All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 13

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 134
Topic starter  

அத்தியாயம்: 13

 

காலை ஆறு மணி என்றது அவளின் ஃபோன் அலாரம். 

 

"ம்ச்... இது வேற..." எனச் சலித்தவாரே எழுந்தவள் குழாயில் வடியும் சொட்டுகளை திறந்து விட்டு வாளியில் பிடிக்கத் தொடங்கினாள்‌. 

 

9 டூ 6 ஜாப். 

 

அதாவது காலை ஒன்பது மணிக்குப் பணியில் இருக்க வேண்டும். ஒரு மணி நேர உணவு இடைவேளை போக மாலை 6 மணிக்கு ஆஃபிஸ் முடிந்து விடும்‌. 

 

எப்படியும் சொட்டு சொட்டாக விழுந்து, நீர் வாளியை நிறைக்க ஒரு மணி நேரம் ஆகும். அதனால் குழாயைத் திறந்து விட்டு விட்டுப் பால்கனியில் அமர்ந்து கொண்டாள். 

 

"எட்டாவது மாடில இருந்து சூரிய உதயத்த பாக்குற அழகு இருக்கே... ப்பா… அத பாக்குறத விட அதுல படுத்துத் தூங்குனா ரொம்ப நல்லா இருக்கும்." என்றவள் விட்ட தூக்கத்தை பால்கனியில் தொடர்ந்தாள். 

 

எத்தனை மணித் துளிகள் சென்றது என்று தெரியாது ஆனால் அவளின் முகத்தில் குளிர் நீர் சாரல் மழையாய் பொழிந்தது. 

 

'யாரு டா அது?. தூங்குற பிள்ளைய தண்ணி ஊத்தி எழுப்புறது. இரு டா உன்னைய... ' என ஆவேசமாகத் தான் எழுந்தாள், ஆனால் அவளின் ஆவேசத்தில் மீதும் யாரோ தண்ணீரை ஊற்றி விட்டனர் போலும். தணிந்து குளிர்ந்து போய் நின்றாள். 

 

வேறு யாருமல்ல சத்யா தான் அது. 

 

காலர் இல்லாத பிச் கலர் டீசர்ட், ஷாட்ஸ் அணிந்திருந்தவன் துவட்டிய துண்டை உதறியிருப்பான் போலும்.  

 

அவன் உதறியது கோகோவின் முகத்தில் பட்டு அவளை எழுப்பி விட்டது. 

 

"குட் மார்னிங் சத்யா. டெய்லி இவ்ளோ சிக்கிரமா எழுந்திடுவாயா? " எனப் புன்னகையுடன் கேட்க, சஜித் திரும்பிப் பார்த்தான். 

 

'யாருக்கிட்ட இவா பேசுற!' என்பது போல்.

 

"உங்கிட்ட தா பேசுறேன் சத்யா."

 

'நானா!' என்பது போல் அவன் புருவம் சுருக்க,

 

"ம்… நீ தா. உம்பேரு தா சத்யா. நானே வச்சேன். உம்பேர நீ சொல்லல அதா." என்றவளை கண்டு கொள்ளாது திரும்ப, 

 

"ஹேய்... குடுத்த வணக்கத்துக்குப் பதில் வணக்கம் வைக்காம போற." எனக் கத்தியபடி பின்னே செல்ல முயன்றவளை‌ இரும்புக் கம்பிகள் தடுத்தது. 

 

அவளின் பால்கனியில் வெறும் திண்டு மட்டுமே இருந்தது. ஆனால் சஜித் பால்கனியில் திண்டின் மேல் இரும்புக் கம்பி போட்டு யாரும் குதித்து உள்ளே வரமுடியாத படி தடுப்புப் போட்டிருந்தது. 

 

இரு பால்கனிக்கும் இடையே ஒரு முலங்கை அளவு தான் இடைவெளி. அந்தக் கம்பி மட்டும் இல்லையென்றால் கோகோ எகிறி குதித்து அவனைப் பின் தொடர்ந்திருப்பாள். 

 

முடியாது போய்விட்டது. 

 

"காலைல சூரியனையும் பாத்தாச்சி. அடுத்ததா நம்ம டாவு சத்யாவையும் பாத்தாச்சி. அப்ப இந்த நாள் செம்மையா இருக்கப் போது. இது என்னோட ஃபர்ஸ்ட் டே. நா முதல் முறை ஆஃபிஸ்க்கு போகப் போறேன். I have a job And that is my favorite job." என உற்சாகக் குமிழிட வேலைக்குத் தயாராகி வந்தாள்.

 

அங்குச் சென்றபின் தான் தெரியும் அது அவளுக்கு லக்கி டேவா இல்லயா என்று. 

 

நடந்து செல்லும் தூரத்தில் இருந்த மெட்ரோ ஸ்டேஷனுக்குச் செல்லும் பாதையில் ஒரு தமிழ் தெரிந்த கடைக்காரரை, முன் தின மாலையே இளா அறிமுகம் செய்து வைத்திருந்தான் காலை உணவிற்காக. 

 

"இட்லி, பூரி, ஊத்தாப்பம், தோசை, பொங்கல் இது மட்டும் எனக்கு ஸ்பெஷலா தந்தா போதும்." என அவள் வைத்த ஐஸ்ஸில் மயங்கி அவளுக்குச் சிறப்பான கவனிப்பு கிடைத்தது. 

 

"ம்... சாம்பார் அல்டிமேட் மாஸ்டர். கலக்கிட்டிங்க போங்க. இன்னும் கொஞ்சம் ஊத்துங்க." என அவள் ரசித்து உண்வதை பார்த்தே சிலர் இட்லிக்காகவும் சாம்பார் சட்னிக்காகவும் தட்டை நீட்டினர். 

 

"ஒவ்வொரு வியாபாரிக்குக் கஸ்டமரோட பாராட்டும், அவங்க முகத்துல வர்ற சந்தோஷமும் தான் மார்க்கெட்டிங். அது, கடைய டெவலேப்மெண்ட் ஆக்கும். எதோ என்னால முடிஞ்சது. அதோட குறை சொல்ற அளவுக்குச் சாப்பாடு இல்ல. சாப்பாடு செம்மையா இருந்தது. 

 

நல்லா இருக்குற ஒன்ன நல்லா இருக்குன்னு சொல்லாம விட்டா நல்லா இருக்காதுல." என்பவள் உண்டு முடித்து விட்டு ஸ்டேஷனுக்குச் சென்றாள். 

 

இருபது நிமிடங்கள் பிடிக்கும் அவள் இறங்க வேண்டிய நிலையத்திற்குச் செல்ல. 

 

பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பழமொழி நம் கோகோவிற்கு சரியாகப் பொருந்தி இருந்தது. 

 

அனைத்தையும் விழி விரிய, புருவம் உயர்த்தி, இதழ் திறந்து ரசித்து வந்தவளின் பார்வை அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த சத்யாவின் மீது படிந்தது. 

 

"சத்யா… ஓய் சத்யா…" என்ற படி கூட்டத்தை விலக்கி விட்டு அவனை நெருங்கி வந்தாள். 

 

"நீயும் இந்த ட்ரெயின்ல தா போவியா? சொல்லி இருந்தா சேர்ந்தே வந்திருக்கலாம். என்ன வேல பாக்குற? எங்க இறங்குவ?" என அவன் அணிந்திருந்த டீசர்ட் ஜீன்ஸை பார்த்து என்கொரி செய்ய, அவன் பதில் சொல்லவில்லை. குனிந்து ஃபோனில் புதைந்து கிடந்த முகத்தை, தன்னை நோக்கி உயரச் செய்தால் அவனின் தோள் பட்டையைச் சுரண்டுவதன் மூலம்.

 

"மௌன விரதமா சத்யா?" எனக் கேட்டு அவனின் விழிகளின் கோவத்தை வாங்கிக் கொண்டாள். 

 

"நா இங்க தா டோலக்பூர்... ச்சி பேலாப்பூர். அங்க கென்ஸ் காம்ப்ளக்ஸ் தா என்னோட ஆஃபிஸ். முதல் நாள் ஆஃபிஸ் போறேன். அத்தோட இது தான் என்னோட முதல் ஜாப். இதுவர யார் கிட்டயும் நா வேல பாத்தது இல்ல. எக்சைட்மெண்டா இருக்கு, இன்னைக்கி என்னென்ன நடக்கப்‌ போதுங்கிறத தெரிஞ்சுக்க." என்றாள் தோளில் கிடந்த பேக்கின் ஸ்டாப்பை இழுத்து விளையாடிய படி. அவன் கேட்கிறானா என்றெல்லாம் கவலை படாது பேசிக் கொண்டே வந்தவள்,

 

"சாப்டியா சத்யா?" எனக் குனிந்து அவனின் முகம் பார்த்துக் கேட்டாள்.

 

"என்ன வேணும் உனக்கு.?" என ஒரு வழியாக வாயைத் திறக்க வைத்து விட்டாள் கோகோ.

 

"பதில் வேணும்." என்றபோது புருவம் சுருங்கியது.

 

"அது நீ சாப்டியான்னு தெரியனும்."

 

"இல்லன்னு சொன்னா என்ன செய்வ?."

 

"டிப்பன் பாக்ஸ் தருவேன்." என்பதோடு பார்சல் செய்து வந்த டப்பாவை நீட்டினாள். 

 

அதை வாங்காது அவளைப் பார்த்தபடி நின்றான். 

 

"நீ என்ன எதிர் பாத்து எங்கிட்ட பழகுறன்னு நா தெரிஞ்சிக்கலாமா.?" எனப் பட்டெனக் கேட்க,

 

"எதையும் எதிர்பாக்கல அப்படின்னு பச்சையா பொய் சொல்லிட முடியாது. பாக்குறேன் தா. எதன்னா.... உன்னோட நட்ப, ஆறுதல, ஒரு ஒத்தாசைய. 

 

நா இந்த ஊருக்குப் புதுசு. சத்தியமா சொல்றேன் எனக்கு இங்க இருக்குற எல்லாரயும் பாத்தா பயம்மா இருக்கு." 

 

'யாருக்கு? உனக்கா? பயம்மா?' என அவனின் விழிகள் கேட்டன.

 

"எஸ் பயம் தான். மொழி தெரிஞ்ச ஊர்லயே ஆளுங்க கூடப் பாத்து தா பழகனும். இங்க சுத்தமா பாஷ புரியல. நேத்து நீ என்னோட வீட்டுக்குள்ள வந்து தமிழ்ல பேசுனதும் பயம் வந்தாலும் எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்ததுன்னு தெரியுமா? என்னச் சுத்தி புகமூட்டமா வந்து, ஏதோ தேவலோகத்துல இருந்த மாறி ஒரு ஃபீல்.”

 

‘எது உவ்வீடா! அவெ வீடும்மா அது.’

 

“தமிழ் தா நம்மல கோர்த்து விடுது. அது தா உங்கிட்ட என்ன பேசத் தூண்டுது. 9********1 இது என்னோட ஃபோன் நம்பர். உன்னோடது." என்றவளை ‘நா கேட்டேனா?' என்பது போல் பார்க்க, அவனின் கையில் இருந்த ஃபோனை எடுத்துக் கொண்டவள் அவளின் அழைபேசிக்கு அழைப்பு விடுத்து துண்டித்தாள். 

 

"இது என்னோட நம்பர். கோகோன்னு சேவ் பண்ணிக்க. நானும் உன்னித சேவ் பண்ணிட்டேன். சத்யா." என மொபைலை காட்டினாள், 

 

"என்னோட ஸ்டாப் வரப் போது. ஃபீரியா இருந்தா கால் பண்ணு." என்று விட்டு, பாக்ஸை அவனின் கையில் திணித்து விட்டு இறங்கிச் சென்றாள். 

 

சஜித்திற்கு அவளின் செயல்கள் அனைத்தும் விசித்திரமாகத் தெரிந்தது. விவரம் அறிந்த நாளிலிருந்து அவனுடன் உரிமையாகவெல்லாம் யாரும் பேசியது இல்லை. தாய் தந்தை உட்பட அனைவரும் பாசமாக நடந்து கொள்வர் தான். ஆனால் உரிமையுடன் பாசத்தை காட்டுவது சித்தாரா மட்டும் தான். 

 

"சஜி சாப்டியா?" என்ற கேள்வியை முதல் முதலில் அவர் வாய் மொழியில் தான் கேட்டான். 

 

இல்லை என்றால் போதும், உடனே அடுப்பு, பற்ற வைக்கப்படும். வீட்டில் எக்கச்சக்க வேலையாட்கள் இருந்த போதும் உணவு மட்டும் அவரின் கையால் தான் சமைப்பார். 

 

சஜித்திற்கு அவரின் கையால் உண்டு பல தினங்கள் ஓடி விட்டது என்ற நினைவு வந்தது. கையில் இருந்த பாக்ஸை பார்த்தவன் அவளைத் தொடர்ந்து அதே நிலையத்தில் இறங்கினான். 

 

அவளைப் பின் தொடராது வேறு திசையில் செல்ல, "இவனும் இதே ஸ்டாப் தானா.! இவ்வளோ நேரம் பேசிட்டு இருந்தோம். ஒரு வார்த்த சொன்னானா பாரு." என்றபடி அவனைப் பாலோ செய்து அந்தக் கூட்டத்தில் அவனைத் தொலைத்தும் விட்டாள். 

 

நேரம் எப்பொழுதுதோ ஒன்பதைத் தாண்டிச் சென்று விட்டது. அதை உணராது லிஃப்ட்டில் தன் அலுவலகம் செல்லும் பொத்தானை அழுத்தியவள் உற்சாகத்துடன் உள்ளே சென்றாள். 

 

அங்கு ரிசப்ஷனிஸ்ட் இருந்தார். வந்தவர்களை வரவேற்று அங்கிருக்கும் சோஃபாவில் அமர வைத்து, யாரைப் பார்க்க வேண்டும் என்று விசாரித்து அவர்களை வரச் சொல்வார். 

 

அந்த ரிசப்ஷனைத் தாண்டித் தான் அலுவலகம். அதற்குள் நுழைய ஊழியர்களைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. ஏன் ஊழியர்களுக்கே ஆக்சஸ் கார்டு என்ற ஐடிக் கார்டு கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் காட்டினால் தான் அனுமதி உண்டு. 

 

நேற்றே கோகோவிற்கென லேப்டாப் மற்றும் ஐடி கார்டை கொடுத்திருந்தாள் ரிபேக்கா.

 

தன் கார்டை அங்கிருந்த டிஜிட்டல் மானிட்டரில் வைக்க, அது கதவைத் திறக்காது சத்தமிட்டு ரிசப்ஷனிஸ்டை திரும்பிப் பார்க்க வைத்தது.

 

"நா எதையும் உடைக்கல." எனப் பதறிக் கத்த, 

 

"மேம் நீங்க லேட். அதா டேர் ஓப்பன் ஆகல." என்றார் அவர். 

 

'எது லேட்டா? ஸ்கூலுக்கு கூட நா லேட்டா போனாலும் வெளில நின்னது இல்லயே. லேட்டா வந்தா அங்க பெரிய கேட்ட பூட்டி வச்சிருப்பாங்க. ஆனா நா சின்னதா ஒரு கேட் இருக்கும் அது வழியா குறுக்க புகுந்து போய்டுவேன். இங்க அது மாறி... ' எனத் தேட, 

 

"என்ன தேடுற..."

 

"உள்ள போக வழி." என்றாள் திரும்பாது. 

 

"ஏ லேட்.?"

 

"அது என்னோட ஆளப் பாத்தேனா. அவன ஃபாலோ பண்ற அவசரத்துல ஆஃபிஸ் வரனுங்கிறதையே மறந்திட்டேன்." 

 

கேள்வி யார் கேட்கிறார்கள் என்று இன்னும் திரும்பாமலேயே பதில் கூறினாள். 

 

"அப்ப அவனையே ஃபாலோ பண்ணு. எதுக்கு ஆஃபிஸ் வந்த."

 

"அவெந்தா கூட்டத்துல மறைஞ்சி போய்ட்டானே. வேற எங்க போய் த்...தேட... ஸாரி மேம். ஸாரி மேம்..." என்றவள் திரும்பி விட்டாள் போலும்.

 

கேள்வி கேட்ட ரிபேக்காவை பார்க்க முடியாது தலை குனிந்து நிற்க, அவள் பின் தொடருமாறு உத்தரவிட்டு விட்ட உள்ளே சென்றாள். 

 

'ஐ கேட் திறந்திடுச்சி!' எனச் சந்தோஷமாகவே சென்றாள். 

 

ஆனால் பாவம் ரிபேக்கா காய்ச்சி எடுத்து விட்டாள். 

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 14

https://kavichandranovels.com/community/topicid/177/

 


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 60
 

@vsv11 அவன் கூட யாரு வளவளக்க சொன்னது 🤣🤣🤣 உனக்கு இது தேவையா கோகோ சிவனேனு அவன் பாட்டுக்கு ஃபோன் பாக்குறான் அவன் பின்னாடி போயி ரிபேக்கா காய்ச்சி கொட்டுறத வாங்கிட்டியே சில்னு இருக்குமா ஹாட் ஆ இருந்து இருக்குமா ??🤭🤭 Next epi waiting vizli sis..


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 134
Topic starter  

@vsv4 நன்றி தேவிசை சிஸ். உங்க கமெண்ட் எனக்கு ஒரு கப் நிறைய பூஸ்ட் குடிச்ச மாறி இருக்கு. நன்றி. Keep reading thank you 🙏🙏


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 60
 

@vsv11 🥰🥰🥰 epi padicha udane solla thonum sis apadiye comment la koduthuduven eeeee 😁😁 neega happy na pothum vizli sis 💖


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 134
Topic starter  

@vsv4 🥰


   
ReplyQuote

You cannot copy content of this page