All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (03)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 1 month ago
Posts: 32
Topic starter  

அத்தியாயம் 3

 

 

 

 

மணியம்மை பேரனை கண்டதும் அவர் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது..

 

காரணம் வில்லியம் தேசாப் நாளை ஒருநாள் கழித்து அடுத்த நாள் அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைகிறது..

 

அதே போல் அவனைப் பார்த்து ஒரு வருடமும் ஆகிறதே! ஆக ஒரு வருடத்திற்கு பிறகே அவனின் பிறந்த ஊரிற்கே அவன் வருகை தந்து சொந்தகங்களை பார்க்கிறான் விஷ்ணு தேவன்..

 

“ அம்மாச்சி ” அவரை அணைத்துக் கொண்டான் அவன்.. அவரின் கண்ணீர் துளிகள் அவன் அணிந்திருந்த அடர் சிவப்பு ஷர்ட்டை நனைத்தது..“ ஒரு வருஷம் ஆனது பிறகு தான் என்ன பார்க்க வந்து இருக்கியே ஐயா? ” அவர் ஏக்கத்துடன் கேட்டது அவனுக்கு புரிந்தது..

 

தந்தை இல்லாத வீட்டில் அவனுக்கு ஊருக்கு வரவே இஷ்டமும் இல்லை யாரையும் பார்க்க தோன்றவும் இல்லை..“ அப்பா இல்லாத வீட்டுல வந்து இருக்க எனக்கு இஷ்டம் இல்ல அம்மாச்சி ” உண்மையை அவரிடம் அவன் கூறினான்..

 

“ இந்த வயசானவளையும் பார்க்க உனக்கு தோணலையா ஐயா! ” அவர் கன்னம் தாங்கி கேட்ட போது உள்ளத்தில் நிதர்சனத்தை ஒப்பிடாமல் இல்லை..

 

மணியம்மைக்காவது வந்து இருக்கலாமோ என்று அப்போது தான் அவனின் மூளைக்கு உறுத்தியது..

 

“ உங்களுக்கு உங்க மகனும் பேர பிள்ளைகளும் இருக்காங்களே அம்மாச்சி.. உங்ககிட்ட பேசிட்டா மட்டும் போதும்னு நினைச்சேன்..இப்ப தானே புரியுது என்னை பாக்குறதுக்கும் நீங்க ஏங்கி இருக்கீங்கன்னு ” மேலும் அவன்..“ நீங்க இங்கே இருக்குறதை விட என்கூடவே நகரத்துக்கு வந்துருங்க அம்மாச்சி ” கூடுதல் யோசனையாக அவன் சொல்ல, அதற்கு அவரோ “ இல்ல ராசா , உங்க தாத்தா இந்த பெரிய வீட்டுலயே வாழ்ந்து கடவுள் கிட்ட போயிட்டாரு.. உன்னையும் நானு கல்யாண கோலத்துல பார்க்க வேண்டாமா விஷ்ணு..உனக்கும் வயசாகிட்டே போகுது இப்படியே ஒத்த கட்டையா இருந்திடுவீயோன்னு என் உள்ளம் பயத்தை தான் காட்டுது..” என்றார் அவர்..

 

“ அம்மாச்சி நான் ஒண்ணும் அரை கிழவன் கிடையாது.. ரெண்டு மாசத்துக்கு முன்ன எனக்கு இருபத்தி ஒன்பது வயசு ஆரம்பிச்சுது.. கல்யாணம் பண்ணவும் நாள் இருக்கு..அதே சமயம் என்னால அப்பா அம்மாவை விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி கடனேன்னு அவங்களை போல வாழவும் முடியாது‌. உங்களுக்கு நான் சொல்றது புரிஞ்சி இருக்கும் அம்மாச்சி எனக்குன்னு மனசு இருக்கு.. நேரம் வரும் போது எனக்கானவளை நானே பார்ப்பேன் அப்ப என் கல்யாணத்தை பத்தி உங்ககிட்ட சொல்றேன் அம்மாச்சி இப்ப எனக்கு பசிக்குது ஏதாவது? ” அவர் தோளை பற்றித்தான் ஆழ்ந்த பார்வையுடன் சொன்னான்..அதே நேரம் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதும் அவருக்கு புரிந்தது..

 

“ பாரு ஐயா! உனக்கு டீ கூட போட்டு குடுக்காம பேசிட்டு இருக்கேன் நான் ஒரு மடச்சி ” என்று கூறி அவர் நெற்றியில் அடித்துக் கொண்டார்..

 

“ டீ எனக்கு வேண்டாம் அம்மாச்சி சாப்பிட குடுங்க ரொம்ப பசிக்குது ” என்று அவன் சொன்னதும், “ சரி ஐயா ! போய் குளிச்சிட்டு வா ப்பா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என்றார் அவர்.. சரியென தலை அசைத்து விட்டு அவன் அறைக்கு மாடிப் படிகளில் ஏறிச் சென்றான் அவன்...

 

மேலே தன் அறைக்கு வந்தவன் கதவை திறந்து பார்த்தான் எந்வித தூசும் ஒட்டறையும் இல்லாமல் சுத்தமாக இருந்தது..

 

விஷ்ணு தேவன் வீட்டிற்கு வருவது இல்லை என்று மணியம்மை அவன் அறையை அப்படியே விடவில்லை.. அதற்கு வேலையாளை நியமித்து அறையை சுத்தம் வைத்துவிடுவார்..

 

இவ் வேலை செய்து வைக்கும் மணியம்மை நினைத்து மெலிதான புன்னகை அவன் அதரங்களில் தோன்றியது..அறை நடுவில் தேக்கு மர மரத்தினால் செய்யப்பட்ட பெரிய கட்டில் அதில் மூன்று பேர் உறங்கலாம்.. அதற்கேற்ப அவனின் அறை விசாலமாக இருந்தது..

 

அலுமாரியில் இருந்த அவனின் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்று குளித்து விட்டு வெளியே வந்தான் அவன்..

 

தலையை துவட்டியபடி அறையில் சுற்றி வந்தவன் கண்களில் விழுந்தது.. சுவற்றில் மாட்டி இருந்த புகைப்படம் நடுவில் காசிநாதன் அமர்ந்து இருக்க..அவர் பக்கத்தில் வில்லியம் தேசாப் அமர்ந்து இருந்தார் காசிநாதன் வலது பக்கத்தில் மணியம்மை நின்றிருந்தார்.. வில்லியம் தேசாப் அமர்ந்திருந்த இருக்கை பின்னே ஜனார்த்தினி மற்றும் விஷ்ணு தேவன் இருவருக்கும் அப்போது 25 , 20 வயதிற்குள் இருந்து இருக்கும்..

 

விஷ்ணு தேவனின் தோற்றம் உயரமும் உடல் மெலிந்ததாகவும் இருந்தது வயதுக்கு ஏற்ற சாதாரண முதிர்ச்சி தான் ஆனால் இப்போது இருக்கும் அவனையும் அப்போது இருந்த அவனையும் பார்க்க சிரிப்பாக இருந்தது சிரித்தும் விட்டான் அவன்..

 

தலையை குலுக்கி சமன் செய்து விட்டு அலுமாரியில் இருந்த அடர் சிவப்பு நிற ஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவன் தன்னை ஒருமுறை கண்ணாடியை பார்த்து அடர்ந்த தாடையை தடவி, இடது கையால் வேஷ்டியின் நுனியை பிடித்தவாறு அறையில் இருந்து வெளியேறினான்...

 

விஷ்ணு தேவனுக்காக உணவு பதார்த்தங்களை உணவு மேசையில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார் மணியம்மை..

 

இரவு ஏழு மணி ஆகி இருந்தது.. படிகளில் இறங்கி வந்து கொண்டு இருந்த பேரனின் தோரணையை விழி உயர்த்தி அவரை பார்க்க வைத்தது.. 

 

அவர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்..அவன் அருகில் வரும் முன்னரே " என் கண்ணே பட்டுடும் போல என் ராசா அவங்க தாத்தா போலவே அத்தனை கம்பீரமா திமிரோடு இருக்கானே! " என்று சொல்லிக்கொண்டே திருஷ்டி சுத்தி போட்டார்..

 

மீசையை முறுக்கி விட்டு வெண்ணிற பற்கள் தெரிய பொலிவான சிரிப்புடன் வந்தவன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு “ அம்மாச்சி என்னையே பார்த்துட்டு இருக்கீங்க என்ன விஷயம்? " தெரியாதது போலவே அவரிடம் கேட்டான்..

 

" உன்ன பாக்குற அப்ப உங்க தாத்தாவ பார்த்த மாதிரி இருக்கு ப்பா.." நெகிழ்வுடன் அவர் சொல்ல.." பின்ன நான் தாத்தா மாதிரி தானே அம்மாச்சி இதுல சந்தேகமே வேண்டாம் " என்றான்..

 

அவரும் சிரித்தவாறு அவனுக்கான உணவை பரிமாறினார்..தனுஷ் அப்போது தான் வீட்டிற்குள்ளே நுழைந்தான்..

 

அவனை கண்டதும்" தனுஷ் வா டா சாப்பிடலாம் " என்று அவன் அழைக்க, " இல்ல சார் நீங்க சாப்பிடுங்க நான் வெளிய சாப்டுக்குறேன் " என்றவனை உறுத்து விழித்த பார்வை பார்க்கவும்" இதோ வரேன் சார்.." ஓடி வந்து ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

 

அவனுக்கும் உணவை பரிமாறினார்..உணவு மேசையில் வந்து அமர்ந்தால் அங்கு எவ்வித பேச்சு வார்த்தையும் நடக்கக் கூடாது.. அப்படி நடந்து கொண்டால் விஷ்ணு தேவனிற்கு பிடிக்காத விஷயம் ஒன்றும் கூட...

 

" அம்மாச்சி நீங்களும் சாப்பிடுங்க" அவர் வேண்டாம் என்று சொல்லுவதையும் கேட்காது அவருக்கான உணவை பரிமாறி உண்ண வைத்தான் விஷ்ணு தேவன்..

 

இதே சமயம் அவர்களின் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்ற சத்தம் விஷ்ணு தேவனிற்கு கேட்டது..

 

மணியம்மை எழுந்து செல்ல நினைக்கும் போது, அவரின் கரத்தை பற்றி ஒரு பார்வை அவன் பார்த்ததும் உணவை உண்ண ஆரம்பித்தார்..

 

வீட்டிற்கு வருகை தந்தது பரந்தராமன் மற்றும் அவரின் மனைவியும் பிள்ளைகளுமே..

 

உள்ளே வந்த பரந்தராமன் தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர் அறைக்குள் சென்று அடைந்து கொண்டார்..

 

அவரின் மனைவி பூமணி உதட்டை சுழித்து விட்டு கணவன் பின்னே செல்ல..

 

பார்த்தீபன் விஷ்ணு தேவனை கண்டதும் இன்பமாய் அதிர்ந்தான்..சத்தியவாணிக்கு கூறவே வேண்டாம் மாமனை கண்டதும் அவள் மனம் முயல்குட்டி போல் துள்ளியது..

 

ஒரு வருடத்திற்கு பிறகு தன் மாமனை காண்கிறாள் அல்லவா அவனுடன் பேச வேண்டும் என்று தோன்ற, அவள் காலை வைத்து உணவு மேசையை நோக்கி நகர நினைக்கும் போதே.. அவளின் தாய் பூமணி அவள் கரம் பற்றி அறைக்கு இழுத்துச் சென்றாள்..

 

" அம்மா மாமாவ ஒரு வருஷத்துக்கு பிறகு இப்ப தான் பாக்குறேன் என் கைய விடு நான் அவரட்ட பேசணும்..” முகத்தை சுருக்கி அவர் கையில் இருந்து விடுபட அவள் நினைக்கும் போது ‘ பளார் ’ அறை அவளின் பூ கன்னத்தில் ஐ விரல் பதிய கையை ஓங்கி விட்டார் பரந்தாமன்..

 

உதடு துடிக்க நின்றாள் பெண்ணவள், அவளின் தந்தையிடம் அன்பும் பாசத்தையும் கண்டவளுக்கு இந்த கோபமான முகம் புதிதாக இருந்தது..அறை வாங்கி கன்னத்தில் தன்னிச்சையாக அவள் கரம் தொட்டது.. கண்களில் நீர் கசிந்தது..

 

‘ அத்தையின் மகன் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் தனக்கு மாமன் முறை அவனிடம் பேசுவதற்கு கூட அனுமதி இல்லையா? எதற்காக இந்த கோபம் ’ அவள் மனதில் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

 

முதல் தடவையாக அவளுக்கு அடித்திருக்கிறார் பரந்தராமன்.. மனதில் கீறல் உண்டாவதை அவளால் தடுக்க முடியவில்லை திகைத்த நிலையில் அவரை வெறித்துப் பார்த்திருந்தாள்..

 

பார்த்தீபன் விஷ்ணு தேவனிடம் பேசுவதற்காக நெருங்கிய நேரம் , தந்தையின் அறையில் இருந்து அறை விழும் சத்தம் அவன் செவிதனில் எட்டியது..

 

தங்கையை அடித்திருக்கிறார் என்று அவனால் உணர முடிந்தது.. விறுவிறுவென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்..சத்தியவாணியின் நின்ற நிலை அவனின் உள்ளம் பிசைவதாய்!

 

சடாரென்று தந்தை பக்கம் திரும்பியவன் “ உங்கள யாரு அப்பா வயசு பொண்ண அடிக்க சொன்னது ? பாருங்க நீங்க அடிச்சது தாங்க முடியாம கண்கலங்கி போய் திகைச்சுட்டு நிக்கிறா அப்பா...” சீற்றத்துடன் அவன் சொன்னான்..

 

“ வீட்டுக்கு நுழைஞ்சதும் அவன்கிட்ட இவ பேசுறதுக்கு போக போறா.. அதுனால தான் உங்க அம்மா ரூம்க்கு கூட்டிட்டு வந்தா அவ கையே தட்டி விடுறா.. எப்படி ஒரு நெஞ்சழுத்தம் அவளுக்கு இருக்கணும் ” கடுங் கோபத்துடன் சத்தியவாணியை முறைத்துப் பார்த்தார்..

 

“ ஏன் அப்பா புரிஞ்சிக்காம பேசுறீங்க? ஒரு வருஷத்துக்கு பிறகு விஷ்ணுவை பாக்குறா? அவன் கூட பேசுனா என்ன தப்பு ? அவன் மூச்சு விடுற காத்து இவ கிட்ட சேர்ந்து அழுக்காகிடும்னு நினைக்கிறீங்களா அப்பா ? அவ சின்ன பொண்ணு 21 வயது ஆகுது செல்லமா வளர்ந்தவளை போய் எப்படி உங்களால கை நீட்ட முடிஞ்சுது அப்பா? ” சீற்றமும் ஆதங்கமுமாக அவன் தந்தையிடம் கேட்டான்..

 

அவரால் அவன் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியாது நிமிடங்கள் அவை..

 

பூமணி மகனுக்கு இடையில் சென்று மூக்கை நுழைத்தாள் பார்தீபனிடம் வாங்கி கட்டிக்கொள்ள வரும் என்று நினைத்தே ஒதுங்கி நின்றார் அவர்...

 

அறையில் பார்தீபன் போடும் சத்தம் விஷ்ணு தேவனிற்கு கேட்காமல் இல்லை.. முகத்தில் எவ்வித உணர்வையும் தோன்றுவிக்காமல் உணவு உண்பதிலே கவனமாக இருந்தான்..

 

 

 

தொடரும்...

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 1 month ago
Posts: 45
 

சூப்பர் 👌 


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 1 month ago
Posts: 32
Topic starter  

@vsv11 Thank you sis 😊💕💕💕


   
ReplyQuote

You cannot copy content of this page