All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 12

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Member Author
Joined: 3 months ago
Posts: 20
Topic starter  

 

 

முத்தம் 12

மறுபக்கம் வைனவேந்தன் "சரி அப்ப எப்பையும் போல வேலைகளை ஆரம்பிச்சுட வேண்டியது தான். சம்மந்தி வந்து கல்யாணத்த நிறுத்துங்கனு சொன்னதும் தூக்கிவாரி போட்டது ஜெயா. என்ன யோசனை ஜெயா?" என மனைவி என்ன சிந்தித்து வருகிறார் என்பதை கேட்க ஆரம்பித்தார். "இப்ப மண்டபம் பிடிக்கணும். அதுக்கு நம்ம காசு கொடுக்கணும். ஸ்கந்தன் வீட்டுல மணி போடணும். ஏனா எல்லா வேலையையும் நம்ம பார்க்க முடியாதுல. அதோட, நந்தகி கொடுத்த வாக்கை நா காப்பாத்தாமல் போய்ட்டேனோனு தோணுது." என புலம்பினாள். "பழைய திருடி கதவ தறடினு ஏன் நீ இப்படி உன் பையன் வாழ்க்கையை நாசம் செய்ய நினைக்கிற?" என்றதும் "நா அப்படி ஏன் நினைக்க போறேன்? நந்தகிக்கு நா கொடுத்த வாக்கு." "நீ கொடுத்த வாக்கு தான் ஆனா, உன்னால ஞாபகம் வச்சுக்க முடியலையே? அவ மகள் வந்து சொல்லும்போது தான் நீ கொடுத்த வாக்கை உனக்கு தெரியுது. இப்ப என்னடானா.. நான் அவளை ஏமாத்திட்டேன், என் பையன் வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு யோசிக்கிறேன், அப்புறம் எதுக்கு சானக்கியாவ பொண்ணு பாக்க போறோம், சண்டை வர வைக்காத ஜெயா?" "சண்டை வந்தா வரட்டும், நான் என் வாக்கை காப்பாத்தி ஆகணும். ஆராதனாவ என் பையனுக்கு நான் கட்டி வைக்க எந்த எல்லைக்குனாலும் நான் போவேன்." இறுதியாக தாயார் பேசிய வார்த்தைகளை கேட்டதும் "ஜெயு! என் வாழ்க்கை உங்களுக்கு பகடைகாயா போயிருச்சா? காலையில் என்னடானா சானக்கியாவோட அப்பா வந்து கல்யாணம் வேணாம்னு சொன்னாரு, அதுக்காக என்னன்னு அவகிட்ட போய் கேட்டுட்டு அவளை சமாதானப்படுத்தி பழைய படி நிலைக்கு கொண்டு வந்தால். இப்போ நீங்க என்னடான்னா, இப்படி பண்ணிட்டு இருக்கீங்க! இப்படி ஆளாளுக்கு சண்டை போட்டுட்டு இருக்கிறதுக்கு நான் கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணாமலேயே இருந்துட்டு போயிடுறேன்." அவனுடன் இருந்த சானக்கியா அவனை பார்க்க ஜெயவள்ளியின் பார்வை அப்போது தான் சானக்கியாவின் மீது பதிந்தது. "அதி..சானக்கியா வா. வந்து உட்காரு நாளைக்கு கடைக்கு போய் புடவை எடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் என்ன மாதிரி புடவை எடுக்கணும் எப்படி எடுக்கணும் என்ன எதுன்னு நீங்க தான் முடிவு பண்ணனும். மாதங்கி!" என தன் மகளை கூப்பிட்டார். "ஹான்! வரேன்மா என்ன விஷயம்?" என மாதங்கி வந்து தந்தை பக்கம் அம்ர்ந்து தாயார் எதற்காக அழைத்தார் என்பதை கேட்பதற்கு வந்துவிட்டாள். "ஜெயூ....

!! நான் சானக்கியாவை தான் கட்டிப்பேன். உங்க வாக்கை காப்பாத்த என் காதலை நீ கொச்சைப்படுத்தி பார்க்கிறீங்க? நான் உங்க பையன் தானா? இல்ல வேற யாராவது என்னை பெத்தாங்களா? உண்மைய சொல்லுங்க ஜெயூ! அம்மாங்க யாரும் தான் பெத்த பையனுக்கு கெட்டது நினைக்க மாட்டாங்க, உங்க லூசு தோழி என்னடானா ஏதோ நீ கொடுத்த வாக்குக்குன்னு சொல்லி அந்தப் பிள்ளை ஏற்கனவே கல்யாணம் முடிச்சுட்டு வந்தவனையும் விட்டுட்டு. என் பின்னாடி ஆர்யன் ஆர்யன்னு சுத்திகிட்டு திரியுறா, நீங்க என்னைடானா அவ சொன்ன மாதிரி பொம்மலாட்டம் பொம்மை மாதிரி ஆடுறீங்க? சத்தியத்துக்கு ஏத்த மாதிரி என் வாழ்க்கை கெடுத்துக்கிட்டே இருங்க? நீங்க உண்மையிலேயே என்னை பெத்தவ தானா?" தான் பெற்ற மகன் இத்தனை தூரம் கோபப்பட்டு பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்ட ஜெயவள்ளிக்கு அழுகை பொங்கி வந்தது. "உன் அம்மா பத்தி என்ன வார்த்த டா சொல்லிட்ட உன் அம்மா கல்யாணம் ஆனா அஞ்சு வருஷமா.. நீ பிறக்கறதுக்கு முன்னாடி இவ்வளவு கஷ்டப்பட்டானு எனக்கு மட்டும்தான் தெரியும். அதோட ஜெயவள்ளி, சத்தியம் கொடுத்த நீயே சாத்தியத்தை மறந்துட்ட. சானக்கியாவை கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுறான், அவளை காதலிக்கிறான், அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு போகட்டுமே. ஆராதனாவுக்கு அவள் காதலிச்ச அந்த இன்னொரு பையனுக்கு கல்யாணம் பண்ணிவைப்போம். நான் சொல்றது சரிதானே அதி?" "அப்பா அத பத்தி பேசதான் பா இங்க நாங்க வந்தோம். சானக்கியா கிட்ட ஒரு பெரிய ஐடியா இருக்கு அதை கரெக்டா செஞ்சா போதும். ஆராதனா நான் தான் நினைச்சுட்டு அமுதன கண்டிப்பா." வைனவேந்தனுக்கு ஒரு கேள்வி எழுந்தது "அமுதன் நகுலன்னோட ஃப்ரெண்டு, அவனா ஆராதனை காதலிச்சா?" "காதலிச்சானாவா? அவ தான் உயிர்னு இன்னும் வாழ்ந்துட்டு வரான் பா. அவளதான் கல்யாணம் பண்ணிட்டான், ஆனா அப்போ அந்த பொண்ணு இவன காதலிக்கல போல ஏதோ கனவுகானு சொல்லி காண்ட்ராக்ட் பெயரில் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிருக்காங்க. சாணக்கியா சொல்ற திட்டம் வேலை செய்யணும்னா.. அதுக்கு மாதங்கி தான் உதவி பண்ணனும் பா. நாங்க இப்போதான் ரஞ்சனா மேம் வீட்டுக்கு போய்ட்டு வந்தோம். அங்க என்ன நடந்துச்சுன்னா.." என அதிரூபன் ரஞ்சனாவின் வீட்டில் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். "சானக்கியாக்யா உன்னோட ஐடியா என்னது?" என மாதங்கி கேட்க அவளோ அவளது திட்டத்தை சொன்னாள். "கல்யாணம் நடக்கிற அன்னைக்கு நம்ம மூணு பேரும் ஒரே நிறத்துல புடவை கட்டி இருக்கணும். அப்புறம் முகத்தை மட்டும் மூடிக்கணும். ஏன்னா.. ஆராதனா அமுதனை கல்யாணம் பண்ணிக்க போறானு அவளுக்கு தெரியக்கூடாது. அவள பொருத்தவரைக்கும் அதிருபனை கல்யாணம் பண்றதா தான் நினைச்சுட்டு இருப்பா. இந்நேரம் கூத்தடிச்சிட்டு இருப்பா, அதுக்கு ஏத்த மாதிரி நம்ம முகங்களை மூடி இருக்கிறது நல்லது. போட்டோஸ் டயம் நம்ம பார்ட்னர்ஷோட சேர்த்து ஈஸியா போட்டோ எடுத்துகலாம். நிச்சயதார்த்தம் அன்னிக்கு தான் என்ன பண்ணனும்னு எனக்கு இன்னும் ஐடியா விளங்கல." இப்படி பேசும் போது "ஆனா.. நம்ம இந்த விஷயத்தை அமுதன்கிட்ட சொல்லவே இல்ல." என்றதும் "மச்சான்!" "அண்ணா!" என்ற சத்தத்தோடு பிந்துவும் அமுதனும் நுழைந்தார்கள்.

 

*****

ஆராதனாவோ தன்னுடைய அறையில் இருந்த அவளது தாயாரின் புகைப்படத்தை பார்த்து "அம்மா.. நா ஆர்யன் மாமாவுக்கு மனைவியாக போறேன். அம்மு.. அவனை நா பார்த்ததும் என்னவோ செஞ்சதுமா? ஆனா.. அந்த உணர்வு, உரிமை ஏன் ஆர்யன் மாமாகிட்ட எனக்கு கிடைக்காமல் போனதை நினைச்சா சங்கடமா இருக்கு. நா ஆர்யன் மாமாவுக்கு மனைவியான பிறகு என்னுடைய கனவை பத்தி சொல்லுவேன். எனக்கு ஹீரோயினாக ஆசை. தி டெப்பியூட் ஹீரோயின் ஆப் தி இயர் கோஸ் டு ஆராதனானு அறிமுக நடிகை விருது வாங்கணும். என் லட்சியத்துக்கு இனி தடை இல்லவே இல்லமா." என மது அருந்தி சந்தோஷத்தில் இருந்தாள். "அமுதன் மை அம்மு..நா உன்னை பார்க்கணும்." என்றதோடு தூங்க ஆரம்பித்தாள். பல நாட்களுக்கு பின் தன் தங்கையை பார்த்த வைனவேந்தன் மகிழ்ந்து புன்னகையோடு அவளை வரவேற்றார். பின் சானக்கியாவின் திட்டத்தை கூறுவதற்கு முன் பிந்துவிடம் அதிரூபன் "அத்த இந்த அமுதன் ஆராதனாவை காதலிக்கிறான். அவளை கல்யாணமும் செஞ்சான். பிறகு, அந்த பொண்ணு பெத்த அம்மா இறந்து போகவும் இரண்டு பேரும் பிரிஞ்சுபோய்ட்டாங்க. இப்படி கைபிடிச்சவளை கைவிடலாமா? அதோட இந்த சானக்கியா வாழ்க்கையை நாசம் செஞ்சு கெடுத்து வைச்சிருக்கான்." என பிள்ளையார்சுழியை போட்டான். 'ரூபன்! செம்ம இப்படியே பேசி பிந்து ஆன்டியை கவுத்துட்ட, நா என் ஐடியாவை சொல்லிடுவேன்.' என மனதளவில் சானக்கியா சந்தோஷமடைந்தாள். "ஆ! அம்மு என்ன நீ இவ்வளவு கேவளமா நடந்திருக்க? சொல்லுடா! அதி சொல்றது எல்லாம் உண்மையா?" என பிந்து அமுதனை இரண்டு கன்னங்கள் பளுக்க அடித்தவர் பின் அழுது கொண்டே "ஒரே மகன்னு ரொம்ப செல்லம் கொடுத்து கொடூரன்னாக்கிட்டனு அந்த மனுஷன் என்னை அடிப்பாரே! ஒரு பொண்ணை உடலளவு நாசம் செஞ்சு இன்னொரு பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரியாமல் அவங்க வாழ்க்கையை கெடுத்த பாவி என் வயித்துல பிறக்காமலே இருந்திருக்கலாம்." கண்ணீரை துடைத்தபடி மீண்டும் "யாரை நீ கல்யாணம் செஞ்ச? அந்த பொண்ண உண்மையாவே காதலிச்சியா? கேள்வி மேல கேள்வி எழுப்புறேன் அசைவும் இல்லாமல் இருக்க." என மீண்டும் மீண்டும் அடித்தவர் "பிந்து! நிறுத்து நாய் மாதிரியா இவனை நீ அடிப்ப?" என ஜெயவள்ளி கேள்வி கேட்டார் "இவனை நா தலைமுழுகாமல் இருக்கேனேனு சந்தோஷப்பட்டுக்கோங்க. அண்ணி, இந்த சானக்கியாவை மாதங்கி இடத்துல இவேன் வைச்சு பார்த்திருந்தால் மிருகத்தனமான காரியம் செஞ்சிருக்கவே மாட்டான். நா கேட்ட கேள்விக்கு பதில் வரவே இல்லை?" என இறுதியாக மகனை பார்த்து கேள்வி கேட்டார். "ஆமா!!! ஆரு என் உயிர்! என் உலகம்! நா அவளோட ஒன்னா வாழ ஆசைப்படுறேன். என்னோட கனவுக்கு அதிரூபனை விட ஆராதனா தான் ஊன்றுகோளா இருந்தால். அவள் தான் எனக்கு இணை. உங்க கேள்விக்கு விடை கிடைச்சிடுச்சு. என்னை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க." என்றதோடு அவ்விடம் விட்டு செல்ல போகும் ஆணவனை தடுத்தது மாதங்கியின் குரல் "அண்ணா!" என்ற அந்த வார்த்தை அமுதனை முதல் முறையாக பாதித்தது "என்னை அண்ணானு கூப்பிடாத மாது. நா அந்த அந்தஸ்துக்கு தகுதி இல்லாதவன்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றான். 

 

அமுதன் பின்னே அதிரூபன் சென்றான். "மச்சி நில் டா ! ஏய் நில் டா! என்ன உனக்கு இப்ப தான் ரோஷம் வந்துச்சா? நான் பாட்டுக்க கூப்பிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு நடந்து போயிட்டே இருக்க? உன்கிட்ட பேசுறதுக்கு போன் பண்ணி வர சொல்லலாம்னு இருந்தேன். நீயும் அத்தையும் வந்து இருந்தீங்க உங்க கிட்ட பேசலாம்னு பார்த்தேன் இப்படியா பண்ணுவ? இப்போ உனக்கு ஆராதனாவை கல்யாணம் பண்ணி வச்சா, நீ ஆராதனா சந்தோஷமா வச்சுப்பியா அதான் என் கேள்வி." "இதுதான் உன் கேள்வினா அப்புறம் எதுக்கு அம்மா கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்ன?" இப்படி கேள்வி கேட்ட அமுதனை பார்த்து "சொல்லாம என்ன பண்ண சொல்ற! நீ பண்ண எல்லா அட்டூழியம் அவங்களுக்கு தெரிஞ்சாகணும். அதோட கடந்த காலம் எல்லாத்தையும் எப்படி சானக்கியா என்கிட்ட சொன்னா. அதே மாதிரி எங்க வாழ்க்கைல நீ வராம இருக்கணும்னா, அந்த ஆராதனா உன் வாழ்க்கையில வரணும். அதுக்கு தான் நா பிந்து அத்தைகிட்ட சொன்னேன். மகன் இந்த மாதிரி கேவலமான விஷயம் செஞ்சிருக்கான்னு வெளிய இருந்து மூன்றாவது மனுஷங்க மூலமா தெரிஞ்சிட கூடாது. தெரிஞ்சா இப்ப விட ரொம்ப மனசு உடைஞ்சு போய் உன்ன திட்டுவாங்க போதுமா. நா கேட்ட கேள்விக்கு பதில்?" என அதிரூபன் முடித்தான். "எனக்கு ஆராதனாவ கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப ஆசை மச்சான். ஒரே ஒருக்க அவள என் கூட சேர்த்து வை. நான் அவளை எப்படி எல்லாம் பாத்துக்கணுமோ அப்படி எல்லாம் பாத்துப்பேன். அவ லட்சியத்தை நிறைவேற்றுவேன் என் கனவும் சேர்ந்து நிறைவேறும்." "சரி அத்தையை நான் சமாதானப்படுத்துகிறேன். நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. அப்புறம் ஆராதனா கிட்ட அவ என்ன கல்யாணம் பண்ணிக்கிற தான் சொல்லிட்டு வந்து இருக்கேன். ஏன்னா அப்போதான் உனக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும். இது எல்லாமே மாதங்கியோட ஆசைடா, அதோட அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு சானக்கியா போட்ட பிளான் எல்லாத்தையும் நான் உனக்கு போன்ல ஆடியோ கொடுக்கிறேன் கேட்டு தெரிஞ்சுக்கோ. இப்போ நீ கிளம்பு. எனக்கு உன் மேல கோவம் இருந்துச்சு. ஆனால் மாதங்கி அண்ணன் சொன்னதுக்கு நீ சொன்ன வார்த்தைகள் அண்ணான்னு கூப்பிடுற தகுதிக்கு நான் ஆள் கிடையாதுன்னு.. அப்போ தெரிஞ்சுக்கிட்டேன் டா, நீ உண்மையிலேயே திருந்திட்டனு. பழையபடி என் நண்பன் எனக்கு கிடைச்சுட்டான். அதனால எங்க உன் தோழன் பேசமாட்டானு நினைக்காத. உன் தோழன் எப்பயும் உன் கூட தான் இருப்பேன். சரியா, உன் மனசுல என்ன நினைக்கிறேங்கறது எனக்கு புரியுது. நான் அப்போ வீட்டுக்குள்ள போயி மாதங்கி கிட்ட பேசிட்டு, நாளைக்கு புடவை வாங்குவதற்கு கடைக்கு கூப்பிடுறேன். நாளைக்கு பாக்கலாம்." என்றதோடு வீட்டினுள் சென்றான். 

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘

 


   
ReplyQuote

You cannot copy content of this page