All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 14

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

நைட் லைஃப் - 14

ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் உடைந்த பாலத்தின் கீழே காவலர்கள் கூட்டமும் பத்திரிக்கையாளர்கள் கூட்டமும் கூடவே பொது மக்கள் கூட்டமும் கூடி இருக்க, அங்கு வறண்டு இருக்கும் ஆற்றில் வீசப்பட்ட சடலத்தை அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இறந்து கிடந்த உடலை பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்க, அங்கு இருந்த சில காவலர்கள் கூட்டத்தை சடலம் அருகே நெருங்க விடாமல் செய்ய, இரண்டு பேர் சடலத்தை சுற்றி ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சங்கர் மேல் இடத்தில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதில் கூறிக் கொண்டு சமாளிக்க முடியாமல் திணறினார். அனைத்து ஊடகத்திலும் இதே செய்தி பரபரப்பாக ஒடிட சங்கர் என்ன ஆனது என்று தீவிரமாய் கண்டு பிடிக்க முயன்றார். 

 

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தவர் விடியற் பொழுதில் இந்த பாலம் பக்கமாய் வந்தார். பாலத்தின் அடியில் பல தவறான நிகழ்வு நடக்கும் என்று அறிந்து இருந்தவர் கீழே பார்க்க வித்தியாசமாய் நான்கு பேர் ஒரு மூட்டை உடன் வந்ததை கண்டதும் உடனே லைட் அடித்து பார்க்க அதில் அந்த நான்கு பேரும் உசாராகினார்கள். பிணத்தை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓட, சங்கர் அவரின் காவல் நிலையத்திற்கு தகவல் கூறி விட்டு உடனே கீழே வந்து பார்த்தார். மூட்டை உள்ளே சடலத்தை கண்டதும் அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

 

சடலத்தின் உடம்பில் ஆறு புல்லட் இருக்க கூடவே கழுத்து அறுபட்ட தடயமும் இருந்தது. இதில் நாக்கு வேறு அறு பட்டு இருப்பதையும் கான முகத்தை சுறுக்கினார். விடியல் பொழுதில் இருட்டாக இருந்ததனால் அந்த நான்கு பேர் எந்த பக்கம் தப்பித்து ஓடினார்கள் என்று அவரால் கவனிக்க முடியவில்லை. 

 

இப்பொழுது ஊரின் கமிஷ்னருக்கும் ஊடகதுறையினருக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அவசர ஊர்தி வர சடலத்தை எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். 

 

வீட்டில் சோபாவில அமர்ந்து இருந்த ராகவ் காப்பி குடித்தபடியே செய்தியை பார்த்துக் கொண்டு இருந்தான். சத்தம் அதிகமாய் வைத்து இருந்ததனால் உள்ளே தூங்கிக் கொண்டு இருந்த மித்திரன் உறக்கம் கெட்டது. எரிச்சல் உடனே மெத்தையில் இருந்து எழுந்து நடு கூடத்திற்கு வந்தவன், “ஏன் டா உனக்கு மட்டும் கேக்குற மாதிரி நியூஸ் வச்சி கேக்க மாட்டியா? இம்சை..” என்று கடுகடுக்க, காப்பியை நிதானமாய் குடித்த ராகவ், “இன்னிக்கு சைபர் டீம் கிட்ட ஆருத்ரா குடுத்த ரிப்போர்ட் பத்தி பேச போனும் கிளம்பு அதான் எழுப்பி விட்டேன்” என சாதாரணமாய் கூறினான். மணி ஏழு தான் ஆனது. ராகவ்வை முறைத்தவன் தொலைகாட்சி பக்கம் என்ன செய்தி என்று பார்க்க திரும்ப கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே நின்றான். 

 

“என்ன.. என்ன நியூஸ்?” என திகைப்புடன் கேட்டவன் ராகவ் பதிலை எதிர் பார்க்காமல் தொலைகாட்சியில் ஓடிய செய்தியை படித்தான். ராகவ் அவனை யோசனையாக பார்த்தான். எதற்காக மித்திரன் இவ்வளவு அதிர்ச்சியில் இருக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை. செய்தியை படிக்க படிக்க மித்திரணுக்கு கோபமாய் வந்தது. கண்கள் சிவக்க கழுத்து நிரம்புகள் புடைக்க பல்லை கடித்துக்கொண்டு நின்றான்.

 

“மித்திரன்” என ராகவ் தயக்கத்துடன் அவனை அழைக்க அதில் நடப்பிற்கு வந்தவன் உடனே அவனின் ஃபோனை எடுத்து யாருக்கோ அழைத்தான். ஃபோன் அணைக்கப்பட்டு இருக்க அவனுக்கு இன்னும் ஆத்திரம் அதிகரித்தது. கோவத்தில் ஃபோனை உடைக்க சென்றவன் கடினப்பட்டு தன்னை கட்டுப்படுத்தினான். அடுத்ததாக வேறு ஒரு எண்ணிற்கு அழைக்க கடைசி ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட்டது.

 

“வாஹ் கைசே கயாப் ஹோ கயா?” (அவன் எப்படி காணாம போனான்?) என்று சீற்றத்துடன் ஹிந்தியில் கேட்டான். அவனுக்கு கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது. அதனை விட எதிர் பக்கத்தில் இருந்த பதிலை கேட்டு இன்னும் கோவம் அடைந்தான்.

 

“அவன் காணாம போனா எனக்கு இன்பார்ம் பண்ணி இருக்கணும் ஏன் யாருமே சொல்லலை?” என அதீத சினத்துடன் கத்தினான். அவனின் பேச்சையும் கோபத்தையும் பார்த்த ராகவ் பேச்சற்று நின்றான். அவனுக்கே இந்த மித்திரன் புதிதாய் இருந்தான். இது வரையிலும் வேலை விடயமாக இருந்தாலும் கூட இவ்வளவு கோபமாய் அவனை பார்த்தது இல்லை. எதையும் நிதானமாய் கையாலுவான். இத்தனை நாள் வரை ராகவ் அவன் தான் மிகப்பெரிய கோபக்காரன் என்று நினைத்திருந்தான். ஆனால் மித்திரன் கோவத்தை கண்டு அந்த எண்ணமே மாறியது. 

 

மேலும் ஹிந்தியில் பேசி திட்டி விட்டு ஃபோனை வைத்தவன் அந்த இடத்திலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். அவனை பார்த்த ராகவ், “உனக்கும் செத்து போன ஆளுக்கும் சம்பந்தம் இருக்கா” என கேட்க, அதில் ‘ம்ம்’ என்பதே உறுமலாக வந்தது. 

 

“யாரு அது?” என தீவிரமாக அவனை பார்த்து கேக்க மித்திரன் அமைதியாய் யோசித்துக் கொண்டு இருந்தான்.

 

“நீ இவ்வளோ கோவப்படுறினா கண்டிப்பா முக்கியமான ஆளா இருப்பான்.. மெயின் அக்கியூஸ்ட்டா?” என்று ராகவ் கேக்க மறுப்பாக தலையை அசைத்த மித்திரன், “மெயின் சாட்சி.. ரொம்ப பெரிய விஷயம்க்கு இவன் தான் கீ.. இன்டர்நேஷனல் லெவல்ல நடக்குற பிரச்சனைக்கு இவன் தான் சின்ன டிரம்ப் கார்டு” என கூற அவனை அதிர்ச்சி உடன் பார்த்தான் ராகவ்.

 

“என்ன கேஸ் அது? ரொம்ப சீரியஸான கேஸ்ஸா?” என்று கேக்க ஆம் என்பது போல் தலை அசைத்தான். 

 

“இந்த பையன் யாரு?” என ராகவ் கேக்க, “அவன் பேரு அஷ்வின். தூத்துக்குடி பையன். இதுக்கு முன்ன நான் ஹேண்டில் பண்ண முக்கியமான கேஸ்க்கு இவன் ஒருத்தன் தான் சாட்சி, ஆதாரம். இவன புடிக்க நான் பட்ட கஸ்ட்டம் எனக்கு தான் தெரியும்” என பல்லை கடித்துக் கொண்டு கூறினான் மித்திரன். 

 

“என்ன மாதிரியான கேஸ்? அவன நீ எங்க வச்சி இருந்த?” என மித்திரன் அருகே வந்து ராகவ் கேக்க, “ஒரு மிஸ்ஸிங் கேஸ், அஸ்ஸாம்ல இருந்தப்போ ஒரே மாதிரி பேட்டன்ல ஆறு பேரு காணாம போனாங்க.. அதுல அஸ்வின் ஒரு ஆளு.. கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா தேடி கடைசியா இவன மட்டும் பங்களாதேஷ்ல புடிச்சோம்.. அவனுக்கு தமிழ் மட்டும் தெரிஞ்சதுனால என் கண்ட்ரோல்ல இருந்தான். அவன வச்சி தான் மத்தவங்களை கண்டு பிடிக்க நினைச்சேன்.. ஆனா இப்போ அவனை கொண்ணுட்டாங்க.. ச்ச” என கோவத்தில் சுவற்றில் ஓங்கி குத்தினான் மித்திரன். 

 

அவன் சொன்னதை கேட்ட ராகவ் இன்னும் யோசனையில் மூழ்கினான். 

 

“நீ மிஸ்ஸிங் கேஸ் ஹேண்டில் பண்ணியா? ஆமா அந்த பையன் எப்படி இங்க வந்தான்?” என அவன் சந்தேகத்தை ராகவ் கேக்க, “அவன் ரொம்ப பயந்து இருந்தான்.. எங்க கிட்ட இருந்து கூட தப்பிக்க பார்த்தான். இது வரை வாயே திறக்கல அவன். அதுவும் இல்லாம கல்கத்தா மினிஸ்டர் ஆளுங்க இவனை கொல்ல டிரை பண்ணாங்க.. இப்போ எனக்கு இங்க வேலை வந்ததால நான் அவனை என்னோட ஊருக்கு எனக்கு நம்பிக்கையான ஆளு கூட அனுப்பி வச்சேன்.. ஆனா.. அந்த ஆளு கோட்ட விட்டான்.. அஷ்வின் காணாம போனத சொல்லவே இல்ல.. அந்த ஆளு குடும்பத்தை வச்சி மிரட்டி இருப்பாங்க அதான் அவனை விட்டாரு..” என்று கோவத்தில் பல்லை கடிக்க, “கல்கத்தா மினிஸ்டர் யார சொல்ற? முகர்ஜி?” என ராகவ் கேக்க அவனை ஆச்சரியமாய் பார்த்தான் மித்திரன்.

 

“உனக்கு எப்படி தெரியும்?” என கேட்க, “இதுக்கு முன்ன நான் ஒரு ட்ரக் கேஸ் தான் ஹேண்டில் பண்ணேன்.. அதுல ட்ரக் அவனோட ஆளுங்க தான் சப்ளை பண்ணாங்க.. அதான் அவனானு சந்தேகத்துல கேட்டேன். அப்போ அவனுக்கும் அஸ்வின்க்கும் சம்பந்தம் இருக்கு” என்று கூற திடீரென்று மித்திரன் சத்தமாய் சிரிக்க அவனை கேள்வியாக பார்த்தான் ராகவ்.

 

“நான் தான் சொன்னேன்ல.. இங்க ஹேக்கிங் நடக்கவே இல்ல.. எல்லாமே பொய்ன்னு.. ஏதோ ஒரு விசயத்தை திசைதிருப்பன்னு நினைச்சேன்.. ஆனா இந்த ஹேக்கிங் நம்மள திசைதிருப்ப தான்னு இப்ப புரியுது.. நமக்கு எதிர்ல இருக்கிறவன் மாஸ்டர் பிளான் பண்ணி இருக்கான்..” என கூறிட ராகவ்வும் அப்பொழுது தான் அதனை உணர்ந்தான்.

 

“மித்திரன் அப்போ நம்ம ரெண்டு பேரும் ஹேண்டில் பண்ண கேஸ் தான் முக்கியமானது.. இதுல மெயின்னா இருக்குறது முகர்ஜி” என கேட்க, “ஆமா, ஆனா அதுல கல்கத்தா மினிஸ்டர் மட்டும் இருப்பான்னு தோணலை.. இதே போல பேட்டன்ல இந்தியா முழுக்க வேறு வேறு ஊருல நடந்து இருக்கு.. நாங்க இதுக்கு முன்ன பெரிய டீம் செட் பண்ணி இந்த கேஸ் தீவிரமா ஹேண்டில் பண்ணோம்.. அப்போ தான் அஸ்வின் கிடைச்சான். அவன வச்சி நாங்க மூவ் பண்ணலாம் நினைக்குறப்போ ஒவ்வொரு ஆபிசர்க்கும் வேற வேற வேலை வந்துச்சு.. டீம் மொத்தமா பிரிச்சிட்டாங்க..” என்று மித்திரன் கூற அதிர்ச்சி உடன் கேட்ட ராகவ், “நினைச்சேன் ஒன்னுமே இல்லாத ஹேக்கிங் கேஸ்க்கு நம்மளை வர சொல்லி இருக்காங்களேன்னு எனக்கு என்னமோ இங்க இருக்குற யாரோ அஷ்வின் கேஸ்ல இன்வால்வ் ஆகி இருப்பாங்களோன்னு தோணுது” என்றான் ராகவ்.

 

“எனக்கு ஹோம் மினிஸ்டர் மேல தான் சந்தேகமா இருக்கு.. அந்த ஆளு தான் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாட்டு ஆபிசர்ஸ் தான் வேணும் சொல்லி நம்மளை இங்க வர வச்சி இருக்கான்.. அஷ்வினை கொண்ணது யாருன்னு தெரிஞ்சா ரெண்டு கேஸ்க்கும் முடிவு கட்டிரலாம்..” என உறுதியாக கூறினான் மித்திரன். அதில் சற்று யோசித்த ராகவ், “அப்போ நம்ம லோக்கல் போலீஸ் கிட்ட பேசணும்.. ஆனா நம்ம இதுல தலையிடுறது தெரிஞ்சா கண்டிப்பா அவங்க உசாராகிடுவாங்க.. சோ நம்ம ஹேக்கிங் கேஸ் பாக்குற மாதிரியே இத அமைதியா பாக்கணும்..” என்றான். இருவரும் எப்படி இதனை கையாளலாம் என்று யோசிக்க மித்திரன் ஃபோன் அடித்தது. ஆரு என்று பெயர் தெரிய காலையில் ஏன் அழைக்கிறாள் என்ற குழப்பத்துடன் அழைப்பை ஏற்றான்.

 

“மித்து முக்கியமான விசயம் பேசணும் மீட் பண்ணலாமா?” என அவசரமாய் கேக்க, ஆழமாய் மூச்சை வெளியிட்ட மித்திரன், “சாரி ஆரு.. நான் கேஸ் விஷயமா வெளிய போனும்” என்றான். 

 

“ஒரு பத்து நிமிசம் மட்டும் பிளீஸ்?? நானும் கேஸ் விஷயமா தான் பேசணும்.. யுகியும் பேசணும் சொன்னா..” என்று கூற குழப்பத்துடன் சம்மதம் கூறினான் மித்திரன்.


   
ReplyQuote

You cannot copy content of this page