All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (14)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

அத்தியாயம் 14

 

 

 

இசைகவி எழுந்து நிற்கவும் , அவளின் பார்வை சென்ற திசையை நோக்கினான் விஷ்ணு தேவன்..

 

ஆரியன் வந்து கொண்டு இருந்தான்..அவனை டெக்ஸ்டைல்ஸில் எதிர்கொள்ள நேரிடும் என அவள் எதிர்பார்க்கவே இல்லை என்பதே உண்மை..

 

ஆரியன் இங்கு வருவதை கண்டு அவன் பெரிதாக அதிரவெல்லாம் செய்யவில்லை..அமைதியான பார்வையே அவன் மீது நிலைத்தது என்றே சொல்லலாம்..

 

இசைகவிக்கு வயிற்றுக்குள் பயபந்து உருண்டது.. அதுவும் ஆரியனின் முகம் சிவந்து இருந்தது.. கோபத்தில் இருக்கிறான் என்பது தெரிந்தது..

 

அவனின் நடையின் வேகம் அவர்கள் அமர்ந்த இடத்தில் விரைவாக வந்தடைய செய்தது..

 

பார்த்தீபன், இமாயா இருவரும் வந்து கொண்டு இருந்தார்கள்..ஆரியனை கண்டு அவன் மனதில் தோன்றியது ‘ பத்மா அத்த பையன் டெக்ஸ்டைல்ஸ் வர அவசியம் என்ன ? ’ மனதில் எண்ணினான்..

 

ஆரியன் வந்தவுடனே நிதானம் இல்லாமல் “ கவி என்னிது? ” அவன் கேட்ட கேள்வி அவளுக்கு விளங்கியது..

 

இவனுக்கு எப்படி தெரியும் தான் இங்கு வந்ததை..“ உங்களுக்கு நான் இங்கே வந்தது யார் சொன்னது ஆரியன் ” என்று கேட்டபோது..

 

“ யாரும் சொல்ல அவசியம் இல்ல கவி ஃபேஸ்புக் பேஜ்ல ரீல்ஸ் பார்த்ததும் தான் நீ இங்கே இருக்குறது எனக்கு தெரிஞ்சிது..ஆமா அதெப்படி நான் உன் பியான்சே தானே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வர தோணலைல? ” அவன் குரல் வலியையும் ஏமாற்றத்தையும் பிரதிபலித்தது..

 

அமர்ந்திருந்த விஷ்ணு தேவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை..இசைகவிக்கு மனம் அழுத்தமாகியது..

 

அவன் மீது காதல் இல்லை தான் அவனிடம் சொல்லிவிட்டு வரும் எண்ணம் மனமும் ஒப்பவில்லை என்றே கூறலாம்..புருவத்தை சுருக்கி கவலையுடன் அவனைப் பார்த்தாள்..

 

பார்த்தீபன் ஆரியன் பேசியதை கேட்டுவிட்டான்..“ ஹேய் மாயா! ஆரியன் உன் அக்கா பியான்சேயா? ” அவனுக்கு தெரியாதே அவளிடம் சந்தேகத்தை கேட்டான்..“ ம்ம்..அக்கா பியான்சே தான் ஆரியன் கிட்ட சொல்லாம கிளம்பிட்டோம்ல அந்த கோபத்துல கத்திட்டு இருக்கார் போல..இதுல மெயின் பிக்சர் என்ன  தெரியுமா சார் ? ” என்று கேட்க..

 

“ சொல்லு ? ”

 

“ விஷ்ணு சார் தான் எப்படி கேஷுவலா உட்கார்ந்து ரெண்டு பேரையும் சுவாரஸ்யமா பார்த்துட்டு இருக்கார்..” அவள் சொன்னது சரிதான் இசைகவி என்ன சொல்கிறாள், அவனின் பதில் , ஏமாற்றம்  என்ன என்பதை பார்க்க அவர்களது மீது விழிகளை சுவாரஸ்யமாக படிய விட்டான்..

 

பார்த்தீபனும் அவள் சொன்னதை கேட்டு பார்த்தான்..இசைகவி மீது அவனின் பார்வை வேறு மாதிரி அல்லவா விஷயத்தை சொல்கிறது..‘ ஏதோ இருக்கு! எங்கே கொண்டு வந்து விடப் போறாரோ தெரியல ’ நினைத்துக் கொண்டான்..

 

“ ஆரியன் உங்.. உங்கிட்ட சொல்ல நினைச்சேன் வர்ற அவசரத்துல மறந்துட்டேன் ” தயக்கத்துடன் பதிலளித்தாள்.. மனதில் குற்றவுணர்வு உண்டானது.. விஷ்ணு வர சொல்லி இருந்த நேரத்திற்கு முன் செல்ல வேண்டும் என்பது மட்டுமே மூளையில் இருக்க.. ஆரியன் பற்றி நினைப்பு இருக்கவே இல்லை..

 

“ இதை பத்தி சொன்னா நான் போகவிடாமல் தடுத்துடுவேன்னு நினைச்சியா கவி ? ” வருத்தத்துடன் அவளிடம் கேட்டான்..

 

அவளிடம் காதலை சொன்னவன் ஆயிற்றே..அவன் மேல் பரிதாபம் மட்டுமே தோன்றியது..

 

இமை மூடி திறந்து ஒரு வித தைரியத்துடன் “ நீங்க சொன்னது தான் சரி ஆரியன்.. நான் இங்கே போக போறதை பத்தி உங்கிட்ட சொல்லி இருந்தா ‘ நோ ’ சொல்லி இருப்பீங்க..” என்றாள்..

 

“ கவி , நீயா முடிவு எடுத்துட்ட , அது உனக்கு சரின்னு தோணி இருக்கலாம்.. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமே கவி ? ” அவன் எண்ணத்தை சொன்னவன்..

 

விஷ்ணு தேவனை முறைத்து விட்டு “ நான் உன் வருங்கால ஹஸ்பண்ட் என்கேஜ்மண்ட் ஆனாலும், ரிங் போட்டது அது தானே அர்த்தம், இனி எங்கே போறதாக இருந்தாலும் என்கிட்ட கேட்டு தான் நீ போகணும்..” என உத்தரவிட்டான்..

 

“ இமாயா வா ...” அவளையும் அழைத்தான்.. இசையின் கரத்தினை பற்றி “ போகலாம் ” அழுத்தமாக பற்றி அவளை இழுத்துச் சென்றான்..இமாயா அவர்கள் பின் ஓடினாள்..

 

விஷ்ணு தேவன் தடுக்கவில்லை..அவள் சென்று மறையும் முன் அவனை பார்வையால் உள்வாங்கி மனதில் சேமித்துக் கொண்டே சென்றாள்..

 

இருவரும் வாங்க நினைத்த உடைகள் அங்கே விட்டுச் சென்றிருந்தனர்..

 

பார்த்தீபன் “ ஏதும் பிளான் வச்சி இருக்கீயா விஷ்ணு ? ” அவனிடம் கேட்க..அர்த்தமாய் புன்னகை சிந்தியவன் “ செய்ய கூடாதுன்னு நினைக்கிறேன் பட்‌ செஞ்சே ஆகணும்னு உள்ளுக்குள்ள தோணிட்டே இருக்கு..ரெண்டாவது அப்பா இஸ்தானம் இல்லாம சித்தப்பா பையன் எனக்கு தம்பி, இசையை விட்டுடுவேன்னு நினைச்சியா பார்த்தீ? ” விரல்களை மடித்து சொடுக்கு எடுத்தபடி அவனிடம் கேட்க..

 

“ உன் கண்ணுல ஒண்ணு தெரிஞ்சிது விஷ்ணு.. இவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே நிச்சயம் ஆகி இருக்கு போல..நீ அதுக்கு என்ன செய்ய போற..” என்று கேட்டான்..

 

“ ஷீ லவ்வுஸ் மீ..காதலை சொல்லலைனாலும் எனக்கான காதல் தெரிஞ்சுது.. ஆரியனோட அம்மா ஒருத்தர் ஆள தானே நம்ம குடும்பம் கலை இழந்து போச்சி..அதே நிம்மதி இல்லாததை அவனுக்கு கொடுக்க போறேன்..” கண்களில் பழி வெறி இல்லை.. உள்ளத்தில் வலியால் துடித்தது..

 

சிறு வயதில் நடந்தவை அனைத்தும் கண் முன்னே தோன்றிவிடுமோ என்று அஞ்சியவன் “ போகலாம் டா..” மேசையில் அவள் வைத்து சென்ற உடை பையை எடுத்துச் சென்றான்..

 

அவனுக்கு பக்க பலமாக இருக்க போவது பார்த்தீபன்..

 

ஆரியன் காரினை அமைதியாக ஓடிக் கொண்டிருந்தான்..இமாயா இருப்பதால் அவனால் இசையுடன் பேச முடியவில்லை..

 

வீடு வந்து சேரும் வரைக்கும் அவன் காரை ஓரிடத்திலும் நிறுத்தவில்லை..பயணம் நீண்டு கொண்டே இருந்தது..

 

வீடு வந்ததும் ரிவர்வியூ வழியாக பின் சீட்டை பார்த்து “ இமாயா நீ போ உங்க அக்கா கிட்ட நான் பேசி முடிச்சதும் வந்துருவா..” என்று அவன் சொன்னதும் சரியென காரில் இருந்து இறங்கி‌க் கொண்டாள்..

 

ஸ்டீயரிங்கை நெருக்கமாக பிடித்திருந்தான்..“ ஊஃப் ” உதட்டால் காற்றை வெளியிட்டு “ கவி நான் சொல்றதை நீ கேட்கணும்..இனிமே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம உன் இஷ்டப்படி எதுவும் பண்ண கூடாது.. என்னையும் மீறி ” அவள் புறம் திரும்பி சொன்னான்..

 

அவனின் பூனைக் கண் விழிகள் அவளை அழுத்தமாக ஊடுருவியது..மெல்ல கரத்தினை உயர்த்தி அவளின் இடது கன்னத்தில் வைத்து வருட நினைக்கும் முன் , அவன் கையை தட்டிவிட்டாள்..

 

“ என்கேஜ்மண்ட் ஆகிட்டா என் மேல அட்வான்டேஜ் எடுத்துபீங்களா ஆரியன்?உங்க பேச்சும் , மத்தவங்க முன்னாடி நடந்துக்குற விதம் எனக்கு சுத்தமா பிடிகல்ல..என்னை உங்களுக்கு கீழ அடிமைத்தனமா நடத்த பாக்குறீங்க..உங்க இஷ்டதுக்கு என்னை ஆட்டி வைக்க நினைக்காதீங்க ஆரியன்... இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது.. அப்பா கிட்ட நானே பேசிக்குறேன்..” சீற்றம் குறையாமல்..

 

“ உன் மேல நான் வச்சி இருக்குற காதல் , நான் எங்கே உன்னை அடிமைத்தனமா நடத்த பாக்குறேன்..நீயா கற்பனை பண்ணி சொல்லாத கவி..இப்ப புரியுது என்கிட்ட கோபமா பிடிக்காத மாதிரி நடந்துக்க சொல்லி விஷ்ணு உனக்கு சொல்லி குடுத்தானா? வேணும்னே என்மேல பழி போட்டு கழட்டி விட பாக்குற ரைட்? ” ஆவேசமாக கத்தினான்..

 

அவன் கத்தலில் அவள் மீது வைத்த குற்றசாட்டில் விஷ்ணு தேவன் பழியாகினான்..அவன் கரத்தின் பிடியில் இருந்து விலகி நின்றவள்.. 

 

“ ஆரியன் திஸ் இஸ் டூ மச் விஷ்ணு சாரை நம்ம பிரச்சினைல எதுக்கு இழுக்குறீங்க..அவர் இன்வைட் பண்ணார் நான் போனேன் அவ்ளோ தான்..அவரை பத்தி தேவையில்லாம பேசி வார்த்தைய விடாதீங்க ஆரியன்..” சீறினாள் அவள்..

 

அவளின் இந்த சீற்றம் புதிது, அமைதியாக செல்ல முடியவில்லை அவனால் அத்தனை கோபமும் குரோதமும் திரும்பியது விஷ்ணு தேவனின் மீதே..‘ விஷ்ணு ’ ஸ்டிர்லிங்கை வெறியுடன் அடித்தவன்..

 

“ நீ எனக்கு மட்டும் தான் இசை , விஷ்ணு தேவன் பக்கம் மட்டும் போக நினைக்காத விளைவுகளை சந்திக்க நேரிடும்..” விரல் நீட்டி எச்சரித்து விட்டு, கார் கதவை அவள் சீற்றத்துடன் அறைந்து சாற்றி விட்டு உள்ளே சென்றாள்..

 

அவனோ வேகமாக காரை உயிர்ப்பித்து புறப்பட்டு விட்டான்..

 

இசைக்கு ஆரியன் மேல் சொல்லமுடியாத வெறுப்பை உண்டாக்கியது..அவன் அழுத்த பற்றி இருந்த கரத்தின் மணிக்கட்டு கண்றி சிவந்து போய் இருந்தது..

 

வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் வினோதினி அழைக்க செவியில் வாங்காது மாடி ஏறி அறைக்குச் சென்றாள்..

 

இமாயா சோஃபாவில் அமர்ந்து தாயை தான் பார்த்தாள்..“ ஆரியன் கூட சண்டை போட்டு இருப்பா.. அதான் நீங்க கூப்பிட கேட்காம போறா..” என்று அவள் சொல்ல..

 

“ ரெண்டு பேருக்கும் ஒத்து போக மாட்டேங்குதா டி , நிச்சயம் பண்ண நேரம் எல்லாம் சந்தோஷமா தானே இருந்தாங்க..இப்ப என்ன புதுசா ரெண்டு பேருக்குள்ளையும் பிரச்சினை.. ஜோசியர் போய் பார்க்கணும்..” மாடி அறையை பார்த்தவாறு சொல்ல..

 

“ நீ ஏன் அம்மா பணத்தை வேஸ்ட் பண்ணி ஜோசியரை பார்க்க போற ..இது ரெண்டு இதயம் சம்பந்தப்பட்ட நோய்.. நாளைக்கு மார்னிங் இசை தலைல கல்லை உருட்டி விடுவா.. எதுக்கும் ” அவரின் இதயத்தை காண்பித்து “ ஷாக் ஆகாம பார்த்துக்கோங்க ” நகைப்புடன் அவரை கிண்டலடித்து சொன்னாள்..

 

“ நீ என்னடி கவி மனசுல உள்ள போய் பூந்து படிச்சிட்டு வந்தீயா? கை ரேகை பார்த்த மாதிரி சொல்ற..” அதிசயித்து வாயில் கை வைத்தவாறு அவர் வினவ..

 

“ நமக்குள்ள அக்கா , தங்கச்சி சகோதார பாசத்தை விட தோழி முறைல ஒருத்தரை பத்தி ஒருத்தர் புரிஞ்சி வச்சி இருக்கோம் அம்மா.. நம்மளுக்கு முன்னாடி பிறந்த இராட்சசிங்க இலக்கியா , இனியா..போல நாங்க கிடையாது..” அவர்கள் இருவரையும் வாரி விட்டு “ அடிக்கழுதை! உன்கூட பிறந்த அக்காக்களை பத்தி அப்படி சொல்லுவீயா? ” பற்களை கடித்து அவர் அடியில் இருந்து தப்பித்து ஓடி இருந்தாள்..

 

மாடியில் இருந்து கீழே எட்டிப் பார்த்த இமாயா “ உண்மைய சொன்னா ஒத்துக்கனும் அம்மா..தென் நானு ரெண்டு காலு மனுஷி நாளு கால் கழுதை இல்ல வெவ்வே..” ஆள் காட்டி விரல்களை கொடுக்கி போல் செய்து பழிப்பு காட்டிவிட்டு மறைந்தாள்..

 

“ சரியான வாலு..” சிரித்து விட்டு அவர் அகன்றார்..

 

இலக்கியா, இனியா இருவரும் இசை , இமாயாவிடம் ஒற்றுமையே கிடையாது ஏதாவது சண்டை போட்டு வினோதினியையும் நடுவில் இழுத்து அடியை வாங்கி கொடுப்பதும் அல்லாமல் வாயடித்து விடுவார்கள்.. அதனால் தான் இமாயாவுக்கு இசையை அதிகமாக பிடிக்கும் அவர்களை விட..

 

இதை பற்றி வினோதினியிடம் கூறினால் மகள்களுக்காக பரிந்து கொண்டு வருவார் அவர்..

 

அவரிடமே இவளின் வாலுத்தனம் வெளிப்படும் என்றால் பார்த்தீபனிடம் மட்டும் ம்மி கொண்டு செல்கிறாள்.. எப்படி இவர்களை காதல் வலையில் சிக்க வைக்க போகிறது என்று பார்க்கலாம்..

 

 

 

தொடரும்..

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
 

@vsv4 அண்ணனும் தம்பியும் சேர்ந்து அக்காவும் தங்கச்சியையும் கரெக்ட் பண்ணிக்க போறானுங்க. ஆரியனுக்கு ஒன்னும் கிடையாது. 🤣🤣🤣🤣


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

@vsv11. 🤣🤣🤣 அப்படி தான் நடக்கும் போல விழி சிஸ்.. ஆரியன் குறுக்க வந்து பாயாம இருந்தா சரி..😂 மிக்க நன்றி சிஸ் 🥰🥰💞💞💞


   
ReplyQuote

You cannot copy content of this page