All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 10

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

 

அத்தியாயம் 10

உதயன் சிறுவயது இருக்கும் போது அடிக்கடி ஆதியின் வீட்டுக்கு செல்வது அங்கையே தங்கியிருப்பது தன் தம்பி தங்கைகளோடு அங்கே விளையாடுவது இதெல்லாம் அவனுக்கு பழக்கம் தான். ஆனால் ஒரு வயது வந்தப் பின் அதுவும் விவரம் நன்றாகத் தெரிந்த பின், நிகழ்மதி பெரியவளான பிறகு அவர்களின் வீட்டுக்கு தனியாக செல்வது சரியாகாது என நினைத்து அங்குச் செல்ல மாட்டான்.

குடும்பத்தாரோடு மட்டுமே செல்வான் அப்படியே ஆதியில் தான் சந்திக்க வேண்டும் என நினைத்தாலும் அவனை வெளியே வரக் கூடிய எங்கள் அழைத்துச் செல்வன் தவிர அவர்கள் வீட்டுக்குள் செல்ல மாட்டான். அப்படித்தான் அன்றும் ஆதியின் வீட்டு வாசலில் வந்து நின்றான். அவனின் கைப்பேசியிருக்கு அழைப்பு விடுக்க வீட்டுக்குள் இருந்த ஆதி அதனை எடுத்தான்.

"டேய் நான் வெளியில தான் இருக்கேன் வாடா. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ?" என்க,

"என்னடா காலங்காத்தாலே வந்து இருக்க நீ. முதல்ல வெளியில வரப்போறியா இல்லையா ?" என்றதும், அடுத்த சில நிமிடங்களிலேயே அவனும் வெளியே வந்தான்.

"பைக்ல ஏறு " என்க, உதயனின் புல்லட்டில் பின் ஏறி அமர்ந்ததும் அங்கிருந்துக் கிளம்பினான்.

உதயன் வந்தது வாசலில் நின்றது அவன் செல்வது முதற்கண்டு அனைத்தையும் தன் அறையில் இருந்து ஜன்னல் வழியாக காதலோடு கண்டு கொண்டிருந்தாள். நிகழ்மதி தன்னைக் காதலோடு காண்கிறாள் என்பதை கூட அறியாது தான் இருந்தான் உதயன்.

அருவமற்ற ஒரு இடத்தில் பைக்கினை நிறுத்தியதும் உதயன் இறங்க கூற, ஆதி இறங்கினான்.

"என்னடா ஏதோ தீவிரமா பேச போற போல ? அப்படி என்னடா விஷயம் எதுவும் பிரச்சனையா ?இப்படி தனியா கூட்டிட்டு வந்திருக்கே "

"ஆமா பிரச்சனை தான். நீ என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல.  யுகனிகாவை காதலிக்கிறேன் அவ பின்னாடி சுத்திக்கிட்டு அவளை டார்ச்சர் படுத்திட்டு இருக்கியாமே. எதுக்குடா இப்படி பண்ணிக்கிட்டு இருக்கே ? அவளுக்கு தான் உன்ன சுத்தமா பிடிக்கலை. அப்பறம் என்ன இனிமே நீ அவகிட்ட வராத. அவகிட்ட இருந்து விலகியே இருந்துக்கோ. இவ்வளவு நடந்து இருக்கு ஏன்டா என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லலை. என் கூடவே தான்டா சுத்திக்கிட்டே இருந்தேன். எப்ப தான் அவ்வளவு ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தே "

"காதல் வந்தால் அப்படித்தான் அதெல்லாம் கண்டுக்க கூடாது "

"டேய் மச்சான் நீதானே என் காதலுக்கு உதவி பண்ணனும். நீ என்ன இப்படி சொல்ற ? உனக்கு அவ நல்லா தெரிஞ்சு பொண்ணு. நான் அவ சம்மதத்தை வாங்குனதுக்கு அப்பறம் தான் உன் கிட்ட சொல்லலாம்ன்னு பார்த்தேன். ஆனா அதுக்குள்ள நேரா அவளை உன்கிட்ட சொல்லிட்டாளா "

"ஆமா நேத்து தான் என்கிட்ட சொன்னா. அப்பவே வந்து உன்னை அரையணும்ன்னு தான் எனக்கு தோணுச்சு. சரி நட்பாகிட்டேன்னு ஒரு காரணத்துக்காக மட்டும் தான் இப்ப வரைக்கும் நான் உன்னை விட்டு வைக்கிறேன். யுகனிகா பின்னாடி வராத. இது நான் உனக்கு கொடுக்குற முதல் வார்னிங் "

"என்னடா அவளும் அதைத்தான் சொல்றா நீயும் அதைத்தான் சொல்ற ? ஏன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்க கூடாதா. எனக்கு என்ன குறைச்சல் சொல்லு ஆஸ்தி அந்தஸ்து சொத்து எல்லாமே இருக்கு. அவ வந்தா என்ன கஷ்டப்படவா போறா.  அதுவும் இல்லாம அவளை நான் நல்லா பார்த்துப்பேன்டா "

"நீ என்ன சொன்னாலும் நான் கேட்க தயாராக இல்லை அவளை விட்டு விலகி போயிரு "

"ஏன் அப்படி சொல்ற ? ஒரு வேலை நீ அவளை காதலிக்கிறாயா என்ன ? அப்படின்னா சொல்லு அவளும் உன்னை காதலிச்சா விலகிடுறேன். இல்லன்னா விலக மாட்டேன். என்னக்கா இருந்தாலும் என் காதலை நான் அவளுக்கு புரிய வைப்பேன் "

"எனக்கு தெரியாது விலகிரு "

"அவ மனசுல வந்துட்டா, வந்தவ இனி போக மாட்டா "

"நீ இந்த விஷயத்துல இவ்வளோ தீர்மானமா இருந்தா நான் நண்பன் கூட பார்க்க மாட்டேன்டா. எனக்கு உன்னை விட அவ முக்கியம் " என்க, அதைக் கேட்டு ஏளனமாகத்தான் சிரித்தான்.

"நம்புற மாதிரி சொல்லுடா அவ உனக்கு ஏதோ ஒரு வகையில முக்கியம் தான். ஆனா என்னை விட உனக்கு அவ்வளவு முக்கியமா சரி இருந்துட்டு போட்டுமே இதனால என்ன. ஆனா என்னால விலக முடியாதுடா " என திரும்பத் திரும்ப கூறினான்.

"ஏ...ஆதி சொன்னா புரிஞ்சுக்க மாட்டியாடா. எதுக்கு இந்த விஷயத்துல நீ இப்படி இருக்குற. முன்னாடி எல்லாம் நீ இப்படி இருந்ததே இல்ல. இப்ப ரொம்ப மாறிட்டே. இது நல்லதில்லை. நீ ஆம்பள உனக்கு எந்த அவமானமும் வராது. அவ பின்னாடி சுத்திக்கிட்டே இருந்தா மத்தவங்க பார்வைக்கு இந்த விஷயம் தெரிஞ்சா பணக்கார வீட்டு பையனை மடக்கி போட்டுட்டான்னு அவளுக்கு தான் அவமானம் கெட்ட பேரு எல்லாமே வரும். அதனால தான் சொல்றேன் புரிஞ்சுக்கோ உன் தகுதிக்கு ஏத்த மாதிரி பொண்ணா பார்த்து நீ காதலிச்சுக்கோ, கல்யாணம் பண்ணிக்கோ. யுகனிகா நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழணும் தான் இங்க வந்து இருக்கா அவ வாழ்க்கையை நீ நோகடிக்காத. அவ ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா "

"ஆமா அவளுக்காக நீ இன்னும் பேசுறியே திரும்பவும் கேக்குறேன் அவளை நீ காதலிக்கிறாயா ?"

"அத நான் உன்கிட்ட சொல்லணும்ன்னு அவசியம் கிடையாது "

"அப்படியா அப்போ நான் அவளை விட்டு விலக முடியாது "

"நீ திரும்ப இதே மாதிரி பண்ணா நான் நேரா உங்க அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தான் இருக்கும் சொல்லிட்டேன் " என முதலில் பேசி பார்ப்போம் என்ற எண்ணத்தில் கூறிவிட்டு அங்கிருந்துக் கிளம்பினான் உதயன்.

உதயனின் வார்த்தைகள் அவனை அசைத்தாலும் அதை அவன் பொருட்டாகவே மதிக்கவில்லை.

நாட்கள் கடக்க,  நீங்க சொன்னா நான் கேட்கணுமா என்ற ரீதியில் தான் யுகனிகாவின் பின்னே சுற்றிச் சுற்றி வந்தான். அவனைச் சுற்றியுள்ள இளைஞர் பட்டாள்களுக்கு ஓரளவு இந்த விஷயம் கசிய ஆரம்பித்தது. கோவிலில் வைத்து அவள் சாமி கும்பிட வரும் போது எல்லாம் இவன் அவளை சைட் அடிப்பது, இளைஞர்களின் மத்தியில் அண்ணி என்று கூறி வைப்பது இப்படி இவனின் செயல் காட்டுத்தியாகவும் மெல்ல மெல்ல அந்த விஷயம் பரவும் ஆரம்பித்தது.

யுகனிகாவின் செவிக்கு இந்த செய்தி வந்தடைந்தது. மீண்டும் இதனை உதயனிடம் தான் கூறினாள். இதைக் கேட்டு கோபமாக ஆதி தோப்பில் இருக்க மீண்டும் அவனிடம் வாய் வார்த்தையால் பேசாமல் கை வார்த்தைகள் பேசி விட்டு வந்திருந்தான்.

மறுநாள் அதனை யுகனிகாவிடம் கூறும் பொழுது அவளின் வீட்டிற்க்கே பால் வாங்க வருகிறேன் என்று வந்து உதயனின் முன்னே தன் காதலியை சந்தித்தது. அந்தச் செயல் நட்பை முற்றிலும் முறித்து எதிராளியாக தான் மாற வைத்தது.

( ஃபிளாஷ் பேக் முடிந்தது )

உதயன் பொறுப்பான ஒருவன் அப்படியிருக்க தன் மகனை அடித்திருக்கிறான் என்றால் தன் மகன் ஏதோ செய்திருக்கிறான் என்பதை உணர்ந்தார் தென்னவன். அப்படி தன் மகன் செய்த தவறினை கண்டுபிடிக்க நினைத்தவரோ தன் கணக்கு பிள்ளையை வரவழைத்தார்.

"ஐயா !  என்ன வரச் சொன்னீங்கன்னு சொன்னாங்க, சொல்லுங்க ஐயா என்ன விஷயம் ?" என்று பணிவாக வந்து அந்த கணக்குப்பிள்ளை தென்னவனிடம் கேட்கவே,

"ரெண்டு நாளைக்கு முன்னாடி உதயனுக்கும் ஆதிக்கும் சண்டை வந்திருக்கு என்ன காரணம் ?எதுக்காக ரெண்டு பேரும் சண்டை போட்டாங்க அப்படிங்கற தகவல் எனக்கு நீ விசாரிச்சு சொல்லணும் "

"ஐயா அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து தோஸ்து. அவங்களுக்குள் ஏதாவது சண்டை வந்து இருக்கும் நாளைக்கு கூடி பேசிருவாக "

"இல்ல ஆதிக்கு அடி பலமா இருக்குற அளவுக்கு உதயன் அடிச்சிருக்கான். அப்படின்னா பெரிய பிரச்சினையா தான் இருக்கும். அதனால நீ விசாரி "

"சரிங்க ஐயா ! இன்னைக்கு சாயங்காலமே என்ன விஷயம்ன்னு நான் தெரிஞ்சிட்டு வந்து உங்க கிட்ட சொல்றேன் "

"சரி இந்த விஷயம் ஆதிக்கு தெரியாம பார்த்துக்கோ " என்றதும், சரி எனக் கூறி கணக்குப்பிள்ளை அங்கிருந்து சென்றார். இப்பொழுது முழு பொறுப்பினையும் ஆதி எடுத்துக் கொண்டதால் தென்னவன் வீட்டில் ஓய்விலே இருந்து விட்டார். எப்பொழுதாவது மாலை நேரம் அல்லது காலை நேரம் தன் வயலுக்கு தோப்புக்குச் சென்று வருவது அவருக்கு வழக்கம்.

இன்னும் இரு தினங்களில் ஆன்மிகச் சுற்றுலா சென்ற தன் பெற்றோர்கள் திரும்பி வர இருக்கின்றனர். அதற்குள் தான் இந்த பிரச்சனையை முடித்து வைக்க வேண்டும் என நினைத்தார் தென்னவன்.

கணக்குப்பிள்ளை தன் தந்தையும் பேசுவதை தன் அறையில் இருந்தவாறு கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் நிகழ்மதி.

அவளுக்குமே உதயன் இவ்வாறு செய்ய ஏதாவது காரணம் இருக்கும் என்ன என்பதை அறிய வேண்டும் ? என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது. அவளுக்கு நிச்சயமாக தெரியும் உதயனின் மீது எந்த தவறும் இருக்காது என்று உதயன் தன் மனதில் உதயமான ஒருவன் அல்லவா !

அன்றைய மாலை நேரம் கூறியதுப் போலவே கணக்குப்பிள்ளை தென்னவனின் முன்னே வந்து நின்றார்.  அன்னை அந்த நேரம் சரியாக கோவிலுக்குச் சென்று இருந்தார். அவர் இருந்தால் உதயனின் மீது தான் முழு தவறு இருக்கிறது தன் மகன் உயர்ந்தவன் என அவனை மட்டம் தட்டி பேசவது பதில் போனது நல்லதாக்கி போனது.

"ஐயா என்ன தகவல்ன்னு விசாரிச்சிட்டேன். நம்ம ஊருக்கு ஓரமா புதுசா ஒருத்தவங்க ஒரு நாலைஞ்சு வருஷமா இருக்காங்கல தனியா ஒத்த வீடு ஒன்னு. அந்த வீட்டில் உள்ள பொண்ணுக்காக தான் ரெண்டு பேருமே சண்டை போட்டு இருக்காங்க. அந்த பொண்ண நம்ம தம்பி காதலிக்கிறேனு பின்னாடி சுத்தி வந்திருக்கு. அது தெரிஞ்சு உதயன் தம்பி தான் வேண்டாம். அந்த பொண்ணுக்கு விருப்பம் எல்லாம் போதும் நீ எதுக்கு இப்படி பண்ற விலகி போயிரும் பக்குவமா பேசி பார்த்து இருக்கு. நம்ம தம்பி கேட்கலை உடனேஉதயன் தம்பி அடிச்சி இருக்காங்க. அதனால தான் அன்னைக்கு தோப்பில இரண்டு பேருக்கும் அடிபிடி சண்டை வந்து இருக்கு "

"ஆமா உதயன் எதுக்கு அந்த பொண்ணுக்காக இவ்வளோ பேசுறேன் ? ஏன் ஒரு பொண்ண ரெண்டு பேருமே காதலிக்கிறேன்னு சுத்திக்கிட்டு இருக்காங்க. "

"அப்படிலாம் இல்லை ஐயா ! அந்த குடும்பத்தாளுகா இங்க வரதுக்கு காரணம் உதயன் தம்பி தான். அவங்க தான் இங்க கூட்டிட்டு வந்தாராம் முன்னாடி எங்கையோ ஒரு இடத்துல இருந்து இருப்பாங்க போல  அங்கு இருந்து உதயன் தம்பி கூட்டிட்டு வந்து இடம் வாங்கி கொடுத்து வீடு கட்ட உதவிய இருந்து இந்த நாள் வரைக்கும் அவங்களுக்கு ஒரு பக்க பலமா இருந்துக்கிட்டு இருக்கு. அந்த பொண்ணு உதயன் தம்பியும் நல்ல பிரெண்டுன்னு பேசுறாக "

"உழைக்க வந்தவர்களுக்கு இவ்வளவு இடம் கொடுக்குறான் உதயன் அப்படின்னா அவன் அவர்களுக்கு முக்கியமான ஆளுங்களா தான் இருக்கணும். என் மகனை நான் கண்டிச்சு வைக்கணும். இப்படியே விட்டா நம்மளுடைய மான மரியாதை தான் போகும். சரி இதை நான் பார்த்துக்கிறேன் நீ போ " என்றதும், கணக்குப்பிள்ளையும் சென்று விட்டார்.

தன் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது என்பதை தன் அண்ணனுக்கு சொல்லவா வேண்டாமா ? சொல்லி முன்னெச்சரிக்கை கொடுக்கலாமா அல்லது தன்னவனுக்கு துணையாக தன் நிற்கவா என்று யோசனையிலே சுற்றி வந்தாள்  நிகழ்மதி.

 

கருத்துக்களைப் பகிர,

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page