All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்

 

VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்
(@vsv6)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 5 

 

“வருணா?” என அதிர்ச்சியுடன் கேட்டாள் அருவி.. 

 

“ஆமா டி அப்படித்தான் சொன்னான்?..” என படபடத்த மூர்த்தியைப் பார்த்த அருவிக்கு புருவம் இடுங்கியது.. 

 

அதை துகிலனும் கவனித்தான், மூர்த்தியும் பார்த்தான்.. 

 

“யாரு அவன்?” என துகிலன் கேட்க நினைப்பதை மூர்த்தி பட்டென்று எழுத்து மாறாமல் கேட்டு விட, 

 

“நேத்து என்னைப் பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை..” என்றதும் மூர்த்தியின் முகம் சற்று கடினமானது. 

 

இன்று காலையில் தான் நேற்று பெண் வீட்டார் நடந்துக் கொண்டதை பற்றி ஒன்று விடாமல் அருவி சொல்லியிருந்தாள்.. 

 

அப்படியிருக்கும் பொழுது, இவன் தான் அவன் என எதார்த்தமாக சொல்லிட, மூர்த்தியை விட, அங்கு கம்பீரமாக சேரில் அமர்ந்திருந்த துகிலனால் இருக்கையில் அமரவே முடியவில்லை.. 

 

“நேற்று அவளை பெண் பார்க்க வந்திருக்கிறார்களா?” என நினைக்கும் பொழுதே இனம் புரியாத கோபம் அருவியின் வீட்டாரின் மேல் பாய்ந்தது.. 

 

நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டே இருக்கையில் இருந்து எழுந்த அருவி வேகமாக வெளியே சென்றாள்.. 

 

அங்கு கார்கள் நிற்பதற்காகவே செட் போன்ற அமைப்பு ஒன்று இருந்தது. அதில் தான் வருண் அவனின் பைக்கை நிறுத்தி அதில் சாய்வாக நின்றுக் கொண்டிருந்தான்.. 

 

தூரத்தில் அருவி வருவதைப் பார்த்ததும் சாய்ந்த நிலையில் இருந்தவன் சட்டென்று நிமிர்ந்து நிற்க, அதற்குள் அவ்விடத்தில் கோபத்தில் வந்து நின்றாள் அருவி.. 

 

“வாங்க ங்க.. எப்படி இருக்கீங்க?” என நேற்று ஒன்றுமே நடக்காதது போன்று பேசிக் கொண்டிருப்பவனை பார்த்து புருவம் சுருக்கினாள்.. 

 

நேற்று அவன் அன்னையுடன் வரும் பொழுது பேசிய பேச்சு என்ன? இன்றைக்கு ஒன்றுமே நடக்காதது போன்று அவன் பேசும் பேச்சுக்கள் என்ன? இரண்டிற்குமே எவ்வளவு வேறுபாடு. இரண்டுமே சற்று முரண்பாடு தான்.. 

 

“என்னடா நேத்து அப்படி அசிங்கப்படுத்திட்டுப் போனானே?.. இன்னைக்கு இவ்வளவு பவ்வியமா வந்து நிக்கிறானேன்னு தான பார்க்குறீங்க?” எனக் கேட்டவனைக் கண்டு உதட்டைச் சுழித்தாள்.. 

 

அவளுக்கு வருணிடம் பேசவே விருப்பமில்லை. வேண்டா வெறுப்பாக வந்து நின்றவளுக்கு அவனின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை.. 

 

“நீங்க எதுக்கு இங்கே வந்திருக்கீங்க?” என கேட்டவளின் அருகில் வருண் நெருங்கி நிற்க முயல, சட்டென்று அவனின் செய்கையில் இரண்டெட்டு பின்னால் வைத்தாள் அருவி.. 

 

அவன் தன்னை நெருங்கும் நேரம் இதயமோ படபடவென அடித்துக் கொண்டது.. உடல் தன்னிச்சையாக நடுங்க ஆரம்பித்தது..  

 

“என்ன பண்றீங்க?” என கோபத்துடன் எரிந்து விழ, 

 

“என்னங்க நீங்க என்னமோ ரேப் பண்ண வந்த மாதிரி இப்படி பண்றீங்க?” என்றவனின் பேச்சில் திகைப்பின் உச்சத்தில் நின்றது அருவி மட்டுமல்ல, துகிலனும் தான்.. 

 

அவர்கள் இருவரையும் தனியாக விட விருப்பமில்லாதவன், நின்றுக் கொண்டிருக்கும் வண்டியை பார்ப்பது போல் அவர்கள் இருவரின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த டெம்போவில் தான் டிரைவர் சீட்டில் அமரந்திருந்தான். பின்பக்கமாக அவன் ஏறி அமர்ந்ததால் இருவருக்கும் அவன் தெரியவில்லை.. 

 

வருணின் அத்துமீறிய பேச்சில் ஸ்டெய்ரிங்கை அழுத்தமாக பற்றினான்.. 

 

“இங்கே பாருங்க வருண் நீங்க எதுக்கு இங்கே வந்திருக்கீங்கன்னு சொல்லிட்டு கிளம்புனா ரொம்ப தேவலை” என வெடுக்கென்று பேசியவளைக் கண்டு வருணின் முகம் அப்படியே கருத்துப் போனது.. 

 

‘என்னமோ ஊர்ல இல்லாத உலக அழகி இவ.. இவளைப் பார்த்ததும் ஆம்பிளைங்க எல்லாரும் பாஞ்சி பிராண்டிற மாதிரி சீன் போட்டுட்டு இருக்கா’ என மனதோடு நினைத்தவன் வெளியில் ஒரு வார்த்தை பேசவில்லை. அருவியால் அவனுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது அதனால் இந்த பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறான்.. 

 

இல்லையென்றால் அவனெல்லாம் இவளிடம் பேசக் கூட வரமாட்டான்.

 

நொடியில் தன் முகத்தை பாவமான பாவனைக்கு மாற்றியவன், “இல்லை அருவி நேத்து அம்மா உங்களை ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க.. அது தான் மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன்” என பரிதாபம் கலந்த குரலில் சொன்னவனின் உள்ளமோ, ‘உன்னையெல்லாம் எங்கம்மா அசிங்கப்படுத்துறது தப்பே இல்லை டி’ என எக்காளமிட்டு சிரித்தது. 

 

“இதை சொல்லத்தான் வந்தீங்களா வருண்?” என கேட்டவளின் குரலில் சற்று கடினம் கூடியது.. 

 

“இல்லை அருவி.. நான் உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன். உங்களுக்கு தான் என்னைப் பத்தி நல்லா தெரியுமே… என்னைப் பத்தி உங்க தங்கச்சிக்கிட்ட சொல்லி எங்க ரெண்டும் பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்றவன் அத்தோடு நிறுத்தியிருந்தாள் கூட போதுமே… 

 

“என்னடா அக்கா இருக்கும் போது தங்கச்சிக்கு கல்யாணமா ன்னு யோசிக்காதிங்க?. உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. அப்படியே உங்களையும் நானே வச்சிக்கிறேன்” என்றவனின் பேச்சில் திகைத்து விட்டாள் அருவி.. 

 

தன்னை இந்தளவிற்கு தாழ்ந்து பேசும் அளவா தன்னிலை மோசமாகி விட்டது என நினைத்தவள் கண்கள் கலங்கி கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது.. அவளின் கண்ணீரை ஒரு வித குரூரத்துடன் பார்த்தான் வருண்.. 

 

அவனின் எண்ணமெல்லாம் அழகருவி கல்யாண சந்தையில் விலை போகாதவள்.. அவளை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டுமென இச்சைக் கொண்டு தான் இங்கு வந்திருந்தான்.. 

 

இதற்கு மேல் தான் இங்கு நின்றால் தனக்கு தான் அவமானம் என்றெண்ணியவள், எதிரில் நிற்பவனை பற்றி சிறிதும் எண்ணாமல் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்க, 

 

“ஏய் இந்தாடி நில்லுடி… ஹேய்ய்ய் கருப்பீ நில்லுடி… அம்மாஆஆஆஆ” என்ற குரலில் அருவி சட்டென்று பின்னால் திரும்பிப் பார்க்க, துகிலன் தன் வலது கையை உதறியபடி நின்றுக் கொண்டிருந்தான்.. 

 

ஒரு வித பயத்துடன் வருணைப் பார்க்க, வருணின் இடது கன்னம் சிவந்து வீங்க ஆரம்பித்திருந்தது.. 

 

“என்ன அண்ணா பண்ணி வச்சிருக்கீங்க?” என வேகமாக ஓடிவந்தவள் துகிலனிடம் எரிந்து விழ, 

 

“ஏய்ய்ய்.. வாயை மூடுடி.. அண்ணா அண்ணா ன்ன.. அடியில வெளுத்துப்புடுவேன்.. இப்போ என்ன வேணுமாம் இந்த நாயிக்கு? யாரு யாரை வச்சிக்கிறது?.. பொறம்போக்கு நாயே.. ஒரு பொண்ணை மதிக்க தெரியாத நாய் உனக்கு தேவதை மாதிரி பொண்ணுங்க கேட்குதா? ஏன்டி அவன் கிட்ட யாரு உன்னைப் பேச வரச்சொன்னது?” என அவளிடம் எரிந்து விழுந்தான்.. 

 

அவளுக்கென்ன ஜோசியமா தெரியுமா? அவன் எதற்கு பேச வந்திருக்கிறான் என்று.. 

 

“எனக்கென்ன தெரியும்?.. அவன் நடவடிக்கை சரியில்லாம தான் நாம பேசாம போனேன்.. நீங்க ஏன் அவனை அடிச்சீங்க? அவனோட அம்மாவை பத்தி உங்களுக்குத் தெரியாது.. ரொம்ப அசிங்கமா பேசும். அவர் மேல ஏன் கை வைக்கிறீங்க?” என வருணை அடித்தது பற்றியே பேச, துகிலனுக்கோ அப்படியே இவளுக்கும் நாலு போட்டால் என்னவென்று தான் தோன்றியது.. 

 

“என்னடி அவனை ஏன் அடிச்சீங்க? அடிச்சீங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்க?.. இங்கே பாரு…” என்றவன் தலைதாழ்ந்திருந்தவளின் நாடியைப் பற்றியவன், 

 

 

"உன்கூட காலம் முழுக்க வாழணும்னு ஆசைப்படுறேன்.. நீதான் எனக்கு எல்லாமுமா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. உன்னைப் போய் அவன் வச்சிக்கிறேன்னு சொல்லுறான்.. என்னைக் கையைக் கட்டி வேடிக்கை பார்க்கச் சொல்லுறீயா?.. நீ எனக்கு மட்டும் தான் பொண்டாட்டி. உன்னை எவனுக்கும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது..” என்றவனின் வார்த்தைகள் தடுமாறினாலும் அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசினாள்... 

 

“என்னடி கருப்புத் தோல்க்காரி சுத்தமா இருப்பன்னு பார்த்தா? இவனையே மயக்கி வச்சிருக்கீயா? பொண்டாட்டியா?.. எத்தனை நாள் அவன்கூட முந்தி விரிச்ச?” என்றவனின் விஷம் தோய்ந்த வார்த்தைகளில் அப்படியே இரு காதுகளையும் பொத்தியவாறே கீழே அமர்ந்தவள் துடித்து விட்டாள்.. 

 

“டேய்ய்ய்” என மூர்த்தி ஒரு புறம் எகிறிக் கொண்டு வர, துகிலன் அவனை அடித்து துவைக்கவே ஆரம்பித்து விட்டான்.. 

 

இருவரும் ஒன்றாக வருணை அடித்து விரட்ட, அடிபட்ட கருநாகமாய் வெளியே சென்றவன், “அருவி துகிலனை வைத்திருக்கிறாள்” என்று ஊர் முழுக்க விஷமாக கக்க ஆரம்பித்தான். கண்ணில் தென்படுபவர்கள் எல்லாருக்கும் சகுந்தலா டிராவல்ஸைப் பற்றி தப்பாக பேசிக் கொண்டே சென்றான்.. 

 

இவர்கள் இருவரும் பண்ணிய அலப்பறையில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள் அருவி.. அவளுக்கு கண்ணீர் வரவில்லை. ஆனால் முகத்தில் கவலை நிறைந்திருந்தது..

 

அவளுக்கு எதிரில் நிற்கும் துகிலனை பார்க்கவே முடியவில்லை.. “நான் போறேன்” என ஹேன்ட்பேக்கை எடுத்து விட்டு வெளியேற முயன்றாள்.. 

 

அவன் சொன்ன வார்த்தையின் பொருள் புரிந்தாலும் அவளின் நிலை அவளை தடுத்தே நிறுத்தியிருந்தது..

 

“எனக்குப் பதில் சொல்லிட்டுப் போ அருவி” என்ற துகிலனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் வெளியேறி விட்டாள்.. 

 

தன் முன்னால் நின்றுக் கொண்டிருந்த அவிரனையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. 

 

“வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டீயே கைப்புள்ள?” என்றவள் பாவமாக அவிரனை பார்க்க, அவனோ விடாக்கொண்டானாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ஏணிப்படியை அவளுக்கு கண் காட்டிட, 

 

“விடமாட்டான் போலேயே” என்றவள் ஷாலை குறுக்காக எடுத்துக் கட்டியபடி ஏணிப்படியில் ஏற ஆரம்பித்து விட்டாள்.. 

 

“யய்யா கருப்பசாமி உன் புள்ள உசிருக்கு நீதான் உத்தரவாதம் பார்த்துக்க” என்றவளின் புலம்பலைக் கேட்ட அவிரனின் இதழில் சிறு புன்னகை.. 

 

நான்கு படிக்கூட ஏறியிருக்க மாட்டாள்.. கால் கிடுகிடுவன நடுங்க ஆரம்பித்தது.. வீம்பாக இன்னும் பத்து படிக்கட்டுக்கள் ஏறியவளுக்கு மரண பயம் கண்ணில் தெரிய, மெதுவான கண்களை கீழிறக்கி பார்த்தாள்.. 

 

மேலிருந்து கீழே பார்த்ததால் அவளுக்கு சிறிய பள்ளம் கூட பெரிதாக தெரிய, பயத்தில் “கருப்பா” என விழப்போனவளை இரு வலிமையான கரங்கள் தாங்கிக் கொண்டது.. 

 

சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களை திறந்த பின்பு தான் உணர்ந்தாள். தான் இன்னும் கீழே விழவில்லை. அந்தரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை.. 

 

“நாம இன்னும் சாகலையா” என கேட்டுக் கொண்டே கண்களை திறந்தவளின் முன்பாக உக்கிரமாக நின்றுக் கொண்டிருந்த அவிரன் தான் தெரிந்தான்.. 

 

ஹிஹி என சமாளிப்பாக சிரித்தவளை கீழே இறக்கி விட்டவன், 

 

“என்னமோ வீராதி வீரி, சூராதி சூரி மாதிரி பேசுன? இப்போ என்னாச்சி?” என பல்லைக் கடித்துக் கொண்டே கேட்க, 

 

“எனக்கு உயரம் னா பயம் சார்?” 

 

“ஓஹா” என்றவன், “எனக்கு இந்த மாதிரி பயம் இருக்கிறவங்க வேலைக்கு வேண்டாம்” என வேகமாக நடக்க, அவனின் பின்னால் பேசியபடியே நடக்க ஆரம்பித்தாள் மதி.. 

 

“என்ன சார் நீங்க இதுக்குப் போய் கோவிச்சிக்கிறீங்க?.. 

 

“பின்னே ஒரு வேலை உருப்புடியா செய்ய துப்பில்லை” என எச்சரித்தவன், அங்கிருந்த ஸ்டேஜை நோக்கிக் கைநீட்டினான். 

 

“அங்கே போய் எப்படி அலங்காரம் பண்றாங்கன்னு பாரு” என்றதுமே ரெடி.. ஸ்டடி.. கோ என்பதை போல் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள். 

 

பின்னே இவனிடம் சிக்கி தலைகீழாய் தொங்கவா முடியும்… 

 

அனைத்து வேலைகளையும் எப்படி செய்கிறார்கள் என்பதையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். 

 

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதை அவளுக்கு தெரியவில்லை. முதலில் கவனித்துக் கொண்டிருந்தவள் வேலை செய்பவர்களுடன் ஒன்றி வேலையும் செய்ய ஆரம்பித்து விட்டாள்.. 

 

அவள் வேலை செய்வதை கவனித்தவன், “மதியழகி” என்றதும் வேகமாக ஓடி வந்தாள்.. 

 

“இன்னைக்கு நீ வேலை செஞ்சதுக்கு சம்பளம்.. இனி நாளைக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு வந்திடு” 

 

“ஆறு மணிக்கு என்ன வேலை ஆபீசர்” என இயல்பாக கேட்ட பின்பு தான், தான் சொன்னதை உணர்ந்து “சாரி சார்” என்றவளை பார்த்து சிரித்தவன், 

 

“கால் மீ அவிரன்” 

 

“நீ அவிஞ்சா எனக்கென்ன? அவியலன்னா எனக்கென்ன” என முணுமுணுத்துக் கொண்டே “ஓகே அவிரன்.. பாய்” என தன் கையில் இருந்த பணத்தை எண்ணிப் பா

ர்க்க,

 

“நாளைக்கு பர்ஸ்ட் நைட்க்கு ரெடியா வா” என்ற அவிரனின் வார்த்தையில் கையில் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்கள் சிதறி கீழே விழுந்தது.. 

 

This topic was modified 4 weeks ago by VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்

   
ReplyQuote

You cannot copy content of this page