட்டும் தான், மணி பார்க்க கட்டியிருந்த கடிகாரம் மிஸ்ஸிங்.

வெள்ளை பளிங்குத்தரை அப்பழுக்கு இல்லாமல் இருந்தது. அவன் அமர்ந்திருந்த பகுதி கொஞ்சம் தள்ளி இருந்ததால் மருத்துவமனை நடவடிக்கைகள் எதுவும் அவ்வளவு பாதிக்கவில்லை. 

ஒற்றைக் கையோடு காரைச் செலுத்திக் கொண்டு வருவதிற்குள் பெரும்பாடாகிப் போனது. சகுந்தலாவிற்கு அழைக்க, அவள் வழியில் மருத்துவமனைக்கு வரும் வழியில் இருந்தாள். பதறிப்போய் ஓடி வந்து கொண்டு இருக்கிறாள்….

இரண்டு மூன்று ஸ்டெக்ச்சர்கள் கடந்து போயிருந்தது. மூன்று நான்கு நர்ஸ்கள் ஒயிட் டிரேயுடன் ஒயிட் சாக்ஸ் சகிதமாக கடந்து போய் இருந்தார்கள். அடுத்து என்ன என்று யோசிப்பதிற்குள், சகுந்தலா மூச்சிரைக்க, ஓடி வந்து கொண்டு இருந்தார். நிமிர்ந்து அஜெய் பார்ப்பதிற்குள் வந்து முன்னே நின்றவர் கண்கள்,  அவன் ரத்தம் பார்த்து சிவந்து போனது.

  ‘’ அஜி, என்னடா இது…’’ மருத்துவர் என்பதை மறந்து அஜெய்யின் அக்காவாக மட்டுமே முழுதாய் மாறி இருந்தார். கைகளைப் பற்றிக் கொண்டு கண் கலங்க, உடன் வந்த டாக்டரும், நர்ஸும் அவளை கனிந்த பார்வை பார்த்தார்கள்.

 ‘’ ஒண்ணுல்ல சக்கு…’’ என்றான் சுற்றி இருந்தவர்களை தர்மசங்கடமாக பார்த்துக் கொண்டே.

‘’ காரிலே தானே அஜி வந்திருப்பே..? அப்புறம் எதுக்கு இறங்கினே..? கம்பி ஆழமா கிழிச்சிருக்குன்னு டாக்டர் சொல்றாங்களே…’’ பதட்டம் இன்னும் துளிகூட குறைந்திருக்கவில்லை. 

  இறங்கிய காரணத்தை சொல்லி முடித்திருந்தான். அவனை அட்டெண்ட் செய்த டாக்டரிடம் எல்லாம் விசாரித்து முடிக்க, அவர்கள் விபரத்தை சொன்னவர்கள் விலகி சென்றார்கள்.

 ’’ வீட்டுக்கு கிளம்பலாமா அஜி..?’’

 ’’ நீ எதுக்கு சகுந்தலா..? நான் பார்த்துக்கறேன். ‘’ ஒற்றைக் கையை ஊன்றி எழுந்து நின்றான்.

  ‘’ நீ எப்படிப்பா போவே..? உன்னை இப்படியே அனுப்பிட்டு நான் குழம்பிட்டே இருக்கணுமா..? உன் கார்ல போய் உன்னை விட்டுட்டு நான் திரும்பி வர்றேன். டியூட்டிக்கு பர்மிசன் போட்டுட்டுதான் வந்திருக்கேன்.’’ அடுத்த வார்த்தைக்கு காத்திராமல், அஜெய்யோடு நடக்க, அவன் கண்கள் அன்பில் நிரம்பிப் போனது.

டிரைவ் செய்து வீடு வந்து சேர்ந்த நேரம். இருவரையும் ஒருசேர, அதுவும். இந்த நிலையில் எதிர்பார்க்காத பத்மா மயங்கியே விட்டார். அபரஞ்சி, மாடிப்படிகளை பற்றிக்கொண்டு நின்று இருந்தாள். பலமிழந்த கால்கள் உடலை தரையில் சாய்த்து விடாமல் இருக்க.

அவளுடைய அதிர்வலைக்கு இரட்டை காரணம் இருந்தது. விபத்து ஒருபக்கம் என்றால், விபத்துக்கு முன்னாக அவன் சொன்ன வார்த்தைகள் அவளை துண்டாடிக் கொண்டு இருந்தது.

‘ நான் செத்துட்டாலும் அதை நீ இயல்பா கடந்துடுவே தானே..? அதுவும் நல்லதுதான்…’ காதுகளை பொத்திக் கொண்டு மாடிப்படிகளில் அமர்ந்து தேம்பி அழ ஆரம்பிக்க, சகுந்தலா ஓடோடி வந்தாள்.

‘’அட, பயப்பட எதுவுமில்லை அபரஞ்சி. நீ எதுக்கு இத்தனை எமோசனல் ஆகுறே..?’’

‘’ எல்லாம் உங்களால தான்…’’ எழுந்து நின்றவள், எச்சில் தெறிக்க குற்றம் சாட்ட, சகுந்தலா இரண்டெட்டு பின்னால் நகர்ந்திருந்தார், நெஞ்சை பற்றிக்கொண்டு.

‘’அபரஞ்சி…’’ அஜெய்யின் சத்தத்திற்கு துளிகூட செவி சாய்க்காமல் எழுந்து பேய் பிடித்தவள் போல கத்திக்கொண்டு இருந்தாள். 

‘’எல்லாமே உங்களாலதான்..! மதுரிமா விசயமா நீங்க ஃபோன்ல பேசிட்டு இருந்ததை நான் சொல்லி அஜெய்கிட்ட சண்டை போட்டப்போ, அவர் சொன்ன வார்த்தை இன்னும் அப்படியே மனசில நிற்குது. நான் இல்லாட்டி நீ தனியா வாழ்ந்திடுவே தானே’னு கேட்டாரு. இந்தமாதிரி கேள்வியெல்லாம் எங்க நடுவில ஏன் வரப்போகுது..? நீங்க இல்லாம இருந்தால்..!

நீங்கதான் வாழக் கொடுத்து வைக்கல. ஒரே தம்பி.! நீங்கதானே அவருக்கு உலகம். அவர் வாழ்ந்தா உங்களுக்கு பொறுக்கலயே… ‘’ அஜெய் கோபத்தில் மீதமிருந்த கையை ஓங்கிக் கொண்டு வர, சகுந்தலா அவனை தடுத்து, கண்களாலே கெஞ்சினாள்.

‘’ அஜி, ப்ளீஸ்டா..! என்மேல உள்ள அன்பால நீ செய்ற எலலாமே, அபரஞ்சி தனக்கு எதிரா செய்றதாவே மாறுது. நான் உன்கிட்ட கெஞ்சி கேட்கிறேன், ப்ளீஸ் என்னை குற்றவுணர்ச்சியில திணற வைக்காதே….’’ சகுந்தலா கண்ணில் நீர்துளிர்க்க அந்த இடமே உணர்வுகளின் குவியலானது.

அஜெய் சோபாவில் தொப்பென்று அமர்ந்தவன், தலையைச் சாய்த்து கழுத்தை அங்கே படிய பொருத்திக் கொண்டான்.

‘’சக்கு, இவகிட்ட எல்லாம் நீயேன் இப்படியொரு அபச்சொல்லை எல்லாம் வாங்கணும்..? உனக்கு தலையெழுத்தா..? முதல்ல ஹாஸ்பிடல் பக்கத்திலே வீட்டைப் பாரு. நீயும் நானும் தனியா போயிடலாம்.’’ பத்மா ஆவேசமாக கத்த, குன்றிப் போனான் அஜெய், 

  வீட்டில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் மதுரிமா, பயத்தில் தன் அறை வாசலிலேயே நின்று அடிபட்ட அப்பாவை பய பார்வை பார்த்தது.

‘’அப்போ நான் வேண்டாம் உங்களுக்கு அப்படித்தானேமா..?’’

 ‘’ நான் ஏன்பா அப்படிச் சொல்லப் போறேன்..? ஆனால், சக்குவோட படிப்புக்கும், தகுதிக்கும், ஏன் அவள் இப்போ இருக்கிற நிலைமைக்கும் துளிகூட மனசிறங்காத விக்ரமாதித்தனோட வேதாளம் மாதிரி, உன் பொண்டாட்டி அவமானப்படுத்திடே இருக்கா. அதுக்கு அவளுக்கு தகுதி இருக்கா, உன் பொண்டாட்டிங்கிறதைத் தவிர…’’

‘’ மா…’’ சகுந்தலா எத்தனை அதட்டியும் அந்த தாயின் ஓங்கு சத்தத்தை நிறுத்த முடியவில்லை.

‘’அவளும் நல்லாத்தானேடா இருந்தா..? அவரைவிட மாப்பிள்ளை உலகத்துல இருக்கா..? அவங்களை விடவா நீங்கள் எல்லாம் புரிதல்களோட வாழ்ந்துட்டு இருக்கீங்க..? மொத்த வாழ்க்கையையும் அஞ்சு வருசத்துக்குள்ள அடைச்சிட்டுல போயிட்டாரு. அதனாலதானே அவளால வேற ஒரு வாழ்க்கையை யோசிக்ககூட முடியல… அது அவளோட தனிப்பட்ட எல்லை. அதுக்குள்ள பெத்த தாயாகவே இருந்தாலும் என்னால   தலையிட முடியாதுன்னு தானே நானே கையை பிசைஞ்சிட்டு நிற்கிறேன்.

அதனாலதானே, நீயெல்லாம் இந்த மாதிரி என் பொண்ணை நடத்தறே..? என் பொண்ணுக்குத்தான் இந்த நிலைமையா, உனக்கு எல்லாம் இது வராதா என்ன..? ’’ 

அணைகள் உடைந்து வெளியேறும் வெள்ளத்திற்கு வரப்புகளும் இல்லை, வரம்புகளும் இல்லை. துடித்துக் கொண்டு வந்து கோபத்தில் விழுந்த வார்த்தைகள், அந்த தாயின் நாவை பொசுக்கிக் கொண்டுதான் விழுந்தது, மற்றவர்கள் காதுகளை அடைவதிற்குள்.

ஒரே நாளில் இரண்டாவது முறை இதுபோன்ற வார்த்தைகளை கேட்கிறாள். என்னதான் படிப்பும், பகுத்தறிவும் தெளிவும் உள்ள பெண்ணாகவே இருந்தாலும், அவளால் அந்த அனலான சொல்லின் தகிப்பை தாங்கவே இயலவில்லை. 

   ‘’ அய்யோ,,,’’ தலையை பற்றிக் கொண்டு மாடிப்படியில் முகத்தை பொதித்து அவள் அழுதகோலம், நெஞ்சை கரைத்தது.

 சகுந்தலா அம்மாவை திரும்பி முறைக்க, அவர் தன்னுடைய வார்த்தைகளை தானே சுமக்க முடியாமல், கண்ணீரோடு நின்றார்.

அஜெய் அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தான், அபரஞ்சியின் கதறலைப் பார்த்து. சற்றுநேரத்திற்கு முன் அவள் மீது இருந்த அத்தனை கோபமும், உருத்தெரியாமல் கரைந்து போயிருக்க, இந்த கண்ணீர் அவள் தன்மீது வைத்திருக்கும் மட்டில்லாத காதல் என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும்..!

 எழுந்து அருகில் சென்று அவள் அருகில் மாடிப்படியில் அமர்ந்தான். 

‘’ ரஞ்சி… என்னது சின்ன குழந்தை மாதிரி..! மது பயந்து போய் நிற்கிறா பாரு…’’ சன்னமான குரலில் அவன் சமாதானம் செய்தாலும், அது எதுவும் எடுபடாமல், கண்ணீர் மடைதிறந்து கொண்டு இருந்தது.

‘’நான் என்ன தப்பு செய்தேன், உங்களை பைத்தியமாய் காதலிக்கிறதை தவிர. அதுக்கு ஏன் இத்தனை சாபம்..? நீங்க சொன்ன வார்த்தையே என்னால தாங்கமுடியாம தவிக்கயிலே, அவங்களும் அதே வார்த்தையை சொல்றாங்க. அப்போ இவங்க எல்லாம் இப்போ ஒத்துக்கறாங்களா..? ஒரு மனிதனின் இழப்புங்கிறது மனைவிக்கு மட்டும்தான் உலகத்தையே இழக்க வைக்குதுன்னு. மத்தவங்களுக்கு அது சிலநாள் துக்கம்னு இவங்க எல்லாம் சொல்லாம சொல்லிட்டாங்க. 

 இப்ப சொல்றேன் அஜி.. நீங்க இல்லாட்டி நானும் இல்லை. உங்களுக்கு பின்னாடி எனக்கு எதுவும் எனக்கானதில்லை. நானும் உங்க கூடவே வந்துடுவேன். அதுக்குபிறகு தத்தே எடுக்கவேண்டாம். மதுரிமா அவங்ககிட்டயே சேர்ந்திடுவா…’’ அபரஞ்சி தலையில் அடித்துக் கொண்டு அழ, அத்தனை பேரும் ஸ்தம்பித்து போனார்கள்.

 சகுந்தலா அஜெய்யை பரிதாபமாக பார்க்க, அவன் தேற்ற வழியற்று அமர்ந்திருந்தான்.

                    ❤️     

சென்னை பெருங்களத்தூர் கெமிக்கல் பேக்டரி. உள்ளே மிசின்களின் சத்தம் சீராய் காது துளைத்துக் கொண்டு இருந்தது. பேக்கிங் யூனிட்டில் கசக் கசக்’ என்ற சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது, யூனிட்டில் பேக்கிங் லோட் ஆவதால்.

 எல்லா டீடெயில்களும் அடங்கிய ஃபைலை கணிணியில் ஆய்ந்து அவற்றின் தரக்குறீயிடுகளை பரிசோதித்துக் கொண்டு இருந்தான் வனமாலி..

’’மாலி உன்னை மேனேஜர் கூப்பிடறாரு பாரு…’’ சூப்பர்வைசர் வந்து சொல்லிவிட்டுப் போக, சிஸ்டத்தை அவன் இஷ்டத்துக்கு அடக்கி வைத்துவிட்டு மேனேஜர் அறையை நோக்கி நகர்ந்தான்.

’’வாங்க மாலி…’’ கண்ணால் அவர் காட்டிய இருக்கையை ஒரு கையால் தன்னை நோக்கி நகர்த்திக் கொண்டான்.

  ’’ ஒரு அசைன்மென்ட் இருக்கு மாலி. அதுக்கு உங்களைத்தான் அனுப்பலாம்னு இருக்கேன். ’’ என்றார் கண்களை கூர்ந்து பார்த்துக் கொண்டே.

  ‘’ ஷ்யூர் சார்…’’

‘டெல்லிக்கு நம்ம டீலர்சுக்கு மெட்டீரியல் சேம்பிள் கொண்டு போகணும். வழக்கமா அதை கொரியர் பண்ணிட்டு, அதுபத்தின டீடெயிலை மெயில்ல ஷேர் பண்ணுவோம். இந்தமுறை அதுல கொஞ்சம் ப்ராபளமா இருக்கு. நம்முடைய ஆபோனட் பார்டிஸ் குகா கெமிக்கல்ஸ், நம்மை முந்திட்டு இந்த ஆர்டரை வாங்க முயற்சி செய்துட்டு இருக்காங்க.’’

இதென்ன அநியாயம்…’’ என்றான் ஆற்றாமையாக.

‘’ அவங்க கம்பெனி ஆரம்பிச்ச நாள்தொட்டு நாமதான் மெட்டீரியல் சப்ளை பண்றோம். இப்போ இந்த ஆர்டர் கை நழுவினா, நமக்கு பணம் மட்டுமில்ல, தொழில் முறையில பெரும் அவமானமாகவும் இருக்கும். அதான் நம்முடைய பிரதிநிதிகள்ல ஒருத்தர் அங்கே போகணும். நாம சப்ளை செய்ற பொருட்களோடு தரம் குறித்து அவங்களுக்கு கண்டிப்பா விளக்கி ஆர்டர் நமக்கே கிடைக்கிற மாதிரி செய்யணும்.’’

அவர் முடித்துக் கொண்டபோது பேசிய வார்த்தைகளை மூளையில் கோர்த்துக் கொண்டு இருந்தான். இது நல்ல யோசனை என்றுதான் தோன்றியது அந்த நிமிசம்.

   ‘’ செய்துடலாம் சார்.’’

 ‘’ அதுக்காகத் தான் நம்ம கம்பெனி உங்களை தேர்ந்தெடுத்து இருக்கு வனமாலி. நாளை மறுநாள் நீங்க கிளம்ப வேண்டி இருக்கும். உங்களுக்கு தேவையானது எல்லாம் ரிசப்ஷனில் அரேஞ்ச் பண்ணிக் கொடுப்பாங்க.’’

   ‘’ ஷ்யூர் சார்.’’

‘’ சேம்பிள்ஸ் எல்லாம் நாளைக்கு ஈவினிங்கே கைக்கு கிடைச்சிடும் நீங்க அதை வாங்கிக்கலாம். நான் சொன்னது எல்லாம் நினைவில் இருக்கட்டும்.’’

தலையசைத்தபடி எழுந்து நின்றான். காற்று திசைமாறி அடித்தது. அதில் கண்ணீர் போல் ஒருதுளி தெரிந்தது. 

இன்னும் சில வேலைகளை முடித்துக் கொண்டு வெளியில் வந்தான். கொஞ்சம் மந்தகாசமான பொழுது அந்தகாசத்தில் இருளோடு சங்கமித்து, பொழுதை ஈன்றுகொண்டு இருந்தது.

 மனது நிறைவாகவும், அதேவேளை கனமாகவும் இருந்தது. சிந்தூரியின் நினைவு அந்த இருளும், ஒளியும் கலப்படமாகும் வானத்தைப் பார்த்ததும் வந்து லொட்டென மனக்கதவைத் தட்டியது.

 அலைபேசியை எடுத்து அழைப்பை விடுத்தான்.

‘’ மாலி….’’ என்றாள் பனியினை ஒப்ப ஈரக்குரலோடு.

‘’ மேடம் எங்கே இருக்கீங்க..? என் ரூம்லயா..?’’ என்றான் தலையைக் கோதிக் கொண்டே.

 எதிர்முனையில் எள்ளல் சிரிப்பு, துள்ளிக்கொண்டு வந்தது.

  ‘’ சார் என்னவோ புத்தம் புது மனைவிகிட்ட கேட்கிற மாதிரியே கேட்கிறாரே…’’ என்றாள் வெடிச் சிரிப்பு சிரித்துக் கொண்டு.

‘’ அப்படிக் கேட்கும் காலமும் வராமலா போயிடப் போகுது…?’’ என்றான் ஏகாந்தமாய் மறு சிரிப்பு சிரித்துக் கொண்டே.

 ‘’ இப்போ இதுக்கு நான் என்ன மாலி  செய்யணும்..? சிரிக்கணுமா..? இல்ல வெட்கப்படணுமா..?’’

‘’ நீ சிரி… அதைப் பார்த்து ஊரே வெட்கப்படட்டும்.’’

 ‘’ தேவைதான். எதுக்கு மாலி இப்போ காலிங்…’’

 ‘’ ஒரு ப்ராஜட் விசயமா டெல்லி போறேன் சிந்தூர்…’’

   ‘’ எப்போ..?’’

‘’நாளை மறுநாள். அதான் நாளைக்காவது ரூமுக்கு வர்றியானு கேட்கத்தான்.’’

  ‘’ ஏன் தேவியர் தரிசனம் இல்லாம சார் கிளம்ப மாட்டீங்களோ..?’’ இருவரும் பரஸ்பரம் சிரிப்பால் தழுவிக் கொண்டனர்.

‘’அப்படி இல்லை. ரிடென் டிக்கெட் இல்லாமத்தான் போறேன். திரும்பற தேதி நான் பிக்ஸ் பண்ணிக்கல. எப்போ வர்றேன்னு தெரியல. அதான் போறதுக்குள்ள உன்னை ஒருதடவை பார்த்துக்கலாம்னு. மறுபடி பார்த்துக்கிற வாய்ப்பு கிடைக்காமே கூட போகலாம்.’’

இயல்பாய் அவன் சொல்லிய வார்த்தைகளில் ஒரு பேயழுத்தம் வந்து முகத்தில் அப்பியது காற்று போல். கண்கள் குறுக்கி நெற்றி சுருக்கினாள்.

‘’மாலி…’’ என்றாள் உலகத்தின் வேதனை எல்லாம், ஒற்றை வார்த்தையில் அடக்கி.

   ‘’ சொல்லு சிந்தூர்…’’

‘’ஏன் சட்னு இப்படியொரு வார்த்தை எனக்கு தாங்க முடியலடா… வார்த்தைகள் விழுந்து கூட இதயம் உடையுமா..? ’’ என்ற நொடியில் முற்றாய் தளதளத்திருந்தாள்.

என்னவென்று யோசிக்க சில சில்லறை நொடிகளை செலவு செய்தவன், அடுத்த நொடி, சிரிப்பில் அவளை சீர்படுத்த முயன்று கொண்டு இருந்தான்.

’’என்ன சென்டி மென்டெல்லாம் அம்மணி பார்க்கிறாங்க… அது கவனம் இல்லாம வாய்தவறி வந்தது.’’

அவள் அந்த வார்த்தைகளை சுமந்துகொண்டே நிற்க, நாளை அறைக்கு வரச் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டான். 

காற்று கண்ணீரோடு கடந்து போய்க் கொண்டு இருந்தது, எதிர்காலத்தை நோக்கி.

 

"...என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ

முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ…"

       

 வனமாலி - 18

விபரம் எதையும் விஸ்தீனமாகச் சொல்லாமல், விடியல் விழுந்திருந்தது பூமியின் மீது. சூரியன் பூமியில் தன் கை ரேகையைப் பார்க்கத் தொடங்கி இருக்க, காலையில் தன்னுடைய ப்ரோகிராமிலே கொஞ்சம் தடுமாறிக் கொண்டு இருந்தாள் சிந்தூரி.

லைவ்விலேயே நான்கைந்து வார்த்தை பிதற்றல்கள், மூன்று உச்சரிப்பு பிழைகள், சிந்தூரிக்குள் சின்னதாய் குதிரைகளின் கனைப்புச் சத்தம் கேட்டபடியே இருந்தது.

தலையைக் குலுக்கி தன்னை நிலைப்படுத்த படாதபாடு பட்டுக் கொண்டு இருந்தாள். எண்ணச் சிதறல்கள் அவ்வப்போது வரும்தான். ஆனால் இன்று அத்தனையும், ஒன்றாக வந்து அவளை வதைக்கத் தொடங்க, இரண்டு பாடல்களை அடுத்தடுத்து ஒலிபரப்பச் சொல்லிவிட்டு அவள் வெளியில் வந்து, ஒய்வறையில் அமர்ந்து கொண்டாள்.

மனசின் நமைச்சலுக்கு காரணம் தெரியவில்லை இந்த நிமிசம் வரைக்கும்.

கண்களை மூடி சோபாவில் சரிந்துகொண்டாள். மனது முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக எதை எதையோ கட்டிவைத்துக் கொண்டிருக்க, மாலியை அழைத்திருந்தாள் அலைபேசியை எடுத்து.

‘’ சிந்தூர்…’’ என்றான் லேசான குழப்பத்தோடு, தன்னால் கண்கள் சுவற்றில் இருந்த கடிகாரத்தை தொட்டது. இன்னும் அவளுடைய ப்ரோக்கிராம் முடிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்குள் ஏன்..?

‘’அதுக்குள்ள ப்ரோக்கிராம் முடிஞ்சாச்சா..? என்ன ரெக்கார்டடா..?’’ என்றான் குரலில் கவலையை ஏற்றிகொண்டே. 

’’மாலி, மனசு சரியில்லை. ஏனோ பதட்டமா இருக்கு.’’

‘’ ஏன்டா..? ஊர்ல இருந்து கால் வந்ததா..? சித்தி எதுவும் சொன்னாங்களா..?’’ அந்தக் குரலே உருக்கி உயிர் வரைக்கும் கரைத்தது.

‘’ இல்ல மாலி. இது ஏதோ அடையாளம் தெரியாத கவலை மாதிரி இருக்கு. ரெம்ப பதட்டமா இருக்கு. நீங்க இப்போ எங்கே இருக்கீங்க..?’’

‘’ டூயூட்டில தான். சரி நான் அரை மணிநேரத்துல வீட்டுக்கு வந்திடறேன். நீயும் வந்துடு.’’ வைத்துவிட்டான்.

 ஆட்டோ பிடித்து அவன் இருப்பிடத்துக்கு வந்த போது, கையேந்தி பவன்களில், சாம்பார் சாதம் வாசனை அடித்தது.

இவளுக்கு முன்னே அங்கிருந்தான். அதுதான் மாலி. மகிழ்ச்சியை விட துயரத்தில் தான் அவன் அத்தனை பேருக்கும் பயன்படுவான்.

மேலே வந்தவளின் உள்ளங்கையில் விரல் பதித்துக் கொண்டான். அனிட்சையாய் தோளில் முகம் புதைக்க, நெகிழ்ந்து போனான்.

‘’ சிந்தூர்…’’ என்றான் மெல்ல கன்னத்தில் தட்டி.

   ‘’ம்’’

‘’என்னாச்சு..? ஏன் திடீர்னு.’’ 

‘’ தெரியல…’’ முகத்தை நிமிர்த்தாமல் துப்பட்டாவை விரலில் சுற்றி சுற்றி பிரித்தாள்.

‘’நைட் எனக்கு டெல்லிக்கு டிரெயின். இப்போ இப்படி டிஸ்டர்பா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு சிந்தூர். என் சூழ்நிலையை புரிஞ்சுக்க.’’

   ‘’ம்.’’ என்றாள். ஆனால் உள்ளுக்குள் ஏதோவொன்று கொதித்துக் கொண்டு இருந்தது. அவளை அமர்த்திவிட்டு, டீ போட்டு எடுத்து வந்தான்.

இன்னும் அவள் சரியாகி இருக்கவில்லை. டீயை தந்துவிட்டு மோடாவை அவளுக்கு எதிரில் நகர்த்தி போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தான். உதட்டுக்கு மேல் துளிர்த்த வேர்வையை கைகளால் அழுந்தத் துடைத்துக் கொண்டே இருந்தாள்.

‘’போயிட்டு எப்போ வருவீங்க மாலி…’’

‘’ தெரியல சிந்தூர். மூணு, நான்கு நாட்கள் ஆகலாம்.

இந்த மூன்று வருட பழக்கத்தில் இருவரும் தனித்தனியாக அவரவர் ஊர்களுக்கு எத்தனையோ முறை சென்று வந்தாகி விட்டது. இந்தமுறை மட்டும் அது இனம் புரியாத வலியாக இருந்தது.

‘’ டெல்லியில் இருந்து திரும்பும் போது என்ன வாங்கிட்டு வரட்டும்…?’’ அவள் பதட்டத்தை தணிக்க, பக்கத்தில் வந்து தோள்மேல் கைகளை போட்டுக் கொண்டான்.

அவன் கண்களையே ஆழமாக பார்த்தாள்.

‘’ என் உயிரைத் திருப்பிக் கொண்டு வந்திடுங்க அது போதும்.’’ அவன் எதிர்பார்க்காத நிமிசம் அவனை இறுக்கி நெஞ்சில் முகம் பொதிக்க, நெகிழ்ந்து போனான் மாலி. அன்பின் நம்பிக்கைகள் ஆயுளுக்கும் போதுமானது. நம்பித் தந்தாள்… அவனே தன் நம்பி என்று தந்தாள்…

அன்று முழுவதும் அவனுடனே என்றானது. கிளம்பத் தயாராக அவன் துணிகளை எடுத்து வைக்க, சிந்தூரி அடுப்பில் குக்கரை வைக்க, ரியாஸ் ட்யூட்டி முடிந்து திரும்பி வர, அவனுக்காக தயிரும், சிப்ஸும் வாங்கிக் கொண்டு வர, அதுவே இவர்களுக்கும் உணவாக, அன்று மதியம் அவ்வளவு ஏகாந்தமாக இருந்தது.

தென்னங்கீற்று நிழலில், தரையில் பெட்சீட் விரித்து சாப்பாடு. வாட்ச்மேன் தன்னுடைய ரேடியோவில் நந்தா நீ என் நிலா…’ என்று உருகவிட்டுக் கொண்டு இருந்தார்.

‘’நேரம் காலத்துல ட்யூட்டி முடிச்சதும் ரூமுக்கு போயிடணும் சிந்தூர். தாமதிக்க கூடாது. ஏதாவது பிரச்சனைனா கூட, ஓடி வர நான் இருக்க மாட்டேன்.’’

‘’ஏன்டா நான் இல்லையா..?’’

 ’’அதுசரி, நீ நல்லவன்னு காட்ட,  அவள் பிரச்சனையில மாட்டணுமாடா மடையா..! யார் இருந்தாலும், அவளுக்கு நானாக முடியாதுடா. முதல்ல சாப்பிட்டு எழுந்திருச்சு ஓடு.’’ அவனை விரட்டுவதிலேயே குறியாக நிற்க, அவனும் அடம் பிடித்துக் கொண்டே அமர்ந்து கிடந்தான்.

 ‘’ நான் இங்கே இருந்து எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன் சிந்தூர். அதுக்கு முன்னாடி உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு போகணும்.’’ ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார்கள்.

வழிநெடுக நினைவுகளை விதைத்துக் கொண்டே வந்தான். சின்ன இருளில் விரல்கள் மட்டும் உரசிக் கொண்டே நடை பயில்வதில் இருக்கிறது உலகத்தின் சுகமெல்லாம்.

ஹாஸ்டல் வாசலில் வண்டியை நிறுத்தி தோள்களை சாய்த்து அவன் சிரித்த சிரிப்பு அப்படியே மனதிற்குள் உறைந்து போனது.

‘’ சீக்கிரம் வந்துடுங்க மாலி…’’ என்றாள் ஈரமான குரலில்.

கைகளைப் பற்றிக் கொண்டான். சின்னதாக அழுத்தம் விளைவித்தவன், மணிக்கட்டைத் திருப்பி பார்த்துக் கொண்டு அவளிடம் மெல்ல தலையசைத்து அனுமதி கேட்டான், அவளும் அதே தலையசைப்பில் அனுமதி தந்தாள்.

 இரவுப் பறவை ஒன்று அமானுஷ்யமாய் அவர்களைக் கடந்து போனது, 

‘’ டேக் கேர் சிந்தூர். சீக்கிரம் வந்திடறேன்.’’ வண்டியைத் திருப்பிக் கொண்டு முதுகு காட்டியபடி இவள் பார்வையை விட்டு கடந்து போய்க் கொண்டு இருந்தான்…. இல்லையில்லை, கரைந்து போய்க் கொண்டு இருந்தான்.

                    ❤️    

டெல்லி வந்து சேர்ந்த போது, குளிர் உடம்பை உதற வைத்துக் கொண்டு இருந்தது.

தங்கியிருந்த ஹோட்டலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் மாலி. தலைநகரிலும், கருக்கல்லின் அடிவானம் சிகப்பாய்த் தான் இருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து ஆழ்ந்து புகைத்தான். அந்த குளிருக்கு உயிருக்குள் ஏற்பட்ட இதம் சொல்லி மாளாது.

வானத்து வயிற்றை சிகப்பாய் கிழித்துக் கொண்டு, சூரிய பிரசவம் நடந்து கொண்டு இருந்தது.

நடமாட்டம் இல்லாத அந்தச் சாலைகளை சுவாரஸ்யம் கூட்டின. இன்று முடிக்க வேண்டிய வேலைகள் பற்றிய குறிப்பை மேலோட்டமாக மெயிலில் பார்த்து முடிவு செய்துகொண்டு. மொபைலை எடுத்துக் கொண்டு, அறையை பூட்டிக்கொண்டு இறங்கி நடந்தான்.

                     ❤️             

லாரம் மெல்ல அலறியபோது, கண்களை தேய்த்துக் கொண்டு எழுந்து படுக்கையில் அமர்ந்தான் அஜெயன். மதுரிமாவும், அபரஞ்சியும் ஆளுக்கொரு பக்கம், அஜெய்யை தழுவிக் கொண்டு படுத்திருக்க, தன் நெஞ்சில் படர்ந்திருந்த இருவரின் கைகளையும் எடுத்து ஒருசேர முத்தமிட்டான்.

மதுரிமா, சிணுங்கிக் கொண்டு மறுபுறம் திரும்பிப் படுக்க, அபரஞ்சி மட்டும் விழித்துக் கொண்டு, கண்களைத் தேய்த்தபடி படுக்கையில் எழுந்தமர்ந்தாள்.

‘’அஜெய்… தூங்கலயா..?’’ என்றாள் கண்களை தேய்த்துக் கொண்டே.

‘’ இப்பத்தான் எழுந்தேன். ஜாக்கிங் கிளம்பிட்டே இருக்கேன்.’’

‘’இன்னும் கை சரியாகல அஜெய்…’’

‘’கையிலயா ஓடப் போறேன்…’’ என்றான் அவளுடைய நெற்றியில் நெற்றியை மோதிக் கொண்டே.

‘’ இன்னும் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு ரொடினை ஆரம்பிக்கலாம் இல்ல…’’ என்று கேட்டபடி இருக்க, அவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். 

வெளியில் வந்து தயாராகிக் கொண்டே அபரஞ்சி கேட்ட கேள்விக்கு பதில் தந்தபடி இருந்தான்.

‘’போகலாம் தான். இப்பவே அங்கங்க கால் கிலோ சதை கூடிப் போய் இருக்கு. ஐயா கொஞ்சம் பிட்னஸ்ல எப்பவுமே அக்கறை உள்ளவர்ன்னு தெரியும் தானே… தவிர என் பொண்டாட்டிக்கு என் இந்த கம்பீரத்து மேல அத்தனை காதல். அவள் ரசிக்கும் நான் ஃபிட்டா இருக்க வேணாமா..?’’ டிராக் பேண்டையும், ஷர்ட்டையும் மாற்றிக் கொண்டான். 

இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். இன்னும் முழுதாய் இருட்டு தன்னுடைய போர்வையை உதறி இருக்கவில்லை. எரிந்த விடிவிளக்கின் சிறுவெளிச்சம் அந்த முழு இருட்டையும் கடித்துக்  திண்று கொண்டு இருந்தது.

‘’ அஜு..’’ என்றாள் மெல்லிய குரலில். ஆச்சர்யமாக திரும்பிப் பார்த்தான். அவன் ஜாகிங் செல்கின்றபோது அவள் விழித்திருந்த சரித்திர நிகழ்வே இதுவரைக்கும் நிகழ்ந்ததில்லை. ஆனால் அவனுக்கு ஏற்பட்ட, அந்த விபத்துக்கும், அதற்கு பின்னாக நடந்த சஞ்சலத்திற்கும் பிறகு, அவள் மனம் ஏதோ இனம்தெரியாத தவிப்பினிலே மூழ்கிக் கிடக்கிறது. குழப்பமான முகமும், அடிக்கடி கலங்கும் கண்களும், மனதை பிசைந்தது.

  அருகில் வந்து மெல்ல அவள் தலையை கலைத்து விட, அவள் கைகளை பற்றிக் கொண்டு முகத்தை அவன் கரத்தில் பொதித்துக் கொள்ள நெகிழ்ந்து போனான்.

  ‘’ ரஞ்சி… என்னதுடா…’’ என்றான் அருகில் அமர்ந்து. அவன் மடி கவிழ்ந்தவளை விசித்திரமாகப் பார்த்தான்.

   ‘’ என்னாச்சு..?’’

  ‘’ தெரியல அஜி. மனசே சரியில்லை இரண்டொரு நாளா.’’ சொன்னவள் முகத்தை நிமிர்த்தி, நெற்றியில் முத்தம் பொதித்தான்.

 ’’ ஃபிரியா இரு ரஞ்சி. எந்த பிரச்சனையும் இல்லாத போதும், ஏதோ இருக்கிற மாதிரி, கற்பனை பண்ணிட்டா, அது தேவையில்லாத பேட் வைபரேசனை உண்டாக்கும். பீ ஃபிரி. எப்பவும் உன்கூட இந்த அஜி இருப்பான்… உன் அஜியாக….’’ 

   கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டான். அந்த தொடுதலில் தன்னையே தொலைத்து அமர்ந்திருந்தாள். இமைகளின் மீது அசைவுகள் மறந்தாலும், அவள் உணர்வுகள் அவன் தொடுகையை மறக்காது, அவன் தொடுகையை மறக்காது… அவன் தொடு கையை மறக்காது…

 

“… உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவிருக்கும்…"


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

 

...

 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 269
 

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/396/

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

வனமாலி - 19

 

டெல்லி ஜாமியாவை ஓட்டிய சாலையின் குறுக்கு பிரதானத்தில் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு வழக்கமாக தான் ஜாகிங் செல்லும் பார்க்கை நோக்கி நகர்ந்தான்.

நகரம் விழித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. மப்சலில் இருந்து நகரத்துக்குள் விரைந்து கொண்டு இருந்தன வாகனங்கள். இன்னும் வானம் பொலபொலத்து விட்டால், தலைநகரத்தின் போக்குவரத்தில் திமிற வேண்டும் என்ற துரிதம் அவர்களின் வாகன வேகத்தில் தெரிந்தது.

   பொதுவாக டெல்லிக்கு வருகின்ற வாகனங்கள் ஜலந்தரில் இருந்தும், ஹரியானாவில் இருந்துமே சரக்குகளை ஏற்றிக் கொண்டு வரும். பஞ்சாப் சவுத்திரிகளின் திடம் அவர்களின் புஜத்தில் தெரியும்.

பாங்கடித்த மயக்கம் கண்களில் தெரியும். சாலைகளில் அதிகம் கவனம் வைக்காமல், போக்குவரத்து குறைந்த சாலைகளை ஆக்ரமித்துக் கொண்டு இருந்தன வாகனங்கள்.

 மாலி கொஞ்சம் பராக்கு பார்த்துக் கொண்டே அந்த பெரிய நெடுஞ்சாலையில் நடந்து கொண்டு இருந்தான். காலாற நடப்பது சுகமாக இருந்தது. அறையை விட்டு சொல்லத் தெரியாத தூரம் வந்திருந்தான். உறக்கம் பிடிபடாமல் அறையில் முடங்கிக் கிடப்பதை விட, நடப்பது சுகமாக இருந்தது. அதுவும் தெரியாத சாலைகளில், வழித்தடத்தை பற்றிகொண்டு நடப்பது வெகு சுவாரஸ்யமானது.

  நடைமேடையில் நடந்து கொண்டிருக்க, மங்கல் மங்கலாய் மனிதர்கள். கடந்து சென்று கொண்டிருக்க, தூரத்தில் கரும் பச்சை நிற டிராக் ஷூட்டில் ஓங்குதாங்காய் பார்க்கை நோக்கி ஒருவன் வந்து கொண்டிருந்தான். முழுதாய் அவன் உருவம் தெரியவில்லை என்றாலும், அவனின் உயரமும் கம்பீரமும் ஒருவித மலைப்பை உண்டாக்கியது.

அவன் அருகில் வந்தால், அவனை முழுதாய் பார்க்கலாமே, என்ற வித்யாசமான சிந்தனை தோன்ற தன்னைதானே வியந்து கொண்டு தன்னுடைய கால்களை வேகமாக்கிக் கொண்டு இருந்தான்.எதிரில் வந்த அந்த ஓங்குதாங்கான அஜெய்யின் சிந்தனையும் இதே பாதையில் தான் நகர்ந்திருக்குமோ..? இருவரின் முகத்திலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் ஆவல், ஏனென்றே தெரியவில்லை

   இருவருக்கும் நடுவில் வாகனங்களின் தலையீடு இருந்தபடி இருக்க, சிலபல அடிகள் இடைவெளியில், அந்த மெயின் ரோட்டை ஒட்டிய பிரதானத் திருப்பத்தில், ஓரு முனையில் அஜெய்யும், மறுமுனையில் மாலியும் நிற்க, சில அடிதூரத்தில் இருவரும் ஆழ்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே, அந்த இடத்தைக் கடக்க முற்பட.

எதிர்வரிசையில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து வந்த, டிம்பர் லாரி ஒன்று, இவர்கள் இருவருக்கும் நடுவில் புகுந்து நொடிக்கும் நிமிசத்தில், ஒருவரை கரைத்து, ஒருவரை உடைத்தும் போட்டு நகர்ந்தது.

 ஏதோ ஈர்ப்போடே நடந்து வந்து கொண்டிருந்த வனமாலி வெகு சின்ன நிமிசத்தில் தான், தங்களை நோக்கி வருகின்ற லாரியைப் பார்த்து சுதாரிப்பதிற்குள், அவனை உருட்டி பத்து அடி உயரத்தில் எழுப்பி, இரும்பு குழாய்கள் ஏற்றிக் கொண்டு வந்த, திறந்த லாரியின் மேள்தளத்தில் தூக்கி வீசி இருந்தது.

ஆனால் அஜெய் ஓரு ஓரமாய்த் தான் சரிந்து இருந்தான். தன் கண்முன்னே சற்றுமுன் நடந்து வந்து கொண்டிருந்தவன், பல அடிகள் பந்தாடப்பட்டு, லாரியின் மேல்தளத்தில் விழுவதை. அதிர்ச்சி தின்ற விழிகளோடு பார்த்துக் கொண்டே சுதாரித்து கைகளை ஊன்ற முயல, ஏற்கனவே அடிபட்டு இருந்த கை சரியான நேரத்தில் ஒத்துழைக்க மறுக்க.

 அத்தனை கனவுகளும் கண்முன்னே கணப்பொழுதில் வந்துபோக, கடைசியாக பார்த்த அபரஞ்சியின் அந்த கலங்கிய முகம், இதயத்தை பிளந்து கொண்டிருக்க, கையாலாகாமல், அந்த அசுர சக்கரத்திற்கு தன் உடலை நசுங்கத் தந்து இருந்தான்.

                    ❤️  

காலை மணி பத்து. இத்தனை ரத்தம் கக்கியா இந்த இரவு விடிய வேண்டும். தன்னை மறப்பது தான் பித்துநிலை என்றால், அபரஞ்சிக்கு பித்துப் பிடித்து இருந்தது.

சுக்லா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் வலித்துக் கொண்டு போய் போட்டு இருந்தார்கள் அவள் அழகுக் கணவனை. அட கடவுளே, சற்று முன் வாசித்த அவசரச் செய்தியைப் போல, அவன் அழுத்தமாய் நெற்றியில் பதித்த முத்தமே இன்னும் செத்துப் போகாமல் புருவத்துக்கு மத்தியில் நெளிந்து கொண்டு இருக்கையில், அவன் செத்துப் போனானா..? 

 தன்னை மறந்திருந்தாள் அபரஞ்சி… பசி, வலி, அழுகை என்று இயற்கை அனுமதித்த எந்த சுழற்சியும் அவள் உடம்பில் நடக்கவே இல்லை. குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அந்த பெரிய மருத்துவமனையை மூன்று முறைக்கும் மேல் சுத்தி அடித்திருந்தார் பத்மா, இருப்புக் கொள்ளாமல்.

மொத்த ஆயுளுக்கும் இந்த வேதனைதான் உச்சம் என்று உடம்பில் உள்ள அத்தனை அணுக்களும் சொல்லாமல் சொன்னது.

வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு இழப்புகளும் நம்பிக்கையையும், பலத்தையும் இணுக்கு இணுக்காய் உடைத்துக் கொண்டு போய் விடுகிறது.

பிறப்பில் இருந்து இறப்பை நோக்கி ஓடும் வாழ்க்கை தான்… ஆனால் தன் இறப்பை விட, தன் உயிரின் இருப்பை நியாயப்படுத்தும் சில உறவுகளை இழக்கும் போதுதான், காலத்தை நோக்கி கை நெறித்து சபிக்கத் தோன்றுகிறது. 

 வேர்கள் உயிர்ப்போடு நின்று நிமிர்ந்து பார்க்கையிலே, அதன் முழு மரத்தையும் வெட்டிக்கொண்டு, வேரை மட்டும் விட்டுவிட்டுப் போவது என்பது அந்த வேருக்கு எத்தனை வலிக்கும் என்பது இப்போது அந்த தாய் வேருக்குப் புரிந்தது.

 கொஞ்சநேரம் இந்த உயிரை யாராவது கடன் வாங்கிக் கொண்டு போக மாட்டார்களா என்று அந்த பெண்ணின் உணர்வெல்லாம் குமைந்து தவித்தது. இத்தனை நாளும் தனக்கும் அபரஞ்சிக்கும் நடுவில் இருந்த அஜெய் என்ற பனிச்சுவர், அங்கே கரைந்து கொண்டிருக்க, இருவரும், ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத அழுத்தத்தில் இருந்தார்களோ… தெரியவில்லை.

 சகுந்தலா வெளியில் வருகின்ற நேரத்துக்காக தன்னுடைய உயிரை உறுதியில் கவ்விக் கொண்டு இருந்தார் அந்தத் தாய். உள்ளே…

முகம் முழுக்க மூடி, வேர்த்து அழுத்தம் கொட்டிய ஆடையில் இருந்தார்கள் அந்த பரந்த விரிந்த அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர்கள் அத்தனை பேரும். செவிலியர்கள் ஒருபுறம், நவீனத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்த உபகரணங்கள் ஒருபுறமும், என்று இறுக்கி அடைத்த கதவுகளின் வழியே எந்த உயிரும் ஒழுது போய்விடாமல், காபந்து பண்ணிக் கொண்டிருப்பது போல் இருந்தது.

சகுந்தலாவின் கைகளில் பெரிய நடுக்கம் தெரிந்தது. இயல்பை விட, இயலாமை அவளை உலுக்கிக் கொண்டு இருந்தது. இந்த உலகத்தின் மீதும், இரக்கமில்லாத இறைமையின் மீதும் மட்டில்லா கோபம் வந்தது.

 அடிக்கடி அருகில் வந்து கைகளை அழுந்த பற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தார் டாக்டர் மாதூர்.

 தண்டுவட நிபுணரான அவளுக்கு நன்றாகவே தெரிந்தது அஜெய்யின் மொத்த உடம்பும், சல்லடைச் சகதியாகி விட்டது. நடை பாதையில் தலை விழுந்ததால், கழுத்துக்கு மேலே மட்டும் சேதாரம் இல்லாமல் இருந்தது.

   அத்தனை டிஸ்குகளும் உடைந்து நொறுங்கி இருந்தன. இதயம் முதல், கல்லீரல் வரைக்கும் அத்தனை மூலங்களும் எப்போதோ இறந்திருக்க, மூளை மட்டும் இன்னும் ரத்தத்தை குடித்துக் கொண்டு துடிப்பாக இருந்தது.

அழுகை என்ற உணர்வை மட்டும் இந்த ஆண்டவன் அளிக்காமல் இருந்திருக்க கூடாதா..? கூரான ஆயுதத்தால் உலகத்தின் தலையில் கோடிழுத்துக் கொண்டு இருக்கிறானே…

 அஜெய்க்கு நேர் எதிரில், வனமாலி சலனமின்றி படுத்திருந்தான். சின்னச் சின்னதாய் சிராய்ப்புகள். ஆங்காங்கே கட்டுக்கள். ஆனால் உடலில் எந்த அசைவும் இல்லை. பக்கத்தில் இருந்த எக்ஸ்மோ கருவி, இதயத்தை செயல்பட வைத்துக் கொண்டு இருந்தது. ஆனால்.. ஆனால்… அவனுடைய மூளை எப்போதோ மரித்துப் போய் விட்டது.

   அன்பை மட்டும் பேசிய அவனுடைய ஆன்மாவின் சலனம் அடங்கிப் போய்விட்டது. கண்களை திறந்து ஒருபார்வை பார்க்கும் போதே, சிந்தூரியின் இதயம் வரைக்கும் பூக்க வைப்பானே, அந்த கண்மலர் இனிமேல் திறவாலே போய்விட்டது.

 இதயமும், உறுப்புகளும், இயங்க வைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது, வெளிப்புற சக்திகளால். அதனால் என்ன உபயோகம்..? அந்த ஆன்மா இனி அவன் அன்பிற்குரியவளின் வாசத்தை நுகருமா..? தேவை என்றதும், அது யாரென்றே சிந்திக்காமல், ஓடி வந்து உதவிக்கு நிற்பானே, அந்த பேரன்பின் முகம் இனி சிரிக்குமா..?

   மருத்துவர்கள் மூவரும், அந்த இடத்தில் இருந்து நகர்ந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு அருகில் இருந்த சின்ன ஓய்வறைக்கு வந்தார்கள். நோஸ் பீசை அகற்றியதும், சகுந்தலா டேபிளில் சரிந்து தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் அழ, அந்த பகுதி முழுக்க உணர்வு காடானது.

‘’ ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் சகுந்தலா. கொஞ்சம் அமைதியா இருங்க.’’

  ‘’ அமைதியா..? அது என் வாழ்க்கையில ஏது டாக்டர் மாதூர்.? வாழ்க்கையில் துரதிஷ்டத்தை சுமந்துகிட்டே வாழ்ற அதிர்ஷ்டசாலி நான். எத்தனை கிளையை இழந்தாலும், என் குடும்பத்துக்கு மொத்த வேரா இருந்தான் அவன். இன்னைக்கு அள்ளி கொண்டு வந்து அவனை குவிச்சுட்டு போயிருக்காங்க. 

அவன் குழந்தைக்கு நான் என்ன பதில் சொல்வேன்..? அவன் இல்லாமல் அது படுக்கைக்கே போகாதே. உலகத்திலுள்ள அத்தனை காதலையும் அவன்மேல வச்சிட்டு இப்போ பிரமை பிடுச்சு உட்கார்ந்து இருக்காளே அபரஞ்சி, அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன். என் வீட்டில ஆண் வாசனையே இல்லாம போயிடுச்சே…’’ 

 மருத்துவராய் அவள் கொட்டிய உணர்வை விட, மகத்தானதாய் இருந்தது. அவள் என்ற மனுசியின் உணர்வு. 

‘’விசித்திரமாய் நடந்திருக்கு எல்லாம். அஜெய் கூட அடிபட்ட இன்னொரு பையன் யாரு..? இரண்டு பேரும் எந்த ஒரு புள்ளியில் சந்தித்தார்கள்… தெரியல. லாரி வந்து மோதிய வேகத்திலே தூக்கி வீசப்பட்டவன் டிம்பர் லாரியின் இரும்பு பைப்பில் அடிப்பட்டு தன்னுடைய சுயநினைவை இழந்திருக்கிறான்.

இரும்பு பைப்பில் மோதியதால் அவன் தலை அடிபட்டு மூளை சாவு ஏற்பட்டு இருக்கு. ஆனால் அவருடைய உடல் உறுப்புகள் பெரிதாய் சேதாரம் இல்லாமல் இருக்கு. ஆனால் நம்முடைய அஜெய்யின் அத்தனை உறுப்புகளும் செயல் இழந்துட்டே இருக்கு. பலத்த தாக்குதலால். ஆனால் மூளை அப்படியே இருக்கு. இந்த வேதனையான விந்தையை என்னன்னு சொல்ல..?’’ டாக்டர் மோசஸ் சொன்னபோது, விம்மி வெடித்த அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் அமர்ந்திருந்தாள் சகுந்தலா.

ஒரு தேர்ந்த மருத்துவராய் இனி அஜெய்யின் நிலை என்ன என்று நன்றாகவே தெரிந்தது. ஆனால் பேரன்பு கொண்ட தமக்கையாய் அவளால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் இயலவில்லை.

‘’ அஜி….’ என்று ஓங்காரமிட்டு சத்தமிட வேண்டும் போல் இருந்தது.

மாதூர் பெரும் யோசனையில் அமர்ந்திருந்தார். எதையும் கேட்கவும், வெளிப்படுத்தவும் ஆகமாட்டாமல் அமர்ந்திருந்தார். காவல் துறையில் இருந்து தேடிக்கொண்டு வந்தார்கள். 

 விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. விபத்து நடந்தது அதிகாலை நடமாட்டம் இல்லாத நேரம் என்பதால், விக்டீம்களை பிடிப்பதில் பெரும் சிக்கலாக இருந்தது. லாரியை விட்டுவிட்டு, கிளினரும், டிரைவரும் ஓடி இருந்தார்கள் பயத்தில்.

’ அந்த இரண்டாவது நபர் யார்..? அவரை சேர்ந்தவர்கள் யார்..? ஏதாவது சின்ன துப்புக் கிடைத்தால், அவரின் நீண்ட நெடிய கனவுக்கு உயிர் ஊட்ட முடியுமே..!!! ஒழுது வீணாவதிற்குள், ஒரு உயிரை இடம் மாற்ற முடியுமே..? ஆனால் யாரென்று தெரிய வேண்டுமே..? இதற்கு மருத்துவ உலகம் எத்தனை தூரம் அங்கீகரிக்கும்..?

  எழுந்து மீண்டும் வந்து இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றார். மூளையோடு சேர்த்து மொத்த உறுப்பும் வீழ்வதிற்குள் இந்த ஆக்கப் பணியை முடித்தாக வேண்டும்.

வேகமாய் சகுந்தலாவின்  முன்னாக வந்து நின்றார். அவள் கவலையை கவளமாக விழுங்க வழியற்று அமர்ந்திருந்தாள். காரிடரிலில் காத்திருக்கும் அபரஞ்சியையும், அம்மாவையும் சந்திக்கும் துணிவை சுத்தமாக தொலைத்திருந்தாள். மதுரிமாவின் அந்த பிஞ்சுப் பார்வையை தாங்கும் சக்தியை யாரோ வழித்துக் கொண்டு போய் இருந்தார்கள்.

   ‘’ சகுந்தலா… நீங்களே இப்படி ஒடிஞ்சு போனால், அவங்களுக்கு யார் ஆறுதல் சொல்றது..?’’

   ‘’ நானா..? நான் என்ன பெரிய இரும்புத் தூணா..? முட்டை ஓடு என்ன அத்தனை வலிமையானதா என்ன..? கூடு மாதிரி காட்டிட்டு இருக்கிற அந்த ஓடு ஊசிக்கே பொத்தலாகி விடாதா..? நான் என்ன, எல்லா பெண்களும் அப்படித்தானே..! 

எங்க குடும்பத்தின் அத்தனை ஆதாரத்தையும் இழந்துட்டமே. எல்லாத்தையும்  இழந்து இழந்து எதுக்கு இந்த வாழ்க்கை..?’’ முகத்தை மூடி விசும்பி விசும்பி அழ, அந்த கம்பீரமான டாக்டரை அத்தனை பலஹீனமாக பார்ப்பது வேதனையாக இருந்தது.

‘’ சகுந்தலா, நீங்களே தளர்ந்தால், இனி யார் இந்த சூழ்நிலையில இருந்து மீட்டெடுக்க முடியும்… கொஞ்சம் சரியாகுங்க. தெளிவா யோசிச்சு உங்களை மீட்டெடுங்க.’’

வார்த்தைகளை சேகரிக்க வழியற்று அமர்ந்திருந்தாள்.  

டாக்டர் மோசஸும், மாதூரும் தனியே வந்தார்கள். இருவருக்குள்ளும் மெல்லிய குரலில், வல்லிய ஆங்கிலத்தில் உரையாடல் ஓடிக் கொண்டே இருந்தது. முடித்துக் கொண்டு சகுந்தலாவின் முன் வந்து நிற்க, அவளுடைய கண்கள் பழுத்துப் போய் இருந்தது. 

   ‘’ டாக்டர் சகுந்தலா, ஒரு சின்ன யோசனை தயக்கமா இருக்கு அதை எங்கிருந்து தொடங்கி எங்கே முடிக்கிறதுன்னு.’’

நிமிர்ந்து அமர்ந்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

 ‘’ எஸ் டாக்டர் மோசஸ்’’

‘’ அந்த இன்னுமொரு நபருடைய விபரங்கள் கிடைச்சா ஒரு ஹோப் கிடைக்கும். உங்களுக்கு எங்கும் பார்த்த நியாபகம் இருக்கா..?’’ 

   இதழ் பிதுக்கினாள்.

‘’ அவர்கிட்டே போன் கூட இல்லை கையில. ஒருவேளை அடிபட்ட வேகத்திலே. தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். எப்படி தகவல் தர்றதுன்னு தெரியல. இப்போ அவருடைய உறுப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும், அதனால அவருக்கு எந்த உபயோகமும் இல்லை. அதேநேரம் இப்போ அதை தானமா கொடுத்தா மற்றவர்களுக்கு உபயோகப்படும்.’’

சகுந்தலா தலை அசைத்தாள்.

‘’இப்போ என்ன செய்றது டாக்டர்..? விதிமீறலாககவே இருந்தாலும், இப்போ இருக்கிற மொத்த நிலைமைகளையும் ஒரு தகவல் அறிக்கை மாதிரி தயார் செய்துட்டு, வீடியோ கவரேஜ்ஜில் அந்த பையனுடைய உடல்நிலை குறித்து பதிவு செய்துட்டு உறுப்புகளை தானம் தந்திடலாமா..? நாளைக்கு அவங்க வீட்டில இருந்து தேடிட்டு வரும்போது அது நம்முடைய சூழலை விளக்க ஏதுவாக இருக்கும் இல்லையா..?’’ சகுந்தலா முழு மூச்சாய் மருத்துவராகி இருந்தாள்.

‘’ அப்போ, தானம் தர்றது தப்பில்லை தானே..?’’ மோசஸ் கேட்டுவிட்டு மாதூரை அர்த்தமாக பார்க்க, அவர் தலையை மெதுவாக அசைத்தார்.

‘’வேதனையும். விரக்தியிலும் நிற்கும் போதும் ஒரு புண்ணியம் பண்ண முடியுதுன்னா, அதுகூட கடவுளின் கருணையாகத்தான் பார்க்கணும். முதல்ல ஐ.ஜி சார்கிட்ட பேசிட்டு முடிவு பண்ணலாம்.’’ சகுந்தலா எழுந்து நின்று கோர்ட்டை சரிசெய்ய,

‘’ சகுந்தலா…’’ ஆழ்ந்து அழைத்தார் மாதூர்.

    ‘’ டாக்டர்…’’

‘’ தானம் குறித்து நாங்க சொன்ன விசயங்கள் சரிதான். ஆனால், கொஞ்சம் மாற்றம் வேணும் அந்த கருத்தில். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் மரணத்தின் வாசலில் நிற்கிற அஜெய்யிடம் இருந்துதான் எங்களுக்கு தானம் தேவைப்படுது… அதுவும் ஏற்கனவே மரணத்தின் பிடியில் விழுந்த, இன்னொரு நபருக்கு. இந்த மாற்று பாதையில் மீண்டு வரப்போறது நம்ம அஜெய்யா இருக்கும், ஆனால் இன்னொரு உடம்பில்…’’

 மாதூர் விளக்கமாகச் சொல்ல தொப்பென்று எழுந்த வேகத்தில் தன்னுடைய இருக்கையில் சரிந்தாள்.

மாதூரின் ஆராய்ச்சியைத் தெரியும். உலகம் முழுக்க, தன்னுடைய மருத்துவ மூளையைத் தூக்கிக் கொண்டு  ஆராய்ந்து கொண்டு இருக்கிறார் இந்த விஞ்ஞானத்தை நிகழ்த்தி விட.

எலி, முயல், குரங்கு என்று தன்னுடைய முப்பரிமாண சோதனையில் வெற்றியும் பெற்றுவிட்டார் ஆனால் இப்போதுதான் மனிதரை நோக்கி தன்னுடைய முனைப்பைச் செலுத்திக் கொண்டு இருக்கிறார். அவரின் லட்சியமே, மனிதர்களை மரணத்தில் இருந்து காபந்து செய்ய வேண்டும். கைநீட்டிக் கொண்டு வரும் காலன், கை கட்டி வாய்மூடி திரும்பி போக வைக்க வேண்டும்.

 சகுந்தலாவின் கைகள் நடுங்கியது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. தொண்டை மிடறு ஏறித் தாழ்ந்தது. அஜெய் இன்னொரு உடலிலா… ஒருவேளை இந்த சோதனை ஜெயிக்காமல் போனால், மொத்தமாக அவன் இல்லையா..?

‘’ நோ…’’ கைகள் கொண்டு காதுகளை அணைகட்டி சின்னதாய் சத்தம் போட்டவளை, கரங்களை பற்றிக்கொண்டு தன்னுடைய கரத்தால் தட்டிக் கொடுத்து ஆறுதல் செய்தார் டாக்டர் மாதூர்.

 "அ…ப்…ப…டி…ன்னா… என்…அஜெ…ய் வர… மாட்டா..னா… டாக்..டர்…’’ சகுந்தலாவின் குரல் உயிரையே கரைத்தது.

‘’ இந்தக் கேள்விக்கு அஜெய்யின்  சகோதரிக்கு வேணா விடை தெரியாம இருக்கலாம், ஆனால் தண்டுவட நிபுணர் சகுந்தலாவிற்கு நல்லாவே விடை தெரியும். ஸ்பைனல் கார்ட்டு சல்லி சல்லியா நொறுங்கி இருக்கு. கல்லீரல்ல ரத்தம் கசியுது. இடுப்புக்கு கீழே எந்த உறுப்புமே இல்லை…’’

  அவர் விளக்க விளக்க, ஒரு கேவல் ஒன்று வெடித்துக் கொண்டு நெஞ்சை விட்டு வெளியில் வந்தது.

 

"...எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்

இதற்கொரு மருந்தைக் கண்டேனா?

இருந்தால் அவ(னை)ளைத் தன்னந்தனியே

எரியும் நெருப்பில் விடுவேனா?

நமக்கும் மேலே ஒருவனடா

அவன் நாலும் தெரிந்த தலைவனடா

தினம் நாடகமாடும் கலைஞனடா

போனால் போகட்டும் போடா…"

 

வனமாலி - 20

 

தெல்லாம் நடந்திருக்கவே கூடாதென்ற பெரும் பட்டியல் இருக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமும். நான் பிறந்தே இல்லாத வரம் மட்டும் சரியான நேரத்தில் கிடைத்திருந்தால், நான் இறந்து போகும் வெறுமை நடந்திருக்காது அல்லவா..?

அழுகையும், கவலையும், தேடலும், ஏமாற்றமுமாய் நெய்யப்பட்ட இந்த நாட்களை சந்திக்கின்ற அவசியமே ஏற்பட்டு இருக்காது அல்லவா..?

ஜாமியாவில் இருந்த அஜெய்யின் பங்களா, சோகத்தை கொத்திக் கொண்டு இருந்தது. முடிவு செய்ய வேண்டிய இடத்தில் காலம் நம்மை கொண்டு நிறுத்தும் போது, முடிவு நாம் எடுப்பதாய்ச் சொல்லிக் கொண்டாலும், அது ஏற்கனவே காலம் எடுத்த முடிவுதான் தவிர, வேறில்லை.

யோசிக்க அங்கே எதுவுமே இல்லை. கிழிந்த அம்மாவின் புடவை, பிடிதுணி ஆவது கூட, சட்டென்று அதை விசிறி எறிந்து விடாத மனநிலைதான். அத்தனை உறுப்பையும் இழந்த, அஜெய்யின் கூடு மறுபுனைவு செய்யப்படும் நம்பிக்கை கூட கடவுளின் சிறு கருணை தான்.

மூளையை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமிருந்த அஜெய்யை தந்துவிட்டார்கள். இப்பொழுது அழுவதா..? இல்லை அமைதியாக இருப்பதா..? அஜெய் யார்..? அள்ளிக் கொண்டு போன உடலா…? அவர்கள் கிள்ளி எடுத்துக் கொண்ட, மூளையா….? இப்போது அவன் திரும்பி வருவான் என்று நம்பிக்கை கொண்டு அழாமல் இருப்பதா, அல்லது, இத்தனை நாள் அவனை தேக்கி இருந்த உடலை அடக்கம் செய்வதை எண்ணி விதிர்த்து நிற்பதா..?

  இத்தனை சிந்தனையும் சகுந்தலாவிற்கு மட்டும்தான். அபரஞ்சி எப்பொழுதோ அடங்கி இருந்தாள். மாற்றி மாற்றி விளையாடும் சித்து விளையாட்டெல்லாம் அந்த மனைவிக்கு புரியுமா என்ன..? அவளை கொண்டாடியவன், அவளை காதலில் திண்டாட வைத்தவன் இன்று அவளை தேற்றவும், அணைக்கவும் அருகில் இல்லை… இதுதான் நிஜம். 

 வீடு முழுக்க அமைதியே நிறைந்திருந்தது. அவனுடைய சொகுசு கார்,  கேட்பாரற்று வாசலில் நின்றது. மதுரிமா அபபா’ என்று அழைத்து அழைத்து ஏங்கிக் கொண்டு இருந்தாள். ஐந்து நாட்களில் குழந்தை அணு அணுவாய் கரைந்து கொண்டு இருந்தாள்.

சகுந்தலா மருத்துவமனையே கதியாக கிடந்தாள், இதுவரைக்கும் நடந்திராத ஒரு சோதனை முயற்சி. உலக அரங்கில் பல தோல்விகளை கண்டு வந்த முயற்சி. என்னதான் மாதூர் தன்னுடைய மருத்துவத்துறையின் பெரும் காதலராக இருந்தாலும், அவர் இந்த ஏசுநாதரை உயிர்பித்து எழுப்பி விடுவாரா..? உலக அரங்கமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

கலிபோர்னியா, டெக்சாஸ்ஸில் இருந்தெல்லாம் வல்லுனர்களின் குழு அங்கே முகாமிட்டு இருந்தது. முன்னதாக வனமாலியின் உடல்நிலை மருத்துவர்களில் அறிக்கையோடு தேர்ந்த நிபுணர்களின் விளக்கங்கள் மற்றும், சான்றிதழ்களுடன் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

கண்டிப்பாய் அவனை தேடிக்கொண்டு ஆட்கள் வருவார்கள் என்ற வகையில் விசாரணை நடந்தேறிக் கொண்டு இருந்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து சில கிலோமீட்டர்க்குள் இருந்த அத்தனை குடியிருப்புகள், விடுதிகள் ஹோட்டல்களில் அவனின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். இது காவல்துறையின் நடவடிக்கையின் கீழ் இருந்தது. புகைப்படத்தை டி.வி.யில் தந்து ஒளிபரப்புச் செய்யலாம் என்ற யோசனை கடைசி நேரத்தில் கை விடப்பட்டது சில சிக்கல்களால்.

 விளம்பரம் தந்தால், ஒரு அவகாசம் தந்து தேடிக்கொண்டு வரும் உறவின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் அஜெய்யின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மூளை முப்பத்தி ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே, திரவத்தில் பாதுகாக்க முடியும். யாருக்கும் காத்திருக்கும் அவகாசம் இல்லை.

மொத்தமாய் உலகம் வேற்றுருவில் இருந்தது. மூளை மாற்று என்பது அத்தனை இலகுவான விசயமா என்ன..? தண்டுவடத்தின் கீழ் மொக்கில் தொடங்கி ஒவ்வொரு நியூரான்களும், அஜெய்யின் மூளையோடு பொருந்திப் போக வேண்டும். பின்னி பிணைந்து கிடந்த நரம்பில் ஒன்று மரத்துப் போனாலும், இந்த செயல் தேர்வு தோற்றுப் போகும்.

அவர்கள் பெயர் அறியாது இருந்த மாலி, நரம்புகளும், உறுப்புகளும் பழுது பட்டுப் போகாமல், வெளியில் இருந்து கருவிகளால் பாதுகாக்கப் பட்டுக் கொண்டிருந்தான்.

எல்லாம் அவகாசம் குறைந்த வேகப் பணிகள். துளிநேரம் மிச்சமிருந்தாலும், அதை எத்தனை உபயோகமாய் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் இருக்கிறது எல்லாம்.

சகுந்தலா துக்கம் கொண்டாடும் நிலையைக் கடந்திருந்தாள். அஜெய்யின் உடல் எடுத்த பிறகு வீட்டுக்கு செல்வதையே கூட மறந்து இருந்தாள். இந்த பிரித்து மேயும் வேலை எல்லாம் இன்னும் அம்மாவின் காதுகளுக்கோ, ஏன் அபரஞ்சியின் காதுகளுக்கோ சென்று சேர்ந்திருக்க வில்லை. 

 இது கண்ணுக்கு எட்டாத புது உயரம். அங்கே என்ன இருக்கும், இது எப்படி நகரும் என்ற இலக்கே தெரியாத போது, இதை எங்கனம் எடுத்துச் சொல்வது..?

இல்லாத நம்பிக்கையைத் தந்துவிட்டு. ஒருவேளை அது நடக்காமல் போனால், அதை எப்படி இவர்களால் தாங்கிக் கொள்ள இயலும்..? அடர்ந்த தயக்கம் மனது முழுக்க அப்பிக் கிடந்ததாலேயே அந்த  விசயத்தை பற்றி பேசாமல் அத்தோடு முடித்துக் கொண்டாள்.

 காலம் அடுத்தென்ன என்ற இவர்களின் கேள்விக்கு எந்த பதிலும் தராமல் மெளனமாக காத்திருந்தது.

                       ❤️     

   ழுது பழக்கமில்லை கானசிந்தூரிக்கு. தேவையான அளவு அழுகையை காலம் கண்களில் இருந்து முன்கூட்டியே எடுத்துக் கொண்டு இருந்தது. எத்தனை தரம்தான் அந்த எண்களை அழுத்தி அழுத்தி ஓய..! உறங்கி இருந்தால், அந்த உறக்கத்தில் கூட அந்த எண்களே வந்து வந்து வருத்திப் போனது.

 காலையில் ரியாஸை அழைத்துப் பேசி இருந்தாள். நாள்கள் நகர நகர நம்பிக்கை என்பது மெல்ல மெல்ல தகர்ந்து கொண்டு இருந்தது. இன்று வருவேன் என்று சொல்லிப் போகவில்லை தான். ஆனால் இப்படி வார்த்தைகளைக் கூட அவளுக்குத் தராமல் வதைக்க மாட்டான்.

அழைத்த நிமிசம் எடுத்திருப்பானே, என்னானது அவனுக்கு..? எப்போது அழைத்தாலும், தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றே ஓயாமல் சொன்னது.

முதல் இரண்டு நாள்களாய்  ஓரளவு நிலைப்பட்டவளால், நாளாக ஆக இயங்க முடியாமல் போனது உடலும் உயிரும். காலை ஒலிபரப்பிலேயே அவளின் பரிதவிப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

‘’ ஏன் மேடம் உடம்பு சரியில்லையா..? உங்க வாய்ஸ்ல ஜோர்ஸே இல்லை’’ என்று வழக்கமான காலர் கேட்கும் அளவிற்கு அவளின் குரலில் அழுத்தம் வழிந்தது.

   ஒவ்வொரு பாட்டுக்கும் இடையே இருந்த இடைவெளியில், வேகமாய் வந்து அலைபேசியை தட்டித் தேய்த்து பார்த்தவளை ஆப்ரேட்டர் பரிதாபமாகப் பார்த்தான்.

 ஒவ்வொரு முறையும் புதிதாய் கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தது. கட்டை விரலை உயர்த்தி சியர் அப்’ செய்தவனைப் பார்த்து தலையசைத்து சின்னதாய் சிரித்தாலும். உள்ளுக்குள் எதுவோ உடைந்து கொண்டு இருந்தது.

ஒரு பிரிவிற்கு இத்தனை வலிப்பவள் அல்ல அவள். ஆனால் எதுவோ இல்லை அங்கே.

நிகழ்ச்சி முடித்து சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். இன்றும் விளையாட்டு காட்டிய குயில், மறைந்து நின்று கூவியது. 

செல்லை எடுத்து, தள்ளித் தள்ளி புகைப்படங்களை ஆய்ந்து கொண்டே இருந்தாள். உள்ளே சிரித்துக் கொண்டும், இவளை ரசித்துக் கொண்டும், நெருங்கியும்,விலகியும் எண்ணற்ற பரிமாணங்களில் மாலி இருந்தான். புகைப்படத்தில் உறைந்து கிடந்த புன்னகையைப் பார்க்க மனசு ஏனோ நின்று துடித்தது.

‘’ சிந்தூர்…’’ ஒரு தடவையாவது அவன் குரலில் கேட்டு விட மாட்டோமா, என்ற ஓங்காரம் மனசிற்குள் வந்து மோத, வேகமாய் தலையை பிடித்துக் கொண்டாள்.

ஏன் இத்தனை பரிதவிப்பு..? இதற்கு முன் எத்தனை முறை சோளவந்தான் சென்றிருக்கிறான்.. அப்போதெல்லாம் வராத வலி, இப்போது முள்ளை விழுங்கியது போல் இருக்கிறதே…

மறுபடி மறுபடி  அழைத்து ஏமாந்து கொண்டிருந்தாள்.

                     ❤️

குந்தலா அந்த கண்ணாடி தடுப்பறைக்குள் நின்ற நிமிசம், டாக்டர் மாதூர் தூரத்தில் இருந்து கையசைத்தபடி வந்து வெளியில் நின்றிருந்தார்.

இருவரும் முழுக்க தங்களை கவச உடையினால், மூடி இருந்தார்கள். கணகள் மட்டும் சின்ன நைலான் வலைக்கு பின்னாக இருந்தது. 

நான்கு அடுக்கு பாதுகாப்பில் இருந்தது அறை. ஒரு இணுக்களவு பாக்டீரியா துகள்கள் கூட உள்ளே புகுந்து விடாமல் அறை முழுத் துப்புரவில் இருந்தது.

கண்ணாடி கூண்டு போன்ற படுக்கையைச் சுற்றி சுவாசிக்க உபகரணங்கள் பொருத்தப்பட்டு இருக்க, முதுகைச் சுற்றி நார் நாராய் கருவிகள் இணைக்கப்பட்டு, கிட்டத்தட்ட சிலந்தி வலையைப் போல் பின்னப்பட்டு இருந்தது,

சலனமேயில்லை உடலில். தலை முழுக்க மழிக்கப்பட்டு இருந்தது. கன்னங்கள் ஓட்டி, கண்கள் கருவளையமிட்டு, விபத்தையும், ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சையையும் சந்தித்த உடம்பென்று அப்பட்டமாய்த் தெரிந்தது.

 எக்ஸ்மோ உபயத்தால் இதயம் இத்தனை சிக்கல்களுக்கு நடுவேயும் துடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. இப்போது பொருத்திய மூளைக்கு, தண்டுவடம் ஒத்துப்போக வேண்டும். உடம்பில் இருப்பதிலேயே பெரும் அகந்தை பிடித்த பாகம் முதுகெலும்பு,

 அத்தனை எளிதாய் அது யாரையும் அங்கீகரிப்பதில்லை. நிமிர்ந்து நெஞ்சுயர்த்தி நிற்கும் போதே அதன் வலிமையும், வலுவும் நன்றாகவே தெரியும்.

 ‘’ டாக்டர் சகுந்தலா…’’ மெல்லிய குரலில் அழைத்தார் மாஸ்க்கின் வழி.

கலங்கிய கண்களோடு படுக்கையில் கிடந்தவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

‘ யார் இவன்..? எத்தனை பொறுப்புகளை சுமப்பவனோ..? காதல் மனைவியின் கணவனோ, அல்லது காதலிக்கு காதலனோ, மூத்த பிள்ளையோ, திருமணம் ஆனவனோ… இவனைத் தேடி அவன் குடும்பம் என்ன தவிப்பு தவிக்கிறதோ…’ 

குற்றவுணர்வு மேவ, அஜெய்யின் ஆஜானுபாகுவான தோற்றமும் மனதில் வந்து மோத, கண்கள் கரைந்து மனசை நனைத்தது.

மெல்ல அவள் புறங்கையைத் தொட்டு சமாதானம் செய்தார் டாக்டர் மாதூர்.

 ‘’ சகுந்தலா, எமோசனல் ஆகவேண்டாம்…’’ என்றார் சன்னமான குரலில்.

‘’ வலிக்குது டாக்டர். நான் கல்லை விழுங்கிட்டு கடமைக்காக நின்னுட்டு இருக்கேன். வீட்டுக்கே என்னால போக முடியல. கத்தியையும் ரத்தத்தையும், நரம்பையும், நாளங்களையும் அனாயாசமாய் கையாளுகிற என்னால, அந்த சின்னக் குழந்தையோட பார்வையைக் கையாள முடியல. நான் முழுக்க முழுக்க நொறுங்கிப் போயிடறேன். 

நான் வந்ததும் ஓடி வந்து என் முன்னாடி நின்னு, என் பின்னாடி அவங்க அப்பா வர்றானானு தேடிட்டு, கையை விரிச்சு, அப்பா எங்கே அத்தைன்னு கேட்கும் போது, நான் பொடிப் பொடியாய் நொறுங்கிப் போயிடறேன்.’’

மாஸ்கை கழட்டிவிட்டு முகம் மூடி விசும்பியவளை பரிதாபமாகப் பார்த்தார். ஆயிரம் கடமைகளை வென்று விடுகிறது பேரன்பு.

அவளே நிலை பெறட்டும் என்று அமைதியாக காத்திருந்தார். உணர்வுகளை தடுக்க தடுக்க அது கரை உடைக்கும். விட்டு விட வேண்டும்,, அதன் இஷ்டத்துக்கு கொட்டி தீர்க்கட்டும்.

முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, மாதூரிடம் மன்னிப்பு வேண்டி விட்டு. மாஸ்க்கை மாட்டிக் கொண்டு கைகளை சானிடைசர் செய்துவிட்டு அறைக்குள் நடந்தாள்.

ஒருக்களித்து படுத்திருந்தவன் முதுகை மெல்ல பொருந்தியிருந்த கருவிகளின் மானிட்டரை சோதித்து சரிபார்க்க ஆரம்பித்தாள். மெல்லிய வெளிச்சம் மூடியிருந்த மாஸ்க்கின் வழியே கண்களில் தெறித்துச் சிதறியது.

 

"...வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை

வந்தவர் யாருமே நிலைத்ததில்லை

தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை...

தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை...

ஆடி அடங்கும் வாழ்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா…"


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 269
 

வனமாலி -21

ரிசப்சனில் கிடந்த குஷனுக்கு வலிக்குமோ' என்பதுபோல் அமர்ந்திருந்தாள் சிந்தூரி. மெல்லிய நறுமணத்தோடு ஏ.சி. சில்லிட்டுக் கொண்டு இருந்தது.

ரிசப்சனில் அமர்ந்திருந்த பெண் அடிக்கடி கடைக் கண்ணால் சிந்தூரியை மேய்ந்து கொண்டே, யாருடனோ சன்னக் குரலில் வார்த்தையாடிக் கொண்டிருந்தாள். 

‘’ மேடம், மறுபடியும் கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்.’’ என்று சொன்னபோது, லேசான எரிச்சலோடு முறைத்துவிட்டு, மீண்டும் இண்டர்காமை இயக்கி, காதுக்கும் வாய்க்கும் வலிக்காமல் ஏதோ சொன்னாள்.

‘’ மேடம் உங்களை வரச் சொல்றாங்க. ரைட்டுல போய் லெப்ட்டுல திரும்பி போனால், ஃபர்ஸ்ட் ரூம்.’’ என்றுவிட்டு மீண்டும் குனிந்து சன்ன குரலில் பேச ஆரம்பித்திருந்தாள். 

 மாலி இருக்கும்போது இங்கு வந்ததில்லை. வெகு அரிதான சந்தர்ப்பத்தில் வந்து வாசலில் நின்ற நியாபகம் இருக்கிறது. 

’’மாலிக்கிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை மேடம். டெல்லியில இருந்த பார்ட்டிகளுக்கு வந்து சேர்ந்திட்டதா தகவல் மட்டும் தந்திருக்கான். அதுக்கு பிறகு அவனுடைய மொபைல் என்னாச்சுன்னு தெரியல. ரீச் ஆகவே இல்லை. டவரும் லோகேட் ஆகல. எப்படியோ அந்த ஹோட்டல் ரூமுக்கு போய் நாங்க கொடுத்திருந்த ஃபைல்சை கலெக்ட் பண்ணிட்டு பார்ட்டிங்க போயாச்சு தக்க எவிடென்சோட.

பேச போன டீலிங்கும் அந்தரத்துல நிற்குது. காண்ட்ரெக்ட் கையை விட்டுப் போயிடுச்சு. இரண்டு நாள் கடும் கோபத்துல இருந்தேன். ஆனால் நாளாக ஆக, மாலி அப்படி இப்படி போகக் கூடிய ஆளில்லையே, என்னாச்சோ’னு கவலையா இருக்கு. காலையில அவங்கம்மா கால் பண்ணி அவரைப் பத்தி விசாரிச்சாங்க. நான் ஒரு வழியா சொல்லி சமாளிச்சேன்.’’

நம்பிக்கை,கடலில் விழுந்த துளிபோல் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்க் கொண்டே இருந்தது.

கண்ணீரே பிடிக்காதவள், கண்ட இடத்தில் எல்லாம் கண்ணீராய் பொழிந்து கொண்டு இருந்தாள். சட்டென்று சரம் தொடுத்து கன்னத்தில் உருண்டோடிய முத்துக்களைப் பார்த்து அந்த நபர் தர்மசங்கடமாய் பார்க்க, கைக்குட்டையை எடுத்து ஈரம் ஒற்றினாள்.

 ‘’ ஐ’யம் சாரி…’’ 

‘’ நான் எங்க ஆட்களை அனுப்பி அங்கே ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கத் தான் சொல்லி இருக்கேன். பார்ப்போம் என்ன தகவல் வருதுன்னு. இங்கேயும் கம்ப்ளைன்ட் தந்திருக்கோம்.’’

‘’எனக்குத் தகவல் வேண்டாம் சார். மாலி தான் வேணும்…’’ என்றாள் அப்பாவியாக. 

இக்கட்டுகள் தான் மனிதர்களை எத்தனை இக்கட்டில் நிறுத்தி விடுகிறது. இதயம் என்ற சின்ன சதைத் துண்டுதான், மனிதர்களை எத்தனை நேசித்துத் தொலைக்கிறது.

வந்தபோது இருந்த சிறு பறவையின் சிறகசைப்பு நம்பிக்கையும் மொத்தமாக தூர்த்துப் போயிருக்க, பாதி உயிர் அங்கேயே பேச்சற்று போயிருந்தது. ரிசப்சனுக்கு வந்தவள் ஒரு நொடி நின்று அந்தப் பெண்ணையே பார்க்க அனிட்சையாக நிமிர்ந்து பார்த்தாள்.

‘’சொல்லுங்க மேடம்…’’

‘’ மாலியோட சீட் எது…’’ ஈரத்தில் அந்தக்குரல் இளைத்துப் போய் இருந்தது. கண்கள் முழுக்க, கண்ணீரின் பிசுபிசுப்பு மட்டும். இமை இரப்பைகள் ஈரத்தால் ஓட்டிக் கிடந்தது.

அப்பெண் கைநீட்டிக் காட்ட, கூர்ந்து பார்த்தாள். சின்ன கேபின் முதலாவதாக இருந்தது. ஒழுங்காய் அடுக்கிவைக்கப் பட்டு இருந்த பொருட்கள் அவன் சுபாவத்தை சொன்னது. எப்போதும் அந்த ராட்சஷன் இப்படித்தான். எல்லாவற்றையும் சரியாக வைப்பான். எல்லாவற்றிலும் நேர்த்தியை எதிர்பார்ப்பான்.

 ‘’ மேடம், நான் கொஞ்சம் அந்த சீட்டுல உட்கார்ந்துட்டு போகவா..?’’ இதற்குமேல் இளகினால் அந்தக்குரல் ஒழுகியே விடும் என்பதால், இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள். கொஞ்சம் தயக்கமாய் அப்பெண் தலையசைக்க, வேகமாய்ச் சென்று அந்த இருக்கையின் அருகில் நின்றாள்.

கண்ணாடித் தடுப்பின் வழியே அப்பெண் இவளை ஆராய்ந்து கொண்டே இருந்தாள். சின்ன அறை தடுப்புத்தான். வாட்டர் பாட்டிலில் அவன் குடித்த நீரின் மிச்சம் இருந்தது… அவனும் மிச்சமாகி இருக்கிறான் எங்கோ என்று யார் அறிவார்.

வேகமாய் மூடியைத் திருகி நீரைக் குடித்து முடித்தாள். மெல்லிய திணறலாக இருந்தது. ஏதோ அவனே தன்னுள் இரண்டற கலந்தது போல். எதையும் தொடவே இல்லை. இப்படி அமர அனுமதித்ததே பெரிய விசயம். கண்களை மூடிக் கொண்டாள். உணர்வுகள் அலைபாய்ந்து அலைபாய்ந்து அடங்கியது.

முன்னே இருந்த தாளில் பேனாவை கிறுக்கி பார்த்திருப்பான் போல, சிந்தூரி… என்று கோணல் மாணலாய்…’

’அய்யோ… மாலி எங்கே போய்த் தொலைஞ்சே… நான் ஏன் உன் நினைவுகளை எடுத்து எடுத்து சேகரிச்சு வைக்கிறேன்..? ஏன் எனக்கு என்ன ஆச்சு..? நீ வருவதானே..? என் மனசு என்ன சொல்லுது என்கிட்ட..? பயமா இருக்கு மாலி..? என்னை பரிதவிக்க விடாதயேன்…’ ஒரு கேவல் வெடிக்க வேகமாய் இருக்கையை விட்டு வெளியில் வந்தவளை அப்பெண் பரிதாபமாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.  

 ‘’ சிஸ்டர்… ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா..?’’ அந்த வேதனையான கண்களைப் பார்த்தால், எப்படி மறுக்கத் தோன்றும்.

‘’மாலியோட பேனாவும், அவர் எழுதின வேஸ்ட் பேப்பர் ஒண்ணும் இருக்கு. நான் எடுத்துக்கவா..?’’ எதற்கு இதையெல்லாம் சேகரிக்கிறோம் என்று அவளுக்கே பயமாக இருந்தது.‘’ திட்டுவாங்க மேடம்..’’ என்றாள் அப்பெண் தயக்கமாக.

‘’ வேஸ்ட் பேப்பர் தான் மேடம். என் பேரை எழுதி பார்த்திருக்காரு. மனசு என்னவோ செய்யுது. மாலி வந்திடுவார் தானே…’’ ஆருடம் கேட்ட போது அந்தப் பெண்ணுக்கே ஐயோ’ என்று இருந்திருக்க வேண்டும். வேகமாக உடன் வந்து பேனாவையும் பேப்பரையும் எடுத்துத் தந்தாள். அவள் இருந்த மனநிலைக்கு வேறு எது கேட்டிருந்தாலும் தந்திருப்பாள் போல் நின்றாள்.

காதலித்தவளாய் இருக்கும்… அல்லது காதலித்து கொண்டிருப்பவளாய் இருக்கும். 

மெல்ல வெளியில் வந்தாள். வானம் கறுத்துக் கொண்டு இருந்தது. இலக்கில்லாத பயணம். முன்னெல்லாம் வானம் சிணுங்கத் தொடங்கியதும், மனம் அவனை நோக்கி இணங்கத் தொடங்கி விடும். 

எல்லாவற்றுக்கும் முன்னே அவனே அழைத்து விடுவான்.

‘’ மழை வர்ற மாதிரி இருக்கு சிந்தூர், ரூமுக்கு போயிட்டியா..?’’ அந்தக் குரலில் அத்தனை பிரேமை வழியும். அவளைப் பொறுத்தவரை இந்த அன்புதான் காதல். இப்போது அந்த அன்பென்ற காதலற்று, மனம் பேதமுற்று அலைகிறாள்.

பீச்சிற்கு சென்று மணிக்கணக்காய் தனித்து அமர்ந்திருந்தாள். சுற்றிலும் இருந்த மனிதர்களில் தனக்கான எதையோ தேடித் தவித்துக் கொண்டு,, சீறிய அலையில் கூட இன்று சீற்றத்துக்கு பதில் மாற்றமாய் ஏதோவொன்று இருந்தது. 

அவளின் வேதனைக்கு ஆறுதல் சொல்லும் மறுமொழியைப் போல, ஒரு அடக்கமான அழுத்தம் தெரிந்தது.     

எதையும் ரசிக்க முடியவில்லை, இவளை அணு அணுவாய் ரசித்துக் கொண்டாடியவனை கடந்து தவித்ததால். அவன் மூச்சு சலனத்தை காற்றில் பருக முடியாத பெரும் வெறுமை அவளை விரட்டிக் கொண்டிருக்க, அலைபேசி கிணுங்கியது.

ரியாஸ் தான்..! வேகமாக உயிர்பித்தாள்.

‘’சிந்து, எங்கே இருக்கே..?’’

‘’ஏதாவது தகவல் இருக்கா ரியாஸ்…’’ கேள்விக்கு முந்திக்கொண்டு கேள்வியாகவே கேட்டாள்.

இருமுனையும் தொற்றிக் கொண்டிருந்த மெளனம், இருவரிடமே மற்றவர்களை சந்தோசிக்க வைக்கும் வார்த்தை இல்லை என்பது புலனானது.

மிடறு விழுங்கினாள்.

‘’ ரியாஸ்…’’ என்றாள் கண்ணீர் குரலோடு.

‘’கவலை படாதடா. அவன் உன்னை விட்டுட்டு எங்கேயும் போயிட மாட்டான். சிந்தூர்னா அவனுக்கு அத்தனை இஷ்டம். உயிர்நாடி. தாயன்போட காதலை காட்ட முடியும்னா அது அவன் தான். அப்படி இருக்க, உன்னை விட்டுட்டு தனியா எங்கேமா போயிடப் போறான்..? வந்து நம்ம ரெண்டு பேரையும் கேலி பண்ணி சிரிப்பான் பாரு.’’ 

‘’ ம்…’’ புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு செயற்கையாய் சிரித்தாள். இயற்கை சிரிப்பை நிறுத்தி அழத் தொடங்கி இருந்தது.

                  ❤️

இமை விலக்காமல் அப்படியே பார்த்தபடி அமர்ந்திருந்தார் சகுந்தலா. சின்ன சலனத்துக்கு கூட அவர் கண்கள் தீட்டிக் கொண்டு இருந்தது                                                                                                                 எப்படியாவது தன் முன்னே இருப்பவனின் முகத்தில் ஒரு கீற்று அசைவைப் பார்த்துவிட்டால் போதும், என்பது போல் இருந்தது. தாடை விழுந்து போய், கன்னத்தில் மைபோல் தாடி அடர்ந்து ஒரு பரிதாபமான தோற்றத்தில் இன்னும் சுயநினைவு பீடித்துக் கொள்ளாமல் படுத்திருந்தான் உடலாய் மாலி. 

பதிமூன்று முழு நாள்கள் முடிந்து போயிருந்தது. ஒரு உயிரை இன்னொரு உடலுக்குள் மீட்டெடுக்கும் பிரம்ம முயற்சி என்றுகூட சொல்லலாம். அவரவர் கோட்பாடுகளுக்கு தக்கவாறு, அந்த முயற்சிக்கான அடையாளம் மாறிப் போகலாம். சிலுவை தாங்கியோ, ஏகத்துவம் பேசியோ, அந்த பேருண்மைக்கு வேறு நிறம் பூசலாம்.

ஆனால் அது எத்தகைய நிகழ்வு என்பது அதை செய்பவருக்கும், அதை செப்பனிடுபவர்களுக்கும் மட்டுமே தெரியும். முதுகுத்தண்டின் முள்ளெலும்போடு மூளையை பேச வைத்து, அவற்றுக்குள் மணம் முடித்து வைப்பதென்ன சின்ன நிகழ்வா..? இதற்கும், அதற்கும் ஒத்துப் போய், அந்த புது மூளையின் கட்டளைக்கு உடம்பின் மற்ற உறுப்புகள் ஒத்துழைத்து, கீழ் படிந்து… இதுவரைக்கும் ஆராய்ச்சியோடு நின்ற நிலை இது. இருப்பத்தைந்து ஆண்டுகளாய் வல்லுனர்களின் முயற்சியில் குரங்கோடு நின்ற நிலை இது.

அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய வெற்றிக்கு நன்றி சொல்வதா.., அல்லது இரு குடும்பங்களின் வேதனைக்கு இது எந்தளவு தீர்வு என்று நினைத்து அமைதியுறுவதா..? பண்டக மாற்று போல், இந்த பிண்டக மாற்று எப்படி உணர்வுகளை சரியாக கடத்தும்..?

மெல்லிய மூச்சு சீராக நெஞ்சுக் கூட்டை தாண்டி வந்து கொண்டு இருந்தது. பக்கத்தில் வந்து மெல்ல அவன் விரல்களை தொட்டுப் பார்த்தாள். தொடு உணர்வில் கைகள், டெசிபல் அசைந்தது. இந்த மாற்றம் மூன்று நாள்களாகவே தொடர்கிறது. 

மருத்துவ உலகில் அது பெரிய வெற்றிதான். உள்ளங்காலில் மெல்ல விரலால் பட்டும் படாமலும் கோலமிட்டாள். பாதத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல அது முன்னே நகர்ந்தது. கணுக்காலை தொட்டது. அழுத்தம் கூட்ட கூட்ட, மூடியிருந்த மெத்தை இமைக்கு மேலே, ஒரு கனமான அசைவு, சுருங்கி நிமிர்ந்தது.உணர்வு வருகிறது…

சகுந்தலாவின் உள்ளமெல்லாம் வெல்லமாக இனித்தது. ஏதோ ஒரு விதத்தில் அஜெய்யுடைய மறுபதிப்பு… இல்லையென்றால் மறுபிறப்பு. கண்கள் தன்னால் கண்ணீர் அணை திறந்து கொண்டது.

இதென்னடா பாழாய்ப் போன கண்ணீர். மகிழ்ச்சிக்கும், வருத்தத்திற்கும் ஒரே சூட்டில். புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர, மாதூர் முகமெல்லாம் வழிந்து பிரவாகமான புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தார்.

‘’டா..க்..ட..ர்…’’ என்றாள் குரல் உடைந்து, முகம் முழுக்க மகிழ்வை அப்பிக் கொண்டு.

‘’சொல்லுங்க டாக்டர்…’' என்றார் இனிப்பான சிரிப்போடு.

‘’ சொல்லத் தெரியல டாக்டர். இதை உணரணும். இந்த உலகத்துல இந்த உணர்வு எனக்குத்தான் முதல்ல ஏற்பட்டு இருக்கிறது…’’

சுரீரென நிமிர்ந்து பார்த்தார். எத்தனை பேருண்மையான வார்த்தைகள். இந்த உலகத்தில் யாருக்குமே ஏற்பட்டு இருக்காத மகிழ்வு. மகான்களும், அவதாரங்களும், இறை நேசர்களும், தூதர்களும் என்று யாருக்குமே தராத மறுவாய்ப்பு… யாருடைய குடும்பத்திற்குமே கிடைக்காத பெரும் தீர்வு…. 

அவளுக்கு மட்டுமே, இந்த அண்டசராசரத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த வரம். கடவுளை நிந்தித்த மனசு இந்த நிமிசம். கிஞ்சித்து அதற்கு வருந்திக் கொண்டு இருந்தது.

பேருண்மைகளின் பின்னே ஒளிந்து கிடக்கும் கண்ணீர், முத்துக்களைப் போல விலை மதிப்பே இல்லாதது.

முகத்தை மூடிக் கொண்டு கேவத் தொடங்கி இருந்தாள்.அந்த அழுகை ஆனந்தமா, தெரியவில்லை. ஆனால் எல்லை மீறிய ஆசுவாசம்.

‘’நம்ம ஆராய்ச்சி கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி நகர்ந்துட்டு இருக்கு டாக்டர் சகுந்தலா. இந்த கணம் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..? நான் பிறந்ததின் பயனை அடைஞ்சிட்டேன். கடவுளை ஜெயிச்சுட்டேன். எஸ்…. நானும் இப்போ படைப்பாளி…’’ பூனைக் கண்களில் ஒரு ஆணவம் மிளிர்ந்தது.

 

''...இறைவன் இருக்கின்றானா 

மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே

எங்கே வாழ்கிறான்

எங்கே வாழ்கிறான்

நான் ஆத்திகனானேன்

அவன் அகப்படவில்லை

நான் நாத்திகனானேன்

அவன் பயப்படவில்லை…''

 

 

வனமாலி - 22

பால்கனி ப்ரென்ச் டோரில் சாய்ந்து, சலனம் இல்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தவள் அருகில் வந்து நின்று அவள் முகத்தையே பார்த்தார் சகுந்தலா.

கொஞ்சமாய் நிலாவின் மிச்சத்தை, யாரோ உதிர்த்து போட்டு போய் இருந்தார்கள். அஷ்டமி வானம். 

‘’ரஞ்சி…’’ காதுகளுக்குள் அவன் குரல் கேட்டது. கண்களை இழுத்து மூடிக் கொண்டாள். நினைவுகளை வெல்வது அத்தனை சுலபமல்ல.

எப்போதும் எல்லோருக்கும் அவள் அபரா தான். அவனுக்கு மட்டுமே அந்த பிரத்யேக அழைப்பு. சிலநேரம் கோபமாய் இருந்தால், இஞ்சி திண்ண ரஞ்சி என்பான். 

காதுகளை பொத்திக் கொண்டாள் அழுகையை கைகொள்ள, மெல்ல அவள் அருகில் வந்து தோளோடு சேர்த்துக் கொண்டார் சகுந்தலா.

‘’அழாதே, அபரா. இன்னுமா கண்ணீர் மிச்சம் இருக்கு உன்கிட்ட…’’

‘’இன்னும் வாழ்க்கை மிச்சம் இருக்கே அக்கா… இன்னும் நினைவுகள் இருக்கே… இன்னும் இந்த இதயம் துடிச்சிட்டு இருக்கே…’’ தலையில் அடித்துக் கொள்ள, அவள் வெற்று முகத்தையே வெறுமை ஊற பார்த்து கொண்டு இருந்தார் சகுந்தலா.

அஜெய் எத்தனையோ முறை சொல்லிய போதும், ஒருமுறை கூட அக்கா என்றோ, அண்ணி என்றோ அழைத்தே பழகாதவள், இன்று மூச்சுக்கு நாலுமுறை சொல்கிறாள். முடிவறுந்து போகும் நடுக்கமா..? தெரியவில்லை.

‘’அவன் எங்கேயும் போகல அபரா, முதல்ல இதை நம்பு.’’ சகுந்தலா அழுத்தமாகச் சொல்ல, ஒரு கசந்த புன்னகை அவர் காலடியில் வந்து விழுந்தது.

‘’நினைவுகளை சுமக்கிறது நித்திலம் ஆகாது அக்கா. எனக்கு அவர் என்னன்னு இந்த நிமிசம் தான் புரியுது. இத்தனையா அவரை காதலிக்கிறேன்னு இப்போ வெட்கமா வேற இருக்கு. இதை அவர்கிட்ட ஓடிப்போய்ச் சொல்ல, மனசு தவிக்குது. இந்த அன்பை நான் அவர்கிட்ட முழுசா காட்டினேனா, அதை அவன் எத்தனை புரிஞ்சுகிட்டான்… தெரியலியேக்கா.. நான் கேட்காமப் போயிட்டனே…’’ கைகளை விரித்து சொன்னபோது, உணர்வுகள் எல்லாம் ஓங்காரம் இட்டது, சகுந்தலாவிற்கு.

அவளிடம் சொல்லி விடலாமா… என்று நினைத்த மனதை கடிவாளம் போட்டு நிறுத்தி வைத்திருந்தார். அலைபேசி சோபையாய் கிணுங்க, ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து புருவம் நெறித்தாள். 

இன்னும் நினைவு களையாமல் அமர்ந்திருப்பவளை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து ஹாலுக்கு வர, மதுரிமா ஓடிவந்து கால்களை கட்டிக் கொண்டது.

அள்ளி எடுத்து தோளில் சரித்துக் கொண்டே, அலைபேசியில் கவனம் புதைத்தாள். குழந்தை ஒரு தோளில் சாய்ந்து கொண்டது. இளைத்துப் போய்விட்டது. கண்ணில் சதா தேங்கி இருந்த ஏக்கம், கீழ் இறங்கி அந்த சின்ன இதயத்தின் தேடலாகிப் போனது. 

இப்போதெல்லாம் அப்பா எங்கே என்று யாரிடமும் கேட்பதில்லை. அவன் கார் அருகில் வந்து நின்று விரக்தியாய் ஒரு பார்வை, கார் கதவை தட்டி, ‘ பப்பா… வா…’ என்ற அழைப்பு., அவ்வளவுதான்..! அவன் வருகின்ற நேரத்துக்கு சரியாக வெளியில் வந்து நின்று பார்க்கின்ற ஏக்க பார்வையை மட்டும் முன்பே கண்டிருந்தால், இரக்கம் கொண்டு எமன் விட்டுவிட்டு சென்றிருப்பான்.

‘’சொல்லுங்க இன்ஸ்பெக்டர்…’’

‘’ மேடம், இப்போ அவர் எப்படி இருக்கார்..? நீங்க ஆபரேசன் பண்ண அவருக்கு நினைவுகள் திரும்பிடுச்சா..? ஏன்னா இப்போ சில தகவல்கள் கிடைச்சிருக்கு அதுபற்றி உங்ககிட்ட பேசணும் நீங்க வர முடியுமா..?’’ கேட்டபோது மறுப்பு சொல்லாமல் வருவதாக சொல்லி விட்டு, இணைப்பை துண்டித்தாள்.

‘’ மதுரி…’’

 ‘’ ம்…’’

‘’ஏன்டாமா இப்படி அழுக்கு டிரஸ் போட்டுட்டு இருக்கே..? எத்தனை புது டிரெஸ் கபோர்டு பூரா இருக்கு. வா அத்தை எடுத்து போட்டு விடறேன்.’’ மூக்கு நுனி துடைத்து, குழந்தையை இறக்கி விட, அது மீண்டும் சோபாவில் சென்று சரிந்து கொண்டது.

அத்தனை குழந்தைப் பருவமும் வழித்துக் கொண்டு போனது போல் ஒரு தோற்றம். ஒரு சிறு மொட்டால் இத்தனை அவஸ்தையை வெளிக்காட்ட முடியுமா..? அந்தக் கண்களில் ஏனிந்த ஏக்கம்..!

 ‘’ மதுரி, வாடா..! ‘’

‘’ புது டிரஸ் நா நா அத்தை…’’

‘’ ஏன்டாமா…’’

’’அப்பா இல்லையே புதுசு வாங்கித்தர…’’ இந்த ஒற்றை வார்த்தைக்கு இந்த உலகம், இரண்டாகிப் போகாதா..? அத்தனை சிந்தித்து விட்டதா இந்த பிஞ்சு மனசு…

சகுந்தலாவுக்கு கதறி அழவேண்டும் போல் இருந்தது. மெல்ல குழந்தையை அள்ளி தன் நெஞ்சுக்குள் பொதித்துக் கொண்டாள். அதற்குள் அழைப்பு வந்திருந்த நினைப்பு வர, எழுந்து கொண்டவள், அம்மாவை அழைத்து, பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.

                 ❤️

'புலிஸ் ஸ்டேசன்’ என்று அந்தரத்தில் தொக்கி நின்றது ஹிந்தி எழுத்துக்கள். இவளுக்கு முன்னமே அங்கே, மாதூர் வந்திருந்தார். காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றவர், பரஸ்பரம் புன்னகையை பரிமாறிக் கொண்டார்கள்.

‘’ நீங்க தான் மிஸ்டர் அஜெய் சிஸ்டரா..?’’

‘’ எஸ், இன்ஸ்பெக்டர்.’’

‘’ அந்த மற்றொரு நபர் பத்தி ஏதாவது தகவல் தெரியுமா..?’’

மாதூர் தோள்களை குலுக்கிக் கொண்டார்.

‘’இல்லை இன்ஸ்பெக்டர். லீகலா எல்லா ஆக்டிவிட்டிசையும், ரெகார்ட் பண்ணி இருக்கோம். அப்கோர்ஸ் இது குற்றம்தான். ஆனாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில இந்த அரிய முயற்சிக்கு கட்டாயமா அந்த நபரை ஈடுபடுத்தியே ஆகவேண்டியது தவிர்க்க முடியாதது ஆயிடுச்சு. இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி அடைஞ்சா, எதிர்காலத்துல விபத்து மரணங்களில் பாதிக்கு மேலே தற்காக்கப்படும். இது எவ்வளவு பெரிய வரப் பிரசாதம்.’’

‘’ இருக்கலாம் மிஸ்டர் மாதூர். ஆனால் சம்பந்தப்பட்டவங்க தரப்பிலே இதை பிரச்சனை ஆக்கினால்..?’’

‘’ஆகாதுன்னு நம்புவோம் இந்த ஆராய்ச்சிக்கு உலக மருத்துவ கழகம் மட்டுமில்ல, இரண்டு அரசுகளுடைய பரிபூரண ஆதரவு இருக்கு.’’

‘‘ அப்போ இது ஒரு வகையில அதிகார துஷ்பிரயோகமா..? ’’ என்றார் சிறிய நகைப்போடு. மாதூர் தோள்களை குலுக்கிக் கொண்டார்.

‘’ எல்லாமே அவரவர் பார்வைக்கு உட்பட்டது. நல்லதை நோக்கி நகரும் போது, ஏற்படுகிற அர்த்தமற்ற சந்தேகங்கள் அல்லது சர்ச்சைகள் ஒரு அரும்பெரும் ஆராய்ச்சிக்கு தடங்கலா அமையும். அந்த இன்னொரு நபரை நாங்கள் டோனர்னு தான் அழைக்கிறோம். அவர் தன் உடலை இந்த பெரும் ஆராய்ச்சிக்கு வித்தா தந்திருக்காரு… விதையா தன்னையே தந்திருக்காரு. அவருடைய கடைசி நிமிடங்கள் குறித்த அத்தனை மருத்துவக் குழுக்களின் அறிக்கையும், வீடியோ பதிவும் இருக்கு. எல்லாத்துக்கும் மேலே அவருடைய செயல் இழந்த மூளை எடுத்தெறியப்படாம பாதுகாக்கப் பட்டுத்தான் இருக்கு.

அது ஒண்ணு போதும், அது மூளைச்சாவு அடைந்ததை நிரூபிக்க. இதுக்கு மேலயும் இதை அதிகார துஷ்பிரயோகம் செய்த கோணத்தில் நீங்க நகர்த்தினால் எனக்கு எந்த விளக்கமும் இல்லை கொடுக்கறதுக்கு.’’ 

மாதூரின் வார்த்தைகள் கேட்டு, மெல்ல தலையசைத்தார் காவல்துறை அதிகாரி.

‘’இப்போ எங்களை இங்கே அழைத்ததிற்கான காரணம்..?’’

‘’இருக்கு டாக்டர்.’’ என்றவர் டேபிளின் டிராவைத் திறந்து ஜிப்லாக் கவர் ஒன்றை எடுத்து மேலே வைத்தார். முகம் சிதைந்த அலைபேசி ஒன்று இருந்தது. அதன் கண்ணாடி முகமெல்லாம் நொறுங்கி கிடந்தது.

‘’இந்த ஃபோன்..?’’ மாதூர் கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தார்.

‘’எஸ்… இது அந்த டோனருடையதுன்னு தான் நினைக்கிறோம். இது விபத்து நடந்த இடத்துக்கு வெகு அருகில் இருந்த, டெல்லி மாநகராட்சி போக்குவரத்து தடுப்பு வளையத்துக்கு அருகில் இருந்த ஒரு பூச்செடிகளுக்கு மத்தியில் கிடைச்சிருக்கு. 

அலைபேசி சிதைந்து போனாலும், உள்ளே இருக்க சிம் கார்டு நல்ல நிலையிலே இருக்கு. இப்போ இந்த சிம்மை உயிர்பிச்சா நிச்சயம் சம்பந்தப்பட்டவங்க தரப்பின் தேடல் அழைப்பு வரலாம்.’’

மாதூரும், சகுந்தலாவும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டார்கள் ஒருமுறை.

‘’நான் இப்போ உங்களை அழைச்சதிற்கு காரணம், உங்களுடைய சிகிச்சை எந்தளவிற்கு நகர்ந்திருக்குன்னு ஒரு அறிக்கை வேணும். இத்தகைய உயரிய மேன்மையான விசயம் நடக்கிறதை எப்படி மீடியாவில இருந்து காப்பாத்தி வச்சிருக்கீங்க..? ’’ என்றார் விழிகளை அகல விரித்து ஆச்சர்யம் காட்டிக் கொண்டு.

‘’பெரிய விசயமில்லை இன்ஸ்பெக்டர். இது மாதிரியான பல விசயங்கள் மீடியாக்கள் காதுகளுக்கு போகாமல் நடத்தப்படுவது இயல்புதான். கின்னஸ் சாதனை நடத்தப்பட்ட பிறகுதான் அதுபத்தின செய்தி, மீடியாக்கள்ல வரும். நீங்க அதை கவனிச்சு இருப்பீங்க.

எத்தனை பெரிய சாதனையாக இருந்தாலும் அது நிகழ்ந்த பிறகே அதனுடைய பிரமாண்டம் விவரிக்கப்படுது. என்னுடைய விளக்கம் புரியும்னு நினைக்கிறேன். இது மருத்துவத் துறையைச் சாந்தவர்கள் தவிர இன்னும் வெளியே எட்டல.

இப்போ எங்களுடைய முயற்சிக்கு வெகு நல்ல பலன் கிடைச்சிருக்கு. இன்னும் அதிகபட்சம் பதினைந்து நாட்கள் ஆகலாம் டோனர் அஜெய் கண்விழிக்க. அந்த ஷணத்தை நுகர அத்தனை ஆவலா இருக்கேன்.

இன்னும் நான்கைந்து நாளைக்கு பிறகு நீங்க உங்களுடைய சட்ட நடவடிக்கைகளை தொடங்கலாம். இங்கே எந்த சட்ட விரோதமான நிகழ்வும் நடக்கல. ஒரு பேருண்மையான நிகழ்வே நடந்திருக்கு.’’ சொல்லியபடி எழுந்து கொண்டார், டாக்டர் மாதூர்.

இருவரும் விடைபெற்று வெளியில் வந்தார்கள்.

‘’ என்னாச்சு டாக்டர் சகுந்தலா, பலத்த சிந்தனையிலே இருக்கீங்க..’’ என்றார் அன்பான பாவத்தோடு.

‘’இழப்பு கண்கூட தெரிஞ்ச நம்முடைய மனநிலை ஒருபக்கம் இருக்கட்டும், ஆனால் என்னாச்சுன்னே தெரியாம தவிக்கிற அந்தப் பையனுடைய குடும்பத்தை நினைக்கும் போது ரெம்ப வருத்தமா இருக்கு. கைக்கு எட்டும் தூரத்தில் தகவல்களை தரக்கூடிய நிலையில் இருந்தும், நாம சுயநலமா சிந்திக்கிறோமோனு தோணுது.’’

மெல்லிய வருத்தம் ஒவ்வொரு வார்த்தைகளிலும் சொட்டியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

‘’இதுல இன்னொரு கோணமும் இருக்கு டாக்டர். அவங்களுடைய துக்கத்தை நாம தள்ளிப் போடறோம்னு கூடச் சொல்லலாம் இல்லையா..? டாக்டர் சகுந்தலா, நான் ஒண்ணு சொல்லட்டுமா மருத்துவம்ங்கிறது உடலை அறுக்கிற வேலை மட்டுமில்ல… ஒன்றை அழித்து மற்றொன்றை உருவாக்கும் பேராற்றல் கூட. இங்கே சென்டிமெண்ட்ஸ்க்கு வேலையே இல்லை. உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் தானமா வாங்குவது இயல்பான நடைமுறை தான். சமீபத்தில, பன்றியுடைய இதயத்தை மனிதருக்கு வெற்றிகரமா பொருத்தி இருக்கிறதை பத்தி, படிச்சு இருப்பீங்க. இந்த வெற்றிக்கு பிறகு, மூளை மாற்றும் ரெம்ப இயல்பா நடக்கப் போகுது பாருங்க.

இப்போ அந்த பையனுடைய உறவுகள் இங்கே ரீச் ஆயிட்டா, பெரிய எமோசனலான விசயங்களை நீங்களும் உங்க குடும்பமும் சந்திக்க வேண்டி வரும். அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க.’’

சகுந்தலா தலை அசைத்துக் கொண்டாள். இப்போது அதுமட்டுமே ஒரே வழி. மறுப்புகளும், விருப்புகளும் என்பது இல்லாமலே போய் இருந்தது.

                  ❤️

அலைபேசி அழைத்தது கவனத்தில் ஏறாமல் ஜன்னல் கம்பிகளில் முகம் அலுத்தி இருந்தாள் சிந்தூரி. உருமாற்றம் என்பது எத்தனை இலகுவாய் நடக்கிறது என்பதிற்கு ஒற்றை உதாரணமாக அவளுடைய முகம் இருந்தது.

மொத்த குழப்பத்திற்கும் தான் தான் குத்தகைக்காரி என்பது போல் அமர்ந்திருக்க, எப்போதும் கண்களில் ஈரம் சின்னதாய் சலம்பிக் கொண்டே இருந்தது.

‘’ சிந்து…’’ தோளில் படர்ந்த கைகளில் அடையாளம் தெரிந்தது. ஆனால், திரும்பிப் பார்த்து சிரித்து, முகம் ததும்ப, விருப்பமற்று அமைதியாக அமர்ந்திருந்தாள்.

‘’ என்ன சிந்து இது… ஏன் இத்தனை அமைதி…’’ 

‘’ ஒண்ணுமில்ல மாலதி அக்கா.’’ சிரிக்க முயன்று தோற்றாள்.

‘’ நீ பயப்படற மாதிரி எதுவும் இருக்காது. சீக்கிரமே மாலி திரும்புவார் பாரு. தங்கமான பையன். பலநேரம் உங்களுடைய புரிதல் பார்க்க அவ்வளவு நல்லா இருக்கும். என் வாழ்க்கை, என் குழந்தைங்கிற கனவை இந்த இணை ஏதோவொரு இடத்தில சரிசெய்யற மாதிரி எனக்கு தோணும்.’’ மாலதி அக்கா, அவளை தேற்றுவதாய் நினைத்து பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் அவள் கண்களில் இருந்து நிறுத்தாமல் நீரை ஊற்றுவதாக அமைந்து போனது.

மறுபடியும் அலைபேசி சிணுங்க, மாலதி அக்காவே சென்று எடுத்து வந்து சிந்துவின் கைகளில் திணித்தார்.

ரியாஸின் எண். பதட்டமாக உயிர்பித்தாள்.

‘’ ரியாஸ்…’’ அப்பப்பா அந்தக் குரலில்தான் எத்தனை எத்தனை பரிதவிப்பு. 

‘’சிந்துமா, எப்படி இருக்கே…?’’ என்றான் அவனும் குரலில் அன்பைத் தேக்கி.

 ‘’ மாலி வந்துட்டாரா..? ‘’ ஒவ்வொரு சொல்லிலும் இருந்த துடிப்பில் ரியாஸின் உயிரே நின்று துடித்தது. கண்களை மூடி தலையை ஒற்றைக் கைகளில் பற்றி அழுத்திக் கொண்டான். என்ன பதில் தருவது இப்போது..? இந்த கேள்வியை எதிர்கொள்ள வழியே இல்லாமல் தான், இப்போதெல்லாம் சிந்துவுக்கு கால் செய்யவே தயங்கிக் கொண்டு இருக்கிறான். 

‘’இல்லடாமா…’’ என்றான் வேதனையான குரலில். அவளின் அத்தனை ஜீவனும் அந்த ஒற்றை மறுதலிப்புக்கே, நீர்த்துப் போனது.

   ‘’ஓ…’’

‘’ஆனால் வந்துடுவான்டா. உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டான்…’’

‘’ஆனால் போய்ட்டானே ரியாஸ்….’’ உடைந்து போனாள். அவள் உறுதி எல்லாம் அந்த நொடியில் இறுதிபெற்றுப் போய் விட்டு இருந்தது. 

ஒரு பெண்ணின் முழு பலஹீனத்தையும், அந்த சின்ன நொடியில் அவள் தன்னகத்தே கைகொண்டு இருந்தாள்.

‘’சிந்து…’’ பரிதவித்துப் போய் அழைத்தான்.

‘’சாரி, அழல. சொல்லுங்க.’’

‘’ மாலியோட ஆபிஸ்ல இருந்து கால் வந்தது. அவங்க பதினைஞ்சு நாள் முன்னாடியே கம்ப்ளைண்ட் ரைஸ் பண்ணிட்டாங்களாம். மாலி தங்கியிருந்ததா சொல்லி இருந்த ஹோட்டல்க்கு போய் போலீஸ் விசாரணை நடத்திட்டு வந்திருக்கு. அங்கே மாலியுடைய பேக் கிடைச்சிருக்கு.’’ அவன் சொல்லிய எந்த வார்த்தையிலும் மாலியின் நடமாட்டத்துக்கான அடையாளமே தெரியாததால், கால்கள் மெல்ல தரையில் இருந்து பேர்த்துக் கொண்டு மேலெழும்பிக் கொண்டு இருந்தது.

நிற்க தரையற்று மெல்ல கண்கள் சுழன்று கொண்டிருக்க, அடுத்தடுத்து எதுவும் வார்த்தை தாக்குதல் நடந்துவிடுமோ என்ற பயத்தில் பேதலித்து நின்று கொண்டிருந்தாள் சிந்தூரி.

காலம் என்ன அத்தனை இரக்கமானதா என்ன..? நடுக்கத்தை பார்த்து ஆட்டத்தை முடிக்க..?

 

''...இனம் பார்த்து குணம் பார்த்து மனம் சென்றது..

மனம் போன வழி தேடி உயிர் சென்றது..

உயிர் போன பின்னாலும் உடல் நின்றது..

உதவாத உடலிங்கு அசைகின்றது..

தேரேது சிலையேது திருநாளேது...''


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 269
 

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

https://kavichandranovels.com/community/topicid/396/


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

சுவாசம் என்பது பெரிய பாறையை விழுங்குவது போல. எந்த நிலையிலும் அது ஜீரணிக்கப் படுவதில்லை.

மாலதி அக்காவும் அறைத் தோழிகளும், நிமிர்த்தி அமரவைத்து. முகத்தில் நீர்தெளித்து. கொஞ்சமாய் அவளை சுதாரிக்க வைத்திருந்தனர். மாலதி அக்காவின் முகத்தில் கவலையே கண்ணீராய் வழிந்தது.

‘’ சிந்தூரி, என்னம்மா இது..? இப்படி திடீர்னு மயங்கி விழுந்தா, நான் என்னன்னு நினைக்க…’’ முந்தானையால் முகம் துடைத்து, ஆசுவாசப்படுத்த, நிமிர்ந்து அமர்ந்து முழங்காலை கட்டிக் கொண்டாள். சுற்றி இருந்த அத்தனை முகத்திலும் கவலை கொத்து.

 ‘’ நான் தான் மயங்கி கிடந்தேனே, என்னை ஏன் தெளிய வச்சீங்க..?’’ என்றாள் அழுத கண்களோடு. அந்த முகமும், அதில் வழிந்த சோகமும் வார்த்தைகளில் வடித்துக்காட்ட இயலாததாக இருந்தது. 

’’ இப்படி நீயா கற்பனை பண்ணிட்டு உன்னையும் தண்டிச்சிட்டு உன்னைச் சுத்தி இருக்கிறவங்களையும் தண்டிக்காதே சிந்தூரி. முதல்ல தைரியமா இரு. எனக்கு என் பழைய சிந்தூரி வேணும்.’’ மாலதி அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு சொன்ன நிமிசம், அத்தனை பேரின் இதயமும் நெகிழ்ந்து தான் போனது.

கேட்ட வார்த்தைகளை மறுபடியும் மனசிற்குள் சுழல விட்டு சிந்தித்துப் பார்த்தாள். ஒரு சதவிகிதம் கூட மனசு சமாதானம் ஆகவே இல்லை. இப்போதே ஒலிபரப்பிற்கு சென்று நான்கு நாட்களாகிறது. இனியும் விடுப்பு தொடர்ந்தால், அவளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேறு யாரையாவது போட்டு விடுவார்கள். 

நான்சி அக்காவிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க, தன்னைத் தானே மீட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவள் நின்றாள்.

சுற்றி நின்றவர்கள் இவளின் கவலையை மட்டுப்படுத்தவில்லை. மாறாய் அவளின் உள்ளத்து உணர்வுகளை தட்டி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். ஒரு கடத்தியைப் போலே அவள் தன்னை உணர்ந்தாள். எவ்விடத்திலும் இருக்க இயலாத ஒரு பரிதவிப்பு. இதயம் மட்டும் இயல்பாக துடிக்காமல், குலுங்கிக் கொண்டே இருந்தது.   

பஸ் பிடித்து ஸ்டேசன் வருவதிற்கு அவளுக்கு மனோதிடம் இல்லை. அதனாலே ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்திருந்தாள்.

பழகிய அலுவலகத்தில் எல்லாமே புதிய உணர்வாக இருந்தது. களைந்து சுருங்கியிருந்த தோற்றம் பார்ப்பவர்களுக்கு பரிதவிப்பை உண்டாக்கியது. நான்சி கைகளைப் பற்றிக்கொண்டு விதைத்த அழுத்தத்தில் ஒருவித கண்டிப்பு படர்ந்திருந்தது.

‘’சிந்து, உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு. என்ன ஆயிடுச்சுன்னு இப்படி இருக்கே..? வரவர உனக்கு கற்பனை தறிகெட்டு ஓடுது. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இருக்காது. உன்னுடைய ஒரு குரலைக் கேட்க வானொலியில லட்சக்கணக்கான பேர் காத்திருக்காங்க. அதாவது உனக்கு நியாபகம் இருக்கா..?’’ நான்சியின் குரலில் அன்பும் சேர்ந்தே வழிந்தது பிரவாகமாய்.

நிமிர்ந்து பார்த்தாள்.

‘’ ஆனால் என்னை கட்டி வச்சிருந்தது, அந்த ஒற்றைக் குரல் தானே . சிந்தூர்…’னு கூப்பிடற அந்த ஒற்றைச் சத்தத்தில் தானே என் உயிர் பூ பூத்தது. என் இரவும், பகலும், அந்த சத்தம்தானே என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டு இருந்தது. இப்போ எந்த அலைவரிசையில் அந்தக் குரலை நான் கேட்க…? சொல்லுங்க நான்சி அக்கா..! ’’ உடைந்து போய் கண்ணீர் உதிரத் தொடங்க, வேகமாய் வாட்டர் பாட்டிலை எடுத்து நீட்டிய நான்சியின் கண்களில் அழுத்தம் மிகுத்தமாக இருந்தது.

’’முதல்ல இந்த தண்ணியை குடி. உள்ளே சோபன் ப்ரோக்ராம் போயிட்டு இருக்கு. அடுத்து நீதான். முதல்ல, முகத்தை அலம்பிட்டு வாய்ஸை வார்ம் பண்ணு. மைக் முன்னாடி போய் நின்னா, இன்னும் தடுமாறும். காங்லிங் பண்ணிட்டு, சுக்கு, திப்பிலி சாக்லேட்டை எடுத்து வாயில போடு.

இதப்பாரு கஷ்டங்கள் மனிதனை கரைச்சதா சரித்திரம் இல்லை. எப்போதும் கரையாத பாறையா நில்லு…’’ மெல்ல அவள் முதுகில் தட்டிவிட்டு வெளியே செல்ல, அவள் விட்டுப்போன வார்த்தையையே மறுசுழற்சி செய்ய முற்பட்டுக் கொண்டு இருந்தாள்.

‘… கரையாமல் நில் என்கிறார், எதற்கு நிற்க… யாருக்கு நிற்க..?’

தன்னைத் தானே மீட்டுக் கொள்வது என்பது, நெருப்புக்கு நேர் நின்று எண்ணெய் தேய்ப்பது போன்றது காயமே இல்லாமல் எப்படி மீண்டு வர..?

கொஞ்ச நேரம் இந்த மூளை சிந்திக்காமல் இருந்தால் இன்றைய ப்ரோக்ராமை முடித்து விடுவாள் நல்லபடி,

‘…வணக்கம் சென்னை மக்களே, உங்கள் நிலா எப். எம்.,மில் உங்கள் மனம் கவர்ந்த இசைத்தென்றல். ஸ்டே ட்யூன் அட் 88.8 இன்பமா இருக்குதய்யா… இப்போ முதல் காலரைப் பார்க்கலாம்…’ பிசிறில்லாத குரலில் சொன்னாள், டேக் வாங்காமல்.

‘’ ஹலோ சிந்தூரி மேடம், உங்க கூட பேசினது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருக்கு.’’ 

‘’ எனக்கும் ரெம்பவே சந்தோசமா இருக்கு. உங்க பேர் சொல்லுங்க…’’

 ‘’ நிர்குணன்…’’

‘’ அமேசிங். உங்க பெயர் ரெம்ப வித்யாசமா அழகா இருக்கு.’’

‘’ ஆமாம் மேடம் இது கண்ணனுடைய பெயர்…’’

‘……வனமாலி என்னய்யா பேர் இது..? நான் கேள்விப்பட்டதே இல்லை…

பல வண்ணங்களால் ஆன மலர்களினால் ஆன, மாலையை அணிந்தவன்னு அர்த்தம். இது திருமாலுடைய பெயராம்…அம்மா சொல்லி இருக்காங்க.’

‘’மேடம் லைன்ல இருக்கீங்களா..?’

 ‘’ எஸ் மாலி….’’

‘’மாலியா..? நான் நிர்குணன்.’’

‘’எஸ் எஸ்.. நிர்குணன். சொல்லுங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?’’

‘’ பிட்டரா வேலை செய்றேன் மேடம். வேலை நேரத்துல எங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் பாட்டு கேட்கறது தான்.’’

‘’ ரெம்ப நல்ல விசயம். மேலே சொல்லுங்க.’’

‘’அதுவும் உங்க நிகழ்ச்சின்னா, எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். குறிப்பா என் ஒய்ப்புக்கு.’’

‘’ ஓ சூப்பர். பக்கத்துல இருக்காங்களா..?’’

‘’அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருபது நாளாச்சு மேடம்.’’

‘’கண்டிப்பா அடுத்தமுறை பேசலாம். இப்ப என்ன பாட்டு கேட்கப் போறீங்க..?’’

‘’சுஜாதாங்கிற படத்துல கல்யாணிமேனன் பாடின, ‘நீ வருவாய் என நான் இருந்தேன்’ங்கிற பாட்டு. ஏன்னா, அம்மா வீட்டுக்கு போயிருக்க என் மனைவி பேரும் சுஜாதா..! அவங்களுக்கு இந்த பாட்டுன்னா ரெம்ப இஷ்டம்.’’ நிர்குணன் மறுமுனையில் வெட்குணன் ஆகி இருந்தான்.

‘’ஒ நைஸ்..! நிர்குணன், அந்தப்பாடலை எங்களுக்காக இரண்டு வரிகள் பாட முடியுமா..?’’

‘’எனக்கு நல்லாவெல்லாம் பாட வராதுங்க. தெரிஞ்சளவுக்கு பாடறேன்.

‘… நீ வருவாய் என நான் இருந்தேன்…

ஏன் மறந்தாய் என நான் அறியேன்..

கண்கள் உறங்கவில்லை, இமைகள் தழுவவில்லை

கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை.

அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை..

வாராயோ…’

நிர்குணன் முடிக்க முடிக்க பாடல் ஒலிப்பதிவில் வரத் தொடங்க, ஹெட் ஃபோனை கழட்டி விசிறிவிட்டு கேவலை கைகளால் தடுத்தபடி மடங்கி அமர்ந்தவள் வெடித்த சத்தத்தில் துளிகூட சிதறிவிடாமல் கைகளால் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

வேகமாய் தன்னுடைய இடத்தில் இருந்து எழுந்து ஒடிவந்த ஆபரேட்டர் ராமு, சிந்தூரியின் கைகளைப் பற்றிக்கொண்டு வெளியில் அழைத்து வந்தான்.

‘’ சிந்தூரி என்னது இது.. ப்ரோக்ராம் போயிட்டு இருக்கு. எப்போ உள்ளே நுழைஞ்சிட்டமோ,  நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இங்கே இடமே இருக்க கூடாது.. நீயொரு ரேடியோ ஜாக்கின்னா, உன் குரல் நடிக்கணும். உன் உணர்ச்சிகளை நீ பிரதிபலிக்கவே கூடாது.‘’

அவசரமாய் கண்களை துடைத்துக் கொண்டாள். மெல்ல அவள் முதுகில் தட்டிவிட்டு உள்ளே நகர்ந்தான். காற்றுவெளியில் பாடல் பரவிக் கொண்டே இருந்தது.

‘’… அடி தேவி உந்தன் தோழி, ஒரு தூதானாள் இன்று, 

இரவெங்கே பகலெங்கே, உனை காண்பேனோ என்றும்…’

வரிகள் காதுகளை வந்து தீண்டியதும், அடிவயிற்றை கீறிக்கொண்டி ஒரு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

‘….உனை இனி காண்பேனா மாலி..? இருப்ப. கண்டிப்பா இருப்பே. இத்தனை கண்ணீருக்கும் சேர்த்து வச்சு என்னை சிரிப்பில நனைச்சு எடுக்கப் போறே..! அவ(ள்)நம்பிக்கை என்று அவள் அறியாமலே போனாள்.   

மாலையில் ரியாசிடம் இருந்து அழைப்பு வந்தபோது, அவளுக்கு நம்பிக்கைக்கு பதில் பயமே துளிர்த்துக் கொண்டு முளைவிட்டது. இப்போதல்லாம் நல்ல செய்தி வருகிறதோ இல்லையோ, கெட்ட செய்தி வந்துவிடுமோ என்ற உள்ளச்சம் மனதை அரிக்க ஆரம்பித்து விட்டது.

‘’ சொல்லுங்க ரியாஸ்.’’

குரலை கூர்ந்து கவனித்தவன், இதயத்தில் இரக்கம் எண்ணிக்கை இல்லாமல் சுரந்தது. 

‘’சிந்து. ஏன்டாமா குரல்ல இத்தனை கலக்கம்.’’

‘’தெளிய முடியல ரியாஸ்,. முன்னெல்லாம் ஏதாவது தகவல் வராதான்னு கலங்கிட்டு இருந்தேன். இப்போ, ஏதும் தகவல் வந்திடுமோன்னு பயந்துட்டு இருக்கேன்.’’

‘’ மாலி வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு,,’’ என்றபோது இதயம் ஒருமுறை நின்று துடித்தது.

‘’ எ,,ன்..ன… தகவ..ல்…’’ 

‘’மாலி காணாமல் போன தகவல். இனியும் நமக்குள்ளே வச்சிட்டு இருக்கிறது நியாயமில்லை. என்னைத் தாண்டி அவங்க அம்மா அவனுடைய ஆபிஸ்க்கு கால் பண்ணி மாலி பத்தி விசாரிச்சு இருக்காங்க. அம்மா ஒரே அழுகை கிளம்பி வரத் தயாரானவங்களை உன் பேர் சொல்லி தடுத்து வச்சிருக்கேன்.’’

தோல் உரிந்த பிறகு நடக்கும் வெட்டுக்காயம் போல வலி ஆழமாய் அவளை ரணப்படுத்தவில்லை. ஆனால் தீப்புண் பட்டவனை விட, பக்கத்தில் நிற்பவனே அவர்களைப் பார்த்து வேதனை கொள்கிறான் என்பது சரியாகத்தான் இருந்தது. அவளின் நீண்ட மெளனம் ரியாஸை என்னவோ செய்தது,

‘’ ரெம்ப பரிதவிச்சுப் போய் இருக்காங்க. உன் நம்பர் கேட்டுட்டே இருக்காங்க,’’

‘’ நான் பேசறேன் ரியாஸ்.’’ என்றாள் மேற்கொண்டு வார்த்தைகள் தெரியாமல்.

அலைபேசியை அணைத்துவிட்டு வெகு நேரம் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாள். சிலந்தி வலைக்குள் மாட்டிக்கொண்ட சிலுவண்டைப் போல் இருந்தது அவள் நிலை. தப்பிக்க வழியில்லாமல் அந்த நினைவுகளிலேயே தத்தளித்துக் கொண்டு இருந்தாள்.

சிறுதுநேரம் சிந்தனைகளை இறக்கி வைத்துவிட்டு நகர்ந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் போல் இருந்தது. தூக்கி சுமந்த கவலைகளை இறக்கி வைத்தால் ஒரளவு மூச்சு கிடைக்கும் போல் தோன்ற, தேடிக் கொண்டு எந்த திசை நோக்கி நகர்வது என்பதை அறியாமல் நகர்ந்து கொண்டே இருந்தாள்.

ஹாஸ்டலுக்கு வந்து மொட்டை மாடி காற்றில் கைகளை கட்டிக் கொண்டு களைந்து கூடிய மேகங்களை பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு பிரளயத்தின் துளி, கருமை கொண்டு கதியற்று பூமியை பார்த்துக் கொண்டு இருந்தது,

அலைபேசியை எடுத்தவள், மாலியிடம் இருந்து வாங்கி வைத்திருந்த சரஸ்வதியின் எண்ணை ஒற்றினாள். இரண்டாவது அழைப்பிற்கு உயிர்பித்தார்.

எடுத்ததும், யோசித்த அத்தனை விசயங்களும் மறந்து போயிருக்க மறுமுனை குரலில் ஒரு வெறுமை சூழ்ந்திருந்தது,

‘’ யாருங்க..?’’ 

‘’ ஆன்டி நா…ன் சிந்தூரி பேசறேன் என்னை நியாபகம் இருக்கா..?’’

‘’ இந்தக் கேள்வி கேட்கிறதுல ஏதாவது நியாயம் இருக்கா..? அம்மாடி சிந்து உன் நமபர் கிடைக்காம பதினைஞ்சு நாளா நான் தவிச்சிட்டு இருக்கேன் கடைசியா நீயே வந்துட்டடா என் மருமகளே…’’ என்றவர் சில வினாடிகள் இடைவெளி விட்டு, மெல்ல  குரல் பிசிறடிக்க கேட்டார்.,

‘’ மருமகளாக வாய்ப்பு இருக்கா..?’’ அந்த நொடித்த குரலில், சிந்தூரியின் கண்களில் இருந்து கண்ணீர் கரகர’ வென இறங்க ஆரம்பித்திருந்தது,

காற்று போகிற போக்கில், முகத்தில் மொத்திவிட்டுப் போனது.

‘’ அத்,,,தை…’’ என்றாள் விட்டுவிடவே முடியாத வலியான குரலில்.

 ‘’ எப்படி இருக்கே..?’’

‘ எப்படி இருக்கேன்னு தான் எனக்கே தெரியலியே..! ’

‘’ இருக்கேன் அத்தை.’’

‘’அங்கே என்ன நடக்குது..? என் மாலி எங்கே..? அந்த தகவல் ஏன் எங்களுக்கு இத்தனை லேட்டா வந்திருக்கு.’’ அழுகைக்கு நடுவே சின்ன சின்னதாய் வார்த்தைகள் சிதறிக் கொண்டு வந்தது.

சொன்னாள். அத்தனையும் சொன்னாள். அவள் அறிந்த மட்டுக்கும் அத்தனையும் சொன்னாள் அவள் சொல்லி முடிக்கும் வரைக்கும் சரஸ்வதியின்  விசும்பல சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

‘’இப்போ என்ன செய்றது சிந்து..?’’

‘’ டெல்லி போய் தேடிப் பார்க்கிறதை தவிர வேற எனக்கு எதுவும் தோணலை அத்தை அங்கே கம்ப்ளைண்ட் ரைஸ் பண்ணி இருக்காங்க. ஆனால் சொல்லாமல் எங்கே போனான்.’’ பரிதவிப்பாய் முடித்தவளுக்கு மறுமுனையின் அழுகை மட்டுமே பதிலாக வர, இன்னும் தவிப்பு கூடியவளாக, கலங்கிய கண்களுடன் நின்றாள்.

‘’ நீ ஒருமுறை ஊருக்கு வர்றியா சிந்து..?’’ குரலில் அத்தனை நலிவு. வீசிய காற்றில் கரைந்து போய்விட மாட்டோமா என்று இருந்தது. கண்களை மூடிக் கொண்டாள். யாருக்கு இந்த நிமிசம் யார் ஆறுதல்..?

‘’ வர்றேன் அத்தை. நாளைக்கே கிளம்பி வர்றேன். எதுவும் ஆகி இருக்காது பயப்படாதீங்க.’’  அலைபேசியை அணைத்துவிட்டு இலக்கினறி பார்த்தபடி நின்றாள். ஓடிக் களைத்திருந்த மேகங்கள், கால் வலிக்கு எங்கோ சென்று உட்கார்ந்திருந்தன.  

 

''...வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்…''

      வனமாலி - 24

ண்கள் ஏதோ ஒரு அழுத்தமான இறுக்கத்தில் மூடி இருந்தது. இமைகள் இழுத்துச் சாத்திக் கிடக்கும் நிலைக்கெல்லாம் உறக்கம் என்று பெயர் வைத்துவிட முடியாது. ஒரு விதமான மோன நிலை அது. மயக்கத்தில் பாதி, குழப்பத்தில் பாதி கொண்ட திரிசங்கு நிலை.

தன்னுடைய அறையில் கண்களை மூடி சீட்டில் சரிந்திருந்தாள் சகுந்தலா. ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகான சன்னமான இளைப்பாறலாய் அது இருந்தது, 

இளஞ்சூட்டில் ஒரு காப்பி குடித்தால் தேவலாம் போல் இருந்தது அடிநாக்கிற்கு.  ஊன் உறக்கம், இத்யாதி எல்லாம் வெறுத்து போய் ஒரு மாதத்தை கடந்து விட்டது, நேற்று இரவு ஒரு பெரிய சோதனை நிறைவேறி இருந்தது. எக்ஸ்மோவை நிறுத்தி வைத்து மாலியின் இதயத்தை அஜய்க்காக துடிக்க வைத்திருந்தார்கள். மொத்தம் இருபது செகண்டுகள் தான் அந்த சோதனை முயற்சி. அது மட்டும் இயல்பாகி விட்டால், பெரிய மலையில் இருந்து இறங்கிய ஆசுவாசம் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிகூட பொய்த்துப் போகவில்லை.

அதன்பிறகு டாக்டர் மாதூர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு பெரும் பிரளயத்தின் பொறியைச் சிந்தாமல் சிதறாமல் சேகரித்து விட்டார். தண்டுவடத்தின் செயல்பாடு மெல்ல மெல்ல மூளைக்கு கீழ்படிய ஆரம்பித்து இருந்தது. ஆழ்நிலை உறக்கத்திலேயே மூளை இட்ட கட்டளையை முள்ளெளும்போடு இணைந்த ஏனைய பாகங்கள் பின்பற்ற ஆரம்பித்திருந்தன.

கட்டை விரல் சின்னதாய் அசைந்தது கண் இமைகள் மேல் எம்பி அமைதியாக ஆரம்பித்தது. காய்ந்து உலர்ந்த உதடுகள் சின்னதாய் அசைந்தது. இது அத்தனையும் மயக்கத்தின் வீரியத்திலேயே நடக்கிறது என்றால், அவன் உடல் கிட்டத்தட்ட செயல்பாட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். 

அறைக்கதவினை மெல்ல தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு மாதூர் உள்ளே வந்தார். அவரின் வாழ்நாள் சாதனையில், அவரின் வயதில் பாதி காணாமல் போய் இருந்தது.

பின்னாலே காப்பி கோப்பைகளை சிப்பந்தி கொண்டு வந்து வைத்து விட்டு போனான். 

‘’ என்ன யோசனையில் இருக்கீங்க டாக்டர் சகுந்தலா.’’

‘’என்ன யோசிக்கறதுன்னு நிஜமாவே தெரியல டாக்டர் மாதூர்.’’

‘’ வரே வா. இப்படியும் ஒரு நிலை இருக்கா என்ன..?’’

‘’’ இருக்கு டாக்டர். அதீத குழப்பம், அல்லது அதீத விரக்தி.’’ 

‘’எதற்கு குழப்பமும், விரக்தியும் டாக்டர் சகுந்தலா..? இந்த நிமிசம் நாம சந்தோசமா உற்சாகமா இருக்கவேண்டிய நேரமில்லையா..?’’

‘’ சொல்லத் தெரியல. பெரிய சாதனைக்கு சோதனையாக நம்மைத் தர்றதும், சாதனைதான். ஆனால் அதற்கு பிறகான வேதனையை எப்படி சுமக்கிறதுங்கிறதுல இருக்கு மனிதர்களின் இயல்பு.’’

 ‘’ சகுந்தலா…’’

கொஞ்சம் வெறுமையாக புன்னகைத்தபடி எழுந்து சென்று ஜன்னல் அருகில் நின்று கைகளைக் கட்டிக் கொண்டாள். தூய்மையான புறக்காற்றை கடைந்து கொண்டு வந்து அறைக்குள் கொட்டிவிட்டுப் போனது.

‘’சோதனை வெற்றி அடைந்து அஜெய் எழுந்து நின்னா, உலக அளவில் உங்க ஆராய்ச்சி வெற்றி அடையும். இந்த மொத்த நூற்றாண்டுக்கும் உங்களுடைய சாதனை பேசு பொருளாகும் ஆனால், அஜெய் என்ற மனிதனை இன்னொரு உருவத்தில், இன்னொரு பரிமாணத்தில் எங்க குடும்பத்தினால எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்னு தெரியல.

எல்லாத்துக்கும் மேல, இந்த புது அஜெய்யை அபரஞ்சி எப்படி ஏத்துக்கப் போறா..? மதுரிமாவுக்கு எப்படி இந்த உருவம் தந்தையா கடக்கும்னு சொல்லத் தெரியல.

அதற்கும் மேலே, இந்த உருவத்துக்கு சொந்தக்காரனின் உணர்வுகள், அஜெய்யிடம் பிரதிபலிக்காம இருக்குமா..? இவன் இப்போ யார்..? இவனைத் தேடி வர்றவங்களுக்கு இவன் கிட்ட என்ன உரிமை இருக்கு..?  உணர்வுகளால் அவங்களை இவன் அடையாளம் கண்டுபிடிப்பானா..? இந்த மாதிரி ஆயிரம் கேள்விகள் என் இதயத்தை குடைஞ்சுட்டு இருக்கு. முழுக்க முழுக்க நான் சோர்ந்து போயிட்டேன் டாக்டர்.

விடை தெரியாத கேள்விகள் என் முன்னே கொக்கி போட்டு தலைகீழா என்னை தொங்க விட்டதுபோல் இருக்கு.’’ தலையை கைகளால் பற்றிக் கொண்டவள் முன் ஆவி பறந்த காப்பிக் கோப்பைகளை எடுத்து நீட்டினார்.

‘’ எடுத்துக்கங்க. முதல்ல இந்த விருப்பத்தை நிறைவேத்துங்க.’’ நீட்டிய கோப்பையை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். இத்தனை குழப்பங்களும் ஒரு கோப்பை தேநீரில் கரைந்து போகுமா என்ன..? ஆனால் அந்த சில நிமிட ஆசுவாசம் தேவையாகத்தான் இருந்தது.

‘’ சகுந்தலா, ஒரு டாக்டர் என்ற நிலையைத் தாண்டி என் பழைய மாணவியா, குழப்பங்களும், கேள்விகளும் சூழ்ந்த ஒரு வளர் பருவச் சிறுமியாக என் கண்முன்னே நீங்க தெரியறீங்க இந்த நிமிசம்.

சிந்தனைகள் சிறப்பானதுதான். ஆனால் அது சீறிப் பாய்ந்து வெள்ளம் மாதிரி ஓரே சமயத்தில் முட்டி மோதினால், சரியான விடை கிடைக்காது. மெல்ல மெல்ல எல்லாம் சரியாகும். அத்தனையும் ஒரே ஷணத்தில் தன்னுடைய இயல்புக்கு திரும்பும்னு எதிர்பார்க்க கூடாது, அது முடியவும் முடியாது.

காலம் ஆற்றாத காயமே இல்லை. அதுதான் இயற்கையின் கோட்பாடு. இந்த உலகத்திலேயே ஆசிர்வதிக்கப்பட்ட முதல் மனுசி நீங்க மட்டும்தான். உங்களுக்கு மட்டும்தான் இழந்தது இன்னொரு ரூபத்துல உங்களை நோக்கி வருது. இந்த அற்புத ஷணத்தை அனுபவிங்க.’’

மெல்ல சகுந்தலாவின் முதுகில் தட்டித் தந்தார். ஆறுதலாகத் தான் இருந்தது. அடுத்து பேச வாய் திறக்கும் முன் அறைக்கதவு மெல்லியதாய் தட்டப்பட,

‘’ப்ளீஸ் கெட் இன்.’’ என்றார் மாதூர், கடைசி மிடறை விழுங்கியபடி.

நர்ஸ் ஸ்டெல்லா. முகம் முழுக்க பரபரப்பு.

 ‘’ எஸ் ஸ்டெல்லா. ‘’

‘’ டாக்டர், ஸ்பெசல் கேர்ல இருந்து அலாரம் அடிக்குது. அங்கே ஏதோ அவசர செய்தியாக இருக்கலாம்.’’ 

மாதூரும், சகுந்தலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வேகமாய் தங்களுடைய வைரஸ் ப்ரூப் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டார்கள். சகுந்தலாவின் கைகள் தன்னால் நடுங்க ஆரம்பித்தது.

அவசரகதியில் இரண்டடுக்கு பாதுகாப்பு நடைமுறையைத் தாண்டி, உள்ளே நுழைய, அங்கே ஏற்கனவே குழுமியிருந்த சர்வதேச மருத்துவ குழுக்களின் விவாதங்களும், நடந்து கொண்டு இருந்தது, அஜெய்யின் முன்னாக. அவன் உடலில் அசைவை தூரத்தில் இருந்தே உணர முடிந்தது.

‘’வாட் ஹேப்பண்ட் மிஸ்டர் டிசோசா..?’’

‘’ சொர்க்கத்தை தரிசித்த மனிதன் நம் பக்கத்தில் நெருங்கிக் கொண்டு இருக்கிறான். இது ஒரு அற்புதமான தருணம்.’’ அவர் குரல் இனம்பிரிக்க முடியாத உணர்வைச் சொல்லிக் கொண்டு இருந்தது.

மருத்துவர்கள் கைகளை குலுக்கிக் கொண்டார்கள். கட்டில் அருகில் நெருங்கி நின்ற சகுந்தலாவின் கண்கள் பளபளத்துக் கொண்டே இருந்தது.

மெல்லிய அசைவு கண்களில். உதடு மெல்ல பிரிந்து, வறண்ட உதட்டில் இருந்து ஹீனமாய் ஏதோ சத்தம் கேட்டது. உடல் முழுக்க அசைக்கவே முடியாத அளவிற்கு பின்னப்பட்டு இருந்த கருவிகளுக்கு நடுவே, மழையில், மரப்பொந்தில் சிக்கிக் கொண்ட புறாக்குஞ்சின் சத்தம் போல் கேட்டது.

பிணைக்கப்பட்டு இருந்த எக்ஸ்மோ கருவிகள் நீக்கப்பட்டு இருந்தன. இதயத்துடிப்பு மானிட்டரில் கோடுகளாய் மேல் எழும்பி பதிவாகிக் கொண்டிருந்தது.

‘’மயக்கநிலையில் இருக்கும் போதே ஆழ்நிலையில் அஜெய்யிடம் இருந்து மெல்லிய சத்தம் கேட்குது. அவர் புலன்களின் துடிப்பு மெல்ல மெல்ல அதிகமாகிட்டு வருவதை உணர முடியுது. இட்ஸ் மெடிகல் மிராக்கிள், அதிகபட்சம் பதினைந்து நாள் கூடப் தேவைப்படாது, இந்த டோனர் உடலில் நம் அஜெய் பேச.’’

மாதூர் தன்னுடைய டெஸ்டுகளை தொடங்கி இருக்க, மற்ற மருத்துவர்களோடு சேர்ந்து கொண்டு வெளியில் வந்தாள் சகுந்தலா. இவனுள்,அஜெய் உயிர்த்தெழுந்து மீண்டு வரும் அந்த நிமிசத்துக்காக விரலை மடக்கிக் காத்திருக்க ஆரம்பித்திருந்தாள் மருத்துவ உலகத்தோடு சேர்ந்து.

                 ❤️           

பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த சிந்தூரியைப் பார்த்ததும் மனது என்னவோ செய்தது மாலதிக்கு. எப்போதும் குறும்பும், சந்தோசமும் மட்டுமே இருக்கும் அந்த முகத்தில் தெரிந்த அதீதமான வெறுமையில் மாலதியின் அடிவயிற்றில் ஏதோ ஒரு வேதனை பந்து உருண்டது.

‘’ எப்போ திரும்பி வருவே சிந்தூரி.’’

‘’ தெரியலக்கா. ரெம்ப குழப்பமா இருக்கேன். சோளவந்தான் போயிட்டு அப்படியே அருப்புக்கோட்டைக்கும் போயிட்டுத்தான் வருவேன். லீவு போட்டுட்டுத் தான் போறேன்.’’

‘’தைரியமா இரு சிந்தூரி. எதுவும் நடந்திருக்காது.’’

மெல்ல தலையசைத்துக் கொண்டாள். இயங்கிக் கொண்டே இருந்த அலைகள் ஏதுமற்று அமைதியானது போல் இருந்தது அவளின் பேரமைதி.

வற்புறுத்தி வற்புறுத்தி வாங்குகின்ற வார்த்தைகளில் உயிரே இல்லை. அவள் துக்கமாகவோ சோகமாகவோ இல்லை. ஆனால், உள்ளீடற்ற ஒரு சிந்தனையில் இருந்தாள். 

எப்போதும் சிரித்த முகமாய் பார்த்தவளை இத்தனை சிந்தனை தின்றவளாகப் பார்க்க மனது கனத்துப் போனது மாலதிக்கு.

விடுதியே ஒரு கனமான மெளனத்தில் இருப்பது போல் இருந்தது. பஸ் ஏறி அமர்ந்தபோது, பயணத்தில் சுகப்படுவதிற்கு பதிலாக சுகவீனப்பட்டு கிடந்தது இதயம். 

சென்ற முறை இந்த பயணம் முழுக்க நினைவுகளால் நிறைத்திருந்த வனமாலி வந்து வந்து அருகில் நின்றான். தெய்வாதீனமாய் பக்கத்து இருக்கை காலியாகவே நினைவுகளை சுமந்தபடி பயணமானது.

இல்லாமையின் வலி இதயம் முழுக்க பூத்து ஒரே நிமிசத்தில் நாறித் தொலைத்தது.

கண்களை மூடிக் கொண்டு நினைவுகளை அசை போட்டுக் கொண்டே இருந்தாள்.

அழுகை வரவேயில்லை. அதைத் தடுத்துக்கொண்டு ஒரு அழுத்தம் இதயத்தை கவ்விக்கொண்டு பிடித்து நிறுத்தி இருந்தது. 

அருப்புக் கோட்டைக்கு வந்து இறங்கிய போது நன்றாக விடிந்து இருந்தது. சரவணனுக்கு ஏற்கனவே தகவல் தந்திருந்ததால் வந்து காத்துக் கொண்டு இருந்தான்.

‘’ என்ன சிந்து திடீர்னு..?’’ பையை வாங்கி தன்னுடைய தோளில் மாட்டிக் கொண்டான்.

அமைதியாக நடந்து கொண்டே இருந்தாள். அந்த அமைதி அசாதாரணமாக தோன்றவே, நிதானித்து அவள் முகம் பார்த்தான்.

‘’ சிந்து…’’ என்றான் அழுத்தமாக.

‘’ சரோ. ஒரு வாட்டர் பாட்டில் வாங்குடா பக்கத்து கடையில.’’ கேள்வி கேட்காமல் வாங்கி வந்து நீட்டினான்.

அடித்து முகத்தை கழுவிக் கொண்டாள் கண்ணீரின் தடயத்தையும் சேர்த்து.

‘’ கிளம்பலாம் சரோ, வீட்டில போய் பேசிக்கலாம்.’’

அதன்பிறகு வீடு வந்து சேரும் மட்டுக்கும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்றாலும், சிந்தூரியின் ஒய்ந்த தோற்றம், என்னவோ செய்தது சரோவின் மனதை.

வீட்டிற்கு வந்து குளித்து முடித்து சித்தி தந்த காப்பியோடு தூணில் சாய்ந்தபோது ஒய்ந்திருந்த உணர்வுகள் எல்லாம் உருவம் கொண்டு முன்னே ஊசலாடியது.

எப்போதும் வறுத்தெடுக்கும் ரேணுகா கூட அந்த முகமாற்றத்தை கவனித்து அமைதியாக இருந்தாள் உலக அதிசயமாக.

 ‘’ எப்போ சிந்து வந்தே..?’’ வழக்கம்போல் தாமதமாக எழுந்து வந்த பூரணி, தாவி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

வாஞ்சையாக அவள் தலை கோதி தந்தாள்.

‘’ பூரணி எக்சாம் எல்லாம் எப்படி பண்ணி இருக்கே..?’’

‘’ம்க்கும். போதும் படிச்சதும் கிழிச்சதும் இந்த வீட்டில நீ ஒருத்தி படிச்சிட்டு அடங்காம இருக்கிறது போதாதா..? இதுல அவளையும் சேர்க்கணுமா..? ‘’ பூரணிக்கு முந்திக் கொண்டு சமையல்கட்டில் இருந்து ரேணுகாவின் குரல் வந்தது. 

மூவரும் முகம் பார்த்துக் கொண்டார்கள். பூரணி வாய்மூடிச் சிரித்தாள்.

‘’ அவ முதல்லயே படிச்சு கிழிப்பா. இதுல இவங்க படிக்கவே வேணாம்னு சொல்லிட்டா, உருப்பட்ட மாதிரித்தான்.’’

‘’ நீ வாயை மூடுடா. நீ பெரிய இவன். நீ செய்றதை எல்லாம் சொன்னா, பத்து பைசா உனக்கு சிந்து தரமாட்டா.’’ 

இருவரும் மாறிமாறி கொத்திக் கொண்டு இருக்க, தூணில் சாய்ந்து கையில் இருந்த காப்பியின் சலனத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள் சிந்தூரி, கவனத்தை திசை திருப்பாமல். 

‘’ சிந்து…’’ பக்கத்தில் வந்து அமர்ந்த சரோவின் கண்கள் தீவிரமாய் சிந்தூரியை ஆராய, முந்தானையில் கைகளை ஒற்றியபடி, ரேணுகாவும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு சிந்தூரியைப் பார்த்தபடி இருந்தார்.

‘’ சிந்து என்னாச்சு..? என்ன திடீர்னு வந்திருக்கே..? முகமும் சரியாயில்லை.அங்கே எல்லாம் சரியா இருக்கா..?’’ 

‘’ தெரியல.’’ என்றாள் விசித்திரமான பதிலாய்.

‘’ என்னாச்சு சிந்து..? தெளிவா பேச மாட்டியா..?’’

‘’ மாலியைக் காணோம் சரோ.’’ என்றாள் பொசுங்கிப் போன குரலில். சரவணன், அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க, ரேணுகாவின் முகம் கோபத்தில் சிவந்து போனது.

‘அதான் சொன்னேன்ல..! நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சதும் தன்னைத் தானே பெரிய இவள்’னு நினைச்சுகிட்டு காதல் கத்திரிக்காய்னு திரிஞ்சா இப்படித்தான் ஆகும். எப்படிப் போனான்..? சும்மா போனானா, இல்லை வயித்துல…’’

ரேணுகாவை தொடர விடாமல், சிந்தூரியின் விசும்பல் சத்தம் கேட்க, மூவரும் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தார்கள்.

‘ சிந்துவா அழுவது..? அத்தனை திடமும், உறுதியும், பொறுப்பும் உள்ள, அற்புத பெண்ணான சிந்துவா அழுவது..? அத்தனை காயப்பட்டா வந்து நிற்கிறாள்..?’

‘’ சிந்து…’’ஓடி வந்து அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டது சரவணன் தான். 

கைக்குழந்தையில் இருந்து சிந்துவைத் அறிந்தவள் ரேணுகா. தாய் இல்லை என்பதால், தாய்மையின் பொறுப்பையும் கொண்டே வளர்ந்தவள். தனக்குத் தானே தாயாகி கொண்டவள். திடகாத்திரமான அவள் வெகு சொற்பமான சூழலில் கூட அழுது பார்த்தே அறியாத ரேணுகா, இன்று கையறு நிலையில் அவள் கண்ணில் வழிந்த கண்ணீரைப் பார்த்து, திகைத்து போனாள்.

எழுந்து நின்று விட்டாள், அமர்ந்திருந்த நிலையில் இருந்து. தம்பியின் அணைப்பில் இருந்த சிந்து தன்னை மறந்து அழுது கொண்டு இருந்தாள்.

 ‘’ என்னாச்சு சிந்து…’’ பூரணி அவள் முகத்தை நிமிர்த்தி, நெற்றியில் முத்தமிட்டு, கண்களை துடைத்து ஒழுங்கு செய்ய, மெல்ல தன்னை சுதாரித்தாள்.

ரேணுகா உள்ளே சென்று தண்ணீரை எடுத்து வந்து தர, தயக்கமாய் வாங்கிக் கொண்டவள், குடித்து முடித்ததும், இந்த ஒரு மாத போராட்டத்தை சொல்லி முடிக்க, மூன்று பேரும் பேச்சின்றி அமர்ந்திருந்தனர்.

மனம் முழுக்க, மாலியின் முகமே வியாப்பித்து இருந்தது. எந்த பகட்டும் கர்வமும் இல்லாத இயல்பான அவன் குணமும், சிரித்த முகமும், கலகலப்பான சுபாவமும் அத்தனைக்கும் மேலே அவன் மேல் சிந்தூரி கொண்டிருந்த காதலும்… ரேணுகாவையே அசைத்து பார்த்தது அந்த நிலை.

‘’ இப்ப என்ன செய்யறது சிந்து..?’’ மொத்த கவலைகளுக்கும் குத்தகைக்காரன் போல் சரவணன் கேட்க, கைகளை விரித்து, உதடு பிதுக்கினாள்.

‘’ டெல்லிக்கு போய் ஸ்டேசன்ல விசாரிக்கணும். அவர் ஆபிஸ் பக்கம் இருந்து கம்ப்ளைண்ட் போயிருக்கு ஆனால் அது என்ன ஆச்சுன்னு தெரியல. அவங்க அம்மா என்னை வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க. அங்கேதான் போயிட்டு இருக்கேன்.’’ என்றாள்.

‘’ நான் கூட வர்றேன் சிந்து. நீ எங்கேயும் தனியா போக வேண்டாம்.’’

‘’ இல்ல சரோ. உனக்கு இது எக்ஸாம் டைம். தவிர. இந்த பயணத்தோட முகாந்திரமே தெரியல. நீ உன்னை வருத்திக்காதே. நல்லா படி. உன்மேல நான் வச்ச நம்பிக்கையாவது நனவாகட்டும்.’’ என்றவள் ரேணுகாவை பார்க்க, முதல் முறையாக அந்த முகத்தில் கனிவு வழிந்தது.

‘’ சரவணா போய் மீன் வாங்கிட்டு வந்துடு.’’ சித்தி சன்னமாக சொல்லிக் கொண்டிருக்க, பக்கத்தில் வந்து அமைதியாக நின்றாள்.

‘’எனக்கு எதுவும் வேண்டாம் சித்தி. மோர் சாதம் போதும். எனக்கு எது சாப்பிடவும் மனநிலை இல்லை.’’ என்றவள் அருகில் வந்து மெல்ல அவள் தலையை வருட. அந்த தாய்மையின் வருடலில் தன் பலமெல்லாம் உடைந்து போனவளாய், கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள்.

‘’ இப்படி உடைஞ்சு போய் உன்னைப் பார்க்கவா இத்தனை நாள் காத்திட்டு இருந்தேன்..? நான் உனக்கு பெத்த தாயோட பாசத்தைக் காட்டல தான். ஆனால், உன்னை நான் என்னைக்கும் வெறுத்ததுமில்லை சிந்து. சிலசமயம் உன் அனாதரவான நிலையைப் பார்த்து நான் உள்ளுக்குள்ளே பொசுங்கிப் போயிருக்கேன்.

இன்னைக்கு என் கண்முன்னால நீ கலங்கி நிற்கிறதைப் பார்க்கும் போது, என் அடிவயிறு உன்னை சுமக்காமயே கனக்குது. ‘’ சேர்த்தணைத்துக் கொண்டு சொல்ல,

தத்தளித்த சித்தெறும்புக்கு கிடைத்த முருங்கை இலை போல் இருந்தது அந்த அன்பு. ரேணுகாவின் வயிற்றில் முகம் புதைத்து விசும்பி அழ ஆரம்பித்தாள். வழக்கமாய் சிந்து வீட்டிற்கு வந்தால் பற்றிக்கொள்ளும் கலகலப்பு இல்லை வீட்டில. பேரமைதியாக இருந்தது, கிணற்று மேட்டிலேயே யோசனையாகவே அமர்ந்திருந்தாள். சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பியவளை அதிர்வாக பார்த்தார்.

‘’உடனே இந்த மனநிலையில கிளம்பணுமா..? ஒருவாரம் இருந்து உன்னை ஆசுவாசப்படுத்திக்க கூடாதா..?’’

‘’ இல்லை சித்தி, நான் சோளாவந்தானுக்குத்தான் கிளம்பி வந்தேன், போனமுறை என் கூட, மாலி வந்திருந்தாரு. அந்த நியாபம் என்னை கொல்லுது. எல்லோரையும் பார்க்கணும்னு தோணுச்சு பார்த்திட்டேன். எனக்கு எங்கேயும் இருப்புக் கொள்ளல. அதுதான் நிஜம்.

பெரிய ஆசையெல்லாம் வாழ்க்கையில இல்லை சித்தி. இருந்ததும் கிடையாது. எனக்கே எனக்குன்னு ஒரு சொந்தம். கடைசி வரைக்கும் இல்லாமயே போயிடுச்சு. என் மேல அக்கறை காட்டவும், ஆளுமை செய்யவும், எனக்கே எனக்கான ஒரு உறவு. நான் யாருக்காவது அவசியமாவும், ஆதரமாவும் இருக்கணும்கிற ஆசை..! காலப்போக்குல அதுவே ஏக்கமா நின்னப்பதான், என் மாலி வந்தான் என் வாழ்க்கையில. எல்லாமே தந்தான். தகப்பனின் பாதுகாப்பை, தாயின் கர்ப்பத்தின் கதகதப்பை, நண்பனின் அக்கறையை, இன்னும் என்னல்லாமோ. மாலி இல்லைன்னா, எனக்கு இத்தனை அன்பை இழக்கிறதுக்கு சமம் அது. என்னால முடியல சித்தி.  ’’ 

சின்னக் கைப்பைதான் கையில் கொண்டு வந்தது. அதுவே கனத்தது. இதுவரைக்கும் அனுபவித்தேயிராத ஒரு உணர்வு, அதற்கு என்ன பெயரிடுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்.

‘’ டெல்லிக்கு தனியாப் போகப் போறியா சிந்து..? நீதான் போகணுமா..? அந்தப் பையன் வீட்டில யாரும் இல்லையா போய் விசாரிக்க..?’’

ரேணுகா கேட்டபோது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்தாள். சட்டென்று ரேணுகா காட்டிய அக்கறை மனதை வருடுவதிற்கு பதிலாக பயத்தைக் காட்டி மிரட்டியது. அவளுடைய ஆகாயத்தை பறித்துக் கொண்டு, அதற்கு ஆண்டவன் காட்டும் சலுகையா என்று நினைத்தபோது நிலைகொள்ளாமல் தவித்தாள்.

மாலையில் ரேணுகா தந்த மூன்று இட்லியே உள்ளிறங்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தது. அவளின் அந்த மெளனம் மெல்ல முடியாத கல்லைப் போல ஒரு பெரும் அவஸ்தையாக இருக்க, இத்தனை அன்பு அவன் மீது வைத்திருக்கும் அவளின் நேர்மையை கொஞ்சம் ஆச்சர்யமாகப் பார்த்தாள் ரேணுகா.

‘’உன்னோட உண்மையான அன்புக்கு எந்தக் குறையும் வராது சிந்து. ஒருவேளை சாமியோட விருப்பம் வேறயா இருந்தா அதையும் ஏத்துக்கணும்.’’ என்ற ரேணுகாவின் வார்த்தையில் இருந்த அர்த்தத்தை காதில் ஏற்றிக் கொள்ளாமல் அமைதியாக எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சரவணன் தான் பஸ் ஏற்றிவிட உடன் வந்தான். வழி நெடுக உணர்வுகள் மாலியைத் தேடியே ஒய்ந்தது. நாட்கள் ஒன்றும் அத்தனை வேகமாகவெல்லாம் நழுவி போயிருக்கவில்லை. அவனோடு கை கோர்த்துக் கொண்டு கடந்த சாலைகள் தனியாக வந்தவளை, வேதனையாய் நலம் விசாரிப்பது போல் இருக்க, டீக்கடையில் தொங்கிய நடிகையின் படத்தை வெறித்து பார்த்துக் கொண்டே நின்றாள், சிந்தனையே இல்லாமல்.

ஜனசந்தடியின் நெருக்கத்தில் பேருந்துகள் புறப்படுவதும், புகுவதுமாய் மொத்த இடமும் சுறுசுறுப்பாக இருக்க, அவள் மட்டும் இதமற்றே நின்று கொண்டிருந்தாள். 

‘’வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்து தரட்டுமா சிந்து..?’’ அவள் மெளனத்தின் கனத்தை பொறுக்க முடியாமல் சரவணன் கேட்டான்.

தலை அசைத்தாள் வேண்டாம் என்று.

‘’ சாப்பிட எதாச்சும்..? இல்ல புக் வாங்கிட்டு வரட்டுமா..?’’

சென்ற முறை மாலி சென்று சரியாக பார்க்காமல் பழைய ராணி புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்துவிட்டு, இவளும் கவனிக்காமல் உள்ளே வாங்கி வைத்துவிட்டு, நடுவில் பார்த்து, அவனை முறைத்து…

ஐயோ..’ என்று தலையை பிடித்துக் கொண்டு கூச்சலிட வேண்டும் போல் இருந்தது.

‘’எதுக்குடா அதெல்லாம்..? நான் என்ன பிக்னிக்கா போறேன்..?’’ என்றாள் மெதுவான குரலில். அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அந்தக் கண்கள்… அதில் கசிந்த வேதனை அந்த உடன் பிறந்தவனை என்னவோ செய்தது.

‘’ இவ்வளவு கோழையா சிந்து நீ..?’’

‘’ தெரியல. ஆனால் நான் யோசிச்சு, பில்டப் செய்து வச்சிருந்த அளவு தைரியசாலியும் இல்ல போலிருக்குடா..’’ என்றாள்  வலியான சிரிப்போடே. 

‘’அன்பு என்னை ரெம்பவே பலகீனம் ஆக்குது. கிடைக்காமல் எனக்கு கிடைச்ச அந்த அன்பு, எனக்கு இல்லையோங்கிற பரிதவிப்பு என்னை இன்னும் இன்னும் பலகீனமாக்குது. பார்ப்போம்.’’ 

பஸ் ஹாரன் அடிக்க, சிந்து சரவணனைப் பார்த்து மெதுவாய் தலை அசைத்துவிட்டு ஏறிக் கொண்டாள். ஏனோ முதன் முறைப் பிரிவைப் போல, சரவணனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

‘’எக்சாம் எல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும் நான் உன் கூட வரட்டுமா சிந்து…’’ என்றான் பரிதவிப்போடு. ஜன்னல் கம்பிகளை பற்றி இருந்த சரவணனின் கைகளைப் பற்றி மெதுவாக ஆறுதல் சொன்னாள். 

பேருந்து புறப்பட்டு விட்டது. சுற்றி வந்து வெளியில் வரும் வரைக்கும் சரவணன் அங்கேயேதான் நின்று கொண்டு இருந்தான். கடந்து போகும் போது கூட திரும்பாமல் சீட்டில் சாய்ந்து இருந்தவளின் ஓய்ந்த தோற்றம் அவனை என்னவோ செய்தது.

எத்தனை நினைவுகள் ஒற்றை பயணத்தில்… ஆயிரங்காய்ச்சி மரத்தைப் போல, அந்த ஒரு காய்ப்பிலே சொப்பிக் கிடந்தது நினைவுகள் எல்லாம்.

                     ❤️

சோளவந்தான் வந்து ஆட்டோ பிடித்து சென்ற முறையின் நினைவுகளை சுமக்க முடியாமல் கனத்தபடி மாலியின் வீட்டிற்கு வந்து இறங்கியவளுக்கு, இத்தனை நேரம் இருந்த தைரியம் எல்லாம் பொடிப் பொடியாய் உதிர்ந்து போயிருந்தது..   

இவள் வருகின்ற தகவலைச் சொன்னதால், சரஸ்வதி வாசலில் காத்திருந்தார். கைப்பற்றி உள்ளே அழைத்துப் போனார். அந்த கைகளில் அப்படியொரு நடுக்கம் தெரிந்தது. சங்கீதாவும் சம்யுக்தாவும் பக்கத்தில் வந்து நின்று கொண்டார்கள். சில நிமிசத்துக்கு யாரிடமும் வார்த்தைகள் இல்லை. 

என்ன பேசுவது… எப்படி பேசுவது என்றே தெரியவில்லை. எத்தனை நேரத்துக்கு மெளனத்தை போர்த்திக் கொண்டு நிற்பது..? அத்தனை பேருமே கரை உடைக்கும் அபாயத்தில் இருந்ததால் பேசாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எத்தனை நேரத்துக்கு..?

‘’ சங்கி, அண்ணியை உன் பாத்ரூம் கூட்டிட்டுப் போ. கை கால் கழுவிட்டு வரட்டும்.’’ அந்த ‘ அண்ணி’ யில் தந்த அழுத்தத்தில் இத்தனை நேரத்து தற்காப்பும் உடைந்து நொறுங்க, துப்பட்டாவை சுருட்டி வாயில் வைத்தபடி மடங்கி அமர்ந்து சிந்து கதற,

உணர்வு குவியலானது அந்த இடமே. எல்லோருமே அழுதார்கள். ஆனால் எதற்கு என்று சரியாக யாருக்குமே வரையறுக்கத் தெரியவில்லை.

" ஏன் அழுதாய்... ஏன் அழுதாய்...

என்னுயிரே என் அழுதாய் ...

நான் அழுது ஒய்ந்ததிற்கு ...

நன்றி சொல்லவா அழுதாய் ...


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

வனமாலி - 25

வாழ்க்கை ஒன்றும் எளிதாகி விடுவதில்லை,அத்தனை பேருக்கும். கசக்கி எரிந்த காகிதத்தின் மனநிலையில் இருந்தார்கள் அனைவரும். மெல்ல மெல்ல தன்னை இந்த பிரச்சனைகளுக்குள் அமிழ்ந்து போக விடாமல் மீட்டெடுக்கும் மன நிலையில் இருந்தாள் சிந்தூரி.

அத்தனை பேரின் கண்களும் அழுது அழுது சிவந்திருந்தது கண்ணின் அடிசுவடு வீக்கம் கண்டிருந்தது.

சரஸ்வதி தட்டில் இரண்டு தோசைகளை எடுத்து வைத்துக் கொண்டு சிந்துவின் எதிரில் அமர, அமைதியாக வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சிந்தூரி

‘’சாப்பிடு சிந்தூரி. இப்படி ஆளுக்காள் சாப்பிடாம இருக்கிறதால,  எது மாறிடப் போகுது..? பசியோட இருக்கிறதுதான் மிச்சம்.’’ என்றவர் தோசையை விள்வி, அவரே சட்னியில் தோய்த்து ஊட்டிவிட ஆரம்பிக்க, வாங்கிக் கொண்டவள் தொண்டை அடைக்க அப்படியே அமர்ந்திருந்தாள்.

எத்தனை முயன்றும் நான்கு விள்ளலுக்கு மேல் உள்ளிறங்க மாட்டேன் என்று கண்ணீர் அழிச்சாட்டியம் செய்ய, கைகளை உயர்த்தி போதுமென்று கூறி, நிறுத்திக் கொண்டாள். சம்யுக்தா எழுந்து போய் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து தர, தர்மசங்கடமாக இருந்தது சிந்துவுக்கு.

‘’நானே வந்து எடுத்துக்கறனே சம்யு. நான் வேற இல்லடா உங்க வீட்டில.’’ என்றவள் முகத்தோடு முகம் சேர்த்துக் கொண்டு. எல்லாம் இயல்பாக இருந்தது என்பது நிஜமானாலும் இந்த நிமிசம் நெகிழ்வாய் உணர்ந்தார்கள் அனைவருமே.

அப்போதுதான் சுந்தரம் வெளியில் இருந்து உள்ளே நுழைய, பார்த்தவள் கண்கள் அதிர்ந்து போனது. காலில் பெரிய கட்டோடு இருந்தார். வலக்கையில் தூளி கட்டி இருந்தார்கள். சமீபத்தில் விபத்தைச் சந்தித்ததை அவருடைய முகக் குறிப்பு சொன்னது

இவளைப் பார்த்தவர் மனம் நொடியில் வெதும்பி ததும்பியது. மெல்லிய தலை அசைப்பு. சென்றமுறை இதுகூட இல்லை என்ற நினைவு அவளுக்குள் வந்து போகாமல் இல்லை.

எழுந்து போய் அவர் அருகில் நின்றாள். நிமிர்ந்து பார்த்தவர் கண்களில் ஆயிரம் கேள்விகள், ஆனாலும் வாய் மெளனம் தரித்தே தான் இருந்தது

‘’ எப்படி இருக்கேமா..?’’

‘’நல்லா இருக்கேன் அங்கிள். உங்களுக்கு என்னாச்சு..?’

’’ கீழே விழுந்துட்டேன் மா. மலைக் கோயிலுக்கு போய் இருந்தேன். அப்போ சுகர் அதிகமாயிடுச்சு. மயங்கி உருண்டதுல,  அடிபட்டுப் போச்சு. எல்லாம் நேரம் என்னத்தை சொல்ல..? ’’ என்றவர் நீண்ட மெளனம் காத்தார். வார்த்தை இலக்குகள் தெரிந்தாலும், அதை தொடங்க காலம் நேரம் பார்க்கும் அவருடைய தவிப்பு புரிந்தது.

‘’ஏதாவது தகவல் வந்ததாமா..?’’ 

‘ இல்லை…’ என்று தலை அசைத்தாள்.

‘’என்ன சொல்லிட்டுப் போனான், கடைசியா..’’ 

அந்த கடைசியா’ என்ற பதம் நெஞ்சை அடைக்க, மெல்ல கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள். அவள் தவிப்பை சரியாய் நாடி பிடித்தவர் சொன்னார்.

‘’எதுவுமே கடைசி ஆயிடக்கூடாதுனு உயிர் தவிக்குது. ஆனால் எதுவும் நம்ம கையிலே இல்லையே. உன்னைப் பார்த்தா மனசோட பாரம் குறையும்னு நம்பி இருந்தோம். அதனாலதான் உன்னை வரச்சொன்னா சரஸ்வதி. ஆனால், உன்னைப் பார்த்ததும் மனசு இன்னும் பாரமாகிடுச்சு.’’

‘’ சரியாகிடும் அங்கிள் எல்லாம்.’’என்றாள் ஆத்மார்த்தமாக.

‘’டெல்லிக்கு போய் அவனை தேடி பார்த்துட்டு வரணும்னு இருக்கு உண்மையில.ஆனால் உடம்பு ஒத்துழைக்கல.இதுகூட என்னை மாதிரி ஒரு தகப்பனுக்கு தண்டணை தான்.  சரியா தூங்கி எத்தனையோ நாள் ஆச்சு. அதனால் பி.பியும் கண்ட்ரோல்ல இல்லை இப்போ இந்த பிரச்சனை வேற…’’ என்றார் கை கால்களை பார்த்துக் கொண்டே.

அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். சென்ற முறை பார்த்தபோது இருந்த கம்பீரத்தை முழுக்க யாரோ வழித்து எடுத்துக் கொண்டு போனது போல் இருந்தது, அவர் தோற்றம். கண்கள் வட்டம் சேர்ந்து, கண் சுவடுகள் உப்பிப் போய் பரிதாபமாக இருந்தது.

வீட்டு பெண்களைப் போல் வெளிப்படையாக அழ இயலாமல் போனது அவருடைய கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது.

யாரிடமாவது மனம் விட்டு அழுதால், மொத்தமாய் தன்னை தொலைத்து விடாமல் பாதுகாத்துக் கொள்வார் என்பது நன்றாக புரிந்தது.

‘’என்கிட்ட அவன் பேசியே பல வருசம் ஆச்சு…’’ என்றார் கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டே. கைகளை கட்டிக் கொண்டே அவரை கனத்த மனத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தாள். 

‘’இன்னும் சரியாச் சொல்லணும்னா, நான் அவன்கிட்ட பேசின்னு தான் சொல்லணும். அவனுக்கு என்கிட்ட இருந்த பெரிய மனக்குறையே, நான் அவனை, பிள்ளையா பார்க்கலைன்னு தான். இப்போ யோசிச்சா அதுவும் கூட ஒருவகையில சரியாத்தான் இருக்கு.  அவன் மனத்தாங்கல் படர மாதிரித்தான் நானும் நடந்துகிட்டு இருக்கேன்.

அது என் வரையில் நியாயமா இருந்தாலும், ஒரு பிள்ளையா அவனுக்கும் வேற வேற கனவுகள் இருக்கிறது குற்றமா என்ன..? நான் சொன்னதை படிக்கல, நான் சொன்ன வேலைக்கு போகல, இப்படி அவனைச் சுத்தி குற்றச் சாட்டுகளை மட்டுமே சொல்லிட்டு இருந்த நான், அவன் என்னோட கண்ணாடி இல்லைங்கிற விசயத்தை மறந்து போனேன். 

இப்போ எல்லாத்தையும் சரிசெய்துக்க சொல்லி மனசு ஆளாப் பறக்குது. இப்படி காணாமல் போவான்னு தெரிஞ்சிருந்தா, அவன் கிட்ட இன்னும் கொஞ்சம் அணுசரணையா இருந்திருப்பேன். அவன் கூட எனக்கு தெரிஞ்சு, நான் சிரிச்சு பேசினது கூடயில்லை.

நல்லா கிரிக்கெட் விளையாடுவான். அவன் ரூம்ல இருக்கிற கப்போர்ட்டை திறந்து பார்த்தால் தெரியும், எத்தனை எத்தனை மெடல் இருக்குன்னு.’’ என்றவர் கொஞ்சமாய் தடுமாறி எழுந்து நின்றார். அவளை நோக்கி கைகளை அசைத்து விட்டு, உள்ளே நடக்க, மிடறு விழுங்கியபடி பின்னால் சென்றாள்.

சத்தமிட்ட மர கபோர்டை திறக்க, சரஸ்வதியும் பின்னால் வந்து நின்றார் அமைதியாக. 

‘’ இந்த கபோர்ட்டுக்கு எண்ணெய் விடு சரசு. இறுகி கிடக்குது பாரு. காத்துப் போச்சுன்னா உள்ளே இருக்கிற பொருள் எல்லாம் வீணாப் போயிடும் இல்ல…பித்தளை மெடல் எல்லாம் கறுத்து போயிடும். ’’ என்றுவிட்டு மெல்ல மெல்ல ஒற்றைக் கையால் அத்தனை பொருட்களையும் கிளற ஆரம்பித்து இருந்தார். இறுகிய அவரின் இதயத்துக்கும், கண்ணீர் எண்ணெய் விட்டு இருக்கிறார் என்று நன்றாகத் தெரிந்தது.

அத்தனையும் மாலியுடையது என்று நன்றாகவே தெரிந்தது. துக்கம் தொண்டையை அடைக்க அமைதியாக நின்றாள். கால்களை தரையில் வழுவாக பொருத்திக் கொண்டாள்.

‘’ இது இண்டர் காலேஜ் லெவல்ல கிரிக்கெட் விளையாடனப்போ பெஸ்ட் ஸ்பின்னர்னு கிடைச்ச மெடல். அந்த கிரிக்கெட் மட்டை மாதிரியான சீல்டு, பெஸ்ட் ஆல்ரவுண்டர்க்கு கிடைச்சது. அதுக்கு ஒரு சர்ட்டிபிகேட்டும் வாங்கிட்டு வந்தான். அதை என்கிட்ட காட்டறதுக்கு சார்க்கு ஈகோ. அவங்க அம்மாகிட்ட காட்டிட்டு  டேபிள்ல வச்சுட்டு போயிட்டாரு துரை. நான் மெதுவா எடுத்து பார்க்கணுமாம். பார்ப்பனா நானு…’’ சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தார். 

உள்ளிருந்து தூசி தட்டி ஒரு ஆல்பத்தை எடுத்து டேபிளின் மீது வைத்தார். முனை மடங்கி போயிருந்தது. அதை எடுத்து சில படங்களில் கண்களை பதித்து கொண்டார். அந்த ஷணங்களில் அவருடைய உதடுகள் துடித்து நர்த்தனம் ஆடியது. அவள் கண்களை அகற்றாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

‘’அவனுடைய எல்லா வயசு போட்டோவும் இதுல இருக்கு, ஒரு வயசுல, குலதெய்வம் கோயில்ல சாப்பாடு ஊட்டினது முதல் எல்லா படமும் இருக்கு. இப்பத்தான் கூர்ந்து கூர்ந்து பார்க்கிறேன், அவன் அப்படியே என் சாயல். அந்த ஏறுநெத்தி, புது நிறம், வளர்த்தி எல்லாமே என்னை மாதிரிதான். சிரிப்பு மட்டும்தான் அவங்க அம்மா போல.’’

சின்னதாய் கண்ணீரோடு சேர்த்து சலுகை விலையில் புன்னகையும் பிறக்க, இடைவெட்டி அவரின் நினைவுகளை களைக்காமல் அமைதியாக பார்த்தபடி நின்றாள்.

அதன் பிறகு அவர் எதுவுமே பேசவில்லை. ஒவ்வொரு புகைப் படத்திற்கும் பின்னேயும் புதைந்து கிடைக்கும் நினைவுகளை, அந்த நினைவுகளில் தான் பங்கெடுத்துக் கொள்ள இயலாத துயரத்தை உதடுகள் முணுமுணுக்க அசை போட்டுக் கொண்டு இருந்தார்.

வெளியில் வந்து ஹாலில் அமர்ந்து கொண்டு, முழங்காலை கட்டிக் கொண்டாள். சரஸ்வதியும், பெண்களும் அறையை ஒதுக்கிக் கொண்டு இருந்தார்கள். ஆங்காங்கு சுவரில் மாலியின் புகைப்படம் கருப்பு வெள்ளைகளிலும், வண்ணத்திலும் பளபளப்பு குன்றிப் போய் இருந்தது.

டீன் ஏஜ் பருவத்தில் கொத்சலாய் நின்றவன் புகைப்படத்தைப் பார்க்கும் போது  அனிட்சையாக புன்னகை அரும்பியது. சில நிமிடங்கள் சென்றபிறகு கால்களை விந்திக் கொண்டே சுந்தரம் வந்து அமர்ந்தவர், கேட்டார்,

என்னால இந்த நிலமையில பயணம் பண்ண முடியுமானு தெரியல. ஆனால் இங்கே இருக்கவும் முடியல. தவிப்பா இருக்கு.’’ என்றார் ஆற்றாமையாக.

நானும் ரியாஸ் அண்ணாவும் கிளம்பறோம் அங்கிள். நீங்க கஷ்டப்பட வேண்டாம் ப்ளீஸ்.’’

‘’படவும் முடியாது, என்னோட உடல்நிலைக்கு. பக்கத்தில் இருந்த காலத்தில ஏறிட்டு கூட நான் பார்த்ததில்லை அவன் முகத்தை. இப்போ அவன் முகத்தை பார்க்க மாட்டோமானு இருக்கு. என் இந்த தவிப்பு என்னை மாதிரி பல தகப்பன்களுக்கும் மகன்களுக்குமான இடைவெளியில் நிறைஞ்சு கிடக்குற ஈகோவை காட்டுது.

இருக்கும் போது தவற விட்டுட்டு, இல்லாதபோது தேடி திரியறதால என்ன பிரயோஜனம்..? எதிர் இருக்கை காலியாக இருக்கும் போதுதான் நமக்கு நம்ம செய்த தப்பெல்லாம் ஆற்றாமையா கண் முன்னால வருது. சண்டை போடவும், நாம யார்னு நிரூபிக்க ஆளற்று போற, வெறுமைதான் உண்மையில தோல்வி.

இந்த கையால எத்தனை தடவை அவனை அடிச்சிருப்பேன் தெரியுமா..? தகப்பன் தான்.எனக்கு எல்லா உரிமையும் இருக்கு தான். அதுக்கு..? தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை கை நீட்டி அடிக்கிறது எந்த வகை நியாயம்..?  இப்ப தோணினது எதுவுமே அப்பத் தோணவே இல்லை.’’ அருகில் இருந்த துண்டால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டார்.

தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், இல்லாட்டி தான் காட்டுறது மட்டும்தான் சரியான பாதை. இந்த சிந்தனை தான் என்னை என் பிள்ளையை விட்டு விலக்கி வச்சது. நான் சொன்னதை கேட்கல. நான் சொன்ன பாடத்தை படிக்கல… அட போங்கய்யானு இப்பத் தோணுது. 

ஊருக்கும், உறவுக்கும் முன்னாடி நிறையவே விட்டு கொடுத்திருக்கேன். அப்பெல்லாம அவன் கண்ணுல ஒரு தவிப்பு தெரியும். எப்பப்பா என்கூட சரியா பேசுவீங்கங்கிற மாதிரியான அங்கலாய்ப்பு அந்தக் கண்ணுல இருக்கும். நான் அவனுக்கு வழிகாட்டவே இல்லை. அவனை வழிநடத்தவும் இல்லை. காட்டு செடி மாதிரி அவனா வளர்ந்து அத்தனை சந்தோச துக்கத்தை அவன் அம்மாகிட்ட மட்டும் சொல்லிட்டு அலைஞ்சான்.

இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அவனோட இன்னும் இணக்கமா இருந்திருப்பேன். அத்தனை வேகமா பைக் ஓட்டுவான். ஒருநாள் கூட அவன் பின்னால உட்கார்ந்து நான் வந்த நினைவில்லை. இன்னைக்கு யாராவது தகப்பன் பிள்ளைங்க பைக்கில போறதைப் பார்த்தா, மனசு என்னவோ அப்படி பிசையுது.’’

வேகமாய் எழுந்து வந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். இருவருக்கும் பரிமாறிக் கொள்ள, பரஸ்பரம் வார்த்தைகள் இல்லை. ஆறுதல் என்பதை உடல் மொழியாய் மட்டுமே உணர முடிந்தது.

வந்திடுவான் அங்கிள்…’’ என்றாள் அழுத்தமே இல்லாத குரலில்.

மெல்ல தலை அசைத்தார். அவரின் களைந்த தோற்றமும், அந்த சூழலும், குடும்பமும், அவளை என்னவோ செய்து கொண்டிருந்தது. விடிந்ததும் அங்கிருந்து கிளம்பி விட்டாள். வாசல் வரைக்கும் வந்து நின்று வழியனுப்பி வைத்தார்கள்.

இந்த வழியனுப்பலோடு அத்தனையும் வழிந்து போகப் போகிறதா என்ற நினைவுகள் கேள்வி கேட்க, தனியாய் தெருவில் இறங்கி நடந்தாள்.         

துணையாய் அருகில் வந்து, தோள் சேர்த்து சில்மிஷம் செய்து, சாலையில் தனக்கு மறுபக்கமாகவே நடத்திக் கொண்டுசின்ன விசயத்தைக் கூட விளக்கிக் கொண்டு, உள்ளங்கையில் விரல் பதித்து நடத்திக் கொண்டு சாலையெங்கும் நினைவாக விதைத்தவன், இன்று தனிமையை மட்டும் தந்துவிட்டு விலகி நிற்கிறான்.

நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினாள்

''...கண்ணே நவமணியே

உன்னைக் காணாமல் கண் உறங்குமோ

ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்

வாசம் உள்ள பிச்சி எனக்கு

வாய்க்காது எக்காலும்

கண்ணே நவமணியே

உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…''

 

வனமாலி26

 

ண்களை அழுத்தி துடைத்துக் கொண்டு, திரையில் தெரிந்த எண்களை பார்த்தார் சகுந்தலா, தூக்க கலக்கத்திலேயே. இரவு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவே மணி இரண்டைத் தாண்டி இருந்தது. அதன் பின்னாக குளித்து முடித்து படுக்கையில் சரிந்து, கண்களை மூடியதும் அஜெய்யின் பால் சிரிப்பும், அடிக்கடி தலை கோதும் அழகும், கண் சிமிட்டும் மேனரிசமும், அவனின் ஒவ்வொரு வளர்ச்சி பருவமும், வந்து தூக்கத்தை தூறெடுத்து கொண்டு நகர்ந்து ஒடிக் கொண்டு இருந்தது. அவன் கல்லூரி பருவத்தில் இருந்தபோது, சகுந்தலாவின் ஜூனியர் மாணவிகள் காரணமே இல்லாமல் வீட்டில் வந்து உட்கார்ந்து கிடப்பார்கள் அவனை சைட் அடிப்பதிற்கு. இந்த வலியான நிமிசம் கூட, அதையெல்லாம் நினைத்தால், மெல்லிய புன்னகை உண்டாகிறது.

 

வனமாலியின் உருவத்தில் ஒட்டு விதையாய் அஜெய் இன்னும் மனசிற்குள் முகிழவே இல்லை. இவருக்கு பதிலாய் இவர்..’ என்று ஆள் மாற்றத்தை நெடுந்தொடரில் கூட ஏற்றுக் கொள்ள ஒவ்வாத மனங்களில், எப்படி இன்னொருவனை ஏற்றுக்கொள்ள போகிறது என்ற கேள்வி முதுகை துளைத்து வெளியில் நிற்கிறது.

 

பகலில் வேலையோடு பயணப்பட்டுக் கொண்டே நினைவுகளை ஒளித்துக் கொள்பவளுக்கு, இரவானால் விடைதெரியாத ஆயிரம் கேள்விகள் அவள் இதயத்தை கவ்விக் கொண்டு துடிக்க விடாமல் தடுத்துக் கொண்டு இருந்தது. அத்தனை பேருக்கும் ஆறுதல் சொல்வதாலேயே அவள் தெளிவாக இருக்கிறாள் என்று பொருளில்லை.

 

  ஒலித்த அலைபேசியை எடுக்க, உடனடியாக மருத்துவமனைக்கு வரச்சொல்லி குறிப்பு மட்டும் கிடைக்க, இன்னும் மிச்சமிருந்த சொச்ச தூக்கத்திற்கு ஒத்திவைப்பு தீர்மானம் போட்டுவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்தாள்.

 

   தயாராகி வெளியில் வந்தபோது. முழுதுமாய் விடிந்திருந்தது. அம்மாவை அழைத்து விசயத்தை சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினாள். அதிகாலை பனியை கிழித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர, தன்னுடைய அறைக்குச் செல்லும் முன்னே டாக்டர் மாதூரிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

  ‘’ குட் மார்னிங் டாக்டர் சகுந்தலா... நான் உங்களுக்காக அஜெய்யின் ரூமில் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ப்ளீஸ் கம் தெர்.’’ 

 

   அறையை சமீபிக்கும் முன்னே லாபியில் காத்திருந்த மாதூர் இனம் காண முடியாத துள்ளலோடு சகுந்தலாவை நோக்கி வந்தார்.

 

 வார்த்தைகள் தேவையில்லாமலே அவர் மகிழ்வின் காரண காரியம் புரிந்தது. வேகமாக எட்டெடுத்து வந்தாள். 

 

 ‘’ டாக்டர், என்னாச்சு இத்தனை காலையில உங்ககிட்ட இருந்து அழைப்பு..? மூணு மணிக்குத்தான் நான் கிளம்பிப் போனேன்.’’

 

‘’ ஐ நோ டாக்டர் சகுந்தலா. ஆனால் இப்போ இந்த நிமிசம் நீங்கதான் இங்கே இருந்தாகணும். ப்ளீஸ் கம் இன் சைட்.’’ பதிலுக்கு காத்திராமல் வேகமாக அவர் அறையை நோக்கி நகர, சகுந்தலாவிற்கு உலகத்தில் யாருக்கும் ஏற்படாத அந்த முதல் உணர்வு ஏற்பட்டது.

 

  கால்கள் சன்னமாய் நடுங்கியது. அழுத்தத்தில் அடுத்த அடி இடம் பெயர முடியாமல் நடுங்கியது. இளைத்து கருத்துப் போய் தாடி அடர்ந்து. தாடை எலும்பு துருத்தி. இமைகள் மெல்ல படபடத்துக் கொண்டு அசைவுகளோடு கட்டிலில் இருந்தவனை கண்டதும் உடல் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது.

 

   பொருத்திய மூளையை முதுகு தண்டும், நரம்புகளும் ஏற்றுக் கொண்டால், எண்ணி பதினைந்து நாள் போதும் அந்த மூளையோடு இந்த தேகம் பொருந்திப் போக. இதுவரைக்கும் எலிகளும், வானரங்களும் இப்படி கூடி கடந்து உயிர்பித்து எழுந்திருக்கின்றன. முதன்முறையாக, அண்டத்தில்  அந்த அவதாரம் எடுத்திருக்கிறான், வனமாலிக்குள் அஜெய்யன்.., இருவருமே அந்த பாற்கடலில் பள்ளி கொண்ட மாதவனின் அவதாரம் தானே..!!! 

 

    உடல் முழுக்க உலர்ந்து இருந்தது. பெரும் விபத்தையும், இத்தனை நாளாய் மருத்துவ உபகரணத்தினால் உயிர்த்து இருந்ததும், ஒரு ஸ்மரனையற்ற நிலையை அவனுக்கு தந்திருந்தது. அருகில் சென்றவர், சகுந்தலாவை தலை அசைத்து பக்கத்தில் வரும்படிக்கு அழைத்தார்.

 

  அருகில் நின்றவள் படுக்கையில் கிடந்தவனின் முகத்தை பார்த்தபடியே நின்றாள். 

 

  ‘’ அஜெய்… மை பாய்..! நான் பேசறது கேட்குதா..?’’ மெல்லிய குரலில் குனிந்து அவன் காதருகே கேட்டார். அவரின் அந்த மெல்லிய சத்தம் எந்த தடையும் இல்லாமல் அவன் காதுகளை கடைந்து இடப்பெயர்ச்சி செய்திருந்த அஜெய்யின் மூளையைத் தொட்டது.

 

  மெல்லிய அசைவு அவனுடைய கண்மணிகளுக்குள். மூடிய கதவுக்கு பின் மூச்சடைத்து இங்குமங்கும் அலைந்தது. கால் பெருவிரல்கள் இரண்டும் மெல்ல அசைந்து உச்சி வரைக்கும் உசுப்பேற்றும் முயற்சியில் இருக்க, மெல்ல தன் நிலை மறந்தாள் சகுந்தலா. 

 

   இந்த பரவசத்தை இந்த அண்டத்தில் முதலாவதாக அனுபவிக்க போவதிற்கு காத்துக் கொண்டு நின்றாளோ, அந்த உணர்ச்சியை அனுபவித்த நொடி, அதற்கு எப்படி வினையாற்றுவது என்று தெரியாமல், நடுக்கத்துடன் நின்று கொண்டு இருந்தாள். உடலில் உண்டான பரவசம், நடுக்கத்தின் மூலமாக வெளியாகிக் கொண்டு இருக்க, அருகில் நின்ற நர்ஸ் எஸ்தரின் கைகளை பற்றிக் கொண்டு நின்றாள். உடல் தரையில் இருக்கின்ற உணர்வே இல்லை.

 

   டாக்டர் மாதூர் நான்காவது முறையாக அழைத்தபோது, கண்களைத் திறக்காமல், அஜெய்யிடம் இருந்து மெல்லிய சத்தம் ஹீனமாய் வந்தது. சகுந்தலாவின் உடலில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் செலுத்தியது போல் இருந்தது.

 

  ‘’ அஜெய்… மை பாய். இன்னும் நீ உயிரோட இருக்க. உனக்கு எதுவும் நடக்கல. உனக்காக உன் குடும்பம் காத்திருக்கு. சகுந்தலா உன் கண் திறப்பிற்காக காத்திருக்காங்க. ஜஸ்ட் மதுரிமா உன்னை பார்த்தால் எவ்வளவு சந்தோசப்படுவா..?’’ அவர் ஒவ்வொரு வார்த்தையாக பேசிக் கொண்டிருக்க, அந்த வார்த்தைகள் அவன் நினைவுத் தீயை உரசி உரசி பற்ற வைக்கும் சிக்கி முக்கிக் கல்லைப் போல இருந்தது.

 

  அவனுடைய ஆறடி கூண்டிற்குள் இருந்த உயிர் பறவை, உள்ளுக்குள் படபடத்து,சிறகடித்து, அலைபாய்ந்தது. பள்ளத்தில் சிக்கிய இயந்திரத்தை, நெம்பி மீண்டும் ஒட வைக்க ஒரு புறவிசை போதும். அவனுடைய மூளையை அவர் வார்த்தைகள் தட்டி எழுப்பினால் போதும். அது மொத்த உடலையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.

 

  ‘’ அஜெய்….

 

    அஜெய்…

 

   அஜெய்… கண்ணைத் திற…’’

 

  மாதூர் சொல்லிக் கொண்டே இருந்தார். உலர்ந்து ஒட்டிக்கிடந்த கண்களை பிரித்து விட அவனும் வெகுவாய் பிரயத்தனப்படுவது தெரிந்தது. திரும்பி சகுந்தலாவைப் பார்த்து தலையசைத்தார். அவள் முடியாது’ என்பது போல் தலையசைத்து மறுக்க, அவர் கண்களில் கருணையும் அன்பும், ஒருசேர மிதந்தது.

 

   எஸ்தரிடம் சைகையால் எதுவோ சொல்ல, ஒரு சின்ன ட்ரேயில் நீரும், பஞ்சு உருண்டையும் எடுத்துக் கொண்டு வந்து நீட்ட, சகுந்தலா நடுக்கத்துடன் அதை பெற்றுக் கொண்டபடி அஜெய்யை நெருங்கினாள். நீரில் முக்கிய பஞ்சை நுனி விரலால் பிழிந்து, அதை அவன் இமைகளில் வைத்து ஈரப்படுத்தினாள். அதற்குள்ளே அழுது கரைந்திருந்தாள், பரவசத்தால். கண்மலர் திறப்பு.

 

   ‘’ ஓபன் யுவர் ஐஸ். மெல்ல மெல்ல உன் கண்களை திறக்க முயற்சி செய் அஜெய். நீ பார்க்க, உனக்காக இந்த உலகம் மறுபடி பிறந்திருக்கு. எல்லாரும் உன் வரவிற்காக காத்து இருக்காங்க. ஒபன் யுவர் ஐஸ், அஜெய். கமான்…’’

 

   ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை அழுத்தமாக அவனுடைய உயிரில் பதிந்து எழுந்தது. கிட்டத்தட்ட ஏழு நிமிடத்தை செலவு செய்து கொண்டிருந்தான் இமை திறப்பிற்கு. ஒரு மருத்துவராய் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களும் செய்தபடி காத்திருக்க, கறுத்து உள்ளடங்கி இருந்த இமைகளை மெல்ல மெல்ல அசைத்து திறந்திருந்தான். 

 

  சரியாக நாற்பத்தைந்து நாள். இத்தனை பெரிய விபத்திற்கு பிறகு, அப்சர்வேசனில் உடம்பை துளைத்து, இன்னொரு உயிரை புகுத்தி, கிட்டத்தட்ட எந்திரமாய் கையாளத் தொடங்கி படுக்கையில் கிடந்த பெரிய இடைவெளிக்கு பிறகு முதன்முறையாக இமை ஜன்னலைத் திறந்து, தன்னில் இருந்து எட்டிப் பார்க்கிறான்.

 

  அவன் கண்கள் மெல்ல மெல்லத் திறக்க, கையில் இருந்து ட்ரே சிதறி தரையில் விழ, இரண்டு கைகளும் தந்தியடித்து நடுங்க, தவிப்போடு காத்திருக்க ஆரம்பித்திருந்தாள்.

 

  ‘’ அஜெய்… நான் பேசறது புரியுதா..?’’ கேட்டபோது மெல்ல இமைகளை மூடி திறந்து ஆமோதித்தான்.

 

   ‘’ ஓ..! ஐ ஹேவ் நோ கைடு, ஹவ் டூ ஹேண்டில் திஸ் மினிட். பிகாஸ் ஐயம் த ஃபர்ஸ்ட் பெர்சன், ஹு ஒன் பேஸ் திஸ் சிச்சுவேசன்.’’ அருகில் இருந்த வெளிநாட்டு துறை வல்லுனர்களிடம் சொன்னபோது அவர்கள் தோளில் தட்டி ஆசுவாசப்படுத்தினார்கள்.

 

   ‘’ அஜெய், என் பக்கத்தில் இருக்கிறது யார்னு உனக்கு அடையாளம் தெரியுதா மை பாய்…’’ கேட்டபோது தலையைத் திருப்பாமல், கண்களை மட்டும் சுழற்றி உணர்ச்சி பிடியில் நின்ற சகுந்தலாவை மங்கலாக பார்த்தான்.

 

   ஒரு நொடி… இரண்டு நொடி… மூன்று நொடி… பார்த்துக் கொண்டே விழிகளை அசைக்காமல் இருந்தான். அவன் சொல்ல போகும் வார்த்தைக்காக அவள் இதயம் நின்று நின்று துடித்தது.

 

   ‘’ ச.. கு…ந்… தலா…’’ என்றான் அஜெய், இதுவரை அவளுக்கு பரிட்சயம் இல்லாத வேறு குரலில்.

 

   கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தால் கடல் நீர் எல்லாம் எழுந்து உயந்து. முகட்டு வானத்தை முத்தமிட்டு திரும்பியது போல் இருந்தது அவளுக்கு. 

 

''...அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள்

இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள்...

 

ஒரு மனதுக்குள் ரகசியம் இருக்கின்றது

அது கனவிலும் நினைவிலும் தவிக்கின்றது...

அவன் மறந்து விட்டான் இவள் மறக்கவில்லை

கதை நடக்கின்றது…''


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

 வனமாலி - 27

உலகம் அழகாய் பூ -த்துக் கொண்டிருந்தது. நடக்கும் வரைக்கும் இருந்த குழப்பம் எல்லாம் நொடியில் விலகி, மெல்ல மெல்ல ஒரு சந்தோச உலகத்தில் கடத்திக் கொண்டு சேர்பித்தது போல் இருந்தது சகுந்தலாவிற்கு.

 

  வேறு குரலில் அழைத்தாலும், அந்த அழைப்பில் இருந்த அன்பின் முகவரி, வேறு உடலுக்குள் இருந்தாலும், அந்த உயிருக்குள் இருந்த தனக்கான பந்தம், அந்த நினைவு பெட்டகத்தில் கட்டி வைத்திருந்த தன் நெஞ்சத்தின் அழற்சி, எல்லாமுமாய் சேர்ந்து என்னவோ செய்து கொண்டிருந்தது.

 

   தன்னுடைய அறைக்கு திரும்பி வெகு நேரம் மட்டுக்கும் தித்திக்க தித்திக்க தன்னுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தாள். அழுகையும் சிரிப்பும் ஒருசேர வந்தது. இந்த மகிழ்வை, எப்படி சிந்தாமல் சிதறாமல் வீட்டில் கொண்டு சேர்க்க போகிறோம் என்று தோன்றியது.

 

   முடிந்த அளவு நேரத்தை அவளுக்கே அவளுக்காக தந்துவிட்டு மாதூர் தன்னுடைய அறைக்கு அழைத்திருந்தார் சகுந்தலாவை. எந்த வார்த்தையும் சொல்லாமல், கைகளைக் கட்டிக்கொண்டே அவள் முகத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். 

 

  ஊதி பெருத்த காற்றுக் குமிழியை உடைக்க விரும்பாமல், அதன் உயரத்தை ரசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார். கண்களை துடைத்துக் கொண்டு, இத்தனை சந்தோசத்தையும் புன்னகையால் முடித்து வைத்தார் சகுந்தலா.

 

   ‘’ சொல்லுங்க டாக்டர், இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க..?’’

 

    ‘’ டாக்டரா என்னை விட நீங்க அதிகமா ஃபீல் பண்ண வேண்டிய நியாயம், உங்களுக்கு இருக்கு. ஆனால் ஒரு சகோதரியா இந்த நிமிசத்து மகிழ்ச்சியை என்னால வார்த்தைகள்ல வடிக்க முடியாது." இத்தனை நாளும் இருந்த குழப்பமும், வருத்தமும், இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போயிருந்தது.

 

  ‘’  வீட்டுக்கு தகவல் சொல்லிடலாமா டாக்டர் சகுந்தலா..?’’

 

  ‘’ கண்டிப்பா டாக்டர். இத்தனை நாளும் மனசுக்குள்ள ஒரு குழப்பம் இருந்திட்டே இருந்தது. ஒருவேளை இந்த முயற்சி நாம யோசிச்ச அளவு வெற்றியடையாமல் போனால், அந்த இரண்டாவது இழப்பை அம்மாவும், அபராவும் எப்படி தாங்கிக்குவாங்கன்னு ஒரு பயம் இருந்தது. இப்போது அந்த குழப்பம் இல்லை. இனி பேசப் போறேன். அஜெய்யை கொண்டு போய் அவங்க முன்னாடி நிறுத்தப் போறேன். அந்த நிமிசத்துக்காக காத்துட்டு இருக்கேன்.

 

  அதுக்கு முன்னாடி இனியும் தள்ளி போடாம இந்த விசயத்தை வெற்றியோடு அறிவிக்கும் நேரமும் வந்தாச்சுன்னு நினைக்கிறேன். ஏன்னா, டோனர் யார், அந்த பையனோட குடும்பத்தார் நிலைமை இந்த நிமிசம் நம்ம சந்தோசத்தை விடவே, காருண்யத்துடன் கவனிக்க படவேண்டியது இல்லையா..?’’

 

   சகுந்தலாவின் நியாயமான கேள்விக்கு மென்மையாக தலையசைத்தார்.

 

   அந்த நேரம் சரியாக காவல்துறை உயரதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது, அவருடைய எண்ணிற்கு.

                       ❤️

 

   ஏர் போர்ட் வந்து இறங்கி காத்திருந்த நிமிசம், ரியாசிடம் இருந்து அழைப்பு வந்தது, சிந்தூரியின் எண்ணிற்கு. 

 

   ‘’ சொல்லுங்க ரியாஸ் அண்ணா.’’ என்றாள் சுரத்தே இல்லாமல்.

 

   ‘’ சாரிடா. எனக்கு கடைசி நேரத்துல ஊத்தங்கரை கிளம்ப வேண்டியாதாயிடுச்சு. அம்மாவுக்கு உடம்பு ரெம்ப முடியல.’’ என்றான் வருத்தம் மேவும் குரலில்.

 

  ‘’ ம், பரவாயில்ல. நான் சமாளிச்சுக்கறேன். நீங்க அம்மாவை கவனிங்க. இப்போ எப்படி இருக்காங்க..?’’

 

   ‘’ சீரியஸ் தான். ரெம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாரு. சொந்தக்காரங்க பார்க்க வர ஆரம்பிச்சுட்டாங்க.’’ என்றபோது பெருமூச்சு பிறந்திருந்தது அவன் வார்த்தை முடிவில்.

 

  ’’ நீங்க பக்கத்துலயே இருங்க.’’

 

   ‘’ தனியா சமாளிச்சுப்பியாமா..? மாலி உன்னை தனியா நகர விட மாட்டான். என்னவோ வரைமுறை அளவில்லா நேசம் உன் மேல.'’

 

  தவிப்புடன் கேட்டபோது விரக்தியாகச் சிரித்தாள்.

 

 ‘’ வாழ்க்கை முழுக்க தனியா சமாளிக்க வேண்டி வருமோங்கிற பயத்துலதான் இந்த பயணத்தை தொடங்குறேன். ஏனோ இந்த நிமிசம் எது நடந்தாலும் ஏத்துகிற இயம்பில தான் இருக்கேன். அவனும் எல்லாக் காதலர்கள் மாதிரி, என் உடல் மேல கவனமா இருந்திருக்கலாம். நானும் இத்தனை தவிச்சிருக்க மாட்டேன்."

 

   ‘’ தைரியமா இரு சிந்தூரி. டெல்லி போனதும், உன்னை ரிசீவ் பண்ண என் சாச்சி மகள் நர்கிஸ் வருவாள். கண்டிப்பா உனக்கு வேண்டிய அத்தனை உதவியும் கிடைக்கும். நல்ல செய்தியுடன் திரும்பி வரணும்.’’

 

    தலை அசைத்து சிரித்துக் கொண்டாள். ஆழ்மனம் மட்டும் அது நல்ல செய்தியாக இருந்திருந்தால் இவள் சென்றுதான் தெரிந்து வர வேண்டுமா' என்று யதார்த்தத்தை பேசியது. எல்லா நினைவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு ப்ளைட் ஏறி விட்டாள்.

 

   ரியாஸ் சொன்னது போல நர்கிஸும்  அவள் கணவரும் ஏர்போர்ட்டில் காத்திருந்தார்கள். அடையாளம் காண்பது ஒன்றும் அத்தனை சிரம்மான காரியமாக இருக்கவில்லை.

 

   முர்தாபூரில் அவர்களுடைய வீடு இருந்தது. பாண்டேக்களும், சர்தார்களும் சொப்பிக் கிடந்தார்கள் அந்தப் பகுதி முழுக்க. சிக்கலில்லாத விசாலமான தெருவில் தான் நர்கிஸின் வீடு இருந்தது.

 

   குருமாவும், அக்கி ரோட்டியும் தந்தார்கள். முன்னெல்லாம் எல்லாம் ருசித்த வாழ்க்கையும், நாவும் இப்போதெல்லாம் எதையும் பெரிதாய் ருசிப்பதில்லை. கவலை சம்மட்டியால் அடித்து அடித்து மனதை எதுவோ பக்குவப்படுத்திக் கொண்டிருந்தது. 

 

   தலையில் முக்காடு விலகாமல் சமைக்கும் நர்கிசை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கன்னத்தை உள்ளங்கையில் தாங்கியபடி. 

 

  ‘’ பிகர் மத் கர் சிந்து. சப் டீக் ஹோ ஜாயேகா.’’  என்றாள் புன்னகை முகமாக. சிரித்துக் கொண்டாள். எங்கேயிருந்து தொடங்குவது எங்கே நகர்வது என்பது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.

 

   நண்பகலிலேயே நர்கிஸ் மற்றும் அவள் கணவர் இம்ரானை அழைத்துக் கொண்டு போய், மாலி தங்கியிருந்த ஹோட்டலில் விசாரித்து விட்டு எந்த தகவலும் இல்லாமல் வெளியில் வந்தார்கள். அறையை உடைத்து கைப்பற்றிய மாலியின் பொருட்களை காவல்துறையிடம் ஒப்படைத்து இருந்ததால், அதைப் பற்றிய தகவல்கள் கூட பெரிதாய் இல்லை அவர்களிடம். 

 

  ‘’ போலீஸ்க்கு கம்ப்ளைண்ட் போயிருக்கிறதா ரியாஸ் சொன்னான் சிஸ்டர். மாலியோட ஆபிசில் இருந்தும் கம்ப்ளைண்ட் தந்திருக்காங்க. ஆனால் என்ன, புகார் தந்துட்டு நம்ம பாட்டுக்கு இருந்தால், அவங்க பாட்டுக்கு இருந்துட்டு போயிடுவாங்க. அடிக்கடி என்ன நடக்குதுன்னு விசாரிக்கணும். அப்பத்தான் ஏதாவது நகர்வு இருக்கும். 

 

   ஆனால் நேரடி தொடர்பில் இல்லாத அலுவலகத்தில் இதுக்கு மேல, செயல்களை நாம எதிர்பார்க்க முடியாது. எல்லாம் வெறும் ஃபார்மலுக்காக மட்டும்னு தான் இருக்கும்.’’

 

    அவர் சொல்வது சரியென்றுதான் தோன்றியது. இப்போது இவர்கள் சென்று விசாரித்தால், அங்கே ஏதாவது நிறைய தகவல்கள் இருக்கும் நிச்சயமாய்.

 

   மூவரும் கிளம்பி ஜந்தரில் இருந்த காவல்துறை அலுவலகத்தை நோக்கி பயணமானார்கள்.

 

  ’’ சொல்லுங்க ஐ.ஜி சார். எப்படி இருக்கீங்க..?’’

 

    எப்போதும் ஆங்கிலத்திலேயே புரள்வதால், நாக்கு அத்தனை எளிதாய் ஹிந்திக்கு வளைந்து கொடுக்கவில்லை என்றாலும், அழுத்தமான வார்த்தைகளை வீசி என்னவென்று விசாரித்துக் கொண்டு இருந்தார் டாக்டர் மாதூர்.

 

  ‘’ எல்லாம் நலமா..? ஐ மீன் நீங்க மேற்கொண்ட ஆய்வு, அது எந்த கட்டத்தில இருக்கு..? இன்னும் உங்ககிட்ட இருந்து முறையான அறிவிப்பு எதுவும் வரலை. ‘’

 

   ‘’ நாங்களே எங்க மருத்துவ வல்லுனர்களுடன் சேர்ந்து சில விசயங்களை முடிவு செய்துட்டு ஒரு முறையான பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யலாம்னு இருந்தோம். அதுக்கு முன்னாடியே உங்ககிட்ட இருந்து அழைப்பு வந்தாச்சு.’’

 

   ‘’ எஸ்..! டாக்டர் மாதூர். விபத்தில் இறந்த அந்த பையன் பற்றிய சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் நாங்க இருக்கோம். ஏன்னா, அவரைத் தேடிட்டு ஆள்கள் வந்திருக்காங்க.’’ என்று விட்டு நெற்றி பொட்டைத் தேய்த்துக் கொண்டார், சின்ன தர்மசங்கடத்துடன்.

 

   மறுபக்கம் மாதூரின் முகத்தில் சின்ன கவலை தெரிந்தது. இத்தனை பெரிய நிகழ்வை சந்தித்தவர்க்கு இந்த பிரச்சனையை சமாளிப்பது ஒரு விசயம் இல்லைதான். ஆனால் உணர்வுரீதியான விசயங்களை எங்கனம் கையாள்வது என்ற கவலையும் அவரை பீடித்துக் கொண்டுதான் இருந்தது உள்ளபடி.

 

  ‘’ இட்ஸ் ஓ.கே. கண்டிப்பா பிரச்சனையை கையாள முடியுமென்று தோணுது. நீங்க எதுக்கும் பதட்டப்பட வேண்டாம். அவங்களை அழைச்சிட்டு நேரே நம்ம ஹாஸ்பிடல் வந்துடுங்க. மத்ததை நாம பார்த்துக்கலாம்.’’ என்றவர் இணைப்பை துண்டித்து விட்டு சில நொடிகள் அலைபேசியை யோசனையாகவே பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

   எதிரில் இருந்த சகுந்தலா அவரின் மெளனத்தில் காரணம் தேடி துலாவிக் கொண்டிருந்தாள் மெளனியாக.

 

   ‘’ டாக்டர் சகுந்தலா, நீங்க வீட்டுக்குப் போய் விசயத்தைச் சொல்லி அபரஞ்சியை மனோரீதியா இந்த சந்தோசத்துக்கு தயாராக்குங்க. நாம இந்த விசயத்தைப் பற்றி பேசும்போது, அபரஞ்சியும், உங்க மதரும் பிரஸ் மீட்டில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 

  பதட்டமாகாமல் அவங்களுக்கு புரியவைத்து அழைச்சிட்டு வாங்க.’’ என்றார்.

 

   சகுந்தலா தோள்களை குலுக்கிக் கொண்டு எழுந்து நின்றார். சின்ன குழப்பமும், பெரிய பதட்டமும் பற்றிக் கொண்டது அவருக்கு. எப்படி இந்த பிரம்மவித்தையை அவர்களுக்கு சொல்லி விளக்க..? காரை எடுத்துக் கொண்டு பாதைகளை தேய்த்தபோது, எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்று வார்த்தைகளை கோர்த்து சரம் கட்டிக் கொண்டு இருந்தாள் சகுந்தலா.

                       ❤️

    

சுக்லா மருத்துவமனை..! 

 

 வளாகத்தினுள் பூத்திருந்த குரோட்டன்ஸ்களை பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தாள். கிருஷ்ணரின் புல்லாங்குழலில் இருந்து பவுண்டன் அமைக்கப்பட்டு இருக்க, வண்ண நீர் கலவை கீழே வழிந்து மேலேறி மீண்டும் வழிந்தது.

 

  சரளை கற்கள் மிதந்த குளத்தில் பூக்கள் மிதந்து கொண்டிருந்தது அழகாக. வளாகத்தின் ஒருபக்கம் மரி தன் மைந்தனுடன் நிற்கும் தேவ சிலையும், இன்னொரு பக்கமும் கணபதி பப்பாவின் வெண்கல சிலையும், முன்னே குங்கும, மங்கலமும் இருந்தது.

 

   மருத்துவமனைக்கு இன்ஸ்பெக்டர் செல்லவேண்டும் என்று சொன்னதும், சின்ன நிம்மதி உண்டானது சிந்தூரிக்குள். அப்படியென்றால் மாலி இருக்கிறான். அதானால் தான் அவளை அங்கே வரச்சொல்லி இருக்கிறார்கள்.

 

    வரவேற்பறையை ஓட்டி இருந்த சின்ன அறையில் அவளையும், நர்கிஸ் இம்ரானையும் காத்திருக்க வைத்திருந்தார்கள். முள் மேல் தவம்போல் மாலியின் முகம் பார்க்க காத்திருந்தாள் சிந்தூரி.

                      ❤️

 

   தில்லி, மந்திர் மார்க்..!

 

   எந்த அழுத்தமும் இல்லாமல் கார் தன்னுடைய பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. பிர்லா மந்திர் என்ற லஷ்மி நாராயணா கோவிலுக்குத் தான் குடும்பத்தை அழைத்துச் சென்று கொண்டிருந்தார் சகுந்தலா.

 

   கொஞ்சம் வெளுத்துப் போன ரோஸ் வண்ணத்தில் சுரிதார் அணிந்திருந்தாள் அபரஞ்சி. மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தது வாழ்க்கை என்றாலும், அவளின் இயல்பு சோகம் என்றாகி இருந்தது கண்களில்.

 

  வாணலியில் விழுந்த சோளப் பொரியாய் படபடக்கும் அவள் இயல்பு மடங்கி இருந்தது. அமைதியும் பொறுமையும் அவளை என்னவோ செய்து கொண்டிருந்தது. அலைகள் இல்லாதது குளத்திற்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் கடலுக்கு..?

 

  எப்போதும் இருக்கும் குறுகுறுப்பில்லை அந்த முகத்தில்.

 

  ‘’ இப்போ எதுக்குக்கா கோயிலுக்கு..?’’ என்றாள் சாமியிடம் சச்சரவில் இருந்தவள். அந்த கேள்வி கூட கேட்காமல் பேத்தியை மடியில் இருத்திக் கொண்டு தலைகோதி விட்டுக் கொண்டிருந்தார் பத்மா.

 

  ‘’  கொஞ்சம் பேசணும் அபரஞ்சி. அதுவும் எப்பவும் அஜெய் வந்து போற அந்த லஷ்மி நாரயணன் கோயில்ல வச்சு.’’

 

   காரை பார்க் செய்துவிட்டு இறங்கிக் கொண்டார்கள். கோயிலின் பிரமாண்டம் எத்தனை முறை பார்த்தாலும் இன்னும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேதான் இருந்தது.

 

   ஏழரை ஏக்கரை முழுங்கி இருந்தது  கோயிலின் பிரமாண்டம். தம்பதி சமேதகரை தரிசித்து விட்டு அருகிலே இருந்த சிவன், புத்தர் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு விட்டு, சன்னதியை விட்டு தள்ளி இருந்த திடலில் அமர்ந்து கொண்டார்கள்.       

 

   வாயில் விரல் வைத்துக் கொண்டு வருவோர், போவோரை ஆச்சர்யமாக பார்க்கத் தொடங்கி இருந்தாள் மதுரிமா. தாய் தந்தையோடு வருகின்ற குழந்தைகளை ஒருவித ஏக்கம் தொற்ற பார்த்துக் கொண்டிருந்தாள் குழந்தை. 

 

   கவலைகளையும், ஏக்கங்களையும் கண்களில் வழியே வெளித்தள்ளும் சவுகரியம் குழந்தைகளுக்கு வாய்க்கிறது. பெரியவர்கள் ஆனதும் அந்த சலுகையை காலம் கைப்பற்றித் தான் விடுகிறது.

 

  மூன்று பெண்களின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது, அந்த நிமிசம். அபரஞ்சி ஒவ்வொரு அடியிலும், தன் நாராயணனை நினைத்து உருகிக் கொண்டிருந்தாள் மனதளவில்.

 

   அவளுக்கும் அஜெய்யனுக்கும் நிச்சயம் நடந்தது இந்தக் கோயிலில் தான். திருமணம் முடித்ததும் முதலில் சேவிக்க வந்ததும் இந்த சமேதர்களைத் தான்.

 

   எப்போது இங்கு வந்தாலும் அஜெய்யின் முகத்தில் தவளும் நிறைவையும் அமைதியையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு போயிருக்கிறாள். அவனை பார்க்கும் இவள் கண்கள், மனக்கண்ணில் அவனை லஷ்மி நாரயணனாகவே வரித்துக் கொண்டு நிற்கும். அப்படியொரு முகத்தை, அழகை, நிறைவை அவள் இனி எங்கும் சந்திக்கப் போவதில்லை என்பதுதான் நிஜம்.

 

  ’’ எதுக்கு சக்கு இவ்வளவு தூரம்..? இந்த கோயிலை பார்க்கும் போதெல்லாம் ஏதேதோ நினைப்பு. என் குழந்தை இல்லாமல் நான் இந்த கோயிலுக்கு வர்றது இதுதான் முதல் தடவை. எனக்கு வரவே பிடிக்கல…’’ சொன்ன பத்மாவை தோளோடு சேர்த்துக் கொண்டாள். மெல்லிய கண்ணீர் வர, அதை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டார்.

 

    ‘’ ஒருவேளை, நமக்கு அந்த வாய்ப்பு மறுபடி கிடைச்சா எப்படிமா இருக்கும்…’’ அம்மாவின் தோள்களில் முகம் புதைக்க, ஒரு இனம் புரியாத அமைதி அவர்களுக்குள். நடக்கிறதோ இல்லையோ நினைப்பே இனிக்கிறது.

 

   ‘’ பிழையாகிப் போன காலத்தை அடித்து திருத்தற வாய்ப்பை இயற்கை யாருக்கும் தர்றது இல்ல. அந்த வாய்ப்பை மட்டும் ஆண்டவன் கொடுத்தா, முதல்ல என் பிறப்பையே அழிச்சிருவேன். பிறந்தாத்தான் இதெல்லாம் கண்ணால காண.’’

 

   ‘’ மா…’’ என்றாள் கண்களால் அபரஞ்சியை காட்டிக் கொண்டே.

 

  ‘’ சரிமா, ஒரு பதினைஞ்சு நாள் லீவு போடட்டுமா..? அப்படியே திருப்பதி, பிருந்தாவன், குருவாயூர்னு எல்லா ஸ்தலங்களுக்கும் ஒரு நடை போயிட்டு வந்திடலாமா..? ரெம்ப நாள் ஆசையில்லையா உங்களுக்கு..? மனசும் ஆறுதலா இருக்கும் இல்லையா..?’’

 

  ‘’ போகலாம் சகுந்தலா. என்னையே மறந்து போகிற ஒரு இடம்தான் எனக்கு போகணும். ’’

 

  ‘’ சரி சொல்லுங்க. இந்த லஷ்மி நாரயணருக்கும், உங்க தாத்தா அடிக்கடி போறதா சொல்வீங்களே திருச்சி இடையாற்று மங்கலம் லட்சுமி நாரயணன் கோயிலுக்கும் என்னம்மா வித்யாசம்..?’’

 

‘’ அளவிலதான் வித்யாசம். அருள்ல இல்லை. எந்த ரூபத்தில இருந்தாலும் ஆண்டவன் அருள் ஒண்ணுதான். ’’ கண்களை மூடி கை கூப்பி நின்றார்.

 

கூர்ந்து பார்த்தாள். அம்மாவின் கைகளை பற்றிக் கொண்டாள். மெத்தை போன்ற மென்மை அந்த உள்ளங்கையில். அதில் பதித்த அழுத்தத்தை உணராமல் கண்களை மூடி அமர்ந்திருந்தார் பத்மா.

 

  ‘’ சிலநேரம் அற்புதங்கள் மழையாய் வரும். சிலநேரம் அதுவே வெயிலாய் வீசும். எந்த நேரத்தில் எது நமக்கு சரியானதுன்னு முடிவு செய்ய வேண்டியது இறைவனின் கருணை இல்லயாமா..? எல்லாத்தையும் இழந்து நிற்கிற நேரத்தில் நம்ம தலைக்கு மேல விரிஞ்சு நிற்கிற இறைவனின் கருணையை நாம உணரணும் இல்லையா..?

 

  என்ன வேணும்னு கேட்க நமக்கு உரிமை இருக்கு, ஆனால் இதுதான் சரின்னு கடவுளுக்கு அறிவுரை சொல்ல நமக்கு அறிவு இருக்கா..? இல்ல, ஞானம்தான் இருக்கா..? சிலசமயங்கள்ல வர்ற மாறுபாட்டிற்கு பின்னால் இருக்கிற நிஜத்தை நாம சுவீகரிக்கணும் தானே..?’’

 

   ‘’ சக்கு…’’

 

  ‘’ சொல்லத் தெரியல. இந்த சந்தோசத்தையும், ஆளுமையையும் உணர்ந்த உலகத்தின் முதல் மனிதர்கள் நம்ம குடும்பங்கிற ஆசிர்வாதத்தை, வரமா கொண்டாடுறதா, அல்ல சாபமா நினைச்சு வெதும்பறதா…’’

 

   ‘’ ஒண்ணுமே புரியல சக்கு…’’

 

  ‘’ விபரம் தெரிஞ்சு நிறையவே இழந்துட்டோம். அப்பா, என் கணவர், குழந்தை, அப்புறம் எல்லாத்துக்கும் மேலான என் அஜெய் இப்படி. எல்லாரையும் இழந்துட்டோம். அந்த எல்லா இழப்பையும் ஈடு செய்ய ஏதாவது மாற்று வந்திருக்கா..? இல்ல வருமா..?னு ஏங்கினது உண்டு. அந்த ஏக்கம் ஏதாவது ஒரு வகையில் சரிசெய்யப் பட்டால், எப்படி இருக்கும்..?’’ என்றவள் அபரஞ்சியை நிமிர்ந்து பார்த்தாள். இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்பது போல், எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அபரஞ்சி. 

 

  ‘’ டாக்டர் மாதூர், அவர் செய்துட்டு இருக்க ஆராய்ச்சி, அதற்கான அவரின் மெனக்கெடல் எல்லாமே உங்களுக்கு தெரியும் தானேமா..? நியாபகம் இருக்கா..?’’

 

   பத்மா மெல்ல தலையசைத்தார். ஆனால் இதுவரைக்கும் வெற்றியை நோக்கி நகராத அந்த ஆராய்ச்சியில் பெரிதாய் ஈடுபாடு இல்லை அவர்களுக்கு, அல்லது புரிதல் இல்லை.

 

 ‘’  அந்த பெரும் போராட்டம் இன்றைக்கு வெற்றியை நோக்கி நகர்ந்திருக்குமா. அந்த வெற்றியை அனுபவிக்க போற முதல் குடும்பம் நம்முடையதா இருக்கு.’’

 

  குழப்பம் அப்பிய முகத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் அபரஞ்சி. மானிட்டரில் வேகத்தையும் அதிர்வையும் கூட்டுவது போல், மெல்ல மெல்ல அவள் உடலின் அதிர்வு கூடிக் கொண்டிருந்தது.

 

 ‘’ அந்த விபத்தில், நம்ம அஜெய்யுடைய உடல் ரெம்ப சிதைஞ்சு போச்சு. ஆனால் மூளையின் செயல்பாடு அப்படியே இருந்தது. அவனை மீட்கவே முடியாதுங்கிற நிலையில தான், அவன் நினைவுகளையும் கனவுகளையும் மீட்கலாம்கிற ஒரு முடிவுக்கு வந்தோம்….’’` 

 

  என்றவள் சொல்ல ஆரம்பித்திருந்தாள்… காற்று அனலை துப்பி, வெயிலை கக்கி, சிறு மழை தூவி, இயற்கையின் அத்தனை வித்தைகளையும் காட்டிக் கொண்டிருந்தது, அம் மூன்று பெண்களின் அகத்திலும்.

 

  இந்த செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அபரஞ்சி மயங்கிச் சரிந்திருந்தாள்…

வனமாலி - 28

"...இதுவரை பாட்டை பிரிந்த

பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது

இதுவரை ஏட்டை பிரிந்த

வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது

நல்லதொரு சரணம் கிடைத்தது…''

                   28

   சிந்தூரி மணிக்கட்டைத் திருப்பி நேரத்தை சரிபார்த்துக் கொண்டாள். ஐந்து மணி..! கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாய் மருத்துவமனையின் உள்ளே காத்திருக்கிறார்கள் மூவரும். மாலை நெருங்க நெருங்க நர்கிஸின் குழந்தைகள் பள்ளி முடித்து திரும்பி வருவார்கள் என்ற தவிப்பில் அவர்கள் இருப்பதைப் பார்ததும், அனுப்பி வைத்துவிட்டாள்.

 

 ‘’ நீங்களா சமாளிச்சுப்பீங்களா..?’’ நூறு முறை கேட்டு விட்டுத்தான் கிளம்பிப் போனார்கள். மனம் ஏற்கனவே கெட்டிபட்டு இருந்தது. எல்லாவற்றையும் சந்திக்கும் துணிவும், ஒருவித தவிப்பும் அவளிடம் ஓட்டிக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாய் ஏனோ பக்கத்தில் யாருமில்லாத தனிமையை மனமும் உடலும் தேடியது.

 

 அறையை விட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள். அவளை அங்கே அமர்த்திவிட்டு போயிருந்த காவல்துறை அதிகாரிகள், வெளியில் மும்முரமாய் ஆலோசனையில் இருந்தார்கள். ஏனோ இந்த நிமிசம் மனதில் இருந்த சஞ்சலம் எல்லாம் வடிந்து போய் நிர்சலனமாக இருந்தது அகமும், புறமும்.

 

   இந்த இரு மாதங்களாய் இருந்த தவிப்பும், ஓங்காரமும் மட்டுபட்டு மனம் ஒருவித மயான அமைதியை தத்தெடுத்து இருந்தது. இந்த மருத்துவமனையில் ஏதோ இருக்கிறது...

 

   காரிடரில் நடந்து கொண்டே இருந்தாள். அங்கே அமானுஷ்யமாய் விரவி இருந்த ஏதோவொரு மூச்சுக் காற்று, அவளின் நுரையீரலில் புகுந்து அவளுள் விரவிக் கொண்டிருந்தது. கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து நெஞ்சு முழுக்க நிறைத்துக் கொண்டாள். இந்த மூச்சுக் காற்றுதான் அவளின் அத்தனை வலிக்கும் சர்வரோக நிவாரணி.

 

   மீண்டும் தன்னுடைய அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டாள். இப்பொழுது வார்த்தைகளில் வடிக்கமுடியாத துயரம் ஒன்று நெஞ்சுக்குள் அழுத்திக் கொண்டிருந்தது.  உள்ளே வந்த நர்ஸ். அவளை டீன் அழைப்பதாக தகவல் சொல்லிவிட்டு நகர, எழுந்து அவள் சொன்ன திசையில் நகர்ந்தாள்.

 

   விசாலமும் வெளிச்சமும் கொட்டிக் கிடந்த அறை. ஜன்னல் திரைச்சீலை தறிக்காமல், துப்புரவாக இருந்தன. உள்ளே நுழைந்தவள் கால்கள் சின்னதாய் பின்னலிட்டுக் கொண்டது. அத்தனை நபர்கள் அங்கே இருந்தார்கள்.

 

    நீள மூக்கும் பூனைக் கண்களுமான ஏகப்பட்ட அயல்நாட்டு மருத்துவர்கள் குழுக்கள், நடுவில் இந்திய முகங்கள். ஆண், பெண் பேதமற்று..! 

 

   உயர்தரமான வான்கார்ட் ரக சோபாக்கள் அங்கே நிறைந்திருக்க, அந்த அறை முழுக்க மருத்துவ முகாம் போல் ஜொலித்தது. இன்னொரு பக்கத்தில் சிந்தூரியை அழைத்துக் கொண்டு வந்த காவல்துறை அதிகாரிகளும் அங்கே இருந்தார்கள்.

 

   சிறு தயக்கத்துடன் நின்றவளின் கைகளைப் பற்றி தனக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தார் டாக்டர் சகுந்தலா. அவர்களுக்கு எதிராக இருந்த மானிட்டரில் மருத்துவம் சம்பந்தமான ஏதோ நிகழ்ச்சி, பாஸ் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

 

   ‘’ சொல்லுங்க மேடம். ஆர் யூ ஒகே நவ்..?’’ அவளை அழைத்து வந்த காவல்துறை அதிகாரி விசாரித்தார்.

 

  ‘’ ஷ்யூர் சார். ஐயம் சிந்தூரி. கான சிந்தூரி. சென்னையில இருந்து வர்றேன். இரண்டு மாதங்களுக்கு முன்னால் டெல்லி வந்து தொலைந்து போன என் நண்பர், வனமாலியைத் தேடிட்டு வந்திருக்கேன். அவர் மிஸ்ஸிங்னு அவர் வேலைபார்த்த கம்பெனியுடைய பார்ட்னர்சிப் கன்சைன் முலமா ஒரு கம்ப்ளைண்டும், சென்னையில் அவர் நண்பர்களான எங்கள் மூலமா ஒரு கம்ப்ளைண்டும் ஆல்ரெடி தந்திருக்கோம். எந்த தகவலும் இல்லை.

 

  அதனால நேரில் விசாரிக்க, டெல்லிக்கு வந்தேன். ஸ்டேசன்க்கு போய் விசாரிச்சப்போ, இங்கே அழைச்சிட்டு வந்திருக்காங்க. மூணு மணிநேரமா ஒரு மரணப் போராட்டம் நடத்திட்டு இருக்கேன். தேடி வந்த இட்த்தில. என்னை இப்படியொரு மருத்துவமனையில உட்கார வச்சிட்டு எந்த பதிலும் சொல்லாமல் இருக்கும்போது, என் மனசு செய்த கற்பனைகள் வார்த்தையில் வடிக்க இயலாமல் போகும் இல்லையா..?’’ அப்பாவியாய் கேட்டவளை அன்பொழுக பார்த்தார்கள்.

 

 ‘’ ஓ..! அவர் பெயர் மாலியா..? அவர் புகைப்படம்..?’’ யாரோ கேட்பதிற்குள், தன் அலைபேசியில் இருந்த அவனின் புகைப்படத்தை எடுத்து காட்டினாள். மெல்லிய பெருமூச்சு எழுந்தது அங்கு.

 

 ‘’ அவரைப் பத்தி வேறு ஏதாவது தகவல் இருக்குமா..?’’

 

   எதற்கு கேட்கிறார்கள் என்ற புரிதலுக்கு கூட அவளால் ஆட்பட இயலவில்லை. 

 

 ‘’ பெரிய ஆட்கள் இல்லை சார் நாங்கயெல்லாம். இயல்பான மனிதர்கள். ஒரு கெமிஸ்ட் கம்பெனியில நல்ல பொறுப்பான உத்யோகத்தில் இருக்கான். ரெம்ப ரெம்ப நல்லவன். எங்களுக்குள்ள ஒரு அழகான அன்பு சில வருடங்களா இருக்கு.

 

  அப்பா, அம்மா, ரெண்டு தங்கைகள் ஊர்ல இருக்காங்க. அத்தனை பேருக்கும் அவன்தான் ஆதாரம். என்னையும் சேர்த்தி.’’ முடிக்கும் போது தொண்டை தழுதழுத்து இருந்தது.

 

    இப்போது  ஒரு நீண்ட மெளனம். எப்படி அவளிடம் விஷயத்தைச் சொல்வது..? ஆதாரத்தை தேடி வந்திருப்பவளிடம், உன் ஆகாரமே இனி கண்ணீர் தான் என்று எப்படிச் சொல்வது..?

 

  ‘’ பேசலாம் சிந்தூரி. அதுக்கு முன்னாடி உங்களுக்காக ஒரு ரெகார்டர் வீடியோ போட்டுடறோம். ஐயம் சாரி, நீங்க உங்க உணர்வுகளை கட்டுபடுத்திக்குவீங்கன்னு நம்பறேன்.’’ என்றவர் மெல்ல நிறுத்தி வைத்திருந்த வீடியோவை முடுக்க, அது மெல்ல விரியத் தொடங்கி இருந்தது.

 

    விபத்து நடந்த தேதி, அது குறித்து ஆஜ் தக்கில் செய்தியாளர்கள் காட்டிய காட்சியை தொட்டு அத்தனையும் விரிகிறது. அடையாளம் தெரியாத நபர் என்று குறிப்பிடப் படுகிறது. அந்த செய்தியைத் தொடர்ந்து வீடியோ பதிவு, மருத்துவமனைக்குள் நகர, சிந்தூர் கண்களில் இருந்து யுகத்தின் கண்ணீர் வழிந்து கழுத்தை கடந்து  உடல் முழுக்க நனைக்கத் தொடங்கி இருந்தது. ஆனாலும் அவள் அசையவில்லை… அப்படியே அமர்ந்திருக்கிறாள்.

 

   மருத்துவமனையில் தலையில் பெரிய கட்டுடன் மாலி. மூளைச் சாவு அடைந்துவிட்டான் என்று மருத்துவர்கள் பேசிக் கொள்கிறார்கள்….

 

  ஆயிரம் சிறகுகளை கொண்டு அவள் ஆயுசுக்கும் பொத்தி பொத்தி வைத்திருந்த பட்டாம்பூச்சி, செத்து அவள் மடியில் விழுந்துவிட்டது. அவனில்லை… எவனுக்காக இத்தனை காலம் காத்திருந்தாளோ அவனில்லை. இந்த இரண்டுமாத உயிர் அவஸ்தை போராட்டம் அவன் இல்லையென்ற செய்தியோடு முடிவுக்கு வந்திருக்கிறது..!

 

  திரையில் விரிந்த படத்தை பார்க்க அவள் உணர்வோடு இருக்கவில்லை. கண்களை கண்ணீர் மறைத்திருந்தது. மாலியின் உடல்நிலை அறிக்கை, அந்த மகத்தான மூளை மாற்று மருத்துவம் பற்றிய தகவல்கள் எதுவுமே அவளை சென்று சேரவில்லை.

 

 அந்த கையறு நிலையில் கண்ணீரில் வடித்த சிலைபோல் அமர்ந்திருந்தவளின் கைகளை சகுந்தலா பற்றிக் கொண்டு, தன் தோளில் சாய்த்துக் கொண்டார். அவருக்கு தெரியாதா இந்த நிமிசத்து மன அதிர்வை. 

 

   படம் முழுக்க தன்னால் ஓடி நின்றிருக்க, அறை முழுக்க நிசப்தம் நிலவியது.

 

  அவள் அமைதியாகவே இருந்தாள். இந்த செய்திதான் அவளுக்கு புதிது. ஆனால் இந்த செய்தியை எதிர்கொள்ள, அவள் இரண்டு மாதங்களாய் தயாராகிக் கொண்டிருந்திருக்கிறாள், என்று இந்த நிமிசம் உணர முடிந்தது.

 

  தன் மரணத்தை கூட, பூப்பறிப்பது போல அலுங்காமல் குலுங்காமல் அவளிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான் அவளுடைய மாலி.

 

 ‘’ சிந்தூர்…’ என்ற அந்த ஈரப்பசையான அழைப்பு இன்னும் இதயம் வரைக்கும் நங்கூரமாய் இருந்தது. காதல் என்பதை பருவத்தின் சித்து விளையாட்டாய் உணரச் செய்யாமல், இந்த உலகத்தின் ஆதாரம் என்று அவளுக்கு அடையாளம் காட்டியவன். அதிகாரம் செய்யாமல், அவளின் அடையாளமாகவே ஆகிப் போனவன்.

 

  அவன் இல்லை என்பதை அவள் உயிர் எப்போதோ உணரத் தொடங்கி விட்டது. ஆனால் அவனுடைய ஏதோவொரு மிச்சம் தான் அவளை இங்கு இழுத்து வந்திருக்கிறது. தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள், உயிரே கருகி போனவளின் தகிப்பை இந்த நீர் அணைக்குமா..? தோளை வளைத்து கை போட்டு, அவளை ஆற்று படுத்த மாலி இல்லை… அவன் இல்லாத வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள..?

 

 ‘’ ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்த முடிவை எடுக்க வேண்டியதானது. ஒரே விபத்துல உயிருக்கு போராடின இருவர். அதுல மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் எந்த சேதாரமும் இல்லாமல் இருக்கு. பொதுவா அப்படி ஒரு நிகழ்வு நடந்தா, ப்ரையன் டெத் ஆனவங்க உடல் உறுப்புகளை அவங்க குடும்பத்தினர் சம்மதத்தோடு தானம் கொடுக்கிறது வழக்கமான நடைமுறை தான்.

 

 ஆனால் இந்த முறை, முழு உடம்பும் தானமா பெறப்பட்டு இருக்கு. உங்க சம்மதம் இல்லாம. அதுக்கு பின்னாடி ஒரு அழுத்தமான காரணம் இருக்கு. அஜெய்யின் உடலில் இருந்து எடுக்கப்படும் மூளையை உடலை விட்டு, வெளிப்புறம் வெறும் முப்பத்தி ஆறு மணிநேரம் தான் பாதுகாக்க முடியும்.

 

  இதுவொரு மகத்தான மருத்துவ சாதனை. இதுவரைக்கும் இந்த உலகத்தில் பெரும் போராட்டத்தில் ஆரம்ப நிலையிலேயே நின்னு போன, மகத்துவமான சாதனை. இந்த முயற்சியில் அடுத்தகட்டத்தை சோதிக்க கிடைச்ச இந்த வாய்ப்பு. இதனால் அரிய மனிதகுலத்தை மரணத்தில் இருந்து பாதுகாக்கும் ஒரு சாதனை செய்ய முடியும்.

 

 அப்படியொரு வாய்ப்பை நாங்க பயன்படுத்திக்க நினைச்சோம். அதிக சேதாரம் இல்லாம இருந்த, மிஸ்டர் மாலியுடைய உடலை, இந்த அரிய மகத்துவமான சேவைக்கு பயன்படுத்திக் கிட்டோம். மண்ணில் வீணாகிப் போகிற உடலை, இந்த அரிய சாதனைக்கு பயன்படுத்தி கிட்டோம். உண்மையில் இதுக்கு அவருடைய குடும்பத்தாரின் சம்மதம் வேணும். ஆனால், அவருடைய சொந்தங்களைத் தேடி, அடையாளம் தெரிஞ்சு, அவங்களோட பேசி சம்மதம் வாங்கி, இதெல்லாம் நடக்கிறதுக்குள்ள, அந்த மூளை தன்னுடைய செயல்திறனை இழந்துடும். இது எல்லாத்துக்கும் மேலே எங்கள் மகத்தான மருத்துவமும் எந்த உபயோகமும் இல்லாமலே இறுதிகட்டத்தை அடைஞ்சிடும்.

 

  அதனாலதான் வேற வழியே இல்லாமல், உங்களுடைய சம்மதத்தை வாங்கிக்கறதுக்கு முன்னாடி. எல்லா ஆதரங்களோட இந்த மூளை மாற்று ஆபரேசனை செய்ய வேண்டியதானது. அதுக்கு முன்னாடி மிஸ்டர் மாலி மூளைச் சாவு அடைஞ்சிட்டார்ங்கிறதுக்கான எல்லா ஆதாரமும் இதுல இருக்கு. மருத்துவச் சான்று அவருக்கு நடந்த விபத்து குறித்த விரிவான விபரம், நடந்த ஆபரேசனின் சி.டி. எல்லாமே இருக்கு.’’

 

  வரிசையாய் கோப்புகளையும், சி.டி, களையும் எடுத்து அவள் முன்னாக அடுக்கினார்கள். கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தாள். மொத்த கடல் நீரும், சுண்ணாம்பு கால்வாய் போல் கொதித்துக் கொண்டிருந்தது.

 

   உடலெல்லாம் வெப்பமும் தகிப்புமான ஒருவித கலவை நிலை. சொல்லத் தெரியாத நிலை. இந்த சான்றுகளை வைத்து என்ன செய்ய..? மாலி இருக்கும் வரைக்கும் எல்லோருக்கும் பயன்பட்டுத்தான் இருக்கிறான். இனியும் அப்படியே. அவன் யாரோவாகி இருக்கிறான். இதெல்லாம் சரிதான்… இனி இவளுக்கு யார் இருக்கிறார்கள்..?

 

  அவள் மெளனம் அவர்களை என்னவோ செய்திருக்க வேண்டும், அத்தனை கண்களும் சகுந்தலாவை துளைக்க, மெல்ல கண்களை இமைத்து விட்டு, இன்னும் நெருங்கி அமர்ந்து சிந்துவின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டார். வார்த்தைகள் ஆறுதலுக்கான அடையாளமாக இருக்கவுமில்லை.

 

  கரைந்து கரைந்து வழிந்த கண்ணீர் அத்தனை பேரின் வார்த்தைகளையும், களவாடிக் கொண்டிருந்தது. 

 

 ‘’ மாலி… கடைசியில என்னை விட்டுட்டே போயிட்டியா..? நான் எப்படிப் போனால் என்னன்னு தானே போயிட்ட… எல்லா இடத்துக்கும் துணையா வருவியே. இனி எனக்கு யார் துணை.? ’’ அவளின் அடிவயிற்றில் இருந்து பிறந்த கேவல், சத்தமில்லாமல் அவள் தொண்டையில் வெடித்துக் கொண்டிருந்தது.

 

  ‘’ இப்போ இதை முறைப்படி அறிவிக்கணும். இந்த மாபெரும் சாதனையை, மனிதகுலத்திற்கு அர்பணிக்கணும். அதுக்கு முன்னாடி உங்களுடைய புரிதலும், ஒத்துழைப்பும் வேணும். அப்பத்தான், உலக நாடுகளில் இந்திய மருத்துவ துறை நிகழ்த்திய இந்த மகத்தான சாதனைக்கு மகுடம் கிடைக்கும்.’’ டாக்டர் மாதூர் சொன்னபோது கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.

 

   இன்னும் இந்த இழப்பை அவளால் முழுசாய் கிரகிக்கவே முடியவில்லை எனும்போது, மாலியின் உடம்பிற்குள் இன்னொரு உயிர் புகுந்ததிற்கு கிரகபிரவேசம் வைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

 

  என்னதான் உயிருக்கு உயிரானவளாகவே இருந்தாலும், அவள் யார் மாலியின் விசயத்தில் முடிவு செய்ய..? பெற்றவர்கள் இருக்கும் போது. மாலியின் அப்பா எண்ணை அளித்துவிட்டு எழுந்து வெளியில் வந்தாள்.

 

   கால்கள் தரையில் பதியவேயில்லை. அழுத்தி அழுத்தி அடுத்த அடி வைப்பதிற்குள் அவள் அவயம் அத்தனையும் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டு இருந்தது.

 

  பாலிவினைல் நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள். கண்கள் மூடியே இருந்தது. 

 

 ‘… மழை வருது சிந்தூர் எங்கே இருக்கே..?’

 

 ‘… எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இப்படி நேரம் கெட்ட நேரத்துல ப்ரோக்ராம் ஒத்துக்காதேன்னு. என்னால இப்படி பனியில காத்திருக்க முடியல.’’

 

 ‘’… நான் காத்திருக்கச் சொல்லல மாலி.’’

 

 ‘’ மனசு கேட்கலயே. என்ன செய்ய..?’’ என்று சொல்லி அழகாய்ச் சிரிக்கும் மாலி.

 

 ‘’ எல்லா லவ்வர் மாதிரி, என்னை வாடி போடி’னு கூப்பிடேன்.’’

 

 ‘’… எதுக்கு..? உன்னை நான் அதிகாரம் செய்றது, ஊருக்கே தெரியணுமா..? மறைச்சு வச்சிருக்க காதல்தான் உலகத்துல மகா உன்னதமானது.’’

 

  வார்த்தைகள் கரைந்து கரைந்து இதயத்தில் இருந்து கீழறங்கி வயிற்றுக்குள் என்னவோ செய்தது. சிலைபோல் அமர்ந்திருந்தவளை வேடிக்கை பார்த்துக் கொண்டே மனிதர்கள் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்த மருத்துவமனையிலேயே அதிக வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஜீவன் அவளாகத்தான் இருப்பாள் அந்த நொடி.

 

   காவல்துறை அதிகாரி, சுந்தரத்துடன் பேசத் தொடங்கி இருந்தார். கதவிடுக்கில் வார்த்தைகள் கசிந்து கொண்டு இருந்தது. அவளுக்குத் தெரியும் மாலியின் பெற்றவர்களும் இந்த பெரிய நிகழ்வை சேவையாக கருதி நிச்சயம் கடந்து வருவார்கள். இதை, அவள் நன்றாகவே அறிவாள். ஆனால் அந்த சிந்தனை எல்லாம் அவளுக்கு இந்த நிமிசம் அந்நியமாகப் போய் இருந்தது.

 

  மெல்ல தோள்மீது கைகள் ஆதரவாய் விழ, நீர்கட்டிய விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தாள். சகுந்தலா..!

 

  ‘’ சிந்து, உன் மனநிலை எனக்கு இப்போ புரியுது. இந்த பெரிய அதிர்ச்சியை உன்னை மென்னு விழுங்கச் சொல்லி அத்தனை பேரும் கட்டாயப்படுத்தறாங்க. ஆனால் இது எதுவும் திட்டமிட்டு நடக்கல. விதி..! வேற யார்மேல பழி போட..?

 

  எங்க இழப்பு இப்போ ஈடு செய்யப்பட்டதா..? டிராமாவில வர்ற மாதிரி, இனி இவருக்கு பிறகு இவர்னு காட்டிறதை எப்படி நிஜ வாழ்க்கையில ஏத்துக்க முடியும்..? இது எத்தனை தூரம் சாத்தியமாகப் போகுது..? தெரியல. ஆனால் அஜெய் ஏதோ ஒரு ரூபத்துல இருக்கான். எதுவுமே இல்லாத விபத்துகளில், எதுவாகவோ வாழ்ந்துட்டு இருக்கிறது எத்தனை பெரிய ஆறுதல். அதே ஆறுதல்தான் உங்களுக்கும். மாலியை உங்களால பார்க்க முடியும். ஆனால் மாலியா பார்க்க முடியாது. இதை இதுக்குமேல எப்படி விளக்கறதுன்னு எனக்கும் தெரியல.’’

 

   இதற்கும் மெளனமாகவே இருந்தாள்.

 

 ‘’ இத்தனை நாள் இங்கே நடந்த போராட்டத்தை நான் என் அம்மா, தம்பி மனைவி, அவன் குழந்தைனு யார்கிட்டயுமே சொல்லல. ஏன் தெரியுமா..? இதுவரைக்கும் துளிகூட நம்பிக்கை இல்லாத விசயத்தை நான் எப்படி என்ன நடக்கப் போகுதுங்கிற தெளிவே இல்லாமல் அபராகிட்டயும், அம்மாகிட்டயும் சொல்ல..? இப்படி நினைச்சுத்தான் இத்தனை நாளும் காத்திருந்தேன். இரண்டு நாள் முன்னாடி அஜெய் கண் விழிக்கிற வரைக்கும். அவன் நிலைமை சீராகி இயங்கத் தொடங்கியதும், வீட்டில விசயத்தை மெல்ல மெல்லச் சொன்னேன். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவங்க மீளல.

 

  அஜெய்க்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ். அதுக்கு முன்னாடி இந்த விசயத்தை எத்தனை இதமா முடிக்க முடியுமோ, அத்தனை இதமா முடிக்க முயற்சி செய்றோம்.

 

  இதற்குமேல் இந்த விசயத்தை வார்த்தையால் கடக்க வழி சொல்லி சரி செய்ய முடியாது. உணர்வுப் பூர்வமா உணரணும். நிறைய இழப்புகளை பார்த்துட்டேன். இந்த நிமிசம் உன் வலி என்னை நிலைகுலைய வைக்குது. ’’ மெல்ல அவள் முதுகில் தட்டிவிட்டி கடந்தார்.

 

 அலைபேசி ஒலித்துக் கொண்டே இருந்தது. மனம் ஒப்பவே இல்லை பேச. உடலில் இருந்த அவயங்கள் எல்லாம், இதயத்தை தனியே விட்டுவிட்டு தொலைந்து போனதுபோல் துடித்துக் கொண்டே இருந்தது.   

 

 ஓயாமல் ஒலித்த சரஸ்வதியின் எண்களை மெல்ல இணைத்தாள்.

 

இருபக்கமும் பேச்சற்ற மெளனம்…

 

‘’ அத்தை…’’ என்றாள் கேவலுடன்.

 

 ‘’ போயிட்டானா… ஓரேடியா போயிட்டானா..? கடைசியா என்னை வந்து பார்க்காம கூட போயிட்டானா…’’  பல நூறு மைல்கள் தாண்டி கேட்ட அந்தக் குரல், அடிவயிற்றை வெடிக்க வைத்தது. உள்ளே அவன் தங்கைகளின் அழுகை சத்தமும், சுந்தரத்தின் கதறலும் துள்ளியமாக கேட்டது.

 

  அவர்களின் துயரம். கடலின் முகத்துவாரத்து அலைகள் போல் இருந்தது பேரிரைச்சலாய். ஆனால் சிந்தூரி அந்த எல்லைகளை கடந்து நடுக்கடலில் நின்றாள். சலனமற்ற அமைதியாய் அவள் துயரம். அடங்கிப் போய், ஆழமாய் பயமுறுத்திக் கொண்டு இருந்தது.

 

  ‘’ மூளை மாத்தினது, அது இதுன்னு சொல்றாங்க. என்ன சிந்து அதெல்லாம்..? எனக்கு எதுவுமே தெரியலயே. மூளையை மாத்தினா எல்லாம் மாறிப்போயிடுமா..? நான் நம்பல. அவனுக்கு உன்னைத் தெரியும், நம்மை எல்லாம் அவன் மறக்கவே மாட்டான். இவங்க சொல்லிட்டா, அவன் நமக்கு இல்லாமப் போயிடுவானா..? என்னால தாங்க முடியலியே…’’ அந்த தாயின் அரற்றல் கேட்டுக் கொண்டே இருந்தது.

 

ஆறுதலே சொல்லவில்லை. அவளிடம் இல்லாத ஒன்றை எப்படி அவள் மற்றவர்களுக்கு தந்து உதவ..? கண்களை மூடியே அமர்ந்திருந்தாள். உள்ளே மிகப்பெரிய பிரஸ் மீட்டும், டாக்டர் மாதூரின் இந்த மனிதகுலத்தின் மகத்தான சாதனை குறித்த அறிவிப்பும், அஜெய், மாலியின் புகைப்படங்களும், இறுதியாக மாலியின் பெற்றவர்கள் துயரத்திலும் தங்கள் மகன் இந்த மனிதகுலத்திற்கு, மிகப்பெரிய ஆராய்ச்சிக்கு பயன்பட்டதை பற்றிய கண்ணீரோடு கூடிய அலைபேசி ஒப்புதல் பதிவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

 

  நர்கிசை அழைத்து விசயத்தைச் சொல்லிவிட்டு தான் வர நேரமாகும் என்ற கருத்தையும் பதிந்துவிட்டு அலைபேசியை அணைத்து வைத்தாள். டி,வி.யில் பார்த்துவிட்டு அத்தனை பேரும் அழைப்பார்கள் என்று தெரியும். தனித்தனியாக இந்த துயரத்தை சொல்லி சொல்லி தன் இதயத்தை சிதிலமாக்குவதை அவளால் தாங்கத்தான் இயலவில்லை.

 

  சகுந்தலா நடைமுறைகளை முடித்துக்கொண்டு வெளியில் வந்தபோது, மணி பத்தை தாண்டி இருக்க மருத்துவமனை மெல்ல மெல்ல அமைதி நிறத்திற்கு மாறத் தொடங்கி இருந்தது. கான்ப்ரன்ஸ் ஹாலில் இன்னும் மாதூருக்கு வாழ்த்து மழை குவிந்து கொண்டிருக்க, மணிக்கட்டை திருப்பி பார்த்தபடி வெளியில் வந்த சகுந்தலா, விட்டுப் போன அதே இடத்தில் ஆணி அடித்தது போல் அமர்ந்திருந்த சிந்தூரியை பார்த்ததும் பதறிப் போனார்.

 

   அரவமற்ற காரிடரில், உறைய வைக்கும் பனியில், ஸ்மரணையே இல்லாமல், கைகளை இருபக்கமும் ஊன்றி அமர்ந்திருந்தவளைப் பார்க்க, இதயமே வெடித்துப் போனது போல் இருந்தது. இது போன்ற இன்னும் எத்தனை காட்சிகளை அவர் வாழ்க்கையில் பார்க்க..?

 

   பக்கத்தில் வந்து தோள்களை தொட்டார். வறண்டு போன கண்களால் நிமிர்ந்து பார்த்தாள்.

 

‘’ சிந்து, எத்தனை நேரம் இப்படியே உட்கார்ந்திருப்பே..? உன்னைப் பார்க்க பார்க்க, எனக்கு அத்தனை துயரமா இருக்கு. தெரியாத ஊர்ல, நீ எப்படி இந்த நேரத்துக்கு மேலே திரும்பிப் போவே..? ஏனோ உன்னைப் பார்த்ததில் இருந்து ஒரு தாய்மை உணர்வு எனக்கு அடக்கமுடியாம பீறிட்டுட்டு வருது. ‘’ மெல்ல அவள் கன்னத்தில் தட்ட, அந்தக் கைகளை பற்றிக் கொண்டாள். அந்த நிமிசம் அவளுக்கு அந்த கதகதப்பு வேண்டுமானதாக இருந்தது.

 

   ‘’ நா… ன், நா,,,ன் மாலியைப் பார்…க்…கணும்…’’ குரல் முழுதாய் கிணற்றில் இறங்கி இருந்தது. பக்கத்தில் வந்த சகுந்தலா அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொள்ள, இத்தனை நேரம் கட்டுபடுத்தி வைத்திருந்த கண்ணீர் வெடித்து சிதறியது.

 

  ‘’ மா..லி,  என் மாலி… அவனுக்கு, அவனுக்கு என்னை அடையாளம் தெரி…யும்… தானே…? அவன் … அவன்.. ரெம்ப நல்லவன். ‘’ சகுந்தலாவின் மார்பில் முகம் பொதித்து கதறிக் கொண்டிருந்தவளை சமாதானம் செய்ய வார்த்தைகள் அற்று சகுந்தலா தானும் அழுது கொண்டிருந்தாள்.

                     ❤️

   மருத்துவமனையில் சகுந்தலாவின் ஓய்வறை. சகல வசதிகளும் அடக்கத்தில் சின்னதாய் இருந்தது அங்கே. டீபாயின் மீதிருந்த ஹாட் பேக்கில் சப்பாத்தியும், சப்ஜியும்  இருந்தது.

 

  முகம் அலம்பி அழுகை சுவடுகளை தொலைத்திருந்தாள். ஆனால் எத்தனை அழித்தும் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. நேரமாக ஆக, வலியின் வீரியம் உயிர்வரை துளைத்துக் கொண்டு இருந்தது.

 

  ‘’ சிந்து, கொஞ்சம் காப்பி சாப்பிடறியா..? ரெம்ப அழுத்தமா இருக்கே..?’’ காப்பி குவளையுடன் பக்கத்தில் வந்து கேட்டவரை மென்மையாக பார்த்தாள்.

 

  ’’ இல்ல மேடம் வேண்டாம்.’’

 

   ‘’ இப்படியே இருந்தால் எல்லாம் சரியாகுமா..?’’

 

 ‘’ இப்படியே இருக்கேன்னு நான் சொல்லல. இப்போ இப்படி இருக்கேன். இப்படி மட்டும்தான் என்னால இருக்க முடியும். ஒரு முழுக்கடலை முழுங்கற ஒருதுளி மணல் போல இருக்கேன். என்னால முடியல.’’ என்றாள் உதடு துடிக்க.

 

 கொஞ்சம் நெகிழ்வாகக் கூட இருந்தது அந்த நிமிசம். தனக்காக வீட்டுக்கு போவதைக் கூட தள்ளி வைத்துவிட்டு அங்கேயே தங்கிப்போன டாக்டர் சகுந்தலாவின் அன்பின் கதகதப்பு மனதிற்குள் அனிட்சையாய் மழை தூவியது.

 

 ‘’ நீங்க சாப்பிடுங்க மேடம்.’’

 

  ‘’ ப்ச்..! நான் மட்டும் மனுசி இல்லையா..? உண்மையில விபத்தை சந்திக்கிறவங்க அமைதியா கண்மூடி உணர்வற்று போயிடறாங்க. ஆனால், அவங்களை சுத்தி இருக்கிறவங்க அனுபவிக்கிற உயிர் வலி வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்த இரண்டு மாதமும் நான் அப்படித்தான் இருந்தேன். இன்னும் கூட.

 

 இந்த மாற்று ஏற்பாடு எல்லாத்தையும் சரி செய்யுமா..? செய்ய முடியுமா..?இதுமாதிரியான எந்த கேள்விகளுக்கும் என்கிட்ட பதிலில்லை. காலம் தான் பதில் சொல்லணும். 

 

 நேத்து அபரஞ்சியின் நிலையும், இன்றைக்கு உன் நிலையும் இப்படி தினமும் விதவிதமான வேதனைகளை பார்த்துட்டே இருக்கேன். ஆறுதல்படுத்தி, தேறுதல் சொல்லி, என்னை நானே தேற்றி… உண்மையில் உங்க எல்லாரையும் விட, நான் தான் ரெம்பவே பாவம்…’’ என்றபோது கண்ணாடியை கடந்து ஒருதுளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.

 

   கைகளை சோபாவில் ஊன்றி தலை குனிந்து கொண்டார். அழுகிறார் என்று நன்றாகவே புரிந்தது. அந்த உணர்வை களைக்காமல் கைகளை கட்டிக் கொண்டு அவரை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

   அந்த கரும்பாறைக்குள் இருந்த நீர்சுனை மெல்ல மெல்ல முகம் நீட்டிக் கொண்டிருந்தது. ஒரு பெண் குடும்பத்தின் தலைவியாக இருப்பது ஒன்றும்  பெரிய காரியமில்லை. ஆனால் ஒரு பெண் தன்னை சுற்றியுள்ள அத்தனை பேரின், உணர்வுக்கும் பொறுப்பாளராக இருப்பது என்பது எத்தனை கடினம் என்று புரிந்தது.

 

    இரண்டு சப்பாத்திகளை தட்டில் வைத்து சப்ஜியை ஓரமாய் வைத்து கொண்டு அவர் முன்னாக வந்து அமர்ந்தாள். சகுந்தலா நிமிரவே இல்லை. சப்பாத்தியை விள்வி, கொஞ்சமாய் சப்ஜியில் தோய்த்து சகுந்தலாவிற்கு ஊட்ட, மெல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, நிமிர்ந்து பார்த்தார்.

 

   தன் துயரத்தை மென்று கொண்டே மற்றொரு உயிரை நேசிக்கும் இன்னொரு ஜீவன், தன்னைப் போலவே.

 

   ‘’ சாப்பிடுங்க மேடம்… உஙகளோடு சேர்த்து இன்னும் பலரை சுமக்க வேண்டி இருக்குல்ல…’’ 

 

     தட்டாமல் இரண்டு சப்பாத்திகளை வாங்கிக் கொண்டார், அவள் கை வழியே. பதில் மரியாதையாய் அவளை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவில்லை, அவள் இருக்கும் மனநிலை புரிந்ததால்.

 

   இந்த இரவு நேரத்தில், அஜெய் மருந்துகளின் உதவியால் உறக்கத்திற்கு ஆழ்ந்திருக்கும் போது, அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதால் காலையில் சென்று பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார். 

 

  சிந்தூரி இருந்த மனநிலைக்கு அவளை தனியே விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல், அங்கேயே அவளோடு தங்கிக் கொண்டு, மருத்துவர் என்பதை விட, தன்னை ஒரு உணர்வுப்பூர்வமான பெண்ணாக பரிமளித்துக் கொண்டிருந்தார் சகுந்தலா.

 

 அதன்பிறகு இருவருமே பேசிக் கொள்ளவில்லை. சோபாவில் மடங்கி அமர்ந்திருந்தவளை ஒருவித வருடல் பார்வையுடன் தொடர்ந்து கொண்டே இருந்தார். அலைபேசி சிணுங்கியது. டாக்டர் மாதூர். செயற்கரிய தன்னுடைய செயலை உலகுக்கு அறிமுகம் செய்து முடித்த கர்வம் அவர் குரலில் தெரிந்தது.

 

 ‘’  டாக்டர் சகுந்தலா, வீட்டுக்கு போகலயா..? இங்கேயே ஸ்டே பண்ணிட்டு இருக்கீங்களா..? ‘’

 

  ‘’ எஸ் டாக்டர். சிந்து கூட இருக்கேன். சீ ஈஸ் அப்செட்.’’ என்றார் கண்களில் அவளை தடவிக் கொண்டே.

 

 ‘’ புரியுது. நான் அந்தப் பெண்ணை பார்த்து சில வார்த்தைகள் பேசலாமா..? இப் யூ டோண்ட் மைண்ட்.’’

 

   ‘’ ஷ்யூர் டாக்டர். ரூம்ல வெயிட் பண்றேன்.’’ என்றாள்.

 

 அடுத்த மூன்றாவது நிமிசம் டாக்டர் மாதூர், அங்கே இருந்தார்.

 

   முகத்தில் அயர்வையும், முதிர்வையும் மீறிய நிறைவு. அப்படியொரு முகபாவத்தில் அமர்ந்திருந்தார்.

 

   ஒரு மாணவியாய் அவரின் தாகத்தை முழுதாய் அறிந்தவள் என்பதால் அவள் முகத்தில் சின்ன புன்னகை அடர்த்தியாய் படிந்தது. 

 

   அடர்ந்த உல்லன் ஆடைகளுக்குள் குளிர் ஊடுருவாமல் இருக்க, கனத்த ஹவுஸ் கோட்டை அணிந்திருந்தார், முதுமைகூட எத்தனை கம்பீரம் என்று அவரைப் பார்ப்பவர்களுக்கே புரியும்.

 

  ‘’ டாக்டர் டீ…’’

 

   ‘’ இப்போ வேண்டாம். தேவைப்பட்டால் சொல்றேன். நோ பார்மாலிடிஷ். ‘’ என்றவர் சோபாவில் அமர்ந்து கொண்டே சிந்துவை தேடினார். படுக்கையை ஓட்டி இருந்த ப்ரென்ச் விண்டோ அருகே அமைதியாக இருளில் கரைந்து கொண்டிருந்தாள். முகம் முழுக்க அத்தனை இறுக்கம். சில நேரம் அழுகைக்கு ஆறுதல் தேவைப்படும், பலநேரம் ஆறுதல் அடைய அழுகை தேவைப்படும். சிந்துவும் அதே நிலையில் தான் இருந்தாள்.

 

   சகுந்தலாவும், மாதூரும் ஒருவரோடு ஒருவர் கண்களால் பெருமூச்சை பரிமாறிக் கொண்டார்கள். 

 

   ‘’ சிந்து…’’ சகுந்தலாவின் அழைப்பிற்கு திரும்பிப் பார்த்தாள். இருளில் இருந்து உருவி எடுத்ததாலோ என்னவோ, கண்களில் அத்தனை கருமை அடர்ந்து கிடந்தது. தலை அசைப்பிற்கு அருகில் வந்து நின்றாள்.

 

   அவர்களுக்கு எதிர்முனையில் இருந்த இருக்கையை காட்ட, அமைதியாக அமர்ந்தாள். அகத்திற்குள் ஒரு பெரும் புயலும், போர்களமும் நடந்து கொண்டு இருப்பது முகத்தில் தெளிவாக தெரிந்தது.

 

   ‘’ எக்ஸ்ட்ரீம்லி சாரி…’’ என்றார் மென்மையாக. அமைதியாகவே அமர்ந்திருந்தாள். 

 

   ‘’ இதுபோன்ற மரணத்தின் கொடூரத்தின் பிடியில் இருந்து இந்த உலகத்தை காப்பாத்தறதுதான் என்னுடைய பெரிய குறிக்கோள், மனித குலத்தின் கண்ணீரை மாற்று கருவியின் மூலம் முடிந்தளவு சரிபண்ணனும், அதுக்காக மட்டுமே நான் இத்தனை  போராடிட்டு இருக்கேன். அந்த அரிய பணிக்கு, மிகப்பெரிய பங்களிப்ப்பை மிஸ்டர் வனமாலி செஞ்சிருக்கார்.’’ என்றார் வெகு சுத்தமான ஆங்கிலத்தில்.

 

  சிதறி விழுந்த மழைத்துளியை பதறிக்கொண்டு கவ்விக் கொள்ளும் செம்மண் போல, அவனுடைய பெயரைக் கேட்டதும், செத்துக் கிடந்த உணர்வுகள் எல்லாம் உயிர்பெற்றுக் கொண்டது.   

 

  ‘’ மாலி…க்கு என்..னை அடை…யாளம் தெரியாதா டாக்டர்..?’’ என்றாள் பரிதாபமாக. சகுந்தலா கண்களை மூடிக் கொண்டார். ஏனோ சிந்துவின் நிகழ்கால தவிப்பு, சிக்மகளூரில் கிரணை இழந்துவிட்டு, காலடியில் பூமி இல்லாமல் தான் தவித்த நாள்களை நினைவூட்ட, ஏதோ இனம்புரியாத பிணைப்பு அவளுடன் உண்டாகி இருந்தது மனதிற்குள்.

 

   ’’ மிஸ்…’’

 

   ‘’ சிந்து…’’

 

    ‘’ சிந்து, நீங்க கேட்ட கேள்விக்கு தெளிவா நான் பதில் சொல்லணும்னா, அறிவியல் பூர்வமா சில விசயங்களை விளக்க வேண்டி வரும். அதுக்கு நேரம் எடுக்கும். எல்லாத்துக்கும் மேல அதை உள்வாங்கிக்கிற மனநிலையில் நீங்க இருக்கணும். கூறு போடற நிலையில இருந்தாலும், கூர்ந்து பார்த்தால், உங்க மனசோட வலி எனக்கு புரியுது. அதனால், நான் அறிவியல் விஞ்ஞானத்தை பேசி உங்ககிட்ட வித்தை காட்டாமல், இயல்பா சொல்றேன். இப்போ மிஸ்டர் வனமாலி இறந்தும் வாழ்கிறார், ஏதோ ஒரு ரூபத்துல…’’ மெல்ல எழுந்து வந்து அவளுடைய கரங்களை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார். அவருடைய வெளீர் நிறக் கைகளை, அவளின் கண்ணீர் தொட்டு முத்தமிட்டது.

 

  ‘’ நிஜங்கள் பல நேரம் அஜீரணமானது. அதை அத்தனை எளிதாய் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், என்ன செய்றது  ஏற்றுக் கொண்டேதான் ஆகணும். அடம் பிடிச்சாலும் பலன் இல்லை.’’

 

   மெளனம்.

 

‘’ காலம் இதுவரைக்கும் மரணத்துக்கு மாற்று மருந்து தரவே இல்லை. அந்த கோர கரங்களை கொஞ்சமாய் ஒடிச்சிட்டுத் தான் இத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கோம். மொத்தமா இந்த உலகத்தில மரணத்தை கட்டிப் போட முடியாது. ஆனால், மரணத்துக்கு அழறவங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் இல்லயா..! அதுக்கு முன்னோடியாத்தான் இந்த ஆய்வின் வெற்றியை பார்க்கணும்.

 

   சேவையின் கரங்களில் பலர் வழிய தங்களை ஒப்படைச்சுக்கறாங்க. சிலரை சேவை தானே வழிய தத்தெடுத்துக்குது..! அப்படி காலம் தானே வழுவில் சென்று தத்தெடுத்தது தான் மிஸ்டர் மாலியை. அவரின் இந்த மகத்தான சேவையை சரித்திரம் பேசும்.’’

 

  ‘… சரித்திரம் பேசினால் என்ன பேசாவிட்டால் தான் என்ன..? என் மாலி என்கூட பேசுவானா..? என்னை தெரியுமா..? என் கண்ணுல அவனுக்காக மட்டும் வழியும் காதல் புரியுமா..? என் அன்பு, பிரேமை, நேசம் இதெல்லாம் அவனுக்கு நினைவில் இருக்குமா..?’ மனசு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாலும், அலைகளின் சத்தம் கேட்காத, ஆழ்கடல் போலே அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

  ’’ உங்களுக்கு வேறுவிதமான உதவிகள் தேவைப்படும்னாலும், கண்டிப்பா செய்யத் தயாரா இருக்கோம். அதுக்கு முன்னாடி, அவருடைய அப்பா, அம்மாவை சந்திக்கணும். நடந்ததை, ஆதரத்தோட விளக்கணும், எல்லாவற்றுக்கும் மேல, அவங்க பையன் இறந்தும் இறவாமல் இருக்கிறதை காட்டணும். அறிவியலும், மருத்துவமும், மனித குலத்திற்கு ஆற்றி வரும் மகத்தான சேவையை உலகத்துக்கு முன்னாடி கொண்டு வரணும்.’’ அவர் ஆராய்ச்சியின் வெற்றியை ஆராதித்துக் கொண்டு இருந்தார். ஆனால், ஆதாரத்தையும், ஆகாரத்தையும் இழந்த அவளோ, சேதாரத்தின் பிடியில் இருந்து மீளாமல் இருந்தாள், வெறுமையோடு.

 

  இருபது நிமிடங்கள் மூச்சடைக்க பேசி முடித்துவிட்டு அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க, முன்பு பார்த்த அதே பார்வை பார்த்துக் கொண்டே அதே கேள்வியை திரும்ப கேட்டாள்.

 

  ‘’ என்னை மாலிக்கு அடையாளம் தெரியும் தானே, டாக்டர்…’’

 

"...உயிரே உயிரின் ஒளியே

ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள்

இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள்

என்றும் வாழ்வின் உண்மைகள்…''

                   வனமாலி 29                           

இப்போதெல்லாம் உறக்கம் இல்லாதது எல்லாம் அத்தனை குறையாய் தெரிவதில்லை. அத்தனை உறுப்புகளும் ஒத்துழைத்து மூளைக்கு ஓய்வைத் தரவேண்டும். எத்தனை எச்சரித்தாலும் கேட்காமல் மூளைமட்டும் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டு, கவலையில் பதுங்கிக் கொண்டிருந்த சிந்தனைகளை, கழுவிக் கொண்டிருந்தது.

 

   அத்தனை ஆறுதல்களையும் கொட்டி தீர்த்துவிட்டு, டாக்டர் மாதூர்  எழுந்து போனபோது, நடுநிசி நாய்களின் பேரிரைச்சல், தெருக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. 

 

  சகுந்தலா மெல்ல கண் அயர்ந்து இருந்தார். ஓய்வறியாத தொடர் பணிகள், அவரை உள்ளத்தை விட்டு உடலை எழுப்பி கொண்டு போய்விடும் தான். அவரே விரும்பாவிட்டாலும், அவர் இயங்கியாக வேண்டும்.

 

சிந்தூரி கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். களைத்துப் போகாத கவலைகளோடு. கண்களை மூடினால், நன்றாகவே உணர முடிந்தது மாலியின் மூச்சின் வாசத்தை. இதோ, தொடுதூரத்தில் அவன் இருக்கிறான். அவன் நெஞ்சாம் கூட்டில் இருந்து ரிதம் தப்பாமல், லய சுத்தமாக வந்து விழும் காற்றை, இவள் நாசிக்கருகில் நன்றாக உணர முடிகிறது. 

 

  மாலியை பார்க்க வேண்டும்’ என்ற நினைப்பு, கனன்று கொண்டே இருந்தது அடிமனதில். காலையில் சகுந்தலாவிற்கு முன்னே முகம் அலம்பி, தலை ஒதுக்கி காத்திருந்தவளை வேதனையூற பார்த்தார் சகுந்தலா. மஞ்சள் பூசிய கரத்தால், நிலவைத் துடைத்தது போல், கலக்கமாக இருந்தது அவள் முகம்.   

 

 ‘ நீ யார்..?’ என்று அவன் கேட்டு விட்டால், எப்படி தாங்குவாள் இவள்..?’ இந்த சிந்தனை வந்தபோது, சிந்தூரியை விட, சகுந்தலாவே பதட்டத்தில் மூழ்கி இருந்தார்.

 

  இன்றுதான் அபரஞ்சியும் அஜெயனை சந்திக்க வருகிறாள். இவர்கள் இருவரும் சந்திக்க வருகின்ற போது, அங்கே அவளின் அஜெயனும், இவளின் மாலியும் இருப்பார்களா..? இனி அவன் யாருக்கு சொந்தம்..? இன்னொரு உடம்புக்குள் அப்பாவை அடையாளம் காண்பாளா மதுரிமா..? ஆயிரம் கேள்விகள் மனசிற்குள் முளை விட்டுக் கொண்டே இருக்க, மெல்ல தலையை குலுக்கிக் கொண்டாள்.

 

   ‘’ காப்பி சாப்பிடறியா சிந்து..?’’ 

 

   ‘’ வேண்டாம் டாக்டர். எனக்கு மாலியை பார்க்கணும்.’’

 

  ‘’ நான் ஒண்ணு சொல்லட்டுமா..? நிறைய எதிர்பார்ப்பை வச்சுக்காதே. ஏமாற்றத்தை தாங்கறது, பாறைக்கு அடியில் இருந்து மூச்சு விடறமாதிரி, ரெம்பவே கஷ்டமானது.’’ என்றார் தவிப்பாக.

 

   சிந்தூரி அழுத்தமாய் பார்த்தபடி சின்னதாய் புன்னகைத்தாள்.

 

   ‘’ எனக்கு கவலை நீங்க மாத்தி வச்ச மூளையைப் பத்தி இல்லை. எப்பவும் துடிச்சிட்டே இருக்கிற இதயத்தை, என்னை தேக்கி வச்சிருக்கிற கண்களை. நான் தேடி எடுக்கபோறது அதைத்தான், அந்த தேடல்ல ஜெயிக்கிற வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். எனக்கு என் மாலி வேணும். ’’ 

 

   அவளின் உறுதியான வார்த்தைகளை கேட்டுவிட்டு, வெளியேறப் போனவர், அப்படியே நின்றார். அந்த காதலின் உறுதியும் நேர்மையும், அவரை என்னவோ செய்தது.

 

  அறையை விட்டு வெளியில் வந்தார்கள். கையில் வெண்ணிற கோட் சகிதமாய் காரிடரில் நடக்க, சின்னதாய் இடைவெளி விட்டு சிந்தூரி தொடர்ந்து கொண்டிருந்தாள். எதிர்பட்ட மருத்துவர்கள் எல்லாம், வணக்கங்களை பரிமாற, பதில் சொல்லியபடி கம்பீரமாய் நடந்தார்.

 

   ‘’ டாக்டர்…’’ நர்ஸ் பிருந்தா பக்கத்தில் வந்து அழைத்து நடையை நிறுத்தி வைத்தாள்.

 

  ‘’ எஸ் பிருந்தா.’’

 

   ‘’ உங்க ரூம்ல உங்க பேமிலி வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. உங்களை உடனே அழைச்சிட்டு வரச்சொல்லி டாக்டர் மாதூர் அனுப்பி வச்சாங்க.’’

 

  ‘’ இட்ஸ் ஓ.கே. நான் அங்கேதான் வந்துட்டு இருக்கேன். நீங்க போகலாம்…’’ என்றவர் ஒரு நொடி தாமதித்து, 

 

  ‘’ அஜெய் ரூம்ல யார் இருக்கா..?  ஐ மீன் யார் அட்டென் பண்றா..?’’

 

   ‘’ இல்ல டாக்டர். ட்யூட்டி டாக்டர் வந்து பார்த்துட்டு போயாச்சு. அவர் இப்போ முழிச்சுத்தான் இருக்கார்.’’

 

   ‘’ ஓ.கே. நீங்க போகலாம்.’’ 

 

  அலைபேசியை எடுத்து அபராஞ்சியை அழைத்தார்.

 

  ‘’ சொல்லுங்க அக்கா. நாங்க உங்க கேபின்ல இருக்கோம்.’’

 

  ‘’ இப்பத்தான் சொன்னாங்க அபரா. அம்மா வந்திருக்காங்களா..?’’

 

  ‘’ ம். மதுரிமாவும் வந்திருக்கா.’’ 

 

  ‘’ தேர்ட் ப்ளோர்ல வந்து ரிசப்சன்ல வெயிட் பண்ணுங்க. நானும் டாக்டர் மாதூரும் வந்துட்டே இருக்கோம். ‘’

 

  ‘’ ம்…’’

 

  ‘’ அபரா… தைரியமா இருக்கியா..?’’

 

  ‘’ அதைரியமா இருந்தாலும் என்ன செய்ய முடியும்..? கடலுக்குள்ள விழுந்தப்புறம் நீந்தித்தானே ஆகணும். ஆழத்துக்கு பயந்து என்ன செய்ய..? இந்த சூழ்நிலையை சந்திச்சுத்தான் ஆகணும் தலையில எழுதி இருக்கு இல்லையா.?’’ இப்படியெல்லாம் அவளுக்கு பேசத் தெரியும் என்பதே இப்போதுதான் தெரிகிறது.

 

  அழைப்பை துண்டித்துவிட்டு திரும்பி பார்த்தாள். சிந்துாரி மார்பிள் தரையின் பூக்களை எண்ணிக் கொண்டு நின்றாள் அமைதியாக. தலையசைத்து விட்டு நடக்க, மெளனமாக பின் தொடர்ந்தாள்.

 

  '.. இரண்டில் ஒன்றானவன் அங்கே… அவன் வாழ்க்கையில் இரண்டற கலந்த பெண்கள் இருவரும் ஒருசேர இங்கே..! இவர்களில் யாரை அவனுக்கு அடையாளம் தெரியப் போகிறது..? நீர் குடம் போல நெகிழ்ந்து ஒழுகும் இந்த ஷணத்தை எப்படி எதிர்கொள்ளவது, அல்லது இந்த கத்தியில் யாரையும் காயப் படுத்தாமல் காப்பாற்றுவது எப்படி..? உள்ளம் ஆயிரம் கேள்வி கேட்டது. அந்த ஷணத்தை முடிந்த மட்டுக்கும் தள்ளிப் போடலாமா, என்ற நப்பாசையும் நெஞ்சுக்குள் வந்து மோதாமல் இல்லை. 

 

    லிப்ட் கதவு திறக்கும் போதே, லாபியில் காத்திருந்த அபரஞ்சியும்,  அம்மாவும் தெரிந்தார்கள். மதுரிமா குழந்தையோடு போகும் யாரோ ஒரு அப்பாவை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது, ஏக்கமாய். இப்போதெல்லாம் குழந்தையின் கண்களுக்குள் ஏக்கம் குடிவந்து நாளாகிறது.

 

  ‘’ சிந்து…’’

 

  ‘’ டாக்டர்.’’

 

  ‘’ அதுதான் அபரஞ்சி. அஜெய்யோட ஓய்ப். அவங்க எங்க அம்மா. அது மதுரிமா பாப்பா. அஜெய் குழந்தை.’’ சன்னமான குரலில் சொல்ல, சிந்து அவர்களை பார்த்துக் கொண்டே நடந்தாள். அபரஞ்சி அழகாக இருந்தாள், இந்த துயரத்திலும். குழந்தை அள்ளி அணைக்கச் சொல்லி அப்பட்டமாய் அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்தது, அழகால்.

 

   ‘’ அபரா, ரெம்ப நேரமா வெயிட் பண்றியா..?’’ என்றவருக்கு பதில் சொல்லாமல் சிந்துவையே பார்க்க, அவள் கரங்களை பற்றி மெல்ல அழுத்தம் தந்து, கண்களை பார்த்துக் கொண்டே சன்னமாக தலை அசைத்தார் சகுந்தலா.

 

  புரிந்தது. ஒரே விபத்தில் உயிரை இழந்த இரு நடைபிணங்களாய் தன்னையும், சிந்துவையும் உருவகித்துக் கொண்டாள் மனதில். புன்னகைக்க முயன்று தோற்றுப் போனார்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே.

 

  நான்கைந்து அறைகளை கடந்து, தனியாய் இருந்த ஸ்பெசல் வார்டின் கதவருகில் சென்று நின்று தேங்கிக் கொண்டார்கள், மூவருமே. சன்னமான மூச்சை எடுத்துக் கொண்டு கண்களை அழுந்த திறந்து மூடியபடி அறை கதவைத் திறந்தார் சகுந்தலா.

 

  கட்டிலில் கால் நீட்டி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு கண்மூடி இருந்தான், வனமாலிக்குள் அஜெய். சிந்தூரிக்கு உச்சந்தலையில் இருந்து ஒரு பனி கத்தியை சொருகி, உள்ளங்கால் வரைக்கும் இழுத்தது போல, ஒரு ரணமான வேதனை. பனிக்கத்தியால் கிழித்தாலும், உயிர்போகும் என்பதுதான் ஆகப்பெரிய உண்மை.  

 

    கண்கள் மூடி படுத்திருந்தான். பெரிய ஆளுமையான தோற்றம் கொண்டவன் இல்லை அவன். இயல்பான தோற்றத்தில், சிரித்த முகமாய் எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும்படி இருப்பான். அவனின் தோற்றத்தை விட, அவனின் சிறந்த மேம்பட்ட குணமே, எல்லோருக்கும் பிடிக்கும். 

 

   இத்தனை பெரிய பண்ட மாற்றுக்கு பிறகு, அவன் முகம் வெகுவாய் சூம்பிப் போயிருந்தது. கண்கள் வட்டம் சேர்ந்து கறுத்து போயிருக்க, மழிக்கப்பட்ட தலையில் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரைக்கும் பெரிய வடு ஒன்று பளிச்சென்று தெரிந்தது. முள் முள்ளாய் தலைமுடி முளைவிட்டுக் கொண்டிருந்தது.

 

   உடல் முழுக்க சிறிதும் பெரிதுமாய் தழும்புகள். தோய்ந்து போன தோற்றத்தில் இருந்தான். மருத்துவமனை பச்சை உடுப்பில் இருந்தான்.

 

  சிந்தூரி கண்களில் இருந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் கண்ணீர் வழிந்து வைகையாக பெருகிக் கொண்டிருந்தது. கழுத்தில் கரைந்து மார்பை நனைத்துக் கொண்டிருந்தது.

 

  '... இல்லை இல்லை என்று சொன்ன வனமாலி..! இரண்டு மாதங்களாய் எந்த முகத்தை தேடி தேடி களைத்து தன் உலகம் தொலைத்தாளோ, அதே வனமாலி..! நம்ப முடியவில்லை… துடித்து தெறித்த இதயத்தை துடிக்காமல் நிறுத்தவும் இயலவில்லை.

 

   அவளுக்கு நேர் மறுமுனையில் அபரஞ்சி நின்றாள். அவள் கால்களையும், உணர்வுகளையும் கவ்விப் பிடித்திருந்தது, தரை. அவள் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அதில் ஏமாற்றம் மிகுத்தமாய் நிறைந்தது.

 

   ஆறரை அடி உயரத்தில், அசர வைக்கும் நிறத்தில், மயக்கும் கேசத்தில், மயங்க வைக்கும் சிரிப்பில், உச்சி முதல் உள்ளங்கால்கள் வரைக்கும் கம்பீரமும், போஷாக்குமாய் பார்த்த அஜெய். ‘ கண் நிறைஞ்ச புருசன்..’ அத்தனை பேரும் சொல்லி சொல்லி பெருமூச்சு விடவைத்த அஜெய். உருக்குலைந்து, உருமாறி… இவனை எப்படி அவனாய் பார்க்க… 

 

   அவனை எப்படி இவனுக்குள் அடக்க..! கடல் நீரை குவளையில் அள்ளி வைத்து, கடலை கமண்டலத்தில் அடைத்து விட்டதாய் சொல்வது எத்தனை பெரிய பத்தாம்பசலித்தனம்..! இருவரும் சமதூரத்தில் நிற்க. நடுவில் தராசு முள்ளாய் சகுந்தலா நின்றார்.

 

   ‘… நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு,

 

     இரண்டுக்கும் நடுவே, இறைவனின் சிரிப்பு,

 

     ஏனிந்த சிரிப்பு….’

 

   டாக்டர் மாதூரும் மிகச்சரியாய் வந்து சேர, இருவரையும் பார்த்துவிட்டு சகுந்தலாவை அழுத்தமாக பார்த்தார். அந்த நிசப்தத்தை உடைத்தாக வேண்டும்.

 

   ‘’ அஜெய்…’’ மென்மையாக சகுந்தலா அழைத்தபோது, கறுத்து இறுகி இருந்த இமைகுப்பி மெல்ல திறந்தது. 

 

   பார்வை பயணமாகி சிந்துவைத் தான் முதலில் தொட்டது. காதலாய் கசிந்து கண்களில் சிரித்து, எத்தனை நம்பிக்கையை தந்திருக்கிறது அந்த பார்வை, இந்த பாவைக்கு. ஆனால். ஆனால்…

 

   மெல்ல அந்த பார்வை அவளை கடந்து விலக, அவள் உயிர் மெல்ல உருவிக்கொண்டு தரையில் விழுந்தது, அந்த பார்வையையே பின் தொடர்ந்தாள். அது சகுந்தலாவிடம் சென்று மீண்டு, அபரஞ்சியிடம் சென்று குத்தி நின்ற நொடி, இத்தனை நாள் அந்த கண்களில் கண்டு களித்த, அத்தனை காதலும், பிரத்யேகமும், அபரஞ்சியின் முகத்தில் சென்று நிலைக்க, சிந்தூரி, நெருப்பில்லாமலே தீக்கிரையாகிக் கொண்டிருந்தாள். 

 

   இந்த பார்வை அவளுக்கானது தானே..! அவள் அள்ளிப் பருகியது தானே..! கண்டிப்பும் காதலும், அவளுக்கே அவளுக்கு காட்டியது தானே..! இன்று அவள் கண்முன்னே அந்த பார்வையை அவன் இன்னொருத்திக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறான்..!

 

   மெல்ல அந்த பார்வை மதுரிமாவையும் அவளை பற்றிக் கொண்டிருந்த பத்மாவையும் பரவசமாக பார்த்தது. அவனின் உலர்ந்த உதடுகள், பிரியத் துடித்தது. சிவந்து நிறமேறி இருந்த கண்கள் கரைந்து அழுக்கான முகத்தை கழுவியது.

 

  ‘’ அ… ம்… மா… ரஞ்..சி மது…ரி….’’ உயிரின் மொத்த உணர்வுகளையும், கத்தையாய் சேகரித்து வார்த்தைகளில் பதித்து. அவன் அழைத்தான்… ஆனால் அது அஜெய்யின் குரலில் அல்ல… வனமாலியின் குரலில்..!

 

   அவன் முகத்தை பார்த்தபோது கூட உடையாத சிந்து, அவன் பார்வையை சந்தித்தபோது கூட திடமாய் நின்ற சிந்து, அந்த குரலைக் கேட்டதும், குடலை புரட்டிக் கொண்டு வந்த ஆவேசத்தால், தன்னை கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல், மடங்கி அமர்ந்து வெடித்து போய் கதறினாள்,

 

   ‘’ மா..லி… உன் சிந்தூர் வந்திருக்கேன்டா… என்னைத் தெரியலயா…அப்படி மட்டும் சொல்லிட்டேனா நான் செத்துடுவேன் மாலி … எனக்கு யாருமே இல்லடா உன்னைத் தவிர.’’

 

     அத்தனை பேரும் அந்த அழுகையில் விக்கித்து நிற்க, மதுரிமா, பயத்தில் பாட்டியோடு ஒன்றிக் கொண்டது.

                        ❤️

   

வராண்டாவில் இருந்த நீண்ட இருக்கையில் அமர்ந்திருந்தாள் சிந்தூரி. அழுகை மிச்சமிருந்தது அவளிடம். ஆனால் கண்ணீர் மிச்சமில்லாததால், அழுகை தற்காலிகமாக ஒத்திப் போடப் பட்டிருந்தது. 

 

  மைனாக்கள் மஞ்சள் அலகோடு, அரவமில்லாத மரங்களில் அமர்ந்து இலைகளை கொறித்து விசிறிக் கொண்டிருந்தன. காரிடரில் இப்படி அப்படி உருளும் ஸ்டெக்சர்களின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஓசைகள் அவள் சிந்தனைகளை கலைக்கவே இல்லை. 

 

   எதுவோ இருக்கிறது… எதுவுமே இல்லாமலும் இருக்கிறது. தன்னை சுமப்பது சுமைபோல் தோன்ற, உடலையும் மனசையும் குத்தகைக்கு தந்துவிட்டு, கொஞ்சம் உடலில்லாத உயிராய், உயிரில்லாத உடலாய் அலையலாமா என்று ஆயாசமாக இருந்தது.

 

  இன்னும் எதற்கு இங்கிருக்கிறோம்..? என்ன தேவையும், தேடலும் இங்கே மிச்சமிருக்கிறது என்ற கேள்வி கண்முன்னே கொக்கி போட்டு இவளை அந்தரத்தில் நிறுத்தி ஊசலாட வைத்துக் கொண்டிருந்தது.

 

   ஆனாலும் அமர்ந்திருந்தாள். அவளின் மாலி இங்கே இருக்கிறான். அந்த முகமும், சிரிப்பும், கண்களும், ஏன் இவளுடைய காதலும் கூட அவனிடம் அப்படியேதான் இருக்கிறது… அப்படி இருக்க அவனைக் கடந்து எப்படி நகர்ந்து போக..?

 

   தொலைந்து போனவன் திரும்ப வந்துவிட்டான்..! ஆனால் அவனுக்குள் இருப்பவன் இன்னொருவன் என்றால், எப்படி நம்ப..? சிந்தித்து சிந்தித்து சிதறிக் கொண்டிருக்கும் இந்த மூளையை யாராவது இரவல் வாங்கிக் கொள்ளுங்களேன்… என்று மனது ஆர்பரித்தது.

 

   நர்கிஸ்க்கு அழைத்து இப்போது வர முடியாது என்ற தகவலை சொல்லி விட்டாள். அஜெயை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. எந்த உணர்வுகளையும் காட்ட இயலாத முகத்தோடு, தள்ளிப் போய் அமர்ந்திருந்தாள் அபரஞ்சி. பத்மா மட்டும் இன்னொரு குப்பிக்குள் இருந்த தன் மகனை அடையாளமாய் உணர்ந்திருந்தார். ஆயிரம் இருந்தாலும் தாயல்லவா..!!!

 

   குரலும் புதிதாய், முகமும் புதிதாய் இருந்த தகப்பனை கண்டு பயந்து விலகி ஓடியது மதுரிமா. 

 

  ‘’ இந்த அங்கிள் யாருமா..?’’ என்று கேட்டபோது மொத்தமாய் உணர்விழந்து இருந்தான் அஜெய். அப்போதுதான் அவனுக்கு முகக் கண்ணாடியைத் தந்து, அவனுக்கே அவனை அடையாளம் காட்டினார்கள்..!!!

 

   தன்னை இன்னொருவனில் பார்த்தபோது, மொத்த உணர்வும் கொட்டி கவிழ்ந்து போனது அவனுக்கு..! அவனை அவனுக்கே பிடிக்கவில்லை எனும்போது மனைவியும், மகளும் எப்படி அள்ளி பருகுவார்கள் அவன் அன்பை..?

 

  புரிதலும், புரிய வைக்கப்படுதலுமாய் பெரும் போராட்டங்கள் உள்ளே நடக்க, இது எதிலும் ஓட்டாமல் தனியாக தன்னை பிரித்துக் கொண்டு ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தார்கள் அபரஞ்சியும், சிந்தூரியும்..!

 

   ’’ சிந்து… இதுக்குத்தான் உன்னை திடமா வச்சுக்கச் சொன்னேன்.’’ அவள் அருகில் வந்தமர்ந்து சகுந்தலா கைகளை பற்றிக் கொண்டார். அதற்குள் டாக்டர் மாதூரும் அங்கே வந்துசேர, புருவத்தை உயர்த்தி அவளிடம் மெல்ல ‘ என்னவென்று’ விசாரிக்க, சகுந்தலா தோள்களை குலுக்கி பெருமூச்சு விட்டார்.

 

   ‘’  மனித உடலில், மாஸ்டர் எப்போதும் மூளைதான். மூளைதான் மனிதனை தன்னுடைய கட்டுப்பாட்டில் வச்சிருக்குது. மூளையோட உத்தரவுக்கே உடலின் அத்தனை அவயங்களும் இயங்குது. அந்த மூளை யாருடைய உடலில் இருந்தாலும், அந்த மூளையோட கட்டுப்பாட்டில் அந்த உடலை வச்சிருக்கும். இதுதான் மனித உயிரியலின் தாத்பர்யம்.’’ என்றார் மென்மையாக.

 

  ‘’ சர்வாதிகாரி..! எஸ், மூளை ஒரு சர்வாதிகாரி…’’ முணுமுணுத்தவளை இரக்கம் சுரக்க பார்த்தார்கள் இருவரும். 

 

    கண்களை சில வினாடிகள் மூடிக் கொண்டாள். மெல்ல மெல்ல உணர்வுகளை மீட்டெடுக்க முயன்று முயன்று தோற்றுக் கொண்டு இருந்தாள்.

 

   ‘’ ஆனால் இதை என்னால முழுசா நம்ப முடியல. நினைவிழந்த பலருக்கு, வழிப்போக்கில் நினைவு திரும்பி இருக்கு. அதுமாதிரி, எல்லா நினைவுகளையும் இழந்திருக்கிற மாலிக்கு கண்டிப்பா எல்லா நினைவும் திரும்ப வரும்..! எனக்கு நம்பிக்கை இருக்கு.’’ தனக்குள்ளே பிதற்றிக் கொண்டு, கைகளை மடக்கி நெற்றியில் குத்திக் கொண்டே அமர்ந்திருக்க. சகுந்தலாவை அழைத்துக்  கொண்டு சற்று தள்ளி வந்து நின்றார் மாதூர்.

 

   ‘’ சீ இஸ் மெண்டலி ப்ளாக்டு. நீங்க அந்தப் பொண்ணை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. சில நாட்கள் இருக்கட்டும். மெல்ல மெல்ல புரிதலோடு, நிதர்சனமும் புரியும். நத்தை மாதிரி நெகிழ்ந்து போயிருக்க பெண்ணுக்குள்ளே, கத்தி கொண்டு வலிக்க வலிக்க நிஜத்தை புகட்ட முடியாது. சொல்றதை விட, அவளே புரிஞ்சுக்க அனுமதிக்கணும். அதுதான் நல்லதும் கூட. எதை வேணா ஜெயிக்கலாம்னு நம்பிக்கையை தந்திருக்கிற விஞ்ஞானம் தான், உணர்வுகளை ஜெயிக்கவே முடியாதுங்கிற மெய்ஞானத்துக்கு பின்னாடி நிற்குது. அந்தப் பெண்ணை உங்களோடு அழைத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள்.’’

 

     தலையசைத்து விட்டு சிந்தூரியை நோக்கி நகர்ந்தாள். மாதூர் இந்த குறிப்பை தந்திருக்காவிட்டாலும், ஏனோ சகுந்தலாவின் மனது சிந்தூரியிடம் ததும்பிக் கொண்டேதான் இருந்தது. அவளை இப்படியே அனுப்பிவிட மனம் ஒப்பவேயில்லை தான். 

 

   சிந்தூரியிடம் சென்று சொன்னபோது அவள் மறுக்கவே இல்லை. அவள் மனது மாலியை மீட்டுக் கொண்டு செல்வதில் பெரும் உறுதியோடு இருந்தது.

 

   உள்ளுக்குள் தள்ளாடிய உணர்வை வெளித்தள்ளாமல் அமைதியாக மதுரிமாவை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அபரஞ்சி. டிஸ்சார்ஜ் முஸ்தீபுகளை முடித்துக் கொண்டு வர வெகுநேரம் பிடித்தது. புது உடலின் மனபாரத்தை சுமக்க முடியாத தவிப்பில் இருந்தான் அஜெய். 

 

   எல்லாவற்றுக்கும் மேலாக அந்த பெண்ணை சிந்தனையில் பரிட்சயம் இல்லைதான், ஆனால் அவளை கண்டதும், கண்ணும் நெஞ்சும் இனம் புரியாமல் பொங்கி துடித்த அனிட்சை செயலை அவன் உடலில் பொருத்தியிருந்த ஒட்டுமூளை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த இயலவில்லை…

 

  ‘ யார் அவள்..? இந்த உடலுக்கு சொந்தக்காரியா..? மனதுக்கு சொந்தக்காரியா..? அவனின் மனைவியா..? காதலியா..? வாழ்ந்திருப்பார்களா..? உடலால் ஒருத்திக்கும், சிந்தனையால் ஒருத்திக்கும் உரிமைபட்டவனா நான்..? இனி யாரோடு சேர்ந்தால் யாருக்கு நான் செய்யும் துரோகம் அது..? கூடுதல் அழுகையோடு நான் குணமாகமலே போயிருக்கலாமோ..! மீட்டு வந்து என்னை மீளாத துயரத்தில் ஏன் அழுத்த…’

 

    சகுந்தலா வந்து அறையில் இருந்து அழைத்துப் போனார். கால்களை தரையில் பதித்தபோது உடம்பெல்லாம் கூச்செறிந்தது. ஸ்மரனை மறந்த பாதத்தை அழுந்த பதிக்கவே இயலவில்லை தரையில்.

 

   தரையில் மீண்டும் கால் பதித்தான் வனமாலி, அஜெயனாக. இதற்கு முந்தைய காலடி வனமாலியாக இருந்தது, இரண்டு மாதங்கள் கழித்து, அவன் எடுத்து வைத்த அடுத்த அடி அஜெயனாக இருந்தது…

 

  ‘’ எப்போ சென்னை திரும்பற சிந்து..? நீ எப்படி இருக்கே..? என்னால இங்கே இருக்கவே முடியல. நான் கிளம்பி டெல்லி வரட்டுமா..?’’ சரவணன் அலைபேசியில் துயரப்பட்டுக் கொண்டு இருந்தான். சிந்தூரியின் தொடர் மெளனம் அவனை வெகுவாய் கலவரப்படுத்தியது.

 

  ‘’ எப்போ வருவேன்னு தெரியல சரவணா. சீக்கிரம் வர்றேன், மாலிகூட.’’ என்றாள் பஞ்சடைத்த குரலில்.

 

  ‘’ சிந்து, எனக்கு பயமா இருக்கு. அங்கே இருக்கிறது மாலி இல்லை. அவருக்கு உன்னை புரியாது, இந்த நிதர்சனத்தை புரிஞ்சுக்கும் போது, நீ ரெம்பவே உடைஞ்சு போயிடுவே. உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன் சிந்து. உனக்கு ஏதாச்சும்னா என்னால தாங்க முடியாது.’’ வளர்ந்த குழந்தையாய் அவன் கண்ணீர் விட, சிந்து இன்னுமே அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

  ‘’ நான் திடமாத்தான் இருக்கேன் சரவணா. நீ அம்மாவையும் பூரணியையும் பார்த்துக்க. அடிக்கடி கால் பண்றேன்.’’ என்று விட்டு அழைப்பை துண்டித்தாள்.

 

   ரியாஸ்க்கு அழைத்து தன்னுடைய இருப்பை பதிவு செய்துவிட்டு, நான்சி மேடத்துக்கு அழைத்து பணியில் இருந்து விலகுவதாகச் சொல்ல, ஒரு பெருத்த மெளனம் அங்கே கவிழ்ந்திருந்தது.

 

   ‘’  அலைவரிசை வேலைக்கு ஆயிரம் பேர் வருவாங்க, போவாங்க. ஆனால் சிந்தூரி எல்லாருக்கும் ரெம்ப ஸ்பெசல். இந்த வேலைக்காக நீ பட்ட கஷ்டம், வந்து போன ஆடிசன், வேலை கிடைச்ச பிறகு நீ காட்டிய டெடிகேசன், எல்லாமே எனக்கு இன்னும் மறக்கல. ஒரு இக்கட்டான மன அழுத்தத்துல நீ இருக்கே. மீண்டு நீ வரும்வரைக்கும் இந்த இசையும் கானமும் நிகழ்ச்சியையே ஒத்தி வைக்கிறேன். நீ வேணும் சிந்தூரி…’’ 

 

  ‘… நீ வேணும் சிந்தூர். எனக்கு எல்லாமுமா நீ வேணும். நான் பட்ட அத்தனை தவிப்புக்கும் ஒரே மருந்தாய் நீ வேணும்…’ என்றானே, இன்று மறந்து போனானே…’

 

     ‘’ கிளம்பலாமா சிந்து..?’’ தோளில் கைபோட்டு மெல்ல அரவணைப்பாய் அழைத்தபோது, சிந்து மென்மையாக நிமிர்ந்து பார்த்தாள். நர்கிஸ் ஏற்கனவே வந்து ஆறுதல் சொல்லிவிட்டு உடைமைகளை தந்துவிட்டு போய் இருந்தாள்.      

 

   மெல்ல தலை அசைத்தாள். அபரஞ்சியும், பத்மாவும் மதுரிமாவை அழைத்துக் கொண்டு முன்னமே கிளம்பிப் போயிருக்க, சகுந்தலாவின் வண்டி இவர்களுக்காக காத்திருந்தது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

 

   முன் இருக்கையில் அஜெய் டிரைவரோடு அமர்ந்திருக்க, பின் இருக்கையில் சிந்துவோடு சகுந்தலா அமர்ந்து கொண்டார்.

 

  நகர்ந்த சாலையிலேயே கவனம் பதித்திருந்தான். சாலையில் வண்டி நகர்ந்தது. பார்வையில் சாலை நகர்ந்தது. அந்த விசித்திரத்தை பார்த்தபடி மெல்ல அமர்ந்து கொண்டு இருந்தான்.

 

   திரும்பவே இல்லை அவனுடைய பார்வை. அந்த நலிந்த தோற்றம் அவளின் நெஞ்சை பிழிந்தது.

 

 ‘… என்னை கேலி பண்றே இல்ல… ஒருநாள் இதைவிட பெரிய வண்டியா வாங்குவேன். என் பக்கத்துல நீ இருந்தாலும், உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டேன்…’

 

  கண்களை மூடிக் கொண்டாள். அவன் சொன்ன வார்த்தைகள் இந்த வழியில் நிஜமாகும் என்று அவள் துளிகூட யோசிக்கவே இல்லை.

 

  ஷெட்டில் காரை நிறுத்தி இறங்கிய போது, கீழிறங்கிய அஜெய் ஒரு நொடி கண்களால் தாமதித்தான். கண்களுக்கு புதிதாய், நினைவுகளுக்கு பழையதாய் இருந்தது அந்த காட்சியெல்லாம். நீண்ட வளைவு வடிவத்து வாயில் படியை மெல்ல கடந்து மேல் வராண்டாவில் போட்டிருந்த திண்டில் எப்போதும் சகுந்தலாவுக்கு காத்திருக்கும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

  பரவசமாக இருந்தது அந்த காட்சி சகுந்தலாவுக்கு. பத்மா ஆராத்தி கரைத்துக் கொண்டு வர, அஜெய்யை அழைத்துக் கொண்டு உள்ளே நகர்ந்தார்கள்.

 

  சிந்துவின் கைகளை பற்றிக் கொண்டு உள்ளே நடந்தார் சகுந்தலா. சோபாவில் சரிந்திருந்த மதுரிமா அஜெய்யைப் பார்த்ததும் கண்களில் பயம் கவ்வ, எழுந்து ஓடிச் சென்று அபரஞ்சியின் கால்களை கட்டிக் கொண்டது.

 

  ‘’ மது.. ரி… அப்பா வந்திருக்கேன்டா…’’ என்றான். தழுதழுத்த குரலில். 

 

   முகமும் தந்தையது இல்லை, குரலும் அவனது இல்லை, தொடு உணர்வும் அவனுடையது இல்லை, என்னும்போது அந்த பிஞ்சுக் குழந்தையால் எப்படி தந்தையை இனம்காண இயலும்..? அந்த பரிதவிப்பு அஜெய்யுனுள் விழுந்து வியாபித்துக் கொண்டிருக்க, தவிப்பாய் சகுந்தலாவை பார்க்க, மெல்ல தம்பியின் முதுகு தடவி தந்தார்.

 

  ‘’ எல்லாம் சரியாகும் அஜி…’’ என்றார் தளிர் குரலில்.

 

மாடியில் இருந்த அறையை நிமிர்ந்து பார்த்தான். அபரஞ்சி கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டாள் ஏனோ. தயக்கம் ஊடாட, படிகளில் ஏறி அறைக்குச் சென்றான், வெகு நிதானமாக. அறையை அடையாளம் தெரிகிறது, அவளை அடையாளம் தெரிகிறது, அத்தனை உணர்வும் மீண்டு கொண்டு நிற்கிறது. ஆனாலும் ஏதோ தயக்கம், அனைவருக்கும்.

 

   கீழ் இருந்த அறையை சிந்துவுக்கு காட்ட, அயர்ச்சியாய் உள்ளே வந்து அமர்ந்து கொண்டாள். இந்த காத்திருப்பும் பாகீரத முயற்சியும் எதற்கு என்ற சிந்தனை மனசில் இருந்து மின்னலாய் வெட்டி வெட்டி முறிந்தது.

 

   திரும்பி விடலாமா..? மூளையிடம் இதயம் தோற்று போவதுதான்  நியதியா..? தெரியவில்லை. 

 

   இங்கு கூட தனக்கு வேலை இல்லை என்றால், வேறு எங்கு வேலை இருக்கிறது தனக்கு என்ற கேள்வி எழ, தலை விண் விண்’ யென தெறித்தது சிந்தனையால்.

 

    அறைக்குள் இருந்த ஆளுயர பெல்ஜியத்தின் முன்னாக சென்று நின்ற அஜெய்யின் கண்கள் அப்படியே குளமாகிப் போனது. இதே டிரெஸ்சிங் டேபிளின் முன்னாக எத்தனை முறை நின்றிருக்கிறான், ஆளுமையாய் கம்பீரமாய்… இன்று அத்தனையும் வடிந்து போய், மழையில் நனைந்த கோழி குஞ்சுபோல் தோற்றத்துடன்… மனிதனின் அடையாளமாய் இத்தனை நாள் உணரப்பட்ட முகத்துக்கு இனி என்ன மரியாதை..?

 

   டேபிளின் ஓரத்தில் இவளோடு இயைந்து கொண்டு தோளில் முகம் பொதித்த மதுரிமா, இன்னொரு தோளில் மாலையாய் மலர்ந்திருந்த அபரஞ்சி… இருவருக்கும் தன்னை பிடிக்குமா..? இந்த தோற்றத்தில்..! படுக்கையில் சரிய பயந்து கொண்டு சோபாவில் சென்று சரிந்தான்.

 

    இந்த விசித்திரமான சூழலை எதிர்கொள்ள தெரியாமல் அத்தனை பேருமே தவித்துக் கொண்டு இருந்தார்கள்.

 

''...யார் அந்த நிலவு

ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று

யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம்

இங்கு நான் வந்த வரவு

நான் வந்த வரவு…''


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 269
 

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

https://kavichandranovels.com/community/topicid/396/

This post was modified 4 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Eminent Member Author
Joined: 2 months ago
Posts: 25
Topic starter  

 வனமாாலி - 30

காணாமல் போகின்ற நிலவுதான் உலகத்தில் இருக்கிறது, ஆனால் கரைந்து போகின்ற நிலவு இந்த பிரபஞ்சத்தில் இல்லை. மாவிலையில் தொங்கும் தோரணம் போல், அத்தனை பேரும் ஒரு கூட்டில் ஒற்றை ஒற்றையாக இருந்தார்கள். 

 

   சகுந்தலாவின் அறையிலேயே அபரஞ்சியும், மதுரிமாவும் தங்கிக் கொள்ள, இயல்பு ஒன்றும் அத்தனை எளிதாக திரும்பி விடாது என்று சகுந்தலாவிற்கு மெல்ல புரிந்தது.

 

   இரவு உணவு அவரவர் அறைக்கே சென்றது. சிந்து உண்ண பிடிக்காமல் நீண்ட வராண்டாவில் வந்து அமர்ந்து கொண்டாள். முரட்டு பனி காற்றோடு ஒப்பந்தம் செய்துகொண்டு கண்ணுக்குத் தெரியாமல், கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருந்தது.

 

  ஏனோ இங்கிருந்து உடனடியாக கிளம்பி விடவேண்டும் என்று மனசு சொல்லிக் கொண்டே இருந்தது. அத்தனையும் தோற்றுப் போன நிராயுதபாணியாக தன்னை உணர்ந்தாள்.

 

   ‘’ நீங்க சாப்பிடலயா..?’’ பின்னால் குரல் கேட்டு தலையை உயர்த்த, அபரஞ்சி. இருவருமே பெரும் தர்மசங்கடமான சூழலில் நிற்பது புரிந்தது. வேண்டாம் என்று தலையசைத்தாள்.

 

  ‘’ ஆனால் ஏன்..? சாப்பிடாம இருக்கிறதால என்ன மாறிடப் போகுது..?’’

 

   ‘’ சாப்பிடறதாலதான் என்ன மாறிடப் போகுது..?’’

 

  ‘’ எனக்கு என்ன சொல்றதுன்னு தோணல…’’

 

  ‘’ எனக்கு தோணறதை சொல்லத் தெரியல.’’

 

'' ஆறரை அடி மனுசனை அரை கிலோ மூளையை வச்சு மட்டும் எப்படி நான் உணர்றது? இது ஏன் யாருக்கும் புரியல... '' அபரஞ்சி சொல்ல, சிந்து நகர்ந்தமர்ந்து கைகளை பற்றிக் கொண்டாள்.

 

'' சிரிப்பில் இருந்து, முகம் வரைக்கும், குரலில் இருந்து பார்வை வரைக்கும் அத்தனையும் அவனாகவே இருக்கிறவனை, அறை கிலோ மூளையை புதுசா வச்சுட்டு, இது அவனில்லைனு சொன்னால் நான் தான் எப்படி நம்ப?'' இரண்டு பெண்களின் ஆதங்கமும் அட்சர சுத்தம் நியாயமாய் இருந்தது.

 

   அபரஞ்சி சில நொடிகள் நின்றுவிட்டு பெருமூச்சு விட்டபடி உள்ளே நகர, சிந்தூரி அந்த பனி கொட்டும் இரவில் இருள் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். அத்தனை பனி கொட்டியும், அவள் அகத்தில் தகித்த நெருப்பை அணைக்க முடியவில்லை..! 

 

  அறை ஜன்னல் வழியே வராண்டாவில் அமர்ந்திருந்த சிந்தூரியை பார்த்துக் கொண்டே இருந்தான் அஜெய். சொல்லத் தெரியாத உணர்வொன்று இதயத்தில் இருந்து கிளம்பி, உடல் முழுக்க பரவி, மூளைக்கு முழுதாய் பாயும் முன்னே, அலை தொடர்பு துண்டித்துக் கொண்டே இருந்தது அனிட்சை செயலாய்..!

 

   ‘ யாரோ இவள்… அவனுக்கு உயிரானவளோ, உயிருக்கு மேலானவளோ… அவள் கண்ணீர் சிந்த சிந்த, என் இதயம் வலிக்கிறதே..! அத்தனை ஆழத்தில் பதிந்து போனவளா..? ஏன்டா மாலி இந்த அப்பாவிப் பெண்ணை விட்டுட்டு செத்துப் போன..? ‘ ஜன்னலிலே அசையாமல் நின்றான். அவன் கண்கள் நொடி கூட இமைக்காமல் சிந்தூரியின் ஓய்ந்த தோற்றத்திலேயே ஆழ்ந்து கிடந்தது. வலக்கையால் மார்பை நீவிக் கொண்டான்.

 

   அவன் மூச்சையே உணரும் அவளால், அவனின் பார்வையை உணர முடியாதா..? வேகமாய் எழுந்து நிற்க, சின்ன வெளிச்சம் மட்டும் தெரிந்த ஜன்னலில், அவளையே பார்த்துக் கொண்டு அவன் நிற்க, அந்த பார்வை தகிப்பில் இருந்த உணர்வைக் கடந்த, ஜென்ம பந்தத்தை பார்த்து விக்கித்துப் போனாள் சிந்தூரி. 

 

  அந்த பார்வையை ஒடித்துப் போட்டுவிட்டு போக இருவருமே விரும்பவில்லை. தன்னை மறந்து குளிராய் அழுதாள். ஏனோ அவன் தன்னை உணர்ந்தது அத்தனை பரவசமாக இருந்தது. மூளை எத்தனை தடுத்தும், அவன் இதயம் அவளை அடையாளம் காண்கிறது. அந்த இதயத்திற்குள் இறங்கி நங்கூரமான அவள் முகத்தை அவனுக்கு புரிகிறது… அட இதுபோதும், இனியென்ன இருக்கிறது இந்த உலகத்தில்.

 

  இரவு சகுந்தலாவின் அறைக்குள் தான் தங்கிக் கொண்டாள் அபரஞ்சி. இந்த உணர்வு பித்தலாட்டத்தை அத்தனை எளிதாய் கையாள முடியாது என்று சகுந்தலா மெளனமாக இருந்து விட்டார். காலையில் தன்னுடைய அறைக்கு சென்றவள், கட்டிலில் சன்னமாய் வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்தவனை, லேசான அருவருப்புடன் பார்த்தாள்.

 

   நிச்சயமாய் அஜெய்யின் தோற்றத்தை மட்டும் அவள் காதலிக்கவில்லை.. ஆனால் அஜெய்யை, அவனின் பிரத்யேகத்தை அந்த தோற்றத்தில் தான் உணர்ந்திருக்கிறாள்..! மற்றவர்களுக்கும் அவளுக்குமான தூரமே இதுதானே.? எந்த தோற்றத்தில் மகன் வந்தாலும் அவனை ஒரு தாயால் ஏற்றுக்கொள்ள முடியும்..! ஆனால் ஒரு மனைவியால், எப்படி அந்தரங்கத்தை இன்னொரு மனிதனுடன் பரிமாறிக் கொள்ள இயலும்..! பார்க்கும் பார்வையும், ஸ்பரிசிக்கும் இதழிலும், உடலும் ஆன்மாவும் அவனைத் தேடுமே..! இந்த நுட்பமான உணர்வை எப்படிச் சொல்லி மற்றவர்களுக்கு புரிய வைக்க… 

 

   இவன் அவனாகவே இருந்தாலும், அவளுக்கு இன்னொருத்தன் தானே..! ஒரு மூலையில் இருக்கும் மூளை மட்டும் தானே அவன், முழு உடலும் வேறொருவன் அல்லவா…? உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள். குளிர்ந்த நீரை திருகி விட்டு அதன் அடியில் நின்றாள், மணிக்கணக்காய்.

 

  நீர்வழியும் சத்தம் கேட்டு மெல்ல கண்களைத் திறந்தவனின் மூளை செல்கள், உள்ளே வீசிய சந்தன சோப்பின் வாசனையை வைத்து அது அபரஞ்சி என்று சொல்ல, மெல்லிய தவிப்பு உடலிலும் மனதிலும் தொக்கிக் கொண்டு வந்து நின்றது.

 

  உணர்வு தெளிந்த நாளில் இருந்து, அவன் உள்ளம் அவளை நாடியே ஓடுகிறது. எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டான். குளித்து முடித்து வெளியில் வந்தவள், அமர்ந்திருந்தவனை பார்த்ததும் கண்களை அழுந்த மூடித் திறந்தாள்.

 

  ’’ ரஞ்சி…’’ என்றான் தவிப்பாய். அந்த அழைப்பு அவனுக்கான பிரத்யேகம்தான், ஆனால் அந்த குரலிலும், முகத்திலும் அவனை அடையாளம் காண இயலவில்லை அவளால்.

 

  ‘’ ம்..’’

 

  ‘’ நான் திரும்பி வந்தது உனக்கு பிடிக்கலயா..? ‘’ தவிப்பாய் அவன் கேட்க, மொத்தமாய் நொறுங்கிப் போய் அவனைப் பார்த்தாள்.

 

  ‘’ என்ன அஜி இது…’’ என்றாள் கண்ணில் நீர்ததும்ப.

 

  ‘’ உன் முகத்திலே சந்தோசமே இல்லை, மதுரி என்னைப் பார்த்து பயந்து பயந்து ஓடறா. அங்கிள்னு கூப்பிடறா.. என்னை என்னாலேயே ஏத்துக்க முடியாம தவிக்கிற போது, இந்த புறக்கணிப்பும் வலியும் என்னை அழுத்துது. என்னை புரியுதா ரஞ்சி…’’ என்றபோது அவன் நிலை மொத்தமாய் அவளை அசைத்தது.

 

  எழுந்து வந்தவன் அவள் அருகில் வந்து கைகளை பற்றி தன் புறமாய் திருப்பி, இறுக அணைக்க. ஒரு நொடி… இரண்டு நொடி… அவள் கண்களை மூடி அப்படியே நின்றாள். உடம்பு இறுகி இரும்பாகிக் கொண்டே இருந்தது. எத்தனை முயன்றும் அந்த ஸ்பரிசத்தில் அவள் ஆத்மாவின் நாயகனை உணர முடியவில்லை அவளால்…. கழுத்தில் முகம் புதைத்து தன் உணர்வை அவன் மீட்ட முயல, 

 

  அந்த மூச்சில், அவன் பேச்சில், அந்த அணைப்பில், ஸ்பரிசத்தில், அவன் பிரத்யேகத்தில் எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு கணவனின் ஆத்மார்த்தத்தில் அவனை தன்னவனாக உணர முடியவில்லை, அந்நியனின் அணைப்பில் இருப்பது போல உணர, வேகமாய் அவனை உதறிவிட்டு, காதுகளை பற்றிக் கொண்டு கதற ஆரம்பித்தாள், பெரும் சத்தத்தில்.

 

'' என்னைத் தொடாதீங்க ப்ளீஸ். என் அஜியை என்னால உணர முடியல.''

 

'' ரஞ்சி ப்ளீஸ். நானும் காமத்துக்கு அணைக்கல. எனக்கு என்னை ஏத்துக்கிற ஒரு பரிபூரண அன்பு இப்போ வேணும். நானே தடுமாறிட்டு இருக்கேன். எனக்கே என்னை புரியல.''

 

அவனுடைய வீறிடலை கேட்காமல் அவள் எப்போதோ அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

 

    சிறிது நேரம் சென்றபிறகு, தள்ளாடி தளர்ந்து போய் இறங்கி கீழே வந்தான். அந்த புறக்கணிப்பும் தவிப்பும் ஓரளவு எதிர்பார்த்தது தான் என்றாலும், எதிர்பார்த்தே இருந்தாலும், இதயம் வலிக்கத்தான் செய்கிறது உள்ளபடி.

 

    அபரஞ்சி அதிர்வு அடங்காத இதயத்தோடு அமர்ந்திருந்தாள். அவள் புறக்கணித்தது அவள் ஆருயிர் அஜெயனை, உடல் பொருள ஆவி என்ற அத்தனையுமான அன்பனை, என்றாலும் அவனை உணர முடியாமல் போனதுதான் உள்ளபடி தவிப்பே. 

 

   கீழே வந்து சோபாவில் அமர, அவனின் நிலைகுத்திய விழியே நடந்ததை  யூகிக்க போதுமானதாக இருக்க, சகுந்தலா கலங்கிப் போய் இருந்தார். 

 

   அறை வாசலில் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்த மதுரிமாவை அழைக்க, அது மாட்டேன் என்று தலை சிலுப்பியது.

 

  ‘’ மதுரி, அப்பாடா…’’ என்றான் ஆற்றாமையாக.

 

  ‘’ ம்ஹும். அப்பா சாமிகிட்ட போச்சு. புது அப்பா நானா. எனக்கு புடிக்கல.’’ சொல்லிக் கொண்டே கதறி ஓடிய குழந்தையை கண்ணில் நீர் திரள பார்த்துக் கொண்டே இருந்தவன் சகுந்தலாவிடம் கேட்டான், 

 

  ‘’ ஏன் சக்கு என்னை காப்பாத்தினே..? நான் பிழைச்சு இப்படி நடை பிணமா வாழணுமா..? மதுரிக்கு என்னைத் தெரியல, ரஞ்சியால என்னை ஏத்துக்க முடியல. அவ்வளவு ஏன் என்னை எனக்கே அடையாளம் தெரியல. இங்கே இன்னொரு பொண்ணு… அவளைப் பார்த்தா மனசு என்னவோ செய்யுது. யார் அவள்..? அவளுக்கும் எனக்கும் என்ன பந்தம்..? கேள்வி என் மூளையைக் குடையுது. என்னால முடியல…’’ என்றான் குழந்தை போல. 

 

   சகுந்தலாவுக்கு ஆறுதல் மொழி தெரியவில்லை. தன்னைத் தானே சுயம்புவாக அவன் செதுக்கி கொண்டால் தவிர வேறு வழியே இல்லை இதிலிருந்து மீடேற.

 

   சிந்தூரி அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள். எந்த உரிமையும், உடைமையும் இல்லாத இடத்தில் எதன் பொருட்டோ தன்னை மடக்கிக் கொண்டிருக்கிறாள். இதன் முடிவு தான் என்ன..? மாலியின் மனசை கசக்கி அவனை மறுபடி அழைத்துப் போக காத்திருந்த அவள் வைராக்கியம் ஜெயிக்குமா..? தெரியவில்லை.

 

   ஆனால் எழுந்து சென்று அவனிடம் நினைவுகளை தூண்டும் வேலையை மட்டும் அவள் செய்யவே இல்லை. இத்தனை பெரிய பூகம்பம் நடந்த உடம்பில், இவள் எந்த சோதனை முயற்சியும் செய்துவிடக் கூடாது என்பதில் சகுந்தலா உறுதியாக இருக்க, டாக்டர் மாதூரை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு பிறகு பேசுவதுதான் சரியென்று சகுந்தலா சொல்லி விட்டார். எதுவும் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், அதுதான் சிறந்த யோசனையாக இருக்கும் என்று சொன்னதும் நியாயமாக இருந்தது

 

   எல்லாவற்றுக்கும் மேலே அந்த உச்சகட்டத்தை சந்திக்க அவள் மனதளவில் நடுங்கிக் கொண்டிருந்தது தான் நிஜம். இவள் இறைக்கும் நீர், விழலுக்குத் தான் விரைந்தோடப் போகிறது என்று மனசு சொன்னது.

 

    ‘’ சிந்து…’’ அறைக்குள் வந்து அழைத்த சகுந்தலாவை நிமிர்ந்து பார்த்து மென்மையாக சிரித்தாள்.

 

   ‘’ சொல்லுங்க டாக்டர்…’’

 

   ‘’ பாரமுல்லால ஒரு பேமஸ் சித்தி வினாயகர் கோயில் இருக்கு. அஜெய் ஆபரேசனுக்கு முன்னாடி ஒரு வேண்டுதல் இருந்தது. இன்னைக்கு சதுர்த்தி. போய்ட்டு வந்திடலாமா..?’’ 

 

  ‘’ நான் எதுக்கு டாக்டர், நீங்க போயிட்டு வாங்க.’’ என்றாள், உள்ளங்கையை ஆராய்ந்தபடி.

 

  ‘’ உனக்கும் இந்த பிராத்தனையில பங்கும் இருக்கு, அக்கறையும் இருக்கு. எல்லாம் சரியாகும். போயிட்டு வந்திடலாம்.’’

 

  மறுக்கத் தோன்றவில்லை. எப்போதும் நிந்திப்பதும் இறைவனைத் தான், சிந்திப்பதும் இறைவனைத் தான். மனிதனின் ஆகச் சிறந்த முதல் நண்பன், இறைவன் தான். சிந்து மெல்ல தலை அசைத்துக் கொண்டாள்.

 

   பத்து நிமிடத்தில் முகம் அலம்பி, பொட்டிட்டுக் கொண்டு வந்தாள். பத்மா அஜெயனுடன் துணைக்கு இருக்க, மூன்று பெண்களும் குழந்தையோடு கிளம்பி விட்டார்கள்.

 

 அபரஞ்சி குழப்பமான அமைதியோடே அமர்ந்திருந்தாள். சிந்தூரியைப் பார்த்து சினேகமாய் சிரித்து பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள். 

 

   வெளிச்சம் கணிசமாக இருந்த மாலை நேரம் அது. வெள்ளை பளிங்கில் அபாரமாக இருந்தது கோயில். ஸ்வஸ்டிக் பொதித்த முகப்பைத் தாண்டி உள் நுழைய, ஏகப்பட்ட ஜனத்திட்டுகள். 

 

 பளிங்குசிலை பகவான் அவளை அவ்வளவாய் வசீகரிக்கவில்லை. கருங்கல்லில் கடவுளை கண்டே பழகிய கண்கள், கொஞ்சமாய் தவித்தது என்னமோ நிஜம் தான். 

 

 சிறப்பு பூஜைக்கு அபரஞ்சியும், சகுந்தலாவும் நகர, திடலில் அமர்ந்து கொண்டாள் சிந்தூரி. தூரத்தில் டாக்டர் சுஷில் மாதூர் வர, சின்னதாய் புருவம் ஆச்சர்யமும் இதழ்கள் இகழ்வையும் காட்டியது.

 

 ‘’ ஹலோ சிந்து…’’ என்றார் முகமெல்லாம் புன்னகையாக.

 ‘’ ஹலோ டாக்டர் என்ன இந்த பக்கம்..?’’

  ‘’ ஹா ஹா..! ஏன் நான் வரக்கூடாதா.,?’’

 

‘’ இங்கே அத்தனை பேரும் வர்றதே தனக்கு மேல ஒரு சக்தி இருக்குங்கிற நம்பிக்கையில தான். அந்த சக்தியே தான் தான்னு நினைக்கிறவங்களுக்கு இங்கே என்ன வேலை..?’’

 

‘’ ஓ..! நோ…’’ என்றவர் பெரிதாக வாய்விட்டு சிரிக்க, கோயிலில் அது தப்பென்ற நிஜத்தால், பலர் அவரை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு கடக்க, மெல்ல தன்னை கட்டுபடுத்திக் கொண்டார், ஆனாலும் முகத்தில் அப்படியொரு கர்வ புன்னகை.

 

  ‘’ சர்ட்ன்லி ரைட் யூ ஆர். இப்போ நான் வந்தது, அவரை பார்க்க இல்லை, என்னை அவருக்கு காட்ட. அவர் போட்ட பாதையை, என் விஞ்ஞான மூளையால், மருத்துவ சித்தாந்தத்தால் மாற்ற முடியும்னு காட்ட. இது என்னுடைய தரப்பு, பட், டாக்டர் சகுந்தலா அப்படி இல்லை, அவங்களுடைய நம்பிக்கை அத்தனையும் கடவுள் செயல்னுதான் இருக்கு, இன்னைக்கு அஜெய்க்கு ஒரு பூஜை இருக்கிறதா சொன்னாங்க, அதான் மரியாதை நிமித்தமா வந்தேன்.’’ கொஞ்சம் இடைவெளி விட்டு தள்ளி அவரும் திடலில் அமர்ந்து கொண்டார்.

 

    இத்தனை அளப்பரிய சாதனைகளை செய்த  கர்வம் அவர் மூளையில் தான் இருந்தது, அவர் தோற்றத்தில் இல்லையென்பது ஆறுதல் தான்.

 

    ‘’ எப்படி ஃபீல் பண்றே சிந்து இப்போ..! எங்களுடைய மருத்துவ சாதனையால் நீ உன் நண்பன் மாலியை பார்க்க முடியுது இல்லையா..? இது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்..! இந்த வாய்ப்பை அந்த கடவுள் உனக்குத் தரல. சொல்லப் போனால், அவர் உன் சந்தோசத்தை பறிச்சுகிட்டார். நான் அதை சரிசெய்திருக்கிறேன். இரண்டு குடும்பத்திற்கும் அந்த இழப்பை ஓரளவு ஈடுகட்டி இருக்கேன். இது மனிதகுலத்தின் எத்தனை பெரிய மைல்கல். இனி அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம் மட்டுமல்ல, வரலாறும் இதை பேசும்.’’

 

  அமைதியாக காற்றை கண்களால் அளந்து கொண்டிருந்தாள். 

 

  ‘’ எதொன்றும் இன்னொன்றால் ஈடு செய்யப்படுவதில்லை டாக்டர்.’’ என்றாள் அழுத்தமான பார்வையோடு.

 

  ‘’ ஏன் இல்லை, இதுக்கு மேல் என்ன சாத்தியம் வேண்டும்.’’

 

   ‘’ நீங்க மீட்டு தந்திருக்கிறது யாரை..? அஜெய்யா..? இல்ல மாலியா..? அஜெய்தான்னா, அவன் உடம்பில் ஓடுறது மாலியுடைய ரத்தமாகாதா..? அவன் டி, என், ஏவில் இருக்கிறது மாலியுடைய ஜீன் ஆகாதா..? அப்போ மதுரிமாவிற்கு மூளைக்கு ஒரு அப்பா, உடம்புக்கு ஒரு அப்பாவா?  கை ரேகையும், தலையெழுத்தும், மாலியோடதாகாதா..? 

 

    மாலியுடைய ஆயுள் ரேகை காட்டும் கணக்குபடி அவன் விதி இருக்குமா..? இல்ல நீங்க புகுத்தின அஜெய்யின் மூளை சொல்ற தலையெழுத்துத் தான் அவனுக்கு இருக்குமா..? இனி யாரோட விதிப்படி அவன் வாழப் போறான்..?

 

   அட, மெய்ஞானத்தை விடுங்க, உங்க விஞ்ஞானத்துக்கே வர்றேன். ஆதார் அட்டையில இருந்து, டிரைவிங் லைசென்சு வரைக்கும், படிப்புல இருந்து இதய துடிப்பு வரைக்கும் அத்தனைக்கும் ஆயிரம் சிக்கல்களை சந்திக்க வேண்டி வருமே, இதுக்கெல்லாம் என்ன தீர்வு.’’

 

      அவள் முடித்தபோது வியப்பாய் அவளை நிமிர்ந்து பார்த்தார். 

 

 ‘’ புவர் கேர்ள். நீ விரக்தியில பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். ஹுஸ்டனில் இருந்து, பாரிஸ் வரைக்கும், உலகத்தின் அத்தனை நுனிகளும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழுது, ஆனால் நீ…. எத்தனை எளிமையா இதை அங்கீகரிக்க மறுக்கறே..?’’ என்றார் புருவத்தை உயர்த்தி வியப்பு காட்டி.

 

  கண்களை மூடிக் கொண்டாள். இமைகளுக்குள் சிறகடித்த உணர்வுகளை மெல்ல நிலைப்படுத்த முயன்று தோற்றாள்.

 

  ‘' உலகம் முழுக்க அங்கீகரிச்சதால நீங்க வெற்றி அடைஞ்சிட முடியாது. மாலியை அஜெய்யா அபரஞ்சியும், மதுரிமாவும் அங்கீகரிக்கணும். அப்பத்தான் நீங்க ஜெயிச்சதா அர்த்தம். உங்களுடைய அபார உழைப்பும், மருத்துவ அர்பணிப்பையும் மனதார அங்கீகரிக்கிறேன். ஆனால் இந்த மாற்றத்தால், இழப்புகள் ஈடு செய்யப்படும்னு சொல்றதை ஏத்துக்க முடியல. 

 

   ஆயிரம் கேள்விகள் இருக்கு, அது அத்தனைக்கும் விடையாய் குழப்பம் மட்டும் மிச்சம் இருக்கு. உருமாறிய அஜெய்யை, அவர் குடும்பமும், குழந்தையும், சமூகமும், ஏன் அஜெய்யுமே எப்படி ஏத்துக்க போறாங்க..? இதுக்கெல்லாம் உங்க மருத்துவத்துல விடை இருக்கா..?

 

   உங்க சோதனை வேண்டுமானால் வெற்றி அடைந்து இருக்கலாம். ஆனால் பலருடைய உணர்வுகள் போர்க்களமானது நிஜம்தான்.

 

   இதை தப்புன்னு சொல்ல முடியல. ஆனால் இது சரின்னு சொல்லவும் முடியல.’’

 

   அவள் சொல்லி முடிக்க தோள்களை குலுக்கிக் கொண்டபடி எழுந்து நின்றார். பின்னால் வந்து நின்ற சகுந்தலாவும், அபரஞ்சியும் அமைதியாக பார்த்தபடி நின்றனர்.

 

  ‘’ டாக்டர், நீங்க ப்ரே பண்ணிட்டு வர்றீங்களா..? நாங்க வெயிட் பண்றோம்.’’

 

   ‘’ நோ, நான் ப்ரே பண்ண வரல டாக்டர் சகுந்தலா. மரணத்துக்கு மாற்று மருந்து என்கிட்ட இப்போ இருக்கு. அதனால, மனிதகுலத்தை கொடுமை படுத்தறதுல இருந்து கொஞ்சம் பின் வாங்கிக்கோன்னு எச்சரிக்கை செய்ய வந்திருக்கேன்.’’ என்றபடி இவர்களோடு இணைந்து நடக்க, முன்னே சென்று கொண்டிருந்த சிந்தூரி, ஒரு நொடி அப்படியே நின்றாள். கண்களில் ஜுவாலை தெறித்தது,

 

   ‘’ எஸ் டாக்டர், அப்போ உள்ளே இருக்கிறவர்க்கு சக்தி இருக்குன்னு நம்பறீங்க தானே..? நமக்கு மேல நிச்சயம் ஒரு சக்தி இருக்கு..! அந்த சக்திக்கு மேலான சக்தி நமக்கு இருக்கிறதா நினைக்கிறதும் ரெம்ப தப்புத்தானே..! நீங்க தன்னிட்சையாய் எதையும் உருவாக்கல… அவர் உருவாக்கினதை உருமாற்றி வச்சிருக்கீங்க. அது சாதகமா பாதகமான்னு இனிதான் தெரியும். ஆனால் அதுக்கே இத்தனை பெருமிதப்பட்டால் அவர் அனுமதிப்பாரா? '' சொல்லிவிட்டு கடகடவென இறங்கி கார் அருகில் சென்று நின்று கொண்டாள்.

 

   மாதூர் மட்டுமல்ல, சகுந்தலாவும் விக்கித்துத் தான் நின்றிருந்தார்கள்.

 

   அபரஞ்சி தான் சின்ன புன்னகையுடன், சிந்தூரியை பார்த்துக் கொண்டே நின்றாள்.

 

   ‘’ ஐயம் சாரி டாக்டர்…’’ என்றார் சகுந்தலா, மெல்லிய வருத்தத்துடன்.

 

   நிரம்பி ததும்பிய நெற் குவியலின் தலையில் தட்டி மட்டம் தட்டியது போல் இருந்தது டாக்டர் மாதூருக்கு.

 

  ‘’ புவர் கேர்ள். இட்ஸ் ஓ.கே.! நாளை உங்க வீட்டில் சந்திக்கலாம். நான் வர்றதுக்கு முன்னாடி இந்தப் பெண் அஜெய்யை நெருங்காமல் பார்த்துக்கங்க.’’ என்றுவிட்டு கை அசைத்தபடி அவர் காரை நோக்கி நகர்ந்தார்.

 

   வீடு வரும் வரைக்கும் மூவருக்குள்ளும் எந்த பேச்சுமே இல்லை. எல்லாவற்றையும் இழந்தவள் ஒரு முனையிலும், இழந்ததை இன்னொன்றாய் ஏற்றுக்கொள்ள இயலாதவள் இன்னொரு முனையிலும் அமர்ந்திருக்க, நடுவில் முள்ளாய் அமர்ந்திருந்தார் சகுந்தலா. 

 

   வீடு வந்து சேர்ந்தபோது வெகுவாய் இருட்டி இருந்தது.

 

  ‘’ மா, தூக்கம் வருது…’’ மதுரி கண்களை கசக்கிக் கொண்டு தூங்கி தூங்கிச் சரிய, 

 

  ‘’ மாடிக்கு போ மதுரி..! அங்கே அப்பா இருக்கான். மதுரி கூட விளையாட காத்துட்டு இருக்கான்.’’ குழந்தையின் பிஞ்சு விரலை நீட்டி மடக்கி சொன்னபோது, கண்களை கவ்வி இருந்த தூக்கம் சட்டென்று விலக, சகுந்தலாவின் இடுப்பில் இருந்து இறங்கி, அம்மாவிடம் ஓடி சென்று நின்றது.

 

  ‘’ அப்பா இல்ல… அப்பா செத்து போயி…’’ கைகளை மடக்கி பின்னுக்கு காட்டிச் சொன்ன அந்த வார்த்தையில் மொத்தமாய் அத்தனை பேரும் உணர்வு குவியலாக. சிந்தூரி பேச்சற்று நின்றாள்.

 

   ‘’ இல்லடா, மேலே இருக்கிறது அப்பாதான். நீ வேணா பேசிப் பாரேன். மதுரி பர்த்டே எப்போ, மதுரிக்கு என்ன கலர் பிடிக்கும், எந்த குக்கீஸ் பிடிக்கும், என்ன கார்டூன் பார்ப்பா எல்லாமே அப்பா சொல்வான் பாரு.’’ 

 

   ஒரு நொடி யோசித்த மதுரிமா, பலமாய் தலையாட்டியது.

 

  ‘’ அத்தை மேல இருக்கிறது அப்பா இல்ல… மேஜிசியன். எனக்கு அவரைப் பார்த்தா பயமா இருக்கு. நாம எங்காச்சும் போயிடலாம்…’’ என்றபோது  அழுகை அடைத்துக் கொண்டு அபரஞ்சி உள்ளே நகர, சிந்தூரி உணர்வே இல்லாத ஜடம்போல் நின்றாள்.

 

   இரவு முழுக்க இருளோடு பேசிக் கொண்டே இருந்தாள் சிந்தூரி. விடியல் மேல் நம்பிக்கையும் இல்லை, விடியுமென்ற நம்பிக்கையும் இல்லை..!

 

''...எங்கெங்கோ கால்கள் செல்லும்

பாதையில் போகின்றாய்

ஏதேதோ நாளை என்ற

ஆசையில் வாழ்கின்றாய்

 

உன் சொந்தம் இங்கு யார் யாரோ

நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ

நீ வாழும் வாழ்வில்

அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…''

    வனமாலி - 31                           

கர்ட்டனை விலக்கி வெளிச்சத்தை அறைக்குள் அனுப்பிய போதுதான் கண்களை முழுக்க திறந்து பார்த்தான் அஜெய், முழுக் கட்டிலிலும், ஒற்றை ஆளாய் புரண்டு இறுதியில் ஒரு ஓரமாய் ஒதுங்கி இருந்தான். ஏ.சி காற்று புரிந்தது, ஆனால் உடம்பு அதற்கு இன்னும் பழகவில்லை, என்பதை உடல் சூடு கதகதப்பாய்ச் சொன்னது.

இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் ஆச்சர்யமான பல விசயங்கள் நடக்க ஆரம்பித்திருந்தது. சப்பாத்தியும், சப்ஜியும் பிடித்து தான் தட்டில் எடுத்து வைக்கிறான். ஆனால், நாக்கில் ருசிக்கவே இல்லை. அந்த நாக்கு காரச்சட்னிக்கும், ஊறுகாய்க்கும் வணங்கிய நாக்கென்பதால். காரத்தை கண்டாலே காததூரம் ஒடும் அஜெயனுக்கு ஊறுகாயைக் கண்டால், நாக்கு மூளையை சட்டை செய்யாமல் ஊறுகிறது. 

குட் மார்னிங்… அஜி…’’ புத்துணர்வாய் வணக்கம் வைத்த சகுந்தலாவைப் பார்த்ததும் சின்ன புன்னகை அரும்பியது இதழ்களில்.

   பெட் காப்பியை  நீட்ட, கொஞ்சம் குழப்பமாய் பார்த்தவனை கூர்மையாக எதிர்பார்வை பார்த்தார்.

என்ன அஜி… பெட் காப்பி குடிக்காம பெட்ல இருந்து எழுந்துக்கவே மாட்டே தானே..?’’

‘’ இப்ப ஏனோ அது அசூசையா இருக்கு..! ஐ மீன் ப்ரெஸ் பண்ணாம எதுக்குன்னு தோணுது.’’

மாலியின் இதயத்தில் பதிந்த பழக்கங்கள், சமிக்ஞை செய்வது புரிந்தது. மருத்துவத்தை தகர்த்த அந்த மெய்யுணர்வை சின்ன ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சகுந்தலா.

நல்ல பழக்கம் தான். எழுந்து தயாராகிட்டு கீழே வா. அந்தப் பொண்ணு உன்கிட்ட பேசணும்னு காத்திருக்கா. டாக்டர் மாதூரும் வர்றதா சொல்லி இருக்காரு.’’

‘’ எந்த பொண்ணு…’’ என்றான் உள்ளங்கையை ஆராய்ந்தபடி.

சிந்து…’’ 

அந்த பெயரைக் கேட்டதும் இதயம் ஒரு மில்லிமீட்டர் அசைந்து மீண்டும் நிலைக்கு திரும்பியது. அட கேடுகெட்ட மூளையே, இன்னும் எத்தனை நாள், அவள் யாரென்று அவன் இதயத்துக்கு தெரிய விடாமல், மறைப்பாய்.?

கண்டிப்பா பேசணுமா..?’’ என்றான் தவிப்போடு.

எதுக்கு தயங்கறே..? அஜி, மாலிகூட அந்த பொண்ணுக்கு ஒரு அழகான அன்பிருந்து இருக்கு. அவளின் தவிப்பும், கண்ணீரும் பார்க்கும் போது மனசெல்லாம் பிசையுது.  அவளா இந்த மாற்றத்தை உணரணும். அப்பத்தான், தன்னைத் தானே அவள் மீட்டெடுப்பா.’’

மெல்ல தலையசைத்தான். இந்த அசைப்பிற்கு அவன் இதயம் உடன்படவே இல்லை. சுருக்கென்ற வலியைத் தந்து, தன் இருப்பை அவனுக்கு நினைவூட்டியது. மார்பை தேய்த்துக் கொண்டான்.

 ‘எனக்கு ரெம்ப தவிப்பா இருக்கு சக்கு. மனசு முழுக்க இனம் புரியாத பாரம். ஒருபக்கம் குற்றவுணர்வா இருக்கு. இந்த உடம்பை கடன் வாங்கிட்டு, அதுக்கு சொந்தமான ஒருத்தனுடைய உணர்வுகளை சாகடிச்சுட்டு வாழறமோ'ங்கிறது பச்சை துரோகமா தோணுது.’’

   ‘’ அஜி…’’

‘’ அவனுக்கும் கடமை, காதல், தேவை, விருப்பு வெறுப்பு எல்லாம் இருந்திருக்கும் தானே..! அதுக்கு எந்த வகையில் நாம நியாயம் செய்யப் போறோம்..? ’’ 

எழுந்து வந்து அவனுடைய புறங்கையை தட்டித் தந்தார் சகுந்தலா.

எழுபது வயசு தான் மனிதனுக்கு வாழ்நாள் என்றாலும், மொத்த வாழ்க்கைக்கான சிந்தனையும் ஓரே நாள்ல சிந்திச்சிட முடியுமா..? காலப்போக்கில் எல்லாம் சரியாகும் அஜி. இந்த உணர்வுப்பூர்வமான போராட்டத்தை முடிச்சு வைக்கணும். நான் சொல்றது புரியும்னு நம்பறேன்.’’ என்றவர் மெல்ல அவன் முதுகில் தட்டிவிட்டு கீழே செல்ல, ஒரு நொடி கண்களை மூடி அமர்ந்திருந்தவன்,  முடிவோடு குளியலறைக்குள் சென்றான்.

டாக்டர் மாதூர் வந்து கீழே காத்திருந்தார். அவரின் வெண் அருவி கூந்தலைப் பார்த்து மதுரி இன்னும் கூட பயம் விலகாமல் ஓடிச் சென்று பாட்டியின் புடவைத் தலைப்பில் மறைந்து கொண்டாள்.

பேபி, இன்னும் என்கிட்ட பயமா..?’’ கைகளை நீட்ட, வேகமாய் தலையசைத்து விட்டு பாட்டியோடு இயைந்து கொண்டது.

டாக்டர், ஹாட் ஆர் கூல், என்ன சாப்பிடறீங்க..?’’ சகுந்தலா கேட்க. தோள்களை குலுக்கிக் கொண்டார்.

சில்..! நோ பார்மாலிடிஸ் டாக்டர் சகுந்தலா. அஜெய் எங்கே..?’’

‘’ப்ரெஷாகிட்டு இருக்கான். இப்போ வந்துடுவான்.’’ என்று முடித்தபோது, அஜெய் மாடியில் இருந்து இறங்கி வந்திருந்தான். மருத்துவமனையில் இருந்ததை விட, முகம் தெளிவாக இருந்தது. மழித்த தாடியும், முளைத்திருந்த தலை மயிரும், அவனை வெகுவாய் மாற்றி இருந்தாலும், பொன்னை வைத்த இடத்தில் பூவை வைத்தது போல்தான் இருந்தான் அஜெய்யின் தோற்றத்தில் வனமாலி.

’’ யங்மேன், ஹவ் டூ ஃபீல்..? ‘என்றார் மலர்ந்த முகத்தோடு.

பெட்டர். பட் லாட்ஸ் ஆஃப் கன்ப்யூசன்.’’ என்றான் வலியான புன்னகையோடு.

சரியாகும். மெல்ல மெல்ல சரியாகும். மொத்த சாப்பாட்டையும் ஒற்றை வாயில சாப்பிட முடியுமா என்ன..? கவளம் கவளமாய்த்தானே அதை விழுங்க முடியும். இந்த பிரச்சனைகளையும் அப்படித்தான் மெல்ல மெல்ல தீர்க்க முடியும்.’’ சொன்னபோது பொதுமையாய் தலையசைத்தான்.

அறைவாசலில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி கனத்த மனதோடு, நிறைந்த கண்களோடும் அவனையே பார்த்தபடி நின்றிருந்த சிந்துவிடம் பார்வை சென்று நிலைக்க, அத்தனை பேருக்கும் ஒரு மொத்த தடுமாற்றம் தான். அவளை கண்டுபிடித்து விடுவானா..? 

சிந்து….’’ சகுந்தலா, வலக்கையை நீட்டி மெல்ல அழைத்தார். மெதுவாய் வந்து எதிரில் நின்றாள். இதோ, கூப்பிடு தூரத்தில், தொடுகைக்கு அருகாமையில். மாலி… அவளின் மாலி..! இங்கு வந்த இத்தனை நாள்களில் இன்றுதான், இத்தனை நெருக்கமாய்… அவன் கண்களில் தன்னை தேடினாள்..! கருப்பில் சின்னதாய பழுப்பு கோலம் போட்டது போல் இருக்கும் கண்கள், இப்படி அப்படி அலைபாய்ந்தது.

உட்காருங்க சிந்து… உங்களுக்கு என்ன தெரியணும்…’’ என்றார் டாக்டர் மாதூர் அழுத்தமான, அதேநேரம் இணக்கமான குரலில். நேற்று கோயிலில் அவள் பேசியது அவருள் சின்ன அகங்காரத்தை துருவி, மெருகேற்றி இருக்க வேண்டும்..! வெற்றிடமே இல்லாத தன் வெற்றியினை அவள் ஆமோதிக்க செய்ய வேண்டுமென்ற ஒரு பிடிவாதம் அவரை ஆட்கொண்டிருந்தது.

 ‘மாலிக்குள்ள, இருந்த பழைய நினைவுகள் என்னாச்சுன்னு தெரியணும்.’’

‘’ ஐ'யம் சாரி டூ சே திஸ்..! ஹீ இஸ் நாட் மிஸ்டர் மாலி. இது அஜெய். அவருக்குள்ள இருக்கிறது எல்லாம் அஜெயனுடைய நினைவுகள், அசைவுகள் மட்டும் தான். ‘

‘’ அப்போ இந்த மூளை மாற்று அறுவை சிகிச்சையில மாலி எங்கே..?’’ கேட்டபோது, ஆற்றாமையால் அவளுடைய உதடுகள் துடித்தது.

ஐ'யம் சாரி மிஸ் சிந்து..! மனிதனின் பிரதானமே மூளைதான். அது தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திகிட்டால், மனிதன் இறந்தவனாகிறான். இது உங்களுக்கு தெரியும் தானே..!’’

‘’ அப்போ மனிதனின் உயிர் மூளையில் மட்டும்தான் இருக்கு. அப்படித்தானே..?’’

 ‘’ எக்சாட்லி…’’

‘’அப்போ, இதயம், நுரையீரல், ரத்தம், எலும்பு, சதை எல்லாம் ஒப்புக்கு சப்பாணி… அப்படித்தானே..?’’ என்றாள் ஆக்ரோசமாக.

பதில் சொல்லத் தெரியாமல், அனைவரும் அமைதியாக இருக்க, எழுந்து வந்து மாதூரின் எதிரில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

வலக்கையை நீட்டி கண்ணீரோடு அவரைப் பார்த்தாள். சகுந்தலாவின் கண்கள் அந்தக் காட்சியில் குளமாகி நிரம்பி வழிந்து கொண்டிருக்க, அஜெய் அதிர்வாய் உள்ளுக்குள் உணர்ந்து கொண்டிருந்தான். அவனுள் ஏதோ நடக்கிறது என்று தெரிகிறது… என்ன நடக்கிறது என்று மூளை அறிவிக்க மறுக்கிறது..!

தோ, இந்த பச்சை நரம்பை அறுத்துட்டு பத்து நிமிசம், நான் நின்னாலே என் உயிர் போயிடும். அதுக்கு மூளையும்,இதயமும் நின்னுபோக வேண்டிய அவசியமில்லை. உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும், மயிர்கால் முதல், நகக்கண் வரைக்கும், அத்தனை அணுவிலும் உயிர் இருக்கு. அதுல எந்த வகையாகவும் உயிர் போகும். நவத்துவாரங்களில் எந்த துவாரத்தின் வழியாகவும் உயிர் போகும்… அப்படி போறதை நான் பக்கத்துல இருந்தும் பார்த்திருக்கேன்.

 நீங்க சொல்ற மாதிரி, உயிர்ங்கிறது மூளை மட்டுமல்ல, அந்த உடம்பும் தான். அப்போ அந்த உடம்புக்கான உணர்வு இருக்குமில்ல… இத்தனை நாள் நீங்க சொன்ன உயிரை, பிடிச்சு வச்ச உடம்புக்கு எந்த மரியாதையும், தனி அதிகாரமும் இல்லையா..? ’’ சொன்னபோது அய்யோ'வென்று இருந்தது அஜெய்க்கு.

விஞ்ஞானம் உனக்கு புரியாது பிட்டி கேர்ள்…’’ 

‘’மெய்ஞானத்தை உங்களால உடைக்க முடியாது டாக்டர். உங்களால ஒரு தூசி துகளைக் கூட இறைவனுக்கு மாற்றாய் உருவாக்க முடியாது. அவர் கொடுத்த அறிவை வைத்து அவரிடமே நீங்க விளையாட நினைச்சா,  அது தகாது டாக்டர். உங்களால வனமாலிக்குள்ள அஜெய்யனை கொண்டு வர முடியும். ஆனால், அவர் அஜெய்தான்னு அதோ அங்கே நிற்குதே, இரண்டு வயசு குழந்தை, அதை ஒத்துக்க வைங்க பார்ப்போம்..! 

உங்க கூற்றுபடியே, அதோட மூளையில, இவர் தன் அப்பான்னு சிந்தனை வரணும்..! அதை நீங்க எந்த தகிடுதத்தம் செய்தாலும் கொண்டு வரமுடியாது..! அதையும் அந்த இறைவன் தான் நாடணும்.’’ என்றாள் இகழ்வு புன்னகையை அவர்மீது வீசி. அபரஞ்சி சிலிர்த்துப் போய் நின்றாள்.

‘’ என்ன கேட்கணும், அல்லது என்ன தெரியணும்..! நாங்க யாரும் தடுக்கல. நீயே அதை அறிந்து கொள்ளலாம்.’’ தோள்களை குலுக்கி, மெல்ல சொல்ல, எழுந்து அஜெய்யின் முன்னால் வந்து நின்றாள்.

இரண்டே அடி தூரத்தில், அவள் இழந்ததாய் உலகம் சொன்ன மாலி… தலைசாய்த்து சிரித்து, தோளில் முகம் பொதித்து அக்கறை காட்டி, அன்பு செய்து, அனைத்துமே ஆகி நின்ற மாலி… கண்களை பார்த்தபோது அடையாளம் தெரிந்தது, அவன் கண்களுக்குள் பார்த்தபோது மங்கலாய் அவள் முகம் இதயத்தில் தெரிந்தது… 

‘’ மா…லி….’’ என்றாள் அத்தனை உணர்வுகளையும் ஒன்று திரட்டி குரலில். உலர்ந்த உதடுகளுக்கு நடுவே எச்சில் நூலாம்படை போல் படிந்து உடைந்தது.

சீனி வெடியை விழுங்கியது போல் அவனுக்குள் சின்னதாய் ஒரு பூகம்பம். ஏனோ அவளை காணும்போதெல்லாம், இதயத்தை யாரோ இடித்து எழுப்பிக் கொண்டிருப்பது போல் இம்சையான உணர்வு.

 ‘என்ன மாலி, என்னை அடையாளம் தெரியலயா..? நான் உன் சிந்தூரி…! உனக்கு மட்டும் சிந்தூர்…’’

மெல்ல இடவலமாக தலையை அசைக்க, அவளின் முகடு உடைந்து மெல்ல சரிந்தது.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, இசையும் கானமும்… நான் உங்கள் கானசிந்தூரி..! லைன்ல இருக்கீங்களா..?  ப்ளீஸ் ஸ்டே ட்யூன் அட் நிலா எப். எம்… 88.8…. இதாச்சும் நியாபகம் இருக்கா...?’’ கலைந்த தலையும், உதிர்ந்த கண்ணீருமாய் அவள் நின்ற தோற்றம் அத்தனை பேரையும் உலுக்க, அவரவர் இடங்களில் அசையாமல் நின்றனர். அடி எடுத்து வைத்தால், மனசு தறிகெட்டு முறியுமோ என்ற தவிப்பில்.

’…நதியெங்கு செல்லும் 

கடல் தன்னைத் தேடி… பொன் வண்டோடும் மலர்தேடி…

என் வாழ்வில் நீ வந்தது விதியானால்,

நீ எந்தன் உயிரன்றோ… ஒருநாள் நேயர் விருப்பத்துல எனக்காக பாடினே இல்ல..!   நியாபகம் இருக்கா..?

 சரி அதைவிடு, ரியாஸ் நியாபகம் இருக்கா..? உன் ரூம்மேட். கே.கே நகர் வீடு. தென்னை மரம், பக்கத்து ப்ளாட் வாட்ச்மேன், இளையராஜா பாட்டு…’’ அத்தனை பரிதவிப்பாய் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே கேட்டாள், அவள் முகத்தில் இருந்து கண்களை அகற்றாமல், இல்லையென்று தலையசைத்தான்.

அருப்புக்கோட்டை போனமே. அங்கேயிருந்து மணி இம்பாலாவில தெலுங்கு படம், லஸ்ஸி, தாமரை இலையில பொட்டலம் கட்டின எலுமிச்சை சாதம், கடலை மிட்டாய், பழைய ராணி புக்… அப்புறம் சோளவந்தான் போய் உங்கவீட்டில எல்லாரையும் பார்த்தமே…’’ என்றவள், வேகமாக கைகளை சொடக்கு போட்டு, இப்போ நியாபகம் வந்துடும் பாரு.

மாலி, சரஸ்வதி அம்மா. உங்க அம்மா. சம்யு, சங்கி உன் தங்கசிங்க. எல்லாரும் ரெம்ப நொடிச்சு போய் இருக்காங்கடா. உன்னை பார்க்காமே. உன் அப்பாக்கு கூட ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு. அவர் ரெம்ப குற்றவுணர்ச்சியில இருக்காருடா. உன்னை மகனா நடத்தல. நீ இருக்கிற வரைக்கும் உன்கிட்ட நெருங்கலைன்னு அத்தனை அழுகிறார்டா. ரெம்ப பாவமா இருக்கு…’’ அவள் முடித்தபோது அனிட்சையாய் கண்ணீர் அஜெய்யின் கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்தது. ஆனால் அவன் கற்சிலை போலவே நின்றான். இதயம் வலிக்கிறது. தட்டி தட்டி ஏதோ சொல்ல முற்படுகிறது..! அதனுடைய உற்ற நண்பனான ரத்தத்திற்கும் இதயத்தின் தவிப்பு வெண்ட்ரிக்கிள், ஆரிக்கிள் மூலமாக புரிகிறது..! அதனாலே ரத்தம் சூடாகிறது, அழுத்தத்தாலே.

 ‘ஆறு மணியானால் ‘ சிந்து வேலை முடிஞ்சாச்சா, ஹாஸ்டலுக்கு போயாச்சான்னு எத்தனை வேலை இருந்தாலும் உன்கிட்ட இருந்து கால் வருமே..! மழைக்கு முன்னே குடையோட நிற்பயே, தோ தோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  முடி இல்லாத தலையை அடிக்கடி கோதினியே, அந்த மேனரிசம், எதுவுமே மாறலயே, அப்புறம் இது நீ இல்லைன்னு நான் எப்படிடா நம்ப..?’’ முகத்தை தன் உள்ளங்கையால் மூடிக்கொண்டு அழுதபடி இருக்க, ஆறுதல் சொல்ல அடியெடுத்து வைத்த சகுந்தலாவை கண்களாலேயே கட்டுபடுத்தி நிற்க வைத்தார் டாக்டர் மாதூர்.

’’ லீவ் ஹர், டாக்டர் சகுந்தலா. சில நிஜங்களை புரிய வைக்க முயற்சி செய்றது பெரிய முட்டாள்தனம். அதை அவர்களே உணர நாம இடைவெளி தந்துடணும். நாம எடுத்துச் சொன்னபோது புரியாத பல விசயம் இப்போது புரிஞ்சிடும் பாருங்க.’’ என்றார் தன்மையான குரலில்.

வேகமாக சுதாரித்து நிமிர்ந்து பார்த்தாள் சிந்தூரி. கண்கள் எல்லாம் அழுது அழுது பழுத்து போய் இருந்தது. சிவந்த மூக்கு நுனியும், தளர்ந்த தேகமுமாய் நின்றவள், ஏனோ அவன் இதயத்தை கண்ணீரால் வலிக்க வலிக்க வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தாள்.

கட்டை விரலையும், சுண்டு விரலையும் மடக்கிக் கொண்டு மூன்று விரலை நீட்டி அவன் புறமாய் காண்பித்தாள்.

மொத்தமா மூணு வருசம் தானேடா… வெறும் மூணு வருசம் தானேடா..! நீ என் வாழ்க்கையில் வந்தது வெறும் மூணு வருசம் தானேடா. முன்னும் பின்னும் எனக்குன்னு எதுவுமே இல்லாம, மொத்தமா சுனாமி மாதிரி சுருட்டிட்டு போயிட்டியே..! இதுக்குத்தான் அத்தனை காதலிச்சியா...? இதுக்குத்தான் அத்தனை அக்கறை காட்டினியா..? என்னவோ ஜென்மத்துக்கு கூடவே வர்றவன் மாதிரி, சுவத்துல உட்காராதே, தனியா போகாதே, மழையில நனையாதே, பார்த்து பார்த்து என்னை பத்திரபடுத்தினியே, இப்படி பாதியில தவற விட்டுட்டு போகவா..? இனி யார்டா இருக்கா எனக்கு..?’’ ஆவேசமாய் அவன் சட்டையை பற்றி உலுக்கி, இறுதியில் அத்தனை ஆற்றாமையும் கண்ணீராய் கரைய அப்படியே அவள் கதற, அத்தனை ஜோடி கண்களும் கலங்கியபடி இருக்க, சிலைபோல நின்ற அஜெய்யனின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தபடி இருந்தது.

காலி பெருங்காய டப்பாவில கூட வாசனை மிச்சம் இருக்குமே, அதைவிடவா இந்த மனித கூடு கேவலம்..? நான் உன் சிந்தனையில தானடா இல்லாம போயிட்டேன், இங்கே இருக்கேனே…’’ என்றாள் அவன் இதயத்தை தொட்டுக் காட்டி, அபரஞ்சி பொங்கிய அழுகையை கைகளை வைத்து அடக்கிக் கொண்டு சுவற்றில் முகம் பொதித்தாள், அந்த அபலையின் காதல் பாகீரதத்தை காண சகியாமல்.

உனக்குள் கலந்துபோன என்னை பிரிச்சு எறிஞ்சிட்டு உன்னால நகரவே முடியாதே, அப்புறம் எப்படிடா நான் இல்லை இல்லைன்னு உன் மூளை உன்னை நம்ப வைக்குது. இந்த கதையோட வில்லனே மூளைதான்டா..! மொத்த உடம்பை தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிற சர்வாதிகாரி..! ‘சொல்லிவிட்டு துடித்து அழ, இதற்குமேலும் பொறுக்க முடியாது என்பது போல், அபரஞ்சி அங்கே வந்து நின்றாள்.

சிந்து, கூட்டிட்டு போயிடு உன் வனமாலியை. இது.. இது என் அஜெய் இல்லை. இவரை என் அஜெய்யா என்னால பார்க்கவும் முடியாது. என்ன நினைச்சீங்க சகுந்தலா அக்கா, ரேபரை பிரிச்சு சாப்பாட்டை வேற பாத்திரத்துல போட்டு தர்ற மாதிரி, இன்னொரு உடம்புல என் புருசனை பொட்டலம் கட்டித் தந்தால், என்னால ஏத்துக்க முடியுமா..?

ஏன் உங்களுக்குத் தெரியாதா, கணவன் மனைவிக்குண்டான பூர்வ ஜென்ம பந்தத்தை. அவர் விரல் நுனி என்னைத் தீண்டும் ஸ்பரிசமே, எனக்கு அவரை உணர வைக்கும். அந்த பிரத்யேகத்தை இன்னொரு உடம்புல, ஒரு மனைவியா நான் எப்படி அறிய முடியும்..?

இந்த நுணுக்கமான உணர்வை இத்தனை பேர் முன்னாடி சொல்லவே எனக்கு கூசுது. ஆனால் நான் என்ன செய்ய..? என்னால முடியலயே. இவர் என்னைத் தொட்டபோது, என் அஜெய்யை என்னால உணர முடியலையே..! பார்வையிலே, ஸ்பரிசத்திலே, அணைப்பிலே, ஏன் இதயத்துல கூட உணர முடியாத புருசனை நான் எப்படி என் அஜெய்யா பார்க்க..?  சிந்திக்கிறதால மட்டும் ஒரு மனிதன் இன்னொரு உடம்புக்குள்ள, அவனாக முடியுமா..? சிரிப்பு வரல உங்களுக்கு…! 

அஜெய்னா என்ன..? குரல் இல்லையா..? அந்த கன்னகுழி சிரிப்பு இல்லையா, தொடும்போது உயிர் வரை குளிர வைக்கிற சிலிர்ப்பு இல்லையா, ஆஜானுபாகுவான தோற்றம் இல்லையா, ரஞ்சி ரஞ்சினு கூப்பிடற அந்த குழைவான குரல் இல்லையா..? வெறும் மூளை மட்டுமா மனுசன்..? அப்போ இதயத்துக்கும், சுவாசத்துக்கும் ஒரு அர்த்தமும் இல்லையா..? 

   காதலுக்கு இதயத்தை அடையாளமா சொல்லி சொல்லி எதுக்கு இத்தனை அழிச்சாட்டியம் பண்றீங்க..? அப்போ அந்த இதயத்துக்கு எந்த அடையாளமும், உணர்ச்சியும் இல்லையா..?

  இவர் தொடறதை நான் அனுமதிச்சா, அல்லது ரசிச்சா, அல்லது ஏற்றுகிட்டா, அது என் அஜெய்க்கு தெரிஞ்சே நான் இன்னொரு ஆண் கூட வாழற மாதிரி ஆகாது..? நான் இவர் தொடுகையில் மயங்கினா, சத்தியமா இவருக்குள்ள இருக்கிற அஜெய்யால ஏற்றுக் கொள்ளவே முடியாது. அட போங்கய்யா, நீங்களும் உங்க ஆராய்ச்சியும்..! ’’ அவள் சொன்னபோது, மாதூர் மட்டுமல்ல சகுந்தலாவும் உறைந்து போய் நின்றார்கள்.

இத்தனை நேரம் உணர்வு பொங்க, அஜெய்யின் முன்னாக நின்று கேள்வி கேட்ட, சிந்தூரியின் விழிகளில் அத்தனை பளபளப்பு, அத்தனை பரிதவிப்பு. பற்றிக் கொண்டிருந்த அவனின் சட்டையை விட்டு விட்டுட்டு, டாக்டர் மாதூரின் முன்னாக வந்து நின்றாள்.

ஒரு பார்வை பார்த்தாளே, அவர் புருவம் அழுத்தமாக சுருங்கியது.

தி கிரேட் மூளை நிபுணர் கிட்ட, இந்த கேள்விக்கெல்லாம் விடை இருக்கா..? இல்ல விடை இருக்கான்னு கேட்கிறேன். மருத்துவம், மகத்துவம் தான். ஆனால் அதைவிட, மகத்துவம் மெய்யுணர்வு, உள்ளுணர்வு. 

 இறைவன் உருவாக்கின எல்லாற்றுக்குமே மாற்று உண்டு, ஆனால் உயிர்க்கு மாற்றா இன்னொன்னை உருவாக்க இறைவன் அனுமதிக்கவே இல்லை. மரணம் வரைக்கும் ஜீவிச்சு இருக்கிற பாக்கியத்தை வேண்டுமானால், மருத்துவம் செய்யலாம். ஆனால் மரணத்தை ஜெயிக்கிற மருந்தை, இறப்பிற்கு மாற்று மருந்தை மனிதனால் உருவாக்கவே முடியாது.

தன் கணவனை ஸ்பரிசத்துல தேடுற பெண்ணுக்கும், என் காதலனை இதயத்தில் தேடுற எனக்கும், நீங்க தந்த மாற்று மருந்து எந்த விதத்துல பயன்படப் போகுதுன்னு தெரியல. எல்லா இழப்புகளும் ஈடு செய்யப்படுவதில்லை. உங்க மகத்தான முயற்சிகளை பாராட்டறேன். ஆனால், அந்த முயற்சிதான் எல்லா வலிகளுக்கும் நிவாரணி, கடவுளை ஜெயிச்சாச்சுங்கிற கருத்துக்களை எல்லாம் மறுபரிசீலனை செய்யுங்க.’’ ஆக்ரோசமாக சிந்தூரி சொல்ல, மாதூரின் தலை தன்னால் ஆமோதிப்பாய் அசைந்தது.

தளர்வாய் திரும்பி நடந்தவளை, ஈரமான அதே நேரம் என்னவென்றே சொல்லத் தெரியாத ஒரு குரலில், மூளையை கேட்காமல், முள் தண்டின் உத்தரவிற்கு கட்டுண்டு, தன் அத்தனை உறுப்புகளும் ஒன்றினைய, தன்னை மறந்து அனிட்சையாக மெல்ல அழைத்தான் அஜெய்.

  ‘’… சி…ந்…தூ…ர்….

 

’’… பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து,

   இரவுதோறும் அழுது, என் இரண்டு கண்ணும் பழுது…

   இதுவொரு ரகசிய நாடகமே…

   அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே..!

   தாளம் இங்கு தப்பவில்லை… யார் மீதும் தப்பு இல்லை…

  காதல் என்னை காதலிக்கவில்லை….'

 

வனமாலி - 32

 

டெல்லி ஹஜ்ரத் நிஜாமூதீன் ரயில் நிலையம். கூட்டம் நசநசத்துக் கொண்டிருந்தது.

சாய்… சாய்…’’ சாய் வாலாக்கள், சத்தம் எழுப்பிக் கொண்டு இருந்தார்கள். இன்னும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்திருக்க வில்லை. மோல்டடு நாற்காலிகளில், மனிதர்கள் புதைந்து கிடக்க, அத்தனை பேர்களையும் கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தாள் சிந்தூரி.

அலைகளை உமிழும் ஆழ்கடல் போல் அத்தனை உணர்ச்சிகளையும் உமிழ்ந்து விட்டு, பேரமைதியை கொண்டிருந்தது அவள் முகம்.

சிந்து, போய்த்தான் ஆகணுமா..? இங்கேயே இருந்திடேன். எனக்கு உன்னைப் பார்த்ததுல இருந்து இனம் புரியாத தாயுணர்வு. கிட்டத்தட்ட நானும் உன்னைப் போலதாங்கிறதால தான், எனக்கு உன்மேல இத்தனை பாசமா தெரியல.என் பொண்ணு மாதிரி என் கூடவே இருந்திடேன்.’’ டாக்டர் சகுந்தலா சொன்னபோது, அழகான புன்னகை சிந்தூரியின் இதழ்களில் தவழ்ந்தது.

இப்படி சொல்ல என் வாழ்க்கையில இன்னும் கூட மனிதர்களை இறைவன் தந்திருக்கிறது, என் மேலுள்ள கருணைன்னு தான் நான் சொல்வேன். ஆனால் இங்கிருந்து தள்ளிப்போகத் தான் விரும்பறேன்.’’ என்றாள், தூரத்தில் பான் ஷாப்பில் நின்று ஏதோ வாங்கிக் கொண்டிருந்த அஜெய்யை கண்களால் வருடிக் கொண்டே.

ஆனால் நீ…’’ என்று ஆரம்பித்தவர் மேற்கொண்டு எதுவும் பேசத் தோன்றாமல் நின்று விட்டார். இந்த உணர்வு போராட்டத்தை எந்த சங்கிலியை பற்றி இழுத்தும் நிறுத்தி விட முடியாது.

மாலிக்குள் இருக்கும் அஜெய்யை அபரஞ்சியால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பது எத்தனை நிஜமோ, அத்தனை நிஜம், அஜெய்யாக சிந்திக்கும் மாலியின் உருவை சிந்தூரியாலும் ஏற்றுக் கொள்ளத்தான் முடியாது..! இந்த மேடையில் இந்த நாடகம் எத்தனை நாள் அம்மா..தெரியவில்லை.

அன்று அவளின் மொத்த போராட்டமும், அணை மீறி உடைந்து அஜெய் அழைத்த, சிந்தூர் என்ற அழைப்பிலேயே முற்றாகி இருந்தது.

போதும்..! இதற்குத்தானே இத்தனை போராட்டம் செய்தாள். இதற்கு தானே இத்தனை அல்லாடினாள். இதற்குத்தானே இத்தனை அங்கலாய்த்தாள். அத்தனையும் கை சேர்ந்து விட்டது.

  மடங்கி அமர்ந்து அவள் கதறிய கதறலில், மொத்த வீடும் ஸ்தம்பித்து போனது. இறந்த ஒரு உறவில் இருந்து உயிர்ப்பாய் கேட்ட அந்த சத்தத்தில் அவள் மொத்த உலகமும், கனிந்து, ரசமாய் 

இனி எனக்கு என்ன தேவை இருக்கிறது இந்த உலகத்தில் என்பது போல் அவள் அமர்ந்திருந்தாள், அன்று.

’.. நான்சி மேடம் நான் அடுத்தவாரம் உங்களை வந்து சந்திக்கிறேன். எனக்கு மறுபடி டைம் அலார்ட் பண்ண முடியுமா..?’’ குரலில்  கனிவை தேக்கி கேட்டபோது, நான்சி மொத்தமாய் நெகிழ்ந்து இருந்தார்,

’’சிந்து, என்ன சொல்றதுன்னு தெரியல. டி.வி.யில பார்த்தேன். மனசுக்கு ரெம்ப கஷ்டமா போச்சு. ’’

 ‘’ நான்சி மேடம் ப்ளீஸ், வேற பேசலாம். நான் உங்களை வந்து பார்க்கட்டுமா..?’’

‘’அதுக்கு எதுக்கு கேள்வி சிந்தூரி எப்பவும் வரலாம்.’’ நான்சி புன்னகையாய் முடிக்க. அடுத்த அழைப்பு மாலதிக்கு சென்றது.

சிந்து, பொண்ணே எப்படி இருக்கே..? ‘அடுத்த கேள்வி கேட்கத் தெரியாமல் தவிக்க, சிந்தூரி மென்மையாக அந்த மெளனத்தை ரசித்தாள்.

இருக்கேன். இருந்துதானே ஆகணும், இது விரக்தி இல்லக்கா, யதார்த்தம், நடைமுறையில் சிலதை கடந்து வந்துதான் ஆகணும். மாலி என்கூட இருந்த நாட்கள் முடிஞ்சு போயிடுச்சு, இனி மீதமுள்ள நாட்கள், மாலி எனக்குள்ள இருக்க போறாரு. அவ்வளவுதான். சரி சரி, நான் கொஞ்ச நாளா இல்லைன்னு என் ரூமை யாருக்கும் வாடகைக்கு விட்டுடல தானே..? நேரே அங்கேதான் வந்திட்டு இருக்கேன்.’’ 

இயல்பாய் பேசிவிட்டு அலைபேசியை அமர்த்தியவளை, பார்த்துக் கொண்டே இருந்தார் சகுந்தலா. அவர் கையில் இருந்த மதுரிமா, ப்ளாட்பாரத்தில் நடக்கும் ஜனத்திரளில் எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தது.

சிந்து…’’ என்றார் நா தளதளக்க. 

 ‘' சொல்லுங்க டாக்டர்…’’

‘’ ஏனோ உன் பிரிவு மனசை பிசையுது. சொல்லத் தெரியல.’’

   அழுத்தமாக சிரித்தாள்.

 ’’ நீ வேணா, அஜெய்யை ஐ மீன் மாலியை உன் கூட கூட்டிட்டு போயிடறியா..? ‘’ 

சகுந்தலா கேட்டபோது அவள் கைகள் வாஞ்சையாய் மதுரிமாவின் கன்னத்தை தடவியது.

என்னை யார்னே உணர முடியாத மாலியை நான் கூட்டிட்டு போய் என்ன செய்ய..?’’

‘’இது நியாயமா..? உன்னால மாலியை அவன்கிட்ட உணர முடியலைன்னு சொல்ற. அபரஞ்சி, அவன்கிட்ட அஜெய்யை உணர முடியலைன்னு சொல்றா..? மொத்தத்துல இத்தனை குத்தி, குதறி, தத்தி தத்தி வந்திருக்கிற அந்த ஜீவன் பாவமில்லையா..? அவனுக்குள்ள அப்படி ஒரு தனிமை அப்பிக் கிடக்கும், அதை பகிர்ந்துக்கவும், அழவும் சிரிக்கவும், அவன் தவிக்கிறது எனக்கே புரியுது. 

   நீ சொன்னதை வச்சே, மாலி எத்தனை நல்லவர், சிறந்த காதலர்னு புரியுது. என் அஜெய்யும் அதுல குறைஞ்சவன் இல்லை. அப்படி ஆகச் சிறந்த நல்ல ஜீவன்களின் கலப்பில் உருவான அஜெய், இப்போ அன்பிற்கு தவிச்சிட்டு இருக்கானே..! இரண்டுல ஒருத்தர் அவனை ஏத்துக்க மாட்டீங்களா..?’’ ஒரு அன்பிற்கினிய ஆகச்சிறந்த தமக்கையின் கோரிக்கையாய் அது இருக்க, மெல்ல கை நீட்டி மதுரிமாவை வாங்கிக் கொண்டு, அதன் தோளில் தடவி, தன் தோளோடு அணைத்து, முதுகில் முத்தமிட்டாள்.

உங்க அத்தனை கேள்விகளுக்கும் விடை என் கையில இருக்கு. அணைப்பில உணர முடியாத அன்பை, மதுரி ன்னு அஜெய் அழைக்கும் போது, இந்த பிஞ்சு உணரும். மறுவாய்ப்பே இல்லாத உறவுமுறை, இந்த குழந்தைக்கும் அதன் தகப்பனுக்குமானது. அந்த உறவுமுறையை அபரஞ்சியே மறுக்க முடியாது.

  உங்க மருத்துவத்தால நானோ, அபரஞ்சியோ வேண்டுமானால் பூரண அமைதியை அடையாம இருக்கலாம், ஆனால் மதுரிமாவுக்கு காலப்போக்கில் அவளுடைய தந்தையை, அவரின் அன்பை அடையாளம் தெரியும். உணர முடியும், ஏன்னா, இது ஆலிங்கனத்துல வந்த சொந்தமல்ல, ஆன்மாவில வந்த சொந்தம்… என்னை விட, ஏன் அபரஞ்சியை விட, இந்த இடத்தில் இந்த மருத்துவம் மதுரிமாவுக்குத் தான் ஆறுதலை தந்திருக்கு. அந்த வகையில் இந்த கைகளை நான் வணங்குகிறேன்…’’ என்றபடி ஒருவகையில் குழந்தையை பற்றிக் கொண்டே மறுகையில், சகுந்தலாவின் கரங்களை பற்றி முத்தமிட, அவர் விக்கித்து நின்றார்.  

எல்லாம் சரியாகும். மாலிக்கும் சவுகரியங்களோட, அழகாக வாழணும்கிற ஆசை நிறைய இருந்தது. உலக ஆச்சர்யமா இந்த தொழில், அவன் ஆசைப்பட்டு காதலிச்ச அதே தொழில். அதுல ஊழியனா இருந்தவன், இப்போ ஒரு நிறுவனத்துக்கு முதலாளியாக இருக்கப் போறான். இதெல்லாம் அச்சு அசலா அப்படியே திட்டமிட்ட மாதிரி இருக்கு இல்லையா..! 

படைப்பாலே இருவரும் ஒருவர்தான். அதில் பாதியாய் பிரித்து அந்த கடவுள் கொஞ்சநாள் வேறிடத்தில் வச்சிருந்திருக்காரு.  இப்போ, மண்ணோட கலந்த மழைத்துளி மாதிரி, பிரிக்க முடியாம கலந்துட்டாங்க ரெண்டுபேரும். இந்த கலப்பு நடக்கிற வரைக்கும், நாம எல்லாம் கூட பயணம் செய்திருக்கோம்..! அவ்வளவுதான்.’’ 

அந்த வார்த்தைகளில் இருந்த உயிர்ப்பில், இதயமே எட்டாய் பத்தாய் சிதறி உடைந்தது சகுந்தலாவிற்கு. 

  ‘சிந்து…’’

‘’ இந்த உலகம் முழுக்க இயங்குகிறது நம்பிக்கையில மட்டும்தான். எல்லாம் மாறும். மாலிக்குள்ள இருக்கிற அஜெய், மதுரிமாவுக்கும், ஏன் அபரஞ்சிக்கும் கூட அடையாளம் தெரியும். அபரஞ்சின்னா என்ன பொருள் தெரியுமா டாக்டர்..? புடம் போட்ட தங்கம்னு அர்த்தம். எதுவுமே அந்த தங்கத்தை களங்க படுத்தாதுன்னு அவங்களும் உணர்ற நாள் வரும்..!  அதுவரைக்கும் நாம காத்திருக்கணும். அதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்..?’’

‘’ இந்த பயணத்துல நீ இடையிலே போறது என்ன நியாயம் சிந்தூரி..? எங்க கூடவே வரலாம் இல்ல..! நீ எனக்கு பொண்ணு மாதிரி…’’ என்றபோது அவர் குரல் உடைந்திருக்க, மெல்ல அவர் கரங்களை பற்றி தன் உள்ளங்கையில் அழுத்திக் கொண்டாள்.

இருக்கலாம் தான்..! ஆனால் அது சரியா இருக்காது. தெளிந்த குளத்துல கல்லெறிஞ்சு கல்லெறிஞ்சு குழப்பற மாதிரி, நான் அஜெய்யனுக்குள்ள உணர்வுகளை வீசி வீசி உடைச்சு, அந்த சிதறலில் இருந்து மாலியை பொறுக்க முயற்சி செய்துட்டு இருப்பேன். அது அத்தனை சிறப்பானதா இருக்காது. 

என்னுடைய தூண்டுதல்ல, நிம்மதியை இழக்கிறது அவர் மட்டுமல்ல, நானும் தான். இதயத்துக்கும், மூளைக்கும் நடுவிலே சண்டை வரவழைச்சு, ரெண்டுல யார் பராமாக்கிரமசாலினு தேடுறதுல எனக்கு துளிகூட விருப்பம் இல்லை. 

அந்த இதயத்துல எப்பவும் நான் இருப்பேன்கிற நம்பிக்கை இருக்கு. அதுபோதும் எனக்கு…என்னை சுமந்துகிட்டு இருக்கிற இதயம் துடிச்சிட்டே இருக்கணும்…. ‘என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு குழந்தையை சகுந்தலாவிடம் திருப்பித் தந்தாள்.

 கண்கள் அனிட்சையாய் அஜெய்யிடம் சென்று தஞ்சமடைய, அந்த முகத்தவிப்பு அறிந்து, சகுந்தலா குழந்தையோடு கொஞ்சமாய் விலகி நிற்க, நடைமேடையில் நடந்து அவன் எதிரில் சென்று நின்றாள்.

நான் கிளம்பறேன் அஜெய்..! ‘என்றவள் அவன் முகத்தில் இருந்து கண்களை தாழ்த்தி, அவன் இதயத்தை நேர்கோட்டில் பார்த்து,

போறேன் மாலி…’’ என்றாள் சன்னமான குரலில். அவன் உடல் சிலிர்த்தது.

  ‘என்னன்னு சொல்லத் தெரியல, மனசு ரெம்ப தவிக்குது நீங்க போறது. நெஞ்சு முழுக்க ஒருவித பாரமாய் இருக்கு. இந்த பரிதவிப்பே மாலிக்கு நீங்க என்னன்னு புரியுது. நான் ரெம்ப அபாக்கியவானாக உணர்றேன்.’’ என்றான் தவிப்பாக. 

பதில் சொல்லாமல் அவன் முகத்தையே பார்த்தாள். அந்த கண்களுக்குள் தன் ஆன்மாவைத் தேடினாள். அவன் கைகளைப் பற்றியபோது, மாலியின் அருகாமையை உணர முடிந்தது. ஆனால் அது அத்தனையும் தற்காலிகமானது தான்.

கைகளை மெல்ல விலக்கி, கொஞ்சம் விலகி நின்றாள்.

அஜெய்யனும், வனமாலியும் ஒன்றுதான் எப்பவும். இருவருமே பரமாத்மாவின் பெயரை கொண்டவர்கள் தான். அஜெய்யன்னா என்ன தெரியுமா, பிறப்பும், இறப்பும் இல்லாதவன்..! அழிவற்றவன்..! அதனாலதான் மாலிக்குள்ள, அழிவில்லாம அஜெயன் எழுந்தருளி இருக்கான்..! கண்ணை மூடி யோசிச்சா, எத்தனை சிலாகிப்பா இருக்கும் தெரியுமா இந்த உணர்வுப்பூர்வமான பந்தம்..?

உங்க இருவரின் சங்கமத்தில், வந்துபோன நாங்க எல்லாருமே வெறும் கதாபாத்திரங்கள் மட்டும்தான். கண்ணனைப் பத்தி பேசும்போது, அனிட்சையாய் வந்து போற, பலராமரையும், குசேலரையும், ராதையும், கோபியரும், வாசுதேவனும். யசோதரையும் மாதிரிதான் நாங்க எல்லாருமே..! நிஜத்தில் இந்த கலப்பு, மாலியும், அஜெயனும் சேர்றதுதான். சேர்ந்தாச்சு..! வந்தவேலை முடிந்தது…’’ என்றபடியே கைநீட்டி இலக்கில்லாமல், பாதையைக் காட்ட, சிலிர்த்துப் போய் நின்றான் அஜெயன்.

அப்போ இந்த மாலிக்கு உன் வாழ்க்கையில எந்த பொறுப்பும் இல்லையா..?’’ என்றான் தன் இதயத்தை தொட்டுக் காட்டிக் கொண்டே.

’’ இனி என் வாழ்க்கையே என் பொறுப்பில் இல்லை. எனக்காக ஏதாவது செய்யணும்னா, ஒரு பலூன் வாங்கி உங்க மூச்சை நிறைச்சு குடுங்க. அதுபோதும். ‘என்றாள் சின்ன சிரிப்பு பூத்த முகத்தோடு. கேட்ட வேகத்தில் விரைந்து சென்று பங்க் கடையில் ஒரு பலூனை வாங்கிக் கொண்டு வந்து ஊதி, முடியிட்டு நீட்ட, அந்த பலூனை ஆசையாய் வாங்கி தழுவிக் கொண்டவளை பார்க்க, உயிரே கருகியது.

இது  போதுமா..?’’ என்றான் ஆற்றாமையாக.

இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு..? இல்லைன்னு உலகமே சொன்ன என் மாலியோட மூச்சு, இப்போ என் கையடக்கத்துல கிடைக்கிறதை விட, எனக்கு என்ன வேணும்..?’’

இழந்ததை விட, இருக்கிறது பேரானந்தம். இது போதும் எனக்கு.’’

‘’…. நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி…

    பொன் வண்டோடும், மலர் தேடி…

 என் வாழ்வில் நீ வந்தது  விதியானால்…

நீ எந்தன் உயிரன்றோ….’’

அந்த கூட்ட இரைச்சலுக்கு நடுவே, அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி அவள் பாட, அவனின் அத்தனை உணர்வுகளும் தூசி தட்டி குப்பென்று பூத்தது. ஆனால் அந்த உணர்வுக்கு என்ன பெயரிடுவது என்று தெரியாமல் அவன் தவிக்க, அந்த தவிப்பை தொடர விடாமல், அவனை விட்டு மெல்ல விலகி நடந்தாள்.

தூரங்கள் அதிகமாக அதிகமாக மனதின் பாரங்கள் ஏறித் தவிக்க, அவள் இதயத்தில் இருந்து ரத்த இணுக்காக, எதுவோ உடைந்து உருத்தெரியாமல், குருதியோடு கலக்க, தன்னை மறந்து அழைத்தான்,

   ‘சி…ந்..தூ…ர்…’’ 

நின்று விட்டாள். அத்தனை இரைச்சல்களையும் தாண்டி அந்த அழைப்பு அவள் காதுகளில் பாய்ந்து, கால்களை கட்டி வைத்து நிறுத்தியது.

அருகில் வந்து அவள் உள்ளங்கையை பற்றிக் கொண்டான். சில நிமிடங்கள், அந்த அழுத்தம் தொடர, தன்னை தானே மீட்டுக் கொண்டு சகுந்தலாவின் எதிரில் வந்து நின்றாள்.

வரேன் டாக்டர்…’’ என்றாள் மதுரிமாவை வருடியபடி.

இந்த பிரிவு நிரந்தரமில்லை, சிந்தூர். நீ நினைக்கும் போது, இங்கே வரலாம். இங்கே உனக்கே உனக்காக ஒரு தாய் இருக்கேன்.’’ என்ற வார்த்தை அத்தனை ஆறுதலாக இருந்தது.

மெல்ல புன்னகைத்து கொண்டாள். ரயில் ஏறி இருக்கையில் அமரும் மட்டுக்கும், ஜன்னல் ஓரம் நின்று பரிதவிப்பாய் பார்த்துக் கொண்டே இருந்தான். மெல்ல அவர்களை பின்னுக்குத் தள்ளி, ரயில் முன்னேறத் தொடங்கியது.

அந்த சொற்ப வினாடிகள், அத்தனை அவஸ்தையாக இருந்தது. தன்னைத் தானே தொலைத்து விட்டுப் போவது போல் அப்படியொரு தவிப்பு..!

அவள் இதயச் சத்தம் போல் சத்தம் தடதடத்து ஓய்ந்தபோது, கொஞ்சம் சீரானது. கையில் இருந்த அவன் மூச்சுக் காற்று, ஏகத்துக்கும் கனத்தது. மெல்ல புன்னகைத்துக் கொண்டவள், நூல் பிரித்து அந்த காற்றை தன் நாசி அருகே வைத்து முழுதாய் தன்னுள் இழுத்து, சுவாசம் முழுக்க நிறைக்க ஆரம்பித்தாள்.

 அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது. உடல் எல்லாம் கூச்செறிந்து ஆகாயம் பார்த்தது. அவனின் மூச்சு காற்று மெல்ல மெல்ல அவளுள் கலக்க, கலக்க, தன்நிலை மறந்து போனாள்.

அவளுள் மூச்சாய் கலந்துபோன அவனை இனி, மரணம் கூட அவளிடம் இருந்து பிரிக்காது..! ஏனோ இனம் புரியாத நிம்மதியாக இருந்தது. கைகளை கட்டிக் கொண்டு சாய்ந்து அமர்ந்து அருகில் பார்த்தாள்.

அத்தனை இருக்கைகளிலும் ஆட்கள் நிறைந்திருக்க,  இவளின் பக்கத்து இருக்கை மட்டும், காலியாக இருந்தது. சின்ன புன்னகை வந்து உதட்டில் ஒட்டிக்கொள்ள, நன்றாக சாய்ந்து அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டாள். அவள் உள்ளிருந்து இறங்கி மாலி, அவள் அருகில் அமர்ந்து கொள்ள, இத்தனை போராட்டத்துக்கு மருந்தாய் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

ரெம்ப அலைஞ்சிட்டியா சிந்தூர்… கொஞ்ச நேரம் அமைதியா தூங்கு, என் தோள்ல…’’ என்கிறான் காதுகளுக்குள் கிசுகிசுப்பாய். அந்த குரலுக்கு கட்டுப்பட்டு தன்னை மறக்கிறாள் கானசிந்தூரி…

இனி இவள் பயணம் முழுக்க அவனோடுதான்… அவன் என்பது எப்போதும் ஸ்பரிசமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. குரலாய், உணர்வாய், காற்றாய் ஏன் கடவுளாய் கூட சிலருக்கு அமைந்து போகிறது..!

இது உறவும் அல்ல, பிரிவும் அல்ல… இது உணர்வு..!

இந்த பயணங்கள் என்றும் முடிவதில்லை…. 

    

’… நான் உள்ளதைச் சொல்லட்டுமா, ஊரறிய பாடட்டுமா..?

   நல்லவர்கள் வாழ வேண்டும், நன்மை எல்லாம் சூழ வேண்டும்,

   பொன் மகளும், மன்னவனும் பெறுவாழ்வு காண வேண்டும்..!

   வாழ்க, நீங்கள் வாழ்க..! வாழ்வின் இலக்கணமாக…’’

  • நிறைந்தாள் -

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 269
 

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

https://kavichandranovels.com/community/topicid/396/


   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page