All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 14

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 134
Topic starter  

அத்தியாயம்: 14

'ஹாஹ்ஹா.... ' என்ற சிரிப்புச் சத்தம் அங்கிருந்த ப்ரஜித்தையும் துகிராவையும் ஒருசேர திரும்பி இளவேந்தனை பார்க்க வைத்தன. 

 

பார்த்தார்கள் என்பதை விட முறைத்தார்கள் என்பது தான் சரி. ஏனென்றால் அவர்கள் இருவர் மட்டுமல்ல இன்னும் சிலரும் இருந்தனர். மீட்டிங் ஹாலில் இருந்தான் இளா.

 

ஒரு காஸ்மெட்டிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க,  இடையே கேட்ட சிரிப்புச் சத்தம் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனை விடவும் கடுப்பாகி முறைத்தது துகிரா. 

 

இருவரும் வைத்த கண் வாங்காது அவனைப் பார்க்க, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தொண்டையைச் சொருமி அதைக் கட்டுப்படுத்த எத்தனையோ முயன்றும்‌ ஃபோன் திரையில் தெரிந்த புகைப்படம் அவனின் சிரிப்பைக் கட்டவிழ்த்து விட்டது.

 

"மிஸ்டர் இளவேந்தன்." என்ற ப்ரஜித், 'என்னதிது.?' என்பது போல் சைகையில் கேட்க,

 

"ஸாரி பாஸ். ஸாரி கைஸ்." என வருத்ததைத் தெரிவித்து விட்டு, 

 

"Excuse me." என்ற படி அந்த ஹாலை காலி செய்து விட்டு வெளியே வந்தான் ஃபோனுடன். 

 

‘எப்படி இருந்தது முதல் நாள்?’ என அவன் கேட்டு அனுப்பிய வாட்சப் குறுஞ்செய்திக்குக் கோகோ அனுப்பி வைத்த புகைப்படம் அப்படி. 

 

ஒரு சென்ட் விளம்பத்தில் புயல் காற்று வீசும். ஒரு ஆண் காற்றில் கொடிபோல் பறப்பானே, அதை அனுப்பி ரிபேக்கா புயல் தன்னை தாக்கி விட்டதாகக் கூறியிருந்தாள். 

 

புன்னகை மாறா அதே முகத்துடன் அவளுக்கு அழைப்பு விடுத்தவன், "எப்படி ரிபேக்காவ தடுத்த.?" என்றான். 

 

"நா எங்க தடுத்தேன். புயல் வந்திட்டு போன பூஞ்சோல மாறி என்னப் பிச்சி எரிஞ்சிட்டாங்க. அவங்க கோவம் அடங்குற வரக் காத்துல நாந்தா பறந்தேன். என்னோட ராஜமாதா என்ன திட்டிட்டாங்க." என அழுகுரலில் கூற இந்தப் பக்கம் இளவேந்தன் சிரித்தான்.

 

ரிபேக்காவைப் பற்றி அவனுக்குத்தான் தெரியுமே. பார்க்க அமைதியாகச் சாதுவாக இருந்தாலும் வேலை என்று வந்து விட்டால் அவள் எடுக்கும் அவதாரமே வேறாக இருக்கும். எத்தனை முறை நேரில் பார்த்திருக்கிறான். இன்று சிக்கிய ஆடு கோகோ போலும்.

 

"ரொம்பலாம் லேட் இல்ல அத்தான். ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான் லேட்." 

 

"அடிப்பாவி.! ஒரு மணி நேரங்கிறது 60 நிமிடம்." 

 

"360 செக்கேன்ட். அதான?"

 

"பத்து நிமிடம் அஞ்சி நிமிசம்னா கூடச் சரின்னு சொல்லலாம். ஏ அவ்ளோ நேரம்.? முதல் நாள் வேலைக்கி போற. இப்படியா? என்ன பண்ண நீ? " என அடுத்தடுத்து கேள்வி கேட்க, அவனிடம் 'தூங்கி எழ நேரமானது' எனப் பொய் கூறி சமாளித்தாள். 

 

ஏனோ மனம் சத்யாவை பற்றிச் சொல்ல விடாது கள்ளத்தனம் செய்தது. 

 

"சரி முதல் நாள் எப்படி இருந்தது?."

 

"சத்தியமா நல்லாவே இல்ல அத்தான். என்ன அவ்ளோ நேரம் காய்ச்சி எடுத்த ரிபேக்கா மேம் தெய்வம்னு ஃபில் பண்ண வச்சிட்டாங்க என்னோட கொலிக்ஸ்." 

 

"ஏ?. கேலி பண்ணாங்களா?" என்றவனுக்கு காலையில் நடந்ததை விளக்கிக் கூறினாள்.

 

"புதுசா இந்த ஆஃபிஸ்க்கு யாரும் தேவையே இல்லன்னாலும் உன்ன நா அப்பாயின் பண்ண காரணம் உன்னோட இன்ஸ்டா வீடியோஸ் தான். அது எக்சலண்டா க்ரியேட் பண்ணிருந்த. உன்னோட கிரியேட்டிவிட்டி சூப்பரா இருந்தது. பட் அத மட்டும் வச்சி உன்னால இந்தக் கம்பெனில காலம் தள்ள முடியாது. உன்னோட திறம என்னென்னு காட்டனும். அதவிட முக்கியம் சின்சியாரிடி. ஒரு பண்சுவாலிட்டி இல்லாம விளையாடிட்டு இருந்தா இங்க உனக்கு வேலை கிடையாது. என்னால கான்ட்ராக்ட்ட கேன்சல் பண்ணி இப்பவே தூரத்தி விட முடியும். நா அத செய்யக் கூடாதுன்னா."

 

"இனி சின்சியரா இருப்பேன் மேம். சாரி." எனச் சின்னக் குரலில் கூறினாள் கோகோ. 

 

" குட். சின்னதா ஒரு கம்பளைண்ட் உம்மேல விழுந்தாலும் தயவு தாட்சண்யம் பாக்க மாட்டேன். கெட் அட்." என்க, கோகோ வேகமாக வெளியேறப் போனாள், 

 

"ஹேய்! வனிஷா யாருன்னு கேட்டு அவங்க கூட ஜாயின் பண்ணிக்க. வீக்லி ஒன்ஸ் உன்னோட ரிப்போர்ட்ட நீ எங்கிட்ட சப்மிட் பண்ணனும்." என்றாள் ரிபேக்கா கடுப்புடன். 

 

வெளியே வந்தவள் "ஹூ இஸ் வனிஷா மேம்?" என்க, எந்தத் தலையிடும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. சில நொடிகள் அவள் அங்கேயே நிற்க, அப்படி ஒருத்தி இல்லை என்பது போல் அனைவரும் தத்தம் பணியில் இருந்தனர்.

 

"ஓகே! நா ரிபேக்கா மேம்கிட்டயே கேட்டுக்கிறேன்." என உள்ளே சென்று கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தாள்.  

 

திட்டு வாங்கிய பின், 'நான் தான் அது...' என அவளைப் பின்னே வருமாறு அழைத்துச் சென்று, ஒரு ஐந்து பேர் கொண்ட குழுவைக் காட்டி விட்டு, எதுவும் சொல்லாது சென்றுவிட்டாள் வனிஷா.

 

"ஹாய்... ஐ ஆம் கோகோ." என வழியச் சென்று தன்னை அறிமுகம் செய்ய, வனிஷாவின் முறையான அறிமுகம் இல்லாதமையால் யாரும் அவளைக் கண்டு கொள்ளவில்லை. 

 

ஏன் ஒரு நாற்காலி கூடக் கொடுக்காதது கோகோவிற்கு எதுவோ போலானது. ஆனாலும், "லட்சியத்த அடைய பல தடைக்கற்கள் வரத் தான் செய்யும். அத படிக்கல்லா நினைச்சிக்க வேண்டியது தான்." என அவளே சென்று ஒரு நாற்காலியைத் தேடிப்பிடித்து லேப்டாப்பைத் திறந்து அமர்ந்து கொண்டாள். 

 

ஆனால், என்ன செய்வது என்று தான் தெரியவில்லை. மடிக்கணினியின் திரையை வெறித்தவளுக்கு நித்திரா தேவி வேலை கொடுத்தார். 

 

"சும்மா இருந்தா எனக்குத் தூக்கம் வந்திடுமே!  தூங்கிட்டேன் அத்தான். என்ன எழுப்பி விடாம அந்த வாணரங்க ரிபேக்கா மேம கூட்டீட்டு வந்து எம்முன்னாடி நிக்க வச்சிடுச்சிங்க. நாந்தூங்கி வழிய, புயல் காத்தோட சேந்து அட மழையையும் எம்மேல கொட்டிட்டு போய்ட்டாங்க." எனப் புலம்பு புலம்புவெனப் புலம்பித் தள்ளி விட்டாள். 

 

அதைக் கேட்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

"முதல் நாள்.‌ இதுக்கே இப்படின்னா. இன்னும் ஒரு வர்ஷம் எப்படி சமாளிப்ப." எனக் கேட்க,

 

"தெரியல. ஆனா நா பின் வாங்க மாட்டேன். கான்ட்ராக்ட்ல போட்டிருக்குற நாள் வர நா அங்க தா வேல பாப்பேன். வேலைய நல்லா கத்துக்கிட்டு சென்னைல இவங்களுக்கு போட்டியா ஒரு ஏஜென்சி தொடங்கி, விருது வாங்குவேன்." என்றவளின் தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு, ‘ச்ச… எவ்ளோ நம்பிக்கை இந்தப் பிள்ளைக்கி.’ என நினைக்கத் தோன்றியது. 

 

தெரியாத ஊரில் புரியாத மொழி பேசுபவர்கள் மத்தியில் புதிதாக ஒரு ஆள் சேரும்போது சில அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும், அதற்குப் பயந்து போனால், அடுத்த அடியை எடுத்துக் கூட வைக்க இயலாது. அதனால் அவளுக்குச் சில அறிவுரைகளை வாரி வழங்க, 

 

"போதும் அத்தான். உங்க அட்வைஸ்ஸ கேக்குற அளவுக்கு எங்கிட்ட தெம்பில்ல. இன்னைக்கி நா லன்ச் சாப்பிடவே இல்ல தெரியுமா.?"

 

"ஏ?"

 

"யாருமே என்ன 'கம் டூ ஜாயின் வித் அஸ்'ன்னு கூப்பிடல. அத்தோட நா சாப்பாடும் எடுத்திட்டு போகல" என்றவளிடம்,

 

"உனக்கு தா சமைக்க எல்லாத் திங்க்ஸ்ஸையும் நா வாங்கிக் குடுத்திருந்தேனே. ஏ செய்யல." என்றான் வேகமாக. 

 

உடனடியாகச் செய்து சாப்பிடவென அன்றே வாங்கி கொடுத்து விட்டுத் தான் வந்தான். அருகில் இருக்கும் சூப்பர் மார்கெட்களுக்கு அழைத்துச் சென்று சில அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடத்தையும் காட்டியிருந்தான்.

 

அப்படியிருக்க ஏன் சாப்பாடு எடுத்துச் செல்லவில்லை என்க,   

 

"டிப்பன் பாக்ஸ்ல எடுத்திட்டு போனேன் தான். பட் அத சத்யாட்ட குடுத்திட்டேன்." என்றுவிட்டு நாக்கை கடவாய் பற்களுக்குள் வைத்துக் கொண்டாள், சத்யா‌ பெயரைச் சொல்லியதால்.

 

"யாரு சத்யா.? உன்னோட ஃப்ரெண்ட்டா!" எனக் கேள்வியைச் சரியாகக் கேட்டு, பதிலயும் சொல்லி அவனே அது பெண்ணென நினைத்துக் கொண்டான். 

 

"யாரு அந்தப் பொண்ணு?"

 

'பொண்ணா?' என விழி விரித்தவள்,

 

"அந்தச் சத்யா எப்டி உனக்குப் பழக்கம்னு கேட்டேன்?. எந்த ஊரு?. நிச்சயம் வேல பாக்குற இடத்துல பழகிருக்க மாட்ட. ட்ரெயில் பாத்தியா? இல்ல அப்பார்ட்மெண்ட்ல பழக்கமா?" என்றவன் சடுதியில் அவளுக்குத் தந்தையாக அண்ணனாக மாறிப் பல கேள்விகளைக் கேட்டான்.

 

"ட்ரெயின் அத்தான். அதுவும் போறப்ப மட்டும் தான். தமிழ்ல பேசுனா. அதா பழகினேன்." என்றாள் குதுகலத்துடன். 

 

அவன் தான் யார் என்று கேட்டு ஆப்ஷன் தந்திருக்கிறானே. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தால் போதாது. ஏன் ஆப்ஷனில் இல்லாத ஒன்றைச் சொல்லிச் சத்யா யார் என்று விளக்கம் குடுப்பானேன். அதனால் வந்த சந்தோஷம்.

 

அப்போது கண்ணாடி கதவுகளுக்குப் பின் அனைவரும் எழுந்து நிற்பது தெரிந்தது. அது மீட்டிங்கை முடித்து விட்டனர் என்று சொல்லியது. 

 

மற்றவர்கள் வெளியேறும் முன் வெளியேறிய துகிராவிற்கு இளவேந்தன் அந்த வளாகத்தில் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தது தெளிவாகக் காதில் கேட்டது. இல்லை அவள் கேட்க வேண்டும் என்றே பேசினானா?. தெரியாது.

 

"சட்டர்டே லீவ் தான.?"

 

"ம்..."

 

"நாம வெளில போலாம். நீ மும்பைல பாக்க வேண்டிய இடம் நிறைய இருக்கு. சனிக்கிழம மார்னிங் உன்ன வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்." என்க, துகிரா அவனை முறைப்பதை விடவே இல்லை.

 

இவன் அவளுக்குத் தன் முகத்தைக் காட்டாது முதுகைக் காட்டிக் கொண்டு சிரித்து சிரித்து பேச, இவள் உக்கிரமாக முறைக்க, என்ன நடக்கிறது இவர்களுக்குள் என்ற கேள்வி நமக்கு மட்டுமல்ல ப்ரஜித்திற்கும் எழுந்திருக்க வேண்டும்‌. 

 

"என்னாச்சி துகி?. உனக்கு டென்னிஸ் க்ளாஸ் இருக்குன்னு சொன்ன. கிளம்பளயா?" என்க,

 

"என்னோட கார் ரிப்பேர்." என்றதும், ப்ரஜித் இளவேந்தனை அழைத்தான்.

 

ப்ரஜித் வெளியே வருவதை பார்த்து அழைப்பைத் துண்டித்து விட்டுப் பவ்யமாக அவனின் முன் வந்து நிற்க, ப்ரஜித் துகிராவை வகுப்பில் விடச் சொன்னான்.

 

"நா டாக்சி புக் பண்ணி மேடம பத்திரமா அனுப்பி வைக்கிறேன் பாஸ்.? என்க,  

 

"ஏ? உ பைக் என்னாச்சி?" என்ற துகிராவிற்கு பதில் சொல்லாது,

 

"நான் கால்டாக்சி புக் பண்ணிட்டேன் பாஸ். டாக்ஸி நம்பர்..." என்றவனிடம், 

 

"டாக்ஸி புக் பண்றதா இருந்தா நானே புக் பண்ணிருப்பேன். I have a phone. எனக்கு எப்படி டாக்ஸி புக் பண்றதுன்னு தெரியும்." எனக் கோவத்துடன் தடக் தடகென நடந்து சென்றாள். 

 

இளா, சின்னத் தோள் குளுக்கலுடன் தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.  

 

 ப்ரஜித்திற்கு இந்த இருவருமே வித்தியாசமாகத் தெரிந்தனர். 

 

அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். 

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 15

https://kavichandranovels.com/community/topicid/195/

 


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 60
 

@vsv11 கோகோ 🤣🤣🤣 அந்த சத்யன் பச்சை விழிகாரன் நீ சைட் அடிச்ச கதை எல்லாம் அத்தான் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லையா 🤭

அப்புறம் அம்மணி செம்மத்தையா வாங்கி கட்டி இருப்பாங்க..துகிக்கு ஏன் இளா மேல காண்டு 😳😂 ஆல்ரெடி கனெக்ஷன் வெச்சி இருபீங்களோ அதான் இளா அவள புகைச்சல் கொடுத்துட்டு அசால்ட்டா போறான்.. நடுவில் குழம்பிய குட்டையான ப்ரஜித் நிலை 👉😵😫🤥😲🤯


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 134
Topic starter  

@vsv4 சைட் அடிச்சத சொன்னா வீட்டுல அடி விழுமே 😜😜😜 நன்றி தேவிசை சிஸ் 🥰🥰🥰🥰


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 60
 

@vsv11 இளா கிட்ட சொன்னா தப்பில்லையே 😂


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 134
Topic starter  

@vsv4 காதல்ன்னு வந்திட்டா அது ரகசியமாத்தா இருக்கும் சிஸ். 💞💞💞


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 60
 

@vsv11 உண்மை தான் 😌


   
ReplyQuote

You cannot copy content of this page