All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள் 9

 

VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்
(@vsv6)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 9 

 

துகிலன் சொன்ன வார்த்தையில் துடிதுடித்து விட்டாள் சாரதா.. 

 

“ஏனுங்க மாமா இப்படி பேசுறீக?.. அவுக அப்பாவும் உங்க அப்பாவும் ஒன்னுதானே மாமா.. நீங்களும் அவுகளும் அண்ணன், தம்பி தானே மாமா” என்ற சாரதாவை எரிச்சலுடன் பார்த்தான் துகிலன்.. அவள் சொன்ன வார்த்தையையே அவனால் ஜீரணிக்க முடியவில்லை. 

 

“யாருக்கு யாருடி அண்ணன்?.. என் தம்பின்னா அது அவிரன் மட்டும்தான்” என கர்ஜித்தவனின் கோபமா, கரையை தாண்டி சீற்றலையாக மேலே எழும்ப ஆரம்பித்தது.. 

 

“நீங்க என்னதான் மறுத்தாலும் அவுகதான் மாமா இந்த ஜமீனோட மூத்த வாரிசு.. மாமாவை அப்பான்னு முதல் முதலா கூப்பிட்டவுகளும் அவுக தான் மாமா” என்றவளை அடிக்கவே கை ஓங்கிவிட்டான் துகிலன்.. 

 

எங்கே தன்னை அடித்து விடுவானோ? என கண்களை இறுக்கமாக மூடியிருந்த சாரதாவின் விழிகளில் தெரிந்த பயத்தில் சட்டென்று தன் கைகளை முறுக்கி கையை கீழே இறக்கிவிட்டான்.

 

“இங்கே பாரு சாரதா.. முன்னாடியாவது நீ என் மாமாப் பொண்ணுங்கிற பாசம் இருந்தது.. ஆனா எப்போ இவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீயோ?.. அப்பவே உன் மேல இருந்த பந்தபாசம் எல்லாம் அத்துப் போச்சி” என்றவனை கண்கள் கலங்க பார்த்தாள் சாரதா.. 

 

“ஏன் மாமா இப்படி பேசுறீக? நான் தானே இந்தக் குடும்பத்தோட மூத்த மருமக” என்றவளை எரிக்கும் பார்வையில் முறைத்தான் துகிலன்.. 

 

“இல்லை சாரதா இந்த ஜமீனுக்கு மூத்த வாரிசுன்னா அது நான் மட்டுந்தான்.. என்னோட மனைவி மட்டும்தான் மூத்த மருமக.. கண்டவளுக்கு பிறந்தவன் எல்லாம் ஜமீன் அந்தஸ்து பெற முடியாது” என்றவனின் சட்டையை கொத்தாக பற்றியிருந்தான் திம்மரசன்.. 

 

“யாரைடா கண்டவன்னு சொல்லுற?.. எங்கம்மா தான் இந்த ஜமீனோட முதலாளி.. நான்தான் இந்த ஜமீனோட மூத்த வாரிசு?” என்றவனைக் கண்டு இடிவிழுந்தாற் போன்று சிரித்தான் துகிலன்.. 

 

“யாரு உங்கம்மா இந்த ஜமீனோட முதலாளியா?.. நீ அந்த ஜமீனோட வாரிசு..” என கேட்டவனின் உதட்டில் கேலிப் புன்னகை.. அந்தப் புன்னகையில் வஞ்சமும், வன்மமும் கலந்தே இருந்தது.. 

 

அவனின் புன்னகையை பார்த்த திம்மரசனிற்கோ பற்றிக் கொண்டு வந்தது.. எதிரில் கோபப்பட்டால் அவனின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளலாம்.. ஆனால் சிரித்தால் உணர்வுகளை எளிதில் புரிந்துக் கொள்ள முடியாதே..

 

“ஆமாடா நான் தான் இந்த ஜமீனோட முதல் வாரிசு.. உங்க அம்மாவுக்கு முதல்ல புள்ளையை பெத்துக் கொடுக்க வக்கில்லையே என்ற திம்மரசனின் சட்டையை கொத்தாக பற்றினான் துகிலன்.. 

 

“எங்கம்மாவை பத்தி பேசினா உன்னை இங்கேயே கொன்னுப் போட்டுருவேன் ஜாக்கிரதை.. வாரிசு வாரிசுன்னு நீ சொல்லிட்டா நீ வாரிசாகிட முடியுமா?.. கோர்ட்லேயே நான்தான் வாரிசுன்னு சொல்லிட்டாங்க.. இதைவிட வேற என்னடா வேணும்..” என்றவனின் முகமோ கோபத்தில் செந்தணலை அள்ளிக் கொட்டினாற் போன்று கொதித்தது.. 

 

“நான் சொல்லணும் டா.. என் வாரிசு யாருன்னு.. அது திம்மரசன் தான்” என்ற கம்பீரக்குரலில் ஒட்டுமொத்தக் கூட்டமும் திரும்பி ஜாக்குவாரில் இருந்து இறங்கியவரை தான் பார்த்தது.. 

 

கண்களில் திமிரும், ஏளனமும் கலந்து வந்துக் கொண்டிருந்தார் வானவராயன்.. அவர் கண்களில் அப்படியொரு திமிர். நடையில் ஒரு கம்பீரம், வழி வழியாக வந்த கம்பீரமோ இது?. என்பதை போல் நடந்து வந்தவரின் பார்வை தன் எதிரில் சிறிதும் அஞ்சா சிங்கமாக நெஞ்சை நிமிர்த்தி நின்ற துகிலனின் மேல் அழுத்தமாக படிந்தது.. 

 

“பரவாயில்லை துகிலா.. அப்படியே என்னைப் பார்க்கிற மாதிரியே இருக்கு” என துகிலனின் தோளின் மேல் கை வைத்ததும் தான் தாமதம், கோபத்தில் சட்டென்று அவரின் கையை தட்டி விட்டான்.. 

 

அவன் தன் கையை தட்டிவிட்டதில் சட்டென்று கோபம் தோன்றினாலும், அந்தக் கோபத்தையும் தனக்குள் வைத்துக் கொண்டே, எதிரில் நின்றிருந்த துகிலனை பார்த்து சிரித்தவர், 

 

“என்ன துகிலா.. பார்க்கிறதுக்கு மட்டுமில்லை.. கோபம் கூட என்னை மாதிரியே இருக்கு” என்றவரின் பார்வை அங்கிருந்த அருவியின் மேல் தான் அழுத்தமாக விழுந்தது.. 

 

நேற்று முழுவதும் வருண் பற்ற வைத்த நெருப்புத் தீ. இவர்கள் காதையும் வந்தடைந்திருந்தது.. அதை கேள்விப்பட்ட வானவராயனுக்கோ பற்றிக்கொண்டு வந்தது.. 

 

தன் மகன் சாதாரண ஒரு பெண்ணை விரும்புகிறானா?.. இந்த ஜமீன் குடும்பத்துக்கு கேவலம் ஒரு வேலைக்காரி தான் மருமகளா? என நினைக்கும் பொழுதே ஆத்திரமும் கோபமும் சேர்ந்தே வந்தது.. சண்டையிடுதற்காகவே திம்மரசனையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். அருவியைக் கைது செய்ய கட்டளையிட்டதும் அவர்தான்.. 

 

அவளைப் பார்த்துக் கொண்டே திரும்பி திம்மரசனை பார்க்க, அவனும் ‘ம்ம்’ எனும் விதமாய் தலையாட்டிட, அவரின் பார்வையோ இப்பொழுது கோபத்துடன் அருவியின் மேல் படிந்தது.. 

 

“நீதான் அருவியா?” என்றவர் அருவியின் அருகில் செல்ல,, சட்டென்று அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டான் துகிலன்.. 

 

அவரின் நிழல் கூட அவளின் மேல் படிவதை அவன் விரும்பவில்லை.. 

 

“உங்களுக்கு என்ன பேசணும்னாலும் என்கிட்ட பேசுங்க.. உங்களுக்கான பதில் என்கிட்ட தான் இருக்கு.. அவக்கிட்ட இல்லை” என்றவனின் அழுத்தமான குரலில், வானவராயனின் புருவங்கள் இடுங்கியது.. 

 

இவள் இவ்வளவு காதலா? என நினைத்தவருக்கு, கட்டுக்கடங்காமல் கோபம் தான் வந்தது.. 

 

“ஏன்டா போயும் போயும் இவ மேலையா உனக்கு ஆசை வரணும்?.. நம்ம வீட்டுல வேலைக்காரியா வர்றதுக்குக்கூட இவளுக்கு தகுதி இல்லை” என்ற வானவராயனை தன் கண்களாலேயே சுட்டெரித்தான் துகிலன்.. 

 

“இந்தா பெரிய மனுசா கொஞ்சம் நிறுத்துறீயா?” என்ற செவ்வந்தியின் கனத்த தொண்டையில் ஒட்டுமொத்தக் கூட்டமும் அவரை தான் பார்த்தது.. 

 

அவர் கத்திய கத்தலில் முகத்தை சுழித்தனர் வானவராயனும், திம்மரசனும்.. பின்னே பிள்ளைகளிடம் கத்துவதைப் போல் அவர் சத்தம் போட, கூட்டம் மொத்தமும், “யாருடா இந்த ஸ்பீக்கர்” என்பதை போல் தான் பார்த்தது.. 

 

“யாருடா இந்த பொம்பளை?” என்ற வானவராயனின் காதில் மெல்ல திம்மரசன், ‘அவளோட அம்மா’ என்றதும் முகத்தை கோணிக்கொண்டார் வானவராயன்.

 

“இந்த ரோட்டுல போற பிச்சைக்காரங்க மேலேயாடா இவனுக்கு ஆசை வரணும்?” என்ற வானவராயை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தான் துகிலன்.. அவர்கள் பேசியது அவனுக்கும் கேட்கத்தானே செய்தது.. 

 

“வார்த்தையை அளந்து பேசச் சொல்லு சாரதா.. அவளைப் பத்தி ஏதாவது பேசினா இங்கே நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை” என்றவனின் கோபம் இன்னும் அடங்க மறுத்தது.. 

 

“அப்படித்தான் டா பேசுவாங்க.. ஹூம்.. இந்த மாதிரி ஒரு பிச்சைக்காரி மேல ஆசைப்பட்டா.. நான் யாரைக் கல்யாணம் பண்ணியிருக்கிறேன் பார்த்தீயா?.. ஜமீன் குடும்பத்து பொண்ணு” என சிரித்துக் கொண்டே சாரதாவின் மேல் கைப்போட, அவனைப் பார்த்த துகிலனின் இதழ்கள் கேலியாக வளைந்தது.. 

 

“நீ எப்படி கல்யாணம் பண்ணினன்னு எனக்கு தெரியாதா?.. என்ற துகிலனை பதிலுக்கு பதில் முறைத்தான் திம்மரசன். 

 

துகிலனை கேவலப்படுத்த வேண்டும். ஊர் முன்னால் அவன் அவமானப்பட வேண்டுமென்று நினைத்தவனின் பார்வை அருவியின் மேல் தான் ஏளனமாக விழுந்தது.. 

 

அவளைப் பார்த்துக் கொண்டே, “நானாவது அழகான பொண்ணை, தேவதை மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டேன்.. உன்னை மாதிரியா இப்படி அட்டகருப்பியை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டேன்.” என்றவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்த அருவியில் கண்களில் கண்ணீர் வழிந்தது.. 

 

அவள் கருப்பு தான்.. பல பேர் அவளின் நிறத்தை வைத்துக் கிண்டல் பண்ணியிருக்கிறார்கள், அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.. 

 

அதையெல்லாம் மனதோடு பாரமாய் சுமந்தவளுக்கு, இப்பொழுது திம்மரசனின் வார்த்தை உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக மரிக்க வைத்தது. குனிந்த தலை நிமிராமல் சலனமற்று நின்றவளை தான் துகிலனும் பார்த்துக் கொண்டிருந்தான்..  

 

“ஏன்டா இவ முகத்துல என்ன இருக்குன்னு? இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருக்க?.. இவ முகத்தை பார்த்தா கிஸ் பண்ணக்கூட தோணாது” என நக்கலாக சிரித்துக் கொண்டவனின் வார்த்தையில் உடைந்து விட்டாள் அருவி.. 

 

அவன் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் அருவியின் இதயத்தை கூர்ஈட்டியால் துளைத்தது போன்று வலிக்க ஆரம்பித்தது.. 

 

“என்னடா சொன்ன?” என்ற திம்மரசனை ஓங்கி அறைந்தது என்னவோ செவ்வந்தி தான்.. 

 

“உனக்கு என் பொண்ணு அவ்வளவு இளப்பமா போயிட்டாளா?.. உங்களை மாதிரி வெள்ளைத்தோலோட மனசு முழுக்க அழுக்கை வச்சிக்கிட்டு சுத்துறவ அவக்கிடையாது.. எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு” என கேட்கும் பொழுதே செவ்வந்தியின் குரல் தழுதழுத்தது.. 

 

“ஓஹோ.. அப்போ உன் பொண்ணு ரொம்ப நல்லவன்னு சொல்லப் போறீயா?” என திமிராக கேட்டார் வானவராயன்.. 

 

“ஆமா எம் பொண்ணு நல்லவ தான்யா... இங்கேயிருக்கிற எல்லாரையும் விட அவ நல்லவ தான்..” என்ற செவ்வந்தியின் பார்வை வானவராயனின் மேல் அழுத்தமாக பதிந்தது.. 

 

அவரின் பார்வையை பார்த்த வானவராயனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. சாதாரண வேலைக்காரி தன்னை எதிர்த்து நிற்பதா? என நினைத்தார். 

 

“திம்மரசா?.. இந்தப் பொண்ணை அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்குள்ள போடு.. அதுவும் பிராத்தல் கேஸ்ல” என்றவரின் வார்த்தையில் திகைத்து விட்டார் செவ்வந்தி.. 

 

“இங்கே பாரு பொய் கேஸ் போட்ட?” என எச்சரித்த செவ்வந்தியின் தலையை பிடித்து ஓங்கி தரையில் தள்ளிவிட்டான் திம்மரசன்.. சட்டென்று அவரை ஓடிச்சென்று தூக்கிவிட்டான் துகிலன்.. 

 

“உங்களுக்கு ஒன்னுமில்லை ல்ல” என்ற துகிலனை அப்பொழுது தான் பார்த்தார் செவ்வந்தி.. 

 

“இவனுக்கா தன் பெண்ணின் மீது காதல் வர வேண்டும்?” என நினைத்தவரின் பார்வை அப்படியே அருவியின் மேல் படிந்தது.. 

 

“எங்கப்பாவையே எதிர்த்து பேசுற அளவுக்கு திமிரா? அம்மா பொண்ணு ரெண்டு பேரையும் ஸ்டேஷன்ல உட்கார வச்சிருவேன்” 

 

“அம்மாஆஆஆ” என்றழைத்தபடி செவ்வந்தியின் அருகில் செல்ல முயன்ற அருவியின் தலையை கொத்தாக பிடிப்பதற்குள், சட்டென்று அவன் கையை பற்றிக் கொண்டான் துகிலன்.. 

 

“நான் மறுபடியும் சொல்றேன் திம்மா.. அவக்கிட்டயிருந்து தள்ளியே இரு..” என்றவனை கோணல் சிரிப்புடன் பார்த்தவன், 

 

“தள்ளியே இருக்கணுமா?.. இருந்துட்டாப் போச்சி” என்றவனின் கைகள் மறுபடியும் அருவியை தொடச் சென்றது தான் தாமதம், அவன் நெஞ்சில் கை வைத்து ஓங்கி தள்ளியிருந்தான் துகிலன்.. 

 

“சொல்லிக்கிட்டே இருக்கேன்.. மறுபடி மறுபடியும் அவ மேலேயே கை வைக்கீற?” என சீற்றமாக பொங்கியெழ, 

 

“நீ என்ன அவ புருஷனா?.. இல்லைல்ல அப்புறம் ஏன்டா அவளை தொட்டா உனக்கு வலிக்குது” என சொல்லி முடிப்பதற்குள், 

 

“அவன்தான் அவளோட புருஷன்” என்ற குரலில் வானவராயன் வேகமாக திரும்பிப் பார்க்க, அங்கு சிறிதும் கம்பீரம் மாறாமல் நின்றுக் கொண்டிருந்தார் சகுந்தலா.. 

 

அவர் யாரைப் பார்க்கவே கூடாது என நினைத்தாரோ?. அவருக்கு எதிராகவே நிற்க வேண்டிய நிலை உருவாகி விட்டதே சகுந்தலாவிற்கு.. 

 

“என்ன சகுந்தலா பேசிட்டு இருக்க?.. உனக்கும் எனக்கும் ஒன்னுமில்லை ஆனாலும், அவன் என் பையன்.. போயும் போயும் இவளைப் போய் ஜமீனோட மருமகன்னு சொல்லிட்டு இருக்க?” என்றவருக்கு ஆத்திரமும், கோபமும் அருவியின் மேல் தான் திரும்பியது.. 

 

எல்லாரையும் மயக்கி தன் வலைக்குள் போட்டுக் கொண்டாளே என்ற ஆத்திரம் தான் எழுந்தது.. 

 

அப்படியென்ன பேரழகி இவள்?.. தன் மகனின் படிப்பிற்கும், அழகிற்கும் ஈடாகி வருவாளா?.. அவனின் கலர் என்ன? இவளின் கலர் என்ன? என நினைக்கும் பொழுதே அவரின் முகம் அஷ்டகோணலாக மாற ஆரம்பித்தது.. 

 

இவள் துகிலனை திருமணம் செய்தால் மூத்த மருமகள் என்ற அந்தஸ்து அவளை தான் சேரும்.. அது மட்டும் நடந்தால் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது.. இப்பொழுது சத்திரியனாய் இருப்பதை விட சாணக்கியத் தனமாய் சிந்திப்பது தான் மேல் என நினைத்தார்.. 

 

“சகுந்தலா நீ புரிஞ்சிது தான் பேசுறீயா?.. இவளை எல்லாம் ஜமீனுக்குள்ள அழைச்சிட்டுப் போறதை நினைச்சிப் பாரு.. அசிங்கமா இருக்காது.. நம்ம பையன் நிறம் என்ன? இவளோட நிறம்” என்றவர் அருவியை பார்த்து காணாததை கண்டதை போல் முகத்தை சுழித்தார்.. 

 

“இங்கே பாரு சகுந்தலா.. மூத்த மருமகன்னா சர்வ லட்சணமும் பொருந்தியிருக்கணும்.. நம்ம சாரதாவை பாரு.. எவ்வளவு அழகா இருக்கா.. அவளோட முகத்தைப் பார்த்துட்டு போனா போதும்.. நாம நினைக்கிறது எல்லாம் நடக்கும்.. ஆனா இவ முகத்தை பார்த்துட்டுப் போனா, போற காரியம் கூட விளங்காது” என்றவரின் வார்த்தையில் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தாள் அருவி..  

 

அழகு தான் ஒருவரை தீர்மானிக்குமா?.. குணம் இல்லையா?.. அது மனிதனுக்கு தேவையே இல்லையா?.. அழகா இருந்தால் அவர்களை வானத்தில் இறங்கிவந்தவர்களைப் போல் நடத்துவதும்.. அழகில்லை என்றால் அவர்கள் சாக்கடைப் புழுவாய் நினைப்பது மனிதனின் அறுவெறுக்கத்தக்க குணத்தை தான் காட்டுகிறது.. 

 

அழகு என்பது மனதில் இருந்து வெளிப்படும் ஒருவரின் குணம்.. அதுவே நல்லா இல்லையென்றால் அவர்கள் பேரழகாக இருந்தாலும், ஒன்றுமில்லாததற்கு தான் சமம்.. 

 

அடுத்தவர்கள் வாழக்கூடாது என நினைப்பவர்கள் அழகா?.. அடுத்தவர்கள் சிரிப்பில் தன் சிரிப்பை உணர்பவர்கள் அழகா?.. கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது அருவிக்கு.. 

 

“சகுந்தலா திம்மா சொன்ன மாதிரி அந்தப் பொண்ணு பக்கத்துல போனாலே ஏதோ ஸ்மெல்” என்றவரை தீர்க்கமாக பார்த்த சகுந்தலா அருவியை தான் பார்த்தார்.. 

 

அவளையும், அவள் அருகில் நின்றிருந்த துகிலனையும் பார்த்தவருக்கு, ஒன்றோடு ஒன்றாக பொருந்தாமல் ஏழாப் பொருத்தமாக இருந்தது.. 

 

“நீங்க சொல்லுறதும் சரிதாங்க.. நம்ம ஜமீனுக்கு இவ சரிப்பட்டு வருவாளா?” என்றவரை உணர்வற்ற பார்வை பார்த்தாள் அருவி.. 

 

சகுந்தலாவை இதற்கு முன்பாக இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறாள். நன்றாக சிரித்து பேசுவார்.. அவரே இப்படி சொல்கிறார் என்றால் இவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?.. என நினைக்கும் பொழுதே ஆற மறுத்தது அவனுக்கு.. 

 

வானவராயனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே அருகில் நின்றிருந்த அவிரனின் காதில் ஏதோ சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டே காரை நோக்கிச் சென்றான்.. 

 

சில நிமிடங்கள் கழித்து வந்தவன், சகுந்தலாவின் கையில் ஒரு பொருளைக் கொடுக்க, அவர் நேராக வந்து நின்றது துகிலனின் முன்பு தான்.. 

 

“இது வரைக்கும் நான் உங்கிட்ட எதுவும் கேட்டதில்லை.. உன் மனசை காயப்படுத்தி, ரணப்படுத்தியிருக்கேனே தவிர, உன்னை சந்தோஷமா வச்சிக்கிட்டது இல்லை. ஆனா இப்போ இந்தப் பொண்ணுக்காக கேட்குறேன்.. இந்தப் பொண்ணு தான் என் மருமகளா வரணும்னு ஆசைப்படுறேன்.. என் மேல உண்மையான பாசம் இருந்தா இதை அவ கழுத்துல கட்டு” என்றவர் துகிலனிற்கு நேராக தாலியை நீட்டினார்.. 

 

அவன் தாலியையும் எதிரில் நின்றிருந்த செவ்வந்தியையும் பார்த்தான்.. அவரின் பார்வையோ வானவராயன் மேல் தான் விழுந்தது.. 

 

அவரின் முகத்தில் தெரிந்த கர்வமும், அகம்பாவத்தையும் பார்த்த செவ்வந்தி நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே, “எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்” என்றிட, லேசான புன்னகையுடன் அருவியின் தலைவழியாக மாங்கல்யத்தை அணிவித்தான் அருவி.. 

 

அனைவரிடமும் சம்மதம் கேட்டவன், ஒரு நொடியேனும் அவளை கேட்டிருக்கலாம்.. அதில் தான் தவறிவிட்டான் அடங்காவாதியானவன்.


   
ReplyQuote

You cannot copy content of this page