சஞ்சாரம் - 02
“ஹலோ ஜென்டில்மேன்ஸ்” மெல்லிய புன்னகையுடன் பார்த்தவன் “ஒஹ் ஒருத்தர் கூட ஜென்டில்மேன் இல்ல” கண் மூடித் திறந்து புருவத்தை ஏற்றி இறக்கியவன் “ஹலோ ரவுடீஸ்” என்றான்.
பௌலோமிக்கு அவன் இலகுத் தன்மையிலும் பேச்சிலும் வந்த சிரிப்பு நிலைமையின் தீவிரம் உரைக்க முறுவலாய் மலர்ந்தது.
“ஏய் யார் நீ?” தலைவன் போலிருந்தவன் முன்னே வந்தான்.
“ம்ம்..., இரவின் நிசப்தத்தை கலைக்க விரும்பாத ஒருவன்” பண்ட் போக்கேடினுள் கையை விட்டுப் புன்னகைத்தான். அவன் பதிலில் மலர்ந்த கண்களை அவனை நோக்கித் திருப்பினாள் பௌமி.
ஓடியதில் பிரதான வீதிக்கு அருகே வந்திருக்க அதிலிருந்த மின்விளக்கின் வெளிச்சம் அவன் மீது நன்றாகவே விழுந்தது.
ஆறரை அடி உயரத்தில், சற்று மெலிந்த தேகத்துடன் நின்றவன் நீண்ட கைகள் முழங்காலை தொட்டு விடும் போலிருந்தது. அடர்ந்த புருவத்தின் கீழ் தீட்சயன்யமான கண்கள் அந்த இருளைக் கூட துளைத்து விடும் போல் பார்த்துக் கொண்டிருந்தது. நீண்ட கூர் நாசி, படத்தில் வரைந்தது போல் இதழ்கள். சதுர தாடை, ஒற்றைக் காதில் சிறிய கடுக்கன். கைகளை கால்சட்டை பையினுள் விட்டு கால்களை அகட்டி நின்ற விதத்தில் ஒரு அலட்சியம்.
‘இவர்களை இவனால் அடிக்க முடியுமா?’ என்ற சந்தேகத்தை தள்ளி வைத்தது சற்று முன் அவனோடு மோதியதில் இன்னும் வலித்துக் கொண்டிருந்த நெஞ்சு.
“இவனை போட்டுத் தள்ளிட்டு அந்த குட்டிய இழுத்திட்டு வாங்கடா?” சிறு பெண் தங்களை இத்தனை நேரம் சுற்ற விட்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில் கத்தினான் நாயர்.
“ஏய் குட்டி கிட்டி என்றா பல் எகிறிரும்” பாய்ந்து கொண்டு முன்னால் சென்றாள் பௌமி.
“ஈசி லவ்” அவள் தோளைப் பிடித்து நிறுத்தினான் அவன்.
கத்தியுடன் அவனை நோக்கி வரவே, ஒரு கையால் லாவகமாய் பௌமியை தன் பின் கொண்டு வந்து வாய்க்குள் நகைத்தான். ஒரு அசைவில் அவன் கையை முறுக்கி கத்தியை பறித்து, பின் புற முழங்காலில் உதைக்கவே அந்த ரவுடிகளின் தலைவன் மண்டியிட்டான். அடுத்ததாய் இரண்டு எலும்புகள் உடைந்த சத்தம் கேட்க, அவன் முதுகின் பின்னிருந்து எட்டிப் பார்த்த பௌலோமி கண்களை விரித்தாள்.
லேசாய் திரும்பி அவள் கண்களைப் பார்த்தவன் தலையை குலுக்கி விட்டு மீண்டும் நாயரிடம் திரும்பினான்.
அடுத்தடுத்து வந்த இருவரும் நொடியில் முதல் வந்தவன் போல் விழவே எதிரில் நிற்பவன் சாமானியன் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது.
மூவரும் கார்டூன் போல் எக்குதப்பாய் விழுந்து கிடக்க கையில் இல்லாத தூசியை தட்டி “அடுத்தது யார்?” நிமிர்ந்தவன் கண்கள் வேட்டைக்கு செல்லும் புலியைப் போல் பளபளக்க அந்தக் கண்களை மீறி அருகே செல்ல எவனுக்கும் துணிவு வரவில்லை.
போகேடினுள் கை விட்டு “குட் தூக்கி செல்லுங்கள்” என்றான். பயத்துடன் அவன் மீது ஒரு கண்ணை வைத்தவாறே மூவரையும் தூக்கிச் சென்றார்கள்.
அவர்கள் செல்வதைப் பார்த்தவன் அவளிடம் திரும்பினான். இத்தனை கலவரத்திலும் அவன் முகம் சாதாரணமாய் இருந்தது.
“யூ ஒகே” மிகமிக மென்மையாய் ஒலித்தது அவன் குரல்.
தலையை வேகமாக ஆட்டி “எனக்கு ஒன்றுமில்லை, தேங்க்யூ” பதிலளித்தாள். அந்த இரவின் மெல்லிய வெளிச்சத்தில் அவளை சுற்றி ஏதோ மென்மையாய் படர்வதைப் போல் உணர்ந்தாள். அவள் பார்வை அவன் முகத்திலேயே இருந்தது. ‘யாரிவன்’
அந்தப் பக்கம் வந்த டாக்சியை கை போட்டு அவன் மறித்ததை பார்த்தவள் கேட்டாள் “நான் பௌலோமி அலைஸ் பௌமி, பௌமி என்றே கூப்பிடலாம் உங்கள் பெயர்”.
“பிரஜன்”
கார் கதவைத் திறந்து விட தயக்கத்துடனேயே ஏறினாள். வளைவில் திரும்பும் வரை காரையே உதட்டை கடித்தபடி பார்த்தான் பிரஜன். உணர்ச்சியற்ற அவன் முகத்தில் ஒரு மெல்லிய சலனமாய் குழப்பரேகை படர்ந்தது.
அவள் வந்த அதே சந்துக்குள் திரும்பி இருளாய் இருந்த ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.
ஒருவர் வந்து கதவைத் திறக்க மஞ்சள் நிற மின்குமிழ் உள்ளே மெலிதாய் வெளிச்சத்தை கசிய விட்டுக் கொண்டிருந்தது.
“ஃபிக்சர்”
“பீனிக்ஸ்”
தலையாட்டவே “உள்ளே வா, ஐந்து நிமிடம் தாமதம்” அவர் கண்கள் கூர்மையாய் அவனைத் துளைத்தது. அவர் கண் முன் நிற்பவன் பீனிக்ஸ். இருட்டுலகின் முதல் தர காண்ட்ராக் கில்லர். அவர்தான் அவனுக்கு பயிற்சி அளித்தார். அவனை நேரில் பார்த்த யாருமே உயிருடன் இல்லை. அவன் ஒரு வேலையை எடுத்து அதை முடிக்கமால் விட்டதாய் சரித்திரமேயில்லை. அவன் உண்மையான முகமும் பெயரும் தெரிந்தவர் இந்த ஃபிக்சர் மட்டும்தான்.
“உங்கள் வீட்டின் முன்னே சின்ன பார்ட்டி, நீங்க இங்கே இருப்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன், சொல்லிட்டு வரவா?”
“ஹா ஹா வெரி பஃன்னி”
“ஒரு அசைன்மென்ட் செய்யுறியா?”
“உங்களுக்கே என் பாலிசி தெரியும்” உள்ளே சென்று காஃபியை கலந்து இருவருக்கும் எடுத்து வந்தவன் நீட்டினான் “இந்த வயதின் பின்னர் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே”
“அத விடு இந்த வேலையெல்லாம் புலி வாலை பிடித்த கதை. லுக் முதலில் நீ இதைப் பார், அதன் பிறகு முடிவெடு. அவர்கள் நீதான் வேண்டுமென்று டிமாண்ட் செய்யுறாங்க”
“நோவன் வான்ட்ஸ் த டெவில், யார் அவர்கள்” கோப்பிற்காக கையை நீட்டினான்.
“நோ ஐடியா, கவனம் இது வெறும் பகையோ, அரசியலோ, சொத்துக்காகவே போல தெரியல. இது வேற ஏதோ. சிபிஐயும் இதில் இன்வோல்வ்.” சில நேரங்களில் கொலை செய்ய சொல்லி கேட்பவர்களும் தங்கள் அடையாளத்தை மறைப்பது உண்டு.
அவர் பீடிகையில் ஒற்றை புருவத்தை உயர்த்தி கோப்பை திறந்து பார்த்தான். உள்ளே பௌமி அவள் அப்பா சிவகுமார் தோளில் சாய்ந்து கொண்டு அவனைப் பார்த்து சிரித்தாள்.
கண்களோடு சேர்த்து உதடுகளையும் அழுத்தமாய் மூடினான் பீனிக்ஸ்.
***
குளித்து வந்து தோள் வரையே நின்ற கூந்தலை துவட்டியவாறே தோல் பையில் இருந்த அந்தக் கோப்பையும் பெண் ட்ரைவையும் வெளியே எடுத்தாள்.
சிறு வெற்றிப் புன்னகையுடன் அதை லப்பில் கொளுவியவளுக்கு அந்த நாயரின் கண்ணை சுற்றி விட்டு பாக்கை வாங்கிய தருணம் கண்ணில் வந்தது.
மார்க்கெட்டினுள் அவர் சொன்ன அடையாளங்களை வைத்து அவர் நின்ற இடத்தை பார்த்து விட்டிருந்தாள். எனவே வேண்டுமென்றே யாரென்றே தெரியாத ஒருவர் மீது மோதி நாயரின் ஆட்களை திசை மாற்றி விட்டு அந்த கடையின் மறு வழியாக வெளியே வரும் போது நொடியில் எதிரில் நின்றவர் கையில் இருந்த பாக்கை வாங்கிக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள். அத்தோடு நிலைமையை கூறி மீதி விவரங்களை மீண்டும் ஒரு நாள் சந்திபோம் என்று ஏற்கனவே ஒலி வடிவில் செய்தி அனுப்பி இருந்தாள்.
சில வங்கி அறிக்கைகள், கூரியர் செய்ததற்கான பற்று சீட்டுகள் என்று சில ஆவணங்களுடன் இருந்த பென் ட்ரைவ்வை ஆராய அதில் சில கம்பனிகள் குறித்த ஒரு நிறுவனத்திற்கு டொனேஷன் கொடுத்ததிற்கான ஆவணங்களுடன் அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதமும் இருந்தது.
‘இதை வாசிப்பவர் யாராய் இருந்தாலும்’ என்று விநோதமான முறையில் தொடங்கிய அந்தக் கடிதத்தை யோசனையுடன் படித்தாள்.
இது மிகமிக அபாயமான வேலை. இதற்கு முன் இது தொடர்பாக நான் தகவல் கொடுத்த இருவரும் இறந்துவிட்டனர். ஒருவர் கேரளாவை சேர்ந்த போலீஸ் நாராயண் குட்டி, மற்றவர் தமிழ் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் சிவகுமார். இருவரும் இறந்தது விபத்தில்தான். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்னை எப்போது வேண்டுமானாலும் கண்டு பிடிக்கலாம்.
அதனால் இது தொடர்பான ஆதாரங்களை பத்திரமான இடத்தில் வைத்துள்ளேன். அந்த இடத்தை இந்தக் கடிதத்தில் சொல்ல முடியாது. இந்தக் கடிதம் அவர்கள் கையில் மாட்டி விட்டால் அத்தனையும் போய்விடும். இதில் உங்களை நீங்களே ஈடுபடுத்த முன்னர் ஒரு எச்சரிக்கை. நிச்சயமாய் நூறு வீதம் உங்களின் உயிருக்கு ஆபத்து இருக்கு. மேற் கொண்டு இதை தொடர விரும்பினால், இதில் இருக்கும் மின்னஞ்சல் மூலமாய் டார்க் வெப்பில் தொடர்பு கொள்ளுங்கள். இப்போதைக்கு அது மட்டும்தான் பாதுகாப்பான செய்தி பரிமாற்றமாக இருக்கு. நான் உயிரோடு இருந்தால் அடுத்த சந்திப்பதற்கான இடத்தை சொல்கிறேன்.
இவர்கள் செய்வது சமூகத்திற்கு விரோதமானது. கொலை கஞ்சா என்பதையெல்லாம் தாண்டி அபாயகரமானது. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த தற்கொலைகள் எல்லாம் தற்கொலைகளே இல்லை. திட்டமிடப்பட்ட கொலைகள்
வெல்விஷர்.
பிஎஸ்: கவனமாய் இருங்கள்.
சாய்ந்து அமர்ந்தவள் முகத்தில் ஆயிரம் யோசனை சிதறல்கள். ஆங்கிலத்தில் இருந்த அந்தக் கடிதத்தில் உண்மை இருப்பதாகவேபட்டது. விசில்பொqலோவரை அவர்கள் தேடுவதைததான் அவளே பார்த்தாளே. ஆபத்தை பற்றி அதிகமாய் யோசிக்கவில்லை, இந்நேரம் அவள் யாரென்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் நேற்று விமான நிலையத்தில் இருந்தே பின்தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.
அவள் சிந்தனையெல்லம் இப்போது அந்த நாயரின் ஆட்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இவரை சந்தித்து ஆதாரங்களை பெற வேண்டும், எப்படி என்பதிலேயே உலன்றது.
டார்க் வெப்பில் நுழைந்து அக்கவுண்ட் உருவாக்கினாள். பெயரைக் கேட்க சற்று யோசித்தவள், சிறு முறுவலுடன் ‘வேடன்’ என்று கொடுத்தாள். அது யூசர் நேம் நோட் அல்லோவ்ட் என்றது.
‘வேடன்007’ என்று கொடுத்து விட்டு ஜேம்ஸ் பாண்ட்டை போல் கையை வைத்து அபிநயம் பிடித்தாள்.
கேமரா மூலம் அவளின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த கண்ணுக்கு சொந்தக்காரனின் உதடுகளில் முறுவல் பூத்தது.
அவர் கொடுத்த மின்னஞலுக்கு தகவலை அனுப்பினாள்.
‘நான் சிவகுமாரின் மகள் பௌலோமி, என்னிடம் அப்பா தந்த சில ஆதாரங்கள் இருக்கு. ஆனால் அவை மட்டுமே போதாது. உங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் சேர்த்தால்தான் என்னால் எதுவும் செய்ய முடியும்.’
அவள் தகவல் அனுப்பியதுமே சாட்டிற்கு வந்தவர் “அவர்களுக்கு என் மீது சந்தேகம் வந்துவிட்டது. அதனால் என் ஊருக்கு வந்து விட்டேன். குறைந்தது ஆதாரங்களை உங்கள் கையில் தரும் வரையாவது உயிருடன் இருக்க வேண்டும். சோ கொஞ்ச நாள் வைட் செய்வோம்.”
“சரி ஆனால் ஒவ்வொரு நாளும் பதினோன்றறைக்கு எனக்கு மெசேஜ் பண்ணுங்கள்”
“ஒகே, விபி இன்கம்மிங் என்று வரும்.” என்றதோடு அவர் ஆஃப்லைன் போய்விட்டார்.
சற்று நேரம் யோசித்தவள் அவள் நண்பன் ஜோனுக்கு அழைத்தாள் “ஹாய் ஜோன்”
“ஹேய் வாட்ஸ் அப், எங்கே ஆளையே காணோம்.”
“ஒரு இன்வெஸ்டிகேசன்ல இருக்கிறன் உன் ஹெல்ப் வேணும்”
“சொல்லு”
“இங்கே சிலருடைய போன் நம்பர் இருக்கு அதை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கணும். அடுத்து டார்க் வெப் மூலமாய் தொடர்பு கொண்ட ஒருவர் எங்கே இருக்கிறார் என்று தெரிய வேண்டும்”
“போன் நம்பர் வைச்சு இடம் கண்டு பிடிப்பது நோ ப்ரோப்லேம். பட் டார்க் வெப் கஷ்டம் அதுதான் டார்க் வெப் நிறைய பேர் பயன்படுத்துவதன் காரணம்”
சற்று நேரம் அவள் அமைதி காக்க “டார்க் வெப்பா இருந்தாலும் இணையத்தின் வழியே தான் பயன்படுத்த முடியும். அதுக்கு பயன்படுத்தும் நம்பர் ஏதாவது இருந்தாலும் கண்டு பிடிக்கலாம்” என்றான் அவன்.
“என்னிடம் வாட்ஸ் அப் நம்பர் இருக்கு அதை ட்ரை பண்ணி பார். அவர் இதற்கு முன் விபி டிரஸ்ட் என்ற டிரஸ்ட்டில் கணக்காளார இருக்கிறார் என்று அப்பா ஒருதரம் சொன்னவர். அவர்கள் டேட்டா பேசில் இருந்து எடுக்க முடியுமா?”
“எடுக்கலாம் அதில் ஒரு சிக்கல்”
“என்ன?”
“அவர் எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது”
“உன்னை... அவர் பற்றிய தகவல்கள் அனுப்பி இருக்கிறேன். எடுத்திட்டு எனக்கு எஸ்எஸ் போடு” என்றதோடு அழைப்பை துண்டித்தாள்.
சோபாவில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு தன்னை காப்பாற்றியவன் நினைவு வர உதடுகளில் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டது. ‘ஹ்ம்ம் ஹன்ட்சம் மன்’
அந்த ஹோட்டலின் முன் இறங்கியவள் கையிலிருந்த கார்ட்டை நோக்கினாள். பீச் அருகே இருந்த பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆர்ட் எஃக்சிபிசன், அதன் மூலம் வரும் வருமானத்தை விபி டிரஸ்ட்டுக்கு கொடுப்பதாக அச்சடிக்கப்பட்டிருந்தது. இங்கே அவளுக்கு சில தகவல்கள் கிடைக்கலாம் போலிருக்கவே வந்திருந்தாள்.
அந்த பார் டேபிளில் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டியாவாறு சாய்ந்து நின்று சுற்றுப் புறத்தை கூர்மையாய் போல் கவனித்துக் கொண்டிருந்தவன் கண்கள் அவள். உள்ளே வரும் போதே கண்டு கொண்டன. சட்டென திரும்பி சிறு கண்ணாடிக் குடுவையில் இருந்த திரவத்தை அப்படியே வாயில் கவிழ்த்தான். கண்கள் மூடியிருக்க மனமோ கண்ட காட்சியை மீண்டும் ஓடவிட்டது.
தோளுக்கு சற்றுக் கீழேயே நின்ற கட்டை கூந்தல், நீள் வடிவ முகம், துருதுருவென நெளிந்த புருவத்தின் கீழ் அங்குமிங்குமாய் ஓடிய விழிகள், நீண்ட நாசியின் கீழ் கீறிவிட்டது போன்ற இதழ்களுக்கு போட்டிருந்த வைன் நிற லிப்டிக் அவனை மயக்கியது. அதே நிறத்தில் உடலோடு ஒட்டிய நீள கவுன், அதில் தொடைக்கு சற்றுக் கீழிருந்து ஆரம்பித்த வெட்டு அவளின் நீண்ட வடிவான கால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. காலில் குதி வைத்த சாண்டில்.
‘அவள் நீ செய்யும் வேலையை விட ஆபத்து இங்கிருந்து போ’ மீண்டும் எச்சரித்தது மூளை. கண்ணைத் திறந்தவனுக்கு முன்னே இருந்த கண்ணாடியில் கோட்டைக் கழற்றி வைப்பது கண்ணில் பட ‘வி’ வடிவில் கழுத்து அகன்று தோளை விட்டு இறங்கியிருக்க கழுத்தும் அதன் கீழும் பளிச்சென தெரிந்தது. “ஒஹ்” என்றான் தொண்டைக் குரலில்.
முன்னே நின்ற பார் அட்டெண்டன் “டிட் யூ அஸ்க் சம்திங் சேர்” விசாரித்தான்.
“வன் மோர் ப்ளீஸ்” சிறு கண்ணாடி குடுவையை உயர்த்திக் காட்டியவன் பார்வை மீண்டும் அவள் விம்பத்தில் பாய்ந்தது. அவனை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தாள். அவன் மனமோ பத்து நாளைக்கு முன் சென்றது.
அன்று கோப்பைக் கையில் கொடுத்த ஃபிக்சர் அவன் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு தெரிந்து பீனிக்ஸ் இந்த அசைன்ட்மெண்டை எடுக்க சந்தர்ப்பமேயில்லை. ஆனால் வேறொரு காரணத்துக்காய் அவன் எடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
முழுமையாக கோப்பை படித்து முடித்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவர் முகத்திலிருந்தே அவன் மனதைப் படித்தவனாய் “டென் சி, சிக்ஸ் மன்ந்ஸ்” என்றான்.
‘ஒகே டீல் தென்”
கடந்த பத்து நாட்களாய் அவளைத்தான் நிழல் போல் தொடந்து கொண்டிருந்தான். அவன் அசைன்ட்மென்ட்டை ஏற்றுக் கொண்டதில் நாயரின் ஆட்களை பின் வாங்க சொல்லியிருந்தான் ஹிப்னோஸ்.
இந்தப் பத்து நாளில் அவள் அதிகம் செய்தது, ஊரை சுற்றுவது, பீச் போவது, தங்கியிருக்கும் அப்பர்ட்மென்டின் கீழே இருக்கும் பார்க்குக்கு வந்து அங்கிருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவது, பெருசுகளை வம்புக்கு இழுப்பது, அருகேயுள்ள கஃபேயில் லப்பையும் தூக்கிக் கொண்டு காஃபி குடிக்க வருவது.
கடலையோடு விளையாடிய பௌமி...
குழந்தைகளுடன் குழந்தையாக ஐஸ்க்ரீம் குடித்த பௌமி
பெஞ்சில் அமர்ந்து சண்டை போட்ட மனைவியை சமாதனபடுத்த முயன்ற பெரியவர் கையில் ரோஜாவை வைத்து சென்ற பௌமி
யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து ஜெர்மன் செப்பார்ட் நாயுடன் சம்மணமிட்டு அமர்ந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பௌமி,
இத்தனை காலம் இறுகிப் போயிருந்த அவன் மனதை இளக வைத்த பௌமி
அவன் நாள் முழுதும் பௌமியால் நிறைந்தது. தலை கோதியவன் அப்படியே பிடரியை பிடித்துக் கொண்டு அண்ணாந்து வானம் பார்த்தான். இது என்ன உணர்வு என்றே அவனுக்கு புரியவில்லை. இத்தனை நாள் இறுகியிருந்த அவன் மனம் இலவம் பஞ்சாய் பறகின்றது. சிரிக்கவே தெரியாத அவன் இதழ்கள் அவளை எங்கு கண்டாலும் அனுமதியின்றி புன்னகையில் விரிகின்றது. அவன் கைபேசி சத்தம் போடவே எடுத்து காதுக்கு கொடுத்தான். கண்களோ உள்ளே சென்ற அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
“நாளை ஒரு ஆர்ட் எச்சிபிசன்...” ஃபிக்சர் தான் எடுத்திருந்தார்.
***
“ஹாய்” உற்சகமாய் குரல் கேட்க சலனமின்றி திரும்பிப் பார்த்தான்.
“பிரஜன் ரைட்” கையை நீட்டினாள் “நான் பௌலோமி அலைஸ் பௌமி, அன்று சரியாய் அறிமுகப்படுத்த சந்தர்பம் கிடைக்கல”
“எஃக்ஸ்கியூஸ் மீ, பட் உங்களை எனக்குத் தெரியுமா?” சலனமின்றிக் கேட்டான்.
“நிச்சயமா அன்று நீங்கள்தானே என்னைக் காப்பற்றியது. பத்து நாளைக்கு முதல் அந்த முட்டு சந்து”
“லுக் மிஸ்... இப்ப என்ன பெயர் சொன்னீர்கள்?” வேண்டுமென்றே யோசிப்பது போல் நடித்தவன் “அஹ் பௌலோமி அலைஸ் பௌமி, மே பி ஜஸ்ட் ஸ்மால் ஹெல்ப் ஆபத்தில் உதவி செய்திருப்பேன். இதையெல்லாமா ஞாபகம் வைத்திருப்பார்கள்?” அவளிடமிருந்து பார்வையை திருப்பி கையிலிருந்த கண்ணாடிக் குடுவையை பார்த்தவாறே கேட்டான்.
பௌமிக்கு சட்டென முகம் விழுந்துவிட்டது.
“ஒஹ்” என்று திரும்பியவள் கண்களில் விழுந்தான் நாயர்.
‘இவனுக்கு ஞாபகபடுத்துவதை விட வந்த வேலை முக்கியம்’ என எண்ணியவளாய் “ஸீ யூ” என்றவள் கூட்டத்திடையே நுழைந்து நாயரைப் பின்தொடர்ந்தாள். அந்த இடம் கொச்சினின் தொழிலதிபர்களால் நிரம்பியிருந்தது. ஆண் பெண் வயதானவர் இளைஞர் யுவதிகள் என பாதிபேராவது அந்த டிரஸ்ட்டை நம்பி உதவும் எண்ணத்துடன் வந்திருந்தனர். ஒரு புறமாய் வரைந்த சித்திரங்களை வைத்திருக்க, மறுபுறத்தில் இடத்தில் போப்பே உணவு முறை, பழசாறு என்றிருந்தது. இன்னொரு இடத்தில் டிஜே என்று களை கட்டியது.
நாயர் திறந்து சென்ற கதவின் முன்னே இரண்டு பேர் காவலுக்கு நிற்க உள்ளே செல்ல முடியவில்லை. அதற்கு அருகிலேயே விதவிதமான பழசாறுகளை அதற்குரிய தாங்கிகளில் போட்டு வைத்திருக்க அதற்குள் ஒன்று கரண்டி போல் சுழன்று கொண்டிருந்தது. அந்த மேசையின் ஓரம் ஒதுங்கி, பழசாறுகளை பார்ப்பது போல் அந்தக் கதவையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
“அந்த வூட்அப்பிள் நல்லா இருக்கும்” என்றான் அருகே பழசாறை பார்வையிட்டுக் கொண்டிருந்த அவன்.
ஆச்சரியமாய் பார்க்க “ஹாய் ஐம் சங்கர்” தன்னைத்தானே அறிமுகபப்டுத்தினான்.
“பௌலோமி” என்றவள் பார்வை மீண்டும் கதவு நோக்கி பாய “எனக்கும் சேம் டவுட்தான்” என்றான் அவன். எதுவும் பேசவில்லை, ஆனால் சற்று எச்சரிக்கையாய் நோக்கினாள்.
“பயப்பட வேண்டாம், சிபிஐ” தாழ்ந்த குரலில் கூறியவன் “நீங்க பௌலோமி சிவகுமார் தானே” அவள் அடையாளத்தை உறுதிப்படுத்தினான்.
அவள் யாரென்பதை எதிரிகள் நன்றாகவே அறிவார்கள். எனவே அடையாளத்தை மறைக்கக் பெரிதாய் முயற்சி எடுக்கவில்லை. ஆமோதிப்பாய் தலையை அசைத்து வைத்தாள்.
பாரின் முன் போட்டிருந்த ஸ்டூலில் இந்தப் பக்கம் திரும்பியிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரஜன் தடை இறுகியது. கையிலிருந்த கிளாசை அப்படியே வாயில் கவிழ்த்தவன் திரும்பி பார்க்கமால் அதை பின்புறமாய் எறிந்தான். சற்று முன் அவனே அவளை தெரியாது என்று அனுப்பி வைத்தது எல்லாம் அவன் நினைவில் இல்லை. அந்த புதியவன் குனிந்து அவள் காதில் ஏதோ சொல்ல, இங்கே இவனுக்கு ஏகத்துக்கும் எகிறியது.
“இது சரி வராதுடா பிரஜன் என்ட்ரியை போடு” நிதானமாய் நடந்தவன் வழியில் வந்த பேரரின் தட்டிலிருந்த பழசாறு நிரம்பிய கிளாசை எடுத்தவாறே சென்றான்.
“அந்த மூன்றாவது வரிசையில் பத்தாவது கிளாஸ். ஐந்தாவது வரிசையில் பதின்மூன்றாவது கிளாஸ். ப்ரீயா இருக்கும் போது ட்ரை பண்ணுங்கள்” கண்களை சிமிட்டியவாறே தனக்கு ஒரு கிளாசை எடுத்துக் கொண்டான். கெட்டிக்காரன்தான் நாசூக்காய் தன் கைபேசி இலக்கத்தை சொல்லிவிட்டான்.
“இவர் எந்த ரவுடிகளிடமிருந்து காப்பற்றினார்” பௌமியின் தோளை சுற்றி கையைப் போட்டவன் சங்கரைப் பார்த்த பார்வையில் சங்கர் பஸ்பமாகமல் இருந்ததே அதிசயம். அவனின் ஆழ்ந்த கருநிறக் விழிகள் முன்னிருந்தவனை அளவிட நொடியில் இனங் கண்ட மூளை எச்சரித்தது ‘அவன் போலிஸ் விலகியிரு’.
“அஹ் போலீஸ்” மிகமிக மென்மையான குரலில் சொன்னான். அந்தக் குரலின் தற்பாரியம் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
“பிரஜன்” கண்களை விரித்தாள் பௌமி.
புதிதாய் இணைந்தவனை அழுத்தமாய் பார்த்தது சங்கரின் கண்கள் “சங்கர்” கைகளை நீட்டினான். ஒரு பார்வையில் தன்னை அடையாளம் கண்டவனை வியக்கமால் இருக்க முடியவில்லை.
“ஒஹ் நைஸ் டு மீட் யூ” வேண்டுமென்றே அழுத்தமாய் பிடித்து கை குலுக்கினான் பிரஜன்.
“ஸ்ட்ரோங் ஹா” சிறு கேலியாய் கேட்ட சங்கர் “இட்ஸ் வோண்டேர்புஃல் டு மீட் யூ மிஸ்டர் பிரஜன்” கிளாசை உயர்த்தி காட்டிவிட்டு விலகி காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தில் கேட்டான்.
“பீனிக்ஸ் எப்ப கொச்சின் வந்தான்?”