All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (11)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 1 month ago
Posts: 34
Topic starter  

அத்தியாயம் 11

 

 

 

 

விஷ்ணு தேவன், ஜனார்த்தனி எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்றே தெரியாது..

 

பிள்ளைகளை உறங்க வைத்துவிட்டு வந்த ஜனார்த்தனி விஷ்ணு தேவனின் அறை கதவைத் தட்டினாள் ...

 

கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு ஆரியன், இசைகவியை கன்னத்தில் முத்தமிட்டதே மன கணக்கில் வந்துச் செல்ல , அதனைத் தொடர்ந்து ஆரியனின் பார்வை அவன் மீது நக்கலாக படிவதையும் உணர்ந்து கொண்டவனுக்கு அவனுக்கு இசைகவியை திருமணம் செய்து வைக்க முன்னர் தன் காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தான்..

 

காதலை சொல்லவும்   அதற்கான தகுந்த நேரமும் அமைய வேண்டுமே! அதற்கான சில திட்டங்கள் மனதில் வகுத்துக் கொண்டு இருந்தவனின் செவியில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது..

 

மெதுவாக கட்டிலை விட்டு எழுந்து , அறை கதவை திறந்தான்..தமக்கை வெளியே நிற்பதை கண்டு புருவ முடிச்சுடன் நோக்கினான்..

 

“ ஜானு அம்மா நீ தூங்கல்லையா? ” கடிகாரத்தைப் பார்த்தான் இரவு 12.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது..

 

“ பசங்களை தூங்க வைச்சுட்டேன் டா.. எனக்குத்தான் தூக்கமே வரல்ல..ஹோட்டல்ல ஆரியன் அண்ட் அவங்களை பார்த்ததுல இருந்து..” என்றாள்..

 

“ வேண்டாதவங்களை பத்தி நீ ஏன் நினைக்கிற ஜானு..” அவனின் குரல் உயர்ந்தது..

 

“ ஹேய்! டென்ஷன் ஆகாத தேவா..நீ தூங்கல்லையா? ” அவள் கேட்டதும், என்ன பதிலை சொல்ல முடியும்..

 

“ விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் இன்னொரு பிரான்ச் ஓபன் பண்றேன்னு சொன்னேன்ல, அது பத்தின யோசனை மைண்ட்ல ஓடிட்டு இருக்கு..அதான் தூக்கம் வரல்ல..” என்றான்..

 

“ஆமா , நான் உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன் உன் பக்கத்துல இருந்துச்சே பொண்ணு நீ என்ன நினைக்கிற? ” அவள் கேட்க..

 

‘ போட்டு வாங்க பாக்குறா மசியவே கூடாது..’ மனதில் நினைத்தவன்..உட் புற கன்னத்தை கடித்து , பின்னந் தலையை அழுத்த கோதிக் கொண்டு தமக்கையை நோக்கி “ ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்ட் ” அப்படி சொன்னவனை “ இன்ட்ரஸ்ட் தான் நினைக்கிறேன்..ம்..ம்..பார்த்துக்குறேன் நீ போய் தூங்கு” என்று மார்க்கமாக தலையசைத்து விட்டு நகர்ந்தாள்..

 

இசைகவிக்கு விஷ்ணு தேவனை பார்த்ததில் அவன் விழிகளில் தெரிந்த உருக்கும் பார்வை அவளை சலனபடுத்துவதாய்!

 

நெருக்கமாக அருகில் பார்த்திருந்தால் அவளுக்கு தெரிந்திருக்குமோ? ஆரியனின் செயல் இன்னும் மனம் விட்டு அகலவில்லை அவளுக்கு..

 

இருவரின் மனநிலையும் அவர்களையே சுத்தி இருக்க..

 

இரு வாரங்கள் கடந்தது..அன்று இசைகவி விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் பற்றிய விளம்பரத்தை ரேடியோவில் ஒலிபரப்பாகும் நாள்..

 

மழை காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பித்து இருந்தது..

 

இதழியல் FM இல் , விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் பற்றிய விளம்பர நிகழ்ச்சியை நடத்த விருப்பதால் விஷ்ணு தேவனுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தது..

 

விளம்பரத்திற்கு என்று இருக்கும் குழுவினர் , ஆனால் இங்கோ பாடல் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்பவளிடம் அல்லவா விஷ்ணு விளம்பர நிகழ்ச்சியை நடத்த ஒப்படைத்து இருந்தான்..

 

அதை செய்தே ஆக வேண்டுமே..காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காக காத்திருந்த சமயம்..

 

விஷ்ணு தேவனிடம் இருந்து அவளின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது..

 

காயத்ரி தான் அவளை வெளியே அழைத்து வந்து அவளிடம் அலைபேசியை கொடுத்திருந்தாள்..

 

அழைப்பை ஏற்றாள் அவள்..

 

“ இசை..”

 

“ சார் இந்நேரம் நீங்க ரேடியோ ஸ்டேஷன் வந்து இருக்கணும்.. ப்ரோக்ராம் நடத்த எங்க டீம் உங்களுக்கு டைம் குடுத்து இருக்குறாங்க இல்லையா? நீங்க என்னடான்னா லேட் பண்ணிட்டு இருக்கீங்க..” அலைபேசியில் அவள் கத்த ஆரம்பிக்க..

 

இவனுக்கு உதட்டில் புன்னகை மலர்ந்தது..“ ஓஹோ.. வெயிட் இசை நான் சொல்ல வர்றதை பர்ஸ்ட் கேட்டுட்டு அப்புறமா திட்டுங்க..” என்றான் அவளிடம்,

 

“ சரி சொல்லுங்க..” கோபத்தை விடுத்து இறங்கி வந்து பேசினாள்..

 

“ விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் ஓட பிரான்ச் ஓபன் பண்ற விஷயமா வெளியூர் வந்து இருக்கேன் இசை..ஐ ஃபீல் ட்ரிபிள் அபெளட் இட் சாரி இசை இதை பத்தி அட்வெர்ட்டிசிங் டீம்கிட்டையும் பேசிட்டேன்.. உங்ககிட்ட தெளிவா எடுத்து சொல்றதுக்காக தான் கால் பண்ணேன்.. இன்னிக்கு ப்ரோக்ராம்ல என்னால ஜாயின் பண்ண முடியாது என் சூழல் நிலை..நான் இல்லாம உங்க ஈவினிங் ப்ரோக்ராம் நடத்த முடியும்னு எனக்கு தெரியும் சோ இசை இன்னொரு நாள் இதே போல அட்வெர்ட்டிசிங் ப்ரோக்ராம்ல ஜாயின் பண்றேன்.. நான் சொன்னது உங்களுக்கு தெளிவா புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன்..” கனிவான குரலில் அவளுக்கு விஷயத்தை எடுத்துக் கூறி இருந்தான்..

 

அவள் பெரு மூச்சினை வெளிவிட்டு “ யா சார் ஐ கேன் டூ இட்...நீங்க சொல்ற மாதிரி இன்னொரு நாள் இந்த ப்ரோகிராம் நடத்தலாம்.. எனக்கு டைம் ஆகிருச்சி வைக்கிறேன் சார் ” என்று அவள் சொன்னதும் “ ஓகே குட் லக் ” வாழ்த்தை சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து இருந்தான்..

 

ரேடியோ ஜாக்கி ஸ்டுடியோ அறைக்குள் நுழைந்தாள்..சுழல் நாற்காலியில் அமர்ந்து ஒன் ஏர் (On Air ) காதில் மாட்டிக் கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தாள்..

 

(துல்லியமான, நேரடியான விளம்பர குரலில்)

 

“வணக்கம் நண்பர்களே! நான் உங்கள் ஆர்ஜே இசை இங்கே, இன்னொரு சுவாரஸ்யமான மாலை நேரத்துடன்.. இன்று நம்ம பேசப்போகிறது , உங்கள் வீட்டிற்கும் திருமணத்திற்கும், மற்றும் உங்கள் தினசரி வாழ்விற்கும் ஏற்ற துணிகளின் உலகம்: விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ்!

 

நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ், உங்கள் குடும்பத்தின் பாரம்பரிய துணித் தேவைகளுக்கு சரியான இடமாக விளங்குகிறது.. பாரம்பரிய சில்க் புடவைகள், இளம் தலைமுறைக்கான டிரெண்டிங் ஆடைகள், மற்றும் அனைத்துக்கும் ஏற்ற ஆண்கள் உடைகள் இவை எல்லாவற்றுக்கும் ஒரே இடத்தில்!

 

விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் எதை சிறப்பாக வழங்குகிறது?

 

ஒவ்வொரு துணியும் தரமானது, உங்கள் தோற்றத்துக்கு அழகு சேர்க்கும்..

 

குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்ற ஆடைகள் கிடைக்கின்றன...

 

பாரம்பரிய முறைமைகளையும் நவீன ஃபேஷன்களையும் இணைத்து வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளும் சேகரிப்புகள்!

 

 

அதனால், நீங்கள் ஒரு சின்ன ஷாப்பிங்கிற்காகவோ, ஒரு மாபெரும் விசேஷத்திற்காகவோ திட்டமிடுகிறீர்களா? உங்கள் அடுத்த முறை விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் திரும்பியதை உறுதியாகச் செய்யுங்கள்..

 

சிறப்பான தரம், நேர்மையான விலை, மற்றும் நகரத்தின் உண்மையான நம்பிக்கையான துணிக் கடை  இது தான் விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ்! இன்றே சென்று பாருங்கள், உங்கள் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் உறுதியான துணைதரும் இடம் இது தான்..”

 

(இசை பின்னணியில்)

 

“விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் நீங்கள் நாடிய துணி உலகம்! ”

 

வெளியூர் சென்றிருந்த விஷ்ணு தேவன் மாலை நேரத்தில் இதழியல் FM ஒலிபரப்பான தன்னுடைய துணிக்கடை விளம்பரத்தை காரினுள்ளே அமர்ந்து கேட்டான்..

 

அவள் குரலை ரசித்தான்..

 

அவன் சொன்னதை நிறைவேற்றி விட்டாள் அல்லவா!

 

உதடுகள் சற்றே அகல , விழிகள் கவர்ச்சியுடன் ஒளிர்ந்தது.. அவனின் சிரிப்பு யதார்த்தமான நன்றியை தெரிவிக்கும் படியாக இருந்தது..அதனை அருகில் இருந்து பார்க்க இசைகவிக்கு தான் கொடுத்து வைக்கவில்லை..

 

உடனே , அலைபேசியில் அவளுக்கு அழைத்தான்..

 

அங்கே கிரண் , விளம்பர டீம்  எல்லோரும்  சேர்ந்து அவளுக்கு பாராட்டை வழங்கினர்...

 

“ நான் நினைச்சு கூட பார்க்கல்ல இசை சூப்பரா பண்ணிடீங்க.. இன்னும் சில விளம்பர ப்ரோக்ராம்ஸ் ஒலிபரப்பாக இருந்தாலும், நீங்க விஷ்ணு தேவன் சாரோட அட்வெர்ட்டிசிங் மட்டும் தான் வாய்ஸ் கொடுக்கணும்னு அவர் ஆர்டர் போட்டு இருக்கார் இசை..” என்று டீம் லீடர் நரேன் சொன்னார்..

 

‘ ஓ..சாரு அந்த வேலையும் பார்த்து இருக்கார் ஆனா ஏன் இப்படி? என் வாய்ஸ் கேட்டு அடிக்ட் ஆகிட்டாரா? ’ மனதில் நினைக்கும் போதே அவளின் அலைபேசி அலறியது..

 

எடுத்துப் பார்த்தாள் விஷ்ணு தான் அழைத்திருந்தான்...

 

“ ஹலோ தேவா சார் ” அவள் பேச வாயெடுக்கும் முன் அவனே ,

 

” இசை இந்த விளம்பரத்துல உன் வாய்ஸ் ரொம்ப அழகாக இருந்துச்சு , உன் வாய்ஸ் கேட்கும் போதே ஒரு வித மயக்கம் எனக்கு..உன்னோட வாய்ஸ் கேட்ட மக்களுளே சந்தோஷப்பட்டு இருப்பாங்க இசை! ” உற்சாகத்துடன் அவளுக்கு மறைமுகமான பாராட்டையும் வழங்கினான்..

 

“ என்னோட கடமை தேவா சார் அண்ட் தேங்க்ஸ்..ஆர்ஜே இசையா நான் இதழியல் FM ல வொர்க் பண்றதுக்கான காரணம் எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு அதைவிட அமைதியும் சந்தோஷத்தையும் கொடுக்குது சார்.. அதுக்காக தான் என் அப்பா , ஆரியனையும் மீறி இங்கே வர ஒரு காரணம் சார்..” என்றாள்..

 

‘ அப்ப ஆரியனுக்கு இசை ஆர்ஜேயா வொர்க் பண்றது பிடிக்காது போல..ஹம் ’ மனதில் எண்ணியவன்..“ ஐ க்னோ இசை.. வெளியூர்ல விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் ஓட இன்னொரு பிரான்ச் ஓபனிங் நடந்துட்டு இருக்கு முடியும்னா உங்களால வர முடியுமா ? ஐ இன்வைட் யூ , உங்களுக்கான இன்வைட் காட் ஆ.. அனுப்பி வைக்கிறேன்..” அவளுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே தனுஷ் கார் கதவை தட்டினான்..

 

மூன்று நிமிடம் என உள்ளே இருந்து விரல்களை மடித்து காட்டினான்.. அவனும் சரியென தலை அசைத்தான்..“ உங்கூட பேசுனது சந்தோஷம் இசை..வர முயற்சி பண்ணுங்க..ஐ வில் வெயிட் ஃபார் யூவர் அரைவல் எக்ஸ்பெக்டிங் யூ ( I will wait for your, arrival expecting you) ” என்று கூறிவிட்டு புன் சிரிப்புடன் அழைப்பை துண்டித்தான்..

 

இறுதியாக அவன் கூறிய வார்த்தையில் அதிர்வுடன் நின்றிருந்தாள்.. அவளிடம் அவன் எதிர்பார்ப்பது போல் தெரிந்தது..

 

அடுத்து பத்து நிமிடங்களில் தனுஷிடம் அதற்கான ஏற்பாடுகளை கூறி அவளிடம் அழைப்பிதழ் கையில் வந்து சேருவது போல் உடனே செய்தான்..

 

அவள் கையில் அவன் அனுப்பி வைத்த அழைப்பிதழ் பாந்தமாக அவள் கரத்தில் சரண் புகுந்து இருந்தது..

 

ஆரியன் அலுவலகம் கிளம்பும் போது பத்மா “ ஆரியன் ” அவர் அழைக்க..

 

“ சொல்லுங்க மாம்..” 

 

“ நான் உனக்கு ஒண்ணு சொல்ல விரும்புறேன்.. விஷ்ணுவை பத்தி ஏன் ஏன் நான் பேசுறேன்னு என்னை தப்பா நினைக்காத அவன் மேல எனக்கு பாசம் கிடையாது ஆனா நீ உன் புத்திய காமிக்காத டா..அவ்ளோ தான் சொல்லுவேன்..” எச்சரித்து அவர் சொல்ல..

 

“ என் வழில குறுக்க வராத வரைக்கும்.. அவனுக்கும் எனக்கும் போட்டி இருக்காது மாம்..” என்று சொல்லிவிட்டு காரில் புறப்பட்டு விட்டான்..

 

அவருக்கு மகன் முக்கியம் , அவனுக்கு எதுவும் நடந்த விட கூடாது என்பதற்காகவே எச்சரித்தார்..

 

விதி ஒன்று இருப்பின் அதனை பிடித்து நிறுத்தி வைக்கவா முடியும்..

 

 

 

தொடரும்..


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 1 month ago
Posts: 45
 

@vsv4 ஆல் ரெடி குறுக்க வந்திட்டப்பா ஆரியா. இனி முட்டி மோதி மூக்க உடைச்சிக்க போற. ஆல் தி பெஸ்ட். 

 

சூப்பர் தேவியை சிஸ். 🥰🥰🥰🥰


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 1 month ago
Posts: 34
Topic starter  

@vsv11 மிக்க நன்றி விழி சிஸ் 😍😍😍🥰🥰🥰 

ஆரியன் தேவா கிட்ட வாங்க போறது உறுதி 🤭🤭🤭 நடுவுல மாட்டிகிட்ட இசை தான் 😂 😂 பாவம்


   
ReplyQuote

You cannot copy content of this page