All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள் 7

 

VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்
(@vsv6)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 7

 

துகிலன் சொன்ன வார்த்தையில் பேயறைந்தார் போன்று நின்று விட்டனர் மற்ற இருவரும். 

 

சகுந்தலாவிற்கோ மயக்கமே வருவது போல இருந்தது.. 

 

“டேய்ய்ய்.. அவிரா.. அவிரா.. பிடி டா.. என்னைய்ய” என அலறிக் கொண்டே வேகமாக சரிந்து விழப்போனவரை சட்டென்று தாங்கிக் கொண்டான் அவிரன்.. 

 

“அம்மா என்னாச்சி ம்மா என்ன பண்ணுது?..” என சற்று பதட்டமாக கேட்க, 

 

“அப்படியே உங்க அம்மாவை கைத்தாங்கலா சேர்ல உட்கார வைடா” என்றவரை மெல்ல உட்கார வைத்து அவர் அருகிலேயே அவனும் அமர்ந்து விட்டான்.. 

 

“ஏன்டா இப்போ உன் அண்ணன் என்ன சொல்லிட்டுப் போனான்?” என்றவருக்கு தன் காதுகளின்  மேல் தான் சந்தேகமே வந்ததே தவிர, துகிலனை சந்தேகிக்கவே முடியவில்லை..

 

“யம்மோய்ய்ய்.. நீ வேற ஏன் மா?.. அவன் சொன்ன விஷயத்தை என்னாலேயே இன்னும் ஏத்துக்க முடியலை?” என்றவனுக்குமே துகிலன் சொன்னது உண்மையா என்ற சந்தேகம் தான்.. 

 

“ஏன் அவிக்குட்டி.. அப்போ உன் அண்ணனை பத்தின உண்மையை அந்தப் பொண்ணு வீட்டுல சொல்லப் போறது இல்லையா?” எனக் கேட்டவருக்கு படபடவென்று இதயம் படுபயங்கரமாக துடித்தது.. 

 

அவிரனுக்கோ கேட்கவே வேண்டாம்.. தன் அண்ணனா இது? என்ற சந்தேகமே எழுந்து விட்டது.. 

 

“அப்படித்தான்மா அவன் சொல்லிட்டுப் போறான்.. எத்தனை பொண்ணு பார்த்திருப்போம், எல்லாத்தையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டான்.. ஆனா இப்போ அவனே பொண்ணு பார்க்கப் போலாம்னு சொல்லுறான்? அது மட்டுமில்லாம உண்மையை சொல்ல வேண்டாம்னு சொல்லுறான்” என அவிரன் புருவம் நெறித்தபடி அங்கு அமர்ந்திருக்க,

 

“ஆங்.. எனக்கு தெரிஞ்சிப் போச்சிடா” என வேகமாக எழுந்து நின்ற சகுந்தலாவை கண்கள் இடுங்க பார்த்தான் அவிரன்.. 

 

“உங்களுக்கு தெரியுமா?” 

 

“ஆமா டா எனக்கு தெரியும்?..” என்ற சகுந்தலாவை சந்தேகக் கண் கொண்டு பார்த்தான் அவிரன்.. 

 

“என்ன தெரியும்?” என கன்னக்கதுப்பினுள் தன் நாக்கை சுழற்றியபடி கேட்டவனின் அருகில் பொத்தென்று அமர்ந்தவர், 

 

“அந்தப் பொண்ணு பேரழகியா இருக்கணும்.. அதான் உன் அண்ணன் அவளை பார்த்ததும் விழுந்துட்டான்” என்றவரை தீயாய் முறைத்தான் அவிரன்.. 

 

“யம்மோய்ய்ய். உனக்கு வர வர மூளைக்கூட இல்லைன்னு ப்ரூவ் பண்ற பார்த்தீயா?.. யாரு நம்ம அண்ணன் அழகைப் பார்த்து மயங்குற ஆளா? எனக்கென்னவோ வேற ஏதோ இருக்குன்னு தோணுது. அந்தப் பொண்ணை அண்ணா லவ் பண்றானோன்னு தோணுது” என்றவன் யோசித்துக் கொண்டே தன்னறைக்குள் நுழைய, 

 

“என்னடா இது ஆளாளுக்கு நம்மளை மண்டை காய வச்சிட்டுப் போறாய்ங்க.. லவ்வா.. அவனாஆஆஆ.. ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது.. அவனுக்காவது லவ் வர்றதாவது.. அப்போ அந்தப் பொண்ணு அழகும் இல்லையா?.. இல்லை இல்லை என் பையனுக்கு இந்த உலகத்திலேயே பேரழகியைப் பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்.. எம் பையன் எம்புட்டு அழகு” என பெருமையாக சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று விட்டார்..

 

அடுத்த நாள் காலை வேளையிலும் துகிலன் அறையை பார்ப்பதும், அவிரன் வருகிறானா? என நோட்டமிடுவது தான் சகுந்தலாவின் முதல் வேளையாகிப் போனது.. 

 

“என்னடா இது எவனும் வரமாட்டேங்குறான்.. ஒரு குழாயை மாட்டி சட்டை போடுறதுக்கு இம்புட்டு நேரமா?” என சொல்லி முடிப்பதற்குள் துகிலன் அறையின் கதவு வேகமாக திறக்கப்பட்டது.. கடவுள் முகம் பார்க்கும் பக்தனை போல் தவமாய் தவமிருந்தார் சகுந்தலா.. 

 

மாடியில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தவனின் அழுத்தமான பார்வை அவர் மீதுதான் இருந்தது.. மேலிருந்து கீழ் வரை அவரை தான் பார்த்தான்.. 

 

அவிரனும் அப்பொழுது தான் இறங்கி வர, 

 

“தம்பி” என்ற குரலில் துகிலன் நின்று விட, அவிரனும் நின்றான்.. 

 

“தம்பி நேத்து நைட் நீ ஏதோ சொன்ன?” என்றவரை திரும்பி அழுத்தமாக பார்த்த துகிலன், 

 

“நான் நேத்து சொன்னது உண்மை தான்.. இன்னைக்கு காலையில 11.30 மணிக்கு நாம பொண்ணு பார்க்கப் போறோம்.. அங்கே என்னைப் பத்தின உண்மை யாருக்கும் தெரியக்கூடாது.. இன்க்ளூடிங்க் அந்தப் பொண்ணுக்கு எதுவுமே தெரியவேக்கூடாது.. போதுமா, இல்லை வேற எதுவும் கேட்கணுமா?” என அதட்டும் குரலில் கேட்டவனைக் கண்டு நாலாப்புறமும் தலையாட்டினார் சகுந்தலா.. 

 

“அப்புறம் நல்ல சேலை கட்டிக்கோங்க. அந்தப் பொண்ணுக்கு ஒரு சேலையும் கொஞ்சம் பூவும் வாங்கிக்கோ.. பூ ப்ரெஷ்ஸா இருக்கணும்.. கொஞ்சம் ஸ்வீட் வாங்கிக்கோங்க.. வேற ஏதாவது வாங்கணும்னாலும் வாங்கிக்கோங்க” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்து நீட்டினான்.. 

 

“இல்லைப்பா என்கிட்ட காசு இருக்கு” என்றவரின் கையில் கார்டை திணித்தவன், நேராக சென்று விட, துகிலன் வாசல் செல்லும் வரை பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றுக் கொண்டிருந்தவர், அவன் செல்லவும் அவிரனை பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார் சகுந்தலா.. 

 

“ஏன்டா என்னடா நினைச்சிட்டு இருக்கான் உன் அண்ணன்காரன்.. பொண்ணைப் பத்தின தகவல் எதையும் சொல்லாம.. பூ வாங்கணும்ங்கிறான்.. சேலை வாங்கிக் கொடுக்கணும்னு சொல்லுறான்.. ஸ்வீட் வாங்கணுமாம்.. விட்டா இன்னைக்கே தாலி கட்டி அழைச்சிட்டு வந்திடுவான் போல” என்றவரின் வாக்கே அங்கு வேதவாக்காய் மாறும் என அவரே அக்கணம் அறிந்திருக்கவில்லை.. 

 

“சரிம்மா நீ தேவையானதை எல்லாம் வாங்கிட்டு வந்திடு” என்ற அவிரனின் கைகளை பிடித்தவர், 

 

“ஏன்டா அவன் தான் விட்டுட்டுப் போயிட்டான்.. நீயும் அக்கடான்னு இருந்தா என்னடா அர்த்தம்?.. வா டா என்கூட நாம ரெண்டு சேர்ந்து போயிட்டு வந்துடலாம்” என்றவரைப் பார்த்து நாலாப்பக்கமும் தலையாட்டிக் கொண்டு பைக்கின் கீயை எடுத்தான்.. 

 

“யம்மோய்ய்.. பைக்ல உட்கார்ந்திடுவீயா?.. இல்லை” என்றவன் திரும்பி பார்க்க, அங்கு ஸ்டைலான கூலிங்கிளாஸ் ஒன்றை அணிந்தபடி கையில் ஹேன்ட் பேக்கை தொங்கவிட்டபடி அல்ட்ரா மாடர்னாக வந்துக் கொண்டிருந்தார் சகுந்தலா.. 

 

“யம்மோய்ய்.. காலம் போன காலத்துல இதெல்லாம் உனக்கு தேவையா ம்மா?” என சிறு சிரிப்புடன் கேட்ட அவிரனுக்கும் தன் தாயை இப்படி பார்ப்பதில் சந்தோஷமே.. 

 

துகிலன் ஜெயிலில் இருந்த பொழுது அவர் கொண்டதே கோலம் என வாசல்படியிலேயே அமர்ந்து தவமாய் கிடந்ததை பார்த்தவன் அல்லவா அவன்.. 

 

“என்னடா இப்படி சொல்லிட்ட?.. இன்னைக்கு பொண்ணு பார்க்கப் போறோம்.. நான் பையனோட அம்மா டா… சும்மா ஸ்டைலா போய் இறங்க வேண்டாம்..” என்றவர் பைக்கில் அமர்ந்தது மட்டுமின்றி காலின் மேல் கால் போட்டு அமர்ந்து கொள்ள, 

 

திரும்பிப் பார்த்த அவிரன் தலையில் தான் அடித்துக் கொண்டான்.. 

 

“யம்மோய்ய்ய. நீ பாட்டுக்கு ஏதாவது பண்றேன்னு நடுரோட்டுல சர்க்கஸ் பண்ணிடாதே சொல்லிட்டேன்.. ஒழுங்கா ஏறித்தொலை” என்றவரை அழைத்துக் கொண்டு சென்றது பிரபலமான ஜவுளிக்கடைக்குத் தான்.. 

 

 உள்ளே நுழையும் பொழுதே அங்கு பொம்மைக்கு போடப்பட்டிருந்த குங்குமப்பூ நிற காஞ்சிப்பட்டு சேலை இருவர் கண்ணையும் பறித்தது.. 

 

“அது அழகா இருக்குல்ல ம்மா..” 

 

“அந்த சேலை எனக்குப் பிடிச்சிருக்கு டா” என இருவரும் ஒன்று போல் அந்தச் சேலையை நோக்கி கையை நீட்டினர்.. 

 

“யம்மோய்ய்.. உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் ம்மா” என்றவர்கள் நிமிடத்தில் அந்த சேலையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.. வரும் வழியிலேயே நெருக்கத் தொடுத்த மல்லிகைப்பூவை நான்கு முழமாக வாங்கினார் சகுந்தலா.. 

 

“அவிரா.. நகைக்கடைக்கு போயிட்டு போயிடலாம் டா” என்ற அன்னையை தீயாய் முறைத்தான்.. 

 

“யம்மோய்ய்.. நாம பொண்ணு தான் பார்க்கப் போறோம்.. நிச்சயம் பண்ணப் போகலை..” என காட்டமாக சொல்ல

 

“டேய்ய்ய்.. நகை உன் அண்ணிக்கு இல்லை டா.. உன் அண்ணன் கல்யாணத்துக்கு சம்மதிச்சா. திருச்செந்தூர்க் கோவில் உண்டியல்ல தாலி வாங்கிப் போடுறேன்னு வேண்டியிருக்கேன் டா.. அதுக்காகத் தான். தாலி மட்டும் வாங்கிட்டுப் போகலாம் வாடா” என்றவரை சலிப்பாக பார்த்தவன், இருபக்கமும் தலையாட்டியவாறே, 

 

“யம்மோய்ய்ய். என்னை வச்சி செய்யுறதுன்னு முடிவு பண்ணிட்ட?.. வேற என்ன பண்ணணும்.. வா போகலாம்” என்றவன் பின்னாடியே செல்ல, நகைக்கடைக்குள் இருவரும் நுழைந்தனர்.

 

“மூணு பவுன்ல தாலி காட்டுங்க தம்பி” என்றதும் அவர்கள் விதவிதமாக நாலைந்து மாடல் தாலியை காட்டினார்கள்.. 

 

அதை அனைத்தையும் பார்த்த சகுந்தலா இறுதியில் ஒரு தாலியை எடுத்தார்.. 

 

“இதுவே போதும் தம்பி.. பில் போட்டுடுங்க..” என்றதும் இருவரும் ஒன்றாக கடையை விட்டு வெளியே வந்தனர்.. 

 

“அப்புறம் என்னம்மா அண்ணன் காசை இன்னைக்கு வேண்டுதல்ங்கிற பேர்ல காலி பண்ணிட்டே?..” என்றவனை பார்த்து முறைத்துக் கொண்டே வெளியே வருவதற்கும், அவிரன் போன் அடிப்பதற்கும் சரியாக இருந்தது.. 

 

அவர்கள் நகைக்கடையில் இருந்து வெளியே வருவதற்குள் துகிலன், அவிரனுக்கு அழைத்திருந்தான்.  

 

“அவிரா எங்கே இருக்க? அம்மாவுக்கு கான்பிரன்ஸ் கால் போடு” என்றவனை தீயாய் முறைத்தார் சகுந்தலா.. 

 

“ஏன் சொந்த அம்மாக்கிட்ட பேசுறதுக்குக்கூட ஒருத்தன் தூது போகணுமோ? என மனத்தாங்கலாக கேட்ட தாயைப் பார்க்க அவிரனுக்கு பாவமாக இருந்தாலும், அவர் செய்ததும் ஒன்றும் சாதாரணமாக இல்லையே.. 

 

“ம்மா நீ வேற ஏன் மா.. கொஞ்ச நேரம் சும்மா இரு” என்றவன் போனை ஸ்பீக்கரில் போட்டான்.. 

 

“அண்ணா நானும் அம்மாவும் கடைக்கு வந்தோம். சொல்லு ண்ணா” என்றிட, 

 

“ஆமா ஒரு சேலைக்கா டா 2 லட்ச ரூபா எடுத்திருக்கீங்க?” என்றவனை பார்த்து திரு திருவென முழித்தார் சகுந்தலா.. 

 

“இல்லைண்ணா தாலி எடுத்தாங்க..” என்றதும் தான் தாமதம் துகிலனின் கண்கள் இடுங்கியது.. 

 

“தாலியா?.. இப்போ எதுக்கு தாலி?” என்றவனின் குரலில் ஒரு வித கடினம் இருந்ததுவோ? என்னவோ?.. 

 

“இல்லைண்ணா அம்மா ஏதோ வேண்டிக்கிட்டாங்களாம் அதுதான்” என மென்குரலில் சொன்னதும், “ம்ம்” என்றவாறே போனை வைத்துவிட்டான்.. 

 

அவன் போனை வைத்ததும் தான் தாமதம், “என்னடா நினைச்சிட்டு இருக்கான்? அவன் மனசுல?.. என்னமோ அவன் காசையெல்லாம் நான் வாரியிறைச்ச மாதிரி போன் போட்டு விசாரிக்கிறான்.. அப்படி விசாரிக்கிறவன் எதுக்கு டா ஏடிஎம். கார்டை என் கையில கொடுத்தான்..” என அவிரனை சாடிட, அவனோ கட்டியபடி கைகள் இரண்டையும் குறுக்காக கட்டியபடி அழுத்தமாக நின்றான்.. 

 

அவன் நின்ற தோரணையிலேயே சகுந்தலா புரிந்து கொண்டார்.. கோபத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்பதை.. 

 

“சரிடா மகனே.. கோவிச்சிக்காதே.. வா.. வா” என அவிரனின் கையைப் பிடித்திழுக்க, 

 

“இப்போ நான் சொல்றேன் மா.. எனக்கு வர்ற பொண்டாட்டி கண்டிப்பா வாயாடியா தான் இருப்பா.. இப்போ நீ என்னை பண்ற டார்ச்சர்க்கு எல்லாம் அவ உன்னை வச்சி செய்வா பாரு” என்றவனை பார்த்து க்ளுக்கென சிரித்தார் சகுந்தலா.. 

 

“ஏன்டா என்னைய்யே வச்சி செய்வான்னா.. நீயெல்லாம் வாயைத் திறக்க முடியாது மகனே?.. எனக்கு சாபம் விடுறேன்னு.. உனக்கு நீயே ஆப்பு வச்சிக்காதே மகனே” என்றவரின் பின்னால் சென்றாலும் அவன் இதழில் புன்சிரிப்பு தான்.. 

 

“தாய் அறியாத சூழ் உண்டா?..” திடீரென சிரிக்கும் தன் மகனை ஆழ்ந்து பார்த்தவர், 

 

“என்னடா ஒரு மார்க்கமா சிரிக்குற?.. என்ன விஷயம்?” என்றவரின் முன்னால் சென்று நின்றான் அவிரன்.. 

 

“ஏன் மா நம்ம ஒரு விஷயம் பேசிட்டு இருக்கும் போது.. திடீர்னு எனக்கு ஒரு பொண்ணு நியாபகம் வந்திச்சி ம்மா.. அதுக்கு பேரு என்னது ம்மா?” என்ற மகனை சிரிப்புடன் பார்த்தவர், அவிரனின் தோளில் தட்டியவாறே, 

 

“அதுக்கு பேர் தான் காதல் மை சன்.. நீயும் காதல்ல விழுந்துட்ட மை சன்.. இனி உன்னை கடவுள் நினைச்சாக்கூட காப்பாத்த முடியாது?” என்றவரை முறைத்துக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.. 

 

இருவரும் ஒன்றிணைந்தார் போன்று வீட்டிற்குள் நுழைந்தனர்.. 

 

அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்தான் துகிலன்.. 

 

இருவரையும் ஆழ்ந்து பார்த்தாலும், எதுவும் பேசவில்லை. அறைக்குள் சென்றவன் முதலில் அழைத்தது அருவிக்குத்தான்.. 

 

“சொல்லுங்க” என கம்மிய குரலில் மெல்லமாக அழைக்க, 

 

“இன்னைக்கு நீ வேலைக்கு வர வேண்டாம். உன்னைப் பொண்ணு பார்க்க நான், அம்மாவையும், தம்பியையும் அழைச்சிட்டு வர்றேன்..” என்றவனின் பேச்சில் பெண்ணவளோ நடுங்கி விட்டாள்.. 

 

“என்னண்ணா சொல்லுறீங்க?.. பொண்ணு பார்க்கவா?” என கேட்கும் பொழுதே அச்சத்தில் உடர் வியர்வையில் முக்குளிக்க, கைகளோ வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தது.. 

 

“முதல்ல இந்த அண்ணாவை விடுறீயா?” என போனிலேயே கர்ஜிக்க, 

 

அந்தப் பக்கம் பேரமைதி தான்.. 

 

“இங்கே பாரு அருவி.. நேத்து நான் உன்கிட்ட சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்.. நான் ஒன்னும் விடலைப்பையன் கிடையாது.. இன்னைக்கு சொல்லுற வார்த்தையை நாளைக்கு மறக்குறதுக்கு, நாங்க வர்றோம்.. நீ உங்கப்பாம்மாக் கிட்ட.. இல்லை இல்லை வேண்டாம்.. நீ ஏதாவது சொன்னா?.. அப்புறம் பிரச்சினை உன் பக்கம் திரும்பும்.. நான் வந்தே எல்லாத்தையும் பேசிக்கிறேன்” என அவள் பேசுவதற்கே இடம் கொடுக்காமல் பேசிக் கொண்டே சென்றவன் போனையும் அணைத்து விட்டான்.. 

 

அவன் போனை அணைத்த பின்பும், காதிலிருந்து போனை எடுக்கவேயில்லை அருவி.. அருவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. 

 

“ஆத்தி இவுக என்ன இம்புட்டு ஸ்பீடா இருக்காக.. 18ம் படி கருப்பா நீதான் எப்படியாவது என்னை எந்த சிக்கல்லையும் மாட்டிவிட்ராம இருக்கணும்” என அவசர வேண்டுதல் ஒன்றை கருப்பனிடம் வைத்தாள்.. 

 

 மதியிடம் சொல்லலாம் என்றால் அவளும் காலேஜிற்கு சென்று விட்டாள்.. யாரிடமும் தன் நிலையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் அருவி.. 

 

தண்ணீர் குடித்தாவது தன் பயத்தையும், தவிப்பையும் மறைத்துக் கொள்ளலாம் என அடுப்பாங்கரைக்குள் நுழைய, அப்பொழுதுதான் பாத்திரத்தை கழுவிக் கொண்டிருந்த செவ்வந்தி அவளை புருவம் சுருக்கிப் பார்த்தார்.. 

 

“என்ன அருவி? வேலைக்குப் போகலையா?” என்றவரின் கேள்வியில் சட்டென்று குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் டம்ளரை பட்டென்று கீழே போட்டு விட்டாள்.. 

 

பதட்டத்தில் அவளுக்குப் பொய் பேசக்கூட சரளமாக வரவில்லை. 

 

“அம்மா… அது வந்து.. அது” என்பதற்குள், 

 

“ஏய்ய்ய எவடி அங்கே வீட்டுல? வெளியே வாங்கடி *****” என்ற கணீர்க்குரலில் செவ்வந்தியும், அருவியும் வெளியே செல்ல, அங்கு வெளிவாசலில் உக்கிரமாக நின்றுக் கொண்டிருந்தார் வருணின் தாய்.. 

 

அவர் நின்றிருந்த தோரணையைப் பார்த்ததுமே புரிந்தது அவர் சண்டை போடுவதற்காக தான் வந்திருக்கிறார் என்று.. நேற்று நடந்ததை பற்றி அருவி அனைத்தையும் சொல்லியதால் அவரும் வருணின் வீட்டார் பிரச்சினை பண்ணுவார் என்பதை எதிர்பார்த்தார் தான்.. 

 

“என்னடி பார்த்துட்டு இருக்கீங்க?.. ஆத்தாளும் மகளும் மட்டும் தான் உள்ளே இருக்கீங்களா?.. இல்லை உன் பொண்ணு எவனையோ வச்சிருக்காளாமே.. அவனும் உள்ளே தான் இருக்கானா?” என வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியவர், 

அவர்களை இருவரையும் இடித்துக் கொண்டு உள்ளே நுழைய திகைத்து நின்றனர் அருவியும், செவ்வந்தியும்.. 

 

“அம்மா?” என பயத்துடன் அழைத்த அருவியின் கையை அழுத்தமாக பற்றியிருந்தார் செவ்வந்தி.. 

 

“அருவி நீ ஒன்னும் பயப்படாதே.. அப்படி என்னத்த கிழிச்சிருவா இந்தம்மான்னு நான் பார்க்கிறேன்.. என் வூட்டுக்குள்ள வந்து என் பொண்ணையே குறை சொல்லுதா இந்தம்மா? இன்னைக்கு நான் கொடுக்கிற கொடையில இந்தம்மா வாயை திறக்கவே பயப்படணும்”  என்றவர், தன் சேலையை ஏற்றிக்கட்டி இடுப்பில் சொறுகிட,

 

“வெக்கம்.. மானம்.. சூடு.. சொரணை இருக்கிற பொம்பளையா இருந்தா வெளியே போடி” என்ற செவ்வந்தியை அனல் கக்க பார்த்தார் வருணின் தாய்.

 

“என்னடி என்னைப் பார்த்தா வெக்கம்.. மானம்.. இருக்குதான்னு கேட்குற?.. பொட்டப்புள்ளைய கட்டிக் கொடுக்க வழியில்லைன்னா.. பிச்சை எடுக்க விடணும்டி.. இப்படி கூ**டிக் கொடுத்திருக்க?” என்றவரின் கன்னம் தீயாய் எரிந்தது செவ்வந்தி அடித்த அடியில்.. 

 

“நானும் போனா போகுதுன்னு மரியாதை கொடுத்தா?. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுற?.. எம் பொண்ணை அசிங்கமா பேசுற?.. வெளியே போடி” என்ற செவ்வந்தி கோபத்தின் உச்சியில் என்ன செய்கிறோம் என்றறியாமல், வருணினின் தாய் உச்சிமுடியை கொத்தாக பற்றியிழுத்தவர், தரதரவென இழுக்காத குறையாக வாசலுக்கு கொண்டு வந்தவர் அவரை தரையில் தள்ளிவிட, 

 

“இங்கே பாரு செவ்வந்தியைப் பத்தி தெரியாம நீ வந்துட்ட.. என் பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா நான் என்ன பண்ணவும் தயாரா இருப்பேன்.. இன்னொரு தடவை எம் பொண்ணை பத்தி தப்பா பேசின.. பேசின நாக்கை அறுத்துப் போட்டுருவேன். ஜாக்கிரதை” என ஆவேசமாக சொன்னவர் கதவை டொம்மென்று அடைத்து விட்டு உள்ளே நுழைந்தவர் அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தார்.. 

 

அவரின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள் அருவி. 

 

“அம்மா” என்ற குரலில் திரும்பிப் பார்த்த செவ்வந்தியின் முகம் கனிந்திருந்தது.. 

 

“என்னாச்சி அருவி?” என்றவரின் மடியிலேயே படுத்து விட்டாள்.. 

 

“என்னை உங்களுக்குப் பிடிக்குமா ம்மா?” என்ற அருவியின் தலையை வருடிவிட்டவரின் கண்களில் கண்ணீர் பனிந்தது.. 

 

“ஏன்மா அப்படி கேட்குற?..” என்றவரின் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது.. 

 

“நான் உங்களை மாதிரி அழகா இல்லையேம்மா.. கருப்பா இருக்கேனே” என தாழ்ந்த குரலை சொன்னவரை பார்த்து சிரித்தவர், 

 

“அழகுல என்னடி இருக்கு?.. அறுபது வயசுல அழகு நம்ம கண்ணுக்கு தெரியாது டி.. நம்ம குணம் தான் கண்ணுக்கு தெரியும்..”

 

“அப்புறம் ஏன்மா எப்போ பார்த்தாலும் என்கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுற..” என்ற அருவியின் தலையில் செல்லமாக கொட்டியவர், 

 

“எரிஞ்சு விழுந்தா அன்பு இல்லைன்னு அர்த்தமா?. போய் வேலையைப் பாருடி.. பாத்திரத்தை அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்” என்றவர் எழுந்து சென்று விட, வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டது.. 

 

இருவரும் ஒன்று போல் நின்றனர்.

 

“அருவி அது வண்டி சத்தம் தானே?” என்ற அருவிக்கு திகிலடித்தது.. 

 

வந்திருப்பது யார் என்று அவளுக்கு தான் தெரியுமே.. 

 

“அம்மா.. அது.. வந்து.. அது வந்து…” என இழுத்துக் கொண்டிருந்தவளை முறைத்துக் கொண்டே வெளியே வந்தவர் திகைத்து நின்றார்.. 

 

செவ்வந்தியின் வெளிறிய முகத்தைப் பார்த்துக் கொண்டே அருவியும் வெளியே வந்தவள் திகைத்து நின்றாள்.. 

 

அங்கு வந்தது துகிலன் வீட்டினர் அல்ல.. மகளிர் காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் தான் வந்திருந்தனர்.. 

 

“யாரும்மா இங்கே அருவி?” என்ற கட்டைக்குரலில் உடல் நடுங்க சுவரோடு ஒன்றியபடி நின்றிருந்தாள் அருவி. 

 

“அவளை எதுக்கு மேடம் கேட்குறீங்க?” என கேட்ட செவ்வந்திக்கும் சற்று பயம் தான்.. இருந்தாலும் தன் பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாகத் தான் நின்றிருந்தனர்.. 

 

“நீதான் அருவியா?” என செவ்வந்தியின் முன்னால் ஒரு பெண் போலீஸ் நிற்க, 

 

“இல்லை அது எங்க அம்மா செவ்வந்தி” என்ற அருவியின் மெல்லிய குரலில் ஒரு கான்ஸ்டபிள் வேகமாக அவளின் தோள்பட்டையை அழுத்தமாக பற்றி இன்ஸ்பெக்டர் முன்பாக கொண்டு வந்து நிறுத்தினர். 

 

“மேடம் என்ன பண்றீங்க?.. அவ என் பொண்ணு தான்” என்ற செவ்வந்தி இன்ஸ்பெக்டருக்கும், அருவிக்கும் இடையில் வந்து நிற்கப் பார்த்தார்.. 

 

அவரை இருவருக்குமிடையில் வரவிடாமல் தடுத்து நிறுத்தியிருந்தார்கள் கான்ஸ்டபிள் இருவரும்.. 

 

“மேடம் என்னை விடுங்க..” என்ற செவ்வந்தியைப் பார்த்தவாறே இன்ஸ்பெக்டர் அருவியை ஓங்கி ஒரு அறை அறைய, நிலைகுலைந்து கீழே விழுந்தாள் அருவி.. 

 

அவள் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.. செவ்வந்திக்கூட இதுவரை அடித்ததில்லை.. 

 

போலீஸின் கையால் அடிவாங்கியதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. 

 

“ஏன் யாருடி நீ என் பொண்ணை அடிக்கிற?” என்ற செவ்வந்தியை கோபத்துடன் முறைத்துப் பார்த்த இன்ஸ்பெக்டர், 

 

“வருணோட அக்கா..” என்றதும் தான் தாமதம் பேயறைந்தாற் போன்று நின்றனர் இருவரும்.. 

 

“என் தம்பியையும், அம்மாவையையும் அடிச்சதுக்கும், அவமானப்படுத்துனதுக்கும் உன் பொண்ணை ஜெயில்ல கம்பி எண்ண வைக்கிறேன்” என சொல்லிக் கொண்டே அருவியின் முடியை கொத்தாக பிடித்து இழுத்தவர் வேகமாக வெளியே அழைத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினார்… 

 

“அம்மா.. அம்மா..” என அழுதுக் கொண்டிருந்த அருவியின் அழுகை அங்கு யார் காதிலும் விழவில்லை. 

 

வாசலை விட்டு ஜீப் முன்னால் செல்வதற்கு முன்பாக, வெள்ளை நிற இரண்டு கார்கள் ஜீப்பை மறைத்தாற் போன்று வந்து நின்றது.. 

 

“ஏய்ய்.. என்னடி வண்டி நின்னுடுச்சு” என இன்ஸ்பெக்டர் நந்தினி வண்டியில் இருந்து இறங்குவதற்கும், எதிரில் நின்றிருந்த இரண்டு கார்களின் கண்ணாடி இறக்குவதற்கும் சரியாக இருந்தது.. 

 

வெள்ளை நிற ஜாக்குவார் ஒன்றும், வெள்ளை நிற ஆடி கார் ஒன்றும் நின்றுக் கொண்டிருந்தது.. 

 

வெள்ளை நிற ஆடிகாரில் இருந்து துகிலனும், அவனின் குடும்பமும் இறங்கியது.. 

 

எதிரில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை உறுத்து விழித்தான் துகிலன். பழைய நினைவுகள் அவன் கண் முன்னால் உலா வந்துக் கொண்டிருக்க, அவிரன் தான் ஆடிகாரை ஜீப் செல்லும் படி ஓரமாக பார்க் பண்ணினான்.. 

 

ஆனால் ஜாக்குவார் காரோ சிறிதும் அசைய மறுத்தது.. 

 

“அண்ணா யாருண்ணா இது? போலீஸ் ஜீப்பை மறிச்சு நிக்குறது?” என்றவனின் அவிரனின் வார்த்தையை காதிலேயே வாங்கவில்லை துகிலன்.. போலீஸ் ஜீப்பை பார்த்ததும் துகிலனுக்குள் ஏதோதோ எண்ணங்கள் மனதில் துளிர்விட, அவனையும் அறியாமல் உடலெங்கும் வியர்வையில் முக்குளிக்க ஆரம்பித்தது.. 

 

ஜாக்குவாரை எடுக்குமாறு போலீஸ் ஜீப்பில் இருந்து ஹாரன் அடித்துக் கொண்டேயிருக்க, ஜாக்குவாரும் அசையவில்லை.. அதில் இருந்த நபரும் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.. 

 

“மேடம் காரை எடுக்க மாட்டேங்குறான்?” என்றதும் தான் தாமதம் நந்தினி வேகமாக ஜீப்பில் இருந்து இறங்கிட, 

 

அதே சமயம் தன் அழுத்தமான காலடியோசையுடன் வேகமாக வெளியே வந்தான் ஒருவன். 

 

ஆறடி உயரத்தில் தன் கைகளில் போட்டிருந்த காப்பு மினுமினுக்க, வெள்ளை வேஷ்டி சட்டை சரசரக்க, தன் அழுத்தமான காலடியோசையில் போலீஸ் ஜீப்பின் முன்னால் வந்து நின்றான் திமிருக்கே அரசன் திம்மரசன்.


   
ReplyQuote

You cannot copy content of this page