All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 5 / 5
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 32
 
அந்த அவசர சிகிச்சை பிரிவின் எதிரில் கண்ணீரோடு அமர்ந்திருந்த சாரதாவின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தான் தாரக்.
 
 
சுயநினைவின்றி கிடந்தவரை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டிருந்தாலும் இன்னும் அவரின் உடல்நிலை குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததில் உண்டான பதட்டத்தோடு இருவரும் அமர்ந்திருந்தனர். 
 
 
இதெல்லாம் அன்றைய கொடூர நாளுக்கு பின்னான நிகழ்வுகளே..! அன்று நடந்திருந்த அராஜகத்தில் குமரேசனின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரின் உயிரை காப்பாற்றி விட்டிருந்தாலும் இன்றுவரை அதன் பக்க விளைவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 
 
 
அடிக்கடி அவரின் உடல் நிலை பாதிக்கப்படுவதும், இப்படி மருத்துவமனையில் வைத்து போராடி அவரை மீட்டுக் கொண்டு வருவதும் தொடர்ந்து கொண்டே இருக்க.. ஒவ்வொரு முறையும் அந்த நேரங்களில் சாரதாவின் தவிப்பையும் உள்ளிருக்கும் குமரேசனின் போராட்டத்தையும் கண் முன்னே காணும் போதெல்லாம் குற்ற உணர்வில் துடித்துப் போவான் தாரக். 
 
 
ஏதோ ஒரு வகையில் இதற்கெல்லாம் அவனும் காரணமாகி போன குற்ற உணர்வு அவனை கொல்லும். அன்று ஒருவேளை அங்கு அவனிருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்காமல் தடுத்திருக்கலாம்..! இல்லையெனில் அந்த ஜீவமரண போராட்டத்தில் தன் உயிராவது போயிருக்கலாம்..!! என்றே அவனுக்குத் தோன்றும். 
 
 
இதில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் குமரேசன் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் வருத்தத்தை தர, கண்ணீரோடு அமர்ந்திருக்கும் சாரதாவின் கைகளை ஆதரவாக தட்டிக் கொடுத்தவாறே “கவலைப்படாதீங்க ஐயாவுக்கு எதுவுமாகாது..” என்று நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
எதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கண்கள் கலங்க அந்த அவசர சிகிச்சை பிரிவின் கதவையே எப்போது திறக்கும் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் சாரதா. வயதான காலத்தில் இவர்களுக்கு ஏன் இத்தனை கஷ்டம் என மனம் வலித்தது. 
 
 
அவர்களின் நீண்ட நெடிய காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவது போல் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த மருத்துவர், அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூற.. அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை அப்போதே வெளியிட்டார் சாரதா. 
 
 
தாரக்கிற்கு அவரின் நிலை நன்றாக புரிந்தது. வயதான காலத்தில் பிள்ளைகளின் துணையும் இல்லாமல் வேறு உறவுகளும் இல்லாமல் கணவன் மட்டுமே உறவென்று வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, அவரை இந்த நிலையில் காணும் ஒவ்வொரு நொடியும் எப்படி இருக்கும் என நன்றாகவே புரிந்தது. 
 
 
இதையெல்லாம் பார்க்கும் போது தான் என்ன செய்தாவது அந்த நாகராஜனையும் இதே போல் துடிதுடிக்க செய்ய வேண்டும் என்ற வெறி எழுகிறது. ஆனால் மனம் அமைதியான பிறகு அவன் செய்வதையே நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றும் தோன்றாமல் இல்லை. 
 
 
இப்படியே நன்மைக்கும் தீமைக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான் தாரக். அதில் உண்டான மன போராட்டத்தில் விழிமூடி இருக்கையில் தாரக் அப்படியே சாய்ந்தமர, அவனை கவலையாக திரும்பிப் பார்த்த சாரதா வேறு எதுவும் பேசி தொல்லை செய்யவில்லை. 
 
 
இரண்டு நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டவன் போல் மெல்ல விழிகளை திறந்தவன் “இப்போ வந்துடறேன் சாரதாம்மா..” என்று விட்டு எழுந்து சென்றான். முதல் தளத்தில் உள்ள கேண்டினுக்கு சென்று அவருக்கு சூடாக காபி வாங்கிக்கொண்டு திரும்பினான். 
 
 
“முதலில் இதை குடிங்க, கொஞ்சம் தெம்பா இருக்கும்..” என அவரிடம் தாரக் காபியை நீட்டவும், மறுப்பாக அவனைப் பார்த்தார் சாரதா. “சாரதாம்மா சொன்னா கேளுங்க, ஐயாவுக்கு இப்போ ஆபத்து எதுவுமில்லைன்னு டாக்டரே வந்து சொல்லியாச்சு இல்லை, இன்னும் என்ன..? கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சுடுவார்.. நாம அப்போ அவரை போய் பார்க்கலாம்..” என்று சமாதானமாக பேசியபடியே மீண்டும் அவரிடம் காபியை தாரக் கொடுக்க முயன்றான்.
 
 
அப்போதும் மறுப்பாக தலையசைத்தவர், “நான் ஒருமுறை அவரை பார்த்து பேசிடறேன் தீபன் தம்பி, அப்போ தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.. அதுவரைக்கும் எனக்கு எதுவும் வேண்டாம்..” என்றார் சாரதா.
 
 
“அதெல்லாம் பார்த்து பேசலாம் சாரதாம்மா, ஆனா இப்போ நீங்க எப்படி இருக்கீங்க தெரியுமா..? பக்கத்து பெட்டில் அட்மிட் செய்யற மாதிரி இருக்கீங்க.. முதலில் காபியை குடிங்க, இல்லை ஐயா கண்விழிக்கும் போது நீங்க மயங்கிடுவீங்க.. அப்புறம் அவருக்கு யார் பதில் சொல்றது..? உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அவருக்கு எப்படி இருக்கும்னு யோசிங்க..” என்று சொல்லவும் தயக்கத்தோடு காபியை வாங்கிக் கொண்டார் சாரதா. 
 
 
ஆனாலும் அவர் குடிக்காமல் இருப்பதைக் கண்ட தாரக் “நிஜமாவே ஐயாவுக்கு எதுவுமில்லை சாரதாம்மா, சீக்கிரம் கண் விழிச்சுடுவார் கவலைப்படாதீங்க.. இங்கே நிறைய நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க, தைரியமா இருங்க.. ஐயா ஹாஸ்பிடலில் இருக்கும் போது பக்கத்தில் இருந்து நான் தான் பார்த்துக்குவேன்னு நீங்க அடம் வேற செய்யறீங்க.. அதுக்கு நீங்க முதலில் தெம்பா இருக்கணும் இல்லை, குடிங்க..” என்று லேசான மிரட்டலோடு தாரக் சொல்லவும், மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக அந்த காபியை குடித்தார் சாரதா. 
 
 
அதன் பிறகே அவர் முகத்தில் கொஞ்சமாக தெளிவு வந்தது. அதை கண்டு நிம்மதியானவன், “கீழே கெஸ்ட் ரூம் புக் செஞ்சு இருக்கேன், நீங்க வேணும்னா அங்கே போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்ததுக்கறீங்களா..? நான் இங்கே பார்த்துக்கறேன்..” என்றான் தாரக். 
 
 
“ஐயோ அதெல்லாம் வேண்டாம் தம்பி, அவர் கண்ணு விழிக்கும் வரைக்கும் என்னால் நிம்மதியா இருக்கவே முடியாது.. நான் இங்கேயே இருக்கேன், நீங்க வேணும்னா போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க..” என்றவர், அதன் பிறகே நினைவு வந்தவராக “ஏதாவது முக்கியமான வேலையா இருந்தீங்களா தம்பி, உங்களை தொந்தரவு செஞ்சுட்டேனா..?” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் கேட்டார். 
 
 
“என்ன சாரதம்மா இது..? நீங்க வேற நான் வேறயா..! இதெல்லாம் எனக்கு தொல்லையா..?” என்றவன் அடுத்து பேச வார்த்தை வராமல் அப்படியே அமைதியானான்.
 
 
மீண்டும் அன்றைக்கு எங்களால் தானே இதெல்லாம் என ஆரம்பித்து எதையாவது தாரக் பேச போய் அந்த நினைவுகள் மேலெழுந்து வந்தால் சாரதா உடைந்தே போவார் என்றறிந்தே அதை தவிர்த்தான் தாரக்.  
 
 
அதே நேரம் இங்கு தாரக் வெளியேறியதை உறுதி செய்து கொண்டிருந்த முத்து, தன் ஆட்களோடு வீட்டிற்குள் புகுந்து சிந்துவை கொல்ல திட்டமிட்டான்.
 
 
இங்கு வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பான் என்றறிந்திருந்த முத்து அதை வைத்து ஒரு திட்டத்தோடு வந்திருக்க.. உள்ளே வேறு சில ஆட்களும் இருப்பது தெரிந்தது. “என்ன முத்துண்ணே, வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பான்னு சொன்னீங்க..? வேற யாரோ உள்ளே இருக்காங்களே..!” என்றான் உடன் வந்திருந்த குரு.
 
 
“இருந்தா என்னடா..? நாம பத்து பேர் இருக்கோம், அவங்களை சமாளிக்க முடியாதா..! கையில் பொருள் எல்லாம் வேற இருக்கில்லை..” என்று சிடுசிடுத்தான் முத்து. 
 
 
“அதுக்கு இல்லண்ணே..” என்று இன்னொருவன் இழுக்கவும், “எதுக்கும் இல்லை, வந்த வேலையை ஒழுங்கா முடிக்க பாருங்க.. இன்னைக்கு மட்டும் இதை முடிக்கலைனா நாம நாகராஜன் அண்ணே முகத்திலேயே முழிக்க முடியாது, புரியுதா..” என்று எரிச்சலோடு கத்தினான் முத்து. 
 
 
அதில் வேறு எதுவும் பேசாமல் மற்றவர்கள் அமைதியாகிவிட, கொஞ்சம் இருள் கவிழ தொடங்கிய பின் தாக்குதலை நடத்தினால் சரியாக இருக்கும் என்று எண்ணி காத்திருக்க தொடங்கினான் முத்து. 
 
 
இதற்கிடையில் முத்துவை தொடர்பு கொள்ள முடியாமல் போனதில் அங்குள்ள தன் ஆட்களின் மூலம் முத்துவோடு சென்றிருந்த குருவை தொடர்பு கொண்டார் நாகராஜன். 
 
 
“ஐயா..” என பவ்யமாக குரு அழைப்பை ஏற்று பேசத் தொடங்க “எங்கேடா போய் தொலைஞ்சான் அந்த முத்து..? நேத்திலிருந்து போனை காணோம்..” என்று நாகராஜன் சிடுசிடுக்க.. “ஐயா முத்து அண்ணே போன் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு.. அதனால் தான் லைன் கிடைக்கலைன்னு நினைக்கறேன்.. இதோ இங்கே தான் இருக்கார் கொடுக்கறேன்..” என்று மறைவாக நின்றிருந்த முத்துவிடம் கொண்டு சென்று குரு அலைபேசியை கொடுத்தான்.
 
 
நாகராஜன் அழைப்பில் இருப்பதை அறிந்து அதை வாங்கியிருந்த முத்து “அண்ணே..” என பணிவான குரலிலேயே அழைக்கவும், அவன் குரல் கேட்பதற்காகவே காத்திருந்தது போல் “ஏன்டா போன் உடைஞ்சதுனா வேற போனை யார்கிட்டயாவது வாங்கி பேசுறதுக்கு என்ன..? இல்லைனா போன விஷயம் என்னாச்சுன்னு எனக்கு எப்படி தெரியும்..?” என்று கோபப்பட்டார் நாகராஜன். 
 
 
அதில் இரு நொடிகள் அமைதியாக இருந்த முத்து “இல்லை ண்ணே, வேலையை முடிச்சுட்டு தான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.. திரும்பத் திரும்ப உங்களுக்கு நம்பிக்கையை மட்டும் கொடுத்துட்டு இருக்கிறது எனக்கே என்னமோ மாதிரி இருக்கு.. நீங்க கொடுத்த வேலையை முடிச்சுட்டேன்னு சொல்லணும், அதுதான் இப்போ என் நோக்கம்.. அதனால் தான் நான் உங்களுக்கு கூப்பிடவே இல்லை..” என்றான்.
 
 
அவனின் இந்த பதில் கொந்தளித்துக் கொண்டிருந்த நாகராஜனை கொஞ்சம் அமைதியாக்கியிருந்தது. பல வருடங்களாக முத்துவை அறிந்திருந்தவர் என்பதால் அவனின் விசுவாசத்தை பற்றியும் நன்றாகவே அவருக்குத் தெரியும். 
 
 
அதில் தனக்காக தான் இவ்வளவும் யோசித்து செய்கிறான் எனப் புரிந்து அமைதியான நாகராஜன், “சரி என்ன திட்டத்தோட கிளம்பி போயிருக்கே..?” என்று கேட்கவும், “இல்லை ண்ணே, இப்போ நான் எதையும் சொல்ல விரும்பலை.. செஞ்சு முடிச்சுட்டு வந்து இப்படி செஞ்சேன்னு விலாவாரியா சொல்றேன்..” என்றான் முத்து. 
 
 
அவன் குரலில் இருந்த நம்பிக்கை அவருக்கு இந்த முறை முத்துவின் குறி தப்பாது என்ற எண்ணத்தை கொடுக்க.. “சரி என்னமோ சொல்றே பார்ப்போம்..” என்று அப்போதும் தன் மிடுக்கு குறையாமலேயே பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார் நாகராஜன்.
 
 
அப்போதே தோப்பில் இருந்து வந்திருந்த அருண் குத்தகை பணம் சம்பந்தமாக பேசுவதற்காக நாகராஜனின் அறைக்குச் செல்ல.. உள்ளே முத்துவோடு அவர் பேசிக் கொண்டிருந்த அத்தனையும் அவனுக்கு கேட்டது. இதைக் கேட்டு திகைத்தவன், உடனடியாக அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்குள் சென்று வேகமாக கதவடைத்துக்கொண்டான். 
 
 
அவசரமாக அவன் தாரக்கை அழைக்க முயல, முதன்முறை இணைப்பு கிடைக்கவே இல்லை. மீண்டும் அவன் விடாமல் முயற்சிக்கவும் இந்த முறை அழைப்புச் செல்ல.. தாரக்கும் உடனே அதை ஏற்றிருந்தான். 
 
 
“சொல்லு அருண்..” என்று அவன் தொடங்கவும், “மாமா எங்கே இருக்கீங்க..? அங்கே சேஃப் தானே..!” என்று பதட்டத்தோடு ஒலித்த அருணின் குரலில் நெற்றியை சுருக்கியவன், “என்னாச்சு..?” எனவும் “முத்து அங்கே வந்திருக்கான், ஏதோ பெருசா பிளான் செய்யறான்னு நினைக்கறேன்.. அப்பாகிட்ட இப்போ தான் பேசிட்டு இருந்தான், முழுசா என்ன விவரம்னு எனக்கு தெரியலை.. எதுக்கும் நீங்க சேஃபா இருங்க, சிந்துவை பத்திரமா பார்த்துக்கோங்க.. என்னால் இப்போ உடனே கிளம்பி வரவும் முடியாது, உங்களுக்கு நிலைமை புரியுதா..?” என்று அவன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தந்தி போல் வேகமாக சொல்லி முடித்தான் அருண். 
 
 
இதில் அருணின் குரலில் இருந்த பதட்டம் தாரக்கிற்கும் தொற்றிக்கொள்ள.. சட்டென எழுந்து நின்றவனை சாரதா புரியாமல் பார்த்தார். அலைபேசியை அணைத்து சட்டை பையில் போட்டுக் கொண்டே “சாரதாம்மா ஒரு அர்ஜென்ட் வேலை, நான் போயாகணும்.. ராமை இங்கே வர சொல்றேன், நான் திரும்ப வர வரைக்கும் உங்களுக்கு துணைக்கு அவன் இருப்பான்.. அவன் இங்கிருந்து போக மாட்டான், நான் கண்டிப்பா சீக்கிரம் வந்துடறேன்..” என்றவனின் உடல் மொழியே அவனின் பதட்டத்தை புரிய வைக்க போதுமானதாக இருக்க.. சரி என்று மட்டும் தலையசைத்தார் சாரதா. 
 
 
அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக அங்கிருந்து கிளம்பி இருந்தவன், புயல் வேகத்தில் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்க.. அதே நேரம் முத்து தன் ஆட்களோடு தாரக்கின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்திருந்தான்.  
 
 
வாட்ச்மேன் சாப்பிட சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தவர்களை, ஒரு நொடி திகைத்துப் பார்த்தாலும் உடனடியாக செயலில் இறங்கினர் அங்கு இருந்த பாதுகாவலர்கள்.
 
 
இதைக் கண்டு பதறிப் போன வாட்ச்மேன் காவல்துறைக்கு அழைத்திருக்க.. உமாவோ பதட்டத்தோடு செய்வதறியாமல் திகைத்து நின்றார். அதில் வாயிற்கதவை உள்பக்கம் தாழிட்டுக்கொள்ள சொல்லி அவருக்கு கட்டளையிட்ட பாதுகாவலர்களின் தலைவன் முழு வேகத்தில் செயல்பட்டான். 
 
 
கையில் ஆயுதங்களோடு வந்தவர்களை எதிர்ப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தாலும் இதற்காகவே பயிற்சி பெற்றிருந்தவர்கள் என்பதால் அதை திறமையாகவே செய்து கொண்டிருந்தனர்.
 
 
இந்த சத்தம் கேட்டு கீழே வந்த சிந்து “என்னாச்சு என்ன இங்கே சத்தம்..?” எனவும், “நீங்க இங்கே ஏன் வந்தீங்க மேடம்..? மேலே போங்க, இங்கே வராதீங்க மேடம்..” என்று அவளை பாதுகாக்க முயன்றார் உமா. 
 
 
அதில் மேலும் குழம்பிய சிந்து பிரெஞ்சு விண்டோவில் எட்டிப் பார்க்க முயல.. அவளை தடுத்து “நீங்க உள்ளே போங்க மேடம், எதுவும் பிரச்சனையாகிட போகுது..” என்றார் உமா. 
 
 
இப்போதே நடக்கும் விபரீதம் சிந்துவுக்கு புரிய, ‘இது தனக்கான தாக்குதல்’ என உணர்ந்தவள் “ஐயையோ இங்கேயும் வந்துட்டாங்களா..?” என பதற, “நீங்க பயப்பட வேண்டாம், வெளியே பாதுகாப்புக்கு ஆளுங்க இருக்காங்க.. அவங்க இதையெல்லாம் பார்த்துப்பாங்க, நீங்க தயவு செஞ்சு ரூமுக்குள்ளே போய் கதவை மூடிக்கோங்க.. இப்போதைக்கு அது போதும்..” என்றார், தன் பயத்தை வெளி காண்பித்துக் கொள்ளாமல் சிந்துவை தைரியப்படுத்தும் முயற்சியில் உமா. 
 
 
ஆனால் அந்த முயற்சி எவ்வளவு தூரம் பலனளித்தது என தெரியவில்லை. சிந்து அப்படியே அசையாமல் மிரட்சியோடு நின்றிருக்க.. “மேடம் ப்ளீஸ் நீங்க இங்கே இருக்கறது தான் பிரச்சனை, உள்ளே போயிடுங்க.. எதுவா இருந்தாலும் சார் பார்த்துப்பார்..” என உமா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே அலறல்களும் பொருட்கள் உடையும் சத்தமும் பலமாக கேட்டது. 
 
 
இதில் சிந்துவின் உடல் வெளிப்படையாக நடுங்கத் தொடங்க.. அவளை அணைவாக பிடித்துக் கொண்ட உமா “வாங்க மேடம், நாம உள்ளே போயிடலாம்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எப்படியோ மாடி சுவர் ஏறி குதித்து பால்கனி வழியே உள்ளே வந்து விட்டிருந்தான் முத்து. 
 
 
அவன் கையில் அருவாளோடு வந்து நின்றதை கண்டு சிந்து விழிகள் விரிய திகைத்து நிற்க.. “இதோ இந்த நொடிக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன், உன் உயிர் என் கையில் தான் போகணும்னு இருக்கு போல.. என்ன இருந்தாலும் நாகராஜன் அண்ணே பொண்ணு, அதோட நான் தூக்கி வளர்த்த பொண்ணாச்சேனு தான் உன்னை என் கையால் முடிக்க வேண்டாம்னு நினைச்சு அவனுங்ககிட்ட பொறுப்பை கொடுத்தேன்.. ஆனா அது எவ்வளவு தப்புன்னு நல்லா புரிய வெச்சுட்டே.. 
 
 
நான் அண்ணனுக்காக எதுவும் செய்வேன், அவர் ரத்தத்தை வெட்டி சாய்க்க மாட்டேனா என்ன..? அது தான் அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கும்னா தாராளமா செய்வேன், இதை நான் என்னைக்கோ செஞ்சுருக்கணும்.. தப்பு செஞ்சுட்டேன், சின்ன சறுக்கல்.. அதனால் என்ன இப்போ அதை பெருசா சரி செஞ்சுடலாம்.. 
 
 
உன்னை முடிச்சுட்டேன்னு அண்ணேகிட்ட சொன்னா போதும் இந்த உலகத்திலேயே அந்த நிமிஷம் சந்தோஷமா இருக்க மனுஷன் அவரா தான் இருப்பார்.. அந்த சந்தோஷத்தை அவருக்கு கொடுத்தே ஆகணும், இது தான் என் இப்போதைய ஒரே லட்சியம்..” என்று பேசியபடியே ஒவ்வொரு அடியாக எடுத்து முன்னே வைத்து அவளை நெருங்கினான் முத்து. 
 
 
அவன் ஒவ்வொரு அடி முன்னே வைக்கவும், சிந்து ஒவ்வொரு அடியாக பின்னே வைத்து நகர்ந்தாள். உமாவும் மிரண்டு போய் சிந்துவை தன் கை வளைவில் வைத்தபடியே அவளை எப்படியாவது காப்பாற்றி விட முயன்றார்.
 
 
அவர்களின் அந்த முயற்சியை ஒரு கோணல் சிரிப்போடு பார்த்தபடியே முன்னே வந்த முத்து, “இனியும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்னு நினைக்கறியா..?” என்று கேட்டு ஒரு மாதிரியாக சிரித்தான். 
 
 
பின்னே நகர்ந்து கொண்டிருந்த சிந்து சுவரில் மோதி அதற்கு மேல் நகர முடியாமல் அப்படியே நிற்கவும், அவளுக்கு இதுதான் தன் இறுதி நொடி என தெளிவாக புரிந்து போனது. அதில் ‘தன்னோடு சேர்ந்து ஒரு பாவமும் செய்யாத உமாவும் ஏன் பலியாக வேண்டும்..?’ என்று மட்டும் தோன்ற.. அவர் எதிர்பாரா நேரத்தில் உமாவை பிடித்து வேகமாக தன்னிடம் இருந்து தள்ளி விட்டிருந்தாள் சிந்து. 
 
 
இதில் நிலைகுலைந்து தரையில் சரிந்த உமா அதிர்வோடு சிந்துவை பார்க்கவும், அவருக்கு எதிர் திசையில் வேகமாக ஓடியவளை முத்து அதே வேகத்தில் துரத்தி, அங்கிருந்து சுவரின் ஓரம் அவளை எந்த பக்கமும் நகர முடியா வகையில் இரு கைகளையும் வைத்து தடுத்திருந்தான் முத்து.
 
 
“உனக்கு என் உயிர் தானே வேணும், தாராளமா எடுத்துக்கோ.. என்னை தவிர யாரையும் காயப்படுத்தாதே, இங்கே இருக்க யாரும் எந்த தப்பும் செய்யலை..” என்று கையெடுத்து கும்பிட்டாள் சிந்து. 
 
 
உமாவை தள்ளிவிட்டு அவள் தப்பிக்க முயல்வதாக எண்ணியே வேகமாக அறிவாளை ஓங்கிக் கொண்டு அவளை நெருங்கிய முத்து, சிந்துவின் இந்த சரணாகதியில் ஒரு நொடி அப்படியே உயர்த்திய அருவாளை நிறுத்தி அவளை பார்த்தான். 
 
 
‘என்னை எதுவும் செஞ்சுடாதீங்க..’ என்று அழவோ.. தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சவோ இல்லை, மரணத்தை எதிர்ப்பின்றி ஏற்க தயாராகும் அவளின் இந்த நிலை அவனை அந்த நிலையிலும் வியக்க வைத்தது. “என்ன இருந்தாலும் நாகராஜ் அண்ணே ரத்தமாச்சே..! அதான் வீரம் பிறப்பிலேயே உடம்பில் ஊறி இருக்கு..!” என்று அதையுமே பெருமையாக பேசினான் முத்து.
 
 
ஆனால் அதற்கெல்லாம் எதிர்வினையாற்றும் நிலையில் இல்லாத சிந்து, தன்னை கொன்று விட்டு சந்தோஷமாக செல் என்பது போல் கைகூப்பி அவன் முன் தலை குனிந்து நிற்க.. அவளின் அந்த நிலை அவனை நினைத்ததை உடனே செய்யவிடாமல் தடுத்தது.
 
 
அவன் உள்ளே வந்த வேகத்திற்கு அப்போதே வெட்டி வீழ்த்தி இருந்தால் இந்த தயக்கம் துளியும் அவனிடமிருந்து இருந்திருக்காது.  
ஆனால் இத்தனை வருடங்களாக பீதியில் உறைந்த முகமும் கண்ணீர் வழியும் விழிகளும், தங்களை விட்டு விடுமாறு கெஞ்சும் குரல்களையும் கேட்டபடியே, உயிர்களை ரத்த வெறியோடு வேட்டையாடிக் கொண்டிருந்த ஒருவனுக்கு மரண பயம் துளியும் தெரியாத அந்த விழிகளும் முகமும் தன்னை கொன்று விட்டுப் போ என்ற ஒப்புதலும் ஏதோ ஒரு தயக்கத்தை கொடுத்தது. 
 
 
இப்படி ஒரு கொலையை இதற்கு முன் அவன் செய்ததில்லை என்பதனால் வந்த தயக்கமோ, என்னவோ..? ஆனால் உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்களுக்கு எங்கிருந்து எதிர்ப்பு வரப்போகிறது. 
 
 
தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவளுள் அந்த நொடி மிச்சம் இருந்தது. சற்று முன் வெளியில் இருந்து கேட்ட சத்தங்கள் எல்லாம் அவளுள் உண்டாக்கி இருந்த பயம், தனக்காக யாரின் உயிரும் போகக்கூடாது.. அதற்கு பதில் தன் உயிர் போனால் பரவாயில்லை என்ற எண்ணத்தை கொடுத்திருக்க.. துளியும் யோசிக்காமல் அதற்கு தயாராகி விட்டிருந்தாள் சிந்து. 
 
 
அதற்குள் தன் தயக்கத்தை எல்லாம் உதறி எதற்காக இங்கு வந்தானோ அதை செயல்படுத்த முயன்ற முத்து ஓங்கிய அருவாளை சிந்துவின் கழுத்தில் இறக்க இருந்த நொடி, அவன் வலது தோள்பட்டையில் ஒரு குண்டு இறங்கி இருந்தது.
 
 
அதில் அவன் அலறி சரிய, விழிமூடி நின்றிருந்த சிந்து தன் முகத்தில் தெரித்திருந்த ரத்த துளியிலும் முத்துவின் அலறலிலும் கண்களை திறந்து பார்த்தாள்.
 
 
அவளுக்கு நேர் எதிரே வெளி வாயிற்கதவுக்கு அருகில் தாரக் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். மனதில் உண்டாகியிருந்த பயத்திலும் தன் முன் ரத்த வெள்ளத்தில் ஒருவன் சரிந்து கிடப்பதை கண்டதிலும் சிந்துவிற்கு மயக்கம் வந்து விட, அப்படியே அவள் தள்ளாடி பின்னே சரிந்தாள். அதை கண்டு வேகமாக வந்து அவளை தாங்கி பிடித்திருந்தான் தாரக்.
 
 
அதற்குள் உமாவும் எழுந்து ஓடி வந்து விட, சிந்துவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தான் தாரக். வேகமாக உமா கொண்டு வந்திருந்த தண்ணீரை வாங்கி அவள் முகத்தில் தெளித்தவன், “செந்தூரிகா.. ரிலாக்ஸ் யூ ஆர் சேஃப், ரிலாக்ஸ் உனக்கு எதுவுமாகலை.. இங்கே எந்த பிரச்சனையும் இல்லை, எல்லாமே முடிஞ்சு போச்சு.. யூ ஆர் சேஃப்..” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். 
 
 
ஆனால் அவளிடம் துளியும் அசைவில்லை. அதில் செய்வதறியாது திகைத்தவன், உடனே மருத்துவரை அழைக்க நினைக்க.. “அதிர்ச்சியில் தான் சார் மயங்கி இருக்காங்க, வேற எதுவுமில்லை பயப்படாதீங்க..” என்றார் உமா.
 
 
அதற்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்தவன், மீண்டும் மீண்டும் அவளை தண்ணீர் தெளித்து கன்னத்தில் லேசாக தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.
 
 
அதற்குள் வாட்ச்மேன் அளித்திருந்த தகவலோடு, வரும் வழியில் தன் காவல்துறை நண்பனின் மூலம் தாரக்கும் புகாரளித்திருந்ததால் கொஞ்சம் வேகமாகவே காவலர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.
 
 
அங்கிருந்த சூழ்நிலையை கண்டு தங்கள் மேல் அதிகாரிக்கு அவர்கள் தகவல் தெரிவிக்க.. அவர்கள் கொடுத்த கட்டளையின்படி காவலர்கள் செயல்படத் தொடங்கி இருந்த அதே நேரம் சிந்துவிடம் லேசாக அசைவு தெரிந்தது. 
 
 
அதில் அவன் பரபரப்பாக அவளை பார்க்க.. மெல்ல விழிகளை திறந்த சிந்து தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்ததும் பதறி எழுந்தாள். அதைக் கண்டு “ஹேய் ரிலாக்ஸ், பிராப்ளம் எதுவுமில்லை.. எல்லாம் சால்வ்ட்..” என்றான் தாரக். 
 
 
ஆனால் அவனின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் சம்பந்தம் இல்லாத குரலில் “ஏன் அவரை சுட்டிங்க..?” என்றாள் சிந்து. 
 
 தொடரும்..
 
 இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 கவி சந்திரா


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 33
 
இவ்வளவு எழுப்பியும் அவளிடம் கொஞ்சமும் அசைவில்லாததை கண்டு உண்டான பதட்டத்தோடு தாரக் அமர்ந்திருக்கும் போதே கண்விழித்தவளை, அவளின் மயக்கத்திற்கான காரணம் உணர்ந்து தாரக் அமைதிப்படுத்த முயன்று பேசிக்கொண்டு இருக்க.. அதற்கு நேர் மாறான குரலில் “ஏன் அவரை சுட்டிங்க..?” என்றாள் சிந்து. 
 
 
அதில் புரியாமல் அவளைப் பார்த்தவாறே, “அவன் உன்னை வெட்ட வந்தான்..” எனவும் “அதனால் என்ன..? அதுக்காக அவரை சுடுவீங்களா..! என்னை தானே வெட்ட வந்தார், வெட்டிட்டு போகட்டுமே..!” என்றாள் சிந்து. 
 
 
அவள் பேசுவது அவனுக்கு குழப்பத்தை கொடுக்க.. “உனக்கு தலையில் எங்காவது அடிபட்டு இருக்கா..?” என்று அக்கறையோடு சிந்துவிடம் அவன் விசாரிக்க.. “என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கா உங்களுக்கு..? நான் நிஜமாகவே கேட்டுட்டு இருக்கேன்..” என்றாள் சிந்து.
 
 
அதில் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “நான் சுடலைனா அவன் உன்னை கொன்னு இருப்பான்..” என்று எரிச்சலோடு சொல்லவும், “கொல்லட்டுமே..! கொன்னுட்டு போகட்டுமே..!! இதுக்காக தானே இத்தனை அமர்க்களமும் நடக்குது, என்னை கொன்னுட்டா எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க இல்லை.. என் ஒரு ஆளுக்காக எத்தனை பேர் இன்னும் கஷ்டப்படணும்..? எனக்காக இன்னும் எத்தனை உயிர் போகணும்..? அப்படி என் உயிரை காப்பாத்த யாரும் உயிரை விடறதில் எனக்கு விருப்பமில்லை..” என்றாள் சிந்து. 
 
 
அதில் அவளை தாரக் விழிகளை சுருக்கி பார்க்கவும், “அவர் இப்.. இப்போ எப்படி இருக்கார்..?” என்றாள் கவலையோடு சிந்து. “அவன் உயிருக்கெல்லாம் எந்த ஆபத்தும் இல்லை..” என்று வெறுப்போடு கூறினான் தாரக்.
 
 
“நிஜமாவா..!” என்று நம்பாமல் சிந்து அவனை பார்க்கவும் “உன்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை, அவன் உயிரை எடுக்கறது என் நோக்கமும் இல்லை.. உன் உயிரை காப்பாத்தறது மட்டும் தான்..” என்றவனின் குரல் இறுகி இருந்தது. 
 
 
அதில் அமைதியானவள் “போதும் இதையெல்லாம் முடிச்சுக்கலாமே..!” எனவும், அவளை புரியாமல் பார்த்தான் தாரக். “எனக்கு ஓடி ஒளிஞ்சு ரொம்ப டயர்டா ஆகிடுச்சு, அவங்களுக்கு வேண்டியது நான்.. என் உயிர்.. அவ்வளவு தானே, நானே போயிடறேன்..” என சிந்து சொல்லி முடிக்கவும், “என்ன பேசிட்டு இருக்கேன்னு புரியுதா உனக்கு..?” என்றான் எரிச்சலோடு தாரக்.
 
 
“நல்லா புரிஞ்சு தான் பேசுறேன், என் உயிரை காப்பாத்த இன்னும் எத்தனை உயிர் போக போகுது.. இதெல்லாம் வேண்டாம், அவங்களுக்கு வேண்டியது நான் மட்டும் தானே.. என்னை கொன்னுட்டா அமைதியாகிடுவாங்களா..?” என்றாள் சிந்து. 
 
 
“சோ நீ தியாகியாகலாம்னு முடிவு செஞ்சுட்டே..!” என்றான் தாரக். “இல்லை, எனக்காக யாரும் தியாகியாக வேண்டாம்னு சொல்றேன்..” என்றவளை இரு நொடிகள் அமைதியாக பார்த்தவன் “ஒரு உயிர் போறது உனக்கு அவ்வளவு ஈஸியா போச்சா..?” என்றான். 
 
 
“இல்லை தான், ஆனா எல்லாருக்கும் அது தானே வேணும்..! அதை கொடுத்துட்டா இத்தனை பிரச்சனையும் அமர்க்களமும் இருக்காதே..! ஒவ்வொரு நாளும் இப்படி பதட்டத்திலும் பயத்திலும் போறதுக்கு ஒரே நாளில் எல்லாம் முடிஞ்சுடும் இல்லையா..!!” என சொல்லிக் கொண்டிருந்தவள், திடீரென தன் பேச்சை நிறுத்தி தாரக்கை ஒரு நொடி பார்த்து “ஏன் உங்களுக்கும் அதானே வேணும்..? ஆரம்பத்தில் நீங்களும் அப்படித்தானே இருந்தீங்க..!” என்றாள்.
 
 
“இல்லை ஒரு உயிர் போறது எவ்வளவு வலியை கொடுக்கும்னு என்னை விட அதிகம் யாருக்கும் தெரியாது.. அப்புறம் எப்படி நானே இன்னொரு உயிர் போகணும்னு நினைப்பேன்..? என்னைக்கும் அப்படி நான் நினைக்க மாட்டேன், அவ்வளவு ஏன் எங்களுக்கு இவ்வளவு கொடுமையை செஞ்ச உங்க அப்பாவை கூட நான் அப்படி நினைச்சதில்லை.. வாழ்க்கை முழுக்க அவர் குற்ற உணர்விலும் மன நிம்மதி இல்லாமலும் துடிக்கணும்னு மட்டும் தான் யோசிச்சேன்..” என்றான் உறுதியான குரலில் தாரக்.
 
 
அதில் அமைதியானவளுக்கும் அன்று தன்னைக் காப்பாற்ற தாரக் வந்தது நினைவில் இருந்தது. தன் உயிர் போக வேண்டும் என தாரக் நினைத்திருந்தால் நிச்சயம் வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என புரிய.. பதிலேதும் பேசாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள் சிந்து. 
 
 
அவளையே சில நொடிகள் அமைதியாக பார்த்திருந்தவன், “இதெல்லாம் எங்கே எப்படி தொடங்குச்சுன்னு உனக்கு தெரிஞ்சா தான் என்ன நடக்குதுன்னு உனக்கு புரியும்.. இன்னொரு முறை இப்படி பேசிட்டு இருக்காதே.. நீயே எல்லாம் தெரிஞ்சுக்க தானே நினைச்சே, நாளைக்கு எல்லாம் சொல்றேன் வெளியில் போகணும் தயாரா இரு..” என்று விட்டு எழுந்து சென்றான் தாரக்.
 
 
அவன் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த சிந்து அமைதியாக விழிமூடி சரிந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு அடி வயிறு வலிக்க தொடங்கியது. 
 
 
இரண்டு மாதமாகவே இப்படி தான் விட்டு விட்டு வயிறு வலித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் லேசாக இருந்த வலி போகப் போக அதிகமாகிக் கொண்டே செல்வது போல் அவளுக்கு தோன்றியது. அதில் விழிமூடி இதழை அழுத்தமாக மடித்து வலியை பொறுத்துக் கொள்ள முயன்றாள் சிந்து.
 
 
அதேநேரம் வெளியில் வந்த தாரக்கை நெருங்கி “சிவேஷ் சார்கிட்ட பேசிட்டேன், உங்ககிட்ட கேட்டுட்டு நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி கேஸ் எழுதிக்க சொன்னார்.. என்ன செக்ஷனில் இவங்களை உள்ளே போடணும் சார்..?” என்றார் கொஞ்சம் பவ்யமான குரலிலேயே இன்ஸ்பெக்டர். 
 
 
அதில் போலீஸ் வாகனம் பக்கம் தாரக் பார்வையை திருப்பவும், அடி வாங்கி எழுந்து கொள்ள முடியா நிலையில் சுருண்டு கிடந்தவர்களை எல்லாம் தூக்கி உள்ளே போட்டு இருப்பது தெரிந்தது. இன்னொரு பக்கம் முத்துவை ஆம்புலன்ஸில் ஏற்றுக் கொண்டிருந்தனர். 
 
 
இதையெல்லாம் வெறுமையாக பார்த்த தாரக் “சமீபமா நார்த் சைட்டில் இருந்து சில முகமூடி கொள்ளைக்காரர்கள் அடிக்கடி வந்து போறதா ஒரு தகவல் பரவி இருக்கில்லை..” எனவும் “ஆமாம் சார், அவங்க கை வைக்கும் இடம் எல்லாம் கொஞ்சம் பெரிய இடமா தான் இருக்கு.. வெறும் கொள்ளை மட்டுமில்லை, கொலையும் சர்வசாதாரணமாக செய்யறாங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“அதில் ஒரு கும்பல் தான் இவங்கன்னு கேஸ் போட்டுடுங்க..” என்று அலட்டிக் கொள்ளா குரலில் தாரக் சொல்லிவிட, சிறுத்திகைப்போடு அவனைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். 
 
 
இதுவரை அவர்கள் மேல் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் பட்டியல் மிகப்பெரியது. அதோடு இதை செய்து கொண்டிருப்பவர்கள் ஒரே குழு இல்லை என்ற சந்தேகமும் பரவலாக அனைவருக்கும் எழுந்திருந்தது. 
வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கூட சில நேரங்களில் தாக்குதல் நடந்திருக்கும். இதுவே பல குழுக்கள் இணைந்து செய்யும் ஒரு செயலாகவோ, இல்லை பல குழுக்கள் தனித்தனியாக செயல்படும் ஒரு முறையாகவோ இருக்கலாம் என்று யோசித்து, காவல்துறையில் பொதுவாக அவர்களை வடக்கு முகமூடி கொள்ளைக்காரர்கள் என்று அடையாளப்படுத்தி இருந்தனர். 
 
 
இந்த வழக்கில் பிடிபடுபவர்களால் அவ்வளவு எளிதாக வெளியில் வர முடியாது. அத்தனை கொலை வழக்குகளும் கொள்ளை வழக்குகளும் அவர்கள் மேல் உள்ளது. 
 
 
இதில் உண்டான திகைப்போடே இன்ஸ்பெக்டர் தாரக்கை பார்க்க.. அவரின் பார்வையை உணர்ந்தாலும் தாரக் கண்டு கொள்ளாதது போல் நின்றிருந்தான். காவல் வாகனத்தில் இருந்தவர்களை ஒருமுறை திரும்பி பார்த்த இன்ஸ்பெக்டர் “ஆர் யூ ஷுயர்..?” என்றார். 
 
 
அதற்கு வார்த்தைகளில் இல்லாமல் விழி அசைவில் மட்டும் தாரக் ‘ஆம்’ என சொல்ல.. இதற்கு மேல் பேச எதுவுமில்லை என்று உணர்ந்தவராக அங்கிருந்து நகர்ந்தார் இன்ஸ்பெக்டர். ஓரளவு தாரக்கின் செல்வாக்கை பற்றி முன்பே அறிந்திருந்தவர் என்பதோடு இன்று நேரடியாக உயர் அதிகாரியிடம் இருந்து வந்த கட்டளையும் சேர்ந்து அமைதியாக தாரக் சொன்னதை அப்படியே செய்ய வைத்தது.
 
 
******
 
 
மறுநாள் காலை சோர்வாக இருந்தாள் சிந்து. நேற்றைய பாதிப்பு இன்னும் அவளுள் மிச்சமிருப்பதை உணர்ந்தவனாக எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தான் தாரக்.
 
 
நேற்று வெளியில் செல்ல வேண்டும் என தாரக் சொல்லி இருந்ததால் சிந்துவும் தயாராகவே காத்திருக்க.. அமைதியாகவே அவர்களின் கார் பயணம் அமைந்தது. தாரக்கின் முகம் எப்போதும் போல் இறுக்கத்தோடு இருக்க.. அவன் விழிகளிலோ பெருமளவு ஏதோ ஒரு தவிப்பு. 
 
 
அதை கவனித்தாலும் பெரிதாக யோசிக்கும் நிலையில் இல்லாத சிந்து சோர்வாக விழிமூடி சாய்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு தாரக்கின் கார் தனாவோடு அவன் வாழ்ந்த வீட்டின் முன்னே சென்று நின்றது.
 
 
அதில் விழிகளை உயர்த்தியவள், எங்கு வந்திருக்கிறோம் என புரியாமல் சோர்வோடு கண்களை சுருக்கி சுற்றும் மற்றும் பார்க்க.. “இறங்கு..” என்பது போல் சைகையில் சொல்லிவிட்டு தாரக் முன்னே செல்ல.. எதுவும் புரியாக் குழப்பத்தோடு அக்கம் பக்கம் பார்த்தபடியே அவனை பின் தொடர்ந்தாள் சிந்து.
 
 
எந்த தயக்கமும் இல்லாமல் வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன், தன்னிடம் உள்ள சாவியை எடுத்து கீழ் வீட்டின் கதவை திறக்கவும் இது யாருடைய வீடு என்பது போல் அவனை சிந்து கேள்வியாக பார்த்திருந்தாள். 
 
 
தன் மன உணர்வுகளோடு போராடியவாறே உள்ளே நுழைந்தவனை கடந்து எதிரில் இந்த சுவரில் சிந்துவின் பார்வை பதிய, அங்கு தாரக் தனா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டிருந்த புகைப்படம் மாட்டப்பட்டிருப்பது தெரிந்தது. 
 
 
சுஜாதாவிடம் இருந்து அவள் கண்டெடுத்திருந்த அதே புகைப்படம். தாரக்கின் பின்னே உள்ளே செல்ல முயன்றவர்களின் கால்கள் அப்படியே நின்றது. இமைக்காமல் சில நொடிகள் இதைக் கண்டவள் அப்படியே காலை திரும்ப பின் இழுத்துக் கொண்டாள். 
 
 
சில நொடிகள் அந்தப் புகைப்படத்தின் முன் சென்று நின்றிருந்தவனின் விரல்கள் வலியோடு அதிலிருந்த தனாவின் முகத்தை வருடியது. இதை கண்டதும் சிந்துவுக்கு கண்களில் இருந்து கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிய தொடங்கியது.
 
 
அவள் தெரிந்து கொள்ள நினைத்தது தான். ஆனால் இப்போது அதைப்பற்றி அறிந்து கொள்ள போகிறோம் என்று எண்ணமே அவளுள் பெரும் பயத்தை விதைத்திருக்க.. மனம் படபடவென வேகமாக அடித்துக் கொள்ள தொடங்கியது. 
 
 
அந்த அழுத்தமும் பதட்டமும் அவளுள் பெரும் தடுமாற்றத்தை உண்டாக்கி இருக்க.. அருகில் உள்ள சுவரை பிடித்துக் கொண்டாள் சிந்து. அதே நேரம் திரும்பி வேதனையான விழிகளோடு அவளைப் பார்த்திருந்தவன், “உள்ளே வா, உன் எல்லா கேள்விகளுக்கும் குழப்பத்துக்கும் இங்கே பதில் கிடைக்கும்..” என்றான். 
 
 
அவளுக்கும் ஓரளவு அதெல்லாம் புரிந்தே இருந்தாலும், அதை எதிர்கொள்ள முடியா பயம் தான் முன்னிலை வகித்தது. உள்ளேச் செல்ல தன் காலை கூட அசைக்காமல் அப்படியே சிந்து நின்றிருக்க.. “நீ தானே தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டே..? உள்ளே வா..” என்றான் மீண்டும் மெல்லிய குரலில் தாரக்.
 
 
இதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் இரும்பென கனத்த தன் காலை எடுத்து உள்ளே சிந்து வைக்க.. அதே நேரம் அவள் பார்வையில் சுவற்றின் ஓரம் தெறித்து காய்ந்திருந்த ரத்தத் துளிகள் பட்டது.
 
 
அதில் அசையாமல் விழி விரிய அப்படியே நின்று விட்டவளினுள், பெரும் நடுக்கம் உண்டானது. ‘தன்னால் இதை தாங்கிக் கொள்ள முடியுமா..?’ என்ற கேள்வி இப்போது சிந்துவுக்கு பெருமளவில் எழ.. கண்ணீர் திரையிட்ட விழிகளோடு திரும்பி தாரக்கை பார்த்தாள் சிந்து.
 
 
அதே நேரம் அவனும் சிந்துவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே வர அவளுள் உண்டான தயக்கத்திலிருந்து இந்த நொடி அவள் உடல் வெளிப்படையாக நடுங்கியது வரை அவனுக்கு தெளிவாகவே புரிந்தது. அதீத வலியும் வேதனையும் அவன் முகத்தில் படர்ந்திருக்க.. ‘என்ன பேசுவது..? யார் எங்கிருந்து எதை தொடங்குவது..!’ என புரியா நிலையில் இருவரும் சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படி நின்றனர். 
 
 
பின் மெல்ல தன் இத்தனை வருட பழக்கத்தில் உண்டான முயற்சியோடு ஓரளவு தன்னை முயன்று மீட்டுக் கொண்டிருந்த தாரக் மெல்லிய குரலில் அனைத்தையும் சொல்லத் தொடங்கினான். அதைக் கேட்க கேட்க சிந்துவிற்கு நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடியது.
 
 
தன் அருகில் இருந்த சுவரை பிடித்துக் கொண்டு தன்னை சமாளித்துக் கொள்ள முயன்றவளால் தனா தன் இறுதி நொடியில் அனுபவித்த துன்பங்களை கேட்ட பிறகு அது முற்றிலும் முடியாமல் போக.. அப்படியே உடைந்து மடங்கி தரையில் அமர்ந்து வெடித்து கதறி அழ தொடங்கினாள் சிந்து. 
 
 
அவளின் நிலையை கண்டு வருந்தியவனாக “செந்தூரிகா, வேண்டாம் அழாதே..!” என்று அவளை மெல்லிய குரலில் தேற்ற முயன்றாலும் தாரக்கின் குரலிலும் அந்த வருத்தத்தின் சுவடு நிறையவே பதிந்திருந்தது.
 
 
ஆனால் இப்படி ஒருவன் தன்னருகில் தனக்காக நின்று பேசிக் கொண்டிருப்பதை கூட உணரும் நிலையில் சிந்து துளியும் இல்லை. அத்தனை அவள் மனம் நடந்தவற்றையெல்லாம் கேட்டு பாதித்திருந்தது. அதோடு அன்று தனக்கு நடக்கவிருந்த கொடுமையும் நினைவுக்கு வந்ததில் உடலும் மனமும் அவளுக்கு உதறி எடுக்கத் தொடங்க.. மூச்சு விடக் கூட சிரமமானது. 
 
 
அதில் வாயைத் திறந்து ஆழ்ந்து சுவாசிக்க போராடி அதற்கும் முடியாமல் போக கண்கள் மேலே சொருகி அவள் நிலை ஒரு மாதிரி மாறிக் கொண்டிருப்பதை அப்போதே உணர்ந்தவன், “ஹே என்னாச்சு..? செந்தூரிகா..” என வேகமாக அவளை நெருங்கி தன் கைகளில் தாங்கி பிடித்தான் தாரக். 
 
 
அப்போதும் அவள் தன் நிலை உணராமல் மூச்சு விட போராடிக் கொண்டிருக்க.. “ஓ ஷிட்..” என்று அவளைக் கண்டு பதறியவனாக சிந்துவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு காரை நோக்கி ஓடினான் தாரக்.
 
 
 தொடரும்..
 
 இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
 கவி சந்திரா 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 32 & 33(a)
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 

This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 33 (b)
 
சிந்துவின் நிலையைக் கண்டு உண்டான பதட்டத்தோடு வெகு தூரம் அவளை அழைத்துச் செல்ல விரும்பாமல் அருகில் இருந்த சின்ன மருத்துவமனையிலேயே அவளை அனுமதித்திருந்தான் தாரக்.
 
 
அங்கு அப்போது வேலையில் இருந்த பெண் மருத்துவர், சிந்துவை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதித்துக் கொண்டிருக்க.. வெளியே பதட்டத்தோடு காத்திருந்தான் தாரக்.
 
 
திடீரென அவளுக்கு என்ன ஆனது என்றே அவனுக்கு புரியவில்லை. ‘அவள் மார்பை பிடித்துக் கொண்டு துடித்ததில் நெஞ்சு எதுவும் வலிக்கிறதா..? இல்லை மூச்சு விட சிரமமாக இருக்கிறதா..? அதுவும் இல்லையென்றால் வலிப்பு போல் எதுவும் வந்துவிட்டதா..!’ என புரியா குழப்பம் இந்த நொடி வரை அவனுக்கு இருந்தது. 
 
 
காரில் அவளை அழைத்து வரும் போதுமே சிந்துவின் நிலையைக் கண்டு உண்டான பயத்தோடே பயணித்து இருந்தவன், இதற்கு மேலும் நேரம் கடத்த விரும்பாமல் முதலுதவிக்கென இங்கு அழைத்து வந்து விட்டிருந்தான்.
 
 
சிந்துவை பரிசோதித்து விட்டு வெளியில் வந்து மருத்துவர் சொல்லப் போகும் வார்த்தைக்காக அவன் காத்திருக்க.. கொஞ்சம் அதிகமாகவே அவன் பொறுமையை சோதித்து விட்டே வெளியில் வந்தார் மருத்துவர். 
 
 
“எதனால் அவங்களுக்கு இப்படி வந்ததுன்னு சொல்ல முடியுமா..? திடீர்னு என்னாச்சு..?” என அவர் கேட்கவும், “இல்லை, கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டாங்க.. ஒரு ஃபேமிலி இஷ்யூ பத்தி தெரிய வந்ததில் அழுதுட்டே இருக்கும் போது திடீர்னு இப்படி..” என்றான் தாரக். 
 
 
“அவங்களைப் பார்த்ததுமே நினைச்சேன், ஏதோ எதிர்பாராத அதிர்வு பயம் எல்லாம் சேர்ந்து தான் அவங்களுக்கு பேனிக் அட்டாக் வந்து இருக்கு.. நல்லவேளை சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க, இனி பயப்பட எதுவுமில்லை.. அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும், இதுக்கு முன்னே இந்த மாதிரி வந்திருக்கா..?” என்றவருக்கு பதிலளிக்க முடியாமல் விழித்தான் தாரக்.
 
 
“அவங்களை பத்தி எதுவும் உங்களுக்கு தெரியாதா..?” என்றவர் தாரக்கின் முகத்திலிருந்து என்ன கண்டாரோ..? வேறு எதுவும் கேட்காமல் “ஒருவேளை இதுதான் அவங்களுக்கு முதல்முறையா இருந்தாலும் அதுக்காக இப்படியே விட்டுட கூடாது.. தெரபி செக்ஷன் ஒண்ணு அவங்களுக்கு அரேஞ்ச் செஞ்சுடுங்க.. ஆரம்பத்திலேயே இதை சரி செஞ்சுடறது தான் நல்லது..” என்றார்.
 
 
“அவ்வளவு சிவியரா இருக்கா..? ஓகே நான் உடனே அது என்னன்னு பார்க்கறேன்..” என்றான் தாரக்.
 
 
“ஓகே, அவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க, இப்போ ஐவி போட்டு இருக்கேன்.. ஒரு இரண்டு மணி நேரம் அவங்க இங்கே இருக்க வேண்டி இருக்கும்..” என்று விட்டு மருத்துவர் உள்ளே செல்ல.. அதில் உண்டான நிம்மதி பெறுமூச்சோடு அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றான் தாரக். 
 
 
இப்போதைக்கு சிந்துவுக்கு ஆபத்தில்லை என்பதே அவனுக்கு பெரும் நிம்மதியை தந்தது. விரைவில் சிந்துவை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழு பரிசோதனை செய்து விட வேண்டும் என மனதினோரம் குறித்துக் கொண்டவன், அவள் கண் விழிக்க காத்திருக்க.. மருத்துவர் சொன்ன நேரத்தையும் கடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகே கண் விழித்தாள் சிந்து.
 
 
முதலில் அவள் இருக்குமிடம் புரியாமல் திருதிருக்க.. தாரக் தான் அமைதிப்படுத்தி நிலைமையை புரிய வைத்து, அதன் பின் மிகவும் சோர்வாக காணப்பட்டவளை கை தாங்கலாக வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் தாரக்.  
 
 
அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு உமாவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளக் கூறியவன், சோர்வோடு தன் அறைக்குள் சென்று படுக்கையில் சரிந்தான். 
 
 
இன்று அரை நாள் முடிவதற்குள் பல நாட்களைக் கடந்து வந்தது போல் அவனுக்கு இருந்தது. ‘அவளால் இதை தாங்கிக் கொள்ள முடியாது என தெரிந்தே சொல்லி இருக்கக் கூடாதோ..!’ என்ற குற்ற உணர்வு அவனுள் உறுத்திக் கொண்டே இருந்தது. 
 
 
‘இன்றைய சிந்துவின் நிலைக்கு காரணம் தானே..!’ என்று எண்ணத்தில் உண்டான கலக்கமும் அவள் அனுபவித்த வலிகளைக் கண்டதில் உண்டான மன வருத்தமுமாக படுத்திருந்தான் தாரக்.
 
*****
 
யுவன் சொன்னது போல் தாரக் கோடீஸ்வரர் வீட்டில் பிறந்தவன் தான். ஒரே பிள்ளையாக எந்த குறையும் தெரியாமல் வளர்ந்திருந்தவனுக்கு கல்லூரி முடித்த நேரத்தில் அவன் அன்னை கங்காவுக்கு கேன்சர் இருப்பதாக தெரிய வந்த செய்தி பேரிடியாக இருந்தது.
 
 
அதன் பின்னான நாட்கள் நரகத்தின் உச்சம் என்பான் தாரக். ஒவ்வொரு முறையும் கங்காவோடு அவன் மருத்துவமனைக்குச் சென்று வரும் போதெல்லாம் அவரின் வலிகளை அருகில் இருந்து பார்த்ததில், அவரை விட அதிகம் துடித்திருக்கிறான் தாரக்.
 
 
ஆறு மாதம் அத்தனை வலிகளையும் அனுபவித்துவிட்டு கங்கா தன் மண்ணுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சென்று விட, மனதளவில் வெகுவாக தளர்ந்து போனான் தாரக். ஆனால் இத்தனை நாள் அவர் அனுபவித்த வலிகளுக்கு ஒரு விடுதலை கிடைத்ததே என்று தோன்றினாலும் அவரின் இழப்பு அவனை பெரிதும் பாதித்தது.
 
 
ஒற்றைப் பிள்ளையாய் தாயின் மொத்த அன்பையும் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வளர்ந்திருந்தவனுக்கு அவர் இல்லாமல் வாழ்வது பெரும் சிரமமாக இருந்தது. கங்காவின் நினைவிலேயே அறைக்குள் சுருண்டு கிடந்தவனை சந்திரகாந்தின் இரண்டாம் திருமண செய்தி கொஞ்சம் திடுக்கிட செய்தது என்னவோ உண்மை தான். 
 
 
ஆனால் அவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையென ஒன்று உள்ளது. அதனால் அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்வதில் தவறு என்ன என்ற அளவுக்கான புரிதல் தாரக்கிற்கு உண்டு. 
 
 
அப்படிப்பட்டவனையும் கோபம் கொள்ள செய்து இருந்தது சந்திரகாந்தியின் செயல். ஏனெனில் கங்கா இருந்து ஒரு மாதம் முடிவதற்குள் அவர் திருமணம் செய்து கொண்டு வந்திருந்தது ஒன்று என்றால், மற்றொன்று தாரக்கை விட ஒரு வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தது.
 
 
இதெல்லாம் கங்காவின் மரணம் எப்போதென எதிர்பார்த்து அவர் காத்திருந்தது போலான மனநிலையை தாரக்கிற்கு கொடுத்திருக்க.. ஆனாலும் எதிலும் தலையிட்டுக் கொள்ளாமல் யாரோடும் எந்த பிரச்சனையும் செய்யாமல் தானுண்டு தன் வேலை உண்டு என ஒதுங்கிக் கொண்டான் தாரக். 
 
 
ஆனால் அதற்கும் அனுமதிக்காமல் சித்தி என்ற பெயரில் வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள். தன் அன்னை ராணியாக வலம் வந்த இந்த வீட்டில் அவரின் பொருட்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பது போல் அனைத்தையும் ஸ்டோர் ரூமில் போட்டு பூட்ட முயற்சிகள் நடந்து கொண்டிருக்க.. முதல்முறையாக தன் எதிர்ப்பை தெரிவித்தான் தாரக்.
ஆனால் புது மனைவியின் மீதான மயக்கத்தில் இருந்த சந்திரகாந்த்திற்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. ‘அவளின் பொருட்கள் இங்கே கண் முன் இருந்தால் தான் கங்கா நம் நினைவில் இருக்கப் போகிறாளா என்ன..? சின்ன சின்ன விஷயங்களை பெரிதுப்படுத்தி வீட்டில் பிரச்சனை செய்ய வேண்டாம்..’ என்று மகனைத்தான் கண்டித்தார்.
 
 
ஆனாலும் அதற்கு அனுமதிக்காமல் பிரச்சனை செய்து கங்காவின் பொருட்கள் அனைத்தையும் தன் அறையின் பக்கத்து அறைக்கு மாற்றிக் கொண்டு விட்டிருந்தான் தாரக். இதில் தான் தோற்று விட்டது போல் உணர்ந்த அவன் சித்தி அதன் பின் தொடர்ந்து தாரக்கை சீண்டிக்கொண்டே இருந்தார்.
 
 
அதேநேரம் தாரக் அலுவலகப் பொறுப்பை ஏற்பதாக இருந்தது. அதற்கான வேலைகளை சந்திரகாந்த் பார்த்துக் கொண்டிருக்க.. தொழிலுக்குள் தாரக் நுழைவது பிடிக்காத சித்தி மீண்டும் வேறு வகையில் பிரச்சனையை தொடங்கினார். 
 
 
தாரக் தனக்கு சரியான மரியாதை கொடுப்பதில்லை, தன்னைச் சித்தி என அழைப்பதில்லை என்றெல்லாம் ஒரு பெரும் புகார் பட்டியலை சந்திரகாந்த்திடம் வாசித்தவர், அவன் தன்னை மரியாதையான இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்றாலோ தொடர்ந்து தனக்கான இடம் இந்த வீட்டில் கிடைக்க வேண்டும் என்றாலோ தன் அண்ணன் மகளை தாரக்கிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.. அப்போதுதான் எங்கள் இருவருக்கு இடையே இருக்கும் உறவு வலுவடையும் என்றெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரகாந்தியிடம் அவர் சொல்லிக்கொண்டே இருந்ததில் அவருக்கும் ஒரு கட்டத்தில் இதுவும் சரி என்றே தோன்றியது.
 
 
தாரக் தொழிலில் பொறுப்பெடுக்க போகும் நேரத்தில் திருமணத்தையும் செய்து வைத்து விட்டால், குடும்ப பொறுப்பையும் சேர்ந்து மகன் சுமக்க சரியாக இருக்கும் என நினைத்தவர், தாரக்கிடம் இதைப் பற்றி பெரிதாக எதுவும் பேசாமல் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். 
 
 
ஏனெனில் சிறுவயதிலிருந்தே இதுதான் அவர் வழக்கம். அவரின் முடிவில் பெரிதாக தாரக்கிற்கு எந்த மறுப்போ விருப்பமின்மையோ எப்போதுமே இருந்ததில்லை. அதேபோல் அவருமே தன் மகனுக்கு அனைத்திலும் சிறந்ததை மட்டுமே தேர்ந்தெடுப்பார்.
 
 
கங்காவுக்கும் தன் கணவன் மேல் பெரும் நம்பிக்கை உண்டு என்பதால் எப்போதும் எந்த விஷயத்திலும் தலையிட்டுக் கொள்வதில்லை. மகனை அன்பும் பாசமுமாக வளர்ப்பதில் மட்டுமே அவர் கவனம் இருக்க.. இதில் எப்போதுமே தானாக முடிவெடுத்து பழகியிருந்த சந்திரகாந்த் இப்போதும் அதே போல் செய்ய.. முதன்முறையாக தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பெரும் பிரச்சனை ஒன்று வெடித்தது. 
 
 
தன்னிடம் கேட்காமல் இவ்வளவு அவசரமாக திருமண ஏற்பாட்டை அவர் செய்தது ஒரு பக்கம் தாரக்கின் கோபத்திற்கு காரணம் என்றால் மற்றொரு பக்கம் அவர் அவனுக்கென பார்த்திருக்கும் பெண்ணின் வயது பதினெட்டு தான் ஆகி இருந்தது.
 
 
இப்போதே பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருக்கும் பெண்ணை கல்லூரிக்கு அனுப்பாமல் இத்தனை அவசரமாக எதற்கு திருமணம் செய்து கொடுக்க நினைக்க வேண்டும்..? இதன் பின் நிச்சயம் பெரிதாக ஏதோ திட்டம் இருப்பது சின்ன குழந்தைக்கு கூட புரியும், இதைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கோபம்.. எப்போதுமே பெண் கல்வி பெண் முன்னேற்றம் என்று தன் தொழிற்சாலையிலும் அலுவலகத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்திரகாந்த் இன்று இப்படி கண்மூடித்தனமாக நடந்து கொண்டதில் உண்டான ஆதங்கம் என எல்லாம் சேர்ந்து சாதாரணமாகவே தன் மறுப்பை கொஞ்சம் அழுத்தமாகவே தாரக் தெரிவிக்க ஆரம்பிக்க.. சந்திரகாந்தினால் இந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
 
 
எப்போதுமே தன் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத தாரக், இப்படி கண்மூடித்தனமாக மறுப்பதற்கு காரணம் தன் இரண்டாம் மனைவி சொல்வது போல் தாரக் அவளை வெறுப்பதால் தான் என்று எண்ணிய சந்திரகாந்த் தொடர்ந்து மகனை வற்புறுத்தினார்.
 
 
அந்த வற்புறுத்தல் கூட கிட்டத்தட்ட கட்டளை போல் இதை நீ செய்தால் மட்டுமே என் மகனாக இங்கு நீடிக்க முடியும்.. கம்பெனியில் உனக்கான இடம் கொடுக்கப்படும், இல்லையென்றால் எதுவும் உனக்கு இல்லை என்கிற ரீதியில் இருக்க.. இது தாரக்கின் ஆத்திரத்தை மேலும் தூண்டி விட்டிருந்ததில் மொத்தமாக அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு வெளியில் வந்து இருந்தான் தாரக்.
 
 
அப்போதும் கூட இதெல்லாம் ஆரம்ப கட்ட வீம்பு திரும்ப தாரக் சீக்கிரமாக வீட்டிற்கு வந்து விடுவான் என்று நினைத்திருந்த சந்திரகாந்த், அதற்கு நேர் மாறாக அவன் வரவே கூடாது என்று நினைத்த சந்திரகாந்தின் இரண்டாம் மனைவி, தன் திட்டம் பலித்து விட்ட சந்தோஷத்தோடு வளைய வந்து கொண்டிருந்தாள். 
 
 
ஆனால் நாட்கள் போகப்போகத்தான் சந்திரகாந்திற்கு மகன் திரும்பி வராத வருத்தம் புரிய தொடங்கியது. அவன் அருகில் இருந்த போது தெரியாத அருமை மகன் விலகிச் சென்ற பிறகு புரிந்ததில் அதிகம் தாரக்கை தேட தொடங்கினார் சந்திரகாந்த். 
 
 
இது திட்டம் போட்டு தாரக்கை வெளியே அனுப்பிய சந்திரகாந்தின் இரண்டாம் மனைவிக்கு தொல்லையாக இருக்க.. அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பி மீண்டும் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றார். 
 
 
முன்பெல்லாம் அவரின் இந்த அதீத அன்பும் அக்கறையும் தன் மேலான காதலாக தெரிந்த சந்திரகாந்திற்கு இப்போது எல்லாம் அது தொந்தரவாக தெரிந்தது. அதோடு அவர்களின் செயல்கள் எல்லாம் கொஞ்சம் அதீத நாடகத் தன்மையோடு இருப்பது போல் தெரிந்ததில், அதன் பிறகே கூர்ந்து அனைவரையும் கவனிக்கத் தொடங்கினார் சந்திரகாந்த். 
 
 
வழக்கமாக எல்லோரும் சொல்வது போல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற கூற்றின்படி அவர் கண்ணை மறைத்துக் கொண்டிருந்த திரைகள் எல்லாம் விலகி தன் இரண்டாம் மனைவியும் அவரைச் சுற்றி இருக்கும் கூட்டத்தின் உண்மை முகமும் புரியத் தொடங்கிய உடனேயே சுதாரித்துக் கொண்ட சந்திரகாந்த், அவர்களுக்கு கொஞ்சமும் சந்தேகம் வராத வகையில் யாரும் எதிலும் தலையிடாதவாறு அனைத்து சொத்துக்களும், தொழில் வீடு என எல்லாம் தன் ஒரே மகனுக்கு மட்டுமே சென்று சேர வேண்டும் என பத்திரப்பதிவு செய்து அதை தன் வக்கீலிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்.
 
 
அவர் மரணம் எந்த வகையில் எப்போது நிகழும் என யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்கு முன்பே தாரக்கை அவர் கண்டுபிடித்து விட்டாலோ இல்லை தாரக் அவரைத் தேடி வந்துவிட்டாலோ இதை அவன் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும் இல்லையெனில் தனக்குப் பின் தாரக்கை எப்படியாவது தேடி கண்டுபிடித்து இதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே வேண்டுகோளாக இருந்தது. 
 
 
தனாவோடான தாரக்கின் திருமணத்திற்கு பிறகான ஒரு நாளில் எதிர்பாராமல் அவனை வழியில் கண்ட வழக்கறிஞர், தனியே சந்தித்து பேச விருப்பம் தெரிவிக்க.. அவன் அதற்கு சம்மதிக்கவே இல்லை. அதோடு சந்திரகாந்திடம் தன்னை பார்த்ததாக கூட சொல்லக்கூடாது என்ற வாக்குறுதியையும் வாங்கிக் கொண்டிருந்தவன், அப்படி தன் பேச்சை மீறி இவர் ஏதாவது செய்ததாக தெரிய வந்தால் இந்த ஊரை விட்டே சென்று விடுவேன் என திட்ட வட்டமாக கூறிவிட்டே வந்திருந்தான் தாரக்.
 
 
தாரக் கேட்டுக்கொண்டபடி வழக்கறிஞர் சந்திரகாந்தியிடம் எதையும் மறைக்கவில்லை. மாறாக அனைத்தையும் கூறியவர் கங்கா இறந்த பிறகு தாரக் முகத்தில் இல்லாத நிம்மதியும் அமைதியும் சந்தோஷமும் இப்போது அவனிடம் இருப்பதை கண்டதாக சொல்லவும், அதைக் கெடுக்க வேண்டாம் என முடிவு செய்த சந்திரகாந்த், தாரக்கிற்கே தெரியாமல் அவனை இரண்டு முறை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு சென்றிருந்தார்.
 
 
இந்நிலையில் தான் டிரைவரின் மூலம் அவர் தன் மகனைக் காண செல்வதாக தெரிந்து கொண்ட இரண்டாம் மனைவியும், அவரின் குடும்பத்தாரும் திட்டமிட்டே சந்திரகாந்தின் உணவில் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்திருந்தனர்.
 
 
அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அங்கிருந்த வேலையாள் ஒருவரின் மூலம் விவரமறிந்த வழக்கறிஞர் தான், தன் காவல்துறை நண்பரோடு சேர்ந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து சந்திரகாந்தை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.
 
 
அதன் பிறகு அவர் தாரக்கை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் அவன் வேலையில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வேலை முடிந்த பிறகே தெரியாத புது எண்ணில் இருந்து தொடர்ந்து வந்திருந்த அழைப்பை கவனித்து ஏற்றிருந்த தாரக், அதன் பின்னே விவரம் அறிந்து தன் தந்தையை காண சென்ற போது அவர் சுய நினைவிலேயே இல்லை. 
 
 
மருத்துவர்கள் தொடர்ந்து போராடியும் உள்ளே பல நாட்களாகச் சென்றிருந்த விஷத்தின் தாக்கம் அவரை கோமாவிற்கு அழைத்துச் சென்று விட்டிருந்தது. சரியாக உயிர் பிரிவதற்கு ஐந்து நிமிடம் முன் அவருக்கு நினைவு திரும்ப.. தன் மகனை பார்க்க விரும்பியவரின் முன் சென்று நின்ற தாரக்கை விழிகள் கலங்க சில நொடிகள் பார்த்தவர், தாரக்கின் கைகளைப் பிடித்து கொண்டு “என்னை மன்னிச்சுடு கண்ணா, எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிச்சுடு.. புத்தி கெட்டு போய் இந்த வயசில் தப்பு செஞ்சுட்டேன், நான் செஞ்சா எல்லாம் சரியா தான் இருக்கும்னு கண்மூடித்தனமா இருந்துட்டேன்.. இந்த வயதில் நம்மை தேடி வருவது உண்மையான காதலா இருக்காதுன்னு எனக்கு புரியவே பல காலம் ஆகிடுச்சு.. அதுக்கு பிறகு தான் மீள முடியா ஒரு சூழலில் மாட்டிக்கிட்டேன்னு புரிஞ்சது.. 
 
 
எனக்கு ஒரு மகன் இருக்கான், எப்படியாவது என்னை வந்து இதில் இருந்து மீட்டுடுவான்னு ரொம்ப ஆவலா காத்திருந்தேன்.. ஆனா அதுக்கான சந்தர்ப்பத்தை அவனுக்கு நானே கொடுக்கலைன்னு மறந்துட்டேன், நீ வெளியே போக நானும் காரணமா இருந்தது, எவ்வளவு பெரிய தப்புன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது..” என்றவரை மறுப்பான வார்த்தைகள் சொல்லி தாரக் தேற்ற முயல.. ஆனால் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் “இல்லை நான் பேசிடறேன், நான் பேசி முடிச்சுடறேன்.. எனக்கு நிறைய நேரம் இல்லை..” என்றவர்,
 
 
“உனக்கு சேர வேண்டியதெல்லாம் உனக்கு மட்டுமே சேர வேண்டியதெல்லாம் உன்னை வந்து சேரும், அதுக்கான ஏற்பாடுகளை நான் செஞ்சுட்டேன்.. எனக்காக இந்த அப்பாவுக்காக உன் மேலே உயிரையே வெச்சுருந்த உங்க அம்மாவுக்காக.. நீ அதை எல்லாம் மறுக்காம ஏத்துக்கணும், நம்ம சாம்ராஜ்யம் சரியாம நீ தான் பார்த்துக்கணும்.. இதை மட்டும் மறுக்காம செய் ப்ளீஸ்.. எனக்கு வாக்கு கொடு..” என அவர் உயிரை விழிகளில் தேக்கி கேட்கவும், ‘இல்லை’ என மறுத்து சொல்ல அவனால் அந்த நொடி முடியவில்லை. 
அதில் தலையை மட்டும் சரி என்பதாக அசைக்க.. இது ஒன்றே தனக்கு போதும் என்பது போல் தாரக்கின் கைகளை அழுத்தி பிடித்தபடியே தன் உயிரை விட்டிருந்தார் சந்திரகாந்த்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 34 (a)
 
சிந்துவை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க விட்டவன், அடுத்த நாள் வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான். அன்று அந்த மருத்துவர் சொல்லியிருந்தப்படி முதலில் அவளுக்கு தெரபிக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தான்.
 
 
அவ்வளவு எளிதில் மருத்துவமனைக்கு வர சிந்து ஒத்துக் கொள்ளவே இல்லை. “அன்னைக்கு கொஞ்சம் பதட்டத்தில் அப்படியாகிடுச்சு, இப்போ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் நல்லா தான் இருக்கேன்..” என சிந்து எத்தனை சமாதானம் சொல்லியும் அதை ஏற்றுக் கொள்ள தாரக் தயாராகவே இல்லை. 
 
 
“அதை டாக்டர் சொல்லட்டும்..” என அவன் ஒரே பிடியாக நிற்க, “நிஜமாவே நான் நல்லா தான் இருக்கேன், எனக்கு எதுவுமில்லை.. அது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் அவ்வளவு தான், ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்..” என சிந்து மீண்டும் சமாதானம் சொல்ல முயன்றாள். 
 
 
“அடிக்கடி உனக்கு வயிறு வேற வலிக்குதுன்னு உமா சொன்னாங்க.. அதையும் நீ மறைக்கறே, இதெல்லாம் எதுக்கு..? அன்னைக்கு சொன்னியே அப்படி தியாகியாக இதெல்லாம் ஒரு முயற்சியா..?” என்றான் தாரக். 
 
 
“அப்படி எல்லாம் இல்லை, ஆனா டாக்டரை பார்க்கும் அளவுக்கு இது அவ்வளவு பெரிய விஷயமுமில்லை..” என மெல்லிய குரலில் சிந்து இழுத்து நிறுத்த.. “இதைவிட பெருசா எதுவும் பிரச்சனையாகும் முன்னே டாக்டரை பார்க்கறது தான் சரி.. வேற எதுவும் பேசாம கிளம்பு..” என்று அவள் மறுக்க முடியாத குரலில் பேசி சிந்துவை அழைத்து வந்து விட்டிருந்தான் தாரக். 
 
 
இப்போது காக்ன்டிவ் பிஹேவியர் தெரப்பிக்கு சிந்துவை அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தவனுக்கு அடுத்தடுத்து அவளுக்காக செய்ய வேண்டிய பல திட்டங்கள் மனதில் இருந்தன. அதன் முதல் படியாக தெரபி முடியவும், முழு உடல் பரிசோதனைக்கு கையோடு சிந்துவை அழைத்துச் சென்றிருந்தான். 
 
 
ஆனால் அவள் உடல் நிலையை மனதில் வைத்து தாரக் எடுத்திருந்த இந்த முயற்சியே இருவருக்கும் பெரும் அதிர்வைத் தரும் என அவர்கள் அப்போது கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. 
 
 
அன்று நாள் முழுக்க இருவரும் மருத்துவமனையில் இருந்து அவளை பரிசோதனை செய்ததில் கிடைத்த ஆய்வறிக்கையின் முடிவு அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காததாக இருந்தது. 
 
 
இதை கேட்டு அதிர்ந்த தாரக், இரண்டு நாளில் திரும்ப வருவதாக சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான். சிந்துக்குமே இது எதிர்பாராத அதிர்ச்சி தான். ஆனால் அவளுக்கு இப்போது எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்று கூட தெரியவில்லை.
 
 
மறுநாள் காலை அப்படியே வெறுமையான மனதோடு சிந்து படுக்கையில் சரிந்து அமர்ந்திருக்க.. அறையின் கதவை லேசாக தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் தாரக். 
 
 
நேற்று மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவளுக்கும் யோசிக்க அவகாசம் தேவை என்பதை உணர்ந்து அப்போதைக்கு அமைதியாகவே சென்று இருந்தவன், இப்போது அவள் முன் வந்து நிற்க.. மரியாதைக்காக அவனை கண்டதும் எழுந்து நிற்க முயன்றாள் சிந்து. 
 
 
“வேண்டாம் நீ ரெஸ்ட் எடு..” என அவளை தடுத்த தாரக், அங்கிருந்த இருக்கையை எடுத்து படுக்கைக்கு அருகில் போட்டு அமர்ந்தான். “நல்லா யோசிச்சுட்டியா..? என்ன முடிவு செஞ்சுருக்க..? எப்போ அப்பாயின்மென்ட் வாங்கலாம்..?” என்று அவன் பேச்சை தொடங்கவும், “அப்பாயின்மென்ட்டா எதுக்கு..?” என்றாள் சிந்து.  
 
 
“எதுக்குனா என்ன அர்த்தம்..? டாக்டர் சொன்னதை எல்லாம் நீயும் கேட்டே தானே..!” என பேச்சை தொடங்கியவனுக்கு அதன் பிறகே அந்த சந்தேகம் உண்டாக “ஹே, உனக்கு அவங்க பேசினது எதுவும் புரியலையா..?” என்று கேள்வியாக நிறுத்தினான் தாரக்.
 
 
அதற்கு மறுப்பாக தலையசைத்தவள், “புரிஞ்சது..” என கூறவும், “அப்புறம் ஏன்னு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்..? நாம டாக்டரை போய் பாக்கணும் இல்லை, நேரம் கட்டத்தறது சரியில்லை..” என்றான் தாரக்.
 
 
“ம்ப்ச்.. நான் எங்கேயும் வரலை..” என உணர்வே இல்லாத குரலில் சிந்து கூறவும், அவனை குழப்பமாக பார்த்தான் தாரக். “எங்கேயும் வரலைனா என்ன அர்த்தம்..? உன் மனசில் என்ன இருக்குன்னு நிஜமாவே எனக்கு புரியலை..” என்றான். 
 
 
“எனக்கும் நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு புரியலை.. இப்போ எதுக்கு அப்பாயிண்ட்மெண்ட்..? ஏன் டாக்டர்கிட்ட போகணும்..?” என அவள் திரும்ப கேட்கவும், அவளை சில நொடிகள் கூர்மையாக பார்த்தவன், “நேத்து டாக்டர் சொன்னதை கேட்ட தானே..! உடனே அபார்ட் செய்யலைனா உன் உயிருக்கே ஆபத்து, அதுக்கு தான் இந்த அப்பாயின்மென்ட், இப்போ புரிஞ்சுதா..? ரெடியா இரு, ஈவினிங் ஹாஸ்பிடல் போவோம்..” என்றான் பொறுமையை இழுத்து பிடித்த குரலில் தாரக். 
 
 
“இல்லை வேண்டாம் அப்படியே இருக்கட்டும்..” என்று சிந்து மீண்டும் சொல்ல.. “உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா..? இதெல்லாம் தேவையில்லாத அடம், அப்படியே இருந்தா என்னாகும்னு உனக்கு புரியுதா..?” என மீண்டும் தாரக் கேட்க, “நல்லாவே புரியுது, ஆனா பரவாயில்லை இப்படியே இருக்கட்டும்..” என்று மறுபடியும் அதே போல் வெற்று குரலில் பேசினாள் சிந்து.
 
 
நேற்று மருத்துவமனையில் சிந்துவை பரிசோதித்த பெண் மருத்துவர், அவளுக்கு எக்டோபிக் ப்ரெக்னன்ஸி ஏற்பட்டுள்ளதாகவும் இத்தனை நாள் இதை எப்படி தெரிந்துக் கொள்ளாமல் போனீங்க..?’ என்றும் அவர் கேட்ட பிறகே தாரக்கிற்கு நடந்த பிரச்சனைகளில் அவளின் உடல்நலத்தையும் சிந்து கருவுற்று இருப்பதையும் மறந்திருப்பது புரிந்தது.
 
 
இதில் உண்டான குற்ற உணர்வில் அவன் பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருக்க.. “ஏற்கனவே ஐந்து மாசம் ஆகிடுச்சு, இதுவரை நீங்க ஸ்கேன் செய்யாததே முதல் தப்பு.. அப்போவே செஞ்சுருந்தா இதை முன்பே கண்டுப் பிடிச்சு இருக்கலாம், ஆனா இனியும் தாமதிக்காம இருக்கறது தான் நல்லது.. தாயை காப்பாற்ற நினைச்சா உடனே குழந்தையை நாம கலைச்சு தான் ஆகணும், இல்லைனா இரண்டு உயிருக்குமே ஆபத்து.. இப்போவும் கொஞ்சம் ரிஸ்க் தான்.. ஐந்து மாசமாகிடுச்சு புரிஞ்சுக்கோங்க..” என்றிருந்தார் மருத்துவர்.
 
 
அதில் இரண்டு நாட்கள் அவரிடம் அவகாசம் வாங்கிக் கொண்டு வந்திருந்தவன், இப்போது சிந்துவை அதற்கு சம்மதிக்க வைக்க தான் முயன்றுக் கொண்டிருந்தான்.
 
 
ஆனால் அவளோ வேண்டவே வேண்டாமென சொல்லிக் கொண்டிருக்க.. “செந்தூரிகா.. நீ ஏன் இப்படி பேசிட்டு இருக்கே..?” என்றான் சற்றே கோபம் எட்டி பார்க்கும் குரலில் தாரக்.
 
 
அதில் சில் நொடிகள் அமைதியாக இருந்தவள், பின் ஒரு முடிவுக்கு வந்தது போல் நீண்ட பெருமூச்சை இழுத்து வெளியில் விட்டப்படி, “நான் பிராயச்சித்தம் செய்ய நினைக்கறேன்..” என்றவளை அவன் புரியாமல் பார்க்க.. “உங்க குடும்பம் உங்களை விட்டு போகவும் நீங்க தனியாளா நிற்கவும் எங்க அப்பா தானே காரணம்..” என்றவளின் வார்த்தைகளை முடிக்க கூட விடாமல் “அதுக்கு..?” என்றான் கோபம் தெறிக்கும் குரலில் தாரக்.
 
 
அவனின் அந்த குரலில் சட்டென அமைதியானவள், தாரக் பதிலுக்காக தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு “இந்த குழந்தை.. உங்களுக்கு.. உங்க கூட..” என பார்வையை தழைத்துக் கொண்டே மனதில் இருப்பதை சரியாக சொல்ல வராமல் தடுமாற.. “ஹ்ம்ம், சொல்லி முடி..” என்றான் கைகளை கட்டிக் கொண்டு நிதானமாக அவளின் முகம் பார்த்து தாரக்.
 
 
அவனின் இந்த நிதானமே சிந்துவை அடுத்து பேச முடியாமல் அமைதியாக்க.. “இது உன் உயிருக்கே ஆபத்துன்னு தெரியுமா..?’ என்றான் தாரக்.
 
 
அதற்கு அவள் பதிலேதும் சொல்லாமல் இருக்க.. “சொல்லு தெரியுமா..? தெரியாதா..!” என்று முகம் இறுக அவன் கேட்கவும், ஆமென்பதாக அசைந்தது அவளின் தலை. 
 
 
“தெரிஞ்சும் ஏன் இப்படி..?” என்றவனை இடையிட்டு இருந்தவள், “நான் உயிரோட இருந்து மட்டும் என்ன செய்ய போறேன்..? யாருக்கும் வேண்டாதவளா காலம் முழுக்க இப்படி ஓடிட்டே இருக்கறதை விட யாரோ ஒருத்தருக்காவது உபயோகமா இருந்துட்டு போறேனே..!” என்றாள் சிந்து.
 
 
அவளின் அந்த வார்த்தை அவனை அதிகம் பாதித்தது. “யாருக்கும் வேண்டாதவன்னு நீயே எப்படி முடிவு செய்யலாம்..? உங்க அண்ணன் அருண் உன்னை காப்பாற்ற எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தான்னு உனக்கு தெரியுமா..? நீ எங்கேயாவது நல்லா இருந்துட மாட்டியான்னு உங்க அம்மா அங்கே எவ்வளவு துடிக்கறாங்கன்னு உனக்கு தெரியுமா..? ஏன் நானே உன்னை காப்பாற்ற அன்னைக்கு அவ்வளவு தூரம் வரலையா..? இதெல்லாம் எதுக்கு உன் உயிர் போகவா..?” என்றான் தாரக்.
 
 
அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியானவளின் மன கண்ணில் சுஜாதாவின் முகம் வந்து நின்றது. “செந்தூரிகா இங்கே பார்.. நமக்கு பிடிக்காதவங்க நம்மை பிடிக்காதவங்கன்னு இந்த உலகத்தில் நாலு பேர் இருக்க தான் செய்வாங்க.. அதுக்காக எல்லாம் நாம உயிரோட இருக்க கூடாதுன்னு முடிவுக்கு வந்துடறது சரியில்லை.. வாழ்ந்து காட்டணும், நம்மை அழிக்க நினைக்கறவங்க முன்னே இன்னும் தைரியமா நல்லா வாழ்ந்து காட்டணும்..” என்றவன்,
 
 
சிறு தயக்கத்தோடு அவளை பார்த்து, “திரும்ப இதையெல்லாம் ஞாபகப்படுத்தறேன்னு நினைக்காதே..! ஆனா உன் மன உறுதிக்கு இதை நான் சொல்லியே ஆகணும்.. உன்னை உன் விருப்பமில்லாம நான் கூட்டிட்டு வந்து வெச்சுருந்த நேரத்தில் ஆரம்ப நாட்களில் நீ அழுது பயந்து நடுங்கி நடப்பது புரியாம தத்தளித்தாலும், அதுக்கு பிறகான நாட்களில் உனக்குள்ளே ஒரு இறுக்கம் உண்டாகி, என்ன வேணும்னாலும் நடக்கட்டும், இனி நான் அழுவதால் மாற போவது எதுவுமில்லைன்னு உறுதியா இறுகி போய் நின்னே பார் அது தான் ஒரிஜினல் செந்தூரிகா..
 
 
உனக்கே உன் மன வலிமையை பற்றி தெரியலை.. உங்க அப்பாவுக்கு பயந்து உன் அண்ணனுக்கு பயந்துன்னு நீ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பழகிட்டே.. நிஜத்தில் இது இல்லை நீ.. உன் மன உறுதியை நான் பலமுறை பார்த்திருக்கேன்.. அவ்வளவு ஏன் என்னை கொல்ல வந்தவன் கொன்னுட்டு போகட்டும்னு சொன்னியே அதை சொல்ல எவ்வளவு தைரியம் வேணும் தெரியுமா..? அப்படிப்பட்ட நீ இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் இப்படி ஒரு முடிவை எடுக்க கூடாது..” என்றான் பொறுமையான குரலில் தாரக்.
 
 
அவன் பேச பேச அதுவரை பெரும் முயற்சியோடு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்தது. அதை கண்டு அருகில் இருந்த டிஷ்யூவை எடுத்து அவளிடம் நீட்டினான் தாரக்.
 
 
மெல்ல அதை வாங்கிக் கொண்டவள், தொடர்ந்து அழுதுக் கொண்டே இருக்கவும், எப்படி அவளை தேற்றுவது என புரியாமல் பார்த்தான் தாரக்.
 
 
“என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லையே..! எந்த அர்த்தமும் இல்லாம வாழறதை விட இந்த குழந்தை..” என்றவள், தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீரோடு நிறுத்த.. “என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்குன்னு நீ நினைக்கறே..? உங்க அக்கா என்னை விட்டு போன பிறகு நான் இப்படி ஒரு முடிவுக்கு வர எவ்வளவு நேரமாகி இருக்க போகுது..? ஆனா அது இல்லை வாழ்க்கை.. ஒரு உயிரின் மதிப்பு உனக்கு புரியலை..” என்றான் தாரக்.
 
 
“அப்போ இது மட்டும் உயிர் இல்லையா..?” என சட்டென தன் வயிற்றை காண்பித்து சிந்து கேட்கவும், அதில் ஒரு நொடி அமைதியானவன், “அதுவும் ஒரு உயிர் தான், ஆனா அந்த உயிர் இன்னும் இந்த உலகத்துக்கு வரலை.. அதோட இந்த உயிரை எதிர்பார்த்து இங்கே யாரும் காத்திருக்கவும் இல்லை.. ஆனா உனக்கு அப்படி இல்லை, உனக்கு புரியும்னு நினைக்கறேன்..” என்றவன், பின் சிறு இடைவெளி விட்டு,
 
“ஆரம்பத்தில் இருந்தே உங்க அப்பாவை பழி வாங்க ஒரு வழியா மட்டுமே நான் அதை பார்க்க.. உனக்கு தேவையில்லாத சொந்தமில்லாத ஒண்ணாவே நீயும் அதை பார்த்ததால் தானோ என்னவோ தானாவே அதுவும் நம்மை விட்டு போக நினைச்சு இருக்கலாம்.. சில நேரங்களில் நாம எதிர் பார்க்காத ஒரு விஷயம் கூட நம்ம வாழ்க்கையை அழகாக்கும்.. இதுவும் அப்படி ஒரு தொடக்கம்னு நினைச்சுக்கோ..” என்றவனை அவள் புரியாமல் பார்க்க.. கையோடு எடுத்து வந்திருந்த ஒரு கோப்பை அவளிடம் நீட்டினான் தாரக்.
 
 
 
தொடரும்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
MNM - 33(b) & 34(a)
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
 
 
கவி சந்திரா 

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 34(b)
 
தன் கையில் இருந்த விவாகரத்து பத்திரத்தை பார்த்தவளுக்கு பெரிதாக திகைப்பெல்லாம் எதுவும் ஏற்படவில்லை. அவளுக்குமே ‘அடுத்து என்ன..?’ என்ற கேள்வி எழுந்து கொண்டு தானே இருக்கிறது. 
 
 
‘எத்தனை நாள் இன்னும் இங்கே இப்படி யாருடைய ஆதரவிலோ இருக்க முடியும்..?’ என்ற எண்ணம் அவளுக்கும் தோன்றாமல் இல்லை. ஆனால் வேறு என்ன செய்வது என புரியாமலும் தெரியாமலும் தான் சிந்துவுமே இருந்தாள்.
 
 
எப்போதிருந்தாலும் இப்படி ஒன்று நடக்கும் என அவள் ஆழ்மனம் சிந்தித்து வைத்திருந்ததோ என்னவோ..? பெரிதான அதிர்வை எல்லாம் அது வெளிப்படுத்தவில்லை. அதில் சிந்து அமைதியாகவே இருக்க.. அது அவளின் முகத்திலும் பிரதிபலித்தது. 
 
 
சிந்துவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தாரக் “இது நான் முன்னேயே யோசிச்சு வெச்சது தான்..” எனவும் ‘சரி’ என்பதாக அசைந்தது அவளின் தலை.
 
 
“இப்போவாவது புரியுதா..? உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு, நீ இதுக்கு சம்மதிக்கறது தான் சரியா இருக்கும்..” என அவளின் உடல்நிலை பற்றி அவன் பேச்சை தொடங்க.. தன் கையில் இருந்த காகிதங்களை காண்பித்து “இதற்கு நான் சம்மதிக்கிறேன்..” என்றாள் சிந்து. 
 
 
“அப்போ..” என அடுத்து தாரக் கேட்க வருவதற்குள், “நான் நேத்தே சொன்னது போல உங்க வாழ்க்கை இப்படியாக..” என்று தொடங்கியவளை இடையிட்டு “நடந்து முடிஞ்சதை பத்தி பேச வேண்டாம், இனி நடக்க போறதை மட்டும் பார்ப்போம்..” என்றான் தாரக்.
 
 
“நானும் அதைத்தான்..” என சிந்து மீண்டும் தொடங்கவும் ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவன் “உன் தியாகம் எதுவும் எனக்கு வேண்டாம், நான் சொல்றதை கேளு.. இது தான் எல்லா பிரச்சனைக்கும் சரியான முடிவா இருக்கும், யாருக்கும் வேண்டாத ஒரு உயிர் வேண்டாததாவே இருக்கட்டும்.. உன் உயிரைக் கொடுத்து நீ அதை காப்பாற்றணும்னு எந்த அவசியமும் இல்லை.. முதலில் உன் வாழ்க்கையை சரி செய்ய பார்..” என்றவன் அவள் அமைதியாகவே இருக்கவும், “செந்தூரிகா..” என அழுத்தமான குரலில் கூப்பிட்டு தன்னை நிமிர்ந்து பார்க்க செய்திருந்தான் தாரக். 
 
 
அவளின் அமைதியும் யோசனையான முகமும் அவனுக்கு வருத்தத்தை தர “இன்னும் என்ன யோசிக்கறே..? எதுவாயிருந்தாலும் வெளிப்படையா சொல்லு, அதுக்காக தான் நாம இங்கே பேசிட்டு இருக்கோம்..” எனவும் “இல்லை, அடுத்து என்னன்னு எதுவுமே எனக்கு புரியலை.. எப்படியும் அப்பா அவங்க ஆளுங்களை வெச்சு என்னை..” எனும் போதே அவளுக்கு விழிகள் லேசாக கலங்கியது. 
 
 
‘இன்று காப்பாற்றப்பட்டிருந்தாலும் அவளின் இந்த உயிர் நிரந்தரம் இல்லை’ என அவள் நினைப்பது அவனுக்கும் தெளிவாக புரிந்தது. “அதனால் தான் இங்கே நான் பாதுகாப்பா..” என சொல்லிக் கொண்டிருந்தவள், ‘எங்கே தாரக் தன்னை தப்பாக புரிந்து கொள்வானோ..!’ என்ற பதட்டத்தோடு “இல்லை நீங்க நினைக்கற மாதிரி இல்லை, குழந்தை பிறக்கும் வரைக்கும் மட்டும் நான் இங்கே இருந்துட்டு..” எனும் போதே குழந்தையை பெற்றுக் கொடுக்கும் போது எப்படியும் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்ற முடிவில் அவள் பேசுவது அவனுக்கு புரிந்தது. 
 
 
இது இன்னும் தாரக்கின் மனதை வலிக்க செய்ய.. அவள் மீண்டும் மீண்டும் இந்த முடிவில் உறுதியாக இருப்பதற்கான காரணமும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. 
 
 
அதில் வேறு எதையும் யோசிக்காமல் முதன்முறையாக அவளை நெருங்கி சிந்துவின் கைகளை எடுத்து தன் கரங்களுக்குள் பொத்திவைத்துக் கொண்டது போல் பிடித்தவனை அவர் புரியாமல் பார்க்க.. “செந்தூரிகா என்னை நம்பு.. என் உயிர் இருக்கும் வரை உனக்கு எதுவுமாகாது, ஆகவும் நான் விடமாட்டேன்.. யாரும் என்னை மீறி உன் பக்கத்தில் கூட வர முடியாது, இது நான் உனக்கு கொடுக்கும் வாக்கு..” என்றான் தாரக். 
 
 
அந்தக் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை மறுத்துப் பேச முடியாமல் அமைதியாக்கி இருக்க.. “உனக்கு வாழ்க்கையில் என்ன செய்யணுமோ செய்.. எதாவது படிக்கணுமா..? இல்லை வேலைக்கு போகணுமா..? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு, நான் அதுக்கு ஏற்பாடு செய்யறேன்..” என்றவன், அப்போதும் அவள் முகம் தெளியாமல் இருப்பதைக் கண்டு “இவ்வளவு சொல்லியும் உனக்கு இங்கே இருக்க பிடிக்கலை, பயமா இருக்குனா வெளிநாட்டுக்கு கூட போ.. நான் அனுப்பி வைக்கறேன், நீ அங்கே போய் படி..” எனவும் அவனை வியப்பாக விழிகள் உயர்த்திப் பார்த்தாள் சிந்து. 
 
 
அந்தப் பார்வையில் தன் பேச்சை நிறுத்தியவன், ‘என்ன..?’ என்பது போல் சிந்துவை பார்த்தவனுக்கு ஏதோ கேட்க வந்து அவள் தயங்குவது மட்டும் புரிந்தது. ஆனாலும் ‘ஒண்ணுமில்லை’ என்றே தலையசைத்தாள் சிந்து. 
 
 
“என்ன திடீர் கரிசனம்னு கேட்க வரியா..? இது உன்னை ஊரில் இருந்து கூட்டிட்டு வந்ததில் இருந்து நான் யோசிச்சு எடுத்த முடிவு தான், இப்போ இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு நான் இதை யோசிக்கலை.. உன் வாழ்க்கையை சரி செய்ய நினைக்கறேன்..” எனவும் அவனை வெற்று பார்வை பார்த்தாள் சிந்து. 
 
 
“எனக்கு புரியுது, நான் செஞ்ச தப்புக்கு பரிகாரமான்னு தானே யோசிக்கறே..? அப்படித்தான்னு கூட நினைச்சுக்கோ.. ஆனா நிஜத்தை சொல்லணும்னா நான் செஞ்சது தப்பு இல்லை, பாவம்.. அதுக்கு மன்னிப்போ பரிகாரமோ கிடையாது.. என்னால் முடிஞ்ச வரைக்கும் உன் வாழ்க்கையை சரி செய்ய நினைக்கறேன் அவ்வளவு தான்.. அந்த நேரம் ஏதோ ஒரு மூர்க தனமான கோபம் என்னை முட்டாளாக்கிடுச்சு.. 
 
 
அதோட நாம தெளிவில்லாம குழப்பமான மனநிலையில் இருக்கும் போது கூட இருந்து ஒருத்தன் குழப்பிக்கிட்டே இருந்தா ஒரு கட்டத்தில் அதுதான் சரின்னு நம்பிடுவோம் இல்லையா..! அப்படித்தான் விஷ்வாவோட பேச்சு ஒரு கட்டத்தில் என்னையும் தடுமாற வெச்சுடுச்சு, அதுக்காக அவன் தான் தப்பு நான் ரொம்ப சரின்னு எல்லாம் நான் சொல்லலை.. முழுக்க முழுக்க இதுக்கு நான்தான் பொறுப்பு ஏத்துக்கணும்.. 
 
 
உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லைனா இங்கே இருக்க விருப்பம் இல்லைனா இங்கே இருந்தா உன்னால் நிம்மதியா இருக்க முடியாதுன்னு நீ நினைச்சா எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போ.. என்ன வேணும்னாலும் படி, உன் வாழ்க்கையில் நீ செட்டில் ஆகும் வரைக்கும் உன் எல்லா பொறுப்பையும் நான் எடுத்துக்கறேன்..” என்றான் தாரக். 
 
 
அவனின் அந்த வார்த்தைகள் முதன்முறையாக அவளை அசைத்துப் பார்த்தது. இதுவரை சிந்துவை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை யாருமே சொல்லியதில்லை. சிறு வயதிலிருந்து எல்லா வசதிகளும் உள்ள குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் நாகராஜன் இவர்களுக்கு செய்வதை ஏதோ யாசகம் போல் தான் பேசுவார். 
 
 
பள்ளி கல்லூரிகளுக்கு பீஸ் கட்டும் போது கூட ‘உனக்கெல்லாம் இதை நான் செய்யணும்னு இல்லை, தண்ட செலவு..’ என்று சொல்லிவிட்டு அவர் செய்யும் போது நாம் அதற்கெல்லாம் தகுதியே இல்லாதவளோ என்ற எண்ணம் தான் அவளுக்குமே தோன்றும். 
 
 
அதுவே ஒவ்வொரு முறையும் அவரின் அடக்குமுறைக்கு அடங்கிப் போகவும் செய்யும். நாகராஜன் ‘இதையும் செய்யாமல் போனால் தன்நிலை என்னாகும்..?’ என்ற பயம் அவளுள் தானாக சிறுவயதில் இருந்தே உண்டாகி இருக்க.. இன்று ‘உனக்கு வேண்டியதை செய்ய நான் இருக்கிறேன்..’ என ஒருவன் இத்தனை அக்கறை குரலில் பேசுவது அவளுக்கு புதிதாக இருந்தது. 
 
 
இவனால் தான் இரு மாதங்களுக்கு முன்பு வரை அத்தனை துன்பங்களையும் அனுபவித்தோம் என்பதும் அவளுக்கு மறக்கவில்லை. ஆனாலும் சிறு வயதில் இருந்து ஏற்பட்ட ரணத்திற்கு இது ஏதோ ஒரு வகையில் இதமாக இருந்தது. 
 
 
இப்படியான கலவையான உணர்வில் இருந்தவளுக்கு என்ன முடிவெடுப்பது என்று கூட தெரியவில்லை. தாரக் சொல்வதில் உள்ள உண்மையும் நியாயமும் புரிந்தாலும், சட்டென அதற்கு ஒத்துக்க முடியாமல் சிந்து அமைதியாகவே அமர்ந்திருக்க.. “ஒரு நாள் இன்னும் வேணும்னா கூட அதிகம் எடுத்துக்கோ, நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவுக்கு வா.. இதில் உன் மனநிலை உடல்நிலை இரண்டுமே முக்கியம்.. இதுவரை நடந்தது எப்படியோ, இனி எது நடந்தாலும் அது உன் முழு சம்மதத்தோடு நடக்கணும்னு நான் நினைக்கறேன்.. இப்போ கூட என்னால் உன்னை கட்டாயப்படுத்தி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் நான் நினைச்சதை செஞ்சு முடிக்க முடியும்.. ஆனா எனக்கு அது வேண்டாம்..” என்று பொறுமையான குரலிலேயே அவளுக்கு புரிய வைக்க தாரக் முயன்று கொண்டிருக்க.. வெகு நேரத்திற்கு பிறகு ‘சரி’ என சிந்துவிடமிருந்து ஒரு தலையசைப்பு பதிலாக வந்தது. 
 
 
இது எதற்கான சம்மதம் என புரியாமல் அவன் விழிக்க.. “நாளைக்கு யோசிச்சு சொல்றேன்..” என்றாள் மெல்லிய குரலில் சிந்து. ‘சரி’ என்பதாக அவளிடம் இருந்து விலகி எழுந்தவன், மேலும் சிந்துவை தொந்தரவு செய்ய விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
 
 
அப்போதும் சிந்து அப்படியே அசையாமல் அமர்ந்திருக்க.. கதவு வரை சென்றவன் நின்று திரும்பி அவளைப் பார்த்து “உனக்குன்னு ஏதாவது ஆசை இருக்கும் இல்லை, சின்ன வயசில் இருந்து இதை படிக்கணும்.. இப்படி செய்யணும்.. இந்த வேலைக்கு போகணும்னு அது போல எதுவாயிருந்தாலும் சொல்லு, எங்கே போகணும்னாலும் சொல்லு.. எதுவா இருந்தாலும் சொல்லு, செஞ்சுடலாம்..” என்று விட்டு வெளியேறி இருந்தான் தார்க். 
 
 
அதில் அவன் சென்ற திசையை, சில நொடிகள் நம்ப முடியா மனநிலையோடு இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. 
அவளுக்குள்ளும் அப்படி ஒரு ஆசை இருந்தது தான். கல்லூரி சேர்வதற்கு முன் சுஜாதாவிடம் அதை அவள் அத்தனை ஆவலாக பகிர்ந்த போது அவர் சந்தோஷிப்பதற்கு பதில் அதீத பதட்டத்தோடு மகளை பார்த்தவர், “இதை எல்லாம் உங்க அப்பா முன்னே பேசி வைக்காதே சிந்து.. நாம சொல்றதை எல்லாம் கேட்டு செய்ய கூடியவர் இல்லை உங்க அப்பா.. அவர் சொல்றதை மட்டும் தான் நாம செய்யணும்..
 
 
உனக்கு மாற்று கருத்து இருக்குன்னு உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா கூட உன்னை படிக்க வைக்கும் எண்ணத்தையே மாத்திக்குவார்.. இப்போதைக்கு நீ படிக்கணும், அது மட்டும் தான் நமக்கு முக்கியம்.. இது தான் படிக்கணும்னு எல்லாம் ஆசையை வளர்த்துட்டு கிடைக்கும் வாய்பை கெடுத்துக்காதே..!” என்று மகளுக்கு புரிய வைக்க முயன்று இருந்தார் சுஜாதா. 
 
 
அவர் சொல்ல வருவது புரிந்தாலும், “ஏன்மா எனக்குன்னு எந்த ஆசையும் இருக்காதா..?” என்று சிறு அழுகை குரலில் சிந்து கேட்கவும் “நாமெல்லாம் ஆசைப்படக்கூட தகுதி இல்லாதவங்க சிந்தும்மா.. நீ இன்னும் சின்ன குழந்தை இல்லை.. புரிஞ்சு நடந்துக்கோ..” என்று விட்டு சென்றிருந்தார் சுஜாதா. 
 
 
அந்த வார்த்தைகள் தான் இப்போது அவள் செவிகளில் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 35
 
பத்து நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குள் வந்த விஷ்வாவை பதட்டத்தோடு எதிர்கொண்ட சுஜாதா “ஒரு வார்த்தை சொல்லிட்டு போகாம எங்கே போன நீ..? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா..!” என்று கேட்கவும் “கொஞ்சம் வேலை இருந்தது..” என்று மட்டும் வெற்றுக் குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் விஷ்வா.
 
 
அவனின் குரலும் செயலும் புரியாமல் அவன் சென்ற திசையை பார்த்தார் சுஜாதா. எப்போதும் விஷ்வா அவரிடம் இப்படி எல்லாம் பேசியது இல்லை. அதில் உண்டான கலக்கத்தோடு ‘என்னாச்சு இவனுக்கு..? உடம்பு ஏதும் முடியலையா..! இல்லை வேற எதுவும் பிரச்சனையா..?” என்று யோசித்தவராக அவனை பின் தொடர்ந்தார் சுஜாதா. 
 
 
ஆனால் விறுவிறுவென தன் அறைக்குள் நுழைந்தவன் சுஜாதா தன் பின்னே வருவதை அறிந்தும் சட்டென கதவை அடித்து மூடி இருந்தான். அதில் உண்டான திகைப்போடு சுஜாதா அப்படியே நின்ற விட, அதே நேரம் அங்கு வந்த அருண் “என்னம்மா இங்கே நிற்கறீங்க..?” என்றான். 
 
 
“இல்லை அருண், நம்ம விஷ்வா திரும்ப வந்துட்டான்.. ஆனா என்னவோ போல இருக்கான், அதான் என்னன்னு விசாரிக்கலாம்னு வந்தா கதவை மூடிட்டான்..” என்று மூடி இருந்த கதவையை பார்த்தபடி அவர் பேச, என்ன நடந்திருக்கும் என்று அருணுக்கு தெளிவாக புரிந்தது. 
 
 
அதில் பேச்சை மாற்றும் விதமாக “இப்போ தானே வந்திருக்கான், டயர்டா இருக்கும்.. தூங்க போய் இருப்பான், நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வந்து உங்ககிட்ட எல்லா விவரமும் சொல்லுவான், கவலைப்படாதீங்க.. உங்க செல்ல பிள்ளையை பற்றி யோசித்தது போதும்.. எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது கொடுப்பீங்களா..? இல்லை நான் கிளம்பட்டுமா..!” என்று கேட்டபடியே அவன் விறுவிறுவென வாயிலை நோக்கி நடக்க தொடங்க.. “அருண் இரு, சாப்பிட்டு போ..” என்று அவன் பின்னே ஓடினார் சுஜாதா. 
 
 
விஷ்வாவின் செயல்களில் முகம் இறுகி இருந்த அருண், அதை எதுவும் சுஜாதாவிடம் வெளிப்படுத்திக் கொள்ளாமல் சாப்பிட்டுவிட்டு “தோட்டத்தில் வேலை நடக்குதும்மா.. நான் அங்கே போறேன், அப்பாகிட்ட சொல்லிடுங்க.” என்றபடியே கிளம்பி விட்டிருந்தான். 
 
 
அருணின் வார்த்தையில் உண்டான கவலையோடு நாகராஜனின் அறை பக்கம் பார்வையை திருப்பி சுஜாதாவிற்கு அத்தனை கலக்கமாக இருந்தது. இரண்டு நாட்களாகவே அவரிடம் யாராலும் நெருங்க முடியவில்லை. எப்போதுமே சுஜாதா அதிகம் அவரிடம் பேசுவதில்லை என்பதால் அது இங்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவரோடு இருக்கும் ஆட்களே இப்போது அவரை நெருங்க பயந்தனர்.
 
 
‘அந்த அளவுக்கு எதற்கு கடிக்கிறார், ஏன் எறிந்து விழுகிறார், எதனால் எரிச்சலாகிறார்..?’ என யாருக்குமே புரியாத அளவில் தான் இரண்டு நாட்களாக இருந்தார் நாகராஜன். அதற்கு காரணமும் இருந்தது, இரண்டு நாட்களாக முத்துவை அவரால் தொடர்பு கொள்ள முடியாததில் உண்டான எரிச்சலில் தான் இப்படி எல்லாம் செய்து கொண்டிருந்தார் நாகராஜன். 
 
 
அன்று எதையோ செய்து முடிப்பது போல் பேசியவன், அதன் பின் தொடர்பு கொள்ளவே முடியாத அளவிற்கு காணாமல் போனதே அவருக்கு ஆத்திரத்தை கொடுத்து இருந்தது. அதோடு முத்துவுடன் இருந்த யாரையும் கூட அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது வேறு எரிச்சலை தர, அவர்களை எந்த வகையிலாவது தொடர்பு கொள்ள முடியுமா..?’ என முயற்சித்துக் கொண்டே இருந்தார் நாகராஜன்  
 
 
இந்த முறையும் முத்துவினால் சொன்னதை செய்து முடிக்க முடியவில்லையா..! என்ற கோபமும், இன்னொரு முறையும் தாரக்கிடம் தோற்று விட்டோமா..! என்ற ஆத்திரமும் நாகராஜனை கொந்தளிக்க செய்து கொண்டிருந்ததில் அறைக்குள்ளேயே இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார் நாகராஜன். 
 
 
நேற்றிலிருந்து அறையிலேயே அடைந்து கிடப்பவரை சாப்பிட அழைக்க கூட சுஜாதாவுக்கு பயமாக இருந்தது. காலையில் ஒருமுறை சென்று அழைத்ததற்கே அத்தனை எரிந்து விழுந்து வெளியில் விரட்டி விட்டிருந்தார். இப்போது மதியம் கடந்து மாலையை நெருங்கும் வேலை வந்த பிறகும் அவர் வெளியில் வராமல் இருக்கவும், உண்டான கவலையோடு சுஜாதா நின்றிருக்க.. அதே நேரம் அங்கு வந்தான் விஷ்வா. 
 
 
“விஷ்வா உடம்பு எதுவும் முடியலையா..? என்னாச்சு ரொம்ப சோர்வா தெரியறே..! உன்னை சாப்பிட கூப்பிட வந்தேன், இரண்டு முறை கதவை தட்டியும் நீ எழுந்துக்கவே இல்லை.. சரி தூங்கற போலேன்னு உன்னை தொந்தரவு செய்யாம வந்துட்டேன்..” என்று சுஜாதா சொல்லவும் “ஹ்ம்ம், தூங்கிட்டேன்..” என்றான் விஷ்வா. 
 
 
எப்போதும் இது போலான நேரங்களில் உடம்பு முடியவில்லை என்றால் மட்டும் தூங்குவான் என்பதால் “இப்போ எப்படி இருக்கு..?” என்று பதட்டத்தோடு அவன் நெற்றியை தொட சுஜாதா முயல.. சட்டென அவர் கையை விலக்கி ஒரு அடி தள்ளி நின்றவன், “ஜுரம் எல்லாம் இல்லை, கொஞ்சம் டயர்டா இருந்தது அவ்வளவு தான்..” என்றான் ஒதுக்கத்தோடான குரலில் விஷ்வா. 
 
 
“சரி, எதுக்கும் டாக்டர்கிட்ட போவோமா..?” என அவர் கேட்கவும் “இல்லை வேண்டாம், ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. ஆனா நீங்க இங்கே என்ன செய்றீங்க..?” என்றான் விஷ்வா. 
 
 
“அது பெரியப்பா நேற்றிலிருந்து இருந்து ரூமுக்குள்ளேயே இருக்கார்.. சாப்பிட கூட இல்லை அதான்..” என்று அவர் தயங்கி இழுக்கவும் “ஒரு நாள் சாப்பிடலைனா என்ன செ..” என்று வெறுப்போடு தொடங்கியவன், சுஜாதா அவனை கேள்வியாக பார்த்துக் கொண்டிருக்கவும், “அவர் என்ன சின்ன குழந்தையா..? எப்போ தேவையோ வந்து சாப்பிட போறார், இதுக்கெல்லாம் கவலைப்படுவீங்களா..? ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பார், அவங்களை முடிக்கும் வரைக்கும்..” என்றவன் மீண்டும் சுஜாதா விழிகளை சுருக்கவும், “அதையெல்லாம் முடிக்கும் வரைக்கும் இப்படித்தான் இருப்பாருன்னு உங்களுக்கு தெரியாதா..? எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா..?” என்றான் ஒரு மாதிரியான குரலில் விஷ்வா.
 
 
அவனின் பேச்சும் உடல் மொழியும் இன்று சுஜாதாவுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. இப்படியெல்லாம் இதுவரை அவன் பேசி அவர் பார்த்ததில்லை என்பதால் யோசனையோடு அவனைப் பார்த்தவர், “சாப்பிட எல்லாம் ரெடியா தான் இருக்கு வா..” என்று விட்டு முன்னே செல்ல.. அவனும் வேறு எதுவும் பேசாமல் அவரோடே நடந்தான். 
 
 
***
 
 
மறுநாள் காலை சிந்துவிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தது போல் அதே நேரத்திற்கு வந்து அவள் அறையின் கதவை தட்டி இருந்தான் தாரக்.
 
 
பால்கனியில் தொலைவில் தெரிந்த அழகான மலர்களை பார்த்தபடியே யோசனையோடு நின்றிருந்த சிந்து கதவு தட்டும் சத்தத்தில் திரும்பி பார்க்க.. அதே நேரம் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தாரக். 
 
 
அவனைப் பார்த்ததும் சிந்து அறைக்குள் வர “என்ன யோசிச்சிருக்கே..?” என்றான் எடுத்ததும் தாரக். அதில் அவனை குழப்பமாக பார்த்து இதழ் பிதுக்கினாள் சிந்து. நேற்றிலிருந்து எவ்வளவு யோசித்தும் அவளால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவே இல்லை. 
 
 
‘எது சரி..? எது தவறு..?’ என்று திட்டவட்டமாக சொல்லவும் அவளுக்கு தெரியவில்லை. அதில் உண்டான குழப்பத்திலேயே ஒரு நாள் முழுக்க சென்றிருந்தது. இப்போதும் தாரக்கை அதே குழப்பத்தோடு அவள் பார்க்க.. அந்த விழிகளில் இருந்தே அவள் மனநிலையை கண்டு கொண்டது போல் “முதலில் இப்படி உட்கார்..” என்றவன் அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து “இப்போ சொல்லு என்ன குழப்பம் உனக்கு..?” என்றான். 
 
 
“தெரியலை, நீங்க சொன்னதை வெச்சு யோசிக்கும் போது அது சரின்னு தான் தோணுது.. ஆனா இன்னொரு பக்கம் இல்லை அது தப்புன்னும் தோணுது..” என மெல்லிய குரலில் சிந்து இழுக்கவும், “எந்த வகையில் உனக்கு அது தப்புன்னு தோணுது..?” என்றான் தாரக்.
அதற்கு உடனடியாக அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை. ஏதோ தயக்கத்தோடே அவள் கைகளை பிசைய, “எதுவா இருந்தாலும் சொல்லு, தயங்காதே..” என ஊக்கினான் தாரக்.
 
 
“என்.. என்ன இருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தானே..! என் உயிரை காப்பாத்திக்க அந்த உயிரை நான் பலி கொடுக்கற மாதிரி ஆகிடாது..! நான் சுயநலமா யோசிக்கிறது போல இல்லை..?” என்று அவள் கேட்ட விதத்திலேயே அவளின் மென்மையான உள்ளம் புரிந்து போக.. சில நொடிகள் அவளை யோசனையாக பார்த்தான் தாரக்.
 
 
பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக “இந்த விபத்தில் மூளை சாவு அடையறவங்களை பத்தி கேள்விப்பட்டு இருக்கியா..?” என்றான் தாரக். அதில் ‘இப்போது எதற்கு இந்த கேள்வி..?’ என்பது போல் யோசனையாக அவள் எல்லா பக்கமும் தலையசைக்க.. “தெரியுமா..? தெரியாதா..!” என்று மீண்டும் அவள் வாய் மொழியில் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணி தாரக் கேட்கவும், “கொஞ்சம் தெரியும்..” என்றாள் சிந்து. 
 
 
“அது சரின்னு நினைக்கறியா..? இல்லை தப்புன்னு நினைக்கறியா..!” என்றான் அடுத்ததாக தாரக். இதற்கு என்ன சொல்வது என்பது போல் சிந்து அவனை பார்க்கவும் “அதுவும் ஒரு உயிர் தான், இன்னும் சொல்லப்போனா இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து சந்தோஷமா வாழ்ந்து யாரோ ஒரு சிலருக்கு முக்கியமா இருந்த ஒரு உயிர்.. ஆனா ஒரு விபத்தில் அந்த உயிர் காப்பாற்ற முடியாத நிலைக்கு போகும் போது டாக்டர்கள் எடுக்கும் முக்கியமான முடிவு தான் அவங்க உறுப்புகளை தானம் செய்யறது.. அதை நீ கொலைன்னு சொல்லுவியா என்ன..?” என்றான் தாரக் 
 
 
“அது, அது..” என பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள் சிந்து. “அது நிச்சயம் கொலை கிடையாது, அது மிகப் பெரிய ஒரு செயல்.. புண்ணிய காரியம்னு கூட சொல்லலாம்.. உறுப்பு தானம் அவ்வளவு சுலபம் இல்லை, எல்லாராலும் செய்ய முடியறதும் இல்லை.. இனி காப்பாற்ற முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு தான், அந்த ஒரு உயிர் தன்னால் முடிஞ்ச அளவு நான்கிலிருந்து ஐந்து உயிர்களை காப்பாத்திட்டு இந்த உலக விட்டு பிரிஞ்சு போகுது.. அதற்கு அந்த டாக்டர்கள் மட்டுமில்லை அந்த உறுப்பு தானம் செய்யறவங்களோட குடும்பத்தாரும் மனமுவந்து சம்மதிப்பாங்க, அனுமதி கொடுப்பாங்க.. 
ஏன் அவங்களுக்கு தன் குடும்பத்தாரை காப்பாத்திக்க தோணாதா..? ஆனா அதற்கு சாத்தியம் இல்லைன்னு தெரியும் போது இதனால் வேறு சிலராவது நல்லா இருக்கட்டும் தானே அவங்க யோசிக்கிறாங்க..! இதுவும் அது போல தான், நீ இப்போ இது வேண்டாம்னு முடிவு எடுத்தாலும் இதனால் குழந்தை பிழைக்க வாய்ப்பு இருக்கானா கண்டிப்பா கிடையாது.. 
 
 
நான் நேத்து திரும்ப டாக்டர்கிட்ட பேசினேன், நமக்கு இரண்டு ஆப்ஷன் தான், ஒண்ணு நீ மட்டும் பிழைக்கலாம், இல்லை நீங்க இரண்டு பேருமே பிழைக்க முடியாது.. இப்போ உறுப்பு தானம் செய்யும் குடும்பத்தார் சூழ்நிலையில் இருந்து தான் நாம யோசிக்கணும்.. இது சுயநலம் எல்லாம் இல்லை, இரண்டு பேரும் பிழைக்காமல் போறதை விட, யாரோ ஒருத்தர் பிழைக்க வாய்ப்பு இருக்கே.. அதை ஏன் நாம பயன்படுத்திக்க கூடாது..? இதில் யோசிக்க அவ்வளவு தான் இருக்கு..” என்று அவள் ஒத்துக்கொள்ளும் வகையில் மெல்ல பேசி பேசி எப்படியோ சிந்துவை சம்மதிக்க வைத்து விட்டிருந்தான் தாரக்.
 
 
காரில் அவன் அருகில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த சிந்துவின் வலது கரம் லேசாக மேடிட்டு இருந்த தன் வயிற்றை மெல்ல தடவிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு இப்படி அவள் செய்து அவன் பார்த்ததாக நினைவே இல்லை.
 
 
இனி இது இல்லை என்றான பின் உண்டான ஏதோ ஒரு உணர்வு அவளை மனதளவில் தவிக்க செய்வது அவனுக்கும் புரிந்தது. அதை எல்லாம் கவனித்தாலும் கண்டுகொள்ளாதது போல் இருந்தான் தாரக்
அந்த விரல்களில் லேசாக ஒரு நடுக்கம். அவள் வயிற்றை வருடும் போது அதில் தெரிந்த ஒரு பரிதவிப்பு. முகமெங்கும் கலக்கமும் விழிகள் லேசாக கலங்கி இருப்பதும் தாரக்கின் பார்வையில் தெளிவாக பதிந்தது. ஆனால் எதுவும் பேசி அவளின் இந்த மோன நிலையை கலைக்க அவன் விரும்பவில்லை.  
 
 
ஒரு அன்னையாக அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போல் இந்த நொடியை அவள் கடந்து வர அவகாசம் கொடுத்து விட்டு அமைதியாகவே காரை மருத்துவமனைக்குள் கொண்டு சென்று நிறுத்தி இருந்தான் தாரக்.
 
 
ஆரம்பத்திலேயே வந்திருந்தால் கொஞ்சம் சுலபமாக முடிந்திருக்கும் இப்போது இது கொஞ்சம் சிக்கல் தான் என்று மருத்துவர் முன்பே கூறி இருந்ததால் ஓரளவு அதற்கான முன்னேற்பாடுகளையும் சேர்த்தே கவனிக்க சொல்லி இருந்தான் தாரக். 
 
 
மருத்துவரும் சிந்துவின் உடல்நிலை, அவளின் ஐந்து மாத கர்ப்பம் என்பதையெல்லாம் மனதில் வைத்தே அந்த மருத்துவமனையின் சீனியர் கைனக்காலஜிஸ்ட்டான காயத்ரியை வரவழைத்திருந்தார். 
 
 
அவரும் சிந்துவை முழுதாக பரிசோதித்து விட்டு “குறைந்தது மூன்றில் இருந்து ஐந்து நாட்களாவது சிந்து மருத்துவமனையில் இருக்க வேண்டும்..” என்றார். 
 
 
தாரக் அதற்கு சம்மதிக்க.. சிந்துவை ஸ்பெஷல் வார்டில் அனுமதித்து விட்டு தாரக்கை தன் அறைக்கு அழைத்துச் சென்று பேசினார் காயத்ரி. “நீங்க எல்லாம் படிச்சவங்க தானே..! அஞ்சு மாசம் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க..? இதுவரை ஒரு ஸ்கேன் கூட எடுக்கலைனா எப்படி..? 
 
 
அப்படி என்ன அலட்சியம்..? குழந்தை கல்யாணம் இதெல்லாம் வேணும்னு மட்டும் தோணும், ஆனா அதற்கான பொறுப்பை எடுத்துக்க நேரமில்லை அப்படித்தானே..!” என்று சிடுசிடுத்தவர், “இன்னும் கொஞ்சம் போயிருந்தா இரண்டு உயிரும் காப்பாற்ற முடியாத நிலைமைக்கு போய் இருக்கும்..” என அவர் கோபமாக பேசிக் கொண்டிருக்க.. அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் தாரக். 
 
 
ஒருமுறையும் அவர்களின் பேச்சில் இடையிடவோ மறுத்து பேசவோ அவன் முயலவே இல்லை. அதிலேயே கொஞ்சம் தணிந்து வந்தவர் “நான் அவங்களை ஃபுல்லா செக் செஞ்சுட்டேன், தேங்க் காட்.. இப்போ வர அவங்களுக்கு ரத்த கசிவு எதுவுமில்லை, அதனால் முதலில் நாம இயற்கை வழியிலேயே குழந்தையை வெளியே எடுக்க முயற்சிக்கலாம்..
 
 
எனக்குத் தெரிஞ்சு அதிலேயே எல்லாம் சரியாகிவிடும், ஒருவேளை அதில் சரியாகலைனா நாம ஆபரேஷன் பக்கம் போகலாம்..” என்றதும் கொஞ்சம் பதட்டமானான் தாரக். 
 
 
அது அவன் முகத்தில் இருந்தே தெரிய “நீங்க பயப்படற மாதிரி அவங்களுக்கு எதுவுமில்லை, ஒரு சின்ன ஆப்ரேஷன் தான்.. எனக்கு இப்போவும் உங்க மேலே கோவம் இருக்கு.. இவ்வளவு பொறுப்பு இல்லாம விட்டு இருக்க கூடாது, ஆனா இனியும் தாமதப்படுத்தாம ஒரு நல்ல முடிவுக்கு வந்ததே போதும்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவங்களுக்கான ட்ரீட்மெண்ட் தொடங்கிடும், அவங்க கூட இருந்து பார்த்துக்க வீட்டு பெரியவங்க யாரும் இல்லையா..?” என்றார் காயத்ரி. 
 
 
‘இல்லை’ என்பதாக தலையசைத்தவன், “நா.. நான் இருக்கலாம் தானே..!” என்று பெரும் தயக்கத்தோடு கேட்கவும் “ஹஸ்பண்ட் தானே நீங்க..? தாராளமா இருக்கலாம், நீங்களும் இல்லைனா வேற யார் அந்த பொண்ணை பார்த்துக்க போறா..?” என்று விட்டு மேலும் அவளின் சிகிச்சைகள் பற்றி அவனோடு தெளிவாக பேசிக் கொண்டிருந்தார் காயத்ரி. 
 
 
***
 
 
அதே நேரம் இங்கு பெறும் தயக்கத்தோடு நாகராஜனின் முன் வந்து நின்றிருந்தான் அவரிடம் வேலை பார்க்கும் பாபு. ஏற்கனவே எரிச்சலில் இருந்தவர் அவனை வெறுப்போடு பார்த்து “என்னடா..?” என்று சிடுசிடுக்கவும், முன்பே அவரிடம் இதை எப்படி சொல்வது என்ற தயக்கத்தோடு வந்திருந்தவனுக்கு அவரின் இந்த கோபம் மேலும் பயத்தை கொடுத்தது. 
 
 
அதில் எதுவும் பேசாமல் அவன் தயங்கி நிற்க, இது வேறு நாகராஜனை எரிச்சலாக்கியது. “என்ன என் முகத்தில் படமா ஓடுது..? என்னையே பார்த்துட்டு இருக்கே..? என்ன சொல்ல வந்தே..? அதை சொல்லிட்டு போ..” என்று அவர் கத்தியதில் “இல்லைங்க ஐயா, அது நம்ம சிவா.. சிவா..” என்று அவன் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் வார்த்தைகள் தந்தியடிக்க அதை கண்டு மேலும் வெறுப்பானவர், “சிவாவுக்கு என்னடா போய் சேர்ந்துட்டானா..?” என்றார். 
 
 
இதற்கு மேலும் சொல்லாமல் தாமதித்தால் தன்னை ஒரு வழியாக்கி விடுவார் என்று புரிந்து கொண்ட பாபு “இல்லைங்க ஐயா சிவாவும் அவன் கூட இருந்தவங்களும் ஹாஸ்பிடலில் இருந்து காணோம்..” என்று வேகமாக அவன் சொல்லி முடிக்க.. “என்னது..?” என்று அதிர்ந்து அவனைப் பார்த்தார் நாகராஜன். 
 
 
இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் பாபு தலை குனிந்து நிற்க, “டேய் காணோம்னா என்னடா அர்த்தம்..? சின்ன குழந்தைங்களா அவங்க காணாம போக..! அடிப்பட்டு எந்திரிக்க முடியாம படுத்து இருந்தவங்க எப்படிடா காணாம போவாங்க..?” என்று நாகராஜன் தன் கோபத்தை எதிரில் இருந்தவனிடம் காண்பிக்க.. “அது தான் ஐயா யாருக்குமே எதுவுமே புரியலை.. அங்கேயும் என்ன நடந்தது என்னன்னு யாருக்குமே தெரியலை..” என்றான் பாபு. 
 
 
“என்னடா அலிபாபா கதை சொல்லிட்டு இருக்கே..? ஹாஸ்பிடலில் இருந்து எப்படி பேஷண்ட் காணாம போக முடியும்..? அதுவும் நாலு பேரும் அடிபட்டு படுத்து இருந்தாங்க, நாலு பேரும் மாயமா மறஞ்சுடுவாங்களா..! வேற ஏதாவது ட்ரீட்மெண்ட் கொடுக்க எங்கேயாவது கூட்டிட்டு போய் இருக்க போறாங்க, ஹாஸ்பிடலில் போய் நல்லா விசாரி..” என்றார் எரிச்சலோடு நாகராஜன். 
 
 
“இல்லைங்க ஐயா நல்லா தேடிட்டோம், அதோட ஹாஸ்பிடலில் இருக்க யாருக்கும் எதுவுமே தெரியலை.. அவங்களும் எங்க கூட சேர்ந்து தேடறாங்க..” என்றான் பாபு.
 
 
இதில் மேலும் கடுப்பானவர் “அவனுங்களும் காணாம போயிட்டானுங்களா..! என்னை சுத்தி என்ன தான் நடக்குது இங்கே..? இந்த முத்து பையன் எங்கே போய் தொலைஞ்சான்னே தெரியலை, பெருசா வெட்டிடுவேன்.. வேரோட சாய்ச்சுடுவேன்னு டயலாக் எல்லாம் பேசினான், இப்போ ஆளையே காணோம்.. அவன் தான் அப்படின்னு பார்த்தா, கூட போனவங்க சத்தமும் இல்லை.. எல்லாம் பயந்து எங்கேயோ ஓடி ஒளிஞ்சுக்கறாங்க..” என்றார் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு நாகராஜன்.
 
 
இதற்கு பதிலேதும் சொல்லாமல் அவன் தலை குனிந்து நின்றிருக்க.. “இங்கே சிலையா நின்னு என்ன செய்யப் போறே..? போ போய் தேடு, யாரையாவது கண்டுபிடி..” என சத்தமிடவும், காலை முதல் முடிந்தவரை தேடிப் பார்த்துவிட்டே இங்கே வந்திருந்தவனுக்கு அடுத்து என்ன செய்வது எனப் புரியவில்லை. 
 
 
நாகராஜனிடம் விஷயத்தை தெரிவித்தால் அவராவது ஏதாவது சொல்வார் என்று எண்ணியே இங்கே வந்திருந்தவனுக்கு இப்போது அதுவும் இல்லை என்றாகியது. 
 
 
அதில் யோசனையோடு பாபு நின்றிருக்க.. “எதுக்குடா இங்கே நின்னு என் உயிரை எடுக்கறே..? போ.. நீயும் எங்கேயாவது போய் தொலை..” என அருகில் இருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து அவனை நோக்கி வீசினார் நாகராஜன்.
 
 
அதற்கு மேல் அங்கே நிற்க தைரியமில்லாமல் அவன் வெளியேறி விட, தலையை பிடித்துக் கொண்டு படுக்கையின் ஓரம் அமர்ந்தார் நாகராஜன். தன்னை சுற்றி ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத வலை பின்னப்பட்டிருப்பது போலவும், அதில் இப்போது சிக்கிக் கொண்டது போலான ஒரு உணர்வு அவருள் உண்டானது.
 
 
‘பெருசா எதுவோ நடக்க போகுதோ..! என் கூட இருக்கறவங்க எல்லாம் திடீர்னு இப்படி காணாம போனா என்ன அர்த்தம்..? இதுக்கெல்லாம் அவனை தவிர வேற யார் காரணமா இருக்க முடியும்..? நிச்சயம் அவன் தான் இதில் என்னவோ விளையாடறான்..’ என எண்ணம் செல்ல.. சட்டென எதையோ உதறியது போல் எழுந்து நின்றவர், “அப்படி என்ன செஞ்சுடுவான்னு நானும் பார்க்கறேன்.. உன் வயசு என் அனுபவம்டா.. வா ஆம்பளையா இருந்தா வா பார்க்கலாம்.. என்னை மீறி உன்னால் என்னை என்ன செஞ்சுட முடியும்..?” என்று மீசையை நீவி விட்டுக் கொண்டவர் தன் தனிப்பட்ட துப்பாக்கியை அலமாரியின் மறைவான இடத்தில் இருந்து எடுத்து தன் இடுப்பில் சொருகி கொண்டார் நாகராஜன்.
 
 
அதே நேரம் இங்கே மருத்துவர் கொடுத்திருந்த மாத்திரையின் உபயத்தில் சிந்துவுக்கு வலிக்க தொடங்கி இருக்க.. பல்லை கடித்து அதை அவள் பொறுத்துக் கொள்ள முயல்வது தாரக்கிற்கு கவலையை தந்தது.
 
 
எப்படி அவளுக்கு ஆறுதல் சொல்வது என்றோ சமாதானம் செய்வது என்றோ புரியா நிலையில் தவிப்போடு அவன் தள்ளி நின்றிருந்தான். இருவரும் அவ்வபோது பேசிக் கொண்டாலும் இருவருக்குள்ளும் இன்னும் ஒரு சுமூகமான சூழ்நிலை இல்லை. 
 
 
ஒவ்வொரு முறையும் வலியில் துடிப்பவள், கத்த முடியாமல் தன்னை கண்டு அதை கட்டுப்படுத்திக் கொள்வது தெரிந்தது. தன் முன் அவளால் இயல்பாக தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை என்று புரிந்து, மருத்துவரை காண சென்றவன், “வலியில் அதிகம் துடிக்கறாங்க டாக்டர், கொஞ்சம் வந்து என்னன்னு பாருங்க..” என கவலையோடு அழைத்தான்.
 
 
ஆனால் அவரின் அனுபவத்திற்கு இது புதிதில்லை என்பதால், “இப்போ தான் உங்க மனைவிக்கு வலியே தொடங்கி இருக்கு, இன்னும் குறைஞ்சது ஐந்தில் இருந்து ஆறு மணி நேரம் ஆகணும்.. அப்போ தான் எல்லாம் சரியா நடக்கும்..” என்றார்.
 
 
அதை கேட்டு திகைத்தவன், “என்ன அவ்வளவு நேரமா..? அவ்வளவு எல்லாம் அவளால் தாங்க முடியாது டாக்டர், ப்ளீஸ் ஏதாவது செய்யுங்க..” என்றான். 
 
 
இதில் லேசாக புன்னகைத்த மருத்துவர், “பெண்களோட மன வலிமையை பற்றி உங்களுக்கு தெரியாதுங்க, எந்த அளவுக்கு அவங்க மென்மையானவங்களோ அதே அளவுக்கு மானதளவில் வலிமையானவங்க.. குழந்தை பிறக்கும் போது ஏற்படும் வலியை பற்றி அவங்ககிட்ட கேட்டு பாருங்க.. அதையே அவ்வளவு உறுதியா தாங்கி நின்னு இருப்பாங்க, அதையும் மீறி இன்னொரு குழந்தைக்கு அவங்க தயாராகறாங்கனா உங்களுக்கு அதில் இருந்தே புரிஞ்சுக்க முடியலையா என்ன..? என்ன ஒண்ணு அந்த வலியை எல்லாம் பெருசா நினைக்க வைக்காத இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம குழந்தையை கண்ணில் பார்க்க போறோம்ன்ற ஒரு சந்தோஷ எதிர்ப்பார்ப்பு அவங்களை எதையும் தாங்கிக்க வைக்கும், ஆனா இங்கே அப்படியில்லை நம்மை விட்டு குழந்தை போகுதுன்ற வலியும் சேர்ந்து அவங்களை துடிக்க வைக்கும்..” என்றவரை பதட்டத்தோடு பார்த்து, “ஓ காட்.. இப்போ என்ன செய்யறது..?” என்றான் தாரக்.
 
 
அதற்கு பதிலேதும் சொல்லாமல் மருத்துவர் அமைதியாக அவனை பார்க்க.. “வலி தெரியாம இருக்க மருந்து எதுவும் கொடுக்கலாமா டாக்டர்..?” என அவனே ஒரு தீர்வை கண்டு பிடித்து கூற, மறுப்பாக தலையசைத்தவர் “நீங்க தான் அவங்க மருந்து.. என்ன நடந்தாலும் உனக்கு நான் இருக்கேன்னு அவங்களுக்கு புரிய வைங்க, அந்த நம்பிக்கையை கொடுங்க.. ஒரு பொண்ணுக்கு இதை விட சிறந்த மருந்து இந்த உலகத்திலேயே கிடையாது..” என்று விட்டு சென்றார் மருத்துவர்.
 
 
‘அவர் சொல்லி செல்வது இயல்பான வாழ்க்கை வாழும் தம்பதிகளுக்கு வேண்டுமானால் சரி வரும். இவர்கள் அப்படியில்லையே..! தன் முன் வலியை இயல்பாக வெளிப்படுத்தவே தயங்குபவளுக்கு எந்த வகையில் ஆறுதலாக இருக்க முடியும்..?’ என்ற கலக்கத்தோடு அறைக்குள் நுழைந்தான் தாரக்.
 
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
 
MNM - 34(b) & 35
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
கவி சந்திரா 

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 36
 
மயக்கத்தில் இருந்து கண் விழித்த சிவாவிற்கு சுற்றுப்புறம் புரியவே வெகு நேரமானது. இருளில் மூழ்கியிருந்த இடத்தை விழிகளை சுருக்கி குழப்பமாக பார்த்தான். 
 
 
வழக்கத்திற்கு மாறான இடம் அவனை மேலும் குழப்பியது. மருத்துவமனையில் இருப்பது போல் அவனுக்கு தோன்றவில்லை. அவன் படுத்திருந்த இடமும் கரடு முரடாக, சரியான வசதி இல்லாத வகையில் இருப்பது போல் இருக்க.. லேசாக எழுந்தமர முயன்றவன், அப்போதே குறுக்கும் நெடுக்குமாக மேலும் சிலர் அங்கு படுத்திருப்பதை கவனித்தான். 
 
 
அதற்குள் அந்த இருளுக்கு ஓரளவு விழிகள் பழகி இருக்க.. லேசாக நிழல் உருவமாக அனைத்தும் அவனுக்கு தெரியத் தொடங்கியது. இப்போது இவர்கள் இருப்பது மருத்துவமனையில் இல்லை என்று தெளிவாக.. ஏதோ ஒரு இருண்ட அறையில் இருப்பதை உணர்ந்தவனுக்கு குழப்பமாக இருந்தது.
 
 
‘இது என்ன இடம்..? எப்படி இங்கே வந்தோம்..? ஏன் இங்கே இருக்கிறோம்..?’ என எத்தனை யோசித்தும் அவனுக்கு சரியான பதில் தான் கிடைக்கவில்லை. அதோடு தலையும் வலிப்பது போல் இருக்க.. “ஆஆ..” என மெல்லிய குரலில் முனுகினான் சிவா.
 
 
மருந்தின் வீரியமும் இப்போது வரை முழுமையாக தெளியாத மயக்கமும் சேர்ந்து நடப்பது எல்லாம் புரிந்தும் புரியா ஒரு நிலையில் அவனை வைத்திருக்க.. அதே நேரம் அருகில் படுத்திருந்தவர்கள் லேசான முனககலோடு புரண்டு படுப்பது தெரிந்தது. 
 
 
“டேய் எங்கேடா இருக்கோம்..?” என்று சிவா சோர்வான குரலில் கேட்கவும், அவர்களிடம் இருந்து பதிலேதும் வரவில்லை. அதில் மீண்டும் சிவா அதையே சற்று சத்தமாக கேட்கவும், அவர்களிடமிருந்தோ அதன் பின் எந்த அசைவும் இல்லை. 
 
 
“ஏய், எவனாவது சொல்லுங்கடா..” என்று சிவா மீண்டும் பலகீனமான குரலில் கேட்டும் யாரிடம் இருந்தும் பதிலேதும் வராமல் போகவும், லேசாக தலையை மட்டும் உயர்த்தி பார்த்தவன், எல்லோரும் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு மீண்டும் விழிமூடி தலை சாய்ந்தான்.
 
 
அதேநேரம் “எங்கேடா அந்த நாலு பயலுங்க..?” என வெளியில் இருந்து அந்த குரல் அதிகாரத் தோணியில் ஒலித்தது. “ஐயா அந்த கடைசி ரூமில் படுக்க வெச்சுருக்கேன்..?” என்று பணிவான குரலில் ஒருவன் பதிலளிப்பது தெரிய.. “என்னது படுக்க வெச்சுருக்கியா..? வசதி எதுவும் குறைவா இருக்கான்னு பார்த்துட்டியா..! கை கால் அமுக்க வேணும்னாலும் ஆளுங்களை ஏற்பாடு செஞ்சுக் கொடேன்..” என்ற கோபமாக ரத்தினம் கத்துவது தெரிய.. “அதில்லைங்கயா அவனுங்க மயக்கமா இருந்தானுங்க..” என்றான் சுரேஷ்.
 
 
“மயக்கமா இருந்தானுங்க மண்ணாங்கட்டியா இருந்தானுங்கன்னு எல்லாம் எனக்கு கதை சொல்லாதே.. இரண்டு நாளில் அவனுங்க எழுந்து வேலையை பார்க்கணும், அவ்வளவு தான்..” என்று அவர் கட்டளை குரலில் சொல்லவும், “இரண்டு நாளிலா..! ஐயா அவங்களுக்கு காலு கை எல்லாம் உடைஞ்சுருக்கு..” என்று தயக்கத்தோடு இழுத்தான் சுரேஷ்.
 
 
“அதுக்கு உட்கார வெச்சு சேவகம் செய்ய சொல்றியா..? கொள்ளை கொள்ளையா காசு போட்டு வாங்கி இருக்கேன், ஞாபகம் இருக்கட்டும்.. இவனுங்களை வெச்சு ஊறுகாயா போட முடியும்..? அவனுங்களுக்கு கை உடைஞ்சா என்ன..? கால் உடைஞ்சா என்ன..? எனக்கு வேலை நடக்கணும் அவ்வளவுதான்..” என்று விட்டு அவர் சென்று விட செய்வதறியாது விழித்தான் சுரேஷ்.
 
 
ஐந்து வருடங்களாக ரத்தினத்திடம் வேலை பார்ப்பவன் தான், அவரிட்ட கட்டளையை யோசிக்காமல் செய்து முடிக்க கூடியவன் தான் என்றாலும் ‘இந்த நிலையில் இருப்பவர்களை வைத்து என்ன செய்து விட முடியும்..?’ என அவனுக்கு சுத்தமாக புரியவில்லை. 
 
 
அதே நேரம் ரத்தினத்தின் வார்த்தையை மீறவும் அவனால் முடியாது. இவர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டு இருப்பது புரிய.. ‘இவனுங்களுக்கு எல்லாம் பாவம் பார்த்தா என் பிழைப்பு பாவமா போயிடும்.. இரண்டு நாளில் எழுந்து உட்கார வைக்கணும்..’ என்று தனக்குள்ளேயே முனகியப்படி அங்கிருந்து நகர்ந்தான் சுரேஷ். 
 
 
**
 
 
படுக்கை விரிப்பை இறுக பிடித்தபடி பல்லை கடித்துக்கொண்டு சிந்து வலியை பொறுத்துக் கொள்ள முயல்வதை செய்வதறியாது கைகளை பிசைந்தபடி சற்று தள்ளி நின்று பார்த்திருந்தான் தாரக். 
 
 
தன் முன் முழுமையாக அவள் வலியை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தாலும் என்ன செய்து அவளை இயல்பாக்குவது என்று தான் அவனுக்குத் தெரியவில்லை. 
 
 
முழு உரிமையோடு அவளை நெருங்கி அணைத்து ஆறுதல் சொல்லவும் முடியா தயக்கம் அவனை தடை செய்து கொண்டிருக்க.. கவலையோடு சிந்துவை பார்த்திருந்தான் தாரக். சற்று முன்பு தான் சாரதாவையாவது இங்கு துணைக்கு வரவழைக்கலாம் என்றெண்ணி அவருக்கு அழைத்திருந்தான் தாரக்.
 
 
ஆனால் மீண்டும் குமரேசனுக்கு உடல்நிலை சரியில்லை என அவனுக்கு அப்போதே தெரிய வந்தது. தாரக்கின் அழைப்பை ஏற்று “தீபன் தம்பி..” எனும் போதே சாரதாவின் குரலில் தெரிந்த சோர்வு அவனை யோசனையாக்கி இருந்தது. அதில் எடுத்ததும் அவன் சொல்ல வந்த எதையும் பேசாமல் “எப்படி இருக்கீங்க சாரதாம்மா..? ஐயா எப்படி இருக்காங்க..?” என்றிருந்தான் தாரக். 
 
 
“என்ன சொல்ல தம்பி..? மறுபடியும் நேத்து ராத்திரி எல்லாம் தூங்கலை, மூச்சு விட சிரமப்பட்டு உட்கார்ந்தே இருந்தார்.. இப்போ காலையில் இருந்து சாப்பிட்ட எதுவும் வயித்தில் நிற்கவே இல்லை.. எல்லாம் வெளியே வந்துடுது, தண்ணி குடிக்க கூட பயப்படறார் இன்னும் எத்தனை நாள் அவருக்கு இந்த நரகமோ தெரியலை.. என்னாலேயும் இதையெல்லாம் பார்க்க முடியலை..” என்று கலங்கிய குரலில் அவர் பேசிக் கொண்டே செல்ல.. அவன் சொல்ல வந்ததை விடுத்து அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து இருந்தான் தாரக்.
 
 
‘யாராவது பெண்கள் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும் யாரை அழைக்க முடியும்..? இந்த நேரத்தில் சுஜாதா தான் அருகில் இருந்து அவளை கவனித்துக் கொள்ள வேண்டும், சிந்துவுக்கும் அதைவிட சிறந்த ஆறுதல் வேறு எதுவும் கிடையாது என்று புரிந்தாலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று அறிந்தவனாக குழப்பத்தோடு நின்றிருந்தான் தாரக்.
 
 
நேரமாக ஆக சிந்துவுக்கு வலியும் அதிகரித்துக் கொண்டே செல்வது தெரிய.. அதை விழிமூடி இதழ் மடித்து அவள் தனக்குள்ளேயே பொறுத்துக் கொள்ள முயல்வதும் புரிந்தது. இதை எல்லாம் அருகில் இருந்து ஒரு கட்டத்திற்கு மேல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் சட்டென தன் தயக்கத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவளை நெருங்கி சிந்துவின் கரங்களை ஆதரவாக பிடித்துக் கொண்டான் தாரக். 
 
 
அதில் மெல்ல தன் விழிகளை திறந்து சிந்து பார்க்கவும், “ரிலாக்ஸ் செந்தூரிகா, உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே இன்னும் கொஞ்ச நேரம் தான் எல்லாம் சரியாகிடும்..” என மென்மையான குரலில் சொல்லியவாறே அவளின் வலது கரத்தை தன் இரு கரங்களுக்குள் பொத்தி வைத்தபடி மெதுவாக வருடி கொடுத்தான் தாரக். 
 
 
அந்த நொடி நிஜமாகவே தாரக்கின் வார்த்தைகள் அவளுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுக்கத்தான் செய்தது. இந்த நொடி அவளுக்கு சுஜாதாவின் நினைவே மனமெங்கும் நிறைந்து இருந்தது. அவர் அருகில் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என மனம் முழுக்க யோசனை எழுந்தாலும் அதை அவளால் யாரிடமும் வெளிப்படுத்தக் கூட முடியவில்லை. 
 
 
தன் வலியையும் உணர்வுகளையும் மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டு அவள் விழிமூடி தனக்குள்ளே போராடிக் கொண்டிருக்க.. அந்த நேரம் தான் தாரக்கின் இந்த வார்த்தைகள் அவளை லேசாக அசைத்துப் பார்த்தது. அதில் அவள் விழிகள் லேசாக கலங்கி கண்ணீர் வழிய தொடங்கி இருக்க.. அதை சிந்து அதீத வலியில் அழுவதாக புரிந்து கொண்டவன், தன் ஒற்றை விரலால் மெல்ல அதை துடைத்தபடியே “இன்னும் கொஞ்ச நேரம் தான் எல்லாம் சரியாகிவிடும், சில விஷயங்களை வார்த்தைகளில் சொல்வது ரொம்ப சுலபம், அனுபவிக்கிறவங்களுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும்.. நான் இல்லைன்னு சொல்லலை, ஆனா நிஜமாவே சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..” என்று அவன் கூற, அவள் தலை சரி என்பது போல் அசைந்தது. 
 
 
அதில் கனிவாக அவளைப் பார்த்தவன், “சூடா ஏதாவது கொஞ்சம் குடிக்கறியா..?” எனவும் ‘வேண்டாம்’ என தலையசைத்தாள் சிந்து. “ரொம்ப சோர்வா தெரியற, வலியை தாங்கவாவது உன் உடம்பில் சக்தி வேணுமே கொஞ்சமா ஏதாவது குடி..” என்று மீண்டும் தாரக் சொல்லவும், அப்போதும் வேண்டாம் என தலையசைத்தவள் மறுபடியும் சுண்டி இழுத்த இடுப்பு வலியில் தன்னையும் மீறி “ஆஆ..” என்று கத்தி விட்டிருந்தாள். 
 
 
இவ்வளவு நேரத்தில் முதன்முறையாக வாய்விட்டு கத்தியவளை பார்த்திருந்தவனின் விழிகள், அப்படியே தன் கரத்தின் மீது பதிந்தது. சிந்துவின் வலது கரம் அவன் கரத்தை அழுத்தி பிடித்துக் கொண்டிருக்க.. இந்த நொடி அவளின் தேவை என்னவென்று தாரக்கிற்கு புரிந்தது.
 
 
அதில் மருத்துவர் பேசியது நினைவுக்கு வர, “நான் இருக்கேன், உன் கூடவே தான் இருக்கேன்.. நீ இங்கே தனியா இல்லை, உனக்கு புரியுதா..? எதுவா இருந்தாலும் சேர்ந்து சமாளிப்போம்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க.. அதை எல்லாம் கேட்டதற்கு அடையாளமாக அவளின் விரல்கள் மேலும் தாரக்கின் கைகளில் இறுக்கத்தை கூட்டியது. ஆனால் விழிமூடி படுத்திருந்தவளிடமிருந்து வேறு எந்த ஒரு அசைவும் இல்லை. 
 
 
அவளின் பதிலை எல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத தாரக், தொடர்ந்து மெல்லிய குரலில் அவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தான். இது மனரீதியாக அவளிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது இவ்வளவு நேரமும் விரைப்பாக இருந்த அவளின் முகமும் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வதில் தெரிந்தது.
 
 
அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவர் சொல்லியிருந்தது போலவே இயற்கை முறையில் அனைத்தும் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிய.. உடனே சிந்து அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். 
 
 
அவ்வளவு நேரமும் அவளின் வலிகளை அருகில் இருந்து பார்த்திருந்த தாரக் நல்லபடியாக அனைத்தும் சரியாகி சிந்து வெளியில் வந்து விட வேண்டுமே என்ற தவிப்போடு அறுவை சிகிச்சை அறைக்கு வெளியில் நின்றிருந்தான். 
 
 
நரகமாய் கழிந்த பல நிமிடங்களை முடிவுக்கு கொண்டு வருவது போல் அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியில் வந்த மருத்துவர், பதட்டமாக தன்னை எதிர்த்து கொண்ட தாரக்கை பார்த்து “கவலைப்படாதீங்க, அவங்க நல்லா இருக்காங்க.. எல்லாம் முடிஞ்சது, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்களை அறைக்கு மாத்திடுவாங்க..” என்று விட்டு செல்ல.. அதுவரை மூச்சு விட கூட மறந்தது போல் இழுத்துப் பிடித்த மூச்சுடன் நின்றிருந்த தாரக் தளர்ந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
 
 
இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அவன் கனவிலும் நினைத்ததில்லை. இந்த நொடிகளை கடந்து வருவதற்குள் நூறு முறை மனதளவில் மறித்து இருந்தான் தாரக்.
 
 
 
 
நள்ளிரவை நெருங்கும் நேரம் மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. அதில் உண்டான குளிர் காற்று அறைக்குள் பரவி இருக்க.. உறக்கம் வராமல் புரண்டு படுத்தார் நாகராஜன். 
 
 
எப்போதும் சுற்றி ஆட்கள் இருக்க வாழ்ந்து பழகியவருக்கு இப்படி யாருமில்லாமல் இருப்பது ஒருவித மன சஞ்சலத்தை கொடுத்தது.. பல வருடங்களாக நெருக்கமானவர்களை அருகில் வைத்து அதிகாரம் செய்தே பழகி இருந்தவர் சரியான உறக்கம் பிடிக்காமல் எரிச்சலோடு புரண்டு கொண்டிருக்க.. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. 
 
 
இதில் உண்டான சலிப்போடு அவர் எழுந்து அமர, அறை முழுக்க இருள் சூழ்ந்திருந்தது. “டேய் முத்து..” என்று வழக்கம் போல் குரலை எழுப்பியவருக்கு மீண்டும் அவன் இங்கு இல்லாதது நினைவுக்கு வரவும் “எங்கே தான் போய் தொலைஞ்சானோ..?” என்று எரிச்சலோடு சொல்லியவாறே திரும்பியவர், அறைக்குள் யாரோ நிற்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
 
 
“ஏய் யாரது..? யாருடா அது..?” என கேட்டபடியே படுக்கையில் அமர்ந்த வாக்கில் பின்னுக்கு நகர்ந்தவர், இரவு தலையணைக்கு அடியில் வைத்த துப்பாக்கியை எடுக்க முயல.. அதற்குள் வெளியில் இருந்து வந்த மின்னல் ஒளியில் அங்கிருந்த ஆள் உயர அலங்கார ஜாடியின் நிழல் தான் தனக்கு அப்படி தெரிந்தது என்று புரிய, சட்டென பதட்டம் தணிந்தவராக பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார் நாகராஜன். 
 
 
°°°° என்று வெறுப்போடு முணுமுணுத்தவர், நெற்றியை நீவி விட்டுக் கொண்டே “ச்சே, கொஞ்ச நேரத்தில் பயந்து போயிட்டேன், எல்லாம் அந்த பரதேசி நா°°° வந்தது..” என்று தாரக்கை வசைப்பாடி முடித்தவர், இருளில் தட்டு தடுமாறி எழுந்து சென்று அங்கிருந்த மேஜை இழுப்பறையில் உள்ள மெழுகுவர்த்தியை எடுத்து பற்ற வைத்தார். 
 
 
இப்போது அறைக்குள் பரவிய மெல்லிய வெளிச்சத்தில் சுற்றும் முற்றும் பார்வையை சுழற்சியவர், அறையில் சந்தேகப்படுமாறு எதுவுமில்லை என உறுதி செய்து கொண்ட நிம்மதி பெருமூச்சோடு சில நொடிகள் ஜன்னலுக்கு அருகில் சென்று நின்றார். 
 
 
அவர் மனதில் இந்த நொடி பரவி இருந்த வெம்மைக்கு வெளியில் இருந்து வந்த குளிர்ந்த காற்று கொஞ்சம் இதமாக இருந்தது. ஆனால் ஜன்னல் வழியே வந்த காற்று அவர் ஏற்றி வைத்திருந்த மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு சென்றிருக்க.. வழக்கம் போல் சட்டென ஒரு வார்த்தையை உதிர்த்தவர், குளியலறையை நோக்கி நகர.. இடையில் இருந்து நாற்காலியில் இடித்துக் கொண்டார் நாகராஜன். 
 
 
இதற்கும் சேர்த்து முத்துவின் மேல் தான் அவரின் கோபம் திரும்பியது. “எங்கே தான்டா போய் தொலைஞ்சே..? இப்படி ஓடி ஒளிஞ்சுக்கறதில் என்ன மாறிட போகுது..? எதுவா இருந்தாலும் சொல்லி தான் தொலையேன்டா..” என்று முணுமுணுத்தவாறே குளியலறைக்குள் நுழைந்தவர், திரும்ப வரும் போது மீண்டும் அறைக்குள் நிழல் உருவமாக யாரோ நிற்பது போல் தெரிந்தது. 
 
 
ஆனால் இந்த முறை முன்பு போல் பதட்டமாகாத நாகராஜன் “இது வேற..” என்று சலித்துக் கொண்டே வெறுப்போடு படுக்கையை நோக்கி செல்ல.. அதே நேரம் அறைக்குள் நுழைந்திருந்த உருவம் நாகராஜனை நோக்கி பாய்ந்தது. 
 
 
இதில் நிலை தடுமாறி தரையில் சரிந்தவர், நடப்பது புரிந்து சுதாரிப்பதற்குள் தன் கையில் இருந்த கத்தியை நாகராஜனை நோக்கி அந்த உருவம் இறக்கி இருக்க.. இறுதி நொடியில் இருளில் பளபளத்த கத்தியை கண்டு வேகமாக புரண்டு இருந்தார் நாகராஜன்.
 
 
அதில் அவர் வயிற்றை நோக்கி பாய இருந்த கத்தி இடுப்பை லேசாக உரசி கொண்டு சென்றது. இதில் உண்டான வலியில் “ஸ்ஸ்..” என முனகியவர், கையில் வழிந்த ரத்தத்தை கண்டு எரிச்சலாகி திரும்பி பார்க்கவும், தன் குறி தப்பிய கோபத்தில் மீண்டும் கத்தியை இறக்க முயன்றான் அவன்.
 
 
அதை கண்டு நாகராஜன் தன் காலை வேகமாக அவன் வயிற்றில் இறக்க.. நிலை தடுமாறி பின்னால் சரிந்தான் அவன். உடனே செயல்பட்டவராக எழுந்த நாகராஜன், அவனை பிடித்து அடிக்க.. இருவருக்கும் அங்கே லேசான தள்ளு முள்ளு நடந்தது.
 
 
இதற்கிடையில் மீண்டும் வந்த மின்னலின் ஒளியில் தன்னை தாக்க முயன்றுக் கொண்டிருந்தவனின் முகத்தை கண்ட நாகராஜன் திகைத்தார். “நீயா..?” என்று அவர் ஒரு நொடி தன் பிடியை தளர்த்த.. அதில் வேகமாக அவரிடமிருந்து விலகி தள்ளி நின்று, “ஆமா, நானே தான்.. இந்த நாளுக்காக தான் இத்தனை நாளா காத்திருந்தேன்.. உன்னை என் கையால் குத்தி கொல்லணும்னு தான் நான் காத்திருந்தேன்..” என்று வெறி பிடித்தவன் போல் பேசியப்படியே அவர் மேல் பாய்ந்தான் விஷ்வா.
 
 
அவனை வாகாக வளைத்து பிடித்து அருகில் இருந்த சுவரில் சாய்த்திருந்த நாகராஜன், அவன் கழுத்தை பிடித்து இறுக்கி “டேய் லூசு பையலே என்னாச்சு உனக்கு..?” என்றார். அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவன் நாகராஜனிடமிருந்து விடுப்பட முயன்றுக் கொண்டிருந்தான் விஷ்வா.
 
 
இதில் எரிச்சலானவர், “ஏய் உனக்கு பைத்தியம் எதுவும் பிடிச்சு இருக்கா என்ன..? எதுக்குடா இப்படி செய்யறே..?” எனவும், அப்போதும் விஷ்வா அமைதியாகவே இருக்க.. “எனக்கு அப்போவே தெரியும்டா.. அந்த வீணா போனவனுக்கு நீதானே இங்கே இருந்து எல்லா உதவியும் செஞ்சது.. வீட்டுக்குள்ளே இருந்து யாரோ அவனுக்கு உதவறாங்கன்னு அப்போவே நினைச்சேன், இல்லைனா ஒண்ணுக்கு இரண்டு முறை ஒருத்தனால் என் வீடு புகுந்து என் பொண்ணை தூக்க முடியுமா..? இப்போ அவன் சொல்லி தானே இதை செய்ய வந்திருக்க..?” என்றார் வெறுப்போடு நாகராஜன்.
 
 
அதில் இகழ்ச்சியான இதழ் வளைவோடு அவரை பார்த்தவன், “நான் ஒருமுறை தான் உதவி செஞ்சேன்..” எனவும், அவனை புரியாமல் பார்த்தவர், வேண்டுமென்றே தன்னை வெறுப்பேற்ற அவன் பேசுவதாக நினைத்து “உன்னை இதை செய்ய சொன்னவன் உனக்கு என்ன கொடுத்தான்.. அதை விட அதிகமா உனக்கு நான் செஞ்சு இருக்கேன்டா நன்றி கெட்டவனே..! இத்தனை வருஷமா யாருமில்லாத அநாதையான உனக்கு சோறு போட்டு படிக்க வெச்சு பார்த்துக்கிட்டதுக்கு நல்ல நன்றி கடன் செஞ்சட்டடா..” என்றார் கேலி குரலில் அவனை சீண்டுவது போல் நாகராஜன்.
 
 
இதை கேட்டு இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த விஷ்வா தன் கட்டுபாடுகளை எல்லாம் மொத்தமாக இழந்தான். “நான் அநாதையாக காரணமே நீதானே..! எங்க அப்பா, அம்மா அக்கான்னு என் குடும்பத்தையே கொன்னது நீதானே..! இதில் உனக்கு நன்றி கடன் வேற செய்யணுமா நான்..?” என்று அவன் நாகராஜன் மேல் பாய்ந்தான்.
 
 
இதில் நிலை தடுமாறி பின்னே சரிந்தவர், சட்டென தன்னை சுதாரித்து அவனை தள்ளி விட்டு எழுந்து நின்றார். “ஓ.. எல்லாம் தெரியுமா உனக்கு..? அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் ஒண்ணுமே தெரியாத மாதிரி இத்தனை வருஷம் இங்கே ஓட்டிட்டு இருந்தியா..?” என்றார் கிண்டலாக நாகராஜன்.
 
 
“நான் ஓட்டிட்டு எல்லாம் இல்லை, உன்னை மொத்தமா முடிக்க சரியான நேரம் பார்த்து காத்திருந்தேன்..” என்றவனை பார்த்து சத்தமாக சிரித்தவர், “சுயநலக்காரன்டா நீ.. நிஜமான ரோஷக்காரனா இருந்திருந்தா இத்தனை வருஷம் உன் குடும்பத்தை கொன்னவன் வீட்டிலேயே உட்கார்ந்து அவன் போடும் சாப்பாட்டையே சாப்பிட்டு வாழ முடிஞ்சு இருக்காது.. நீ நிஜமாவே என் தம்பிக்கு தான் பிறந்தியான்னு இப்போ தான் சந்தேகமா இருக்கு..” என்று அவனுக்கு வலிக்க வேண்டும் என்றே பேசினார் நாகராஜன்.
 
 
அது சரியாக வேலை செய்தது. அன்று அருணும் இப்படியே சொல்லி இருக்க.. இன்று இவரும் அதையே சொன்னதோடு தன் பிறப்பையே அசிங்கப்படுத்த பார்த்ததில் ஆத்திரமானவன், “உன்னை உயிரோட விட மாட்டேன்டா..” என்று கத்திபயவாறே நாகராஜனின் கழுத்தை நெறித்தான்.
 
 
இதை கொஞ்சமும் எதிர்பாராமல் திணறிய நாகராஜன், சில நிமிடங்களில் தன்னை மீட்டுக் கொண்டு அவனை பலமாக தாக்க.. அங்கு இருவருக்கும் அடிதடி கொஞ்சம் ஆக்ரோஷமாகவே நடந்தது.
 
 
ஆனால் அடிதடியையே வாழ்க்கையாக கொண்டிருப்பரிடம் அவனால் வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதோடு விஷ்வா அவ்வளவு உடல்பலமும் இல்லாதவன் வேறு. சிறு வயதின் நிகழ்வின் காரணமாக அவனுக்கு அடிக்கடி உடல்நிலையும் பாதிக்கப்படும்.
 
 
இதனாலேயே மற்ற பிள்ளைகளை விட கூடுதல் கவனம் எடுத்து விஷ்வாவை கவனித்துக் கொள்வார் சுஜாதா. இதில் விரைவாக அவன் சோர்ந்து போக.. அவனின் நிலையை கண்டு சிரித்தார் நாகராஜன்.
 
 
இதில் வெறுப்பானவன், அருகில் இருந்த பொருட்களை தூக்கி நாகரஜான் மேல் வீசினான். அது சரியாக அவரின் நெற்றியை வந்து தாக்க.. வெறியாகி விட்டார் நாகராஜன்.
 
 
“அடிங்க ..” என வசைப்பாடிக் கொண்டே அவனை பிடித்து அருகில் இருந்த பொருளை எடுத்து தலையில் அடித்தார் நாகராஜன். இந்த சத்தத்தில் அருண் விழித்துக் கொள்ள.. அவரிடம் இருந்து விடுப்பட விஷ்வா போராடிக் கொண்டிருந்ததில் மேலும் அங்கிருந்த பல பொருட்கள் உடைந்து சிதறியது.
 
 
இதில் சுஜாதாவும் பயந்து போனார். உடனே அருண் தன் தந்தையின் அறைக்கு வர, “என்னையே கொல்ல நினைக்கறியா..?” என்று ஆத்திரமாக கேட்டவாறே விஷ்வாவின் தலையை பிடித்து சுவரில் மோதிக் கொண்டிருந்தார் நாகராஜன்.
 
 
முதல் மோதலிலேயே அடி பலமாக அவனுக்கு பட்டிருக்க.. நிலைக்குலைந்து போயிருந்தவனை இனியும் விட மாட்டேன் என்பது போல் தொடர்ந்து மோதிக் கொண்டே இருந்தார் நாகராஜன்.
 
 
அதற்குள் அங்கே வந்து சேர்ந்திருந்த அருண், அறை இருந்த நிலையை கண்டு திகைக்கும் போதே மின்சாரமும் வந்து விட்டது. விஷ்வா இருந்த நிலையை கண்டு பதறி “அப்பா..” என அருகில் வர, “வா அருண், இந்த *** என்ன செஞ்சு இருக்கான் பார்..” என்றவர் அவனை சுவரில் மோதுவதை கொஞ்சமும் நிறுத்தவில்லை.
 
 
“அப்பா என்ன செஞ்சுட்டு இருக்கீங்க..? விடுங்க அவனை..” என்று அருண் தடுக்க முயல.. “பக்கத்தில் வந்தே அவ்வளவு தான்.. இவன் என்னையே கொல்ல வந்தான்..” என்றவர் நடந்ததை சுருக்கமாக சொல்ல.. என்றாவது ஒரு நாள் இப்படி செய்வான் என யூகித்து இருந்த அருண் கவலையாக விஷ்வாவை பார்த்தான்.
 
 
“எவ்வளவு கொழுப்பிருந்தா இப்படி யோசிச்சு இருப்பான்..” என மேலும் வேகமாக அவர் விஷ்வாவின் தலையை மோத.. “ஐயோ விஷ்வா..” என்று பின்னிருந்து அலறினார் சுஜாதா. அதில் பார்வையை திருப்பிய நாகராஜன் “உன் செல்ல பிள்ளை செஞ்ச காரியத்தை பார்..” என்று ஆத்திரத்தில் கத்தினார்.
 
 
“ஐயோ பிள்ளை பாவம், அவனை விட்டுடுங்க..” என சுஜாதா கதற, “என்னது பாவமா..? அவன் என்ன செய்ய வந்தான்னு தெரிஞ்சும் அவனை விட சொல்றியா..?” என்றவர் சுஜாதாவின் மீதான கோபத்தை சேர்த்து விஷ்வாவிடமே காண்பிக்க.. “அப்பா, அவனுக்கு தலையில் இருந்து ரத்தம் நிற்காம போகுது.. போதும் விடுங்க..” என்று விஷ்வாவை விடுவிக்க முயன்றான் அருண்.
 
 
“பக்கத்தில் வராதே.. இப்போ கூட உங்களுக்கு இவன் தான் முக்கியமா போயிட்டானா..?” என்று நாகராஜன் கேட்கவும், “பாவம்ங்க சின்ன பிள்ளை, தெரியாம ஏதோ செஞ்சுட்டான் விட்டுடுங்களேன்..” என சுஜாதா அவனின் நிலையை காண முடியா தவிப்போடு கையெடுத்து கும்பிடவும், அதே நேரம் விஷ்வாவின் தலை தொங்கவும் சரியாக இருந்தது..
 
 
 
 
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 37
 
இரண்டு நாட்களுக்குப் பின் சிந்து வீடு திரும்பி இருந்தாள். உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிந்தது போல் கிழிந்த நாராக படுக்கையில் கிடந்தவளை கவலையாக பார்த்தான் தாரக். 
 
 
அன்று எல்லாம் முடிந்தது என மருத்துவர் கூறிய போது கூட இதோடு அவளின் வலிகளும் வேதனையும் முடிவுக்கு வந்தது விட்டது என்றே நினைத்திருந்தவனுக்கு, அதன் பின்பும் பல வலிகளை அவள் தாங்கிக் கொள்ள வேண்டிய இருக்கும் என அப்போது புரியவில்லை .
 
 
அவசரத்திற்கு எழுந்து செல்ல கூட முடியாமல் எல்லா தேவைகளும் படுக்கையிலேயே எனும் நிலையில் இருந்தவளை கவனித்துக் கொள்வதில் உண்டான தடுமாற்றத்தோடு தவித்துப் போனான் தாரக். 
 
 
எந்த தயக்கமும் இல்லாமல் அவளுக்கு அனைத்தையும் செய்ய அவன் தயாராகவே இருந்தாலும் அதை ஏற்க சிந்து கொஞ்சமும் தயாராக இல்லை. அவளின் சங்கடங்களும் புரிய, மேலும் சிந்துவை வற்புறுத்த விரும்பாதவன் உமாவை மருத்துவமனைக்கு வரவழைத்து விட்டிருந்தான். 
 
 
அடுத்த இரண்டு நாட்களும் உமா தான் உடனிருந்து சிந்துவை பார்த்துக் கொண்டார். தாரக் அறைக்குள் சென்று மேலும் அவளை சங்கடப்படுத்த விரும்பாதவனாக வெளியில் காத்திருந்தான். 
 
 
உமா வந்ததும் அவன் கிளம்பிச் சென்று விட்டான் என எண்ணிக் கொண்டிருந்த சிந்துவிற்கு தாமதமாக தான் தாரக்கும் இங்கேயே இருப்பது தெரிய வந்தது. இருவருக்குமான உணவை வரவழைத்து இருந்தவன் அதை கொடுக்க வரும் போதே சிந்து தாரக்கை கவனித்திருந்தாள். 
 
 
சோர்வோடு அவனைப் பார்த்தவள் “நீங்க வீட்டுக்கு போகலையா..?” எனவும் ‘இல்லை’ என்பதாக தலையசைத்தான் தாரக். “இங்கே எல்லாம் முடிஞ்சுது, இனி எந்த பிரச்சனையும் இல்லை.. நீங்க கிளம்புங்க உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்..” என நலிந்து போன குரலில் அவள் கூறவும், “இருக்கட்டும் பரவாயில்லை, ஏதாவது அவசர தேவை இருக்கும்.. நான் பார்த்துக்கறேன்..” என்றான் தாரக்.
 
 
“அதெல்லாம் இல்லை, இனி நான் ரெஸ்ட்டில் இருந்தா போதும்னு தான் சொன்னாங்க.. அப்படியே ஏதாவது அவசர தேவை இருந்தாலும் உமா அக்கா இருக்காங்க இல்லை, அவங்க பார்த்துப்பாங்க.. நீங்க கிளம்புங்க, உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்..” என்றாள் சிந்து. 
 
 
“அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ இப்போ ரெஸ்ட் மட்டும் எடு..” என்றவனை மீண்டும் மறுப்பாக பார்த்து சிந்து எதையோ சொல்ல முயல, “நாம சேர்ந்து தானே இங்கே வந்தோம்.. சேர்ந்தே வீட்டுக்கு போகலாம் அவ்வளவு தான், நேத்து நான் சொன்ன வார்த்தைகள் வெறும் பேச்சுக்கு சொன்னது இல்லை.. உண்மையா உணர்ந்து தான் சொன்னேன், எதுவா இருந்தாலும் சேர்ந்தே சமாளிப்போம்..” என அழுத்தம் திருத்தமான குரலில் அவளைப் பார்த்து இனி நீ எதுவும் பேசாதே என்பது போல் சொல்லிவிட்டு வெளியே சென்றான் தாரக். 
 
 
அவன் சென்ற திசையை சிந்து கலவையான உணர்வுகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அறைக்குள் வந்த உடனேயே மரியாதை நிமித்தம் வெளியேறியிருந்த உமா காரிடாரில் நின்றிருக்க.. “நீங்க போய் சாப்பிடுங்க, செந்தூரிகாவுக்கும் என்ன பிடிக்குதுன்னு பார்த்து கொஞ்சம் சாப்பிட வைங்க..” என்று விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விழிமூடிக் கொண்டான் தாரக்.
 
 
அவனும் காலையிலிருந்து எதுவும் சாப்பிட்டு இருக்கவில்லை என அறிந்திருந்த உமா “சார் உங்களுக்கு..” என தயக்கமாக இழுக்க.. “எனக்கு இப்போ எதுவும் வேண்டாம், நான் அப்புறம் பார்த்துக்கறேன்..” என்றவன் விழிகளை கூட திறக்கவில்லை. 
 
 
அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல் உமா உள்ளே சென்று விட, இரண்டு நாட்களும் இப்படியே சிந்துவின் அறைக்கு வெளியில் காத்திருந்தான் தாரக். 
 
 
இதோ இப்போது அவளை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகே அவனுக்கு கொஞ்சம் மனம் நிம்மதியாக இருந்தது. ஒவ்வொரு முறையும் மருத்துவர் அவளை பரிசோதிக்க அறைக்குள் சென்று விட்டு திரும்பும் போதெல்லாம் அத்தனை பதட்டத்தோடு அவரை எதிர்கொள்வான் தாரக். 
 
 
இந்த முறை என்ன சொல்வாரோ என்ற படபடப்பு அவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அதை கவனித்திருந்த மருத்துவரும் “நீங்க இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை மிஸ்டர், ஆபத்தான கட்டத்தை உங்க மனைவி கடந்து வந்துட்டாங்க.. இனி அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனா அடுத்த குழந்தைக்கு இப்போ அவசரப்படக்கூடாது.. முதலில் அவங்க உடம்பு தேறி வரணும் புரியுதா..?
 
 
உடலளவில் மட்டுமில்லை, மனதளவிலும் இப்போ அவங்க நிறைய வலிகளை தாங்க வேண்டி இருக்கும், நிறைய உளவியல் சிக்கல்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.. அதெல்லாம் சரியாக அவகாசம் கொடுங்க..” என்றவரின் அத்தனை வார்த்தைக்கும் அவன் சம்மதமாக தலையசைக்க.. “இதை எல்லாம் கேட்கும் போது வேணும்னா பெருசா தெரியலாம், பயமா இருக்கலாம்.. ஆனா இதையெல்லாம் அவங்க சீக்கிரம் கடந்து வருவது உங்க கையில் தான் இருக்கு.. உங்க காதலால் அரவணைப்பால் நெருக்கத்தால் சீக்கிரம் அவங்களை மீட்டுக் கொண்டு வர வேண்டியது இனி உங்க பொறுப்பு.. உடல் நலம் தேற தான் எங்களால் மருந்து கொடுக்க முடியும், மனநலம் தேற நீங்கதான் முயற்சி எடுக்கணும்.. 
 
 
இனி எதுக்கும் அவசரப்பட மாட்டீங்கன்னு நினைக்கறேன், அதோட அடுத்த குழந்தை வந்ததும் முதலில் என்ன செய்யணும் ஞாபகம் இருக்கு இல்லை..” என்று சிறு கண்டிப்போடு பேசிவிட்டே அவர் நகர, அதுவரை இழுத்துப் பிடித்த மூச்சோடு நின்றிருந்த தாரக் அதை வெளியேற்றியவாறு அருகில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றான்.
அத்தனை பெரிய தொழிலை ஒற்றை ஆளாய் ஏற்று நடத்தும் போது கூட அவன் இவ்வளவு பதட்டமானது இல்லை. ஆனால் இதெல்லாம் பெரும் சிரமமாக இருந்தது. 
 
 
அதோடு மருத்துவரிடம் வேறு எதுவும் பேசவோ விளக்கமளிக்கவோ அவனுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. செந்தூரிகா உடல்நலம் சரியானால் போதும் என்று மட்டுமே அந்த நொடி அவனுக்கு தோன்றியது.
 
 
*******
 
 
அந்த ஐசியூ வாயிலில் அழுதபடி நின்றிருந்தார் சுஜாதா. அவர் அருகில் இருந்த அருணின் முகமும் கவலையில் தோய்ந்திருந்தது. கிட்டத்தட்ட விஷ்வாவை இங்கு அனுமதித்து 12 மணி நேரங்கள் கடந்து இருக்க, இப்போது வரை அவன் கண்விழிக்கவில்லை. 
 
 
மருத்துவமனைக்கு அவனைக் கொண்டு வரும் போதே மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியவர்கள், விஷ்வா பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட்டே அவனுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தனர். அதன் பிறகு நடந்த அவசர அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருந்தாலும் எட்டு மணி நேரத்திற்குள் விஷ்வா கண் விழிக்க வேண்டும் இல்லையென்றால் அவன் பிழைப்பது கடினம் என்று மருத்துவர் சொல்லிச் சென்று இருந்தார். 
 
 
அதில் ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு சுஜாதா பதட்டத்தோடு ஐசியூ வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க.. மருத்துவர் சொல்லிச் சென்ற நேரத்தை விட அதிகமாக நான்கு மணி நேரம் கடந்தும் விஷ்வா கண்விழிக்கவே இல்லை. 
 
 
இதில் பயந்து போன சுஜாதா இதுவரை பத்து முறை மருத்துவரை போய் பார்த்துவிட்டு வந்திருந்தார். அவர்களுக்கும் அடுத்து என்ன செய்வது எனப் புரியவில்லை. அவனுக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகும் விஷ்வா கண் விழிக்கவில்லை என்றால் அவன் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே போவது தெரிந்தது.
 
 
இதில் அதிசயத்திலும் அதிசயமாக உயிர் போகாமல் அவன் கோமாவிற்கு செல்லவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை மருத்துவர்கள் இப்போதைக்கு சுஜாதாவிடம் சொல்லி இருக்கவில்லை. ஏனெனில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஒருவேளை அப்படி நடக்காமல் போனால் இவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியது போல் ஆகிவிடும் என நினைத்து அதை தவிர்த்தார். 
 
 
அருணும் எப்படியாவது விஷ்வா பிழைத்து விட வேண்டுமே என்ற தவிப்போடு தான் அங்கு நின்றிருந்தான். அவனுக்கும் விஷ்வாவின் மேல் நிறைய கோபம் இருந்தது தான். ஆனால் அதையும் கடந்து இத்தனை வருடங்களாக உடன் பிறந்தவனாக எண்ணி வளர்த்திருந்தவனின் இந்த நிலை அருணை அசைத்துப் பார்த்தது. 
 
 
விஷ்வாவை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குள் நாகராஜன் அத்தனை அமர்க்களம் செய்து விட்டிருந்தார். “அவனை விட்டுடுங்க பாவம்..” என்று அருணும் சுஜாதாவும் ஒரே நேரத்தில் சொல்லியபடி விஷ்வாவை நெருங்க.. அதே நேரம் விஷ்வாவின் தலைத்தொங்கி இருந்தது. 
 
 
அதை கண்டு கதறி துடித்து விட்டார் சுஜாதா. விஷ்வாவின் அந்த நிலையைக் கண்டு அருணுமே பயந்து தான் போனான். ஆனால் இது எதுவும் பாதிக்காது போல் அங்கே நின்றிருந்த ஒரே ஜீவன் நாகராஜன் தான். தன் கையில் இருந்த விஷ்வாவின் தலை தொங்கியதைக் கண்டு யோசிக்காமல் தன் கையை அவர் விலக்கிக் கொள்ள.. தொப்பன தரையில் விழுந்திருந்தான் விஷ்வா. 
 
 
அதில் சுஜாதா அலறிக்கொண்டு அவனை தாங்கிப் பிடிக்க முயல்வதற்குள் அனைத்தும் நடந்து விட்டிருக்க.. “விஷ்வா.. விஷ்வா.. ஐயோ என்னை விட்டு போயிட்டியா..?” என்று சுஜாதா அழுது கதறி கொண்டிருக்க.. அருணும் கண்ணீரோடு விஷ்வாவின் முகத்தை விரல்கள் நடுங்க மெல்ல வருடி கொடுத்தான். அப்போதே அவனுக்கு லேசாக மூச்சு வருவது அருணுக்கு தெரிந்தது.
 
 
இதில் பரபரப்பானவன் “ம்மா, விஷ்வாவுக்கு உயிர் இருக்கு, இன்னும் உயிர் இருக்கு..” என்று வேகமாக தன் அலைபேசியை எடுக்க முயல.. “எவனாவது அவனைக் காப்பாற்ற பார்த்தீங்க.. உங்களையும் சேர்த்துக்கொன்னு புதைச்சுடுவேன்..” என்றார் ஆத்திரத்தோடு நாகராஜன்.
 
 
“அப்பா இது உங்க கோபத்தை காட்டும் நேரமில்லை..” என்று அருண் சொல்ல “இது என் கோபம் இல்லைடா வெறுப்பு, இவனெல்லாம் வாழ கூட தகுதி இல்லாதவன்.. சுயநல பிசாசு, கொஞ்சம் கூட நன்றி இல்லாதவன்.. என் சோத்தை தின்னுட்டு என்னையே கொல்ல பார்த்தான்..” என்று அவர் ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருக்க.. இதெல்லாம் சுஜாதாவின் செவியில் விழுந்தாலும் மனதில் கொஞ்சமும் பதியவில்லை. 
 
 
“அருண்.. அருண் விஷ்வாவை எப்படியாவது காப்பாத்தேன்..” என்று அவர் ஒரு பக்கம் கதறிக் கொண்டிருக்க.. “என்னையே கொல்ல வந்தான்னு சொல்றேன், அவனை காப்பாற்ற சொல்லி துடிக்கறியா..? நீயும் அவனை மாதிரி தான்டி கொஞ்சம் கூட நன்றி இல்லாத ஜென்மம்..” என கோபத்தில் சுஜாதாவை அப்படியே எட்டி உதைத்து இருந்தார் நாகராஜன்.
 
 
இதில் நிலைகுலைந்து அருகில் இருந்த மேஜையில் மோதி கொண்ட சுஜாதாவின் நெற்றியில் இருந்து ரத்தம் கசிந்தது. இவ்வளவு நேரம் இழுத்து பிடித்த பொறுமையோடு இருந்த அருண் “அப்பா..” என ஆத்திரத்தோடு நாகராஜனை பிடித்து தள்ளி இருக்க.. பின்னால் இருந்த படுக்கையில் விழுந்தவர், வழக்கம் போல் பல வண்ணங்களில் திட்டிக்கொண்டே எழுந்து அங்கிருந்து துப்பாக்கியை கையில் எடுத்திருந்தார். 
 
 
“என் மேலேயே கை வைக்கும் அளவுக்கு திமிர் கூடிப்போச்சோ..! என்னை மீறி இவனை காப்பாத்தவோ இந்த ரூமில் இருந்து ஒரு அடி வெளியே எடுத்து வைக்கவோ யாரு நினைச்சாலும் சரி, அவங்களையும் சேர்த்து இவன் கூடவே அனுப்பி வெச்சுடுவேன்..” என்று அவர் மிரட்ட.. அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அருண் விஷ்வாவை தூக்க முயன்றான். 
 
 
“எவ்வளவு திமிருடா உனக்கு..?” என்று மகன் என்றும் பாராமல் அவன் தலைக்கு நேராக துப்பாக்கியை நீட்டினார் நாகராஜன். அவர் எந்த அளவிற்கு பழிவெறி பிடித்தவர் என்று நன்கு அறிந்திருந்தால் அருண் கொஞ்சமும் யோசிக்காமல் அவரின் மேல் பாய்ந்து அந்த துப்பாக்கியை தட்டி விட்டிருந்தான்.
 
 
எப்போதும் தன்னை கண்டு பயந்து விலகுபவனின் இந்த அணுகுமுறை நாகராஜனை வெறியேற்றி இருக்க.. கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி அருணின் மேல் வீசினார் நாகராஜன். இதில் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளும் அடிதடியும் நடந்து கொண்டிருக்க.. “விஷ்வா.. விஷ்வா..” என்று சுஜாதா கதறும் குரல் அருணுக்கு கேட்டது. 
 
 
அதில் நேரமாவதை உணர்ந்து இதற்கு மேல் தாமதிப்பது விஷ்வாவிற்கு நல்லதல்ல என எண்ணியவன், சட்டென எடுத்த முடிவோடு வேகமாக நாகராஜனை அவர் எதிர்பாராத நேரத்தில் பிடித்து குளியலறைக்குள் தள்ளி கதவை அடைத்து விட்டு விஷ்வாவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு காரை நோக்கி ஓடினான். 
 
 
அவன் பின்னே ஓடிவந்த சுஜாதாவும் அருணும் சேர்ந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு விஷ்வாவை அழைத்து வந்து சேர்த்திருந்தனர். விஷ்வாவுக்கு ஒருபுறம் சிகிச்சை நடந்து கொண்டிருக்க.. மற்றொரு புறம் அங்கிருந்த நர்ஸிடம் சொல்லி சுஜாதாவின் நெற்றி காயத்திற்கு கட்டு போட்டு இருந்தான் அருண். 
 
 
இதையெல்லாம் யோசித்தபடியே சுவரில் சாய்ந்து நின்றிருந்தவன், சுஜாதாவின் மெல்லிய அழுகை குரலில் அவரின் பக்கம் திரும்பினான். “கடவுளே எப்படியாவது அந்த குழந்தையை காப்பாற்றி என் கையில் கொடுத்துடுங்களேன்.. அந்த குடும்பமே அழிஞ்சதுக்கு ஏதோ ஒரு வகையில் நானும் காரணமாகிட்டேன், கண்ணு முன்னே நடந்ததை தடுக்க முடியா பாவியாகிட்டேன்.. இவனையாவது நல்லபடியா வளர்த்து ஆளாக்கிடணும்னு நான் எடுத்த முயற்சி எல்லாம் இப்படி வீணா போச்சே..
 
 
சுசிலாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன், அவளுக்கு நான் சத்தியம் செஞ்சுக் கொடுத்தேனே..! உன்னை சாக விட்ட மாதிரி உன் பிள்ளையை விட்டுட மாட்டேன், எப்படியாவது என் கண்ணுக்குள்ள வெச்சு காப்பாற்றுவேன்னு சத்தியம் செஞ்சேனே..! இப்படி என் கண்ணு முன்னே சாக கிடக்கறானே.. ஐயோ சிந்துவுக்கு தெரிஞ்சா தாங்க மாட்டாளே..!” என்று அவர் அழுது அரற்றிக் கொண்டிருந்ததை கேட்ட அருண் துணுக்குற்றான். 
 
 
சட்டென நினைவு வந்தவனாக நிமிர்ந்து நின்றவன், இப்போது வரை விஷ்வாவுக்கு இப்படியானதை பற்றி தாரக்கிடம் சொல்லவில்லை என புரிந்து ‘ஐயோ’ என்று தன் நெற்றியில் தட்டியபடியே அலைபேசியை எடுத்தபடி சற்று நகர்ந்து சென்றான். 
 
 
அதே நேரம் இங்கு சிந்துவிடும் பேசிக் கொண்டிருந்தான் தாரக். “ஹாஸ்பிடலில் இருந்து வந்தாச்சு, இனி நமக்கு ஒண்ணும் இல்லைன்னு நினைச்சு ஃப்ரீயா விட்டுட கூடாது.. டாக்டர் சொல்லி இருக்கும் மெடிசன்ஸ் எல்லாம் ரெகுலரா எடுக்கணும், இவங்க கொடுக்கும் ஃபுட்டை ஒழுங்கா சாப்பிடணும் ..அப்போ தான் உடம்பு சீக்கிரம் சரியாகும்..” என அவன் சொல்லிக் கொண்டிருக்க.. ‘சரி’ என்பதாக தலையசைத்தாள் சிந்து.
 
 
“என்ன சொன்னாலும் தலை மட்டும் சரின்னு அசையுது ஆனா காலையில் நீ சாப்பிடலைன்னு கேள்வி பட்டேன்..” என்று தாரக் கேட்கவும், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிந்து பார்வையை தழைத்துக் கொண்டாள். அவளுக்கு மருந்தின் வீரியத்தாலோ இல்லை படுத்துக்கொண்டே இருப்பதாலோ ஏனோ தெரியவில்லை சாப்பிட பிடிக்கவில்லை. 
 
 
அதை சொல்லி புரிய வைக்க முடியாது என எண்ணியே சிந்து அமைதியாக இருக்க.. “இப்படி எல்லாத்துக்கும் அமைதியா இருந்து சாதிச்சுடலாம்னு நினைக்காதே செந்தூரிகா.. அது என்கிட்ட நடக்காது, வேற யாரையாவது நீ இப்படி ஏமாற்றி பழகி இருக்கலாம்.. ஆனா என்கிட்ட பேசணும், பேசியே ஆகணும்.. உன் மனசில் என்ன இருக்குன்னு சொன்னா தான் எனக்கு தெரியும், புரியுதா..?” என்றான் பொறுமையான குரலில் தாரக். 
 
 
அதற்கும் அவள் சரி என தலையசைக்க.. பொறுமையற்று அவளை பார்த்தவன் “இப்போ தானே சொன்னேன்..!” எனவும் “இல்லை, நான்.. எனக்கு.. சாப்பிட பிடிக்கலை..” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திணறினாள் சிந்து.
 
 
“உடம்பு முடியாத நேரத்தில் அப்படித்தான் இருக்கும், அதுக்காக சாப்பிடாம இருந்தா எல்லாம் சரியாகிடுமா..? இன்னும் உடம்பு மோசமாகும், புரியுதா..? பிடிக்குதோ இல்லையோ மருந்தை எல்லாரும் பிடிச்சா சாப்பிடறோம்..! அதே மாதிரி சாப்பாடையும் மருந்துன்னு நினைச்சு கொஞ்சமா சாப்பிடு..” என அவன் குழந்தைக்கு சொல்வது போல் சொல்ல.. இப்போதும் அவள் அதே போல் தலையசைக்க முயல.. அவளை முறைத்துக் கொண்டு தாரக் நிற்பதை கண்டு தானாக மறுக்க முடியாமல் “சரி..” என்றாள் வாய் திறந்து சிந்து.
 
 
“ஹ்ம்ம் குட்..” என்று தாரக் சொல்லும் போதே அவன் அலைபேசி அழைத்தது. அதை எடுத்துப் பார்த்தவன் அருணின் எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் ஒரு நொடி நெற்றியை சுருக்கி அலைபேசி திரையை பார்த்துவிட்டு சிந்துவின் முகத்தை பார்த்தான். 
அந்தப் பார்வையில் இருந்து என்ன புரிந்ததோ அவளும் என்ன என்பது போல் தாரக்கை பார்த்திருக்க.. அவளிடம் எதுவும் சொல்லாமல் அலைபேசியை உயிர்ப்பித்து கொண்டே வெளியில் சென்றான் தாரக். 
 
 
அவன் சென்ற திசையை குழப்பமாக பார்த்த சிந்து பின் விழிமூடி சாய்ந்து கொள்ள.. அடுத்த மூன்று நிமிடங்களில் பதட்டமாக அவளை நெருங்கியவன் “செந்துரிகா..” எனவும், அந்த குரலில் சட்டென விழிகளை திறந்தாள் சிந்து. 
 
 
“ஒரு அர்ஜெண்ட் வேலை, நான் உடனே போயாகணும்.. ஒரு இரண்டு நாள் உன்னால் இங்கே தனியா சமாளிச்சுக்க முடியுமா..? நான் இரண்டு நாளில் கண்டிப்பா வந்துடுவேன், ஆனா நான் இப்போ போயே ஆகணும்..” என அவன் பரபரக்க.. அந்த குரலில் இருந்த பதட்டமும் அவன் முகத்தில் தெரிந்த படபடப்பும் சிந்துவை யோசிக்காமல் சம்மதிக்க வைத்திருந்தது. 
 
 
அப்போதும் மனம் கேட்காமல் “நிஜமான தானே சொல்றே..? உன்னால் தனியா..” என்று தாரக் கேட்கவும், “நான் எங்கே தனியா இருக்கேன், அதான் உமா அக்கா கூடவே இருக்காங்களே.. வெளியே வாட்ச்மேன் இருக்கார், அதுவும் இல்லாம காட்ஸ் வேற இருக்காங்க, அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.. நான் பார்த்துக்குவேன்..” என சிந்து சொல்லி முடிக்கவும் “உன்னை இந்த நிலையில் இப்படி தனியா விட்டுப் போக எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.. ஆனா இப்போ நான் போயாக வேண்டிய ஒரு சிச்சுவேஷன், அது..” என தொடங்கியவன் அவளிடம் சொல்ல வேண்டாம் என இறுதி நொடியில் தோன்றியதில் அப்படியே நிறுத்தினான். 
 
 
ஏனெனில் விஷ்வா என்ன தான் பழி வெறியோடு இவர்களோடு பழகி வளர்ந்து இருந்தாலும் இவர்கள் இருவரும் அப்படி அவனை பார்க்கவில்லை என அருண் சற்று முன் பேசியதிலிருந்தும், அன்று சிந்து நடந்து கொண்டதிலிருந்தும் புரிந்து கொண்டிருந்தவன், இந்த நேரத்தில் சிந்துவின் மனதை மேலும் வலிக்க செய்ய வேண்டாமெனத் தோன்றியதில் அப்படியே அவளிடம் சொல்லாமல் நிறுத்தி விட்டிருந்தான் தாரக்.
 
 
இப்போது அவள் உடல் இருக்கும் நிலையில் விஷ்வாவை பற்றி தெரிய வந்தால் கொஞ்சமும் யோசிக்காமல் அவனைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பி விடுவாள். அவ்வளவு தூரம் இவளை அழைத்துக் கொண்டு செல்வது சரியில்லை. அதோடு சிந்து இப்போது அந்த ஊருக்கு போவதும் நல்லதில்லை என்றெல்லாம் நொடியில் யோசித்து விஷ்வாவை பற்றிய உண்மையை அவளுக்கு தெரிய வராமல் பார்த்துக் கொண்டான் தாரக். 
 
 
அதன் பிறகும் மேலும் இரண்டு முறை அவளிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டே அங்கிருந்து கிளம்பியவன், “எதுவா இருந்தாலும் யோசிக்காம உடனே எனக்கு கால் செய், முடிஞ்சா நான் கூட கிளம்பி வந்துடுவேன்.. அப்படி என்னால் வர முடியலைனா கூட இங்கே உனக்கு உதவிக்கு ஆளை அனுப்புவேன் புரியுதா..?” என்று கேட்ட விதத்தில் சிந்து நெகிழ்ந்தே போனாள். 
 
 
எதற்கெடுத்தாலும் பொறுத்து விட்டு கொடுத்து போய், கேள்வி கேட்காமல் சொந்த வீட்டிலேயே ஒதுங்கி இருந்தே வாழ்ந்து வளர்ந்து பழகியவளுக்கு இந்த அன்பு அக்கறை கவலை எல்லாம் புதிதாக இருந்தது. அதில் தாரக் கேட்பதற்கெல்லாம் தயங்காமல் சரி என தலையசைத்துக் கொண்டிருந்தாள் சிந்து. 
 
 
அவளிடம் ஆயிரம் புத்திமதிகளையும் பல கட்டளைகளையும் சொல்லிவிட்டு தாரக் கிளம்பி சென்றிருக்க.. ஏதோ அவசர அலுவலக வேலையாக கிளம்பி செல்வதாக நினைத்து கொண்டாள் சிந்து. 
 
 
நேராக அருண் சொல்லி இருந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த தாரக், விஷ்வா இருந்த நிலையைக் கண்டு உடைந்தே போனான். கிழிந்த நாராக உடலெங்கும் காயத்தோடு முகம் எல்லாம் வீங்கி தலையில் போட்டிருந்த கட்டோடு அவன் இருந்த நிலை பார்க்கும் யாரையும் மனம் கலங்க செய்யும்.
 
 
அப்படித்தான் தாரக்கும் நின்றிருந்தான். கடந்த சில வருடங்களாக மாமா என்று அழைத்தப்படி தன்னையே சுற்றி வந்த ஒரு சின்ன பையனாக தான் விஷ்வா அவன் கண்ணுக்கு தெரிந்தான். 
 
 
அவனின் இந்த நிலைக்கு யார் காரணம்..? என்ன நடந்தது என்றெல்லாம் வரும் வழியிலேயே அருணிடம் பேசி தகவலை வாங்கி விட்டிருந்தவனுக்கு நாகராஜனை அடித்து துவைக்கும் அளவுக்கு வெறி எழுந்தது. 
 
 
“அவன் எல்லாம் மனுஷனா..? கொலை வெறி பிடிச்ச மிருகம்..” என்று பல்லை கடித்து கொண்டு தாரக் சொல்ல.. அவனுக்கு அருகிலேயே இருந்த அருணின் முகம் வேதனையை தத்தெடுத்தது. 
 
 
“டாக்டர் என்ன சொல்றாங்க..? வேற ஹாஸ்பிடலில் இதைவிட பெஸ்ட் ட்ரீட்மெண்ட் ஏதாவது சஜ்சஸ்ட் செய்யறாங்களா.. இல்லை சென்னைக்கு கூட்டிட்டு போக முடியுமா..? அவன் ஹெல்த் கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு..?” என்று அடுத்தடுத்து தாரக் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருக்க.. அனைத்திற்கும் சேர்த்து சுருக்கமாக இரண்டே வரியில் பதில் அளித்தான் அருண். 
 
 
“அவன் ஹெல்த் கண்டிஷன்க்கு இப்போ ட்ராவல் செய்ய முடியாது, அதோட அவங்க சொன்ன நேரத்தை கடந்து இன்னும் விஷ்வாகிட்ட இருந்து கொஞ்சம் கூட அசைவே இல்லை.. கொஞ்சம் ரிஸ்க்குன்னு தான் சொல்லியிருந்தாங்க ரொம்ப பயமா இருக்கு மாமா..” என்று தன்னையும் அறியாமல் உரிமையாக தாரத்தின் கைகளை பிடித்துக்கொண்டான் அருண்.
 
 
அதில் ஆதரவாக அருணின் கைகளை தட்டிக் கொடுத்த தாரக் “கவலைப்படாதே, தப்பா எதுவும் நடக்காது.. சீக்கிரம் விஷ்வா கண் விழிச்சு நம்மை பார்ப்பான்.. கண்டிப்பா சரியாகி நம்மகிட்ட திரும்ப வந்துடுவான், கவலைப்படாம இரு..” என்றான். 
 
 
அருணுக்கு ஆறுதல் சொல்லிவிட்டாலும் தாரக்கினுள்ளும் பெரும் பயம் இருக்க தான் செய்தது. எப்படியாவது விஷ்வா பிழைத்து விட வேண்டும் என்று தான் அங்கிருந்த மூவரும் நினைத்தனர். அவன் எவ்வளவு தான் துரோகம் இழைத்திருந்தாலும் அதை இந்த நொடி பெரிதுபடுத்திப் பார்க்க யாருக்குமே தோன்றவில்லை. 
 
 
இதில் ஒவ்வொருவரும் அவன் மீண்டு விட வேண்டும் என்ற வேண்டுதலோடு நின்றிருக்க.. அவர்களின் பிரார்த்தனைக்கு பலனும் இருந்தது.
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 38
 
லேசாக விஷ்வாவிடம் அசைவு தெரிவதாக நர்ஸ் வெளியில் வந்து சொல்லவும், அனைவரும் பரபரப்போடு எழுந்து ஐசியூவுக்குள் நுழைய முயல.. அதற்குள் அங்கிருந்த இன்னொரு நர்ஸ் “நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க, முதலில் டாக்டர் வந்து பார்க்கட்டும்..” என்றார்.
 
 
“இல்லைம்மா ஒரு இரண்டு நிமிஷம், அப்படி ஓரமா நின்னு எட்டி பார்த்துட்டு வந்துடறேன்.. குழந்தை கண்ணு முடிச்சுட்டான்னு கேட்க தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன், கொஞ்சம் கருணை காட்டுங்களேன்..” என்று சுஜாதா கண்ணீரோடு கேட்கவும் “ஏன்மா இத்தனை மணி நேரம் காத்திருந்தீங்க இன்னும் ஒரு பத்து நிமிஷம் காத்திருக்க மாட்டீங்களா..? முதலில் டாக்டர் வந்து பார்க்கட்டும்..” என்றார் அவரும் பொறுமையான குரலில்.
 
 
இதில் அருண் தன் அன்னையை அமைதிப்படுத்த, தாரக் மருத்துவர் வரும் வழியை பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவரும் செய்தி அறிந்து ஓட்டமும் நடையுமாக அங்கு வந்திருக்க.. “டாக்டர்..” என்று தாரக் எதையோ சொல்ல வரவும், “நர்ஸ் சொன்னாங்க, நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்..” என்று உள்ளே விரைந்தார் மருத்துவர். 
 
 
வெளியில் வந்து அவர் சொல்லப் போகும் வார்த்தைகளை கேட்க ஆவலோடும் படபடப்போடும் மூவரும் நின்றிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் வெளியில் வந்தவர் “நல்லவேளை கோவமாவுக்கு எங்கே போயிடுவாரோன்னு கொஞ்சம் பயந்துட்டு இருந்தேன்.. அப்படி எதுவும் நடக்கலை, லேசா நினைவு திரும்பி இருக்கு.. ஆனா முழுசா நினைவு இன்னும் வரலை, நீங்க போய் பார்க்கலாம்.. ஆனா பேச்சு கொடுக்க வேண்டாம், இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவு முழுசா திரும்பும்னு நினைக்கறேன், அதுக்கு பிறகு பேசிக்கலாம்..” என்றார். 
 
 
“அவன் உயிருக்கு எதுவும்..” என சுஜாதா பதட்டத்தோடு கேட்கவும், “இப்போதைக்கு எங்களால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது மேடம், ஆனா ஒரு இரண்டு நாள் போகட்டும்.. அதுக்கு பிறகு தான் தெளிவா எதுவும் சொல்ல முடியும், இப்போதைக்கு நினைவு திரும்பினதே மிகப் பெரிய விஷயம்னு புரிஞ்சுக்கோங்க..” என்று விட்டு அவர் சென்றார். 
 
 
அதன் பின் நர்ஸ் வந்து ஒவ்வொருவராக சென்று பார்த்து விட்டு வருமாறு கூற, சுஜாதாவின் பதட்டம் உணர்ந்து அவரை முதலில் செல்ல சொன்னான் தாரக்.  
 
 
அவர் உள்ளே சென்று பார்க்கும் போது மீண்டும் விஷ்வா மயக்கத்திற்கு சென்று விட்டிருக்க.. கவலையும் கண்ணீருமாக அவன் முகத்தை வருடினார் சுஜாதா. அதில் லேசாக அவன் விழிகளில் அசைவு தெரிந்தது. ஆனாலும் விஷ்வா கண் விழிக்கவில்லை.
 
 
“கண்ணா என்னடா இதெல்லாம்..? ஏன் இப்படி..? நீயும் என்னை ஏமாத்திட்டு போயிடாதே..! தனாவை தான் என்னால் காப்பாற்ற முடியாம போச்சு, உன்னையாவது நல்லா பார்த்துக்கணும் நினைச்சேனே..! எங்கே நான் தப்பு செஞ்சேன்னு தெரியலையே..!” என்று மெல்லிய குரலில் அவர் கண்ணீரோடு பேசிக் கொண்டிருக்க.. மீண்டும் அவனிடம் லேசாக அசைவு தெரிந்தது. 
 
 
அதற்குள் அங்கு நின்றிருந்த நர்ஸ் “நிறைய பேச்சு கொடுக்காதீங்க, அவருக்கு இன்னும் முழுசா நினைவு திரும்பவில்லை.. தானா நினைவு திரும்பட்டும், அதுக்கு பிறகு பேசிக்கலாம் இப்போ கிளம்புங்க..” என்றார். 
 
 
அங்கிருந்து செல்லவே மனமில்லாமல் சுஜாதா விஷ்வாவின் முகத்தை அன்போடு வருடி ஒருமுறை முத்தமிட்டு விட்டு அவனை திரும்பி பார்த்தவாறே வெளியேற, அவரை எதிர்பார்ப்போடு அருணும் தாரக்கும் பார்த்துக் கொண்டிருந்தனர். 
 
 
“கண் விழிக்கலை, இன்னும் மயக்கத்தில் தான் இருக்கான்.. ஆனா அசைவு தெரியுது..” என்றார் சுஜாதா. “அடுத்து யார் போறீங்க..?” என கதவருகில் நின்றிருந்த நர்ஸ் கேட்கவும், அருண் திரும்பி தாரக்கை பார்த்து “நீங்க போங்க..” என மெல்லிய குரலில் கூறினான். 
 
 
ஒரு நாள் முழுக்க விஷ்வாவோடு இருந்த அருண் சென்று பார்ப்பது தான் சரி என்று நினைத்த தாரக் “இல்லை நீ போ..” என அவன் தோளில் லேசாக தட்டினான். 
 
 
அருண் மறுத்து எதுவும் பேசாமல் சரி என்ற தலையசைப்போடு உடனே உள்ளே நுழைய, அவனின் பதட்டம் புரிந்து கவலையோடு அருண் சென்ற திசையை பார்த்தான் தாரக். 
 
 
அருண் சென்று விஷ்வாவின் முகத்தை கவலையோடு பார்க்க.. இப்போதும் விழிமூடி நினைவுத் திரும்பாமல் படுத்திருந்தான் விஷ்வா. “ஏன்டா இப்படி செய்யறே..? உன் கோபம் நியாயமானது தான், அதை தப்புன்னு யாரும் சொல்லலை.. ஆனா அதுக்காக ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறே..? அவர் செஞ்சது தப்புன்னா இப்போ நீ செய்யறது என்ன..? 
 
 
உன்னை எப்படி எல்லாம் படிக்க வெச்சு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு எவ்வளவு எல்லாம் நாங்க போராடிட்டு இருக்கோம்னு உனக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது..? அப்பாவை மட்டும் பார்த்து நீ எங்களை பத்தி யோசிக்கலையே..! அவரை பழிவாங்க எங்களை எல்லாம் என்ன செய்யவும் துணிஞ்சுட்டே இல்லை... அது தான் கஷ்டமா இருக்கு.. 
 
 
ஒரு நாள் ஒரே ஒரு நாள் கூட நீ எங்களை எல்லாம் உன் கூட பிறந்தவங்களா பார்த்தது இல்லையா..? ஆனா நாங்க இரண்டு பேரும் உன்னை எங்க கூட பிறந்தவனா மட்டும் தான்டா பார்க்கறோம்.. நீ என்ன செய்ய பார்த்தே..? எதனால் உனக்கு இப்படி ஒரு நிலைமைன்னு தெரிஞ்சும் உன்னை எப்படியாவது காப்பாத்திடணும்னு தான் இந்த நொடி வரை நானும் அம்மாவும் துடிக்கறோம்.. எழுந்து வந்துடுடா.. எழுந்து வந்துடு..” என மெல்ல முணுமுணுத்தபடியே அவன் நெற்றியை வருடிவிட்டான் அருண். 
 
 
விஷ்வாவை இங்கு அனுமதித்ததில் இருந்து ஒரு நொடி கூட அருண் உட்காராமல் அத்தனை பதட்டத்தோடு ஐசியூ வாயிலில் நின்று கொண்டிருந்ததை கவனித்திருந்த நர்ஸ் இடையிடாமல் அமைதியாகவே பார்த்திருந்தார்.
 
 
பின் “சார் போதும், நேரமாகுது..” என அவர் குரல் கொடுக்கவும், சரி என்ற தலையசைப்போடு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான் அருண். அவன் வெளியில் வந்தவுடன் அவசரமாக தாரக் உள்ளே செல்ல.. சுஜாதா தன் மகனிடம் “இப்போவாவது கண்விழிச்சு பார்த்தானா அருண்..?” என்று சோர்வான குரலில் கேட்டார். 
 
 
‘இல்லை’ என்பது போல் அருண் தலையசைக்கவும், “விழிப்பு வந்ததுன்னு சொன்னாங்களேடா..! ஆனா ஏன் அவன் இப்பவும் இப்படி இருக்கான்..?” என அவர் கவலையோடு பேசிக் கொண்டிருக்க.. நினைவு திரும்புச்சுன்னு சொன்னாங்க ம்மா, ஆனா மறுபடியும் அவன் மயக்கத்துக்கு போயிட்டான் அவ்வளவு தான்.. இதில் பயப்பட எதுவுமில்லை, நினைவு திரும்பாம இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.. இன்னும் சில மணி நேரங்களில் கண் விழிச்சுடுவான் கவலைப்படாதீங்க..” என்றான். 
 
 
அதே நேரம் விஷ்வாவின் அருகில் சென்று நின்ற தாரக், அவன் இருந்த நிலையை மனம் வலிக்க பார்த்துக் கொண்டிருந்தான். தனாவின் உடன் பிறந்தவன் என்ற ஒன்றே விஷ்வாவை முழுதாக நம்ப தன்னோடு சேர்த்துக் கொள்ள தாரக்கிற்கு போதுமானதாக இருந்தது. 
 
 
 அந்த அளவு முகம் தெரியாத விஷ்வா பற்றி அவ்வளவு தனா பேசி கேட்டிருக்கிறான் தாரக். அவளோ, அவளின் வயிற்றில் இருந்த தன் குழந்தையோ இல்லாமல் போன நிலையில் தனக்கென இருக்கும் ஒரே உறவு இவன் தான் என்று எண்ணிக் கொண்டிருந்த தாரக்கிற்கு விஷ்வாவின் இந்த நிலை பெரும் பயத்தை கொடுத்தது.
 
 
இவனும் எங்கே தன்னை விட்டு சென்று விடுவானோ என்று நினைத்த தாரக், அங்கு ஐவி ஏற்றப்பட்டிருந்த விஷ்வாவின் கரத்தை மெல்ல வலிக்காமல் பிடித்துக் கொண்டான். “விஷ்வா ப்ளீஸ் நீயும் என்னை விட்டு போயிடாதே.. நீ திரும்ப வந்துடு, நான் உன்னை பார்த்துக்கறேன்..” என்று சொல்லவும் விஷ்வா மெல்ல விழிகளை திறந்து அவனை பார்த்தான். 
 
 
அந்த நொடி தாரக் எப்படி உணர்ந்தான் என வார்த்தைகளில் அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது. சட்டென தொற்றிக் கொண்ட பதட்டம் அவன் உடலெங்கும் பரவ, வேகமாக திரும்பி நர்ஸை பார்த்தவன் “அவன் கண் விழிச்சுட்டான் பாருங்க..” என்று குரல் தழுதழுக்க கூறவும், விஷ்வா மீண்டும் விழிகளை மூடிக்கொண்டான். 
 
 
அதற்குள் விஷ்வாவை நெருங்கிய இருந்த நர்ஸ் “நினைவு இப்படி தான் சார் வந்து வந்து போகும், இன்னும் அது ஸ்டேபிளாக சில மணி நேரமாகும்னு நினைக்கறேன்..” என்றார். சரி என்பதாக தலையசைத்தவனுக்கு அவன் கண் திறந்து தன்னை பார்த்ததே போதும் என்பது போல் இருந்தது. 
 
 
விரைவில் அவன் முழுதாக தேறி வந்து விடுவான் என்ற நம்பிக்கை இந்த நொடி தாரக்கிற்கு தோன்ற.. “நான் வெளியில் தான் இருப்பேன், எதுவாயிருந்தாலும் கூப்பிடுங்க.. இதை விட பெஸ்ட் ட்ரீட்மென்ட் ஏதாவது இருந்தாலும் சொல்லுங்க, அதையும் முயற்சி செஞ்சு பார்த்துடலாம்.. நான் டாக்டர்கிட்ட இதை பத்தி பேசணுமா..?” என்று கேட்டவனின் குரலில் இருந்த பரபரப்பே விஷ்வா இவனுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதை அந்த நர்ஸுக்கு புரிய வைக்க போதுமானதாக இருந்தது. 
 
 
“நீங்க..?” என அவர் கேள்வியாக நிறுத்தவும், “நான்..” என வேகமாக தொடங்கியவன், சிறு இடைவெளி விட்டு பின் “அவனோட மாமா, அக்கா ஹஸ்பண்ட்..” என்றான். “ஓ.. அப்போ வெளியே இருக்கறவங்க அம்மாவும் அண்ணனும் சரியா..?” என்றார் நர்ஸ். 
 
 
ஆமென தாரக் தலையசைக்கவும் “நீங்க வெளியே இருங்க சார், திரும்ப அவருக்கு நினைவு வந்தா கூப்பிடுவோம்..” என்றார். அதில் அமைதியாக அங்கிருந்து தாரக் வெளியில் வர, மற்ற இருவரும் அவனை ஆவலோடு எதிர்கொண்டனர். “கண்ணை மட்டும் திறந்து பார்த்தான், நான் பேசினது எதுவும் புரிஞ்சுதா என்னன்னு தெரியலை.. திரும்ப கண்ணை மூடிட்டான்..” என்றான் தாரக். 
 
 
“என்ன கண்ணை திறந்து பார்த்தானா..? கடவுளே உனக்கு நன்றிப்பா..” என்று கையெடுத்து கும்பிட்ட சுஜாதா, “இது போதும், இது போதும் என் பிள்ளை சீக்கிரம் சரியாகிடுவான்..” என்று குரல் நெகிழ சொல்லவும் “நிஜமா இது நல்ல ஒரு முன்னேற்றம் தான் மாமா..” என்றான் அருண். 
 
 
இருவருக்கும் பொதுவாக ஆம் என்பது போல் தலையசைத்து விட்டு, சற்று தள்ளி இருந்த இருக்கையில் சென்று சோர்வோடு தலையை பிடித்தபடி அமர்ந்தான் தாரக். 
 
 
அவனுக்கு நடப்பது எதுவும் சரியாக தோன்றவில்லை. சுற்றிலும் எல்லா பக்கமும் வருத்தப்படும் படியான சம்பவங்களே நடந்து கொண்டிருக்க.. எதை எப்படி சமாளிப்பது என தெரியா அழுத்தத்தோடு தாரக் அமர்ந்து விட, சில நொடிகள் கழித்து மெல்ல அவனை நெருங்கிய அருண், தாரக்கின் அருகில் உட்கார்ந்தான். 
 
 
அதில் தலையை உயர்த்தி தாரக் பார்க்கவும் “சிந்து வரலையா..? அவளுக்கு விஷ்வாவுக்கு இப்படியானது..” என அருண் தயக்கத்தோடு இழுக்கவும் ‘தெரியாது’ என்பதாக தலையசைத்தான் தாரக். 
 
 
“ஏன் ஏன் சொல்லலை.. ஒருவேளை விஷ்வாவுக்கு ஏதாவதுனா அவ நம்மை சும்மா விடமாட்டா.. அவளும் கடைசியா அவனை..” என்று பேசிக் கொண்டிருந்தவன் தாரக் விழிகளை சுருக்கி அவனை பார்க்கவும், “ஐ மீன் இப்போ இல்லை, இப்போ ஆபத்தான கட்டத்தையும் அவன் கடந்துட்டான் தான், ஆனா அதுக்கு முன்னே அப்படி இல்லையே.. நீங்க கூட்டிட்டு வந்து இருக்கணும்..” என்றான் அருண். 
 
 
இதற்கு மேலும் அவனிடம் இருந்து மறைக்க முடியாது என புரிந்து சிந்துவின் நிலையை பற்றி சுருக்கமாக கூறினான் தாரக். அதை கேட்டு அதிர்ந்த அருண் “என்னது..?” என்று பதட்டத்தோடு எழுந்து நின்று விட, சற்று தள்ளி நின்றிருந்த சுஜாதா திரும்பி இருவரையும் புரியாமல் பார்த்தார். 
 
 
“இது.. இதெல்லாம் எப்போ..? எப்படி..? ஏன்..?” என்ற அருண் புரியாமல் படபடக்க, அனைத்தையும் சொல்லி முடித்தான் தாரக். அதைக் கேட்டு அப்படியே இருக்கையில் தலையைப் பிடித்துக் கொண்டு பொத்தென அமர்ந்தான் அருண்.
 
 
“ஏன் எங்களுக்கு மட்டும் எல்லாம் இப்படி நடக்குது..? எங்களுக்கு மட்டும் எதுக்காக எதுவுமே சரியாக நடக்க மாட்டேங்குது..? நாங்க என்ன பாவம் செஞ்சோம்..?” என்று அவன் புலம்பிக் கொண்டிருக்க.. இதையெல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா ஏதோ சரியில்லை எனப் பிரிந்து பதட்டமாக அவர்களை நெருங்கினார். 
 
 
“அருண்..” என அவர் பயம் கலந்த மெல்லிய குரலில் அழைக்கவும், விழிகளை உயர்த்தி அவரைப் பார்த்தான் அருண். அந்த விழிகள் சிவந்து படபடப்போடு இருக்க.. இதில் மேலும் பயந்து போனார் சுஜாதா. “அருண் என்னப்பா..?” என குரல் நடுங்க அவர் கேட்கவும் “ம்மா..” என குரல் தழுதழுக்க அழைத்தவனால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
 
 
‘இதை எப்படி அவரிடம் சொல்ல முடியும்..? சுஜாதா இதை எப்படி தாங்கிக் கொள்வார்..?’ என அதற்குள் அருண் மனம் பதட்டப்படத் தொடங்கியது. அவனின் மௌனம் அவரை மேலும் கலவரப்படுத்தியது. “அருண் ஏதாவது சொல்லு, என்னாச்சு..? நீ இப்படி அமைதியா இருக்கறது எனக்கு இன்னும் பயத்தை கொடுக்குது.. இதுக்கு மேலே எதையும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை, இப்போவே எனக்கு வயித்தை கலக்குது, என்னவோ ஏதோன்னு பயமாயிருக்கு..” என்று அழுதே விட்டார் சுஜாதா. 
 
 
அதைக் கவனித்து சட்டென எழுந்த தாரக், “வாங்க இப்படி உட்காருங்க..” என்று சுஜாதாவை அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தான். அருணும் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகாவே பதட்டமாகி விட, “ஒன் மினிட்..” என்றவன் அங்கிருந்த வார்ட்பாயை அழைத்து “இங்கே கேன்டீன் எங்கே இருக்கு..?” என்றான். 
 
 
“மேலே சார்..” என்று வார்ட்பாய் கூறவும், “ஒரு தண்ணீர் பாட்டில், இரண்டு காபி உடனே வேணும்..” என்று 500 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் தார்க். சரி என்ற தலையசைப்போடு அவன் அதை வாங்கிக் கொள்ள.. “சீக்கிரம் வேணும், மீதியை நீங்களே வெச்சுக்கோங்க..” என தாரக் சேர்த்து சொல்ல.. முகமெங்கும் பல்பு எரிந்தது போல் பிரகாசமான வார்ட்பாய் “இதோ சார் இரண்டு நிமிஷத்தில் வரேன்..” என்று ஓடினான். 
 
 
அருணுக்கு சிந்துவின் நிலையை எண்ணி கவலையானது. ‘எப்படி இதை அவள் சமாளித்து இருப்பாள்..? எப்படி தாங்கிக் கொண்டாள்..?’ என்று அவன் மனம் நினைத்துக் கொண்டிருக்க.. அருணின் அமைதியும் தாரக்குடன் பேசிய பிறகு அவன் பதட்டமானதையும் வைத்து சிந்துவிற்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டிருந்த சுஜாதா வேதனையோடு விழிகளை உயர்த்தி தாரக்கை பார்த்தார். 
 
 
‘என் மகளுக்கு எதுவுமில்லையே..?’ என அந்த விழிகள் அவனிடம் இறைஞ்சுவது போல் இருந்தது. அதில் அவரின் நிலையை உணர்ந்தவனாக “உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நல்லா இருக்காங்க பயப்படாம இருங்க..” என்றான் தாரக்.
 
 
“நி.. நிஜமாவா..?” என்று அப்போதும் நம்பிக்கை வராமல் சுஜாதா அழுகை குரலில் கேட்கவும் “நிஜமா தான் சொல்றேன், பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..” என்று தாரக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு தண்ணீர் மற்றும் காப்பியோடு வந்து விட்டான் வார்ட்பாய்.
 
 
அதை வாங்கி முதலில் சுஜாதாவிடம் நீட்டிய தாரக், “கொஞ்சம் குடிங்க..” எனவும், அவர் ‘வேண்டாம்’ என மறுப்பாக தலையசைத்தார். “விஷ்வா எழுந்து வரும் போது அவனை கவனிச்சுக்க நீங்க நல்லா இருக்கணும், நீங்க மயங்கிட்டா அப்புறம் அவனை யார் பார்த்துப்பா..?” என்று தாரக் சொல்லவும், “சிந்து..?” என்றார் அப்போதும் அவன் மேல் முழுதாக நம்பிக்கை வராத குரலில் சுஜாதா.
 
 
“உங்க பொண்ணுகிட்ட இப்போ உங்களை பேச வைக்கறேன், அவ நல்லா இருக்கா நம்புங்க.. முதலில் இதை குடிங்க..” என்று மீண்டும் அவரிடம் அவன் தண்ணீர் பாட்டிலை நீட்ட.. இந்த முறை மறுக்காமல் வாங்கிக் கொண்டார் சுஜாதா. 
 
 
கொஞ்சமாக அவர் தண்ணீரை குடித்துவிட்டு தர, அதை வாங்கி அருணிடம் கொடுத்தான் தாரக். அருணுக்கும் இந்த நொடி அது தேவையாக இருந்ததில் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி கடகடவென மொத்த பாட்டிலையும் குடித்து முடித்து இருந்தவன், “இப்போ எப்படி இருக்கா..?” என தொடங்கவும் என்னவென்பது போல் பதட்டத்தோடு அவனைப் பார்த்தார் சுஜாதா. 
 
 
“சிந்துக்கு கொஞ்சம் உடம்பு முடியலை, அதனால் தான் அவளை நான் கூட்டிட்டு வரலை.. அது தான் எப்படி இருக்கான்னு விசாரிக்கறார்..” என்றவன் இருவருக்கும் காபியை கொடுத்தான். “இல்லை எனக்கு வேண்டாம், நீங்க குடிங்க..” என்று சுஜாதா சொல்லவும் “நானும் குடிப்பேன், நீங்க நைட்டில் இருந்து இங்கே தான் இருக்கீங்க.. எதுவும் சாப்பிட்டு கூட இருக்க மாட்டீங்க, இரண்டு பேரும் கொஞ்சம் காபி குடிங்க..” என அவன் அழுத்தமான குரலில் சொல்லவும் இருவருமே அதை வாங்கிக் கொண்டனர். 
 
 
சிறு தயக்கத்தோடு சுஜாதா கொஞ்சம் கொஞ்சமாக அதை குடிக்க, அருண் வேகமாக குடித்து முடித்து இருந்தான். அவன் மனதில் ஏதேதோ ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்த தாரக், இருவரும் குடித்து முடிப்பதற்காகவே காத்திருந்து விட்டு சிந்துவுக்கு அழைத்தான். 
சென்ற வாரம் தான் அவளுக்கு புதிதாக அலைபேசி வாங்கி கொடுத்திருந்தான் தாரக். இனி அவள் படிக்கச் செல்ல போகிறாள் என்பதால் எதெல்லாம் தேவைப்படும் என யோசித்து ஒவ்வொன்றையும் அவன் செய்து கொண்டிருந்தான். 
 
 
அந்த எண்ணிற்கு தாரக் அழைக்க.. அப்போதே லேசாக உறங்க தொடங்கியிருந்த சிந்து அலைபேசி சத்தத்தில் உறக்கம் கலைந்து அதை எடுக்க.. உமாவும் எழுந்து அமர்ந்தார். அவரும் அதே அறையில் தான் தரையில் படுத்து இருந்தார்.
 
 
“போன் எடுத்துக் கொடுக்கணுமா மேடம்..?’ என அவர் கேட்கவும், “இல்லை, இங்கே பக்கத்தில் தான் இருக்கு, நானே எடுத்துக்கறேன்..” என்ற சிந்து அதை எடுத்துப் பார்க்க.. அழைப்பது தாரக் என தெரிந்தது. 
 
 
உடனே சிந்து அதை ஏற்றிருக்க.. “ஹலோ இப்போ உன் ஹெல்த் எப்படி இருக்கு..? சாப்பிட்டியா..? மெடிசன் எடுத்தியா..?” என்று அக்கறை குரலில் அவன் விசாரிக்க.. அனைத்திற்கும் பதில் அளித்தாள் சிந்து. 
 
 
பிறகு இரு நொடி இடைவெளி விட்டு “இங்கே உன் அம்மாவும் அண்ணாவும் இருக்காங்க.. உனக்கு என்னவோன்னு பயப்படறாங்க நீ நல்லா இருக்கேன்னு சொன்னேன், எதுக்கும் நீயும் ஒருமுறை பேசிடு..” என்றவன் அலைபேசியை சுஜாதாவிடம் நீட்ட.. அவர் அதை வாங்கி படபடப்போடு “சிந்து..” என அழுகை குரலில் அழைக்கவும், அருண் அலைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டான். 
 
 
“அம்மா ஏன் அழறீங்க..?” என சிந்து அங்கே படபடத்துக் கொண்டிருக்க.. “சிந்து நான் அருண் பேசறேன்..” என இடையிட்டவன், “இப்போ.. இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு..?” என்று பதட்டத்தை வெகுவாக மறைத்த குரலில் கேட்டாலும் அவன் குரலில் இருந்த லேசான பயத்தை புரிந்து கொண்டவள், “நான் நல்லா இருக்கேன், எனக்கு ஒண்ணுமில்லை.. கொஞ்சம் சோர்வா இருக்கு அவ்வளவு தான்..” என்றாள் சிந்து.
 
 
“ஏன் என்னாச்சு உனக்கு..?” என்று சுஜாதா கேட்க, அவருக்கு இன்னும் விஷயம் தெரியவில்லை என்று புரிந்து கொண்ட சிந்து என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக.. “நான் சொல்றேன் ம்மா, முதலில் சிந்துகிட்ட பேசி முடிங்க.. அப்புறமா நான் சொல்றேன்..” என்றான் அருண்.
 
 
“என்ன அருண் இதெல்லாம்..? இப்படி பூடகமாகவே பேசினா எனக்கு எவ்வளவு பயமா இருக்கு.. எதுவா இருந்தாலும் உடைச்சு சொல்லிடு..” என்றார் சுஜாதா “உங்ககிட்ட சொல்லாம என்ன செய்யப் போறோம், சிந்து எப்படி இருக்கான்னு இத்தனை நாள் மனசுக்குள்ளேயே நினைச்சு புழுங்கிட்டு இருந்தீங்க இல்லை.. இப்போ அவ உங்ககிட்ட பேசறா பாருங்க, முதலில் அவகிட்ட சரியா பேசுங்க அதுக்கு பிறகு நாம பேசிக்கலாம்..” என்றான் அருண். 
 
 
அதில் மற்றதெல்லாம் மறந்து மகளின் நலம் விசாரித்து ‘திரும்ப இந்த ஒரு பக்கம் மட்டும் எப்போதும் வந்துடாதே..!’ என பலமுறை மகளிடம் வலியுறுத்திவிட்டே அழைப்பை துண்டித்தார் சுஜாதா. 
 
 
தன் அலைபேசியை வாங்கிக் கொண்டு தாரக் சற்று தள்ளி சென்று நின்றுவிட, மகனின் முகத்தை இப்போது கேள்வியாக பார்த்தார் சுஜாதா. இதற்கு மேல் அவரிடம் மறைக்க முடியாது என புரிந்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்து விட்ட அருண் அவளின் நிலையை சுருக்கமாக சொல்லி முடித்தான். 
 
 
இதைக் கேட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் சுஜாதா. “என்ன வரம் வாங்கி வந்தேனோ தெரியலை.. என் பிள்ளைங்க ஒண்ணு கூட நிம்மதியா வாழலையே..! ஐயோ இங்கே இருந்திருந்தா அவளை என் கண்ணுக்குள்ளே வெச்சு பார்த்திருப்பேனே, தனியா அங்கே என் பிள்ளை எத்தனை சிரமத்தை அனுபவிச்சாளோ.. எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாளோ தெரியலையே..!” என்று சுஜாதா அழுது கொண்டிருக்க.. “அம்மா ப்ளீஸ், அதை எல்லாம் சிந்து கடந்து வந்துட்டா.. இனி நடந்த எதையும் நினைச்சு அழுது ஒரு பயனும் இல்லை, இனி நடக்க போறது நல்லதா இருக்கணும்னு மட்டும் வேண்டிக்கோங்க..” என்றான் அருண்.
 
 
அதேநேரம் விஷ்வா கண்விழித்து விட்டதாக நர்ஸ் வந்து சொல்லிவிட்டு மருத்துவரை அழைக்க சென்றார். மூவரும் எழுந்து ஐசியூ வாயிலுக்குச் சென்று நின்றனர். வேகமாக வந்த மருத்துவரும் உள்ளே சென்று விஷ்வாவை பரிசோதித்து விட்டு வெளியில் வர, அவனை ஆவலோடு எதிர்கொண்டனர் அனைவரும்.
 
 
ஆனால் உள்ளே செல்லும் போது இருந்ததை விட வெளியில் வரும் போது மருத்துவரின் முகம் கவலையை தத்தெடுத்து இருப்பதை கவனித்த தாரக் யோசனையாக விழிகளை சுருக்கி அவரை பார்த்தான். 
 
 
“பிள்ளைக்கு நினைவு திரும்பிடுச்சா..? இனி ஆபத்து எதுவும் இல்லையே..! நல்லா இருக்கான் தானே..” என்று சுஜாதா கேட்டுக் கொண்டிருக்க.. அவரின் பக்கம் பார்வை திரும்பியவர் “ஆபத்து எல்லாம் எதுவுமில்லை..” என்று தயக்கத்தோடு இழுத்து நிறுத்த, ‘அப்புறம் என்ன..?’ என்பது போல் அவரைப் பார்த்தான் அருண்.
 
 
“ஆனா அவர்..” எனத் தொடங்கியவர், பின் “இன்னும் அரைமணி நேரத்தில் இன்னொரு டாக்டர் வந்து பார்த்த பிறகு தெளிவா பேசிக்கலாம்.. இப்போதைக்கு அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, அபாய கட்டத்தை தாண்டிட்டார்..” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார் டாக்டர் ஜெயபிரகாஷ். 
 
 
இதில் அவர் எதையோ சொல்லாமல் விட்டது புரிய, அருணும் தாரக்கும் கவலையும் யோசனையுமாக அவர் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தனர். 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 39
 
எதையோ சொல்ல தயங்கி சொல்லாமல் மருத்துவர் செல்வது இருவருக்கும் தெளிவாக புரிய.. ‘என்ன பிரச்சனையோ..?’ என்ற கவலையோடு நின்றிருந்தவர்களை நர்ஸ் உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை. 
 
 
அடுத்த இருபது நிமிடத்தில் ஒரு மருத்துவ படையே வேகமாக ஐசியூவினுள் நுழைவதை கண்டு அங்கிருந்தவர்களுக்கு மேலும் பயமானது. என்ன பிரச்சனை என்று புரியாமல் அவர்கள் தவிப்போடு நின்றிருக்க.. அடுத்த பத்து நிமிடத்தில் விஷ்வாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து எங்கோ அழைத்துச் சென்றனர். 
 
 
இதில் என்னவென விசாரித்தபடியே அவர்களோடு செல்ல முயன்றவர்களை தடுத்த நர்ஸ், “நீங்க இங்கேயே வெயிட் செய்ங்க, டெஸ்ட் எடுக்க தான் கூட்டிட்டு போறாங்க, திரும்ப அவரை இங்கே தான் கூட்டிட்டு வருவோம்..” என்றார்.
 
 
“இல்லை நாங்களும்..” என்று தாரக் சொல்லவும், “அங்கே யாருக்கும் அனுமதி இல்லை சார், இங்கேயே வெயிட் செய்ங்க..” என்ற விட்டு அவர்களோடு விரைந்தார் நர்ஸ். ஒரு மணி நேரத்தை முழுதாக விழுங்கி விட்டு திரும்ப வந்த டாக்டர் கவலையோடு இவர்களை பார்த்தார். 
 
 
“அவனுக்கு எதுவும் இல்லையே..!” என தாரக் கேட்க, ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து வெளியிட்டு “என் ரூமுக்கு வாங்க பேசிக்கலாம்..” என டாக்டர் ஜெயபிரகாஷ் முன்னே செல்ல.. அவரோடு மற்றொரு மருத்துவரும் இணைந்து கொண்டார்.
 
 
விஷ்வாவை மீண்டும் ஐசியூவினுள் அழைத்துச் சென்றுவிட, மூவரும் டாக்டர் சென்ற திசையில் வேகமாக விரைந்தனர். அறைக்குள் நுழைந்தவர்களை தன் எதிரில் இருந்த இருக்கையை காண்பித்து அமர சொன்ன டாக்டர் ஜெயபிரகாஷ், 
 
 
“நான் அப்போ சொன்னது போலவே அவர் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிட்டார் தான், ஆனா..” என்று சொல்லி பெரும் இடைவெளி விட்டவர், தன்னையே தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவர்களை கவலையோடு பார்த்து “தலையில் பலமா அடிபட்டதால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கு..” என்றார்.
 
 
“என்ன..?” என்று தாரக் அதிர்ச்சியோடு கேட்க.. சுஜாதா “ஐயோ..” என்று அழுகை குரலில் கதறினார். அருணுக்கு என்ன செய்வது என்று கூட புரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க “எஸ் அவருக்கு மனநலம் கொஞ்சம் மோசமாகவே பாதிக்கப்பட்டிருக்கு, கண்டிப்பா அதுக்கான ட்ரீட்மெண்ட் நாம கொடுத்து தான் ஆகணும்.. இதைப்பற்றி நீங்க இவர்கிட்ட கேட்டுக்கோங்க, தெளிவா உங்களுக்கு எல்லாம் சொல்வார்..” என்றார் தன் அருகில் அமர்ந்திருந்த வேறு ஒரு மருத்துவரை கை காண்பித்து ஜெய்பிரகாஷ். 
 
 
“ஹாய் நான் குமரவேல்..” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் “அவருக்கு தலையில் பயங்கரமா அடிபட்டு இருக்கு.. இதை நாங்க டிரமாடிக் பிரைன் இன்ஜூரின்னு சொல்லுவோம்.. இதனால் அவருக்கு மனநல சிதைவு ஏற்பட்டு இருக்கு.. இவருக்கு உடனே அதுக்கான சிகிச்சைகள் கொடுக்கணும், தலையில் அடிக்கப்பட்டிருக்கும் காயமும் ஆறணும்.. கொஞ்சம் கொஞ்சமா இவர் இயல்பு நிலைக்கு திரும்பலாம், இல்லை திரும்பாமலும் போகலாம்..” என்றவரை அழுகையோடு இடையிட்ட சுஜாதா “தயவு செஞ்சு அப்படி எல்லாம் சொல்லாதீங்க டாக்டர், எப்படியாவது என் பிள்ளையை காப்பாத்திடுங்க..” என்று கையெடுத்து கும்பிட்டார். 
 
 
“நீங்க இப்படி எல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை மேடம், இங்கே வர ஒவ்வொருத்தரையும் குணப்படுத்த வேண்டியது எங்க கடமை.. இவருக்கும் அதுக்கான எல்லாம் முயற்சிகளையும் நாங்க எடுப்போம், ஆனா சில நேரங்களில் நம்மை மீறி சில விஷயங்கள் நடந்துடும்.. அதுக்கும் நாம தயாராக இருக்கணும்.. 
 
 
இப்போதைக்கு அவருக்கு சரியாகிடும்னு நம்புவோம், அதற்கான முயற்சிகளை எடுப்போம்.. எவ்வளவு தான் நாம மருத்துவ ரீதியா முயற்சிகளை எடுத்தாலும் குடும்பத்தோட அன்பும் ஆதரவும் அக்கறையும் இப்போ அவருக்கு ரொம்ப முக்கியம்.. நீங்க கூட இருந்து அவரை பார்த்துக்கோங்க கொஞ்சம் கொஞ்சமா அவர் குணமாகி வர வாய்ப்புகள் இருக்கு..” என்று சொல்லி முடித்தார் குமரவேல்.
 
 
இதில் செய்வதறியாது திகைத்தவர்கள் அனைத்திற்கும் சம்மதித்து விட்டு விஷ்வாவை காண மனம் கணக்க விரைந்தனர். அங்கு விழிகளை திறந்து எதிரில் தெரிந்த சுவரை வெறித்துக்கொண்டு படுத்திருந்தான் விஷ்வா. 
 
 
அவசரமாக அவனை நெருங்கிய சுஜாதா “விஷ்வா.. விஷ்வா என்னை பாரு அம்மா வந்து இருக்கேன்.. தெரியுதா உனக்கு..? நான் யாருன்னு சொல்லு..” என்று படபடக்க.. விழிகளை திருப்பி அவரை பார்த்தவன் ஒரு மாதிரியாக சிரித்தான்.
 
 
இது அவனின் இயல்பான சிரிப்பு இல்லை. இதழ் ஒரு பக்கம் கோணி நாக்கை துருத்தி அவன் சிரித்த விதமே பார்க்க பரிதாபமாக இருந்தது. அதை கண்கொண்டு பார்க்க முடியாமல் சுஜாதா மேலும் கதற.. மற்றொரு பக்கம் வேகமாக சென்ற தாரக் “விஷ்வா..” என அழைக்கவும் பார்வையை தாரக்கின் பக்கம் திருப்பினான் விஷ்வா. 
“இப்போ உனக்கு எப்படி இருக்கு..? வலி எதுவும் இருக்கா..?” என அக்கறையோடு அவன் விசாரிக்கவும், ஒழுங்கு காண்பிப்பது போல் நாக்கை துறுத்தி முகத்தை ஒரு மாதிரியாக செய்து தாரக்கை பார்த்து சிரித்தான் விஷ்வா. 
 
 
இதில் மனம் வலிக்க அவனைப் பார்த்த தாரக், “உனக்கு ஒண்ணுமில்லை விஷ்வா.. சீக்கிரம் சரியாகிடுவே, கவலைப்படாம இரு.. நான் உன்னை பார்த்துக்கறேன்.. சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும்..” என்று அவன் கைகளை ஆறுதலாக பிடித்து சொல்ல.. அந்தக் கையை ஒரு நொடி பார்த்த விஷ்வா சட்டென அதை பிடித்து கடிக்க முயன்றான். 
 
 
இதைக் கண்டு அருண் தான் வேகமாக தாரக்கின் கைகளை விலக்கி விட்டான். “விஷ்வா இதெல்லாம் தப்பு, இப்படி எல்லாம் செய்யக்கூடாது..” என அருண் சொல்லவும், “போடா..” என்றான் கேலியாக சிரித்துக்கொண்டே விஷ்வா. 
 
 
இப்படி ஒவ்வொருவரும் மனம் கனக்க அவனைப் பார்த்தபடி நின்றிருக்க.. “போதும் நீங்க எல்லாம் வெளிய இருங்க, டாக்டர் ரொம்ப நேரம் இங்கே யாரையும் இருக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.. இப்போ இவருக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டு தூங்க வைக்கணும்..” என்றார் நர்ஸ். 
 
 
ஆனால் அப்போதும் மனம் கேட்காமல் சுஜாதா “விஷ்வா என்னை யாருன்னு தெரியுதா..! சொல்லு யாரு நான்..?” எனவும் முகவாயை கோணி புன்னகைத்தவன் எல்லா பற்களையும் சேர்த்து கடிப்பது போல் ஒரு பாவனை செய்ய.. “போதும் மேடம் வெளியே இருங்க..” என்றார் இப்போது கொஞ்சம் அழுத்தத்தோடு நர்ஸ். 
 
 
அதில் அழுகையுடன் வெளியில் வந்து சுஜாதா அமர்ந்து கொள்ள.. இப்படி ஒரு நிலையை எதிர்பார்க்காத மற்ற இருவருக்கும் கூட அடுத்து என்ன செய்வது எனப் புரியவில்லை. 
 
 
அங்கிருந்து வேகமாக வெளியில் வந்த தாரக் நேராக மருத்துவரை சென்று சந்தித்தான். “டாக்டர் அவனால் இப்போ டிராவல் செய்ய முடியுமா..? நான் சென்னை கூட்டிட்டு போய் நல்ல பெரிய ஹாஸ்பிடலில் பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கொடுத்தா அவனுக்கு சீக்கிரம் சரியாகிடுமா..?” என்று அவன் கேட்ட விதத்திலேயே எப்படியாவது இவனை சரி செய்து விட வேண்டும் என்ற எண்ணம் இருப்பது புரிய.. “உங்க முயற்சிகளை நீங்க செய்யுங்க, அதை நாங்க தடுக்க மாட்டோம்.. ஆனா இவரும் இங்கே பெஸ்ட் டாக்டர் தான்..” என்றார் ஜெயபிரகாஷ். 
 
 
“இல்லை நான் அவரை தப்பு சொல்லலை..” என தாரக் சொல்லவும், “உங்க மனநிலை என்னன்னு என்னால் புரிஞ்சுக்க முடியுது, எங்கே ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்ன்றது முழுக்க அவங்க விருப்பத்தை பொறுத்தது..” என முடித்துக் கொண்டார் ஜெயப்பிரகாஷ்.
 
 
“இல்லை நான் அவனை இப்போ கூட்டிட்டு போக முடியுமா..? அவன் உடம்புக்கு டிராவல் செய்ய முடியுமா..?” என்று தாரக் கேட்கவும், “இப்போ உடனடியா வேண்டாம்னு தான் நான் சொல்லுவேன், தலையில் அடிபட்டு ஆப்ரேஷன் நடந்திருக்கு.. குறைந்தது ஒருவாரமாவது அவர் இங்கே ரெஸ்ட் எடுக்கணும்.. அதுக்குப் பிறகு உங்க விருப்பம் போல செய்யலாம்..” என்றார் குமரவேல்.
 
 
இதில் யோசனையோடு அவரிடமிருந்து விடை பெற்று வெளியில் வந்தான் தாரக். அருண் எதிர்பார்ப்போடு அவனைப் பார்க்க.. அங்கு நடந்த பேச்சு வார்த்தையை பற்றி கூறியவன் “விஷ்வாவை இனி நான் பார்த்துக்கறேன்..” என்றான்.
 
 
“இல்லை நாங்களே..” என்று தொடங்கிய அருணுக்கு அப்போதே நாகராஜனின் நினைவு வந்தது. ‘மருத்துவமனைக்கு அவனை அழைத்து செல்ல முயன்றதற்கே அத்தனை பிரச்சனை செய்தவர், திரும்ப விஷ்வாவை இந்த நிலையில் வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள அனுமதிப்பாரா..?’ என்ற யோசனையோடு மறுத்துப் பேசாமல் அப்படியே நின்றவன் கலக்கத்தோடு தாரக்கை பார்த்தான். 
 
 
அந்த முகத்தில் இருந்து என்ன கண்டானோ..? “நீ கவலைப்படாதே, விஷ்வாவை நான் பார்த்துக்கறேன்..” என அருணின் தோளில் தட்டி கூறினான் தாரக். “இல்லை வேண்டாம், அவன் என் தம்பி நான் தான் பார்த்துக்கணும்.. இவ்வளவு நாள் கூட இருந்துட்டு இப்போ முடியாதுன்னு சொன்னா நல்லா இருக்காது, எந்த நிலையிலும் அவனை நான் கைவிட்டு விட மாட்டேன்னு சொல்ல எனக்கும் ஆசை தான்.. ஆனா இப்போ எங்க சூழ்நிலை அப்படி இல்லை மாமா..” என்றான் மெல்லிய குரலில் அருண். 
 
 
“நீங்க எல்லாரும் தானே இத்தனை வருஷம் அவனை பார்த்துக்கிட்டீங்க.. எனக்கும் அவன் மேலே அக்கறையும் பொறுப்பும் இருக்கு, இனி நான் பார்த்துக்கறேன்..” என்றான் தாரக். 
 
 
“எனக்காக பேசறீங்கன்னு புரியுது, ஆனா வேண்டாம்னு மறுத்து சொல்ல முடியாத நிலைமையில் நான் இருக்கேன்.. விஷ்வாவுக்கு இப்படி ஆகும்னு ஒரு நிமிஷம் கூட நான் நினைச்சதில்லை, எப்படியாவது பிழைச்சிடணும்னு மட்டும் தான் நினைச்சேன்..” எனும் போதே அருணின் குரல் தழுதழுத்தது. 
 
 
அதே நேரம் லேசாக விடிய தொடங்கி இருக்க.. உறக்கம் கலைந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த சிந்துவிற்கு இப்போதே ‘தாரக் எப்படி சுஜாதாவுடன்..?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது. 
 
 
‘அத்தனை அவசரமாக கிளம்பிச் சென்றது வேலை விஷயமாக இல்லையா..? ஊருக்கு போய் இருக்காங்களா..! ஏன்..? என்ன விஷயம்..? எதுக்காகவா இருக்கும்..!’ என்று தொடர்ந்து அவளுள் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்க.. மனம் பதட்டமடைந்தது.  
 
 
இவர்கள் இருக்கும் இடம் தேடி வந்து பிரச்சனை செய்யக் கூடியவர்கள் நாகராஜன் ஆட்கள். அவர்கள் இருக்கும் இடத்திற்கே தாரக் சென்றிருப்பது அவளுக்கு பயத்தை கொடுத்தது. ‘எதுக்காக இப்போ அங்கே போகணும்..? தெரிஞ்சே ஏன் இவங்க இப்படி செய்யறாங்க..?’ என கவலையோடு உடனே தாரக்கை அழைத்தாள் சிந்து. 
 
 
அருணுடன் பேசிக்கொண்டிருந்தவன் சிந்துவிடமிருந்து அழைப்பு என்றவுடன் சற்று தள்ளி சென்று அதை ஏற்றிருந்தான். “சொல்லு செந்தூரிகா.. உன் உடம்புக்கு எதுவுமில்லையே..” என அவன் கேட்கவும் “நான் நல்லா தான் இருக்கேன், நீங்க.. உங்களுக்கு அங்கே எதுவும் பிரச்சனை இல்லையே..?” என்றாள் சிந்து. 
 
 
“பிரச்சனையா எனக்கா..?!” என அவன் புரியாமல் நெற்றியை சுருக்க.. “இல்லை நீங்க.. ஊருக்கு எதுக்காக..? அப்பா எதுவும், அங்கே உங்களை..” என்று எப்படி கேட்பது என தெரியாத தடுமாற்றத்தோடு வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டே பேசினாள் சிந்து. 
 
 
அதில் அவள் பயம் புரிய, “என்னை யாராலும் எதுவும் செஞ்சுட முடியாது புரிஞ்சுக்கோ செந்தூரிகா.. எனக்கு இங்கே எந்த பிரச்சனையும் இல்லை, நான் வேற ஒரு வேலையா இங்கே வந்தேன்..” என்றான் தாரக். 
 
“நிஜமாவா..?” என்று அப்போதும் நம்பாத குரலில் கேட்டவளை கொஞ்சமும் கோபம் இல்லாமல் எதிர்கொண்டவன் “ஆமா, நான் இங்கே உங்க அப்பாவை பார்க்கவோ பிரச்சனை செய்யவோ வரலை..” என்று அழுத்தம் திருத்தமான குரலில் கூறினான் தாரக். 
 
 
அதில் லேசாக நிம்மதி அடைந்தவள், “ஆனா அந்த ஊரில்..” என்று மீண்டும் இழுக்க.. ‘இதற்கு மேல் அவளிடம் மறைக்க வேண்டாம், தேவையில்லாமல் யோசித்து மனதையும் உடலையும் கெடுத்து கொள்வாள்..’ என நினைத்தவன் “விஷ்வாவுக்கு சின்னதா ஒரு ஆக்சிடென்ட், அவனை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்காங்க.. அவனை பார்க்கத்தான் வந்தேன். அங்கே தான் உங்க அம்மாவையும் அண்ணனையும் பார்த்தேன் போதுமா..” என்று முழுதாக அனைத்தையும் சொல்லாமல் லேசாக கோடிட்டு காட்டினான். தாரக். 
 
 
ஆனால் அதற்கே பதட்டமானவள் “ஆக்சிடென்ட்டா..! என்னாச்சு..? அவன் நல்லா இருக்கான் தானே..!” எனவும் “உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆப்ரேஷன் முடிஞ்சு இப்போ தான் நினைவு திரும்பி இருக்கு..” என்று மட்டும் தாரக் சொல்ல.. “ஆப்ரேஷன் அளவுக்கா..! அப்போ அடி பலமா..? இதெல்லாம் எப்போ எப்படி நடந்தது..?” என்று அவள் கேட்டுக் கொண்டே இருக்க.. இவ்வளவு நடந்தும் விஷ்வாவின் மேல் கோபமில்லாமல் அக்கறையோடு பேசுபவளை தான் புரிந்து கொள்ள அந்தப் பக்கம் முயன்று கொண்டு இருந்தான் தாரக். 
 
 
இங்கு வந்ததிலிருந்து சுஜாதாவும் அருணும் அவன் மேல் கொண்ட அன்பும் அக்கறையும் தாரக்கிற்கு நன்றாகவே புரிந்தது. இத்தனைக்கு பிறகும் அது குறையாமல் இருப்பதை வியப்பாக உணர்ந்தவன், “அந்த வீட்டில் நாகராஜன் மட்டும் தான் மோசம் போல..!” என்று எண்ணிக்கொண்டான். 
 
 
அதை உறுதிப்படுத்துவது போல் இப்போது சிந்துவும் பேசி இருக்க.. அதீத ஆத்திரத்தில் அவசரப்பட்டு செய்திருந்த செயல் மீண்டும் அவனை குற்ற உணர்வுக்கு தள்ளியது. ஆனால் அதை எல்லாம் யோசிக்கும் நேரம் இது இல்லை என்று உணர்ந்தவனாக தன் யோசனையை ஒதுக்கி வைத்து விட்டு இனி செய்ய வேண்டியதை பற்றி யோசிக்க தொடங்கினான் தாரக். 
 
 
மூன்று நாட்கள் முழுமையாக ஐசியூவில் இருந்து விட்டு விஷ்வாவை அறைக்கு மாற்றி இருந்தனர். இங்கிருந்து யாருக்கும் அவனை விட்டு செல்ல மனமே இல்லை என புரிந்து அங்கேயே ஒரு அறையை எடுத்திருந்தான் தாரக். அதில் ஒருவர் மாற்றி ஒருவர் ஓய்வெடுத்து கொண்டனர்.
 
 
அவன் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. தன் முன் இருக்கும் யாரையும் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை, யாரோடும் ஒரு வார்த்தையும் வாய் திறந்து அவன் பேசவில்லை. 
 
 
தானாக பேசி சிரித்துக் கொண்டு தனக்கென ஒரு உலகில் அவன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதுமே சுஜாதாவுக்கு அழுகை தான் முதலில் வரும். அவரை சமாளிக்கவே ஒரு ஆள் தேவை என்பது போல் இருக்க.. அருண் சுஜாதாவை வீட்டிற்குச் செல்ல சொல்லி பார்த்து விட்டான். ஆனால் அவரோ அங்கிருந்து நகரவே மாட்டேன் என அடம் பிடித்தார். 
 
 
தன்னாலேயே அவனை இந்த நிலையில் விட்டுச் செல்ல முடியவில்லை எனும் போது சுஜாதாவை அதற்கு மேல் வற்புறுத்த முடியாது எனப் புரிந்து, அருணும் அமைதியானான். தலைக்காயம் மெல்ல தான் ஆறும் என்பதால் தொடர்ந்து அவன் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை வாரத்திற்கு ஒருமுறை வந்து பரிசோதித்து மருந்து வாங்கிச் செல்ல பரிந்துரைத்த டாக்டர்கள் விஷ்வாவை இப்போது மன சிதைவுக்கான சிகிச்சையை மேற்கொள்ள சொல்லி பரிந்துரைத்தனர். 
 
 
இனி சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையை தொடர்ந்து கொள்வதாக தாரக் சொல்லிவிட, அவர்களும் சம்மதித்து விஷ்வாவை அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்தனர். 
 
 
சுஜாதாவுக்கு அப்படி விஷ்வாவை அனுப்பி வைக்க கொஞ்சமும் மனமில்லை. ஆனால் அவரால் என்ன செய்து விட முடியும்..? சொந்தமாக முடிவெடுத்து எதையும் செய்யும் அதிகாரம் தான் அவருக்கு அந்த வீட்டில் இல்லையே..! அதில் உண்டான வருத்தத்தோடு எதையும் தடுக்க முயலாமல் அமைதியாக இருந்தார் சுஜாதா. 
 
 
விஷ்வா அவ்வளவு தூரம் பயணிப்பது சரிதானா..? அவனை எப்படி கொண்டு செல்வது நல்லது என்றெல்லாம் விசாரித்து மயக்க நிலையில் விஷ்வாவை வைத்து ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் முடிவுக்கு வந்தான் தாரக். 
 
 
 விஷ்வாவை தாரக்கோடு அனுப்பி வைத்துவிட்டு சுஜாதாவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் அருண். கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பின் வருபவர்களை வாசலிலேயே நாகராஜனின் ஆட்கள் தடுத்து நிறுத்தினர். இதில் கோபமான அருண் “உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடிச்சு இருக்கா..?” என சத்தமிடவும் “இது ஐயாவோட உத்தரவுங்க..” என்று மட்டும் கூறினர். 
 
 
அந்தக் குரலில் கொஞ்சமும் பணிவில்லாததை கவனித்த அருண் “உங்க ஐயா உள்ளே இருக்காரா..?” என்றான். அதற்குள் இவர்கள் வந்த தகவல் நாகராஜனுக்கு சென்றிருக்க.. ஆத்திரமாக வாயிலுக்கு வந்து சேர்ந்தார் நாகராஜன்.
 
 
“எவ்வளவு திமிர் இருந்தா திரும்ப இங்கே வந்து இருப்பீங்க..?” என்று எடுத்ததும் அவர் கத்த.. “அப்பா நான் சொல்றதை கேளுங்க..” என பொறுமையாகவே தொடங்கினான் அருண். “வாயை மூடுடா நாயே, இந்த பிச்சைக்கார நா** என்னை கொல்ல வந்தான்னு தெரிஞ்சும் அவனை காப்பாத்த என்னை பாத்ரூமுக்குள்ளே தள்ளி கதவை மூடிட்டு போனே இல்லை, அப்படியே அவன் கூடவே போயிடு..” என்றார் நாகராஜன். 
 
 
“அப்பா உடனே அவனை கூட்டிட்டு போகலைனா செத்து இருப்பான்..” என அருண் சொல்ல, “சாகட்டுமேடா சாகட்டும்.. அவன் இருந்து என்ன செய்யப் போறான்..? நன்றி கெட்ட..” என்று தொடங்கி வழக்கம் போல் காதில் கேட்க முடியாத வார்த்தையை அவர் உதிர்க்க.. முகம் சுழித்தான் அருண். 
 
 
“என்னை கொல்ல என் வீட்டுக்குள்ளே உட்கார்ந்து அவன் திட்டம் போட்டுட்டு இருந்திருக்கான், இத்தனை வருஷமா பாம்புக்கு பால் வார்த்துட்டு இருந்திருக்கேன்.. அது என்னையே கொத்த வருது, ஆனா நீங்க பாம்புக்காக வருத்தப்பட்டு அதை காப்பாத்த போறீங்க இல்லை..” என்று எரிச்சலோடு அவர் கேட்க “அவன் செஞ்சது தப்பு இல்லைன்னு நான் சொல்லலைப்பா..” என்று தொடங்கினான் அருண். 
 
 
“நீ என்னடா சொல்றது, நான் சொல்றது தான் இங்கே சட்டம்.. அவன் சாகட்டும், அந்த நா** சாகணும்.. என்னை மீறி அவனை காப்பாத்த நீ யார்..? எப்போ என் பேச்சை மீறி என்னை எதிர்க்க துணிஞ்சியோ அப்போவே நீ இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவனாகிவிட்டே அப்படியே போயிடு.. அதோ அழுது நாடகம் போட்டுட்டு நிற்கிறாளே உங்க அம்மா அவளையும் சேர்த்து கூட்டிட்டு அப்படியே போயிடு.. இனி இந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என்று அவர் கூச்சலிட்டார். 
 
 
இதில் மேலும் சுஜாதா புடவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு அழ “எனக்கு இப்போ தான்டி சந்தேகமா இருக்கு.. அவன் எப்போ பார் உன்னையே ஒட்டிட்டு சுத்துவான், ஒருவேளை நீதான் என்னை போட்டு தள்ள அவனை தூண்டி விட்டியோ..?” என்றார் நாகராஜன். 
 
 
“ஐயோ.. ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க..?” என சுஜாதா அழுகை குரலில் கேட்கவும் “வேற எப்படி பேச சொல்றே..? உன்னையும் உன் பிள்ளையையும் பத்தி தான் நல்லா புரிஞ்சு போச்சே..! என்னை விட உங்களுக்கு அந்த அனாதை நா** தானே முக்கியம், அவன் கூடவே போயிடுங்க.. உங்க வீட்டுக்குள்ள நீங்க வரவே கூடாது..” என்றார் முடிவான குரலில் நாகராஜன். 
 
 
“இதுதான் உங்க முடிவா..?” என அருண் கேட்க, பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டார் நாகராஜன். அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் “வாங்கம்மா போடலாம்..” என அருண் அழைக்க.. அவனை திகைப்போடு பார்த்தார் சுஜாதா.
 
 
அந்தப் பார்வையில் இருந்த கேள்வியை புரிந்து கொண்டவன் “இத்தனை வருஷம் இங்கே இருந்து அப்படி என்ன வாழ்ந்துட்டோம் ம்மா..? இப்போ இவர் வெளியே போக சொன்னதுக்கு வருத்தப்பட..!” என்றவனை கவலையாகப் பார்த்தவர் “நாம எங்கே போவோம் அருண்..?” எனவும் “இங்கே சுயமரியாதையை இழந்து தினமும் பயந்து வாழ்வதை விட, சுதந்திரமா பிச்சை எடுத்துட்டு போகலாம் வாங்க..” என தன் அன்னையை அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டான் அருண். 
 
 
இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை நாகராஜன். எப்போதும் தன்னை எதிர்க்கத் துணியாதவர்களின் இந்த முதல் முயற்சியே அவரை வெறியாக்கி இருந்தது. இப்படி திரும்ப ஒன்றை அவர்கள் வாழ்நாளில் யோசிக்கவே கூடாது என்பதற்காக தான் வீட்டிற்குள் விடமாட்டேன் என்று மிரட்டி பார்த்தார் நாகராஜன். 
 
 
தன்னை விட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை என புரிந்தவர்களாக எப்படியும் தன்னிடம் கெஞ்சி காலில் விழுந்து கதறுவார்கள், அதன் பின் போனால் போகுது என்று மன்னிப்பது போல் அவர்களை உள்ளே அழைத்துக் கொள்ளலாம் என்றே நினைத்திருந்தார் நாகராஜன்.
 
 
இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது தான் அவரின் திட்டம். ஒன்று இனி அவர்கள் தன்னை எதிர்க்கவே கூடாது, மற்றொன்று இப்போது தன்னை எதிர்த்து ஒன்றை செய்யத் துணிந்ததற்கான பலனாக அவர்களை தன் முன் மண்டியிட்டு கெஞ்ச வைப்பது, இரண்டுமே நடக்காமல் போனதில் ஆத்திரத்தோடு அருண் சென்ற திசையை பார்த்தவர் “போடா போ, எங்கே போயிட போறே..? சோத்துக்கு வழியில்லாமல் போனா திரும்ப இங்கே தான் வந்தாகணும், என்னை மீறி இந்த ஊரில் எவன் உனக்கு உதவி செஞ்சிடுவான்னு நானும் பார்க்கறேன்..” என எகத்தாளமாக சொல்லிக் கொண்டார் நாகராஜன். 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
 
 
நேசம் - 40
 
மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது. சிந்துவுக்கு உடல்நிலை நன்றாகவே தேறி இருக்க.. இனியும் அவளிடம் மறைப்பது சரி இல்லை என விஷ்வாவின் உடல்நிலை பற்றி அனைத்தையும் சொல்லிவிட்டு இருந்தான் தாரக்.
 
 
இதைக் கேட்டு திகைத்துப் போனவள், அசைவற்று கண்ணீரோடு அப்படியே அமர்ந்து விட.. “செந்தூரிகா ப்ளீஸ் உன்னை நீ அமைதிப்படுத்திக்கோ.. இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான், நான் இல்லைன்னு சொல்லலை..” என்று அவன் ஆறுதல் சொல்ல முயன்று கொண்டிருக்கும் போதே கண்ணீரோடு திரும்பி தாரகை பார்த்தவள், “அவன்.. அவன் பாவம் சின்ன பையன், அவனுக்கு இப்படி எல்லாம் ஏன் நடக்குது..?” என்றாள் தாங்க முடியாத துயரத்தை உள்ளடக்கிய குரலில் சிந்து.
 
 
இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் தாரக் பார்த்திருக்க.. “இப்போ எப்படி இருக்கான்..? நான் அவனை பார்க்கலாமா..?” என்றவளை தேற்றி விஷ்வாவை பார்த்ததும் அவள் உடைந்து விடாத அளவிற்கு தைரியம் சொல்லி அழைத்துச் சென்று அவனை காண்பித்து இருந்தான் தாரக்.
 
 
எவ்வளவு தான் மனதை தேற்றிக்கொண்டு வந்திருந்தாலும் விஷ்வாவை அந்த நிலையில் கண்டவள் முற்றிலும் உடைந்தே போனாள். அவனை கட்டிக்கொண்டு வெகுநேரம் கதறி விட்டாள் சிந்து.
 
 
ஆனால் விஷ்வாவுக்கு துளியும் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவள் அழைப்பில் இருந்து விடுபடவே முயன்றுக் கொண்டிருந்தவன், சிந்துவின் அழுகை அவனை தொந்தரவு செய்ததில் ஒரு கட்டத்தில் சட்டென அவளை பிடித்து தள்ளி விட்டிருந்தான்.
 
 
அதில் அவனின் படுக்கையில் இருந்து சிந்து கீழே விழ இருக்க.. அவளை சரியான நேரத்தில் தாங்கிப் பிடித்திருந்தான் தாரக். “அவன் ஏதோ தெரியாம..” என்று சிந்துவுக்கு சமாதானம் சொல்ல தாரக் முயல, “புரியுது அவன் தெரிஞ்சு எதுவும் செய்யலை..” என முடித்திருந்தாள் சிந்து.
 
 
நிஜமாகவே அவனுக்கு தன் முன் இருக்கும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. இவர்கள் பேசுவது அவன் மனதில் பதியக்கூட இல்லை. அந்த அளவுக்கு அவனின் கண்கள் யாரின் முகத்திலும் நிலைக்காமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. யார் பேசுவதையும் அவன் கவனிக்க கூட இல்லை.
 
 
இது மனசிதைவின் அதீத நிலை என விஷ்வாவை பரிசோதித்த மருத்துவர்கள் சொல்லி இருக்க.. அதையே அவளிடம் விளக்கியவன், “தலையில் பலமா அடிபட்டதோட அவன் மனசும்..” என்று எப்படி விளக்குவது என்று தெரியாமல் நிறுத்தியவனை புரிந்தது என்பது போல் பார்த்து தலையசைத்தாள் சிந்து.
 
 
இருவரும் சேர்ந்து மருத்துவரை பார்த்து பேசி விட்டு அங்கிருந்து கிளம்ப காரில் வரும் வழியில் “அவன் மனசு முழுக்க அப்பாவை எப்படியாவது பழி வாங்கணும்னு ஒரு வெறி இருக்கு, சின்ன வயசில் இருந்து அவனுக்குள்ளே புதைத்து வெச்சுருந்த அந்த வெறி.. அது நடக்காமல் போயிடுமோன்ற பயம்.. ஏன் நடக்கலைன்ற கோபம் இதெல்லாம் சேர்ந்து கூட அவனை இப்படி ஆக்கி இருக்கலாம்..” என மெல்லிய குரலில் கூறினாள் சிந்து.
 
 
பாதையில் கவனமாக இருந்த தாரக் சட்டென திரும்பி அவளைப் பார்த்தான். இதே எண்ணம் தான் அவன் மனதிலும் இருந்தது. மனதின் அழுத்தமும் தலையில் அடிபட்டிருந்ததும் சேர்ந்து விஷ்வாவை இந்த நிலைக்கு தள்ளி இருப்பதை உணர்ந்து கொண்டவன், அதிலிருந்து விஷ்வா மீண்டு வர வெகு காலம் பிடிக்கும் என்றும் புரிந்தும் வைத்திருந்தான்.
 
 
***
 
 
மறுநாள் காலை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த சிந்துவை தேடி வந்த தாரக், “இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு..?” என்று விசாரிக்க “அடிக்கடி இதையே கேட்காதீங்க, ஏதோ நான் நோயாளி மாதிரி எனக்கே பீல் ஆகுது.. இப்போ நான் ஓகே தான்..” என்றவள், “லேசா மனசில் தான் என்னவோ ஒரு மாதிரியான ஒரு பீல், அதை சரியா எனக்கு சொல்ல தெரியலை..” என்று குரல் தழுதழுக்க கூற, ஒரு அன்னையாக அவளின் நிலையை உணர்ந்தவனாக வேறு எதுவும் பேசி அவளை வருந்தச் செய்ய விரும்பாமல் தலையை மட்டும் அசைத்துக் கொண்டான் தாரக்.
 
 
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இப்படி உட்கார்ந்து பேசலாமா..?” என அங்கிருந்த இருக்கையை அவன் காண்பிக்க.. அவளும் அமைதியாக வந்து அமர்ந்தாள்.
 
 
“அடுத்து என்ன செய்யறதுன்னு முடிவெடுத்துட்டியா..? அன்னைக்கு கேட்டிருந்தேனே..!” என நினைவு படுத்தினான் தாரக். அதில் அவனை விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க.. அந்த முகபாவனையில் இருந்தும் விழிகளிலும் இருந்தும் அவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
 
“அதைப்பற்றி நீ யோசிக்கவே இல்லையா..! ஏதாவது படிக்கணும்னா சொல்லுன்னு கேட்டேனே..! இல்லை வேலைக்கு எதுவும்..” என்று தாரக் பேசிக் கொண்டிருக்கும் போதே “அதெல்லாம் வேண்டாம், என்னை ஏதாவது ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விட்டுடுங்க.. நானே ஏதாவது வேலை தேடிக்கறேன்..” என்றாள் சிந்து.
 
 
“இல்லை, அது சரியில்லை.. அது உனக்கு பாதுகாப்பும் இல்லை, உங்க அப்பா ஆளுங்க எப்போ வேணும்னாலும் உன்னை தேடி வரலாம், அவங்க இன்னும் உன்னை தேடிட்டு தான் இருக்காங்க ஞாபகம் இருக்கா..?” என்றான் தாரக்.
 
 
அதில் முகம் வாடி போக சிந்து தலையை தழைத்துக் கொள்ள.. “இதை நீ கவனமா இருக்கணும்னு தான் நான் சொன்னேன், உன்னை வலிக்க வைக்க இல்லை..” என்றவன் “ஏன் என் உதவியை எடுத்துக்க உனக்கு கஷ்டமா இருக்கா..?” என கேட்கவும், “உங்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம்னு நினைச்சேன்..” என்றாள் சிந்து.
 
 
“இதை நான் சிரமமா நினைச்சிருந்தா இத்தனை முறை நானா தேடி வந்து பேசி இருக்க மாட்டேன்.. இது நான் உனக்கு செய்ய வேண்டிய கடமை, சொல்லு என்ன வேணும் உனக்கு..?” என்று அவன் மீண்டும் கேட்க.. இத்தனை முறை கேட்ட பிறகும் சொல்லாமல் இருப்பதும் அமைதியாக இருப்பதும் சரி இல்லை எனப் புரிந்து “நான்.. நான் ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ஆசைப்பட்டேன், ஆனா அம்மா வேண்டாம்னு தடுத்திட்டாங்க.. அப்பாவுக்கு இதெல்லாம் தெரிய கூட தெரியாது..” என்றவள், “ஆனா அதெல்லாம் படிக்க நிறைய செலவாகும் இல்லை.. என்றாள்.
 
 
“இதெல்லாம் ஒரு விஷயமா..? பணத்தை பத்தி எல்லாம் நீ கவலைப்படாதே.. பேஷன் டிசைனிங் நல்ல ஒரு ஃபீல்ட், உன்னால் நல்லா ஷைனாக முடியும்..” என்றவன் “எந்த நாட்டுக்கு போகணும்னு நினைக்கறே..” எனவும் பதில் தெரியாமல் திருதிருத்தாள் சிந்து.
 
 
அவள் மீண்டும் பணத்திற்காக யோசிப்பதாக நினைத்தவன், “இங்கே பார் சிந்து, பணம் எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை.. நீ வாழ்க்கையில நல்லா இருந்தா போதும், எனக்கு நீ சேஃபா இருக்கணும் அவ்வளவு தான்..” என்றான்.
 
 
அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க.. “எந்த நாட்டுக்கு போகணும் சொல்லு..” எனவும் “அதெல்லாம் எனக்கு தெரியாது, இதை படிக்கணும்னு மட்டும் தான் நினைச்சேன்.. அப்போவே வீட்டில் வேண்டாம்னு சொன்னதில் இதை பத்தி நான் வேற எதுவும் யோசிக்கலை..” என்றாள் சிந்து.
 
 
“ஓ..” என யோசனையானவன் சில நொடிகள் விழிமூடி அமர்ந்திருந்து விட்டு பின் அவளை திரும்பிப் பார்த்து “எனக்கு தெரிஞ்சு பேஷன் தலைநகரம்னு பிரான்ஸை தான் சொல்லுவாங்க.. அங்கே ரொம்ப ஃபேமஸான காலேஜ் நிறைய இருக்கு.. லக்ஸரி லைப் ஸ்டைலுக்கு டிசைனர் டிரஸ் பத்தி நிறைய கத்துக்கலாம்..” என்று அவன் பேசிக் கொண்டிருக்க..
“ஐயையோ, அப்போ நிறைய செலவாகும் போலேயே..! வேண்டாம் வேண்டாம்..” என்றாள் பதட்டத்தோடு சிந்து.
 
 
“மறுபடியும் சொல்றேன், இங்கே பணம் விஷயம் இல்லை.. ஆனா என்னை கேட்டா பிரான்ஸை விட நீ யூஎஸ் போறது தான் பெஸ்ட்னு சொல்லுவேன்.. உன் கேரியர் க்ரோத்துக்கும் எந்த கண்ட்ரியில் வேணும்னாலும் வேலை செய்யவும் இது உனக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்..” என்றான் தாரக்.
அவள் தன் விருப்பத்தை சொன்ன ஐந்து நிமிடத்திற்குள் கடகடவென அனைத்தையும் ஒப்பிட்டு பேசியவனை ஆச்சரியமாக பார்த்தாள் சிந்து. அவளின் பார்வையை உணர்ந்து தன் பேச்சை நிறுத்தி என்னவென்பது போல் தாரக் சிந்துவை பார்க்க.. “இல்லை இதெல்லாம் உங்களுக்கு எப்படி..?” என்றாள் சிந்து.
 
 
“பிசினஸ் பீல்டில் இருக்கோம், எங்கே எது பெஸ்ட்னு தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லது தானே..! அப்படி தான் தெரியும், உனக்காக வேணும்னா இன்னும் நல்லா விசாரிக்கறேன்.. அதுக்கு பிறகு முடிவு எடுத்துக்கலாம்..” என்றான் தாரக்.
 
 
“என்ன..? எனக்காக அவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம், நீங்க எங்கே சொல்றீங்களோ அங்கே ஒகே தான்.. முடிஞ்ச வரைக்கும் செலவு கம்மியா எங்கே ஆகுமோ அங்கே போறேன்..” என்றாள் தயக்கத்தோடு அப்போதும் சிந்து.
 
 
அதில் அவளை முறைக்க முயன்று பின் அவளின் நிலை உணர்ந்தவனாக சரி என்பது போல் அப்போதைக்கு தலையசைத்து வைத்தவன், “அடுத்து இன்னொரு விஷயம்..” என்று விட்டு அவள் முகத்தை பார்க்க.. இப்போது என்ன என்பது போல் புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
“அன்னைக்கு சொல்லி இருந்தேன் இல்லையா, நீ இங்கே இருந்து போறதுக்கு முன்னே நாம விவாகரத்து..” என்றவன் வார்த்தையை முடிப்பதற்குள் “ஆமா, எனக்கு ஓகே தான்.. நான் எங்கே நான் சைன் செய்யணும்..” என்று கேட்டு விட்டிருந்தாள் சிந்து.
 
 
“இல்லை, அதுக்கு இப்போ எந்த அவசியமும் இல்லை..” என்றவனை அவள் புரியாமல் பார்க்க.. “நமக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்ததற்கு ஆதாரம் எங்கேயுமே பதிவாகலை.. நாம கல்யாணத்தை ரிஜிஸ்டரும் செய்யலை.. உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது போல ஒரு போட்டோ வீடியோன்னு எந்த ஆதாரமும் இல்லை.. இப்படி ஒரு கல்யாணம் நடந்தது உனக்கும் எனக்கும் உன் வீட்டுக்கும் மட்டும் தான் தெரியும்.. அதுக்கு விவாகரத்து வரைக்கும் போய் இப்படி ஒண்ணு நடந்ததை நாமே வெளியில் சொல்லிக்கறதை விட, இப்படியே சமூகமா பிரிஞ்சுடலாம்னு என் வக்கீல் சொன்னார்..
நியாயமா பார்த்தா இது இல்லீகல் தான், அவரே அப்படி சொல்லி இருக்க கூடாது தான்.. ஆனா இதில் உனக்கு ஒரு நன்மையும் இருக்கு, முறைப்படி விவாகரத்து வாங்கிட்டா நீ இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கும் போது சில நேரங்களில் அது பிரச்சனையாகலாம்.. இன்னைக்கு இருக்க தலைமுறை இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதுனாலும் ஏதோ ஒரு இடத்தில் அது உனக்கு ஒரு சின்ன பிரச்சினையா கூட வந்து நின்னுட கூடாது..
அதனால் வக்கீல் சொன்னது போலவே நாம விலகிடுவது தான் உனக்கு சரியா இருக்கும்னு நான் நினைக்கறேன்.. இதில் உன் கருத்து என்னன்னு சொல்லு..? ஏன்னா எந்த முடிவா இருந்தாலும் நான் மட்டும் எடுக்க முடியாது, இதில் நீயும் சம்பந்தப்பட்டு இருக்கே..?” என்றான் தாரக்.
 
 
இதற்கு என்ன சொல்வது என அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை. விவாகரத்து என்று முடிவையும் எடுத்தது அவன் தான், படிக்க சொன்னதும் அவன் தான், இப்போது வேண்டாம் என்பதும் அவன் தான், அதில் குழப்பமாகவே அவனைப் பார்த்தவள், எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க.. “உனக்கு யோசிக்க டைம் வேணும்னாலும் எடுத்துக்கோ..” என்றான் தாரக்.
 
 
“இல்லை யோசித்தாலும் எனக்கு பதில் சொல்ல முடியுமான்னு தெரியலை.. தெளிவா என்னால் இதில் யோசிக்கவும் முடியாது, நீங்க சொன்னா சரியா இருக்கும்னு நினைக்கறேன் அப்படியே செஞ்சுடலாம்..” என முடித்துக் கொண்டாள் சிந்து.
 
 
“எதுக்கும் நீ டைம் எடுத்து..” என்றவனை மறுப்பாக பார்த்தவள், “இல்லை வேண்டாம் நீங்க சொல்றது மாதிரியே செஞ்சுடலாம்..” என்றாள் அமைதியாகவே என்றாலும் திட்டவட்டமான குரலில் சிந்து.
 
 
அதில் அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் எழுந்து கொண்டவன், “சரி நீ எங்கே படிக்கலாம்..? என்ன படிக்கலாம்னு நான் சரியா விசாரிச்சுட்டு இரண்டு நாளில் வரேன்..” என்று விட்டுச் சென்றான் தாரக்.
 
 
**
 
 
ஒரு மாதக் கடந்திருந்தது..
 
 
விமானத்தில் அமெரிக்காவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் சிந்து. அவளுக்கு நடப்பது எதையுமே நம்ப முடியவில்லை. தனக்கு பிடித்த படிப்பை படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவள் ஒருநாளும் கனவில் கூட நினைத்ததில்லை.
 
 
ஆனால் இப்போது அது நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
 
 
அதுவும் அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவுக்கு அமெரிக்கா சென்று படிக்கும் அளவுக்கு நிஜமாகி கொண்டிருப்பதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தவளின் விழிகள் தன்னிச்சையாக திரும்பிப் பார்க்க.. அவளுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தான் தாரக்.
 
 
தன் மடிக்கணினியில் ஏதோ ஒரு வேலையாக இருந்தவனின் கவனம் முழுக்க அதில் மட்டுமே இருக்க.. அவள் சாத்தியமே இல்லாததை எல்லாம் எப்படி கடந்து போன நாட்களில் தாரக் சாத்தியமாக்கினான் என மனதிற்குள் அசை போட்டாள் சிந்து.
 
 
அவளிடம் சொல்லிவிட்டு சென்றது போலவே மூன்றாவது நாள் சரியாக அவன் முழு தகவலோடு வந்து அவள் எதிரில் அமர்ந்திருந்தான். அவனை சிந்து ஆச்சரியமாக பார்க்க.. “நான் சொன்னது போல நீ அமெரிக்காவில் போய் படிக்கிறது தான் சரி.. நான் நல்லா விசாரிச்சிட்டேன், உன் கெரியருக்கு இதை விட சிறந்த சாய்ஸ் இருக்க முடியாது.. அங்கே இருக்க இரண்டு காலேஜில் எனக்கு தெரிஞ்ச ஃபிரண்ட்ஸ் மூலமா பேசி அட்மிஷனுக்கும் ஏற்பாடு செஞ்சுட்டேன்.. இதில் எங்கே போகணும்னு நீயே முடிவு செஞ்சுக்கோ..” என அதற்கான படிவங்களை அவள் முன் வைத்தான் தாரக்.
 
 
இத்தனை வேகமாக அனைத்தையும் செயல்படுத்துபவனை நம்ப முடியாமல் ஆச்சரியமாக தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. ஆனால் இவ்வளவு சொல்லியும் அவளிடமிருந்து பதிலேதும் வராததில் விழிகளை சுருக்கியவன் ‘ஒருவேளை பிரான்ஸுக்கு அனுப்பாததை பற்றி யோசிக்கறாளோ..!’ என நினைத்து “நான் செலவு பற்றி யோசிக்கலை, ஆனா..” என்று மேலும் ஏதோ சொல்ல வர “இல்லை, அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை நான் நீங்க சொல்ற இடத்துக்கே போறேன்..” என்றிருந்தாள் சிந்து.
 
 
அதன் பின் ஆன்லைனில் அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்தவன், அவள் வெளிநாடு செல்வதற்கு தேவையான மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கினான்.
 
 
சிந்துவிடம் இதுவரை பாஸ்போர்ட் கூட கிடையாது. தனக்குத் தெரிந்த ஆட்களின் மூலம் ஒரே வாரத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்து அவளுக்கு கிடைத்திருக்கும் அட்மிஷனை வைத்து விசாவிற்கும் ஏற்பாடு செய்து விட்டிருந்தான் தாரக்.
எல்லாம் அத்தனை வேகமாக நடப்பதை சிறுத்திகைப்போடு தான் கவனித்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
ஒவ்வொரு நாளும் அவள் படிப்பை பற்றியும் பயணத்தைப் பற்றியும் ஏதோ ஒரு விஷயத்தை தாரக் அவளுக்கு சொல்லிக் கொண்டே இருக்க.. அனைத்தையும் கவனித்து கேட்டு நினைவு வைத்துக் கொள்ள கொஞ்சம் அதிகமாகவே திணறி தான் போனாள் சிந்து.
 
 
மேலும் ஒரு வாரம் சென்று இருக்க.. அன்று இரவு சாப்பிட இருவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க.. “இன்னும் இரண்டு வாரத்தில் நீ கிளம்ப வேண்டி இருக்கும், உங்க அம்மாகிட்டேயும் அண்ணாகிட்டேயும் சொல்லணும் இல்லை..” என பேச்சை தொடங்கினான் தாரக்.
 
 
அதில் திகைப்போடு அவனைப் பார்த்தவளுக்கு இந்த நொடி வரை அதைப்பற்றிய நினைவே இல்லை. ஆனால் அவளின் திகைத்த பார்வையை வேறு மாதிரி புரிந்து கொண்டவன் “என்ன திரும்ப அந்த ஊருக்கு போக பயமா இருக்கா..?” எனவும் இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் திருதிருத்தாள் சிந்து.
 
 
நிஜமாகவே அந்த ஊரை நினைக்கும் போது இப்போது பயத்தில் லேசாக உடல் நடுங்கத்தான் செய்தது. ஆனால் அதை வார்த்தைகளில் வெளியிடாமல் சிந்து அப்படியே அமர்ந்திருக்க.. “உனக்கு அங்கே போக பயமா இருந்தா, அவங்களை இங்கே வர வைக்கட்டுமா..?” என்றான் தாரக்.
 
 
அதைக் கேட்டு இன்னும் பயந்து போனாள் சிந்து. “அய்யய்யோ வேண்டாம், அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான், அவங்க இரண்டு பேரையும் ஒரு வழி ஆக்கி விடுவார்..” என அவள் பதட்டமாக கூற, இப்போது அவர்கள் நாகராஜன் வீட்டில் இல்லை என தாரக்கிற்கு முன்பே தெரிந்திருந்தது.
 
 
இதைப் பற்றி அவன் இன்னும் சிந்துவிடம் சொல்லி இருக்கவில்லை. விஷ்வாவின் உடல் நிலையை பற்றி விசாரிக்க அழைத்து இருந்த அருணின் மூலம் விஷயத்தை அறிந்து கொண்டிருந்த தாரக், கிளம்பும் நேரத்தில் இதை சொல்லி அவளை வருத்தப்பட வைக்க விரும்பாமல் “அதையெல்லாம் உங்க அண்ணன் பார்த்துப்பான்.. உங்க அப்பாவுக்கு தெரியாம எப்படியாவது சமாளிச்சுருவான், கவலைப்படாதே நான் அவன்கிட்ட சொல்றேன்.. அதுக்கு பிறகு என்ன நடக்குதுன்னு பார்த்துக்கோ..” என்று அந்த பேச்சை முடித்துக் கொண்டான்.
 
 
தாரக் அவளிடம் சொல்லி இருந்ததற்கு நான்கு நாட்கள் கழித்து சுஜாதாவை அழைத்துக் கொண்டு அருண் சென்னைக்கு வந்திருந்தான். வீட்டிற்கே வந்து நின்ற இருவரையும் சிந்து நம்ப முடியாமல் பார்க்க.. சுஜாதாவும் மகளை கட்டிக்கொண்டு கதறிவிட்டார்.
 
 
“என் கண்ணே இனி உன்னை வாழ்க்கையில் பார்க்கவே முடியாதுனு நினைச்சேன்.. நீ நல்லா இருக்கியா..?” என அவர் அழுது கரைய, “ம்மா எனக்கு எதுவுமில்லை, நான் நல்லா இருக்கேன்.. பாருங்க உங்க முன்னே தானே இருக்கேன்..” என்று அவரை சமாதானம் செய்தவள், அதன் பின் இருவரோடும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. மூவருக்கும் தனிமை கொடுத்து விட்டு தன் அலுவலக அறைக்குள் சென்று விட்டான் தாரக்.
 
 
அருண் திடீரென அவள் அமெரிக்கா செல்வதற்கான காரணம் என்னவென்று ஒரு அண்ணனாக தங்கையின் வாழ்க்கை குறித்து உண்டான பயத்தோடு விசாரித்தான். “எங்கே இவர்கள் இருவருக்குள்ளும் எதுவும் பிரச்சனையோ..?” என அறிந்து கொள்ளவே அவன் இந்த பேச்சை தொடங்கியிருந்தான்.
 
 
ஆனால் முன்பே அருண் வரும் தகவலை அறிந்ததும், அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று தாரக் சிந்துவுக்கு சொல்லிக் கொடுத்திருந்தான்.
 
 
இப்போதே இவர்கள் வாழ்க்கையை குறித்து எடுத்து இருக்கும் முடிவுகளைப் பற்றி எதுவும் அவர்களுக்கு தெரிய வேண்டாம் என நினைத்தான் தாரக்.
 
 
ஒருவேளை தன் மகளின் வாழ்க்கை வீணாவதாக புரிந்து கொண்டு அவளின் பயணத்தை சுஜாதாவோ அருணோ தடுக்க முயல்வார்கள் என தாரக்கிற்கு தோன்றியது. அதனால் இங்கிருந்தால் தொடர்ந்து நாகராஜன் தன் ஆட்களின் மூலம் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார் என்பதாலேயே கொஞ்ச நாள் அவள் இந்த நாட்டிலேயே இருக்க வேண்டாம் என தாரக் முடிவெடுத்ததாக கூறினாள் சிந்து.
 
 
சமீபமாக முத்து இங்கு வந்திருந்ததை பற்றியும் அதன் பிறகு இங்கே நடந்ததை பற்றியும் அறிந்திருந்தால் அதை பற்றி மேலும் எதுவும் பேசவில்லை அருண். இந்த விஷயமெல்லாம் தெரிந்தால் சுஜாதா பயந்து போவார் என்று அமைதியானான்.
 
 
அதேபோல் அவர்களும் நாகராஜனோடு இப்போது இல்லை என்பதை சிந்துவிடம் சொல்லவில்லை.
 
 
இங்கிருந்து வெகு தூரம் செல்ல இருக்கும் மகளின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாத சுஜாதா தான் அருணிடம் இதைப் பற்றி எல்லாம் சிந்துவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
 
 
சிந்து ஊரில் இருந்த போது இருந்ததை விட, இப்போது முகமும் மனமும் தெளிவாக இருப்பதை அவள் பேசத் தொடங்கியதுமே புரிந்து கொண்டிருந்தார் சுஜாதா. அந்த தைரியமும் பாதுகாப்பும் தாரக் கொடுத்தது என்பதும் புரிய.. தாரக் அவளை நன்கு பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு எப்போதோ வந்து விட்டிருந்தது.
 
 
நாகராஜன் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, பக்கத்து ஊரில் தன் படிப்புக்கு தகுந்த ஏதோ ஒரு வேலையை தேடிக்கொண்டு அங்கேயே அருகில் சின்ன வீடாக பார்த்து குடியேறி இருந்தான் அருண். சுஜாதா கூட தன் அண்ணன்களிடம் உதவி கேட்க நினைக்க.. “வேண்டாம் ம்மா, இதுவரைக்கும் இன்னொருத்தர் உதவியில் வாழ்ந்தது போதும், இனி கஞ்சி குடிச்சா கூட யார் உதவியும் இல்லாம என் சொந்த உழைப்பில் வந்ததா இருக்கணும்னு நினைக்கறேன்..” என்று விட்டான் அருண்.
 
 
அத்தனை சொத்துக்கும் உரிமையாளன் இப்படி கஷ்டப்படுவதை ஒரு அன்னையாக தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும், இப்போது சுதந்திரமாக இருப்பது போல் உணர்வதாக அருண் கூறியதில் உள்ள உண்மை புரிந்து அவன் வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்க வேண்டும் என மனதார வேண்ட தொடங்கி விட்டார் சுஜாதா.
 
 
அப்போதே விஷ்வா செய்த அனைத்தையும் அவரிடம் சொல்லியிருந்தான் அருண். அவரால் கொஞ்சம் கூட எதையுமே நம்ப முடியவில்லை. அவர் அறிந்த மென்மையான விஷ்வாவினுள் இப்படி ஒரு பழிவெறியும் தங்கள் மீதான கோபமும் இருந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவே அவரால் முடியவில்லை.
 
 
ஆனால் அதுதான் உண்மை என்று ஆதாரங்களோடு அருண் சொல்லியதில் இருந்து புரிய, மனமுடைந்து போனார் சுஜாதா. மூன்று பிள்ளைகளும் தன் பிள்ளைகள் என்று தான் அவர் எப்போதுமே நினைப்பார். தன் ஒரு பிள்ளை மற்றொரு பிள்ளையின் வாழ்க்கையை தெரிந்தே அழிக்க நினைத்தது அவருக்கு பெரும் வலியை கொடுத்தது.
 
 
ஆனால் இதற்கெல்லாம் காரண கர்த்தா நாகராஜன் தான் என்பதால் இப்போது கூட அவரின் மீது தான் சுஜாதாவுக்கு கோபம் வந்தது. இப்படி இந்த ஜாதி அந்தஸ்து இதையெல்லாம் தூக்கி சுமந்து இன்னும் எதையெல்லாம் அவர் இழக்கப் போகிறாரோ எனும் வருத்தத்தோடு தான் இருந்தார் சுஜாதா.
 
 
இதையெல்லாம் யோசித்தபடியே இனி மகளின் வாழ்க்கை இங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும் என்று உறுதியாக நம்பியவர், ஆனாலும் “நீங்க இப்படி வேற வேற நாட்டில் இருக்கறது சரியா வருமா..?” என மகளிடம் லேசாக தன் மனதை கோடிட்டு காட்டினார் சுஜாதா.
 
 
“அவங்களுக்கு இங்கே பிசினஸ் இருக்கு இல்லைம்மா, நானும் கொஞ்ச நாள் இங்கே இருக்க கூடாது.. அதனால் தான் இப்படி ஒரு ஏற்பாடு ம்மா.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவங்க அங்கே வந்து என்னை பார்த்துப்பாங்க.. நீங்க கவலைப்படாம இருங்க, நான் இங்கே நல்லா இருக்கேன்.. எனக்கு இங்கே எந்த பிரச்சனையும் இல்லை, இனி என்னை பத்தி நீங்க கவலைப்படவே வேண்டாம்.. அண்ணா வாழ்க்கையை சரி செய்ய பாருங்க, விஷ்வா பத்தியும் நீங்க யோசிக்காதீங்க அதையும் அவங்க பார்த்துப்பாங்க..” என மகள் பேசிய வார்த்தைகளில் தாரக்கின் மேல் அவளுக்கு உள்ள நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் அவருக்கு நன்றாகவே புரிந்தது.
 
 
அன்று முழுக்க சிந்துவுடன் இருந்து விட்டு இருவரும் கிளம்ப நினைக்க.. அவர்களை இங்கே இரண்டு நாட்கள் தங்கிச் செல்லுமாறு கூறினான் தாரக். “இல்லை மாமா நான் புதுசா ஒரு வேலையில் சேர்ந்து இருக்கேன், தொடர்ந்து லீவ் எடுக்க முடியாது.. அதனால் தான் ஞாயிற்றுக்கிழமையா பார்த்து கிளம்பி வந்தேன்.. அம்மாவையும் இங்கே தனியா விட்டுப் போக முடியாது, நாங்க கிளம்பறோம்.. சிந்துவை மட்டும் நல்லா பார்த்துக்கோங்க, எங்களுக்கு அது போதும்..” என்றிருந்தான் அருண்.
 
 
“நீ உன் வாழ்க்கையை பார் அருண், இங்கே என் ஆபீஸுக்கு வந்துடுன்னு சொன்னாலும் கேட்க மாட்டேன்றே.. சரி உன் விருப்பம் போல் இருன்னு விட்டுட்டேன்.. வேற எதை பத்தியும் யோசிச்சு கவலைப்படாம உன் வாழ்க்கையை பார், இனி சிந்து முழுக்க என் பொறுப்பு..” என்று அவனுக்கு தைரியம் அளிப்பது போல் அருணின் கைகளை அழுத்தி பிடித்தபடி தாரக் சொல்ல.. அந்த வார்த்தைகள் அருகில் நின்றிருந்த சுஜாதாவுக்கு அத்தனை ஆறுதலை கொடுத்தது.
 
 
இதையெல்லாம் யோசித்தபடியே அமர்ந்திருந்தவளின் தோளை லேசாக தாரக் தட்ட ‘என்ன..?’ என்பது போல் திரும்பிப் பார்த்தாள் சிந்து. “நாம இறங்கணும் உட்கார்ந்துட்டே தூங்கறியா..? எவ்வளவு நேரமா கூப்பிடறேன்..” என்றான் தாரக்.
 
 
“சாரி ஏதோ யோசனை..” என பரபரப்பாக எழுந்தவளை “ஹே ரிலாக்ஸ் பொறுமையா வா..” என்று அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றான் தாரக்.
 
 
தன் புதிய வாழ்க்கையை தேடி அமெரிக்கா மண்ணில் கால் பதித்தாள் சிந்து.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 439
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
MNM - 36, 37, 38, 39 & 40
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 5 / 5

You cannot copy content of this page