All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 11

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 11

 

தன் முன் இருந்த கணினி, கோகோ, மற்றும் அவள் கொண்டு வந்த காகிதங்களையும் உற்று உற்று பார்த்தார் வரவேற்பாளர். 

 

"M…am! A...ny t…hing s...erious." என்றபோது கோகோவிற்கு மூச்சு வாங்கியது. 

 

நம் கோகோவிற்கு ஆங்கிலம் எப்படி பேசினாலும் புரியும். பேசச் சொன்னால் சில நொடிகள் எடுத்து மூளையில் இதை மொழிபெயர்ப்பு செய்து நிதானமாக மெதுவாகப் பேசவும் செய்வாள். ஆனால் வேகமாகப் பேசச் சொன்னால் மட்டும் பயம் வந்து தொற்றிக் கொண்டு நாக்கு சுழலத் தொடங்கிவிடும்.

 

பத்து நிமிடங்களுக்கும் மேலாக தன்னை நிற்க வைத்த மங்கையிடம் திக்கி திணறிக் கேட்க, "ப்ளிஸ் மேம். நீங்க உக்காருங்க." என்று பணிவுடன் ஆங்கிலத்தில் கூறி விட்டு ஃபோனில் யாருடனோ ஹிந்தியில் பேசத் தொடங்கினாள். 

 

கோகோவைக் காத்திருக்கச் சொன்னவள் தன் வேலையைப் பார்க்க, கோகோ ஆணி அடித்தது போல் ஒரே இடத்தில் வெகுநேரமாக அமர்ந்துவிட்டாள்‌. 

 

நேரம் சென்றதே தவிர யாரும் அவளிடம் வந்து பேசுவது போல் தெரியவில்லை. தானாச் சென்று பேசினாலும், "Please wait ma'am." என்ற பதில் தான் வந்தது.  

 

அமைதியுடன் அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்தாள். கலைநயத்துடன் இருந்தது அது. தன் ஃபோனில் சில புகைப்படங்களை எடுத்து‍, "My new office." என்று தன் இன்ஸ்டாவில் பதிவிட, ஏகப்பட்ட லைக்ஸ்கள் வந்தது. 

 

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றியைக் குறுநகையுடன் தந்து கொண்டிருந்தவளின் நாசியை உயர் ரக சென்டின் நறுமணம் நிரப்பி, தலை நிமிர்ந்து பார்க்க வைத்தது. 

 

அங்கு அவளின் ராஜமாதா, ஒற்றை முந்தானையிட்டு ஷிபான் சேலையில் அழகாக நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளின் அருகே அனுஜித்தின் தோழி ப்ரியங்கா. 

 

ரிபேக்கா என்னென்ன செய்கிறாள் என்பதை வேவு பார்க்க அனுஜித்தால் அனுப்பப்பட்ட ரகசிய உளவாளி அவள். அவளின் வேலை ப்ரஜித்தையும் ரிபேக்காவும் சேரவே விடாது பார்த்துக் கொள்வது. 

 

‘ஆ! என் ராஜமாதா…’ வென வாயைத் திறந்தபடி உணர்ச்சிப்‌ பெருக்குடன் இருந்தவளின் முன் வந்த ரிபேக்கா, "who are you?" எனக் கோபமாகவே கேட்டாள். 

 

காரணம் கோகோவை அவள் வேலைக்குத் தேர்வு செய்யவில்லை. எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் தவறு அவர்கள் பக்கம் தான் என்பதை உணர்ந்ததால் உண்டான இயலாமை கோபமாக மாறி இருந்தது.

 

வேகமாக ரிபேக்காவின் கரம்பற்றிக் குளுக்கியவள், "Mam. I am Coco. You are my inspiration." என ஆரம்பித்து நேற்று முழுவதும் மனப்பாடம் செய்த, தன்னைப் பற்றி அறிமுகத்தை ஆங்கிலத்தில் திக்காது ஒப்பித்தாள். 

 

அவளின் வெகுளித்தனமான பேச்சு, ஏமாற்றும் எண்ணத்தில் வரவில்லை, ஏமாற்றப்பட்டு வரவழைக்கப்பட்டிருக்கிறாள் என்றது. 

 

ஆனால் ஏன்? யார் செய்த வேலை இது? என்ற யோசனையில் அவள் இருக்க, 

 

“கண்டிப்பா நம்ம ஆஃபோசிட் க்ரூப் நம்மல வேவு பாக்க அனுப்பி விட்டவளா இருக்கனும். விரட்டி விடு." என்றாள் பிரியங்கா ஹிந்தியில். 

 

அது சரியெனப்பட்டதால் ரிபேக்கா,

"Ok Fine Coco. தப்பு எங்க பக்கம் தான். ஆனா எப்படி நடந்ததுன்னு தா தெரியல. இப்போதைக்கி எங்களுக்குப் புது ஜாயினி தேவையில்ல. எல்லா டிப்பார்ட்மெண்டுக்கும் ஆள் போட்டாச்சி. சோ..." 

 

"மேம் மேம்… உங்க வாயால அப்படிலாம் சொல்லாதிங்க. என்னோட ராஜமாதா நீங்க. உங்க கிட்ட வேல பாக்கப் போறேங்கிற சந்தேஷத்துல வீட்டுல எக்கச்சக்க பொய்லாம் சொல்லி, ஒரு புறாக்கூண்டுக்குள்ள குடியிருக்கேன் மேம். என்னால உங்களுக்கும், உங்க கம்பெனிக்கும் உதவிகரமா இருக்க முடியும். என்ன நம்புங்க." எனத் தன் ஆசைகள் கனவுகள் அனைத்தையும் தமிழில் மடைத் திறந்த வெள்ளமெனக் கூறி, தன் இன்ஸ்டாகிராம் வீடியோவைக் காட்டினாள்.

 

"எல்லாம் நா பண்ணது மேம். என்னால கன்டென்ட் மார்க்கெட்டிங் சிறப்பா பண்ண முடியும். Ad compaignக்கும் visual ரீதியா உதவ முடியும்." எனத் தன் திறமைகளை வரிசைப்படுத்த, ரிபேக்கா அவள் காட்டிய வீடியோவைப் பார்த்தாள். 

 

நன்றாகத் தான் இருந்தது. அதிலும் ஒரு கம்பெனியின் அலகுச்‌‌ சாதனப் பொருளை வரிசைப்படுத்தி அவள் உண்டாக்கியிருந்த வீடியோ, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது ரிபேக்காவை.

 

கூடவே நம் கோகோவின் தமிழ் பேச்சு, ரசிக்கவும் வேறு ஒன்றை நினைவு படுத்தவும் வைத்தது. 

 

அது அவளின் ஆறு மாத கணவன் ப்ரஜித்தை.  

 

அண்ணன் தம்பி இருவரும் தொழில் செய்யத் தொடங்கும் முன்னரே இந்திய ரூபாய்த் தாளில் இருக்கும் மொழிகளை ஆஜித்ரேவன் கற்றுத் தர ஏற்பாடு செய்தார். அதில் இருவருக்குமே தமிழின் மீது ஆர்வம் அதிகம். அதனால் பெரும்பாலான நேரம் தமிழில் தான் பேசிக் கொள்வர். 

 

அதிலும் ரிபேக்காவை திட்டும் போதும், கொஞ்சும்‌‌ போதும்‌ ப்ரஜித் தமிழைத்தான் உபயோகிப்பான்.

 

ப்ரஜித்தின் நினைவில் மோனப் பாவையாய் அமர்ந்திருந்தவளை கலைக்கும் விதமாக ப்ரியங்கா கோகோவின் ஃபோனை ரிபேக்காவிடமிருந்து வாங்கி,

 

"நீ என்ன வித்த காட்டுனாலும் உன்ன யாரும் இங்க அனுமதிக்கப் போறது இல்ல. கெட் அவுட்." என்க, 

 

"மேம்..." எனத் தயங்கிய கோகோவிற்கு அதற்கு மேல் கெஞ்ச சுயமரியாதை இடம் தரவில்லை.

 

ஆனால் இடம் கிடைத்தது ரிபேக்காவின் மனதில். 

 

"Well. Tell me your ideas." என ஆரம்பித்துக் கோகோவை நேர்காணல் செய்யத் தொடங்கி விட்டாள். 

 

அவளின் கேள்விகளுக்கு டக் டக் எனப் பதில் தந்தவளின் சுறுசுறுப்பையும் ஈடுபாட்டையும் வைத்து அவளுக்கான வேலையை உறுதி செய்தாள் ரிபேக்கா. 

 

"இப்போதைக்கி நீ சோசியல் மீடியாவ கவர் பண்ணு. உனக்குத் தான் இன்ஸ்டாகிராம், யூட்யூப் மாறியான சோசியல் ப்ளாட் ஃபார்ம் நல்லா தெரிஞ்சிருக்கே. அடுத்து உன்னோட திறம வைச்சி பாக்கலாம்." என்க, கோகோ மிகுந்த குஷியுடன் கேபினை காலி செய்தாள். 

 

"எதுக்கு நீ அவளுக்கு வேல தந்த? அவா ஒரு ப்ராடு. எதோ ஒரு இமெயில வச்சி இவ்வளோ தூரம் வந்திருக்கான்னா முட்டாளாத்தா இருப்பா." என்றாள் ப்ரியங்கா. 

 

"இல்ல ப்ரியா. மெயில் என்னோட பர்ஷ்னல் ஐடில இருந்து அவளோட பர்ஷ்னல் ஐடிக்கு போயிருக்கு. ஐடி என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு ‌மட்டும் தா தெரியும்‌ ஆனா பாஸ்வேர்டு நா யார்க்கிட்டயும் சேர் பண்ணது இல்ல. ஆனாலும் போயிருக்கு. எப்படின்னு தா தெரியல." எனக் குழம்பிப்போனவளின் பார்வை, வெளியே துள்ளிக் குதித்துச் செல்கிறேன் என்று அங்கிருந்த ஃபைல்களை தள்ளி விட்டு, எடுத்து வைத்துக் கொண்டிருந்த கோகோவின் மீது படிந்தது.

 

"அவா பேசுற தமிழ் எனக்கு அவன ஞாபகப்படுத்துது." என ரசனையுடன் கூறினாள். 

 

"டைவர்ஸ் நோட்டிஸ் விட்டிருந்தானே உன்னோட ஹஸ்பெண்ட் ப்ரஜித். அவனையா?" என்க, ரிபேக்காவின்‌ முகம் விழுந்து விட்டது. அதில் திருப்தி அடைந்தவள்,

 

"எப்ப கோர்ட்டுக்கு வரச் சொல்லிருக்காங்க ரிபேக்கா.? இந்த டயம் கிடைச்சிடும்னு நினைக்கிறேன். இனியாது நீ நிம்மதியா வாழலாம்" என்று அவளை வார்த்தைகளால் வதைத்தாள். 

 

ரிபேக்காவின் ஒவ்வொரு செயலயும் அப்டேட் கொடுக்கச் சொல்லி அனுஜித் கூறியிருந்தமையால் இங்கு நடந்ததை கூறினாள். 

 

"I think She is still in love with Prajit"

 

"வாட்! அவளுக்கு இன்னும் ப்ரஜித் மேல சாஃப்ட் கார்னர் இருக்கா? கூடாதே. அவளும் அவனும் மட்டுமில்ல அந்தக் குடும்பத்துல யாருமே ஒத்துமையா இருக்கக் கூடாது. அப்பத் தா இந்தச் சிங்கம் அந்த மாடுங்கள வேட்டையாடச் சரியான வாய்ப்பு கிடைக்கும்."

 

"இப்ப என்ன பண்ண?."

 

"அந்தப் பொண்ண பாத்தாத்தான ரிபேக்காவுக்கு ப்ரஜித் ஞாபகம் வரும். சோ அவள வேலைய விட்டுத் தூக்கி விடு."

 

"அப்பாய்ண் பண்ணியாச்சே." என்றவளிடம் காச்மூச் எனக் கத்தி, 

 

"அவளா வெளியேற மாறிக் கூடவா உனக்கு டார்ச்சர் பண்ணத் தெரியாதா?. யார் அனுப்பி அந்தப் பொண்ணு வந்திருக்குன்னு தெரியல. அதுனால அத முதல்ல விரட்டி விடு. அப்படியே ரிபேக்காவோட ஃபோன் கால்ஸ், மெயில் மெஸ்ஏஜன்னு எல்லாத்தையும் கண்காணி. சஜித்தும் அவளும் பல வர்ஷமா ஃப்ரெண்ட்ஸ். இப்ப டைவர்ஸ் வேற நடக்கப் போது. கண்டிப்பா அவள காண்டாக் பண்ணுவான். அவன் எங்க இருக்கான்னு நமக்குத் தெரிஞ்சே ஆகனும்." எனக் கட்டளையிட்டான். 

 

தன்னை துரத்த அங்குச் சதி வேலை நடைபெறுகிறது என்று உணராத கோகோ, தன்‌ ராஜமாதாவை பார்த்த மகிழ்ச்சியிலும், அவளுடன் வேலை செய்யப் போகும்‌ தன் அதிஷ்டத்தையும் எண்ணி ஆனந்த நடனமாடிய படி தன் அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தாள். 

 

அப்போது அவளைக் காவலாளி தடுத்தார். அவர் மராட்டியில் எதுவுவோ சொல்ல, புரியாது முழித்தவள் வேகமாகத் தன் ஃபோனை எடுத்துக் கூகுள் மொழிபெயர்ப்பாளரை நீட்டினாள். 

 

அது அவளுக்கு, 'படிக்கட்டை உபயோகப்படுத்து. மின் தூக்கி பழுதாகி உள்ளது.' என்று அவர் பேசிய மராட்டியை தமிழாக மாற்றிக் கொடுத்தது. 

 

'நன்றி.' என்றுவிட்டு படிக்கட்டில் துள்ளிக் குதித்து ஏறியவளுக்கு தான் எட்டு மாடிகள் ஏற வேண்டும் என்று தோன்றாமல் போனது. 

 

முதல் மூன்று மாடிகள் வேகமாக ஏறியவள், "யோசிச்சிருக்கனும். எப்ப சரி பண்ணி முடிப்பிங்கன்னு ஒரு வார்த்த கேட்டுடு பார்க்ல உக்காந்திருக்கனும். இப்படி படி ஏற ஆரம்பிச்சிருக்க கூடாது. ஐய்யோ இப்ப மேலயும் போக முடியாது. கீழ் இறங்குற அளவுக்கும் உடம்புல தெம்பில்ல. யாராது நமக்கு லிஃப்ட் குடுப்பாங்களா? மாட்டாங்க."‌ என அலுத்துக் கொண்டே எட்டு மாடிகளைக் கடந்தவள், தன் ஹன் பேக்கில் இருந்த வீட்டுச் சாவியை எடுத்துத் துவாரத்தில் பொருத்தியபோது மூச்சு பலமாக வாங்கியது அவளுக்கு. 

 

சாவியை திருகினாளா என்றெல்லாம் தெரியாது. ஆனால் கதவின் நாபைத் திருக, அது பட் திறந்து கொண்டது. 

 

சாவியை எடுத்தவள் அதை ஹங்கரில் தொங்கவிட்டு விட்டு, சோர்ந்த நடையுடன், கையை விரித்தபடி படுக்கையில் கவிழ்ந்தாள்.

 

"எப்படியாவது ரிபேக்கா மேம் கிட்ட நல்ல பேரு வாங்கனும். என்னோட லட்சியத்த அடைய முதல் படில ஏறி நிக்கிற நான், ஜெட் வேகத்துல பறக்கப் போறேன்." என்றவள், ஹேன்ட் பேக்கை ஒரு பக்கம் வீசி விட்டு, தன் கழுத்தைச் சுற்றி போட்டிருந்த துப்பட்டாவை மற்றொரு பக்கம் தூக்கி எரிந்து விட்டு, குளியலறைக்குள் சென்றாள். 

 

முகம் கழுவ குழாயைத் திறக்க, அது வாய் முழுவதிலும் நீரை கொட்டியது. 

 

"நிஜமாவே கங்கைக்கு கனெக்ஷன் குடுத்திட்டாங்களா? குபுகுபுன்னு தண்ணி வருது." என நினைத்தபடி ஈரம் சொட்டிய தன் முகத்தைத் துவலையில் துவட்டியபடி வெளியே வர, அங்கு அவளை வரவேற்கவென ஒரு இளைஞன் நின்றிருந்தான். 

 

அதுவும் இடையில் துண்டுடன் மூடிய கதவில் சாய்ந்து, இரு கரத்தையும் கட்டிக் கொண்டு. 

 
 
 
 

   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 60
 

@vsv11 ஐ தின்க் சஜித் அவளை எங்கையாவது பார்த்து இருக்கணும் அவனைத் தவிர ரிபேக்கா personal account பத்தி தெரியாதே கண்டிப்பா அவனோட வேலையா இருக்கணும் இப்ப ரூம்ல இருக்குறவனும் அவனாத்தான் இருக்கணும் நினைக்கிறேன்..


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

@vsv4 பாதி சரி.. நன்றி தேவிசை சிஸ். 🥰🥰🥰


   
ReplyQuote

You cannot copy content of this page