All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

நம் காதல் நாணலன்றோ

Page 1 / 2
 

VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

நாணல்-01

 

இருள் பூசிய இரவு வேளையது… ஒரு குடும்பமே படுத்திடும் அளவு வசதிகள் கொண்ட அறையின் பால்கனியில், பலிங்குத் தரையில் மேனி சில்லிட படுத்திருந்தாள் அவள்…
 
அவள் கட்டியிருந்த மெல்லிய சில்க் காட்டன் புடவை காற்றில் அசைந்தாடி அவளை வருடிக் கொடுத்தது போலும்.. மனிதர்களே தீர்த்திட இயலா அவளது வேதனையை அந்தச் சேலையால் தீர்த்திட முடியுமா? முடியுமே! சிறிதளவேனும் இயலும்.. ஏனெனில் அச்சேலை அவளவன் வாங்கித்தந்த அன்புச்சேலை அல்லவா!
 
இரவு சூழ்ந்த வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் மினுமினுத்தபோதும், அவள் கண்களை நிறைத்தது அந்தப் பிறை மதி மட்டுமே!
 
அவளது பசலை நோயில் அவளுக்கு அதுவொன்று தானே ஆறுதலாய் தோய்ந்து கொண்டு வருகின்றது!
 
அவளது அறைக்கதவு தட்டப்பட, எழுந்து சென்று திறக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை.
 
தட்டிய கதவினைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் ஒரு பெண்… 
 
இந்த வீட்டில் அவளது நிலையைப் புரிந்துகொள்ளும் பெண் அவள்! என்ன பயன்? அவளாலும் ஏதும் பேச இயலாதே!?
 
உப்பரிகைக்கு வந்தவள் கால் வைக்கவே சில்லென்று இருக்கும் தரையில் அவள் படுத்திருப்பதில் ஒருநொடி பதறித்தான் போனாள்!
 
பதறிக் கொண்டு வந்தவள் அவளைத் தூக்க, சிறு விசும்பலுடன் அவளை அணைத்துக் கொண்டாள்.
 
“சித்தி..” என்று அந்தப் பெண் அவளை அணைத்துக் கொள்ள,
 
“முடியலை அங்கை..” என்று அழுதாள்.
 
அவள் முதுகை வருடிக் கொடுத்த, அவளால் அங்கை என்று அழைக்கப்பெற்ற அங்கயற்கண்ணி, “சித்தப்பாகிட்ட பேசலாமே சித்தி” என்றாள்.
 
“முடியலையே!?” என்றவளது ஒற்றை வார்த்தையில் உயிரே அனலாய் வழிந்தது!
 
அவள் அழுவதை கண்கொண்டு பார்த்திட இயலவில்லை அங்கையாள்.. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகையுடனே சிரித்த முகமாய் வலம் வரும் இவ்வீட்டின் மகாராணி அவள்… ஆனால் இன்று கண்ணீரே பிரதானமாய் அவளைப் படுத்துகின்றது…
 
மனமெனும் சொர்க்க பூமியில் எண்ணங்களென்னும் சூறாவளி நடத்திய அழகிய போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவளுக்கு வாய்விட்டுக் கதறிடவும் இயலவில்லை!
 
அங்கை வந்து பத்து நிமிடத்திற்கும் மேலானது.. இதற்குமேல் சென்றால் அவளது மாமியார் வந்திடுவார்.. அவரை யார் சமாளிப்பது!?
 
அழுபவள் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டவள், “சித்தி.. வாச்சித்தி.. உண்க (உண்ண) வாங்க.. மதியமும் உங்கலை” என்று கூற,
 
“எனக்கு வேணாம் அங்கை” என்றாள்.
 
“சித்தி ப்ளீஸ்..” என்று அங்கை கெஞ்ச,
 
“ப்ளீஸ் அங்கை வற்புறுத்தாத” என்றாள்.
 
“சித்தி.. அத்தை மாமால்லாம் மதியமே உண்(ங்)கலை.. நீங்க வந்தாதேன் அவுகளும் சாப்பிடுவாக.. அவுகளுக்காக இல்லைனாலும் எனக்காகச் சாப்பிட வாங்களேன்” என்று அங்கை கூற,
 
அவளைக் கண்ணீரோடு பார்த்தவள் மெல்ல எழுந்து குளியலறைக்குள் சென்றாள். புத்துணர்ச்சி பெற்று வந்தவள் முகத்தில் மருந்துக்கும் அந்தப் புத்துணர்ச்சி இல்லை!
 
ராஜ தோரணையில் விரிப்புகள் விரிக்கப்பட்ட அந்த மாளிகையின் படிக்கட்டில் இறங்கி வருபவளைக் கீழே அமர்ந்திருந்த பெரியவர், கண்கள் கலங்கப் பார்த்தார். 
 
என்றும் கால் தண்டைக் கலகலக்க, புன்னகையாய் அவள் இறங்கி வரும்போதெல்லாம் ‘எங்காத்தா எப்படி கம்பீரமா வர்றா பாரு’ என்று கூறுவார் அவர்..‌ இன்று பெருவெள்ளத்தில் சிக்கிய தோணியாய் நிலைகுலைந்து வருபவளைக் காண அவருக்குச் சகிக்கவில்லை! இருந்தும் அவரால் அவரது முடிவை மாற்றிக் கொள்ளவும் இயலவில்லையே!
 
மெதுவாய் கீழே வந்தவள் உணவு மேஜையில் அமர, அவளுக்குத் தட்டை எடுத்து வைத்து வேக வேகமாய் அங்கை உணவைப் பரிமாறினாள்.
 
உணவைப் பிசைந்துகொண்டே தட்டில் உணவிடுபவளை நிமிர்ந்து பார்த்தவள் மெல்ல முகத்தைத் திருப்பிப் பின்னே கூடத்து நீள்விருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து, “சாப்பிட வாங்கண்ணே” என்றாள்.
 
எழுந்துகொள்ள மனமின்றி அவர் அமர்ந்திருக்க, தட்டிலிருந்து கரத்தை உதறிக்கொண்டு எழுந்தாள்.
 
அதில் பதறிக் கொண்டு எழுந்தவர் கூடத்தில் ஒவ்வொரு திசைக்கும் நின்றிருந்த அனைவரையும் பார்த்து “அம்மா சொல்லுதில்ல? எல்லாம் சாப்பிட உட்காருங்கடே” என்றார்.
 
அனைவரும் அந்த மாபெரும் உணவு மேஜையை சுற்றிக் கொண்டு அமர, அமைதியாய் உணவு வேளை முடிந்தது!
 
சிலநிமிடம் அங்கே அமர்ந்திருந்தவள் அங்கையைப் பார்த்துத் தலையசைத்துக் கொண்டு மேலே சென்று தனதறையில் அடைந்துக் கொண்டாள்.
 
 
அவள் பொற்றாமரையாள்!
 
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கிரமாத்தில் ஊரே மதிக்கும் மாபெரும் குடும்பமே அவளுடையது! வேண்டி நிற்போரை மனம் நோகாது கொடுத்து உதவும் நல் மனிதர்களைக் கொண்ட மாளிகையே அவள் வீடு!
 
அவ்வீட்டில் அருணாச்சலம் ஆதிரையாள் தம்பதியருக்கு ஆறு செல்வங்கள். ஐந்து செல்வங்களும் ஆண் பிள்ளையாய் ஈன்றெடுத்த தம்பதியர் கொலுசொலி குலுங்க நடைபயில ஒரு குட்டி மீனாட்சி தமக்கில்லையே என்று வருத்தம் அதிகமுண்டு.
 
அதில் வருடங்கள் கடந்தபின்பும் தளராமல் ஐந்தாம் வாரிசை ஈன்றவருக்கு அதுவும் ஆண் பிள்ளையாய் போனதில் மனம் வருந்தியது!
 
பேரன் எடுத்த வயதில் மகனெடுத்தது அவர்களுக்கே சற்று சங்கடமாகிப் போக, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அந்த மதுரையை ஆளும் மீனாட்சியே மனமிறங்கி ஆறாவது செல்வமாய் பெண் குழந்தையைப் பரிசளித்தார்!
 
மகளை ஈன்ற அடுத்த இரண்டே வருடங்களில் பெற்றோர் இருவரும் விபத்தில் இறைவனடி சேர்ந்திருக்க, அண்ணன்களும் அண்ணிமார்களுமே அவளுக்கு அனைத்துமாகி போயினர்.
 
மூத்தவர், அதிவீர பாண்டியன், அவரது மனைவி அர்ச்சனா தேவி. இவர்களுக்கு இரண்டு மக்கள், ஆருத்ரன், வேந்தன்.
 
ஆருத்ரனின் மனைவியே அங்கயற்கண்ணி. வேந்தன் மனைவி திலகா, ஆறுமாத கற்பவதி! சகோதரர்கள் இருவரும் தத்தமது மனைவிகளோடு, தங்களது சொந்த அரிசி மற்றும் கரும்பு ஆலையைப் பார்த்துக் கொள்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் ஆருத்ரன் மற்றும் வேந்தன் ஆகிய இருவருமே பொற்றாமரையாளை விடவும் பெரியவர்கள் என்பதே!
 
இரண்டாமவர் ரணதீர மாயோன், அவரது மனைவி அம்பிகா தேவி, அர்ச்சனா தேவியின் தங்கையார்.
 
இவர்களுக்குப் பொற்றாமரையாள் வயதை ஒத்த இரட்டை ஆண்பிள்ளைகள். பொழிலன், செழிலன். இரட்டையர் இருவருமே ஒன்றுபோல் விவசாயத்தில் பட்டபடிப்பை முடித்துத் தங்கள் சொந்த நிலத்திலேயே விவசாயம் செய்து வருகின்றனர். தங்களைப் போன்ற இரட்டையரையோ இல்லை சகோதரிகளையோ தான் திருமணம் செய்வோம் என்று தீர்க்கமாய் உள்ளனர்.
 
மூன்றாமவர் சிம்ம வரதன், மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்குக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் ஒரே ஒரு மகள், காயத்ரி.
 
நான்காமவர், தீஞ்சுடரோன், அவரது மனைவி தடாதகை நாச்சியார். இவர்களுக்குப் பத்தாம் வகுப்பு பயிலும் சங்கர் மற்றும் ஏழாம் வகுப்புப் படிக்கும் துர்காதேவி என்ற செல்வங்கள்.
 
ஐந்தாமவர், அக்னி வேந்தன். இன்னும் திருமணம் ஆகாத முப்பது வயதுடைய கட்டிளம் காளை!
 
இவர்கள் ஐவருக்கும் அடுத்ததாகப் பிறந்தவளே பொற்றாமரையாள்! வீட்டின் மகாராணி என்றே கூறலாம். அவள் தொட்டதெல்லாம் அவர்களுக்குப் பொன் தான், வெற்றி தான்.. அவள் கூறிவிட்டால் வானையே கொண்டு வந்து கையில் கொடுத்திடுமளவு அனைவருமே அவள்மீது அலாதியான பாசம் கொண்டவர்கள்.
 
அவ்வீட்டின் கடைக்குட்டி துர்கா முதற்கொண்டு அவள்மீது அனைவருக்குமே அலாதி பிரியம்! ஆனால் பொற்றாமரையாள் ஒருபோதும் தன் வீட்டாரின் பாசத்தில் குளிர்காயவோ, பயன்படுத்திக் கொள்ளவோ நினைத்ததே இல்லை! 
 
தாய்ப்பாலினும் தூய்மை உண்டோ? அவளது மனதில் காணலாம்! தவறென்று வந்தால் தட்டிக்கேட்பதில் அவள் பாரதி கண்ட புதுமைப் பெண் தான்! தனக்கான உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்க விரும்பமாட்டாள். அதே நேரம் அடுத்தவர் விருப்பு வெறுப்பில் தலையிடமாட்டாள்.
 
அவ்வீடே அவளுக்குக் கோவில், அவளைத் தெய்வமாய் பார்க்கும் அவ்வீட்டாரே அவளுக்குக் குலதெய்வம்! அவளது பலம் பலவீனம் இரண்டுமே அவளது அண்ணன்களே! அதுதானே அவளது தற்போதைய நிலைக்கும் காரணம்!
 
மீண்டும் பால்கனியில் படுத்தவள் தனது அலைப்பேசியை எடுத்தாள்.
 
பத்து நாட்கள் ஆயிற்று… அவன் முகம் பார்த்து, அவன் குரல் கேட்டு… 
அவன் முகம் பார்த்து விடிந்து, அவன் குரல் கேட்டு உறங்கிய காலம் ஏதோ முற்பிறவியைப் போல் வருத்தியது அவளை!
 
சோகம் அவளுக்கு மட்டுமா? அதே நேரம் அங்குக் கோயம்புத்தூரின் குளிர்புகை படர்ந்த பால்கனியில் கையில் அவளது புகைப்படம் தாங்கிய அலைப்பேசியுடன் அமர்ந்திருந்தான் அவன்…
 
அவன் கண்களில் இருந்த கோபத்தையும் உடைத்துக் கொண்டு பொழிந்தன காதல் ஊற்று!
 
அவளில்லாத வீடே அவனுக்குச் சூனியமாய் தான் இருந்தது! என்ன செய்யவது? அவளிடம் சென்று பேசிட மனம் வரவில்லையே!
 
“யாழ்.. என்கிட்ட பேசனும்னு உனக்குத் தோனவேயில்லையாடி? பத்து நாள்… எப்பிட்ரி இப்படி?” என்று அவள் படத்தைப் பார்த்து அவன் பல்லைக் கடித்தபடி கேட்டும் அவன் கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தது!
 
அந்தப் பல
பால்கனியைப் பார்த்தவனுக்கு உள்ளமெல்லாம் துடித்தது! 
 
மோகம், சோகம், மகிழ்ச்சியென எண்ணற்ற உணர்வுகளுக்கு அவர்கள் அமைத்துக் கொண்ட இடமாயிற்றே இது!
 
போர்வையை விரித்துக் கொண்டு இங்கே அமர்ந்து மாலை தேநீருடன் பாடல் கேட்டு ரசித்ததும், வேலையிடத்தின் பிரச்சனைகளை இருவரும் கொட்டிக் கொண்டு சோகத்திற்கு சிறு அணைப்பினை ஆதரவாகப் பெற்றுக் கொண்டதும், மோகம் நிறைந்த தருணத்தில் நிலவைச் சாட்சியாகக் கொண்டு கூடிக் களித்ததும் இந்த உப்பரிகையில் தானே?
 
அவன் ஆதிவருணேஸ்வரன்!
 
அவளுக்குக் கல்லூரியில் மூத்தோனாக அறிமுகமாகி, காதலனாய் தொடர்ந்து, கணவனாயான அற்புதம் அவனே!
 
அவளைப் போன்று ஆடம்பரமான குடும்பத்தில், பல குடும்பஸ்தார்களுடன் வாழ்ந்தவனில்லை அவன்! தாய், தந்தை உற்றார் உறவினர் என யாருமே இல்லாது ஆசரமத்தில் வளர்ந்து வந்தவன்…
 
அவளை மட்டுமே தனது மொத்த உறவாய் நினைத்துக் கரம் பற்றியவன்…
 
காற்றும் இவர்கள் காதல் கண்டு பனியாய் உருகும்…
குயிலும் இவர்கள் மையல் கண்டு மதுரமாய் இசைக்கும்…
கோபமும் இவர்கள் காதல் கண்டு கொசுறாய் பறக்கும்…
கண்ணீரும் இவர்கள் நேசம் கண்டு நெஞ்சுருகி பொழியும்…
 
அப்படியான காதலுக்கு இன்று என்ன நேர்ந்ததோ!? (கதையின் போக்கில் அறிவோம்…)
 
-தொடரும்..
 
 
This topic was modified 4 weeks ago 2 times by VSV 15 – நம் காதல் நாணலன்றோ

   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 1 month ago
Posts: 18
 

அருமை மா 


   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Member Author
Joined: 1 month ago
Posts: 7
 

Nice starting sis ❤️❤️waiting next epi 


   
ReplyQuote
VSV 13 – பரிபந்தகனின் இன்னுயிர் இசையே
(@vsv13)
Member Author
Joined: 1 month ago
Posts: 4
 

அடடே இவ்வளவு பெரிய குடும்பத்து ராணி இப்படி அழுது கரையும் படி என்ன நடந்து இருக்கும் 🤔 🤔 நம்ம ஹீரோ அதை விட பாவம்..

 

சூப்பர் சிஸ் 😍 😍 


   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

@vsv45 நன்றிங்க தாயீ 😍


   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

@vsv42 நன்றிங்க தாயீ 😍


   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

@vsv13 காதலிச்சுபோட்டானுங்க.. வலியையும் தாங்கித்தானே ஆவோனும்😉


   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

நாணல்-02

 

இனிமையாய் துவங்கிய காலைப் பொழுது அவளுக்கு அப்படியொன்றும் இனிமையாய் இருந்திடவில்லை…

 

மனதில் குற்ற உணர்வு, வேதனை, கோபம், வலி என்று எண்ணற்ற உணர்வுகளின் சதிராட்டம் அவளைப் பாடாய் படுத்தியது…

 

உண்ணவும் தோன்றவில்லை, நிம்மதியாய் உறங்கவும் முடியவில்லை.. வாழ்வதைவிட அற்புதம் இந்த பூமியில் என்ன இருந்திட இயலும் என்று கேட்டவளுக்கு இக்கணம் அவ்வாழ்வே சூனியமாய் தோன்றியது…

 

பால்கனியில் ஒருக்களித்துப் படுத்திருந்தவள் அருகே கிடந்த அலைபேசி அதன் இருப்பை உணர்த்தி ஒலி எழுப்ப, அதை கேட்டும் கேளாமல் படுத்திருந்தவள் தன்னவனின் அழைப்பாக இருக்குமோ என்று எண்ணிய மறுநொடி அடித்துப் பிடித்து எழுந்தாள்…

 

ஆனால் அழைத்திருந்தது அக்னி வேந்தன் (ஐந்தாவது அண்ணன்)...

 

அக்னி வேந்தன் தனது வேலையில் தற்காலிக செயல்திட்டம் விடயமாகத் தற்போது பெங்களூரில் வசித்து வருகின்றான்… அவனுக்கு இங்கு நடப்பவற்றை பெரியோர் யாரும் கூறியிருக்கவில்லை.. ஒருவாரமாய் வீட்டிலிருந்து அழைப்பு வராததில் துணுக்குற்றபோதும் வேலையில் மூழ்கியவனுக்கு யாரிடமும் பேச இயலவில்லை!

 

முந்தைய இரவே செழிலன் (இரண்டாம் அண்ணனின் மகன்) அழைத்திருக்க, “என்னடே.. வீட்ல எல்லாம் சவுக்கியமா? பயலுவ ஃபோனயே காணும்? நெலத்துல கத்தரிப் பூ பூத்துடுச்சா?” என்று அக்னி மட்டுமே பேசிக் கொண்டே போனான்.

 

மறுபுறம் பதில் இல்லாது போகவும், “என்னடே.. நான் பேசிக்கிட்டே போதேன்.. போன போட்டவன் வாய மூடிட்டு கிடக்கீறு” என்று அக்னி வினவ,

 

“சித்தப்பு.. அத்தைகிட்ட பேசலையா?” என்று செழிலன் கேட்டான்.

 

“ஆத்தாளுக்கு என்னடே? ஏன் ஓன் கொரலே சரியில்ல? யாருக்கும் ஓடம்பு முடியலையா? ஆ..ஆதிக்கு ஏதும் சொகமில்லையா?” என்று அக்னி பதற,

 

“அத்தைக்கும் மாமாக்கு ஏதோ ஒரண்ட சித்தப்பு.. அத்தே பத்து நாளா நம்ம வீட்டுலதேன் கிடக்கு.. வீடே இருளடிச்ச கணக்கா இருக்குது.. பெரியப்பு, அப்பாரு, சித்தப்பால்லாம் அத்தையவும் அனுப்ப மாட்டிக்காய்ங்க.. மாமாவுக்கும் ஃபோன போட்டு ஏதும் பேச மாட்டேங்குறாய்ங்க.. அத்தையும் என்னேரமும் ரூமுக்குள்ளாரயே அழுதுட்டு கிடக்கு” என்று சோகமே உருவாய் கூறினான்.

 

செழிலன் குரலிலேயே அவன் கலங்குவது அக்னிக்குத் தெரிந்தது..

 

அக்னிக்கு ஒரு நிமிடம் உலகமே இருண்டு விட்டதைப் போன்றுதான் இருந்தது…

 

“என்னடே என்னென்னமோ சொல்லுத?” என்று அக்னி வினவ, 

 

“ஆமா சித்தப்பு.. உன்னைய சங்கடப்படுத்த வேணாமுன்னு யாரும் சொல்லலையா.. இல்ல நீ ஆதி மாமாக்கு சப்போர்ட் பண்ணுவியோனு சொல்லலையானு தெரியமாட்டிக்கு.. ரொம்ப ரோசனை பண்ணிட்டே கெடந்தோம் நானும் பொழிலனும்.. அப்பறம் தான் உன்காதுல சேதிய போட்டுவிட்டா நீயாது ஏதும் செய்யுவியோனு போனடிச்சேன்” என்றான்.

 

மனமே கலங்கிவிட்டது அக்னிக்கு.. பத்து நாட்கள் ஆயிற்று.. இவன் கூறாதிருந்தால் இதை தன்னிடம் கூறியே இருக்க மாட்டனரோ என்று வெதும்பினான்…

 

“நானு பொழிலு, ஆரூ அண்ணே வேந்தன் அண்ணேனெல்லாம் நேத்து தான் பேசினோம்.. உன்கிட்ட சொல்லி வைப்போமானு.. அங்கை மதிணி வந்து ஒரே அழுகை.. அத்தைய இப்படி பாக்கவே வெசனமா இருக்குதுன்னு.. அடுத்த மாசமானா திலகம் மதிணிக்கு வளைகாப்பு வைக்கனும்முன்னு பத்து நா(ள்) முன்னதேன் வீடே கலகலக்கப் பேசிகிட்டு கிடந்தோம்.. இப்ப எல்லாரும் விதியேனு வீட்டுல நடமாடிகிட்டு இருக்காய்ங்க.. பெரியப்பாவும் வாட்டமாவே இருக்காரு.. ஆனா வீம்புல கிடக்காரு” என்று செழிலன் கூற,

 

தன்னையறியாது தன் கண்களில் வழிந்த கண்ணீர் கன்னம் தீண்டியதை உணர்ந்த அக்னி அதை துடைத்துக் கொண்டான்.

 

“லீவு கொடுக்க மாட்டாய்ங்களா சித்தப்பு உனக்கு?” - தெரிந்துக் கொண்டே கேள்வி எழுப்பினான் செழிலன்.

 

அவசர தேவைக்கு தவிர பிற தேவைகளுக்கு விடுப்பு கொடுக்க இயலாது என்று கூறி தானே அவனை எடுத்தனர்.. சனிக்கிழமைக்கூட வேலை இருக்கும் பட்சத்தில் அக்னி சொந்த ஊர் வந்தே மாதங்கள் ஆயிற்றே!

 

“கேட்டு பாக்குதேன்டே” என்று அக்னி கூற,

 

“நீ அத்தே மாமாட்ட பேசிப்பாரு சித்தப்பு” என்று செழிலன் கூறினான்.

 

“சரிடே.. வெசனப்படாது இருங்க. நான் பேசிப் பாக்குதேன்.. திலகத்துக்கு எத்தனை மாசமிப்போ?” என்று அக்னி வினவ,

 

“ஆறு முடிஞ்சு ஏழு பெறக்கப்போவுது சித்தப்பு” என்றான்.

 

“சரிடே.. பிரச்சினைய முடிச்சுவுட பாப்போம்.. வைத்துப்பிள்ளை காரியத்த தள்ளி போடவேணாமாட்டிக்கு” என்று அக்னி கூற,

 

“ம்ம்..” என்றான்.

 

“சாப்டியா?” என்று அக்னி நலம் விசாரிக்க,

 

“மதியம் யாரும் சாப்பிடலை.. ரவைக்கு அங்கையண்ணிதேன் போய் அத்தைய கூட்டியாந்துச்சு.. அத்தை வந்து உங்கவும்தேன் எல்லாம் உங்கினாய்ங்க” என்று கூறினான்.

 

அவன் பேசப் பேசப் பிரச்சினையின் வீரியம் பெரியதோ என்று அக்னிக்கு மனதில் கனம் ஏறியது! 'ஆத்தா.. எங்கம்மைய ஏன் சோதிக்க’ என்று மனதோடு தங்கைக்காக வருந்தியவன்,

 

“வெசனப்படாதீங்கடே.. எல்லாம் சுலுவா முடிஞ்சுப்போடும்.. நான் பேசுதேன்” என்று கூற,

 

“சரி சித்தப்பு” என்றான்.

 

சில நிமிடங்கள் மௌனம் தொடர… “மிஸ் யூ சித்தப்பு.. உங்கிட்டு உறங்கு.. காலைல பேசிக்கோ” என்றபடி செழிலன் அழைப்பைத் துண்டித்தான்.

 

அவன் அழைப்பை வைத்ததும் அக்னி அழுதே விட்டான்… அவ்விட்டார் யாவருக்கும் அக்குடும்பம் தானே அத்துணையும்!

 

அழுதபடியே உறங்கிப்போனவன் காலை எழுந்ததுமே தங்கைக்கு அழைத்துவிட்டான்…

 

சில நொடிகள் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தவள், அது முடியவிருக்கும் தருவாயில் ஏற்று காதில் வைத்தாள்.

 

“ஆத்தா.. அம்மாடி” என்று கருணையும் பாசமும் ததும்பி வழியும் குரலில் பரிவாய் அக்னி அழைக்க,

 

உடைந்திடத் துடித்திடும் குரலில், “அ..அண்ணே..” என்றாள்.

 

“அம்மா...” என்று கலங்கியவன் உடனே அழைப்பைத் துண்டித்து காணொளி அழைப்பு விடுத்தான்.

 

நடுங்கும் கரங்களுடன் அழைப்பை ஏற்றவள் அண்ணனைக் காண இயலாது குமைய,

 

அவள் கண்ணீரைக் கண்ட அண்ணனவன் அந்நொடியையே வெறுத்தவனாய் உடைந்து நின்றான்.

 

“எங்கம்மா.. ஆத்தா.. என்னத்தா மொகமிது? உன்னைய ஆத்தா அப்பன பரிகொடுத்தப்பக்கூட சிரிச்ச குழந்தையா தானேத்தா பாத்தேன்.. இப்படி உடஞ்சு கிடக்கியே.. என்னாச்சு தங்கம்..” என்று அக்னி அழுதவண்ணம் வினவ,

 

வெம்பி வெதும்பியபடி கண்ணீரைத் துடைத்தவள், “காயப்படுத்தாம பாதுகாக்கனுமுனு பசங்கதேன் சத்தியஞ் செஞ்சு கையு பிடிப்பாகலா அண்ணே? நானுந்தேன் காயப்படுத்தாம காலம்பூரம் வச்சுப்பேன்னு சத்தியஞ் செஞ்சேன்.. இன்னிக்கு நா… நானே வலிக்க வலி கொடுத்துப்போட்டேனே (அ)ண்ணே” என்று முற்றுமாய் உடைந்த மனதோடும் குரலோடும் கூறினாள்.

 

“ஆத்தே.. என்னத்தா பெரிய வார்த்தையெல்லாம் பேசுத?” என்று அக்னி வினவ,

 

“பெரிய காரியம் செஞ்சுப்புட்டேனே (அ)ண்ணே.. என்னால ஏத்துக்கிடவும் முடியலை, தடுத்திடவும் முடியலை.. வலியை வாங்கி அதுக்கு பதிலா இன்னொரு வலியை கொடுத்துப்போட்டேனே.. நான் செத்தாலும் மறையாதேண்ணே” என்றுவிட்டு முகத்தை மூடி கதறினாள்.

 

“அம்மா.. தாமரை.. என்ன பேச்சு பேசுத? உக்கி போவோமுத்தா.. நீயில்லாட்டா எங்க அம்பூட்டு பேரு வாழ்க்கையுமே சூனியந்தேன்” என்று அக்னி கண்ணீரோடுக் கூற,

 

அவளது அழுகுரலில் பதறிக் கொண்டு அங்கை உள்ளே வந்திருந்தாள்.

 

உள்ளே வந்தவள் அலைபேசியில் அக்னியுடன் அவள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அப்படியே நிற்க, அதைக் கண்ட அக்னியே சட்டையில் தன் கண்ணீரை அழுந்தத் துடைத்து “ஆத்தா.. அங்கையு… வாத்தா” என்று உறக்க அழைத்தான்.

 

அழுதுகொண்டிருந்த பொற்றாமரையாளும் மெல்ல திரும்ப, அவள் அருகே வந்து தோள்களைப் பற்றிக் கொண்டு அமர்ந்த அங்கை, “எப்புடியிருக்கீக மாமா” என்று கேட்டாள்.

 

“எங்கொலசாமி உருகுழைஞ்சு கிடக்குது.. ஒருத்தரும் ஒத்த வார்த்தை சொல்லலையே.. உம்புருஷனுக்கு நேத்துதேன் பேச்சு வார்த்தை நடத்த தோனுச்சாக்கும்” என்று அக்னி சற்றே காட்டமாய் வினவ, 

 

பாவம் அவளும் தான் என்ன பதில் கூறிடுவாள்?

 

அக்னி ஆருத்தரனுக்கு ஒரு வயதும், வேந்தனுக்கு மூன்று வயதும் மூத்தோன். கிட்டதட்ட அவனும் ஆருத்ரனும் ஒன்றாகத்தான் தங்கள் பள்ளியை கடந்திருந்தனர்…

 

அங்கையைக் கூட அக்னிக்குத்தான் முடித்துவைக்க அதிவீர பாண்டியன் ஆசை கொண்டிருந்தார்.

 

ஆனால் அக்னிக்கு அதில் விருப்பமிருக்கவில்லை.. தனது தங்கைக்கு ஒரு வாழ்வு அமைத்தப் பிறகு திருமணம் செய்து கொள்வதாய் பிடியாக நின்றார்.

 

ஆனால் எதிர்பாராத விதமாய் அங்கை வீட்டிலிருந்தே வந்து ஆருத்ரனைத் தான் கேட்டனர். அங்கை அப்போது கல்லூரி படித்துக் கொண்டிருந்தாள். அந்த வருடத்திலேயே திருமணம் செய்திடும்படி ஜோசியர் கூறியதால் அவர்களாகவே முன்வந்து கேட்டனர்.

 

அதிவீர பாண்டியன் தயங்கியபோதும், “என்னமோ நாங்கட்டிக்க துடிச்ச புள்ளைய எம்மவனுக்கு கட்டித்தாரபோல வெசப்படுதீகளே ண்ணே..” என்றிருந்தான்.

 

“உன்னையவிட அவேன் சின்னவன் தானடே..” என்று அதிவீர பாண்டியர் தயங்க, 

 

“அவனுக்கு கண்ணாலம் கட்டுற வயசுதானே அண்ணே” என்றுப்பேசி தன் தலைமையிலேயே அத்திருமணத்தை நடத்தியிருந்தான்.

 

“என்னத்தா பிரச்சினை?” என்று அங்கையிடம் அக்னி வினவ,

 

அவள் அழுதுகொண்டிருப்பவளைக் கண்டாள்.

 

“ஆத்தா ஒன்னும் சொல்லாது நீ சொல்லு..” என்று அக்னி கூற,

 

“பாண்டி மாமா சித்திய பாக்க ஊருக்குப் போயிருந்தாக.. அங்க சித்தி சித்தப்பாக்குள்ள ஏதோ ஒரண்டை போல.. மாமா வாசல்லுக்கு போய் கூப்பிட பாக்கையில சி..சித்தப்பா சித்திய அ..அடிக்குறத பாத்துட்டாக..” என்று தயக்கத்தோடு கூறினாள்.

 

“என்னத்தா சொல்ற? தாமரை.. என்னத்தா இது?” என்று அக்னி பதறிப்போன அதேநேரம் வெகுண்டெழுந்திட, தாமரை மேலும்தான் கண்ணீர் வடித்தாள்.

 

“பதறிப்போன மாமா உள்ள போயி சித்தப்பாகூட வாச்சண்டை போட்டு சித்திய கூட்டியாந்துட்டாக” என்று அங்கை கூற,

 

“அவேன் ஏதுமே பேசலையாத்தா?” என்று அக்னி கேட்டான்.

 

அழுபவளையே அங்கை நோக்க, “நீயே சொல்லு அங்கை” என்று அக்னி கண்டிப்பாய் கேட்டான்.

 

“மாமா.. அ..அவுகள வீட்டோட மாப்பிள்ளையா வந்தாதேன் உண்டுனு சொல்லிபுட்டாகளாம் மாமா..” என்று அங்கை கூற, தாமரையின் அழுகையொலி உயர்ந்தது!

 

“என்னத்தாயிது சின்னப்புள்ளத்தனமா.. புருஷன் பொஞ்சாதினா சண்ட சச்சரவு இருக்குந்தேன்.. கைய ஒசத்தினதுக்கு நாலு புத்திமதி சொல்லி பிள்ளையல ஒன்னுசேர வைக்குறத உட்டுபோட்டு இவுகளே பிரிச்சு வச்சுருக்காக.. அதுசரி.. வயசு ஏற ஏற புத்திகெட்டு போவுதாக்கும்” என்று அக்னி பொறிய,

 

“அண்ணே..” என்று அழுதபடியே அவனை அதட்டினாள்.

 

“உங்கொண்ணனை ஒத்த வார்த்தை சொல்லிடலை தாயி” என்ற அக்னி, “நீ அவேங்கிட்ட பேசலையாத்தா?” என்று வினவ,

 

“என்னத்த பேச சொல்லுதீகண்ணே.. அவுகள இங்கன வீட்டோட வாங்கனு கூப்பிட எனக்கு நா(நாக்கு) எழலை.. அவுகளுக்கு விருப்பில்லாத காரியத்தை ஒருகாலமும் செய்ய மாட்டேன்.. அதேநேரம் வந்து என்னைய கூட்டிகிட்டு போகவும் சொல்ல முடியலை.. பாவஞ் செஞ்சு தொலைச்சுபுட்டு நிக்குதாப்ல கிடக்கேன்” என்று அறற்றினாள்.

 

கலங்கித் துடிப்பவளைக் கண்டு அங்கை பல்லைக் கடித்துக் கொண்டு அழ, அக்னி வழிந்திடும் கண்ணீரை துடைக்க மனமற்றவனாய் இருவரையும் பார்த்தான்.

 

மனைவி சென்று வெகு நேரம் ஆகியதை உணர்ந்து ஆருத்ரன் உள்ளே வர, இணைப்பில் இருக்கும் அக்னியை சற்றே வேதனையாகவும் சங்கடமாகவும் பார்த்து நின்றான்.

 

“வாடே.. பெரிய மனுஷா..” என்று அக்னி கூற,

 

“சித்தப்பா..” என்று கலங்கினான்.

 

பாவம் இவ்வீட்டில் பீம சேன சகோதரர்களை மீறி அவனும் தான் என்ன செய்திட இயலும்? அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் சர்வாதிகாரிகளாய் நடந்துகொள்பவர்கள் இல்லை எனினும்.. நான்கு சகோதரர்களிடமும் வீட்டில் மற்ற அனைவருமே பயபக்தி கொண்டவர்களாயிற்றே!

 

அக்னி வேந்தன் இளையவர்களின் வயதை ஒத்தவன் என்பதால் எப்போதும் மூத்தோருக்கும் இளையவர்களுக்கும் பாலமாய் விளங்கிடுவான்…

 

“வேலையில்லையாடே?” என்று அக்னி வினவ,

 

“ஞாயித்து கிழம சித்தப்பு” என்று கூறினான்.

 

“ஓ..” என்றவன் குரலில் உயிர்ப்பே இல்லை… போன ஞாயிறு கூட வேலையிருந்ததால் ஓடிக் கொண்டு தான் இருந்தான்… ஒய்யாரமாய் அமர்ந்து உண்ண கடலளவு சொத்துக்கள் இருந்தும் பிடித்த பணியை செய்திட்டத்தானே ஓடித் தேய்கின்றான்.. அந்த வகையில் அந்த களைப்புக் கூட அவனுக்கு அளப்பறியா ஆனந்தத்தையே கொடுத்தது… இந்த எண்ணம் தானே அவனுக்கும் ஆதிக்குமான அழகான ஆழமான பந்தத்தைக் கொடுத்தது என்பதும் அழகியதோர் கதையே!

 

மேலும் அண்ணனைத் தேடிக் கொண்டு வேந்தன், அவனைத் தேடிக் கொண்டு திலகா மற்றும் இவர்கள் அனைவரையும் தேடிக் கொண்டு செழிலன், பொழிலன் மற்றும் காயத்ரியும் வந்துவிட, நிலமை சற்றே இதமானது…

 

“என்னா சித்தப்பு.. ஊருக்கு வார ரோசனை இருக்குதா இல்ல அங்கனயே பட்டனத்துப் பிள்ளையா உசார் செஞ்சுபோடலாமுன்னு பாக்குதியா?” என்று பொழிலன் வினவ,

 

“ஏ கோட்டிப்பயலே.. என்னடே பேசுற..” என்று அக்னி கையை ஓங்கினான்.

 

அதில் சற்றே இதம் கண்ட தாமரையாளும் புன்னகைக்க, அங்குள்ள அனைவருக்குமே அந்த அரை ‘இன்ச்’ புன்னகை அத்தனை நிம்மதியைத் தந்தது..

 

“நல்லாருக்கியா திலகா? பய ஆஸ்பத்ரிலாம் ஒழுங்கா கூட்டிகிட்டு போறானா? ஏன்டே அந்த புள்ளய கீழ உக்கார வச்சுருக்கீக.. அந்த முக்காலிய எடுத்துப்போடப்படாதா?” என்று திலகாவிடம் துவங்கிய அக்னி மற்றோரிடம் வர,

 

“இருக்கட்டுங்க மாமா.. இதுதேன் வசதிப்படுது. ஆஸ்பத்ரியெல்லாம் சரியா போகுதோம்.. பிள்ளை நல்லா இருக்குது” என்று கூறினாள்.

 

“ம்ம்.. ஏன்டா செழிலா.. இந்த பொழிலனுக்கு வாய் கூடிகிட்டே போறாப்ல இருக்குதே.. பய முகமும் ஏதோ ஜெக ஜோதியா இருக்குது” என்று அக்னி வினவ,

 

“அட சித்தப்பு.. உனக்கு சேதி தெரியாதோ.. பய புதுசா காதல்ல விழுந்துருக்கான்” என்று செழிலன் கூறினான்.

 

“ஏதே..” என்று அனைவருமே அதிர, 

 

தன் தலையில் அடித்துக் கொண்ட பொழிலன், “முழுசா கேட்டுபோட்டு ஷாக் ஆவுங்கடே” என்று கூறினான்.

 

“என்னடே சொல்லுத?” என்று அக்னி வினவ,

 

“நம்ம பக்கத்து வயல்ல ராசு மாமா தினம் செல்விய கூட்டிவாராப்படி.. பயலுக்கு செல்வி மேல ஒரு கண்ணிருக்குது.. நேத்து அவதேன் வேணுமுன்னு ராசு மாமாகிட்ட போய் பிடியா நின்னுபோட்டான்.. அவரும் ரோசிச்சு சொல்லுதேம்புனு சொல்லிட்டு போயிருக்காரு” என்று செழிலன் கூறினான்.

 

“ராசு மாமாக்கு எங்கடே பொண்ணிருக்கு?” என்று அக்னி தாடையை நீவிக் கொள்ள,

 

“அது பொண்ணுன்னு அவேன் எங்க சித்தப்பு சொன்னான்” என்று பொழிலன் கூறினான்.

 

“பெறவு?” என்று அக்னி அதிர,

 

“அய்யோ சித்தப்பூ.. மாடு சித்தப்பு மாடு.. செல்வி பொம்பளபுள்ள இல்ல.. மாடு.. நல்ல நாட்டு மாடு.. அதேன் வாங்கிபுடுவோமானு கேட்டு வச்சிருக்கேன். அதைதேன் இந்த பய கேலி பேசுதான்” என்று பொழிலன் கூற,

 

அனைவருமே வாய்விட்டு சிரித்திட்டனர்.

 

“போடா பொசகெட்ட பயலே.. நாங்கூட பொம்பள புள்ளைய பாத்துப்போட்டுதேன் கேட்டுபபோட்டியோனு நினைச்சேன்” என்று அக்னி சிரிப்பினூடே கூற,

 

“ம்க்கும்.. முதல நீ சோலிய முடிச்சுபோட்டு வந்து ஒரு கல்யாணத்தை கட்டு.. உன்னோட பாக்க ஆரமிச்சாய்ங்க.. ஆரு அண்ணேனுக்கும் முடிஞ்சு.. வேந்தன் அண்ணேனுக்கும் முடிஞ்சு.. மதிணி பிள்ளையே பெத்து போடப்போவுது.. நீ இன்னும் ஒண்டிகட்டையா சுத்துத..” என்று பொழிலன் கூறினான்.

 

“ஆமா சித்தப்பு.. பொழிலன் சொல்றதும் சரிதேன்.. முதல்ல அத்தைய காரணங்காட்டின.. இப்ப வேலைய காட்டி ஓடிபுட்ட..” என்று வேந்தன் கூற,

 

“புடிக்காமவாடே ஓடுதேன்.. எதுக்கும் ஒரு நேரங்காலம் அமையனும்டே” என்று அக்னி கூறினான்.

 

“அதுக்கு.. அறுவது வயசுலயா கட்டிக்கப் போற?” என்று செழிலன் கேட்க,

 

“வாப்பெட்டிய சாத்துடே.. கொழுப்பேறி கெடக்குது.. சோலி முடிஞ்சு வந்ததும் எங்கண்ணாலந்தான்.. சரியா” என்றான்.

 

அனைவரும் புன்னகைக்க, “சரிசரி.. ஆளுக்கு ஒரு பக்கட்டா இல்லாம எங்கம்மை கூடருந்து பத்திரமா பாத்துக்கோங்க” என்று கூறினான்.

 

சடுதியில் வாடிவிட்ட முகத்தை போராடி மீட்க முயற்சித்தபடி தாமரைமாள் அண்ணனை நோக்க, 

 

“வெசனப்படாம இரு தாயி.. எல்லாம் சரியாப்போவும்” என்று ஆறுதல் கூறி வைத்தான்.

 

‘அத்தனை எளிதில் தீர்ந்திடுமா என்ன?’ என்று நினைத்த பொற்றாமரையாளுக்குத்தான் இதயமே விண்டுவிடுவதைப் போல் வலித்தது!

 

-தொடரும்...

 

 

 

 

This post was modified 3 weeks ago by VSV 15 – நம் காதல் நாணலன்றோ

   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

நாணல்-03

 

நடைபிணத்தைவிடவும் மோசமாய் படுத்துக் கிடந்த ஆதிவருணேஷ்வரனின் அலைபேசி ஒலித்தது… அதை கேட்டும் கேளாமல் படுத்திருந்தவன், ‘தன்னவளின் அழைப்பாக இருக்குமோ?’ என்று தோன்றிய அடுத்த நொடி அடித்துப் பிடித்து எழுந்துப் பார்த்தான்…

 

அடடா! இந்த காதலர்களுக்குள் தான் எப்படியான ஒற்றுமை!

 

அழைத்திருப்பது அக்னி என்று தெரியவும் சிறு தயக்கத்திற்குப் பின் அழைப்பை ஏற்றான்…

 

“ஆதி..” என்று பரிவாய் அக்னியின் குரல் ஒலித்த நொடி ஆதி நூறாய் நொறுங்கிப் போனான் என்று தான் கூற வேண்டும்…

 

அக்னி பொற்றாமரையாள் மேல் கொண்டுள்ள அளவிட இயலாத கரைகாணா பாசம் எத்தகையது என்பது ஆதி அறிந்திடாததா? இருப்பினும் கூட, ஆதியின் பக்கமும் ஏதோ நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே இத்தனை பரிவாய் அழைக்கின்றான்?!

 

‘நிச்சயம் அவனுக்குத் தற்போது தான் விடயம் தெரிந்திருக்கும். தான் அவன் தெய்வ சீமாட்டியை அடித்துத் தள்ளியது முதற்கொண்டு தெரிந்திருக்கும்.. அது அவன் இதயத்தை தணலில் காய்ச்சி எடுத்த தங்க ஊசிகள் கொண்டு துலைத்திடும் வலியை கொடுத்திருக்கும்… இருப்பினும் தனக்காக பேச அழைத்திருக்கின்றான்.. என்ன தவம் செய்திட்டேன் இவனைப் பெற?’ என்று உருகிய ஆதி பத்து நாட்களாய் தொண்டையில் புதைத்து சமாதி கட்டிவைத்திருந்த கேவலை வெடித்து வெளியே துறத்தினான்.

 

“ஆதி.. டேய்.. ஆதி..” என்று பதறிய அக்னி இங்கேயும் காணொளி அழைப்புக்கு மாறினான்.

 

அவன் தங்கையின் முகத்திற்கு சளைக்காத சோகத்துடன் இருந்தது ஆதியின் முகம்!!!

 

“ஆதி..” என்று கண்ணீரோடு அக்னி அழைக்க,

 

“மச்சான்..” என்றான், கதறலாய்.

 

“டேய்.. இங்கன பாருடே முதல்ல. என்னதிது சின்னபுள்ள கணக்கா? முதல்ல என்னைய பாரு” என்று அக்னி கூற,

 

மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தான்.

 

“ம்ம்.. கண்ணை தொட” என்று அக்னி கூற, மெல்ல தன் சட்டையில் முகத்தைத் தேய்த்துக் கொண்டான்.

 

“என்னாகிபோச்சுதுனு இப்ப இம்பூட்டு அழுக?” என்று அக்னி வினவ, 

 

“ஏன்? உங்கூட்டாளிக யாரும் சொல்லலையாக்கும்?” என்றான்.

 

“ப்ச்.. என்றா? வம்பு பண்றியாக்கும்? வெவரத்த சொல்லு” என்று அக்னி கூற,

 

“உங்கண்ணன் என் பொண்டாட்டிய ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காரு.. நான் வீட்டோட மாப்பிள்ளையா வந்தாதேன் என் பொண்டாட்டி கூட இருக்க முடியுமாம்” என்றான்.

 

“சரிடே.. நீ போய் நின்னு எங்கம்மைய கூப்பிட்டா அது உங்கூடவே வந்துபுடாதா?” என்று அக்னி பரிவாய் வினவ,

 

சரசரவென கண்ணீர் உகுத்தவன் உடல் குலுங்கியது.

 

“என்னடே?” என்று புரியாது அக்னி வினவ,

 

“அதுக்கு நாங்கூப்பிடனுமே மச்சான்” என்றான்.

 

“ஏன்டே.. என்ன சேதி? நீ கூப்பிட்டா அது வராது இருக்குமாடே? உம்மேல உசுரயே வச்சுருக்குதுடே எங்கம்மை.. என் வீட்டு மகாராணிடே அது.. அதை கைய நீட்டி அடிச்சுபுட்டியேடே.. ம..மனசெல்லாம் வெதும்புது..” என்று அக்னி சற்றே காட்டமாகவும் வருத்தமாகவும் கூற,

 

மேலும் கண்ணீர் வடித்தான் ஆதி!

 

அவன் கண்ணீரைக் கண்டு தன்னை தேற்றிய அக்னி, “என்னடே ஆச்சுது?” என்று வினவ,

 

“முடியல மச்சான்.. முடியலை.. என்னால அவளை வானு கூப்பிட முடியலை.. மனசு கெடந்து தவிக்குது.. அவ இல்லாத வீடே சூனியமா இருக்குது..” என்றவன் தன் நெஞ்சை நீவியபடி, “இங்கன ரொம்ப ஆழமா பதிஞ்சுபுட்டா மச்சான்.. அதான் வலியும் அதிகமாருக்கு” என்றான்.

 

ஏதோ சொல்லிக்கொள்ள முடியாத ஒன்று.. அது இருவருக்குமான தனிப்பட்ட விடயம் என்பது தங்கை மற்றும் தங்கையின் கணவன் பூடகமாய் பேசுவதிலேயே அக்னிக்குப் புரிந்தது!

 

தன் குரலை செறுமிக் கொண்டவன், “ஆதி.. நீ அவமேல எம்பூட்டு காதல் வச்சிருக்கனும் எனக்குத் தெரியும், எங்கம்மை உம்மேல எம்பூட்டு உசுர வச்சிருக்குனும் எனக்குத் தெரியும்.. ஏதோ உங்களுக்குள்ள நெருஞ்சியா குத்துதுனு புரியுது.. காலம் அம்புட்டையும் ஆத்தும்டே.. மனச தேத்திக்கிடு.. மனச தெளிய வைக்குற சோலிய பாரு மொத.. அது தெளிஞ்சா தெளிவா யோசிப்பீக.. அண்ணனுங்களையெல்லாம் கணக்குல எடுக்காதீங்கடே… நீங்க ரெண்டேரும் ஒன்னாகிபுட்டா அவுக என்ன? அந்த தாயி மீனாட்சியாலக் கூட தடுக்க முடியாது.. எங்கம்மை சொல்லுக்கு அந்த வீட்டு துரும்பு கூட கட்டுப்படும்.. எங்கண்ணனுங்க எம்மாத்திரம்” என்று கூற,

 

கண்ணீரைத் துடைத்தபடி தலையசைத்தான்.

 

சிலநிமிட மௌனத்திற்குப் பின், “எப்படியிருக்கா?” என்று ஆதி வினவ,

 

“உன்னைய போலவே இருக்கா” என்று ஆயிரம் கோடி வலிகளை உள்ளடக்கிய குரலில் கூறினான்.

 

வலி தானே! இருவருக்குமே வலி தானே! 

 

மீண்டும் ஆதியின் கண்கள் உடைப்பெடுக்க, “போதும்டே.. எங்க வைகை ஆத்துல கூட இம்பூட்டு தண்ணி இருக்காது.. புருஷனும் பொஞ்சாதியும் ஆறா ஊத்துறீக” என்று அக்னி கூறினான்.

 

“அப்பப்ப அவட்ட பேசு மச்சான்” என்று ஆதி கூற,

 

அக்னி, “ஏன் நீங்க பேசுறது தான?” என்றான்.

 

“ப்ச்” என்று ஆதி அவனைப் ஆயாசமாய் பார்க்க,

 

“சரிடே.. பேசுறேன்” என்றான்.

 

“ம்ம்…” என்று ஆதி கூற, மீண்டும் சில நிமிடங்கள் மௌனம் நீடித்தது!

 

“போய் குளிச்சுபோட்டு சாப்பிடுடே.. ஆளே ஓஞ்சுபோய் கிடக்க” என்று அக்னி கூற,

 

நெஞ்சை நீவிக் கொண்டவன், “உங்கம்மை இல்லாம தேரமுடியாது மச்சான்.. மனசுல இந்த பாரத்தை வச்சுகிட்டு உங்கம்மை கூடவும் இருந்துகிட முடியாது” என்றான்.

 

அக்னிக்குக்‌ கண்கள் கலங்கியது.. என்னமாதிரியான காதல் இவர்களுடையது என்று மீண்டும் மீண்டுமாய் வியந்தும் வருந்தியும் கண்ணீர் வடித்தான்.

 

அவளின்றியும் அவனில்லை, அவளுடனும் இருக்க இயலவில்லை.. காலம் தான் மருந்திட வேண்டும் என்று நினைத்தபடி பெருமூச்சு விட்டவன், “பாத்துக்கோடே..” என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்க, 

 

அடுத்த பத்தாவது நிமிடம் “அவருகிட்ட பேசினியா (அ)ண்ணே? எப்படி இருக்காக?” என்று பொற்றாமரையாளிடமிருந்து குறுஞ்செய்தி வரப்பெற்றான்.

 

“ரெண்டேரும் பேசிகிட மாட்டாய்ங்க.. நான் மட்டும் தூது போயி பதிலு சொல்லனும்” என்று முனுமனுத்த போதும் கூட, “உன்னைய போலவே கிடக்கான்” என்று ஆதிக்குக் கூறிய பதிலயே இங்கும் கொடுத்தான்.

 

கண்ணை முட்டிய கண்ணீரை கண்கள் மூடி உள் தள்ளியவள், “அப்பப்ப பேசுண்ணே அவருகிட்ட” என்று கூற, 

 

“ம்ம்” என்று பதில் அனுப்பியவன், “சாப்பிட்டு படுத்து எழு தாயி.. ஆளே ஓஞ்சு கிடக்குத” என்றான்.

 

அவன் எதிர்ப்பார்த்தபடியே “உம்மச்சான் இல்லாம தேரமுடியாதுண்ணே” என்றவள் அடுத்த நொடியே “அவரோடவும் இருக்க முடியுதில்ல” என்று அனுப்பினாள்.

 

“இதுலயெல்லாம் ஒன்னாதான் இருங்கீங்கத்தா” என்று முனங்கியவன், “போய் சாப்பிடுடே” என்று அனுப்பிவிட்டு கரம் கூப்பி, “ஆத்தா மீனாட்சி.. இதுக சண்டைய தீத்து வையுத்தா” என்று வேண்டிக் கொண்டான்.

 

அங்கு இருவேறு இடங்களில் அமர்ந்துக் கொண்டு, புலனத்தில் தாங்கள் ஒன்றுபோல் வைத்திருக்கும் சுயவிவரப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர், பொற்றாமரையாள் மற்றும் ஆதிவருணேஸ்வரன்.

 

இவரும் கண்களில் கரைபுண்டு ஓடும் காதலோடு ஒருவர் கரம் மற்றவர் கோர்த்து, சிரித்த முகமாய், பின்னே விரிந்திருக்கும் மாலை நேர கதிர் மின்னும் கடலைத் திரும்பிப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் அது!

 

அதை பார்த்த இருவருக்குமே வலிக்க வலிக்க அவர்களது கடந்த காலத்தின் நினைவுகள் பயணமானது…

 

அது பொற்றாமரையாளின் பதினெட்டாம் பிராய பிறந்தநாள்…

 

தங்கைக்கு ஊரில் உள்ள அத்துணை துணி கடைகளையும் அலசி, மதுரை மீனாட்சிக்கே தெரிவு செய்வதைப் போல் பார்த்துப் பார்த்து தெரிவு செய்த பட்டுப்பாவாடை தாவணியை வாங்கித் தந்திருந்தார் மூத்தவர் அதிவீர பாண்டியர்.

 

அண்ணன் கொடுத்த உடையில் தேவியாய் மினுமினுத்த தங்கையின் நிறத்துக்குப் போட்டியாய், ரூபி கற்கள் பதித்த ஆபரணங்களை வாங்கிப் பூட்டினார், இரண்டாமவர் ரணதீர மாயோன்‌.

 

என்றும் சிரித்த முகமாய் மிளிரும் தங்கள் செல்வ சீமாட்டிக்கு அவளது சிரிப்பொலியை ஒத்த சளசளக்கும் வெள்ளிக் கொலுசுகளை பரிசளித்தார் மூன்றாமவர் சிம்ம வரதன்.

 

பதினெட்டாம் பிராயத்தை அடைந்த தங்கள் தெய்வ அம்மை அடுத்து கல்லூரிக்கு கொண்டு செல்ல ஏதுவான பை, எழுதுவதற்கு தேவையான பொருட்கள், தண்ணீர் போத்தல், காலணிகள், பூட்ஸ், மெல்லிய கழுத்துச் சங்கிலி, காதை கட்டியணைத்த தோடுகள் என பலதும் வாங்கியிருந்தார் நான்காமவர் தீஞ்சுடரோன்.

 

அனைவர் கொடுத்ததையும் இன்முகத்துடன் ஏற்ற தங்க விக்கிரகம் அவள், தனது ஐந்தாம் அண்ணனிடம் வந்து கைகளை நீட்டினாள், ஆர்வத்துடன்.

 

அவள் இரண்டு கரங்களையும் பற்றியவன் ஒரு தாளைத் தனது சட்டை பையிலிருந்து எடுத்து வைக்க, புரியாத புன்னகையோடு அவனைப் பார்த்தவள், அதைப் பிரித்துப் பார்த்து இன்பமாய் அதிர்ந்தாள்.

 

“அண்ணே” என்று அவள் குரல் கமர அழைத்தபடி பின்னே நின்றிருக்கும் மூத்தோர்களை நோக்க,

 

தன் தங்கையின் தோள்களைப் பின்னிருந்து பற்றியபடி, “எல்லோரையும் சம்மதிக்க வச்சாச்சுத்தா” என்று அக்னி கூறினான்.

 

அவள் கையிலிருப்பது அவள் ஆசை ஆசையாய் கேட்டும் அவளது மூத்த நான்கு அண்ணன்களால் முதன் முறை நிராகரிக்கப்பட்ட ஒன்று!

 

சென்னையில் பெரும் பல்கலைக்கழகத்தில் தனக்கு ஆடை மற்றும் ஆபரணக்கலையில் பட்டம் பயில்வதற்கான அனுமதி சீட்டு!

 

தங்கையை தங்கத்தட்டில் தாங்கும் அண்ணன்மார்கள் அவளை படிக்கவைப்பதற்கு தடை விதிக்கவெல்லாம் இல்லை.. ஆனால் தங்கள் கண் பார்வையிலேயே அவள் இருந்திட நினைத்தனர்.

 

மதுரையிலேயே அவளைப் படிக்க வைத்திடத்தான் அவர்கள் முடிவாகியிருந்தனர். ஆனால் அவள் காத தூரம் தொலைவில் இருக்கும் மதராசப்பட்டினத்தில் தான் படிக்கப்போவதாய் கூறியதும் கொதித்து விட்டனர்.

 

தங்கள் செல்ல சீமாட்டியிடம் அதிர்ந்து பேசி பழகியிறாத அண்ணன்மார்கள் அழுதே தான் பேசினர். “உன்னைய அம்பூட்டு தொலவுல வுட்டுபோட்டு இங்கன ஒருவா சோறு இறங்குமா தாயி?” என்று தீஞ்சுடரோன் கலங்கிப் போக, பாவை வெதும்பி நின்றாள்.

 

“எங்கம்மா.. நீ இல்லாத வீடை நினைச்சுதான் பாத்துட முடியுமா இந்த அண்ணனுங்களால? என்னவேணா படி.. எம்புட்டு வேணா செலவிடுறோம்.. ஆனா மருதைலயே படிடா கண்ணம்மா” என்று சிம்ம வரதன் கரைந்திட, அவள் உறைந்துதான் போனாள்.

 

அண்ணன்களின் அலாதியான அன்பினில் வளர்ந்து வந்தவள், அதே அன்பினை குளிர் காயும் கருவியாய் என்றும் தான் பயன்படுத்திவிடக் கூடாது என்பதில் திண்ணமாய் இருந்தாள்.

 

அனைவரது செல்லத்திலும் கால் நோகாமல் வளர்ந்துவிட்டோம். காலம் எத்தகைய சூழலைக் கொடுத்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிவை பெறவேண்டுமெனில் அண்ணன்களின் துணையற்று, கூண்டுக்கிளி வாசம் துறந்து உலகை காண வேண்டும் என்ற அவசியம் புரிந்தவளாய் இருந்தாள்.

 

நான்கு வருட படிப்பினில் படிப்பை மட்டுமல்லாது வாழ்க்கையையும் மனிதர்களையும் படிக்கவேண்டியே பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் சிங்கார சென்னையில் படிக்க முடிவானாள்.

 

அண்ணன்கள் நால்வரும் அழுது அறற்றியதில் தன் எண்ணங்களை மூடி புதைக்க முடியாது தவித்தவள் தஞ்சம் புகுந்தது ஐந்தாம் அண்ணனிடமே!

 

அவள் மீதான அலாதியான பாசம் ஐவரிடமுமே சரிசமமாய் உண்டு.. ஆனால் பாசத்துடன் சேர்ந்து பகுத்தறிவு, நடைமுறை, எதார்த்தமான மற்றும் இன்றைய காலநிலையின் எண்ணங்களுடன் இருப்பது அக்னி வேந்தன் மட்டுமே!

 

ஆகவேதான் அவனிடம் சென்று தனது நியாயமான ஆசைகளை முன்வைத்தாள். தங்கைக்கு தோள் நின்ற அந்த தமையனும், அண்ணன்களிடம் மன்றாடி அவளது ஆசைக்கனவை அவள் கரம் சேர்த்தான்.

 

“எந்தாயி.. வாரா வாரம் பாக்க வந்துபுடனும் ஆமா” என்று அதிவீரர் கூற, 

 

அவரைக் கட்டியணைத்தவள், “உங்கள பாக்காம இருப்பேனுங்களாண்ணே?” என்றாள்.

 

“ம்க்கும்..” என்று அர்ச்சனாதேவியும் அம்பிகாதேவியும் குரலை செறும,

 

“மதணீ” என்ற கூவலோடு அவர்களை அணைத்துக் கொண்டாள்.

 

“எங்கம்மா சிங்காரி முகமே மின்னுது..” என்று அம்பிகா கன்னம் வழித்து திருஷ்டி எடுக்க,

 

“எல்லாம் நீங்க இடிச்சு கொடுத்த நலங்கு மாவாலதேன்” என்றபடி அவர் இடையோடு இடித்துக்காட்டினாள்.

 

அதில் சிரித்தபடி அவள் கன்னம் தட்டிய அர்ச்சனா தேவி, “பாத்து சூதானமா இருந்துகிடனும் ஆத்தா.. நீ இந்த வீட்டோட கொலசாமி” என்று கூற,

 

“கண்டிப்பா மதிணி” என்றாள்.

 

கைநிறைய பலகாரங்களுடன் வந்த விஜயலட்சுமி மற்றும் தடாதகை நாச்சியார் தங்கள் கை ரசனைகளை அவள் வாய் சேர்க்க,

 

“ப்பா.. எங்க விஜி மதிணியோட பால் பாயாசத்தையும், நாச்சி மதிணியோட பாதுஷாவையும் அடிச்சுகிட இந்த மருதைலயே ஆருமில்ல” என்று சிலாகித்துக் கூறினாள்.

 

“எந்தாயி.. உம்பாராட்டாலதேன் எங்க பண்டமே சுவைக்குது” என்று விஜியும்,

 

“நீ ருசிச்சு உங்குறதுதேன் தாயி இம்பூட்டு ரசிச்சு செய்ய வைக்குது” என்று நாச்சியாரும் கூற,

 

“மதிணினா மதிணி தான்” என்று இருவரையும் அணைத்து ஆற்பரித்தாள்.

 

அவ்வீட்டு இளையவர்களின் ஆர்ப்பாட்டம் துவங்கிட, அதில் இன்பமாய் திழைத்தவள், அடுத்து வந்த சனிக்கிழமை இரவு புறப்பட்டு பெரும் பட்டாளத்துடன் சிங்கார சென்னையை வந்து சேர்ந்தாள்.

 

கல்லூரியிலேயே வசதிகளை ஆராய்ந்து அவளை அறையில் சேர்ப்பித்த மொத்த குடும்பமும் கண்ணீர் மல்க நின்றனர்.

 

கண்களில் உயிரைத் தேக்கி நிறுத்தியவள் அண்ணன்களையும் அண்ணிமார்களையும், இளையோர் மற்றும் சிறார்களையும் தேற்றி அனுப்பி வைக்க, அவளுடன் அறையை பகிர்ந்துகொள்ளும் பெண்கள் அதிர்ந்துதான் போயினர்.

 

உறவினர்கள் சென்றதும் தன்னை மீட்டுக் கொண்டவள், “ஹாய்.. நான் பொற்றாமரையாள்.. ஃபேஷன் டைஸைனிங் ஃபர்ஸ்ட் இயர். நீங்க?” என்று வினவ,

 

“ஹாய்.. நான் கவிதா. சேம் ஃபேஷன் டிசைனிங் ஃபர்ஸ்ட் இயர்” என்றாள், கவிதா.

 

“வாவ்..” என்றவள் அதே புன்னகையுடன் “ஃபிரெண்ட்ஸ்?” என்று கரம் நீட்ட, அப்போதே அங்கு ஒரு அற்புதமான நட்பு உருவானது…

 

மேலும் அங்குள்ள மற்ற துறையைச் சேர்ந்த ராதிகா மற்றும் மதுஷாவுடனும் அறிமுகம் ஆனவள், முதல் நாள் கல்லூரி செல்லவுள்ள பல வண்ண வண்ண கனவுகளுடன் உறங்கிப் போனாள்.. நான்கு ஆண்டு காலம் அவளுக்குத் தரவுள்ள அழகிய பொக்கிஷம் பற்றிய கற்பனை கனவுகள் கூட இல்லாமல்!

 

 

-தொடரும்...

 


   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

நாணல்-04

 

முதல் நாள், ஆசைபட்டு சேர்ந்த கல்லூரி, முதல் நாளே கிடைத்த அன்புத் தோழியென மிகுந்த உற்சாகத்துடன் தயாரானாள் பொற்றாமரையாள்.

 

ஆனால் அவளுக்கு நேர்மாறாய் கவிதா மிகுந்த பயத்துடனே இருந்தாள்.

 

கல்லூரிக்குள் நுழைந்தபடி மிகுந்த ஆர்வமான விழிகளுடன் அவற்றைக் கண்டவள் கவிதாவின் பயந்த முகம் கண்டு, “அடியே கவி.. இந்த முழி முழிச்சாதேன் உன்னை ஊறுகா போடுவோமா உப்புகண்டம் போடுவோமானு பாப்பாய்ங்க.. முழிய மாத்துடி” என்று கூற,

 

“இதெல்லாம் பெரிய காலேஜ்டி.. என் வீடே எனக்குச் சீட்டு கிடைச்ச சந்தோஷத்துல இருந்தது.. எனக்குதான் ஏன்டா இங்க கிடைச்சதுனு தோனுச்சு.. இங்க ரேகிங்கெல்லாம் அசால்டா நடக்கும் தாமர..” என்றாள்.

 

“யாருடி நீ.. நானே எப்படா யாராது நம்மளை கூப்பிட்டு ரேகிங் பண்ணுவாய்ங்கனு ஆர்வமா இருக்குதேன். அதெல்லாம் காலேஜ் லைஃபுக்கே உரித்தான ஜாலிடி.. அதை என்ஜாய் பண்றத விட்டுபோட்டு பயந்துகிட்டு கிடக்கா” என்று அவள் கூறுகையிலேயே

 

“இந்தாம்மா ஏய்..” என்ற குரல் கேட்டது.

 

கவிதா அதிர்ந்து நிற்க, தாமரை ஆர்வத்துடன் நின்றாள். அவள் தன் வாழ்வில் கடக்கும் அனைத்தையும் ரசித்து வாழ்ந்திட நினைப்பவள்.. இன்னல்களைக்கூட ரசித்திடவே தோன்றியது!

 

“தாமரை.. வாடிப் போயிடுவோம்” என்று கவிதா கூற,

 

“சும்மாகட புள்ள” என்றபடி திரும்பினாள்.

 

அங்கே கூட்டமாய் ஆண் பெண் பேதமின்றி சிலர் இவர்களையே பார்த்தபடி கல்மேடையில் அமர்ந்திருந்தனர்.

 

கவிதா பயந்து இவள் கரம் பற்ற, “சரி நீ வேணுமுன்னா போ..” என்று தாமரை கூறினாள்.

 

“உன்னை எப்படி தனியா விட்டுப்போக?” என்று கவிதா வினவ,

 

“அப்ப எங்கூட வா” என்று அவளையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.

 

அவர்களின் நடை உடைகளை அவதானித்தபடி இருந்த அக்கூட்டத்தில் உள்ள பெண் ஒருத்தி, “பெயரென்ன?” என்று மிரட்டலாய் வினவ,

 

“நான் பொற்றாமரையாள், இவ கவிதா” என்று பொற்றாமரையாள் கூறினாள்.

 

அவளது பெயர் சட்டென உச்சரிக்கும்படி இல்லாததாலும், அவள் வேகமாய் உச்சரித்ததாலும், கவிதாவின் பெயரையும் அவளே கூறியதாலும் கடுப்புற்ற அந்தப் பெண், “பெயர கேட்டா ஒழுங்கா சொல்லனும்.. ஏதோ ரயில் பிடிக்கப் போறமாதிரி ஓடுற.. ஏன் அவ பெயரையும் நீ தான் சொல்லனுமா? அவளுக்கென்ன நீ சப்ஸ்டியூட்டா?” என்று கேட்க,

 

கவிதா மிரண்டு போனாள்.

 

“அச்சோ.. சாரி சாரி சீனியர்.. என் பெயர் கொஞ்சம் காம்ப்ளிகேடிவ் பெயர் தான்.. மெதுவா சொல்லிருக்கனும்.. பொற்-றா-மரை-யாள்” என்றவள் தோழியை நோக்க, கவிதா மெல்ல “கவிதா” என்றாள்.

 

இருவரையும் கெத்தாய் ஏறிட்ட மூத்தவள், அருகே நோக்கியதில், அவள் தோழன் ஒருவன், “எந்த ஊரு?” என்று வினவ, 

 

தற்போதும் ஏதும் சொல்லிவிடுவரோ என்ற பயத்தில் கவிதா, “தஞ்சாவூர்” என்கவும், “உசிலம்பட்டி” என்று பொற்றாமரையாள் கூறினாள்.

 

“பாருடா.. உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சு” என்று மற்றவன் துவங்க,

 

“உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுழுக்கிப் போச்சு” என்று அடுத்த வரியைத் தானே எடுத்துக் கொடுத்தாள்.

 

அதில் அங்குள்ளோருக்கே சிரிப்பு வந்திட, “எந்த இயர் ரெண்டு பேரும்? என்ன டிபார்ட்ன்மென்ட்?” என்று ஒரு பெண் வினவ,

 

“ஃபர்ஸ்ட் இயர் ஃபேஷன் டிசைனிங் சீனியர்” என்றனர்.

 

“ஓ.. ஈ ப்ளாக்கா..” என்று ஒருத்தி கூற,

 

“அது எங்கன இருக்குது சீனியர்.. காலேஜே கடலு கணக்கா இருக்குது.. எப்படி போறது?” என்று அவர்களிடமே வழி கேட்டாள் தாமரையாள். கவிதாவிற்கு விழி பிதுங்காதது ஒன்று தான் குறை…

 

“ஹலோ.. எங்கள பாத்தா எப்படி தெரியுது? நாங்க இங்க சூப்பர் சீனியர்ஸ்.. எங்களுக்கு ரெஸ்பெக்ட் கொடுப்பதை விட்டுட்டு எங்கட்டயே மரியாதை இல்லாம வழி கேட்குற?” என்று ஒருவன் எகுற,

 

“கூல் கூல் கூல்.. தெரியாம கேட்டுபோட்டேன் சீனியர்ஸ்.. ஜஸ்ட் சில்” என்று புன்னகையாய் பதில் கொடுத்தாள்.

 

“பாட்டு பாடத் தெரியுமா?” என்று அவள் வினவ,

 

அதற்கு இவள் பதில் கூறும் முன் “மச்சி அந்தப் பையன பாரேன்.. புதுசா இருக்கு.. ஆளு செம்மயா இருக்கான்டி.. வரவர ஜுனியர் பசங்கதான்டி மாஸா இருக்கானுங்க” என மற்றையவள் கூறியதில் அவர்களுடன் இருந்த ஆண்கள் குரலைச் செறுமிக் கொண்டனர்.

 

அதில் பொற்றாமரையாள் சிரித்துவிட, அவளை முறைத்த ஆண்கள் இருவரும் அந்தப் பையனை அவமனப்படுத்திடும் முனைப்போடு “டேய் தம்பி..” என்று அழைத்தனர்.

 

குரல் கேட்டுத் திரும்பிய அவ்வாடவனும் இவர்களைக் கண்டு “நானா?” என்று வினவ,

 

“உன்னதான்டா.. வா” என்று அழைத்தனர்.

 

தோள்களைக் குலுக்கிய வண்ணம் அங்கே வந்தவனைக் கண்ட பெண்கள் கண்கள் மின்ன ‘ஜொல்லு’ ஊற்ற, “யாருடா நீ? எந்தூரு?” என்று ஆடவர்கள் கடுப்பாய் கேட்டனர்.

 

“இந்தக் காலேஜ் ஸ்டூடென்ட் தான்” என்று கைகளைக் கட்டிய வண்ணம் பதில் கொடுத்தான், அவன்.

 

“பார்டா.. திமிரு” என்று கேட்டவன், “பேரென்னடா?” என்று வினவ,

 

“ஆதிவருணேஷ்வரன்” என்றான்.

 

அவனைத் திரும்பியும் பார்த்திடாத தாமரை அவனது பெயரைக் கேட்டு ‘வாவ்’ என்று மனதோடு சிலாகித்துக் கொண்ட போதும் அவன் புறம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கொள்ளவில்லை!

 

“ம்ம்.. எந்த டிபார்ட்மெண்ட்? என்ன இயர்?” என்று மற்றைய ஆண் வினவ,

 

“பயோடெக்.. பீ.ஜி ஃபர்ஸ்ட் இயர்” என்று அவன் கூற,

 

“ம்ம்.. உனக்கும் நாங்க ஒரு வருஷம் சீனியர் தான்” என்றனர்.

 

“ஓ??” என்று ஒற்றை புருவம் உயர்த்தி அவன் நக்கலாய் வினவ,

 

“என்ன ஓ?” என்று ஒருவன் துள்ளவும் மற்றையவன் “நீ ரொம்ப பண்ற.. ஒரு பாட்டு பாடுடா.. அப்பதான் விடுவோம்” என்றான்.

 

“பாடனுமா?” என்று முகம் சுருக்கி ஆதி வினவ,

 

“ஆமா பாடு” என்றனர்.

 

“என்ன பாடனும்?” என அவன் சளிப்பாய் வினவ,

 

“இதோ.. இந்த உசிலம்பட்டிக்காரி இருக்காளே.. உசிலம்பட்டி பெண்குட்டி பாட்டே பாடு” என்று அவன் தாமரையைக் கைக்காட்ட,

 

திடுக்கிட்டு நிமிர்ந்த தாமரையும், ஆதியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.

 

ஒருவரை ஒருவர் அந்நியப்பார்வை பார்த்துக் கொண்ட இருவரும் அப்போது நினைத்திருக்கவில்லை.. உயிரே உருகி கரையும் அளவு காதலில் இருவரும் கட்டுண்டு இருக்கப் போகின்றனர் என்பதை!

 

தன் குரலைச் செறுமியவன்,

 

“உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு

உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

 

உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி

உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

 

கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவளே

மெதுவாகச் செல்லேண்டி

 

உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி

குதி போட்டு வந்தேண்டி

 

உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி

உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு” என்று ஸ்ருதி தப்பாது அவன் அசத்தலாய் பாடியதில் அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த ஆண்கள் கூட ஸ்தம்பித்து போயினர் என்றாள் ‘சீனியர்’ பெண்களைக் கேட்கவும் வேண்டுமா?

 

வேகமாய் கைதட்டிய பொற்றாமரையாள் “சூப்பர் சீனியரே. செம்மயா பாடுனீக.. என் கவிகூட சூப்பரா பாடுவா” என்க,

 

“ரியலி?” என்றபடி அருகேயுள்ள பெண்ணைப் பார்த்தான்.

 

அவள் பயத்தோடு எல்லாப்புறமும் தலையை உருட்டி வைக்க,

 

“இதே பாட்டையே கண்டினியூ பண்ணு பாப்போம்” என்று அவர்கள் இருவருக்கும் சீனியராய் மாறித் தோரணையாய் கேட்டான்.

 

முதலில் பயந்து விழித்த கவிதாவும் “பாடு கவி.. பாடு கவி” என்ற பொற்றாமரையாளின் உந்துதலில்,

 

“கண்டமனூரு மைத்தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா

மைய வைக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா

 

அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு சேர்ந்து போனால் ஆகாதா

மாடு புடிச்சி முடிச்ச கைய்யில் மயில புடிப்பே தெரியாதா

 

மயிலே மயிலே இறகொண்ணு போடு

தானா விழுந்தா அது உம் பாடு

இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்” என்று அட்டகாசமாய் பாட, அனைவருமே ஆச்சரியித்துப் போயினர்.

 

“வாவ் ப்யூடிஃபுல் வாய்ஸ்” என்று ஆதி கூற,

 

“த..தேங்ஸ்” என்றாள்.

 

இதற்கு மேல் விட்டால் தோழி அழுதேவிடுவாள் என்று எண்ணிய தாமரை “ஓகே சீனியர்ஸ்.. டாட்டா” என்று அவர்கள் கிரகிக்கும் முன் ஓடிவிட,

 

“இந்த உசிலம்பட்டிக்காரி பயங்கர துருதுருனு இருக்காடா” என்று ஒருவன் கூறவும்,

 

“மாமே.. மதுரக்காரனுங்க கையு பேசாது.. அறுவாதேன் பேசும்.. அடக்கி வாசி” என்று மற்றையவன் கூறினான்.

 

“சரி தம்பிகளா கிஸுக்குப் போங்க” என்றபடி ஆதி நகர,

 

“தம்பிகளாவா?” என்று வெகுண்டனர்.

 

“ஆமாடா தம்பி” என்ற ஆதி சிரித்தபடி சென்றிட,

 

“ஹவ் ஹான்ட்ஸம்” என்று பெண்கள் சிலாகித்து இருவரையும் கடுப்பேற்றிவிட்டு நகரந்த்னர்.

 

                          ****

 

“அத்தை.. அத்தை..” என்று விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த தாமரையாளை துர்கா உலுக்க, திடுக்கிட்டு நிகழ்வுக்கு வந்தாள், பெண்!

 

“அத்தை” என்று துர்கா மீண்டும் அழைக்க, 

 

“து..துர்கா.. என்னத்தா?” என்று கேட்டாள்.

 

“ஏன் அத்தை அழுற?” என்று அவள் கன்னத்தில் வடிந்திருக்கும் கண்ணீரை துடைத்து விட,

 

அப்போதே கூடத்திற்கு வந்து அமர்ந்திருந்ததும், அப்படியே பழைய நினைவில் ஆழ்ந்ததும் அவள் உணர்ந்தாள்.

 

சுற்றிலும் அவள் பார்வையை சுழற்ற, கண்கள் கலங்கி தீஞ்சுடரோன், மற்றும் மூத்தோர்களின் மனைவிமார்கள் அனைவரும் அவளையே பார்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

 

“அத்தை..” என்று குழந்தை பரிவாய் அழைக்க, 

 

அவள் கன்னம் தட்டியவள், “அ.. அத்தைக்கு உடம்பு முடியலைடா” என்றுவிட்டு விறுவிறுவென எழுந்து மேலே சென்றாள்.

 

அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டவள் கட்டிலில் விழ, மனதை அறுத்துக் கொண்டே அவள் கண்களில் உதிரம் சிந்த வைத்தது அந்தப் பொல்லாத காதல் வலி!

 

-தொடரும்...


   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

நாணல்-05

 

அழகாய் அமுதாய் கல்லூரி காலம் அவளை அழைத்துச் சென்றது! அன்று நூலகத்தில் பாடத்திற்கு தேவையான புத்தகங்களைத் தேர்வு செய்தவள், தமிழ் புத்தகங்கள் கொண்ட பிரிவுக்குள் நுழைந்தாள்.

 

நல்ல காதல் நாவல்களை எடுத்துப் படித்திடும் ஆர்வத்துடன் புத்தகங்களையே பார்வையிட்டுக் கொண்டிருந்தபடி நகர்ந்தவள், அருகே யார்மீதோ இடித்துவிட, இடித்தவர் கையிலிருந்த புத்தகம் தவறி கீழே விழுந்திருந்தது.

 

“அச்சுச்சோ.. சாரி சாரி..” என்றபடி புத்தகத்தை எடுத்தவள், “நைஸ்.. நல்லாருக்கும் இந்தக் கதை” என்றபடி அதை நீட்ட,

 

“ஆஹாங்?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திய வண்ணம் கேட்டான், ஆதிவருணேஷ்வரன்.

 

அவனைக் கண்டதுமே அவளுக்கு அடையாளம் தெரிந்திருந்தது! முதல் நாள் கண்ட முகமாயிற்றே! அதிலும் அவன் அசத்தலாய் பாடிய பாடலும் சேர்ந்து அவனை நினைவு படுத்துவதில் அத்தனை சிரமம் கொடுக்கவில்லை அவளுக்கு!

 

இயல்பான புன்னகையுடன், “சீனியர்..” என்றவள் அப்புத்தகத்தை நீட்டி, “நல்லாருக்கும் சீனியரே.. படிச்சுப் பாருக” என்று கூற,

 

“படிச்சுட்டேன்.. வைச்சுட்டு வேற தான் தேடிட்டு இருக்கேன்” என்றான்.

 

“ஓ.. சூப்பர்” என்றவள் தனது தேடுதல் வேலையில் கவனமாகிட, அவனாகவே பேச்சைத் தொடுத்தான்.

 

“புக்ஸ் படிப்பியா?” என்று அவன் வினவ,

 

“நானே கேட்க நெனச்ச கேள்விய நீங்களே கேட்டுபுட்டீகளே? அதெல்லாம் மானாவாரியா படிப்பேனாக்கும்” என தன் ஊர் பாஷையில் பேசியிருந்தாள்.

 

“உசிலம்பட்டிக்காரி தானே நீ?” என்று அவள் பேசியதில் லேசாய் சிரித்தவனாய் அவன் வினவ,

 

“ஸ்ஸ்..” என்று தலையில் தட்டிக் கொண்டவள், “பதினெட்டு வருஷ பழக்கம் சீனியரே.. சட்டுனு மாத்த வரமாட்டிக்கு” என்றாள்.

 

“எதுக்கு மாத்திக்கனும்?” என்று அவன் வினவ,

 

“எல்லாம் கேலி செய்றாகளே..” என்று தோள்களை குலுக்கினாள்.

 

“இது உங்க ஊரு பாஷை.. ஒரு அழகான வட்டார வழக்கு. ஃபேகல்டீஸ்கிட்ட பேசும்போது இங்கிலிஷ்ல தான் பேசப்போற..‌ சும்மா ஃபிரெண்ட்ஸ் கிட்ட பேசும்போது உன் வட்டார வழக்குல பேசுறதை ஏன் சங்கோஜமா நீ நினைக்கனும்?” என்று அவன் வினவ,

 

“நா..நான் சங்கோஜமாலாம் நினைக்கலேங்க” என்றாள்.

 

“அப்படி நினைக்காம இருந்திருந்தா இப்படி இதை மாத்திக்கனும்னு யோசிச்சிருக்க மாட்ட” என்று அவன் பேச்சால் ஒரு குட்டு வைக்க,

 

“அடடே.. சரியான வாத்தியா இருப்பீரு போலயே..” என்றவள், “சரி.. பொதுவா பசங்க நாவலெல்லாம் படிச்சு நாங்(ன்) கண்டதேயில்லையே.. உங்களுக்கு எங்கருந்து இந்தப் பழக்கம் வந்தது? உங்கம்மா படிப்பாகளோ?” என்றாள்.

 

சட்டென ஒரு நொடிக்கும் குறைவாய் வாடி மீண்ட அவன் முகம் மெல்லிய புன்னகை பூசிக் கொண்டு, “எனக்குப் பிடிக்கும். இட் டேக்ஸ் மீ அபார்ட் ஃப்ரம் ரியாலிட்டி (it takes me apart from reality)” என்று உணர்ந்து கூறினான்.

 

“ஹப்பாடீ.. இந்தக் கவி, ராதி, மது யாருமே புக்கு படிக்குற பழக்கமே இல்லைனு சொல்லவும் அய்யோனு ஆகிப்போச்சுது எனக்கு. கதை படிக்குறதைவிட நம்ம படிச்ச கதைகள பத்தி பேசிக்குறது அம்புட்டு நல்லாருக்கும் சீனியர்” என்று அவள் கூற,

 

“அந்த அனுபவம் இல்லைமா” என்றான்.

 

ஏனென்று தெரியவில்லை… அவன் அப்படி கூறிவிட்டு புத்தகத்தைப் பிரட்டிடவும், “அப்ப நாம பேசுவோம்.. புது அனுபவத்தைப் பழகிக்கோங்க” என்றாள்.

 

அவளை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன், பார்வையில் இருந்ததென்னவோ சந்தேகம் தான்.

 

அந்தச் சந்தேகப் பார்வையைக் கண்டதும் தான், அவனுடன் தான் நெருங்கிப் பேசுவது வேறு விதமான கண்ணோட்டங்களிலும் புலப்படலாம் என்று உணர்ந்தவள், “அ.. சாரி சாரி சீனியர்.. ஜஸ்ட் ஒரு ஆர்வத்துல சொல்லிபோட்டேன்” என்றுவிட்டு நகர்ந்தாள்.

 

புத்தக ஆர்வத்தில் தான் அவள் அவ்வாறு கூறியது.. ஆனால் அதை அவன் தவறாக நினைத்திடுவானோ என்று எண்ணிய நொடியே அவள் விலகித் தன் பணியைத் தொடர்ந்திட, இருவரும் வெவ்வேறு புறம் தேடித் தங்களுக்கான புத்தகத்தினை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.

 

தன்னைத் தாண்டிக்கொண்டு செல்பவளைக் கண்டவன், “ஏ… யூ..” என அவளை எப்படி அழைப்பதென்று அறியாது, “உசிலம்பட்டி” என்று அழைக்க, சட்டெனத் திரும்பி அவனைக் கண்டு முறைத்தாள்.

 

அதில் சிரித்துக் கொண்டவன், “சாரிமா.. பெயர் தெரியலை” என்று கூற,

 

“பொற்றாமரையாள்” என்றாள்.

 

“ம்ம்.. அடுத்த வாரம் உன் கைல உள்ளதை எனக்குக் குடு.. என்கிட்ட உள்ளதை நீ வாங்கிக்கோ.. படிச்சுட்டு பேசுவோம்” என்று அவன் கூற,

 

மிகுந்த உற்சாகத்துடன் “தேங்க் யூ சீனியர்” என்றுவிட்டுச் சென்றாள்.

 

அப்படிதான் அவர்களது அழகான பந்தம் துவங்கியது! ஒவ்வொரு வார இறுதியும் மாலை பொழுது அவர்கள் படித்த புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கென்றே இருவரும் ஒன்று கூடிவிடுவர்.

 

“சீனியர்.. ஏன் இவ்ளோ லேட்டு.. நான் நேத்து படிச்ச கதையைப் பத்தி உங்க கிட்ட பேசாம எனக்குத் தூக்கமே வராதுபோலனு ஆகிட்டு” என்று அவள் உற்சாகமாய் எழ,

 

அவன் முகத்தில் புன்னகையேயின்றி வந்து அமர்ந்தான்.

 

அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவளிருக்கவில்லை!

 

தன் போக்கில் பேசிக் கொண்டே போனவள் சில நிமிடங்களுக்குப் பின்பே அவனது அமைதியை உணர்ந்தாள்.

 

“என்னாச்சு சீனியர்?” என்று அவள் வினவ,

 

“ம்ம்?” என்று நிகழ்வு மீண்டவனாய் விழித்தான்.

 

“என்ன சேதி சீனியரே? ஒடம்பு சொகமில்லையா?” என்று அவள் வினவ,

 

“நத்திங்.. நத்திங்..” என்றான்.

 

அவனைக் கூர்ந்து நோக்கியவள் அவனுக்குச் சொல்லிட விருப்பு இல்லை என்பதை புரிந்துக் கொண்டவளாய், எழுந்தாள்.

 

“ஏ சொல்லுமா.. நான் கேட்குறேன்” என்று ‘எங்கே அவள் கோபித்துக் கொண்டாளோ?’ என்பதாய் அவன் நிறுத்த,

 

“இருங்க சீனியர்” என்றவள் சென்று ஒரு பூவைப் பறித்து வந்து அவனிடம் நீட்டினாள்.

 

அவன் அதை வாங்காது அவளைப் புரியாமல் பார்க்க, “என்ன சீனியர்? வாங்குங்க” என்றாள்.

 

குழப்பமான முகத்துடன் அவன் அதை வாங்கிடவும், “இதைக் கொண்டு அதுலயே ஒட்ட வச்சுபோட்டு வீட்டுக்குப் போங்க” என்றபடி அவள் நகர,

 

“ஓய்.. என்னமா?” என்றான்.

 

“ஆமா சீனியர்.. அந்தப் பூவ திரும்ப அந்தா இருக்குதே.. அந்தச் செடிலயே ஒட்டவச்சுபோட்டு போங்க” என்று அவள் கூற,

 

“அதெப்படி முடியும்? சுத்தி வளைக்காம என்ன சொல்லவரனு சொல்லுமா” என்று அவன் கூறினான்.

 

“அதை ஒட்ட வைக்க ட்ரை பண்ணுங்க. அதுலேயே திரும்பப் பழையபடி அதை வைக்க முடியுதானு ட்ரை பண்ணிப்பாருங்க” என்று அவள் கூறியதும்,

 

“இட்ஸ் இம்பாஸிபில்” என்று அவன் கூற,

 

“எஸ்.. சம்திங் இஸ் இம்பாஸிபில்.. பட் இட்மைட் பீ ஃபார் அ ரீசன்” என்றாள்.

 

அவளையே குழப்பமாய் நோக்கியவன் முகம் மெல்ல யோசனை தெளிவதாய் தெரிய, “சில விஷயத்த மாத்த முடியாது… ஆனா அப்படி நடந்ததுக்கு ஒரு அழகான காரணம் இருக்கலாம்… இதோ.. இந்தப் பூவு செடிலயே இருந்திருந்தா அழகாருக்குமே… நான் பறிச்சுபோட்டேன்.. அதைத் திரும்ப ஒட்ட வைக்க முடிஞ்சதா? ஆனா பாருங்க.. இந்தப் பூ உங்களுக்கு ஒரு அழகான பாடத்தச் சொல்லிக் கொடுக்க யூஸ் ஆகுதுல்ல? அப்படித்தேன்.. நடக்குற எல்லாத்துக்கும் ஒரு பயனான காரணம் இருக்கும்” என்று கூறியவள், “வீடு போயி சேருங்க.. எல்லாம் சரியாகிப்போவும். பை” என்றபடி சென்றாள்.

 

ஆடவன் அவன் அதிர்ந்து தான் நின்றான்… எத்தனைத் சின்னப் பெண்.. ஆனால் எத்தனை பெரிய விடயத்தைப் போகும் போக்கில் கூறிவிட்டுச் செல்கின்றாள் என்று எண்ணியவன் முகத்தில் அழகாய் ஒரு புன்னகை வந்து போனது!

 

அத்தனை நாட்களும் அந்நியவளாய் மட்டுமே அவளைக் கருதி வந்தவன், அப்போதே அவளைத் தன் வட்டத்திற்குள் நுழைக்க அவன் மனதிற்கு அனுமதி அளித்துக் கொண்டான்.. எதிர்பாராத விதமாய் அவன் மனதில் நுழைந்தவள் அவனை மொத்தமாய் காதலெனும் மாபெரும் சக்திக் கொண்டு ஆக்கிரமிப்பாள் என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை!

 

'க்ரிங்' என்று மணியடிக்கும் ஓசை கேட்கவே நடப்பிற்கு வந்த ஆதிவருணேஷ்வரன் தன்னைச் சுற்றி பார்வையை சுழலவிட்டான்.

 

அறை பால்கனியில் விட்டேற்றியாய் அவன் அமர்ந்திருந்த கோலம் புரிபட்ட நொடியே நிகழ்காலத்திற்கு வந்தான்.

 

மீண்டும் அவ்வோசை கேட்கவும், அழைப்பு மணி ஓசை என்று புரிந்தவனாய் மெல்ல எழுந்து சென்று கதவைத் திறக்க,

 

அன்றலர்ந்த புன்னகையுடன், “ஹாய் மாமா” என்றபடியே நின்றான் செழிலன்.

 

ஒருநொடி ஒன்றும் புரியாது திருதிருத்த ஆதி, செழிலனை கிரகித்துக் கொண்டு திடுக்கிட்டு நோக்க, சட்டென நினைவு பெற்றோனாய் அவன் பின்னே தன் மனையாளும் இருக்கின்றாளா என்று கண்களால் தேடினான்.

 

அதில் செழிலன் முகம் வேதனையோடு சுருங்க, ஆதியின் அயர்ந்த தோற்றத்தைக் கலக்கத்தோடு கண்டான்.

 

“மாமா..” என்று பரிவாய் அவன் அழைக்க,

 

“வ..வாடே” என்று வழிவிட்டான்.

 

அவனால் செழிலன் வந்திருப்பதை நம்ப இயலவில்லை.. தற்போது தனக்கும் தன்னவளுக்கும் சண்டையாக இருக்கும் பட்சத்தில் அவ்வீட்டிலிருந்து ஒருவர் தங்கள் இல்லம் வந்திருப்பது அவனுக்கு ஆச்சரியம் தருமல்லவே!

 

உள்ளே வந்த செழிலன், “இங்கன ஒரு ஒரக்கடைல டீலிங் பேசி நம்ம வெவசாய சங்கத்துக்கு ஒரம் வாங்கிப்போடலாமானு பாக்க வந்தேன் மாமா.. வேலை கொஞ்சம் இழுக்குமாட்டிருக்கு.. எப்படியும் ஒருவாரமாது ஆவும்.. அதேன்” என்று தான் ஒருவாரம் தங்கவுள்ள காரணத்தைக் கூற,

 

அது பொய்யென்று அப்பட்டமாய் தெரிந்ததில் விரக்தியாய் ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

 

அதில் தடுமாறிய செழிலன், “உ..உங்களுக்குப் பிரச்சினை இல்லைதானுங்க மாமா” என்க,

 

“உங்கத்தை எனக்குத் தொனைக்கு உன்னை அனுப்பிவச்சாளாக்கும்?” என்று கேட்டவன்,

 

கண்கள் கலங்கி, மேலும் விரக்தியில் விரிந்த இதழ்களோடு, “தனிமை எனக்குப் புதுசில்லடா மாப்பிள்ள” என்று தங்களறைக்குள் சென்று அடைந்துகொண்டான்.

 

அங்கு அவன் சட்டைபையில் இருக்கும் அலைபேசியில் அழைப்பில் இணைந்திருந்த பொற்றாமரையாள் அழைப்பைத் துண்டித்து வெடித்து அழுதாள்.

 

“வலிக்குதுங்க.. வலிக்குது.. செத்துபுடலாம் போலனு இருக்குதே.. தப்பு செஞ்சுபுட்டேனே..” என்று கட்டிலில் படுத்து அவள் குமைய, விடாது அவள் அலைபேசி ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

அழுதுகொண்டே அவள் அதை ஏற்க,

 

“அத்த” என்று செழிலன் அழைத்தான்.

 

“செ..செழிலா..” என்று என்றவள் வெதும்பிட,

 

“அ..அத்த.. ஏந்த்த இம்பூட்டு அழுக? நீயில்லாம மாமாவும் உக்கிபோய் கிடக்குதுத்த..” என்றான்.

 

“முடியலடா.. முடியல.. வலிக்குதுடா செழிலா..அ..அவர..” என்றவள் பேச இயலாது குமைந்தாள்.

 

“அத்த.. அழுவாதத்த..” என்று கூறுகையிலேயே அவன் கண்களிலும் கண்ணீர் நிறைந்துவிட்டது!

 

புலனத்தில் “அத்த ரூமுக்கு போடே” என்று பொழிலனுக்கு அவன் செய்தி அனுப்பிட, அதைப் பார்த்த பொழிலன் ஏனென்றும் கேட்காது அவள் அறைக்கு ஓடியிருந்தான்.

 

அவள் வெம்பி வெதும்பும் ஓசை அறை வாசலிலேயே கேட்டுவிட, “அத்த..” என்றபடி பதட்டமாய் உள்ளே வந்தான்‌.

 

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பொழிலா..” என்க அருகே வந்து முகம் தாங்கிக் கண்ணீர் துடைத்தவன், “ஏந்த்த இம்பூட்டு கண்ணீரு?” என்றான்.

 

அவன் மடியில் தலைசாய்த்து அழுதவள், “முடியலடா..” என்பதை மட்டுமே விடாது கூறினாள்.

 

தன்‌ அத்தையவள் கண்ணீரில் தானும் கரைந்த பொழிலன் அவள் தலைகோதியபடியே அலைபேசியை எடுத்து, “செழில்!!” என்று கரைய,

 

“பாத்துகிடுடே.. கேட்க முடியாமாட்டிக்குது.. நான் வைக்குதேன்” என்று கூறி கண்ணீரை துடைத்தவண்ணம் அழைப்பைத் துண்டித்தான்.

 

செழிலன் செயல்களை அறைக்குள்ளிருந்தே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, “ஏன்டி இப்படி? முடியலடி..” என்று மனதோடு அவளைத் திட்டியபடி கண்ணீர் வடித்தான்.

-தொடரும்...

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 1 month ago
Posts: 45
 

super 😍 😍 😍 


   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

@vsv11 நன்றிங்க தாயி 😍


   
ReplyQuote
VSV 15 – நம் காதல் நாணலன்றோ
(@vsv15)
Member Author
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

நாணல்-06

 

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சென்று தன் பணிக்காக தாயாராகிய ஆதி வெளியே வர, வேட்டியை மடித்து, தலையில் துண்டை கட்டிக் கொண்டு சமையலறையில் மும்மரமான வேலையில் ஈடுபட்டிருந்தான் செழிலன்.

 

அவனது அத்தோற்றம் விண்டு கிடந்த ஆதியின் இதயத்தில் மெல்லிய இதத்தை கொடுத்து லேசாக்கியது!

 

“என்னடே பண்ணுத?” என்று ஆதி வினவ,

 

“காலையுக்கு தோசை சுட்டுருக்கேன்.. மதியத்துக்கு சோறு வடிச்சாச்சு..” என்றான்.

 

“உன்ன யாருடே இதெல்லாம் பண்ண சொன்னது?” என்று அதட்டியவன் அந்த உணவின் மணத்திலேயே ஒன்றை கண்டுகொண்டான்.

 

“என்னடே பண்ணுத?” என்று ஆதி வினவியபடி பதார்த்தங்களைத் திறந்து பார்க்க,

 

“வீட்லருந்து எரா தொக்கு கொண்டாந்தேன் மாமா.. அதேன் தோசைக்கு.. மதியத்துக்கு சோறும் அத்..‌அது வீட்டுலருந்து கொண்டாந்த பொடியில ரசம் மட்டும் வச்சுருக்கேன்” என்றான்.

 

அவனுக்கு புரிந்துபோனது.. இவை அவன் மணையாட்டியின் செயல் என்று!

 

செழிலனுக்கு முந்தைய நாளின் நினைவு…

 

அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்த தாமரையாள் அன்று காலையே சமையலறையை ஆக்கிரமித்து இருந்தாள்…

 

அதில் ஆச்சரியம் கொண்ட யாவரும் வெளியேவே வேடிக்கைப் பார்க்க, உள்ளே துள்ளலோடு வந்த காயத்திரி, “ஆஹா அயித்த.. இரா தொக்கு கிளறுறியாக்கும்” என்று வாசம் பிடித்தாள்.

 

வழிந்த கண்ணீரை ரவிக்கையில் துடைத்துக் கொண்ட தாமரையாள் ‘ஆம்’ என்பதாய் தலையசைத்து, உரலில் ரசத்திற்கு வேண்டிய சமாச்சாரங்களைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தாள்.

 

“எதுக்கு அத்தே இதெல்லாம்?” என்று கேட்படி காயத்திரி அவளுக்கு உதவ,

 

“காயூ.. போயி செழிலன கூட்டியாத்தா” என்றாள்.

 

சரியென சென்று அவளும் செழிலனைக் கூட்டிவர, இரால் தொக்கையும் ரசப் பொடியினையும் டப்பாவில் அடைத்து வைத்தவள், “எய்யா செழிலா.. எனக்கொரு உதவி வேணுமாட்டிருக்கே” என்றாள்.

 

“என்னத்தே பெரிய வார்த்தையெல்லாம் பேசுத? என்ன காரியம்முனு சொல்லு” என்றான்.

 

“நெலத்துல இப்போதிக்கு பெருசா காரியங்கன்னு இல்லதானே? எனக்காக அங்க வீட்டுக்கு போக முடியுமா?” என்று அவள் வினவ,

 

“கோவைக்கா?” என்று கேட்டான்.

 

புடவையில் தன் கண்ணீரைத் துடைத்தவள், “அ..அண்ணே போன் பண்ணிச்சுடே.. அ..அவரு.. தனியா அங்கன..” என்றவள் துக்கத்தை விழுங்கிக் கொண்டு, “இதெல்லாம் கொண்டோய் குடுத்துபோட்டு ஒருவாரம் கூட தொணைக்கு இருந்துபோட்டு வாரியாடே” என்று அவள் கண்ணீரோடு வினவ,

 

“என்னத்த நீயு? போடானு சொல்லு போவப் போறேன்.. இதுக்குபோய்” என்றான்.

 

“இ..இந்த பிரச்சினை பத்திலாம்..” என்று அவள் முடிக்கும் முன்,

 

“ஏதும் பேசமாட்டேந்த்தே” என்று அவள் கரம் பற்றி நம்பிக்கையாய் கூறினான்.

 

அத்தோடு அத்தை கூற்றுக்கினங்க அனைத்தையும் எடுத்துக் கொண்டு இதோ இங்கு வந்துவிட்டானே!

 

தட்டை எடுத்துப் போட்டுக்கொண்ட ஆதி, “நீயும் சாப்பிடுடே” என்று கூறிவிட்டு இரண்டு தோசையையும் மனைவி கொடுத்தனுப்பிய இரால் தொக்கையும் தட்டிலிட்டுக் கொண்டான்.

 

அவள் கையால் அவளிடம் அத்தனை உணவுமே அவனுக்கு மிகுந்த பிடித்தம் தான்.. ஆனால் அவன் அதிகம் விரும்புவது அவளது பாணியில் உருவாகும் அந்த இரால் தொக்கும், ரசமும் தான்!

 

அன்னை கை மணம் அறிந்திடாதவனுக்கு அவன் மனைவியின் கைப்பக்குவமே தேவ அமிர்தம்!

 

ஒரு வாய் தோசை பிட்டு தொக்கில் தடவி வாயில் போட்டவனுக்கு கண்களிலிருந்து ஜீவ ஊற்று வழிந்தது! எப்போதும் அவள் இடும் உணவில் காதலும், கருணையும், நேசமும் கலந்திருக்கும்.. இவ்வுணவில் வலியும், பிரிவின் துயரும் அல்லவா கலந்துள்ளது என்று கூறியே அவனை கொல்லாமல் கொன்றது அவன் மனம்!

 

கண்ணில் நீர் வழிய, அதை மெதுவாய் ருசித்து உண்டவன் மனதில் அத்தனை வலியும் வேதனையும்! தான் தனியே அவள் நினைப்பில் வாடிக்கிடப்பது அக்னியின் மூலம் அவளுக்கு செய்திகளாய் சென்றுகொண்டிருந்ததை அவனும் அறிவானே! 

 

இல்லையென்றாலும் தனது வாட்டத்தினையும் வேதனையையும் உணரக்கூடியவள் தானே தன்னவள் என்று அவன் காதல் மனம் கூறியது! 

 

உணவை உண்டவன் சட்டென ஏதோ நினைவு வந்தவனாய் செழிலனை நோக்கினான்… குறிப்பாக அவன் சட்டைப் பையிலிருக்கும் அலைபேசியை! அது அங்கே அமர்ந்திருக்கும் தோரணையே கூறியது அவனவளுடன் காணொளி அழைப்பை தாங்கி இருப்பதை!

 

அலைப்பேசி காமிராவை கூர்ந்து அவன் நோக்க, செழிலனுக்கு திக்கென்று ஆனது! அங்கே கையில் வைத்திருக்கும் அலைபேசியில் கணவன் நேரிலிருந்து தன்னை நோக்குவதைப் போன்ற பார்வையில் உடல் சிலிர்த்து நடுங்கப் பெற்றவள் அழைப்பை துண்டித்து முகம் மூடி கண்ணீர் வடித்தாள்.

 

தட்டை விசிறியடித்துவிட்டு செல்லுமளவு கோபம் வந்தபோதும், அத்தனை வேதனையோடும் தான் சரிவர உண்ண வேண்டும் என்று மனைவி அனுப்பியவற்றை வீசி அவள் மனம் நோகச் செய்திட அவனுக்கு மனமில்லை! 'அவள் மனம் நோகடிக்காதவனா நீ?’ என்று அவன் நியாயமான மனம் சுட்டுவிட்டதில் தீயாய் எரிந்த நெஞ்சை நீவிக் கொண்டவன், உண்டு முடித்து எழுந்தான்‌.

 

மதிய உணவை தனக்குக் கட்டிக் கொண்ட ஆதி, “இங்கன இருக்குறதுக்கு நீ என்ன காரணம் சொன்னாலும் எதுக்கு வந்தனு எனக்கு தெரியும் செழிலா.. தாரளமா இங்கன இருக்கலாம்.. ஆனா இந்த தூது அனுப்புற வேலையெல்லாம் பாக்காத.. பார்த்தனு தெரிஞ்சுது” என்று அதுவரை உணவை அடைத்து உள்ளே வைத்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவனையும் அவன் அலைபேசியையும் அழுத்தமாய் நோக்க, அந்த பார்வையின் சூட்டில் செழிலன் ஒருநொடி நடுங்கிதான் போனான்.

 

“ச..சாரி மாமா” என்று சிரம் தாழ்த்தி அவன் கூற,

 

அவன் தோளில் தட்டிவிட்டு, “நைட்டு நானே வந்து செய்யுறேன்.. சும்மாகிடக்க முடியாம எதையாது செஞ்போட்டுகிட்டு இருக்காத” என்றுவிட்டுச் சென்றான்.

 

அங்கு கண்ணீரோடு கரைந்துகொண்டிருந்தவளுக்கு மனதின் வலியையும் மீறி அவன் உண்டுவிட்டதன் திருப்தி! அவளவனுக்கு அவள் கை பக்குவத்தில் எத்தனை பிடித்தம் என்பதை அவள் அறிவாளே! அழையா விருந்தாளியாய் அவளுள் பழம் நினைவுகள்!!!

 

அன்று விடுமுறை முடிந்து கல்லூரிக்கு மாணவ மாணவிகள் மீண்டும் வந்துக் கொண்டிருந்தனர்…

 

தனது பெரிய பெரிய பைகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்துகொண்டிருந்த பொற்றாமரையாளைக் கல்லூரி மைதானத்தில் அமர்ந்தபடி பார்த்த ஆதிவருணேஷ்வரன், சிரித்தபடி எழுந்து வந்தான்.

 

“மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டவன் குரலில் சட்டென திரும்பியவள்,

 

“ஓ ஷ்யோர்” என்று பெருமூச்சோடு ஒரு பையை கீழே பதமாய் வைக்க,

 

சிரித்தபடி அதைத் தூக்கியவன் அதன் கணத்தில் “அம்மாடீ..” என்றான்.

 

அதில் சிரித்துக் கொண்டவள் “ஊருக்கு போயிருந்தேனில்ல.. அதேன் இம்பூட்டு கனம்” என்று கூற,

 

“அப்படி என்னமா பர்சேஸிங்?” என்றான்.

 

“பர்சேஸிங்கெல்லாம் இல்ல சீனியரே.. எல்லாம் தொக்கு, ஊருகாய், பொடி” என்று அவள் கூற,

 

“தொக்கா?” என்றான்.

 

“ம்ம்.. எங்கவீட்டு ஆளுகளுக்கு நான் ஆஸ்டல் சாப்பாடுல மெலிஞ்சுட்டே போறேன்னு நெனப்பு” என்றவளே சிரிப்பை பொறுக்க இயலாமல் கலகலவென்று சிரித்தாள்.

 

அவள் ஒன்றும் மெல்லிடை கொண்ட மெல்லியவள் இல்லை.. உயரத்திற்கு ஏற்றதைவிடவும் சற்றே பூசிய உடல் வாகு இருந்தபோதும் அந்த உடல்வாகில் அம்சமாகவே காட்சி கொடுப்பாள்! 

 

பொதுவாக எடை அதிகமுள்ள பெண்கள் எடை சார்ந்த விடயங்களை ஆண்கள் முன் பேச கூச்சம் கொள்வர் என்னும் பட்சத்தில் இவள் சாதாரணமாக பேசி சிரிப்பதை சற்றே வியப்பாய் பார்த்த ஆதிவருணேஷ்வரன் அதை அவளிடமே கேட்டும் இருந்தான்.

 

“அட இதுல என்ன இருக்கு சீனியரே? உடல் எடை எனக்குனு இருக்குத இயற்கை அமைப்பு.. அந்த உடல் எடையால எனக்கு ஏதும் கஸ்டமோ நஷ்டமோ இருந்தாதேன் அதை கொறைக்கனும் வைக்கனுமுனு ரோசிக்கலாம்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாத இந்த உடல் அமைப்பை காரணமே இல்லாம அழகோட ஒப்பிட்டு இது என் அழகை கெடுக்குதுனு நான் ஏன் நெனைக்கனுமாக்கும்? கடவுள் கொடுத்ததை கொற சொல்ல நாம யாரு சொல்லுங்க?” என்று பக்குவமாய் அவள் பேசிய பேச்சில் ஆச்சரியம் கொண்டு நின்றான்!

 

“சரி கேளுங்க.. எங்கவீட்டுலருந்து பூண்டு ஊறுகாய், வடுமாங்கா, பருப்பு பொடி, இட்லி பொடி எல்லாம் கட்டி வச்சிருந்தாய்ங்க.. இந்த காயூ என்னை இரா தொக்கு செய்யச் சொல்லிக் கேட்டுச்சு.. எங்க வீட்ல எல்லோருக்கும் நாஞ்செய்யும் இரா தொக்குனாதேன் கொள்ள பிரியம்.. அப்படியே எங்கம்மா கைமணம் இருக்குதுனு சொல்லுவாய்ங்க.. நண்டு சிண்டுலருந்து எல்லாத்துக்கும் அது ரொம்ப பிடிக்கும்.. அதேன் கிளறினேன்.. அதையும் ஒரு டப்பால அடைச்சு எனக்கும் வச்சுருக்கானுங்க” என்று அவள் கூற,

 

“உனக்கு சமைக்கவெல்லாம் தெரியுமா?” என்றான்.

 

“என்ன சீனியர் இப்புடி கேட்டுபோட்டீங்க?” என்று அதிர்ந்து நின்றவள், அப்போதே தன் சமையல் திறமையை வெளிகாட்டிவிடும் வேகத்தோடு அங்கேயுள்ள ஒரு மரத்தடி கல் மேடைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

 

அவனிடமுள்ள பையை வாங்கித் திறந்தவள் ஒரு சின்ன கண்ணாடி பாட்டிலை திறக்க, அந்த இரால் தொக்கின் மணம் அவ்விடத்தை நிறைக்குமளவு மணம் வீசியது!

 

அதை கண்கள் மூடி உள்வாங்கியவள், உள்ளிருந்து ஒரு சின்ன கரண்டியை (spoon) எடுத்து சிறிதளவு தொக்கை அவனிடம் நீட்ட, அவளையே சிரிப்பாய் நோக்கினான்.

 

“தைரியமா சாப்பிடுங்க.. இதை சாப்பிட்டுப் பார்த்துபோட்டு பெறவு சொல்லுங்க நம்ம சமையல் திறமை எப்படினு?” என்று இல்லாத காலரை தூக்கிவிட்ட வண்ணம் அவள் கூற,

 

அவளிடமிருந்து அதை வாங்கி சுவைத்தான்! சுவைத்தவன் விழிகள் வியப்பில் புருவம் ஏறிட, அதைக் கண்டு ஆனந்தமாய் புன்னகைத்தாள்.

 

“ஏ.. நிஜமா நீயா செஞ்ச?” என்று அவன் வினவ, 

 

“ப்ச்!” என்று முறைத்தாள்.

 

“ஏ இல்லமா.. நிஜமா சூப்பரா இருக்கு..” என்றவன் குரலில் அத்தனை மகிழ்வும், உற்சாகமும் இருந்தது!

 

உண்மையில் அந்த ருசி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது! அதற்குறிய மசாலா அணைத்தும் அம்மியில் அரைத்து சேர்ந்திருக்க, அம்மிக்கே உரித்தான அந்த கல் மணமும் சுவையும் அதில் இருந்தது! 

 

விடுதியில் தங்கி படிப்பவனுக்கு எப்போதுமே ருசியான உணவுகளை உண்டு பழக்கமே கிடையாது என்பதால், உணவில் பெரிதும் ஆர்வமோ ஆசையோ அவன் வைத்ததே இல்லை! தற்போது அவள் கொடுத்த உணவு, அவனுக்கு ஏதோ தனக்காகவே பார்த்துப் பார்த்து சமைத்து கனவிலும் முகமறியா அன்னையே கைபட ஊட்டிய உணர்வை கொடுத்தது!

 

உள்ளுக்குள் எடுத்த புதுவித உணர்வு பிரவாகத்தில் சில நொடிகள் தடுமாறியவன், “ரொம்ப நல்லாருக்குமா?” என்று உளமாரக் கூற,

 

டப்பாவை மூடியவள் அதை அவனிடமே நீட்டினாள்.

 

ஆடவன் அவளைப் புரியாது நோக்க, “உங்க கொரலே உங்களுக்கு இது எம்பூட்டு புடிச்சிருக்குதுனு சொல்லுதுங்க சீனியர்.. கொண்டுபோங்க.. எனக்கு அடுத்த வாரமே ஊருக்கு போகையில இன்னொரு டப்பா கொடுத்தனுப்புவாய்ங்க.. அம்பூட்டையும் ஒத்த ஆளாவா உங்க (உண்ண) முடியும்?” என்று நகைத்தாள்.

 

வாங்க வேண்டாம் என்று அவனுக்குத் தோன்றவில்லை.. அதேநேரம் வாங்க தயக்கமாக இருந்தது! இவையாவும் அவனுக்குப் புது அனுபவம் ஆயிற்றே!

 

“என்ன சீனியர் பாக்குதீங்க? வாங்கிக்கோங்க.. ஜுனியரோட கிஃப்டா நினைச்சுக்கோங்களேன்? கிஃப்ட யாரும் மறுப்பாகளா?” என்று அவள் கூற,

 

புன்னகையாய் அதை வாங்கியவன், “தேங்ஸ் ம்மா.. இதுயாரு உங்கம்மா செய்ய சொல்லிக் கொடுத்தாங்களா?” என்றான்.

 

“இல்ல சீனியர்..” என்று அவள் கூற,

 

“அப்றம் எப்படி அவங்க கைமணம் இருக்குதுனு சொல்றாங்க?” என்றான்.

 

அவை இயற்கையாகவே வருபவை என்பதெல்லாம் அவன் அறியோனாயிற்றே!

 

“எனக்கு அம்மா அப்பா கிடையாது சீனியர்.. ஆனா இந்த சாப்பாட்டுல என் கைபக்குவம் அப்படியே அம்மாவோடதாட்டிருக்கும்முனு சொல்லுவாங்க” என்று அவள் கூற,

 

ஆடவன் அவளை அதிர்ந்து நோக்கினான்.

 

அதில் கலகலவென சிரித்தவள், “ஷாக்க குறைங்க.. நம்ம குடும்பம் ரொம்ப பெருசு.. இன்டர்டியூஸ் பண்ணி வைக்கவே ஒரு நாள் ஆகும்..” என்று கூறியவள் அவன் ஏதோ கூற வருவது புரிந்து, “ஆயிரம் பேரு இருந்தாலும் அம்மா அப்பா போல வருமானு தானே கேக்க வாரீக? அதெல்லாம் இல்ல சீனியரே.. நமக்குனு இருக்குறவக நம்மல நல்லா பாத்துகிட்டா இல்லாதவங்களுக்கான ஏக்கமெல்லாம் நமக்கு வாராது.. என்னை எங்கவீட்ல ராணி மாறி பாத்துக்க எங்க அண்ணனுங்க இருக்காங்க.. என் வீட்ல நான் சொன்னா அதுக்கு மறுபேச்சு கெடையாது.. நான் வச்சது சட்டம்னு சொல்ற அளவு எம்மேல உசுரா இருப்பாங்க. அந்த பாசத்தை ஒருகாலமும் நான் பயன்படுத்திகிட கூடாதுனும், ராசாவீட்டு ரோசா மாதிரி வசதியாவே மட்டுமே வாழ்ந்து பழகிட கூடாதுனும்தேன் வெளியூர் வந்து படிக்குதேன்” என்றாள்.

 

அத்தனை நாள் இல்லாது தற்போது அவள்மீது பெரும் மரியாதையே உருவானது அவனுக்கு! இதுநாள் வரையிலும் தன்னைப்பற்றி ஒருவார்த்தைக் கூட கேட்டு தெரிந்துகொள்ள அவள் முயற்சித்ததே இல்லை.. தானாக கூறாது தன்னிடமிருந்து எதையுமே அவள் தெரிந்துகொள்ள முனைந்ததும் இல்லை.. தற்போதுகூட அவள் அன்னை தந்தை இல்லாததைக் கூறி கரிசனம் தேடிக்கொள்ளவில்லை.. அவளிடம் அவள் வாழும் வாழ்வின் பெருமிதம் இருந்தபோதும், அதில் துளியளவும் தலைக்கனம் இல்லை! 

 

இவள் எந்தமாதிரியான பெண் என்று வியந்து பார்த்தவன், “யூ ஆர் சோ சர்ப்ரைசிங்” என்று கூற,

 

அழகிய புன்னகையுடன், “தேங்க்யூ தேங்க்யூ..” என்றவள், “சரி சரி நேரமாச்சுது.. ஹாஸ்டலுக்குள்ள போவனும்.. இந்த கவி புள்ள வழிமேல விழி வச்சு எனக்காக காத்துட்டுருக்கும்” என்றபடி சென்றாள்.

-தொடரும்...

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 1 month ago
Posts: 45
 

@vsv15 எனக்கு இறா தொக்கு குடுக்காத காரணத்தால் மீ சோகம். 😞.

 

 

சூப்பர் 👌 👌 👌 👌 👌 


   
ReplyQuote
Page 1 / 2

You cannot copy content of this page