About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அனைவருக்கும் வணக்கம் மக்களே...
கதை: கனலை அணைக்க வா கவியே...
இதுதான் நம்ம கதையோட தலைப்பு.கதையிலிருந்து சிறு முன்னோட்டம்.
நாயகன் :தேவ் ஆச்சார்யா
நாயகி: ஆராதனா
நாயகனின் தோழன்: ரிஷிவர்தன்
நாயகியின் தோழி : வந்தனா
டீசர் 1:
தேவ்வும் ரிஷியும் பேசியபடி அறைக்குள் நுழைந்தார்கள்.
தேவ் சாய்வாக நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினான்.நேற்று இரவிலிருந்து அவசர சிகிச்சை பிரிவில் பணி.விழிகள் ஓய்வுக்கு ஏங்கியது.ரிஷி கைகளை கழுவியவாறு "ஆரா வந்துருக்கா டா குழந்தையோட" என்றான்."ம்ம்ம்' என்றானே தவிர வேறு எதுவும் பேச வில்லை.ரிஷி அவனருகில் வந்து"என்ன மச்சான் தூக்கம் வருதா" என்றான் அவன் தோள் தொட்டு."ம்ப்ச்,இல்ல டா"என்றவன் எழுந்து சென்று கைகளை கழுவி முகத்தை நீரால் அடித்துக்கழுவினான். " அந்தக் குழந்தை அவளோட குழந்தை ன்னு உனக்குத் தோணுதா" என்றான் தீடீரென. ஒரு நிமிடம் ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை என்ன சொல்கிறானென்று."என்னடா சொல்ற" என்றான் ."ஆரா எப்படியிருக்கா" என்றான் .ஒரு நிமிடம் விழி சுருக்கி அவனைப் பார்த்தான் ரிஷி " நல்லா இருக்கா டா,ஹஸ்பண்ட் வரலப்போல " என்றான்.அவனை நன்றாக முறைத்தான் தேவ்."ஏன்டா இவ்ளோ பாசமா பாக்குற" என்றான்."ஒன்னுமில்ல, நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல" என்றான். " "ஓஹோ சரி சரி,அந்தக் குழந்தை அவளோடதா இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம், ஆனாலும் உனக்கு ஓவர் கான்பிடன்ஸ் மச்சான், அந்தக் குழந்தை அவளோடது இல்லன்னு உனக்கு எப்படி தெரியும்? அப்புறம் இன்னொன்னு உனக்கு என்ன வயசாச்சி தெரியுமா, இப்படியே போனா நேரா எல்லாரும் உன்னோட அறுபதாம் கல்யாணத்துக்குத் தான் வருவாங்க, ஏற்கனவே நம்ம புரபஷன்ல செட்டில் ஆகுறதுக்குள்ள சொட்ட விழுந்துடும் டா இதுல நீ வேற ரொம்ப லேட் பண்ற டா" என்றான்."வந்தனா என்ன சொன்னா" என்றான் தேவ்."ஒன்னும் பேசிக்கல சாயந்திரம் தான் பேசணும் ஆமா ,ஏதுனாலும் ஃபீல் பண்றியா டா"என்றான்."என்ன ஃபீல் பண்ணனும் "என்றான்."அதானே எங்க நீ ஃபீல் பண்ணிட்டாலும்"என நொடித்துக்கொண்டே தன் பையை எடுத்துக்கொண்டிருந்தாதல் தேவ்வின் முகத்தில் வந்து போன உணர்வை பார்க்கவில்லை ரிஷி.
வணக்கம் நட்பூக்களே 🙏
நம்ம கதையோட முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன்.படித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்தியாயம்:1
டெல்லி விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொணடிருந்தது. எத்தனை தலைபோகும் வேலைகள் இந்த மனிதர்களுக்கு.நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.விமானத்திற்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தது.அவற்றை பார்த்தவாறே ஆராதனா, தன் ஒரு கையில் பயணப் பைகளுடனும் மறுகையில் சூர்யாவுடனும் பார்வையை சுழல விட்டபடி தன் விமானத்திற்கான அறிவிப்பை பார்த்து அந்த பகுதியில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள்.
" அம்மூ பசிக்குது"என்றான் சூர்யா .தன் கைப்பையில் இருந்து சிறிய டப்பாவில் உள்ள வெட்டிய ஆப்பிளை அவனுக்கு எடுத்துக்கொடுத்தாள்.அவன் தலையை வாஞ்சையாக வருடி சிறு முத்தம் பதித்தாள்.எதையோ யோசித்திருந்தாள்.பின் தன் அலைபேசி எடுத்து தன் தோழி வந்தனாவிற்கு அழைத்தாள்,"ஹலோ! வந்தனா நானும் சூர்யாவும் ஏர்போர்ட் வந்துட்டோம் ,உன் அட்ரஸ் லொகேஷன் ஷேர் பண்ணு டி நாங்களே வந்திடுறோம்" என்றாள்.
"இங்க எனக்கு ஒரு வேலையும் இல்லை,சோ நான் வந்து பிக்கப் பண்ணிக்குறேன் டி"என்றாள் வந்தனா. ஆராதனாவிற்கு இப்போது இருக்கும் ஒரே உறவு உயிர்த்தோழி வந்தனா மட்டுமே.ஆராதனா டெல்லியிலுள்ள பிரபல மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் பயிற்சி மருத்துவராக இருக்கிறாள்.
சிறிது நேரத்தில் அவள் தன்னுடைய விமானத்திற்கான அறிவிப்பு வரவே சூர்யாவுடன் விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.சில வருடங்கள் கழித்து இப்போது தான் சென்னைக்குச் செல்கிறாள்.சிறிது நேரத்தில் சூர்யா உறங்கி விடவே, அவள் ஜன்னலோரம் கடந்து செல்லும் மேகங்களைப் பார்த்தாள்.அந்த மேககங்களிடையே மெல்லிய பனிப்படலமாக அவன் முகம் தோன்றியது.எத்தனை காதலுடன் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.அத்தனையும் கானல் நீரானதே.இநத காதல் தான் எத்தனை பொல்லாதது.எத்தனை புத்திசாலிகளையும் கோழையாக்கி விடுகிறது .ஆம் ஆராதனா மிகவும் துடிப்பான திறமையான பெண்.அவள் இருக்கும் இடமும் கலகலப்பாக இருக்கும்,தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பாள்.எந்த நிலையிலும் கலங்காத பெண்.அவள் அப்பா நந்தன்- தாய் சந்திரா இருவரும் வங்கியில் உயர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்.இருவரும் காதலித்து
அவர்களது வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்களுடைய மூத்த மகள் நிவேதா ,இளையவள் ஆராதனா . இருவரும் அவர்களது இளவரசிகளே.அவர்களுடனான அவள் வாழ்க்கை செர்க்கமாக இருந்தது.ஆனால் இன்று???
அவனுடனான கடைசி சந்திப்பை நினைத்துப் பார்த்தாள்.தன் காதலுக்காக இறைஞ்சிய தருணம் அவள் கண்முன் நின்றது.
அன்றோரு நாள் மாலை நேரத்தில் நன்கு மழை அடித்துப்பெய்துக்கொண்டிருந்து.சற்றே ஆள் அரவமற்ற இடம்.அவன் கத்திக்கொண்டிருக்கிறான்.
"ஏய், உனக்கு அறிவில்ல எத்தனை தடவை சொல்றது, எனக்கு உன் மேல எந்த ஒரு இன்ட்ரெஸ்டும் இல்லைன்னு, இந்த காதல் கண்றாவி எல்லாம் நம்பிக்கை இல்லை எனக்கு.உனக்கென்ன டீனேஜ் பொண்ணு ன்னு நினைப்பா , கொஞ்சம் புரபஷனலா இரு ,என் கோவத்த கிளறாம இங்கிருந்து முதல்ல கிளம்புடி எனக்கு வழிய விடு முதல்ல "என்றவாறே அவசரமாக கிளம்பும் போது,
"ப்ளீஸ் நா சொல்றது கேளுங்க "என்று தவிப்புடன் அவசரமாக அவன் கையை பிடித்தாள், "ஏய் சீ டோன்ட் டச் மீ இடியட், அதான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் ல, உலகத்துல வேற ஆம்பளயே இல்லையா, ஓஓ என்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வசதியா செட்டில் ஆயிடலம்ன்னு நினைக்கிறியா? "ம்ம்.." என தன் தாடையை தடவியபடி"இல்ல வேற ஏதாவது என்கிட்ட இருந்து எதிர்பாக்குறியா"என்று வார்த்தையால் அவளை காயப்படுத்தினான்.
" பிளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்"
என்று அவள் மீண்டும் அவன் கையை பிடிக்க வர, அவன் வேகமாக கைகளை உதறி தள்ளியதில் நிலை தடுமாறி கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்தாள்.அவனின் இந்த பரிணாமம் கண்டு அதிர்ந்தே போனாள்.கீழே விழுந்ததில் முழங்கையும் ,உள்ளங்கையும் கூரிய கல்லில்பட்டு இரத்தம் வழிந்தது . அவள் எழுவதற்கு முன் தனது காரினை வேகமாக ரிவர்ஸ் எடுத்ததில் அவள் மீது முழுவதும் மழைநீரோடு சேறும் இறைந்தது.அவள் கீழே விழுந்ததும் அவன் கவனிக்கவில்லை அடிபட்டதும் அவன் கவனிக்கவே இல்லை ,அத்தனை வேகமாக அவன் அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்.அவள் மெல்ல புடவையின் தலைப்பை தன் முழங்கை இரத்தத்தில் வைத்து அழுத்தி பிடித்து கொண்டு எழுந்தாள்.எதற்கும் கண் கலங்காதவள் அடிவயிற்றில் இருந்து "ஹோ" வென வெடித்து அழுதாள்.தன்மானத்தையும் ,சுய மரியாதையையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் இன்று அனைத்தும் தன் காதலுக்காக அவனின் காலடியில் மிதிபட வைத்து கோழையாக நின்றிருந்தாள்.அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை போல் விழித்திருந்தால்." ஏன் இப்படி ஆனேன்"என மனதினுள் போராடினாள்
உடலில் உள்ள ஜீவன் வற்றயது போல் உணர்ந்தாள்.அடித்த பேய் மழையில் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் எனத் தெரியவில்லை.அன்றுதான் அவனை கடைசியாக சந்தித்தது.
இதோ நான்காண்டு கழித்து இப்போது தான் சென்னைக்குத் திரும்புகிறாள்.விதி மீண்டும் இங்கு இழுத்து கொண்டு வந்திருக்கிறது அவளை.உள்ளம் இன்றும் தகித்துக் கொண்டுதான் இருக்கிறது அவளுக்கு பார்ப்போம்....
கனல் அணையுமா?.....
அத்தியாயம்:3
ஆராதனாவும் வந்தனாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
"அம்மூ பாவனா பாப்பா எழுந்துட்டா நான் அவ கூட விளையாடுறேன் " என்றவாறு அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டான் சூர்யா.
"சரி சூர்யா ஆனா ஓடியாடி விளையாடதே பாப்பா கீழே விழுந்துடுவா , பத்திரம்.பொம்மைய வச்சு விளையாட்டு காட்டு சரியா?" என்றாள்." சரி அம்மூ" என்று கூறி விட்டு பாவனாவிடம் சென்றான்.
"சாயங்காலம் ரிஷி வந்ததும் சொல்லு , கொஞ்சம் பேசணும் "என்றாள் ஆராதனா ."ம்ம் சரி டி" எனக்கூறினாள்.
தேவ்வும் ரிஷியும் பேசியபடி அறைக்குள் நுழைந்தார்கள். தேவ் அங்கிருந்த நாற்காலியில் கண்களை மூடி சாய்வாக அமர்ந்தான்.ரிஷியோ தன் கைகளை கழுவியவாறு ,அவனைப் பார்த்து"ஆரா வந்துருக்கா டா,சின்ன பையனோட "என்றான்.முந்தைய நாள் இரவு நேர பணிக்காக வந்தது தொடர்ச்சியாக வேலை ,இப்போது தான் முடிந்தது, கண்கள் இரண்டும் ஓய்வுக்கு ஏங்கியது.
"என்ன மச்சான் தூக்கம் வருதா" என்றான் ரிஷி.
"ம்ம்ச் ,இல்ல டா"என்றவாறு கழுத்தை வருடியபடி எழுந்து கைகளை சுத்தப்படுத்தி முகத்தை குளிர்ந்த நீரால் அடித்து கழுவினான்.பின் முகத்தை பூந்துவாலையால் துடைத்துக்கொண்டே "அந்த பையன் அவளோட குழந்தைன்னு உனக்குத் தோணுதா" என்றான் தேவ்.
தீடீரென அவன் இப்படி கேட்டது ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை."என்னடா சொல்ற"என்றான் ரிஷி.
அதற்கான பதிலைக் கூறாமல் "ஆரா எப்படி இருக்கா?" என்றான். அவனை விழி சுருக்கி பார்த்த ரிஷி "ம்ம் நல்லா இருக்கா டா,அவ ஹஸ்பண்ட் வரலப்போல"என்றான்.
அவனை நன்றாக முறைத்தான் தேவ். "என்னடா அப்படி என்னைய பாசமா பாக்குற"என்றான்.ஒன்றும் பதில் கூறாமல் தன் இருக்கையில் அமர்ந்தான். ரிஷிமனதில் "பத்து வார்த்தைக்கு நாலு வார்த்தை பேசுடா நல்லவனே " என நினைத்தான் , வெளியே சொல்லவில்லை எப்படியும் அதற்கான பதில் வராது .
பின்" ஆனாலும் உனக்கு ஓவர் கான்பிடன்ஸ் மச்சான் அந்தக் குழந்தை அவளோடது இல்லன்னு உனக்கு எப்படி தெரியும்?இங்க பாரு உனக்கு என்ன வயசாச்சி தெரியுமா இப்படியே போனா உன்னோட அறுபதாம் கல்யாணத்துக்கு தான் எல்லாரும் வரணும்.சும்மாவே நம்ம புரபஷன்ல செட்டில் ஆகுறதுக்குள்ள சொட்ட விழுந்துடும் டா, ரொம்ப லேட் பண்ற டா நீ.டேய் ஓன்று சொல்றேன் கேட்டுக்கோ ,முடி விழுகுறதுக்குள்ள நல்ல ஒரு முடிவெடு" என்றான்.
"என்னடா நக்கலா உனக்கு " என்று முறைத்தான்.மனதில் ஏதோ சொல்ல முடியாத அழுத்தம்.சிறிது நேரம் அமைதியாக இருந்தான் .அவன் என்ன நினைக்கிறான் எனத் தெரியவில்லை ரிஷிக்கு.
"வந்தனா கிட்ட பேசினியா?" என்றான் தேவ்."இல்லை டா ஈவினிங் தான் பேசணும்" என்றான் .
தேவ் அருகில் வந்து அவனின் தோளில் கை வைத்தவாறு,
"என்ன மச்சான் ஃபீல் பண்றியா டா "என்றான் ரிஷி ."நான் என்ன ஃபீல் பண்ணனும்" என்றான்."குரலில் ஒரு அழுத்தத்தைக்கூட்டி.
"அதான நீ ஃபீல் பண்ணிட்டு தான் வேற வேலை பாப்ப"என்றவாறு தன் பையை எடுத்துக்கொண்டிருந்ததால் தேவ் முகத்தில் வந்து போன உணர்வை பார்க்கவில்லை ரிஷி.
தேவ் ஆச்சார்யா -கார்டியாக் ஸ்பஷலிஸ்ட்.தந்தை பிரசாத் ஆச்சார்யா வைர வியாபாரி, தாய் லதா.ஒற்றை குழந்தையாக தேவ் வளர்ந்தான்.சதா சர்வ காலமும் வியாபாரம், வியாபாரம் என்று பணம் சேர்ப்பதில் குறியாக இருந்தார் பிரசாத்.எனவே பணத்தை தாண்டிய உலகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவில்லை.
மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் நேரத்தை சேமிக்க மறந்தார்.எனவே தேவ் வின் உலகம் அவனின் தாய் மட்டுமே.அவன் இருந்த இடமும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழக வழியில்லாத செல்வந்தர்களாக வாழும் பகுதி.சிறுவர்கள் ஒருவருக்கொருவர் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாட மாட்டார்கள்.அவனுடைய தாயும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது சமையல் என வீட்டை சுற்றியே இருந்ததால் வெளியுலக பழக்கத்தை அவ்வளவாக அவனுக்கு பழக்கவில்லை. வீட்டை விட்டால் அவனை அவர் அழைத்து செல்வது அருகில் இருக்கும் கோவிலுக்குத்தான்.
என்றாவது ஒரு நாள் சற்று தொலைவில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்து செல்வார்.ஆனால் அங்கு கூட அவன் சிறிது நேரமே விளையாடுவான்.யாருடனும் எளிதாக பழக மாட்டான். அங்கிருக்கும் சிறுவர்கள் "உன் பேர் என்ன ?" வென்று கேட்டால் கூட பதில் கூறாமல் அவனுடைய அம்மாவின் அருகில் வந்துவிடுவான்.
அவனுடைய தாய் அவனின் குணம் கண்டு அவனை மாற்ற எவ்வளவோ முயன்றார் ஆனாலும் அவனால் சட்டென்று யாருடனும் ஒன்றிப்பழக முடியவில்லை. அவனது இந்த வட்டத்தை உடைத்து உள்ளே வந்தவன் ரிஷி.தேவ்வின் நட்பைப் பெறுவது அத்தனை எளிதாக இல்லை அவனுக்கு . விரட்டி விரட்டி அவனுடைய நட்பை ஏற்படுத்திக் கொண்டு இன்று வரை சிறந்த நண்பனாக இருக்கிறான்.அவன் சிரிக்காமல் இருந்தாலும் "பரவாயில்ல உனக்கும் சேர்த்து நானே சிரிச்சுக்கிறன்" என்பான்.
சிறு வயதில் அவனுக்கு அறிவியல் பாடத்தில் அதிக ஈடுபாடு இருந்தது.அதிலும் மேல்நிலை வகுப்பு செல்ல அவனுக்கு பொழுது போகாமல் இருந்தாலோ இல்லை அவன் எந்த மனநிலையில் இருந்தாலும் அவனுடைய கை மனித இதயத்தின் வரை படத்தை தாளில் வரைந்து கொண்டிருக்கும்.
அனைத்து மாணவர்களும் "என்னடா இவ்வளவு வேகமா வரைஞ்சிட்ட" என்பார்கள்.அவனுடைய அந்த ஆர்வம் தான் அவன் மருத்துவத்தில் இந்த துறையில் சாதிக்க காரணமாக அமைந்தது.ரிஷியும் அவனது தந்தை மருத்துவத்துறையில் இருந்ததால் அவனுமே இந்த துறையை தேர்ந்தெடுத்தான்.
இப்போதும் அவனின் கைகள் இதயத்தின் வரை படத்தை வெற்றுத்தாளில் வரைந்து கொண்டிருந்தது.அந்த இதயத்தின் துடிப்பு அவளுக்கானதாக மட்டும் மாறுமா?
அத்தியாயம் 4
தேவ்வின் அலைபேசி அலறியது, அவனது தாய் தான் அழைத்திருந்தார்.
“ ஹலோ! சொல்லுங்க மா” , என்றான்.
”சாயங்காலம் வர நேரமாகுமா பா?” என்றார்.
“இல்லமா ஆறு இல்ல ஏழு மணிக்குள்ள வந்துடுவேன்” என்றான்.
”சரிப்பா,சாப்பிட்டியா?”என்றார்.”ஆச்சு மா,வச்சுடுவா”எனறான்.
”ம்ம் , சரிப்பா “ என்று வைத்துவிட்டு ஓரு பெருமூச்சுடன் பால்கனிக்கு சென்று அவன் வாங்கி வைத்துள்ள பூச்செடிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலை மோதியது.
மகன் ஏதாவது மேலும் பேசுவான், கேட்பான் என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து பாவம் ஏமாந்து போவார்.
"அம்மா சாப்டீங்களா? மாத்திரை போட்டீங்களா?,என்ன பண்ணுறீங்க?, ஈவினிங் சீக்கிரம் வரேன் எங்கயாவது போலாம்."என்ற குறைந்த பட்ச ஆறுதல் வார்த்தைகளுக்கு ஏங்கியது தாய் மனம்.இவ்வளவு நாட்கள் வெறுமை அவருக்கு பெரிதாக தெரியவில்லை.வயதாக வயதாக மகன் இன்னும் இரண்டு வார்த்தை பேச மாட்டானா,ஆறுதலாக கை பிடித்து முகம் பார்த்து பேச மாட்டானா என மனம் தவியாய் தவித்தது.ஆனால் அவனின் இயல்பே அதுதான் என்பது அவருக்கும் தெரியும். ஆனால்
என்ன செய்வது மனித மனம் ஏங்குவது இரண்டு ஆறுதல் வார்த்தைகளுக்கு ஆக மட்டுமே . அவனிடம் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் வரும், அதையும் தாண்டி வேறு வார்த்தைகள் பேச மாட்டான்.அதே சமயம் சிடுமூஞ்சியாகவும் இருக்க மாட்டான்.
பிரசாத் அவரின் பின்னால் வந்து நின்றார் மனைவி ஏதோ யோசனையிலிருப்பதைப் பார்த்து, "லதா என்ன யோசனை? உன் பையனுக்கு போன் பண்ணுனியா? என்ன சொன்னான்?"என்றார்.
"ம்ம் பேசினேங்க ஏழு மணிக்குள்ள வர்றேன்னு சொன்னான்"என்றார் சோர்வோடு .
"இங்க பாரு,அவனோட குணமே அதுதானே,கவலைப்பட்டு என்ன ஆகப்போது.எல்லாம் சரி ஆகும்,விடு"என்றார்.
"எல்லாம் சரிங்க,ஆனா கல்யாணத்துக்கு பிடி குடுக்க மாட்டேங்குறானே"என்றார் வருத்தத்துடன்."
"ம்ம்,இதப்பாரு லதா இன்னிக்கு மணிகண்டன் போன் பண்ணினார்,அவரோட ரெண்டாவது பொண்ண தேவ்வுக்கு பாப்போமான்னு கேட்டார்.இத விட நல்ல இடம் நமக்கு கிடைக்காது,அது மட்டுமில்லாம மணி நமக்கு செஞ்ச கைமாறுக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி, இன்னிக்கு அவன் வந்ததும் நா எப்படியாவது ஒத்துக்க வச்சுடுவேன்.நீ மட்டும் கொஞ்சம் தைரியமா அவன்கிட்ட பேசு அவன் சொல்லறதுக்கெல்லாம் ஆமா சாமி போடாத.... , புரியுதா என்ன ..? இன்னிக்கு அவன் சம்மதிக்கலன்னா நாம வேற வழியில்தான் அவன்கிட்ட சம்மதம் வாங்கனும் "என்றார் ஒரு முடிவோடு.
மணிகண்டன் பிராசாத்தினுயடைய பால்ய நண்பர் .பிராசத்திற்கு முன்பே அவர் இந்த வைர வியாபரத்தை சிறு அளவில் ஆரம்பித்து இன்று மிகவும் நாடெங்கும் பெரிய அளவில் வியாபரத்தை நடத்தி வருகிறார்.
பிராசாத்திற்கு மிகவும் முக்கியமான தருணத்தில் உதவி செய்தவர்.அவர் உதவி மட்டும் இல்லையேல் நிச்சயமாக பிரசாத் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருப்பார்.
அவருடைய ஒரே பெண் லயவர்ஷினி தந்தைக்கு அடுத்தபடி அவள் தொழிலில் சாமர்த்தியசாலியாக இருக்கிறாள்.ஆபூர்வமான வைரங்களை சந்தைப்படுத்தி அதில் முதலீடு செய்து வளம் கொழிக்கும் தொழிலாக மாற்றி வருகிறாள்.அபார திறமைசாலி . அழகும் சிறு கர்வமும் உண்டு அவளுக்கு.
ரிஷி வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு மகளை தூக்கி பிடித்து கொஞ்சிக்கொண்டே,
"வந்தனா டீ வேணும் மா" என்றான்.
"இதோ வர்றேன், இந்தாங்க ரிஷி..." என்றவாறு அவனிடம் கோப்பையை நீட்டினாள் .
அவனும் தேநீர் பருகியவாறே,"வந்தனா எதுவும் பேசினாளா?" என்றான்.
" ஆமா கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும் ன்னு சொன்னா, நீங்க ஃபிரீ தான பா?" என்றாள் வந்தனா."ம்ம் பாப்பாவும் சூர்யாவும் விஜயாம்மாகிட்ட விளையாடிட்டு இருக்கட்டும் நாம பேசலாம்...நீ பாப்பாவ அவங்கட்ட விட்டுட்டு வா,நா ஹாலுக்கு வர்றேன் " என்றான்.
அவளும் ஆராதனா வின் அறைக்குள் சென்று அவளுக்கு தேநீரையும் சூர்யாவிற்கு பாலையும் கொடுத்து விட்டு "ஆரா ரிஷி வந்துட்டார் நீ ஹாலுக்கு வந்துடு பேசிக்கலாம்... சூர்யாவும் பாப்பாவும் விஜயாம்மாகிட்ட இருக்கட்டும் என்று கூறி விட்டு வெளியே வந்து அமர்ந்தாள் .விஜயாம்மா பல வருடங்களாக ரிஷியின் பெற்றோரின் வீட்டில் வேலை செய்பவர்.ரிஷியும் வந்தனாவும் தனி வீட்டில் தான் வசிக்கின்றார்கள்.
ரிஷியின் பெற்றோரோ இல்லை வந்தனா வின் தாயோ இல்லையென்றால் இங்கு வந்து விடுவார் விஜயாம்மா.ஹாலில் மூவரும் அமர்ந்திருந்தனர்.
ஆராதனாவே விஷயத்தை நேரடியாக ஆரம்பித்தாள் "நான் இங்க வர ஒரே காரணம் சூர்யா தான்.சூர்யா என்னோட அக்கா பையன் தான்.எங்க அம்மா ,அப்பா ,அக்கா எல்லாரும் குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு திரும்புறப்ப ஆக்சிடண்ட் ல எல்லாரும் இறந்துட்டாங்க சூர்யா மட்டும் கொஞ்சம் காயத்தோட தப்பிச்சுட்டான்" என்று அவள் கூறி பெருமூச்சு விட்டாள்.பின் அவளே தொடர்ந்தாள்," அத்தானும் அதுக்கு ஒரு வருஷம் முன்னாடி இறந்து போனார், அதிலிருந்து நாங்க மீளல, அதுக்குள்ள அடுத்தடுத்த கஷ்டம் என் வாழ்க்கையில ...அப்ப நான் டெல்லியில் மேல் படிப்பு படிச்சிட்டு இருந்தேன்.எல்லோரும் என்ன விட்டு போயிட்டாங்க,யாருமே இல்லை எனக்கு. அத்தானும் ஆசரமத்துல வளர்ந்ததுனால அவர் பக்கம் ஆட்களும் இல்லை சூர்யாவ பாத்துக்க ....
சூர்யாவ பாத்துக்குற பொறுப்பு எல்லாம் என்கிட்ட சேந்துச்சு.எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தது.என்னால படிப்பு தொடர முடியல, சூர்யாவும் ரொம்ப சின்னவன்,என்னால சமாளிக்க முடியாமல் படிப்ப பாதில நிறுத்திட்டேன்.டாக்டர் விக்டரும் , டாக்டர் நேத்ரனும் தான் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க.உங்க ரெண்டு பேருக்கும் நான் தொந்தரவு கொடுக்க விரும்பல தனியா அவனோடவே வாழ்ந்துட்டு போய்டலாம் ன்னு நினைச்சேன்.கொஞ்சம் நான் தெளிஞ்ச பிறகு அவனை பார்த்துக்க ஆள் போட்டேன்.எப்படி எப்படியோ சமாளிச்சு விட்ட படிப்பு முடிச்சேன் ..ஆனா.. ஆனா.... "என்று பேச முடியாமல் துக்கம் தொண்டை அடைத்தது."என்னடி என்ன ஆச்சு ஆரா , ஏதாவது பிரச்சனையா? என்றாள் வந்தனா.
"ம்ம் "என்று மெல்ல தலையசைத்தாள்.
பின் சுதாரித்து,"கொஞ்ச நாள் முன்னாடி சூர்யா விளையாடிட்டு இருந்தான், தீடீர் ன்னு மயங்கி விழுந்துட்டான்.அவன ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி செக் பண்ணி பாத்தப்போ அவனுக்கு இதயத்துல சின்ன பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சது.எனக்கு இருக்கிற ஒரே உலகமும் அவன்தான் ,ஆனா அவனும் என்னை ஏமாத்திட்டு போய்ட்டுவானோன்னு ரொம்ப பயந்தேன்.ஆனா டாக்டர் விக்டரும் டாக்டர் நேத்ரனும் பயப்பட வேண்டாம், ஆனா சீக்கிரம் ஒரு ஆப்ரேஷன் பண்ணனும் ன்னு சொன்னாங்க.எனக்கு என்ன பண்றதுன்னு புரியல.டாக்டர் விக்டர் இந்த பிரச்சனைக்கு கன்சல்டேஷன் அப்பறம் ஆப்ரேஷனுக்கு சஜஸ்ட் பண்ண ஒரே ஆள் தேவ் ஆச்சார்யா தான்.யாரோட லைஃப் ல இனி நானும் வரக்கூடாது,என் லைஃப் ல யும் அவர பாக்க கூடாது ன்னு இருந்தேன்.ஆனா விதி?... தேவ் ஒரு பேமஸ் சைல்ட் கார்டியோ
ஸ்பஷலிஸ்டுங்கறதுனால அவர போய் பாரு ன்னு சஜஸ்ட் பண்ணிட்டாங்க. விக்டர் கிட்ட அவரால சூர்யாவை குணப்படுத்த முடியாதான்னு கேட்டேன்.அவங்க சொன்ன ஒரே நம்பிக்கையான வார்த்தை தேவ் மட்டும் தான்.அதுமட்டுமில்லாம டாக்டர் விக்டரும் , நேத்ரனும் பெரியவங்களுக்கான ஸ்பஷலிஸ்ட்.சோ அவங்க ரொம்ப நம்புறது தேவ்வோட திறமையதான்.இதோ இவனோட ரிப்போர்ட்ஸ்"என்று ரிஷியிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி பார்த்தவுடன்,"ம்ம், தேவ் தான் கரெக்ட் சாய்ஸ்,நீ பயப்படாதே ஆரா... ரிஷி மூணு நாள் கல்கத்தா கான்பெரன்ஸ்க்கு போறான் .சோ புதன் கிழமை சாயந்திரம் நீ ஹாஸ்பிட்டல் வந்துடு . ம்ம்... இது போக வேற ரிப்போர்ட்ஸ் இருந்தா அதையும் எடுத்துட்டு சூர்யாவும் அழைச்சிட்டு வா ஹாஸ்பிட்டல்க்கு, எல்லாம் ஓகே ஆகும் ...பீ போல்ட் " என்றான் ரிஷி .வந்தானாவிற்கோ வருத்தம் ஒரு புறம் கோபம் ஒரு புறம் ஆராதனா மேல்.
ஓரே வார்த்தை கேட்டாள் ஆராவைப்பார்த்து, "நான் என்ன செத்தா போயிட்டேன்?"என்றாள். கோபமாக.
"வந்தனா!...." என ரிஷியும் ஆராதனாவும் ஒரு சேர கத்தினார்கள்.
காலம் இன்னும் என்னவெல்லாம் வைத்திருக்கிறதோ அவளுக்கு.எத்தனை எத்தனை சோதனை பெண்ணவளுக்கு.
பொறுத்திருந்து பார்ப்போம்...
அத்தியாயம் 5:
வந்தனாவோ கோபம் ஒருபுறம் வருத்தம் ஒருபுறம் என கலவையான உணர்வில் நின்றிருந்தாள்.
ரிஷிக்குமமே வருத்தமாகத்தான் இருந்தது ,”எவ்வளவு கஷ்டம் தான் இந்த பெண்ணுக்கு “ என நினைத்தான், ஆனால் அதையும் மீறி அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது,”எப்படித்தான் சமாளித்தாளோ ?யாருடைய துணையுமின்றி".என்ற எண்ணம் தான்.
வந்தனா பேசுவதற்காக வாய் திறக்குமுன்னே, ரிஷி,”இவ்வளோ நடந்திருக்கு அட்லீஸ்ட் என்கிட்ட வேணாம் வந்தனா கிட்ட சொல்லனும்ன்னு கூட தோணலியா உனக்கு? நான் இத உன்ன கஷ்டப்படுத்தனும்ன்னு சொல்லல…..ஆனா இவ்வளவு பெரிய விஷயத்தை உன்னால் பகிர்ந்துக்க முடியாத அளவுக்கு வந்தனா உனக்கு அந்நியமா போய்ட்டாளா? என சற்று காட்டமாகவே கேட்டான்.
“ம்ப்ச்” என நெற்றியை நீவியபடி “ தேவ் மேல் உள்ள கோவத்தில் நீ இங்கிருந்து கிளம்பும் முன்னாடி உங்க அம்மாகிட்ட உன்ன பத்தின தகவல்களை யாருகிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிருக்க, மீறி யாருகிட்டயும் சொன்னா கண்காணாத இடத்துக்கு போய்டுவேன்னு சொல்லிட்டு போயிருக்க, உங்க அம்மாகிட்ட எத்தனையோ தடவை வந்தனா கேட்டும் உனக்கு பயந்து கடைசி வரைக்கும் உங்க அம்மா சொல்லல.அப்படி என்ன உலத்துல உனக்கு மட்டும் தான் காதல் தோல்வியா?வேற யாருக்கும் கிடையாதா? அது தாண்டி நீ டாக்டர்ங்கற புரபஷன்ல இருக்க புரியுதா.டீனேஜ் பொண்ணு மாதிரி எங்கயோ ஒடி ஒளிஞ்சா எல்லாம் சரியாகிருக்குமா?எதா இருந்ததாலும் இங்கேயே இருந்து உன்ன நீயே சரி பண்ணியிருக்கனும்..... வந்தனா ரொம்ப டிஸ்டர்ப்ட் ஆகிட்டா தெரியுமா? நீ ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தன்னு.” எனக்கூறி பெருமூச்சு ஒன்று விட்டான்.
ஆராதனா விற்கு ஏனோ தேவ் நியாபகம் வந்தது அவனும் இதே வார்த்தையை தானே சொன்னான்,” உன் புரபஷனுக்கு ஏத்த மாதிரி பிகேவ் பண்ணு”, என்று.
ஏனோ கண்களோடு மனதும் கலங்கியது.எத்தனை உண்மையான வார்த்தைகள்.ஆனால் அதற்காக தான் பட்ட அவமானமும் சரியானதல்லவே என்று தான் எண்ணத் தோன்றியது அவளுக்கு.ரிஷி மற்றும் வந்தானாவிற்கு தேவ் தன்னுடைய காதலை மறுத்து விட்டான் என்றளவிற்கு மட்டுமே தெரியும், மற்ற விபரங்கள் தெரியாது.
"தான் ஏனோதானோவென்று
முடிவெடுத்து இந்த ஊரினை விட்டு செல்லவில்லை மிகுந்த மனஅழுத்தத்தினால் தான் அந்த முடிவினை எடுக்க நேர்ந்தது எப்படி இவர்களிடம் கூறுவது?”என்று நினைத்தாள்.முடிந்ததைப் பற்றி நினைத்து பயனில்லை இனி.
ரிஷி மேலும் ,”சாரி ஆராதனா நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடு,ஒரு ஆதங்கத்துல பேசிட்டேன் மா.ஹோப் யூ அண்டர் ஸ்டாண்ட்” எனக்கூறினான்
.இவை அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த வந்தனாவின் மனதில் தோன்றியது ஒன்று மட்டுமே,”காதல் என்பது காமத்தையும், அன்பையும் மட்டுமே சார்ந்ததல்ல, சரியான புரிதலில் மட்டுமே காதல் பெருகி பன்மடங்காகும்”.
தன்னைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்துள்ளான் தன்னவன் என பெருமையாக உணர்ந்தாள் வந்தனா.இதோ வந்தனாவின் இதயம் நழுவி அவனை சரணடைந்தது.மீண்டும் மீண்டும் அவனுடைய காதலில் கர்வப்பட வைக்கிறான்.
இப்போது வந்தனா நன்றாகவே நிதானித்திருந்தாள்.
இல்லையேல் நிச்சியமாக ஆராவை காயப்படுத்தி இருப்பாள், அதனை அறிந்துதான் ரிஷி முந்திக்கொண்டது.
நன்றியுடன் ரிஷியை பார்த்து விட்டு ஆராவின் தோளில் கை வைத்து”ஆரா இங்க பாரு நான் உன் மேல ரொம்ப கோவத்துல இருந்தேன்,அதனால்தான் முதல் ரெண்டு தடவை உன் போன் கால் அட்டென்ட் பண்ணல,ரிஷி என்ன ரொம்ப கன்வின்ஸ் பண்ணி பேச சொன்னார்,எனக்குமே அதுக்கு மேல கோவத்த இழுத்து பிடிக்க முடியல டி,சரி விடு இனி நடக்க போறத மட்டும் பேசுவோம்.கண்டிப்பா சூர்யா நல்ல ஆகிடுவான் டி கவலப்படாதே.சரியா? ம்ம்..,.” எனக்கூறி ஆராதனா வின் தோளினைதிருப்பி அவள் முகத்தினை தன் சுட்டு விரலால் நிமிர்த்தினாள்.அவ்வளவு நேரம் குனிந்திருந்தவள் வந்தனாவின் முகம் பார்த்ததும் உடைந்து போய் அவள் தோள் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள் “ஏய் ஆரா இங்க பாரு டி உன்ன ஹர்ட் பண்ணனும்னு சொல்லல டீ…, ம்ப்ச்….இங்க பாரு டி…. ஆரா ஏய் ஏன் இப்படி அழற சாரி டி ஏய் அழத ஆரா….” எனத் தேற்றினாள் வந்தனா.
ஏற்கனவே நொந்து போய் வந்தவளை அழ வைத்து விட்டோமே என பதறினாள்.”விடு வந்தனா அவ ஆளட்டும் தென் ஷீ வில் பி ஃபீல் பெட்டர்” என்றான்.ஆம் அவள் ரிஷி பேசியதற்கோ,வந்தனா பேசியதற்காக அழவில்லை,இத்தனை நாள் அனுபவித்த வேதனைகள் வெடித்து அழுகையாக சிதறியது எனவே வந்தனாவின் தோள்மீது சாய்ந்து அழுகிறாள்.துன்பத்தில் தோள் கொடுக்கும் நண்பன் இருந்தால் மலையளவு கஷ்டமும் பறந்தோடி விடும் என்பது எத்தனை உண்மை.அதே நிலையில் தான் ஆராதனாவும் இருந்தாள்.
நிச்சயம் ஆராதனாவும் மிகுந்த மனவலிமை உடைய பெண்தான் இல்லையெனில் இத்தனை இழப்புகளையும் தாண்டி சூர்யாவையும் தன் குழந்தையை போல் பேணி வருவது அத்துனை சுலபமல்லவே.
சூர்யாவும் “அம்மூ ,அம்மூ “என நினைவு தெரிந்த நாள் முதல் கூப்பிடுகிறான் அவள்.தாய் முகம் காணாமல் அழுத அவனை சமாளிக்க படாதபாடு பட்டாள் ஆராதனா, எப்படியோ தாயாய் இருந்து அவனைத்
தேற்றிவிட்டாள்.ஆனால் அவள் அதிலிருந்து பெருமூச்சு விடுமுன் அடுத்த சோதனை அவளுக்கு ?..... அதுதான் அடுத்த பேரிடி சூர்யாவின் உடல்நிலை......தளர்ந்தே விட்டாள்.
இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே நோக்கம் சூர்யாவை குணப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே….ரிஷி சூர்யாவினுடைய ரிப்போர்டுகளை எடுத்துக் கொண்டு தங்களது அறைக்குள் நுழைந்தான்.
தேவ் சொன்னது போலவே மாலை வீட்டிற்கு வந்து விட்டான்.தன்னை சுத்தப்படுத்தி கொண்டு நேராக உணவு உண்ண அமர்ந்தான்.அவனது எண்ணம் முழுவதும் மறுநாள் இரவு கொல்கத்தா கிளம்புவதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
அவனது தாய் “ஏன்பா ரொம்ப களைப்பா தெரியுறயே இப்படி நேரம் காலம் பார்க்காமல் உழைக்கனுமா? நம்ம தான் புதுசா ஹாஸ்பிட்டல் திறந்துட்டோமே இத மட்டும் பாத்தா பத்தாதா ரிஷியோட ஹாஸ்பிட்டல்லயும் வேல செய்யனுமா?” என்றார்.ஏனென்றால் மகனைப்பார்ப்பதே நாளுக்கு நாள் அரிதாகிக் கொண்டே போகிறது என்ற ஆதங்கம்.அவன் தனது சொந்த மருத்துவமனையை திறந்து ஓன்றரை வருடங்கள் தான் ஆகிறது.குழந்தைகளுக்கான இருதய சிகிச்சைகான உலகத்தரம் வாய்ந்த சிறப்பு மருத்துவமனை.
சட்டென தேவ் நிமிர்ந்து பார்த்தான்.
”இல்லபா அது “ என்று தொடங்கிய வரை கையமர்த்தி, “எல்லாம் தெரிஞ்சு நீங்க இப்படி பேசலாமா? டாக்டர் தொழில்ல நேரம் காலம் பாக்க முடியாது மா ….. அதுவும் நான் இருக்குற பிரிவுல எந்நேரமும் விழிப்போடு இருக்கனும்.அஞ்சு நிமிஷத்துல எது வேணா நடக்கலாம்.
அதுவுமில்லாம ரிஷியோட ஹாஸ்பிட்டல்லோ நம்ம ஹாஸ்பிட்டல்லோ உயிர காப்பாத்துறது நம்ம கடமை மா,இனிமே திரும்ப இத பத்தி பேசாதீங்க ப்ளீஸ்” என முடித்து விட்டான்.
“ லதா கொஞ்சம் இரு அவன் சாப்பிட்டும் அப்புறமா பேசலாம் “ என்றார் பிரசாத்.
அவனுக்கா புரிந்து விட்டது தந்தை ஏதோ பேசப்போகிறார் என்று.சலிப்புடன் சாப்பிட்டு விட்டு தன் அறைக்குச் சென்று மறுநாள் கிளம்புவதற்கு வேண்டிய துணிகளை அடுக்கு துவங்கி விட்டான்.சிறிது நேரத்தில் பிரசாத்தும் லதாவும் அவனறைக்கு வந்தார்கள்.. சுத்தமாகவும் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் அவனது அறை.
”எங்கப்பா கிளம்புற?” என்றார் பிரசாத்.
”கொல்கத்தா டாக்டர்ஸ் கான்பெரன்ஸ்ன்னு போன வாரம் சொன்னேனே…..
மறந்துட்டிங்களா? என்றான்.
“ ம்க்கும், கிளம்பனும்ன்னு சொன்ன டேட் சொல்லையே” என்றார் பிரசாத். மனதுள் , “ அய்யோ ஆண்டவா இவனுக்கு கொஞ்சம் நல்ல புத்திய கொடு ,இவன்ட்ட பேச முடியல” என அவசர வேண்டுதல் ஒன்றை வைத்தார். “
" சரி, சொல்ல வந்ததை சொல்லுங்க பா சீக்கிரம் “ என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். பிரசாத் என்னென்னவோ பேச நினைத்து வந்தார் , ஆனால் அவனோ நேரடியாக தாக்கினான். “அட…கொஞ்சம் இருடா” என வடிவேல் பாணியில் நினைத்து கொண்டு “இப்ப இவன்ட்ட எப்படி ஆரம்பிப்பது?” என விழித்தார். “ம்ம் , சொல்லுங்க பா என்ன விஷயம்?” என்றான்.பாவம் பிரசாத் முழித்து கொண்டு இருப்பதை பார்த்த லதா மனதுள், “என்னவோ என்கிட்ட ஜம்பமா என்னென்னவோ சொன்னாரு இங்க வந்து இந்த முழி முழிக்குறாரு”என நொடித்துக் கொண்டு இனி விட்டால் இவனை பிடிப்பது கடினம் என்றென்னி லதாவே பேச்சை ஆரம்பித்தார்.
“ மணிகண்டன் மாமா அவரோட ரெண்டாவது பொண்ணு லயவர்ஷினிய உனக்கு கேக்குறாங்க பா.இனிமேலும் உன் கல்யாணத்தை தள்ளி போடாதே.நாளைக்கே நான் ஜாதகம் பாத்துட்டு வர்றன் பொருந்தியிருந்தா அடுத்து நடக்க வேண்டியது பாக்கலாம்.இத மீறனும்ன்னு நினைக்காதே , நான் உன்கிட்ட யாசகமா கேட்கிறேன் பா ……. மறுத்து சொல்லத...
இதுவரைக்கும் உனக்கு பிடிச்ச மாதிரி இருந்துட்ட உன்ன எந்த விஷயத்திற்கும் நாங்களே கட்டாயப்படுத்தல ,ஆனா இந்த தடவை நாங்க சொல்லறத நீ மறுக்காம செய்யனும் ப்ளீஸ்.” என கை எடுத்து கும்பிட்டு விட்டு அவனது பதிலை எதிர்பாராமல் விறு விறு வென கல்லு மாதிரி நிற்கும் தன் கணவரின் கை பிடித்து அழைத்துச்சென்றார். மேலும் அங்கிருந்தால் காரியம் கெட்டுவிடும் என மகனது முகத்தை கூட பார்க்காமல் வைத்தியனுக்கே அதிர்ச்சி வைத்தியமளித்து அவனது அறையை விட்டு வெளியேறினார். சிறிது நேரம் என்ன பேசினார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்புடன் நின்றிருந்தான்.யோசனையுடனே சரி வந்து பேசிக்கொள்ளலாம் என துணிகளை அடுக்கி வைத்தான்
.இங்கு வெளியேறிய பிராசாத்தோ தன் மனைவியை “அட! இது நம்ம லிஸ்டுலயே இல்லயே “என அதிசயித்து பார்த்திருந்தார். இதை முன்னமே செய்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் மேலோங்கியது.
மனைவியை பார்த்தவாறே நடந்து வந்தவர் “நீ வேற மாறி…..லதூ” எனக்கூறி தோளோடு அணைத்தவர்,மனைவியின் முனறப்பில் கையை எடுத்து விட்டு, “ஹீ… ஹீ அது ஒன்னுமில்ல மா….. தீடீருன்னு அவன் கேட்டதும் நான் பேச நினைச்சதெல்லாம் மறந்து போச்சு அதான்…. ம்ம்..வேற ஒன்னுமில்ல…” எனக்கூறி அசடு வழிந்தார்.”உன்னை நான் அறிவேன் “ என்பது போல பார்த்தார் லதா.இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இன்னும் அசிங்கப்பட நேரிடும் என இடத்தை அவசரமாக காலி செய்தார் பிரசாத்.லதா ஒரு பெருமூச்சுடன் உறங்கச் சென்றார்.
தேவ் ஆச்சார்யா என்ன செய்ய காத்திருக்கிறானோ
அத்தியாயம் 6:
அறையில் தன் கையில் இருந்த சூர்யாவின் ரிப்போர்டினை பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி.
பின்னர் எல்லாவற்றையும் ஸ்கேன் செய்து தனது லேப்டாப்பில் சேமித்து வைத்தான்.ஒரளவு அவனால் சூர்யாவின் உடல்நிலை குறித்து புரிந்து கொள்ள முடிந்தது.இப்போது தேவ்விற்கு அனுப்ப விரும்பவில்லை ,அவன் தனது கான்பெரன்ஸை முடித்து கொண்டு வரட்டும் பின்னர் சற்று நிதானமாக அவனிடம் பேசிக்கொள்ளலாம் என நினைத்தான்.
ஏதோ யோசனையுடன் பால்கனியில் நின்று நிலவினைப் பார்த்துக் கொண்டே இருந்தான். .நெடுநெடுவென அசாத்திய உயரத்துடன் நின்றிருந்தவன் முதுகினை இரு மென்னையான கரங்கள் பின்னிருந்து அணைத்தன, சின்ன சிரிப்புடன் மெல்லிய கரங்களுக்கு சொந்தக்காரியை தன் பின்னோடு இன்னும் கொஞ்சம் சேர்த்தணைத்து தன் இருகைகளோடு அவளின் கைகளை இறுகப்பற்றி ,”என்ன மேடம்?என்ன தீடிர்ன்னு நீங்களே வந்து ஹக் பண்ணுறீங்க……ம்ம் …என்ன விஷயம்?? “ எனத் திரும்பி பாராமலே அவளின் கைகளையும் அவளையும் இறுக அணைத்துக் கொண்டே கேட்டான் ரிஷி.
“ம்ம், ரொம்பவே பயம்,கொஞ்சமா லவ்” என்றாள் குரலில் சிறு நடுக்கத்தோடு. அவன் திரும்பி நின்று அவளை புரியாத பார்வை பார்க்க . அவளே தொடர்ந்தாள்
” சூர்யாக்கு பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல தானே.... நீங்க ரிப்போர்ட்ஸெல்லாம் பாத்தீங்களா? என்ன ப்ராப்ளம் ன்னு போட்டுருக்காங்க?சர்ஜரி அவசியம் பண்ணனுமா? இல்ல சர்ஜரி இல்லாமலே சரி பண்ணலாமா....? என்னன்னு சொல்லுங்க பா...? ஓகே ஆயிடுவான்தானே?” என தொடர்ந்து கேள்விக்கணைகளால் அவனைத் துளைத்தெடுத்தாள்.
“இரு இரு !.. இங்க பாரு….. டென்ஷன் ஆகாதே…ஜஸ்ட் ரிலாக்ஸ். பெருசா பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன் பட் டெபனட்லி ஹீ நீட்ஸ் சர்ஜரி.நீயும் அவனோட ரிப்போர்ட்ட படிச்சு பாரு.எதுக்கும் தேவ் வந்த உடனேநேர்ல பாத்து திரும்ப சில டெஸ்ட் எடுத்து பாத்துடலாம்.யூ டோன்ட் வொர்ரி,இந்தா அவனோட ரிப்போர்ட்ஸ்” என அவளிடம் கொடுத்தான். அவளும் அவனுமாக சிறிது நேரம் சூர்யாவின் உடல்நிலை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர்.
தீடிரென”ஆமா.. அதென்ன… சொன்ன அப்ப... ரொம்ப பயமா இருக்கு.... கொஞ்சம்தான் லவ் இருக்குன்னு…?” என்றான் ரிஷி அவள் தோள் அணைத்து. அவ்ளோ அவனை நிமிர்ந்து பார்த்தவாறே “ஆமா சூர்யாவ நினைச்சா ரொம்ப பயமா இருக்கு ,பாவம் சின்ன பையன் அவனுக்கு இவ்வளோ கஷ்டம்…..”என வருந்தினாள்.பின் சற்று நிமிர்ந்து அவனை காதலாகப் பார்த்தவாறே” தேங்க்ஸ் ரிஷி..நிஜமா எனக்கு ஆராதனா மேல
ரொம்ப கோவம் வந்துடுச்சு, நல்லவேள நான் பேச வேண்டியதயெல்லாம் நீங்களே பேசிட்டீங்க, கண்டிப்பா நீங்க பேசினதுக்கு ஃபீல் பண்ணிருக்கமாட்டா ஆரா,அதுவே நான் பேசியிருந்தேன்னா அவள ரொம்பவே கஷ்டபடுத்தியிருப்பேன். என்ன ரொம்பவே நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க , சந்தோஷமா இருக்கு “ என நெகழ்வுடன் பேசி அவனின் முன் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டு விலகினாள்.
“ உன்ன நல்லா புரிஞ்சு மட்டும் இல்ல நல்லவே தெரிஞ்சும் வச்சுருக்கேன் மேடம் “ என குறும்புடன் கூறினான். முகம் சிவந்தவாறே அவனது முதுகில் அடியைப் போட்டு ,போங்க போய் பாப்பாவ தூக்கிட்டு வாங்க தூங்கியிருப்பா பா, விஜயாம்மாவும்
தூங்கனும் பாவம் “ என்றாள்..அவனும் பாவனாவை தூக்கி வரச் சென்றான்.
இங்கே உறக்கம் வராமல் சூர்யாவை மடியில் போட்டு தூங்க வைத்திருந்தாள் ஆராதனா.அவளின் மனதில் பல போராட்டங்கள்.மீண்டும் மீண்டும் அவனிடமே கொண்டு வந்து நிறுத்துகிறதே விதி என மனம் கசந்தாள்.
ஆனால் அவளுக்கு சூர்யாவின் பிரச்சினையின் தீவிரம் வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விட வில்லை. சூர்யாவை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொண்டாள்.பெற்றால்தான் பிள்ளையா?... பெறாமலே சூர்யாவிற்கு அனைத்தும் ஆகிப்போனாள்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சூர்யாவின் உடல்நிலை சீரானவுடன் டெல்லி சென்று விட வேண்டும் என நினைத்தாள்.நாம் நினைப்பது அனைத்தும் உடனே நடந்து விடுமா என்ன…..
நாட்கள் சென்றன . கொல்கத்தா கான்பெரன்ஸை முடித்து ஊர் திரும்பினான் தேவ். வந்தவுடன் தன் மருத்துவமனைக்கு சென்று புதிதாக குழந்தைகள் யாரேனும் அனுமதிக்கபட்டுள்ளனரா?, இன்னும் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் உடல் முன்னேற்றத்தை பார்த்து விட்டு நேராக ரிஷியின் மருத்துவமனைக்குச் சென்றான்.செல்லும்போதே ரிஷிக்கு அழைத்து தான் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தான்.ரிஷியும்இன்றே சூர்யாவின் சிகிச்சைப் பற்றி பேசி விடுவது நல்லது என்று நினைத்து,சூர்யாவின் ரிப்போர்ட் அடங்கிய ஃபைலை எடுத்துக் கொண்டு
அவனை காணச் சென்றான்.
பரஸ்பர விசாரிப்புக்குப் பின், ரிஷி தன் கையில் இருந்த ஃபைலை அவனிடம் தந்து,”இது நமக்கு தெரிஞ்ச பையனோட ரிப்போர்ட்ஸ் டா,பார்த்துட்டு என்ன பண்ணலாம் ன்னு சொல்லு டா….ரிஸக் ஒண்ணும் இல்லல டா” எனக் கேட்டான். அவனுக்குமே சற்று கவலையால் தான் இருந்தது ஏனெனில் சூர்யாவின் அறுவை சிகிச்சைக்கான முறைகள் இரண்டு மூன்று முறைகள் இருக்கின்றன, அதில் குழந்தையின் உடலை அதிகம் வாட்டாமல் செய்யக்கூடிய முறைகளை பற்றி அறிய விரும்பினான், அதை தேவ்வின் வாய்வழி கேட்க வேண்டி இருந்தது அவனுக்கு.
அதுமட்டுமல்ல அவன் தேவ்வினுடைய மனநிலையையும் வேண்டியிருந்தது.ஒரு வேளை இன்னமும் ஆராதனாவின் மேல் ஒருவித வெறுப்பு ஏதேனும் உள்ளதா? மேலும் ஏதேனும் சொல்லி அவளை காயப்படுத்திவிடுனோ என சிறிது தடுமாற்றம் இருந்தது, ஆனாலும் தொழில் என்று வந்த பிறகு அவ்வாறு செய்ய மாட்டான் என முழு நம்பிக்கையும் இருந்தது.
தேவ்வோ கையிலிருந்த ரிப்போர்ட்டுகளை பார்த்தவாறே “இது உனக்கு தெரிஞ்வங்களோடதா? இல்ல நமக்கு தெரிஞ்சவங்களோடதா?” என அவனிடம் திரும்பக் கேட்டான்.
ரிஷியோ மனதில் ,
"ம்ம்ச் ,என்னிக்குமே... நாம கேக்கறதுக்கு பதில் சொல்லவே மாட்டான் லூசு பய,அவனா ஒன்னு கேட்பான்….. அதுக்கு நாமதான் பதில் சொல்லனும்…..கொடுமடா சாமி” என மனதில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்.
"போதும்.. போதும் ....என்ன திட்டுனது கேட்டதுக்கு பதில சொல்லுடா” என்றான்.
ரிஷியோ இவனை ஆழம் பார்க்க நினைத்தது தனது தவறுதான் என நினைத்து வீட்டில் நடந்தவைகளை அனைத்தும் கூறி முடித்தான். அனைத்தும் கேட்ட தேவ் அசைவின்றி கல்லுப் பிள்ளையார் போல் அமர்ந்திருந்தான்.
அவனுடைய முகத்திலிருந்து ஒன்றும் ஊகிக்க முடியவில்லை ரிஷியால்.”டேய் ஏதாவது சொல்லு டா” எனஅவனுடைய தோள் தொட்டான் ரிஷி.சட்டென திரும்பி எழுந்து நின்று “என்னோட ஹாஸ்பிடல்ல வந்து நாளைக்கு சாயங்காலம் பாக்க சொல்லு,சில டெஸ்ட் எடுத்து பாத்துட்டு என்ன புரோசீஜர்ன்னு சொல்றேன் “ என வெறுமையாக அவனிடம் சொல்லி விட்டு வெளியே சென்றான்.
ரிஷி தான் “இவன் என்ன மனநிலையில் இருக்கான்னு தெரியலயே….. ம்ம் …சரி பாத்துப்போம்” என வந்தனாவை அழைத்து ஆராதனாவிடம் விஷயத்தை கூறுமாறு சொன்னான்.. அவளும் ஆராதனாவை அழைத்து,” நாளைக்கு சாயங்காலம் தேவ்வோட ஹாஸ்பிட்டல்ல அவரைப் போய் பாரு ஆரா…எனக்கு கேஸ் இருக்கு இல்லன்னா நான் வந்துடுவேன் “ என்றாள்.
” பரவாயில்ல டி, நீ உன் வேலையைப் பாரு நான் போயிக்குறேன் ஒரு பிரச்சனையும் இல்லை “ என்றாள்.
இங்கு தேவ்வினுடைய வீட்டில் அவனது தாய் லதா ஜாதகம் பார்த்து விட்டு வந்திருந்தார்.
ஜோதிடர் ஜாதகம் நன்றாக பொருந்தியிருப்பதாகக் கூறியிருந்தார் ,எனவே மகனிடம் பேசுவதற்கு அவனது அறைக்குள் வந்தார்.
தேவ் அவரைப் பார்த்து, ”சொல்லுங்க மா” என்றான்.அவரோ, மனதில் என்ன ஆனாலும் சரி அவன் போக்கில் இனி விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
எனவே அவர், ”இன்னிக்கு போய் உனக்கும் வர்ஷினிக்கும் பொருத்தம் பார்த்தோம், எல்லாம் நல்லபடியா அமஞ்சிருக்கு பா அவங்க கிட்டயும் சொல்லியாச்சு கூடிய சீக்கிரம் நிச்சயம் பண்ணிட்டு கல்யாணம் தேதி குறிச்சிடுலாம்ன்னு சொல்லிடாங்க பா.., அந்த பொண்ணு நாளை கழிச்சு வியாபார விஷயமா வெளிநாடு போறாளாம்.. அதனால போக முன்னாடி உன்கிட்ட பேசணும்னு சொன்னா நாளைக்கு வந்து உன்ன பாக்கிறேன்னு சொல்லிருக்கா...நம்ம ஹாஸ்பிட்டல்கே மத்தியானம் உன்ன வந்து பாருன்னு சொல்லிருக்கேன்.நீயும் அவ வரும்போது அங்கயே இரு சரியா?” என மடமடவென பேசிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டார்.
”அம்மா….. ம்மா……” என அவன் கத்தியது காதில் வாங்காமல் சென்று விட்டார்.அவனை பேசவே விடக்கூடாது என்ற முடிவில் இருந்தார்.தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் தேவ்.தாயின் புதிய அவதாரம் அவனை சற்றே மிரட்டியது.ஏதோ யோசனையுடன் அப்படியே அமர்ந்திருந்தான். “நாளைக்கு மதியம் தானே பாத்துக்கலாம் “ என்று விட்டுவிட்டான்.
மறுநாள் மாலை இருவரும் கிளம்பி இருந்தனர்.ரிஷிக்கு முக்கிய வேலை இருந்ததால் அவனாலும் ஆராவுடன் செல்லமுடியாத சூழ்நிலை ....
ஆராதனாவிற்கோ
சூர்யாவின் சிகிச்சை ஒருபுறம், சில வருடங்களுக்கு பிறகு
தேவ்வுடனான சந்திப்பு.. என கலக்கமான மனநிலையில் இருந்தாள்.
”எவ்வளவோ சமாளித்தாகிவிட்டது இதையும் எதிர்கொள்ளுவோம்” என்று தன்னை நிதானித்து கொண்டு சூர்யாவுடன் கிளம்பினாள் அவனது மருத்துவமனையை நோக்கி……
தேவ் காலையில் இருந்தே ஒரே பரபரப்பாக இருந்தான்..ஒன்று அவனது பணிச்சுமை, இரண்டாவது ஆராதனா…நெடுநாளைக்குப்பின் அவளை நேருக்கு நேர் காணப்போகிறான்.
ஏனென்றே தெரியாத ஒரு தயக்கம் அவனிடம்.
இதனிடையில் அவனது தாய் கூறியிருந்த லயவர்ஷினியை பற்றி மறந்தே போனான்....மதியம் வரவேண்டியவள் ஏதோ தாமதத்தால் வர இயலவில்லை என்று தேவ்வின் தாயாரிடம் கூறி மாலை அவனை சந்திக்க வருவதாக கூறியிருந்தாள்.பாவம் அவன் அன்னை அவனுடைய அலைபேசிக்கு அடித்து அடித்து ஒய்ந்து போனார்.அவனோ அதிக வேலையினால் அலைபேசியை சைலண்ட் மோடிலிருந்து எடுக்க மறந்து விட்டான் .அன்று புதன் கிழமை என்பதால் அவன் அன்று முழுவதும் அங்குதான் இருப்பான் என்று நினைத்தவர் மேலும் அவனை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டார்.
ஆராதனா கீழ்தளத்தில் உள்ள வரவேற்பறையில் எல்லாப் படிமங்களையும் சரி பார்த்து பதிந்து விட்டு அவனது அறையின் முன்பு இரண்டாவதாக அமர்ந்திருந்தாள்.
சூர்யாவோ,”அம்மூ எனக்கு சீக்கிரம்
உடம்பு சரியாகனும் அப்பதா ஒடி விளையாட முடியும்.சீக்கிரம் சரியாகும் ல?” எனக்கேட்டான்.
அவளுக்கு தொண்டை அடைத்தது கண்ணீர் வேறு குளம் கட்டியது அதனை சமாளித்துக்கொண்டே
” சீக்கிரம் சூர்யா குட்டி
சரியாகிடுவிங்க நம்ம ஐஸ் பால்,கோ கோ எல்லாம்
விளையாடலாம் சரியா தங்கம்?” என்றாள்.ஏனோ மனம் முழுவதும் ஏதோ பாரம் அழுத்தியது.அவளது முறை வந்ததும் எழுந்து உள்ளே சென்றவள் சற்று தொலைவிலே நின்று அவனைப்பார்த்தாள்.
இன்று முன்பை விட சற்று அதிகமான கம்பீர தோற்றத்துடன் அலையலையான கேசத்துடன் , முகத்தில் மிகவும் நிதானத்துடன் இருந்தான்.
அவனும் அவளைதான் விழியகற்றாமல் பார்த்து கொண்டிருந்தான்.
அவளுக்கோ தனது கால்களை உள்ளே எடுத்து வைக்கவே கடினமாக இருந்தது. ஆனாலும் கனத்த இதயத்துடன் உள்ளே சென்றாள்.
பல நாள் பட்டினியாக கிடந்தவனுக்கு அமிர்தமே தந்தது போல் பரவசம் நிலவியது அவனது மனதில்.கை கால்கள் எல்லாம் ஜிவ்வென்று உணர்வு தாக்கியது.இதயதுடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.ஆனால் முகத்தில எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தான்.
என்ன டிசைனோ இவன் என்று எண்ணுமளவுக்கு உணர்வை துடைத்த முகத்துடன் “ வாங்க மிஸ் ஆராதனா, பிளீஸ் பி ஸீடட், ஹலோ மிஸ்டர் சூர்யா எப்படி இருக்க ?” என்றான் .
”நல்லா இருக்கேன் டாக்டர் ஆங்கிள்” என்றான்.
” டாக்டர் ன்னு கூப்பிடு போதும் ரைட் “ என்றான்.
“ சரி டாக்டர்” என்றான்.
ஒரு நிமிடம் என்றாலும் அவனது கண்கள் ஆராதனாவை லேசராக ஊடுருவியது .முன்பை விட சற்றே இளைத்திருந்தாள்,
முகத்தில் இருந்த குறும்பு மறைந்து கண்களில் வெறுமை குடியிருந்தது. இன்னதென்று வேறருத்து கூறமுடியாத ஒன்று அவளிடம் இல்லை, அதுதான் ஒரு காலத்தில் அவளிடம் அவன் கண்ட காதலோ?.....,ஒரே ஒரு நிமிடம் அதனை தேடினான், ம்ம்ஹூம்…… ஒரு சதவிகிதம் கூட காண முடியவில்லை அவனால்.சட்டென மனம் துவண்டது அவளது அந்நியப் பார்வையில் . இவ்வளவு துன்பத்திலும் பழைய நிமிர்வு மட்டுமே அவளிடம் இருந்தது.
அவனே ஆரம்பித்தான்,
” ரிப்போர்ட்ஸெல்லாம் பாத்தேன் நந்திங் டு வொர்ரி சில டெஸ்ட் மட்டும் திரும்பவும் எடுத்து பாத்துக்கலாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை.சர்ஜரிக்கு முன்னே சில டிரீட்மென்ட் எடுக்கனும்... , அப்பறமா டேட் பிக்ஸ் பண்ணிக்கலாம்”
என்றபடி சூர்யாவின் நாடித்துடிப்பு மற்றும் இதய துடிப்பை பரிசோதனை செய்தான்.
அவளும் அவன் சொல்லவதற்கெல்லாம் “சரி டாக்டர்,சரி டாக்டர் “ என்று மட்டுமே பதில் கூறினாள்.
சிறிது நேரத்திற்கு பின் “ டிரீட்மெண்ட் அண்ட் சர்ஜரிக்கு எவ்வளவு செலவாகும் டாக்டர் “ என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள். அவளையே ஆழ்ந்து பார்த்தான் சில நொடிகள், ஏனென்று தெரியாமலே அவளையே பார்த்து கொண்டிருந்தான்.அவளுக்கு தான் அவனது பார்வை புரியவில்லை,”ஏன் இப்படி பாக்குறாப்பல” என மனதில் நினைத்தாள்.
திரும்பவும் “ டாக்டர்... “ என சற்று சத்தமாகவே அழைத்தாள்.
அவன் அவளில் இருந்து விழியை அகற்றிவிட்டு சற்று சுதாரித்தான் பின்பு "சொல்லுவாங்க.. “ என்று கத்தரித்து பேசினான்.
” இல்ல டாக்டர் .....“ என ஆரம்பிக்கும் முன் அவன் அவளை பார்த்த வேகத்தில் வாய் தானாகவே மூடிக் கொண்டது.
“இரண்டு மூணு நாள்ல டிரீட்மெண்ட் ஆர்ம்பிச்சிடுலாம்” என்றான்.
” சரி டாக்டர் “எனறாள்".
” திங்க கிழமை அழைச்சுட்டு வா….ம்ம் ….வாங்க” என்றான்.
அவனது திருத்தத்தையும் அவள் கவனித்தாள் ஆனால் ஒன்றும் கூறவில்லை. “ “தாங்க் யூ…சார்” எனக்கூறி சூர்யாவுடன் எழுந்தாள் .
அவள் திரும்பி செல்லும் முன் அவன் தீடிரென, “ஆராதனா “ என்றான் ஒர் அழுத்தமான குரலில், திரும்பி நின்று என்னவென்று பார்த்தாள் அவனை.
“உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா? “ என்றான்.
அவளோ "அதர்தென் பர்சனல்” என இடைவெட்டிக் கூறினாள்.
அவளது முன் யோசனையைப் பார்த்து அவனுக்கு லேசாக சிரிப்பு வந்தது, ஆனாலும் சிரிக்காமல்,
” இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல?” என்றான்.
அவளுக்கோ ஆத்திரம் அதைக் காட்டாமல் வேகமாக திரும்பும்போது தாதிப் பெண் மீது இடித்ததில் ஃபைலில் உள்ள ரிப்போர்ட்கள்
அனைத்தும் கீழே விழுந்தது அவளை தாதிப் பெண்ணிடம் ,
” சாரி” எனக்கூறி குனிந்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
தாதிப் பெண்ணோ தேவ் விடம்,” சார் லயவர்ஷின்னு” உங்கள் பாக்கனும்னு சொல்றாங்க. ஆனா..அப்படி யாருக்கும் நம்ம அப்பாயின்மெண்ட் கொடுக்கலயே டாக்டர்?....” என்றாள்.
அப்போதுதான் அவனுக்கு நியாபகமே வந்தது, “ மதியம் தானே வருவான்னு சொன்னாங்க….இவங்கள….” எனப் பல்லைக் கடித்தவாறே அன்னைக்கு அழைக்க அலைபேசியை எடுத்து பார்த்தான்.பத்து முறைக்கு மேல் அழைப்பு வந்திருந்தது அவனது அன்னையிடமிருந்து.
“கடவுளே…..” என சலிப்புடன், "வரச்சொல்லுங்க” என்றான்.
ஆராதனாவோ வெளியே செல்லும் முன் திரும்பவும் ,”நா கேட்டதுக்கு பதில் இன்னும் நீ சொல்லல” என்றான்.அவளோ,
” கூடிய சீக்கிரம் கண்டிப்பா பண்ணிப்பேன் சார்” எனக் கூறி சூர்யாவுடன் வெளியேறினாள்..
அவனது மனம் ஏனோ சுருங்கித் தவித்தது.மனசாட்சியோ,” அவகிட்ட இந்த கேள்வியை நீ கேக்ககாமலே இருந்திருக்கலாம்” என்றது . சாய்வாக நாற்காலியில் அமர்ந்தவாறே அவள் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தான் தேவ்...
அத்தியாயம்:7
ஆராதனா சூர்யாவுடன் பேசி யபடி வெளியேறும் நேரம் செதுக்கி வைத்த சிற்பம் போலே உள்ளே வந்தாள் லயவர்ஷினி.
ஆளை அசரடிக்கும் பேரழகியாக இருந்தாள்.
மணிகண்டன் அவளுக்கு தேவ்வின் புகைப்படத்தை காட்டியவுடன் உடனே அவளுக்கு அவனைப் பிடித்து விட்டது.தான் நினைப்பது மட்டுமே நடக்க வேண்டும் என எண்ணுபவள் வர்ஷினி.எதிராளியை தன் ஒற்றை விழியசைவிலேயே தள்ளி நிறுத்தி விடுவாள்.
தைரியத்துடன் திமிரும் சற்று அதிகமாகவே இருப்பதால்தான் தந்தையின் தொழிலை மேன்மேலும் சிறப்படையச் செய்து வெற்றியை மட்டுமே சுவைத்து வருகிறாள்.
உள்ளே நுழைந்ததும், ”ஹலோ தேவ்! எப்படி இருக்கீங்க? ஐ ம் லயவர்ஷினி, நீங்க லயா…வர்ஷினி…..வரூ….ன்னு எப்படி வேணாலும் கூப்பிடலாம் “என பட பட வென பேசிக்கொண்டே வந்தாள்.
”முதல்ல... உக்காருங்க லயவர்ஷினி” என்று மட்டுமே கூறினான் தேவ்.
“ எஸ் …..தேங்க் யூ_” என்றபடி ஒயிலாக நாற்காலியில் அமர்ந்தாள்.சில வினாடிகள் தேவ்வை கூர்ந்து பார்த்து விட்டு அவளே பேச ஆரம்பித்தாள், “ அப்பா உங்க போட்டோவ காட்டினப்பவே உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.நீங்க ரொம்ப பேச மாட்டீங்க ன்னு நினைக்கிறேன். பரவாயில்ல… உங்களுக்கும் சேத்து நானே பேசிக்கிறேன்.போட்டோவ விட நேர்ல ரொம்பவே ஸ்மார்டா இருக்கீங்க….என்னடா இவ இப்படி பேசறாளேன்னு…. என்ன மாதிரியான பொண்ணு ன்னு நினைப்பீங்க பட் என் விஷயத்துல நான்தான் பேசியாகனும்…அடுத்தவங்கள டிபண்ட் பண்ணியிருக்க மாட்டேன். ஓப்பனா... எதாயிருந்தாலும் பேசிடுவேன் , தென் கோவமும், திமிரும் அதிகம் ன்னு சொல்லுவாங்க எனக்கு.அதுகூட நியாயமானதா தான் இருக்கும்.தப்பு செஞ்சா கை நீட்டிடுவேன்…யாருக்காகவும் என்ன மாத்திக்கமாட்டேன்.என்கிட்டதப்பு இருந்தா மன்னிப்பு உடனே கேட்டுடவேன்.. அப்பறம்....லவ் மேல பெருசா நம்பிக்கை இல்லை… அதுனால இது வரைக்கும் யார் மேலயும் வரல.பட் உங்கள பிடிச்சிருக்கு லவ் இருக்கான்னு கேட்டா தெரில.நான் உங்கள் கல்யாணம் பண்ணினா லைஃப் நல்லா இருக்கும்ன்னு தோணுது…ம்ம்…நீங்க என்ன நினைக்கிறீங்க …”. என மேலும் சொல்லும் முன் ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தார்கள் இருவரும் சூர்யாவும், ஆராதனாவும் நின்றிருந்தார்கள்.
சூர்யா தேவ்விடம் ஓட முயற்சிப்பது தெரிந்தது , அவள் அழுத்தமாக சூர்யாவின் கையைப் பற்றியிருந்தாள். “ சாரி சார், சூர்யாக்கு எப்பவும் ஒரு பழக்கம் டாக்டர்ஸ் ஊசி போடும்போது வலிக்காமல் ஊசி போடனும்னு அவங்களுக்கு சாக்லேட் கொடுப்பான். அவன் உங்களுக்கு கொடுக்க மறந்ததுனால உங்ககிட்ட பர்மிஷன் கேக்காம உள்ள வந்துட்டான்.மன்னிச்சுக்கோங்க “ என்றாள்.
பின் “ சூர்யா…. போய் டாக்டர்க்கு கொடுத்துட்டு சீக்கிரம் வா போலாம்.அவங்கள டிஸ்டர்ப் பண்ணக்கூடாது… “ என இரு பொருள்படும் படி கூறியதன் மூலமாகவே அவள் வர்ஷினி பேசியதை கேட்டு விட்டாள் என கண்டுகொண்டான்.
பின் ஆராவை பார்த்து ”எங்களுக்கு ஒரு டிஸடர்பன்ஸும் இல்ல…” என அழுத்திக்கூறிவிட்டு, சூர்யாவின் புறம் திரும்பி அருகில் வருமாறு அழைத்தான்.சூர்யா அவனிடம் நெருங்கி வந்து தான் கையில் வைத்திருந்த பெரிய மில்கி பார் சாக்லேட்டை அவனிடம் கொடுத்தான்.
அதை வாங்கிய பிறகு “தேங்க் யூ லிட்டில் சார்ம்… “ என்றுறைத்து விட்டு சாக்லேட்டை கையில் சுற்றியபடி ஆராதனாவை நக்கலாக ஒரு பார்வை பார்த்தான்.அவளுக்கு ஒன்றும் புரியவில்லை “ஏன் இப்படி என்னைய ஏலியன பார்க்குற மாதிரியே பாக்குறாரு?…….” என நினைத்தாள்.
ஆனால் அவளை அறியாமலே சூர்யா சாக்லேட் வேண்டும் என கூறிய போது தேவ்வுக்கு பிடித்த மில்கி பாரை வாங்கி சூர்யாவிடம் கொடுத்திருந்தாள்.
அவளுக்குதான் பாவம் தன்னிச்சையாக தான் செய்த செயல் புரியவில்லை. அவனை முறைத்தவாறே “ சாரி மேடம் “ என்று வர்ஷினியிடம் உரைத்து விட்டு விடுவிடுவென வெளியேறினாள்.
சின்ன சிரிப்பு ஒன்று தேவ்வின் முகத்தில் தோன்றியது.
“சாரி, வர்ஷினி நீங்க என்ன கேட்டீங்க ?..“ என்றான்.
வர்ஷினி சிரித்தபடி ,
“ நீங்க இந்த கல்யாணத்த பத்தி என்ன நினைக்குறீங்க? “ என்றாள்.
அவனுக்கு என்ன முடிவு செய்வது என் சிறிது குழப்பமாக இருந்தது. சில நொடிகள் கழித்து.
“ எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றான்.
“ ஏன் யாரையும் விரும்புறீங்களா ?” என்றாள்.
“ ப்ளீஸ் … ஐ நீட் சம் டைம்" எனக் கூறினான்.
“ ஓகே…. நான் இந்த பிசினஸ் டிரிப் முடிஞ்சு வரும்போது உங்க முடிவ சொல்லுங்க ,பை “ என்று கூறி சென்று விட்டாள்.
அவனுக்குதான் ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைமோதியது.
வாழ்வில் முதல் முறையாக என்ன முடிவெடுப்பது என்பதறியாமல் தடுமாற்றம் வந்தது. தன்னை அறியாமல் கடந்த கால நிகழ்வுகளுக்கு சென்றது அவன் மனம்.அங்கு ஆராதனாவும் அதையே நினைத்து கொண்டிருந்தாள்.
ஆறு வருடங்களுக்கு முன்…
அழகிய பன்னீர்புஷ்ப மரங்கள் இதமான மணம் தரும் பன்னீர் பூக்களை சாலையின் இருபுறமும் தூவி அந்த மருத்துவ கல்லூரி வளாகத்தினை அழகுபடுத்திக்கொண்டிருந்தது.அது ரிஷியின் தந்தையினுடைய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் தான்.
”வேதா மெடிக்கல் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் டெவலப்மெண்ட் “ என ஒரு புறம் மருத்துவக் அகல்லூரியும், “வேதா ஹாஸ்பிட்டல்ஸ்” என பல்நோக்கு மருத்துவமனை மறுபுறமும் கம்பீரமாக அமைந்திருந்தது.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.
“ ஆரா! ஏய் சீக்கிரம் வா டி எரும…. அந்த சோடபுட்டி கிளாஸ் டி,லேட்டா போனா வெளியதா நிக்கனும்...” எனக் கத்திக் கொண்டடிருந்தாள் வந்தனா.
”இதோ வந்துட்டேன் டி,வா போலாம்” என விடுதியின் அறையைப் அவசரமாக பூட்டி, புத்தகங்களை அள்ளி எடுத்துக் கொண்டு, அவளையும் இழுத்துக் கொண்டு ஓடினாள் ஆரா.
இருவரும் முதலாம் ஆண்டு முதுகலை மருத்துவம் படிக்கின்றார்கள்.
அக்கல்லூரி வளாகத்திலேயே விடுதி வசதிகளும் உள்ளது. விடுதியிலிருந்து வகுப்பிற்கு செல்ல பதினைந்து நிமிடங்களாவது ஆகும்.
இன்று டாக்டர் விக்டரின் முக்கிய வகுப்பாகும் . மிகவும் கண்டிப்பானவர்.நேரம் சிறிது தவறினாலும் மிகவும் கோபப்படுவார்.ஒன்பது மணி வகுப்பிற்கு இங்கேயே எட்டு ஐம்பது ஆயிற்று. எனவேதான் இந்த அவசரம் இருவருக்கும் . இழுத்து கொண்டு ஒடும் போது எதிரே தேவ் வந்து
கொண்டிருந்தான்.
” சீக்கிரம் டி” என ஆரா தன் பின்னால் வரும் வந்தனாவை பார்த்த வாறே வேகமாக ஒட முன்னால் வந்த தேவ்வை கவனிக்காது இடித்து தள்ளிவிட்டு ஓடினாள்.நேரமாகி விட்டதால் மன்னிப்புக் கூட அவனிடம் கேட்காமல் தலையை திரும்பி மட்டும் பார்த்து விட்டு வந்தனாவை இழுத்து கொண்டு ஓடினாள்.தேவ்வின் கையிலிருந்த புத்தகங்கள் கீழே சிதறின., ”முட்டாள் ” என வேகமாக அவளை திட்ட வாய் திறந்த நேரம் அவள் ஒரு வினாடி திரும்பி அவனை பார்த்தது கண்ணில் பட்டது. புத்தகங்களை எடுப்பதற்குள் ஓடி விட்டாள்.
ஏனோ முதல் சந்திப்பிலேயே அவளை பிடிக்காமல் போய் விட்டது.அவள் திரும்பி பார்த்தும் ஒரு மன்னிப்புகூட… கேட்காமல் சென்றது சிறிது சினத்தை அவனுக்கு தோற்றறுவித்தது.
எல்லா புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு நடந்தான்.
இருவரும் வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தனர். " அப்பாடி!.. இன்னும் சோடபுட்டி வரல டி “ என்றவாறே அருகிலிருந்த பெண்ணின் தண்ணீர் போத்தலை பிடிங்கி குடித்துவிட்டு “ ஏன்டி வந்தனா!... வரும் போது ஏதோ ஒரு ஜீவனை இடிச்சேன் போலவே!..... ஒரு சாரி கூட நின்று கேக்காம வந்துட்டேன் … சரி போ...ஆனா நின்னு சாரி கேட்டுட்டு வந்துருந்தா….. வந்திருந்தா…."என இழுத்தாள் தீடீரென
“ என்னடி… என்ன இழுக்குற “ என தன் புத்தகங்களை எடுத்தவாறே கேட்டாள் வந்தனா.
அவளை சுரண்டி மெதுவாக, “ அங்க பாரு டி” என்றாள் .
நிமிர்ந்து பார்த்து வந்தனா,”நீ இடிச்சுட்டு வந்த ஜீவன்டி…..” என்று கூறி இருவரும் திருதிருவென முழித்தனர்.
ஆம் …டாக்டர் விக்டருக்கு பதில் தேவ் ஆச்சார்யா வந்திருந்தான்.அவன் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு வகுப்பினை ஆரம்பித்தான். ஒருமுறை அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆராவின் புறம் முறைத்து விட்டு தன் வகுப்பினை தொடர்ந்தான்.
அவர்களுக்கு இருதய நோய்களுக்கான சிறப்பு வகுப்புகள் எடுக்க டாக்டர் விக்டர் அவனை முதுநிலை வகுப்பிற்கு அனுப்பியிருந்தார்.அவரும் டெல்லிக்கு மாற்றாலாகி போவதால் அவருக்கு பதிலாக
தேவ்வை அவரின் வகுப்புகளை தொடர சொல்லி கூறிவிட்டார்.அவரின் மீது மிகவும் மரியாதையும் அன்பும் வைத்திருந்தான் தேவ்.அவன் பயிற்சி மருத்துவம் முடித்து விட்டு இரு ஆண்டுகளாக பணியாற்றி கொண்டிருந்தான் ரிஷியுடன்.ஆனால இருவரும் வேறு வேறு பிரிவில் பணியாற்றி வந்தனர்.ழ
நாட்கள் செல்ல செல்ல தேவ்வின் வகுப்பின் மீது அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆர்வம் மிகுந்தது. ஆராதனாவும் ஒன்றுமே அதன் பின்னர் தேவ்விடம் பேசிக் கொள்ள வில்லை.
அவளுக்கும் அவனது வகுப்பு மிகவும் பிடித்திருந்தது.நேரம் செல்வதே தெரியாத அளவிற்கு அவள் அவனது பாடம் நடத்தும் விதத்திலும் அவனது பொறுமையிலும் ஏனோ கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனதில் அவன் பதிந்து போய் விட்டான்.ஆம்…. அவனை மெது மெதுவாக ரசிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.அவளை ஈர்த்தது எதுவென்று தெரியவில்லை ஆனால் அவளூள் ஊடுருவி விட்டான் .
ஒரு நாள் அவன் மிகவும் கடினமான பாடத்தை நடத்தி கொண்டிருந்தான்.அப்போது வழக்கம்போல அவன் பாடத்தை நடத்தும் விதத்தில் லயித்து போயிருந்தாள். அவளது பார்வை அவனின் கேசம், கண்கள்,என அளவெடுத்து கொண்டிருந்தன. " இந்த உதடு மட்டும் சிரிக்க மாட்டேங்குது அதுல மட்டும் அழுத்தமா ஒரு உம்மா வச்சிடலாம்” என தன் மனம் போன போக்கை கண்டு அதிர்ந்து “அய்யோ ! வேணாம்… “ என சற்று சத்தமாகவே கூறிவிட்டாள்.
தேவ் சட்டென்று திரும்பி,
" என்ன வேணாம்? “ என்றான்.
“இல்ல சார்….. ஒண்ணும் இல்ல..” என்றாள்.
“ கிளாஸ் கவனிக்க முடியலன்னா தாராளமா வெளியே போலாம் “ என்று கடுகடுத்தான்.
"இப்ப எடுத்தத கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க “ என்றான்.
அவள் இன்று ஏனோ சுத்தமாக கவனிக்கவே இல்லை .
“ சாரி சார் நான் கவனிக்கல “ என வெளிப்படையாகவே கூறினாள்.
அதைக் கூட அவனோ திமிராக பேசுகிறாள் என நினைத்து , "ப்ளீஸ்…..” என வாயிலைக் காட்டினான்.
கடினமான பாடத்தை கவனிக்காதது தன் தவறு என்பதால் உடனே வெளியேறினாள். அனைத்து மாணவர்களுக்கும் ஆராதனாவை வெளியே அனுப்பியது சற்று அதிகமாக தோன்றியது. ஆராதனா இயல்பிலேயே படிப்பில் மிகுந்த ஆர்வம் மிகுந்தவள்.அவளையும், அவளை சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக வைத்துக்கொள்வாள். படிப்பில் வந்த முதல் கவனச் சிதறல்.ஆனால் சீக்கிரம் தன்னை சரி படுத்திக் கொண்டாள்.
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அவளும் முதலில் தேவ்வின் மீது வெறும் ஈர்ப்பு தான் என் நினைத்து விளையாட்டுத்தனமாக இருந்தாள்.நாளாக நாளாக அவளால் அவன் மீதுள்ள காதலின் பாரத்தை தாங்க முடியாமல் அவனிடம் கூறிவிட முடிவு செய்து ஒரு நாள் அவனிடம் “சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்றாள். “ சொல்லுங்க ஆராதனா “ என்று வெறுமையான குரலில் கூறினான்.
" அது வந்து சார்....நான் பட்டுன்னு சொல்லிடுறேன் . எனக்கு மறச்சு வச்சு பழக்கம் இல்லை, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் உங்கள மனப்பூர்வமாக காதலிக்கிறேன்" என நாணிக் கோணாமல் பட்டென்று உடைத்துக் கூறினாள்.
எப்பொழுதும் ஒரு பெண் தானாகவே முன் வந்து தன் காதலைக் கூறினால், சற்று இளப்பமாக பார்க்கும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.சில பேர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.ஆனால் தேவ் எந்த வகையில் சேர்த்தி என்பது தெரியவில்லை.ஆனால் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான்.அந்த பார்வையின் பொருள் அவளுக்கு விளங்கவில்லை ....
அத்தியாயம் 8:
"ஹலோ சார்!.. சார் பதில் ஏதும்….” ஆரம்பிக்குமுன்னே அவளை கையமர்த்தி, “உனக்கு என்ன எத்தனை நாளா தெரியும்?இல்ல… நான் நல்லவனா?... கெட்டவனான்னு….. கூட உனக்கு தெரியாது.அப்பறம் எந்த நம்பிக்கையில் என்ன நீ விரும்புறதா சொல்ற…ம்ம்.. எனக்கு புரியல.. ஒருத்தரோட வெளித்தோற்றம் தான் காதல்னா அது எனக்கு தேவ கிடையாது…..இது வரைக்கும் எனக்கு அதில நம்பிக்கையும் இல்லை, உன்கிட்ட ஏன் இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்குறேன்னா.இது தான் நீ என் கிட்ட இந்த விஷயத்தை பேசுறது கடைசியா இருக்கனும்….காட்..இட்”. என சற்று சத்தமாகவே கூறினான் பதிலுக்கு அவள், “ சார், நான் சொல்ல வர்றத கேளுங்க….” என முடிப்பதற்குள் தேவ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
அவள் பேசியது காற்றோடு கலந்தது..
” ம்ம்…. ரொம்ப கஷ்டம் போலவே ஆரா…..” என தனக்குள் புலம்பினாலும் மனம் முழுவதும் அவன் நிராகரித்தது நெருஞ்சி முள்ளாய் குத்தியது..
ஆனாலும் மனம் தளராமல், “ சரி கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் “ என முணுமுணுத்தாள்.
நாட்கள் செல்லச் செல்ல அவனின் மீதான நேசமும் வேரூன்றி வளர்ந்தது. அவளது நேசம் நிச்சயமாக வெளித்தோற்றம் பார்த்து வந்ததில்லை. ஒருவரை பிடிக்காமல் போக எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஒருவரை பிடித்துப்போக இதுதான் காரணம் என வரையறுத்துக்கூற முடியாது.அந்த வரையரைக்குள் அடங்காதது தான் தூய்மையான நேசம்.ஆராதனாவின் நேசம் அத்தகையதுதான்.
தேவ் மறுப்பதற்குரிய காரணங்கள் நியாயமானதாக இருக்கலாம் ஆனால் அவளது மனதில் அவனை உயர்வான இடத்தில் தான் வைத்திருந்தாள்.
வகுப்பில் தைரியமாக அவன் கண்களைப் பார்த்து பேசினாள், பார்வையில் அநாவசிய நாணமில்லை,ஆனால் காதலோ அளவில்லாமல் கொட்டிக் கிடந்தது.
அன்று வகுப்பிற்கு வந்த தேவ் அவர்களின் ஆய்வறிக்கை தலைப்பினை சிலவற்றை கொடுத்து மாணவ மாணவிகளுக்கான ஆய்வறிக்கைக்காக உதவும் சில மூத்த மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை பிரித்து கொடுத்தான்.
“ குட் மார்னிங் ஸ்டுடண்ட்ஸ்!... இந்த வருஷம் உங்க தீசீஸ் பேப்பர்க்கு சில சீனியர் டாக்டர்ஸும் சில புரபசர்ஸும் ஹெல்ப் பண்ணுவாங்க. இதோ இதுல சில டாபிக்ஸ் இருக்கு…. , வேணும்னா செலக்ட் பண்ணிக்கோங்க , அண்ட் உங்க சொந்த டாபிக் இருந்தாலும் சொல்லுங்க.” என்றவாறு பத்து மாணவர்களுக்கு ஒரு சீனியர் டாக்டர் இல்லையெனில் ஒரு சீனியர் புரபசர் என நியமித்தான்.
ஆராதனாவும் வேறு சிலரும் தேவ்வின் கீழ் வந்தனர்.
வந்தனாவும் மற்ற சிலரும் ரிஷியின் கீழ் வந்தனர்.
ஆராதனா ,” சார் என்னோட டாபிக்” என தன் தலைப்பினை காட்டினாள்.
தேவ்வின் புருவம் சற்றே வியப்பில் மேலேறி சுருங்கியது.ஏனெனில் தற்போது அவனிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் சற்று சிக்கலான இதயநோய் சம்பந்தபட்டதாக இருந்தது.
“குட் டாபிக் ஆராதனா……,இத பத்தின என்ன டவுட்ஸ்னாலும் என்கிட்ட தாராளமா கேக்கலாம் . இப்ப ரெண்டு குழ்ந்தைங்க அட்மிட் ஆகிருக்காங்க,
அவங்களுக்கு சீக்கிரம் டிரீட்மெண்ட் ஆரம்பிக்கப் போறேன்.சோ டிரீட்மெண்ட் டைம் ல நீ வந்து ஜாயின் பண்ணிக்கோ.இட் வில் பி வெரி யூஸ்ஃபுல் பார் யூ..”எனகூறிவிட்டு வகுப்பினை முடித்துக்கொண்டான்.
அவளுக்கோ சற்று ஆச்சர்யமாக இருந்தது அவன் இவ்வளவு தூரம் பேசியது.மனம் ஜிவ்வென்று பறந்தது .
வகுப்புகள் முடிந்ததும் வந்தனா ஆராவிடம்,
ஜி“ என்னடி இவ்வளவு கஷ்டமான டாபிக் எடுத்துருக்க? “ என்றாள்.
அவன் பேசுவதற்கு முன்பே ,”ஹலோ….. கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா உங்களுக்கு? …..இப்படிதான் பின்னாடி பேய் மாதிரி வந்து பயமுறுத்துவீங்களா…. நான் எதுக்கு வந்தா உங்களுக்கென்ன?...” என படபடவென பொறியத்தொடங்கினாள்.
ரிஷியோ காதைக் குடைந்தவாறே,” ப்ளீஸ்.. ப்ளிஸ்.. பீ கூல்….நோ டென்ஷன்.யூ கேரி ஆன் “ என்று அவளை ஆழ்ந்து பார்த்தவாறே நகர்ந்தான் .
அவன் தன் அறைக்குச் சென்றதை வந்தனா கவனிக்கவில்லை.
தாதிப் பெண் வந்து “ மேம் டாக்டர் வந்துட்டாரு …நீங்க போய் பாருங்க “ என்றார்.
"நம்ம இங்கதானே நின்னுட்டு இருந்தோம்றற…ம்ம் ..ம்ம் … எப்ப உள்ளப் போனாரு.?...??” என நினைத்தவாறு,
”மை ஐ கம் இன் சார்?......” என்றாள்..
” எஸ் கம் இன்…” என கம்பீரமாககூறினான் ரிஷி.
வந்தனாவோ அவனை அதிர்ந்து நேராகப் பார்த்தாள்.அவனும் அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான் . அவனது விழிகளும் சேர்ந்து சிரித்தது.
ஆனாலும் ஒன்றுமே பேசாதது போல் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு வந்த காரணத்தைக் கூறினாள்.
அவனும் சற்று தீவிர முகத்துடன் அவள் சொல்வதைக் கேட்டு,
“ டாபிக் இன்னும் செலக்ட் பண்ணலயா?....” என்றான்.
அவளோ , “ இன்னும் இல்ல சார்…” என்றாள்.
“ ஓகே டாபிக் பத்தின ஏதும் ஐயிடியாஸ் இருக்கா?..….” என்றான்.
“ சார்….. ஹார்ட் வெஸல்ஸ் ஃப்ளாக், ஆர் வால்வ் டேமேஜ் பத்தி பண்ணலாம் ன்னு இருக்கேன் “ என்றாள்.
அவன் தன் கழுத்தை வருடியபடி “ம்ம்..
. குட் சாய்ஸ், சாம்பில் டேட்டாஸ் கலெக்ட் பண்ணுங்க ரெபரன்ஸ் புக் சொல்றேன். அத ரெபர் பண்ணுங்க….. ஏதும் டவுட்ஸ் இருந்தா ஈவினிங் ஆப்டர் ஃபோர் வாங்க, கிளியர் பண்றேன்….. இது என்னோட நம்பர் …..யூ கேன் கால் மீ அட் எனி டைம்…..மெயின் டேட்டாஸ் கலெக்ட் பண்றது பத்து நாள் கழிச்சு ஆரம்பிக்கலாம்…”என மடமடவென பேசிவிட்டு தன் கார்டினை அவளுக்கு கொடுத்து விட்டு அவளை பார்த்தான், இல்லை.. இல்லை... ஆராய்ந்தான்.
நீண்ட விழிகள்,கூரிய நாசி, இயல்பாகவே சிறிது சிவந்து அளவெடுத்தது போல் உதடுகள்,வெண் சங்கு கழுத்தில் சிறிய செயின் எனப் பார்த்துக் கொண்டே வந்தவன்,, ”போதும் டா.. அடங்கு … அவ உன்னோட ஸ்டுடண்ட்,அதோட முன்னபின்ன தெரியாத பொண்ண இப்படி பாக்குறது தப்பு... தப்பு...இப்படி வெக்கமில்லாம அவள அளவெடுக்காத ….இன்னும் கீழே பாத்த அவ செருப்பு எடுக்கறது உறுதி “ என அவன் மனசாட்சி அவனை காறி துப்பியது.. அவன் எத்தனையோ அழகான பெண்களை பார்த்து நட்பாக பேசி பழகி யுள்ளார்.ஆனால் எந்தப் பெண்ணிடமும் சீண்டும் விதமாக பேசியதில்லை.வந்தனாவைப் பார்த்ததும் சீண்டும் எண்ணம் ஏன் வந்தது எனத் தெரியவில்லை அவனுக்கு.
உடனே தலையை உலுக்கி ஒரு பெருமூச்சினை விட்டு, "வேற ஏதும் கேக்கனுமா?.."என்றான்.
"நோ சார்…..தாங்க் யூ” என்றவாறு சென்றாள் ஆராதனாவைத் தேடி….
ஆராதனாவோ தேவ்வின் அறையில் நின்றிருந்தாள்.தன் சந்தேகங்களை கேட்டு கொண்டு திரும்பி செல்லும் முன் அவனிடம்,” சார்….நான் சொன்னத இன்னோர் தடவ யோசிக்கலாமே….” என்றாள்.
அவனுக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது ”எத்தன தடவ சொல்றது உனக்கு…ஏன் இப்படி பிகேவ் பண்ற…படிச்சு முன்னேற வழியப் பாரு.. வந்தாச்சு காதல்.. கத்திரிக்காய் ன்னு, அவுட்…..” என சற்று சத்தமாகவே கூறிவிட்டான்.
கண்கள் லேசாக கலங்கியது ஆராதனாவிற்கு... அவனை நிமிர்ந்து ஒரு நிமிடம் பார்த்தாள்.அவனும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய கலங்கிய கண்களை பார்த்து அதில் அவன் கண்ட காதலில் ஒரு நிமிடம் தடுமாறி தான் போனான்.
“ இதென்ன இந்த பொண்ணோட கண்ணு இப்படி மெஸ்மரைசிங்கா….. இருக்கு?…என்ன கண்ணு டா …” என மனதில் நினைத்தவன் வெளியில் சாதாரணமாக இருந்தான்.
“ போகச் சொன்னேன்….”என்று கடுகடுத்தான்.
அவள் திரும்பியதும்,
” ஒரு நிமிஷம்….இது பத்தி நீ பேசறது இதுதான் லாஸ்டா இருக்கனும் .. இல்லன்னா சாரி …ஐ கான்ட் ஹெல்ப் யூ ஃபார் யுவர் தீசீஸ் “ என மறைமுக எச்சரிக்கை விடுத்தான்.
அவளுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது எதற்காகவும் கலங்காதவள் இப்போது கலங்கி நின்றாள்.
உடனே சுதாரித்து கொண்டு,” சாரி சார் “ என்றுறைத்து விட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியே வரவும் எதிரே வந்தனா வரவும் சரியாக இருந்தது.
கலங்கிய கண்களையும்,வாடிய முகத்தை பார்த்தவுடன் ,
”என்னடி ஏன் ஒரு மாறி இருக்க?... என்ன ஆச்சு?...” என்றாள்.
அவளே அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டு,
“ ஒண்ணுமில்ல டி,லேசா தலவலிக்குது…” என்றாள்..
உடனே வந்தனா ஆராவின் முகம் பற்றி நன்றாகவே நிமிர்த்தி,
” இப்ப …என்னன்னு சொல்ற? ..” என்றாள்.
இதற்கு மேல் தோழியிடம் மறைக்க முடியாது என நினைத்தவள், இப்போது வரை நடந்தது அனைத்தும் கூறினாள்.
வந்தனாவோ,
” சோ...மேடம் டாக்டர் சார விரும்புறீங்க அப்படித்தானே?.." என்றாள்.
ஆராதனாவோ,”ஆம்” என தலையசைத்தாள் .
“அவரு உன்ன திட்டுனது தப்பேயில்ல, மெச்சூர்டா பேசிருக்காரு.. எனக்கு உன் மேல்தான் கோவமா ……வருது ஆரா. ஏன்டி உனக்கு புத்தி இப்படி போகுது…. ம்ம்ச்…நல்லாத்தான இருந்த..” எனப் பொறியத் துவங்கினாள்..
ஆராதனா பாவமாக நின்றிருந்தாள்.
.
.
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Aruna Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page