All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

தேவன் (15)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

அத்தியாயம் 15

 

 

 

இரண்டு வாரங்கள் கடந்தது.. ரேடியோ ஸ்டேஷனுக்கு இசை செல்லவில்லை.. ஆரியன் அடுத்த பக்கம் விஷ்ணு என்று குழப்பிக் கொண்டு இருந்த நாட்கள் அவை..

 

ஆரியன் அலைபேசியில் அழைத்தாலும் அழைப்பை ஏற்காது தவிர்த்தால் இசை.. விஷ்ணுவின் எண் அவள் அலைபேசியில் இருந்தும் அவனுக்கு குறுஞ்செய்தியோ, அலைப்போ எடுக்கவில்லை..

 

மன அழுத்தம் காரணமாக மேகநாதனுடன் ஜுவல்லரிக்கு மட்டும் சென்று வந்தாள் அவள்..

 

விஷ்ணு தேவன் ஜனார்த்தனி மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தான்..அவனின் தமக்கை செல்ல வேண்டிய நாளும் வந்தது..

 

இருக்கையில் அமர்ந்து இருந்த ஜனார்த்தனி அலைபேசியில் மூழ்கி இருக்கும் தம்பியை குறு குறு வென பார்த்துக் கொண்டு இருந்தாள்..

 

அவன் அலைபேசியை பார்த்து முடித்து ஃபேன்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு நிமிர்ந்த வேளையில் தமக்கை தன்னை பார்ப்பதை கண்டவன் “ ஜானு அம்மா ஏன் இப்படி பார்த்துட்டு இருக்க ? ” தலையை அசைத்து கேட்க..

 

“தாடி , மீசையுமா வச்சிட்டு சுத்துனியே இப்ப என்னடான்னா அளவா ட்ரீம் செஞ்சி ஆண் அழகனா மாறிட்ட..க்கூம் உள்ள அதான் ப்பா மனசுக்குள்ள எதையும் வைச்சி இருக்கீயா?” வேண்டும் என்றே வாயை பிடிங்கி தெரிந்து கொள்வதற்காகவே கேட்டாள்..

 

“வைச்சி இருக்கேன் ஜானு..அதை இன்னும் நடைமுறைல செயல்படுத்தாம இருக்கேன் அவ்ளோ தான்...”

 

“ஓஹோ! ஆரியன் கூட முட்டி மோத ஐடியா கிரியேட் பண்ணி வைச்சி இருக்கியா என்ன ? ” அவனின் எண்ண போக்கை அறிந்து அவள் கேட்க..

 

“அவன் கூட மோதி பார்க்கலாம்னு நினைக்கிறேன் பட் ஹ்ர்ம் இசைக்கு எந்தவொரு சேதாரமும் ஆகம இருக்கணும்” என்றான்..

 

“இசையா? அன்றொரு நாள் ஹோட்டல்ல உன் பக்கத்துல நின்னுட்டு இருந்தாளே அந்த பொண்ணா? அவளையா சொல்ற ? ” அவள் வினவ..

 

“ம்..அவளே தான் ஷீ இஸ் லவ் மீ அண்ட்..”:பாதியில் சொல்லாது அவன் நிறுத்த..“ நீயும் பண்றேன்னு சொல்லு ஆனா அந்த பொண்ணு பாவம் டா எதுவாக இருந்தாலும் யோசிச்சி அதுக்கான முதல் அடி எடுத்து  வை தேவா.." எந்தவொரு பிரச்சினையும் வரக் கூடாது என்பதற்காக சொன்னாள்..

 

“சரி ஜானு உங்களுக்கான ஃப்ளைட் வந்துட்டு”  ஒலிபெருக்கியில் விமான தரை இறங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது..

 

“சரிடா விஷ்ணு எதுனாலும் எனக்கு கால் பண்ணு சீக்கிரம் கல்யாண செய்தியையும் சொல்லிடுடா உனக்குன்னு ஒரு துணை கண்டிப்பா இருக்கணும்.. ” என்றாள்..

 

“இருக்கணும்னு நீ சொல்ற ஜானு பட்..” தோளை குலுக்கி இரண்டு கைகளையும் விரித்தான்..

 

அவனின் தோளில் அடித்து “போடா..யாது வா ”  அவன் கையில் இருந்த குழந்தையை அழைக்க..அவனோ மாமனின் கழுத்தை சுற்றி கட்டிக் கொண்டு “வர மாத்தேன்” என்றான்..

 

“யாது குட்டி அம்மா கூட போவீங்களாம் அப்ப தானே அப்பா ஐஸ்கிரீம் சாக்லேட் எல்லாம் வாங்கி தருவாறு..” என்க..பாவமாய் முகத்தை பார்த்துவிட்டு தாயிடம் சென்றான்..

 

அவனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு மற்ற இருவருக்கும் அவர்கள் உயரத்திற்கு குனிந்தான்..

 

யாமினி , யுவிதா இருவரும் அவனை அணைத்துக் கொண்டனர்..“ மிஸ் யூ மாமா ” யாமினி சொல்ல..“ லவ் யூ மாமா..வளர்ந்ததுக்கு அப்புறம் உன்னை வந்து மேரேஜ் பண்றேன்..” கன்னக்குழி விழ , அழகாக சிரித்து ஒற்றை கண்சிமிட்டி கூறினாள் யுவிதா..

 

“ஆங்” யாமினி வாயில் கைவைக்க ஜானார்த்தனி சிரித்தாள்.. விஷ்ணு தேவன் அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தான்..

 

“நீ வளர்ந்து வர்றதுக்குள்ள உனக்கு ஒரு அத்தை வந்துடுவாங்க டா மாமா கிழவனா போயிடுவேன்” என்று சொல்ல , “இது ரொம்ப முக்கியம் போ டா..ஃப்ளைட்க்கு டைம் ஆச்சி..தேவா கிளம்புறேன் டா ” லேசாக அணைத்து தம்பியிடம் விடைபெற்று சென்றனர் குட்டி குடும்பத்தினர்..

 

அவர்களுக்கு கை அசைத்து விட்டு, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து காரில் அமர்ந்து கொண்டான்..

 

அவன் அலைபேசியை எடுத்து பார்த்தவனுக்கு இசையின் நினைவுகளே அதிகமாக ஆக்கிரமித்தது என்றே கூறலாம்..

 

இசைக்கு கால் பண்ணி பார்க்கலாமா? என்று யோசித்து அழைப்பு விடுத்தான்..

 

அவன் அழைப்பினை கண்டு அவள் ஏற்கவில்லை..‘ இன்னிக்கி அப்பா கிட்ட பேசியே ஆகணும் ’ என்று முடிவோடு இருந்தாள்..

 

அலைபேசி அடித்து ஓய்ந்து போனது..அதன் பின் அவன் அழைக்கவில்லை..

 

‘ கால் ஏன் அட்டெண்ட் பண்ண மாடேங்குறா? ப்ராப்ளமா இருக்குமோ? ’ என்று நினைத்தவனுக்கு அவள் அழைப்பை ஏற்காததற்கு மனதில் சூழ்ந்தது ஓர் படபடத்த நிலை..

 

“ இசைய மீட் பண்ணீயே ஆகணும் ” என்று நினைத்தவனுக்கு அது முடியாமல் போகும் என்பதை எப்படி அறிவான் அவன்..

 

இரவு வந்ததும் தெரியவில்லை..இமாயா இசை தந்தையிடம் பேசுவாள் என்று நினைத்திருக்க.. அவளின் அமைதி அவளுக்கு சந்தேகத்தை வரவழைத்து..

 

அவளிடம் கேட்கலாம் என்று நினைத்திருக்க மேகநாதன் இரவு நேரத்துடன் வீடு வந்து சேர்ந்த போது இலக்கியா , இனியா இருவரும் தத்தமது கணவர்கள் பிள்ளைகளுடன் வந்து இறங்கினர்..

 

“ சித்தி ” என்று கத்திக் கொண்டே வாண்டுகள் வீட்டிற்குள் ஓடி வந்தார்கள்..

 

இமாயா, இசைகவிக்கு இருவருக்கும் படக்கென்று இருக்க , வெளியே வந்து இருவரும் மாடியில் எட்டி பார்த்தவர்களுக்கு “ இசை நம்ம நிம்மதிய கெடுக்கவே வந்துட்டாங்க டா..” அவளைப் பார்த்து சிரித்து வைத்தாள்..

 

“ அப்பா கிட்ட நீ ஏன் ஆரியனை பத்தி பேசல்ல இசை ? ” என்று அவள் கேட்க..“ ப்ரோக்ராம் பண்ண கூட நீ போகல என்ன ஆச்சி உனக்கு? ” இசையின் முக பாவனை வைத்து அவளால் கணிக்க கூட முடியவில்லை..

 

“ இன்னிக்கு பேசுறேன் டி..குழப்பமா இருந்துச்சு சட்டுன்னு முடிவு எடுக்க முடியாது இல்லையா ? அதான் டூ டேஸ் டைம் எடுத்தேன் டி..இனியா , இலக்கியா வந்ததுக்கு பரவாயில்ல..அவங்க முன்னாடியே பேசிடனும் " என்றாள்..

 

“ முடிவெடுத்துட்ட பேசிட்டா உன் மனசுக்கு ரிலீப் ஆஹ் இருக்கும் இசை.." 

 

“ ம்ம்..” என்றாள்..

 

வினோதினி தன் மகள்களை கண்டதும் “ இலக்கியா , இனியா வாங்க , இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சிதா..” அவரின் பேரப் பிள்ளைகளை கொஞ்சிக் கொண்டார்..

 

“ அவருக்கு பிஸ்னஸ் முக்கியம் அம்மா அதுனால தான் இவ்ளோ நாளாக வீட்டு பக்கமே வர கிடைக்கல்ல..” என்றாள்..

 

இனியாவும் “ அக்காக்கு எப்படியோ அது போலத்தான் அம்மா எனக்கும்..” என்றாள் அவள்..

 

“ சரி வந்ததும் சந்தோஷம் டி..இருங்க நைட் டின்னர் செஞ்சிட்டு வந்துர்றேன்..” என்றார்..

 

“ சரி அம்மா ” என்றனர் இருவரும்..

 

இமாயா “ நைட் டின்னர் செய்ய பாரு நம்மல தான் அம்மா கூப்பிட போறா..” அவள் சொல்லி முடித்ததும் “ கவி , இமாயா ரெண்டு பேரும் கிச்சனுக்கு வாங்க..” சத்தமாக அழைத்தார்..

 

“ சொன்னேன்ல ” ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி சொன்னாள்..இசை மெல்ல சிரித்தாள்..

 

 

குடும்பத்தினர் அனைவரும் உணவு மேசையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தபோது 

 

“ இசை எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லணும் அதுவும் ஆரியன் பத்தி..” என்றாள்..

 

“ஆரியன் பத்தியா ஏதும் பிரச்சினை ம்மா..” வினோதினி கலக்கத்துடன் கேட்டார்..

 

“அப்படின்னு சொல்ல முடியாது பட் ஆரியனை மேரேஜ் பண்ணிக்க எனக்கு இஷ்டம் இல்ல..” திடீர் என்று மகளின் வாயால் வந்ததை கேட்டவர் திகைத்து விட்டார் என்றால் வினோதினி இலக்கியா இனியா அதிர்ச்சியும் குழப்பமும் அவர்களுக்கு,

 

“ஆரியனை மேரேஜ் பண்ணிக்க முடியாது என்ன காரணம் இசை..” வினோதினி கேட்டார்..

 

“ சாப்பிடுற நேரத்துல பேச வேண்டிய விஷயமா இது? ” என்று திடுக்கிட்டு கேட்டார் வினோதினி, தனது கோபத்தை அடக்க முடியாமல்..

 

“அதானே சொன்னேன்ல, நான் ஆரியனை மேரேஜ் பண்ணிக்க முடியாது.. நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன் ” என்று அழுத்தமாகத் திரும்ப சொன்னாள் இசை..

 

“இசை, நீ சொல்றது நியாயமா? ஆரியன் நல்ல பையன்..நீ இப்படி பேசுறது சரியில்ல!” என்றார் வினோதினி, குரல் உறுதியுடன் வந்தது..

 

“ஆரியனை மறுக்க நியாயமான காரணம் இருந்தா சொல்லு இசை ? நீ சொல்றதை கேட்குறோம் ” என்று சிம்ம குரலில் கேட்டார் மேகநாதன்.. 

 

இசை தனது விழிகளை கீழே நோக்கி சற்றே தயங்கினாள். “அப்பா... நீங்க கேட்டுடீங்க.. நான் உண்மையைச் சொல்லிடறேன்..நான்...” என்றாள்..

 

“ விஷ்ணுவை லவ் பண்றேன்..” சபையில் சொல்லி விட்டாள்..என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள்..

 

“ இசை ! விஷ்ணுவை விரும்பறன்னு சொல்ற நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்..” சினத்துடன் சொன்னார் அவர்..

 

“ ஏன் அப்பா ? ” அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது..

 

"இசை! விஷ்ணுவை விரும்பறன்னு சொல்ற நீ என்னை கேட்காம இப்படி முடிவெடுக்க முடியாது. நான் இதற்கு ஒத்துக்க மாட்டேன்," என்று கடுப்புடன் சொன்னார் மேகநாதன், குரலில் திடீரென உயர்ந்த கோபத்துடன்..

 

“விஷ்ணு நல்லவர் தானே அப்பா ? நான் அவரை காதலிக்க கூடாதா?” என்று திணறிய குரலில் கேட்டாள் இசை..

 

"அவரை மேரேஜ் பண்ணிக்க ஒரு நியாயமான காரணமும் இல்ல... அவர் குடும்பம் பத்தி தெரியுமா உனக்கு?அவர்ட வாழ்க்கை முறையும் உன் வாழ்க்கைக்கும் ஒத்துப் போகாது.. நான் சொல்றதை கேளு இசை.. ” கட்டளையுடன் சொன்னார்..

 

“ ஆனா அப்பா, அவர் நல்லவரு. எனக்கு அவர் பிடிச்சிருக்கு.. அவர் ஒரு நியாயமான, பொறுப்பான மனுஷன் அப்பா.." என்று தைரியத்துடன் பதிலளித்தாள் இசை, தன் மனதில் உள்ள உண்மையை மறைக்காமல்...

 

"நீ அவரை விரும்பி இருக்கலாம்..ஆனா வாழ்க்கை அதுவே முழுமை இல்லை..விஷ்ணு உனக்கு சரியான வாழ்க்கைத் துணையா இருக்க முடியாது!" என்று உறுதியுடன் கூறினார்..

 

"அது நான் முடிவு செய்ற விஷயம்தானே, அப்பா?" என்று மெதுவாக கேட்டாள்..

 

விருட்டென்று நாற்காலியை தள்ளினார்..அதிலே அவர் கோபம் தெரிந்தது..அவர் பேச்சினை மதிக்கவில்லை என்பது..

 

“ என்னை மீறி உன்னால என்ன செஞ்சிட முடியும்னு பாக்குறேன்..” என்று கூறி முறைத்து விட்டு பாதி உணவுடன் அவர் சென்றார்..

 

வினோதினியால் என்ன செய்து விட முடியும்.. அவருக்கு மகளின் விருப்பமே முதன்மையாகப் பட்டது..

 

இமாயா, இசையின் கரத்தினை ஆறுதலாக பற்றிக் கொண்டாள் அவளுக்கு பக்கபலமாக இருப்பது போன்று..

 

கல

ங்கிய விழிகளை இமை தட்டி உள் இழுத்துக் கொண்டாள்..

 

அதற்கு பிறகு வந்த நாட்களில் அவளை வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை மேகநாதன்..

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
 

@vsv4 ஹவுஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க போல. பாவம். நீ கவலப்படாத உன்ன தேவன் வந்து கூட்டீட்டு போவான். 

 

சூப்பர் தேவிசை சிஸ்..👌👌👌


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

@vsv11 correct விழி சிஸ் மிக்க நன்றி மா 🥰🥰🥰❤️❤️❤️❤️


   
ReplyQuote

You cannot copy content of this page