About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 14:
தென்றலுக்கு என அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் அமர்ந்த விஷ்ணு அந்த அறையை நிதானமாக நோட்டமிட்டான்.
அந்த அறை ஒன்றும் அத்தனை பெரிதாக இல்லை.
ஒரு கட்டில் ஒரு அலமாரி என்று அவன் பாத்ரூமை விட சிறியதாக இருந்த அறையை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த அறை சிறியதாக இருந்த பொழுதிலும் எந்தவிதமான குறையும் சொல்ல முடியாத அளவிற்கு சுத்தமாக வைத்திருந்தாள்.
அறையில் ஓரத்தில் அவளுக்கு பிடித்த புத்தகங்களும் மற்றொரு இடத்தில் அவளது உடைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, தூசி என்று ஒரு இடத்தில் கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அத்தனை சுத்தமாக வைத்திருந்தாள்.
" பரவால்ல வீட்டை மட்டும் தான் நீ நல்லா சுத்தமா வச்சிருப்பேன்னு நான் நினைச்சுகிட்டிருந்தேன் உன்னோட அறையையும் நல்லா சுத்தமா தான் இருக்கு பரவால்ல.. எனக்கும் எப்பவுமே என்னோட ரூம் நல்ல சுத்தமா இருக்கணும் உன்கிட்ட புதுசா சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா நம்ம வீட்ல உள்ள எல்லாரும் அதிர்ச்சியாவாங்க.. ஆனா உன்ன கல்யாணம் பண்ணதை நினைச்சு சந்தோஷப்படுவாங்க.. " என்றவன் தன் போக்கில் பேசிக்கொண்டே செல்ல, தென்றலுக்கு கோபம் வந்துவிட்டது.
" என்னை என்ன சார் நினைச்சீங்க? நான் உங்க வீட்ல வேலை பாக்குறேன் அவ்வளவுதான் உங்களுக்கும் எனக்கும் இருக்கிற உறவு.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அப்படித்தான் உங்க *** அலையறேன்னு சொன்னீங்க.. இப்ப அதை மறந்துட்டு அதை அப்படியே உண்மையாகிற விதமா என்னை கல்யாணம் பண்ணிக்க செய்ய கேக்குறீங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா? "
" மனசாட்சி மண்ணாங்கட்டி இதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு கொஞ்சம் பிராக்டிகலா பேசு.. இப்போ எனக்கு தேவையான விஷயத்தை நான் உன்கிட்ட சொல்லிட்டேன்.. இந்த வீட்ல காலம் முழுக்க வேலை பார்த்தா உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ அத உனக்கு நான் மொத்தமா கொடுக்கிறேன் அதை வாங்கிக்கிட்டு நீ சந்தோசமா இருக்கலாம்.. எங்க வீட்ல எல்லாருக்கும் சேவகம் பார்த்துட்டு இப்படியே உன் காலத்தை கழிக்கிறதுக்கு பதிலா நீயும் உனக்கு பிடிச்சது போல ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா என்ஜாய் பண்ணு.."
" போதும் நிறுத்துங்க சார் நீங்க உங்க வரைமுறை தாண்டி என்கிட்ட ரொம்ப
பேசிகிட்டு இருக்கீங்க.. என்னால எல்லாம் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்ட பட முடியாது இப்ப நான் சந்தோஷமா தனியா இருக்கேன் எனக்கு விருப்பம் இருந்தா இந்த வீட்ல நான் வேலை பார்ப்பேன் இல்லையா நான் வேற எங்கேயாவது போயிடுவேன்.. உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க காதலி கிடைச்சதுக்கப்புறம் நீங்க என்னை கை கழுவிட்டு விட்டுட்டு போயிடுவீங்க.. உங்க கூட சேர்ந்து வாழ்ற காலத்துல ஒரு குழந்தை உண்டாகிடுச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்? " என்றதும் தனது முகத்தை அருவருப்பாக சுழித்தான் விஷ்ணுவரதன்.
" உனக்கு எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது? போயும் போயும் ஒரு வேலைக்காரி உன் வயித்துல இந்த குடும்ப வாரிசு வளரணும்னு நீ எப்படி கற்பனை பண்ணி பார்த்த!" என்றதும் அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்த தென்றலுக்கு கோபம் வந்துவிட்டது.
" ஏன் சார் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்கும் போது தெரியலையா நான் உங்க வீட்டு வேலைக்காரி தானே! நீங்க பணம் கொடுத்து உங்க கண்டிஷனை சொன்னால் இதே போல உங்களை கல்யாணம் பண்ணிக்க பல பெண்கள் தயாராக இருப்பாங்க.. உங்களுடைய இந்த எண்ணத்துக்கு எல்லாம் நான் ஆள் கிடையாது என்னை விட்டுடுங்க தயவு செஞ்சு.. " என்றதும் அதுவரை அமைதியாக பேசிக் கொண்டிருந்த விஷ்ணு பேசுவதை நிறுத்திவிட்டு அவள் பக்கத்தில் எழுந்து வந்தான்.
அவன் பக்கத்தில் வரவர தென்றல் சிறிதும் பின்னால் நகரவில்லை ஆணி அடித்தது போல அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
தன்னைக் கண்டு அவள் ஒரு அடி கூட பின்னால் செல்லாமல் ஒரே இடத்தில் நிற்பதை கண்டு விஷ்ணுவிற்கு கூட ஒரு நொடி ஆச்சரியமாக இருந்தது.
அவளது கைகளோடு தன் கைகளை பிணைத்துக் கொள்ள, அவனிடமிருந்து தன் கைகளை விடுவிக்க போராடியது அந்தப் பெண் புறா.
தென்றலுக்கு அவன் தன் கைகளை பிடித்ததும் மனதுக்குள் என்னென்னவோ என்ன ஓட்டங்கள்.
அவனிடம் எதையோ சொல்ல துடிக்க சொல்ல முடியாமல் வாய் தடுத்தது.
" இங்க பாருமா நீ ஒருத்தி மட்டும் தான் எனக்கு ஒத்து வருவ.. உன்னை விட்டா எனக்கு வேற யாரும் உதவி பண்ண முடியாது.. உன்னை கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணு.. " என்று கெஞ்சுவது போல் விஷ்ணு பேச, அவனுக்கு என்ன சொல்லி தன் நிலையை உரைப்பது என்று புரியாமல் அவனிடமிருந்து தன் கைகளை விடுவிக்க கூட தோன்றாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
" என்னடி! உன்கிட்ட இப்படியெல்லாம்
கெஞ்சுவேன்னு எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கியா? அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது.. நான் முன்னாடியே சொன்னது போல உனக்கு விருப்பம் இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி இது கண்டிப்பா நடந்தே ஆகணும்.. "
" முடியாது சார் நான் செத்தாலும் செத்துப் போவேனே தவிர கண்டிப்பா நீங்க சொன்னதுக்கு ஒரு காலமும் ஒத்துக்க மாட்டேன்.. என்கிட்ட காசு பணம் வேணும்னா இல்லாம இருக்கலாம் ஆனா தன்மானம் சுயமரியாதை ரொம்பவே அதிகமாருக்கு.. நான் இந்த வீட்ல இருக்க ஒரே காரணம் பூமா அம்மா மட்டும்தான்.. அவங்ககிட்ட நான் செஞ்சு கொடுத்தா அந்த ஒரே ஒரு சத்தியம் மட்டும் தான் நான் இன்னும் இந்த வீட்ல இல்லாம போக, என்னை தடுத்து நிறுத்துற ஆயுதமா இருக்குது.. இத்தனை நாளா உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு மட்டும் தான் நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா எப்ப நீங்க என் வாழ்க்கையோட ஆணி வேரையே அசைச்சு பாத்தீங்கலோ இனிமே இந்த வீட்ல இருக்கிறதல்ல அர்த்தமில்ல.." என்றதும் அவளது கைகளை தனது கைகளுக்குள் வைத்திருந்த விஷ்ணு அவளது கைகளை அழுத்தமாக பிடிக்க, அவன் பிடித்த அழுத்தத்தில் அவளது கைகள் கன்றி சிவந்து போனாலும் எதையாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை வந்து விட்டதால் வலியை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.
"ஓ! உனக்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா பெண்ணே! என் கண்ணை நேருக்கு நேரா பார்த்து உன் வலியைக் கூட உன் மனசுக்குள்ளேயே மறைச்சி வச்சிக்கிட்டு என்னை முறைச்சு பார்க்கிற அளவுக்கு தைரியம் வந்ததுக்கப்புறம் உன்னை இந்த மாதிரி நான் விட்டு வைக்க கூடாதே.." என்றவன் யோசிப்பது போல் பாவ்லா செய்ய,
தென்றல் அவனிடமிருந்து தன் கைகளை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தாள்.
அவன் பிடித்த வேகத்தில் அவளையும் மீறி கண்கள் கலங்கி விட்டது.
வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த சுரேகாவிற்கு கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
' உங்களையே சுத்தி சுத்தி வந்த எனக்கு நீங்க குடுக்குற பரிசு இதுதானா அத்தான்? சின்ன வயசுல இருந்தே நீங்க தானே என் கணவர்ன்னு சொல்லி இந்த வீட்ல இருக்க எல்லாரும் என்னை வளர்த்தாங்க.. அப்ப எல்லாம் உங்க மேல எனக்கு பெருசா இன்ட்ரஸ்ட் இருந்ததில்ல ஆனா இப்ப நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பாக்க முடியலையே..' என்றவள் தன் வாயில் கையை வைத்து சத்தம் போட்டு கூட அழுக முடியாமல் மௌனமாக தனக்குள்ளேயே அழுது கொண்டிருந்தாள்.
" உனக்கு தான் அழுகை வருதே! தாராளமா சத்தம் போட்டு அழுது என்கிட்ட கெஞ்சி கேளு நான் விட்டுடறேன்.. "
" இப்படி என்னை கஷ்டப்படுத்துறதால உங்களுக்கு என்ன சார் கிடைக்கபோகுது? அடுத்தவங்களை கஷ்டப்படுத்தியே அதுல சந்தோசப்படுற உங்க புத்தி கேவலமான புத்தி ஈன புத்தியது.. நீங்க இப்படி என்கிட்ட நடந்துக்கிற விஷயம் எல்லாம் பூமாதேவி அம்மாவுக்கு தெரிஞ்சா உங்களை என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்கே தெரியாது.. நான் இங்க நடந்த எல்லாத்தையும் இத்தோட விட்டுடறேன் தயவு செஞ்சு போயிடுங்க இங்க யாரும் இல்ல நீங்களும் நானும் ஒண்ணா இருக்குறத பாத்தா யாராவது தப்பா பேசுவாங்க.. "
" ஆமால்ல..எனக்கு ஏன் இந்த யோசனை வராமல் போச்சு.. நீயும் நானும் ஒண்ணா இருக்குறத பாத்தா கண்டிப்பா எல்லாரும் தப்பா தானே பேசுவாங்க அதுக்கப்புறம் நீயே ஒத்துக்கலைனாளும் இந்த வீட்ல இருக்க எல்லாரும் கண்டிப்பா உன்னை பேசி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க.. உன்கிட்ட நான் பேசிக்கிட்டு இருக்கிறதுக்கு இந்த ஈஸியான வழியை எனக்கு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் செல்லம்.." என்றவனை என்ன செய்யலாம் என்பது போல் கோபமாக பார்த்தாள் தென்றல்.
இவனிடம் இதற்கு மேல் என்ன பேசி புரிய வைப்பது என்று ஆயாசமாக உணர்ந்த தென்றல் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.
இப்பொழுது அவனிடம் மேலும் மேலும் பேசினால் வாக்குவாதம் அதிகமாகும்.
இவன் எதையும் செய்யக்கூடியவன் என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தவள் அதற்கு மேலும் பேசி பிரச்சினையை பெரிதாக்க விரும்பாமல் மௌனியாகிப் போனாள்.
" என்னங்க மேடம் ரொம்ப பேசிக்கிட்டே இருக்கீங்க இப்போ ஒன்னும் பேசாம ரொம்ப அமைதியா இருக்கீங்க ஏதாவது பேசுங்க அப்பதான் எனக்கு வாய்ப்பு ஏதாவது கிடைக்கும்.. "
" ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேக்குறேன் சார் என்னை விட்டுடுங்க.. உங்ககிட்ட இருக்க பணத்துக்கு நீங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம் சார் ஆனால் நான் அப்படி கிடையாது என்னை விட்டுடுங்களேன் ப்ளீஸ்.. "
" முடியாது செல்லக்குட்டி.. உன் கையை எப்ப நான் பிடிச்சேனோ அப்பவே உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சது மாதிரி தான்.. இப்ப நீ என்ன பண்ற நீயா ஒத்துக்கிட்டா இந்த கல்யாணம் நடக்கும் இல்லையா!நானா உன்னை ஒத்துக்க வைப்பேன்.. கல்யாணம் பண்ணிட்டு உன்னை பேருக்கு என் மனைவியா வச்சுக்கலாம்னு இவ்ளோ நேரம் யோசித்துக்கிட்டு இருந்தேன். ஆனா அதுக்கு நீ ஒத்து வருவது மாதிரி எனக்கு
தெரியல.. நல்லவனா இருக்க என்னை கெட்டவனா மாத்துறது நீ மட்டும் தான் பெண்ணே எனக்கு வேற வழி தெரியல நீ ஒத்துக்கலைன்னா இப்ப உன்னை எனக்கு சொந்தமாகி கிட்டு அதுக்கப்புறம் நீயே பிடிச்சாலும் பிடிக்காட்டியும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறது மாதிரி சூழ்நிலை உருவாக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.. ஆல்வேஸ் சாய்ஸ் இஸ் யுவர்.. " என்றவன் அவள் யோசிப்பதற்காக அவளது கைகளை விடுவித்து அங்கிருந்து இருக்கையில் மீண்டும் சென்று அமர்ந்தவன் அவள் வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.
இவன் இத்தனை தூரம் கேவலமானவனா! என்பது போல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தென்றல் எதுவும் பேச இயலாமல் தலையில் கையை வைத்தபடி அங்கேயே சிலையாக சமைந்து போனாள்.
வெளியே நின்று இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்த சுரேகாவிற்கு விஷ்ணு பேசியதை கேட்டு மனம் காந்தியது.
' போயும் போயும் இந்த அத்தானுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இந்த பொண்ணு தான் கிடைத்ததா! கண்டிப்பா நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம் அத்தான் உங்களை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் இத்தனை நாளா ஜோசியர் சொன்னார்ன்னு தான் நான் ஒதுங்கி போயிருந்தேன்.. ஆனா இப்ப நீங்க தான் அதை பண்ணீங்கன்னு உங்க வாயாலயே ஒத்துக்கிட்டீங்களோ இதுக்கு மேல நான் அமைதியா இருக்கிறதுல்ல அர்த்தமே இல்லை.. இனிமே நடக்கிறது உங்க விருப்பத்துக்கும் சரி அந்த வேலைக்காரி விருப்பத்திற்கும் சரி கண்டிப்பா நடக்காது நான் விரும்புவது மட்டும் தான் நடக்கும் நான் கண்டிப்பா நடத்தி காட்டுறேன்.. அந்த வேலைக்காரிக்கும் உங்களுக்கும் ஒரு வாரத்துல கண்டிப்பா கல்யாணம் நடக்கணும்னு நீங்க சொன்னீங்கல்ல கண்டிப்பா கல்யாணம் நடக்கும் ஆனால் அந்த வேலைக்காரிக்கும் உங்களுக்கும் இல்லை உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்.. அந்த வேலைக்காரிக்கு பிடிச்சாலும் பிடிக்கலனாளும் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னீங்களோ அதே போல தான் உங்களுக்கும் என்னை பிடிக்காட்டியும் என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகணும் உங்களுக்கு வேற ஆப்ஷன் இல்லை அத்தான்.. ' என்று தன் மனதுக்குள் கர்வம் கட்டிக் கொண்ட சுரேகா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.
அந்த நாவலை வாசித்துக் கொண்டிருந்த விஷ்ணுவர்தனை தொந்தரவு செய்வது போல் இசைத்தது அவனது அலைபேசி.
"இப்ச்.." என்று சலித்துக் கொண்டபடி போனை எடுத்து பார்த்தவன் யார்? என்று பார்க்க திரையில் தெரிந்த கார்த்திக்கின் எண்ணைக் கண்டு கடுப்பானான்.
ஆன் செய்து காதில் வைத்தவன் அவனுக்குத் தெரிந்த ஆங்கில சொற்களால் வசைபாடினான்.( தமிழில் உள்ள சில தகாத வார்த்தைகளால் தான்)
அவன் திட்டிய வார்த்தைகளை எல்லாம் கேட்க முடியாமல் அந்த பக்கம் தனது காதை தேய்த்துக் கொண்ட கார்த்திக் " ஏன்டா இப்படி எல்லாம் பேசுற! நான் என்னடா உனக்கு பாவம் பண்ணினேன் இப்படி வண்ட
வண்டையா திட்டுற அளவுக்கு.. " என்றான் அழுது விடுவது போல.
" வாயை மூடுடா எவ்வளவு முக்கியமான வேலையில் நான் இருக்கிறேன் உனக்கு எதுக்கு இப்ப தேவையில்லாமல் இந்த போன்.. "
" ஏண்டா எரும மாடு பேச மாட்ட.. உன்னை பார்த்து ஒரு வாரத்துக்கும் மேலாச்சு அதனாலதான் ஒரு போன் போட்டு எப்படி இருக்கன்னு கேக்குறதுக்காக ஒரு போன் போட்டேன்.."
" நீ என்ன என் பொண்டாட்டியா? என்னை பார்க்காமல் அப்படியே துடிச்சு எனக்கு போன் பண்ணி பேசுறதுக்கு? "
" என்னடா மச்சான் இப்படி எல்லாம் பேசுற நான் அந்த மாதிரி பையன் எல்லாம் கிடையாது நான் நல்ல குடும்பத்து பையனாக்கும்.."
" எரிச்சல் வர்ற மாதிரி ஏதாவது பேசிக்கிட்டு இருந்த அதுக்கப்புறம் உன்னை தேடி வந்து கொலை பண்ணிடுவேன் ஜாக்கிரதை.. ஒழுங்கு மரியாதையா எதுக்கு போன் பண்ண அந்த விஷயத்தை சொல்லிட்டு போனைவை எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு.."
" என்ன மச்சி முக்கியமான மீட்டிங் உங்க வீட்ல வேலை பாக்குற அந்த பொண்ணு அந்த பொண்ணு பேர் கூட எனக்கு மறந்து போச்சு.. என்னவோ வருமே நல்ல பேரா கூட இருக்குமே ஞாபகம் வரல்லை..நீயே சொல்லு பாப்போம். "
"ம்ம்.. எரும மாடு " என்றான் விஷ்ணு கடுப்பாக.
" ஏண்டா இவ்வளவு அழகான பொண்ணுக்கு அவங்க வீட்டுல இப்படி ஒரு இத்துப்போன பெயரையா வைக்கணும் அந்த பொண்ணு பாக்குறதுக்கு கூட அழகா தான் இருக்கும்.. " என்றதும் ஏனோ விஷ்ணுவிற்கு கார்த்திக் சொன்னதை கேட்டு கோபம் எல்லை மீறி வந்தது.
தனக்கான ஒரு பொருளை அடுத்தவர் வர்ணிக்கும் பொழுது வருமே ஒரு கோபம் அப்படிப்பட்ட கோபம் விஷ்ணுவிற்கு வந்தது.
" சரி அந்த பொண்ணு பேரு என்னவோ இருந்துட்டு போகட்டும் அந்த பொண்ணை நீ மிரட்டிக்கொண்டு இருக்காமல் ஒழுங்கா என்னை வந்து பாரு உனக்கு தேவையான விஷயம் என்னன்னு எனக்கு ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கு அத பத்தி பேசுறதுக்கு தான் உன்னை வர சொல்லி போன் பண்ணேன்.. " என்றதும் அவன் பேசியதை கேட்டு விஷ்ணுவிற்கு நம்ப முடியவில்லை.
" நீ சொன்னது உண்மைதானா? அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரிஞ்சிடுச்சா!" என்றான் நம்ப முடியாமல்.
" எனக்கு முழுசா தெரியல மச்சான் ஆனால் ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கு.. ஒண்ணுமே தெரியாம நீ தேடிக்கிட்டு இருந்ததுக்கு இப்போ ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு இதை வச்சு நீ இன்னும் தேடுறதுக்கு உனக்கு வசதியா இருக்கும் சட்டுன்னு வந்து சேரு.. " என்ற கார்த்திக் அழைப்பை துண்டிக்க, தன் மனதிற்கு பிடித்த பெண்ணை பற்றி பேசியதால் தான் தென்றலை மிரட்டிய விஷயம் அவனுக்கு எப்படி தெரிந்தது என்பதை யோசிக்காமல் மறந்து போனான் அந்த நிமிடம்.
தன் மனதிற்கு பிடித்தவளை கூடிய சீக்கிரமே கண்டுபிடிக்க போகிறோம் என்ற சந்தோஷத்தோடு அலைபேசியை தனது சட்டை பையில் வைத்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தென்றலை எரிச்சலாக பார்த்தான்.
" கவலைப்படாதே பெண்ணே!கார்த்திக் மட்டும் நான் எதிர்பார்க்கிற அந்த விஷயத்தை சொல்லிட்டா நான் உன்கிட்ட கேட்ட விஷயம் நடக்காமல் போய்விடும் உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்ல.. நான் போகிற விஷயம் நல்லபடியா எனக்கு கிடைக்கும்னு நீ அந்த கடவுள் கிட்ட வேண்டிக்க அப்பதான் நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்.. " என்றவன் அவள் கன்னத்தில் தட்டி விட்டு செல்ல, செல்லும் அவனையே புரியாத புதிராக பார்த்துக் கொண்டிருந்த தென்றலுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது அவன் ஒவ்வொரு நொடியும் நடந்து கொள்வது.
அவன் அங்கிருந்து அகன்று எழுதும் புயலடித்து ஓய்ந்தது போலிருக்க, அமைதியாக கண்ணை மூடி அமர்ந்து விட்டாள்.
அவள் அறையை விட்டு வெளியில் வந்து தனது காரை எடுத்துக் கொண்டு செல்லும் விஷ்ணுவை மறைந்திருந்த பார்த்த சுரேகா மர்ம புன்னகை ஒன்று பூத்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு பிறகு மணமகளாக விஷ்ணுவரதன் பக்கத்தில் அமர்ந்திருக்க, அவன் முகம் பாறையை விட இறுகி போய் இருக்க அதில் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி போயிருந்தார்கள் அவன் குடும்பத்திலிருந்த அனைவரும்.
கூடவே இன்னொரு ஜோடியான விஷ்வா ரேணுகா அமர்ந்திருக்க, இருவர் முகத்திலும் மருந்துக்கு கூட சிறிதும் புன்னகை இல்லை.
இருவரும் ஒருவர் ஒருவர் காதலித்து மணமேடையில் அமர்ந்திருக்க இருவருக்குமே இந்த கல்யாணம் வெறுப்பை மட்டுமே கொடுத்திருந்தது.
ஆக மொத்தத்தில் அந்த நால்வரில் சந்தோஷமாக இருந்த ஒரே ஜீவன் சுரேகா ஒருத்தி மட்டுமே.
அங்கு நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தென்றல் கண்களை இறுக்கமாக மூடி திறந்தாள்.
" மாங்கல்யம் தந்துனா நம ஜீவன ஹேதுனா.. கெட்டி மேளம் கெட்டி மேளம் " என்று குரல் கொடுக்க முதலில் விஷ்வா ரேணுகா கழுத்தில் விருப்பமே இல்லாமல் தாலி கட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொள்ள, அதுவரை நெருப்பின் மீது அமர்ந்திருந்த ரேணுகாவிற்கு விஷ்வா கையில் தாலி வாங்கிய பிறகு மனம் திருப்தியடைந்தது.
தன் கழுத்தில் கிடந்த தாலியை சந்தோஷமாக அவள் பார்க்க அவளை வெறுப்பாக பார்த்தான் விஷ்வா.
அவர்களது திருமணத்தை குடும்பத்திலிருந்த அனைவருடன் வந்திருந்த உற்றார் உறவினர் அனைவரும் சந்தோஷமாக பார்த்து வாழ்த்தினார்கள்.
அவர்கள் திருமணம் இனிதே முடிக்க அடுத்த ஜோடியான விஷ்ணு கையில் ஐயர் தாலியை கொடுக்க, அதை தனது கைகளில் வாங்கிய விஷ்ணு வேண்டா வெறுப்பாக சுரேகாவை பார்த்தபடி அவள் கழுத்துக்கு அருகில் கொண்டு செல்ல,தான் ஆசைப்பட்டது கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் குனிந்து அவன் கட்டப் போகும் தாலியை வாங்குவதற்கு தயாராக, அவனையே பார்த்துக் கொண்டிருந்த தென்றலுக்கு இனி இவன் தொல்லை இல்லையே என்று சந்தோஷமாக இருந்தது.
அதே நேரம் பிரகல்யா விஷ்ணுவின் திருமணம் நடந்து விடுமோ? என்று பதட்டமாக அங்கேயே ஒரு ஓரமாக நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அத்தியாயம் 15:
அனைவரும் குடும்பமாக படத்தை பார்த்து விட்டு வர, வீட்டைக் கூட திறக்க விரும்பாமல் வாசலிலேயே படுத்து கிடந்த சுரேகாவிற்கு மனது தாங்கவில்லை.
போகும்போது விஷ்ணுவின் காரில் போனவர்கள் வரும் பொழுது கார் டிரைவருக்கு போன் செய்து காரை எடுத்துக் கொண்டு வர சொன்னார் இந்திரன்.
படமும் நல்ல குடும்ப படமாக அமைய அவர்களுக்கு முழு படத்தையும் திருப்திகரமாக பார்த்த சந்தோஷம் கிடைத்தது.
காரில் வரும் பொழுது இதற்கு ஏற்பாடு செய்த சுரேகா மட்டும் தங்களோடு இல்லை என்று குறைப்பட்டு கொண்டார்கள்.
சினிமாவிற்கு சென்றது யாருக்கும் மகிழ்ச்சியோ இல்லையோ விஷ்வா ரேணுகா ஜோடிகளுக்கு அவ்வளவு சந்தோஷம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் அங்கு மனம் விட்டு பேசிக்கொள்ள அவர்களுக்குள் இருந்த மனக்கஷ்டமும் நீங்கிப் போனது.
இவர்கள் இங்கு வீட்டிற்கு வந்து சேரவும் கோவிலுக்குச் சென்ற பூமாதேவி மாரியப்பன் வீட்டிற்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.
வாசலில் காரை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கி உள்ளே செல்ல, அங்கு தாய் இல்லாத பிள்ளை போல் படுத்து கிடந்த சுரேகாவை கண்டதும் பதறிவிட்டார் லட்சுமி.
அவர் மட்டுமல்ல அனைவரும் கூட சேர்ந்தே பதறி விட்டார்கள்.
" ஐயோ செல்லம் எதுக்காக இங்க இப்படி படுத்து இருக்க? இவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது உடம்பு எதுவும் சரியில்லையா கண்ணு!" என்றவர் மகளது தலையை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு அவளது கன்னத்தில் கை வைத்து தட்டியபடி பதட்டமாக அழுது கொண்டு கேட்டார்.
" இப்ப எதுக்குமா தேவையில்லாம அழுகுறீங்க எனக்கு ஒன்னுமில்ல.. கொஞ்சம் உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு வேற ஒன்னுமில்லை.. " என்றாள் சமாதானமாக.
அவள் சொன்ன போதிலும் லட்சுமிக்கு தாங்க இயலவில்லை.
வீட்டையே சுற்றிப் பார்த்த சீதா " என்ன சுரேகா வீடு திறக்கவில்லை! வீட்டுக்கு வந்த விஷ்ணு எங்க? அவனோட காரையும் காணோம்.. எங்க போயிட்டான் நீ ஏன் இங்கே இப்படி வெளியில தனியா படுத்திருக்க! அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் சொல்லி தானே எங்க எல்லாரையும் விட்டுட்டு வீட்டுக்கு வந்த! அந்தப் பையன் எங்க போனான்? எதுக்காக நீ இப்படி வெளியில் படுத்திருக்க உன்கிட்ட கூட சாவி இருக்குது தானே வீட்டை திறந்துவிட்டு உள்ளே போய் படுத்து இருக்கலாமே.. "
" இல்லத்த.. நான் வரும்போது அத்தான் வீட்டில் இல்லை அவர் எங்கேயோ வெளில போயிட்டார்ன்னு நினைக்கிறேன் என்னால் கதவை கூட திறக்க முடியல அதான் வெளியில படுத்துட்டேன்.. " என்று வேண்டுமென்றே பொய் சொன்னாள்.
விஷ்ணு சென்றதும் சிறிது நேரம் தன் மீது இருந்த கழிவிறக்கத்தில் தன்னை நினைத்து அழுது கொண்டிருந்த தென்றல் பிறகு தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டவளாக அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு முகத்தை கழுவி தலையை பின்னி விட்டு இப்பொழுது படம் பார்த்துவிட்டு அனைவரும் வந்திருப்பார்கள் என்று கவனமாக தாழ்ப்பாள் வைத்த கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.
வெளியில் வந்தவளுக்கு விஷ்ணு வந்தவுடனேயே சுரேகாவும் வீட்டுக்கு வந்துவிட்டாள் என்ற செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி தான்.
' கடவுளே அப்ப இவங்க எல்லாத்தையும் கேட்டுட்டாங்களா.. அவர் வேற என்கிட்ட என்னென்னமோ பேசிகிட்டு இருந்தாரே இவங்க இது எல்லாத்தையும் கேட்டுதான் மனசு உடைந்து போய் இப்படி இங்கேயே படுத்துட்டாங்களோ! கடவுளே இப்ப நான் என்ன பண்ணுவேன் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை..' என்று தனக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டாள்.
" இல்லம்மா எனக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை.. தென்றல் கையால ஒரு கசாயம் போட்டுக் கொடுப்பாளே அந்த கசாயத்தை போட்டு எடுத்துக்கிட்டு என் ரூமுக்கு வர சொல்லுங்க.." என்றவள் யாரையும் பார்க்க முடியாமல் சிரமப்பட்டு எழுந்து தனது அறைக்குச் செல்ல அவளுக்கு உதவி செய்தார்கள் லக்ஷ்மி சீதா இருவரும்.
அவளது அறையில் அவளை விட்ட பிறகு கீழே இறங்கி வந்த சீதாவையும் லட்சுமியையும் புரியாமல் பார்த்தார் பூமாதேவி.
" இப்ப என்ன பிரச்சனை நடந்துச்சு எதுக்காக இந்த பெண்ணுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு எல்லாரும் சந்தோஷமா தானே படம் பார்க்க போனிங்க என்ன பிரச்சனை? " என்று பூமாதேவி கேட்க, அவருக்கு சீதா அனைத்தையும் விளக்கமாக சொல்லி முடித்தார்.
அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த தென்றலுக்கு பயம் மனதைக் கவ்வியது.
விஷ்ணு தன்னிடம் பேசிய விஷயம் சுரேகாவிற்கு தெரியுமோ?என்ற பயம் ஒரு பக்கமிருக்க, மற்றொரு பக்கம் சுரேகா இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி ஏதாவது பிரச்சனையை உண்டு செய்து விடுவாளோ? என்கிற பயம் இது அனைத்தையும் தாண்டி விஷ்ணு தன்னிடம் பேசியது போலவே தன்னை திருமணம் செய்து கொண்டு விடுவானோ? இல்லை தன் விருப்பம் இல்லாமல் தன்னை ஆட்கொண்டு விடுவானோ? என்கிற பயம் அனைத்தும் சேர்ந்து அவளுக்குத்தான் ஜுரம் வந்து சேர்ந்தது.
இப்பொழுது சென்று தனக்கு உடல் நலம் சரியில்லை என்று சொன்னால் ஏதாவது பயத்தில் உளறி விடுவோமோ என்று பயந்து கொண்டு தனக்கு உடல்நலம் சரியில்லாததை மறைத்துக் கொண்டு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைவது போல் ஒரு புன்னகையுடன் உள்ளே நுழைந்து அவளது ஆஸ்தான இடமான கிச்சனுக்கு சென்றாள்.
"தென்றல்.." என்று லக்ஷ்மி அழைக்க, அவள் உடல் வெலவெலத்து விட்டது.
உடல் நடுங்க லட்சுமியிடம் வந்தவள் " சொல்லுங்கம்மா ஏதாவது வேணுமா? " எனவும் லட்சுமிக்கு இருந்த பயத்தில் தென்றலின் குரலில் இருந்த பயத்தை கவனிக்க தவிர,அதை சரியாக கண்டுபிடித்துவிட்டார் பூமா.
அதைப் பற்றி அவளிடம் அப்போது கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் அவள் தனியாக இருக்கும் பொழுது நிச்சயம் எதற்காக இப்படி பயப்படுகிறாள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் மனதுக்குள் குறித்துக் கொண்டார்.
" ஆமாம்மா சுரேகாவுக்கு உடம்பு ஒரு மாதிரி சரியில்லை உன் கையால வச்சு கொடுக்கிற கஷாயத்தை அவள் கேட்கிற.. எப்பவும் எதையும் பெருசா விரும்பாத பொண்ணு இப்ப அவ வாயை திறந்து கேட்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது தென்றல்.. உன் கையால அந்த கசாயத்தை செஞ்சு கொடுப்பியா.. " என்று பணிவாக கேட்க, தென்றலுக்கு உருகி விட்டது.
என்னமோ ஏதோ என்ற பயத்தில் இருந்தவளுக்கு விஷயம் இதுதானா? என்று தெரிந்த பிறகு மனதிலிருந்த பயம் அகன்று போனது.
" இதுக்கு எதுக்கு அம்மா என்கிட்ட போய் கெஞ்சி கேட்கிறீங்க! நீங்க செய்ய சொல்றதை செஞ்சு கொடுக்கிறது தானே எனக்கு இந்த வீட்டில் வேலை அதுக்கு தானே நான் சம்பளம் வாங்குறேன்.." என்றவள் கிச்சனுக்கு சென்று கால் மணி நேரத்தில் கசாயத்தை தயார் செய்து கொண்டு லட்சுமியிடம் வர, அவர் என்ன நினைத்தாரோ அதை அவள் கைகளாலேயே கொண்டு சுரேகாவிடம் கொடுக்க சொன்னார்.
ஏற்கனவே பயத்தில் இருப்பவளுக்கு இப்பொழுது சுரேகாவை நேருக்கு நேராக சந்திக்கும் தைரியம் சுத்தமாக இல்லாமல் போனாலும் அவரிடம் மறுப்பு சொல்ல முடியாமல் வேறு வழியில்லாமல் அவளே அந்த கசாயத்தை எடுத்துக் கொண்டு சுரேகா அறைக்கு சென்றாள்.
வெளியிலேயே கதவைத் தட்டி கவனமாக அனுமதி கேட்டு விட்டாள்.
ஏற்கனவே பலமுறை சுரேகாவிடம் வாங்கி கட்டிக் கொண்டதால் ஒவ்வொரு முறையும் அதை மறக்காமல் கதவைத் தட்டி அனுமதி கேட்பவள் அவள் உள்ளே வர சொன்ன பிறகு உள்ள செல்வாள்.
"உள்ளே வா தென்றல்.." என சுரேகா குரல் கொடுக்க அதன் பிறகு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
சுரேகாவோடு துணைக்காக ரேணுகாவும் இருக்க அவளை பார்த்து ஒரு புன்னகை பூத்தாள்.
பதிலுக்கு ரேணுகா ஒரு புன்னகை பூக்க, அதைப் பார்த்து எரிச்சலடைந்த சுரேகா " ரேணுகா கொஞ்ச நேரம் நீ உன்னோட ரூம்க்கு போனா தேவலை நான் தென்றல் கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்.. " எனவும் ரேணுகா சரியென தலையாட்டி விட்டு மறுபடியும் ஒரு முறை தென்றலை பார்த்து ஒரு புன்னகை பூத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
" இந்தாங்க மேடம் நீங்க கேட்ட கசாயம்.." என்று கசாயத்தை சுரேகாவிடம் கொடுக்க, அவள் கொடுத்த கசாயத்தை தரையில் வீசி எறிந்த சுரேகா நன்றாக எழுந்தமர்ந்தாள்.
அவளை அதிர்ச்சியாக தென்றல் பார்க்க, சிறிதும் யோசிக்கவில்லை சுரேகா அவளது கன்னத்திலேயே மாறி மாறி தனது கோபம் தீரும் வரை அடிக்க ஆரம்பித்தாள்.
அவளது அந்த கோபத்திலேயே அவளுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று யூகித்துக் கொண்ட தென்றல் எதுவும் பேசாமல் அமைதியாக அவள் கொடுத்த அடியை வாங்கிக் கொண்டாள்.
தன் கோபம் தீரும் வரை அவளை அடித்து நொறுக்கிய சுரேகா அவளைப் பிடித்து தள்ளிவிட்டு மீண்டும் வந்து தனது கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
கால் மீது கால் போட்டு அமர்ந்தவள் கீழே கிடந்த தென்றலை விட்டால் கொன்று விடுவோமோ என்ற எண்ணத்துடன் பார்த்துக் கொண்டிருக்க தென்றல் சிறு பிள்ளை போல் அழுது கொண்டிருந்தாள்.
" அழுகாதடி ராட்சசி..பிசாசு.. பேயே.. என்ன செஞ்சு வச்ச என் அத்தானை மயக்கி வச்சிருக்க எப்ப பார்த்தாலும் உன்னை வெறுத்து பேசுறவர் இப்ப உன்னை கல்யாணம் கட்டிக்கிற அளவுக்கு உன்கிட்ட வந்து பேசுறார்.. அவர் மேல நான் எவ்வளவு விருப்பம் வச்சிருக்கேன்னு தெரிஞ்சும் உன்கிட்ட வந்து அவர் பேசும்போது நீ எதுவும் சொல்லாம இருக்க இல்ல.. " என்றதும் அதுவரை பொறுமையாக இருந்து தென்றலுக்கு கோபம் வந்தது.
"இங்க பாருங்க மேடம்.." என்றவள் தைரியமாக எழுந்து நின்றாள்.
" நான் உங்க வீட்ல வேலை தான் செய்றேன்னு உங்க எல்லாருக்கும் பலமுறை சொல்லிட்டேன். நான் ஒன்னும் உங்க எல்லாருக்கும் அடிமை கிடையாது.. உங்க அத்தான் என்கிட்ட வந்து பேசினா அது அவங்களோட தப்பு நீங்க அவங்க கிட்ட தான் கேட்கணும் அதை பத்தி என்கிட்ட கேட்டதும் தப்பு என்னோட அனுமதி இல்லாம என் மேல நீங்க கை வச்சதும் தப்பு.. ஏதோ நீங்க லட்சுமி அம்மா பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் நான் பொறுமையா இங்கிருந்து போறேன்.. நீங்க என் மேல கை வச்ச விஷயத்தை மட்டும் கீழே இருக்கவங்களுக்கு தெரிஞ்சது உங்களோட சேர்த்து என்கிட்ட தப்பா பேசினா உங்க அத்தானையும் இந்த வீட்ல உள்ள எல்லாரும் பண்ணுவாங்கன்னு உங்களுக்கே நல்லா தெரியும்.. ஏதோ நீங்க தெரியாம பண்ணிட்டீங்கன்னு உங்களை மன்னிச்சு விட்டுட்டு நான் போறேன்.. " என்றதும் சுரேகா ஏற்கனவே கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவள் இப்பொழுது தென்றல் பேசியதை கேட்டு இன்னும் கோபம் எல்லையை கடந்து சென்றது.
" ஒரு வேலைக்கார நாயி நீ என்னை எதிர்த்து பேசுறியாடி? உன்னை என்ன பண்றேன்னு பாரு.. " என்றவள் கோபமாக அவளை அடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா! என்று பார்க்க அங்கு அவளுக்கு தோது செய்வது போல் பூச்சாடி ஒன்று கிடைத்தது.
அந்த பூ ஜாடியை கண்டதும் அதை கையில் எடுத்தவள் தென்றல் தலையில் தூக்கி போடுவதற்காக பக்கத்தில் வர, தென்றல் சிறிதும் யோசிக்கவில்லை அவள் கன்னத்தில் தன் ஒட்டுமொத்த சக்தியையும் தேக்கி ஒரு அறை விட, அவள் அறைந்த வேகத்தில் பூ ஜாடியுடன் கீழே விழுந்தாள் சுரேகா.
பூச்சாடி விழுந்த வேகத்தில் உடைந்து போக, அதன் சத்தம் கேட்டு கீழே இருந்த அனைவரும் பதறிப் போய் மேலே வர ஆரம்பித்தார்கள்.
தன்னை அறைந்த தென்றலே நம்ப முடியாமல் சுரேகா கன்னத்தில் கையை வைத்தபடி பார்க்க, அவள் பக்கத்தில் அமர்ந்த தென்றல் ஒற்றை விரலை எடுத்து நீட்டினாள்.
" ஒவ்வொரு முறையும் நீ பண்ற அத்தனைக்கும் பொருத்துப் போக ஒரே காரணம் உன்னோட அம்மா மட்டும்தான்.. அவங்களோட முகத்துக்காக மட்டும்தான் நீ ஒவ்வொரு தடவையும் என்னை காயப்படுத்தும் போது நான் அமைதியா போய்க்கொண்டிருந்தேன்.. உன்னை எதிர்த்து உன்கிட்ட சண்டை போட முடியாம இருக்குறதுக்கு நானும் ஒன்னும் கோழை கிடையாது.. இன்னொரு தடவை என் மேல கை வச்ச அதுக்கப்புறம் உங்க அம்மாவுக்காகவும் பார்க்க மாட்டேன் உங்க குடும்பத்துல இருக்க யாருக்காகவும் பார்க்க மாட்டேன் கொஞ்சம் கூட யோசிக்காம கைய வச்ச கொதிக்கிற சுடுதண்ணியா உன் மூஞ்சிலேயே ஊத்திடுவேன்.. " என்றதும் இப்பொழுது உடல்நலம் சரி இல்லாதது போல் நடித்துக் கொண்டிருந்த சுரேகாவிற்கு பயத்தில் உண்மையாலுமே உடல் நலம் சரியில்லாமல் போனது.
கீழே அமர்ந்திருந்தவர்கள் மேலே வந்து பார்க்க, அவர்கள் வரும் சத்தம் கேட்ட தென்றல் வேகமாக சுரேகாவின் கையை பிடித்து இழுத்தவள் அவளை அவளுடைய கட்டிலில் தள்ளி படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு அவள் தலையை வருடி கொடுப்பது போல் அமர்ந்து விட்டாள்.
மேலே வந்த கணேசன் இந்திரன் லட்சுமி சீதா தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வந்த ரேணுகா அனைவரும் அந்த அறை கந்தர்வ கோலமாக கிடப்பதைக் கண்டு கேள்வியாக தென்றலையும் அவளையும் பார்த்தார்கள்.
" அது ஒன்னுமில்லங்க அம்மா.. மேடத்துக்கு கசாயம் கொண்டு வந்தேன்ல்ல அவங்க குடிக்கிறதுக்கு பயந்துகிட்டு கசாயத்தை தட்டி விட நான் அதைப் பிடிக்கப் போறேன்னு நான் ஜாடியை தள்ளி கீழே உடைத்து விட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. " என்றதும் பதட்டப்பட்டு கொண்டிருந்த அனைவரும் விஷயம் எவ்வளவு தானா? என்பது போல் சுரேகாவை திட்டி விட்டு சென்றார்கள்.
சுரேகா தென்றலுக்கு பயந்து கொண்டு ரேணுகாவை தன் பக்கத்திலேயே துணைக்கு வைத்துக் கொண்டாள்.
அவர்கள் அனைவரும் வெளியேறியதும் அந்த அறையை சுத்தம் செய்த, தென்றல் வெளியில் போகும் பொழுது பார்த்த பார்வையில் சுரேகா பயந்து போய் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
ரேணுகா விஷ்வாவுடன் இருந்த சந்தோஷமான மனநிலமையில் இருவரையும் கவனிக்காமல் தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
தென்றல் அங்கிருந்து வெளியேறியதும் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ரேணுகாவை வன்மமாக பார்த்த சுரேகா தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அவளிடம் பேச ஆரம்பிக்க, அவள் பேசியதை கேட்டு ரேணுகா கண்களில் கண்ணீர் நில்லாமல் வழிய ஆரம்பித்தது.
" நீ எதுக்காக இப்படி எல்லாம் என்கிட்ட பேசுற சுரேகா இப்படி எல்லாம் நீ என்கிட்ட பேசுற ஆள் கிடையாதே.."
" நான் நல்லவளா இருக்கிறதால யாருக்கு என்ன பிரயோஜனம் சொல்லு.. எனக்கு உன்னோட அண்ணனை கல்யாணம் பண்ணிக்கணும் அதுக்காக நான் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போக தயாராக இருக்கிறேன்.. "
" எதுக்காக இப்படி எல்லாம் பேசுற சுரேகா.. " என்றதும் கோபமான சுரேகா தான் வீட்டிற்கு வந்தது முதல் இதோ இப்பொழுது தென்றல் தன்னை அறைந்து விட்டு செல்வது வரை அனைத்தையும் சொல்லி முடிக்க பேயறைந்தது போலிருந்தாள் ரேணுகா.
" உன்னாலயே நம்ப முடியாம ஆச்சரியமா பாத்துக்கிட்டிருக்கியா ரேணுகா.. இப்ப சொல்லு நான் சொல்றது சரியா தப்பா.. "
" என்னால நீ சொல்றதையும் நம்பவே முடியலை சுரேகா எனக்கு தெரிஞ்சு தென்றல் இப்படி எல்லாம் பண்ணக்கூடிய பொண்ணு கிடையாது.. அண்ணன் அவள் கிட்ட கேட்டது அண்ணனோட தப்பு தானே? அப்புறம் எதுக்கு நீ தேவையில்லாம அவளை அடிச்ச அதுக்காக அவள் உன்னை அடித்தது தப்பு கிடையாது தானே!" என்று தென்றலுக்காக வாதிட, அவளை வன்மமாக பார்த்தாள் சுரேகா.
" சரி ரேணுகா நீ சொல்றது போலவே நான் செஞ்சது தப்பு.. என்னோட அண்ணனை என் கூட படிக்கிற கீதா பல தடவை பார்த்து அவளுக்கு புடிச்சிருக்குன்னு என்கிட்ட லவ் லெட்டர் கொடுத்தா.. ஆனா அண்ணன் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் அவளிடம் இருந்து அதை வாங்கல அவகிட்ட இருந்து இல்ல இதே போல பல பெண்கள் கொடுத்தங்க நான் யார்கிட்டயிருந்தும் வாங்கல எல்லாத்துக்கும் காரணம் நீ என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க போற என்னோட வருங்கால அண்ணி நீ மட்டுமா தான் இருக்கணும்னு நான் நினைச்சேன் ஆனா உனக்கு அந்த மாதிரி எண்ணம் கொஞ்சம் கூட இல்லைன்னு எனக்கு தெரிஞ்சதுக்கப்புறம் நான் மட்டும் எதுக்காக உனக்காக யோசிக்கணும் இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ என்னோட வருங்கால அண்ணி நீ மட்டும் கிடையாது உன் அண்ணன் எனக்கு கிடைக்கல கண்டிப்பா என் அண்ணனுக்கு நீ கிடைக்க முடியாது கிடைக்கவும் விடமாட்டேன்டி.. " என்றவளை கண்டு எதுவும் சொல்ல முடியாது திகைத்துப் போயிருந்தாள் ரேணுகா.
" எதுக்காக என்கிட்ட இப்படி எல்லாம் பேசுற சுரேகா.. அண்ணன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதும் பண்ணிக்காம போறதும் அவரோட தனிப்பட்ட விருப்பம் நானும் விஷ்வா அத்தானும் காதலிக்கிறோம் அது உனக்கு நல்லாவே தெரியும்.. அது தெரிஞ்சும் நீ எங்க ரெண்டு பேரையும் பிரிக்க நினைக்கிறது உன்னோட தப்பு தான்.. உன்னுடைய இந்த கெட்ட எண்ணத்துக்காக தான் உன்னை என் அண்ணன் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நான் நெனச்சேன்.. ஆனா என் அண்ணனை கல்யாணம் பண்ணதுக்கப்புறம் நீ கண்டிப்பாக திருந்தி இந்த குடும்பத்துக்கு ஒரு நல்ல மருமகளா இருப்பேன்னு நான் நெனச்சேன்.. ஆனா இப்பவும் நீ கொஞ்சம் கூட மாறாமல் சுயநலமா நீ மட்டும் சந்தோசமா இருக்கணும்னு நெனச்சு என்ன கஷ்டப்படுத்துற பாத்தியா.. " என்றாள் வேதனையாக.
" சும்மா நிறுத்து ரேணுகா உன்னை கண்டு பரிதாபப்படுறதுக்கெல்லாம் நான் தயாராக இல்லை எனக்கு தேவை விஷ்ணுவோட எனக்கு கல்யாணம் நடக்கணும்.. அதுக்கு நீ தான் ஒத்துழைக்கணும்.. இல்ல நான் உன்னை என் அண்ணன் கிட்ட இருந்து பிரிச்சு அவருக்கு வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்.." என்றதும் அவளது காலில் விழுந்து விட்டாள் ரேணுகா.
" அப்படியெல்லாம் பண்ணிடாத ரேகா.. என்னால விஷ்வா அத்தான் இல்லாமல் வாழ முடியாது.. நீ என்ன சொன்னாலும் நா அப்படியே பண்றேன்.. " என்றவள் சிறிதும் யோசிக்காமல் அவளது காலில் விழுந்து விட்டாள்.
தன் தோழி தன்னிடம் இப்படி கெஞ்சுவதை கண்டு சுரேகாவிற்கு மனசுக்கு கஷ்டமாக இருந்தால் விஷ்ணுவை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவளது மனதை முழுவதுமாக மாற்றியிருந்தது.
அவளைத் தூக்கி தன்னோடு அமர வைத்த ரேகா " இப்போ நான் உன்கிட்ட சொல்ல போற
விஷயம் உனக்கு இப்போதைக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும் ஆனா இப்போதைக்கு எனக்கு வேற வழி இல்லை நான் சொல்வதை நீ செஞ்சுதான் ஆகணும்.. "
" நீ என்ன சொன்னாலும் நான் அப்படியே செய்றேன் சுரேகா சொல்லு.. "
" நீ உனக்கும் என் அண்ணனுக்கும் இடையில் தப்பு நடந்ததா சொல்லி சொல்லணும்.. " என்று அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற ரேணுகா
அவள் சொல்வதை எல்லாம் கேட்டு வேறு வழியே இல்லாமல் அவள் சொன்னது போலவே விஷ்வாவிற்கும் தனக்கும் இடையில் அனைத்தும் நடந்து முடிந்ததாக பொய் சொல்லி இப்பொழுது திருமணமும் முடிக்க, கண்களை மூடி விஷ்ணு கட்டப்போகும் தாலியை ஏற்றுக் கொள்வதற்காக சுரேகா தயாராக இருக்க, விஷ்ணுவின் முடிவுதான் அங்கு என்ன?
அத்தியாயம் 16:
சுரேகாவின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு சிறிதும் விருப்பமில்லாமல் அமர்ந்திருந்த விஷ்ணு இப்பொழுது அவர்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்ததும் அவனுக்கெனயிருந்த தடை முழுவதும் விலகியது.
விஷ்ணு சுரேகா கழுத்தில் தாலி கட்ட போகிறான் என்று அட்சதை தூவ அனைவரும் காத்துக் கொண்டிருக்க, கெட்டி மேளம் சத்தம் விண்ணை பிளந்தது.
முதல் ஜோடியின் கல்யாணம் முடிந்த சந்தோஷத்தில் அடுத்த ஜோடியை வாழ்த்த அவன் குடும்பத்தில் உள்ள அனைவரும் காத்திருக்க, அனைவரையும் ஒரு முறை பார்த்தவன் சிறிதும் யோசிக்காமல் மனமேடையிலிருந்து எழுந்து விட்டான்.
" எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட ஹ்ம்ம் ஏன் ஒரு இம்மி அளவு கூட விருப்பம் கிடையாது.. ரேணுகா பேரைச் சொல்லி என்னை கார்னர் பண்ணி இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை என் தங்கச்சிக்கு இப்ப கல்யாணம் நடந்துடுச்சி இனிமே யாரும் எதுவும் பண்ண முடியாது என்னை மிரட்ட யாராலயும் முடியாது.. "எனவும் கேட்டுக்கொண்டிருந்த சுரேகாவிற்கு உடலெல்லாம் காந்தியது.
" இங்க பாருங்க அத்தான்.. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன் என்னை மட்டும் நீங்க ஏமாத்தணும்னு நினைச்சீங்கன்னா, இப்ப கூட என் அண்ணன் கிட்ட சொல்லி உங்க தங்கச்சியை உங்ககிட்டயே வாழாவெட்டியா அனுப்பிடுவேன்.."
" அது அவங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சினை எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலை கிடையாது.. ஒரு அண்ணனா ஒரு தங்கச்சிக்கு நான் என்ன பண்ணனுமோ அதை பண்ணிட்டேன் இதுக்கு மேல சேர்ந்து வாழ்வதும் பிரிஞ்சு போறதும் அவங்களோட விருப்பம் அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.." என்றவனது சட்டையை பிடித்து விட்டான் விஷ்வா.
" இங்க பாரு விஷ்ணு நீ சொன்னதை நம்பி தான் நான் உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டினேன்.. நீ மட்டும் இப்படி பாதியிலேயே மணமேடை வரை வந்து எழுந்துப் போனா நாளைக்கு என் தங்கச்சியோட வாழ்க்கை என்னாகும்? அதுக்கு பதில் சொல்லிட்டு நீ இங்கிருந்து போ.."
" அது உன்னோட பிரச்சினை மச்சான்.. உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் சரி இல்லை உன் வீட்டோட வச்சுக்கிட்டாலும் சரி எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலை கிடையாது.. உன் தங்கச்சி என் மேல உண்மையா பாசம் வச்சிருந்தா ஒருவேளை நான் மனசு மாறி அவளை கல்யாணம் பண்ணி இருப்பேன் ஆனா என் தங்கச்சி மனசுல தேவையே இல்லாத எண்ணத்தை விதைச்சு பொய் சொல்லி இந்த கல்யாணத்துக்கு அடிப்போட்டிருக்கிறாள்.."
" என் தங்கச்சி பண்ணது தப்பாவே இருந்துட்டு போகட்டும் எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலை கிடையாது இப்ப மட்டும் நீ என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டலன்னா நான் கொஞ்சம் கூட யோசிக்காம உன் தங்கச்சி கழுத்துல கட்டுன தாலியை அறுத்து எறிஞ்சிடுவேன்.. " என்று இருவருக்கும் வாக்குவாதம் ஆகிப்போக, விஷ்வா சொன்னதை கேட்டு தன் காதல் கணவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கேட்டு உயிரோடு மரிந்து போன ரேணுகாவிற்கு அன்று சுரேகா தன்னிடம் பேசிய நினைவுகள் யாவும் வந்து போனது.
" என்ன சுரேகா நீ இப்படி எல்லாம் பேசுற? என் அண்ணன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறது அவரோட விருப்பம் தானே அதுக்காக குடும்பத்தில் இருக்கிற எல்லாரையும் ஏமாற்றி எல்லாத்துக்கும் மேல நான் உயிருக்கு உயிரா காதலிக்கிற விஷ்வா அத்தானை ஏமாத்தி எங்க ரெண்டு பேருக்கும் இடையில் நடக்காத தப்பை நடந்ததா சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம குடும்பத்துல இருக்க எல்லாரும் எங்கள பத்தி என்ன நினைப்பாங்க சொல்லு.. எல்லாத்துக்கும் மேல நம்ம குடும்பத்தை பற்றி வெளியில் எல்லாரும் என்ன நினைப்பாங்க? "
" சரி நமக்கு நம்ம குடும்ப கவுரவம் தான் ரொம்ப முக்கியம் ரேணுகா நீ சொல்றதையே நான் ஒத்துக்கிறேன்.. நம்ம குடும்பத்துல இருக்க எல்லாரும் சந்தோஷமா இருக்க நீ உன்னோட சந்தோசத்தை தியாகம் பண்ணிடு.. உனக்கும் என் அண்ணனுக்கும் இந்த ஜென்மத்துல கல்யாணம் கண்டிப்பா நடக்காது நடக்கவும் விடமாட்டேன் அதுக்கு மேலயும் இந்த கல்யாணம் நடந்தா நான் செத்துப் போயிடுவேன்.. " என்றதும் அவளது இந்த புதிய அவதாரத்தை கண்டு எதுவும் பேச முடியாத ரேணுகா மௌனியாகிப்போனாள்.
சுரேகாவிடம் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அவள் ஒத்துக் கொள்ளாமல் போக வேறு வழி இல்லாமல் அவள் சொன்னது போலவே விஷ்வாவிடமும் சுரேகா சொன்னதை எடுத்து சொன்னவள் அவனது காலில் விழுந்து விட்டாள்.
" ப்ளீஸ் அத்தான் நான் சொல்ற பொய்க்கு நீங்களும் ஒத்துக்கோங்க என்னால உங்களை இழக்க முடியாது.. நீங்களும் உங்களுக்கு உங்க தங்கச்சி தான் ரொம்ப முக்கியம்னு சொல்லிட்டீங்க ஆனா எங்க அண்ணனுக்கு அப்படி கிடையாது போல.. ப்ளீஸ் அத்தான் ஒத்துக்கோங்க ப்ளீஸ்.." என்று அவள் கெஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கு வந்தாள் சுரேகா.
" இங்க பாருண்ணா நான் உன்கிட்ட இதுவரைக்கும் எதையும் வாய் திறந்தது கேட்டது கிடையாது..நான் வாய் திறந்து கேட்கிற வரை நீ என்னை வச்சதும் கிடையாது இப்போ உன்கிட்ட முதன்முதலா ஒன்னு கேட்கிறேன் தயவு செஞ்சு ரேணுகா சொல்றதுக்கு ஒத்துக்கோ ப்ளீஸ்.. "
" என்னடா குட்டி நீ பேசுற? நம்ம குடும்பத்துல இருக்க எல்லாரும் நம்மளை இப்படியா வளத்தாங்க சொல்லு.. "
" அண்ணா ப்ளீஸ் என் இடத்தில் இருந்து நீ யோசித்துப் பாரு.. ரேணுகாவை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னா உன்னால ஏத்துக்க முடியுமா? "
" கண்டிப்பா இதுக்கு வேற ஒரு சொல்யூஷன் இருக்கும் குட்டி.. நம்ம குடும்பத்துல இருக்க எல்லார்கிட்டயும் சொல்லி விஷ்ணு கிட்ட பேசி உனக்கும் அவனுக்கும் கல்யாணத்தை நான் ஏற்பாடு பண்றேன்.. " என்று விஷ்வா எவ்வளவோ எடுத்து சொல்லியும் எதையும் கேட்கவில்லை சுரேகா.
இறுதியாக தன் அஸ்திரத்தை அவள் பிரயோகப்படுத்தினாள்.
" இங்க பாருங்க அண்ணா இப்ப மட்டும் நீங்க இந்த கல்யாணதுக்கு ஒத்துக்கலைன்னா அதுக்கப்புறம் நான் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் கண்டிப்பா செத்துப் போயிடுவேன்.. விஷ்ணு மேல நான் எவ்வளவு உயிராய் இருக்கேன்னு உனக்கு நல்லா தெரியும்.. உன்னோட உயிர் நான் தான்னு எனக்கு நல்லா தெரியும் உன்னாலே என் உயிரை பிரிய வைக்காத ஒழுங்கா ரேணுகா சொல்றதுக்கு ஒத்துக்கோ.. " என இதற்கு மேல் அவளிடம் என்ன அவன் பேச!
அதன் பிறகு நடந்தது அனைத்தும் அந்த குடும்பத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான செயல்கள் மட்டுமே.
ரேணுகா விஷயத்தை சொன்னதும் சீதா அவளை விளக்கமாத்தால் அடித்து தன் வாயில் வந்த வார்த்தைகளால் வசைப்பாடினார்.
விஷ்வாவையும் லட்சுமி விட்டு வைக்கவில்லை.
அவரது பெற்றோர்கள் இருவரையும் திட்டி தீர்த்து விட்டார்கள்.
" அப்படி என்னடா உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப அவசரம்.. நாங்கதான் எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னோமே இன்னும் ஒரு வருஷத்துக்கு இடையில இந்த கல்யாணம் நடக்காதுன்னு அப்புறம் எதுக்கு அவசரப்பட்டு இந்த மாதிரி பண்ணீங்க.. இந்த குடும்பத்துல இப்படி ஒரு செயல் நடந்தது வெளியில் இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சா நம்மளை பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க சை.. " என்று தலையிலடித்துக் கொண்டார் கணேசன்.
அவரது தோளில் கை வைத்த இந்திரன் " சரி விடுங்க நடந்தது நடந்து போச்சு இதுக்கு மேல
இதைப் பத்தி நாம ஒன்னும் பேச வேண்டாம்.. நம்ம பிள்ளைகளை நாம் அப்படி வளர்க்களையே ஆனால் சூழ்நிலை எல்லாருக்கும் எல்லாமும் ஒரே நேரம் போல இருக்காது.. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆசைப்பட்டு தப்பு பண்ணிட்டாங்க இதுக்கு மேலயும் இந்த தப்பை மூடி மறைக்க முடியாது அதுக்குள்ள கல்யாணத்தை பண்ணி வச்சிட்டா நல்லது.. " என அவர்களாகவே பேசிக் கொண்டிருக்க பூமாதேவி வாயை திறக்கவில்லை.
அவரது மனதுக்குள் பெரும் புயல் ஒன்று வீசிக்கொண்டிருந்தது அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது அல்லவா!
இதையெல்லாம் அங்கே ஒரு ஓரமாக பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.
அவனுக்கு தனது தங்கையை பற்றியும் தெரியும் விஷ்வாவை பற்றியும் தெரியும்.
இருவருமே தவறு செய்யக் கூடியவர்கள் அல்ல.அவர்கள் இருவரும் இப்படி பேசுவதற்கு காரணம் சுரேகா என்பது அவர்கள் இருவரும் மனப்பாடம் செய்தது போல் ஒப்பிப்பதைக் கண்டதுமே தெரிந்து போனது.
" கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருங்க ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தா அப்ப இங்க பெரியவங்களா இருக்குறதுக்கு எங்களுக்கு என்ன மரியாதை.. " என்று கர்ஜனையாக கேட்டார் மாரியப்பன்.
அவரது குரலில் அந்த இடமே குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவிற்கு அமைதியாகிப் போனது.
" இந்த வம்சத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இதுவரைக்கும் நடந்தது கிடையாது.. இவங்க ரெண்டு பேரும் பண்ண தப்புக்கு இந்த குடும்பத்துல இவங்க ரெண்டு பேருக்குமே இனி இடம் கிடையாது.. நீங்க சொல்றது மாதிரி இந்த தப்பு இதுக்கு மேலயும் வளர விடாம இவங்க ரெண்டு பேருக்கும் காதும் காதும் வெச்சது மாதிரி இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிடலாம்.. இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணதுக்கப்புறம் இந்த குடும்பத்தை விட்டு தனியா போயிடனும்.. விஷ்ணு டவுன்ல ஒரு தோப்பு வாங்கி இருக்கிறதா சொல்லிருக்கான்..அதை கவனிச்சுக்கிட்டு அதுல வர வருமானத்துல ஒரு பாதியை மட்டும் இவங்க வச்சுட்டு மிச்ச எல்லாத்தையும் ஆசிரமத்துக்கு கொடுக்கட்டும்.. இதுக்கு யாராவது ஆட்சியபனை தெரிவித்தால் அவங்களும் இந்த வீட்டிலிருந்து தாராளமா வெளியே போகலாம் நாங்கள் தடுக்க மாட்டோம்.. " என்றவர் தேவியை பார்க்க, கணவர் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச விரும்பாத பூமா கண்களை மூடி திறந்தார் சம்மதமாக.
அவரது பேச்சில் இருந்த நியாயம் புரிபட, இரண்டு தாயுள்ளமும் தங்களது பிள்ளைகளை பிரிவதை நினைத்து வருத்தப்பட்டாலும் வேறு வழி இல்லாமல் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை வேண்டும் என்று மாரியப்பன் சொன்னதற்கு எதிர்ப்பேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டார்கள்.
" எங்களோட கல்யாணம் நடக்கணும்னு இங்க இருக்க எல்லாரும் சொன்னதுக்கு நானும் ஒத்துக்கிறேன்.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு அண்ணனா என் தங்கச்சி கல்யாணம் நடக்காம நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்.. என் தங்கச்சிக்கும் விஷ்ணுவுக்கும் அதே மேடையில் கல்யாணம் ஏற்பாடு பண்ணனும் அப்பதான் எங்க கல்யாணம் நடக்கும்.." என்ற விஷ்வாவை விஷ்ணு ஒரு பார்வை பார்க்க அதை தாங்கி எதிர்கொண்டான் விஷ்வா.
" இதுக்கு நான் ஒத்துக்க முடியாதுன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ விஷ்வா? "
" ரொம்ப சிம்பிள் விஷ்ணு உன் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. என் தங்கச்சியை விட எனக்கு வேற யாரும் முக்கியம் கிடையாது அது உன் தங்கச்சியா இருந்தாலும் சரி என் அப்பா அம்மாவா இருந்தாலும் சரி.. " என்றதும் அவன் சட்டையை பிடித்து விட்டான் விஷ்ணு.
" நீ இப்படி உன் தங்கச்சி மேல பாசமா இருக்கிறவன் அப்புறம் எதுக்குடா என் தங்கச்சி மேல பாசம் வைக்கிற மாதிரி நடிச்சு அவளை ஏமாத்துன.."
" எப்படி இருந்தாலும் நீ என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நெனச்சு தான் உன் தங்கச்சியை நான் காதலிச்சேன்.. உன் தங்கச்சியை என்ன வேணாலும் பண்ணிக்கோ எனக்கு எதுவுமே தேவையில்லை.. " என்றதும் ரேணுகா இதயம் சில்லு சில்லாக உடைந்துப் போனது.
தன்னை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காத கணவனே தனக்கு வர வேண்டும் என்று நினைக்கும் காலத்தில் அவளுக்கோ விஷ்வாவை பற்றி தெரிந்தும் கூட அவன் மட்டுமே தனக்கு கணவனாக வரவேண்டும் என்று பேதை மனம் விரும்பியது.
திருமணத்திற்கு பிறகு மாறிவிடுவான் என்று அவளது பெண் மனம் முழுமையாக அவனை நம்பியது.
வேறு வழியில்லாமல் ரேணுகா தன் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.
தான் பிறந்தது முதலே தங்கை மீது பாசத்தை வெளிப்படுத்தா விட்டாலும் அவள் மீது அளவில்லா பிரியம் வைத்திருந்த விஷ்ணுவுக்கு அவளது கண்ணீர் முகத்தை காண சகிக்காமல் தனக்கு விருப்பமே இல்லை என்றாலும் இறுதியாக வேறு வழி இல்லாமல் அந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டான்.
அவன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு தான் அங்கிருந்த அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.
பெரியவர்களுக்கோ தங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு அசிங்கம் நடந்து விட்டதை நினைத்து அசிங்கமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் இப்பொழுது திருமணம் மட்டும் நடந்தால் போதும் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவசர அவசரமாக திருமணத்திற்கு ஒரு வாரத்திற்குள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.
திருமண நாள் நெருங்க நெருங்க விஷ்ணு மனம் சொல்ல முடியாத வேதனையை பிரதிபலித்தது.
எப்பொழுதும் போல் அவன் வேதனைக்கு பலியாகி போனது என்னவோ தென்றல் தான்.
அவளை காணும் போதெல்லாம் வார்த்தைகளால் காயப்படுத்தினான்.
அங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.
அவளது மனதுக்குள் புயல் வீசிக்கொண்டிருக்க,பாவம் அதை அந்த குடும்பத்தில் இருந்த யாரும் அப்பொழுது அறியவில்லை.
பூமாதேவி மனதுக்குள் பல பல திட்டங்கள் போட்டு வைத்திருந்தவர் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மௌனமாக வேடிக்கை மட்டும் பார்த்தார்.
ஊரில் உள்ள அனைவரும் திடீரென திருமணம் வைக்க கேட்ட காரணத்திற்கு பதில் சொல்ல முடியாமல் வேறு ஏதோ சொல்லி சமாளிக்க பெற்றவர்கள் அந்த நிமிடம் நொந்து போனார்கள்.
அந்த நிமிடம் இருவரின் பெற்றோர்களும் இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றதை நினைத்து அசிங்கப்பட்டு தான் போனார்கள்.
சீதா தான் தாங்க முடியாமல் ஒவ்வொரு முறையும் ரேணுகாவை வார்த்தைகளாலும் செயல்களாலும் காயப்படுத்தினார்.
லட்சுமி அவர் பங்குக்கு மகனை விட்டு வைக்கவில்லை.
அதோ இதோ என்று தான் கல்யாண நாளும் வந்து இதோ திருமணமும் முடிய திருமணத்தின் முடிவிலாவது தனக்கு நிம்மதி கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த ரேணுகாவிற்கு இப்பொழுது கூட தன்னை விட்டுக் கொடுத்து பேசும் தன் கணவனை நினைத்து வேதனையுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவனுக்காகவா இவ்வளவு சிரமப்பட்டு செய்யாத தவறை அனுபவித்து அத்தனை பேரும் அசிங்கப்படுத்த வாங்கிக்கொண்டு தன் குடும்பத்தை தலை குனிய வைத்து இந்த திருமணத்தை செய்து கொண்டோம் என்று மனதளவில் நினைக்க வைத்து விட்டான் விஷ்வா.
அதுவரை அவன் மீது வைத்திருந்த அவளது பைத்தியக்காரத்தனமான காதல் காணாமல் தான் போனது.
மாலையை கழட்டி தூக்கி எறிந்தவள் தன் அண்ணன் பக்கத்தில் வந்தாள்.
" இங்க பாருங்கண்ணா.." என்றதும் ரேணுகாவை பார்த்த விஷ்ணு அனைவரிடமும் எதிர்த்து பேசினாலும் தங்கையின் கண்ணீர் முகத்தை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
" தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடு ரேணுகா உனக்காக தான் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்காட்டியும் இவ்வளவு தூரம் வந்தேன் உனக்கு கல்யாணம் நடக்குறதுக்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டு இவளை கல்யாணம் பண்ணிக்கிறது மாதிரி நடிச்சேன்.. சுரேகா என்னோட அத்தை பொண்ணு தான் அவள் மேல எனக்கு நிறைய அன்பு இருக்கு இப்படி ஏமாற்றுவது எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ரேணுகா.. ஆனா அதையும் தாண்டி மனசார அவளை என் மனைவியா என்னால நினைக்க முடியல அப்படியும் ஒரு வேளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா கடைசி வரைக்கும் இவளை நான் என் மனைவியை ஏற்றுக் கொள்ளாட்டி இவளுக்கும் இந்த வாழ்க்கை நரகம் எனக்கும் இந்த வாழ்க்கை நரகம்.. தயவு செஞ்சு யாரும் என்கிட்ட எதுவும் பேச வேண்டாம்.. " என்று நீண்டதொரு விளக்கம் கொடுக்க, திருமணத்திற்கு வந்தவர்கள் தங்களுக்குள்ளே கிசுகிசுக்க ஆரம்பிக்க குடும்பத்திலிருந்த அனைவருக்கும் அவமானத்திற்கு மேல் அவமானத்தை கொடுக்கும் தங்கள் பேரனை எரிச்சலாக பார்க்க பூமாதேவி மட்டும் சந்தோஷமாக பார்த்தார்.
" இல்லண்ணா நீ இவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் இவ ஒரு சுயநலம் பிடிச்சவ.. என் கணவருக்கு அவரோட தங்கை முக்கியம்னா எனக்கு என் அண்ணன் ரொம்ப முக்கியம் செய்யாத தவறுக்கு நான் சிலுவை சுமந்தது மாதிரி நீயும் சிலுவை சுமக்க வேண்டாம்.. இவர் தங்கச்சி கழுத்துல நீ தாலி கட்டினதுக்கப்புறம் தான் எனக்கு வாழ்க்கை கிடைக்கும்னா அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம் எனக்கு என் அண்ணன் தான் முக்கியம் என்னை மன்னித்துவிடு.. இவர் மேல நான் வச்ச பாசத்தால தான் இவர் கண்டிப்பா என்னை கல்யாணம் பண்ணதுக்கப்புறம் மாறிடுவார்னு நான் முழுசா நம்பினேன் ஆனா இப்பவும் இவருக்கு இவரோட தங்கை மட்டுமே முக்கியம் இவரை நம்பி இவரை கல்யாணம் பண்ணி கிட்ட நான் முக்கியம் இல்ல.. போதும்.. " என விஷ்ணுவிற்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
குடும்பத்திலிருந்த பெரியவர்கள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு நியாயம் பேச, சுரேகா இந்த திருமணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க அதையெல்லாம் அமைதியாக பார்த்த பூமாதேவிக்கு அதுவரை இருந்த பொறுமை பறந்து போக, " அத்தனை பேரும் வாயை மூடுங்க.. " என்று ஒரு குரல் கொடுத்தவர் அனைவரும் அமைதியானதும் மேடையில் ஏறியவர் அங்கு வந்திருந்த அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.
" இந்த கல்யாணத்துக்கு வந்து நல்லபடியா நடத்திக் கொடுத்த உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. இப்போதைக்கு எங்க சூழல் சரியில்ல வந்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக சாப்பிட்டு போங்க பூமாதேவி வீட்டு கல்யாணத்தில் யாரும் சாப்பிடாமல் போனதாக இருக்கக் கூடாது.. " எனவும் அவரது பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அங்கிருந்து அனைவரும் அவர்களுக்கு தனிமை கொடுத்துச் செல்ல, சுரேகா அவர்கள் யாரும் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்த சிறிதும் யோசிக்காத பூமா அவளது கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
தன்னை அடித்த அம்மாச்சியை கோபமாக பார்த்த சுரேகா " இப்ப எதுக்காக நீங்க என்ன அடிக்கிறீங்க நியாயமா தப்பு பண்ண உங்க பேரனை தான் அடிக்கணும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி ஏமாத்திட்டார் எனக்கு நியாயம் வேண்டும்.." என்று சொல்ல அவளது மறு கன்னத்தில் யோசிக்காமல் அடித்துவிட்டார்.
" அம்மா இப்ப எதுக்காக நீங்க என் பொண்ணை அடிக்கிறீங்க.. அவ சொல்றதுலையும் நியாயம் இருக்குதானே! விஷ்ணு அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதால தானே இவ்வளவு ஏற்பாடும் பண்ணினோம் அவளுக்கும் மனசுக்குள்ள ஆசையை உண்டாக்கும் போது அவன் அமைதியா தான இருந்தான் எதுவும் சொல்லாமல்.. நீங்க எதுக்காக என் பொண்ணை தண்டிக்கிறீங்க.. " என்ற மகளை கண்ணில் நீருடன் வேதனையாக பார்த்தார் பூமாதேவி.
" உன் மகளுக்கு அவனோட நீ கல்யாணம் பண்ணி வச்சா அவனையே நம்பி இருக்க அவன் பொண்டாட்டிக்கும் பிள்ளைக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன்டி.." என்றதும் அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி விஷ்ணுவுக்கும் சேர்த்து தான்.
தன் குடும்பத்திலிருந்த அனைவரின் முகத்தையும் பார்க்க முடியாமல் பூமாதேவி கண்ணைத் துடைத்துக் கொண்டவர் இந்த விஷயம் தெரியும் பொழுது தன் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் துடிப்பார்கள் என்று தெரிந்ததாலேயே இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருந்த செய்தியை இதற்கு மேலும் மறைக்க முடியாது என்று போட்டு உடைத்து விட்டார்.
" அம்மாடி பிரகல்யா இதுக்கு மேலயும் நீ அமைதியா இருக்க வேண்டாம்.. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் உன் பிள்ளையை கூட்டிட்டு உன் புருஷன் பக்கத்துல வந்து நில்லு இதே மேடையில உனக்கும் அவனுக்கும் கல்யாணம் நடக்கணும்.. " என்றதும் அங்கேயே ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த பிரகல்யா தன் இரு வயது மகனை தூக்கிக் கொண்டு மேடைக்கு ஏறியவள், அங்கு நடப்பதையெல்லாம் அதிர்ச்சியாக அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க அவர்களை வேதனையாக பார்த்தாள்.
அத்தியாயம் 17 :
தன் குழந்தையோடு மேடைக்கு ஏறி வந்தவளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணுவரதன்.
"இப்பவாவது உங்களுக்கு என் ஞாபகம் வந்ததா இல்லையா விஷ்ணு? இத்தனை நாள் என்னையும் நம்ம குழந்தையையும் நீங்க ரொம்பவே தவிக்க விட்டுட்டீங்க இதுக்கு மேலயும் உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது.." என்றாள் பிரகல்யா.
"நீ.." என்று கையை நீட்டியபடி அதிர்ச்சியாக நின்ற விஷ்ணுவின் கைகளைப் பிடித்தாள் அகல்யா.
" நான்தான் விஷ்ணு உங்களோட உயிர்.. " எனவும் ஒன்றுமே புரியாமல் நின்று கொண்டிருந்த விஷ்ணுவுக்கு நிஜமாலுமே ஒன்றும் புரியவில்லை.
அவன் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, பூமாதேவி அவளிடமிருந்த தன் வீட்டு முதல் வாரிசை தன் கைகளில் ஏந்தியவர் கண்களில் நில்லாமல் கண்ணீர் வழிந்தது.
" என்னோட கொள்ளு பேரன் என் குடும்ப வாரிசு.. இத்தனை பேர் இருக்க யாருமே இல்லாத அனாதை போல எங்கேயோ இருக்கான்.. " என்றவர் குழந்தையை தன்னோடு இறுக்கமாக அணைத்து உச்சி முகர்ந்தார்.
அவரது கைகளில் பாந்தமாக பொருந்திப் போனது அவர்களது வீட்டு வாரிசு.
" அம்மாடி அகல்யா விஷ்ணுவுக்காக இத்தனை நாள் நீ எல்லாத்தையும் தியாகம் பண்ணது போதும் இனிமே எல்லாத்தையும் உனக்கு சொந்தமாகிக்கிற நேரம்.. உன் புருஷனை நீ யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டாம் நானே சொல்றேன்.. " என்றதும் அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அழுதுவிட்டாள் பிரகல்யா.
அவளையும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர் தன்னையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த தனது குடும்பத்தினரை பார்த்தவர் " நடந்த எல்லாத்தையும் நான் அப்புறமா உங்க எல்லாருக்கும் தெளிவா சொல்லுறேன்.. இப்ப எல்லாரும் ஒன்னு சேர்ந்து விஷ்ணு நம்ம வீட்டு மருமகள் இரண்டு பேரோட கல்யாணத்தையும் நல்லபடியா நடத்தி வைப்போம்.." என்றதும் அதுவரை அனைத்தையும் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுரேகாவிற்கு மீண்டும் சென்ற கோபம் வந்து அமர்ந்து கொண்டது.
" என்ன அம்மாச்சி நீங்க? உங்களோட சொந்த பேத்தி நான்தானே அப்படி இருக்கும் போது நீங்க எப்படி என் அத்தானுக்கு வேறொரு பொண்ணை அதுவும் போயும் போயும் இந்த வீட்டு வேலைக்காரியை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றீங்க! யாரோ ஒரு பையனை கொண்டுவந்து இந்த வீட்டு பேரக்குழந்தை வாரிசு அப்படி இப்படின்னு ஏதோ ஒளறிக்கிட்டு இருக்கீங்க.. கண்ட கண்ட ஜென்மம் எல்லாம் இந்த வீட்டு வாரிசு ஆயிட முடியுமா? " என்றதும் தென்றல் "ஏய்.." என்று ஒற்றை விரலை நீட்டியபடி கொடுத்த சத்தத்தில் அங்கிருந்து அனைவருமே இவளுக்கு சத்தமாக கூட பேச தெரியுமா? என்பது போல் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
" யாரைப் பார்த்துடி என்ன வார்த்தை சொல்ற! அவன் இந்த குடும்பத்தோட மூத்த வாரிசுடி.. என் புருஷனை உனக்கு சொந்தம் கொண்டாட அத்தனை சீக்கிரம் விட்டுட மாட்டேன்.. அவருக்கே புடிச்சாலும் பிடிக்காட்டியும் அவர் என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.. " என்றவள் தன்னையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவை கண்ணீரோடு பார்த்தவள் அவன் அதிர்ந்த முகத்தை பார்க்க முடியாமல் உதவிக்காக பக்கத்தில் நின்ற கார்த்திக்கை பார்த்தாள்.
அவளது பார்வையை புரிந்து கொண்ட கார்த்திக் ஆதரவாக அவள் பக்கத்தில் வந்து நின்று கொண்டவன் " இங்க பாரு விஷ்ணு நீ நினைக்கிறது மாதிரி தென்றல் ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது உன்னோட மனைவி எதுவா இருந்தாலும் நீ ரொம்ப யோசிக்காத விஷ்ணு அது உன்னோட உயிருக்கே ஆபத்தா போயிடும். ப்ளீஸ் தேவி பாட்டி சொல்றது போல முதல்ல நீ தென்றலை கல்யாணம் பண்ணிக்கோ எல்லாத்தையும் நம்ம அப்புறம் பேசிக்கலாம்.."என விஷ்ணு முடியாது என மறுப்பாக தலையசைக்க, அவனது சட்டையை பிடித்து விட்டான் கார்த்திக்.
" நீ இத்தனை நாளா தேடிக்கிட்டு இருக்க பொண்ணு வேற யாரும் கிடையாதுடா இந்த பொண்ணு பிரகல்யா.. உன் வீட்டில இத்தனை நாளா வேலைக்காரியாய் இருந்த தென்றல் தான் அந்த பொண்ணு.. " என்றதும் விஷ்ணுவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்க, அதன் தாக்கம் தாங்க முடியாமல் அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர நண்பனை தாங்கி பிடித்தான் கார்த்திக்.
அவன் கோலத்தை பார்க்க முடியாமல் தென்றல் வேறு பக்கமாக திரும்பி வாய்விட்டு அழுக, பூமா மனதுக்குள் அழுதாலும் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டவர் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
" விஷ்ணு நான் சொல்றதை கேளு.. நான் உனக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு உனக்கு நம்பிக்கையிருந்தா எதையும் யோசிக்காம தென்றல் கழுத்துல தாலி கட்டு.. உன்னோட குழந்தைக்கு ஒரு அங்கீகாரம் கொடுடா.. நான் வேணும்னா உன் கால்ல கூட விழுகிறேன்.. " அமர்ந்திருந்த அவனது காலில் விழுகப்போக, சடாரென பின்னால் நகர்ந்து சென்றான் விஷ்ணு.
" உன்னோட இந்த குழந்தையை பாரு விஷ்ணு.. பாவம்டா அவ.. உன்னோட குழந்தையை சுமந்துகிட்டு நம்ம இத்தனை பேர் இருக்கும்போது அனாதை மாதிரி இந்த வீட்டு வாரிசு தனியா பிறந்து வளர்ந்து இருக்குடா வேண்டாம் அந்த பொண்ணு இதுவரைக்கும் பட்ட கஷ்டம் எல்லாம் போதும் இதுக்கு மேலயும் அந்த பொண்ணு எந்த கஷ்டமும் பட வேண்டாம்.. " என்றவர் அவனது குழந்தையை அவனிடமே கொடுக்க, விவரம் தெரிந்தவரையில் குழந்தைக்கு அவனது புகைப்படத்தை காட்டி வளர்த்திருந்தார் கல்யாணி.
அதனால் குழந்தைக்கும் தனது தந்தையை கண்டதும் எளிமையாக அடையாளம் கண்டு கொண்ட குழந்தை தனது மழலை வாயை திறந்து "ப்பா.." என்றபடி அவனிடம் தாவ, அந்த குழந்தையை கண்டதுமே அவனுக்கு அது தன் குழந்தை தான் என்பது அதன் முகத்தை வைத்தே தெரிந்து கொண்டவனுக்கு மனதில் ஏதேதோ நினைவுகள் எல்லாம் வந்து போக, அதன் தாக்கம் தாங்க முடியாமல் அப்படியே மயங்கி சரிந்தான்.
மயங்கி விழுந்தவனை தன் மடியில் தாங்கிக் கொண்ட தென்றல் " விஷ்ணு கண்ணை திறந்து என்னை பாருங்க.. மறுபடியும் இதே மாதிரி என்னை ஏமாத்திட்டு போய்டாதீங்க ஏற்கனவே ஒரு தடவை நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் மறுபடியும் என்னால் அந்த கஷ்டத்தை அனுபவிக்க முடியாது நம்ம குழந்தை மட்டும் இல்லாட்டி நான் செத்துப் போயிடுவேன் ப்ளீஸ்.. " என்றவள் அழுத அழுகையை யாராலும் அங்கு காண இயலவில்லை.
" அம்மாடி தென்றல் கவலைப்படாத கண்டிப்பா எல்லாம் நல்லபடியாக நடக்கும்.." என்றார் பூமா.
" இல்ல பாட்டி எனக்கு ரொம்ப பயமாருக்கு.. இவருக்கு ஏதாவது இந்த மாதிரி ஆய்டுமோன்னு பயந்து தான் இதுவரைக்கும் நான் உண்மைய சொல்லாம மறைச்சு வச்சு இந்த வீட்டிலேயே வேலைக்காரியா நடிச்சுக்கிட்டு இருந்தேன்.. நான் நினைச்சது மாதிரியே இப்ப இவருக்கு இந்த மாதிரி ஆயிடுச்சு எனக்கு ரொம்ப பயமாருக்கு பாட்டி.." என்றவளுக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியாத பூமா " கணேசன் என்ன பாத்துகிட்டு இருக்க சட்டுனு காரை ரெடி பண்ணுங்க இவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.. " என்றவர் தென்றலையும் அவர்களோடு சேர்த்தே அனுப்பினார்.
" நானும் அத்தான் கூட போவேன். அவருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா இவளை இந்த அம்மாச்சி யாரையும் நான் விட்டு வைக்க மாட்டேன்.. " என்ற சுரேகா அவளும் அவர்களோடு செல்ல விடாப்படியாக நிற்க, அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்ட பூமாதேவி " இப்ப மட்டும் நீ அமைதியா இல்லாட்டி இங்கேயே ஒரு குடிகாரனா இருந்தாலும் பரவாயில்லைன்னு யாரையாவது ஒருத்தனை பார்த்து கல்யாணம் பண்ணிடுவேன்.. " என்று மிரட்ட, அமைதியாகி போனாள் காரிகை.
" லட்சுமி சீதா நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் புது பொண்ணு மாப்பிள்ளைக்கு தேவையான ஏற்பாடு எல்லாத்தையும் பண்ணுங்க.. " எனவும் அவரை அழுகையுடன் பார்த்த சீதா," என்ன அத்தை நீங்க? என் பையனுக்கு என்ன ஆச்சு? இங்க என்ன நடக்குது? இந்த பொண்ணு யாரு? இந்த பையன் யாரு? இவளை என் மருமகள் இந்த வீட்டு வாரிசுன்னு இவங்க ரெண்டு பேரையும் சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.. "
" நாம எல்லாத்தையும் விளக்கமா வீட்ல போய் பேசலாம் சீதா.. உன் பையனுக்கு எதுவுமில்லை என்னை நம்பு நான் உனக்கு எப்பவுமே அநியாயம் பண்ண மாட்டேன் நீயும் எனக்கு ஒரு பொண்ணு மாதிரி தான் உன்னையும் நான் அப்படி தான் நடத்திக்கிட்டுருக்கேன்.." என்றவர் தன் பேரன் ராகுலை தன் கையில் தூக்கிக்கொண்டவர் கணவனிடம் " இங்க வந்திருக்க எல்லாரையும் நீங்க கவனிச்சுக்கோங்க.. " என்று சொல்லிவிட்டு மருமகனிடம் " புது பொண்ணு மாப்பிள்ளை இரண்டு பேரையும் நீங்க அழைச்சிட்டு வாங்க நான் வேறொரு இடத்துக்கு போயிட்டு அப்புறம் வரேன்.. " என்றார்.
விஷ்வா ரேணுகா தம்பதியை பார்த்தவர் " இந்த குடும்பத்துக்குனு இருந்த மரியாதை மொத்தத்தையும் நீங்க எல்லாருமே சேர்ந்து கெடுத்துட்டீங்க அதைப்பற்றி நம்ம அப்புறம் பேசலாம்.. இப்ப இருக்கிற பிரச்சினையில் நீங்க ரெண்டு பேரும் புதுசா ஒரு பிரச்சனை பண்ணாம அமைதியா வீட்டுக்கு போங்க.. விஷ்வா உன் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டியது என்னோட பொறுப்பு நீ போய் இப்போதைக்கு உன்னோட மனைவியை மட்டும் பார்.." என்றவர் தன் பேரனை தூக்கிக் கொண்டவர் கார்த்திகையும் அழைத்துக் கொண்டு தென்றல் இதற்கு முன்பு சென்ற இடத்திற்கு சென்றார்.
அவரது பேச்சுக்கு எப்பொழுதும் மறுபேச்சு பேசி பழகாத அவரது குடும்பத்தினர் அவர் சொன்னது போலவே அனைவரும் அவர் பிரித்துக் கொடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.
காரில் தன் கணவனுடன் பயணித்துக் கொண்டிருந்த வீட்டு வேலைக்காரியாக நடித்துக் கொண்டிருந்த தென்றலுக்கு விஷ்ணுவை பார்த்ததும் அவனோடு இருந்த கடந்த காலம் யாவும் நினைவுக்கு வந்து போக, அதே நேரம் கார்த்திகேயன் காரில் பயணம் செய்த பூமாதேவிக்கும் முதன்முதலாக தென்றலை சந்தித்தது முதல் அவள் தனிடம் சொன்னதை எல்லாம் நினைத்து பார்க்க ஆரம்பித்தார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு,
" அப்பா உங்களுக்கு என்ன ஆச்சு? என்னை விட்டுப் போயிடாதீங்கப்பா எனக்குன்னு இந்த உலகத்தில் இருக்கிறது நீங்க மட்டும் தான்.. நான் பிறந்தது முதல் அம்மா முகத்தை பார்த்தது கிடையாது எனக்கு தான் அம்மா ஞாபகம் இல்லாம நீங்க என்னை பாத்துக்கிட்டீங்க.. இப்ப நீங்க இல்லாம போனா நான் என்ன பண்ணுவேன்? " என்றாள் பிரகல்யா.
மகளது கையோடு தன் கையையும் அழுத்திப்பிடித்தார் சந்திரசேகர்.
மகளது கண்ணீர் அவர் மனதை பெரிதும் ரணப்படுத்தியது.
தன் வேதனையை அவளிடம் காட்டிக் கொண்டால் இன்னும் அவள் கவலை அதிகமாகும் என்று மனதுக்குள்ளயே தன் கவலையை புதைத்துக் கொண்டவர் வெளியில் எப்போதும் போல் சிரித்தார்.
" என்னடா இது? அகல்யா குட்டிமா.. என் பொண்ணு நல்லா வளந்துட்டீங்க என் உதவி இல்லாம இந்த உலகத்துல வாழ்ற அளவுக்கு பெரிய பொண்ணா ஆயிட்டீங்கன்னு நினைச்சா சின்ன குழந்தை மாதிரி இப்படி அழுதுகிட்டிருக்க? "
" எனக்கு எத்தனை வயசானாலும் நான் உங்களுக்கு பொண்ணு தானே ப்பா..உங்களுக்கு கேன்சர் இருக்குன்னு இத்தனை நாளா ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சு வச்சிருந்தீங்க.. "
" என் குட்டிமாவுக்கு அது தெரிஞ்சா இதே போல தான் தாங்காம அழுவிங்கன்னு எனக்கு தெரியும்.. அதனாலதான் உன்கிட்ட இத்தனை நாளா இந்த உண்மையை சொல்லாமல் மறைத்து வைத்தேன்.. நான் நினைச்சது மாதிரியே நீயும் இப்ப சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டே இருக்க.. " என்றவர் மடியில் தலையை வைத்து அழுது கொண்டிருந்தாள் பிரகல்யா.
மகளது தலையை வருடி கொடுத்தார் சந்திரசேகர்.
" இங்க பாரு குட்டிமா யார் இந்த உலகத்துல இருந்தாலும் இல்லனாலும் அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்க சந்தோஷமா வாழனும்.. உன்னை அப்பா பாதியிலேயே விட்டுட்டு போறேன்னு நினைக்காதடா கண்ணு.. நான் இல்லாமல் போனாலும் என் ஆத்மா எப்பவுமே உன்னை சுத்தி வந்துகிட்டே இருக்கும்.. எத பத்தியும் கவலைப்படாம என் பொண்ணு வாழ்க்கையில் முன்னேறி போகணும் குடும்பம் குழந்தைன்னு மாறிட்டா அதுக்கப்புறம் என் நினைவெல்லாம் உனக்கு வராது.."
" அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா. எப்பவுமே நீங்க தான் எனக்கு முக்கியம் நீங்க இல்லாத ஒரு லைஃபை என்னால நினைச்சு கூட பாக்க முடியாது.. " என்றவளை நினைத்து மனதுக்குள்ளையே அழுத சந்திரசேகர் மகளது எதிர்காலத்தை நினைத்து மனதுக்குள் கவலை கொண்டார்.
சந்திரசேகர் அவரது தாய் தந்தை இருவருக்கும் ஒரே குழந்தைதான். அவர் காதல் மனைவி கவிதா அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். இருவரும் மனமார காதலித்து திருமணம் புரிந்து சந்தோஷமாக வாழ்ந்ததன் அடையலாமாக பெற்றெடுத்த குழந்தை தான் பிரகல்யா.
கவிதா வயிற்றில் குழந்தை உருவானது முதல் ரசித்து தங்கள் குழந்தையின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்க, அவருக்கு பிரசவ வலி வந்து சேர்ந்தது.
தாய் அல்லது சேய் யாரையாவது ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் சொல்லிவிட, சந்திரசேகர் துடித்து போனார்.
தங்களது குழந்தை மீது அவர் உயிரையே வைத்திருந்தாலும் இந்த குழந்தை இல்லை என்றாலும் இன்னொரு குழந்தை கூட பெற்றுக் கொள்ளலாம் ஆனால் காதல் மனைவி இல்லாத ஒரு வாழ்க்கையை அவரால் நினைத்துப் பார்க்க முடியாத காரணத்தால் அவர் மனைவியைத் தான் தேர்ந்தெடுத்தார்.
ஆனால், அவரது மனைவியோ ஒரு தாயாக தனது குழந்தை இந்த பூமியை பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் தனது உயிரை தியாகம் செய்தார்.
இறக்கும் தருவாயில் கணவனை பார்த்து அவரது கையில் குழந்தையை ஒப்படைத்தவர் இறுதியாக கணவனுக்கும் குழந்தைக்கும் ஒரு முத்தத்தை கொடுத்தவர் அத்தோடு விண்ணுலகத்துக்கு பயணமாக, மனைவியின் இறப்பை கண்டு கதறிவிட்டார் சந்திரசேகர்.
அவர் அழுத அழுகையை கண்டு அங்கிருந்த மருத்துவருக்கு முதல் கொண்டு கண்ணீரே வந்துவிட்டது.
அதன் பிறகு ஈம காரியங்கள் எல்லாம் முடிய, மனைவியின் இறப்பையும் தாங்க முடியாமல் கையில் பிறந்த குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்த நேரம் தான் அவர்கள் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காந்திமதி உதவிக்கு வந்தார்.
சந்திரசேகர் காந்திமதியை வேலைக்காரியாக நடத்தாமல் தன் தங்கையாகவே நடத்த, அதன் விளைவு காந்திமதி இறந்த தன் குழந்தையை அகல்யா வடிவத்தில் கண்டவர் தன் குழந்தையை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்ற ஆசை கொண்டாரோ அதேபோல் பிரகல்யாவை வளர்த்தார்.
அவளுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அவளுக்கு தெரிந்த இரண்டு ஜீவன்கள் ஒன்று காந்திமதி மற்றொன்று அவளது தந்தை சந்திரசேகர் மட்டுமே.
ஏனோ அவளுக்கு பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி நண்பர்கள் அத்தனை சரியாக அமையவில்லை.
பிறந்தது முதலே மகளை எதற்காகவும் ஏங்க விடாத சந்திரசேகர் இப்பொழுது கேன்சரால் முக்கால் வாசி பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருப்பதை காந்திமதி மூலமாகத்தான் தெரிந்து கொண்டாள் பிரகல்யா.
அவளால் தன் தந்தை இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் கடந்த ஒரு வாரமாக இப்படித்தான் அழுது கொண்டிருந்தாள்.
மகள் அழுவதை காண சகிக்காத சந்திரசேகர்
" காந்திமதி.. எனக்கடுத்து என் பொண்ணுக்கு இருக்கும் ஒரே சொந்தம் நீ மட்டும் தான்.. என்கிட்ட பணம் கோடி கோடியா இருக்கு ஆனா அத வச்சு என்னால என்னை குணப்படுத்திக்க முடியல..என் பொண்ணோட சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் அவளை நீதான் நல்லபடியா பார்த்துக்கனும் நான் இந்த உலகத்துல இல்லாமல் போனாலும் என் ஆத்மா அவளை சுத்திதான் வரும் அவள் சந்தோஷமா இருக்கிறத எப்பவும் நான் பாக்கணும் அவ சந்தோசமா இருக்கிறது மாதிரி நீ தான் எப்பவும் நடந்துக்கணும்.. " என்றவர் தன் மகள் தலையை வாஞ்சையாக வருடி கொடுக்க, காந்திமதி பிரகல்யாவை சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.
சந்திரசேகர் இறப்பதற்கு முன்பாக தான் ஆரம்பித்த சாம்ராஜ்யம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக மகளுக்கு தன் பிசினஸ் பற்றி அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்.
அவளுக்கு எளிமையாக சொல்லிக் கொடுப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்தது அந்த கம்பெனியில் கடந்த 6 மாதமாக அனைத்தையும் விரல் நுனியில் வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவரதனை தான்.
அனைத்தையும் நொடியில் பற்றிக்கொள்ளும் கற்பூர புத்தி கொண்ட விஷ்ணுவை அவருக்கு மிகவும் பிடிக்கும்.
விஷ்ணு ஒருவனால் மட்டுமே தன் மகளுக்கு திறம்பட அனைத்தையும் சொல்லிக் கொடுக்க முடியும் என்று மகளுக்கு விஷ்ணுவை அறிமுகப்படுத்த, பெரிய காட்டில் தொலைந்தது போல் அவனை பார்த்து விழித்த பிரகல்யாவை கண்டதுமே விஷ்ணு அந்த நிமிடமே வீழ்ந்து போனான் .
அத்தியாயம் 18 :
சிறு பிள்ளை போல ஒன்றும் தெரியாமல் தன் முன்னே நின்று கொண்டிருந்த அகல்யாவை கண்டதும் விஷ்ணுவிற்கு மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றியது.
தன் முதலாளியின் மகளிடம் எல்லை மீறி பழகக் கூடாது என்று அவன் மனம் எச்சரிக்க, மயங்கிய புத்தியை தட்டிக் கொண்டவன் " கவலைப்படாதீங்க சார் நீங்க எதிர்பார்க்கறது மாதிரி மேடம்க்கு எல்லாத்தையும் நான் சொல்லி தரேன்.." என்றதும் அவனை ஒரு புன்னகையுடன் பார்த்த சந்திரசேகர் மகளுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தார்.
இருவருக்கும் பரஸ்பர அறிமுகம் நடக்க, விஷ்ணு தானாகவே முன்வந்து அவளிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக " ஹாய் ஐ அம் விஷ்ணு.. " என்று கை கொடுக்க, முன் பின் தெரியாத ஆண்களிடம் கை கொடுக்கக் கூடாது என்று காந்திமதி சொல்லி வளர்த்திருந்ததால் விஷ்ணுவுக்கு கை கொடுக்காமல் இரு கரங்களையும் ஒன்றாகக் கூப்பி " வணக்கம் சார் என்னோட பேரு பிரகல்யா.. " என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, இந்த முறை என்ன முயற்சித்தும் விஷ்ணுவால் அவளது செயலில் தடுமாறி போன மனதை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
" சரி விஷ்ணு இப்போதைக்கு இது மட்டும் போதும் நான் என் பொண்ணை அழைத்துக்கொண்டு போய் எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் அப்புறமா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கலாம்.. " என்றவர் மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அப்புறமாக, அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவை தோளில் சுரண்டினான் கார்த்திக்.
அவளையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு தன்னை தொந்தரவு செய்த நண்பனை கொலை செய்யுமளவிற்கு வெறி வந்தது.
" ஏன்டா எருமை மாடு இப்ப என்னை தேவையில்லாமல் தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்க? "
" டேய் மச்சான்.. நாம இங்கே வேலை பார்க்க தான் வந்திருக்கோம் அந்த பொண்ண சைட் அடிக்க கிடையாது.. அந்த பொண்ணை பாக்குற பார்வை சரியா இருக்குற மாதிரி எனக்கு தோணலை.. "
" எனக்கெல்லாம் தெரியும் நீ மூடிகிட்டு இரு.."
" யப்பா இந்த உலகத்துல நல்லதுக்கு காலமே இல்ல.. இவனுக்கு நல்லது சொன்னா இவன் என்னையே திட்டுறான். என்னமோ போடா.. " என்று கோபம் கொண்டு அங்கிருந்து செல்வது போல் சென்றான் கார்த்திக்.
நண்பன் அங்கிருந்து சென்ற போது தான் நிம்மதியாக இருந்தது விஷ்ணுவிற்கு.
அவன் சொல்வதிலும் இருந்த நியாயம் அவனுக்கு சுட, அவள் விஷயத்தில் இனி கவனமாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக் கொண்டான்.
" அப்பா கண்டிப்பா இந்த பிசினஸ் எல்லாத்தையும் கத்துக்கிட்டு தான் ஆகணுமா? எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப பயமா இருக்குதுப்பா வேண்டாமே.. "
" அப்படி எல்லாம் சொல்லக்கூடாது கண்ணா இது எல்லாத்தையும் உனக்காக தானே உன் அப்பா உருவாக்குனேன்.. இது எல்லாத்துலையுமே என்னோட ஞாபகங்கள் உனக்கு கிடைக்கும் கண்ணா.. இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.. உன் அப்பா கஷ்டப்பட்டு உருவாக்கின இந்த சாம்ராஜ்யத்தை நீ வேண்டாம்னு சொன்னா நான் இதுக்கு மேலயும் உன்ன வற்புறுத்த மாட்டேன்.. இது எல்லாத்தையும் மொத்தமா வித்துட்டு உன்னோட பேர்ல அமௌன்ட் டெபாசிட் பண்ணிடுறேன்.. என் பொண்ணு எப்பவும் எதுக்காகவும் யார்கிட்டயும் போய் கண்கலங்கி கைகட்டி நிக்கக்கூடாது.. " என்றார் தந்தையாக இருந்த தாய் மனம் கொண்டவர்.
ஆனால், பாவம் அவருக்கு தெரியாதல்லவா அவரது மகள் அனைத்தையும் விட்டுவிட்டு வேலைக்காரியாகத்தான் போய் வாழ போகிறாள் என்பது!!
தந்தை சொல்வதிலிருந்து அவர் அவரது தொழிலை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட பிரகல்யா அதற்கு மேலும் அவரது மனம் கஷ்டப்படும்படி பேசாமல் அவர் சொல்வதற்கு ஒப்புக்கொண்டாள்.
கல்லூரியில் கூட யாரும் இவளிடம் தப்பாக பேசினால் கூட அவர்களுக்கு பதிலடி கொடுக்கத் தெரியாமல் அழுது கொண்டு வீட்டுக்கு வருபவள் இப்பொழுது எப்படி ஒரு பெரிய கம்பெனியில் முதலாளியாக இருந்து அதை திறம்பட நடத்த போகிறோம் என்ற பயம் கொண்டாள்.
" அம்மா.. எனக்கு கம்பெனிக்கு போக ரொம்ப பயமா இருக்கு ஆனா அப்பாகிட்ட சொன்னா அப்பா என்னை போக வேணாம்னு தான் சொல்றாங்க ஆனா அவங்க பேசும்போது அந்த தொழிலை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று எனக்கு தெரியுது.. எனக்கு ரொம்ப பயமா இருக்குது இப்ப நான் என்ன பண்ண போறேன்?" என்றாள் காந்திமதியிடம்.
அவளை கோபமாக முறைத்து பார்த்தார் மதி.
" எதுக்காக உன்னால முடியாதுன்னு நினைக்கிற அகல்யா.. உன்னை நான் தைரியசாலி பொண்ணுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் அப்படித்தான் உன்னையும் வளர்த்தேன்.. ஆனா நீ இப்படி எல்லாத்துக்கும் பயப்படறதை பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுடா.. "
" இல்லம்மா அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.. எனக்கு கொஞ்சம் நர்வசா இருக்கு அவ்வளவுதான்.." என்று வெளியில் சொன்னாலும் அவள் மனதுக்குள் இருந்த பயம் காந்திமதிக்கு புரியாமலில்லை.
" கண்டிப்பா எல்லாத்தையும் கத்துக்கலாம் அகல்யா இந்த உலகத்துல யாரும் எதையும் கத்துகிட்டு பிறப்பது கிடையாது எல்லாருமே தன் திறமையை கண்டுபிடிச்சு அதுக்கு தகுந்தாப்புல வளத்துக்கிறாங்க நீயும் அதே போல வாழ்க்கையில் முன்னேறிப்போ.. " எனவும் அவரை அணைத்து கொண்ட அகல்யா " இப்பதான் எனக்கு கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்குதும்மா எப்படி அங்க போக போறேன்னு பயமா இருந்துச்சு உங்ககிட்ட மனசு விட்டு பேசுனதுக்கப்புறம் கொஞ்சம் நிம்மதியாயிருக்கு.." என்றதும் அவள் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்தார் மதி.
முதன் முதலாக பிறந்த குழந்தை பள்ளிக்கு போவது போல் கம்பெனியில் முதல் நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள் பிரகல்யா.
' கடவுளே நீ தான் எனக்கு உதவி பண்ணனும் அத்தனையும் நான் கத்துகிறதுக்கு உதவி பண்ணு..' என்று மனதுக்குள் கடவுளிடம் மனு கொடுத்துவிட்டு, அங்கு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த காந்திமதியிடம் சொல்லிவிட்டு முதல் நாள் தன் தந்தையோடு கம்பெனிக்கு கிளம்பினாள்.
அவள் முதல் நாள் கம்பெனிக்கு வரப்போவதையே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.
அவனை முன்பே அழைத்த சந்திரசேகர் தன் மகள் பற்றியும் தன்னை பற்றியும் முழுமையாக கூறி விட்டவர், அவனை நம்பி அத்தனை பொறுப்புகளையும் ஒப்படைப்பதாக சொல்லிவிட தன் மேலிருந்த நம்பிக்கையில் அவர் தன்னிடம் அத்தனையும் ஒப்படைக்க அவருக்கு துரோகம் செய்யக்கூடாது என்று பிரகல்யா மீது தோன்றிய ஆசையை தன் மனதுக்குள்ளையே கட்டுப்படுத்திக் கொண்டாலும் ஒவ்வொரு நேரம் ஆசை வெளியே எட்டிப் பார்த்து விடுகிறது.
தனது வாட்சில் நேரத்தையும் அலுவலகத்தின் வாயிலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, அவன் பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தான் இல்லை இல்லை முறைத்து கொண்டிருந்தான் கார்த்திக்.
" ஏன்டா உன்கிட்ட எத்தனை தடவை தான் நானும் சொல்லிக்கொண்டே இருக்கிறது.. அந்தப் பொண்ணு நம்ம முதலாளி தப்பான பார்வை எல்லாம் பார்க்கக்கூடாது அது ரொம்ப தப்பு விஷ்ணு.. "
" எனக்கெல்லாம் தெரியும் மச்சான்.. ஆனால் என் மனசுக்கு தெரிய மாட்டேங்குது பாரு அது அதோட இஷ்டத்துக்கு தான் நடக்கும் போல இருக்கு என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்குது நான் என்ன பண்றதுன்னு நீயே சொல்லு.. "
" போடா இவனே.. " என்று தன் தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டான் கார்த்திக்.
விஷ்ணு எதிர்பார்த்தது போலவே அங்கு வந்து சேர்ந்து விட்டாள் பிரகல்யா.
அவளைக் கண்டதும் அவசரமாக தன் தலை முடியை சரி செய்து கொண்டவன் சட்டையை சரி செய்துவிட்டு அவளுக்காக வாங்கிய பொக்கையை எடுத்துக்கொண்டு அவள் முன் சென்றான்.
" ஹலோ மேடம் வெல்கம்.. " என்று அவளிடம் கொடுக்க, அதை ஒரு விதமான தயக்கத்துடன் தன் கையில் வாங்கிக் கொண்ட அகல்யா " ரொம்ப தேங்க்ஸ்.. " என்றாள் மெல்ல.
அவளது அந்த செயல் அதுவரை சந்தோஷமாக காத்துக் கொண்டிருந்த விஷ்ணுவுக்கு முகத்திலடித்தது போலிருந்தது.
அவளுடனே வந்த அவளது தந்தை "சரி விஷ்ணு நான் போய் என் வேலையை பார்க்கிறேன்.. நீங்க பிரகல்யாவை கூட்டிட்டு போய் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்க ஸ்டார்ட் பண்ணுங்க இன்னைக்கு நாள் நல்லா இருக்கு.." எனவும் அவருக்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்துவிட்டு பிரகல்யாவை அழைத்துக் கொண்டு தனதறைக்குச் சென்றான்.
சிறுபிள்ளை பள்ளிக்குச் செல்லும் பொழுது தன் தாயை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே பள்ளிக்குள் செல்வது போல பிரகல்யா தன் தந்தையை பார்த்துக் கொண்டே விஷ்ணு பின்னால் பயமாக சென்றாள்.
அவளது அந்த செயல் விஷ்ணுவுக்கு எரிச்சலை தான் கொடுத்தது.
"இந்த சேர்ல உக்காருங்க.." எனவும் தடுமாற்றத்துடன் அந்த நாற்காலியில் அவள் அமர, அதில் மேலும் எரிச்சலடைந்தவன் இந்த முறை வாய்க்குள் வைக்காமல் வாயை திறந்து அவன் சொல்லி விட்டான்.
" இங்க பாருங்க மேடம் நான் ஒன்னும் உங்களை கொத்தி திங்க மாட்டேன் கவலைப்படாமல் தைரியமா உட்காருங்க.. ஒருவேளை என்னோட உங்களுக்கு வேலை பார்க்கிறது பிடிக்கலைன்னு சொன்னா வேற யாராவது ஒரு ஸ்டாஃயும் நான் அனுப்பி வைக்கிறேன்.. இல்ல ஆம்பளைங்க கூட உங்களுக்கு வேலை பார்க்கிறது பிடிக்காதுன்னா ஏதாவது ஒரு நல்ல பெண்ணை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.. இது உங்களோட ஆபீஸ் எல்லாத்துக்கும் இப்படி பயந்துகிட்டு இருந்தா எப்படி எங்க எல்லாரையும் நீங்க பேஸ் பண்ணி இந்த பிசினஸை மேலே டெவலப் பண்ண போறீங்கன்னு சொல்லுங்க.. உங்கள நம்பி தானே உங்க அப்பா இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கொடுத்திருக்கிறார்.. பெண்கள் என்பவர்கள் ஆண்களுக்கு சமம்னு எத்தனையோ பேர் சொல்றாங்க ஆனா நீங்க என்னமோ இன்னும் சின்ன பிள்ளை மாதிரி எல்லாத்துக்கும் பயந்து பயந்துகிட்டு இருக்கீங்க.. உங்களோட நேச்சுரல் இதுதானா? இல்லை என்னைப் பார்த்து பயந்துகிட்டு இப்படி நடுங்கறீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.." என்று மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தவனை கண்களை அகலமாக விரித்து அகல்யா பார்க்க, அதுவரை கோபமாக இருந்த விஷ்ணு அவளது கண்களின் அசைவில் வீழ்ந்துப் போனான்.
" நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நான் கிடையாது சார்.. எனக்கு நிஜமாலுமே ரொம்ப பயமாருக்கு.. எனக்கு எல்லா விஷயத்தையும் பார்க்கும்போது ரொம்ப பயமா தான் இருக்கும்.. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார் நான் உண்மையாவே சொல்றேன் எனக்கு பயம் ரொம்ப அதிகமாருக்கு.. நான் அதிகமா பேசுறது எங்க அப்பா கிட்ட எங்க வீட்ல வேலை செஞ்சு என்னை அவங்க பெண்ணா வளர்த்த என்னோட காந்திமதி அம்மா கிட்ட மட்டும் தான்.. இவங்க ரெண்டு பேரையும் தவிர நான் யாருகிட்டயும் தேவையில்லாமல் பேசமாட்டேன் ஒன்னு ரெண்டு வார்த்தை தான் அதிகபட்சமா பேசுவேன்.. இதுதான் நான் காலேஜ்ல கூட நான் யாருகிட்டயும் அதிகமா பேச மாட்டேன்னு எல்லாரும் என்னை ரொம்ப ஓட்டுவாங்க எனக்கு அவங்க அப்படியெல்லாம் பண்ணும்போது ரொம்ப கண்ணீர் வரும் சார்.. நான் அழுகிறது எங்க அப்பாவுக்கு பிடிக்காது நான் அழுவதை பார்த்தால் எங்க அப்பா ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. அப்பா கிட்ட சிரிச்சு பேசிட்டு ரூம்ல போய் உட்கார்ந்து தனியா அழுதுகிட்டிருப்பேன்.. அப்ப எல்லாம் காந்திமதி அம்மா தான் எனக்கு ஆறுதல் சொல்லி இதுக்கெல்லாம் அழக்கூடாதுன்னு தைரியம் சொல்லுவாங்க.. " என்றாள் அழுது கொண்டே.
அவ்வளவு தான் அந்த பேச்சில் சத்தியமாக வீழ்ந்தே போனான் விஷ்ணுவரதன்.
தன் மேல் மரியாதை இல்லாமல் தான் அவள் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது இயல்பே இப்படி தான் என்று தெரிந்த பிறகு அவள் மீது கோபப்பட முடியவில்லை.
அவளது பக்கத்தில் இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன் "ஹே.. இவ்வளவு பெரிய பொண்ணா இருந்துகிட்டு இப்படி சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டிருக்க? இப்ப உள்ள சின்ன புள்ளைங்க எல்லாம் உன்னை பார்த்தா கண்டிப்பா விழுந்து விழுந்து சிரிப்பாங்க.. இப்ப எல்லாருமே தைரியசாலியா இருக்க இந்த காலத்துல நீ மட்டும் இப்படி அதுவும் சந்திரசேகர் சாரோட பொண்ணா இருந்துகிட்டு இப்படி இருக்குறியேமா!"
" என்ன சார் நீங்க என்ன கிண்டல் பண்றது மாதிரி தெரியுது.. இதுக்குத்தான் நான் யார்கிட்டயும் வாய்விட்டு பேசுவதே கிடையாது யார்கிட்டயாவது பேசுனா என்னோட வீக்னெஸ் தெரிஞ்சுக்கிட்டு இப்படி தான் என்னை மட்டமா பேசுவாங்க அதனால தான் நான் யாருகிட்டயும் பேசுறது கிடையாது.. "
" ஐயையோ நீ நினைக்கிறது மாதிரி எல்லாம் நான் எதுவும் தப்பா பேசல.. நான் பேசினது ஏதாவது உன் மனசை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்குறேன்மா.. "
" நான் என்ன உங்கள விட வயசுல பெரிய பொண்ணா? என்ன போய் அம்மா அம்மானு சொல்றீங்க!" என்றதும் ஒன்றும் புரியாமல் தன் தலையை சொரிந்து கொண்ட விஷ்ணு அப்போதுதான் அவளை தான் அழைக்க மா என்ற வார்த்தையை பயன்படுத்துவது புரிந்தது.
தன் தங்கையை சுரேகாவை என்று யாரையும் பேரை சொல்லியே அழைத்த தான் இந்த பெண்ணை மட்டும் ஏன் வாமா போமா என்று பாசமாக அழைக்கிறோம் என்று மனதுக்குள்ளே கேட்டுக் கொண்டவனுக்கு ஏதேதோ அர்த்தங்கள் கிடைத்தன.
" நீங்க என்ன விட சின்ன பொண்ணா இருக்கீங்க அதனாலதான்.. சரி உங்களை இனிமேல் நான் மேடம்னு கூப்பிடவா? " என்றதும் முகத்தை அஷ்டகோணலாக வைத்தாள் அகல்யா.
" அப்படி எல்லாம் எதுவும் சொல்லல சார்.. நான் ஏதாவது பேச போய் அது தப்பா போயிட வேண்டாம் நீங்க எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடுங்க நான் எதுவும் சொல்லல.." என்றதும் அவளை அள்ளியணைத்து 'நான் இருக்கிறேன் கவலைப்படாதே' என்று சொல்லத் துடித்த மனதை சிரமப்பட்டு அடக்கி கொண்டான் விஷ்ணுவரதன்.
" சரி நம்ம பிரண்ட்ஸா இருக்கலாம் இன்னைலருந்து நம்ம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்.. என்ன விட நீ குட்டி பொண்ணா இருக்க அதனால நான் வா போனு கூப்பிடுறேன்.. "
" சரிங்க சார் எனக்கும் இந்த சார்னு கூப்பிடறதுக்கு ஒரு மாதிரி இருக்குது எனக்குன்னு கூட பொறந்தது யாருமில்லை.." என்றதும் உஷாரான விஷ்ணு " நான் உங்களை விட வயசுல பெரியவன் தான் அதுக்காக அண்ணன்னு கூப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.. எனக்கு கூட பொறந்த தங்கச்சி ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கு அவள் மட்டும் தான் என்னை அண்ணன்னு கூப்பிடனும் வேற யாராவது கூப்பிட்டால் கோபம் வந்துடும் அதனால நீங்க வேணும்னா என்னை விஷ்ணுன்னு பேர் சொல்லி கூப்பிடுங்க.. "
" உங்களுக்கு கூட பொறந்த தங்கச்சி எல்லாம் இருக்காங்களா? "
" ஏன் என்னை பார்த்தா எப்படி இருக்குது உங்களுக்கு? எனக்குன்னு யாருமே இல்லாத அனாதை என்று என்னை நினைத்தீர்களா!" சட்டென கேட்டு விட்டான்.
அவன் அப்படி கேட்டதும் அகல்யாவுக்கு அழுகை வந்துவிட்டது.
அவளது கண்ணீரைக் கண்ட பிறகே விஷ்ணுவுக்கு தான் என்ன பேசினோம் என்பது உரைத்தது.
" சாரி சாரி அகல்யா.. சத்தியமா நான் வேணும்னே உன் மனதை கஷ்டப்படுத்துற மாதிரி பேசல ஏதோ ஒரு அவசரத்தில் பேசிட்டேன் தயவு செஞ்சு என்னை மன்னித்துவிடு.. "
"பரவால்ல எதுக்காக என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க நீங்க சொல்றது மாதிரி எனக்குன்னு யாரும் கிடையாது எங்க அப்பாவை தவிர.. ஆனா அவங்களும் இன்னும் கொஞ்ச நாள்ல என்னை விட்டுட்டு போயிடுவாங்க அதுக்கப்புறம் நீங்க சொல்றது மாதிரி நான் அனாதை தான்.." என்றவள் தந்தை அதிகபட்சமாக இன்னும் சில காலங்கள் மட்டுமே தன்னோடு இருப்பார் என்று உணர்ந்து கொண்டவளுக்கு இன்னும் கண்ணீர் அதிகமானது.
அவளது கண்ணீரை கண்ட விஷ்ணுவுக்கு அதற்கு மேல் மனது தாங்காமல் அவள் பக்கத்தில் சென்றவன் தாய்மை மேலோங்க அவளை தன் மார்போடு அணைத்து தலையை மென்மையாக வருடிக் கொடுக்க, மகளை பார்க்க வந்த சந்திரசேகர் அவர்களது செயலை பார்த்துவிட்டு சத்தம் போடாமல் மீண்டும் அவர் அறைக்கு சென்று விட்டார்.
சிறிது நேரம் அவனோடு ஒன்றிப்போயிருந்த அகல்யா தான் ஒரு ஆண்மகனை அணைத்துக் கொண்டு நிற்கிறோம் என்ற பதட்டத்தோடு அவனிடமிருந்து படாரென விலகினாள்.
" இட்ஸ் ஓகேமா.. இப்ப எதுக்காக இவ்வளவு பதட்டம்.. சத்தியமா நான் உன்னை தப்பான நோக்கத்துல கட்டி பிடிக்கல ஒரு அம்மாவா ஒரு தாய்மை உணர்வோடு தான் நான் உன்னை அணைத்துக் கொண்டேன்.. உன்ன பார்க்கும்போது நீ அன்புக்காக ஏங்குகிற எவ்வளவு பெரிய குழந்தைன்னு நல்லாவே தெரியுது.. உங்க அப்பாவோட நிலைமை எனக்கு நல்லாவே தெரியும் எல்லாத்தையும் உங்க அப்பா என்கிட்ட சொல்லிட்டார்.. " என்றதும் முகம் கசங்க அவனைப் பார்த்தாள்.
அவள் கசங்கிய முகத்தை பார்க்க முடியாமல் தனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
அவளது கண்கள் அவனை பெரிதும் இம்சித்தது.
" கவலைப்படாத எதுவும் நடக்க கூடாதுன்னு வேண்டிக்குவோம்.. நான் இந்த கம்பெனில வேலைக்கு வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது.. உங்க அப்பாவோட பெருந்தன்மை நல்ல மனசு யாருக்கும் வராது.. நாங்களும் ரொம்ப பெரிய குடும்பம் தான் ஆனா என்னோட சுய சம்பாத்தியத்தில் நான் வாழனும்னு புதுசா எதையாவது கத்துக்கணும்னு தான் இங்க வேலைக்கு சேர்ந்தேன்.. வேலைக்கு சேர்ந்ததிலிருந்து உங்க அப்பா என்னை அவர் சொந்தம் போல தான் பாத்துக்கிறார்.. இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும் அது உங்க அப்பாகிட்ட இருக்கு அந்த நல்ல மனசுக்கு அவர் நல்லா இருப்பார் கவலைப்படாத.. " என்று அவளை ஆறுதல் படுத்தினான்.
" சரி இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்ட வரைக்கும் மட்டும் போதும் நான் போய் உங்க அப்பாவை பார்த்துட்டு வந்துடறேன் .. நீ இங்கேயே இருந்தாலும் சரி இல்ல வெளியில போயி மத்தவங்களோட பேசி பழகினாலும் சரி.. சிம்பிளான ஒரு விஷயம் எல்லாரையும் நீ உன்கிட்ட வேலை பாக்குறவங்களை பார்க்காம பிரண்ட்ஸா பார்த்தா கண்டிப்பா எல்லாமே ஈஸியாக இருக்கும் அவங்களும் உன்னை முதலாளியா பாக்காம அவங்கள்ல ஒருத்தர பாப்பாங்க உனக்கும் அவங்க கிட்ட எல்லாத்தையும் பேச ஈஸியா இருக்கும் உங்க அப்பா எல்லார்கிட்டயும் அப்படித்தான் நடந்தாங்க..ஹி இஸ் ஏ பிரண்ட்லி பர்சன்.. " என்றவன் ஒரு புன்னகையோடு அவளை கடந்தான்.
தன்னை பற்றி சரியாக புரிந்து கொண்டு தனக்காக பேசுபவனை புன்னகையோடு பார்த்தவள் மனதிற்குள் முதன்முதலாக அவன் மீது ஒரு சலனம்.
" எக்ஸ்க்யூஸ் மீ சார் உள்ளே வரலாமா? " என்றான் விஷ்ணு.
அவர்கள் இருவரையும் பற்றி யோசித்து கொண்டிருந்த சந்திரசேகர் விஷ்ணுவின் குரலில் நினைவுக்கு வந்தவர் " உள்ள வாங்க மிஸ்டர் விஷ்ணுவரதன்.. " என்றவர் அவனை கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்களை மூடி திறந்தவர் சிறிதும் யோசிக்காமல் " என் பொண்ண உங்ககிட்ட தொழில் கத்துக்க அனுப்பினா அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு நிக்கிறீங்க உங்களை நம்பி தானே விஷ்ணு அவளை அனுப்பி வச்சேன்.. சின்ன குழந்தை அவள் மனசுல இப்படி ஒரு நஞ்சை விதைத்திடாதீர்கள்.. அவளால ஏமாற்றம் தாங்க முடியாது என் பொண்ணு ரொம்ப பூஞ்சை மனம் கொண்டவள்.. அவள் நல்லா இருக்கணும் ப்ளீஸ்.. "எதுவும் பேச முடியாமல் என்றதும் தலையை குனிந்து கொண்டான்.
அத்தியாயம் 19 :
" உங்களை நம்பி தானே விஷ்ணு என் பெண்ணை அனுப்பி வச்சேன்.. நீங்களே இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.." என்றவர் குரலில் எல்லையில்லாத சோகம் பிரதிபலித்தது.
" சத்தியமா நீங்க நினைக்கிறது மாதிரி நான் தப்பா எல்லாம் கட்டி பிடிக்கல சார்..உங்களோட பொண்ணு எல்லாத்துக்கும் ரொம்ப பயப்படுது.. அவங்களை பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு ஒரு தாய் ஸ்தானத்துல தான் அவங்களை அணைத்துக் கொண்டேன்.. என்னதான் இருந்தாலும் நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு அவங்க அனுமதியில்லாம ஒரு பொண்ணை தொடறது ரொம்ப பெரிய தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க இதுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்.. " என்றான் பணிவாக.
அவனது பணிவான குரலில் சந்திரசேகர் மனதுக்குள் இருந்த கோபம் விலகிப்போனது.
தனது கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டியவர் சோர்வாக நாற்காலியில் பின்னால் சாய்ந்தமர்ந்தார்.
" உண்மையாலுமே என்னோட பொண்ணு ரொம்ப பாவம் விஷ்ணு.. பிறந்தது முதல் அம்மா பாசம் கிடைக்காமல் வளர்ந்தா.. வளர்ந்ததுக்கப்புறம் உலகம் தெரியாமல் இன்னும் சின்ன குழந்தை மாதிரியே இருக்கா.. அந்த கடவுள் என் மகளோட கல்யாணத்தையோ என் பேரன் பேத்தி எதையும் பார்க்க விடாமல் என்னை அழைத்து கொள்ள முடிவு பண்ணிட்டார் போல.. என் பொண்ணு எப்படி இந்த உலகத்துல தனியா வாழ போறான்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு விஷ்ணு.. கடந்த ஒரு வருஷமா உன்னை பார்க்கிறேன் உன்னை பத்தி தெரியும் அதனால தான் நான் எதையும் தப்பா நினைக்கல.. இதே மாதிரி உலகத்துல இருக்குற எல்லா ஆண்களும் இருக்க மாட்டாங்களே யாராவது என் பொண்ணு கிட்ட பழகி ஏதாவது பண்ணிட்டா நான் என்ன பண்ணுவேன்.. அவளை கல்யாணம் பண்ணிக்க போற பையன் அவளை ஏமாத்திட்டா நான் என்ன பண்ணுவேன் இப்படி பல பல யோசனைகள் என்னை ரொம்ப யோசிக்க வைக்கிறது.. நீதான் என் பொண்ணுக்கு ஒரு நல்ல வழி காட்டனும் அவளை தைரியமான பொண்ணா மாத்தணும்.. " என்றவர் மகளை நினைத்து கண்களில் வழிந்த கண்ணீரை சுண்டி எறிந்தார்.
ஒரு சக மனிதனாக அவரை நினைத்து கவலை கொண்டான் விஷ்ணுவரதன்.
" கவலைப்படாதீங்க சார் நீங்க நினைக்கிற மாதிரியே உங்க பொண்ண நான் தைரியசாலியா மாத்திடுவேன் அது ஒன்றும் பெரிய பிரச்சினை கிடையாது.. " என்றான் ஆதரவாக.
அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தவன் அங்கு தயங்கி தயங்கி கார்த்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த அகல்யாவை இரக்கத்துடன் பார்த்தான்.
அந்த வேலைப்பற்றி கார்த்திக் அவளுக்கு என்ன தெரியும் என்று கேட்டுக் கொண்டிருக்க,அவளோ தெரிந்த ஒன்று இரண்டு பதிலை தயக்கமாக தான் கூறிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் பக்கத்தில் இவன் வரவும், அவனைக் கண்டு சினேகமாக புன்னகை புரிந்த பிரகல்யா " அப்ப சரிங்கண்ணா.. விஷ்ணு நான் போயிட்டு வரேன்.. " என்றவள் சிநேகமாக அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றாள்.
" என்னடா இது? என் மச்சான் தானா இது? ஒரு பொண்ணு அவனை அண்ணன்னு கூப்பிடும் போது பாத்துட்டு சிரிச்சுகிட்டு நிக்கிறானே ஆச்சரியமாருக்கு.." என்ற நண்பனை வேதனையாக பார்த்தான் கார்த்திக்.
" அந்தப் பொண்ண பார்க்கறதுக்கு ரொம்ப பாவமா இருக்கு மச்சான்.. நம்ம கிட்ட பேசும்போது ரொம்பவே பயந்து பயந்து பேசுது. அந்த பொண்ணு ரொம்ப பயந்த சுபாவம் கொண்ட பொண்ணு மாதிரி தெரியுது.. எனக்கும் எங்க வீட்ல அப்பா அம்மாவை தவிர யாருமே இல்ல என் தங்கச்சி சின்ன வயசுலயே இறந்து போயிட்டா.. நானும் ஒரே பையன் தான் எனக்கு தங்கச்சி இல்லாத குறையை தீர்க்க கடவுளே இந்த பொண்ணை என் கண்ணுல காமிச்சிருக்கார் போல இருக்குதுடா.. என் நண்பன் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த பொண்ணு எப்படியும் வருங்காலத்தில் எனக்கு தங்கச்சி தானே!" என அவனை ஆச்சரியமாக பார்த்த விஷ்ணு நண்பன் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலையை திருப்பிக் கொண்டான்.
" டேய் மச்சான் சொல்லிட்டு செய்டா எதுவா இருந்தாலும் பயம்மா இருக்கு.." என்றவன் நெஞ்சை பிடித்துக்கொள்ள, அவனை முறைத்து பார்த்தான் விஷ்ணு.
இப்படியே சந்தோஷமாக அவர்கள் நாட்கள் கழிய, பிரகல்யா விஷ்ணுவிடம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் கற்றுக் கொண்டு வெளி உலகத்தையும் நன்றாக தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
அவள் ஏதாவது தவறு செய்து விட்டோ அல்லது தெரியாமல் ஏதாவது தடுமாறும் பொழுது பயந்து கொண்டு நிற்பவளை
இப்படி பயப்பட வேண்டாம் என்று அவளுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்க, தனது தந்தைக்கு அடுத்து தன் மீது பாசமாக இருக்கும் விஷ்ணுவை அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அவளுடைய கூட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து அவளது தந்தையிடம் பேசி பழகுவது போலவே விஷ்ணுவிடமும் கார்த்திக்கிடமும் மட்டும் தன் மனம் விட்டு பழகினாள்.
சந்திரசேகர்க்கு கூட தனது மகளை நினைத்து ஆச்சரியம் தான்.
முதன்முதலாக அவளை கம்பெனிக்கு அழைத்துக் கொண்டு வரும் பொழுது பயந்து கொண்டே வந்த பெண் இப்பொழுது எப்போதடா கம்பெனிக்கு செல்வோம் என்று ஆர்வமாக, கிளம்புவதை கண்டவருக்கு அத்தனை மகிழ்ச்சி தான்.
தன் மகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்தை தெரிந்து கொண்டு தனது கூட்டிலிருந்து வெளியில் வந்து அனைத்தையும் எப்படி கையாள வேண்டும்? என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்வதை கண்டவருக்கும் இப்பொழுது மரணத்தை கண்டு கூட சிறிதும் பயமில்லை .
தான் உயிரோடு இருக்கும் போதே தனது மகளுக்கு ஒரு நல்ல திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக நினைத்தார்.
" அப்பா நான் ரொம்ப நேரமா உங்ககிட்ட கேட்கிறேன் என்ன யோசிச்சிகிட்டே இருக்கீங்க? " என்றாள் பிரகல்யா அவரது முன்பு தனது கையை ஆட்டி.
" என்னடா கண்ணா?"
" நான் ரொம்ப நேரமா உங்களை கூப்பிட்டுக்கிட்டேருக்கேன் நீங்க என்னை பார்க்காமல் எதையோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்கப்பா ஆபீஸ்க்கு கிளம்பாம இன்னும் உட்கார்ந்திருக்கீங்க லேட் ஆகலையா? " என்றதும் மகளை ஒரு புன்சிரிப்புடன் பார்த்த சந்திரசேகர்.
அவர் சிரிக்கவும் தனது இடுப்பில் இரு கைகளையும் வைத்து முறைத்து பார்த்த பிரகல்யா " இப்ப எதுக்காக என்னை பார்த்து சிரிக்கிறீங்க? " என்றாள் கோபமாக.
" என்னோட குட்டி பொண்ணு இப்போ ரொம்ப பெரிய பொண்ணா வளர்ந்துட்டா.. இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த ஆறு மாசத்துல என் பொண்ணு எவ்வளவு மாறிப்போயிருக்கிறாள்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா தங்கம்.. இப்பதான் உனக்கு எல்லாமே புரியுது இனிமே நான் செத்தா கூட எனக்கு சந்தோசம் தான்.. " என்றதும் அழுகையுடன் அவரது பக்கத்தில் அமர்ந்து விட்டாள்.
மகளது கண்ணீரைக் கண்டு சந்திரசேகருக்கும் கண்ணீர் வந்தது.
தந்தை மகள் இருவரும் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு சந்தோஷமடைந்த காந்திமதி அவர்கள் இருவரும் அழுவதை கண்டதும் அவருக்கு மனம் பாரமாகிப் போனது.
ஏனோ கடவுள் நன்றாக வாழ வேண்டும் என ஆசைப்படுபவரை வாழ விடாமல் பாதியிலேயே அழைத்துக் கொண்டு செல்வது தான் உலகம் நியதியோ!! என்று நினைத்துக் கொண்டார்.
" எதுக்குப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு எதுவும் ஆகாது நம்ம டாக்டரை பார்க்கலாம்.. "
" சாரிடா கண்ணம்மா காலையிலேயே ரொம்ப சந்தோஷமா இருந்த.. உன் மனச கஷ்டப்படுறது மாதிரி நான் தேவையில்லாமல் பேசிட்டேன் என்னை மன்னிச்சிடு.. சரி சரி நீ ஆசைப்பட்டது மாதிரி நம்ம ரெண்டு பேரும் ஆபீஸ் போகலாம் கிளம்பு கிளம்பு.. " என்றவர் கண்ணீரை சுண்டி எரிந்து விட்டு வலுக்கட்டாயமாக வரமாட்டேன் என்ற மகளை அழைத்துக்கொண்டு காந்திமதியிடம் சொல்லிவிட்டு சென்றார்.
காரில் வரும் வழி முழுவதும் அவளது கண்களில் கண்ணீர் மட்டும் தான்.
தனது தந்தை தன்னுடன் இன்னும் சொரூப நாட்கள் மட்டுமே இருப்பார் என்று நினைத்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
காரில் செல்லும் வழியெல்லாம் சந்திரசேகர் மகளை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்க்க அவள் சிறிதும் சமாதானமாகவில்லை.
ஆபீஸ் வந்ததும் தந்தையை பார்க்க முடியாமல் வேகமாக கதவை திறந்து கொண்டு அவளது அறைக்குச் செல்ல, எப்போதும் போல அவள் வரவை பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷ்ணு தன்னை கண்டதும் ஒரு புன்னகை புரிந்து விட்டு குட் மார்னிங் சொல்லிவிட்டு செல்பவள் இப்பொழுது தான் அவளுக்காக காத்திருக்க, அதை கண்டுகொள்ளாமல் அழுகையுடன் அவளது அறைக்குள் செல்வதை கண்டு யோசனையானன்.
அவளுக்கு பின்னால் வந்த சந்திரசேகர் முகம் சரி இல்லாததை கண்டு, யோசித்துப் பார்த்தவன் மனது பாரமாகிப்போனது.
வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சந்திரசேகரை பார்ப்பதற்காக விரைந்தான்.
செல்லும் வழியில் அவனை தடுத்து நிறுத்திய கார்த்திக் " இப்ப எதுக்காக மச்சான் என் தங்கச்சி, சார் ரெண்டு பேரும் அழுதுட்டு போறாங்க.. அவங்க முகமே சரியில்லை.. "என்று கேட்டான்.
" நான் எல்லாத்தையும் உன்கிட்ட வந்து அப்புறமா விளக்கமா சொல்றேன் கார்த்திக் இப்போ என்னை போக விடு.. " என்றவன் சந்திரசேகர் அறைக்கு வந்தவன் அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.
" என்னாச்சு சார் எதுக்காக உங்க முகம் சரியில்லை? உங்க பொண்ணு அழுதுகிட்டே அவங்க ரூம்குள்ள போறாங்க ஏதாவது பிரச்சனையா!"
" உக்காரு விஷ்ணு உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.. " என்றவர் அவனுக்கு தெரியாமல் கண்ணை துடைத்து விட்டு வலுக்கட்டாயமாக ஒரு புன்னகை புரிந்தார்.
அவரது புன்னகைக்கு பின்னால் இருந்த ஆயிரமாயிரம் வேதனை அவர் சொல்லாமலே விஷ்ணுவுக்கு புரிந்தது.
" இப்ப நான் கடைசி ஸ்டேஜ்ல இருக்கேன் விஷ்ணு.. அதிகபட்சமா இன்னும் என்னோட நாட்கள் எத்தனைன்னு எனக்கே தெரியல.. என் மகள் நான் ஆசைப்பட்டது மாதிரியே அத்தனையும் கத்துக்கிட்டா.. உலகம் தெரியாமல் இருந்தவளை உன்கிட்ட கொண்டு வந்து விட்டது ரொம்ப நல்லதா போச்சு இப்ப எல்லாத்தையும் எப்படி பிரிச்சு பார்க்கிறது என்கிற பக்குவம் அவளுக்கு வந்துடுச்சு.. அந்த கடவுளுக்கு தான் நான் நன்றி சொல்லணும் இல்லாட்டி நீ எங்க வாழ்க்கையில் வந்திருக்க மாட்ட.. " என்றவர் சிறிது தயக்கமாக அவன் முகத்தை பார்க்க, அவர் சொன்னதைக் கேட்டு கவலையுடன் அவரைப் பார்த்த விஷ்ணு தன்னை தயக்கமாக பார்ப்பதைக் கண்டு கண்கள் இடுங்கின.
" எதுவாயிருந்தாலும் சொல்லுங்க சார்.. என்னால முடிஞ்சா நான் கட்டாயம் செய்றேன்.. "
" அது வந்து விஷ்ணு என் மகள் கல்யாணத்தை நான் பார்க்க ஆசைப்படுறேன் என் உயிர் போறதுக்குள்ள என் மகள் மாலையும் கழுத்துமாயிருக்கணும்.. " என்றதும் தூக்கி வாரிப்போட்டது விஷ்ணுவுக்கு.
இந்த இடைப்பட்ட நாட்களில் அவளுக்கு தொழிலை மட்டுமல்ல அவனது காதலையும் சேர்த்தே ஊட்டி வளர்த்திருந்தான்.
தன் காதல் கருவிலேயே அழிந்து விடுமோ என்று பயமாக அவரைப் பார்த்தான்.
மனதுக்குள் ஆழிப்பேரலையாக சுழற்றி அடித்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாதவன் " எதுவாயிருந்தாலும் சொல்லுங்க சார் நல்லபடியா செஞ்சிடலாம் மாப்பிள்ளை பார்க்கலாமா? இல்லை ஏற்கனவே மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாச்சு கல்யாண ஏற்பாடு செய்யணுமா?எதுவாயிருந்தாலும் சொல்லுங்க சீரும் சிறப்புமா நம்ம ஆளுங்க எல்லாரையும் வச்சு செஞ்சுடலாம்.. " என்றான் சுரத்தே இல்லாமல்.
" இல்ல விஷ்ணு.. இன்னும் நான் யாரையும் பார்க்கலை அது சம்மதமா தான் பேசணும்.. " என்றதும் அதுவரை கவலையாக இருந்தவன் தன்னிடம் அவர் பேச வேண்டும் என்று சொன்ன பிறகு ஆர்வமாக அவரை பார்க்கலானான்.
" நீ என் மகளை காதலிக்கிற விஷயம் எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடியே தெரியும் அதே மாதிரி என் மகளுக்கும் உன் மேல ஒரு சின்ன விருப்பம் இருக்குது.. என் மகள் யாரையோ ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எனக்கு தெரிஞ்ச உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம் அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்கு உனக்கும் அவள் பிடிச்சிருக்கு உங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறதுக்கு எனக்கு விருப்பமில்லை.. உங்க வீட்ல பேசி சீக்கிரமா உன்னால இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண முடியுமாப்பா.. ஏனோ என்னால ரொம்ப நாட்கள் இந்த உலகத்துல இனி வாழ முடியாது.. என் மகளோட கல்யாணத்தை பார்க்கிறது தான் என் கடைசி ஆசை அதை தயவு செய்து நிறைவேற்றி வை விஷ்ணு.. " என்றவர் என்ன முயற்சித்தும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
அவர் சொன்னதைக் கேட்டு விஷ்ணுவுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் அவர் கடைசி காலத்தில் இருப்பதை கேட்டு மனதுக்கு பாரமாகி தான் போனது.
" நீங்க கவலைப்படாதீங்க சார் உங்க பொண்ணு நல்லபடியா இல்லை இல்லை என் மனைவியை நல்லபடியாக வைத்துக் கொள்வது என் பொறுப்பு.. நான் சொல்லாமலேயே என் மனசை புரிந்துகொண்டு உங்க மகள எனக்கு தர்றீங்க கண்டிப்பா அவளை உங்களவுக்கு பாத்துக்க முடியலனாலும் என்னால முடிஞ்சளவுக்கு சந்தோஷமா பாத்துக்குவேன்.."
" எனக்கு இது போதும் விஷ்ணு உனக்கு ரொம்ப ரொம்ப நன்றி..
" எதுக்கு சார் என்கிட்ட போய் இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டுருக்கீங்க? "
" என்னப்பா இதுக்கப்புறம் சார்னு கூப்பிட்டு என்னை ஏன் தள்ளி வைக்கிற மாமான்னு உரிமையோடு கூப்பிடு.. உன்னை பத்தின டீடைல்ஸ் எல்லாம் பார்த்து உன் ஊருக்குள்ள கூட விசாரிச்சுட்டு வந்துட்டேன்.. உன் குடும்பம் ரொம்ப பெரிய குடும்பமாமே.. பாவம் என் பொண்ணு வளர்ந்ததிலிருந்து தனியாகத்தான் இருக்கிறாள் இப்படி ஒரு கூட்டு குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் எல்லாரோடையும் சந்தோசமா இருக்கட்டும்.. " என்றவர் ஒரு கணம் நிறுத்திவிட்டு விஷ்ணுவை பார்த்தவர் பின் மனதுக்குள்ளையே வைத்துக் கொள்ள வேண்டாம் வெளியில் கேட்டு விடலாம் என்று மனதில் தோன்றிய விஷயத்தை கேட்டார்.
" உனக்காக உன்னோட அத்தை பொண்ணு இருக்கிறதா சொன்னாங்களேப்பா.. என் பெண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு இதனால உங்க குடும்பத்துக்குள் ஏதாவது பிரச்சனை வேண்டாம் என் பொண்ணால எப்பவுமே யாருக்கும் பிரச்சினை வரக்கூடாது.. "
" இதுக்கு ஏன் மாமா இவ்வளவு கவலைப்பட்டுக்கிட்டு சொல்றீங்க? நான் இங்கு இத்தனை நாள் வேலை பார்த்தும் என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தெரிஞ்சுக்க நீங்க விசாரித்தது எனக்கு சந்தோஷம்தான்.. நீங்க நினைக்கிறது மாதிரி எதுவும் கிடையாது பெரியவங்களோட ஆசை எங்க ரெண்டு பேருக்குமே மனசுக்குள்ள அந்த மாதிரி எண்ணம் எதுவும் கிடையாது.. என் மனசு முழுக்க இருக்கிறது பிரகல்யா மட்டும் தான்.. நீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும்.. " என்றதும் சந்தோஷத்தில் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார் சந்திரசேகர்.
பின் அவனை விட்டு மகளை அழைத்து வர சொல்ல, அவனும் பிரகல்யாவை அழைத்துக் கொண்டு கூடவே நண்பனையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.
அவளை அழைப்பதற்காக வந்திருந்த விஷ்ணுவிற்கு அழுதழுது சோர்ந்து போயிருந்த அவள் முகத்தை பார்க்கும் பொழுது அவளை இறுக்கமாக அணைத்து உனக்கு நான் இருக்கிறேன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் கவலைப்படாதே என்று சொல்ல வேண்டும் போலிருக்க சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
" அகல்யா உன்னை சார் வர சொல்லி சொன்னாங்கம்மா.. " என்றவன் அழுது கொண்டிருந்த அவள் முகத்தை காண சகிக்காமல் தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு சந்திரசேகர் அறைக்குள் நுழைந்தான்.
" இன்னும் நீ அழுகையை நிறுத்தலையா பிரகல்யா? " என்று சேகர் அவளது பெயரை சொல்லியழைக்க, தனது பெயரை தந்தை சொல்லி அழைக்கவும் அவரது மனம் தான் அழுவதால் கவலை கொள்கிறது என்று தன் அழுகையை அத்தோடு நிறுத்திக்கொண்டாள்.
மகள் அழுகையை நிறுத்தியதும் ஒரு சின்ன புன்னகை புரிந்த சந்திரசேகர் கார்த்திக்கை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல் விஷ்ணுவை ஒரு பார்வை பார்க்க," அவனோட தங்கச்சி விஷயத்துல முடிவெடுக்க அவனுக்கும் உரிமை இருக்குது மாமா அதனால தான் கூட்டிட்டு வந்தேன்.. " என்றதும் பிரகல்யா கார்த்திக் இருவருக்கும் எதுவோ புரிவது போலிருக்க, அதை நினைத்து அவர்கள் இருவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி தான்.
அத்தியாயம் 20 :
" எதுக்காகப்பா இப்போ என்னை வரச்சொல்லி சொன்னீங்க?"
" உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் கண்ணம்மா.." என்றவர் " கார்த்திக் நீயும் இங்க இருக்கலாம்.." என ஒரு பெருமூச்சை இழுத்து வெளியிட்டவர் மூவரையும் அங்கிருந்து நாற்காலியில் அமர சொல்லி சைகை செய்தார்.
" கார்த்திக் முதல்ல உன்கிட்ட கேக்குறேன்.. என் பொண்ணுக்குன்னு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது.. அவளுக்கு கூட பிறந்த அண்ணனாக இருந்து அவளை நீ நல்லபடியா பார்த்துக்கொள்வாயா? " என்றவர் கேள்வியில் தான் அத்தனை எதிர்பார்ப்பு.
தன் முதலாளி தன்னிடம் இப்படி கேட்பார் என்று எதிர்பார்க்காத கார்த்திக் ஒரு நிமிடம் விழித்தவன் விஷ்ணுவை பார்க்க விஷ்ணு கண்களை மூடி சம்மதமாக திறந்தான்.
நண்பனின் கண்ணசைவில் எதையோ புரிந்து கொண்ட கார்த்திக் மனம் வேதனையாகியிருந்தது.
" நீங்க கவலைப்படாதீங்க சார்.. என் கூட பொறந்த தங்கச்சி பேரு தென்றல் நான் சின்ன வயசா இருக்கும் போது ரெண்டு பேரும் குளத்துல குளிக்கிறதுக்கு போனோம் அப்ப என் தங்கச்சி குளத்துல விழுந்து இறந்து போயிட்டா.. எனக்கு என் தங்கச்சியை ரொம்ப பிடிக்கும்.. இறந்து போன என் தங்கச்சியை இப்ப அகல்யா உருவத்தில் எனக்கு மறுபடியும் கொடுத்துட்டார் அந்த கடவுள்." என்றவனுக்கு விழியோரம் நீர் கசிந்தது.
தன் தந்தையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த பிரகல்யாவுக்கு அப்போதுதான் ஒரு உண்மை உரைத்தது.
உலகத்தில் தான் மட்டும் வேதனையை அனுபவிக்கவில்லை. அனைவரும் எதையாவது இழந்த வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது.
" கவலைப்படாதீங்க அண்ணா நான் உங்களுக்கு ஒரு நல்ல தங்கையா இருந்து உங்களை நல்லபடியா பார்த்துக்குவேன்.. " என்றவள் தலையை பாசமாக வருடி கொடுத்தான் கார்த்திக்.
அவர்கள் இருவரின் செயலையும் விஷ்ணு சந்திரசேகர் இருவரும் மௌன புன்னகையுடன் பார்த்திருந்தார்கள்.
" அம்மாடி பிரகல்யா இப்ப நான் உன்கிட்ட பேச போகிற விஷயம் தான் நிதர்சனம்.. என்னால இன்னும் எத்தனை நாட்கள் உயிரோட இருக்க முடியும்னு உறுதியாக சொல்ல முடியாது ஏதோ அந்த கடவுள் அருளால இத்தனை நாள் நான் உயிரோட இருந்துட்டேன்.. இத்தனைனாளும் என் உடம்பு என்னை படுத்துற பாட்டுக்கு நான் செத்து போயிடலாம் போலருக்கு.." என்றதும் "அப்பா..","மாமா", "சார்" என்ற மூன்று குரல்களும் ஒருங்கே எழுந்தன.
" யாரும் பதட்டப்பட வேண்டாம் இதுதான் உண்மை எல்லாரும் இதை ஏத்துக்க தான் வேணும் அப்பதான் யாரும் என்ன பத்தி கவலைப்படாம அவங்கவங்க வாழ்க்கையில முன்னேறி போவீங்க.. " என்றார் பேசுவதற்கு தடைபட்ட குரலை சரி செய்து கொண்டு.
" அம்மாடி அகல்யா.. விஷ்ணுவுக்கு உன் மேல ஒரு விருப்பம் இருக்குது உனக்கும் அந்த பையன் மேல ஒரு விருப்பம் இருக்கிறது எனக்கு தெரியும்.. அதனால நான் விஷ்ணு கிட்ட இத பத்தி பேசிட்டேன்.. அவரும் உண்மையை ஒத்துக்கிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டார் அவரோட குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம் அந்த குடும்பத்துக்கு போனா உனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும் ஒரு அப்பாவா உன்னோட கல்யாணத்தை பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு என்னோட இந்த கடைசி ஆசையை மட்டும் நிறைவேற்றிவை அகல்யா.. " என்றவருக்கு மூச்சிரைத்தது.
பிரகல்யா பதட்டமாக எழுந்தவள் தன் தந்தை பக்கத்தில் சென்று பேச சிரமப்பட்ட தன் தந்தையின் நெஞ்சை தடவி கொடுக்க, விஷ்ணு அவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.
அவன் கொடுத்த நீரை வாங்கி பருகியவர் நிலையே சொல்லியது அவர் இன்னும் அதிக நாட்கள் இருக்க மாட்டார் என்பதை.
அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன் முகத்தை மூடிக்கொண்டு அகல்யா அழுக, இத்தனை நாட்கள் அவளை நெருங்குவதற்கு இருந்த தடைகள் அத்தனையும் விஷ்ணுவுக்கு விலகிப் போக சிறிதும் யோசிக்காமல் அவளை இழுத்து தன் மார்போடு அணைத்திருந்தான்.
அவனது செயலை மற்ற இருவரும் தவறாக நினைக்கவில்லை.
மாறாக, மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
சந்திரசேகருக்கு இனி தன் மகளுக்கு எது நடந்தாலும் துணைக்கு விஷ்ணு இருக்கிறான்..தன் மகளை அவன் நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வர, சந்தோஷமாக அவர்களைப் பார்த்திருந்தார்.
அவனை விட்டு விலகிய பிரகல்யா அவனது முகத்தை பார்த்தவள் அவன் கண்களில் தெரிந்த எல்லையற்ற காதலில் தன்னை தொலைத்தவளாக, அவனையே பார்த்துக் கொண்டிருக்க அங்கு சூழல் மிகவும் கடினமாக இருப்பதை உணர்ந்து கொண்ட கார்த்திக் எப்பொழுதும் போல் சூழலை எளிமையாக்க தன் நண்பனை வார ஆரம்பித்தான்.
" மச்சான் சுத்தி நாங்களும் இருக்கோம் ரெண்டு பேரும் எங்களையும் கவனிச்சா நல்லாருக்கும்.. அப்பா இவங்க ரெண்டு பேரும் இப்படி பண்றதை பார்த்தா நம்ம இவங்களுக்கு இடைஞ்சலா இருக்கிற மாதிரி இருக்கு நம்ம வேணும்னா இவங்க ரெண்டு பேரையும் விட்டுவிட்டு வெளியில் போகலாமா? " என்று அழுவது போல் கேட்க, அவனது செயலில் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்த சந்திரசேகர் " என்னை நீ அப்பானு கூப்பிடும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு கார்த்திக்.. நீ சொல்றது போலவே இந்த ஜோடி புறாவுக்கு இடைஞ்சலா நம்ம இருக்க வேண்டாம் வா போகலாம்.."
" அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது அப்பா.. நீங்க சொல்ற விஷயத்துல எனக்கு முழு சம்மதம் தான் அப்பா விஷ்ணு மேல எனக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்குது.. உங்களுக்கப்புறம் இவர் என்னை நல்லா பாத்துக்குவாருங்குற நம்பிக்கை எனக்கு இருக்குதுப்பா.. எனக்கும் இவரை கல்யாணம் பண்ணிக்கிறதுல முழு சம்மதம்.." என்றவள் முகம் வெட்கத்தில் சிவந்து போக,யார் முகத்தையும் பார்க்க இயலாது அங்கிருந்து ஓடிப் போக, அவள் சொன்னதைக் கேட்டு வானத்தில் சிறகில்லாமல் பறந்த விஷ்ணு அவளின் பின்னாடியே செல்ல வேண்டும் என்று தோன்ற, அவர்கள் இருவரின் முன்பாக அவள் பின்னால் செல்ல வெட்கம் தடுக்க அவனின் தடுமாற்றத்தை புரிந்து கொண்ட இருவரும் கோரசாக " நீ அவ பின்னாடி தாராளமா போகலாம் நாங்க தடுக்க மாட்டோம்.. "என " என்னை ரொம்ப தான் ஓட்டுறீங்க.. " என்றவன் அவர்கள் முன்பாக நிற்க முடியாமல் பிரகல்யா போனது போலவே ஓடிப்போனவன் அவளதறைக்குச் சென்றான்.
கதவு திறக்கும் சத்தம் கேட்க, விஷ்ணுவை பற்றி யோசித்துக் கொண்டிருந்த பிரகல்யாவிற்கு அவனையே கண்டதும் அவனது முகத்தை பார்க்க முடியாமல் வெட்கம் தடுத்தது.
இதற்கு முன்பு அவனிடம் சகஜமாக பழகியவளுக்கு இப்பொழுது அவன் முகம் பார்ப்பதற்கு அவ்வளவு ஒரு வெட்கம்.
அவளது வெட்கம் தன்னால் தான் என்று ஒரு ஆண் மகனாக விஷ்ணுவுக்கு கர்வம் தோன்ற, அவளது பக்கத்தில் நெருங்கியவன் அவளது கன்னத்தில் இரு கைகளையும் கொடுத்து தன் கண்களோடு அவளது கண்களை கலக்க விட்டான்.
பட்டாம்பூச்சி போல அவளது கண்கள் சிறகில்லாமல் அடித்துக் கொண்டிருக்க, அவளது கண்களில் வீழ்ந்து போனவன் கண்களும் எல்லையற்ற கதைகள் பேசிக் கொண்டிருந்தன.
"ஹெலோ பூம்ஸ்.. எப்படி இருக்க சௌக்கியமா?"என்றான் விஷ்ணு பூமாதேவியிடம்.
" இருந்தாலும் உனக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம் தான் விஷ்ணு.. ஊரே என்னை பார்த்து மரியாதையா பேசும்போது என்னை பேர் சொல்லி கூப்பிட ஒரே ஆள் நீ மட்டும் தான் என் புருஷன் கூட என்னை இப்படி பெயர் சொல்லி கூப்பிட்டது கிடையாதுடா.. " என்றார் சலிப்பாக.
" சரி விடு பூம்ஸ் மாரிக்கு அந்த அளவுக்கு தைரியம் கிடையாது அதனால் தான் கூப்பிடாமல் இருக்கிறார்.. "
" போடா இவனே இப்ப எதுக்கு போன் பண்ண? உன்னால இங்க வீட்ல இருக்க எல்லாரும் தினம் தினம் என்னமோ என்னை எதிரியை பாக்குற மாதிரி பாக்குறாங்க போ.. "
" சரி சரி விடுங்க யாருக்குமே நான் வெளியில் வந்து வேலை பார்க்கிறது பிடிக்கல.. எல்லாரும் அவங்க கூடவே நான் இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க ஆனால் எனக்கு வெளியில வந்து உலகத்தை பார்த்து வேற ஏதாவது நிறைய கத்துக்கணும்னு ஆசைப்பட்டு வந்துட்டேன் அது யாருக்கும் பிடிக்காது தான்.. நீங்க சப்போர்ட் பண்ணதால உங்களை தான் எல்லாரும் கார்னர் பண்ணுவாங்க பூம்ஸ்.. அதை எல்லாம் சமாளிக்கிற லேடி டான் நீங்க மட்டும்
தான் அதனால தானே நான் உங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வந்தேன்.. "
" வர வர நல்ல பேச கத்துக்கிட்ட பேராண்டி.. " என்றார் நக்கலாக.
விஷ்ணு பூமாதேவி இருவரும் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் நண்பர்கள் போல பேசிக் கொள்வார்கள்.
வீட்டில் இருக்கும் போதும் அவரை அவன் பூம்ஸ் என்றழைக்க, அதற்கான கண்டிப்பான குரல் சீதா கணேசன் வழங்கியபோதும் வேண்டாம் என மறுத்து விட்டார் பூமாதேவி.
வீட்டில் தன்னுடைய ஆட்கள் மட்டும் இருக்கும் பொழுது அவரை பெயர் சொல்லி அழைப்பவன் மற்றபடி வெளியிலும் சரி வீட்டிற்கு யாராவது வந்தாலும் சரி அப்பத்தா என்கிற வார்த்தைக்கு மறு வார்த்தை வராது.
" சரி சரி நீங்க விட்டா பேசிக்கிட்டே இருப்பீங்க நான் சொல்ல வந்த விஷயத்தை காதுல வாங்குங்க.. நான் உங்க கிட்ட சொன்னேன்ல்ல பூம்ஸ் நான் வேலை பார்க்கிற கம்பெனி ஓனர் சந்திரசேகர் சாரோட மகள் அகல்யா.. " என்றதும் அவசரமாக முந்தி கொண்டார் பூமா.
" அதென்ன கம்பெனி ஓனரோட பொண்ணுன்னு சொல்ற நீ காதலிக்கிற பொண்ணு சொல்லு.. " என்றதும் வீடியோ காலில் அவரை முறைத்து பார்த்தான்.
அவன் பார்க்க சரண்டர் என்பது போல் இரு கைகளில் தூக்கிய பூமாதேவியை கண்டு சிரித்தவன் " நீங்க சொல்றது மாதிரி நான் காதலிக்கிற பொண்ணு தான்.. உங்களுக்கு தெரியுமா பூம்ஸ்.. அவங்க அப்பா என்னோட காதலுக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்க.. அவருக்கு இருக்கிற பிரச்சினை இப்ப ரொம்ப அவரைப் படுத்தி எடுக்குது போலருக்கு.. அதனால அவரே என் மனசுல இருக்க விஷயத்தை தெரிஞ்சுகிட்டு நாம் ஊருக்கு வந்து என்னை பத்தி விசாரிச்சதாகவும் நம்ம குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டதாகவும் வந்து பேசினார்.. என்னோட பச்சைக்கிளியும் எனக்கு ஓகே சொல்லிடுச்சு.. " என்றான் ஆனந்தமாக.
" டேய் பேராண்டி அவரா வந்தார்ன்னு நினைக்கிறாயா? " என்றவர் அவனை ஒரு மர்மமான பார்வை பார்க்க, சில வினாடிகள் திகைத்துப் போனவன் " உங்களை ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பூம்ஸ்.. " என்றான்.
" எனக்கு எதுக்குடா போய் நன்றி சொல்லிக்கிட்டுருக்க இது என்னோட கடமை உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.. என்ன உங்க அத்தை அவ மகளை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து கூடவே வச்சுக்கலாம்னு ஆசைப்படுறா அவளுக்கு மட்டும் தான் கொஞ்சம் கவலை மத்தபடி யாருக்கும் பிரச்சனையில்லை.. "
" குடும்பத்தோட ஆணி வேரே என் கையில் இருக்கும் போது எனக்கு என்ன பிரச்சனை பூம்ஸ்.. எல்லாத்தையும் நீங்க பாத்துக்குறிங்க சரி அது போகட்டும் இப்ப அவரு இருக்கிற நிலைமைக்கு ரொம்ப நாள் உயிரோடு இருக்கிற மாதிரி எனக்கு தோணலை அவரோட கடைசி ஆசையா அவரோட மகளை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு என்கிட்ட கேட்கிறார் நம்ம குடும்பத்துலருக்க எல்லாரும் வரணும்னு ஆசைப்படுகிறார் நீங்க என்ன சொல்றீங்க?"
தன் மூக்கை சுரண்டிய பூமாதேவி " இப்போதைக்கு நம்ம குடும்பத்துல இருக்க யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் எனக்கு மட்டும் தெரிஞ்சது போதும்.. சம்பந்திக்கிட்ட நானே பேசுறேன் அவரோட கடைசி ஆசையை நல்லபடியா எல்லாரும் சேர்ந்து நிறைவேற்றி வைப்போம் கல்யாணத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் நீ பாரு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் நம்ம வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லி ரிசப்ஷன் கொஞ்சம் பெருசா வச்சுக்கலாம்.. வீட்லருக்க எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்லி எல்லாரையும் சமாதானப்படுத்த இப்போதைக்கு என்னால முடியாது.. உன்னை பெத்தவங்க கிட்ட சொல்லாமல் உனக்கு கல்யாணம் பண்றது ரொம்ப பெரிய தப்பு தான் ஆனாலும் நமக்கு இப்ப வேற ஆப்ஷன் கிடையாது.. நாளைக்கு நான் அந்த ஊர்ல இருப்பேன் நாளைக்கு உனக்கும் அந்த பொண்ணுக்கும் கோவில்ல கல்யாணம் அதுக்கான ஏற்பாடு எல்லாத்தையும் பண்ணிடு தாலியை நான் கொண்டுட்டு வரேன்.. "
" ஐ லவ் யூ பூம்ஸ் நாளைக்கு பாக்கலாம்.. " என்று அழைப்பை துண்டித்த விஷ்ணுவுக்கு தன் குடும்பத்திலிருக்கும் அனைவரையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்வது கடினமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் பூமாதேவி சொன்னது போல் அனைவரையும் சமாதானப்படுத்தி அவர்கள் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பாக சந்திரசேகர் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டால் அவரது ஆசை நிறைவேறாமலேயே அவர் உயிர் பிரிந்து விடும் அதன் பிறகு தன் காதலியும் இதற்காக தன்னை மன்னிக்க மாட்டாள் என்று பூமாதேவி சொன்னது போல் குடும்பத்திலிருக்கும் அனைவரிடமும் இதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன் கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அப்படியே சந்திரசேகரிடம் தனது அப்பத்தா சொன்ன விஷயத்தை சொல்ல, சந்திரசேகருக்கு மனதுக்கு நெருடலாக இருந்தாலும் தனக்கு அதிக நேரமில்லை என்பதை உணர்ந்து கொண்டவர் விஷ்ணு சொன்னது போலவே அங்கிருக்கும் ஒரு கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டார்.
பிரகல்யாவிடம் அவர் விஷயத்தை சொல்ல, முதலில் சிறிது யோசித்துப் பார்த்தவள் பிறகு தந்தை சொல்வதில் எப்பொழுதும் நல்லது இருக்கும் என்று அவர் சொன்னதற்கு ஒப்புக்கொள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகளும் இனிதே ஆரம்பமானது.
மறுநாள் எந்த கோவிலிலும் இடம் கிடைக்காமல் போக அதற்கு அடுத்த நாள் ஒரு மாரியம்மன் கோவிலில் திருமண ஏற்பாடு நடக்க, தன் வீட்டில் விஷ்ணுவை பார்க்கப் போவதாக சொல்லிவிட்டு பூமா கிளம்பவும் நானும் வருகிறேன் என்று சீதா,லட்சுமி, ரேணுகா, சுரேகா என அனைவரும் கிளம்ப ஏதோதோ காரணங்களை சொல்லி அவர்கள் அனைவரையும் தட்டி கழித்த பூமா இதற்கு மேலும் தாமதித்தால் மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று அவசர அவசரமாக அவருக்கென உரிய காரில் டிரைவருடன் பயணம் செய்து அங்கு வந்து சேர்ந்தார்.
அடுத்த நாள் தான் திருமணம் என்பதால் முதல் நாளே வந்தவரை அழைத்துக் கொண்டு அகல்யா வீட்டிற்கு வந்த விஷ்ணு சந்திரசேகரையும் தன் வருங்கால மனைவியையும் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
" வணக்கம்மா, நல்லா இருக்கீங்களா? " என்றார் சந்திரசேகர்.
" நான் நல்லா இருக்கேன் சம்மந்தி நீங்க எப்படி இருக்கீங்க! உங்கள பத்தி எல்லாத்தையும் விஷ்ணு என்கிட்ட சொன்னான் கேட்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுள் உங்களுக்கு இப்படி ஒரு சோதனையை கொடுத்திருக்கவே வேண்டாம்.." என்றவருக்கு கசப்பான ஒரு புன்னகையை கொடுத்தார் சந்திரசேகர்.
அவருக்கு பக்கத்திலேயே அமைதியாக நின்று கொண்டிருந்த தன் வருங்கால மருமகளை புன்னகையுடன் பார்த்த பூமாதேவி " என் மருமகள் கிட்ட பேசுறதுக்கு காசு கொடுக்கணும் போலருக்கு இவ்வளவு அமைதியான பொண்ணா.. " எனவும் அவரை சிரிப்புடன் நிமிர்ந்து பார்த்த அகல்யா " என்னை மன்னிச்சிடுங்க எங்க வீட்ல எங்க அப்பாவை தவிர என்னை வளர்த்த என்னோட வளர்ப்பு அம்மா காந்திமதி மட்டும் தான் இருக்காங்க.. எனக்கு வேற யாரும் கிடையாது அதனால யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியாது நீங்க சொல்லிக் கொடுத்தா நான் கத்துக்குறேன் உங்க குடும்ப பெரிய குடும்பம்னு விஷ்ணு சொன்னாங்க.. அந்த குடும்பத்துக்கு தகுந்தாப்ல என்னால நடக்க முடியுமான்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆனா நீங்க சொல்லி கொடுத்தா நான் கத்துக்குறேன்.. " என்றவள் எங்கே மறந்து விடுவோமோ என்பது போல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் அவசர அவசரமாக ஒப்பிக்க,அவளை தன் பக்கத்தில் அழைத்த பூமா தன்னருகில் அமர வைத்தவர் அவளது நெற்றியில் வாஞ்சையாக முத்தமிட்டார்.
அதை கண்டதுமே சந்திரசேகர் காந்திமதி இருவருக்கும் மனம் நிறைந்துப்போனது.
கல்யாணத்துக்கு தேவையான துணிமணி நகைகள் என்று அன்றைய பொழுது கழிந்து போக,அடுத்த நாள் கோவிலில் அவர்கள் இருவருக்கும் அவர்களது ஆபிஸில் வேலை பார்க்கும் ஆட்கள் முன்னிலையில் பூமாதேவி தாலி எடுத்துக் கொடுக்க, அதை தன் கைகளில் வாங்கிய விஷ்ணு தன்னருகில் வெட்கத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்த பிரகல்யா கழுத்தில் தாலி கட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொள்ள, அதைப் பார்த்த சந்திரசேகரின் மனம் நிறைந்துப்போனது.
அத்தியாயம் 21 :
இருவரின் திருமணமும் நன்றாக நடந்து முடிந்ததை தன் கண்ணாரக் கண்ட சந்திரசேகர் இத்தனை நாட்களாக தனது மகளுக்காக பிடித்து வைத்திருந்த உயிரை அடுத்த நாள் காலையில் விட்டது தான் அங்கு பெரும் பரிதாபம்.
இருவருக்கும் திருமணம் முடிய அவர்களை அழைத்துக் கொண்டு பிரகல்யா வீட்டிற்கு வந்திருந்த பூமாதேவி அவர்களுக்கு பெரியவராக நின்று செய்ய வேண்டிய அத்தனை சம்பிரதாயங்களையும் எந்தவிதமான குறையும் இல்லாமல் நிறைவாக செய்து முடிக்க அதை எல்லாம் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.
கார்த்திக் தன் பங்கிற்கு தன் கூட பிறக்காத தங்கைக்கு அத்தனையும் பார்த்து பார்த்து செய்தவன் அவன் பங்கிற்கு ஐந்து சவரன் நெக்லஸயும் பரிசளிக்க, அவனது அதீத அன்பில் கரைந்து தான் போனாள் பிரகல்யா.
எல்லா சம்பிரதாயங்களும் சடங்குகளும் இனிதே நடந்து முடிக்க, அவர்களுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கணவனும் மனைவியும் தென்றலும் இயற்கையுமாக ஒருவரோடு ஒருவர் கலந்து ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழ முடியாதெனும் அளவிற்கு அவர்களுக்குள் பிணைந்து போனார்கள்.
மறுநாள் காலை அழகாக விடிய, அடுத்த நாள் காலையில் விரைவாகவே எந்திரிக்க வேண்டும் என்று பூமாதேவி சொல்வதற்கு இணங்கி விடியற்காலையில் எழுந்த பிரகல்யா தனது பக்கத்தில் தலை வைத்து படுத்திருக்கும் கணவனை வெட்கம் மேலிட பார்த்தவள், அவன் முகத்தை காண முடியாமல் நாணம் தடுக்க வெட்கத்தோடு குளித்து முடித்து தலையில் துண்டை சுற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.
" காப்பி நல்லா இருக்குதாம்மா! நீங்க எப்படி குடிப்பீங்கன்னு எனக்கு தெரியல அதனால ஏதோ எனக்கு தெரிஞ்ச வகையில் நான் போட்டுருக்கேன் உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க உங்களுக்கு பிடிச்சது போலவே நான் போட்டு தருகிறேன்.. " என தயக்கமாக சொன்னார் காந்திமதி.
" எதுக்காக என்னை பார்த்து பயப்படுறீங்க சம்மந்தி.. என்னதான் இருந்தாலும் என் வீட்டு மருமகளை நீங்க உங்க வயித்துல சுமக்காம இருந்தாலும் உங்க மனசுல இத்தனை வருஷம் சுமந்து பெத்த தாயை விட ஒரு படி அந்த பொண்ணு மேல பாசம் அதிகமா வச்சு நல்லபடியா வளர்த்துருக்கீங்க.. யாருக்கு இந்த மனசு வரும்.. நீங்க செய்றது எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு உங்க கையால நேத்து சாப்பிட்ட சாப்பாடு கூட எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு.. என்னை வேற ஆளா நினைக்காம உங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சு எப்பவும் போல நீங்க பாருங்க பிரச்சனை இல்லை.." எனவும் அவர் சொன்னதை கேட்டு புன்னகையுடன் அவரைப் பார்த்தார் காந்திமதி.
காலையிலேயே குளித்து முடித்துவிட்டு புடவை கட்டிக் கொண்டு வெளியில் வந்த அகல்யாவை பார்த்த காந்திமதி அப்படியே மெய் மறந்து நின்றார்.
தன்னை கண்டதும் மெய் மறந்து நின்று கொண்டிருந்த தன் வளர்ப்பு தாய் பக்கத்தில் புன்னகையுடன் வந்த பிரகல்யா " எதுக்காக இப்படியே ஃப்ரீஸாகி நிக்கிறீங்க.. இந்த புடவையில் என்னை பார்க்கும் போது நல்லா இல்லையா? " வருத்தமாக கேட்க, அதற்கு வேகமாக இல்லை என்ற தலையாட்டிய காந்திமதி இரு கைகளையும் எடுத்து அவளுக்கு நெட்டி முறித்தார்.
" பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்க செல்லம் என் கண்ணே பட்டுடும் போலருக்கு.. உன்னை உன் அப்பா இந்த கோலத்தில் பார்த்தா அவங்க மனசு நிறைந்திடும்.. போய் உங்க அப்பாவை பாருமா.. " என சரி என்றவள் அப்படியே அங்கு அமர்ந்திருந்த பூமாதேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க " தீர்க்க சுமங்கலியாக எப்பவும் நல்லா இருக்கனும்மா.. " என்றவர் அவளிடம் சில தனிப்பட்ட கேள்விகளை கேட்க அத்தனைக்கும் அவளது வெட்க புன்னகை பதில் கொடுக்க மனது நிறைந்து போனது பூமாதேவிக்கு.
அவரைப் பார்க்க முடியாமல் தன் தந்தையை பார்ப்பதற்காக கையில் காபி கப்பை எடுத்துக்கொண்டு சென்றவள் அங்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த தந்தைக்கு பக்கத்தில் சென்றாள்.
" என்னப்பா எப்பவுமே எனக்கு முன்னாடியே எந்திரிச்சு என்னை வந்து எழுப்புவீங்க இன்னைக்கு நான் வந்து உங்களை எழுப்புகிறேன் பார்த்தீர்களா? என்ன இந்த புடவையில் பார்த்ததும் உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்ன்னு காந்தி அம்மா சொன்னாங்க அப்பா நீங்க பாத்துட்டு நான் எப்படி இருக்கேன்னு சொல்லுங்க.. " என்றவள் தான் பேசியதற்கு எந்தவிதமான அசைவும் இல்லாமல் தூங்கி கொண்டிருந்த தந்தையை பயத்துடன் பார்த்தவள் உடல் நடுங்க தனது கையை கொண்டு அவரது மூக்குக்கருகில் வைத்து பார்க்க, மூச்சுக்காற்று வராமல் போக படாரென தன் கைகளை எடுத்தவள் பதட்டத்தோடு அவரது இதயத்தில் கை வைத்து பார்க்க அவரது இதயம் தன் துடிப்பை நிறுத்திருப்பதைக் கண்டு பிரகல்யா இதயம் நின்று துடித்தது.
" அப்பா.... " என்று அவள் கத்திய சத்தத்தில் தூங்கி கொண்டிருந்த விஷ்ணு கூட பதறியடித்துக்கொண்டு எழுந்து ஓடி வந்தான்.
டீ குடித்துக் கொண்டிருந்த பூமாதேவி சமையலறையிலிருந்த காந்திமதி என்று அனைவரும் அவளது சத்தத்தை கேட்டு வேகமாக ஓடிப் போனார்கள்.
அங்கு அவர்கள் அனைவரும் கண்ட காட்சி அவர்கள் மனதை பெரிதும் உலுக்கிப் போட்டது .
" என்னை விட்டு ஏன்பா போனிங்க என்னை விட்டுப் போக உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு நீங்க இல்லாம இந்த உலகத்துல நான் எப்படி வாழ போகிறேன்.. நீங்க எனக்கு வேணும்ப்பா என் கையை புடிச்சு எனக்கு இந்த உலகத்தை சுத்திவர சொல்லி கொடுத்தது நீங்கதான் இப்ப நீங்க இல்லாம நான் எப்படி வாழப்போறேன்? கடவுளே என் அம்மாவை தான் என்கிட்ட இருந்து நான் பிறக்கும் போதே எடுத்துக்கிட்டீங்க அதை நினைத்து எத்தனையோ நாள் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்
இப்ப என் அப்பாவையும் என்கிட்டேயிருந்து பிரிச்சிட்டீங்களே உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?" என்று
தன் தந்தையின் மார்பில் சாய்ந்து ஓலமிட்டவள் குரலில் தான் எத்தனை வேதனை.
ஒருவரின் பிறப்பில் சந்தோஷமாக இருக்கும் நாம் அவர் இந்த உலகத்தில் இல்லாமல் போவதை கண்டு எத்தனை வேதனை கொள்கிறோம்.
" என் கல்யாணத்தை பாக்குறதுக்காக தான் இத்தனை நாளா உங்க உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தீர்களாப்பா? உங்களோட கடமையை முடிஞ்சதும் என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டீங்களே! இனிமேல் நான் யாரு கிட்ட போய் எனக்கு தேவையான எல்லாத்தையும் உரிமையோட கேட்பேன்.. எனக்கு தேவையான எல்லாத்தையும் யாரு பார்த்து பார்த்து செய்வாங்க? உங்களை விட்டா இந்த உலகத்துல எனக்குன்னு யாருப்பா இருக்கா.. " என்று பெரும் குரலெடுத்து அழுக, அவள் அழுகையை கண்ட அனைவருக்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவளது பக்கத்தில் வந்த விஷ்ணு அவளை தன் இடுப்போடு கட்டிக் கொள்ள " விஷ்ணு அப்பாவை பாருங்க எந்திரிக்க மாட்டேங்குறாங்க அப்பாவ எந்திரிக்க சொல்லுங்க எனக்கு அப்பா வேணும் அப்பா இல்லாமல் என்னால் எப்படி வாழ முடியும்.. நான் வளந்துட்டேன்னு நினைச்சு அப்பா என்னை விட்டுட்டு போயிட்டாங்க நான் இன்னும் வளரலை சின்ன குழந்தை தான் அப்பா கிட்ட சொல்லுங்க அப்பா எனக்கு வேணும்.." என்று அவள் தந்தை பக்கமாக கைநீட்டி அழுகையோடு சொல்ல, தன் சொந்த பந்தங்களை பிரிந்து வந்ததே தனக்கு கஷ்டமாக இருந்தபோது, பெற்ற தந்தை ஒருவர் மட்டுமே தன் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருந்தவள் இப்பொழுது அவர் இல்லை என்றதும் துடித்து அழுவதை அவனால் காண சகிக்கவில்லை.
தெரிந்தவர்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி விட, விடியற்காலையில் செய்தியை கேட்டு அடித்து பிடித்து ஓடி வந்த கார்த்திக் சந்திரசேகரை பிணமாக பார்க்க முடியாமல் அழுது விட்டான்.
அவரை இறுதியாக கொள்ளி வைப்பதற்காக தூக்க, பிரகல்யா அழுத அழுகையை கண்டு வந்த அனைவருக்கும் கண்களில் கண்ணீர் வந்தது.
அவருக்கு கொள்ளி வைக்க ஆண்மகன் இல்லாத காரணத்தால் யார் கொள்ளி வைப்பது? என்ற பிரச்சினை உருவாக விஷ்ணு தானாக முன்வந்து தான் வைக்கிறேன் என்று சொல்ல அவனை தடுத்து நிறுத்தினான் கார்த்திக் .
" அகல்யா என்னோட தங்கச்சி.. சந்திரசேகர் என்னோட அப்பா ஒரு பிள்ளையை பெத்து எடுத்தால் தான் அவர்களுடைய வாரிசு கிடையாது என் அப்பாவை நான் தத்தெடுத்துக்கிறேன்.. அவருக்கு மகன்கிற முறையில கொல்லி போடுற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு அத உனக்கு தரமாட்டேன் விஷ்ணு ஐ அம் ரியலி சாரி.. " எனவும் நண்பனை ஆத்மார்த்தமாக அணைத்து கொண்ட விஷ்ணு கார்த்திக் கேட்டது போல அவனுக்கான உரிமையை அவனே விட்டுக் கொடுத்தான்.
சந்திரசேகர் இறந்து பத்து நாட்கள் கடந்து போயிருக்க, அந்த பத்து நாட்கள் அவன் பிரகல்யாவை சமாதானப்படுத்த பூமாதேவி, விஷ்ணு, கார்த்திக், காந்திமதி என்ற அனைவரும் பட்டபாடு அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
சாப்பிட மாட்டேன் தண்ணீர் குடிக்க மாட்டேன் என்று ஒவ்வொன்றுக்கும் அவள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள் தன் தந்தையின் நினைப்பில்.
அனைவருக்கும் அவளது வலியும் வேதனையும் புரிந்தாலும் இறந்தவருக்காக அவள் தன்னை வேதனைப்படுத்திக் கொள்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
பத்து நாட்களும் தனது ரூமில் மட்டுமே அடைந்து கிடந்த அகல்யா யாரையும் கண்கொண்டு பார்க்கவுமில்லை பேசவுமில்லை.
அவளது கண்களில் நில்லாமல் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க அது ஒன்று மட்டும் தான் அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டிருந்தது.
கடந்து போன பத்து நாட்களில் ஓரளவிற்கு அவள் சமாதானம் ஆகியிருந்தாள்.
தந்தையின் புகைப்படத்தை காணும் போதெல்லாம் வரும் கண்ணீரை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.
தான் ஒருத்தி கஷ்டப்படுவது தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் கஷ்டப்படுத்துகிறது என்பதால் தன் வேதனையை தனக்குள்ளே மறைத்துக் கொண்டு அனைவருக்கும் வெளியே புன்னகையை கொடுத்தாலும் அந்த புன்னகையில் எத்தனை வலி நிறைந்திருக்கிறது என்பது அவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்தே இருந்தது.
" விஷ்ணு நான் வீட்டை விட்டு வந்து ரெண்டு வாரம் ஆகப்போகுது இதுக்கு மேல இங்கே இருந்தால் நம்ம குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் சந்தேகம் வந்துடும் அங்கே எனக்கும் நிறைய வேலை இருக்குது நான் கிளம்புறேன்.. இப்ப இருக்க சூழலையில் நீ அகல்யாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு வர வேண்டாம்.. அவங்க அப்பா இருந்த வீட்லயே கொஞ்ச நாள் அவள் இருக்கட்டும் அப்பதான் அவளுக்கும் கொஞ்சம் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.. அவளைத் தேவையில்லாமல் எதற்கும் தொந்தரவு பண்ணாத நான் உன்னோட விஷயத்தை வீட்ல பொறுமையா எல்லாருக்கும் எடுத்து சொல்லிட்டு உனக்கு போன் பண்றேன் அதுவரைக்கும் யார்கிட்டயும் தேவையில்லாமல் பேச வேண்டாம்.. "
" சரி பூம்ஸ் நான் இங்கேயே இருக்கேன் நீங்க பாத்துக்கோங்க.. " என்றவன் பார்வை மனைவியின் மீது படிந்தது.
பூமாதேவியும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவளது பார்வை முழுவதும் புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்த அவளது தந்தையின் மீது நிலைக்குத்தி நின்றன.
அந்தப் பார்வை சந்திரசேகரிடம் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தது அங்கிருந்த யாருக்கும் தெரியாமல் போனது.
அவளது பக்கத்தில் அமர்ந்த பூமாதேவி அவளது தலையை வாஞ்சையாக வருடி கொடுத்தார்.
அதில் தன் சிந்தை கலைந்து அவரை வேதனையுடன் பார்த்த அகல்யா சன்னமாக சிரித்து வைத்தாள்.
" கவலைப்படாதடா கண்டிப்பா உன் அப்பா உனக்கு உன்னோட குழந்தையா வந்து பிறப்பார்.. உன் அப்பா உன்னை எப்படி எல்லாம் பார்த்து பார்த்து வளர்த்தாரோ அதே மாதிரி நீயும் அவரை பார்த்து பார்த்து வளர்க்கலாம் கண்டிப்பாக அவர் உன்னோட குழந்தையா வந்து பிறப்பார் நான் சொல்றேன் என்னை நம்பு.. இப்படியே உங்க அப்பாவை நினைச்சு வருத்தப்பட்டு உன்னை வருத்திக்கிட்டிருந்தா அதை ஆத்மாவாக இருக்க உங்க அப்பா பார்த்து மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டப்படுவார்.. உங்க அப்பா உனக்காக இத்தனை நாள் இந்த பூமியில் வாழ்ந்தார் இனி மேல் கொஞ்ச நாள் வானத்தில் இருக்க உங்க அம்மா கூட துணையாய் இருக்கட்டுமே.. உனக்கு உன் புருஷன் விஷ்ணு இருக்கிறான்.. உன் கூட பிறக்காத அண்ணன் கார்த்தி இருக்கிறான் உன் வளர்ப்பு தாய் காந்திமதி இருக்காங்க நான் இருக்கிறேன் நம்ம குடும்பம் இருக்குது.. உனக்காக உன்னை சுத்தி இத்தனை பேர் நாங்க இருக்கிறோம் அதனால கவலைப்படாதடா.. நீ இருக்கும் மன நிலைமைக்கு இப்போதைக்கு நம்ம வீட்டுக்கு வர வேண்டாம் இங்கே கொஞ்ச நாள் இருந்து உன் மனச சமாதானப்படுத்திக்கோ.. நானும் வீட்ல இருக்க எல்லாருக்கும் இந்த விஷயத்தை கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைத்துவிட்டு உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன் கவலைப்படாதே.. நான் கிளம்புறேன்டா நேரத்துக்கு சாப்பிடு.. " என அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தாலும் அதை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு அவருக்கு ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தாள்.
பூமாதேவிக்கு அவளை விட்டு செல்வதற்கு மனம் வரவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்.
விஷ்ணு ஒரு நிமிடம் கூட அவளை தனிமையில் விடாமல் அவளை எதையாவது ஒன்றை செய்து வேறு வழியில் திசை திருப்பி அவள் மனதை முழுமையாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஆபீஸ் வேலைகள் அனைத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்ட கார்த்திக் அத்தனையும் ஒரே ஆளாக நின்று பார்த்துக் கொண்டான்.
காந்திமதி முடிந்தவரை அவரும் விஷ்ணுவுடன் சேர்ந்து அகல்யாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள அப்படியே நாட்கள் கடந்து சென்றன.
பூமாதேவி அடிக்கடி விஷ்ணுவிடம் போன் செய்து பேசிக் கொண்டிருந்தவர் அவன் விஷயத்தை வீட்டில் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, விஷ்வா வேலை பார்க்கும் இடத்தில் வம்பை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்க வீட்டில் அந்தப் பிரச்சினை ஓடிக் கொண்டிருந்ததால் பூமாதேவியால் அங்கிருந்தவர் மனநிலையை கருத்தில் கொண்டு விஷயத்தை பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இரண்டு மாதங்கள் கடந்து போயிருக்க இப்பொழுது அனைத்தையும் ஏற்க பழகி இருந்த பிரகல்யா முழுமையாக மாறாத பொழுதும் ஓரளவிற்கு சந்தோஷமாக வைத்துக்கொள்ள பழகியிருந்தாள்.
" அகல்யா நீ ஓகே தானடா? நான் கம்பெனிக்கு போய் ரெண்டு மாசம் ஆகப்போகுது கார்த்திக் ஒருத்தன் தான் எல்லாத்தையும் சமாளிக்கிறான் பார்க்க பாவமா இருக்கு நானும் இன்னையிலிருந்து கம்பெனிக்கு போகலாம்னு இருக்கேன் உனக்கு ஓகே தானே!"
" எனக்கு ஒன்னும் இல்ல விஷ்ணு நீங்க போயிட்டு வாங்க.. அது அப்பா உருவாக்கின கம்பெனி அவங்களோட ஆசை அத எப்பயுமே விட்டுடக்கூடாது.. கொஞ்ச நாளைக்கு அங்க வர முடியாது எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கோங்க.. " எனவும் அவள் தலையில் முத்தமிட்ட விஷ்ணு காந்திமதியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்று கொண்டு சென்றான்.
பாவம் பேதைப் பெண் அறியவில்லை அதுதான் அவன் கொடுக்கப் போகும் கடைசி முத்தம் என்பது.
தனியாக அமர்ந்திருந்த அகல்யாவிடம் வந்தார் காந்திமதி.
" என்னம்மா வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா இல்லை நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?" என்றாள்.
" இல்லடா அதெல்லாம் வேண்டாம் எல்லா வேலையும் நானே முடிச்சிட்டேன் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் அதுக்காக தான் வந்தேன்.. "
" சொல்லுங்கம்மா என்ன விஷயம்? "
" கடைசியா நீ எப்ப தலைக்கு குளிச்ச? "
" எனக்கு எதுவும் ஞாபகம் இல்லம்மா அப்பா இறந்ததுக்கு அப்புறம் எனக்கு தெரிஞ்சு நான் பீரியட் ஆகல.. " என்றாள் சாதாரணமாக.
அவள் சொன்னதைக் கேட்டு காந்திமதி முகம் பிரகாசமாக எதையெதையோ கணக்கிட்டு பார்த்தவர் தன் நினைப்பு பொய்யாக கூடாது என்ற ஆசையுடன் ஏற்கனவே அவர் வாங்கி வந்து வைத்திருந்த பிரக்னன்சி கிட்டை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தவர் அதை எப்படி உபயோகிப்பது என்றும் சொல்லிவிட்டு அவளை பாத்ரூமுக்குள் அனுப்பியவர் வெளியே ரொம்ப ஆர்வமாக இரு கைகளையும் தன் தாடைக்கு கீழே கொடுத்து தான் ஆசைப்பட்டது போலவே நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
அகல்யா இருந்த மன நிலைமையில் எதையும் யோசிக்க முடியாமல் காந்திமதி எதற்காக இப்படி எல்லாம் சொல்கிறார்?என்று புரியாமல் அவர் சொன்னது போலவே செய்து முடித்துவிட்டு அந்த கார்டை காந்திமதியிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
அதைப் பயத்துடன் தன் கைகளில் வாங்கி பார்த்த காந்திமதி அவர் ஆசைப்பட்டது போலவே அதில் இரண்டு கோடுகள் இருப்பதை கண்டதும் அவர் அடைந்த உவகைக்கு அளவே இல்லாமல் போனது.
இதழ்களில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமாக இருந்த காந்திமதியை புரியாமல் பார்த்த பிரகல்யாவை இறுக்கி அணைத்திருந்த காந்திமதி " என் செல்லக்குட்டி அம்மாவாயிட்டீங்க.. உன்னோட வயித்துக்குள்ள இப்போ ஒரு குட்டி பாப்பா இருக்குதுடா.." என்றதும் முதலில் புரியாமல் பார்த்த அகல்யா அதன் பிறகு அவர் என்ன சொன்னார் என்பது உரைக்க சந்தோஷத்தில் அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது.
காந்திமதியை இறுக்கி அணைத்திருந்தவள் " ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குதும்மா.. எல்லாரும் சொன்னது மாதிரியே என்னோட அப்பாவே எனக்கு குழந்தையா வந்து பிறக்க போறாங்க என் அப்பா என் வயித்துல இருக்காங்க.. இந்த சந்தோஷமான விஷயத்தை இப்போது நான் விஷ்ணு கிட்ட சொல்லணும்.. " என்றடவள் தனது ஃபோனை கையில் எடுக்க அவளை தடுத்து நிறுத்தினார் காந்திமதி.
" எதுக்காக அம்மா என்னை நிறுத்துறீங்க அவர்கிட்ட விஷயத்தை சொல்ல வேண்டாமா? "
" உன்னை சொல்ல வேண்டாம்னு சொல்லல பிரகல்யா.. சில விஷயங்களை ஃபோனில் சொல்வதை விட நேரில் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. நீ உன் புருஷன் கிட்ட இந்த விஷயத்தை நேர்ல சொல்லு அப்பதான் அவர் படுற சந்தோஷத்தை பார்த்து உனக்கும் இன்னும் இரண்டு மடங்கு சந்தோஷம் கிடைக்கும்.. அவர் சாயங்காலம் வீட்டுக்கு வந்திடுவார் அதுவரைக்கும் பொறுமையா இருடா.. " எனவும் அவர் சொல்வதும் சரியாக பட அமைதி காத்தாள் பெண்ணவள்.
எப்போதடா மாலை நேரம் வரும் விஷ்ணு வீட்டிற்கு வருவான் என்று அவள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க,அவளது அலைபேசிக்கு அழைத்திருந்த கார்த்திக் அவள் தலையில் இடி விழுந்தது போல்
" விஷ்ணுவுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டதுமா ரொம்ப சீரியஸ்.. கம்பெனிக்கு பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கேன் ரொம்ப சீரியஸ்னு சொல்றாங்க சீக்கிரம் கிளம்பி வா.. " என்றவன் அழைப்பை துண்டிக்க, ஜீவனில்லாமல் அதே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.
அவள் அப்படியே நிற்பதை கண்டதும் ஒன்றும் புரியாமல் அவள் பக்கத்தில் காந்திமதி வர, அவரை இறுக்கமாக அணைத்து கதறி விட்டாள்.
" எதுக்குடா இப்படி அழுதுகிட்டு இருக்க? இந்த மாதிரி நேரத்துல நீ ரொம்ப சந்தோசமா இருக்கணும் நீ இப்படி அழுதா உன் வயித்துல இருக்க குழந்தையும் அழுகும் சந்தோஷமா தான இருந்த எதுக்கு இப்ப அழுகுற?"
"அ.. ம்.. அம்மா விஷ்ணுவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம் தலையில அடிபட்டு இருக்குனு கார்த்திக் அண்ணா போன் பண்ணி சொன்னாங்க வாங்க போகலாம்.." என்றவள் அழுது கொண்டே அங்கிருந்து கிளம்ப, காந்திமதிக்கு கடவுள் மீது அத்தனை கோபம் வந்தது.
' கடவுளே உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? இப்பதான் அந்த பெண்ணே அவங்க அப்பாவோட இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டும் வந்துருக்கு.. நல்லதை கொடுத்து அதை சந்தோஷப்படுறதுக்கு முன்னாடியே இப்படி அடுத்த கஷ்டத்தை கொடுக்கிறாயே நல்லாவா இருக்கு?' என்று மனதுக்குள்ளயே கடவுளை திட்டி விட்டு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர, இதற்கிடையில் பூமாதேவிக்கும் தகவல் கொடுத்திருந்தான் கார்த்திக்.
கார்த்திக் சொன்ன மருத்துவமனைக்கு விரைந்து வந்த பிரகல்யா தான் கர்ப்பமாக இருப்பதை சுத்தமாக மறந்து தான் போனாள்.
வழி முழுவதும் காந்திமதி தான் அவளை நல்லபடியாக அழைத்துக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு சேர்த்திருந்தார்.
அத்தியாயம் 22:
ரிசப்ஷனில் விஷ்ணுவை பற்றி விசாரித்துவிட்டு அவர்கள் சொன்ன அறைக்கு ஓட்டமும் நடையுமாக செல்ல, அங்கு முகம் கசங்க வேதனையுடன் நின்று கொண்டிருந்தான் கார்த்திக்.
அவளை கண்டதும் அவன் பக்கத்தில் அகல்யா பதட்டமாக வந்தவள் "அண்ணா அவருக்கு என்னாச்சு? அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை தானே!" என்றாள் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு.
" கொஞ்ச நேரத்துல டாக்டரே வந்துடுவார் அமைதியா இருமா.. " என்றவன் அவள் முகத்தை பார்க்கும் சக்தியில்லாமல் அப்படியே அமர்ந்து விட்டான்.
விஷ்ணுவை பரிசோதித்துவிட்டு மருத்துவர் வெளியில் வர, அழுது கொண்டிருந்தவள் டாக்டர் வெளியில் வந்ததும் அவரிடம் விரைந்தவள் " டாக்டர் என் ஹஸ்பண்டுக்கு ஒன்னும் இல்லயே அவர் நல்லா இருக்காரா? " என்றாள்.
" ரொம்ப சாரிமா உன் ஹஸ்பண்டுக்கு தலையில பலமா அடிபட்டுருக்கு.. அவருக்கு இந்த இடைப்பட்ட நாட்களில் நடந்த விஷயம் எல்லாம் மறந்து போயிடுச்சு.. இத நாங்க ஷார்ட் மெமரிலாஸ்னு சொல்லுவோம்.. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது தலையில் பலமாக அடிபட்டதால பழைய விஷயம் எதையாவது யோசித்து அவருக்கு தலைவலி வந்தா உயிருக்கு ஆபத்தா போயிடும்.. அதனால அவரை அப்படியே விட்டுடுங்க.. "எனவும் ஜீவனில்லாமல் அப்படியே நின்று விட்டாள்.
" அம்மாடி பிரகல்யா வேண்டாம்.. இதுக்கு முன்னாடி நீ இப்படி இருக்கும் போது நீ ஒரு ஆளா இருந்தா இப்ப உன் வயித்துல ஒரு குழந்தை இருக்கு நீ இப்படி மனசு கஷ்டப்பட்டா அது உன் குழந்தையை பாதிக்கும்.. " என்று காந்திமதி சொல்ல, அவரைப் பேரதிர்ச்சியுடன் பார்த்த கார்த்திக் ஒரே நாளில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கிடைக்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனான்.
விஷயம் கேள்விப்பட்டு வந்த பூமாதேவிக்கு மருத்துவர் சொன்ன தகவலை கார்த்திக் சொல்ல, அவரிடம் பகிர அவன் சொன்னதைக் கேட்டு தன் பேரனுக்கு இப்படி ஒரு நிலைமையா? என கதறி அழுதுவிட்டார்.
" அது மட்டுமில்ல பாட்டி இப்ப உங்க மருமகள் உங்க வீட்டு வாரிச சுமந்துகிட்டு இருக்கிறாள்.. இப்ப அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? பாவம் அந்த பொண்ணு ஏற்கனவே அவங்க அப்பாவை இழந்திட்டு நிக்குது இப்ப புருஷனுக்கு பழசு எல்லாம் மறந்து போயிடுச்சு.. இந்த நிலைமையில நீங்க என்ன முடிவு எடுக்க போறீங்க? " என்றதும் ஒரு கணம் பூமாதேவி பரவசமாக பிரகல்யாவை பார்த்தார்.
அடுத்த கணமே இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு சோதனையா? என்று மனதிற்குள் மருகிப் போனார்.
பிரகல்யா பக்கத்தில் வந்தவர் அவள் தலையில் கையை வைத்து வருடி கொடுக்க, மிகப்பெரிய காட்டில் தொலைந்த புள்ளி மான் போல் அவள் பார்வை அங்குமிங்கும் அழைப்புறுதலைக்கண்டு அவளுக்காக மனதுக்குள் மிகவும் பரிதாபபட்டார்.
" டாக்டர் சொல்றதையும் தாண்டி விஷ்ணு கண் விழித்து பார்த்தானா? அவன்கிட்ட அவனோட மனைவியை காமிச்சீங்களா என்ன சொன்னான்? " என்று கார்த்திக்கிடம் தவிப்பாக கேட்டார்.
அவர் கேட்டதற்கு சலிப்பாக இரு பக்கமும் தலையை ஆட்டியவன் " அதையும் நாங்க செஞ்சு பார்த்துட்டோம் அவனுக்கு நினைவு வந்ததும் அவன் முன்னாடி அவன் பொண்டாட்டியை கொண்டு போய் நிறுத்துனா அவன் கூட சின்ன வயசுல இருந்து பழகுறதால என்னை பத்தி ஞாபகம் இருக்கு ஆனா இடையில் உள்ள ஞாபகம் எல்லாம் போயிடுச்சு.. அவனுடைய சொந்த பொண்டாட்டிய என்கிட்ட யாருன்னு கேட்கிறான்.. பழைய விஷயம் எதையாவது அவனுக்கு ஞாபகப்படுத்தினா அவன் உயிருக்கே ஆபத்தாயிடும்னு டாக்டர் சொல்லிட்டார்.. இனிமே முடிவெடுக்க வேண்டியது நீங்க மட்டும் தான்.. " என்றவன் இத்தனை நேரம் நண்பனுக்கு நண்பனாக பேசியவன் இப்பொழுது தன் தங்கைக்கு அண்ணனாக மாறிப்போனான்.
கண்களை மூடி திறந்த பூமாதேவி அகல்யாவை பார்த்தவர் " எந்த ஒரு பொண்ணுக்கும் வரக்கூடாத நிலைமை உனக்கு வந்திருக்கு.. அந்தக் கடவுள் உனக்கு ஏன் இத்தனை சோதனை கொடுக்கிறார்னு எனக்கு தெரியல.. உன்னால உன் புருஷன விட்டு பிரிஞ்சு இருக்க முடியுமா?"என விஷ்ணு தன்னை யார்?என்று கேட்டதிலிருந்தது உணர்வுகளை தொலைத்து நின்ற பறவை இப்பொழுது பூமாதேவி கேட்ட கேள்விக்கு தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து கண்ணீரோடு அவரைப் பார்த்து இல்லையென வேகமாக தலையாட்டினாள்.
" என்ன மன்னிச்சிடுமா உன்கிட்ட இப்படி பேசுறதுக்கு.. உனக்கு உன் புருஷன் உயிர் முக்கியம்னா எனக்கு என் பேரன் உயிர் ரொம்ப முக்கியம். அதே நேரம் என் வீட்டு மருமகள் என் வாரிசு ரெண்டுமே எனக்கு முக்கியம் தான்.. இதையெல்லாம் யோசித்து தான் இந்த முடிவை நான் சொல்றேன் உனக்கு குழந்தை பிறக்கிற வரை நீ உன் அம்மா கூட இங்கேயே இரு.. குழந்தை பிறந்ததுக்கப்புறம் விஷ்ணுவுக்கு ஞாபகம் ஏதாவது வருதான்னு பார்ப்போம்.. "என அதற்கு வேகமாக முடியாது என்று மறுப்பாக அகல்யா தலையசைக்க, ஒரு பெண்ணாக அவளது உணர்வுகளை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
கண்களை மூடி திறந்தவர் நிதானமாக அவளிடம் " சரிமா உன்னால் அவனை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது சரி.. அவன்கிட்ட எப்படி உன்னை நான் ஒண்ணா இருக்க வைக்க முடியும் காரணம் கேட்டால் நான் என்னன்னு சொல்றது? அவனுக்கு ஏதாவது பழசை ஞாபகப்படுத்தி அவன் உயிருக்கு ஆபத்து வந்தா அதை உன்னால தாங்கிக்க முடியுமா.. அவனோட உயிருக்கு நீயே ஆபத்தா வர போறியா? " என்றவர் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் மனதை குத்தி காயப்படுத்தும் என்று தெரிந்தாலும் வேறு வழியே இல்லாமல் தன்னை இந்த நிலைமைக்கு தள்ளிய தன் விதியை மனதுக்குள்ளயே சபித்தார்.
அவர் கேட்டதற்கு இரு பக்கமாக இல்லையென்று தலையாட்டிய பிரகல்யா கதறி அழுக, அதை தாங்க முடியாத காந்திமதி பூமாதேவியிடம் சண்டைக்கு சென்றார்.
ஒரு பெண்ணின் தாயாக அவர் தன்னிடம் சண்டையிடுவதை அமைதியாக கேட்டுக் கொண்ட பூமாதேவி " அப்ப நீங்களே இந்த பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுங்க.. " என்றவர் அமைதியாக விட, காந்திமதியும் அதற்கு மேல் பேச முடியாமல் அமைதியாகிவிட்டார்.
" பாட்டி சொல்றதுதான் இப்ப எல்லாருக்குமே நல்லது.. நம்ம எல்லாருக்குமே விஷ்ணு மட்டும் தான் இப்போதைக்கு முக்கியம் அதனால பாட்டி சொல்றத கேட்டுட்டு எல்லாரும் இப்போதைக்கு அமைதியா இருக்கறது தான் நல்லது.. அகல்யா இப்ப நீ கர்ப்பமா இருக்க இப்ப இருக்க மனநிலையில் நீ சந்தோஷமா இருக்குறது தான் எங்க எல்லாருக்குமே ரொம்ப முக்கியம்.. நீ மாசமா இருக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கணும் அப்பொழுது தான் உன் வயித்துல வளர குழந்தையும் நல்லா இருக்கும்.. எல்லா பொண்ணுக்குமே மாசமா இருக்கும்போது புருஷன் தன் பக்கத்துல இருக்கணும்னு ஆசை இருக்கும்.. ஆனா உன்னோட விஷயத்தில் அது எதுவுமே உனக்கு கிடைக்காது.. இதுதான் உன்னோட தலைவிதி போல.. உனக்கு அந்த கடவுள் இத்தனை கொடுமை செய்ய வேண்டாம்.. நானும் உன்னை கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு என் நண்பன் உயிரை காப்பாற்றி கொடு.. "என்று நெடுஞ்சான் கிடையாக அகல்யா காலில் விழுந்து விட்டான் கார்த்திக்.
" ஐயோ அண்ணா என்ன பண்றீங்க? ஏற்கனவே நான் என்ன பாவம் பண்ணேன்னு தெரியலை என் உயிருக்கு உயிரான அப்பா என்னை விட்டுட்டு போயிட்டாங்க.. அவருக்கு அடுத்து நான் என் உயிரயே வச்ச என் புருஷன் என்னை மறந்துட்டார் இனி எனக்குன்னு மிச்சம் இருக்கிறதே என்னோட குழந்தை மட்டும் தான்.. என்னோட கால்ல விழுந்து இன்னும் என்னை பாவம் பண்ண வச்சு என் குழந்தையையும் என்கிட்ட இருந்து பிரிச்சுடாதீங்க.. நீங்க எல்லாரும் என்கிட்ட கேட்டது போல நான் இனிமேல் அவர் வாழ்க்கையில் வரமாட்டேன்.. அப்படியே வந்தாலும் அவர் மனைவி என்கிற அந்தஸ்தில் வரவே மாட்டேன்.. " என்றவள் காந்திமதியை அழைத்துக் கொண்டு தன் வயிற்றில் உள்ள குழந்தையோடு விஷ்ணுவை கூட பார்க்காமல் அன்று வெளியேறி சென்றவள் தான்.
அதன் பிறகு தன்னுடைய குழந்தை, அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான அவர் உருவாக்கிய கம்பெனி என்று தன் வாழ்க்கையை முழுமையாக வேறு போல் மாற்றிக் கொண்டாள்.
சந்திரசேகர் நினைத்தது போலவே தைரியசாலியாக உருவாக்கினாள்.
அவளாக மாறினாள் என்பதை விட, பொறாமை சூழ்ந்த உலகத்தில் வக்கிரம் நிறைந்த ஆண்களுக்கிடையில் அவள் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
அவளோடு துணைக்கு இருந்த ஒருவர் காந்திமதி மட்டுமே.
அகல்யா அங்கிருந்து சென்றதும் கண்ணீரோடு கார்த்திக் பூமாதேவி இருவரும் விஷ்ணுவை தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
தலையில் கட்டுடன் வந்த மகனை பார்த்து கதறிவிட்டார் சீதா.
அவனுக்கு என்னவாயிற்று என்று அனைவரும் கேட்டதுக்கு ஒரே வார்த்தையாக பூமாதேவி " வண்டியில போயிட்டு இருக்கும்போது வண்டி ஸ்கிப் ஆயிடுச்சு.. தலையில அடிபட்டு கொஞ்ச நாள் இடையில் நடந்த விஷயங்கள் எல்லாமே மறந்து போயிடுச்சு.. அதனால இனிமே அவன் தனியா இருக்க வேண்டாம்னு என் கூடவே இருக்கட்டும்னு நான் கூட்டிட்டு வந்துட்டேன்.. இடையில் நடந்த விஷயம் எதையும் அவன் கிட்ட கேட்க வேண்டாம் அப்படிக் கேட்டு அவன் யோசிக்கும்போது அவன் உயிருக்கே ஆபத்தாயிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க.." என்றவர் கார்த்திக் விஷ்வா உதவியோடு விஷ்ணுவை அவனது அறையில் சேர்த்தார்கள்.
விஷ்ணுவை அவன் அறையில் விட்ட கார்த்திக் பூமாதேவியை சந்திப்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றான்.
" எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாருக்கு பாட்டி.. வாழ வேண்டிய ரெண்டு பேருமே இப்படி பிரிஞ்சிருக்காங்க.. அதுவும் அகல்யா இந்த குடும்பத்தோட வாரிசை சுமந்துகிட்டு இருக்கும்போது யாரும் இல்லாத அனாதை மாதிரி இப்படி தனியா இருக்குறத பாக்கும்போது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. "
" என்ன பண்றது கார்த்திக் எல்லாமே விதி இதுல நம்ம எதுவுமே பண்ண முடியாது.. நடக்கிறது நடந்துகிட்டு தான் இருக்கும் நடக்கிறத அப்படியே ஏத்திக்கிட்டு நம்ம அமைதியா இருக்கிறது தான் நல்லது.. கண்டிப்பா எப்படியாவது அகல்யாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுதுவேன் கவலைப்படாதே.." என்றார் பெருமூச்சோடு.
விஷ்ணுவிற்கு இடைப்பட்ட நாட்களில் அனைத்தும் மறந்து போக, அதன் பிறகு அவன் முழுமையாக மாறி போயிருந்தான்.
அவனுக்கு இடைப்பட்ட விஷயங்கள் மறந்து போயிருந்தாலும் அதன் தாக்கம் அவனது அடி மனதில் அப்படியே புதைந்து தானிருந்தது.
அவனது மனம் அவனிடம் எதையோ சொல்ல துடிக்க, அது என்னவென்று அவன் உணரும் முன்பாக தலைவலி வர,தலைவலி தாங்க முடியாமல் அவன் தலையை பிடித்துக் கொண்டு கத்தும் போதெல்லாம் அனைவரும் அவன் வலியில் தான் கத்துகிறான் என்று கவலைப்பட, பூமாதேவி ஒருவர் மட்டுமே அவன் மனதளவிள் அனைத்தையும் மறந்து போனபோது கூட ஏதேதோ நினைவில் தாக்கத்தில் இப்படி கதறுகிறானே என்று
தாங்க முடியாதவர் அவன் நினைவை திசை மாற்றுவதற்காக தான் அவனிடம் வேண்டுமென்றே சண்டை போடுபவர் எதையாவது ஒன்றை சொல்லி சொல்லி அவன் ஞாபகத்தை திசை திருப்ப, அது அத்தனையும் அப்படியே வேலை செய்தது.
கார்த்திக் அகல்யாவிற்கு துணையாக வருகிறேன் என்று சொல்லிவிட, அவளோ தன்னிடத்திலிருந்து தன் கணவனை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கேட்க அவளுக்கு மறுப்பு சொல்ல முடியாத கார்த்திக், ஒப்புக்கொண்டான்.
அப்படியே காலங்கள் கடந்து செல்ல ஒன்றரை வருடங்கள் போகின.
ஒவ்வொரு மாதமும் அவளை பார்ப்பதற்காக வந்து விடுவார் பூமாதேவி.
அவளும் அதற்கு எந்தவிதமான மறுப்பும் சொல்லவில்லை.
இப்படியே நாட்கள் கடந்து போயிருக்க,தன் வம்சத்தின் மூத்த வாரிசை தனது கையில் ஏந்திய பூமாதேவி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.
" அப்படியே விஷ்ணுவை உரிச்சு வச்சு குழந்தை பிறந்திருக்கிறான்.. என் வாரிசு வந்த நேரமாவது என் பேரனோட பொண்டாட்டிக்கு ஒரு நல்லது நடந்தா சந்தோசம் தான்.. "
" நான் சந்தோஷமா தான் இருக்கேன்.. எனக்குன்னு இனிமே சொந்தம்னு சொல்லிக்க என்னோட மகன் இருக்கிறான் இனிமே உங்க பேரனுக்கு நினைவு வந்தாலும் சரி வராமல் போனாலும் சரி எனக்கு அதை பத்தி கவலையில்லை எனக்கு என்னோட குழந்தை மட்டும் போதும்.. " என்று பக்குவப்பட்ட பெண்ணாக பேசியவளை ஆச்சரியமாக பார்த்தார் பூமாதேவி.
பாலைவனமாக இருந்த அகல்யா வாழ்க்கையை குளிர்ந்த பூஞ்சோலையாக மாற்றுவதற்காகவே பிறந்த குழந்தை தான் அவளது மகன் ராகுல்.
காந்திமதி அகல்யாவை வளர்த்தது போலவே அவளது குழந்தையையும் வளர்க்க ஆரம்பித்தார்.
குழந்தைக்கு ஆறு மாதம் வரை அவள் தாய்ப்பால் கொடுக்க அதற்கு மேல் அவளுக்கு சுத்தமாக பால் இல்லாமல் வற்றிப்போனது.
அதன் பிறகு குழந்தைக்கு புட்டி பால் கொடுக்க, இதை தெரிந்து கொண்டு அவளைப் பார்க்க வந்தார் பூமா.
முதலில் குழந்தையை கொஞ்சி முடித்தவர் அகல்யாவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.
" நீ விஷ்ணுவை பார்த்து ரெண்டு வருஷம் ஆயிடுச்சு?இப்பவும் உனக்கு விஷ்ணுவை பார்க்கணும் அவன் கூட சேர்ந்து வாழ ஆசையில்லையா?" என்றவருக்கு கசப்பான ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தாள்.
" என் அப்பா என்னை விட்டுட்டு போனதுக்கப்புறம் என் அப்பாவோட அன்பை முழுமையாக எனக்கு கொடுத்தது என்னோட விஷ்ணு மட்டும் தான்.. அவர் இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கையே கிடையாது ஆனால் அவர் வாழ்க்கையில் நான் வந்தா அவர் உயிருக்கே ஆபத்துன்னு நீங்க தானே அவர என் வாழ்க்கையை விட்டு என்னை விலக்கி வச்சீங்க.."
" நீ பேசுறதுல இருந்து உன் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்குன்னு எனக்கு நல்லா புரியுதுமா.. உன்னையும் அவனையும் எப்படி ஒன்னு சேர்ப்பதுன்னு எனக்கு இப்பவும் புரியல.. " எனவும் சோர்ந்து போனாள் அகல்யா.
அப்போதுதான் குழந்தையை பார்ப்பதற்காக கார்த்திக் அங்கு வந்தான்.
வந்தவன் பூமாதேவியை கண்டு அவரிடம் நலம் விசாரித்துவிட்டு குழந்தையை வாங்கிக் கொஞ்சியவன் " பாட்டி உங்க வீட்டுக்கு வேலை செய்வதற்கு ஒரு வேலைக்கார பொண்ணு வேணும்னு கேட்டு இருந்தீங்கல்ல.. எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வேலைக்கு வரேன்னு சொல்லி சொல்லுது நீங்க குடுக்குற சம்பவம் என்னவா இருந்தாலும் வாங்கிக்கிறேன்னு சொல்லுது உங்களோட முடிவு என்ன? "
" யாராயிருந்தாலும் பரவால்ல கார்த்திக்.. எனக்கு தேவை வீட்ட நல்லபடியா வச்சிக்கிறதுக்கு ஒரு ஆளு.. என் மகள் மருமகள் இரண்டு பேருக்கும் அடிக்கடி ஊருக்குள்ள திருவிழா ஏதாவது நடந்து கொண்டே இருப்பதால் வீட்டுக்கு விருந்தாளி வந்துகிட்டே இருக்காங்க அவங்களால வேலை பார்க்க முடியல எங்க வீட்டு பொண்ணுங்க வேலை பாக்குறதுனாலே காத தூரம் ஓடுங்க.. யாரா இருந்தாலும் எனக்கு ஓகே தான்.. " எனவும் அவருக்கு சரியென்று தலையசைத்தான் கார்த்திக்.
அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அகல்யா மனதுக்குள் ஒரு யோசனை உதிக்க, அதை வாய் விட்டு கேட்டு விட்டாள்.
" நான் ஏன் உங்க வீட்டுக்கு அந்த வேலைக்காரியா வரக்கூடாது பாட்டி.. உங்க வீட்டுக்கு நான் வேலைக்காரியா வந்தா யாருக்கும் சந்தேகம் வராது நீங்களும் எனக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த கல்யாணத்தை இன்னும் உங்க வீட்ல சொல்லல.. என்னை பத்தியும் உங்க வீட்ல யாருக்கும் தெரியாது என்னால இனிமே என் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது காந்திமதி அம்மா குழந்தையை பார்த்துக்கட்டும் நானும் அப்பப்ப வந்து என் குழந்தையை பார்த்துக்கிறேன்.." எனவும் அவளது நிலையை நினைத்து அங்கிருந்த அனைவருக்கும் கண்ணீர் தான் வந்தது.
" இங்க பாருமா கவலைப்படாத எப்படியாவது உன்னை அவன் கூட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு நான் உனக்கு சத்தியம் பண்ணி தரேன் தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாத எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாருக்கு.. அங்க நீ வந்துட்டா உன்னோட குழந்தை பாவம் அதை யார் பார்த்துக்குவா.. "
" குழந்தையையும் நான் என் கூடவே கூட்டிட்டு வரேன் ஆனா என் பக்கத்துல இருக்க மாட்டாங்க.. அம்மாவையும் குழந்தையையும் பக்கத்துல இருக்குற மாதிரி யாருக்கும் தெரியாமல் தங்க வைக்கிறேன்.. "
" வாயை மூடு அகல்யா நான் இருக்கும் போது என் குழந்தையை பார்த்துக்க யாரும் தேவையில்லை.." என்றபடி அங்கு வந்தார் கார்த்திக்கின் தமக்கை கல்யாணி.
கார்த்திக் பெரியம்மாவின் புதல்வி தான் கல்யாணி. கல்யாணிக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்துவிட அவளுடைய பெற்றோர்களும் அதை அசிங்கமாக கருதி அவரை விரட்டிவிட அவரை தாங்கும் பொறுப்பு கார்த்திக் உடையது.
தனியாக இருந்த கல்யாணியை அகல்யாவிற்கு துணையாக கொண்டு வந்து சேர்த்து விட்டவன் அவன் தான்.
குழந்தை இல்லாத கல்யாணியும் அகல்யா நிலைமையை கண்டு மிகவும் பரிதாபபட்டார்.
குழந்தையை வைத்துக்கொண்டு சிரமப்பட்ட அகல்யாவிற்கு கூட பிறந்த அக்காவாக இருந்து இத்தனை நாட்கள் குழந்தையை கவனித்துக் கொண்டு காந்திமதிக்கும் உதவி செய்தவர் தான் படித்த படிப்பை கொண்டு அகல்யாவிற்கு பிசினஸிலும் உதவி செய்ய அவரது உதவியோடு தான் இத்தனை நாட்கள் காலங்களை கடத்திக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
அகல்யா பேசியதை கேட்டு அவளுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.
அவள் பேசும் வரை அமைதியாக இருந்தவள் குழந்தையைப் பற்றிய பேச்சு வரவும் அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
" இங்க பாரு அகல்யா நீ போறது இங்க இருக்கிறது உன்னோட விருப்பம் குழந்தை என்கிட்ட தான் இருக்கும்.. நீ போய் அங்க இருந்துக்கிட்டு அடிக்கடி குழந்தையை பார்க்க வந்தா அது கிராமம் அடிக்கடி சந்தேகம் வந்திடும் அதுக்கப்புறம் உன்னை பற்றி தப்பா பேசுனா உன்னால எப்படி அந்த வீட்டில் வாழ முடியும் சொல்லு அதுவும் இவங்க பெரிய குடும்பம்னு சொல்றாங்க ஊர்ல எல்லாருக்குமே இவங்கள பத்தி தெரிஞ்சிருக்கும்.. நீ போகணும்னு ஆசைப்பட்டா குழந்தையை என்கிட்ட விட்டுட்டு போயிடு.. நான் ஒன்னும் குழந்தையை மொத்தமா கேட்கல உனக்கு விருப்பமா இருக்கும்போது வந்து பாத்துக்கோ உன் குழந்தையை நான் நல்லபடியா பார்த்துகிறேன் உன் புருஷன நீ நல்லபடியா பார்த்துக்கொள்.. "எனவும் அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதால் அமைதியாக இருந்த அகல்யா ஒரு பக்கம் தன் கணவன் மற்றொரு பக்கம் தன் குழந்தை எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் திணறினாள்.
கண்களை மூடி சிறிது நேரம் யோசித்தவள்
" எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத நிலைமை எனக்கு வந்திருக்கு.. ஒரு பக்கம் என் உயிருக்கு உயிரான புருஷன் இன்னொரு பக்கம் என் வாழ்க்கைக்கு அர்த்தமான என்னோட குழந்தை.. விஷ்ணு இல்லாம என்னால என் குழந்தையை வளர்க்க முடியும் தான் ஆனா என் குழந்தைக்கு அப்பாவோட அன்பு வேணும் உங்க வீட்ல வந்து நான் வேலை செய்கிறேன் பாட்டி விஷ்ணுவுக்கு என்னை பற்றி ஞாபகம் வந்தாலும் சரி வராமல் போனாலும் சரி எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை கிடையாது அவர் முகத்தை பார்த்துகிட்டு என் கடைசி காலத்தை நான் கழித்து விடுகிறேன்.. கல்யாணி அக்கா என்னை விட என் குழந்தையை நல்லபடியா பாத்துக்குவாங்க.. " என்றவள் அத்தோடு அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.
பூமாதேவிக்கும் அகல்யாவையும் விஷ்ணுவையும் சேர்ப்பதற்கு வேறு வழி தெரியாத காரணத்தால் அவளை தன் வீட்டு வேலைக்காரியாகவே அறிமுகப்படுத்தினார்.
தன்னுடைய சொந்தம் என்று அறிமுகப்படுத்தினால் அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அவருடைய சொந்தங்கள் யார்? என்று தெரியும் என்ற காரணத்தால் இவளை யாரென்று சொல்லி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் இறுதியாக வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
கல்யாணி சொன்னது போலவே குழந்தையை நல்லபடியாக பார்த்துக் கொள்ள, கார்த்திக் அவளுடைய பிசினஸை பார்த்துக் கொண்டான்.
ஆபீஸில் வேலை பார்க்கும் அனைவரிடமும் அகல்யா அமெரிக்கா செல்வதாக சொல்லியவள் அவள் சொன்னது போலவே முதலில் கல்யாணியை அழைத்துக் கொண்டு அமெரிக்கா தான் சென்றாள்.
" நான் இங்க இருந்தா என்னோட குழந்தையை வந்து அடிக்கடி பாக்கணும்னு என் மனசு துடிக்கும்.. இப்போதைக்கு விஷ்ணுவை சரி பண்றது தான் எனக்கு முதலில் முக்கியம் அதனால குழந்தையை நீங்க இங்கேயோ பார்த்துக்கோங்க அக்கா.. " என்றவள் குழந்தையை அவரிடமே விட்டு விட்டு வந்து விட்டாள்.
பிரகல்யா டிரஸ்ட் ஆரம்பித்து அதன் முழு பொறுப்புகளையும் காந்திமதியிடம் கொடுத்து விட்டாள்.
அவரை பார்ப்பதற்காக தான் அவள் பூமாதேவியிடம் விடுமுறை கேட்டுவிட்டு வந்து பார்த்துவிட்டு போவாள்.
விஷ்ணுவிற்கும் சுரேகாவிற்கும் திருமணம் என்று கேள்விப்பட்டு அகல்யா என்ற பெயரில் இருக்கும் தென்றலுக்கு போன் அடித்துப் பேசிய கார்த்திக்கு தான் தன் மகன் ராகுல் ஒருவனே போதும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் அகல்யா.
அகல்யா முன்பிருந்தது போல் அல்லாமல் முழுமையாக தன் வேடத்தை மாற்றிக் கொண்டு அந்த வீட்டிற்கு வேலைக்கு சென்றாள்.
எங்கே தன்னை அடையாளம் கண்டு கொண்டு விஷ்ணு யோசித்து பார்த்தால் அதனால் அவன் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில் அப்படி ஒரு வேஷம் போட்டுக் கொண்டு சென்றாள்.
முதன்முதலாக பூமா அவளை தன் மருமகளாக தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய பெண்ணை வேலைக்காரியாக அழைத்துச் செல்வதை எண்ணி மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொண்டவர் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று புதிதாக வீட்டு வேலைக்கு சேர்த்த பெண் என்று சொல்லியவர் அவர்களையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அப்படியே அவள் கண்களில் விஷ்ணு தென்பட்டான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விஷ்ணுவை கண்டவள் கண்கள் அவனை நினைத்து கலங்கி தான் போனது.
அவனுடன் இருந்த நாட்களும் அவன் தன் மீது காட்டிய காதலும் அவளுக்கு நினைவு வந்து வதைத்தது.
விஷ்ணுவிற்கு பழைய விஷயங்கள் மறந்து போயிருந்தாலும் அகல்யாவின் நினைவுகள் ஏதேதோ ஒன்றொன்று கோர்வையாக அவனுக்கு நினைவுகள் வந்தன.
அவனது கற்பனையில் அவளை நினைவுபடுத்தி பார்க்க, என்ன முயன்றும் அந்த முகம் நினைவிற்கு வரவில்லை.
அதனால் தான், கார்த்திக்கிடம் மட்டும் அந்த விஷயத்தை சொல்லியவன் யாராவது தன் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்களா? என்று கேட்க, உண்மையை தெரிந்து வைத்திருந்தவனுக்கு நண்பனிடம் உண்மையை மறைப்பதை நினைத்து கவலைப்பட்டவன் வேறு வழியில்லாமல் உண்மையை மறைத்து எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டான்.
கார்த்திக் சொன்னதும் விஷ்ணு ஒன்றும் அப்படியே விட்டுவிடவில்லை.
அவனால் முடிந்தவரை அந்தப் பெண் எங்காவது தன் கண்களில் தென்படுகிறாளா? என்று தேடிப் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்.
அந்தப் பெண்ணின் கண்கள் மட்டும் அவனது மனதில் ஆழ்ந்து பதிந்து போக, அவன் வீட்டில் வேலைக்கு சேர்ந்த தென்றல் கண்கள் ஒத்துப்போக, அதனால்தான் அவளை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் வேறு பக்கம் பார்ப்பவன் தன் மனதிலிருக்கும் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கோபத்தை அவள் மீது காட்ட, விஷ்ணுவிற்கு அவளை பிடிக்காமல் போனதால் சுரேகாவிற்கும் அவளை பிடிக்காமல் போக இருவரும் சேர்ந்து அவளை வாட்டி வதைக்க ஆரம்பித்தார்கள்.
அப்படி அவர்கள் பேசும்போதெல்லாம் உண்மை தெரிந்த பூமாதேவி மட்டுமே அவளுக்கு ஆதரவாக இருந்தவர், இப்பொழுது சுரேகா விஷ்ணு திருமண விஷயத்தில் பொறுமை காத்ததும் விஷ்ணுவிற்கு இப்படியாவது அவனது திருமணம் நினைவு வந்துவிடாதா?என்பதற்காகத்தான்.
ஆனால், அவர் எதிர்பார்த்தது போலவே இறுதிவரை விஷ்ணுவிற்கு பழைய விஷயங்கள் நினைவு வராமல் போக வேறு வழியில்லாமல் அதனால் தான் உண்மையை போட்டு உடைத்தவர் முன்னேற்பாடாக கல்யாணியையும் குழந்தையை அழைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வர வைத்திருந்தார்.
வாரம் ஒரு முறை தனது புத்தகங்களுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த விலை உயர்ந்த தனது மொபைல் போனை எடுத்து மகனுக்கு அடித்து பேசும் அகல்யா பேசும் போதெல்லாம் விஷ்ணுவின் புகைப்படத்தை காட்டி தந்தையையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்க அதனால்தான் எளிமையாக ராகுல் விஷ்ணுவை கண்டதும் ஓடிச் சென்று அணைத்து கொண்டான்.
இப்படி பழைய விஷயங்களை அனைவரும் நினைத்து பார்த்துக் கொண்டிருக்க அகல்யா தன் மடியில் சுயநினைவு இல்லாமல் படுத்திருக்கும் கணவனை வேதனையுடன் பார்த்தவள் அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.
இனி விஷ்ணு கண் விழித்த பிறகு எடுக்க போகும் முடிவு தான் என்ன?
அத்தியாயம் 23:
" கடவுளே என் கணவனுக்கு எதுவும் ஆகிட கூடாது இத்தனை வருஷம் என்னையும் அவரையும் பிரிச்சு வச்சு கஷ்டப்படுத்திட்டீங்க இனிமேலாவது எனக்கு ஒரு நல்லதை ஏற்பாடு பண்ணி குடுங்க என் புருஷனுக்கு ஏதாவது ஒரு அதிசயத்தை நிகழ்த்தி எல்லா ஞாபகமும் வந்துடனும்.. எல்லா பொண்ணுங்கள மாதிரி நானும் குடும்பம் குழந்தைன்னு சந்தோசமா வாழனும் உதவி பண்ணுங்க.. " என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டவள் இரண்டு வருடங்கள் அங்கு இருந்ததால் அத்தனையும் அத்துபடியாகி போயிருக்க, அதனால் எளிமையாக அவனுக்கு சிகிச்சை கொடுக்க தகுதியான மருத்துவமனையில் அவனை சேர்த்து விட்டாள்.
ஊருக்கு பக்கத்திலேயே அந்த மருத்துவமனை இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு விஷ்ணுவைப் பற்றி தெரியும் என்பதால் யாரும் எதுவும் சொல்லாமல் உடனடியாக அவனுக்கான சிகிச்சையை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
வெளியிலிருந்த இருக்கையில் தன் உயிரை கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்
பிரகல்யா எனும் தென்றல்.
வெளியில் அமர்ந்திருந்தவள் கடவுளிடம் கோடி கோடி வேண்டுதல்களை வைத்திருக்க, உள்ளே விஷ்ணுவுக்கு சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
பழைய விஷயத்தை நினைத்து பார்த்துக் கொண்டிருந்த பூமாதேவியை கலைத்தது கார்த்திக்கின் குரல்.
" பாட்டி நீங்க வர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தாச்சு.." எனவும் பழையதை எல்லாம் நினைத்து அழுது கொண்டிருந்த பூமாதேவி
தன் கண்களை துடைத்து விட்டு தன்னிடம் பல்லி போல் ஒட்டிக்கொண்ட தனது இரண்டு வயது பேரனை தூக்கிக்கொண்டு கிராமத்திலிருந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.
அந்த வீட்டை கண்டதுமே ஆரவாரமான ராகுல் பூமாதேவிடமிருந்து இறங்கி அந்த வீட்டிற்குள் ஓடினான்.
அங்கு தான் பிணியின் காரணமாக மிகவும் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார் காந்திமதி.
அன்று இவரை பார்ப்பதற்காக தான் வந்திருந்தாள் தென்றல். ( ஆரம்பம் முதலே தென்றல் என்னும் பெயருடன் பயணித்ததால் விஷ்ணுவிற்கு ஞாபகம் வரும் வரை இதே பெயருடன் கதை தொடரும் )
" அம்மாச்சி எப்படி இருக்கீங்க? நீங்க என்கிட்ட போன் பேசி ரொம்ப நாளாச்சு தெரியுமா? " என்றான் இரண்டு வயதான ராகுல்.
பேரனை கண்டதும் சந்தோஷமாக இருந்தது அவருக்கு.
" வயசாயிடுச்சுல்ல அதான் கண்ணா அடிக்கடி போன் பண்ண முடியல.. அதோட டிரஸ்ட்ல உன்ன மாதிரி எத்தனையோ சின்ன குழந்தைகள் எல்லாரும் இருக்காங்கல்ல அத்தனை பேரையும் நான் ஒருத்தி தானே பார்த்துக்கணும்.."என்றவர் அவனை அள்ளி உச்சி முகர்ந்தார் .
" இந்த வாண்டு பையன் இங்க வந்ததுமே என்னை மறந்துட்டான் பாத்தீங்களா? " என செல்லமாக சலித்துக் கொண்டார் கல்யாணி.
" இல்லம்மா அம்மாச்சி தானே பாவம் எப்பவும் நான் உங்க கூட தான் இருக்கேன்.. " என்றான் சமாதானமாக ராகுல்.
" நான் சும்மா சொன்னேன்டா கண்ணா.." என்றவர் ராகுலுக்கு கிச்சுகிச்சு மூட்ட அவனோ தன் வாய்விட்டு சிரிக்க, அங்கிருந்த சூழலை அது இலகுவாக்கியது.
குழந்தை விளையாடுவதற்காக வெளியில் ஓடிவிட, பூமாதேவி அவர்கள் இருவரிடமும் சம்பிரதாயமாக நலம் விசாரிக்க,பதிலுக்கு அவர்களும் விசாரித்தார்கள்.
" நடந்த எல்லா விஷயத்தையும் கேள்விப்பட்டு இருப்பீங்க.. ஆரம்பத்துல நான் என் பேரனுக்கும் சுரேகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு நினைச்சு எல்லாருமே ரொம்ப என் மேல கோவமா இருந்தீங்க.. எனக்கு என் பேரனை பத்தி நல்லா தெரியும் அவனால அவன் பொண்டாட்டியை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. ஒருவேளை இந்த கல்யாண ஏற்பாட்டுலயாவது அவனுக்கு நடந்த கல்யாணம் ஞாபகம் வருமான்னு பாக்கத்தான் இந்த ஏற்பாடு பண்ண சொன்னேன்.. மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி தென்றலை என் வீட்டிலேயே வேலைக்காரியா வச்சுக்கணும் என்கிற எண்ணமில்லை.."
" பரவாயில்லங்க எங்களுக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருந்துச்சு.. பாவம் அந்த பொண்ணு வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்ட பொண்ணு உங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை.. பேறு காலத்தில் புருஷனோட ஆதரவு ஒவ்வொரு பொண்ணுக்கும் ரொம்பவே அவசியம்.. ஆனா என்னோட பொண்ணு அது கூட இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு போயிட்டா.. அவளுக்கு இனிமேலாவது நல்லது நடக்கணும் அது இனிமேல் உங்களால் தான் முடியும்.. "
" கவலைப்படாதீங்க விஷ்ணுவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு இனிமே எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான்.. " என்றவர் பேரன் என்ன செய்ய காத்திருக்கிறானோ! என்று மனதிற்குள் பயந்தாலும் அவர்களிடம் ஆறுதல் சொல்லும் பொருட்டு அப்படி சொன்னார்.
" எனக்கு அந்த பொண்ண பத்திக் கூட இப்ப கவலை கிடையாது.. பாவம் இந்த பிஞ்சு பொறக்கும்போதும் சரி இப்பவும் சரி அவனுக்கு அப்பாவோட அன்பும் இல்லை, அம்மாவோட அன்பு வெறும் ஆறு மாசம் மட்டும்தான்.. என்னதான் கல்யாணி பார்த்து பார்த்து வளர்த்தாலும் பெத்த தாய்க்கு ஈடு ஆகாது இல்லையா? " என்று காந்திமதி சொல்லவும் கல்யாணி முகம் வாடிவிட்டது.
" அம்மா நீங்க என்ன பேசுறீங்க? " என்று கோபமாக கடிந்தான் கார்த்திக்.
" நான் சொல்றது இப்போதைக்கு கஷ்டமா தான் இருக்கும் கார்த்திக்.. ஆனா இதுதான் உண்மை ஒரு குழந்தைக்கு தேவை அம்மா அப்பாவோட அன்பு மட்டும் தான் அந்த குழந்தைக்கு இதுவரைக்கும் கிடைக்கல என்கிற ஆதங்கம் எனக்கு பெருசா இருக்கு இதுவரைக்கும் கிடைக்கல ஏன்னா அவனுக்கு விவரம் தெரியல இனிமே போகப் போக அவனுக்கும் எல்லாம் தெரியும்.. இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவாங்களா இல்லையா எனக்கு தெரியாமலேயே காலத்தை கடத்துவதை நினைத்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாருக்கு.. "
" சீக்கிரம் எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதீங்க.. "
" சரி எல்லாரும் இதுக்கு மேலயும் இங்கேயே இருக்க வேண்டாம் எல்லாரும் எங்க வீட்டுக்கு போகலாம் கிளம்புங்க.. " என்று பூமாதேவி சொன்னதும் மூவரும் மறுப்பாக ஆளாளுக்கு ஒன்று சொல்ல, " தென்றல் மேல் அக்கறை இருந்தா எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் என் வீட்டுக்கு வாங்க அது உங்க பொண்ணோட வீடு.." என்று ஒரே வார்த்தையாக சொல்லிவிட, அதற்கு மேல் அவரை மறுத்து பேசாமல் அனைவரும் கிளம்பினார்கள்.
செல்லும் வழியில் பூமாதேவி ராகுலிடம் அவனுடைய சொந்த பந்தங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டு செல்ல, சமத்து குழந்தை அனைத்தையும் சமத்தாக கேட்டுக் கொண்டது.
இங்கு வீட்டிற்கு கோபமாக வந்த சுரேகா தான் நினைத்த அனைத்தும் கானல் நீராக போனதை நினைத்து கோபமடைந்தவள் யார் முகத்தையும் பார்க்க பிடிக்காமல் தன் அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்தினாள்.
அவளுடைய செயலே அவள் எந்தளவிற்கு கோபமாக இருக்கிறாள் என்பதை அனைவருக்கும் உணர்த்த, அவளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று புதுமண தம்பதிகளுக்கு தேவையான சடங்குகளை செய்ய ஆரம்பித்தார்கள்.
அனைத்திலும் இருவருமே ஒட்டாத தன்மையுடன் செய்து முடிக்க, பெண்கள் இருவருக்குமே நினைத்துக் கூட பார்க்க முடியாத சம்பவம் நடந்து முடிந்ததால் அவர்களையே அவர்களால் சமாதானப்படுத்திக் கொள்ள முடியாத போது புதுமண தம்பதிகளை எப்படி அவர்களால் சமாதானப்படுத்த இயலும்?
அனைத்தையும் ஒரு கடமையுடன் செய்து முடிக்க, விஷ்வா ரேணுகா இருவரையும் அவர்கள் அறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கும் படி பணித்தார் சீதா.
விஷ்வா அறைக்குள் நுழைந்த ரேணுகா எப்போதும் அவன் அறைக்குள் நுழைந்தவுடன் எதையாவது நோண்டி வைத்துக்கொண்டு உரிமையுடன் அனைத்தையும் எடுத்து பார்த்து எதையாவது செய்து கொண்டிருப்பவள் இப்பொழுது உரிமைகள் கிடைத்தும் அதை யாவையும் அனுபவிக்க பிடிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
அவளின் தோற்றம் விஷ்வாவின் காதல் மனதை பெரிதும் அசைத்துப் பார்த்தது.
தன் தங்கைக்காக தன் காதல் மனைவியை மனதளவில் மிகவும் நோகடித்திருக்கிறோம் என்று அவனுக்கு புரிந்திருந்தது.
எப்போதும் அவள் தான் அவனிடம் எதையாவது வளவளவென பேசிக் கொண்டிருப்பாள்.
இன்று அப்படி எதுவும் பேசாமல் அவள் அமைதியாக இருப்பது அவனது மனதை குத்திக்கிழித்தது.
அவனும் அப்படியே எதையும் பேசும் மனநிலையில் இல்லாததால் அமர்ந்துவிட்டான்.
மாரியப்பன் இந்திரன் இருவரும் வந்திருந்த அனைவரையும் உபசரித்துவிட்டு கணேசன் விஷ்ணுவை எந்த மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார் என்று கேட்டு அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.
அதே நேரம் வீட்டிலிருந்த பெண்கள் இருவரும் புதுமண தம்பதிகளுக்கான சடங்குகள் அனைத்தையும் முடித்தவாறு அவர்களும் மருத்துவமனையை விசாரித்து தேடி வந்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து சேர, எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லாத தென்றல் தன் கண்களை மூடி தரையில் அமர்ந்திருந்தவள் வாய் மட்டும் விஷ்ணுவின் நாமத்தை இடைவிடாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
அவளைப் பார்ப்பதற்கு அவர்களுக்கே அத்தனை பாவமாக இருந்தது.
அங்கிருக்கும் யாருக்கும் விஷயம் எதுவும் புரியாமல் இருந்தாலும், இத்தனை நாட்களாக அவள் பழகியதிலிருந்து அவள் நல்லவள் என்பது மட்டும் அனைவருக்கும் புரிந்திருக்க, விஷ்ணுவிற்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று அவர்களும் கடவுளை இடைவிடாமல் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வேண்டுதல் பலித்தது போல் கதவை திறந்து கொண்டு வந்தார் மருத்துவர்.
கதவு பக்கத்திலேயே அமர்ந்திருந்த தென்றல் கதவு திறக்கும் சத்தம் கேட்க, வேகமாக எழுந்தவள் " டாக்டர் விஷ்ணுவுக்கு ஒன்னும் இல்லை தானே? அவர் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் வராது தானே! அவருக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன் எப்படியாவது தயவு செஞ்சு அவரை காப்பாற்றி கொடுங்கள்.. " என்றவள் அழுகை அங்கிருந்த அனைவருக்கும் கண்ணீர் வர வைத்தது.
" கவலைப்படாதீங்க நீங்க நினைக்கிறது மாதிரி உங்க ஹஸ்பண்டுக்கு ஒன்னும் ஆகல.. இது மாதிரி முன்னாடியே ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சு பூமாதேவி மேடம் அவரோட ரிப்போர்ட் எல்லாத்தையும் எங்க கிட்ட அனுப்பி வச்சதால ஈஸியா அனலைஸ் பண்ண முடிஞ்சது.. அத வச்சு அவருக்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாத்தையும் முன்னேற்பாடக தான் செஞ்சு வச்சிருந்தோம்.. உங்களோட தாலிக்கு பலம் ரொம்ப அதிகம் அதனால அவருக்கு ஒன்னும் ஆகல.. இருந்தாலும் இதே மாதிரி எப்பவும் இருக்கும்ன்னு என்னால உறுதியா சொல்ல முடியாது.. உங்க விஷயம் எல்லாமே எனக்கு முன்னாடியே தெரியும் அவருக்கு அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்லக்கூடாது தான் ஆனா அவருக்கு மனபலம் ரொம்ப அதிகம்.அவருக்கு இந்த அதிர்ச்சியான விஷயம் தெரிஞ்சதால எல்லாத்தையும் யோசிக்க மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகமானதால தான் மயங்கி விழுந்துட்டார்.. அவர்கிட்ட விஷயத்தை பக்குவமா சொல்லி புரிய வைங்க பதட்டப்படுவது மாதிரி நடந்துக்க வைக்காதீங்க.. அவர் ரொம்ப வீக்கா இருக்கிறார் ஒவ்வொருவராக போய் பாருங்க யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்.." என்றவர் செல்ல, அவர் சொன்னதை கேட்ட பிறகே தென்றலுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
" கடவுளே உங்களுக்கு ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி என் விஷ்ணுவுக்கு எதுவும் ஆகல உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. " என்று கடவுளிடம் வாய் விட்டு நன்றி சொல்லியவள் அவனை பார்க்க வேண்டும் என்று துடிக்க, அப்போதுதான் அவன் குடும்பத்திலிருக்கும் அனைவரும் அங்கிருப்பதைக் கண்டாள்.
அவர்கள் அனைவரையும் கண்டதும் அதுவரை இருந்த உணர்வுகள் அனைத்தும் அவளுக்கு அறுந்து போனது.
இவர்கள் அனைவரும் என்ன சொல்வார்களோ? என்று பயத்துடன் அவர்களையே பார்த்தபடி நிற்க, அத்தனை நேரம் அவள் துடித்த துடிப்பைக் கண்டு அங்கிருந்த யாருக்கும் அவளை எதுவும் சொல்ல மனம் வரவில்லை.
சீதா தான் தானாக முன் வந்தவர் " இங்க பாருமா நடந்தது யாருக்கும் தெரியாது இத்தனை நாள் நீ எங்க வீட்ல வேலைக்காரியா தான் இருந்த.. ஆனா இப்ப என் பையனுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி கடைசி நிமிஷத்துல என் மாமியார் நீ தான் அவனோட மனைவி உன்னோட குழந்தை தான் எங்க வீட்டு வாரிசுன்னு சொல்றாங்க.. எதையும் எங்களால் ஏத்துக்க முடியல ஆனா இத்தனை நாள் நீ இந்த வீட்டில் இருந்தத வச்சு நீ கண்டிப்பா கெட்ட பொண்ணுன்னு நினைக்க முடியல.. என் மாமியார் சொல்ற எதுவாயிருந்தாலும் அதுல நிச்சயம் ஒரு நியாயம் இருக்கும் ஒரு பொண்டாட்டியா அவனை பாக்குறதுக்கு நீ ஆசைப்படுறது உன் கண்ணுலையே தெரியுது.. நாங்க யாரும் உன்னை தடுக்கல நீயே போய் முதலில் பார்த்துவிட்டு வா நாங்க அப்புறம் போய் பார்க்கிறோம்.. " என்றவர் அவளுக்கு முன்னுரிமை கொடுக்க, கதறி அழுத தென்றல் அவரை இறுக்கமாக ஒரு முறை அணைத்தவள் அடுத்த நொடியே கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அங்கு, விட்டத்தை வெறித்து பார்த்த விஷ்ணு
கதவு திறக்கும் சத்தம் கேட்க யார் என்று பார்த்தவன் அங்கே நின்று கொண்டிருந்த தென்றலை அவன் பார்த்த பார்வையில் இருந்தது தான் என்ன?
அத்தியாயம் 24:
விஷ்ணுவின் பார்வையை கண்டதும் தவறு செய்த பிள்ளை போல எச்சிலை விழுங்கியபடி அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.
அவனை காற்று புகாதபடி இறுக்கமாக அணைத்து இத்தனை நாட்களாக அவன் இல்லாமல் தான் எத்தனை கஷ்டங்கள் பட்டோம் என்றும் தன் குழந்தை பிறந்த போது அவனில்லாமல் தான் பட்ட கஷ்டங்கள் என்று அனைத்தையும் அவனிடம் சொல்லி அவன் மார்பில் சாய்ந்து கதறி அழுக வேண்டும் என்று மனது துடிக்க அதை செய்ய முடியாமல் அவனையே தன் விழிகள் கூட அசைக்காமல் அவனையே பார்த்தபடி நிற்க விஷ்ணுவால் என்ன முயன்றும் அவள் தன்னுடைய மனைவி என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இத்தனை நாட்களாக தன் வீட்டில் வேலை செய்த ஒரு பெண் தன் மனைவி என்பதை ஏற்றுக் கொள்வதற்கு அவன் மனம் இடம் கொடுக்காமல் போனாலும், தன்னுடைய கையிலிருந்த குழந்தை தன்னுடைய சாயலில் இருக்க அதுவே சொன்னது அவள் தான் தன் மனைவி என்பதை.
அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவன் அதன் பிறகு பார்வையை வேறு பக்கம் திசைதிருப்ப, அவனது உதாசீனத்தை தாங்க முடியாமல் அடிபட்ட புறாவாக துடித்து போனாள் தென்றல்.
அவன் பக்கத்தில் செல்வதற்கு துடித்த கால்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவள் அவனுக்கு தன்னை பார்க்க பிடிக்கவில்லை என்பதை அவன் செயலிலேயே உணர்ந்து கொண்டு கண்களில் வழிந்த கண்ணீரை இமை தட்டி உள்ளிழுத்துக் கொண்டவள் போன வேகத்திலேயே வெளியே வர, வெளியில் நின்று கொண்டிருந்த அனைவரும் புரியாமல் பார்க்க " அவருக்கு உண்மை இப்பதானே தெரிஞ்சிருக்கு ரொம்ப யோசிச்சா ஏதாவது ஆயிடும்னு டாக்டர் இப்பதானே சொல்லிட்டு போனார்.. உங்களை எல்லாம் பார்த்தா கொஞ்சம் மனசு அவருக்கு நிம்மதியா இருக்கும் நான் அப்புறமா பார்த்துக்கிறேன்.. " என்று வாய் சொன்னாலும் அவள் கண்களில் தெரிந்த ஏமாற்றத்தை அனைவரும் உணர்ந்தாலும் எதுவும் சொல்ல முடியாமல் அவள் சொன்னது போலவே அனைவரும் ஒவ்வொருவராக அவனை பார்ப்பதற்கு உள்ளே சென்றார்கள்.
அவனுடைய மனைவியாக இருந்தபோதிலும் அவனை உரிமையோடு சென்று பார்க்க முடியாத தன் நிலைமையை எண்ணி நொந்துக் கொண்டாள்.
அவள் வெளியே வந்ததும் முதலே உள்ளே போனது சீதா தான்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவன் இப்பொழுது சோர்ந்து போய் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டு தாயாக அவரது மனம் வலித்தது.
" இப்போ எப்படியிருக்க விஷ்ணு? " என்றார் வாஞ்சையாக.
" ஏண்டா இருக்கோம்னு இருக்கு.. என்ன சுத்தி என்னதான் நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியல.. கண்ண கட்டி காட்டுல விட்டது மாதிரியிருக்கு.. இத்தனை நாள் வீட்ல வேலை செஞ்ச பொண்ணு என்னோட மனைவியாம்? எனக்கே இந்த விஷயம் தெரியல என் வாழ்க்கையில என்ன நடந்துச்சு.. நான் ஒரு பெண்ணை தேடுவது அப்பத்தாவுக்கு தெரிஞ்சும் ஏன் அமைதியா இருந்தாங்க? அவங்களுக்கு தான் ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது தெரியுமே அப்புறம் ஏன் சுரேகாவுக்கும் எனக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணாங்க! இவள்தான் என்னோட மனைவி அதுதான் என்னோட குழந்தைன்னு சொன்னா அப்புறம் ஏன் இத்தனை நாளா நடிச்சுக்கிட்டு இருந்தா? இத்தனை கேள்விகளுக்கும் விளக்கம் தெரியாமல் என் மண்டையே வெடிச்சிடும் போலருக்கு.." என்றவன் தலையைப் பிடித்துக் கொள்ள, அவனது தலையை தடவி விட்ட சீதா அவன் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரு தாயாக என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தார்.
" உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லிடுங்க? "
" சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது விஷ்ணு.. நீ வேலைக்கு போன இடத்துல உனக்கு தலையில அடிபட்டு பழசு எல்லாம் மறந்து போச்சுன்னு மட்டும்தான் உன் அப்பத்தா என்கிட்ட சொன்னாங்க வேற எதுவும் எனக்கு தெரியாது சாமி சத்தியமா.. " என்றார் அழுது விடுவது போல.
"நான் ஏற்கனவே எரிச்சலில் இருக்கிறேன் நீங்க வேற அழுது என்னை இன்னும் எரிச்சல் படுத்தாமல் போங்க.." என்று தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத கோபத்தை தாய் மீது காட்டினான்.
அவனது கோபம் மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் எதையும் தெரியாத சூழ்நிலையில் அவன் இப்படி கோபப்படுவது அவன் நிலைமையிலிருந்து சரிதான் என்பதால் சீதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
" இப்ப நான் இருக்க மைண்ட் செட்டுக்கு யாரையும் என்னால பாக்க முடியாது.. யாரும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க கொஞ்ச நேரம் என்னை அப்படியே விடுங்க.. " என்றவன் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, சீதாவும் அவனை தொந்தரவு செய்யாமல் வெளியே வந்தவர் நின்று கொண்டிருந்த பிறரிடமும் சொல்ல அதை தனக்கானது என்று எடுத்துக் கொண்ட தென்றல் கண்ணீர் மட்டுமே துணையாக தனியாக நின்றாள்.
அவள் அழுவதை பார்ப்பதற்கு மற்றவர்களுக்கு பாவமாக இருந்தாலும் விஷயம் என்னவென புரியாமல் அவளிடம் பேசி இன்னும் அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அவர்கள் அமைதியாக இருக்க, தன்னை அவர்களுக்கு பிடிக்காமல் தான் தன்னோடு பேசாமல் இருக்கிறார்கள் என்று அதற்கும் கண்ணீர் வடித்தாள்.
பூமாதேவி இங்கு தென்றலை சார்ந்தவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தவர் முதன்முதலாக தன் வீட்டிற்கு வரும் பேர குழந்தையை ஆரத்தி எடுக்கும் பொருட்டு அவர்கள் அனைவரையும் வெளியிலே நிறுத்தியவர் அவர் மட்டும் உள்ளே சென்றவர் சுரேகாவை கீழே அழைத்தார்.
அவரது குரல் கேட்டு ரேணுகாவும் தனது அறையிலிருந்து வெளியே வர, அவளை தன் ஜென்ம எதிரியை பார்ப்பது போல் பார்த்து முறைத்த சுரேகா கீழே இறங்கி வர அவள் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் மீண்டும் அறைக்குள்ளையே சென்றுவிட்டாள் ரேணுகா.
" எதுக்காக இப்ப என்ன வர சொன்னிங்க? மணமேடையில் வச்சு என்னை உங்க பேரன் என்னை அசிங்கப்படுத்தும் போது நீங்களும் அவருக்கு துணையாக இருந்தீங்க பாத்திங்களா? நான் அப்படி உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன் நான் உங்க மகளோட பிள்ளை தானே! அவருக்கு ஏற்கனவே கல்யாணமானது தெரிஞ்சும் நீங்க எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கீங்க.. அவர் என்னை மணமேடையில் வச்சி என் கழுத்துல தாலி கட்ட முடியாதுன்னு அத்தனை பேர் பார்க்க அசிங்கப்படுத்திட்டு போயிட்டார் இனிமே என்னை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க? என் அண்ணன் தப்பு பண்ணிட்டானு எவ்வளவு பேச்சு பேசினீங்க இப்ப உங்க முகத்தை கொண்டு போய் எங்க வச்சுக்கவீங்க? "என்று கேட்க, அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடியாக பூமாதேவி மீது விழுந்தது.
அவள் கோபத்திலும் உள்ள நியாயம் புரிந்ததால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர் " நான் உனக்கு நல்லது மட்டும் தான் பண்ணிருக்கேன்.. முதன்முதலா இந்த வீட்டு வாரிசு வந்திருக்கு அவனை ஆராத்தி எடுத்து உள்ள வரவை.. " என்றதும் தான் அத்தனை கோபப்பட்டு பேசுவதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் விஷயமே இல்லை என்பது போல் அவர் ஆரத்தி எடுக்க சொல்ல, வந்த கோபத்துக்கு அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கி போட்டுடைக்க, வெளியே குழந்தையை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தவர்களுக்கும் உள்ளே நடந்த சத்தம் கேட்க கார்த்திக் பொறுமை பறந்து போக, வீட்டிற்குள் நுழைந்தவன் அங்கு கத்திக் கொண்டிருந்த சுரேகாவை ஒரு நிமிடம் பார்த்தவன் ஒரு நொடி தயக்கமாக பூமாதேவியை பார்க்க அவரோ சம்மதமாக கண்களை மூடி திறக்க, அவனுடைய தயக்கம் பறந்து போக சுரேகா கையை பிடித்திழுத்துக்கொண்டு கீழே இருந்த பூமாதேவி அறைக்குச் சென்றான்.
" டேய் என் கையை விடுடா.. எவனோ ஒருத்தன் என் கையை புடிச்சி இழுத்துகிட்டு போறான் நின்னு அமைதியா பார்த்துகிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட அன்பே இல்லை அம்மாச்சி இவனை தடுத்து நிறுத்துங்க.. " என்று கத்திக் கொண்டே சென்ற சுரேகாவை பார்த்து தலையை இருபக்கமும் ஆட்டிய பூமா பின் அவரே அவரது குலகொழுந்துக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துக் கொண்டு வர, அதையெல்லாம் சிறுபிள்ளை உற்சாகமாக பார்த்துக் கொண்டிருக்க கல்யாணியும் காந்திமதியும் தயக்கமாக உள்ளே நுழைய அவர்கள் தயக்கத்தை போக்கி அவர்களையும் இந்த குடும்பத்தில் ஒருவர் தான் என்று ஒவ்வொரு செயலிலும் நிரூபிக்க ஆரம்பித்தார் பூமா.
சுரேகாவை உள்ள இழுத்துக் கொண்டு வந்து கதவை அடித்து சாத்திய கார்த்திகேயன் அவளை கோபமாக முறைத்து பார்த்தவன் அவள் பக்கத்தில் நெருங்கி வர, அதற்கெல்லாம் சிறிதும் அசராமல் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த சுரேகா அவனை வாயில் வந்த வார்த்தைகள் கொண்டு அர்ச்சிக்க, அதையெல்லாம் காதில் சுண்டு விரல் விட்டு குடைந்து எறிந்த கார்த்திகேயன்
" வாயை மூடுடி அது வாயா இல்ல வண்ணாரப்பேட்டையா? வாய திறந்தாலே கூவமா வந்து கொட்டுது.." நக்கலாக சொல்ல, சுரேகாவிற்கு வந்த கோபத்திற்கு அவனைப் பார்வையாலே எரித்தாள்.
" யாருடா நீ? அத்தானோட ஃப்ரெண்ட் அவ்வளவுதானே! அவருக்கே நான் மரியாதை கொடுத்ததில்லை உனக்கு எல்லாம் என்ன மரியாதை மூடிக்கிட்டு போ.. "
" அப்படி எல்லாம் போக முடியாதுடி என் ஆசை பொண்டாட்டி.. " என்றவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன் இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவனிடமிருந்து திமிர ஆரம்பித்தாள்.
" வாய மூடுடி கொஞ்ச நேரம்..உனக்கு உண்மையாலுமே விஷ்ணு மேல காதல் இருந்துச்சுன்னு சொல்லு சத்தியமா உன்னை விட்டு நான் போயிர்றேன்.. அவனுக்கு உன் மேல இருந்தது காதல் கிடையாது மண்டுகம் உன்னோட மாமா பையன் மேல எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்க ஆசைதான் உனக்கும் இருந்துச்சு மத்தபடி அவன் மேல உனக்கு காதல் கிடையாது.. நல்லா உக்காந்து கொஞ்ச நேரம் கோபம் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு யோசிச்சு பாரு உன்னோட கேள்வி எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும்.. அதையெல்லாம் யோசித்து பார்த்து உனக்கு ஒரு நல்ல புத்தி வந்ததுக்கப்புறம் அய்யாவை பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாரு.. உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டி உன்னை எப்ப பார்த்தேனோ அப்பவே உன்மேல என் உயிரையே வச்சுட்டேன்.. நீ மட்டும் எனக்கு கிடைத்தால் உன்னை என் உள்ளங்கையில வச்சு தாங்குவேன் ஒருவேளை விஷ்ணு உன்ன கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் அவனுக்கு உன் மேல காதல் வராமல் போயிருந்த அப்ப என்ன பண்ணுவ? நடக்கிற எல்லாமே உன் நல்லதுக்குன்னு நினைச்சுக்கிட்டு போயிட்டே இரு.. இதை ஒரு காரணமா வச்சி தென்றலையும் என் மருமகனையும் ஏதாவது தொல்லை பண்ணினா உன்னை சும்மா விடமாட்டேன்.. " என்றவன் அவள் முகத்தை தாங்கி தன் கண்களோடு கண்கள் கலக்க விட்டவன் தன் மனதில் இருந்த அத்தனை காதலையும் தன் கண்கள் வழியாக அவளுக்கு புகட்ட அவனது பார்வையை வீச்சை தாங்கிக் கொள்ள முடியாமல் சுரேகா பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
" இப்பதான் பாக்குறதுக்கு ஒரு பொண்ணா ரொம்ப அழகா இருக்க இப்படியே இரு.. " என்றவன் அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் செல்லும் வரை அவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் பின்னாடியே கையை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது போல் உணர்வு தோன்ற, அவசரமாக தன் தலையை குலுக்கி கொண்டவள் எது எதையோ யோசித்தபடி தனது அறைக்குச் செல்ல, வெளியில் வந்த கார்த்திக் பூமாதேவியை பார்த்து கண்களை சிமிட்ட " படவா ராஸ்கல்.. " என்று முனுமுனுத்த பூமா சுரேகாவின் பிரச்சனை இப்பொழுது முடிந்தது என்று சற்று நிம்மதி கொண்டவர் அடுத்தபடியாக ரேணுகா விஷ்வா இருவரையும் எப்படி சேர்க்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
" இங்க பாருங்க மாரியப்பன் சார் உங்க பேரன் இப்ப ரொம்பவே நல்லா இருக்கார்.. ரொம்ப யோசிக்க கூடாது கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கோங்க முடிந்தவரை அவர் எவ்வளவு சந்தோஷமா இருக்காரோ அந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனை கிடையாது.. இப்ப நீங்க அவரை கூட்டிட்டு போகலாம்.. " என்றார் மருத்துவர்.
" ரொம்ப நன்றிங்க டாக்டர் நீங்க சொன்னது போலவே நான் என் பேரனை பத்திரமா பாத்துக்குவேன்.." என்ற மாரியப்பன் வெளியில் வந்தவர் விஷ்ணு அனுமதிக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தவர் மருத்துவர் சொன்ன தகவலை பகிர்ந்து விட்டு அவர்களை கிளம்பும் படி பணிக்க, தென்றல் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறு பிள்ளை தனியாக இருக்கும் பொழுது என் கூட இருவேன் என அதன் அம்மாவை பாவமாக பார்க்குமே அப்படி இருந்தது அவளது பார்வை.
" இங்க பாருமா எங்க எல்லாரையும் விட விஷ்ணு மனைவி உனக்குத்தான் அவன் மேலே எல்லா உரிமையும்.. உனக்கும் அவனுக்கும் எப்படி கல்யாணம் நடந்துச்சுன்னு எதுவும் உங்களுக்கு தெரியாது.. இத்தனை நாளா நீ உண்மையை மறைச்சு எங்க கூட இருந்தது எங்களுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது எதையா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் இப்ப எங்க கூட கெளம்பு.. " எனவும் தன்னிடம் பேசிய லட்சுமியை அணைத்து கொண்டு கதறிவிட்டாள் தென்றல்.
" என் புருஷன் என் கண்ணு முன்னாடியே இருந்தும் அவர் அன்பு எனக்கு கிடைக்காமல் போயிடுச்சு.. என்னை ரொம்ப வெறுத்து ஒதுக்கினார் இப்ப அவரோட மனைவி நான்தான்னு தெரிஞ்சதுக்கப்புறம் என்ன பண்ணுவார்ன்னு எனக்கு தெரியல.. அவர் என்னை மறுபடியும் வெறுத்து ஒதுக்கிட்டா நான் என்ன பண்ணுவேன்.. "என்றாள்.
தேம்பி தேம்பி அழுதவளை மிகவும் சிரமப்பட்டு சமாதானப்படுத்தினார் லட்சுமி.
"கவலப்படாத எல்லாம் சரியாகிவிடும்.. இந்த விஷயத்தை கொஞ்சம் முன்னாடி சொல்லியிருந்தா என் பொண்ணு இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்க வேண்டாம்.." எனவும் அவரை விட்டு பின்னால் சென்றவள் நடந்த தவறுகளுக்காக இரு கைகளையும் கூப்பி அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னால் சென்று நிற்க, மருத்துவமனையில் அதற்கு மேலும் எதையும் பேச முடியாமல் எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு சென்று பேசலாம் என்று லட்சுமி சொல்லிவிட, ஃபார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்துக் கொண்டு விஷ்ணு வெளியில் வந்தவன் பார்வையில் தென்றல் விழுக அவளைப் பார்க்க கூட பிடிக்காமல் தன் கம்பீர நடையுடன் காரில் சென்று அமர தென்றலையும் அழைத்துக் கொண்டு காருக்கு வந்தார்கள்.
முன்பக்கத்தில் மாரியப்பன் இந்திரன் ஏறிக்கொள்ள பின் பக்கத்தில் லட்சுமி சீதா இருவரும் ஏறிக்கொள்ள நடுவில் அமர்ந்திருந்த விஷ்ணு பக்கத்தில் வேறு வழியில்லாமல் ஏறி அமர்ந்தாள் தென்றல்.
தன் பக்கத்தில் அமர்ந்தவளை அவன் திரும்பி பார்க்கவில்லை.
யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக பயணம் தொடர ஆரம்பிக்க, இரண்டு நாட்களாக தூக்கத்தை தொலைத்திருந்த தென்றல் இப்பொழுது உண்மை அனைவருக்கும் தெரிந்து விட்டது என்பதால் என்னவோ அப்படியே தூங்க ஆரம்பித்தாள்.
தன்னையும் மீறி அவள் கண்கள் சொக்க ஆழமான தூக்கத்துக்கு சென்றவள் கார் ஒரு வளைவில் திரும்ப, அப்படியே பக்கத்தில் இருந்த விஷ்ணு மடியில் விழுந்தவள் நன்றாக உறங்க ஆரம்பித்தாள்.
தன் மீது விழுந்த தென்றலை முதலில் கோபமாக பார்த்த விஷ்ணு அவள் ஆழ்ந்து தூங்குவதை கண்டதும் அதை கலைக்க ஏனோ மனம் வராமல், அவளையே பார்க்கலானான்.
தனக்கு நினைவு தெரிந்தது தன் வீட்டிற்கு அவள் முதன் முதலாக வந்த பொழுது ஒரு வீட்டில் வேலை செய்த வேலைக்காரியாக இல்லாமல் ஏதோ பெரிய பணக்காரியாக வந்திருக்கிறாள் என்று அவளை நக்கல் செய்தது எல்லாம் நினைவு வந்து போக, அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.தன் கைப்பொருள் தன்னை விட்டு சென்றுவிடுமோ என்ற பயம் தூக்கத்திலும் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிய, விஷ்ணுவிற்கு அடிமனதில் இருந்த காதல் உணர்வுகள் அனைத்தும் அவனையும் மீறி தலை தூக்க ஆரம்பிக்க அவளையே ரசனையாக பார்க்க, அதைக் கண்டும் காணாதது போல் பெரியவர்கள் பயணம் செய்ய அந்தப் பயணம் அவர்கள் வாழ்வின் இனிதான தொடக்கமாக அமைந்தது.
அத்தியாயம் 25:
" விஷ்ணு வீட்டுக்கு வந்தாச்சு தென்றலை எழுப்பி கூட்டிக்கிட்டு வா நாங்க முன்னாடி போறோம்.." என்று இந்திரன் முன்னே செல்ல, ஹாஸ்பிடலில் சிறிது நேரம் மருத்துவரிடம் பேசிவிட்டு பின்னே வந்து சேர்ந்தார் கணேசன்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வீட்டிற்குள் செல்ல, அவர்கள் அனைவரும் வேண்டுமென்றே தென்றலுடன் தான் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் விட்டு செல்கிறார் என்பது அவனுக்கு புரிந்தாலும் அதை புரியாதது போல் காட்டிக்கொண்டான்.
அப்பொழுதும் அவன் தென்றல் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
" சரியான அழுத்தக்காரி தான்டி நீ.. என் மனசுல இருக்க அந்த பெண்ணுக்கு உருவம் கொடுத்து வரைந்து பார்த்தப்ப எனக்கே ஒரு நிமிஷம் ஷாக் ஆயிடுச்சு ஏன்னா அந்த பொண்ணு வேற யாரும் கிடையாது நீதான் அந்த பொண்ணு எனக்கு நல்லாவே தெரியும்.. எல்லாம் தெரிஞ்சுதான் இந்த கல்யாணத்துக்கு நான் ஏற்பாடு பண்ண சொல்லி சொன்னேன்! உனக்கும் எனக்கும் எப்படி காதல் வந்துச்சுன்னு எனக்கு தெரியாது ஆனால் இத்தனை நாள் நான் தேடிக்கிட்டு இருக்க பொண்ணு நீதான்னு தெரிஞ்சும் என்கிட்ட மறைத்து என் வீட்டில் வேலை பார்த்து இருக்க பாத்தியா? அதுலயும் உன்ன பத்தி விசாரிச்சு பார்த்தபோது உண்மையாலுமே அதிர்ந்து போயிட்டேன்டி எவ்வளவு பெரிய கம்பெனியோட ஒரே வாரிசு நீ.. உன்கிட்ட இருக்க பணத்தை எல்லாம் எங்க கூட கம்பேர் பண்ண நாங்க எல்லாம் ஒண்ணுமே இல்லை அத்தனையும் விட்டுட்டு எதுக்காக நீ என் வீட்டுக்கு வேலைக்கு வந்த? என்னுடைய இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரிஞ்சதுக்கப்புறம் தான் நான் உன்கிட்ட என் மனசுல இருக்க உண்மையை சொல்லுவேன்.. " என்று அவளிடம் வாய் விட்டு செல்லியவன் ஒரே ஒரு நிமிடம் அவளை கனிவாக பார்த்துவிட்டு அடுத்த நொடியே எப்பொழுதும் போல் அவளை முறைத்துப் பார்த்தவன் எழுப்பி விட்டான்.
" ஏய் எந்திரிடி என்ன என் மடியில படுத்து தூங்குற எந்திரி?" என தூக்கத்தின் பிடியிலிருந்த தென்றல் தூக்கத்திலேயே லேசாக கண்களை விழித்து பார்த்தவள் தூக்கத்தில் செய்வதாக நினைத்துக் கொண்டு அவன் முகத்தை தன் கைகளால் தன் பக்கத்தில் இழுத்தவள் அவன் இதழ்களோடு தன் இதழ்களை பதித்து விட்டு
" ப்ளீஸ் விஷ்ணு இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் நைட்டு ஃபுல்லா நீங்க தூங்க விட மாட்டீங்க.. நான் பிரக்னண்டா இருந்தப்ப கூட நீங்க என் பக்கத்திலேயே இருக்கணும் நான் ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனா நீங்க என்ன விட்டுட்டு போயிட்டீங்க.. உங்க கூட என்னால கனவுல தான் சந்தோசமா இருக்க முடியுது அதனால நான் தூங்குறேன் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. " என்றவள் தூக்கத்தில் உலறிவிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிக்க, விஷ்ணு கண்கள் அவனையும் அறியாமல் கலங்க ஆரம்பித்தது.
அப்படி என்னதான் தன் வாழ்க்கையில் நடந்தது?
தூக்கத்தில் கூட இவள் தன்னை தேடுகிறாள் என்றால் அவள் மனதில் தன் மீது தான் எத்தனை காதல் இருக்கிறது?
இத்தனை காதலை வைத்திருக்கும் இவளை தான் எப்படி மறந்தோம் என்று யோசித்துப் பார்க்க அவனுக்கு தலைவலி வருவது போல் இருக்கவும் முயன்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு எதையும் யோசிக்காமல் அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வையும் இன்று எடுத்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தவன் எப்போதும் போல் வெறுப்பு என்னும் முகமூடியை போட்டுக் கொண்டு விருப்பமே இல்லை என்றாலும் தென்றலை தன்னை விட்டு தள்ளி விட்டான்.
அவன் தள்ளிய வேகத்தில் கார் கதவில் விழுந்த தென்றல் ஒன்றும் புரியாமல் பார்த்தவள் அந்த இடத்தை சுற்றிப் பார்க்க அப்பொழுதுதான் அவளுக்கு தான் காரில் அப்படியே தூங்கியது நினைவுக்கு வர, தன்னையே கோபமாக முறைத்து பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவை பார்த்தவள் " என்ன மன்னிச்சிடுங்க ஏதோ தூக்கத்துல உங்க மேல விழுந்துட்டேன் சாரி.. " என அவசரமாக சொன்னவள் எங்கே அவன் ஏதாவது வார்த்தைகளை விட்டு விடுவானோ என்று பயந்து கொண்டு கார் கதவை திறந்து கொண்டு செல்ல, அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தான் விஷ்ணுவரதன்.
காரிலேயே சாய்ந்து அமர்ந்தவன் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு யாரிடம் பேசினால் கிடைக்கும் என்று யோசித்துப் பார்த்தவன் போனை எடுத்து கார்த்திக்கு அழைத்தான்.
வீட்டிற்குள் பூமாதேவியிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்திக் அலைபேசி அழைக்க யாரென்று எடுத்துப் பார்த்தவன் விஷ்ணு எண் ஒலிக்கவும் புரியாமல் யோசித்தவன் " விஷ்ணு தான் கூப்பிடுறான் பாட்டி நான் பேசிட்டு வரேன்.. உங்க வீட்ல இருக்க எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்லிடுங்க என்கிட்ட எல்லா விஷயத்தையும் கேக்குறதுக்காக தான் கூப்பிடுறான்னு தெரியுது.. இதுக்கு மேலயும் எதையும் நானும் மறைக்க மாட்டேன் அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்ல போறேன் இனிமே முடிவு அவனுடையதாக இருக்கட்டும்.. குடும்பத்தில் இருக்கிற எல்லார்கிட்டயும் நீங்களும் உண்மையை சொல்லிடுங்க பாவம் தென்றல் அந்த பொண்ணு பட்ட கஷ்டம் அத்தனையும் போதும் இனிமேலாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்.. " என்று விஷ்ணு குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பார்த்து சொன்னவன் விஷ்ணுவரதனிடமும் அனைத்தையும் சொல்லி எப்படியாவது தன் கூட பிறக்காத தங்கையோடு அவனை சேர்த்து வைத்து விட வேண்டும் என்ற உறுதியோடு வெளியே வந்தவன் அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த தென்றலை புன்னகையுடன் பார்த்தவன் கண்களை மூடி திறக்க, அவனது கண் பார்வை யானை பலத்தை கொடுத்தது தென்றலுக்கு.
இங்கு வெளியில் வந்த கார்த்திக் காரில் அமர்ந்திருந்த விஷ்ணுவிடம் " இப்ப நம்ம ரெண்டு பேரும் எதுவும் பேச வேண்டாம் எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம் உங்க அப்பத்தா எல்லா விஷயத்தையும் சொல்லுவாங்க.. அவங்க பேசும்போது நீ தென்றல் பக்கத்துல இருக்கணும்.. " என்றவன் விஷ்ணுவை பேச விடாமல் அவனை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தனக்கு தோள் கொடுக்க தன் கூட பிறவா சகோதரன் இருக்கிறான் என்ற எண்ணம் அவளுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் இனி பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன தைரியத்தை கொடுத்து விட்டது.
அங்கிருக்கும் யாரின் முகத்தையும் பார்க்க முடியாமல் குற்றம் செய்தது போல் தலையை குனிந்து கொண்டு வந்த தென்றலை பாவமாக பார்த்தார்கள் கல்யாணியும் காந்திமதியும்.
அவர்கள் இருவரிடம் கண்களாலையே நலம் விசாரித்தவள் பூமாதேவியிடம் " ராகுல் எங்க பாட்டி? " என்று கேட்க, " தூங்குறான் கொஞ்ச
நேரம் இப்படி உட்காரு.. " என்றவர் " உங்க எல்லாருக்கும் சேர்த்து தான் விஷ்ணு உனக்கும் கூட சேர்த்துதான் சொல்றேன் உட்காரு.. சில விஷயங்கள் நான் மனசு விட்டு பேச வேண்டியதிருக்கு.. " என்றவர் அங்கேயே ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த பாக்கியத்தை அழைத்து அனைவருக்கும் டீ கலந்து கொண்டு வர சொன்னார்.
அனைவருக்கும் அந்த மனநிலையில் தேநீர் தேவைப்பட யாரும் மறுக்காமல்
அமைதியாக இருக்க அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க அவர்களது முகத்தைப் பார்த்து கணித்துவிட்ட பூமாதேவி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர் தேநீர் வந்ததும் அனைவரையும் குடிக்கச் சொல்லிவிட்டு அவரும் கைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டார்.
" விஷ்ணு இப்போ உனக்கு ரொம்ப டயர்டா இருக்கும்னு எனக்கு தெரியும் ஆனால் இப்பவே சில விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது ரொம்ப நல்லது.. " என்ற பூமாதேவி அனைவரும் டீ கோப்பைகளை கீழே வைத்ததும் குரலை செருமி கொண்டு பேச ஆரம்பித்தார்.
" விஷ்ணுவோட கடந்த கால வாழ்க்கையில் என்ன நடந்துச்சுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.." என்றவர் முதல் முதலாக அவன் தன்னிடம் பர்மிஷன் வாங்கிவிட்டு வேலைக்கு போனது முதல் தென்றல் என்னும் பிரகல்யாவிற்கு திருமணம் செய்து வைத்தது அவளுடைய தந்தையின் மரணம் விஷ்ணுவின் ஆக்சிடென்ட் தென்றலுக்கு குழந்தை பிறந்தது அவளுடன் இருக்கும் உறவுகள் டிரஸ்ட் ஆரம்பித்தது இறுதியாக விஷ்ணுவை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பதற்காக அவளது மகனை விட்டு பிரிந்தது என்று அனைத்தையும் சொல்லி முடிக்க, அங்கிருந்த அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் நில்லாமல் வழிய ஆரம்பித்தது.
" அவ இந்த வீட்டுக்கு வரேன்னு சொன்னதும் தான் நம்ம வீட்ல ரொம்ப நாளா வேலை பார்த்து இறந்துப்போன சேதுபதி பேத்தின்னு பொய் சொல்லி கூட்டிட்டு வர வேண்டியது போயிடுச்சு எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க.. " என்றவர் குரல் கலங்கி போயிருந்தது.
ஆண்கள் முதற்கொண்டு அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
அனைவரின் பார்வையும் தென்றலை சுற்றி தான்.
இந்த சின்ன வயதிலேயே அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் பூமாதேவி சொல்ல சொல்ல, அனைவருக்குமே அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்கிற எண்ணம் தான் இருந்ததே தவிர, தங்களை இரண்டு வருடங்களாக இந்த வீட்டில் ஏமாற்றி வேலைக்காரியாக வேலை செய்ததை எல்லாம் பொருட்படுத்தவில்லை.
சுரேகாவிற்கு கூட தென்றல் விஷ்ணு மீது அவள் கொண்டுள்ள காதலுக்காக அவள் செய்ததை எல்லாம் நினைத்து சற்றே அதிர்ச்சி தான்.
தான் மட்டும் அவளிடத்தில் இருந்திருந்தால் இதை எல்லாம் செய்திருப்போமா? என்று அவளாகவே அவளை கேட்டுக் கொண்டாள்.
அவளது பார்வை அந்த நேரம் அங்கு அமர்ந்திருந்த கார்த்திக் மீது படிய, அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை பார்க்கவும் சட்டென்று ஒற்றை கண்ணை அடிக்க அவனது செயலில் முகத்தில் வியர்வை வடிய பார்வையை வேறு பக்கமாக திசை திருப்பிய சுரேகா இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
அதே நேரம் விஷ்ணுவும் தென்றலை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே எதற்காக இவள் தனக்காக இத்தனையையும் விட்டுவிட்டு வந்திருக்கிறாள் என்று விடை தெரியாமல் பல நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது பூமாதேவி வாயால் அனைத்து உண்மைகளையும் கேட்ட பிறகு அவனையும் அறியாமல் அவனது கண்களில் கண்ணீர்.
இப்படி தன் மீது உயிரையே வைத்திருப்பவளை தான் எப்படி மறந்தோம் என்று பழைய விஷயங்கள் ஏதாவது நினைவுக்கு வருகிறதா? என்று யோசித்துப் பார்க்க அவனுக்கு இறுதியில் தலைவலி வந்தது தான் மிச்சம்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த தென்றல் அவன் பக்கத்தில் வந்தவள் " ரொம்ப யோசிக்காதீங்க உங்களுக்கு தலை வலிக்கும்.. உங்களுக்கு எதுவுமே ஞாபகம் வரலையா? சுரேகாவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடக்கும் போது கூட எதுவுமே ஞாபகம் வரவில்லையா? " என்றாள் ஏமாற்றத்தோடு.
" இல்லை எனக்கு தலை வலிக்குது ரொம்ப அதிகமா வலிக்குது.. " எனவும் உரிமையோடு அவனது தலையைக்கூட பிடிக்க இயலாமல் தயக்கத்தோடு அவள் நிற்கவும் அவளை பார்த்த விஷ்ணு அவள் தன் மனைவி தான் என்பது புரிந்தாலும் ஏனோ உடனடியாக அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் " சாரி நீங்க எல்லாரும் பேசிகிட்டு இருங்க நான் போறேன் எனக்கு தலை ரொம்ப வலிக்குது.. " என்றவன் தனதறைக்குச் செல்ல, அவனுக்கு தலைவலி என்று செல்ல அவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தென்றலுக்கு அவனை விட பல மடங்கு அவளது இதயத்தில் வலி.
உண்மையை உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அவன் படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல் அவளுடைய ஆஸ்தான அறையான சமையலறைக்கு ஓடிவிட்டாள்.
அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் செல்வதை அவர்கள் குடும்பத்திலிருந்த அனைவராலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
அப்படியே அன்றைய பொழுது கடந்து செல்ல, தனது அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த விஷ்ணு தன் மீது எதுவோ ஒன்று பாரமாக இருப்பது போல் தோன்ற, தூக்கத்திலேயே கைகளால் துலாவ ஒரு சின்ன சிறிய உருவம் தட்டுப்பட்டது.
ஒருவேளை நாய் குட்டியாக இருக்குமோ என்று தூக்கத்திலேயே தடவிப் பார்க்க, மனிதருக்கு இருக்கும் கை கால் அதற்கும் இருக்க என்னவாக இருக்கும் என்று கண்களை திறந்து பார்த்தவன் தன் மீது பூக்குவியலாக கிடந்த தனது மகனை ஒரே ஒரு நிமிடம் அதிர்ச்சியாக பார்த்தவன் கைகள் அடுத்த நொடியே தன்னை உரித்து வைத்திருந்த தன் மகனை நேசம் கமல பார்த்தவன் கைகள் வாஞ்சையாக மகனது தலையை ஸ்பரிசத்துடன் வருடிக் கொடுத்தது.
அவனது வருடலில் கண்களை விழித்து பார்த்த ராகுல் " குட் மார்னிங் அப்பா ஹவ் எ நைஸ் டே.. எனக்கு இதே மாதிரி தினமும் உங்களுக்கு குட் மார்னிங் சொல்லனும்னு ஆசையாயிருக்கு.. நான் காலைல எந்திரிச்சதும் உங்களோட போட்டோவையும் அம்மாவோட போட்டோவையும் பார்த்து விஷ் பண்ணுவேன் இப்போ உங்களுக்கு நேரிலேயே சொல்றேன் நான் உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன் அப்பா எனக்கு நீங்களும் அம்மாவும் வேணும்.." என்று திக்கத்திணறி மழலை குரலில் சொல்லிய மகனை தன் மார்போடு இருக்க அணைத்துக் கொண்டான் விஷ்ணுவர்தன்.
தன் புத்திரணை நினைத்து மனதுக்குள் பரவசம்.
அவனது மனமோ இத்தனை அழகான பொக்கிஷத்தை தனக்குத் தந்த தென்றலை எப்பொழுதும் இனிமேல் விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
அத்தியாயம் 26 :
காலையில் கண்களை விழித்த விஷ்வா தனதருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்தவன் சிறு பிள்ளை போல் உறங்கிக் கொண்டிருந்தவளை மனதில் தாங்கிய வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
எத்தனை அழகாக கழிய வேண்டிய இரவு. தன் தங்கையை மட்டும் நினைத்துப் பார்த்த தான் தன் மனைவியை யோசிக்காமல் விட்டதை நினைத்து தன்னையே நொந்துக்கொண்டான்.
விஷ்ணு செய்த தவறுக்கு தன் மனைவியை கஷ்டப்படுத்தியதை நினைத்து
தன்னை தானே திட்டிக் கொண்டான்.
அவன் தன்னை பற்றி யோசித்துக் கொண்டிருக்க கண்களை விழித்தாள் ரேணுகா.
எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த தன் கணவனை ஒரு நொடி பார்த்தவள் அடுத்த நிமிடமே தன் கண்களை மூடி திறந்தது விட்டு அவனைக் கண்டும் காணாதது போல் குளியலறைக்கு செல்ல, அவளது விலகல் பெரிதும் விஷ்வாவை பாதித்தது.
எப்படி இந்த பிரச்சினையை சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
கல்யாணியுடன் தன் மகன் தூங்காமல் விஷ்ணுவிடம் சென்று தூங்குவதை அவர் வாயிலாக கேட்டதும் பதைப்பதைப்பாக விஷ்ணு அறைக்கு வந்தாள் தென்றல்.
தன் குழந்தையை ஏதாவது சொல்லிவிடுவானோ! என்று பயத்தில் வந்தவள் ஒரு நிமிடம் விஷ்ணுவின் அரை கதவை தட்ட பயந்தவள், மறு நிமிடமே தன் மகன் நினைவு வர தயக்கம் அனைத்தையும் தூக்கி எறிந்தவள் தனக்கு உரிமையுள்ள போது எதற்காக இனி பயம் கொள்ள வேண்டும் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அங்கு அவள் கண்ட காட்சியை அவளது கண்களாலையே நம்ப இயலவில்லை.
அவளது கணவனும் மகனும் ஒருவருக்கொருவர் ஓடி பிடித்து விளையாண்டு கொண்டிருக்க, எத்தனையோ நாட்கள் இந்த காட்சியை காண வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த பேதைக்கு இப்பொழுது அதை கண்டதும் மனதுக்கு அத்தனை நிறைவாக இருந்தது.
விஷ்ணு தன் மேல் இருக்கும் கோபத்தில் தன் மகனை காயப்படுத்தி விடுவானோ! என்று பயந்தவள் அதற்கு நேர் மாறாக மகனோடு அன்பாக விளையாடுவதைக் கண்டு மனதுக்கு அத்தனை தித்திப்பாக இருந்தது.
அவர்களோடு சேர்ந்து தானும் ஒருத்தியாக விளையாட வேண்டும் என்ற மனம் ஆவல் கொள்ள, செல்ல முடியாத தன் துர்பாக்கியத்தை நினைத்து கண்ணை மறைத்த நீரை சுண்டு எரிந்து விட்டு சத்தம் செய்யாமல் அங்கிருந்து செல்வதற்காக திரும்பிய வேளையில் தான் தாயை கண்டதும் ஓடி வந்தான் மகன்.
" அம்மா அப்பா என்ன புடிக்க போறாங்க வாங்க நம்ம விளையாடலாம்.. நீங்க தான் அப்பாவை அவுட் ஆக்கணும்.." என்று மழலை மொழியில் சொன்னபடி அவளது கால்களை கட்டிக் கொள்ள தன் மகனை தூக்கி கன்னத்தில் முத்தமிட்ட தென்றல் கணவனை தர்ம சங்கடமாக பார்க்க அவனுக்கோ அப்படி எதுவுமில்லை போலும் " அதான் குழந்தை ஆசைப்படுறானே வா விளையாடுவோம்.. "என அவன் சொல்வதற்கும் மறுக்க முடியாமல் அவர்களோடு விளையாட ஆரம்பிக்க, முதலில் அவன் எதுவும் சொல்லிவிடுவானோ என்று பயந்து பயந்து விளையாட ஆரம்பித்தவள் போகப் போக அதில் ஒன்றிப் போக, அவர்களது சத்தம் கீழே வரை கேட்க கீழே இருந்த பெரியவர்களுக்கு மனம் நிறைந்துப் போனது.
இருவர்களுடனும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ஆசையை விளையாடி நிறைவேற்றிக் கொண்ட ராகுல் விஷ்ணுவிடம் " அப்பா இனிமே நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்.. தாத்தா பாட்டி கொள்ளு தாத்தா பாட்டி எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் இங்கேயே இருக்கிறேன்.. " என மழலை மொழியில் சொல்ல, அவனை தூக்கி போட்டு பிடித்த விஷ்ணு " அதுக்கு என்ன தாராளமா இங்கேயே இருக்கலாம் இனிமே என் பிள்ளை எங்க போகணும் என்கிட்ட தானே இருக்கணும்.. என் பிள்ளை மட்டும் இல்ல என் மனைவியும் என் கூட தானே இருக்கணும்.. " என்று சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு கைதட்டி ஆரவாரமாக சிரித்த ராகுல் "ஐ ஜாலி நான் போய் எல்லார்கிட்டயும் சொல்றேன் கீழே போறேன்.." என்று ஓடிவிட, மகனை பின்தொடர்ந்து செல்லப்போன தென்றலை கைப்பிடித்து தடுத்து நிறுத்தினான் விஷ்ணு.
" எங்க போற உன்கிட்ட கொஞ்சம் விஷயம் பேசணும் வா என் பக்கத்துல வந்து உட்காரு.. "என என்ன சொல்லப் போகிறானோ என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவன் பக்கத்தில் தென்றல் வந்து நிற்க தன் மீது உள்ள பயத்தில் தன் பக்கத்தில் கூட அமராமல் நின்று கொண்டிருந்த மனைவியை
விஷ்ணு வேதனையுடன் பார்க்க அவனது வேதனையான பார்வையை தாங்க இயலாமல் பக்கத்தில் சட்டென அமர்ந்து விட்டாள் தென்றல்.
தனது கண்களை பார்த்ததுமே தன் மனம் வேதனைப்படக்கூடாது என்ற தன் பக்கத்தில் அமர்ந்த மனையாளை உரிமையுடன் பார்க்க ஆரம்பித்தான்.
அவனது பார்வையின் ஸ்பரிசம் தாங்க இயலாமல் தென்றல் கண்கள் தானாக மூடிக் கொள்ள அவளது வெட்கம் ஆண் மகனாக அவனுக்கு கர்வம் தர, அவளது நெற்றியை இரு கைகளாலும் தாங்கியவன் அவள் நாசியில் முத்தம் பதித்தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவனது முதல் முத்தம்.
இந்த நாள் தன் வாழ்வில் வராதா? என்று ஏங்கிப் போயிருந்த பெண் கண்ணீரோடு கண்களை திறந்து பார்க்க, சிறிதும் யோசிக்காத விஷ்ணு அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
சில நிமிடங்கள் கடக்க வாயைத் திறந்தான் விஷ்ணு.
" இங்க பாருமா என்ன மன்னிச்சிடு தெரிஞ்சோ தெரியாமலோ உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. உன் பக்கத்துல நான் இருந்தும் உன்னை கண்டுபிடிக்காமல் போயிட்டேன் என்னை மன்னிச்சுடு.. "
" ஐயோ இப்ப எதுக்கு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க விஷ்ணு.. உங்களோட மனைவி நான் தானே நான் அதை எல்லாம் நினைச்சு கொஞ்சம் கூட கவலைப்படலை.. "
" உன் மேல நான் நிறைய கோபப்பட்டேன் எனக்கு அது தெரியும் அதுக்கெல்லாம் நான் கேட்கிற மன்னிப்பு கண்டிப்பா பத்தாது இருந்தாலும் கேட்கிறேன்.. "
" ஐயோ என்னங்க நீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு நிஜமாலுமே பழசு ஏதாவது ஞாபகம் வந்திருச்சா.. "
" இல்லம்மா எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை.. ஆனா முதல் முதலாக உன்னை இந்த வீட்டில் பார்த்தபோது என் மனசுக்குள்ள ஒரு சின்ன சலனம்.. எனக்கு பழசெல்லாம் மறந்து போனாலும் அடி மனசுக்குள்ள யாரோ ஒரு பொண்ணு மேல நான் உயிரையே வச்சிருக்கேன்னு என் மனசு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்துச்சு நானும் என்னால முடிஞ்சவரை உன்னை எங்கே எங்கேயோ தேடிப் பார்த்தேன்.. என் கண்ணு முன்னாடி நீ இருந்தும் என்னால உன்னை அடையாளம் கண்டுப்பிடிக்க முடியல.. " என்றவனை ஏமாற்றத்துடன் தென்றல் பார்க்க அவள் பார்வையை கண்டும் காணாதது போல் தொடர ஆரம்பித்தான் விஷ்ணு.
" நான் உன்கிட்ட பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்.. " என்றவன் மனதில் இருந்த அத்தனையையும் அவளிடம் பகிர ஆரம்பித்தான்.
" உன்கிட்ட பேசும் போது உன் கண்ணை என்னால நேருக்கு நேரா பார்க்க முடியாது உன் கண்ணை பார்க்கும் போது என் மனசுக்கு ஏதேதோ விஷயம் தோனிக்கிட்டே இருக்கும்.. என் மனசு என்கிட்ட எதையோ சொல்ல துடிக்க அது என்னன்னு புரியாம ஆழ்ந்து யோசிக்கும்போது எனக்கு தலைவலி வந்துடும்.. அப்படி தலைவலி வர சமயம் எல்லாம் எனக்கு ரொம்ப கோபம் வரும் அப்போன்னு நீ என் கண்ணு முன்னாடி வரும்போது உன் மேல ரொம்ப கோபப்பட்டேன்.. "
" பரவால்ல விடுங்க அதை எல்லாம் நான் பெருசா எடுத்துக்கல.. "
" இல்லம்மா என்னதான் இருந்தாலும் நான் உன்கிட்ட கோபப்பட்டு இருக்க கூடாது.. நானும் என் மனசுல இருக்க அந்த பொண்ணு யாருன்னு தேடி தேடி கடைசியில ஓஞ்சு போன போது தான் எங்க அத்தை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னாங்க.. அதோட சுரேகாவும் என்னை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைப்பட என்னால என்ன பண்ணியும் அவளை மனைவியா பாக்க முடியல அவளோட மனசையும் நோகடிக்க கூடாதுன்னு தான் என் மனசுல இருக்க அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சு ஒரு இடத்துக்கு போனேன்.. நம்ம மனசுல இருக்குற எல்லாத்தையும் சொன்னா அப்படியே வரைஞ்சு கொடுக்கிறவங்ககிட்ட பேசும்போது என் கண்ணை மூடிக்கிட்டு அப்படியே நான் ஒவ்வொரு அடையாளமா சொல்ல சொல்ல அவங்க வரைஞ்சு கொடுத்தது என்னவோ உன்னோட படம் தான்.. ஒரு இயல்பா முகம் தெளிவா தெரியாம எத்தனையோ நாள் தவிச்சுக்கிட்டு இருந்த எனக்கு அந்த படத்தை பார்த்ததுக்கப்புறம் நீதான் என் மனசுல இருக்க அந்த பொண்ணு அதனால தான் உன் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் உன்னை கஷ்டப்படுத்தினேன்னு எனக்கு தெரிஞ்சது.. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்க உன்னை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.. உன்னை பத்தி தெரிஞ்சுக்க முதல் பாகமா விசாரிக்க ஆரம்பிச்சபோது நீ புதுசுன்னு உன்ன பத்தி யாருக்குமே இங்க யாருக்கும் தெரியல.. ",
" என்னடா எந்த தகவலுமே நமக்கு கிடைக்கலையேன்னு அடி முதல் நுனிவரை நானும் உன்னை பத்தி தெரிஞ்சுக்க எவ்வளவு முயற்சி பண்ணியும் எனக்கு எதுவும் கிடைக்கல.. "
" அப்புறம் எப்படி தான் என்னை பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க? " என்றாள் ஆர்வமாக தென்றல்.
அவள் கேட்டதும் அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்தவன் மீண்டும் தொடர ஆரம்பித்தான்.
" உன்னை பற்றி யாருக்கும் தெரியல உன்னை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது பூமாதேவி அப்பத்தா தான்.. அவங்க கிட்ட உன்னை பத்தி கேட்டதும் எமகாதிகி வாயே திறக்கலை.. அப்புறம் தான் எனக்கு ஒரு யோசனை வந்தது நான் என்னை பற்றி யோசித்தேன்.. ஒரு வருஷம் இடையில எனக்கு என்ன நடந்துச்சுன்னு எதுவும் ஞாபகம் இல்லை அப்பதான் எங்க அப்பா கிட்ட எனக்கு ஏன் சில விஷயம் ஞாபகம் இல்லைன்னு கேட்க அவங்க தான் நான் வேலைக்கு போன இடத்துல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லவும் எனக்கு ஒரு துருப்புச் சீட்டு கிடைத்தது.. எதுவுமே கிடைக்காமல் இருந்த எனக்கு எங்க அப்பா இத பத்தி சொல்லவும் ரொம்ப சந்தோஷமா எந்த கம்பெனி அப்படின்னு கேட்க அவங்க உன்னோட கம்பெனியை பத்தி சொன்னாங்க..கூடவே கார்த்திக் என் கூட தான் வேலை பார்த்தான்னு சேர்த்து சொல்ல அவன் கிட்ட போன் பண்ணி கேட்டேன் அவன் சரியான விடாக்கண்டன் எங்க அப்பத்தாவுக்கு மேல அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லன்னு சாதிச்சிட்டான்.. அதுக்கப்புறம் அவனையும் நம்பி பிரயோஜனம் இல்லைன்னு எங்க அப்பா கிட்ட அட்ரஸ் வாங்கிகிட்டு அங்கே வந்து நான் விசாரிக்க,அங்க வேலை பார்த்த எல்லாரும் என்கிட்ட நீங்க என்ன சார் இங்க வந்து இருக்கீங்க உங்க வைஃப் அமெரிக்கா போயிருக்காங்க உங்க பையனும் அங்க தான் இருக்காரு அப்புறம் என்ன இங்க வந்திருக்கீங்கன்னு அவங்க சொன்னதை கேட்டதும் எனக்கு பெரிய அதிர்ச்சி அவங்க கிட்ட எதையும் காட்டிக்க முடியாம சும்மா கம்பெனியை பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு அங்கிருந்து வெளியே வந்த நான் அடுத்து நேரா போனது கார்த்திக் வீட்டுக்கு தான்.. அவனைப் பிடித்து உலுக்குன உலுக்குல எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான்.. உனக்கும் எனக்கு நடந்த கல்யாணம் முதல் உன் வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்.. எதுவுமே தெரியாத மாதிரி என்கிட்ட மறைச்சிட்டு எல்லா விஷயத்தையும் அதுக்கப்புறம் சொல்ல எனக்கு வந்த கோபத்துக்கு அவனை ஒரு அரை விட்டுட்டு திட்டிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன்.. ஆமா நீ இங்க என் வீட்ல தானே வேலை பார்த்தாய் அப்புறம் நம்ம பையனை வளர்த்தது யாரு? அவங்க கிட்ட விசாரிச்சதுக்கு நீ அமெரிக்காவில் இருக்கிறதா சொன்னாங்க எனக்கு என்னனு ஒன்னும் புரியலையே.. "
" அது வேற ஒன்னும் இல்லங்க.. அப்பதான் எனக்கு குழந்தை பிறந்தது என்னால உங்களையும் விட்டுட்டு இருக்க முடியல..அப்போ பாட்டி அண்ணாகிட்ட வேலைக்காரி வேணும்னு சொன்னங்க அப்பதான் பாட்டிகிட்ட உங்க வீட்ல வந்து வேலைக்காரியா இருக்கேன்னு சொன்னேன் உங்களுக்காக என்னோட குழந்தையை நான் விட்டுட்டு வந்தேன்.. சாரி சாரி நம்மளோட குழந்தையை விட்டுட்டு வந்தேன் குழந்தை இங்கேயே இருந்தா அடிக்கடி அவனை போய் பாக்கணும்னு ஆசை வரும்னு தான் நான் கல்யாணி அக்காவோட நம்ம குழந்தையையும் அமெரிக்காவுல இருக்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டேன்.. நீங்க என்ன விட்டுட்டு போனதுக்கப்புறம் கம்பெனில இருக்கவங்க எனக்கு தெரிஞ்சவங்க எல்லாருமே உங்களைப் பற்றி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க அவங்களுக்கு எல்லாம் என்னால எந்த பதிலும் சொல்ல முடியல அதனால தான் நான் உங்களோட அமெரிக்காவில் செட்டில் ஆயிட்டேன்னு பொய் சொல்லிட்டேன்.. அமெரிக்காவில் என்னோட வாட்ஸப் நம்பர் இருக்கு யார் போன் பண்ணாலும் வரும் அதனாலதான் எல்லாரும் நான் அமெரிக்கா போயிட்டேன்னு நம்பிட்டாங்க.. "
" என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்? உன்னோட சொந்த பேரு எல்லாத்தையும் மறைச்சு ஒருத்தனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க!"
" நான் இத்தனை நாள் பட்டது எல்லாம் கஷ்டமே கிடையாது என்னுடைய மிகப்பெரிய கஷ்டம் எது தெரியுமா? நீங்க என்னை மறந்தது உங்களுக்காக குழந்தையை நான் விட்டுட்டு வந்தது.. எங்க அப்பாவுக்கப்புறம் எனக்கு நீங்க இல்லாம போனது நீங்க மட்டும் தான் எனக்கு எல்லாமேன்னு நினைச்ச போது நீங்களே என்னை மறந்தது இதுக்கு அப்புறம் வாழ்க்கையே எனக்கு சூனியம் ஆயிடுச்சு.."
" கவலைப்படாதடா இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி சந்தோஷமா வாழலாம்.. ஆனா சரியான அழுத்தக்காரி தான் நீ உன்னை பற்றி எல்லா விஷயமும் எனக்கு தெரிஞ்சதுக்கப்புறம் தான் உன்கிட்ட வந்து நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டேன்.. ஆனா என்னோட இயல்பான குணத்தினால் அதிரடியாக கேட்டேன்.. அப்ப கூட நீ முடியாதுன்னு சொல்லிட்ட.. சுரேகா கழுத்தில் தாலி கட்ட எடுத்த நிமிஷம் கூட நீ எதுவும் சொல்லல அப்ப நான் உனக்கு வேண்டாம் என்று முடிவு பண்ணதால தான் எதுவும் சொல்லாம இருந்தியா? "
" அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க சத்தியமா பாட்டி தான் எது நடந்தாலும் என்னை பொறுமையாக இருக்க சொல்லி சொன்னாங்க.. நானும் உங்க மேல இருந்த நம்பிக்கையில் விட்டுட்டேன்.. "
" ஒருவேளை நான் என் மனசை மாத்திக்கிட்டு சுரேகா கழுத்துல தாலி கட்டி இருந்தா அப்ப என்ன பண்ணியிருப்ப?"
" என்ன பண்ண முடியும் உங்களோட முடிவு தானே எல்லா விஷயத்திலும் முக்கியம்.. உங்ககிட்ட உண்மைய சொல்ல போய் உங்க உயிருக்கு ஏதாவது ஆயிட்டா என்னால் அதை தாங்கிக்க முடியுமா! என் மனசை மாத்திக்கிட்டு நீங்க சந்தோஷமா இருங்கன்னு உங்க வாழ்க்கையை விட்டு நான் விலகிப் போயிருப்பேன்.. " என்றவளை பிரமிப்பாக பார்த்தான் விஷ்ணுவர்தன்.
" கார்த்தி அண்ணா கூட என்கிட்ட நீங்களும் உங்க அத்தை பொண்ணும் கல்யாணம் பண்ணிக்க போற விஷயத்தை போன் பண்ணி கேட்டாங்க.. அவங்க உண்மையை சொல்லிடுவாங்களோன்னு பயத்துல நான் தான் எதையும் கேட்க வேண்டாம்னு சொல்லிட்டேன் எனக்கு என் மகன் மட்டும் போதும்னு.. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.. " என்றதும் அவளை தன்னிலிருந்து பிரித்த விஷ்ணுவை அவள் கேள்வியாக பார்க்கவும் சிறிதும் யோசிக்காமல் அவளது காலில் விழுந்து விட்டான்.
அவனது செயலில் அதிர்ச்சியோடு எழுந்த தென்றல் " என்ன பண்றீங்க? எதுக்காக இப்படி எல்லாம் பண்ணி என்னை கஷ்டப்படுத்துறீங்க ஏற்கனவே நான் கஷ்டப்பட்டதெல்லாம் பத்தாதா! என்னை மேலும் நீங்கள் ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க.."என்று கதறி விட்டாள்.
" என்னதான் இருந்தாலும் என் வீட்டில் வேலை பார்க்கிற பொண்ணாக நீ இருந்தாலும் உன்னை நான் ரொம்ப கேவலமா பேசிட்டேன்.. அதுவும் அன்னைக்கு நான் உன்னை என்னோட *** அலையிறேனு சொல்லிட்டேன் அதுக்கு எப்பவுமே மன்னிப்பு கிடையாது.. என்னதான் உனக்கு என் மேல அன்பு இருந்தாலும் உன் மனசுக்குள்ள எப்பவுமே நான் சொன்ன அந்த வார்த்தை காயப்படுத்திக்கிட்டே இருக்கும் நான் சொன்னதை என்னால் மாற்ற முடியாது முடிஞ்சா என்ன மன்னிச்சிடு.. "
" நான் அதை எல்லாம் பெருசா எடுத்துக்கல நீங்க இப்படி பண்றது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இப்படியெல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ் விஷ்ணு.."
" சரிம்மா.. நான் இப்பவும் சொல்றேன் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்னோட ஒரே கோபம் நான் சுரேகாவை கல்யாணம் பண்றதுக்கு தயாராக இருந்தபோது கூட நீ தடுத்து நிறுத்தாமல் இருந்தது மட்டும்தான் எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை அதனாலதான் உன்னை இன்னும் அதிகமா பேசிட்டேன் மன்னிச்சிடு.. "
" எனக்கு உங்க உயிர் ரொம்ப முக்கியம் விஷ்ணு நான் அதை பல தடவை சொல்லிட்டேன் ப்ளீஸ் இதுக்கு மேல இந்த விஷயத்தை பற்றி நாம் பேச வேண்டாம்.. முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும்.. "
" சரி தென்றல் இல்லை இல்லை பிரகல்யா.. இப்பவும் சத்தியமா சொல்றேன் எனக்கு எதுவும் ஞாபகமில்லை இனிமே நம்ம புதுசா ஒரு வாழ்க்கையை தொடங்கலாம்.. ரெண்டு பேரும் புதிதாக காதலிக்கலாம் இப்பவும் எனக்கு உன் மேல காதல் இருக்கான்னு கேட்டா எனக்கு தெரியல ஆனா உன் மேல எனக்கு அன்பு நிறையாயிருக்கு எனக்காக நீ பண்ண அத்தனை தியாகத்துக்கும் நீ ஆசைப்பட்டது மாதிரியே உனக்கு நானும் என் குடும்பமும் கிடைச்சிட்டோம்.. இந்த விஷயத்தை கீழே இருக்கிற எல்லார்கிட்டயும் போய் சொல்லலாம் வா.. " என்றதும் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் பேசும் கணவனை புன்னகையுடன் பார்த்தவள் எதற்காக தவம் இருந்தாளோ அது கிடைத்த சந்தோஷத்தோடு அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
அவளது கையை இறுக்கமாக பிடித்த விஷ்ணுவும் எப்பொழுதும் விடப்போவதில்லை என்று மனதுக்குள் உறுதிக்கொண்டான்.
அத்தியாயம் 27 :
கீழே இறங்கி ஓடி வந்த ராகுல் " இனிமேல் நான் அப்பா அம்மா பாட்டி தாத்தா மாமா அத்தை கூட ஒண்ணா தான் இருக்க போறேன்.. ஹை ஜாலி ஜாலி அப்பா சொல்லிட்டாங்க.. ராகுல் ஹேப்பி "என்று கையை தட்டி சிரிக்க, சிறிய குழந்தையின் புன்னகை அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொள்ள அனைவரும் தங்கள் வீட்டு வாரிசை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார்கள்.
அனைவருக்குமே பூமாதேவி தங்களிடம் உண்மையை சொல்லாமல் இவ்வளவு பெரிய காரியத்தை செய்ததை நினைத்து மன வருத்தமாக இருந்தாலும் ஒரு உயிர் போவதற்கு முன்பாக அவரை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் செய்த செயலை யாராலும் தவறாக பேச இயலவில்லை.
குடும்பத்தின் பெரியவர் எப்பொழுதும் தவறு செய்ய மாட்டார் என்கிற நம்பிக்கை அனைவருக்கும்.
அதனால் தானே ஊரே கொண்டாடும் குடும்பமாக இன்று அவர்களது குடும்பம் விளங்குகிறது.
பூமாதேவி செய்த செயலை சரி என்று பேசாமல் குடும்பத்திலிருந்த அனைவரிடமும் வயதில் சிறியவர்கள் என்று கூட பார்க்காமல் மன்னிப்பு கேட்டு விட்டார்.
அவர் அப்படி செய்தது தான் பெரிய மனவேதனையை கொடுத்தது.
" இங்க பாருங்க அத்தை நீங்க செஞ்சதில் எந்த தப்பும் இல்லை.. விஷ்ணு ஆசைப்பட்ட பொண்ண தானே அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க.. என்ன ஒரு மன வருத்தம் எங்க எல்லாருக்கும் அவனோட கல்யாணத்தை பார்க்க முடியலங்கற ,ஒரே ஒரு எண்ணம் தான் தவிர யாருக்கும் உங்க மேல கோபம் கிடையாது.. "என்றார் சீதா.
" விடுங்கம்மா நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு இனிமே அத பத்தி பேசி ஒன்னும் ஆகப்போறது கிடையாது.. அந்த பொண்ணு தான் பாவம் எவ்வளவு பெரிய கோடீஸ்வரி நம்ம வீட்ல வந்து தன் கணவனுக்காக வேலைக்காரி மாதிரி அதுவும் தன் பிள்ளையை விட்டுட்டு அததான் எங்களால் தாங்க முடியல எங்ககிட்டயாவது நீங்க உண்மைய சொல்லியிருக்கலாம்.. " என்றார் கணேசன்.
" உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல.. நான் உண்மையை சொல்லக்கூடாதுன்னு பிரகல்யா தான் என்கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டாள்.. விஷ்ணு தன் மேல கோபப்படுவதை பார்த்து யாராவது கோவத்துல உண்மையை சொல்லிடுவீங்களோன்னு பயத்துல அவ என்கிட்ட சத்தியம் வாங்கிகிட்டாள்.. அதுக்கு முன்னாடியே நான் இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம் ஆனா சுரேகா இந்த விஷயத்தை விஷ்ணு கிட்ட போய் கேட்டிருப்பாள்.. அதனாலதான் எனக்கு பயம். ஏன்னா எனக்கு விஷ்ணுவோட உயிர் தான் முக்கியமா இருந்துச்சு.. "
" அட்லீஸ்ட் நீங்க எங்க கிட்டயாவது சொல்லி இருக்கலாம் அம்மா.. நான் பக்குவமா என் பிள்ளைக்கு எடுத்து சொல்லி புரிய வைத்திருப்பேன் பாவம் என் பொண்ணு.. " என்றார் ஆதங்கமாக லக்ஷ்மி.
அவர் சொல்வதிலும் நியாயம் இருந்ததால் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டார் பூமாதேவி.
விஷ்ணுவை பற்றியும் பிரகல்யா பற்றியும் அவள் வயிற்றில் வளரும் தங்கள் வீட்டு வாரிசு என்று அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தவர் வீட்டில் அனைவரிடமும் இந்த உண்மையை சொல்வதற்கு தைரியம் இல்லாமல் தான் அவர் மறைத்தது.
அவர் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் தான் செய்தது தவறு என்று அவர் மனது உறுத்த எதுவும் பேசாமல் தலை குனிந்து கொள்ள அவரை அந்த கோலத்தில் பார்க்க முடியாத லட்சுமி உட்பட அனைவரும் அத்துடன் இந்த விஷயத்தை பேசுவதை முற்றிலும் தவித்திருந்தார்கள்.
அவர்கள் மனநிலையை மாற்றுவது போல் தான் ராகுல் கீழே இறங்கி வந்திருந்தவன் விஷ்ணு சொன்னதை சொன்னதும் அங்கிருந்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி தான்.
அவனை அத்தனை பேரும் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்கள்.
என்னதான் அவர்கள் அந்த விஷயத்தை முற்றிலுமாக தவிர்த்திருந்தாலும் தங்கள் வீட்டு வாரிசு அனாதையாக இப்படி இருந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர்களுடைய மனக்கசப்பையும் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.
அனைத்தையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டல்லவா!
அனைத்தும் ஒரு நாள் மாறும் என்று அவர்கள் அந்த விஷயத்தை ஒரே நாளில் பேசி முடிக்க வேண்டாம் என்று விட்டு விட்டார்கள்.
நடந்த அனைத்தையும் அனைவரும் விட்டுவிட்டு குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கும் பொழுது தான் விஷ்ணுவும் பிரகல்யாவும் ஜோடியாக இறங்கி வர, அதைக்கண்டவர்களுக்கு மனதுக்குள் இருந்த மீதி கவலையும் பறந்துப்போனது.
அகல்யா கையை பிடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்த விஷ்ணு " எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியும்.. இந்த விஷயத்தை நாம இதோட விட்டுடலாம் முதன்முதலா தென்றலை அவள் அகல்யாவாக இருந்தாலும் சரி நம்ம வீட்டுக்கு வந்தப் போது தென்றல் என்கிற பெயர்தான் இருந்தது எனக்கும் அந்த பேர் தான் ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் அப்படி கூப்பிடறதுல உனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் கிடையாது தானே.. " என்று தென்றலை பார்க்க, கண்களை சிமிட்டி தலையை இல்லை என்று ஆட்டிய மனையாளை
இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றிய உணர்வை சிரமப்பட்டு அடக்கிக் கொண்ட விஷ்ணுவரதன் பேச ஆரம்பித்தான்.
" சில விஷயங்கள் முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும்.. நம்ம ஊர்ல இருக்க எல்லாருக்கும் இந்த விஷயத்தை சொல்லிடுங்க யாரும் இனிமே என் மனைவியை வேலைக்காரியாக பார்க்கக் கூடாது என் மனைவியாக மட்டும் தான் பார்க்கணும்.. கூடவே என் மனைவி எவ்வளவு பெரிய கோடீஸ்வரி அதோட எனக்கும் அவளுக்கும் நடந்த கல்யாண முதல் எல்லாத்தையும் சொல்லுங்க அப்பதான் யாரும் இவளைப் பற்றி தப்பா பேச மாட்டாங்க.. கிராமத்துல எப்பவுமே ஒரு விஷயம் கிடைச்சா போதும் கடைசி வரை அதையே பேசிக்கிட்டு இருப்பாங்க யாரும் என் மனைவியை தப்பா பேசக்கூடாது திடீர்னு தென்றல் தான் என் மனைவின்னும் எனக்கு ரெண்டு வயசுல ஒரு குழந்தை இருக்குதுன்னு சொன்னா கண்டிப்பா எல்லாரும் ஒரு மாதிரி பேசுவாங்க அதுக்காகத்தான் இது.. " என்றவனை உள்ளத்திலிருந்த உவகையோடு பார்த்தாள் பெண்ணவள்.
" சரி விஷ்ணு அப்படியே உனக்கும் என் மருமகளுக்கும் மறுபடியும் இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிடலாம்.. உங்க கல்யாணத்தை பார்க்க முடியவில்லை என்று நம்ம குடும்பத்தில் இருக்கிற எல்லாருக்குமே ஒரு ஏக்கம் இருக்கு அதையும் போக்கிகலாம்.. எல்லார்கிட்டயும் போய் தனி தனியா இந்த விஷயத்தை சொல்ல முடியாது.. ஊர்க்கூட்டி
உனக்கும் தென்றலுக்கும் ஊரே மெச்சுமளவுக்கு கல்யாணத்தை நடத்தலாம்.. "என்றார் பூமா.
அவர் சொன்னதற்கு விஷ்ணு பிரகல்யா இருவருமே மறுத்துப் பேசவில்லை.
அனைத்தையும் புதிதாக தொடங்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
" என்ன விட்டு இப்படி விலகி போகாத ரேணுகா என்னால தாங்க முடியல.. " என்று மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் விஷ்வா.
அவன் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை ரேணுகா.
" ப்ளீஸ் ரேணுகா எனக்கு என் பழைய ரேணுகா வேணும் என்னால நீ இப்படி இருக்கிறத தாங்க முடியல இப்பதான் நான் பண்ணுன தப்பு எல்லாமே எனக்கு புரியுது என்னோட முட்டாள் தனம் எனக்கு நல்லாவே தெரியுது நான் உன் மனதை காயப்படுத்தி விட்டேன்.. அதுக்கு நீ எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடு நான் மனசார ஏத்துக்கிறேன் ஆனா என் கூட பேசாம இப்படி என்னை யாரோ ஒரு ஆள் மாதிரி நீ பாக்குறத சத்தியமா ஏத்துக்க முடியாதுடி.."
" உங்களுக்கு என்னை விட உங்க தங்கச்சி தான முக்கியம் அப்புறம் எதுக்கு என்கிட்ட வந்து பேசுறீங்க? உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக உங்க தங்கச்சி என்னை மிரட்டி எவ்வளவு பெரிய பொய்யை சொல்ல சொன்னா.. இந்த அவமானத்தை தாங்கிக்கொண்டு நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுக்காக? உங்க வாயிலிருந்து நான் முக்கியமே இல்லங்குற வார்த்தையை கேட்க தானா? அதுவும் மணமேடையில் அத்தனை பேர் முன்னாடியும் எங்க அண்ணனுக்கிட்ட இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல என் கழுத்துல இருக்க தாலியை அறுத்து எறிஞ்சிடுவேன்னு சொன்னீங்களே! எதை என்னால மறக்க முடியும்.. உங்களை உயிருக்கு உயிரா நேசித்த பாவத்துக்கு என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டீங்க விட்டுடுங்க என்ன ப்ளீஸ்.. " எனவும் அவள் மனதில் எத்தனை வேதனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட விஷ்வா அதற்கு மேலும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டான்.
அத்தோடு மட்டும் அவன் நின்றுவிடவில்லை. முன்பு அவள் செய்த அனைத்தையும் இப்பொழுது அவன் செய்ய ஆரம்பித்திருந்தான்.
அவள் பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி அதையெல்லாம் சிறிதும் அவன் கணக்கில் கொள்ளவில்லை. அவன் மனதார பேசினான்.
அவள் அதற்கு பதில் சொல்கிறாளா? இல்லையா? என்று கூட பார்க்கவில்லை.
ஒவ்வொரு நேரம் தான் பேசும்போது அவள் அதற்கு எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாத பொழுது மனம் சோர்ந்து தான் போவான்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனதை மாற்ற அவனால் முடிந்த அனைத்தும் செய்ய, ரேணுகா ஆரம்பத்தில் அவன் மீது கோபமாக இருந்த போதும் காதல் கொண்ட மனது அதை இறுக்கிப் பிடித்து வைக்க விரும்பவில்லை.
இப்பொழுது தான் உடனடியாக சென்று பேசினால் நிச்சயம் இவன் அடுத்தபடியாக தன்னை இது போலவே ஒரு பகடையாக்கி தன் மனதை காயப்படுத்தினால் அதைத் தாங்கும் சக்தி தனக்கில்லை என்பதாலேயே வீட்டுக்கு வெளியில சந்தோஷமாக இருப்பது போலவும் நாலு சுவத்துக்குள் அவனை தள்ளி வைத்தும் அவனை நிறுத்தினாள்.
" ஹே டார்லிங் இப்பவாவது சொல்லுமா.. நானும் உன்னை எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து காதலிச்சுக்கிட்டு இருக்கேன் நீ எந்தவிதமான பதிலும் சொல்லாம இப்படி என்னை தனியா தவிக்க விடுவது நல்லாவா இருக்கு.. " என்று வேலைக்காக கிளம்பி கொண்டிருந்த சுரேகாவை பாடாக படுத்தினான் கார்த்திக்.
இப்போது மட்டுமல்ல கடந்த மூன்று மாதங்களாக அவன் இப்படித்தான் வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.
ஆம். மொத்தமாக இப்பொழுது மூன்று மாதங்கள் கடந்து போயிருந்தன.
கார்த்திக் அவனது தாயையும் தந்தையையும் அழைத்துக் கொண்டு நேரடியாக லட்சுமியிடம் சுரேகாவை பொண்ணு கேட்டு வந்து விட்டான்.
முதலில் லட்சுமி தயங்கினாலும் பிறகு கார்த்திக் அவருக்கு தெரிந்தவன் என்பதால் இவனை விட யாரும் தன்மகள் குணத்துக்கு ஒத்துப் போக மாட்டார்கள் என்று நினைத்தவர் தாயையும் சம்மதத்திற்காக பார்க்க, பூமாதேவி கண்களை மூடி திறந்தார்.
அதே நேரம் பூமாதேவியும் சம்மதம் சொல்லிவிட்டாலும் மருமகனிடமும் அவருக்கான மரியாதையை கொடுத்து அவர் மகளுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அவரிடம் கொடுக்க, இந்திரனோ " என்னை விட என் மகள் மேல அன்பா அக்கறையா இருக்கிறது நீங்க தான் உங்களுக்கு தெரியாததா? உங்களுக்கு யாரு சரியான துணை என்று! நீங்க எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு எனக்கு சம்மதம் தான் அத்தை.. "என அவரை நிறைவாக ஒரு பார்வை பார்த்தார் பூமா.
அப்படியே அவர் தன் கணவரையும் பார்த்து கண்களால் கேட்க, மாரியப்பன் சம்மதமாக கண்ணை மூடி திறந்தார்.
பெரியவர்கள் அனைவருக்கும் அந்த சம்மதம் முழு சம்மதத்தை கொடுத்தது.
விஷ்வாவுக்கு தன் தங்கைக்கு இப்படி ஒரு வரன் கிடைத்ததில் சந்தோஷம் என்றாலும் இப்பொழுதும் அவனுக்கு விஷ்ணு செய்த துரோகம் மறக்கவில்லை.
தங்கைக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவன் விஷ்ணுவை பிடிக்காமல் போனாலும் எப்பொழுதும் அந்த வீட்டில் ஒரு ஆளாக அனைவரையும் சந்தோஷப்படுத்தும் கார்த்திக்கை அவனுக்கும் பிடிக்கும்.
கார்த்திக் தன் தங்கைக்கு சரியான துணை என்று நினைத்தவன் எந்தவிதமான தடையும் சொல்லவில்லை. மாறாக அவனது மனம் இந்த தடவையாவது தங்கைக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.
விஷ்ணுவுக்கு தான் பெரிய சந்தோஷம். என்னதான் சுரேகா அவனை திருமணம் செய்வதற்காக தன் தங்கை மீது பொய்யான பழி சுமத்தி அவளை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நாடகம் போட்டாலும் இயல்பாகவே தன் அத்தை பெண் மீது இருக்கும் பாசம் அவனுக்குள் ஊற்றெடுக்க, பல பேருக்கு முன்னிலையில் அவளை திருமணம் செய்து கொள்ளாமல் விட்டு வந்தது பெரிய மனவேதனையை அவனுக்கு கொடுத்தது.
அவனிடம் அன்று முதல் சுரேகா பேசுவதும் கிடையாது.
தன்னால் அவள் வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ? என்று பயந்து கொண்டிருந்தவன் இப்பொழுது சுரேகாவிற்கு தன் நண்பனே மணமகனாக வருவதை நினைத்து பெருத்த சந்தோசம் அவனுக்கு மட்டும்தான்.
அனைவரும் அந்த சம்மதத்திற்கு மனப்பூர்வமாக சம்மதம் சொல்ல, சம்பந்தப்பட்ட பெண்ணோ அன்று வேலைக்குச் சென்றதால் அவளுக்கு தெரியாமலேயே இரு வீட்டாரும் தட்டை மாற்றிக் கொண்டிருந்தார்கள்.
விஷ்ணு தன் நண்பனை இறுக்கமாக அணைத்து வாழ்த்து சொல்லியிருந்தவன் " ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான் இந்த பொண்ணோட வாழ்க்கை என்னால கெட்டுப்போயிடும்ன்னு ரொம்ப பயந்துக்கிட்டே இருந்தேன் அதை நீ சரி செஞ்சு வச்சுட்ட.. நிஜமாலுமே நீ எனக்கு நண்பனா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.. " என்றான் நெகிழ்வாக.
" எப்பவுமே உன் சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் விஷ்ணு என் தங்கையும் எனக்கு ரொம்ப முக்கியம்.. என்னதான் அவள் என் கூட பிறந்த தங்கையாக இல்லாத போதும் அவளுக்கு எப்பவுமே ஏதாவது ஒரு பிரச்சினைன்னா கேக்குறதுக்கு முதல் ஆளா நான் இருக்கிறேன் அதை மறந்துடாத.. இதெல்லாம் இப்ப பிரச்சனையே இல்லை எப்படி என் ஆளை மடக்குவது தான்னு பிரச்சனை சரி அதை நான் பாத்துக்கிறேன் நீயாவது போய் என் தங்கச்சி கூட சந்தோஷமா இரு அவள் இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு இனிமே எப்பவும் அவளை சந்தோசமா பாத்துக்க எனக்கு அது மட்டும் போதும் .."
" இதை நீ சொல்லனுமாடா அவள் தான் என் உயிர் அவளை கண்டிப்பா நல்ல பார்த்துக்கிறேன்.." என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அப்போதுதான் வேலை முடித்து வந்திருந்த சுரேகாவை இப்பொழுது உரிமையுடன் பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக்.
அவனது பார்வை புரியாத சுரேகா ' சரியான லூசு ' என்ற மனதுக்குள் திட்டிக் கொண்டு வீட்டிற்குள் செல்ல, பூமாதேவி அவளிடம் காலையில் கார்த்திக் வீட்டிலிருந்து வந்து சம்மதம் செய்து தட்டை மாற்றிக் கொண்டு போனதை சொல்ல, " யாரைக்கேட்டு நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க? என்னோட விருப்பம் இல்லாம எப்படி நீங்க சம்மதம் சொல்லுவீங்க.. ஏற்கனவே ஒரு தடவை உங்க பேரனால் என் வாழ்க்கை கெட்டது பத்தாதா! நீங்களும் என்னை கஷ்டப்படுத்த இந்த மாதிரி செய்றீங்களா?" என்று ஆடி தீர்த்து விட்டாள்.
ஏற்கனவே நடந்த நிகழ்வால் அவளது மனமடைந்த கஷ்டம் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது என்பதால் அவளை யாரும் எதுவும் சொல்லவில்லை.
லட்சுமி பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் கன்னத்தில் அறைந்து விட்டார்.
" நானும் அப்போ இருந்து பார்த்துகிட்டு இருக்கேன் ராஸ்கல் ரொம்ப ஓவரா பேசுற.. யாருடி உன்னை ஏமாத்துனா நீதான்டி எல்லாரையும் ஏமாற்றி இருக்க.. பாவம் ரேணுகா உன்னோட மாமா பொண்ணு தானடி அவளை எப்படி மிரட்டி உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க.. உனக்கு பிடித்த ஒருத்தரை கல்யாணம் பண்றதுக்கு இப்படி எல்லாம் பண்ணுவியா? இதனால நம்ம குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் எவ்வளவு அவமானம் இதையெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாத்தியா என்னமோ தாம் தூம்ன்னு குதிச்சிட்டு இருக்க.." என்றதும் தன் ரகசியம் வெளியில் தெரிந்ததும் எதுவும் பேச முடியாத சுரேகா ரேணுகாவை முறைத்து பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.
அவள் நடந்து கொண்ட விஷயத்தை தெரிந்து கொண்ட கார்த்திக் இப்படித்தான் தினமும் அன்று முதல் அவள் வீட்டிற்கு வர ஆரம்பித்தவன் உரிமையோடு அவள் அறைக்குச் சென்று அவளை வம்பிழுக்க ஆரம்பித்திருந்தான்.
அவளுக்கு எப்பொழுது தன் மேல் முழுமையான நம்பிக்கை வருகிறதோ அன்றே தங்கள் திருமணம் நடக்கட்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டதால் யாரும் அவளை தொந்தரவு செய்வது கிடையாது.
அதேபோல் அவளுக்கும் கார்த்திக் தன்னுடைய அறைக்கு வந்து தன்னை தொந்தரவு செய்வது ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்த போதும் போகப்போக அதை உள்ளுக்குள் கள்ளத்தனமாக ரசிக்க ஆரம்பித்திருந்தது அவளது மனம்.
இந்த பிரச்சனைகளுக்கு இடையில் விஷ்ணு
அகல்யா வாழ்க்கை நல்லபடியாக தொடக்கம் செய்திருக்க, அவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்த வேண்டும் என்று பெரியோர்கள் பேச அகல்யா " என்னைக்கு ரேணுகா விஷ்வா அண்ணன் கார்த்திக் அண்ணா சுரேகா கல்யாணம் நடக்குதோ அன்னைக்கு நாங்களும் கல்யாணம் பண்ணிக்கிறோம். இவங்க எல்லாரும் இவங்க வாழ்க்கையை சந்தோஷமா தொடங்கும் போது தான் நாங்களும் எங்க வாழ்க்கையை தொடங்குவோம் அப்பதான் எங்களுக்கும் அது சந்தோஷத்தை கொடுக்கும்.. இவங்க சந்தோஷமா இல்லாம இந்த குடும்பத்துல இருக்க யாரும் சந்தோஷமா இருக்க மாட்டீங்க நீங்க யாரும் சந்தோஷமா இல்லாமல் நாங்க சந்தோஷமா இருக்க மாட்டோம்.." என்ற முடிவாக சொல்லியவளை அனைவரும் பெருமையாக பார்த்தார்கள்.
அத்தியாயம் 28 :
" டார்லிங் வா நம்ம ஆபீஸ் போகலாம் வா வா.. " என்றதும் அவனை முறைத்து பார்த்தாள் சுரேகா.
" நீயெல்லாம் ஒரு மனுஷனா? எத்தனை தடவை உன்னை பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்றது எதுக்காக மறுபடி மறுபடி என் பின்னாடியே வந்து தொந்தரவு பண்ற? " என்று சுரேகா கோபமாக பேசினாள்.
அன்று அவளுக்கு அலுவலகத்தில் வேலைக்கு மேல் வேலை தர, அதன் அழுத்தத்தை தான் இப்பொழுது கார்த்திக்கிடம் காட்டினாள்.
அவளது செயலில் அவனது முகம் வாடி போக " சாரி இத்தனை நாள் உனக்கு என் மேல விருப்பம் இருக்கும்னு நினைச்சு நான் இந்த மாதிரி பண்ணிட்டேன் இனிமே உன்னை நான் தொந்தரவு பண்ண மாட்டேன் சாரி உன் லைஃப்ல இனி நான் கிடையாது.. " என்றவன் குரல் கமற பேச அவன் பேசிய பிறகு தான் சுரேகாவிற்கு அவனிடம் பேசிய வார்த்தைகள் விளங்கியது.
எப்பொழுதும் தன்னை வம்பு செய்து கொண்டும் குறும்பு கண்களும் சிரித்த இதழ்களுமாக இருப்பவன் இப்பொழுது முகம் வாடி போவதை கண்டவளுக்கு மனதுக்குள் ஏதோ பெரிய அழுத்தம்.
அவளிடம் சொல்லிய கார்த்திக் அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல் அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்றதும் சுரேகாவிற்கு எதையோ இழந்தது போல் மனது மிகவும் பாரமாகியது.
' என்ன விட்டுட்டு போயிடாதீங்க கார்த்திக் நீங்க இல்லாம என்னால வாழ முடியாது..' என்று அவள் மனம் உள்ளுக்குள் இருந்து கத்த, அப்போதுதான் அவளுக்கு தான் அவனை உயிருக்கு உயிராக நேசிப்பதே விளங்கியது.
" ஓ மை காட் அப்ப நான் கார்த்திக்கை காதலிக்கிறேனா? " என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டவள் அவசரப்பட்டு பேசி விட்டதை நினைத்து தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
சிறிது நேரம் தன்னிலை யோசித்துக் கொண்டிருந்தவள் கார்த்திகை இழக்க விருப்பமால் அவனை தடுத்து நிறுத்துவதற்காக கீழே இறங்கி ஓடி வந்தாள்.
அங்கு லட்சுமி அவளிடம்" சரி சுரேகா உனக்கு கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு நான் அந்த பையனோட அப்பா அம்மாகிட்ட சொல்லிடுறேன்.. பாவம் அந்த புள்ள முகத்தை என்னால பாக்க முடியல உன்னை நேசித்த பாவத்துக்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்.. " எனவும் தனது தாயை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதுவிட்டாள்.
" அப்படி எதுவும் அவசரப்பட்டு பண்ணிடாதீங்கம்மா. கார்த்திக் இல்லாம என்னால வாழ முடியாது என்னோட கோபம் சந்தோஷம் எல்லாத்தையும் நான் அவர்கிட்ட தானே காட்ட முடியும் ஏதோ ஒரு கோபத்தில் அப்படி நான் அவர்கிட்ட பேசிட்டேன் அதை அவர் தப்பா எடுத்துகிட்டார் தயவு செஞ்சு எங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடாதீங்க.. விஷ்ணு அத்தான் என் வாழ்க்கையில இல்லன்றபோது என்னால் ஏத்துக்க முடிஞ்சது ஆனால் கார்த்திக் என் வாழ்க்கையில் இல்லைங்கிற விஷயத்தை என்னால் ஏத்துக்கவே முடியாது அவர் இல்லைன்னா நான் செத்துப் போயிடுவேன்மா.." என்றவள் அழுத அழுகை லட்சுமிக்கு சந்தோஷத்தை தான் கொடுத்தது.
" டார்லிங் நீ அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவு பண்ணாதே.. இந்த ஜென்மத்துல உன்னை விட்டுட்டு போற ஐடியா எனக்கு கொஞ்சம் கூட கிடையாது.. " என்றபடி அவளது தோளை சுரண்டினான் கார்த்திக்.
கார்த்திக் குரல் தனக்கு பின்பாக கேட்க, அவனது சத்தத்தை கேட்டதும் அவள் ஜீவன்கள் யாவும் அவன் பால் மொத்தமாக சாய லட்சுமியை விட்டு பிரிந்தவள் தனக்கு பின்னால் நின்ற கார்த்திக்கை பார்க்க அவனோ எப்போதும் போல் குறும்பு கண்ணனாக அவளை பார்த்து கண்களை சிமிட்டினான்.
" ஐ அம் சாரி கார்த்திக் ஐ லவ் யூ.. " என்றபடி அவனைத் தாவி அணைத்துக் கொண்டவள் இனி என்றும் அவனை விடப் போவதில்லை என்பது போல் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
" என்ன டார்லிங் இது?தனியா நம்ம ரெண்டு பேரும் மட்டும் இருக்க சொல்ல வேண்டிய விஷயத்தை இப்படி உன் குடும்பத்துக்கு முன்னாடி சொல்றியே! அவங்க எல்லாரும் நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க.. " என்று அவள் காதுக்குள் கிசுகிசுக்க, சட்டென அவனை விட்டு பிரிந்தாள்.
கார்த்திக் சொன்னது போலவே ஒட்டு மொத்த குடும்பமும் அவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அனைவரும் பார்க்க அவளை வெட்கம் பிடுங்கி தின்றது.
சுரேகாவிற்கு மட்டும் திருமணம்மாகவில்லை என்ற கவலை குடும்பத்திலிருந்த அனைவருக்கும் இன்று முழுவதுமாக பறந்து போக, அங்கு சந்தோஷத்திற்கு பஞ்சம் வேண்டுமா? என்ன?
" கார்த்திக் இந்த ஒரு வார்த்தைக்காக தானே இத்தனை நாளா நீ காத்துகிட்டு இருந்த நீ ஆசைப்பட்டது மாதிரியே எங்க பொண்ணு வாயிலிருந்து அந்த வார்த்தை வந்துடுச்சு.. உங்க அப்பா அம்மாவை முறைப்படி நிச்சயதார்த்தம் பண்ண கூட்டிகிட்டு வா நல்ல நாள் பார்த்து நான் சொல்றேன்.." என்றார் பூமாதேவி.
திருமணம் பற்றிய பேச்சு எழுந்ததும் சுரேகாவிற்கு வெட்கம் தாங்க இயலவில்லை.
அவளது பக்கத்தில் வந்த அகல்யா " ரொம்ப அழகா இருக்கீங்க சுரேகா மேடம்.. " என்று அவளிடம் பேச, அதுவரை வெட்கத்தில் இருந்த சுரேகா நிமிர்ந்து அகல்யாவை பார்க்க அவளோ இவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தான் அத்தனை தூரம் வார்த்தைகளால் வதைத்தும் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் தன்னிடம் வந்து சகஜமாக பேசும் பெண்ணை ஆச்சரியமாக பார்த்தாள்.
" என்ன மன்னிச்சிடு தென்றல்.. சாரி பிரகல்யா.. "
" ஐயோ என்ன இது பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டிருக்கீங்க? உங்களுக்கு எப்படி தோணுதோ அந்த பெயரை சொல்லுங்க ஒன்னும் பிரச்சனையில்லை.. "
" நீ இப்படி பேசுறது உன்னோட பெருந்தன்மையை சொல்லுது தென்றல்.. எவ்வளவு பெரிய கோடீஸ்வரி நீ அத்தனையும் விட்டுட்டு என்னோட அத்தானுக்காக ஹ்ம் என்னதான் இருந்தாலும் அவர் என்னோட மாமா பையன் எனக்குத்தான் எப்பவுமே முதல் உரிமை அதை நான் உனக்கு விட்டு தர மாட்டேன்.. " என்று உரிமையுடன் பேச, பிரகல்யா அவளையும் கணவனையும் ஒரு புன்னகையுடன் பார்த்தாள்.
" அத்தனையும் விட்டுட்டு என் அத்தானுக்காக வந்து இங்க எங்க எல்லார்கிட்டயும் எவ்வளவு அசிங்கப்பட்டு ஒரு வேலைக்காரி மாதிரி அதுவும் நீ பெத்த பிள்ளையையும் விட்டுட்டு வந்து உன்னோட சூழ்நிலை எனக்கு வந்திருந்தா நிச்சயம் நான் இப்படியெல்லாம் பண்ணி இருப்பேன்னே எனக்கு சந்தேகம்தான்.. உன்னோட நல்ல மனசுக்கு நீ எப்பவுமே நல்லா இருப்ப நீ ஆசைப்பட்டது மாதிரியே உனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது.. தயவு செஞ்சு நான் உன் மனதை கஷ்டப்படுத்துனது மாதிரி பேசிய வார்த்தைகள் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்குறேன் தென்றல் முடிந்தால் என்னை மன்னித்துவிடு.."
" நீங்க என்கிட்ட இப்படி எல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை சுரேகா மேடம்.. "
" எனக்கும் உன்னோட வயசு தான் இனிமேலும் இந்த மாதிரி எல்லாம் பேசாம எப்பவும் போல உரிமையா என்கிட்ட பேசு தென்றல் அதைத்தான் நான் விரும்புறேன்.."
" எடுத்ததுமே எனக்கு அப்படி பேச முடியாது கொஞ்ச நாள் பழகினதுக்கப்புறம் நான் இயல்பா பேசுறேன் மேடம்.. என்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்க அவசியம் கிடையாது உங்க இடத்தில் நான் இருந்திருந்தால் கூட என் மாமா மகனை யாருக்கும் விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன் நிச்சயம் நான் கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்.. " என்றவளை அணைத்துக்கொண்ட சுரேகா மீண்டும் மீண்டும் அவளிடம் மன்னிப்பு வேண்டினாள்.
" நெஜமாலுமே உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்குது தென்றல்.. நான் வேலை பாக்குற கம்பெனியோட ஓனர் நீதான்..அவ்வளவு பெரிய கம்பெனியில் வேலை பாக்குறதுக்கு எங்களை மாதிரி எத்தனையோ பேர் இன்னிக்கு ஆசைப்படுகிறோம்.. அவ்ளோ பெரிய இடத்தில் இருக்க நீ இன்னைக்கு அத்தனையும் விட்டுட்டு என் விஷ்ணு அத்தானுக்காக நீ வந்தத நினைச்சா எனக்கு ரொம்ப பிரம்மிப்பாயிருக்கு.. உன்னோட காதலுக்கு முன்னாடி நான் அவரை கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனச்சதெல்லாம் ஒண்ணுமே இல்லை ரொம்ப சாரி.. " எனவும் அவளுக்கு ஒரு புன்னகை பதிலாக கொடுத்தாள் தென்றல்.
" வீட்ல இருக்க பெரியவங்க எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க ரேணுகா உன்கிட்டயும் மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன்.. "என்ற சுரேகா விஷ்ணுவை தான் திருமணம் செய்து கொள்வதற்காக ரேணுகாவை மிரட்டியதை எல்லாம் சொல்லி தான் செய்த அனைத்து குற்றத்திற்கும் மன்னிப்பு கேட்டவள் " நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்.. " என்றாள் கண்ணீருடன்.
" நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது சுரேகா.. உங்க அண்ணனை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டது மாதிரி தானே உனக்கும் அண்ணன் மேல விருப்பம் இருந்திருக்கும் அது தப்பு கிடையாது அதுக்காக தானே நீ இவ்வளவு தூரம் செஞ்ச! எனக்கு எப்பவுமே உன்னை ரொம்ப பிடிக்கும் சுரேகா ஆனால் மத்தவங்களுக்கு நீ மரியாதை கொடுக்காம தேவையில்லாமல் பேசுவது தான் உன்கிட்ட எனக்கு பிடிக்காது மத்தபடி எனக்கு உன்மேல் எந்த கோபமும் இல்லை.. "என்றாள் ரேணுகா.
" சம்பந்தப்பட்ட ரேணுகாவே உன்னை மன்னிச்சதுக்கப்புறம் நாங்க இதுல சொல்றதுக்கு எதுவும் கிடையாது சுரேகா.. இனிமேலாவது எல்லாரும் சமம் தான்னு யார் மனசையும் நோகடிக்காம நல்லபடியா இரு அதுவே எங்களுக்கு போதும்.. " என்று பூமாதேவி சொல்ல அவருக்கு சம்மதமாக தலையசைத்தாள்.
" நானும் கூட உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ரேணுகா அன்னைக்கு நான் அத்தனை பேரும் முன்னாடியும் என் தங்கச்சி தான் முக்கியம்னு சொல்லி உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் முடிஞ்சா என்னை மன்னிச்சிடு.. " என்றான் விஷ்வா.
" பரவால்ல தான் உங்க தங்கச்சிக்காக தானே நீங்க இவ்வளவும் செஞ்சீங்க!எனக்காக எங்க அண்ணன் இதுக்கு மேலேயும் எதையும் செய்வார் அதேபோல நீங்களும் உங்க தங்கச்சிக்காக இதை செஞ்சீங்க தப்பு கிடையாது.. எனக்கு இப்போ உங்க மேல எந்த கோபமும் இல்ல இந்த மூன்று மாதம் நான் உங்களுக்கு நிறையவே தண்டனை கொடுத்துட்டேன்.. நான் உங்க மேல உள்ள கோபத்தால் உங்களை விலக்கி வைக்கல.. நம்ம மனசுக்கு பிடிச்சவங்களுக்கு நாம முக்கியம் இல்லன்னு தெரியும்போது நம்ம மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்பதை புரிய வைக்கத்தான் உங்களை விட்டு இத்தனை நாள் நான் ஒதுங்கி இருந்தேனே தவிர உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை.. "என விஷ்வா கண்களிலிருந்து சந்தோஷமாக ஒரு துளி நீர் வழிந்தது.
அனைத்து பிரச்சினைகளும் நல்லபடியாக தீர்ந்துப்போக, அந்த இடத்தில் சந்தோஷம் மட்டுமே ஆட்கொண்டது.
" போதும் இந்த வீட்ல இதுவரை எல்லாரும் அனுபவிச்ச கஷ்டம் போதும் எல்லாரும் இனிமே சந்தோஷமா மட்டும்தான் இருக்கணும்.. மூணு பேரோட கல்யாண வாழ்க்கையும் நல்லபடியா ஆரம்பிக்கணும்னு நானும் உங்க தாத்தாவும் முடிவுpப் பண்ணி உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல நாள்ல கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.. " என்றதும் ரேணுகா " எங்களுக்கு இப்பதானே அம்மாச்சி கல்யாணம் ஆயிருக்கு எங்களுக்கு வேண்டாம்.. " என்றாள் மறுப்பாக.
" உன்னோட கல்யாணம் சந்தோஷமான மனநிலையில் நடக்கலையேடா.. இந்த வாட்டி உங்களுக்கு நடக்குற கல்யாணத்தில் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் அப்பத்தான் உங்க வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்.. " என்றதும் மூன்று ஜோடிகளும் திருமணத்திற்கு ஒப்பு கொண்டார்கள்.
திருமணம் இனிதே களைகட்ட தொடங்க, ஊரில் இருக்கும் அனைவருக்கும் விஷ்ணு சொன்னதுப் போலவே அவனுக்கு முன்பே திருமணமானதையும் குழந்தை பிறந்ததையும் சொல்லி அகல்யா தந்தை இருந்த மனநிலையில் யாருக்கும் சொல்லாமல் அவசரமாக திருமணம் செய்ததையும் சேர்த்து சொல்ல, ஊரில் இருக்கும் ஒரு சிலர் அவர்கள் குடும்பத்தை புறம் பேசினாலும் அந்த ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் அந்த திருமணத்தில் மிக்க மகிழ்ச்சி.
ஊரில் உள்ள அனைவரும் தங்கள் வீட்டு திருமணம் போல் ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு பார்க்க, இத்தனை காலமாக ராகுலை கொஞ்சாத ஏக்கத்தை எல்லாம் கொஞ்சி தீர்த்தார்கள்.
பூமாதேவி வீட்டு திருமணம் ஊரே மெச்சும்படி நன்றாக நடந்து முடிந்தது.
ஒவ்வொருவரின் திருமணமும் பத்து நிமிட இடைவேளையில் நடந்ததால் ஒரு திருமணத்தை அடுத்த ஜோடிகள் கண்ணாரக் கண்டு ரசித்தார்கள்.
தென்றலுக்கு தாயாக காந்திமதி அனைத்து சடங்குகளையும் செய்ய, கல்யாணி அவளுடன் இருந்து அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்.
திருமணத்திற்கு இடையில் பிரகல்யா டிரஸ்ட் வேலைகள் மொத்தத்தையும் கல்யாணியிடம் கொடுத்து விட்டாள்.
காந்திமதிக்கு வயசாகி விட்ட காலத்தால் அவரை தன்னுடனே இனிமேல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொறுப்புகள் அனைத்தும் கல்யாணியிடம் கொடுக்கப்பட்டது.
ஒரு குழந்தைக்காக ஏங்கி தவித்து போயிருந்த கல்யாணி இன்று பல குழந்தைகளை தன் கைகளால் அள்ளி அணைத்திருந்தார்.
அதற்கு காரணமான அகல்யாவிடம் நன்றியும் மறக்காமல் சொல்ல, அவளோ செல்லமாக கடிந்து விட்டு அவரை மனதார அணைத்துக் கொண்டாள்.
காந்திமதி தனக்கு தாயென்ற அடையாளம் கொடுத்த அகல்யாவை கண்ணீருடன் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்.
கம்பெனியின் மொத்த பொறுப்புகளையும் கார்த்திக் சுரேகா இருவரிடமும் கொடுத்துவிட்டாள் தென்றல்.
பூமாதேவி வீட்டிற்கு வேலைக்காரியாக வந்தது முதல் இருந்து யாருக்கும் சந்தேகம் வராமல் விடுப்பு எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்ற ஒரு வருடத்திற்கு ஒருமுறை வந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்பது போல்
நடித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது அது தேவையில்லாமல் போனது.
அவனும் சுரேகாவை அவளது குடும்பத்தை விட்டு பிரிக்க மனம் வராமல் அதே நேரம் கூட பிறக்காத சகோதரியிடம் இருக்க ஆசைக் கொண்டு சுரேகா வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த ஒரு வீட்டை விலைக்கு வாங்கி கொண்டு வந்து விட்டான்.
பிரகல்யா கம்பெனியில் வேலை செய்யும் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தவள் அவர்களிடமும் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த உண்மையை சொல்ல, அவர்களிலும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அவள் நிலைமையை நினைத்துப் பரிதாபப்பட்டவர்கள் அவர்களுக்காக தாங்களும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
பூமாதேவி மாரியப்பன் கைகளில் ராகுலை வைத்துக்கொண்டு முன்னால் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு
வலது பக்கத்தில் லட்சுமியும் அவரது கணவர் இந்திரனும் இடது பக்கத்தில் கணேசனும் அவரது மனைவி சீதாவும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு கீழே அவர்களது தவப்புதல்வர்களும் அமர்ந்திருக்க புதல்வர்களுடன் சேர்ந்து அவரவர் இணையும் அமர்ந்திருக்க அந்த அழகான தருணத்தை புகைப்படம் தனதுக்குள் உள்வாங்கிக் கொண்டது.
அதையெல்லாம் ஆத்மாவாக பார்த்துக் கொண்டிருந்த சந்திரசேகர் ஆத்மாவிற்கு நிம்மதி கிடைத்தது.
தன் மகளை யாரும் இல்லாத அனாதையாக விட்டுச் செல்கிறோம் என்றவர் தவிப்பு இன்று தன் மகளுக்கு இத்தனை சொந்தங்கள் இருக்கிறது என்று சந்தோஷமாக விண்ணுலகத்தை நோக்கி பயணம் செய்தது.
முதலிரவு அறை,
" நிஜமாலுமே நீ என்னை மன்னித்துவிட்டாயா ரேணுகா.. "
"இதுல பொய் சொல்றதுக்கு என்னங்க இருக்கு எல்லா பொண்ணுங்களும் ஆசைப்படுவதை தான் நானும் ஆசைப்பட்டேன்.. எந்த பொண்ணுமே தன்னோட கணவன் தன்னை யார்கிட்டயும் தன்னை விட்டுக்கொடுக்க கூடாதுன்னு ஆசைப்படுவாங்க நீங்க அந்த மாதிரி என்னை விட்டுக் கொடுத்தது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் என்னை நீங்க சமாதானப்படுத்த பண்ண முயற்சி எல்லாம் பார்க்கும்போது நான் உண்மையாக மனசு மாறிட்டேன்.. இனி பழசு எல்லாம் பேச வேண்டாம் நம்ம ரெண்டு பேரும் எப்படி எல்லாம் வாழனும்னு ஆசைப்பட்டேனோ அதே மாதிரியான ஒரு வாழ்க்கையை எனக்கு தாங்க.."
" கண்டிப்பாடா உன்னை நான் கண்டிப்பா நல்லா பாத்துப்பேன் யாருக்காகவும் உன்னை விட்டு தர மாட்டேன்.. "எனவும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள் ரேணுகா.
அவர்களது இல்லறம் நல்லறமாக இனிதே தொடங்கியது.
சுரேகா அறையில் கணவனும் மனைவியும் பாட்டை போட்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்க, பாடல் முடிந்ததும் ஆடி முடித்த களைப்பில் இருவரும் அமர்ந்து விட்டார்கள்.
இருவரும் சிறிது நேரம் மூச்சு வாங்கினார்கள்.
" நெஜமாலுமே நீ இப்படி எல்லாம் என் கூட சந்தோஷமா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல தெரியுமா சுரேகா.. "
" அதை விடுடா கார்த்திக் இதெல்லாம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள சகஜம்.."
" என்னடி இது கொஞ்சம் கூட புருஷன்கிற மரியாதை இல்லாமல் வாடா போடான்னு பேசுற உன்னை விட எனக்கு வயசு கூடடி.."
" தெரியும்டா இப்ப அதுக்கு என்ன?"என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கார்த்திக் அமைதியாகிவிட்டான்.
அவனுடைய அமைதி அவளுக்கு சிரிப்பை தர, " கார்த்திக் அத்தான் கவலைப்படாதீங்க என்னுடைய புருஷனை யார் முன்னாடியும் நான் அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன் நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது எப்படி வேணாலும் கூப்பிடுவேன் நீங்களும் என்னை எப்படி வேணாலும் கூப்பிடலாம்.. " என்றதும் தாராளமாக சிரித்தான் கார்த்திக்.
"எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சுரேகா.. எங்கே என்னை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டேன்னு ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன்.."
" தான் காதலிக்கிற பொண்ணை விட தன்னை காதலிக்கிற பையனை தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. விஷ்ணு அத்தான் மேலே இருந்த கோபத்தால் தான் எனக்கு உங்க மேல கோபம் ஏனா நீங்க அவரோட நண்பர். என்னை நீங்களும் ஏமாத்திடுவீங்களோன்னு இன்னொரு பக்கம் பயம் ஆனா அதுக்கப்புறம் நீங்க என் மேல காட்டுன அன்பு என்னை முழுமையாக மாற்றி விட்டது என்னோட கெட்ட எண்ணங்களையும் மாற்றி இன்னைக்கு நான் நல்ல ஒரு மனுஷியா இருக்குறதுக்கு காரணம் நீங்க மட்டும் தான்.. நிஜமா உங்ககிட்ட மனசார சொல்றேன் ஐ லவ் யூ கார்த்திக்.. " என்றவளை நெகிழ்வாக அணைத்துக் கொண்டான் கார்த்திக்.
விஷ்ணு தன் மனைவியின் காதுக்குள் " எனக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு அகல்யா.. நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும் போது உனக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் எல்லாமே ஞாபகம் வந்துடுச்சு.. " என்ற கணவனை கண்களில் நீருடன் பார்த்தாள்.
"இப்ச்.. உன்கிட்ட நான் பல தடவை சொல்லி இருக்கேன் நீ இதுவரைக்கும் அழுதது எல்லாம் போதும் உன்னை நான் ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன்.. மறுபடியும் மன்னிப்பு கேட்டுகிறேன் முடிந்தால் என்னை மன்னித்துவிடு.."
" வேண்டாம் விஷ்ணு பழசு எதையும் பேச வேண்டாம் முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் நம்ம ரெண்டு பேரும் இனிமே ஒரு புது வாழ்க்கையை தொடங்கலாம்.. "என அவள் பட்ட அனைத்து கஷ்டங்களுக்கும் சேர்த்து ஒரு நல்ல வாழ்க்கையை அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தான்.
மறுநாள் காலையில் குடும்பத்திலிருந்த பெண்கள் மூவரும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து முடித்துவிட்டு ஒன்றாக சமையலறைக்கு வர, ஏற்கனவே அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி சீதா இருவரும் அவரவர் மருமகளை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
Latest Post: சித்திரையில் நீ மார்கழி..!! - (Comment Thread) Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page