About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்
ஜானகி மந்திரம் 11 A
Anglo Indian Cafe– மறுநாள் மாலை 5 pm
மலைச்சரிவின் பனி, கஃபேயின் கண்ணாடிகளில் ஒரு 'Face Mist போலத் தூவப்பட்டு, வெளியுலகை ஒரு 'செட்டிங் பவுடர்' போல மங்கலாக்கியிருந்தது. ஒரு தேர்ந்த ஒப்பனை கலைஞரின் 'பிளெண்டிங்' வேலைப்பாடு போன்ற அந்தப் பனிப்படலம், கண்ணாடிக்கு ஒரு 'ஏர்-பிரஷ்' பொலிவை கொடுத்திருந்தது.
கஃபேயின் உள்ளே மிருதுவான மஞ்சள் லைட்டிங் மற்றும் இதமான ஜாஸ் இசை.
பெரிய ரவுண்ட் டேபிளில் —
ஸ்ரேயா, சலோனி, பிரணவி.
மனோ இன்னும் வந்திருக்கவில்லை.
“Practice முடிஞ்சு வர்றேன்… 10 minutes,” என்று அவன் போன் பண்ணி சொல்ல, பேசிவிட்டு ஸ்ரேயா போனை மேசை மீது வைத்தாள்.
“Let him come,” என்றாள் பொறுமையாக.
ஆனால் அவள் விரல்கள் கிளாசை மெதுவாக தட்டின — பொறுமையின்மை.
பேண்ட்ரி அருகே நின்றிருந்த மைதிலிக்கு லப் டப்...
இவங்களா…? இங்க…?
அவள் order pad-ஐ கையில் எடுத்தாள்.
இந்த table — அவளுடைய section.
வேலைதான். Professional-ஆ இரு.
மனதை தேற்றிக்கொண்டு அவள் மெதுவாக நடந்து அவர்கள் டேபிள் அருகே சென்றாள்.
“Good evening, ma’am...What would you like to have? ”
ஸ்ரேயா அவளை நிதானமாக பார்த்தாள்.
அவள் வீட்டு வேலைக்காரர்களை பார்ப்பது போல் அந்த பார்வை —
இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!
பிரணவி அடையாளம் கண்டுபிடித்து விட்டாள்.
“நீ SSG காலேஜ் தானே?"
மைதிலி ஆமாவென்று மெதுவாக தலையசைத்தாள்.
“yes, ma’am.”
ஸ்ரேயா நக்கலாக: “Interesting career choice.”
பிரணவி:
“Scholarship பத்தலையா? அதனால தான் வேலைக்கு வந்துட்டியா?”
சலோனி: காலேஜ் பேர் இப்படில்லாம் கெட்டுப் போகணுமா?
மூவரின் குரலும் மென்மை.
ஆனா கத்தி கூர்மை.
மைதிலி:
“Order சொல்லுங்க ma’am.”
ஸ்ரேயா: “Water first. கெஸ்ட் வந்ததும் இதைத்தான் செய்யணும். இது தெரியாதா உனக்கு?"
மைதிலி ஜக்கை எடுத்து glass-ஐ நிரப்பினாள்.
அவள் glass-ஐ வைக்க முயன்ற அந்த நொடியில்,
ஸ்ரேயா வேண்டுமென்றே கையை நீட்ட, கிளாஷ் ஆகி தண்ணீர் தெறித்து டேபிள் மேலும்
மைதிலியின் apron-லும் சிந்தியது.
ஸ்ரேயா: shit!!! பார்த்து பண்ண கூடாதா?
சலோனி: “Oops.”
மைதிலி அவள் மேல் பட்டிருந்த தண்ணீரை துடைக்க முயல,
பிரணவி;
“Careful. This place is expensive. முதல்ல டேபிளை கிளீன் பண்ணு"
“Sorry ma’am” என்று மைதிலி சொல்லிவிட்டு நாப்கின் எடுத்து டேபிளை துடைக்க ஆரம்பித்தாள்.
ஸ்ரேயா அவளைப் பார்த்து தெனாவட்டாக,
“Refill. Cold water. வேற கிளாஸ் எடுத்துட்டு வா", என்றாள்.
மைதிலி சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பிக்க, அவள் நடையில் சிறிது கலக்கம்.
சில நொடிகளில் திரும்பி வந்தாள்.
Glass நிரம்பி இருந்தது.
ஸ்ரேயா கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு,
முகம் சுளித்தாள்.
“i said...i need cold water"
பிரணவி நக்கலாக சிரித்தாள்.
"இவளுக்கு இந்த மாதிரி இடங்கள் புதுசா இருக்கலாம். அதனால கெஸ்ட்டை எப்படி கவனிக்கணும் தெரியல.."
சலோனி: yes, training கொஞ்சம் வேணும்.
மைதிலி:
“சாரி. நான் வேற கொண்டு வர்ற மேடம்.."
“Wait.”
ஸ்ரேயா அவளை நிறுத்தினாள். அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள். அவளுடைய ஈரமான மேலாடையை பார்த்து மேலும் முகம் சுளித்தாள்.
“Uniform wet ஆயிருக்கு. Presentation matters my dear SSG girl... ஃபர்ஸ்ட் டைம்ங்கறதுனால விட்டுடுறேன், இல்லன்னா நான் உங்க மேனேஜர் கிட்ட கம்பளைண்ட் பண்ண வேண்டிருக்கும்.."
மைதிலி அமைதியாக நின்று கொண்டிருக்க,
சலோனி கைகளை மேசை மீது வைத்து முன்னால் வந்து:
“Stand straight. Shoulders back", என்று ஆர்டர் போடும் விதமாக சொன்னாள்.
மைதிலி அவள் சொன்னபடி செய்தாள்.
பிரணவி:
“Smile. High-class customers prefer pleasant staff.”
மைதிலி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் சொன்னபடி புன்னகை முகமாக நின்றாள்.
ஸ்ரேயா சொடக்கு போட்டு சுட்டு விரல் நீட்டி
“Thats better” என்றாள்.
அவள் கிளாசை எடுத்து தட்டி காண்பித்து,
“Now refill. Properly chilled. And don’t rush. We are waiting", என்றாள்.
மைதிலி திரும்பி செல்லும்போது—
சலோனி:
“இதே மாதிரி இவ கூட இருக்காங்களே, அந்த திமிரு புடிச்ச ரெண்டு கழுதைகளையும் parade எடுக்கணும். அப்பதான் திருந்துவாளுங்க."
பிரணவி:
“எங்க போயிர போறாளுங்க நிச்சயமா மாட்டத்தான போறாளுங்க"
மைதிலி அவர்கள் பேசுவதை கேட்கும் தூரத்தில் தான் இருந்தாள்.
ஆனா திரும்பிப் பார்க்கவில்லை.
கண்கள் நனைய முயற்சித்தன. கட்டுப்படுத்தி கொண்டாள்.
அவள் கிளாசில் கோல்ட் வாட்டரை நிரப்பி கொண்டு வந்து அவர்கள் டேபிளில் வைத்தாள்.
ஸ்ரேயா கிளாசை எடுத்து ஒரு சிப்.
பின்னர் சாவதானமாக சாய்ந்து அமர்ந்தாள்.
“Good. See? You can improve.”
பிரணவி:
“Stand there. இன்னும் ஒரு கெஸ்ட் வரணும். Then we’ll order.”
அவர்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டு, மைதிலி சற்று தள்ளி அமைதியாக நின்றாள்.
நேரம் நகர்ந்தது.
அவர்களுக்கு அது நேரம் போவதற்கான சிறிய கேளிக்கை.
அவளுக்கு — முழு அவமானம்.
ஆனா முகத்தில் — வலிகள் எதையும் வெளியே கசியவிடாதபடி, மிக லாவகமாக அணிந்து கொண்ட ஒரு முகமூடி புன்னகை.
ஆனால் அந்த புன்னகையின் பின்னால், உள்ளே ஏதோ ஒன்று மெதுவாக கடினமாகி கொண்டிருந்தது.
தொடரும்
உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்
https://kavichandranovels.com/community/topicid/636/
உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்
ஜானகி மந்திரம் 12 A
உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்
https://kavichandranovels.com/community/topicid/636/
உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்
இரவு 10 மணி — லேடீஸ் ஹாஸ்டல்
ஹாஸ்டல் அந்த நேரத்தில் அமைதியாகி இருந்தது.
பல அறைகளில் லைட் குட் குட் நைட் சொல்லியிருக்க... சில அறைகளில் இன்னமும் லைட் வெளிச்சம் தெரிந்தது. சில வரண்டாக்களில் இருந்து கசியும் பேச்சு சத்தங்கள்..
தூரத்தில் எங்கோ ஒரு ரூமில் சிரிப்பு… மற்றொரு ரூமில் இருந்து இருமல் சத்தம், பல வராண்டாக்களில் அமைதி, இரவு வலுபெற்று கொண்டிருந்தது.
ஸ்ரேயா ஃப்ளோரின் வராண்டா ஓரத்தில் —
ஸ்ரேயா, சலோனி, பிரணவி மூவரும் நின்றிருந்தார்கள்.
காற்று லேசாக வீசியது.
ஆனா அந்த மூவரின் முகத்தில் மட்டும் டென்ஷன். அவர்களின் அட்மாஸ்பியரில் பெரிதாக அண்டர்ஸ்டாண்டிங், பாண்டிங், பாசிட்டிவ் வைப் எதுவுமே கிடையாது.
கடந்த சில நாட்களில் நடந்த விஷயங்கள் —
அவர்களது இமேஜை மோசமாக குலைத்துவிட்டது.
பார்ட்டியில் நடந்த சம்பவம்
நியூஸ் சேனல்கள் கிழித்தது…
காலேஜ் பிரின்ஸ்பால் ரெய்டு விட்டது…
மேனேஜ்மென்ட் வார்னிங்…
எல்லாம் சேர்ந்து —
DSG Girls என்ற பெயரே இப்போது ஒரு பிரச்சனையாக, சுமையாக மாறி இருந்தது.
பிரணவி திடீரென்று சிரித்தாள் — ஆனால் அது வேதனை கலந்த சிரிப்பு.
“DSG கேர்ள்ஸ்ன்னு எவ்வளவு கெத்தா சுத்திட்டு இருந்தோம்…ஒரே ஒரு பிரச்சனையில… இப்படி நம்ம கெத்தை கலைச்சிட்டாங்களே… காலேஜுக்கு கூட போக முடியல. இன்னைக்கு பிரின்சிபால் ரூமுக்கு எதோ போலீஸ் வந்துட்டு போனதா கேள்விப்பட்டேன்..."
சலோனி: “ ஏண்டி பயப்படுற? அவங்க வேற எதுக்காகவாவது வந்துருப்பாங்க. அதான் SRK Dad போலீஸ் தரப்பு பிரச்சனையை சால்வ் பண்ணிட்டாரே... இப்போ என்ன பிரச்சனைன்னா... நியூஸ் சேனல்களில் காலேஜ்களில் போதை பார்ட்டி கலாச்சாரம்ன்னு ஒரு நியூஸ் ஃப்யூச்சர் போட்டு கிழிச்சிட்டானுங்க.
அதனாலதான் நம்ம குரூப் பொண்ணுங்க கூட இப்ப நம்மள avoid பண்ணுறாங்க… ரூமுக்கு கூட வர்றதில்ல, பேசினா கூட நின்னு பேச மாட்டேங்கிறாங்க. புதுசா ஏதாவது பிரச்சனை ஆயிரபோகுதுன்னு பயம்.”
ஸ்ரேயா எதுவும் பேசாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்க... அவள் தரப்பில் ரெஸ்பான்ஸ் இல்லாததால் இருவரும் தொடர்ந்தார்கள்.
பிரணவி ஸ்ரேயாவை நேராக பார்த்தபடி, “நம்ம பேரை இப்படி damage பண்ணிட்டாங்க… அந்த சஞ்சுவும் இந்துவும் தான் போன் பண்ணி விஷயத்தை escalate பண்ணியிருக்காங்கன்னு எனக்கு ஸ்ட்ராங்கா சந்தேகம்… நாங்க அந்த கருவாச்சிகிட்ட பேசும்போது அவ முழிச்ச முழியே சரியில்லை."
அவள் குரல் வெறுப்பில் கடினமானது.
“Properஆ பதிலடி கொடுக்கணும். குடுத்தே ஆகணும்... பாண்டியா கிட்ட சொல்லி, அவளுங்க ஹாஸ்டல விட்டு வெளியே வரும்போது நாலு தட்டு தட்ட சொல்லலாமா?"
சலோனி அதை ஆமோதிப்பது போல் தலையசைத்து,
“No... அது சரியா இருக்காது. பதிலடி கொடுக்கணும் தான் ஆனால் நேரடியாக கொடுக்க முடியாது. ஏற்கனவே இந்த இன்சிடெண்டுக்கு பிறகு Mano கூட உன்கிட்ட பேசவே இல்லல்ல SRK… அதனால பதிலடி கொடுக்கிறேன்ன்னு பிரச்சனைகள் பெருசாச்சின்னா அவ்வளவுதான் கலாசாயிரும்..."
ஸ்ரேயா முகத்தில் இப்போது தடுமாற்றம். அவளது அமைதி முன்னை விட இன்னும் கனமானது. அந்தத் தடுமாற்றம் மிகச் சிறியது, ஆனால் ஆழமானது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் அவள் கசியவிடவில்லை, ஆனால் அவளது கண்கள் ஒரு கணம் நிலைகுலைந்து தரை விரிசலை பார்த்தன. அந்தத் தடுமாற்றம் ஒரு மின்னல் போல வந்து மறைந்தது.
சலோனி: எத பண்ணாலும் அவளுங்க பண்ண மாதிரி அண்டர் கிரவுண்ட் வேலைதான் பண்ணனும். இருக்கிற பிரச்சினையில மனோ ஃப்ரெண்ட் சந்தீப் வேற text பண்ணி torture பண்ணிட்டு இருக்கான்… ஒரு நாளைக்கு 50 மெசேஜ் வருது.
பிரணவி சலிப்புடன் சொன்னாள்: எனக்கும் அது தான் பிரச்சனை. அந்த மணிஷ் ஓவரா பிகேவ் பண்றான்.
எல்லா sideலயும் problem…”
இருவரும் அவளை ஏத்தி விடுவது போல பேசிக்கொண்டிருந்தார்கள்.
சஞ்சு மற்றும் இந்து - இவர்கள் இருவரும்தான் இந்த ஸ்கிரிப்ட்டின் டைரக்டர்கள் என்பது ஸ்ரேயாவுக்கு இப்போது தெளிவாக தெரிந்தது.
'மனோ தவிர்ப்பது ஒரு பக்கம் வலிக்கத்தான் செய்தது. ஆனால், அந்த வலியை விட, அதற்கு காரணமாக இருந்தவர்களை சைலண்டாக போட்டு பொழக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்குள் உருவானது.
அதே நேரம் — Room No: 143
அங்கேயும் அதே டிஸ்கஷன்.
ஆனா vibe — முற்றிலும் வேற.
அங்க டென்ஷன் இருந்தாலும் — அதுக்குள்ள energy, bonding, positive vibe இருந்தது.
மூவரும் படுக்கையில், தரையில், chairல — எங்க இடம் கிடைத்ததோ அங்கே உட்கார்ந்து இருந்தார்கள்.
இந்து: “அவங்க மைதிலி கிட்ட பேசின விதத்தை பார்த்தாலே புரியுது. நிச்சயமா நம்மள target பண்ணுவாங்க. அவங்க start பண்ணுறதுக்கு முன்னாடியே...நாம finish பண்ணணும். என்ன பண்ணலாம்?”
சஞ்சு கைகளை கோர்த்து சொடக்கு எடுத்து,
“யோசிப்போம்…. ஏற்கனவே அவங்க பெரிய சிக்கல்ல இருக்காங்க.. முதல்ல அதுலருந்து வெளில வரதுக்கு தான் முயற்சி பண்ணுவாங்க.. அதன் பிறகு தான் நம்மள டார்கெட் பண்ணலாம்... So, அவசரப்பட்டு எந்த wrong move-உம் எடுக்க வேண்டாம். Let's wait for the right moment."
இந்து: "இல்லடி... அவங்க செம கோவத்துல இருக்காங்க. இல்லன்னா மைதிலியை வழி மறிச்சி ஏன் அப்படி கேட்கணும்? கடைசி செமஸ்டர்...விஷயம் வெளியே தெரியக்கூடாது, பிரச்சனை வரக்கூடாதுன்னு நினைச்சா? எப்படி அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சது? எப்படி கரெக்டா மைதிலி கிட்ட வந்து கேட்டாங்க? really suspicious, எனக்கு என்னவோ சரியா படல!"
சஞ்சு: விஷயத்தை அவங்க கண்டுபிடிச்சு இருக்க மாட்டாங்க. ஹாஸ்டல்ல அவங்களுக்கு எதிராக இருக்கிறது நாமதான். நம்ம கூட இருக்கிறது மைதிலி. So அவளை தனியா புடிச்சு மிரட்டினா உண்மையை சொல்லிடுவாங்குற நம்பிக்கையில பிட்டு போட்டு பார்த்துருக்காங்க. மைதிலி சொல்லல. இவ்வளவுதான் நடந்திருக்கும். நீ ரொம்ப ஓவரா யோசிச்சு குழம்பாதே.
இந்து: இல்லடி, எனக்கு என்னவோ சம்திங் ராங்ன்னு தான் தோணுது.
சஞ்சு: ok அப்படின்னா ஏதாவது நல்ல ஐடியா இருந்தா நீயே சொல்லு.
இந்து: ஐடியா இருந்தா சொல்ல மாட்டேனா?
இருவரின் சம்பாஷணையிலும்
மைதிலி பங்கேற்கவில்லை.
அவள் mindல ஓடிக்கொண்டிருந்தது —ஒரே ஒரு விஷயம்.
“நாளைக்கு...அவன் வருவானா…?”
Black pant…
Light blue shirt…
White wrist band…"
அவள் கண்ணில் அந்த image. அந்த எண்ணமே அவளை வேற உலகத்துக்கு கொண்டு போயிருந்தது.
இந்து கவனித்தாள்.
“என்னடி சுட்கி… இவ்வளவு தீவிரமா யோசிக்கற?”
மைதிலி திடுக்கிட்டு திரும்பினாள்.
“ஒண்ணும் இல்ல…”
சொல்லிவிட்டு ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தபடி அவள் தன்னை நிதர்சனத்திற்கு இழுத்துக்கொண்டாள்.
“நீங்க என்ன பேசிட்டு இருந்தீங்க?”
சஞ்சு: Arey yaar....இவ்வளவு நேரம் என்ன அரை தூக்கத்தில் இருந்தியா? நாங்க பேசுனத கவனிக்கலையா? DSG கேர்ள்ஸ்க்கு என்ன counter குடுக்கலாம்ன்னு பேசிட்டு இருந்தோம்...
ஒரு நொடி —
மைதிலி அமைதியாகி பின்னர் மெதுவாக ஆனால் உறுதியாக சொன்னாள்.
“அதுக்காக… நான் already ஒரு ஐடியா யோசிச்சுட்டேன்.”
இந்து & சஞ்சு — இருவரும் ஒரே நேரத்தில் அவளை பார்த்தார்கள்.
சஞ்சு ஆர்வமாக முன்னே வந்தாள்.
“என்ன சுட்கி?? இவ்வளவு பாஸ்ட்டா இருக்கியே? ஆப்டர்நூன் இன்டர்நெட் சென்டர் சம்பவத்தில் இருந்து நீ வெளியே வந்திருக்க மாட்டேன்னு நினைச்சேன்..."
இந்துவும் அவளுக்கு அருகே வந்து நின்றாள்.
“சொல்லு… என்ன ஐடியா?”
மைதிலி புன்னகைத்தபடி,
“இன்னைக்கு நம்ம காலேஜ் கேம்பஸ்க்கு…மூணு போலீஸ்காரங்க வந்திருந்தாங்க. பாத்தீங்களா?”
சஞ்சு உடனே தலையசைத்தாள்.
“ஆமா… நானும் கேள்விப்பட்டேன்…”
இந்து புருவம் உயர்த்தினாள்.
“அதுக்கென்ன? எதுக்காக வந்திருந்தாங்கன்னு தெரியுமா?”
மைதிலி: “நான் ஸ்காலர்ஷிப் கையெழுத்து வாங்க பிரின்சிபால் ரூமுக்கு போகும்போதுதான் பார்த்தேன்… அப்போ வாசலுக்கு வெளியே தான் நின்னுட்டு இருந்தேன். அவங்க ஏதோ ஒரு ஃபங்ஷனுக்காக நம்ம பிரின்சியை இன்வைட் பண்ண வந்திருக்காங்க..."
இந்து & சஞ்சு — கவனமாக கேட்டார்கள்.
“அதனால…?”
மைதிலியின் கண்களில் ஒரு சின்ன குறும்பு மின்னல்.
“இத வச்சு… ஒரு சின்ன game play பண்ணலாம். போலீஸ் எதுக்கு வந்தாங்கன்னு நம்ம காலேஜ் பசங்களுக்கு தெரியாது… தெரிஞ்சாலும், பிளேட்டை மாத்தி போட்டு அந்த DSG கேர்ள்ஸ்க்கு கொக்கி போடலாம். ஏற்கனவே இந்த பிரச்சனைக்கு அப்புறம் DSG கேர்ள்ஸ்ன்னா எல்லாரும் தலை தெறிக்க ஓட்றாங்க. அல்மோஸ்ட் மீதி பேர் எல்லாம் எஸ்கேப். ஸ்ரேயா கிட்ட இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்கிற அந்த ரெண்டு பேரையும் பிரிச்சிட்டா அவ தனி மரம் ஆயிருவா... அதுக்கப்புறம் அவ செல்லாக்காசு..."
இருவரும் ஆச்சரியமாக ஒருமித்த குரலில், எப்படி என்று கேட்க, மைதிலி சொல்ல ஆரம்பித்தாள்.
அதே இரவு — 10:45 PM
கண்டாலா – பாம்பே ஹைவே
காலாப்பூர்.
ஹைவேயின் இரைச்சலுக்கு மிக அருகில் இருந்தாலும், அந்த லோகாலிட்டி ஒரு தனித்தீவு போல அமைதியில் உறைந்திருந்தது. வரிசையாக நின்றிருந்த ரோ-ஹவுஸ்கள் நிலவொளியில் நீண்ட நிழல்களை தரை எங்கும் இறைத்திருந்தன.
தூரத்து சாலையில் சீறிப்பாயும் வாகனங்கள் சத்தம், ஒரு சீரான இடைவெளியில் அந்த மௌனத்தை கிழித்து போட்டது.
பாபியின் வீடு — அந்த டவுன்ஷிப்பின் நடுப்பகுதியில்.
வீட்டுக்குள் நிசப்தம்.
அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே தூங்கிவிட்டார்கள்.
ஹால் இருளில் உறங்கிக் கொண்டிருந்தது.
பாபியின் அறைக்கதவு இடுக்கிலிருந்து மட்டும் ட்யூப்லைட் ஒளிக்கீற்று ஹாலில் கசிந்தது.
அறைக்குள் ஒரு கனமான மர மேசை. அதன் மேல் ஆக்கிரமித்திருந்தது ஒரு பெரிய, பழுப்பு நிற CRT மானிட்டர். Windows XP டெஸ்க்டாப். இரவு 12 மணி வரை அவனுக்கு இதுதான் உலகம் - கேம்ஸ், சாட், படங்கள்.
சேரில் சாய்ந்து அமர்ந்திருந்த பாபியின் முகத்தில் மானிட்டரின் வெளிச்சம் பிரதிபலித்தது. அவன் கண்கள் திரையை ஊடுருவின.
திரையில் —
MSN Messenger
அதில் Mano ID — Offline.
அவன் மெதுவாக login window திறந்தான்.
User ID type பண்ணினான்.
Password…
முதல் முயற்சி — தவறு.
இரண்டாவது — தவறு.
அவன் நின்றான்.
மனோ எதை விரும்புவான்…?
எதை பாஸ்வேர்ட்டாக வைப்பான்? அவனுக்குப் பிடித்த அந்த பைக் மாடலா?
சட்டென ஒரு பொறி தட்ட, மீண்டும் டைப் செய்தான்.
Enter.
தவறு..
அவன் மீண்டும் வேறொன்றை type பண்ணினான்.
Enter.
ஒரு நொடி — திரை அமைதியாக நின்றது.
பிறகு —
Logged in.
பாபி நிம்மதி பெருமூச்சு விட்டான்.
Mano IDல login ஆனவுடன் பாபி நேராக chat historyக்குள் சென்றான்.
அங்கே வரிசையாகப் பெயர்கள். பல ஐடிக்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி Sunshine_Girl என்ற பெயர் மட்டும் ஒரு விசித்திரமான ஈர்ப்புடன் நின்றது.
பாபி அந்த chat விண்டோவை திறந்தான்.
சாட்டிங்கை படிக்க நிமிடங்கள் நகர நகர... அவன் முகத்தில் இருந்த expression மாற ஆரம்பித்தது.
முதலில் ஒரு மெல்லிய கேலி சிரிப்புடன் படிக்க தொடங்கியவன், போகப் போக சிரிப்பு மறைந்து curiosity படர்ந்தது. அதைத்தொடர்ந்து குழப்பம், பின்னர் திகைப்பு.
முழுக்க ஒரு flowவாக — அந்த conversationஐ absorb பண்ணிக் கொண்டிருந்தான்.
ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாயிற்று.
மனோ சும்மா time pass பண்ணவில்லை.
அவன் முழு மனசோட involve ஆயிட்டான்.
பாபி டென்ஷனில் நாற்காலியில் பின்னால் சாய்ந்தான்.
மனோ -
கல்லூரியின் ஹீரோ, பெண்கள் கூட்டத்தால் விரும்பப்படுபவன், யாரிடமும் பிடி கொடுக்காதவன் - ஆனால் இங்கே ஒரு முகம் தெரியாத பெண்ணிடம் இவ்வளவு பேசியிருக்கிறான். அந்த வரிகளில் தெரிந்த 'Depth' பாபியை திகைக்க வைத்தது.
நிஜத்தில் எவ்வளவோ options இருந்தும்—
ஏன் இந்த யாருக்கும் தெரியாத தொடர்பு?
அதுதான் அவனை இன்னும் அதிகமாக disturb பண்ணியது.
“எவ்ளோ பொண்ணுங்க அவனை சுத்துறாங்க…அவங்களல்லாம் விட்டுட்டு ஏன் இப்படி?…
அவன் மோவாயை பலமாகத் தேய்த்தபடி,
"என்னடா இது... லூசா நீ?" அவன் குரல் அந்த அமைதியான அறையில் ஒலித்தது.
அவனுக்கு தெரிந்த மனோ வேறு. கேம்பஸில் நுழையும்போதே செம மாஸாக வருவான். அந்த ஸ்டைலான நடை, அளந்து பேசும் கம்பீரம், எதற்கும் கலங்காத அபாரமான கான்பிடன்ஸ்... எத்தனையோ பெண்கள் அவன் ஒரு பார்வைக்காக காத்திருப்பார்கள். அவன் ஒரு 'கிளாசிக் ஹீரோ'.
ஆனால், இங்கே இந்த MSN விண்டோவில் தெரிவது அந்த பிம்பம் இல்லை; அவனின் பலவீனம் தெரிகிறது.
பாபி மீண்டும் ஒருமுறை — ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அந்த சேட்களை ஸ்க்ரோல் செய்தான். ஒவ்வொரு வரியும் மனோவின் பிம்பத்தை உடைத்து சிதறடித்தது. நேரம் ஓடுவதை பற்றிய உணர்வே அவனுக்கு இல்லை.
ஒரு இடத்தில் மனோ டைப் செய்திருந்தான்:
"இங்க சுத்தி இருக்கிற பொண்ணுங்களுக்கு என் மேல இருக்கிற கிரேஸ்... அது என்னோட பணத்துக்கும், அழகுக்கும், வெற்றிகளுக்கும் கிடைக்குற அட்டென்ஷன். நிஜமான மனோ யாருன்னு யாருக்குமே தெரியாது... அவங்களுக்கு தெரிஞ்சுக்க விருப்பமும் இல்லை. ஐ ஆம் ஜஸ்ட் எ ஷோ பீஸ் ஹியர்..."
பாபிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் நண்பன் மனோவா இப்படிப் புலம்பி இருக்கிறான்?
அடுத்த சில வரிகளில் அவனது ஏக்கம் இன்னும் அப்பட்டமாக தெரிந்தது.
"உன் கூடப் பேசும்போது மட்டும்தான் நான் 'நடிக்காம' இருக்கேன் சன்ஷைன்... மத்தவங்க முன்னாடி நான் போட்டுட்டு இருக்கிற அந்த 'ஸ்மார்ட் & கூல்' மாஸ்க் எனக்கு மூச்சு முட்டுது. ப்ளீஸ்... என்னை விட்டுப் போயிடாதே."
பாபி தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டான். இவ்வளவு தூரம் ஒரு முகம் தெரியாத பெண்ணிடம் தன் ரகசிய அறைக்கதவை திறந்து வைத்திருக்கிறான். மனோ - அழகானவன், அறிவானவன், எதையும் சாதிக்கக் கூடியவன். அவன் ஏன் இவ்வளவு பாதுகாப்பற்ற உணர்வுடன் (Insecure) முகம் தெரியாத, பெயர் தெரியாத ஐடி யிடம் கெஞ்ச வேண்டும்?
பாபிக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், மறுபக்கம் பயமாகவும் இருந்தது. கான்பிடென்ட்டான ஒருவன் எமோஷனலாக ஒருவரிடம் சரணடையும்போது, அது எவ்வளவு ஆபத்தானது என்பது அவனுக்கு தெரியும்.
பாபி அமைதியாக யோசித்தாலும்
அந்த அமைதிக்குள் —
restlessness மெதுவாக ஊற ஆரம்பித்தது.
“இது சரியா…?”
அவன் தன்னிடமே மெதுவாக கேட்டான்.
அவன் ஆன்லைன்ல chat பண்ணாதவனில்லை. அவனுக்கும் plenty of contacts இருந்தது.
Casual talks… flirting… timepass…
இதெல்லாம் அவனுக்கு புதியது இல்லை. சேட்டிங்கில் என்னென்ன பண்ணனும், எப்படி சீன் போடணும், எப்படி பில்டப் பண்ணனும், எப்படி கொக்கி போடணும், எல்லாமே அவனுக்கு கைவந்த கலை...
ஆனா — மனோ விஷயம் வேறாக இருக்கிறது.
ஊர் பெயர் முகம் தெரியாத ஒரு பெண். ஒரே ஒரு ஐடி மட்டும் தான் மனோவுக்கு தெரியும்!
அதற்குள் இவ்வளவு depth… அனுப்பியிருக்கும் மெசேஜ்களில் வெளிப்பட்ட மனோவின் முகம் பாபிக்கு புதிதாக இருந்தாலும், அதில் இதுவரை யாருக்கும் தெரியாத உண்மைகள் இருக்கிறதே!
எப்பவுமே கான்ஃபிடண்டாக, எப்பவுமே controlல இருக்கும் type தான் மனோ. இப்போ இவ்வளவு emotionally involved ஆகிறானா…?
Why???? அது தான் பாபிக்கு புரியவில்லை.
FAKE ஐடியாக இருந்தால் பரவாயில்லை, சாட்டிங்கோடு முடிந்துவிடும். ஒருவேளை அவனை யாராவது டார்கெட் செய்து இருந்தால்? மனோவுக்கு எவ்வளவோ பெண்கள் ப்ரொபோஸ் செய்திருக்கிறார்கள், No என்று தன்மையாகத்தான் ரிஜெக்ட் செய்திருக்கிறான். அவர்கள் யாராவது ஒருத்தர் பழி வாங்குவதற்காக Fake idயில் சாட் பண்ணி, அவனை மனசை கலைத்துக் கொண்டு இருந்தால், என்ன பண்ணுவது?
பாபிக்கு யோசித்து யோசித்து மண்டை குழம்பியது.
'ஒருவேளை இது நிஜமான ஐடியாகவே இருக்கட்டும். ஆனா அந்தப் பொண்ணு நிஜத்துல ஒரு டோங்கிரா பிகராக இருந்துட்டா? ஆன்லைன்ல இதெல்லாம் சகஜம்தானே... மூஞ்சை காட்டாம ஐடி மட்டும் மாடர்னா வச்சுக்கிட்டு வார்த்தையாலேயே வசியப்படுத்துவாங்க. மனோ இப்போ அவளை ஒரு 'தேவதை' மாதிரி கற்பனை செஞ்சுட்டு இருக்கான். நாளைக்கு நேர்ல பார்க்கும்போது அவளோட லுக் அவன் எதிர்பார்ப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம இருந்துட்டா... மனோ எவ்ளோ நொறுங்கிப் போவான்?'
பாபி டென்ஷனில் தலையைக் கோதிக் கொண்டான்.
மனோ வருத்தப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்து அவனுக்குப் புரிந்தது.
'மனோ... நீ எவ்ளோ பொண்ணுங்களை ரிஜெக்ட் பண்ணியிருப்ப? உன் ஒரு பார்வைக்காக ஏங்கிட்டு இருந்த அத்தனை பேரையும் just like thatனு தாண்டி வந்தவன் நீ. இப்போ விஷயம் தெரிஞ்சா அவங்களெல்லாம் கைகொட்டி சிரிப்பாங்களேடா!'
'இவ்வளவு பில்டப் கொடுத்த மனோ, கடைசில ஒரு மொக்க பீஸ்கிட்டப் போய் விழுந்துட்டானே'ன்னு எல்லாரும் கேலி பண்ணுவாங்களே... அந்த அவமானத்தை உன்னால தாங்க முடியுமா?"
கல்லூரியின் 'ரொமான்டிக் ஹீரோ' ஒரு நகைச்சுவை பொருளாக மாறுவதை அவனால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
மனோ... முட்டாள்தனமாக தன் மொத்த ஜாதகத்தையும் அங்கே கொட்டி வைத்திருந்தான். தன் பெயர், காலேஜ், தான் ஓட்டும் பைக் மாடல் என அத்தனையையும் அந்த பெண் கேட்காமலேயே உளறி தீர்த்திருந்தான்.
ஆனால், அந்தப் பக்கம்?
பாபிக்கு ஒரு நிமிடம் திகைப்பாக இருந்தது. அந்த Sunshine_Girl ஒரு இடத்தில் கூடத் தன்னைப் பற்றிய நேரடித் தகவலை சொல்லவில்லை. அவள் எங்கே இருக்கிறாள், என்ன படிக்கிறாள், அவளது நிஜப் பெயர் என்ன... எதுவுமே இல்லை. அவள் ஒரு நிழலை போல தப்பித்துக் கொண்டே இருந்தாள்.
மனோவின் தொடர்ச்சியான கெஞ்சல்களுக்குப் பிறகு, ஒரு கட்டத்தில் அவள் மொபைல் எண்ணை பதிவிட்டிருந்தாள்.
Bhenchod!!!!.... இது போதும்!
பாபி அந்த எண்களை குறித்துக் கொண்டு சட்டென்று எழும்பி நின்றான். அவன் எழுந்த வேகம் தாங்காமல் நாற்காலி சர்ரென்று பின்னால் சென்றது.
அவன் மோவாயை மெல்ல தடவியபடி ஒரு மெல்லிய, தீர்மானமான புன்னகையை உதிர்த்தான்.
பின்னர்,
"My dear sunshine girl !!!!உன்னைக் கண்டுபிடிக்காம விடமாட்டேன். நீ உண்மையா, பொய்யா, முகமூடி போட்டுருக்கியா, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறேன்... நீ உண்மையாவே என் நண்பனோட காதலுக்கு தகுதியானவளா... இல்ல, அவன் எமோஷன்ஸை வச்சு விளையாடுறியான்னு சீக்கிரமே தெரிஞ்சுக்கிறேன் ..."
பாபியின் உதடுகள் முணுமுணுத்தன.
சவுண்ட் வரவில்லையே தவிர, ரவுண்டு கட்டி அடிக்க போகும் உறுதி தெரிந்தது.
தொடரும்
Currently viewing this topic 1 guest.
Latest Post: ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் Our newest member: Nithya Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page
