All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

மனதில் நின்றவள் 11

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Member Author
Joined: 3 months ago
Posts: 21
Topic starter  

மனம் 11
"அப்பா"..... என தன் முன் நின்ற மகளைப் பார்தவர்."என்னம்மா எனக் கேட்க நேற்று வந்த இன்டர்வியூ லெட்டரைக் கொடுத்தாள் சகஸ்தா.

அதனை வாங்கிப் பார்த்த சீலன் நாளை இன்டர்வியூ அதுவும் 'அருகிலே உள்ள பாசிக்குடாவில் உள்ள ரிசாட்' தான்.

அவ்விடம் வந்த சாருமதி "இப்போ தான் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகல என புலம்ப ,சகஸ்தாவோ சான்ஸ் கிடைச்சிருக்குமா,

நான் என்னமா பன்ன பக்கத்துல அரை மணித்தியாலத்துல போயிடலாம் தானே என்றாள்.ரெண்டு பேரும் என்னன்டான செய்சனங்க என சாருமதி புலம்பியபடி சென்றார்.

ரிஷியின் கார் அழகான மூங்கில் குடிலின் முன் நின்றது.

காரிலிருந்து இறங்கி பார்வையை சுழல விட்டபடி முன்னே சென்றவன் அவ் அழகிய மூங்கில் குடிலினுள் நூழைந்தான் .

அதனுள் நுழைந்த வெளியே வரவே அவ் இடத்தின் பிரமாண்டம் விளங்கியது.

பொத்துவிலில் அருகம்பே என அழைக்கப்படும் கடற்கரைப் பகுதி அலை மிகவும் குறைவான பகுதியாகும் இதனாலே வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் இங்கு வருகின்றனர்.

நஷ்டத்தில் வீழ்ந்த ரிசாட் அது இனி மூடும் தருவாயில் ,
ரிஷி யும் பொத்துவிலில் இடம் தேடும் போது , அருகம்பேயில் இவ் ரிசாட் பற்றி அறியவே மொத்தமாக வாங்கிக் கொண்டான்.

இப்போது இதன். முழு உரிமை ரிஷி யையே சாரும்.

ரிசாட்டை சுற்றிப் பார்க்க ஆங்காங்கு முக்கோண வடிவிலான குடில்கள் சிலவும்,நீச்சல் குளமும் சமையல் செய்ய ஏதுவாக இடமும் அதனுடன் சேர்த்து உணவு உண்ண ஏதுவாக இடமும் இருந்தது.

அப்படியே முன்னோக்கி செல்ல பாதை நீண்டு கடற்கரைக்குச் சென்றது அங்கும் சாய்வு நாற்காலி சில உடைந்து காணப்பட்டன.

அங்கு ஒரு குடிலை சுத்தம் செய்ய அங்கிருக்கும் ஒருவரிடம் பணிக்க அவரும் சுத்தம் செய்து கொடுத்தார்.

இன்டிரியர், ரிப்பேர் ஒர்க், லென்ஸ் ஸ்கிப்பிங் என அனைத்தையும் செய்ய தனித் தனி டீமை வரவழைத்தவன் , தனது பிளானைச் சொல்ல அவர்களும் அதற்கான செலவு விபரத்தை ஒரு மணி நேரத்தில் கொடுத்தனர்.

அன்றே வேலைகளை தொடங்கக் கூறினான்.

இன்டர்வியூவில் பங்கேற்ற சகஸ்தாவுக்கு தெரிவுக் கடிதம் வரும் என அங்கு சொல்ல அவளும் வீடு வந்து சேர்ந்தாள தனது தம்பியுடன்.

இயா நாட்கள் அருகம்பேயில் தங்கி வேலைகளைக் கவணித்தவன்.பின் ஒருவறை அங்கு கண்காணிப்பிற்கென நியமித்தது விட்டு திருகோணமலைக்கு பயணமானான்.அடிக்கடி பொத்தீவில்ஸவேலையைப் பற்றி தெரிந்து கொள்வான்.

ஒரு வாரம் சென்றிருக்கும்,முன் போல் இல்லாமல் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாலும்,வீட்டில் தங்குவது குறைந்தது.

வேணி புலம்பத் தொடங்கினார்.அன்றும் தந்தையோடு அலுவலகம் தொடர்பாக பேசும் வேளை தன்னை முறைத்தபடி வந்த அன்னையைக் கண்டவன்,அவரும் "என் பேச்சுக்கு யாரு மரியாதை தாரா,? மாப்பிள்ளைட வேலை கொழும்புல அவ அங்க போயிட்டா ????மற்றவங்களுக்கு என்ன???"என்றவர்,....

கண்ணா " சுந்தரம் மாமா அவர்ட பேத்திக்கு உன்னைக் கேக்காருடா!! என வேணி கூற ,பிரகாஷோ ரிஷியையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அதில் உன் முடிவைச் சொல்ல வேண்டும் என்பதே,.......

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டவன் தாயின் கைகளைப் பற்றியபடி 'ம்மா எனக்கொரு பொண்ணப் பிடிச்சிருக்கு ,அவகிட இன்னும் சொல்லல,என அவன் சொல்ல வேணியோ ரிஷி யையே அதிர்ந்து பார்த்தவர்,என்னடா சொல்லற லவ்வா ????? எனக் கேட்க......

தாயின் கையை விட்டவன் நெற்றியை நீவியபடி ஆம் என தலையாட்டினான்.றிஷியின் சங்கடத்தையும் ,வெட்கத்தையும் பார்த்த பிரகாஷிற்கு சிரிப்பு வர எதுவும் பேசவில்லை அவர்.

வேணியோ யாருடா ? அது என் மருமக என கேட்க,அவகிட கூட இன்னும் சொல்லல எனும் போதே எவன் உடல் இறுகியது.தன்னை சமாளித்தவன்.நிச்சயம் இந்த வருஷம் திருமணம் செய்வன்மா என்றான்.

என்னடா????இந்த வருஷம் என்ற என அவர் மறுபடியும் அதிர்ந்தபடி கேட்க.......

ஆஆஆ உன் மருமக அவ்வளோ பிடிவாதம் என்றான் அவள் நினைவுகளில் மூழ்கியவாறு.

பியகாஷோ,அவங்க வீட்ட பேசுவமா ??? எனக் கேட்க,

ம்ம்....வேணியும் தலையாட்ட இப்பச்சும் சொல்லேண்டா ,???

உங்க பாசமான சகஸ்தாவே தான் என்றான்.அடேம், கண்ணா நானும் ஸ்ரீயும் அடிக்கடி அவ இங்க இருந்தா நல்லாரிக்குமேனு பேசிப்போம் என்றார்.

பிரகாஷோ "சீலனிடம் பேசுரன்" என்றார் ஏங்க ஃபோன்ல வேணாம் "நல்ல நாள்ல நேரல போயே பேசிப்போம் " என்றார் மூவருக்கும் அதுவே சரியாகப்ப்ட்டது.

அடுத்த நாள் பொத்துவில் புறப்பட்டான் றிஷி.அதற்கிடையில் வேணி ஸ்ரீக்கும் ரிஷி சகஸ்தாவை விரும்புவதாகவும், தாங்கள் மட்டக்களப்புசெல்லவகருப்பதாகவும் சொல்ல ஸ்ரீக்கும் மிகவும் மகிழ்ச்சி.

ரிஷி அழைத்தவள்"ஹாலோ றிஷி வாழ்த்துக்கள் என்றாள்." அவனும் தேங்க்ஸ்க்கா,எப்போ ஊருக்கு வார என கேட்க....வீக் என்டல வருவோம், அத்தான் பேசவாம் என்றாள்.,ரஞ்சித்தும் றிஷியிடம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தான்.

சகஸ்தாவோ ஒரு வாரம் சென்ற நிலையில் இன்டர்வியூ தெரிவுக் கடிதம் வராததை தனது தம்பியிடம் சொல்ல,அவனோ நான்காவது இட்லியை உள்ளே தள்ளியபடி வரும் வரும் என்றான்.

சத்தியசீலன் அருகில் உள்ள வங்கியில் தான் வேலை செய்கிறார்.சிறிது நேரத்தில் சாருமதிக்கு அழைப்பெடுத்தவர் நாளை பிரகாஷ் ,வேணி வருவதாகச் சொல்ல, "சரிங்க சரி சரி "என்றார்.

மனதில் நின்றவள் 11
படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க 😁

This topic was modified 5 days ago by VSV 31 – மனதில் நின்றவள்

   
ReplyQuote

You cannot copy content of this page