All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 16

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

நைட் லைஃப் - 16

யுகி கூறிய பதிலை கேட்டு மித்திரன் ஒற்றை புருவம் உயர்த்தி ஆருவை பார்த்தான். அவளோ தரையில் புதையல் புதைந்து இருப்பது போல் அதனை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாள். நமட்டு சிரிப்பு சிரித்த ராகவ் யுகியை பார்க்க அவளோ தயக்கத்துடன் அவர்களை பார்த்தாள். “அய்யய்யோ அவசரப்பட்டு உண்மைய எல்லாம் உளறிட்டேனே.. ஆரு..” என்று அவளின் சுடிதாரின் கையை பிடித்து இழுக்க ஆரு அவளை பயங்கரமாய் முறைத்தாள். அதில் லேசாய் திடுக்கிட்ட யுகி ஒரு கையால் அவளின் முகத்தை மூடிக் கொண்டாள். பல்லை கடித்துக் கொண்டு ஆருத்ரா யுகி பார்த்தாள். மித்திரன் விழிகள் ஆருத்ரா மீது ரசனையாக இருந்தது. தன்னை பற்றி தெரிந்துக் கொள்ள இவள் இவ்வளவு ஆர்வமாய் இருந்து இருக்கிறாளே என்று எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டான். 

 

ஆருத்ரா யுகி காதில் ஏதோ ரகசியம் கூற அவளும் அமைதியாய் கேட்டுக் கொண்டு இருந்தாள். மித்திரன் தொண்டையை செருமிட இருவரும் மிகவும் நல்ல பிள்ளை போல் அவனை பார்த்து சிரித்தார்கள். 

 

“என்ன பத்தி விசாரிச்சப்போ அப்படி என்ன உங்க ப்ரெண்ட் தெரிஞ்சிக்கிட்டாங்க?” என நக்கலாக கேட்க, ஆருத்ரா தயக்கத்துடன் யுகியை பார்த்தாள்.

 

“அது வந்து, பெருசா எதுவும் நாங்க பண்ணல.. ப்ரெண்ட் மூலமா உங்க வொர்க் பத்தி கேட்டு தெரிஞ்சிக்கிட்டோம்.. அப்போ தான் அஷ்வினை நீங்க மீட்டு வந்த கேஸ் பத்தி ப்ரெண்ட் சொன்னான். அந்த நியூஸ்ல தான் அந்த பையனையும் உங்களையும் பாத்தேன்.” என்றாள் யுகி. மித்திரன் யோசனை உடன் தலையை அசைக்க, ராகவ், “அப்போ ஏன் அந்த பையனை கடத்தின அன்னிக்கே எங்க கிட்ட சொல்லலை? அந்த பையனை பார்த்து இருக்க தானே?” என கேட்டான். 

 

“நான் அப்போ கவனிக்கவே இல்ல.. இன்னிக்கு நியூஸ்ல அந்த பையன பத்தி பழைய கேஸ் சொல்லி இருந்ததுனால எனக்கு நியாபகம் வந்துச்சு.. அப்போ மித்திரன் அண்ணாக்காக  விசாரிச்சதுனால நான் ஆஷ்வினை கவனிக்கல” என விளக்கம் கொடுத்தாள் யுகி. 

 

“சாரி மித்து, நான் நீங்க என்ன பன்றிங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆர்வத்துல தான் ஃப்ரெண்ட்ஸ் விட்டு விசாரிக்க சொன்னேன்.. NIA ஆபிசர்ன்னா என்னனு எனக்கு தெரியாது.. அந்த ஒரு ஆர்வத்துல தான்.. மத்தபடி வேற ஒன்னும் இல்ல” என அவன் தவறாக நினைத்துக் கொள்வானோ என்று நினைத்து அவசரமாக விளக்கத்தை கூறினாள் ஆரு. அதற்கு பதில் சொல்லாத மித்திரன் ஆழமாய் மூச்சை இழுத்து விட்டு, “சரி இன்னொரு விஷயம் சொல்லணும் சொன்னியே அது என்ன?” என்று பேச்சை மாற்றினான். 

 

ஆருத்ராவிற்கு மனம் சுருங்கியது. அவள் மன்னிப்பு கேட்டதற்கு அவன் எதுவுமே சொல்லவில்லையே என்று வருத்தத்துடன் அமர்ந்திருக்க யுகி அவளின் கையை மெல்ல பற்றிக் கொண்டாள். லேசாக புன்னகைத்த ஆரு, “ஹான் அது அன்னிக்கு சி.எம் வீட்டுக்கு போனப்போ ஒரு விஷயம் பண்ணேன்” என்று கூறி நிறுத்த மித்திரனும் ராகவ்வும் உடனே ஆர்வமாய் கேட்க தயாரானார்கள். 

 

“அவருக்கு மிரட்டல் மெயில்ல வந்ததா சொன்னாருல நானும் செக் பண்ணேன். அவரு லேப்டாப்ல மொத்தம் மூணு மெயில் லாகின் ஆகி இருந்துச்சு. அதுல ஒன்னு தான் அவர் கிட்ட இருக்குற எல்லா போன்லையும் லேப்டாப்லையும் காமன்னா இருந்துச்சு. முதல் முதல்ல அனுப்புன மிரட்டல் அந்த காமன் மெயில்க்கு தான் வந்து இருந்துச்சு. அது மத்த எல்லா கம்பெனிக்கு வந்த மாதிரி சாதாரணமா பிரீஸ் பண்ற மெயில் தான். ரெண்டாவதா வந்தது அதே மெயில்க்கு தான் ஆனா அது நம்ம போறதுக்கு மூணு நாள் முன்ன தான் வந்து இருக்கு.” என்று கூறிட இருவரும் குழப்பமாக பார்த்தார்கள். 

 

“எல்லா கம்பெனிக்கு ஒரு தடவ தான் வந்துச்சு ஆனா சி.எம்க்கு மட்டும் ரெண்டு முறை மிரட்டி இருக்கான்.. பிரச்சனை பண்றவன் டார்கெட் அவரா இருக்குமோன்னு தோணுது..” என்று ஆருத்ரா கூறிட ராகவ்வும் மித்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

 

“இதுல பகடை காயா அவரை தான் யூஸ் பண்றாங்க” என்றான் மித்திரன். 

 

“யாரு?” என புரியாமல் ஆரு கேக்க, “அவன தான் தேடிட்டு இருக்கோம், அவரு மேல இருக்குற த்ரேட் விலகுனா தான் இந்த கேஸ் ஒரு வழிக்கு வரும். அவரை வச்சி இங்க வேற விஷயம் பண்ண பாக்குறாங்க” என மித்திரன் விளக்க ஆருத்ரா அமைதியாய் தலையை அசைத்தாள். 

 

“ஆனா இனிமேல் கவலைப்பட வேணாம்.. சி.எம்க்கு இனிமேல் மிரட்டல் வந்தா உங்களுக்கு நான் டைரக்ட்டா சொல்லிறேன்.. அதுவும் இல்லாம அடுத்த முறை எவனாவது மிரட்டல் குடுத்தா அவன் எந்த இடத்துல இருக்கான்னு நம்ம தெளிவா கண்டு பிடிக்கலாம்.. அப்படி தான் ஒரு வேலைய பண்ணி இருக்கேன்” என்று பெருமையாக சிரித்துக் கொண்டே கூற மூன்று பேரும் என்ன என்பது போல் பார்த்தார்கள். 

 

“அது அன்னிக்கு அவரு லேப்டாப்ல ஒரு வோர்ம் போட்டுட்டு வந்துட்டேன்..” என்று கூறி லேசாய் சிரிக்க மூவரும் அதிர்ந்தார்கள். 

 

“ஆரு என்ன சொல்ற? என்ன பண்ண?” என்று ராகவ் பதட்டமாய் கேக்க, மித்திரனை பார்த்தவள், “ஒன்னும் இல்ல அவருக்கு மிரட்டல் மாதிரி ஏதாவது மெயில் வந்தா உடனே எனக்கு அலார்ட் மெசேஜ் வரும்.. அப்பறம் அவரோட பிரவுசரையும் ட்ராக் பண்ண ஒரு ட்ரக்கர் வச்சி இருக்கேன். அன்வான்டடா ஏதாவது லிங்க் குள்ள போய் அவருக்கு பிரச்சனை ஆச்சுன்னா அதான் அப்படி ஏதாவது லிங்க் வருதான்னு பாக்க அப்படி பண்ணேன். ஆனா இந்த விஷயத்தை நான் கேஸ்க்காக தான் பண்ணேன்..” என்று விளக்கம் கொடுத்தாள் ஆருத்ரா. 

 

மித்திரனும் ராகவ்வும் அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள். “சரி விடு, அவர தான் டார்கெட் பண்ணி இருக்குறதுனால இதுவும் நல்லது தான்.. ஆனா நான் எதுக்கும் இத அவரு கிட்ட இன்போர்ம் பண்ணிறேன்” என்றான் மித்திரன். அந்நேரம் யுகி போன் அடிக்க, “ஆரு நீ போனதும் எனக்கு டெக்ஸ்ட் பண்ணு எனக்கு லேட் ஆகுது” என்று கூறி யுகி எழ, “கவலைபடாத உன்னோட ப்ரெண்ட்ட நானே விட்டறேன்” என ஆருவை அழுத்தமாய் பார்த்துக் கொண்டே கூறினான் மித்திரன். அதில் அவன் கையில் நறுக்கென்று கிள்ளிய ராகவ், “டேய் நம்ம பைக்ல வந்தோம்.. நான் எப்படி டா வருவேன்” என அடிக்குரலில் சீறினான். 

 

“உன்ன மறந்துட்டேனே.. யுகிமா போற வழியில இவன எங்கையாவது விட்டுட்டு போறியா?” என்று அவளை அறிந்து கேக்க யுகிக்கு கசக்குமா என்ன? உடனே வேகமாய் தலையை அசைக்க வந்தவள் அதன் பின் நிதானமாய் தலையை அசைத்தாள். 

 

“அந்த பொண்ணுக்கு ஓகேவாம்.. நீ போயிட்டு வா மச்சான்.. புருஷன் பொண்டாட்டி குள்ள ஆயிரம் இருக்கும்.. நீ” என்று மித்திரன் மேலும் பேச வர கையை உயர்த்தி அவனை மூடு என்பது போல் செய்து விட்டு கிளம்பினான். 

 

யுகி முன்னே நடக்க ராகவ் அவள் பின்னே அமைதியாய் நடந்தான். வெளியே வந்ததும் யுகி தலைகவசத்தை அணிய, “நான்.. வண்டி ஓட்டுறேன்” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான். அதில் அவனை பார்த்து லேசாய் சிரித்த யுகி, “நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன் சார், தைரியமா உக்காருங்க” என்று கூறிட ராகவ் கண்கள் அன்னிச்சையாக அவளின் இதழில் படிந்தது. அன்று அவள் கொடுத்த இதழ் முத்தம் நினைவு வர சட்டென்று இருமி தன்னை திசைதிருப்பியவன், வண்டியில் ஏறிக் கொண்டான். அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு பாலமே கட்டும் அளவிற்கு இடைவெளி விட்டு அமர்ந்திருக்க யுகித்தா சிரித்துக் கொண்டாள். 

 

உள்ளே ஆருத்ரா மித்திரனை பார்க்க தயங்கிக் கொண்டு அமர்ந்திருக்க மித்திரன் அவன் அங்கிருந்து எழுந்து ஒன்றும் சொல்லாமல் வெளியே நடக்க செல்லும் அவனையே பாவமாய் பார்த்துக் கொண்டே பின்னே நடந்தாள். “ச்சே.. என்ன இவரு ஒன்னும் பேச மாட்டிங்குறாரு.. நம்மள தப்பா நினைச்சிட்டாரோ” என்று நினைத்துக் கொண்டே அவன் பின்னால் நடந்தவள் அவன் முதுகில் மோதி நின்றாள். அப்பொழுது தான் யோசனை உடனே வெளியே வந்து விட்டோம் என்று உணர்ந்தாள். மித்திரன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க ஆருத்ரா அசடு வழிந்தாள். மித்திரன் ஏறு என்பது போல் தலையை அசைக்க ஆருத்ரா அமைதியாய் ஏறிக் கொண்டாள். இரு பக்கமும் கால் போட்டு அமர்ந்துக் கொண்டவள் அவனிடம் எப்படி விளக்கம் கூறுவது என்று சிந்தித்துக் கொண்டு அமர்ந்திருக்க, தலைகவசத்தை மாட்டிய மித்திரன் அவளின் இரு கைகளையும் பிடித்து அவனின் இடுப்பு சுற்றி கட்டிக் கொள்ள அவன் முதுகின் மீது வேகமாய் மோதினாள் ஆருத்ரா. 

 

“மி.. மித்து,” என ஆரு திணற தலைகவசம் போட்டு இருந்ததனால் அவனின் கள்ளச்சிரிப்பு அவளுக்கு தெரியாமல் போனது. மித்திரன் வேகமாய் வண்டியை ஓட்ட அவனின் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் ஆரு. நேராக அவளின் ஆபிஸிற்கு அவளை அழைத்து சென்றான். இருவது நிமிடத்தில் ஆல்வின் கம்பெனியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் வந்து வண்டியை நிறுத்தினான். அதன் பின் தான் பிடியை தளர்த்தினாள் ஆருத்ரா. 

 

“இறங்கு” என்று மித்திரன் கூற அதற்குள்ளே தம்மை போக சொல்கிறானே என்று வருத்தத்துடன் வண்டியை விட்டு இறங்கி செல்ல பார்த்தாள். ஆனால் அவளின் இடையை வளைத்து பிடித்த மித்து, “எங்க போக பாக்குற? ம்ம்.. அது எப்படி நீ மட்டும் பண்ற எல்லா வேலையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சிக்குற?” என்று மறு கையால் அவளின் முக தாடையை பிடித்து கேட்டான். நல்ல வேலையாக அந்த இடத்தில் யாரும் இல்லை. மித்திரன் தலைகவசத்தை கழட்டினான்.

 

“சாரி..” என்று பாவமாய் கூற, உதட்டுக்குள் சிரித்த மித்திரன், “அப்போ கிஸ் பண்ணு” என்க அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் ஆரு. 

 

“மித்து, விளையாடாதிங்க.. விடுங்க.. நான் போறேன்.. யாராவது பாக்க போறாங்க” என்று கூச்சம் கலந்த தவிப்புடன் கூறினாள்.  

 

“நான் தான் அன்னைக்கே சொன்னேனே அடுத்த முறை கிஸ் பண்ணா லிப்ஸ்ல தான்.. அத டேஸ்ட் பண்ண இன்னும் எத்தன நாள் வெயிட் பண்ணனும்?” என கட்டை விரலால் அவளின் இதழை வருடியபடியே கேக்க, ஆருத்ரா உடல் சிலிர்த்தது. “நீ குடுத்தா விட்டுடுவேன்.. இல்ல நானே எடுத்துக்கணும்ன்னா சொல்லு அரமணி நேரத்துல விட்டறேன்” என்றிட அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் ஆரு. அவனோ நல்லவன் போல் கண்களை சிமிட்ட, இவன் விட மாட்டான் என்று உணர்ந்தவள், “சரி விடுங்க” என வெட்கத்துடன் கூறினாள். அவள் இடுப்பை சுற்றி இருந்த கரம் லேசாய் தளர ஆருத்ரா தன்னை நொந்துக் கொண்டவள், மித்திரன் கண்ணை ஒரு கையால் மூடி, முத்தத்தை பட்டும் படாமல் அவன் உதட்டில் வைத்து விட்டு, அவனை காண முடியாமல் ஓடி விட்டாள். அவள் செயலில் மித்திரன் தனியாய் சிரித்துக் கொண்டவன் உதட்டை ஈரப்படுத்தினான்.

 

“இன்னும் கொஞ்சம் கோவமா நடிச்சு இருந்தா நல்லா குடுத்து இருப்பாளோ..” என்று கள்ளத்தனமாய் நினைத்து விட்டு அங்கு இருந்து கிளம்பினான்.

 

அவர்களுக்கே தெரியாமல் அங்கு இருக்கும் ஒரு காரில் ஆல்வினும் இழையினியும் இதனை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இனி வாயை பிளந்துக் கொண்டு பார்க்க ஆல்வின் அவள் வாயை மூடி விட்டான்.    


   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Member Author
Joined: 3 months ago
Posts: 29
 

Evan da antha veli naattukkaran.. enakku intha alwin mela thaan doubt.. avana irukkumonnu 🤔🤔🤔


   
ReplyQuote
VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

@vsv42 Yara irukum nu pakkalam sis😍


   
ReplyQuote

You cannot copy content of this page