All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 13

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

நெஞ்சம் 13

காலை உணவினை உண்டு முடித்து சங்கரமணி அப்புச்சியும் பேச்சியம்மாள் அப்பத்தாவும் ஹாலில் அமர்ந்து ஆன்மீகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தனர்.

வயலில் புது நடவு நடுவதுப் பற்றி வேலையாட்களிடம் பேச தென்னவன் சென்றிருந்தார். மகனை நம்பி முன்பெல்லாம் முழு பொறுப்பையும் கொடுத்து விட்டிருந்தவர் இந்த சில நாட்களாக மீண்டும் தன் கையில் எடுத்திருந்தார். அவருக்கு மகனின் மீது இருந்த நம்பிக்கை இப்பொழுது பறிப்போனது. அவனும் அதற்கு ஏற்றவாறு தான் நடந்துக் கொண்டிருந்தான். தோப்பு வீட்டிலே இருப்பது என்றாவது இங்கே வருவது இப்படி இருந்தால் எந்த தந்தை தான் மகனை நம்புவார்.

"அடியேய் நாச்சி இஞ்சி போட்டு டீ கொண்டு வா " என்று சமையலறையைப் பார்த்து பேச்சியம்மாள் அப்பத்தா குரல் கொடுக்க,

"இதோ கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துடுறேன் " எனக் கூறி அடுத்த இரண்டு நிமிடங்களில் சூடாக இருவருக்கும் இஞ்சி போட்ட டீ கொண்டு வந்து கொடுத்தார்.

ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொள்ள, "என்னம்மா மருமகளே பேரன் ஆளையே காணோம் " என அப்புச்சி கேட்கவே,

"ஏங்க வீட்ல இருந்த நீங்க என்னத்த தான் கவனிக்கிறீங்க உங்க மகனுக்கும் பேரனுக்கும் ஏதோ பிரச்சனையாமே என்னன்னு இந்த கிறுக்கி என்கிட்ட சொல்ல மாட்டேங்குற இருக்கட்டும். அவன கண்ணால காண்கிறதே இப்போ எல்லாம் பெருசா போச்சு "

'என்னடி சொல்ற ? அதான் ஆளுக்கு ஒரு பக்கமா சுத்திக்கிட்டு இருக்கானுங்களோ. ஏன் மருமகளே நாங்க இல்லாத நேரம் அப்படி என்னத்த நடந்தது ?"

"கேளுங்க நல்லா, நான் கேட்டு சொல்லாதவ நீங்க கேட்டு சொல்லிருவாளா, எங்க சொல்லட்டுமே நானும் கேட்கிறேன் " அப்பத்தா கூறவே,

மாமனாரிடம் சொல்ல நினைத்தாலும் மாமியார் கூறி விடுவாயா என்பது தான் அவரின் வார்த்தைக்கான அர்த்தம். எச்சிலை கூட்டி விளங்குவதுப் போல் உண்மையை தொண்டைக்குள்ள திக்க வைப்பது அவருக்கு பெரிதான ஒன்றாக இருந்தது. அந்த நொடி சரியாக அவரின் மகள் உள்ளே வந்தார்.

தன் மகள் மல்லிகா வருவதை கண்ட இருவருமே இன்முகத்தோடு வரவேற்றனர்.

"என்ன அண்ணி எப்படி இருக்கீங்க ?" என்று தன் அண்ணியான நாச்சியைப் பார்த்து கேட்கவே அவரும் பதிலுக்கு நலம் விசாரித்தார்.

"உட்காரு நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன் " எனக் கூறி பெற்றவளோடு அவள் பேச வந்து விட்டாள் நாம் இங்கு இருப்பது சரி இல்லை என்பதை மானசீகமாக உணர்ந்த நாச்சி அங்கிருந்துச் சென்று விட்டார்.

'என்னம்மா ஒரு மாசம் டூர் போயிருந்தீங்க எப்படி இருந்துச்சு ?"

"அதெல்லாம் நல்லாத்தான் இருந்தது. நாங்க இங்க வந்து ஒரு வாரம் ஆச்சுன்னு உனக்கு தெரியும் தானே. ஆமா என்ன நீ மட்டும் தனியா வந்திருக்கே ? எங்க மாப்பிள்ளையை காணோம் "

"அவரு வேலை விஷயமா டவுனுக்கு போயிருக்காரு. அதான் அக்கா கிட்ட சொல்லிட்டு வந்தேன் ஒரு எட்டு பாத்துட்டு போயிறலாம் அப்படின்னு "

"சரி சரி வேலைக்காரன் கிட்ட பிரசாதம் எல்லாம் கொடுத்து விட்டேனே வந்துச்சா "

"அன்னைக்கே வந்து கொடுத்தாங்க அம்மா " என்க, அதே நேரம் அவருக்கு குடிக்க காபியை கொண்டு வந்து கொடுத்த நாச்சி மறுபடியும் அங்கிருந்துச் சென்று விட்டார்.

"அப்புறம் நாங்க இல்லாத நேரம் என்ன நடந்துச்சு ? நீ வந்தியா இங்கே "

"எங்கம்மா நீங்க ரெண்டு பேரும் இருந்தா நான் வருவேன். நீங்க ரெண்டு பேரும் இல்லாத நேரம் நான் வந்து என்ன பண்ண "

"என்னடி இப்படி சொல்ற நாங்க இருந்தாலும் இல்லாம போனாலும் இந்த வீட்ல உனக்கு உரிமை இருக்கு. நாங்க இல்லாத நேரமும் இங்கே வரலாம். என்னங்க நீங்க நான் பேசிக்கிட்டே இருக்கேன் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல சொல்லுங்க " என்று தன் கணவரையும் உடன் இழுக்கவே,

"என்னத்த சொல்ல சொல்ற தென்னவன் என்ன இவ கூட சண்டையா போடப் போறான். ரெண்டு பேரும் ஒத்துமையா தான் இருக்காங்க. நீ தான் தேவை இல்லாம எதையாவது பேசி கெடுத்துப்புடாத கெடுத்து "

" நான் ஏதாவது சொல்லிட கூடாதே. அப்புறம் என் பேரனுக ரெண்டு பேரும் எப்ப வருவாக. அங்கே எதுக்கு வேலை பார்த்துகிட்டு கிடக்குரானுங்க. ரெண்டு பேருமே இங்க வர வேண்டியது தானே. ஊருக்குள்ள அப்போ தானே அவங்களை பத்தி எல்லாருக்கும் தெரியும். பாரேன் உன் புருஷனோட அண்ணன எப்படி நேக்கா புள்ளயை படிச்சதும் கொண்டு வந்து ஊருக்குள்ள கெடக்க விட்டுப் போட்டான். இப்ப அவனோட பேரு தான் ஊருக்குள்ள நல்ல பரவிக்கிட்டு எல்லாரும் ஒசத்தியா பேசிக்கிட்டு இருக்காங்களாம். நாளைக்கு நம்ம புள்ள வந்தா எப்படி இருக்கும். உன் புருஷன் கிட்ட நைசா பேசி புள்ளயை இங்க வர வைக்க பாரு. டவுன்ல அப்படி என்னத்த வாழ்க்கை வாழுகிறானுங்க அவனுங்க ரெண்டு பேரும் "

"எங்கம்மா நான் கட்டிக்கிட்டதும் என் பேச்சை கேட்க மாட்டேங்குது. எனக்கு பிறந்த ரெண்டும் என் பேச்சைக் கேட்க மாட்டேங்குது. உனக்கு என்ன தெரியும் நீ அமைதியா இருக்கியா அப்படின்னு சொல்லுறாங்க. என்னாலையும் மூத்தவங்களை எதிர்த்து எதுவும் பேச முடியாது. ஆரம்பத்திலேயே கூட்டு குடும்பமாகத்தான் இருப்பேன்னு சொல்லி தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நீங்களும் சரின்னு தான் என்ன அந்த வீட்ல குடுத்தீங்க நல்லா ராணியிடம் தான் பார்த்துக்குறுதாக. பவள அக்கா கூட எனக்கு கூட பிறந்த தங்கச்சி மாதிரி தான் பார்க்குது. இருந்தாலும் என்ன பண்ண மூத்தவருக்கு கீழ தான் என் புருஷன். அப்ப அதுக்கு கீழே தான் ஏன் மகனும் இருக்க வேண்டியதா இருக்கு "

"இப்ப அதனால என்ன எல்லாருக்கும் ஒரே மரியாதை தான கிடைக்குது " என்று சங்கரமணி அப்புச்சி கூறவே,

"சும்மா கிடந்த மானம் மரியாதை எல்லாம் கிடைச்சா மட்டும் போதாது பணம் சம பங்கா தானே வந்துக்கிட்டு இருக்கு. அதுவும் இவன் வீட்டுக்காரரோட அண்ணன் கைக்கு போனதுக்கு அப்புறம் தான் நம்ம மாப்பிள்ளை கைக்கு வருதாம் " என்க, என்னதான் சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் பேசும் பேச்சு நாச்சிக்கு கேட்கத்தான் செய்தது. 

அதெல்லாம் அவரோ பெரிதாக காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தான் இந்த வீட்டில் எப்படி சமையல் வேலையெல்லாம் செய்து மாமியார் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோமோ அதே போல் தான் அவரின் மகளும் அவர்களின் வீட்டில் இருக்கிறாள். அவர் வந்து அவரின் மனக்குமறலை கூறுகிறார் தானும் இப்படித்தானே மாமியார் இல்லாத நேரம் பொறுமிக் கொண்டிருப்போம் என நினைத்தார்.

"அது இல்லடி நான் எதுக்கு சொல்றேன்னா இன்னும் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் தான் பேத்திக்கு படிப்பு இருக்கு . படிப்பு முடிஞ்சு போயிரும் அவனுங்க ரெண்டு பேருல எவனாவது ஒருத்தனுக்கு கட்டி வச்சிரலாம் அதுக்காகத்தானே நான் இப்படி பேசிக்கிட்டு இருக்கேன். அவ அங்கேயே இருந்தா புள்ளைக்கு எப்படி ஈர்ப்பு வரும் சொல்லு ?   சின்ன புள்ள பழகுனாங்க அதுக்கப்புறம் முகத்தை கூட பார்க்காம கிடக்குது " கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்தார் நாச்சி.

"அத்தை நான் குறுக்க வரேன்னு நினைக்காதீங்க. நீங்க சொல்லுது நூறு சதவீதம் சரி தான் மல்லிகா சீக்கிரமா மாப்பிள்ளைகள் ரெண்டு பேத்தியும் இங்க வர சொல்லு. டவுன்ல எக்கச்சக்க தொழில் இருக்குல்ல அதுல ஏதாவது ஒரு தொழிலை எடுத்து நடத்த சொல்லு. இந்த உதயன் பையன் அங்கிட்டு இங்கிட்டு சுத்திக்கிட்டே கிடக்கான். ஊருக்குள்ள உள்ள அம்புட்டு பொட்டச்சிக கண்ணு அவன் மேல தான் இருக்குன்னு கேள்விப்பட்டேன். நம்ம நிகழ்மதி கூட அத்தான் சொல்லிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கா. நான் தெளிவா சொல்லிப்புட்டேன் அவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தமும் கிடையாது. உனக்கு மல்லிகாவோட பிள்ளைங்க தான் கட்டி வைப்பாங்க அப்படின்னு சொல்லி இருக்கேன். அவளும் சரி சரின்னு தலையாட்டி கிட்டு இருக்கா  "என்கவே,

"என்னடி சொல்ற இது எப்படி எனக்கு தெரியாம போச்சி " என்று அப்பத்தா கேட்க,

"நீங்க ஊருக்கு போயிட்டீங்க. எங்க வீட்ல இருக்குறீங்க அதனால தான் என்னாலையும் தகவல் சொல்ல முடியல உங்ககிட்ட " என்றார்

'ஏத்தா பொம்பளைங்களா நீங்க மூணு பேரும் சேர்ந்தா எந்த குடும்பத்தைத் தான் கெடுக்கணும்னு நினைச்சுகிட்டு இருப்பீங்களோ ? இப்ப என்ன அந்த உதயன் பையன் நம்ம வீட்டு பையன் தானே அவனுக்கு கொடுத்தா என்ன நம்ம பேத்தியை " என்று கூறிய நொடி கோபமோடு எழுந்தார் மல்லிகா.

"என்ன அப்பா நீ என் பிள்ளைக்கு  அண்ணன் மகளா நீ கொடுக்க மாட்டியா அப்பா. நிகழ்மதி அந்த வீட்டுக்கு மருமகளா வந்தா என் கொடி கொஞ்சம் பறக்கணும்னு எதிர்பார்த்தேன். எனக்கு ஆறுதல் அவளாவது இருப்பானு நினைச்சு தானப்பா நான் ஒவ்வொரு தடவையும் நம்ம மதி பிறக்கும் போதே என் மகனுக்கு தான்னு சொல்லி வைத்திருந்தேன். நீ இப்ப உதயனுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறீங்க ? எப்படிப்பா உன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் "

"நீங்க எப்படிங்க இப்படி சொல்லலாம். எல்லாரும் ஒண்ணா பார்க்குறீங்க இல்லன்னு சொல்லல நாங்களும் அப்படித்தான் பார்க்கிறோம்  ஆனா உறவுன்னு வரும் போது தனித்தனிதான் அதை ஒண்ணா இணைக்கவே முடியாது. என் மகளோட ஆசை நம்ம மதி பிறக்கும் போதே தெரிஞ்சிருச்சு. அப்போலயிருந்து நான் மருமக கிட்ட சொல்லி சொல்லி ஒத்துக்கிட்ட வச்சி வந்துட்டேன். அந்த உதயன் பையனுக்கு பொண்ணு பார்க்கும்போது அவங்க இங்க வந்து பொண்ணு கேட்க மாட்டாங்களா என்ன ? நம்ம மகன் காதுல பேசுனது விழுந்ததுன்னா அவனும் சரின்னு கட்டி வச்சிருவான்  அப்போ நம்ம நினைச்சதெல்லாம் சீட்டு கட்டு போல சரிஞ்சு கீழே விழுகவா மூடிட்டு இருங்க. எதையுமே நீங்க பேசாதீங்க சொல்லிட்டேன். "

"நமக்கு எதுக்கு வம்பு நல்லது சொன்னா எங்க கேக்குறீங்க " என புலம்பிக் கொண்டு அப்புச்சி அங்கிருந்து எழுந்துச் சென்று விட்டார்.

ஆனால் அவரின் மனதிற்கு ஒரு விஷயம் நன்றாகவே தெரியும். தன் பேத்தி மனதில் மருமகள் கூறியது போல் உதயனின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று. உதயன் இந்த புறம் வரும் பொழுது அவனின் வண்டி சத்தம் கேட்டாலே ஜன்னல் வழியாகவோ அல்லது வாசலில் சென்று அவனை விழி மேல் வைத்துக் காணும் பேத்தியை அடிக்கடி கண்டு கொண்டே தான் இருந்தார் சங்கரமணி அப்புச்சி.

அதனாலே பேத்திக்கு பிடித்து வாழ்க்கை அமைய வேண்டும் என நினைத்து கூற, ஆனால் பெண்கள் மூவரும் சேர்ந்து அவளின் வாழ்க்கையை கெடுத்து விடுவார்களோ என்றும் எண்ணினார்  அவளுக்கு எது விருப்பமோ அதுவே அவள் தேர்ந்தெடுக்கணும் என எண்ணிக் கொண்டார்.

இதே நிகழ்மதி சம்பந்தமே இல்லாது வேறு ஒருவனை தான் காதலிக்கிறேன் எனக் கூறினால் நிச்சயம் சந்திரமணி அப்புச்சி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவரை பொறுத்தவரை கொடுக்க வேண்டும் அதுவும் நம் ஜாதியினரை பார்த்து தான் பேத்தியை கொடுக்க வேண்டும்.

"அடியேய் உங்க அப்பாரு சொல்றாருன்னு நீ எதையும் பெருசா எடுத்துக்காத. ஆத்தா நான் சொல்றேன். என் மகன் என் பேச்சை தான் கேட்பான். அதனால என் பேத்தி உன் மகனுக்கு தான் என்னைக்கும். ஆனால் எந்த மகனு நீ தான் முடிவு பண்ணனும். ஏன்னா நீ இரண்டும் இரட்டை பிள்ளையவா பெத்து வச்சிருக்க.  ஒரே நேரத்துல இரண்டு பிள்ளைக்கும் கல்யாணம் பண்ணனும் அப்படின்னாலும் இன்னொரு மருமக தேடிக்கலாம் "

"அதெல்லாம் சரி நீங்க பேசுறது எனக்கு சம்மதம் தான். ஆனா அதுக்கு முன்னாடி அங்க அந்த உதயனுக்கு கல்யாணம் முடிக்கணும். அப்ப தான் நம்ம மல்லிகாவோட பையனுக்கு கல்யாணம் முடிக்கறதுக்கு அவங்க வீட்டுல பேசுவாங்க. அங்க உதயனுக்கு முடிக்கணும் இங்க ஏன் பையனுக்கும் கல்யாணம் முடிக்கணும்  நீங்க அத பத்தி ஒரு வார்த்தை கூட பேசவே மாட்டேங்கிறீங்க அத்தை "
இது தான் வாய்ப்பு என நினைத்து தன் மகனை சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வீட்டில் பேச வேண்டும் என நினைத்தார்.

ஏற்கனவே மகனின் போக்கு ஒரு பெண்ணின் மீது திரும்பி இருக்கிறது என்று நாச்சிக்கு நன்றாகவேத் தெரியும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு விரைவில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைப்பில் இப்பொழுது மாமியாரிடம் என் மகனுக்கு பெண் பாருங்கள் என்று கூறிவிட்டார்.

கருத்துகளை பகிர,

 

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/

 


   
ReplyQuote

You cannot copy content of this page