All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா? -19

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம்: 19

 

தன் தளத்திற்க்கு வந்த பைரவ் நேராக போன இடம்…அந்த தளத்தில் உள்ள ஒரு அறைக்கு அந்த அறையின் கதவில்… சில இலக்கங்களை போட கதவு கிளிக் என்ற சத்தத்தோடு திறந்தது. 

 

பைரவ் உள்ளே வர அவன் நாசியில் ஒரு பெர்பியூம் மணம் கூடவே…. இத்தனை வருடங்கள் பூட்டி இருந்த அறையை திறக்கும் போதும் வரும் மணம் வந்தது…அவன் வர இருட்டாக இருந்த அறை சென்சார் மூலமாக ஒளி வெள்ளத்தில் மிதந்தது. 

 

மஞ்சளும், இளம் சிவப்பும் கலந்த அறை சுவர் தொடக்கம்… சோபா, அலங்கார பொருட்கள் எல்லாம் அந்த நிறத்தை தான் கொண்டு இருந்தது…கிட்ட தட்ட பைரவ் அறை போல தான் ஆனால் என்ன ஒரு பெண்ணின் அறை. 

 

பைரவ் நேராக வரவேற்பு அறைக்கு வந்தவன்…அங்கே ஒரு பக்க சுவரை அடைத்து கொண்டு…தங்க மூலாம் பூசிய ஒரு பிரேம்மில் தமிழ் நாட்டு பெண் போல சிரித்து கொண்டு இருந்த ஒரு யவன யுவதியை… பார்த்தவன் “ஆரணி மை பிரின்சஸ்” என அழைத்தவன் கண்கள் கலங்கியது. 

 

ஆம் அவள் தான் ஆரணி சாம்ராட் பைரவ் ஆங்கிலோ இந்தியன் என்பதால் அழகு, கலர் கொட்டி கிடந்தது…அவளை அவன் காலேஜ்ஜில் தான் சந்தித்தான் மென்மையானவள்…அவளுக்கு தாய் இல்லை தந்தை மட்டும் பாரீசில் பணக்கார குடும்பங்களில் ஒன்று அவள் குடும்பம். 

 

ஒற்றை வாரிசு அவளிடம் பிடித்தது அவள் மென்மை தான்…கொஞ்சம் கூச்சம் சுபாவம் அது தான் அவளிடம் மொத்தமாக அவனை சாய்த்தது…தன் தாயின் நாட்டில் இருந்து வந்தவன் என்பதால் இந்தியா வசிக்க போகிறோம் என்பதால் இவனை நேசிக்க ஆரம்பித்தாள் .

 

பைரவ் தன் பாட்டி, அத்தை மூலமாக அனுமதி கேட்க… ரவி வர்மன் கடுமையாக மறுத்து விட்டார்…அவனை உடனடியாக இந்தியா வர சொல்லி விட்டார்…ஆனால் ஆரணியின் தந்தை மகள் விருப்பம் தான் தன் விருப்பம் என்றவர் பாரீஸ் வியக்கும் அளவுக்கு மகளின் கல்யாணத்தை நடத்தி வைத்தார். 

 

அவர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்று வியாபார சுற்று பயணம் சென்று விட்டார்….கிட்ட தட்ட மூன்று மாதம் திகட்ட திகட்ட காதல், சந்தோஷத்தை அவர்கள் அனுபவித்தார்கள்…யுவராஜ் மட்டும் தான் அவன் திருமணத்திற்க்கு சாட்சி அவனும் வியாபாரம் சம்மந்தமாக லண்டன் போய் இருந்தான். 

 

அப்போ தான் ரவி வர்மன் இவனை மன்னித்து விட்டேன்…  உன் பார்யா கூட தரவாடுக்கு வா என அழைப்பு வைக்க… சந்தோஷமாக ஆரணியை அழைத்து கொண்டு கேரளா வந்தான்…அப்போது பல்லவி இங்கே இருக்கவில்லை கார்த்திகா , மீனாட்சி சந்தோஷமாக அவளை வரவேற்றனர். 

 

ரவி வர்மன் ,விஜயன், அருள் பெரிதாக ஏதும் சொல்லவும் இல்லை திட்டவும் இல்லை…கார்த்திகா, நிலாயினி தான் ஆரணி கூட நன்றாக பேசி பழகினார்கள்…அந்த ஒரு மாதமும் ஆரணி ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்…மகா பூஜை வரும் வரைக்கும் அதற்க்கு பிறகு தான் எல்லாம் மாறியது…

 

பையு என கார்த்தியாயினி குரல் கேட்க… கலங்கிய தன் கண்களை பைரவ் துடைத்தவன் திரும்பியவன் அம்மாயி என்றான்…கார்த்திகா ஆரணியின் போட்டோவை பார்த்தவள் அவள் கண்களும் கலங்கியது. 

 

கார்த்திகா “ எனக்கு உன் வலி புரியாமல் இல்ல பையு எனக்கும் உன் வலி தான்…என் சேட்டா ,சேட்டத்தி (அண்ணி) போன வலியே! மறக்க முடியாமல் இருக்கும் போது என் மருமகள் போனதை எப்படி தாங்கி கொள்ள முடியும். 

 

அதுவும் கம்பீரமான என் மகன் இனி நடக்க முடியாது…சக்கர நாற்காலியில் இருக்க வேணும் என்றால் எப்படி இருக்கும்…எல்லா வலியையும் நான் யாருக்காக தங்கி கொண்டேன் உனக்காவும் யுவாவுக்காகவும் தான். 

 

எனக்கு தெரியும் ஈ கொட்டாரத்தில் சுயநலம் கொட்டி கிடக்குது என்று…என்னால் என் அம்மாவால் அதை எதிர்க்க முடியாது என்றும் தெரியும்…ஆனால் அது உன்னால் யுவாவால் முடியும் எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு.

 

இன்னுமொன்று ஈ கொட்டாரத்தின் சில சட்டதிட்டங்களை என் பெரிய சேட்டன் மாற்றி அமைத்தார்… அவருக்கு துணையாக என் அண்ணி இருந்தாங்க.. அதில் ஒன்று அனைவருமே சமம் என்ற கொள்கை அது என் அச்சன் உட்பட யாருக்குமே பிடிக்கவில்லை.

 

ஆனால் அவர்களால் அவரை எதிர்க்க முடியவில்லை என் சேட்டன் தான்… எங்க குடும்ப தொழிலை உலகம் பூராகவும் விரிபடுத்தியவர்…கன்யா சேட்டத்தி மற்ற சேட்டத்திங்களை விட திறமையானவங்க .

 

அதனால் இவங்களுக்கு பெரிய சேட்டன், சேட்டத்தி மேலே பொறாமை…அதுவே உன் மேலே தொடர்ந்து வருகிறது அச்சனின் சில மூட நம்பிக்கை, கொள்கைகளை தூண்டி விட்டு காய் நகர்த்துறாங்க.

 

எனக்கு தெரியும் பையு நீ இப்போ என்ன முடிவு எடுத்து இருப்ப என்று…இந்த தம்புரான் பட்டத்தை உதற போகிற ஆனால் அதற்க்கு பிறகு சேட்டன்… போன பிறகு உன் மேலே அந்த நம்பிக்கையை வைத்து இருக்கும்.

 

நம்ம தரவாடு ஆளுகள் ( மக்கள்) நிலை என்ன? உன் பிடிவாதத்திற்காக அவங்களை தண்டிக்க போகிறாயா? நான் உன் அம்மாயி மட்டுமல்ல அம்மே (அம்மா) கூட நீ இப்படி இருப்பது எனக்கு வலியை தருகிறது.

 

என்னை நம்பி தான் பெரிய சேட்டன், சேட்டத்தி உன்னை தந்து விட்டு போனாங்க…அவங்க நம்பிக்கையை என்னால் உடைக்க முடியாது.. இப்போ உன் முத்தச்சனை விடு அம்மாயி கேட்கிறேன் நீ ஏன் இன்னொரு விவாகம் செய்ய கூடாது.

 

என் வாழ்க்கையை விடு இந்த கேரளத்தில் மட்டுமல்ல உலகத்தில் பெண்களின் புனர்விவாகத்தை (மறுமணம்)... சட்டென ஏற்று கொள்ள மாட்டாங்க…அதுவும் நாங்க தரவாடு பெண்கள் சட்டதிட்டங்கள் எங்களுக்கு ரொம்ப கடுமையாக இருக்கும்.

 

அதை மாற்றியவர் என் பெரிய சேட்டன் தான் என்னை சக மனுஷியாக மதித்து மாற்றினார்…ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லா(இல்லை) ராஜா காலம் தொட்டு இப்போ வரைக்கும் அவங்களுக்கு மட்டும் எந்த கட்டுபாடும் இல்லை. 

 

ஆனால் ஈ கொட்டாரத்து ஆண்கள் விதிவிலக்கு சுயநலம், பதவி மோகம் கொண்டவங்க தான்…பெண்கள் விஷயத்தில் கை சுத்தம் நான் சொல்ல வருவது உனக்கு புரிகிறதா? 

 

நீ அவந்தியை விவாகம் செய்ய வேணாம் உன் மனசுக்கு பிடித்த வேற ஒரு பெண்ணை விவாகம் செய்…இதை தவிர தரவாடு உன் கை சேராது விவாகம் செய்தால் அச்சனால் உன்னை வற்புறுத்த முடியாது… தரவாடு உன் கை சேருவதை யாராலும் தடுக்க முடியாது” என்றாள். 

 

“அம்மாயி சொல்வது தான் சத்தியம்( உண்மை) சேட்டா நிங்கள் ம‌ற்றொரு விவாகம் ( இன்னொரு கல்யாணம்) செய்ய வேணும்… அப்போ தான் ஈ கொட்டாரம்  விஜயன் வலியச்சன்( பெரியப்பா) கிட்ட போகாது “ என்று சொல்லி கொண்டு நிலாயினி வந்தாள். 

 

அவளை காண பைரவ் முகம் மலர்ந்தது எந்த சுயநலமும் இல்லாத பெண் அவள்…அஜந்தா எல்லாம் இவள் கால் தூசுக்கு கூட வர முடியாது… தந்தை என்றாலும் கூட அவள் தப்புக்கு துணை போக மாட்டாள்.

 

நிலா குஞ்சு(குட்டி) என பைரவ் அழைக்க…  சேட்டா என அவன் அருகில் போனவள் அவனை அணைத்து கொண்டாள்…பைரவ் தங்கயை அணைத்து கொண்டவன்.

 

பைரவ் “ எங்கன இருக்கும் (எப்படி இருக்க) நிலா உன் கூட தான் எங்களால் பேச முடியவில்லை…உனக்கு வாங்கி அனுப்பிய வஸ்துகள் (பொருட்கள்) எல்லாம் பிடித்து இருந்ததா? என கேட்டான்.

 

நிலா “எல்லாம் பிடித்து இருந்தது சேட்டா நிங்களும் அத்தானும் அனுப்பிய சுடிதார்,சாரி, மேக்கப் கிட் ,ஜூவல்ஸ்… பெர்பியூம் ,சாக்லேட் , மொபைல் போன், ஐ பாட் எல்லாம்…அதை அஜந்தா சேச்சி கிட்ட இருந்து மறைக்க தான் ரொம்ப கஷ்டமாகி விட்டது.

 

நல்ல காலம் அம்மாயி இருந்தாங்க அவங்க ரூம்மில் தான் வைத்து இருக்கிறேன்… சேச்சி கேட்டு நான் இல்லை என்றால் சேச்சி ஈ தரவாடுட்டில் ப்ரஷ்னம் (பிரச்சனை) செய்வாள்…அவளுக்கு நிங்கள் அனுப்பவில்லை என் மேலே தான் ஸ்நேகம்( அன்பு) என்று சொல்வாள் “என சொன்னாள்.

 

பைரவ் “ஸ்நேகம் வைக்க கூடிய அளவுக்கு உன் சேச்சி இல்லை நிலா குஞ்சு( குட்டி) சரிஅதை விடு உன் படிப்பு எப்படி போகிறது …அடுத்த வருஷம் பைனல் இயர் கவனமாக படி ஹையர் ஸ்டடிஸ்க்கு பாரீஸ் வா…. இந்த கொட்டாரத்தில் இருந்தால் உன் திறமையை வெளிவர விட மாட்டாங்க” என்றான்.

 

நிலா “ நிர்பாந்திதம்( கட்டாயமா) வருவேன் ஆனால் உங்க கூட என் சேட்டத்தி இருக்க  வேணும் சேட்டா…உங்களுக்கு இங்கே நடக்கும் அநீதி( அநியாயம்) தெரியாது… அம்மாயி சொன்னது கொஞ்சம் நீங்க இங்கே தங்கி இருந்தால் உங்களுக்கு புரியும்.

 

இதை எல்லாம் சரி செய்ய வேணும் என்றால் நிங்கள் விவாகம் செய்ய வேணும்…எனக்கு தெரியும் இது பற்றி யார் பேசினாலும் உங்களுக்கு பிடிக்காது என்று ஒரு தடவை நீங்க கொட்டரத்திற்க்கு வெளியே போய் பாருங்க….நிங்களுக்கு ஞாங்கள் (நாங்க) சொல்வது புரியும்” என்றாள்.

 

கார்த்திகா “ பையு நிலா சொல்வது தான் சரி உன்னை எனக்கு வெளியே அனுப்ப பயமாக இருக்கு…உன் சுப்ரதானமாயா(உயிர்)க்கு அபாயம்(ஆபத்து) வந்து விடும் என்று. 

 

ஆனால் என் சேட்டன் ஆரம்பித்த வேலைகள்,உதவிகள் இந்த நான்கு ஐந்து வருடங்களில் பாதியில் நிற்கிறது…நீ தான் அதை எல்லாம் சரி செய்ய வேணும் “என்றாள்.

 

பைரவ் ஏதுவுமே பேசவில்லை கார்த்திகா,நிலா அவனை யோசிக்க விட்டு போனார்கள்…தங்கள் தளத்திற்க்கு வந்த விஜயன் சந்தோஷமாக இருந்தார்.

 

சுவர்ணமாலினி “ என்னங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறீங்க? என கேட்டாள்.

 

அஜந்தா” எந்த அம்மே?  ( என்ன அம்மா) அச்சா( அப்பா) ஆசைபட்டது கிடக்க போகிறது இல்லையா? பிறகு சந்தோஷம் வராது இருக்குமே? என கேட்டாள்….விஜேந்திரன் மகளை பெருமையாக பார்த்தவர்.

 

விஜயன் “நிங்கள் என்னோட மகனாய்யி ஜனிச்சிருக்கலாம் மோளே( நீ என் மகனாக பிறந்து இருக்கலாம் மகள்) உன் சேட்டனை பார்க்க நினக்கு ( உனக்கு) மூளை அதிகம்.

 

சுவர்ணா நம்ம மோள் சொன்னது தான் உண்மை அச்சன் சொன்னதை கேட்ட தானே! இனி ஈ தரவாடுக்கு நான் தான் ராஜா எந்தயொரு நீண்ட சொப்பனம் ( எத்தனை நாள் கனவு) இது தெரியுமா? என கேட்டார்.

 

சுவர்ணா “ எனக்கு தெரியும் தான் ஆனால் நிங்கள் ஒன்றை மறனு ( நீங்கள் மறந்து விட்டீங்க ) ஈ கொட்டாரத்தின் ரியல் ராஜா…பைரவ் தான் அவன் இருக்கும் வரைக்கும் உங்களுக்கு மட்டுமல்ல நிங்களட அனியனுக்கு கூட பட்டம் கிடைக்காது” என்றாள்.

மலர் பூக்கும்….


   
ReplyQuote

You cannot copy content of this page