All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 9

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 9

 

Choco pods.

 

சிறிய பப்பாளி பழ அளவில் இருக்கும் அது தான், நாம் விரும்பி உண்ணும் சாக்லேட் செய்ய உதவும் மூலப்பொருள். 

 

அந்தப் பழத்தை வெட்டினால், உள்ளே சீத்தாப் பழம்போல், கொட்டைகளும் அதைச் சுற்றி மெல்லிய சதை மூடியிருக்கும். 

 

அதை எடுத்து வெள்ளைத் துணியில் மூடி வைத்துச் சில நாட்களுக்குப் பின் எடுத்தால், அது ஒருவித புளித்த மதுசார மணத்தைத் தரும். 

 

அதை‌ எடுத்து மைக்ரோவே ஒவனில் சில டிகிரி சூட்டில் வறுத்தெடுத்தால் கருகிவிடும். அது தான் கொக்கோ பீன். 

 

அதைப் பொடித்து எடுத்தால் அது கொக்கோ பவுடர். அதைக் கொண்டு சாக்லேட் முதல் கேக், சாக்லேட் பானங்கள் உட்பட அனைத்தும் செய்யலாம்.  

 

கிரைண்டர் போன்ற அரவை மிக்ஷின், கொக்கோ பவுடர் மற்றும் பல வேதிப் பொருட்கள் கலந்த கலவையை அரைத்துக் கொண்டிருந்தது. அரைக்க அரைக்கச் சாக்லேட்டின் சுவையும், பட்டுப் போன்ற தன்மையும் வரும்.

 

கையுறை அணிந்த வலிய கை விரல், சாக்லேட் கலவையை எடுத்து ருசி பார்த்தது. 

 

இனிப்பு சேர்க்காத கொக்கோவின் சுவை பாகற்காயை விட மிகவும் கசப்பு சுவை உடையது. 

 

தலையில் நெகிலித் தொப்பி கொண்டு மூடியிருந்தவனின் முன், ஒன்றல்ல ஆறு பெரிய க்ரைண்டர்கள் சுற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு க்ரைண்டரிலும் ஒவ்வொரு சுவை அடங்கிய எசன்ஸ், சர்க்கரை, ஆயில் மற்றும் பால் பொடியைக் கவனமாகச் சேர்த்து, ஒவ்வொரு முறையும் ருசி பார்த்தான். 

 

"இன்னைக்கி நைட் முழுக்க ஓடட்டும். காலைல வந்து பாத்துக்கிறேன்." என்று ஊழியரிடம் சொல்லி விட்டு மணியைப் பார்க்க, அது ஒன்பதடித்திருந்து. 

 

அணிந்திருந்த ஏப்ரானை கலட்டி விட்டு அந்தக் கூடத்தை விட்டு வெளியே வந்தான். 

 

சிறிய சாக்லேட் பேக்டரி அது. பத்து பேர் வேலை செய்யும் அதன் முன் பகுதியில் சிறிய கடை உண்டு. அது சாக்லோட் பிரியர்களுக்கானது. 

 

பத்து மணிக்குத் தடுப்பை இழுத்து மூடியவன் தன் வசிப்பிடம் திரும்பினான்.

 

காலை ஒன்பது மணிக்கு மீண்டும் ஸ்வீட் பாரடைஸ்(sweet paradise) என்ற பலகை தொங்க விட்டிருந்த கடையை அடைபவன், அன்றைய நாளுக்கான பணிகளை மேலாளரிடம் ஒப்படைத்துவிட்டு,‌ அவனுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு அறையில் சென்றமர்வான். மாலை நான்கு மணிவரை அந்தக் கேபினை விட்டு வெளியே வருவதே இல்லை. அதன்‌ பின் சமயற்கூடம் செல்பவன் சாக்லேட் தயாரிக்கத் தொடங்கி விடுவான். 

 

அது தான் அவனின் தினசரி வாழ்க்கை. 

 

அத்தனை நேரம் அவனின் அறையில் என்ன செய்வான் என்று எட்டிப்‌பார்த்தால்,

 

கேபின் சுவர் முழுவதும், எல்ஈடி டீவிகள் பத்து பதிக்கப்பட்டிருந்தன. மீதி உள்ள இடத்தைப் புத்தகங்கள் நிறைத்திருந்தன.

 

டீவியை ஆன் செய்பவன், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சேனலை வைத்து விட்டு, ஒரு லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்துக் கொள்வான். 

 

அனைத்து திரைகளிலும் stock market பற்றிய செய்திகளும், பச்சையும் சிவப்புமான கோடுகள், மலை முகடுகள்போல் மேலும் கீழும் இறங்கிய படியே இருந்தன. 

 

அதில் ஓடிக் கொண்டிருந்த அனைத்தை செய்திகளையும் கூர்ந்து கவனத்துடன் கண்கானித்துக் கொண்டிருக்கும் இவன் தான் 

 

சஜித்ரேவன். 

 

இந்தக் கதையின் நாயகன். 

 

புரியாத புதிர் அவன் என்று சொல்லலாம். எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்கவே முடியாத அளவிற்கு அழுத்தக்காரன். ப்ரஜித் கூறுவது போல் இரும்பு மனிதன். 

 

மாஸ்டர் மைண்ட் குணம் கொண்டவன். 

 

திட்டங்கள் சரியாக வகுக்கப் படும்போது வெற்றி வந்தே தீரும் என்ற எண்ணம் கொண்டவன். 

 

வளவளாவெனப் பேசி நேரத்தை விரையமாக்குவது அவனுக்குப் பிடிக்காத ஒன்று. 

 

இறுகிய முகம். பிஸ்னஸ் மூளை. எதையும் நிதானமாகப் பொறுமையாகக் கையாண்டு தன் வெற்றியை அடையும் குணம் அவனுடையது. 

 

சிரிக்கத் தெரியாது என்று இல்லை. அவனைச் சிரிக்க வைக்க யாரும் இல்லை என்பான். 

 

ப்ரஜித்தை போல் பகிடியாகப் பேசிப் பழகாதவனுக்கு எல்லாமே பிஸ்னஸ் தான். 

 

மன அழுத்ததை குறைக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் உண்டு. நம் சஜித்திற்கு வேலை செய்ய வேண்டும்‌. அதிலும் சாக்லேட் செய்வது மிகவும் பிடிக்கும்.

 

சாக்லேட் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமா பிடிக்கும்? நம் சஜித்திற்கு அது தான் டென்ஷனை குறைக்கும் அருமருந்து.  

 

மன பாரம் ஏறும் அளவிற்கு என்ன நடந்ததென்றால் மரணம்.

 

ஆஜித்ரேவனின் மரணம் அவனுக்கு மிகப் பெரிய அடி. அதிலிருந்து மீண்டு வரும் முன் ப்ரஜித் கூறியது அதீத வலியைத் தந்தது. 

 

அவனின் வலிகளைப்‌ போக்கி, விட்டு விட்டு வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பி வைக்க ஒருத்தி ரயில் ஏறி வந்து கொண்டிருக்கிறாள்.

 

அன்று வேலை முடித்துச் செல்ல இருந்த நேரம் இளாவின் அலைபேசி அலறித் தன் இருப்பைக் காட்டியது. எடுத்து அழைப்பை ஏற்றவன், காதில் வைக்காது தூர வைத்துவிட்டு, தன் உடமைகளை சரி பார்க்கத் தொடங்கினான்.

 

பேசாததற்கு காரணம், பேசியது கோகோ.

 

"அத்தான் ஹாஸ்டல் பாத்துடீங்களா? ப்ளீஸ் தமிழ் பேசத் தெரிஞ்ச ஆளுங்க இருக்குற ஹாஸ்டலா பாருங்க. அப்றம் பக்கத்துலயே சரவண பவன் மாறிச் சாப்பாடு நல்லா கிடைக்கனும். எனக்குப் பானி பூரி, பாவ் பஜ்ஜிலாம் பிடிக்கும் தான். ஆனா அதையே சாப்பாடா சாப்டுட்டு இருந்தா நாக்குச் செத்திடும். ஆஃபிஸ் போய்ட்டு வர ஆட்டோ டாக்ஸிக்கு கூட ஏற்பாடு பண்ணனும். இன்னும் மூன்னாள் தா இருக்கும்." எனக் கத்த, அவன் தான் தனியாக வைத்து விட்டானே. பின் எப்படி பதில் வரும்?. 

 

"ஹலோ... அத்தான்... அத்தான்... இருக்கிங்களா இல்லையா?... அத்தான்..." எனக் குரல் கொடுக்க,

 

"உனக்கு டிக்கெட்ட வாட்ஸ் அப் பண்ணிருக்கேன். தேவையானத மட்டும் எடுத்து வச்சி பத்திரமா வந்து சேரு." என்று விட்டு, பட்டெனத் துண்டித்தவனுக்கு மூச்சு வாங்கியது. 

 

'யாரு யாருக்குத் தாய்யா வேல பாக்குறது. ஒத்த சம்பளத்த குடுத்திட்டு மூணு பேர் போடுற உத்தரவுக்குக் கீழ் படிய வேண்டியிருக்கே. ச்ச...' என்றபடிச் சென்றான்.

  

நேரம் மத்தியம் ஒன்று என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஒரு பெண் குரல் அறிவித்துக் கொண்டே இருக்க, இன்னும் ரயில் வரவில்லை. 

 

அவனின் பொறுமையை அதிகமாகச் சோதித்து, ஒன்றை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது ரயில். 

 

உள்ளிருந்து கோகோ குதுகலமாக மும்பையில் காலடி எடுத்து வைத்தாள்.

 

'சென்னையே பாக்காதவ மும்பைக்கு வந்திருக்கா. அந்தப் பரவசம் இருக்கத்தானே செய்யும்‌.'

 

"அத்தான்..." என்றழைத்தபடி அவளின் இடை அளவிற்கு உயர்ந்த பெட்டியைக் கஷ்டப்பட்டு ரயிலிலிருந்து இறக்கினாள். 

 

அதைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டவன்.

 

"உன்ன யாரு இவ்வளோ ஹெவியா லக்கேஜ்ஜ தூக்கிட்டு வரச் சொன்னா?" எனத் திட்டிய படி இறக்கி வைத்தவன் அதைத் தள்ளிக் கொண்டே செல்ல, பின்னால் வரவேண்டிய கோகோவைக் காணும். 

 

"பாஷ தெரியாத ஊர்ல என்ன விளையாட்டு இது." எனக் கோவம் துளிர் விட, அடுத்த நொடியே செடியாக வளர்ந்து விட்டது கோகோ கையில் வைத்திருந்த மேலும் இரு பெட்டிகளைப் பார்த்து. 

 

"என்ன கோகிலா இது?"

 

"லக்கேஜ் அத்தான்." என்றவளை, 'எனக்குத் தெரியாதாக்கும்' என்பது போல் முறைக்க, 

 

"நா எதுவும் பண்ணலத்தான். அத்தையும் மாமாவும் சேந்து பேக் பண்ணி தந்தாங்க. கடைல புது டிசைன்ல மாடல் ட்ரெஸ் வந்திருக்குன்னு வாங்கி நிறைய அடுக்கி வச்சிட்டாங்க. உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது எவ்ளோ வசதியா இருக்கு பாருங்க. ஒரு பொய்யால எனக்குப் புதுசா நாப்பது செட் சுடிதார் எடுத்துக் குடுத்தாங்க." எனப் பெருமையாகச் சொன்னவளின் இதழ்கள் வார்த்தைகளைக் கக்காது உறைந்துவிட்டது.

 

சத்ரபதி சிவாஜி இரயில் நிலையத்தின் அமைப்பைக் கண்டு பிரமித்துப் போனவள், தன் கண்களை 360 கோணத்திற்கு சுழல விட, அவளின் தலையில் தட்டி இளா தான் இழுத்து வந்தான். 

 

"செம்மையா இருக்கு அத்தான். இவ்ளோ பெரிய ரயில்வே ஸ்டேஷன். எத்தன டிராக்கு, எத்தன டிரெயினு. வாவ்... ஏதோ கோட்டைக்குள்ள போற மாறித் தூணெல்லாம் வச்சி. ப்பா... செம்மையா இருக்கு. நல்லா நீட்டா! ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாறிச் சுத்தமா வேற இருக்கு. இத என்னோட இன்ஸ்டால போஸ்ட் போடப் போறேன்." என்றவள் அனைத்தையும் ரசித்துப் புகைப்படம் எடுத்தபடி அன்னநடை போட்டாள்.

 

"ஹோட்டல் மாறித் தான! கண்டிப்பா இருக்கும். 2008 ல தாஜ் அட்டாக் நடந்தது தெரியுமா.?"

 

"ம்… தெரியும். மூணு நாள் நா டிவிய விடாம பாத்தேன். 190 பேருக்கு மேல இறந்து போயிருக்காங்க. Sad moment ன்னு என்னோட அக்கௌன்ட்ல போஸ்ட் போட்டேன்." 

 

"அதோட ஆரம்பம் இந்த ஸ்டேஷன்ல தான். இங்க மட்டும் 58 பேர் இறந்திருக்காங்க. 150 க்கும் மேல காயம் பட்டவங்க. இதோ! இந்தத் தூணுக்குக் கீழ தா ஒருத்தனோட டெத் பாடி கிடந்தது. அங்க ஒரு பொண்ணுன்னு நினைக்கிறேன். இங்க..." என்றவனிடம் இருந்த தன் பெட்டியைப் பிடுங்கிக் கொண்டு வேகவேகமாக நடந்து சென்றவளை இளாவின் சிரிப்புச் சத்தம் தொடர்ந்தது. 

 

"ச்ச… நானே முதல் முறை ஒரு வேலைக்கின்னு, அதுவும்‌ டிரீம் ஜாப்புக்குன்னு வந்திருக்கேன். அபசகுணம் மாறிச் செத்தவங்கள பத்தி பேசிட்டு வாராரு. நல்ல விதமா பேசவே தெரியாதா!?." என முணுமுணுத்தவளுக்கு எங்குச் செல்வது என்று தெரியாத காரணத்தால் நின்றுவிட்டாள்.

 

"இப்ப வர்றீங்களா இல்லையா?" எனச் சிரித்தபடி நின்ற இளாவை பார்த்து மிரட்டலாகக் கேட்க, அவன் புன்னகையை நிறுத்தி விட்டு வாடகை காரில் ஏறினான் பெட்டிகளுடன். 

 

அவ்வளவு அவசரம் அவளுக்கு.

 

 எதற்கு?

 

லட்சியத்தை அடையவா! அல்லது சஜித்தின் நிம்மதிய கெடுக்க வா! ரெண்டிற்கும் தான்…

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 10

https://kavichandranovels.com/community/topicid/103/


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 60
 

@vsv11 சாக்லேட் தயாரிப்பு பத்தி ஹான் விழி சிஸ் சாக்லேட் ஞாபகம் வர வைச்சிடீங்களே 🤧🤧🤧🤧 super story interesting sis..


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

@vsv4 நன்றி தேவிசை சிஸ். 🥰🥰


   
ReplyQuote

You cannot copy content of this page