All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

சகியே சகலமும் நீயே

 

VSV 47 – சகியே என் சகலமும் நீயே
(@vsv47)
Active Member Author
Joined: 6 months ago
Posts: 2
Topic starter  

அத்தியாயம்-2

மெதுவாக கண்களைத் திறந்து முகத்தில் அரும்பிய வியர்வைத்துளிகளுடன் மெல்ல திரும்ப நினைக்கையில் கைத்தட்டி அட்டகாசமாய் சிரித்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் மிருத்யுஞ்ஜெயன். அவனைக் கண்டதும் மனதில் ஒருவித நிம்மதி பிறந்தாலும் ஆத்திரத்தில் முகம் சிவக்க,


'ஏங்க...அறிவு இருக்காங்க... இப்படி தான் பின்னால வந்து பொழுத இருட்டுற வேளையில பேய் மாதிரி நின்னு பயமுறுத்துவீகளா '

'போடி போக்கத்தவளே.... வெளில சண்டிராணி கணக்கா மொறச்சுக்கிட்டு திரியறது உள்ளே புஸ்ஸா ' எனக் கூறி ஆர்பாட்டமாகச் சிரித்தவனைக் கண்டால் எந்த பெண்ணுக்கும் ரசனை வந்திருக்கும் இப்போதோ அவளுக்கு காளி அல்லவா வந்து இறங்கிருக்கிறாள் எதுவும் பேசாது ஆத்திரத்துடன் தூணில் தொங்க விடப்பட்டுள்ள  கிண்ணத்தில் இருந்து குங்குமம், விபூதி எடுத்து பூசிக் கொண்டவள் அவனுக்கும் நெற்றியில் வைக்க கை எத்தனிக்க விருட்டென பின்னிழுத்துக் கொண்டு விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை கண்களில் சிரிப்புடன் கண்டவன் நாச்சியம்மனைப் பார்த்து,

' ஏத்தா என்ன உம்மக இப்படி சடச்சுக்கிட்டு போறா... நீதான் நாலு நல்ல வார்த்த சொல்றது... ம்க்கூம் நீ தான் எந்திருச்சு வந்து சொல்ல போற அவளும் அப்படியே கேட்டு எங்கூட வாழ்ந்துற போறா.. '

வாய்விட்டே சலித்துக் கொண்டவன் அவள்பின்னேயே நடக்க ஆரம்பித்தான். வீடு அமைதியாக இருந்தால் அவள் இல்லை என்று அர்த்தம். வெளியே வானம் இருட்டிக் கொண்டு இருந்தது நேரமும் நிரம்ப ஆகியிருக்க எப்படியும் கோயிலுக்குச் சென்றிருப்பாள் என்பதை சரியாக யூகித்து குடையுடன் கோயிலுக்கு வந்திருந்தான் மிருத்யுஞ்ஜெயன். வீட்டை அடைந்ததும் தாட்சாயிணி சமையலறைக்குச் சென்று இரவு உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள். மிருத்யு வராத போனை காதில் வைத்துக் கொண்டு அடுப்படியின் வாயிலில் நடந்துக் கொண்டே 'அப்படியா.... என்ன உம் மக வயசுக்கு வந்துடுச்சா... டேய் என் வயசு தானேடா உனக்கு அதுக்குள்ள உனக்கு வயசுக்கு வந்த பொம்பளப் புள்ளயா....டேய் எப்புர்றா..... '

கேட்டுக்கொண்டே அவளின் முகம் பார்க்க எண்ணி லேசாக எட்டிப் பார்க்க அவள் அரிகரண்டியை அரிவாள் போல தோளில் போட்டுக் கொண்டு அவன்முன் வந்தவள்,

'கரண்டியை அடுப்புல வச்சு இழுத்து விட்ருவேன் பாத்துக்கோங்க.... துரை கூட்டுற கூட்டுக்கு பத்து விளக்குமாறு கேட்குதோ....'

'ஏன்டி காலேஜ் டீச்சர் மாறியாடி பேசுற... பஜாரி மாறி வல்லுனு வங்கொரங்கு கணக்கா மேல விழுந்து பிராண்டுற'

என்றவனை பதில் பேசாது தீயாய் முறைத்தவளை மேலும் கடுப்பேத்த விரும்பாது அமைதியாக இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்து உறங்க கிளம்பினர் அவரவரது அறைகளுக்கு . திருமணம் ஆன அடுத்த நாளையில் இருந்து இருவரும் ஆளுக்கொரு அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். தேவைக்கு இன்றி பேசிக் கொள்வதும் இல்லை .தாட்சாயிணி அவனுக்கு வயிறு காயவிடாது வேளா வேளைக்கு உணவு மட்டும் செய்து தந்துவிடுவாள். அவள் பாரக்கும் வேலைக்கு படுத்ததும் உறங்க வேண்டும் ஆனால் மனம் உறங்கவிட்டால் தானே உறக்க தேவதை தழுவிக் கொள்வாள். ஏதேதோ நினைப்பு வரும். சாமியிடம் கூட இப்போதெலாம் தனக்கென இது கொடு அது கொடு என்று வேண்டிக் கொள்வதில்லை. வேண்டினாலும் இனி இந்த வாழ்க்கை மாறப் போவது என்பது நிச்சயமில்லை. இதுதான் தன் வாழ்க்கை என்றான பிறகு பயணம் என்ற ஓடம் எப்படி இழுத்துக் கொண்டு அதன்  திசைக்கேற்ப செல்கிறதோ அதன் வழியில் செல்வதே சாலச்சிறந்தது என்பது அவளின் எண்ணம். படுத்து சிறிது நேரத்தில் வீட்டிற்கு வெளியே கார் வந்து நிற்கும் ஒலி கேட்கவே இருவரும் அறையை விட்டு வெளியே வந்து பார்த்தனர். காரில் இருந்து மிருத்யுஞ்ஜெயனின் தம்பி தனஞ்செழியனும் அவன் மனைவி அக்ஷிதாவும் வந்திறங்கினர் . அண்ணனோ வந்தவர்களை வாவென்று மருந்துக்குக் கூட அழைக்கவில்லை. யாரோ யார் வீட்டுக்கோ வந்த விருந்தாளிகள் என்ற நிலையில் அமைதியாக புறங்கை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் மிருத்யுஞ்செயன். அவனது கோபத்தை புரிந்துக் கொண்டு தாட்சாயிணி முன்வந்து வாங்க தம்பி, வா அக்ஷூ என்றழைத்தாள். அவர்களோ கடனே,

ம்ம்...என்று முனகியபடி பயணப் பொதிகளோடு உள்ளே வந்தனர் இருவரும்.

'நாச்சியா என்னைக் கடுப்பேத்துறதுக்குனே இவைய்ங்கள இங்க அனுப்பி விட்டியாத்தா.... அனுப்பி விட்டதும் நீதான் இனி என்னை காப்பாத்த போறதும் நீதான்' மானசீகமாக நடுவூரஞ்சியிடம் வேண்டுதலை வைத்துவிட்டு அவர்களைக் கவனிக்க சென்றாள்.
தாட்சாயிணி எப்போதும் விடிந்ததும் எழுபவள் தான். ஆனால் இனிமேல் விடியக் கருக்கலில் எழ வேண்டும் நான்கு மணியளவில் எழுந்தவள் காலைக் கடன்களை முடித்துவிட்டு, மாட்டுக் காசாலைக்குச் சென்று அங்கு இருந்த மாடுகளை மற்றொரு கிடுகுக் கொட்டகையில் கட்டி தீனியும் வைத்துவிட்டு வந்து சாணிகளை அள்ளிப் போட்டு கூட்டிச் சுத்தம் செய்தாள். பின், மாட்டில் பால் கறந்து வந்தவள் இன்றையில் இருந்து சில வாரங்களுக்கு பால் வாங்கும் டிப்போக்காரனுக்கு பால் தர வேண்டாம் வீட்டிற்குத் தேவைப்படும் என்றெண்ணியபடியே பால் குக்கரில் பாலை ஊற்றி வைத்துவிட்டு, மழையில் நனைந்த வாசலை மீண்டும் தண்ணீர் ஊற்றி அலம்பியவள் அழகிய கம்பிக் கோலம் ஒன்றினை இட்டு காவியினைத் தீட்டிவிட்டு நிமிர,அங்கு கையில் பேக்குடன் நின்றிருந்தார் போதுமதி அம்மாள்.

'என்ன ஆத்தா அப்படி பாக்குற... வான்னு கூப்பிட்டா உம் புருசன் சொத்து முழுகியா போகும் '

'வாங்க'

'ம்க்கும்... நல்லா தான்டி ஆத்தா சொன்ன வாங்கனு.... விலகு அப்படி....'

என்று சொல்லி இடித்துக் கொண்டு உள்ளேச் சென்றார். தாட்சாயிணியோ அவ்வளவுதான் முடிச்சி விட்டீங்க போங்க என்ற ஸ்டைலில் பாவமாக பார்த்து வைத்தாள். போதுமதி அம்மாளுக்கு குழந்தைகள் இல்லாதக் காரணத்தினால் தன் அக்காளின் மகளான அக்ஷயாவை தூக்கி வந்து தன் பிரதிபிம்பம் போல் செல்லமாக வளர்த்து விட்டவர். பல்வேறு சதி பலச் செய்து மிருத்யுவின் தம்பிக்கு கட்டி வைத்தவர் அவள் இங்கு எப்போதெல்லாம் வருகிறாளோ அப்போதெல்லாம் இந்த அம்மாளும் இங்கு வந்து சட்டம் செலுத்தி உண்பார். காலை, மதிய உணவுகளை செய்துவிட்டு தானும் தயாராகி கல்லூரிக்குச் செல்ல எத்தனித்தவளை நிறுத்தி,
'ஏன்த்தா....நல்லா தான் வச்சாக பேரு தாட்சாயிணீனு.... வந்தவளுக்கு இம்புட்டுண்டு காப்பியப் போட்டு தரலாம் என்ன ஏதுனு அனுசரணையா பேசலாம்... கொள்ளலாம்... நீ என்னனா பேக்க தூக்கி தோள்லப் போட்டுட்டு வந்த மாடு வளந்த புல்ல திங்கிற கணக்கா போறவ.... '

என்றவரைக் கண்டு சிடுசிடுப்புத் தோன்ற,
'சாப்பாடு எல்லாம் பண்ணியாச்சு.தாரா அக்கா வருவாக. காலைலக்கு தோசை ஊத்தியாந்து தருவாக. மத்தியானத்துக்கு சூடா சோறாக்கிப் போடுவாக சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க சாயங்காலம் பேசுவோம்'

'இந்தாரு .... நான் ஒண்ணும் சோத்துக்கு வக்கத்துப் போய் உங்கிட்ட வரலடி ஆத்தா என் மக வீட்டுக்கு பாத்தியப்பட்டு தான் வந்தேன் கொண்டேன்.. எங்கேயோ போன எரும எம்மேல வந்து ஏறனு மாறில பேசுற'

இதற்கு மேலும் இங்கு நின்று இவரோடு மல்லுக்கட்ட தயாராக இல்லை என்பதை கருத்தில் கொண்டு அமைதியாக சென்றுவிட்டாள். இவள் கல்லூரிச் சென்ற சிறிது நேரத்திலேயே எழுந்து வந்த மிருத்யுஞ்ஜெயனுக்கு மனைவி இல்லாத வீடு வெறுமையை தந்தது. அதைவிட இவர்களை பார்க்கவே வெறுப்பாக இருந்தது தாரா அக்கா தந்த தோசையை பேருக்கு விழுங்கிவிட்டு கோயில் மண்டபத்தில் அமர்ந்து மில் கணக்கைப் பார்க்க ஆரம்பித்து விடடான். அப்போது அவனது தம்பி தனஞ்செழியன் வந்து நின்றான்.
'அண்ணே ...என்றவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு பழையபடி கணக்கு நோட்டைப் பார்க்க,


அண்ணே... உங்கிட்ட பேசணும்


சொல்லு


எப்படி சொல்லனு தெரியல


அப்போ சொல்லாத


என்னண்ணே இப்டி பேசுற... எனக்கு ஒன்னையும் அண்ணனையும் விட்டா வேறாரு இருக்கா ...

சரிடா சொல்லு ...என்ன சங்கதி


அண்ணே என்னை வேலைய விட்டு தூக்கிட்டாக


என்று கூறியவனை அதிர்ச்சியுடன் நோக்கி,


ஏன்?என்னாத்துக்கு?நீ என்ன பண்ண அப்படி?
அடுக்கடுக்காய் கேள்வி கணைகளைத் தொடுத்தவனை ஒரு மாதிரி பாரத்தவன்

கொஞ்சம் பணத்தைக் கையாடல் பண்ணி மாட்டிக்கிட்டேன்.

அதைக் கேட்டு சிரித்தவன்,

உனக்கு வராத சோலியை எல்லாம் ஏன் செய்யணும்


வேற வழி தெரியல.... இந்த மு_____ய கட்டுன அன்னைல இருந்து பீடை புடிச்சுருச்சு. வரவுக்கு மீறி ஆடம்பரம். கண்டிக்கப் போனா கேஸை திறந்துவிட்டுட்டு, வயரை புடிச்சிக்கிட்டு செத்துப் போய்டுவேனு ஆடுகாலி வேசம் போடுறா.படிச்சவ மாறியே இல்லண்ணே


அவுக சின்னாத்தா வளர்ப்புல அப்படிதான் இருக்கும். இப்போ அதுக்கு நான் என்னத்த செய்ய ஏப்பா...

கொஞ்சம் காசு புரட்டிக் கொடுத்தினா நான் ஏதாச்சும் காண்டிராக்ட் ஏலம் எடுத்து பொலச்சுப்பேன்


எம்புட்டு கேட்குற... திரும்பி குடுப்பியா இல்ல அதுக்கும்..... என்று இழுக்க


இல்லண்ணே அதெல்லாம் கொடுத்துப்புடுவேன்... தாயா புள்ளயா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தானே. ஒரு முப்பது வேணும்னே


அம்புட்டுலாம் எங்கிட்ட இல்லபா


அண்ணே... பாவமாய் பார்க்க,


பத்து ரூபாய் புரட்டித் தாரேன் மீதமுள்ளதா பாத்துப் பண்ணிக்க இதான் என்னால முடிஞ்சதது
என்று பேச்சு வளர்க்காமல் எழுந்து கடைப்பக்கம் சென்றுவிட்டான்.


   
ReplyQuote

You cannot copy content of this page