ஜானகி மந்திரம் 17
அன்று மதியம் 1 PM
புனே நோக்கி நீண்டு கொண்டிருந்த ஹைவேயில் ஒரு வெள்ளி நிற Toyota Camry வழுக்கி கொண்டிருந்தது.
மனோவின் கார்.
கார் உள்ளே குளிர்ந்த ஏசி காற்று. டாஷ்போர்டில் 2003-ன் அந்த ‘ஹை-எனர்ஜி’ ராக் ஹிட் பாடலான லிங்கின் பார்க்-கின் ‘Numb’ அதிரடியாக ஒலித்து கொண்டிருந்தது.
"I'm tired of being what you want me to be
Feeling so faithless, lost under the surface
Don't know what you're expecting of me
Put under the pressure of walking in your shoes"
முன்பக்கம் சீட்டில் சாய்ந்து அமைதியாக அமர்ந்திருந்தான் மனோ.
காரை டிரைவ் செய்து கொண்டிருந்தவன் — பாபி.
பாட்டு சத்தம் தான் காரை நிரப்பி இருந்தது.
பாபி ஒரு கண்ணால் ரோட்டை பார்த்துக் கொண்டு, இன்னொரு கண்ணால் மனோவை கவனித்தான்.
பின்னர் சாங் சவுண்டை குறைத்து விட்டு பேசினான்.
“ஏண்டா… ரெண்டு நாளா உம்முன்னு இருக்கே?”
மனோ வெளியே சாலையை வெறித்து கொண்டே இருந்தான்.
பாபி மீண்டும் பேச,
“ஏதாவது வீட்ல பிரச்சனையா? பிரச்சனை புதுசா என்ன… உன் வீட்டுல அது தினசரி நடக்கிற சீரியல் தானே.”
மனோ பெருமூச்சு விட்டான்.
“ஒன்னும் இல்லடா சாதாரணமாகதான் இருக்கேன்… I’m just in a bit of a funk, can't really put my finger on why?"
பாபி ஸ்டீரிங்கை வளைத்து திருப்பிய படி,
“அதனால தான் கேக்குறேன்டா. வழக்கமா நீ இப்படியா இருப்பே? எப்பவுமே ஜாலியா துரு துருனு இருப்பியே. வீட்டுக்கு போறதே தூங்குறதுக்குத்தான். முக்காவாசி நேரம் காலேஜ்ல, கிரவுண்ட்ல, வெளியில, cafeல தான் சுத்திக்கிட்டு இருப்ப. பாதி நேரம் எங்க கூட தான் ஸ்பென்ட் பண்ணுவ. இப்ப என்னடான்னா… காலேஜ் முடியறதுக்குள்ளயே வீட்டுக்கு போயிடுற? பிராக்டிஸ் போறதில்ல, எங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றதில்ல. அதைக் கேட்கத்தான் இன்னைக்கு எனக்கு கார் அவசிய தேவை இல்லனாலும், பர்பஸா உன் கூட வந்தேன். ஏண்டா நம்ம பசங்க கூட ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டான்.
பாபி எதையும் தவற விடாதவன். அவன் கவனிப்பு கூர்மையானது.
மனோ: சேச்சே!!! நம்ம பசங்க என்ன பண்ண போறாங்க? அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. நீ வீணா ஓவர் திங்க் பண்ணுற!
அவன் உண்மையை சொல்ல முடியவில்லை.
இரண்டு நாட்களாக அவன் மனதை கலக்கி வைத்திருந்தது —
ஒரு மெசேஜ் வராதது.
அவன் மனதில் அந்த எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. அவனுடைய ரகசிய ஆன்லைன் தோழி.
அவளை அவன் ஏன் இவ்வளவு விரும்ப ஆரம்பித்தான்? அவளை அவன் பார்த்தது கூட கிடையாது. அவள் அழகா? கவர்ச்சியானவளா? எதுவும் அவனுக்குத் தெரியாது. ஆனால், அவளிடம் இருந்த அந்த எதிர்பார்ப்பில்லாத அன்புதான் அவனை முழுமையாகக் கட்டிப்போட்டிருந்தது.
அழகு காரணமாக அல்ல.
காலேஜில் — மனோவை மொய்ப்பதற்கு தயாராக இருக்கும் பெண்கள் கூட்டம். அவர்களுக்குள் போட்டி. அவனுடன் பேச வேண்டும், அருகில் நிற்க வேண்டும், கவனிக்கப்பட வேண்டும்.
பலருக்கும் அவன் ஒரு status symbol. ஆனால் அந்த எல்லா உறவுகளிலும் ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருந்தது.
புகழ், பணம், பிரபலம்... இந்த மூன்று சொற்களை தாண்டி அவர்களால் மனோவைப் பார்க்க முடிந்ததில்லை.
அந்த Unknown_Soul chat windowக்குப் பின்னால் இருந்த அந்த பெண் மட்டும் வேறுபட்டவள். அவள் அவனை பார்த்ததே இல்லை. அவன் யார் என்று கூட அவன் சொல்லும் வரையில் தெரியாது. அவன் பணக்காரன் என்று தெரியாது. அவன் காலேஜ் ஹீரோ என்று தெரியாது.
அவள் பேசும்போது —
அவன் ஒரு சாதாரண மனிதன்.
அதனால்தான் மனோ அவளிடம் தன் மனதை திறக்க ஆரம்பித்தான்.
காலேஜில் எல்லோரும் அவனை ஹீரோவாக வைத்துக் கொண்டாடினாலும்—
அவனுக்குள் இருந்த சில விஷயங்களை யாரிடமும் சொல்ல முடியாது.
அவனுடைய குறைகள், கஷ்டங்கள், பயங்கள்.
ஆனால் அந்த ஆன்லைன் தோழியிடம் மட்டும் அதை தயக்கமில்லாமல் சொல்ல முடிந்தது.
அவளும்—அதை அமைதியாக கேட்டு கொண்டாள்.
ஆறுதல் சொன்னாள்.
ஆனால்… ஒரு நாளும் அதில் எந்த advantageயும் எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த எளிமை…
அந்த உண்மைத்தன்மை…
அந்த எதிர்பார்ப்பில்லாத அன்பு…
அவனை கவர்ந்தது.
பெற்றோரின் பாசத்திற்காக அவன் ஏங்கிய தருணங்களில் எல்லாம், அவர்களுக்குள் இருந்த ஈகோவும் சண்டையுமே அவனுக்கு விடையாகக் கிடைத்தன. வெளியுலகிற்கு அவன் ஒரு ‘ராஜகுமாரன்’, ஆனால் அந்த ஆடம்பர மாளிகைக்குள் அவன் ஒரு ‘அனாதை’யாகவே உணர்ந்தான். தன்னை ஒரு உயரத்தில் வைத்துப் பார்க்கும் இந்த உலகம் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனது கைகளில் இருக்கும் வைர மோதிரத்தை விட, மனசுக்கு ஆறுதலாக இருக்கும் இன்னொரு மனசு தான் அவனுக்கு தேவைப்பட்டது.
அதனால்தான்— அவள் இரண்டு நாட்களாக மெசேஜ் செய்யாதது. அவனை இவ்வளவு பாதித்திருந்தது.
ஆனால் அந்த உண்மையை
பாபியிடம் எப்படி சொல்ல முடியும்?
மனோ: “Nothingடா… சும்மா தான்.”
பேச்சை மாற்ற முயன்றான்.
“சரி… நீ chat பண்ணிட்டு இருந்தியே…”
பாபி புருவம் உயர்த்தினான்.
“யாரு?”
“உன்னோட online girl friend டா.”
மனோ: “எப்படி இருக்கா? மெசேஜ் பண்றாளா? ஆளை பாத்திட்டியா? போட்டோ எதுவும் அனுப்பினாளா?"
பாபி சிரித்தான்.
“அவளுக்கென்ன நல்லாத்தான் இருக்குறா. இன்னும் பாக்கல. மீட் பண்றதுக்கு கேட்டேன். நேரம் வரும்போது சொல்றேன்னு சொல்லிட்டாப்ல.”
அவன் காரை ஓட்டிக்கொண்டே பேசினான்.
“இருந்தாலும் விடல. அடிக்கடி meeting கேட்டுக்கிட்டு தான் இருக்கேன். சீக்கிரமே meet பண்ணி ஆள் நல்லா இருந்தா...அப்படியே ஆன்லைன் friendship ஐ நிஜமாவும் confirm பண்ணிடலாம்.”
மனோ: அப்போ… ஆள் நல்லா இருந்தா தான் லவ் பண்ணுவியா? நல்ல பொண்ணா இருந்து… ஆள் சுமாரா இருந்தா என்ன பண்ணுவ? கழட்டி விட்ருவியா?”
பாபி சிரித்தான்.
“என்னடா இப்படி சாய்ஸ்ல விடுற மாதிர tough கொஸ்டின் கேக்குற?”
ஒரு நொடி யோசித்து விட்டு பதிலளித்தான்.
“ரெண்டுமே தான் வேணும். ஆளும் நல்லா இருக்கணும்… பொண்ணும் நல்லவளா இருக்கணும். ஆனா இந்த காலத்துல அது சாத்தியமே இல்ல. ஒரு பக்கம் டோங்கிரா பிகரா இருந்தா, நல்ல பொண்ணுங்களா இருக்காங்க… இன்னொரு பக்கம் சூப்பர் பிகருங்கல்லாம் திமிர் புடிச்சவளா இருக்காங்க. நம்ம ஸ்ரேயா குரூப் மாதிரி. ஆமா பார்ட்டி பஞ்சாயத்துக்கு அப்புறம் போன் பண்ணினாளா?
மனோ புன்னகைத்து விட்டு,
“அவ டெய்லி மெசேஜ், கால் பண்ணிட்டு தான் இருக்கிறா. நான் தான் அவாய்ட் பண்ணிடுறேன்.."
என்றான்.
மனோவின் மனசு தற்போதைய சம்பாஷணயில் லயிக்கவில்லை — அவன் மனதில் 'ஏன் மெசேஜ் வரவில்லை, அவளுக்கு ஏதாவது பிரச்சனையா?' என்று நினைப்பு மட்டும் தான் நிரம்பி வழிந்தது.
அவனுடைய ஆன்லைன் தோழியை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கும் இருந்தது.
ஆனால்…
அவன் அதை ஒருபோதும் கேட்கவில்லை.
ஏனென்றால் —
“நான் advantage எடுக்க பார்க்கிறேன்னு நினச்சுக்குவாளோ…”
என்ற ஒரு பயம்.
அதனால்தான்—அந்த எல்லை கோட்டை அவன் தாண்டவில்லை.
மனோ அமைதியாக வெளியே பார்த்தான்.
ஹைவேயில் மரங்கள் வேகமாக பின்னால் ஓடிக் கொண்டிருந்தன.
ஆனால்—
பாபியின் மனதில் மட்டும் இன்னும் சந்தேகம்.
சமீப நாட்களாக இவன் சரியில்லை… அடிக்கடி சைலண்ட் zoneற்கு போறான்... வீட்டுக்கு போகவே விருப்பப்படாதவன், இப்ப வீட்டுக்கு போறான்…
பசங்களிடம் சகஜமாக பேசுவதில்லை… சேட்டிங்கில் ஆன்லைன் காமிக்குது. ஆனா நமக்கு மெசேஜ் பண்ண மாட்டேங்குறான். கேட்டா அப்படியே விண்டோ க்ளோஸ் பண்ணாம வச்சுட்டேன்னு சொல்றான்..
இவனுக்கு என்ன ஆச்சு…?”
“Something is wrong... சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்.”
என்று மனதில் முடிவு செய்து கொண்டான்.
மதியம் 2:30 மணி — SSG இன்டர்நெட் சென்டர்
வழக்கமாக மைதிலி மட்டும் வந்து அமரும் அந்த மூலையிலுள்ள கேபினுக்குள் —
இன்று மூன்று பேர்.
மைதிலி, சஞ்சு, இந்து.
உள்ளே வந்து அமர்வதற்கு முன்னாலேயே மற்ற கேபின்களில் ஏதாவது ஒன்றில், மனோ அல்லது அவன் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள்.
யாரும் இல்லை.
கேபினுக்குள் வந்து அமர்ந்ததும், மைதிலி முகத்தில் சிறிய பதட்டம்.
அதை கவனித்த சஞ்சு சிரித்தாள்.
“ஏண்டி சுட்கி… டென்ஷன் ஆகுற? அந்த திமிர் புடிச்ச DSG குரூப்பை அவ்வளவு அசால்ட்டா பிளான் போட்டு கலங்க வச்ச நீ… இந்த சின்ன விஷயத்துக்கா டென்ஷன் ஆகுற?”
சிறிது சிரித்தபடி சொன்னாள்.
“ஃப்ரீயா விடு… பாத்துக்கலாம்.”
மைதிலி பதிலேதும் சொல்லவில்லை.
அவள் பார்வை மட்டும் கம்ப்யூட்டர் திரையில்.
அதை பார்த்த இந்து மெதுவாக சொன்னாள்.
“நீ எதுக்கு டென்ஷன் ஆகுறன்னு எனக்கு புரியுது. உன் நம்பிக்கை வீணா போயிடக் கூடாது… அவன் நல்ல பையனா இருக்கணும்… அதுதான் நீ நினைக்கிற. புரியுது. ஆன்லைன் பிரண்ட்ஷிப் பெரும்பாலும் fakeகாதான் இருக்கும். அதனால நீ அதை நினைச்சு ரொம்ப worry பண்ணிக்காத!"
சஞ்சு:
“மெசஞ்சர் ஓபன் பண்ணு… அவனுக்கு மெசேஜ் அனுப்பு.”
மைதிலி தலையசைத்துவிட்டு,
எதிரே இருந்த கம்ப்யூட்டரின்
இடது மூலையில் இருந்த Start பட்டனை மவுசால் கிளிக் செய்தாள்.
Start menu திறந்தது.
அதில் இருந்து,
Programs,
அதன் கீழே இருந்த MSN Messenger என்பதை கிளிக் செய்தாள்.
MSN Messenger Sign-in window திரையில் திறந்தது. Email address, Password டைப் பண்ணி லாகின் செய்தாள்.
அடுத்த வினாடி MSN Messenger திறந்து, அவளுடைய Contact list திரையில் தோன்றியது.
அதில் சில பெயர்கள்.
ஆனால் அவள் கண்கள் தேடியது — ஒரே ஒரு பெயரை.
Unknown_Soul.
அந்த பெயரை கிளிக் செய்தாள்.
ஒரு சிறிய chat window திறந்தது.
மைதிலிக்கு சில நொடிகள் தயக்கம். நண்பர்கள் முன்னால் எப்படி chat பண்ணுவது என்று வெட்கம் கலந்த தயக்கம்.
இந்து: என்னடி யோசிக்கிற அனுப்பு!
மைதிலி மெதுவாக type செய்ய ஆரம்பித்தாள்.
Sunshine_Girl:
"Hi… ரெண்டு நாளா … busy கொஞ்சம் வேலை அதனால் ஆன்லைன் வரவில்லை..."
அவள் Enter அழுத்தினாள்.
மெசேஜ் அனுப்பப்பட்டது.
திரையில் அந்த வரிகள் மட்டும் நின்றன.
மைதிலி, சஞ்சு, இந்து —
மூவரும் அந்த chat windowவை பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
வரப்போகும் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு....
பதில் வருமா?
அதே நேரம்.
புனே — தேஷ்முக் நிவாஸ்.
மனோவின் அறை.
அவன் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தான்.
மேசையின் மீது இருந்த கம்ப்யூட்டர் ஆனாக இருந்தாலும் —அவன் அதற்கருகே சென்று உட்காரவில்லை.
அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது ஒரே ஒரு கேள்வி.
“என்னாச்சு அவளுக்கு…?”
இரண்டு நாட்களாக Sunshine_Girl online வரவே இல்லை. மெசேஜும் இல்லை.
அவளுக்கு ஏதாவது பிரச்சனைஆ?
அவள் நலமா இருக்காளா?
அதை தெரிந்து கொள்ளவும் வழி இல்லை.
அந்த காலத்தில் MSN Messengerல இப்போ மாதிரி
யாரை search பண்ணி கண்டுபிடிக்கவும் முடியாது.
அவளாக online வந்தால்தான் பேச முடியும்.
அந்த எண்ணமே மனோவை அமைதியாக இருக்க விடவில்லை.
அவன் மீண்டும் கம்ப்யூட்டர் முன் வந்து நின்றான்.
திரையில் MSN Messenger open ஆகி இருந்தது. அவன் contact listஐ பார்த்தான்.
Sunshine_Girl — Offline
அவன் பெருமூச்சு விட்டான்.
அதே நேரத்தில் —
திரையில் திடீரென்று ஒரு chat window திறந்தது.
Sunshine_Girl:
Hi…
மனோ ஒரு நொடி திரையை பார்த்தபடியே நின்றான்.
அவன் முகத்தில் தானாக ஒரு புன்னகை பரவியது.
இரண்டு நாட்களாக அவனை வாட்டியிருந்த அந்த கவலை ஒரே நொடியில் கரைந்தது.
அவன் உடனே chairயில் அமர்ந்து கீ போர்டை தட்டினான்.
Unknown_Soul:
ரெண்டு நாளா ஏன் எனக்கு மெசேஜ் பண்ணல?
நான் ரொம்ப feel பண்ணேன் தெரியுமா?…
அதே நேரம்,
SSG இன்டர்நெட் சென்டர்
மெசேஜ் வந்ததை பார்த்தவுடன், சஞ்சுவும் இந்துவும் ஒரே நேரத்தில் முனைந்து பார்த்தார்கள்.
சஞ்சு கண்களை பெரியதாக திறந்தாள்.
“என்ன கம்ப்யூட்டர் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தானா என்ன?....உடனே மெசேஜ் வந்துருச்சு...பாரு… ரொம்ப feel பண்ணியிருக்கானே!”
கலாய்க்கும் விதத்தில் சொல்லிவிட்டு மைதிலியை பார்த்தாள். பின்னர் கைகளை பரபரவென தேய்த்தாள்.
“சுட்கி… இது என்னன்னு எனக்கு தெரிஞ்சாகணும். அதனால நான் சொல்ற மாதிரி அனுப்பு.”
மைதிலி விசுவாசமாக பார்க்க.. சஞ்சு dictate செய்ய ஆரம்பித்தாள்.
“இதான் கன்டென்ட்... நான் online வரலைன்னா நீ எதுக்கு feel பண்ணனும்?…நீ சும்மா time passக்காகத்தானே பேசுற… அதுக்காக இவ்வளவு feel பண்ண வேண்டியது இல்ல…”
மைதிலி தயங்கினாள்.
“இப்படியே அனுப்பணுமா…?”
சஞ்சு உறுதியாக: “ஆமாடி… அனுப்பு.”
இந்துவும் ஆமோதித்தாள்.
“சொன்னதை மட்டும் டைப் பண்ணி அனுப்பு.”
சிறிது தயக்கத்துடன் —
மைதிலி அவர்கள் சொன்னபடி type செய்து அனுப்பினாள்.
மனோ அந்த மெசேஜை படித்தான்.
வார்த்தையால் ஏற்பட்ட காயம் முகத்தில் தெரிந்தது.
அவன் உடனே பதில் type செய்ய ஆரம்பித்தான்.
Unknown_Soul:
என்ன இப்படி சொல்லிட்ட…?
நேரம் போக்குறதுக்காக உன் கிட்ட பேசுறேன்னு நினைக்கிறியா? எனக்கு நிறைய friends இருக்காங்க…
அவங்க எனக்கு முக்கியம் தான். ஆனா உன் கிட்ட பேசுறது வேற மாதிரி."
சில விநாடிகள் நின்றான்.
பின்னர் மீண்டும் type செய்தான்.
"உன் கிட்ட பேசும்போது…என்கிட்டே பேசுற மாதிரி feel வரும். எந்த விதமான போலித்தனமும் இல்லாம பேச முடியும். நடிக்க வேண்டிய அவசியமே இல்ல. உண்மையா பேச முடியும். அதனால்தான்…"
சிறிய இடைவெளி.
"நீ எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நீதான் என்னை நானாகவே இருக்க விடுற. நான் சொல்றது உண்மைதான் நீ நம்பலனா என்ன பண்ண முடியும்?"
அந்த மெசேஜை படித்த மைதிலிக்கு உண்மையில் என்ன ரெஸ்பான்ஸ் செய்வது என்று தெரியவில்லை.
ஆனால் —
சஞ்சுவும் இந்துவும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
சஞ்சு: “Unknown_Soul சார் ரொம்ப feel பண்றாரு…”
இந்து சிரித்தபடி: “ரொம்ப லவ் பண்றானோ என்னவோ", என்றாள்.
சஞ்சு: “ Ok then... இப்ப next step. இவன்தான் நம்ம காலேஜ் மனோவா இல்லையான்னு confirm பண்ணணும். சுட்கி… chat continue பண்ணு. அடுத்த கேள்விலேயே தெரிஞ்சிடும்.”
மைதிலி விரல்கள் கீ போர்டில் நகரத் தொடங்கின.
சாட்டிங் தொடர்ந்தது…
Sunshine_Girl:
"SSG காலேஜ்ல படிக்கிற மனோன்னு நீ சொன்னியே?
அந்த காலேஜ்ல புட்பால், கிரிக்கெட் டீம் கேப்டன்…
கல்ச்சுரல் கிளப் and ஸ்டூடண்ட் யூனியன் சேர்மன்…
அந்த மனோவா நீ?"
மனோவின் கண்கள் திரையில் நிலைத்துவிட்டன.
அவன் முகத்தில் ஒரு ஆச்சரியம்.
இவளுக்கு எப்படி என்னை பற்றி தெரியும்…?
ஒருவேளை… இவளும் SSG காலேஜ் தானா?
அந்த எண்ணம் அவனுள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
அவன் கைகள் வேகமாக கீபோர்ட்டில் நகர்ந்தன.
Unknown_Soul:
"Exactly… அது நான் தான்."
சிறிது இடைவெளிக்கு பிறகு அவன் மீண்டும் எழுதினான்.
"எனக்கு நீ யாருன்னு தெரிஞ்சுக்க ஆசை இல்லன்னு சொல்ல மாட்டேன்…ஆனா நான் கேட்டு உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன்.
நீயா எப்ப சொல்லணும்னு நினைக்கிறாயோ… அப்ப சொல்லு."
மெசேஜ் அனுப்பப்பட்டது.
அந்த பதிலை மூவரும் ஒரே நேரத்தில் படித்தார்கள்.
ஒரு நொடி —
அந்தப் பதிலைப் படித்ததும் சஞ்சுவும் இந்துவும் ஒரு நொடி ஸ்தம்பித்தனர். பேரதிர்ச்சி.
சஞ்சுவின் குரல் கம்மியது:
"என்னடி சொல்றான்? நம்ம காலேஜ் மனோவா? என்ன நடக்குதுன்னு புரியலையே! என் கண்ணாலே நம்ப முடியல?"
இந்து: இது வெளியே தெரிஞ்சா என்னாகும் தெரியுமா? காலேஜ் பொண்ணுங்க கொந்தளிச்சு போயிருவாங்க!”
சஞ்சு: “எல்லாரையும் விட்டுட்டு… மைதிலியா select பண்ணிருக்கானா?”
இப்போது தான் சஞ்சுவுக்கும் இந்துவுக்கும்
உண்மையான பதட்டம் வந்தது.
சஞ்சு: “ஒரு நிமிஷம்… முதல்ல இவன் உண்மையிலேயே அந்த மனோ தான்னு confirm பண்ணிக்குவோம். ஆன்லைன்ல நிறைய பேரு பொய் சொல்லி chat பண்ணுவாங்க.”
இந்து: "அப்படின்னா… photo அனுப்ப சொல்லலாமா?”
சஞ்சு: “வேண்டாம். மனோ போட்டோ நிறைய பேர் கிட்டே இருக்கும். அதை இவனும் வச்சிருந்தான்னா … அதை அனுப்பிருவான். அது சரியான proof ஆகாது.”
மைதிலி அவள் கருத்தை சொல்லவே இல்லை. அவளுக்கு தன்னை நம்பி பேசும் மனோவை சோதித்து கொண்டிருக்கிற விஷயமெல்லாம் பிடிக்கவே இல்லை, இருந்தாலும் நண்பர்களுக்காக அமைதியாக இருந்தாள். சஞ்சுவும் இந்துவும் அதிதீவிர யோசனையில் இருந்தார்கள்.
திடீரென,
சஞ்சு: ஒண்ணு பண்ணலாம்.
நாளைக்கு அவனை test வைக்கலாம். கொஞ்சம் பழைய ஐடியா தான். நாளைக்கு என்ன dress போட்டுட்டு வரணும்னு நாம சொல்லுவோம். மனோ அதே மாதிரி போட்டு வர்றனான்னு பார்ப்போம்... போட்டுட்டு வந்தான்னா அவனுக்கு இவளை பிடிச்சிருக்கு. unknown soulதான் மனோன்னு கன்பார்ம் பண்ணிடலாம்... என்றாள்.
இந்து உடனே உற்சாகமாக சொன்னாள்.
“Super idea!”
“என்ன color?”
சஞ்சு ஒரு நொடி யோசித்தாள்.
“Hmm… Black pant… light blue shirt.”
இந்து தலையசைத்தாள்.
“Perfect"
மைதிலி சங்கடத்துடன் அமைதியாக இருந்தாள். ஏதாவது சொன்னால்,
சஞ்சுவும் இந்துவும் கோபித்துக் கொள்வார்கள் என்று தெரியும்.
சஞ்சு அவளை தட்டி சொன்னாள்.
“சுட்கி… type பண்ணு.”
மைதிலி மெதுவாக keyboardஐ நோக்கி கைகளை வைத்தாள்.
சஞ்சு dictate செய்தாள்.
Sunshine_Girl:
"உண்மையிலே உனக்கு என்னை பிடிச்சிருந்தா நாளைக்கு காலேஜ்க்கு வரும்போது Black pant… light blue shirt போட்டுட்டு வா பார்க்கலாம்..."
டைப் பண்ணி விட்டு மைதிலி ஒரு நொடி தயங்கினாள். என்னடி யோசிக்கிற என்று இந்து என்டர் தட்ட போக, சஞ்சு அவளை தடுத்தாள்.
சஞ்சு: ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. நாளைக்கு பாத்து இந்த காம்பினேஷன்ல நிறைய பேரு டிரஸ் பண்ணிட்டு வந்தா... என்ன பண்றது?
இந்து: பாயிண்ட்... வேற என்ன பண்ணலாம்? ப்ளூ பேண்ட் பிளாக் ஷர்ட்ன்னு மாத்திரலாமா
சஞ்சு: ரொம்ப காமெடியா இருக்கும். பாவம்! அவ்வளவு கஷ்டப்படுத்த கூடாது.
சஞ்சு இரண்டு விநாடி யோசித்தாள்.
பின்னர் அவள் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு.
“Got it. Black pant… light blue shirt…அதோட right handல white sports wrist band போட்டுட்டு வர சொல்லு.”
புனே — மனோவின் அறை
திரையில் அந்த மெசேஜ் தோன்றியது.
ஒரு நொடி மனோ அதை மீண்டும் படித்தான்.
பின்னர் அவன் முகத்தில் மெதுவாக ஒரு புன்னகை பரவியது.
இதுவரை இருந்த சந்தேகம் அந்த ஒரு நொடியில் தெளிவானது.
அப்படின்னா…
நிச்சயமாக இந்த காலேஜ் தான். நான் தான் மனோன்னு confirm பண்ணிக்கிறதுக்காகதான் இப்படி வர சொல்லுறா.
அந்த எண்ணமே அவனுள் ஒரு குழந்தை மாதிரி உற்சாகத்தை எழுப்பியது.
அவன் உடனே keyboardஐ நோக்கி கைகளை நகர்த்தினான்.
Unknown_Soul:
"Ok… நான் வரேன்.
ஆனா… நீ யாருன்னு நான் எப்ப தெரிஞ்சிக்கிறது?"
இன்டர்நெட் சென்டர்
மெசேஜ் வந்தவுடன் சஞ்சுவும் இந்துவும் ஒரே நேரத்தில் திரையை நோக்கி முனைந்தனர்.
அவர்கள் இருவரும் அவசரமாக கிசுகிசுத்தார்கள்.
“இப்ப என்ன சொல்வது?”
“ ஆமாம் இல்லை இரண்டையுமே சொல்ல கூடாது. பொதுவா ஏதாவது ஒரு பதில் சொல்லலாம்..."
சிறிய டிஸ்கஷன்.
சில விநாடிகளில் ஒரு முடிவு.
சஞ்சு மெதுவாக சொன்னாள்.
“இப்படி அனுப்பு…”
மைதிலி டைப் செய்தாள்.
Sunshine_Girl:
"முதல்ல நீ யாருன்னு நான் தெரிஞ்சுக்கிறேன்…அதுக்கப்புறம் நான் யாருன்னு தெரிஞ்சுக்கலாம்."
மனோ அந்த மெசேஜை பார்த்தான்.
அவன் சிரித்தான்.
பின்னர் ஒரு யோசனை அவன் மனதில் தோன்றியது.
அவன் உடனே பதில் தட்டினான்.
Unknown_Soul:
"அப்படியில்லனா…
எனக்கு உன் phone நம்பராவது கொடு.
நேரில் கூட உன்னை பார்க்கணும்னு insist பண்ண மாட்டேன்.
உனக்கு எப்ப comfortableஆ இருக்குதோ அப்ப பார்க்கலாம்.
அவசரம் இல்ல."
இன்டர்நெட் சென்டர்
இந்த மெசேஜ் வந்தவுடன் —
மறுபடியும் அவசர ஆலோசனை.
இந்து மெதுவாக கேட்டாள்.
“நம்பர் கொடுத்தா… address கண்டுபிடிச்சிடுவானா?”
சஞ்சு உடனே தலையசைத்தாள்.
“வாய்ப்பே இல்லை. இவளுக்கு நான் கொடுத்த சிம்கார்டு நான் வாங்கியது கூட இல்ல. எங்க ஊர்ல ஒரு ரீடெய்லர் பத்து சிம் கார்டு வாங்கிட்டு வந்தான். அதுல எங்க வீட்ல நாலு சிம் வாங்கினாங்க... அதுல ஒன்னு தான் இது. அவன் எந்த address proof குடுத்திருக்கானோ யாருக்கு தெரியும். சோ… tension வேண்டாம்.”
இந்து யோசித்து விட்டு தலையசைத்தாள்.
மைதிலி இன்னும் சிறிது தயங்கினாள்.ஆனால் நண்பர்களின் அழுத்தம்.
அவள் மெதுவாக number type செய்தாள்..
Sunshine_Girl:
"9822054763"
அதன் கீழே இன்னொரு வரி—
" நம்பர் அனுப்புனதும் அடிக்கடி phone பண்ணாத…
எங்க வீட்டுல தெரிஞ்சா problem ஆயிரும். ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தா நானே call பண்ணுவேன். நீ sms மட்டும் பண்ணு… ok va?"
மெசேஜ் அனுப்பப்பட்டது.
புனே
திரையில் அந்த number தோன்றியவுடன் —
மனோ ஒரு நொடி நம்பவே முடியாமல் பார்த்தான்.
பின்னர் திடீரென்று அவன் chairயிலிருந்து எழுந்தான்.
“Hurray!”
உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.
அவன் சிரிப்பு அறை முழுக்க பரவியது.
இரண்டு நாட்களாக மனதை அழுத்திக் கொண்டிருந்த அந்த கனமான உணர்வு —
ஒரே நொடியில் காற்றாகி பறந்தது.
பத்து நிமிடத்திற்கு பிறகு,
சாட்டிங் விண்டோவை மூடிவிட்டு, கணினியை லாக்-அவுட் செய்தபோது மைதிலியின் விரல்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. மனதிற்குள் ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டியது போன்ற ஒரு திகைப்பு. அவள் மெல்ல கேபினை விட்டு வெளியே வந்தாள். இன்டர்நெட் சென்டரின் வாசலில் இந்துவும் சஞ்சுவும் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
மூவரும் அந்தத் கட்டிடத்தின் முதல் மாடி வராண்டாவில் நின்றார்கள். மதியம் மூன்று மணி என்பதால் மாணவர்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.
மைதிலி அவர்களைப் பார்த்து மிக அப்பாவியாக கேட்டாள்:
"ஒருவேளை... ஒருவேளை... நாளைக்கு அது நிஜமாவே மனோதான்னு தெரிஞ்சா, நான் என்ன பண்ணனும்?"
இந்து அவளை ஒரு கணம் வியப்புடன் பார்த்துவிட்டு, சிரித்தாள்.
"என்ன பண்ணனுமா? இவ்வளவு நாளா சேட்டிங்லயே பெரிய தாஜ்மஹாலை கட்டி வச்சுக்கிட்டு, இப்போ வந்து கேக்குறியே எங்கிட்ட என்ன பண்றதுன்னு? ரெண்டு நாளா மேடம் எதுக்காக மூஞ்சியைத் தூக்கி வைச்சிருந்தீங்க? அவன் பொய் சொல்லிட்டான், ஏமாத்திட்டான், நல்லவன்னு நினைச்சேன்... ஆனா இப்படி பண்ணிட்டான்னு எவ்வளவு வருத்தம்? சோறு கூட இறங்கலையே... நாங்க பார்த்துட்டு தானே இருந்தோம்!"
மைதிலியின் முகம் இன்னும் பரிதாபமாக மாறியது.
"இல்லை இந்து... நான் அதுக்காக கேக்கல. நான் ஏதோ என்னை மாதிரி சாதாரணமான ஒருத்தனா இருப்பானு நினைச்சு தான் பேசவே செஞ்சேன். அவன் இந்த அளவுக்கு காதல், கீதல்னு போவான்னு நான் கனவுல கூட நினைக்கல. கொஞ்சம் கொஞ்சமா எனக்கும் அவனை பிடிச்சுப் போச்சு... இது லவ்வான்னு கூட எனக்குத் தெரியல. ஆனா இப்போ அவன் மனோ தான்னு சொல்றதைப் பார்க்கும்போது... ஒருவேளை அது கன்ஃபார்ம் ஆயிடுச்சுனா நான் என்ன பண்ணட்டும்? எனக்குப் புரியவே இல்லை."
அவள் குரலில் திடீர் கவலை. அவர்களை விட்டு நடந்து சென்று, வரண்டா ரைலிங்கை பிடித்து முதுகு காட்டி நின்றாள்.
"அவரு எங்க... நான் எங்க? நீங்க எல்லாரும் அவர பெரிய காலேஜ் ஹீரோன்னு சொல்றீங்க. எல்லாரும் ஆகா ஓகோன்னு புகழ்றாங்க. நான் ஒரு சாதாரணப் பொண்ணு... அவரோட அந்தஸ்துக்கு பக்கத்துல நிக்க கூட எனக்குத் தகுதி கிடையாது."
மைதிலி தனது வறுமையையோ, கஷ்டங்களையோ நேரடியாக சொல்லவில்லை என்றாலும், அவளது ஆழ்மனதில் இருந்த அந்தத் தாழ்வு மனப்பான்மை வார்த்தைகளில் விஷமாக வழிந்தது. தனக்கும் அந்த 'ஹீரோ' பிம்பத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி அவளை அச்சமூட்டியது.
இந்து அவள் அருகே சென்று முதுகை தட்டி, மோவாயை பிடித்து, முகத்தை திருப்பினாள்.
"உனக்கு என்னடி குறைச்சல்? நல்ல டஸ்கி ஸ்கின் டோன். லட்சணமான முகம்... கும்முனு வேற இருக்குற! என்ன, பணம் மட்டும் தானே இல்ல? அதுக்கு என்ன இப்போ?"
மைதிலி இன்னும் சமாதானம் அடையவில்லை. அவளது மனதுக்குள் ஒரு court session நடந்துகொண்டு இருந்தது. ஆதரவாகவும் எதிராகவும் வாக்குவாதங்கள்.
சஞ்சுவும் அருகே வந்து மைதிலியின் கையை ஆதரவாக பற்றி கொண்டாள்.
"சுட்கி... என் மனசுல தோணுறதை சொல்லட்டுமா? எங்க ரெண்டு பேருக்குமே லவ் லைஃப் இதுவரைக்கும் நல்லபடியா அமையல. ஃபுல்லா ஏமாற்றங்கள் தான். நியாயப்படி நீ வேற யாரையாவது லவ் பண்ற மாதிரி ஒரு சூழ்நிலை அமைஞ்சிருந்தா, 'லவ் பண்ணாத, சிங்கிளாவே இரு, ஒழுங்கா படிச்சு கேரியரை பாரு'ன்னு தான் நான் அட்வைஸ் பண்ணியிருப்பேன்."
சிறிது இடைவெளி விட்டு சஞ்சு தொடர்ந்தாள், "ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா... ஒருவேளை இது மனோவா இருந்துச்சுன்னா, அவனுக்குப் பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க சுத்தலாம். ஆனா உன்ன மாதிரி ஒருத்தி அவனுக்கு கிடைக்கவே மாட்டா. உன் அன்புல இருக்குற அந்த உண்மை அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அதனாலதான் உனக்காக ஏங்குறான். அதனால நீ தாராளமா இதை கன்சிடர் பண்ணலாம் மைதிலி."
மைதிலியும் சஞ்சுவின் கையை இறுகப் பற்றி கொண்டாள். கண்கள் பனித்தது.
மறுபக்கம் இந்துவும் சேர்ந்துகொண்டாள். "ஆமாடி... சஞ்சு சொல்றது சரிதான். அவன் அழகா, பெர்சனாலிட்டியா, பணக்காரனா, காலேஜ் ஹீரோவா இருக்கலாம். உன்கிட்ட அதெல்லாம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்களை பொறுத்தவரைக்கும் நீ தான் எங்களோட சிண்ட்ரெல்லா! இந்த சிண்ட்ரெல்லாவுக்கு ஏத்த ராஜகுமாரன் அவன் தான். சரி விடு. அதுக்குள்ள குழம்ப வேண்டாம். முதல்ல நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்."
"Lets see!" என்று சஞ்சு உற்சாகமாகச் சொன்னாள்.
மைதிலியின் குழம்பிய முகத்தையும், கலங்கிய கண்களையும் பார்த்த இருவரும், அவளை அப்படியே விட விரும்பவில்லை.
"ஏய்... இப்போ எதுக்கு இந்த மூஞ்சி? எல்லாம் நல்லாத்தான போயிட்டுருக்கு... சிரிடி!" என்று சொல்லி ஆளுக்கு ஒரு பக்கமாக அவளை கிச்சு கிச்சு மூட்டினார்கள்.
மைதிலி " Hey விடுங்க... விடுங்க!" என்று சிரித்தபடியே அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினாள். அவர்கள் உற்சாகமாக விரட்டினார்கள்.
அந்தப் பெரிய கட்டிடத்தின் வராண்டாவில் மூவரின் சிரிப்பு சத்தம் மட்டும் எதிரொலித்தது.
தொடரும்