All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 05

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம் 05

இவ்வாறு நாட்கள் அதன் போக்கில் செல்ல சனிக்கிழமை தனது ஊருக்கு பயணமானாள் சகஸ்தா

அதன் பின் தான் ரிஷியின் அழைப்பை  தவிர்த்தது முதல் என அனைத்தையும் எண்ணியபடி தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலை கதிரவன் தன் பொற்பாதங்களை பூமியில் பரப்பியதும் துயில் கலைந்து எழுந்தவள் குளித்து அடர் நீலம் மற்றும் வெள்ளை நிற சுடிதார் அணிந்து வேலைக்குச் செல்ல ஆயத்தமானாள்.

ஸ்ரீ தனது அத்தையின் வீட்டிற்கு சென்றிருப்பதால் வீடே அமைதியாக இருந்தது.

பின் வேணிடம் சொல்லிக் கொண்டு பஸ் தரிப்பிடம் வர அவள் முன் வந்து நின்றது கருப்பு நிறக் கார்.

முன் கதவினை திறந்து விட்டு அவளையே பார்த்தபடி இருந்தான் ரிஷி.

அவ்வளோ மறுத்துக் கூற வர ஏறு என கர்ஜித்தான்.

சஹஸ்தாவோ அதிர்ச்சியும் பயமுமாக காரில் ஏற காரும் ரிஷாட் நோக்கிச் சென்றது.

பயணமும் மிகவும் அமைதியாகவே சென்றது.

கார் ரிசாட்டை அடைந்ததும் இருவரும் காரில் இருந்து இறங்கினர் இருவரும் ஒன்றாக வந்திரங்கியதை மொத்த அலுவலகமும் பார்த்தது.

சகஸ்தாவோ பக்கவாட்டில் அவனைப் பார்த்தபடியே வந்தாள் தன் இருக்கைக்கு வந்தவள் வேலையில் மூழ்கிப் போனாள்.

மதிய உணவு இடைவெளியில் ரிஷியின் கண்கள் சகஸ்தாவை தேட எங்கிலும் அவள் இல்லை

அலுவலகர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வறையை நோக்கிச் செல்ல சகஸ்தாவின் சிரிப்பே அவனை வரவேற்றது கண்ணாடி தடுப்பாலான அறையே அது.

கரனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் அங்கு.

அவளையும் அவள் பேசுவதையும் ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கரன்.

ரிஷியின் கண்கள் கோபத்தை காட்ட வந்த வழியே திரும்பி தனக்கான அலுவலக அறைக்கு வந்தவன் தண்ணீரைப் பருகி கோபத்தை குறைத்துக் கொண்டான்.

குறைக்க முயன்று கொண்டிருந்தான் என்பது பொருத்தம்.

அவள் மீது அப்படி ஒரு காதல் எப்படி அவள் மீது இவ்வளவு காதல் என அவனுக்கும் புரியவில்லை ஆனால் அவளை மிகவும் அவனுக்கு பிடிக்கும்.

அவள் யாருடனும் இயல்பாக பேசினாலும் கோபம்.

அவள் தனக்கே தனக்கானவள் இப்படி தன்னூள் வந்தாள் தான் இப்படி நேசிக்க என்ன காரணம் என எண்ணியபடி தனது உதவியாளரான செரினுக்கு அழைப்பெடுத்தவன் "சகஸ்தாவை கேபினுக்கு வர சொல்லுங்க என்றான். உதவியாளரும் ஓகே சார் என்றாள்.

சிறிது நேரத்தின் பின் சகஸ்தா, சப்தரிஷி என பெயர் பொறிக்கப்பட்ட அறையினுள் நின்றாள்.

அவளை நிமிர்ந்து கூட பார்க்காது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.

கால் மாற்றி நின்று நின்று பார்த்தவள் சார் என அழைக்க நிமிரவே இல்லை அவன்.

கஞ்சி சட்டை இப்ப என்னத்துக்கு வரச்சொன்னானோ தெரியல என அவனுக்கு திட்டிய படி நின்றாள்.

"பாஸ் என அழைக்க அவளை நிமிர்ந்து அழுத்தமாக பார்த்தபடி சிட் என்றான்.

அவளும் ப்பா.... நின்று நின்று கால் வலிக்குது என மனதில் எண்ணியபடி அமர்ந்தாள்.

அவளை அழுத்தமாக பார்த்தவன் "ஆபீஸ்ல உன்ன பத்தி கோஷிப் போகுது தெரியுமா???" எனக்கு கேட்க....

இல்ல என தலையாட்டினாள் எங்கள நம்பித்தான் உன்னை உங்க வீட்டாக்கள் வேலைக்கு அனுப்பிருக்காங்க.

"நீதான் லவ் பண்ணல என்னோட லவ்வ ஏற்றுக்கொள்ளளல நீ யாரோட பேசினாலும் கோபம் கோபமா வருது என அவன் சொல்ல"......

அவள் மனமோ அதுக்கு "நான் என்னடா பண்றது" என எண்ணிக் கொண்டாள்.

மேலும் தொடர்ந்தவன்..... "கரண் அவன்ட பார்வையே சரி இல்ல அவனோட பல்லை காட்டி பேசுற" என்ன திட்ட.....

"திஸ் இஸ் டூ மச் பாஸ்" நான் யாரோட பேசினா உங்களுக்கு என்ன? என்னோட சுதந்திரத்தில தலையிட நீங்க யாரு?"என அவளும் கோபமாக கேட்க......

விட்டானே அரையொன்று அவளுக்கு

இன்னொரு வாட்டி இப்படி சொல்லு, அப்ப தெரியும் நான் யாரென்று ?!!!!!

" ஜடம் ஜடம் லவ் வரலைன்னு சொல்ற" என திட்ட....

அவ்ளோ கன்னத்தை பொத்தியபடி அவனை வெறித்துப் பார்த்தாள்.

அவள் பார்வையில் என்ன உணர்ந்தானோ அவளுக்கு கை நீட்டியது அப்போது தான் உரைத்தது.

ஒரே எட்டில் அவளை அடைந்தவன் அவளை தன் கைவளவில் வைத்து அவள் கன்னத்தை தொட அவன் கையைத் தட்டி விட்டவள் அவனையும் தள்ளிவிட்டு.....

கதவருகில் செல்ல..." சாரி டால் உன்னை ரொம்ப புடிக்கும்டி எப்படி இங்க வந்தேன்னு தெரியல....." என அவளை அணைத்துக் கொண்டான்.

அவள் அவனை அணைக்கவும் இல்லை விலக்கவும் இல்லை கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

பின் அவனிடம் இருந்து விலகியவள் "உங்கள இந்த ஆபீஸ்ல ஓனராகவும் வேணி ஆன்டி மகனாகவும் தான் தெரியும்.

உங்கள பத்தி எதுவுமே எனக்கு தெரியாது நான் எப்படி உங்க லவ் ஏற்றுக்கொள்றேது முன்ன பின்ன உங்களோட நா பழக்கம் கூட இல்லை.

வீட்ல கூட ஏதோ எதிரிய பாக்குற மாதிரி தான் இருப்பீங்க எந்த பாயிண்ட்ல என்னில் லவ் வந்துச்சுன்னு சுத்தமா எனக்கு தெரியல.......

ஆனாலும் சொல்றீங்க உங்களோட நான் பேசினது கூட கிடையாதே எப்படி நான் இத நம்புறது.

என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என் ஃபாஸ்ட் லைஃப் தெரியுமா? பணக்காரங்களுக்கு லவ் எல்லாம் டைம் பாஸ் இப்போத்தைய காலத்துல......

ஆரம்பத்தில் இருந்து நான் உங்க வீட்ட வந்து தங்கியிருக்கிறேன் உங்களுக்கு புடிக்கல ஆபீஸ்லயும் அதே போல தான் இதுநாள் வரைக்கும் ஒரு நாள் கூட நான் சாப்பிடும் போது நீங்க நீங்க....உங்க வீட்ல. என் கூட உட்கார்ந்து சாப்பிட்டதில்லையே

நான் இருந்தாலே சாப்பிட மாட்டீங்க போயிருவீங்களே உங்க அழகுக்கும் படிப்புக்கும் உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே என நீளமாக பேசியவள்".,

இப்ப கூட உங்க லவ்வ என் மேல திணிக்க தான் பாக்கிறீங்க கட்டாயப்படுத்தறீங்க லவ் அது இங்கிருந்து வரணும் என தன் இதயப் பகுதியை தொட்டுக் காட்டியவள்.

இப்படியான லவ் நீண்ட நாள் நிலைக்குமா? ஆரம்பத்துல நல்லதா இருக்கும் ஆனா பாருங்க லைஃப் என்று வரும் போது நமக்குள்ள இருக்கிற வேற்றுமை தான் தெரியும். அப்போ ஏற்படுற மனவலிக்கு இது எவ்வளவு பெட்டர்".......என பேசியவள் அறையை விட்டு வெளியேறினாள்.

குழந்தைத்தனமாக பேசுபவளிடம் இப்படி முதிர்ச்சியான பேச்சை அவன் எதிர்பார்க்கவே இல்லை......

இருக்கையில் வந்து அமர்ந்தவன் உண்மைதானே தன்னைப் பற்றி என்ன தெரியும் அவளுக்கு என எண்ணியவன் எப்படி இருந்தாலும் அவளை விடும் எண்ணம் அவனுக்கு துளியும் இல்லை.

அன்று மாலை ஆபீசில் இருந்து வந்தவள் தனதறையிலேயே புகுந்து கொண்டாள்.

வேணி அழைக்கவே தான் இரவு உணவிற்கு கீழே வந்தாள்.

அவள் கண்ணம் ஒரு கைத்தடம் பதிந்து சிவந்து போய் இருந்தது.

ரிஷியும் அன்று இரவுணவுக்கு வந்தான் அவனைக் கண்டதும் தலையை குனிந்து கொண்டாள்.

உணவை முடித்துக் கொண்டு மீண்டும் தனது அறையினுள் நுழைந்து கொண்டாள்.

ரிஷியின் பார்வை சகஸ்தாவை தழுவுவதை ஸ்ரீயும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

"ரிஷி நாளைக்கி ரஞ்சித் வாரார். ஏர்போர்ட் போவோம்" என்றாள் ஸ்ரீ.

அவனும் "போவோம்க்கா" என்றான்.

அடுத்த நாள் ஸ்ரீயை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் கிளம்பி நான் றிஷி.

அன்று ஆபீஸ் சென்ற சகஸ்தா அமைதியாகவே இருந்தாள். தனது குடும்பத்துடன் அவ்வப்போது அலைபேசியில் பேசிக் கொள்வாள்.

ஏர்போர்ட் சென்றவர்கள் ரஞ்சித்தை அழைத்துக் கொண்டு மறுநாளே ஊர் வந்து சேர்ந்தனர்.

சில நாட்கள் சென்றதும் ரஞ்சித்தும் சகஸ்தாவுடன் இயல்பாகவே பேசிக் கொள்வான் சில நாள் அமைதியாகவே இருந்தவள் பிறகு பழையபடி மாறிக்கொண்டாள்.

"ம்மா அத்தை வீட்ட போய் வாரோம் என்றபடி ஸ்ரீ கணவனுடன் கணவனின் வீட்டிற்கு செல்ல தயாரானாள்.

வேணியும் உணவு பண்டங்கள் செய்து மகளை அனுப்பி வைத்தார்.

அன்று ஆபிஸில் இருந்து வந்த ரிஷியை அழைத்தார் பிரகாஷ்.

ரிஷியும்....ப்பா என்றபடி அவர் முன் அமர.....

"நுவரெலியால ரோயல் ரிசார்ட்ல ஏதோ பிரச்சினை போகுது போல யாரோ சூசைட் பண்ணிக் கொண்டாத ஹால் வந்துச்சி" என்னன்னு பாத்தியா எனக்கு கேட்க....... 

தந்தையை எதுவும் சொல்லாது பார்த்தவன் "எல்லாம் கிளியர் பண்ணிட்டேன்" என்றான்.

பின் ஒரு முறை அங்க போனா நல்லம் என அது பற்றி தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர்.

இதோ அத்தியாயம் 05
எப்படி இருக்குனு சொல்லுங்க 😁


   
ReplyQuote

You cannot copy content of this page