All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (12)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

அத்தியாயம் 12

 

 

 

 

அன்று விடியல் இசைக்கு அழகாக இருப்பது போல் தோன்றியது..தன்னை சுத்தம் செய்து எல்லாம் முடிந்த பிறகு அறையின் ஜன்னல்களை திறந்து விட்டாள்..மார்கழி மாதத்தின் குளிர் காற்று முகத்தை தீண்டி விட்டுச் செல்ல, சுகமாக கண்களை மூடிக் கொண்டாள்..

 

அதே சமயம் கெசட்டில் முருகனின் சுப்ரபாதம் ஓடிக் கொண்டிருந்தது..அவள் உதட்டில் முகிழ்த்தது புன்னகை, சடுதியில் விஷ்ணு தேவனின் நினைவும் வந்து சேர , அவன் அவளைப் பார்த்து புன்னகைப்பது போல் மாயை..

 

மேலும் , உதடுகள் விரிந்து ஒளிர்ந்த வெண்ணிற பற்கள் அவளின் முகத்திற்கு கூடுதல் அழகைக் கொடுத்தது..

 

நீண்ட கூந்தல் எல்லாம் இல்லை..இடைக்கு சற்று மேலே அலைகளாக இருக்கும் கருகரு கூந்தல் , வளைந்த புருவங்கள், மெல்லிய செப்பிதழ்கள், கூர் நாசி , ஆழ்ந்து பார்க்கும் விழிகள் எப்போதும் மை தீட்டி இருக்கும்..ஆரியனுக்கு இவளின் அழகை கவர்ந்திருக்கலாம் ஆனால் விஷ்ணு தேவனுக்கு அவளின் குரலில் தானே கவர்ந்திருக்கிறான்..

 

ஞாபகம் வந்தவளாக அவனின் அழைப்பிதழை பார்த்தால், இரண்டரை மணி நேர பயணம் செய்ய வேண்டும்.. இன்று தான் அவளின் கனவில் இம்சை செய்பவனுக்கு அவளுக்கான விடை கிடைக்க போகிறது..

 

நேரமாகுவதை உணர்ந்த அவள் என்ன உடை அணிந்து செல்வது என்ற யோசனை , அதன் பின் இமாயாவை தேடி அறைக்குச் சென்றாள்..

 

கல்லூரி செல்வதற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தாள்..“ இமாயா இன்னிக்கி ஒரு நாள் காலேஜ்க்கு லீவு போடுறீயா? ” அதிசயமாக கேட்கும் தமக்கையை பார்த்தாள்..

 

“ மிரகல்! லாஸ்ட் இயர்ல இருக்கேன் இசை , நீ என்னமோ காலேஜ் ஓனர் போல காலேஜ்க்கு லீவு போட சொல்ற ? ” காதணியை அணிந்தவாறு கேட்டாள்..

 

குரலை செருமியவள் “ எனக்கு தெரிந்ச ஒருத்தங்க பிரான்ச் ஓபனிங்காக இன்வைட் பண்ணி இருக்காங்க.. நான் கண்டிப்பா போயே ஆகணும் மிஸ் ஆக்கிக்க கூடாது இமாயா.. இன்னிக்கு ஒரு நாள் தானே எனக்காக லீவு போட மாட்டியா? ” கெஞ்சலாக கேட்கும் தமக்கையை, விழிகளை உருட்டி “ ஓகே லீவு போடுறேன் ஆனா அங்க தான் இடிக்குது உனக்கு தெரிஞ்சவங்க யாரு அது ? ” அவள் தோளில் கை வைத்து ஒற்றை புருவத்தை உச்சி மேட்டுக்கு உயர்த்தி கேட்டாள்..

 

“ போகும் போது சொல்றேன் ஆல்ரெடி லேட் ஆகிட்டு இருக்கு டி.. எனக்கு டிரஸ் சூஸ் பண்ணி கொடேன் கன்பியூஸ் ஆஹ் இருக்கு எதை வியர் பண்றதுன்னே தெரியல..” இருவரும் கதைத்தவாறு அவள் அறைக்குள் நுழைந்து கொண்டனர்...

 

“ ஆரியன் வந்தாலோ இல்ல அவர் வெளிய கூப்பிட்டாலும் டிரஸ் வியர் பண்றதுல இன்ட்ரஸ்ட் காட்ட மாட்டியே ம்..என்னவோ இருக்கு ” புருவத்தை ஏற்றி இறக்கி, கூர்ந்து தமக்கையை பார்த்து கேட்டாள்..

 

“ ச்சே..ச்சே..நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்ல இமாயா..என்னமோ தெரியல இப்படி ரியாக்ட் பண்ணிட்டு இருக்கேன் ” என்று சொல்லி அசடு வழித்தாள்..

 

“ உன்னை நம்ப மாட்டேன்..நீ போற பிளேஸ்ல வைச்சி நான் கண்டுபிடிக்கிறேன்..” தலை மேலும் கீழும் அசைத்து “ ஹம்..” அவளுக்கு பொருத்தமான ஆடையை வார்ட்ராப்பில் தேடத் துவங்கினாள்..

 

விஷ்ணு தேவன் விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் அழகாக வெள்ளை நிற பலகையில் நீல நிற ஆங்கில எழுத்துக்களால் பெரிய கொட்டை எழுத்தில் பொறிக்கப்பட்ட இருந்தது..ஆளுயர கட்டடத்தை ஃபேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்தவாறு அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்..

 

கடையினை திறப்பதற்கு இன்னும் சில நொடிகளே இருந்தது..

 

தாடி சேர்வ் செய்து அளவாக வைத்திருந்தான்..முடியை வெட்டி குறைத்திருந்தான் அவன்..

 

எப்போதும் போல் அவனுக்கு பிடித்த அடர் சிவப்பு நிற ஷர்ட், அதற்கு மேல் கருப்பு நிற கோட் அணிந்து, கருப்பு நிற ஃபேன்ட் அணிந்து இருந்தான்..

 

அவன் முகத்தில் உள்ள  மலர்ச்சி, அவனின் வசீகரத்தை மேலும் கூட்டியது போல் இருந்தது..அவ்வப்போது கைக்கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தான்..

 

ஜனார்த்தனியையும், பிள்ளைகளையும் காரில் அழைத்துக் கொண்டு வந்தான் தனுஷ்..

 

காரை நிறுத்தியதும் இறங்கி கொண்டனர் கூடுதலாக ஒருவனும் இறங்கினான் வேறு யாரு பார்த்தீபன் தான் அவனும் அவர்களுடன் வந்து சேர்ந்திருந்தான்...

 

“ அக்கா! ” சின்னவனை கையில் வைத்திருந்தாள் அவள்..

 

“ என்ன டா ? ” சின்னவன் அவள் கையில் இருந்து மாமனிடம் ஓடவே பார்த்துக் கொண்டு இருந்தான்..

 

“ மாமா தேவாவோட வளர்ச்சியை பார்த்து சந்தோஷபட்டு இருப்பார்ல ” அக்கணம் வில்லியம் தேசாப்பின் நினைவே அவனுக்கு வந்தது..

 

“ ம்ம்..அப்பா பார்த்து சந்தோஷப்பட்டு இருப்பார்..அவர் நம்ம கூட இல்லைனாலும் பார்த்துட்டு தானே இருப்பார்..”

 

“ ஆமா..அக்கா சரி வாங்க போகலாம்..” விஷ்ணு தேவனுடன் சென்று நின்று கொண்டார்கள்..

 

யாதவன் அவனிடம் செல்லவே தடுமாறிக் கொண்டு இருந்தான்..கடைத்திறப்பு முடிய வேண்டுமே ,

 

சகோதரிகள் இருவரும் ஆயத்தமாகி கீழ் கூடத்திற்கு வந்த போது ,

 

“ அப்பா இன்னிக்கு கடைக்கு வர முடியாது சாரி அவசரமா ப்ரண்ட் ஓட பங்ஷனுக்கு போக வேண்டியதா இருக்கு பாய்  அப்பா..அம்மா சாப்பிட நேரம் இல்ல போயிட்டு வந்துர்றோம்..கேப்ல தான் போறோம் பயப்புடாதீங்க நைட்குள்ள ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துர்றோம்..” படபடவென பெற்றவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே ஓடினர்..

 

கேப் வந்து நின்றதும் இருவரும் ஏறிக் கொண்டனர் பயணம் தொடர்ந்தது..

 

வினோதினி புலம்பிக் கொண்டே கணவருக்கு உணவை பரிமாறினார்..“ என்ன புள்ளைங்களோ எதையும் நேர காலதுக்கு சொல்றதில்ல, வீட்டுல கார் இருக்கு டிரைவரை அழைச்சிட்டு போகலாம்ல, கேப்ல போகுதுங்க.. மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டு போனாளோ தெரியல, கல்யாணம் ஆக போற பொண்ணு இதுக்கு அப்புறம் வெளியே பயணம் வைச்சிக்க கூடாதுன்னு சொல்லணும்..” மனைவியின் 

புலம்பலை கேட்டிருந்தவர்..

 

“ நீயேன் புலம்பிட்டு இருக்க கார்ல போகலைன்னா என்ன கேப்ல தானே பத்திரமா போறாங்க அதே மாதிரி பத்திரமா வீடு வந்து சேருவாங்க வீனோ..அவங்க வளர்ந்துட்டாங்க சின்ன புள்ளைங்க கிடையாது , கல்யாணதுக்கு முன்ன என்ஜாய் பண்ணட்டுமே வினோ இதுக்கெல்லாம் தடா போடாத சாம்பார் ஊத்து ” என்றார் அவர்..

 

“ நீங்க சும்மா இருங்க சின்ன பொண்ணுக்கு காலேஜ் வேற லீவு போட்டுட்டு கவி கூட சேர்ந்து போய் இருக்கா..இப்படி ஊர் சுத்துறதை மாப்பிள்ளை வீட்டுகாரங்க கிட்ட யாராவது போய் சொன்னா நம்மல பத்தி என்ன நினைப்பாங்க சொல்லுங்க..” சாம்பாரை தட்டில் ஊற்றி கொண்டே சொல்ல..

 

“ விடுமா , அவங்க எதுவும் சொல்லமாட்டாங்க நீ தேவையில்லாம யோசிக்காதா? ” என்றார்..

 

“ பொண்ணுங்களுக்கு இடம் குடுத்தா? கொஞ்சம் யோசிங்க ”

 

“ விடு வினோ ” அதற்கு பிறகு பேசவில்லை..மனைவியிடம் கூறிவிட்டு ஜுவல்லரிக்கு சென்றுவிட்டார் மேகநாதன்..

 

விஷ்ணு அவளை எதிர்பார்த்து இருந்தவனுக்கு கடை திறப்பின் நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது.. மனதில் சிறிது ஏமாற்றம் அடைவதை அவனால் தடுக்க இயலவில்லை..

 

இசை வருவாள் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது..

 

விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினரே  அவளது அக்கா ஜனார்த்தனியே தான்..

 

அவள் கையில் கத்தரிக்கோலை கொடுக்க..திகைத்து விட்டாள் அவள்..“ ஜானு அம்மா நீ தான் சீப் கெஸ்ட் சீக்கிரம் கட் பண்ணு ஆல்ரெடி கடைய பாக்குறதுக்கு கஸ்டமர்ஸ் நிக்கிறாங்க ” என்று அவன் சொன்னதும்..

 

“ தேவா..” கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு..“ ப்ச்..ஜானு அம்மா இப்ப எதுக்கு கலங்குற அப்பாக்கு அப்புறம் நீ தான் எனக்கு எல்லாமே சின்ன வயசுல இருந்து சோ உன் கையால விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் காலம் காலமாக முன்னேறி பிரபல்யம் அடைஞ்சிட்டு இருக்கு..அம்மா ஸ்தானத்துல இருக்குற நீ உனக்கான உரிமை தான் இது டைம் போகுது ஜானு அம்மா..” தம்பியின் பாசத்தை நினைத்து உச்சி குளிர்ந்து போனது ஜனார்த்தனிக்கு, அவன் ‘ ஜானு அம்மா ’ அழைக்கும் போதே தாய்மை வரம் பெற்றவளாக உணர்கிறாள்..பெற்று எடுத்தால் தான் தாயா ? பெறாமலே தாய் ஆகி விட்டாலே அவள்..

 

கத்தரிக்கோலை எடுத்து ரிப்பன் வெட்டியதுமே பலமான கை தட்டல்கள் தொடர்ந்து அனைவரும் கடைக்குள் நுழைந்து கொண்டனர்..

 

வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதியது.. புதிதாக கிளையை திறந்து இருப்பதால் துணிமணிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டது..

 

முதல் நாள் அன்றே அவனுக்கு இலாபம் தான்..

 

மூன்று மணித்தியாலத்திற்கு பிறகு விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் முன்பு கேப் நின்றது.. இருவரும் இறங்கிக் கொண்டனர்..

 

அவர்கள் வந்த கேப்பும் சென்றது..

 

“ இமாயா நாம வர முன்னாடியே ஷாப் ஆஹ்..ஓபன் பண்ணிடாங்களே லேட் பண்ணிடோம்ல..” ஏமாற்றத்துடன் அவளின் குரல் ஒலித்தது..

 

இசையின் கரத்தை பற்றி “ ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிகிட்டோம்..இயற்கையா நடக்குறது தானே நாம எதுவும் செய்ய முடியாது.. எனக்கு தெரியாம யாரு அந்த புது பீஸு ” அவளின் மனதை மாற்ற கேட்டாள்..

 

“ ஸ்டார் கோல்டன் ஹோட்டல்ல என் பக்கத்துல நின்னுட்டு இருந்தாரே நீ கூட சூப்பர்னு சொன்னீயே டி..” இசை சொல்ல..

 

“ அட! அவரா விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் ஓனர் ஆச்சே ” என்று அவள் சொல்ல..

 

“ உனக்கு எப்படி? ” இருவரும் பேசிக் கொண்டே கடைக்குள் நுழைந்தனர்..

 

“ அவரை தெரியாத ஆட்களே இல்ல அன்னிக்கி நேர்ல அவர பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல்ல அவ்ளோ எக்சைட்டா இருந்துச்சு பட் பேச மிஸ் பண்ணிட்டேன்..” துள்ளலுடன் அவள் சொல்லிக் கொண்டே சென்றாள்..

 

“ எனக்குத்தான் எதுவுமே தெரியல ” ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு..

 

“ விஷ்ணு சார் உனக்கு எது மூலமா அறிமுகமானார் இதழியல் FM மூலமாவா? ” சரியாக அவள் சொல்ல..

 

சரியென தலையசைத்தாள்..“ என் வாய்ஸ் அவருக்கு பிடிச்சதால என்னை காண்டேக்ட் பண்ணி பேசுனார்.. நான் ஓகே சொன்னதும் அவரோட விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் ஆஹ்..FM ல அட்வெர்டிமண்ட் பண்ணேன்...அதுல ப்ரண்ட் ஆனவர் தான் ஷாப் ஓபனிங் கார்ட் கொடுத்து இன்வைட் பண்ணார் அவ்ளோ தான் டி ” என்றாள் இசைகவி..

 

கீழே உள்ள தளத்தில் சிறு குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள், அலங்கார பொருட்கள் க்ரீம்கள் இருந்தன..

 

இருவரும் மாடி ஏறி இரண்டாவது தளத்திற்குச் சென்றனர்..

 

“ ஆரியனை நீ பார்த்தாலும் உன் ஃபேஸ்ல பல்பு எரியுறது இல்ல.. ஹோட்டல்ல வைச்சி உன் ஃபேஸ்ல ஒளி விசிறி அடிச்சிதே பாரு.. உனக்கான ஆளை பார்த்துட்டேன்னு தோணுது..அப்பா கிட்ட பேசுறதுதான் நல்லது மனசுல பூட்டி வைச்சிக்காத இசை நம்ம ஃபேமிலிக்கி அது நல்லது இல்ல..ஹேய்! பொம்மைக்கு போட்டு விட்டு இருக்குற லெஹேங்கா அழகா இருக்கு நான் அதை வாங்க போறேன்..” சத்தமாக கத்திக் கொண்டு சிறு குழந்தை போல் இருந்தது அவளின் செய்கை..

 

சிரித்துக் கொண்டே இரு பக்கமும் தலை அசைத்து லேடிஸ்க்கான செக்ஷனில் இளம் நீல நிற டி-ஷர்ட் பார்க்க ஆரம்பித்தாள்..

 

அனைத்தும் வெண்ணிற டி - ஷர்ட்கள் மட்டுமே இருந்தது.. இடுப்பில் கை குத்தி “ எல்லாமே வொயிட் டி-ஷர்ட்ஸ் தான் இருக்கு ஸ்கை ப்ளூ கலர்லயே கிடையாதா? ” உதட்டை சுளித்து இவளுக்கு பிடித்த இளம் நீல நிற ஷர்ட் ஒன்றினை தேடிக் கொண்டு இருக்கும் சமயம் “ இங்கே நீ தேடுற ஸ்கை ப்ளூ ஷர்ட் கிடைக்காது இசை..வொயிட் ஷர்ட் உனக்கு நல்லா எடுப்பா இருக்கும்..” குறு குறுக்கும் அவன் மீசையும் தாடியும் அவள் செவியில் உரசிட, கூச்சத்தில் சிலிர்த்தாள் பாவையவள்..

 

“ பிக் அப் த வன் ஐ லைக் வொயிட் கலர் ஷர்ட் இசை..” அவனுக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் ஒரு ஷர்டை எடுக்குமாறு மீண்டும் சொன்னான்..

 

அவனை பார்க்க வேண்டும் என்று மன உந்துதலில் விருட்டென்று திரும்பிய வேளையில் அவள் கண்டது அவனின் விழிகளை மட்டுமே, அவ் விழிகள் அவளுக்கு உணர்த்தியது என்னவோ வேறு ஒரு செய்தி அதனை அவளால் படிக்க முடியாமல் போனது கனவில் தற்போது மிகவும் நெருக்கத்தில் அவனின் விழிகளை பார்த்தால், அவளின் மை தீட்டிய விழிகள் வசியம் செய்வது போல் இருந்தது..

 

தொண்டை ஏற இறங்க, அவனின் விழிகளையே விழி அகலாமல் பார்த்தாள்.. விழிகள் மட்டுமே அக்கணம் நிறைய உணர்வுகளை பரிமாறி இருக்கும்...

 

“ இசை ” என்றழைத்தவன் காதலை சொல்லத் தயக்கம் எல்லாம் இல்லை..

 

அவள் அருகில் நின்று இருப்பதால் அவளின் விழிகளை விட்டு பேச்சு வர மறுத்தது..

 

நிமிடங்கள் பல பரந்தன..ஒருவாறு தைரியத்தை வரவழைத்து அவளிடம் காதலை சொல்ல தீர்மானித்தான்..இதை விட அவனுக்கு இனி சந்தர்ப்பக்கள் அமைவது கடினம்..

 

“ பர்ஸ்ட் தடவை உன் குரலில் மயங்கிட்டேன் இசை..இட்ஸ் அ அமேசிங் ஃபீல் டூ மீ..என் மனசையும் சிலிர்க்க வைத்த குரல்..உன்னை பார்க்கமலே உன் குரலை நேசிச்சேன்..நேர்ல உன்னை சந்திச்சதும் உன்ன எவ்ளோ பிடிச்சுதுன்னனு ஹவ் கேன் ஐ டெல் இட்..” அவன் முகமே பிரகாசமாக சந்தோஷத்தில் ஜொலித்தது என்றால் பாருங்களேன்..

 

மெதுவாக அவள் கரத்தை பற்றிக் கொண்டான்..அவள் உள்ளங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..அன்று முதன் முதலாக சந்தித்த போது கைகுலுக்கிய சமயம் உணர்ந்திடாத தாக்கத்தை இக் கணம் உணர்ந்தாள் பாவையவள்..

 

சிறிது நேரம் இசை சிரமப்பட்டு விட்டாள்..அவள் இதயம் தடுமாறியது , அவளது முகத்தில் மென்மையான புன்னகை..

 

உதடுகள் பிரிந்து “ தினமும் என் கனவுல வந்து இம்சை செய்யும் உங்களோட கண்கள் தான் தேவா! ” அவளின் மனம் அவனிடம் வெளிப்பட்டது..

 

அவளின் வாய் வழியாக கேட்ட வார்த்தை அவனின் உள்ளத்தையே ஆட்டிப் படைத்தது..

 

 

 

தொடரும்..

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
 

@vsv4 ரெண்டு பேரும் லவ்வ பரிமாறிக்க போறாங்க. ஆரியனுக்கு ஆப்பு ரெடி

 

சூப்பர் 👌 👌 👌 👌 👌 🥰 


   
ReplyQuote

You cannot copy content of this page