About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் -14
கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரம் மகாத்மா காந்தியால் பசுமை நகரம் என அழைக்கபட்டது…கேரளாவின் சிறந்த நகரமாக அறியபடுகிறது இங்கு பரவலாக பேசபடும் மொழி மலையாளம், ஆங்கிலம்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது இங்கு ஒரு பகுதியினர் தமிழ் மக்கள்.. அவர்களுக்கு தான் பைரவ் வம்சம் தலைமையாக இருந்தது…கிட்ட தான் அவர்கள் தான் இங்கு ஆட்சி புரிந்து வந்தார்கள்.
இந்த நகரத்தை அவர்கள் தான் கட்டயெழுப்பியது கோவில், ஸ்கூல்,ஹாஸ்பிட்டல்,சந்தை, வணிக வளாகங்கள் என்று எல்லாம் இவர்கள் வம்சம் தான் உருவாக்கியது.
அப்படிபட்ட இந்த வம்சத்தின் மூத்த வாரிசாக ராஜா ரவிவர்மன் பிறந்தார் அவர் கை பிடித்தவர்… மதுரை ராஜ வம்சத்தின் வாரிசு மீனாட்சி தேவி..
இவர்களுக்கு மூத்தது ரகுநந்தன்,விஜேந்திரன்,அருள்மொழிவர்மன், பல்லவிதேவி, கடைகுட்டி கார்த்தியாயினி தேவி பிறந்தார்கள்…இவர்கள் கை பிடித்ததும் ராஜவம்சத்து ஆண், பெண்களை தான்.
பைரவ் ஹெலிகாப்டர் தரையிறங்க கார்ட்ஸ் எல்லாம் அலர்ட் ஆகிவிட்டனர்…அவன் இறங்கிய பின் முன்னா அவனின் சக்கர நாற்காலியை இறக்கி வைத்தான்…அதில் அவன் அமர்ந்த பிறகு சிவப்பு கம்பள தரையில் வந்தவன் முகம் இறுகி இருந்தது.
அந்த அரண்மனையின் அழகு சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது…வெள்ளை நிற அரண்மனை தான் ஆனால் அங்கே இருப்பவர்கள் உள்ளம் அது போல இருக்குமா? என்பது இது வரைக்கும்… யாருக்குமே தெரியவில்லை என்பதை விட அவர்கள் தெரிந்து கொள்ள விடவில்லை…
பைரவ் அந்த பிரதான வாசலுக்கு வர அவன் முகம் மலர்ந்தது காரணம் யுவராஜின் அன்னையும் தன் பிரியமான அத்தையுமான… கார்த்தியாயினி தேவி கையில் ஆரத்தி தட்டோடு நின்று இருந்தார்.
அவனுக்கு இந்த அரண்மனையில் மட்டுமல்ல உலகத்திலே முதலில் பிடித்தது…கார்த்தியாயினி தான் இருபது வயதில் திருமணம் இருபத்து நான்கு வயதில் விதவை கோலம் தரித்தவர்.
ரவிவர்மனின் கெளரவத்தால் சரியாக விசாரிக்காது ராஜ வம்சம் என்ற காரணத்தால்… பிறப்பிலே இதயநோய் கொண்டவனை மணந்ததால் இந்த கோலம்…
கையில் இரண்டு வயது ஆண் குழந்தையோடு நின்ற தங்கையை… ரகுநந்தன் தான் சம்பிராதாயங்களை உடைத்து இங்கே அழைத்து வந்தது…அதில் அவரோடு அனைவருக்குமே கோபம் ஆனால் வாய் திறந்து சொல்ல முடியாது.
ஏன் என்றால் அடுத்த வாரிசு அவர் தான் ரவிவர்மனுக்கே மூத்த மகனிடம் பேச தயக்கம்…காரணம் அவனும் ,கார்த்திகாவும் தான் அன்பு, பாசம், காருண்யம் என்ற கொள்கையில் வாழ்பவர்கள்…மற்றவர்களுக்கு வழமை போல கெளரவம் தான் முக்கியம்.
கார்த்திகா தன் அருகில் நின்ற தன் பணிபெண்ணிடம் ஆரத்தி தட்டை கொடுக்க…அம்மாயி(அத்தை) என்று குரலை பைரவ் உயர்த்தினான்.
கார்த்திகா “ தேனி( கண்ணா) புரிந்து கொள்ளு டா என் அங்குட்டி(பையன்) நீண்ட காலம் சந்தோஷமாக குடும்பம், குஞ்சு(குழந்தை) என வாழ வேணும்…அம்மாயி( அத்தை) ஆரத்தி சுற்ற கூடாது டா “என்றான்.
பைரவ் “ இப்போ நீ ஆரத்தி சுற்ற போகிறாயா? இல்ல நான் வந்த வழியே போகட்டுமா ? என கேட்டான்.
“பைரவ் உன் சாத்தியத்தால் (பிடிவாதம்) நம்ம சமஸ்தான வழக்கத்தை உன் அச்சன் போல மாற்றி விடாதே என்றார்….அந்த சமஸ்தானத்தின் ராஜா ரவிவர்மன்..அவர் வர அங்கே இருக்கும் அனைவருமே தலை வணங்கினர்கள்.
இந்த வயதிலும் கம்பீரம் குறையாமல் இருந்தார் பட்டு சிவப்பு,தங்கம் நிறம் கலந்த குர்தா, வெள்ளை நிற பைஜாமா…. கழுத்தில் நீண்ட தங்க மாலையில் திருமால் முகம் பதித்த வைர பதக்கம், இடது கையில் தங்க சங்கிலியில் வைர முட்கள் பதித்த கடிகாரம்…
வலது கையில் அவர்களின் பரம்பரை இலட்சினையான திருமாலின் கையில் உள்ள சங்கு சக்கரம் பதித்த காப்பு இடது கையில் வைர பிடி போட்ட கை தடி…பைரவ் அவரை நிமிர்ந்து பார்த்தவன் ஏதும் பேசவில்லை.
அவன் “ அம்மாயி உனக்கு இரண்டு நிமிஷம் தான் டைம் ஆரத்தி நீ எடுக்கிறாயா? இல்ல என இழுக்க…கார்த்திகா தன் அருகில் இருந்த பணிபெண் கையில் உள்ள ஆரத்தி தட்டை வாங்கி பைரவ்க்கு சுற்றி சின்னதாக திலகம் வைத்தார்.
பைரவ் “ அம்மாயி( அத்தை) என் முரிக்கு(ரூம்) போகிறேன் அங்கே எனக்கு பக்ஷணத்தை (சாப்பாடு )... அனுப்பி வை ராஜா ரவிவர்மன் கிட்ட பறயு (சொல்லு )...
இந்த பைரவ் அவர் பிரவஞ்சனத்திற்க்கு (கணிப்பு) அப்பாற்பட்டவன் என்று “என்று… சொல்லி விட்டு போகும் அவனை ரவிவர்மன் கோபம் கலந்த பெருமையுடன் பார்த்தார்.
கார்த்திகா அச்சன்(அப்பா)என மெதுவாக அழைக்க அவளை பேச வேணாம் என கை காட்டி நிறுத்த சொன்னார்.
ரவிவர்மன் “ கார்த்திகா இதற்க்கு காரணம் நீ உன் கிரிஷி (வளர்ப்பு) தான் காரணம்…ஸ்னேகம்(அன்பு) வாசல்யம்( பாசம்) என சொல்லி வளர்த்து…
நம்ம யோகியதாவுக்கு (தகுதி) பொருத்தம் இல்லாத ஜீவிதம்(வாழ்வு)... பைரவ் மட்டுமல்ல உன் மகனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க…
கார்த்தியாயினி இந்த முறை நான் என் உபசாம்ஹாரத்தில் (முடிவு) மாற மாட்டேன் உன் மகன் கிட்ட சொல்லி வை “ என சொல்லி விட்டு போகும் அவரை கார்த்திகா வெறுத்து போய் பார்த்தாள்.
அந்த அரண்மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் இருக்கின்றது…ஐநூறுக்கும் மேற்பட்ட வேலையாட்கள் அது போல… ஐம்பத்திற்க்கும் அதிகமான கார்கள் ராஜபோக வாழ்க்கை என்பது இது தான்.
பைரவ் தன் தளத்திற்க்கு லிப்ட் மூலமாக வந்தான் அவன் தளமே ஒரு குட்டி பங்களா போல தான் இருந்தது…அவன் தளத்திற்க்கு யுவராஜ், கார்த்திகாயினி தவிர அவன் யாரையுமே விட்டது இல்லை.
விதிவிலக்கு மீனாட்சி கணவே கண் கண்ட தெய்வம் என்று சொல்லி வளர்த்தால்…ரவிவர்மாவை அவர் இது வரை எதிர்த்து பேசியது குறைவு….அதை விட அவர் பேசவிட்டது இல்லை.
ஆனால் அவருக்கு மற்ற பிள்ளைங்களை விட நேர்மையாக மட்டுமல்ல மனித நேயத்தோடு வாழும்… ரகுநந்தன் ,கார்த்திகாவை ரொம்ப பிடிக்கும்…அது போல பேரபசங்களில் பைரவ், யுவா அடுத்து அருள்மொழியின் மகளை ரொம்ப பிடிக்கும்.
பைரவ் வெகு நாள் கழித்து தன் தளத்திற்க்கு வந்தவனுக்கு பழைய நினைவுகள் எல்லாம் முட்டி மோதி வந்தது…
அவன் மனதார சிரித்தே அந்த நாட்களில் தான்…இந்த அறை சொல்லும் அவன் வாழ்ந்த வாழ்க்கையை…இப்போ நினைவுகள் மட்டும் தான் இருக்கிறது பைரவ் தன் சக்கர நாற்காலியை தள்ளி கொண்டு… தன் ரூம் கதவில் தன் ஃபிங்கர் பிரிண்ட் அடையாளத்தை வைக்க கதவு திறந்தது…கிட்ட தட்ட மினி சொர்க்கம் தான்.
அவன் வரவேற்பறையை கடந்து தன் படுக்கையறைக்கு போனான்…அதற்க்கு வலது பக்கமாக ஒரு அறை அடுத்து இடது பக்கத்தில் தான் வாஷ்ரூம், டிரசிங் ரூம் இருந்தது…பைரவ் அங்கே சக்கர நாற்காலியை தள்ளி கொண்டு வாஷ் ரூம் போனான்.
கார்த்தியாயினிக்கு தெரியும் இந்த அரண்மனையில் பைரவ் அவள் கையால், அல்லது மீனாட்சி கையால் சமைத்து பரிமாறிய சாப்பாட்டை மட்டும் தான் சாப்பிடுவான் என்று….கிட்ட தட்ட விளையாட்டு மைதானம் போல உள்ள அந்த நவீன சமையலறைக்கு போனாள்.
அங்கே வெள்ளை சட்டை பேண்ட் தலையில் சிவப்பு தொப்பி அணிந்த ஆண்களும்… அது போல வெள்ளை சட்டை முட்டி வரை கறுப்பு ஸ்கர்ட் தலையில் சிவப்பு தொப்பி அணிந்த பெண்களும் வேலை பார்த்து கொண்டு இருந்தனர்….
இவளை கண்டதும் தலை குனிந்து வணக்கம் வைக்க… அதை சின்ன புன்னகையுடன் கார்த்தியாயினி ஏற்று கொண்டாள்.
அந்த அரண்மனையில் வேலை செய்யும் அனைவருக்குமே பிடித்தவர்கள் என்றால் கார்த்தியாயினி, மீனாட்சி தான்...கார்த்திகா வந்தவள் ஓமனா என அழைத்தாள் அங்கே வேலை பார்க்கும் ஆளுங்களை மேற் பார்வை பார்த்து கொண்டு… இருந்த அந்த நடுத்தர வயது பெண் திரும்பினாள்.
திரும்பியவள் முகம் மலர்ந்தது அவள் பெயர் ஓமனகுட்டி அவளுக்கு கார்த்திகா மீது பிரியம் அதிகம் கார்த்திகாவை விட ஐந்து வயது பெரியவள்…
அவள் குடும்பமே இந்த அரண்மனை சமையல் கட்டினை கட்டியாளும் ஆளுங்க…அவர்களின் கை சமையலுக்கு அரண்மனையை அடிமை.
ஓமனகுட்டி “ செர்ண குஞ்சு (தங்கம் குட்டி) நீ இங்கா? நீ விளிச்சிருங்கில் ஞான் வருமாயிருனோ” ( என்னை அழைத்திருக்க நான் வந்து இருப்பேன் தானே) என்றாள்.
கார்த்திகா “ ஓமனகுட்டி ஞான் இந்தனு நின்னை தேடி வருதது!.( ஏன் நான் உன்னை தேடி வர கூடாதா) இதை விட யார் வந்து இருக்கிறாங்க என உனக்கு தெரிமா? பைரவ் வந்து இருக்கிறான் “ என்றாள்.
ஓமனகுட்டி எந்த குருவாயூரப்பா என தன் நெஞ்சில் கை வைத்தவள்…
ஓமனகுட்டி “ எந்த ராசவே வந்தனு” ( என் ராசாவா வந்திருக்கு) என கேட்டாள்.
கார்த்திகா “ ஆமாம் ஓமனா என் மகன் வந்து இருக்கிறான் “ என சொன்னாள்….ஓமனகுட்டி கலங்கிய தன் கண்களை துடைத்தவள்.
ஓமனா “ ஈதோரு செப்பனம்மல்ல ( இது கனவு இல்லை) தானே ராஜகுமாரி…கிட்ட தட்ட ஐந்து வருடம் சின்ன தம்புரான் ஈ கொட்டாரத்திற்க்கு ( அரண்மனைக்கு) வரவில்லை இப்போ வந்து இருக்கு எனக்கு இந்த சந்தோஷத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை” என்றாள்.
கார்த்திகா “எனக்கும் தான் ஓமனா என் புள்ளையை வீடியோ காலில் மட்டும் தான்…பேசி நலன் விசாரித்தேன் ஆனால் நேரில் அவனை தொட்டு தடவி… எந்த கைகொண்டு பக்ஷசணம் கொடுக்கோனுதது போல வருமோ!.( என் கையால் ஊட்டி விடுவது போல வருமா) .
இப்போ அவனுக்காக நானே என் கையால் சமைக்க போகிறேன்…அதற்க்கு தேவையானதை எல்லாம் எடுத்து தா “ என்றாள்.
அப்போது அம்மாடி கார்த்திகாயினி என அழைத்து கொண்டு மீனாட்சி தேவி வந்தாள்…மதுரையை ஆண்ட வம்சத்தின் வழி தோன்றல் ரவி வர்மனை கல்யாணம் பண்ணி இங்கே வரும் போது மலையாளம் தெரியாது.
பிறகு போக போக கற்று கொண்டார்…ஆனால் புள்ளைங்க, பேர புள்ளைங்க கூட அவர் தமிழ் தான் உரையாடுவார்.
மீனாட்சி “ கண்ணு என் பேரன் வந்து இருக்கிறான் என்று உங்க ஐயா சொன்னார்…உண்மையாகவா? ராசாத்தி என கண்கள் கலங்க கேட்டவர் அழகு தெய்வீக அழகாக இருந்ததது.
காஞ்சி பட்டு உடுத்தி வைர நகைகள் மின்ன நெற்றி, வகிட்டில் குங்குமம் துலங்கியது…தன் நீண்ட கூந்தலை கொண்டை போட்டு அதில் மல்லிகை பூ வைத்து இருந்தார்….கார்த்திகா தன் தாயின் கைகளை பற்றி கொண்டவள்.
கார்த்திகா “ என் புள்ள உன் பேரன் வந்து இருக்கிறான் மா…என் பெரிய அண்ணனை பார்ப்பது போல இருந்தது இனி எல்லாம் அவன் மாற்றி விடுவான் மா “ என்றாள்.
மலர் பூக்கும்…
Latest Post: VSV 48 - என்றென்றும் அன்புடன் சந்தனா - Comments Our newest member: Daffy Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page